Everything posted by ஏராளன்
-
வெள்ளைக்கொடியுடன் சரணடைந்த அப்பாவிப் பொதுமக்களைச் சுட்டுக்கொன்ற இஸ்ரேலிய இராணுவம்
மேலுள்ள செய்தியையும் பாருங்கள்.
-
மசூதி, தேவாலயங்களில் காவிக்கொடி - அயோத்தி ராமர் கோவில் திறந்த பிறகு நாடெங்கும் நடந்தது என்ன?
பட மூலாதாரம்,RAJAT GUPTA/EPA-EFE/REX/SHUTTERSTOCK கட்டுரை தகவல் எழுதியவர், அபினவ் கோயல் பதவி, பிபிசி செய்தியாளர் 27 ஜனவரி 2024, 08:28 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஜனவரி 22 அன்று, அயோத்தியில் உள்ள ராமர் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து கொண்டிருந்தபோது, நாட்டின் பல பகுதிகளில் உள்ள வழிபாட்டுத் தலங்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டன. அதேபோல, சமூகங்களுக்கு இடையே மோதல் சம்பவங்களும் பதிவானது. ராமர் கோவில் திறப்பு விழா முடிந்த பிறகும் இந்த மோதல்கள் முடிவுக்கு வரவில்லை. சமூக ஊடகங்களில் தினமும் இதுபோன்ற சம்பவங்களின் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. கடந்த நான்கு நாட்களில் இதுபோன்ற எத்தனை சம்பவங்கள் நடந்தன, அவை எங்கு நடந்தன என்று இந்தக் கட்டுரையில் வரிசையாக எழுதப்பட்டுள்ளன. முதலில், மும்பையின் மீரா ரோடு பகுதியில் நடந்த வன்முறை மோதலைப் பற்றிப் பார்ப்போம். மும்பை மீரா சாலை பேரணியில் கல்வீச்சு, கடைகள் இடிப்பு பட மூலாதாரம்,SHAHEER SHEIKH/BBC அயோத்தியில் ராமர் கோவில் திறப்பிற்கு ஒரு நாள் முன்பு, மும்பை மீரா சாலையில் உள்ள நயா நகர் பகுதியில் இருந்து 'ராம ராஜ்ஜிய ரத யாத்திரை' என்ற பேரணி நடந்து கொண்டிருந்தது. இந்தப் பேரணியின் மீது கற்கள் வீசப்பட்டதாகவும், அதைத் தொடர்ந்து இந்து-முஸ்லிம் சமூகத்தினரிடையே மோதல் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. மறுநாள் மாநகராட்சி அப்பகுதியில் உள்ள சில கடைகளை புல்டோசர் மூலம் தகர்த்தது. விதிமீறல் கட்டுமானங்களை அகற்றுவதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. ஆனால் சர்ச்சை இத்துடன் நிற்கவில்லை, அன்று மாலைக்குள் முஸ்லிம் சமூகத்தினரின் வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்ட சம்பவங்களும் வெளிச்சத்திற்கு வந்தன. நேரில் கண்ட சாட்சியும், பாதிக்கப்பட்டவருமான அப்துல் ஹக், மக்கள் எந்த மதம் எனக் கேட்டுத் தாக்கியதாகக் கூறினார். இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் ஜெயந்த் பஜ்பலே கூறுகையில், இந்தச் சம்பவம் தொடர்பாக இதுவரை 19 பேரை போலீசார் கைது செய்துள்ளதாகக் கூறினார். தேவாலயத்தின் மீது ஏற்றப்பட்ட காவிக் கொடி ராமர் கோவில் திறப்பு விழாவிற்கு ஒரு நாள் முன்னதாக, ஜனவரி 21ஆம் தேதி, மத்திய பிரதேசத்தின் ஜபுவாவில் சிலர் மத கோஷங்களை எழுப்பியபடி தேவாலயம் ஒன்றின் மீது ஏறி, அங்கு காவிக் கொடியை ஏற்றினர். இந்தச் சம்பவத்தின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது. இந்த வீடியோவில் இரண்டு நபர்கள் கட்டடத்தின் உச்சியில் ஏறி சிலுவை அடையாளத்திற்குப் பதிலாக காவிக் கொடியை வைப்பதைக் காணலாம். இந்தச் சம்பவத்தின்போது, சிலர் இந்து மதம் சார்ந்த முழக்கங்களை எழுப்புவதைக் காணலாம். ராணாபூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட டபட்லாய் கிராமத்தைச் சேர்ந்த தர்பு அமலியார் என்ற கிறிஸ்தவ நபருக்கு இந்த தேவாலயம் சொந்தமானது. அவர் இந்தச் சம்பவம் குறித்து காவல்துறையில் புகார் செய்ய மறுத்துவிட்டார். செய்தி இணையதளமான தி வயர் வெளியி்ட செய்தியின்படி, அமலியர் இச்சம்பவம் குறித்துப் பேசுகையில், “மத முழக்கங்களை எழுப்பியவர்களின் எண்ணிக்கை சுமார் 25 இருக்கும். அவர்கள் எனது பக்கத்து கிராமத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களுக்கு என்னைத் தெரியும்,” எனக் கூறியுள்ளார். காவிக்கொடி ஏற்றப்பட்ட தேவாலயம் 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது என்ரும் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் 30-40 பேர் பிரார்த்தனைக்கு வருவதாகவும் அமலியார் கூறியதாக தி வயர் செய்தி வெளியிட்டுள்ளது. மசூதிக்கு முன் அமர்ந்து பஜனை பட மூலாதாரம்,GETTY IMAGES மத்திய பிரதேசத்தில் உள்ள இந்தூரில் உள்ள பெட்மா பகுதியில் இருந்தும் இதுபோன்ற செய்திகள் வந்துள்ளன. நகரின் பெட்மா பகுதியில் உள்ள ஜாமா மஸ்ஜித் முன் மக்கள் கூட்டம் கூட்டமாக அமர்ந்திருக்கும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், மசூதிக்கு முன்பாக உள்ள சாலையில் மக்கள் அமர்ந்து காவிக் கொடிகளை அசைத்துக் கொண்டிருந்தனர். மத்திய பிரதேசத்தில் உள்ள பிபிசியின் செய்தியாளர் நியாஸின் கூற்றுப்படி, இந்த வீடியோ பெட்மா பகுதியில் உள்ள ஜாமா மஸ்ஜித்துக்கு வெளியே எடுக்கப்பட்டது. உள்ளூர் முஸ்லிம் குடும்பங்கள் மிகவும் அச்சமடைந்துள்ளதால் இந்தச் சம்பவம் தொடர்பாக ஊடகங்களிடம் பேசுவதற்கு அவர்கள் அஞ்சுவதாக நியாஸ் கூறினார். மசூதி வாசலில் காவிக் கொடி பட மூலாதாரம்,GETTY IMAGES ராமர் கோவில் திறப்பு விழா அன்று உத்தர பிரதேச மாநிலம் சந்த் கபீர் நகரில் ஊர்வலம் நடத்தப்பட்டது. அப்போது, பள்ளிவாசல் ஒன்றின் வாயிலில் சிலர் ஏற முயற்சி செய்தனர். சமூக ஊடகங்களில் வைரலான வீடியோவில், ஒரு கூட்டம் ஒரு மசூதியின் முன் வந்து காவி நிறக் கொடியை ஏற்றத் தொடங்குவதைக் காணலாம். வீடியோவில், ஒரு நபர் மசூதியின் வாயிலில் ஏறுவதையும் காணலாம். இந்த மசூதி மேதாவால் நகர் பஞ்சாயத்துப் பகுதியில் உள்ளது. பிபிசியிடம் பேசிய மேதாவால் காவல் நிலைய ஆய்வாளர் விஜய் குமார் துபே, அமைதியைக் குலைத்ததற்காக ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூறினார். “தற்போது அமைதியான சூழல் நிலவுகிறது. மசூதி தரப்பில் இருந்து எந்தப் புகாரும் கொடுக்கப்படவில்லை," என்றார். அந்தப் பகுதியில் ஊர்வலம் நடந்தால், மசூதி இருக்கும் வழியாகத்தான் செல்லும் என்றார் துபே. ஜனவரி 22ஆம் தேதி நடந்த ஒரு ஊர்வலமும், அந்த மசூதியின் வழியாகச் சென்றதாகக் கூறிய துபே, அப்போதும் சிலர் பொது அமைதியைக் கெடுக்க முயன்றதாகக் கூறினார். சமீபத்தில் நடந்த ஊர்வலத்தின்போது, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஊர்வலத்தின் வழித்தடத்தில் உள்ள கோவில்கள் மற்றும் மசூதிகளின் கதவுகளை போலீசார் மூடினர். லக்னௌவின் தெருவில் ஆபாசமான பாடல்கள் பட மூலாதாரம்,SOCIAL MEDIA ஜனவரி 22ஆம் தேதி மாலை, லக்னௌவின் ஹஸ்ரத்கஞ்ச் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் உள்ள நர்ஹி திராஹாவில் ஆபாசமான மற்றும் தவறான பாடல்கள் பகிரங்கமாக ஒலித்தன. இந்தப் பாடலின் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானதை தொடர்ந்து, காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த வழக்கில் இதுவரை மூன்று பேரை போலீசார் கைது செய்துள்ளனர். லக்னௌவில் உள்ள கூடுதல் டிசிபி (மத்திய) மனிஷா சிங் பிபிசியிடம் பேசுகையில், “தற்போது மூன்று பேரும் நீதிமன்ற காவலில் உள்ளனர். அவர்கள் உள்ளூர் வியாபாரிகள். டி.ஜே.வை அவர்கள் அமர்த்தியதாகவும், யூடியூபில் தேடிய பிறகு பாடலை ஒலிக்கவிட்டதாகவும் அவர்கள் கூறினர். மேலும், வேண்டுமென்றே ஆபாசமான பாடலைப் பாடவில்லை என்றும் அவர்கள் கூறினார்,” என்றார் மனிஷா சிங். தெலுங்கானாவில் காவிக் கொடியை அவமதித்ததாகக் கூறி இளைஞர் மீது தாக்குதல் பட மூலாதாரம்,GETTY IMAGES தெலுங்கானா மாநிலம் சங்கரெட்டியில் இளைஞர் ஒருவரை நிர்வாணமாக்கி அவரது அந்தரங்க உறுப்புக்குத் தீ வைக்க முயன்றதாக செய்தி வெளியாகியுள்ளது. அதன் வீடியோவும் சமூக ஊடகங்களில் வைரலானது. இளைஞர் ஒருவரை சிலர் நிர்வாணமாகப் பிடித்து வைத்திருப்பதை வீடியோவில் காணலாம். அந்த வீடியோவில் சிலர், மத கோஷங்கள் எழுப்புவதையும் கேட்கலாம். அந்த வீடியோவில், மற்றொரு நபர் பாதிக்கப்பட்டவரின் அந்தரங்க உறுப்பில் தீ வைக்க முயல்கிறார். பிபிசியிடம் சங்கரெட்டி காவல் கண்காணிப்பாளர் சிஎச் ரூபேஷ், "அந்தச் சம்பவம் ஜனவரி 22 அன்று நடந்தது," என்றார். பாதிக்கப்பட்ட இளைஞர் காவிக் கொடியை அவமதித்ததாக குற்றம் சாட்டப்பட்டதாகவும், இரு தரப்பினர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் ரூபேஷ் கூறினார். மத உணர்வைத் தூண்டியதாக இளைஞர் மீதும், இளைஞரை தாக்கியதாக மற்றொரு தரப்பினர் மீதும் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பாதிக்கப்பட்ட இளைஞன் தற்போது சிறையில் இருப்பதாகவும், அவரைத் தாக்கியவர்கள் தலைமறைவாக இருப்பதாகவும் ரூபேஷ் கூறினார். காவிக் கொடியை அவமதித்ததாக அந்த இளைஞன் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பாதிக்கப்பட்ட இளைஞரின் வீடியோவும் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு வருகிறது, அதில் அவர் காவிக் கொடியை அவமதித்துள்ளார். பிகார்: கல்லறையில் தீ பட மூலாதாரம்,SOCIAL MEDIA ராமர் கோவில் திறப்பு விழா அன்று, பிகார் மாநிலம் தர்பங்கா மாவட்டத்தில் உள்ள கிர்மா கிராமத்தில் உள்ள ஒரு கல்லறை தீப்பிடித்ததாக செய்தி வந்தது. கிர்மா கிராமம், கெவாடி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் உள்ளது. பிபிசியிடம் பேசிய காவல் நிலைய பொறுப்பாளர் ராணி குமாரி, "ராமர் கோவில் திறப்பு விழா அன்று, 100க்கும் மேற்பட்டோர் ஊர்வலம் சென்றனர். அப்போது, கல்லறையில் யாரோ பட்டாசுகளை வீசியதால், அங்கு தீ விபத்து ஏற்பட்டது," என்றார். தீ விபத்திற்குப் பிறகு, இந்து மற்றும் முஸ்லீம் தரப்பினருக்கு இடையே பதற்றமான சூழல் ஏற்பட்டது, ஆனால் சண்டை எதுவும் இல்லை, என்றார். இந்த வழக்கில் காவல்துறை தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்துள்ளதாகவும், தற்போது குற்றவாளிகள் தலைமறைவாக உள்ளதாகவும், யாரும் கைது செய்யப்படவில்லை என்றும் ராணி குமாரி கூறினார். இதுதவிர, நாட்டில் வேறு சில இடங்களில் இருந்தும் இதுபோன்ற சம்பவங்கள் வெளிச்சத்துக்கு வந்துள்ளன. பஞ்சாபில் இரண்டு வழக்குகள் பதிவு மத உணர்வுகளைத் தூண்டியதாக பஞ்சாபில் இரண்டு இடங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இரண்டு வழக்குகளிலும், குற்றம் சாட்டப்பட்டவர்கள் ராமரைப் பற்றி சர்ச்சைக்குரிய கருத்துகளைக் கூறியதாக புகார்தாரர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்த இரண்டு வழக்குகளும் பஞ்சாபின் பர்னாலா மற்றும் பதிண்டா மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்டுள்ளன. இக்பால் தனௌலா என்ற நபரை பர்னாலா போலீசார் கைது செய்துள்ளனர். அவர் மீது கொலை மிரட்டல் உள்ளிட்ட மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதற்கிடையில், பதிண்டா போலீசார் சாய்னா என்ற பெண் மீது வழக்குப் பதிவு செய்து கைது செய்தனர். பிபிசியின் செய்தியாளர் நவ்கிரண் சிங்கின் கூற்றுப்படி, 53 வயதான இக்பால் தனௌலா, பர்னாலா மாவட்டத்தில் ஒரு சிறிய அச்சகத்தை நடத்தி வருகிறார். அங்கு அவர் திருமணங்கள் மற்றும் பல்வேறு நிகழ்வுகளுக்கான பத்திரிகைகளை அச்சிடுகிறார். இக்பால், சமூக ஊடகங்களில் மிகவும் சுறுசுறுப்பாக இருப்பதோடு தன்னை நாத்திகர் என்றும் சொல்லிக் கொள்கிறார். சமூக ஊடகங்களில் ஸ்ரீராமர் மற்றும் இந்து சமூகத்திற்கு எதிராக ஒரு பெண் தவறான கருத்துகளைத் தெரிவித்ததாக சில இந்து அமைப்புகளின் பிரதிநிதிகள் போலீசில் புகார் அளித்துள்ளதாக மாவட்ட காவல்துறை அதிகாரி ஹர்மன் வீர் சிங் கில் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/articles/c0kdn7r0d14o
-
பிரமிட் திட்டத்தின் கீழ் 500 கோடி ரூபா பணம் மோசடி: சந்தேக நபர் கைது!
27 JAN, 2024 | 06:04 PM பிரமிட் திட்டத்தின் கீழ் 500 கோடி ரூபாவுக்கும் அதிகமான பணத்தை மோசடி செய்த குற்றச்சாட்டில் ஒருவர். இன்று சனிக்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளார். இவர், மூன்று வருடங்களாக தலைமறைவாகியிருந்த நிலையில் பிலிமத்தலாவ பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் ஒரு பட்டதாரி என்பதுடன் ஆசிரியராக கடமையாற்றியவர் எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சந்தேக நபர் தொலைக்காட்சி நடிகை ஒருவருடன் முறையற்ற தொடர்பு வைத்திருந்ததாக பொலிஸாரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றன்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174944
-
உலகின் பிரமாண்டமான கப்பல் பயணம் தொடங்கியது
உலகின் மிக நீளமான பிரமாண்ட பயணிகள் பொழுது போக்கு கப்பலை ரோயல் கரீபியன் நிறுவனம் உருவாக்கி உள்ளது. இந்த கப்பல் 365 மீட்டர் நீளம் கொண்டது. இந்த கப்பலில் அனைத்து பொழுது போக்கு அம்சங்களும் இருக்கின்றன. 20 அடுக்குகளை கொண்டதாக இந்த கப்பல் கட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு அடுக்கிலும் ஒவ்வொரு பிரிவு சுற்றுலா செல்வோர் தங்க நவீன வசதிகளுடன் அறைகள் கட்டப்பட்டுள்ளன. 6 நீர் வீழ்ச்சி, 7 நீச்சல் குளங்கள், ஒரு பனிக்கட்டி சறுக்கு மைதானம் இந்த கப்பலுக்குள் இருக்கிறது. 3 தியேட்டர்கள், 40 ஓட்டல்கள், பார்கள் இருக்கின்றன. இந்த பிரமாண்டமான கப்பலில் 7,600 பயணிகள் பயணம் செய்ய முடியும். அவர்களுக்கு உதவி செய்ய 2,350 பணியாளர்கள் கப்பலில் இடம் பெற்றுள்ளனர். மொத்தத்தில் 10 ஆயிரம் பேருடன் இந்த பிரமாண்ட கப்பல் தனி உலகமாக கடலில் உலா வரும். இந்த கப்பலின் முதல் சேவை இன்று அமெரிக்காவில் உள்ள மியாமி துறைமுகத்தில் இருந்து தொடங்கி உள்ளது. https://thinakkural.lk/article/289612
-
புதிய அரசியல் கூட்டணி - பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் முதல் பொதுக்கூட்டம்
பெருந்திரளான மக்களின் பங்கேற்புடன் புதிய கூட்டணியின் முதல் பொதுக்கூட்டம் 27 JAN, 2024 | 05:55 PM (எம்.மனோசித்ரா) 'வலுவான பொருளாதாரம் - வெற்றிகரமான பயணம்' எனும் தொனிப்பொருளில் புதிய அரசியல் கூட்டணியின் முதலாவது மக்கள் கூட்டம் இன்று சனிக்கிழமை (27) மாலை ஜாஎல நகரில் இடம்பெற்றது. பிற்பகல் 3.00 மணிக்கு ஆரம்பமான புதிய கூட்டணியின் அறிமுக பொதுக்கூட்டத்தில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டிருந்தனர். புதிய அரசியல் கூட்டணியின் செயற்பாட்டுத் தலைவர் அநுர பிரியதர்சன யாப்பா, நிறுவுனர் நிமல் லான்சா, அமைச்சர் சுசில் பிரேம்ஜயந்த, புதிய கூட்டணியின் கம்பஹா மாவட்டத் தலைவர் நளின் பெர்னாண்டோ, ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்க, நீர்கொழும்பு முன்னாள் மேயர் தயான் லான்சா, உள்ளிட்ட பல்வேறு முக்கியஸ்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர். மேலும் இந்நிகழ்வில் மதத் தலைவர்கள், தொழிற்சங்க தலைவர்கள், சிவில் அமைப்புக்களின் பிரதிநிதிகள், கலைஞர்கள், சட்டத்தரணிகள், தொழில் வல்லுனர்கள் உட்பட பெருந்தொகையான ஆதரவாளர்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174943
-
பெண் எழுத்தாளருக்கு, 83.3 மில்லியன் டொலர் நஷ்ட ஈடு வழங்க, டிரம்பிற்கு உத்தரவு!
பாலியல் துன்புறுத்தல் வழக்கு 83.3 மில்லியன் அமெரிக்க டொலர்களை நஷ்டஈடாக வழங்க டிரம்புக்கு உத்தரவு அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மீது பெண் எழுத்தாளர் ஜீன் கரோல் என்பவர் பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார். 1990 ஆம் ஆண்டு நியூயோர்க்கில் உள்ள வணிக வளாகத்தில் ஒரு அறையில் தன்னை டிரம்ப் பாலியல் பலாத்காரம் செய்ததாக கடந்த 2019 ஆம் ஆண்டு ஜீன் கரோல் கூறினார். இந்த குற்றச்சாட்டை மறுத்த டிரம்ப், ஜீன் கரோலை கடுமையாக விமர்சித்தார். அவர் ஒரு பொய்யர், அவரை தான் சந்தித்ததில்லை என டிரம்ப் கூறினார். இதையடுத்து தனது நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக கூறி டிரம்ப் மீது ஜீன் கரோல், நியூயோர்க் கோர்ட்டில் அவதூறு வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அவதூறு வழக்கில் ஜீன் கரோலுக்கு 83.3 மில்லியன் அமெரிக்க டொலர் (இந்திய மதிப்பில் ரூ.690 கோடி) நஷ்டஈட்டை டிரம்ப் வழங்க வேண்டும் என கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது. அதில், 2019 ஆம் ஆண்டு டிரம்ப் தனது தவறான மற்றும் தீங்கு இழைக்கும் கருத்துக்களால் ஜீன் கரோலின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காக 18.3 மில்லியன் அமெரிக்க டொலரும் தண்டனைக்குரிய சேதமாகவும், மன உளைச்சலை ஏற்படுத்தியதற்காக 65 மில்லியன் அமெரிக்க டொலரும் நஷ்டஈடு வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தீர்ப்பு முற்றிலும் அபத்தானமானது என தெரிவித்த டிரம்ப், தீர்ப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து மேல்முறையீடு செய்யப்படும். நமது சட்ட அமைப்பு கட்டுப்பாட்டில் இல்லை. அது அரசியல் ஆயுதமாக பயன்படுத்தப்படுகிறது. அனைத்து உரிமைகளையும் மறித்து விட்டனர். இது அமெரிக்கா அல்ல என்றார். ஏற்கனவே பாலியல் துன்புறுத்தல் வழக்கில் ஜீன் கரோலுக்கு 5 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்க வேண்டும் என தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிட டிரம்ப் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். குடியரசு கட்சி வேட்பாளராக தேர்ந்தெடுக்க அவருக்கு ஆதரவு அதிகரித்துள்ளது. இந்த நிலையில் இத்தீர்ப்பு வெளியாகி உள்ளது. https://thinakkural.lk/article/289583
-
நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் : 224 உறுப்பினர்கள் எதிராக வாக்களிக்க வேண்டும் - சிவில் அமைப்பினர் கூட்டாக வலியுறுத்தல்
ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் நிகழ்நிலை காப்பு சட்டம் நீக்கப்படும் - எதிர்க்கட்சித் தலைவர் 27 JAN, 2024 | 05:53 PM அடக்குமுறைகளை செயற்படுத்தி, நாட்டில் சாதாரண மக்களின் அரசியல் உரிமைகளை பறித்து, அடக்குமுறைகளை மேற்கொள்ளும் பொருட்டே தேர்தல் வருடமொன்றில் நிகழ்நிலை காப்பு சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றியுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச குற்றஞ்சாட்டியுள்ளார். நிகழ்நிலை காப்பு சட்டம் குறித்து ஊடகங்களுக்கு விசேட அறிவிப்பொன்றை விடுத்து, இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், இந்த சட்டத்தின் ஊடாக இந்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளும் மனித உரிமைகளும் மீறப்படுகிறது. இதனூடாக அரசியல் அதிகார பீடத்தாலேயே பயங்கரவாதி என்பவர் யார்? தேசபற்றாளர் என்பவர் யார் என்பதை தீர்மானிக்க முடியும். பல்வேறு அரசியல் கருத்துக்களைக் கொண்டிருக்க முடியுமான உரிமை இங்கு முற்றாக மீறப்படுகிறது. நியாயமான ஒழுங்குமுறைப்படுத்தல் மேற்கொள்ளப்பட வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தி பல முறை தமது கருத்துக்களை வெளிப்படுத்தியது. பல்வேறு தரப்பினரின் ஆலோசனைகளைப் பெற்ற பின்னர், இவ்வாறான ஒழுங்குமுறைப்படுத்தல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அரசாங்கம் கூறினாலும், இதற்கு குறிப்பிட்ட கால அவகாசமே வழங்கப்பட்டது. பல்வேறு தரப்பினரையும் பெயரளவில் பேச்சுவார்த்தைக்கு அழைத்து அரசாங்கம் தான் விரும்பியதை நிறைவேற்றியுள்ளது. பொது மக்களின் சுதந்திரமான முடிவெடுக்கும் உரிமையும், சுயாதீன உரிமையும் இங்கு மீறப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தியும் ஐக்கிய மக்கள் கூட்டணியும் அமைக்கும் அரசாங்கத்தில் இந்தச் சட்டத்தை நீக்குவது முதல் கடமையாகும். பின்னர் நாட்டுக்கும் மக்களுக்கும் நலனளிக்கும் மனித உரிமைகளைப் பாதுகாக்கும், மனித சுதந்திரத்துக்கு இடமளிக்கும், உண்மைகளின் அடிப்படையில் தகவல்களை வழங்குவதை நடைமுறைப்படுத்துவதற்கு அனைத்து தரப்பினரின் கருத்துக்களுக்கு அமைய யதார்த்தமான, நம்பகமான, நடைமுறை மற்றும் முற்போக்கான ஒழுங்குமுறைப்படுத்தல் நடைமுறைப்படுத்தப்படும். அங்கீகரிக்கப்பட்ட இந்த சட்டமூலத்தின் மூலம் அரசாங்கம் தற்காலிக ஆறுதல் பெறலாம். இந்த ஆறுதல் சில மாதங்களுக்கு மட்டுமே தங்கும். ஐக்கிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் மக்களை ஒடுக்கும் இந்த சட்டமூலம் நீக்கப்படும். https://www.virakesari.lk/article/174942
-
அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் தொடர்
பெட்டை வைத்து விளையாட சொன்னா நீ எத வைச்சு விளையாடுற- வைரலாகும் வெஸ்ட் இண்டீஸ் வீரர் வீடியோ வெஸ்ட் இண்டீஸ் அணி 3 வடிவிலான தொடர்களில் விளையாடுவதற்காக அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில் முதலாவது நடந்து டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்றது. இதனையடுத்து இரு அணிகளுக்கு இடையேயான 2 ஆவது டெஸ்ட் போட்டி 25 ஆம் திகதி தொடங்கியது. இதில் டொஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பெட்டிங்கை தேர்வு செய்தது. அதன்படி முதலில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 311 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதனை தொடர்ந்து முதல் இன்னிங்சில் விளையாடிய அவுஸ்திரேலியா 9 விக்கெட்டுகளை இழந்து 289 ரன்கள் எடுத்த போது டிக்ளேர் செய்தது. 22 ரன்கள் முன்னிலையில் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 ஆவது இன்னிங்சில் விளையாடி வருகிறது. தற்போது வரை 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 123 ரன்களில் விளையாடி வருகிறது. இந்நிலையில் நாதன் லயன் பந்து வீச்சை சமாளிக்க வெஸ்ட் இண்டீஸ் வீரர் கவேம் ஹாட்ஜ் புதிய யுக்தியை பயன்படுத்தி உள்ளார். அதன்படி அவர் பெட்டிங் செய்த போது வித்தியாசமான முறையில் ஒரு ஷாட் விளையாடி இருக்கிறார். பெட்டை வைத்து விளையாடாமல் உடலை வைத்து விளையாடி இருக்கிறார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. பெட்டை வைத்து விளையாட சொன்னா நீ எத வைச்சு விளையாடுற என நெட்டிசன்கள் கிண்டலான பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர். https://thinakkural.lk/article/289604
-
இஸ்ரேல் இனப்படுகொலையில் ஈடுபடுகின்றது – சர்வதேச நீதிமன்றத்தில் தென்னாபிரிக்கா வழக்கு
காசாவில் இனப்படுகொலை இடம்பெறுகின்றதா? சர்வதேச நீதிமன்றம் வழங்கியுள்ள முக்கிய தீர்ப்பு என்ன? Published By: RAJEEBAN 27 JAN, 2024 | 01:05 PM காசாவில் இனப்படுகொலைகள் இடம்பெறுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேல் எடுக்கவேண்டும் என சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இஸ்ரேல் இனப்படுகொலைகளில் ஈடுபடுவதாக தெரிவித்து தென்னாபிரிக்கா தாக்கல் செய்த மனுவை ஆராய்ந்த சர்வதேச நீதிமன்றம் தனது உத்தரவினை வெளியிட்டுள்ளது. இனப்படுகொலை என்பதற்குள் அடங்ககூடிய அனைத்துவகையான நடவடிக்கைகளையும் தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேல் எடுக்கவேண்டும் என நீதிபதி ஜோன்டொனோகு தெரிவித்துள்ளார். இஸ்ரேலிய படையினர் இனப்படுகொலைகள் என கருதப்படும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை இஸ்ரேல் தடுத்து நிறுத்தவேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார். எனினும் தென்னாபிரிக்கா வேண்டுகோள் விடுத்தபடி இஸ்ரேல் காசாவில் தனது இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தவேண்டும் என நீதிமன்றம் உத்தரவிடவில்லை. இஸ்ரேலின் நடவடிக்கைகள் தொடர்பிலான நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பு இதுவல்ல என்ற போதிலும் பாலஸ்தீனியர்கள் இனப்படுகொலை ஆபத்தை எதிர்கொள்கின்றனர் என தாங்கள் கருதுவதை நீதிபதிகள் வெளிப்படுத்தியுள்ளனர். https://www.virakesari.lk/article/174913
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
பாலஸ்தீனத்துக்கான ஐ.நா அமைப்பின் பணியாளர்கள் ஹமாஸுடன் இணைந்து தாக்குதலில் ஈடுபட்டனரா? : இஸ்ரேல் பரபரப்பு குற்றச்சாட்டு Published By: RAJEEBAN 27 JAN, 2024 | 12:54 PM ஓக்டோபர் ஏழாம் திகதி ஹமாஸ் மேற்கொண்ட தாக்குதலில் ஈடுபட்டவர்களில் பாலஸ்தீனத்திற்கான ஐ.நா அமைப்பின் பணியாளர்களும் உள்ளனர் என விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளதை தொடர்ந்து அந்த அமைப்பிற்கான நிதியை அவுஸ்திரேலியா இடைநிறுத்தியுள்ளது. ஒக்டோபர் ஏழாம் திகதி தாக்குதலில் தனது அமைப்பை சேர்ந்தவர்களும் ஈடுபட்டனர் என்ற விபரங்களை இஸ்ரேல் வழங்கியுள்ளது என பாலஸ்தீன அகதிகளிற்கான ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. விசாரணைகள் ஆரம்பமாகியுள்ளன குறிப்பிட்ட பணியாளர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என ஐநா அமைப்பு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிற்கு எதிராக தனது அமைப்பின் எத்தனை பேர் தாக்குதலில் ஈடுபட்டனர் எவ்வகையான தாக்குதலில் ஈடுபட்டனர் என்ற விபரங்களை ஐநா அமைப்பு வெளியிடவில்லை. இந்நிலையில் அமெரிக்கா கனடா போன்று அகதிகளிற்கான பாலஸ்தீன அமைப்பிற்கான நிதிஉதவியை இடைநிறுத்தியுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது. அவுஸ்திரேலியா இந்த குற்றச்சாட்டுகள் குறித்து ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதாக அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பணியாளர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர் முழுமையான விசாரணை இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளதை அவுஸ்திரேலியா வரவேற்றுள்ளது. https://www.virakesari.lk/article/174911
-
அவுஸ்திரேலியா எதிர் மேற்கிந்திய தீவுகள் கிரிக்கெட் தொடர்
வைரலாகும் வெஸ்ட் இண்டீஸ் வீரரின் வெற்றிக் கொண்டாட்டம் (வீடியோ) அவுஸ்திரேலியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான 2 ஆவது டெஸ்ட் போட்டி பிரிஸ்பேனில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்று வருகிறது. நேற்றுமுன்தினம் தொடங்கிய இந்த டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் முதலில் பெட்டிங் செய்து 311 ரன்கள் எடுத்து ஆல்அவுட் ஆனது. பின்னர் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 9 விக்கெட் இழப்பிற்கு 289 ரன்கள் டிக்ளேர் செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர் கவாஜா சிறப்பாக விளையாடி 75 ரன்கள் சேர்த்து 8 ஆவது விக்கெட்டாக ஆட்டமிழந்தார். அவர் அலேக்ஸ் கேரியுடன் இணைந்து 6 ஆவது விக்கெட்கட்கு 96 ரன்கள் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. கவாஜா சுழற்பந்து வீச்சாளர் கெவின் சின்க்ளேர் பந்தில் ஆட்டமிழந்தார். சின்க்ளேர் பந்தை தூக்கி அடிக்க முயற்சித்த போது ஸ்லிப் திசையில் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். நீண்ட நேரம் களத்தில் நின்ற கவாஜாவின் விக்கெட்டை அறிமுக போட்டியில் வீழ்த்தியதும் உற்சாகத்துடன் சின்க்ளேர் ஜிம்னாஸ்டிக் வீரர்களை போன்று டைவ் அடித்து (Cartwheel Celebration) சந்தோசத்தை வெளிப்படுத்தினார். இது தொடர்பான வீடியோ இணையதளத்தில் வைரலாகி வருகிறது. https://thinakkural.lk/article/289590
-
நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தை இலங்கை நிறைவேற்றியமைக்கு அமெரிக்கா கவலை
நிகழ்நிலை காப்பு சட்டம் பொருளாதார மீட்சிக்கு தீங்கு விளைவிக்கும் - கனடா கவலை 27 JAN, 2024 | 05:47 PM (எம்.மனோசித்ரா) இலங்கையின் நிகழ்நிலை காப்பு சட்டம் பொருளாதார மீட்சிக்கு தீங்கு விளைவிக்கும் என கனடா கவலை வெளியிட்டுள்ளது. இலங்கை மற்றும் மாலைதீவுக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் எரிக் வோல்ஸ் தனது உத்தியோகபூர்வ டுவிட்டர் பக்கத்தில் இதனை தெரிவித்துள்ளார். அவரது டுவிட்டர் பதிவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இலங்கையின் நிகழ்நிலை காப்பு சட்டம் பொருளாதார மீட்சிக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் ஜனநாயக சமூகத்தில் எதிர்பார்க்கப்படும் நியாயமான உரையாடலைக் கட்டுப்படுத்தும் சாத்தியம் உள்ளது என்ற கவலையை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம். இதைத் தவிர்க்க, நிகழ்நிலையில் தீங்கு விளைவிக்கும் உள்ளடக்கத்தை எதிர்கொள்ள எடுக்கப்படும் எந்தவொரு நடவடிக்கையும் கருத்துச் சுதந்திரம் உட்பட அடிப்படை உரிமைகளைப் பாதுகாப்பதை உறுதிப்படுத்த வேண்டும். https://www.virakesari.lk/article/174934
-
போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் தொடர்பில் தகவல் வழங்க அவசர தொலைபேசி இலக்கம்
27 JAN, 2024 | 05:29 PM (எம்.மனோசித்ரா) போதைப்பொருள் மற்றும் அபாயகரமான போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளித்தல், புனர்வாழ்வளித்தல் மற்றும் ஆலோசனை வழங்கல் உள்ளிட்ட சேவைகளுக்காக அபாயகரமான மற்றும் விஷத்தன்மையுடைய போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கான செயலணியினால் அவசர தொலைபேசி இலக்கமொன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று வெள்ளிக்கிழமை (26) அபாயகரமான மற்றும் விஷத்தன்மையுடைய போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதற்கான செயலணியின் தலைவராக செயற்படும் கடற்படை தளபதி வைஸ் அத்மிரல் பிரியந்த பெரேரா தலைமையில் கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் 1927 என்ற குறித்த அவசர தொலைபேசி இலக்கம் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த ஊடகவியலாளர் மாநாட்டில் கடற்படை தளபதி மேலும் தெரிவிக்கையில், விஷத்தன்மையுடைய மற்றும் அபாயகரமான போதைப்பொருட்களை நாட்டுக்குள் கொண்டு வருதல் மற்றும் அவை விற்பனை செய்யப்படுதல் என்பவற்றை கட்டுப்படுத்துவதற்காகவும், போதைப்பொருள் பாவனையை தடுப்பதற்காகவும், அதற்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வளிப்பத்து சமூக மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு பங்களிப்பதற்கு இந்த செயலணி நிறுவப்பட்டது. 11 அமைச்சுக்கள் மற்றும் 14 திணைக்களங்கள் இந்த செயலணியில் அங்கத்தவர்களாக உள்ளன. அதற்கமைய போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் தொடர்பில் இந்த இலக்கத்துக்கு தகவல்களை வழங்க முடியும். இவ்வாறு தகவல் வழங்குபவர்களின் தனித்துவத்தன்மை பாதுகாக்கப்படும் என்றார். https://www.virakesari.lk/article/174931
-
பாவனைக்கு உதவாத மீன்கள் அடங்கிய 98 கொள்கலன்கள் தரையிறக்கம் !
சீஷெல்ஸில் இருந்து தாய்லாந்து நோக்கி பயணித்த கப்பலில் இருந்து பாவனைக்கு பொருத்தமற்ற மீன்கள் அடங்கிய 98 கொள்கலன்கள் தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரிம உரங்களை தயாரிப்பதாகவே இந்த கொள்கலன்கள் தரையிறக்கப்படுவதாக முன்னதாக அனுமதி கோரப்பட்டிருந்ததாக கோபா எனப்படும் அரசாங்க கணக்கு குழு தெரிவித்துள்ளது. இந்தநிலையில் குறித்த மீன்கள் அடங்கிய 98 கொள்கலன்களும் நாட்டில் இறக்குமதி செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், மீன் கழிவுகளுக்காகவே இந்த அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளதாக இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளர் நாயகம் டி.டி உபுல்மலி பிரேமதிலக்க மஹத்மோயா தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்வதற்காக எதிர்வரும் மார்ச் மாதம் 5ஆம் திகதி அனைத்து அரச நிறுவனங்களுக்கும் அழைப்பு விடுக்கப்படும் என அரச கணக்குகள் தொடர்பான குழுவின் தலைவர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/289610
-
ஏடன் வளைகுடாவில் தீப்பிடித்து எரிகின்றது கப்பல் - ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்
ஹூத்தி தாக்குதலில் பற்றி எரிந்த கப்பல் - 22 இந்தியர்கள் என்ன ஆயினர்? கடற்படை விரைவு பட மூலாதாரம்,INDIAN NAVY படக்குறிப்பு, பிரிட்டிஷ் வணிக கப்பல் மீது ஹூத்தி குழு தாக்குதல் 39 நிமிடங்களுக்கு முன்னர் ஏமனை தளமாகக் கொண்ட ஈரான் ஆதரவு இயக்கமான ஹூத்தி கிளர்ச்சிக்குழு, "அமெரிக்க-பிரிட்டன் தாக்குதலுக்கு" பதிலடி கொடுக்கும் விதமாக வெள்ளிக்கிழமையன்று மார்லின் லுவாண்டா கப்பலை குறிவைத்து தாக்குதல் நடத்தியுள்ளது. இந்த கப்பலை மீட்கும் முயற்சியில் இந்திய கடற்படையின் கப்பல் உள்ளிட்ட பிற நாடுகளின் கப்பல்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. அமெரிக்க, பிரிட்டன் தாக்குதலுக்கு பதிலடி செங்கடல் பகுதியில் செல்லும் கப்பல்கள் மீது தொடர் தாக்குதல் நடத்தி வரும் ஹூத்தி குழுவின் நடவடிக்கைகளுக்கு எதிராக சமீபத்தில் அமெரிக்கா மற்றும் பிரிட்டன் இணைந்து வான்வழி தாக்குதலை நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் ஏடன் வளைகுடா பகுதியில் பயணித்து கொண்டிருந்த மார்லின் லுவாண்டா கப்பல் மீது ஏவுகணை தாக்குதல் நடத்தியுள்ளது ஹூத்தி கிளர்ச்சிக்குழு. தற்போது பிரான்ஸ் , இந்தியா மற்றும் அமெரிக்க கடற்படை கப்பல்கள் அந்த கப்பலுக்கு உதவிக்கரம் நீட்டியுள்ளன. பட மூலாதாரம்,INDIAN NAVY படக்குறிப்பு, இந்த டேங்கர் கப்பலானது மார்ஷல் தீவுகளின் கொடியின் கீழ் , டிராஃபிகுரா (Trafigura) என்ற பன்னாட்டு வர்த்தக நிறுவனத்தின் சார்பில் இயக்கப்படுகிறது. கப்பல் மீது தாக்குதல் தற்போது ஹூத்திக்கள் தாக்குதல் நடத்தியுள்ள மார்லின் லுவாண்டா கப்பலை இயக்குவது ஓஷியோனிக்ஸ் சர்வீசஸ் லிமிடெட் (Oceonix Services Ltd) என்ற இங்கிலாந்தில் பதிவு செய்யப்பட்ட நிறுவனமாகும். இந்த டேங்கர் கப்பலானது மார்ஷல் தீவுகளின் கொடியின் கீழ் , டிராஃபிகுரா (Trafigura) என்ற பன்னாட்டு வர்த்தக நிறுவனத்தின் சார்பில் இயக்கப்படுகிறது. சனிக்கிழமையன்று(27.1.2024) கிடைத்த புதிய தகவலின்படி, கப்பலின் அனைத்து பணியாளர்களும் பாதுகாப்பாக இருப்பதாகவும், டேங்கரில் ஏற்பட்ட தீ அணைக்கப்பட்டுவிட்டதாகவும் கூறியுள்ளது டிராஃபிகுரா நிறுவனம் . கப்பல் தற்போது பாதுகாப்பான துறைமுகத்தை நோக்கி பயணித்துக் கொண்டிருப்பதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அமெரிக்க-பிரிட்டிஷ் தாக்குதலுக்கு" பதிலளிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக ஹூத்தி அமைப்பு தெரிவித்துள்ளது. ஹூத்தி பொறுப்பேற்பு இது செங்கடல் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஹூத்திக்களால் வணிகக் கப்பல் மீது நடத்தப்பட்ட சமீபத்திய தாக்குதலாகும். இஸ்ரேல் ஹமாஸுக்கு எதிராக தாக்குதல் நடத்தி வரும் நிலையில், காசாவில் உள்ள பாலத்தீனர்களுக்கு ஆதரவாக இந்த பகுதியில் வரும் கப்பல்கள் மீது தாக்குதல்கள் நடத்தி வருவதாக ஹூத்தி அமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து ஹூத்தி செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மார்லின் லுவாண்டா ஒரு பிரிட்டிஷ் கப்பல் என்றும், "எங்கள் நாட்டிற்கு எதிரான அமெரிக்க-பிரிட்டிஷ் தாக்குதலுக்கு" பதிலளிக்கும் வகையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள இங்கிலாந்து அரசு, வணிக கப்பல் போக்குவரத்து மீதான தாக்குதல்கள் "முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாதவை" என்றும், பிரிட்டனும் அதன் நட்பு நாடுகளும் "இதற்கு தகுந்த முறையில் பதிலளிக்கும்" என்றும் தெரிவித்துள்ளது. நவம்பர் மாதத்திலிருந்து, உலகின் முக்கியமான கடல் வழித்தடங்களில் ஒன்றான செங்கடல் வழியாகப் பயணிக்கும் வணிகக் கப்பல்கள் மீது ஹூத்திக்கள் டஜன்கணக்கான தாக்குதல்களை நடத்தி வருகின்றனர். இதனால் செங்கடல் பகுதியில் வணிக கப்பல்களின் போக்குவரத்துக்கு பாதிக்கப்பட்டுள்ளது. தாக்குதல் எங்கே நடந்தது? ஏடனுக்கு தென்கிழக்கே திசையில் 60 கடல் மைல் தொலைவில் இந்த தாக்குதல் நடந்ததாக இங்கிலாந்து கடல்சார் வர்த்தக நடவடிக்கைகள் (UKMTO) அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் மற்ற கப்பல்கள் எச்சரிக்கையுடன் செல்லுமாறும், சந்தேகத்திற்கிடமான செயல்கள் ஏதேனும் பார்த்தால் உடனே தகவல் தருமாறும் எச்சரித்துள்ளது. இதற்கு பின்னர், சனிக்கிழமையன்று உள்ளூர் நேரப்படி 03:45 மணிக்கு (00:45 GMT) அமெரிக்க படை, “ செங்கடலை குறிவைத்து ஏவத் தயாராக இருந்த கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகளுக்கு எதிராக” ஏவுகணை தாக்குதல்களை நடத்தியுள்ளதாக அமெரிக்க மத்திய கமாண்ட் தெரிவித்துள்ளது. அவர்கள் “ தற்காப்புக்காக அந்த ஏவுகணைகளை அழித்து விட்டதாக” சென்ட்காம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,INDIAN NAVY படக்குறிப்பு, ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் உடனடி நடவடிக்கையில் இறங்கியது. இந்திய கடற்படை விரைவு இந்தத் தாக்குதலுக்குப் பிறகு, ஏடன் வளைகுடாவில் நிலைநிறுத்தப்பட்டுள்ள இந்தியக் கடற்படையின் போர்க்கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் உடனடி நடவடிக்கையில் இறங்கியது. தாக்குதல் நடத்தப்பட்ட கப்பலில் இருந்து உதவிக்கான அழைப்பு வந்ததையடுத்து, இந்திய கடற்படையின் ஏவுகணை அழிப்பு கப்பலான ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் உதவிக்கு அனுப்பப்பட்டதாக இந்திய கடற்படை சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. இந்தக் கப்பலில் 22 இந்தியர்களைத் தவிர, வங்கதேசத்தைச் சேர்ந்த பணியாளர் ஒருவரும் இருக்கிறார். வெள்ளிக்கிழமை இரவு இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. அதனை தொடர்ந்து உடனடியாக விரைந்த ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் கப்பல் குழுவின் முயற்சியால் கப்பலில் பற்றியிருந்த தீ அணைக்கப்பட்டு விட்டதாக இந்திய கடற்படை தனது சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளது. மேலும் வணிக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதில் உறுதியாகவும், ஈடுபாட்டோடும் இந்திய கடற்படை தொடர்ந்து செயல்படும் என்றும், கடல் பரப்பில் உயிர்களை காப்பதற்கான உறுதியை கொண்டுள்ளதாகவும் இந்திய கடற்படை தனது பதிவில் தெரிவித்துள்ளது. https://www.bbc.com/tamil/articles/c4nwx556zvno
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுகள் திருகோணமலையில் இன்று
பொதுச்சபைக் கூட்டத்தில் அமளிதுமளி : தமிழரசுக் கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு ஒத்திவைப்பு 27 JAN, 2024 | 07:12 PM இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு காலவரையின்றி ஒத்திவைக்கப்படுவதாக அக்கட்சியின் முன்னாள் தலைவர் மாவை.சோ.சேனாதிராஜா அறிவித்துள்ளார். கட்சியின் உறுப்பினர்கள் இடையே இணக்கப்பாட்டுடன் தீர்மானங்களை எட்ட முடியாமையின் காரணமாக அவ்விதமான முடிவுக்கு தான் வந்துள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார். இதேவேளை, தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழுவினால் அங்கீகாரமளிக்கப்பட்ட புதிய நிருவாகத்தினை அங்கீகரிப்பது தொடர்பில் பொதுச்சபைக்குள் ஏற்பட்ட குழப்பித்தினை அடுத்து நிருவாகத்தினை ஆதரிப்பதா இல்லையா என்பது தொடர்பில் முன்வைக்கப்பட்ட பிரேரணைக்கு ஆதரவாக 112வாக்குகளும்ரூபவ் எதிராக 104வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன. இந்த முடிவுகளின் அடிப்படையில் புதிய நிருவாகத்திற்கு பொதுச்சபை அங்கீகாரம் அளித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கைத் தமிழரசுக்கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டின் முதல்நாள் இன்றைய தினம் திருகோணமலை உப்புவெளியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்றது. இதன்போது முற்பகல் மத்தியகுழு கூட்டமும், பிற்பகலில் பொதுச்சபைக் கூட்டமும் நடைபெற்றது. மத்திய செயற்குழுக் கூட்டம் அதனடிப்படையில் மத்திய செயற்குழு கூட்டம் முற்பகல் 10மணிக்கு ஆரம்பமானது. இதன்போது முதலில் பொதுச்செயலாளர் பதவிக்கான தெரிவு தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டது. அதன்போது, ஞானமுத்து சிறிநேசன், குலநாயகம் மற்றும் சண்முகம் குகதாசன் ஆகியோர் அப்பதவியை வகிப்பதற்கு தமது விருப்பத்தினை வெளிப்படுத்தினார்கள். எனினும் அதன் பின்னர் பலதரப்பட்ட கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டு பொதுச்செயலாளராக சண்முகம் குகதாசன் நியமிக்கப்பட்டதோடு, சிரேஷ்ட உபதலைவராக சி.வி.கே.சிவஞானமும் இணை பொருளாளர்களாக ஞா.சிறிநேசன், கனகசபாபதி ஆகியோரும் துணைத் தலைவர்களாக கே.வி.தவராசா, சாள்ஸ் நிர்மலநாதன், தவராசா கலையரசன், பாக்கியசெல்வம் அரியநேந்திரன், வைத்தியர் சத்தியலிங்கம் ஆகியோரும் இணை செயலாளர்களாக திருமதி சாந்தி, சிறிஸ் கந்தராஜா, திருமதி ரஞ்சனி கனகராஜா, சரவணபவன், சாணக்கியன், சிவமோகன் ஆகியோரும் சுமந்திரன் உட்பட 13 உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர். இதன்பின்னர் மதிய போசனத்துக்கான இடைவேளை விடப்பட்டதோடு தொடர்ந்து பொதுச்சபைக் கூட்டத்தின் முதலாவது நாள் அமர்வு ஆரம்பமானது. பொதுச்சபைக் கூட்டம் பொதுச்சபைக் கூட்டம் ஆரம்பமாகியதும் மீண்டும் பொதுச்செயலாளர் நியமனம் சம்பந்தமாக சர்ச்சைகள் ஏற்பட்டன. உறுப்பினர்களிடையே வாதப்பிரதிவாதங்கள் அதிகரித்து கைகலப்பில் ஈடுபடுமளவிற்கு நிலைமைகள் மோசமாகின. இதனையடுத்து பல்வேறு இணக்கப்பாடுகளை எட்டுவதற்கான முன்மொழிகள் செய்யப்பட்டபோதும் உறுப்பினர்களில் சிலர் நிருவாகத்தெரிவினை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்ப்பினை வெளியிட்டார்கள். அதுமட்டுமன்றி, பொதுச்செயலாளராக குகதாசனை நியமிப்பதற்கும் எதிர்ப்பினை வெளியிட்டனர். இதனால், பொதுச்சபைக் கூட்டத்தில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நிகழ்ந்ததை அடுத்து, பொதுச்செயலாளர் தெரிவிக்கான பகிரங்கமான வாக்கெடுப்பினை நடத்துமாறு கோரினார்கள். எனினும், குறித்த நிருவாகத்தெரிவுக்கு மத்திய செயற்குழு அங்கீகாரம் அளித்துள்ளதன் அடிப்படையில் மீண்டும் தனியொரு பதவிநிலைக்காக வாக்கெடுப்பு நடத்த முடியாது என்ற விடயத்தினை சுமந்திரன் சுட்டிக்காட்டினார். இந்நிலையில் தமிழரசுக்கட்சியின் தலைவர் தவிர்ந்த புதிய நிருவகத்தினருக்கான அனுமதியை கோரும் பிரேரணையை கட்சியின் புதிய தலைவர் சிவஞானம் சிறீதரன் முன்மொழிந்தார். அதனையடுத்து, பீற்றர் இளஞ்செழியர் அதனை வழிமொழிந்தார். தொடர்ந்து, குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. உறுப்பினர்கள் தங்களது கைகளை உயர்த்தி ஆதரவினையும் எதிர்ப்பினையும் வெளியிட்ட நிலையில் அதனடிப்படையில் எண்ணிக்கை கணிக்கப்பட்டது. அந்த வகையில் பிரேரணை எட்டு மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. மேலும் குறித்த பிரேரணை மீதான வாக்கெடுப்பில் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் பங்கேற்கமுடியாது என்ற விடயத்தினை சுமந்திரன் சுட்டிக்காட்டினார். ஏனெனில் மத்திய செயற்குழு உறுப்பினர்கள் ஏற்கனவே நிருவாகத்தெரிவுக்கு ஆதரவளித்திருந்த நிலையில் அதனை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அவர் குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் மத்திய செயற்குழு உறுப்பினர்களின் பங்கேற்பின்றியே பொதுச்சபை உறுப்பினர்களின் பங்கேற்புடன் வாக்கெடுப்பு முடிவுக்கு கொண்டு வரப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. எனினும் உறுப்பினர்களிடையே சார்ச்சைகள் தொடர்ந்தும் நீடித்தன. இந்த நிலைமையை தொடர்ச்சியாக அவதானித்துக்கொண்டிருந்த மாவை.சோ.சேனாதிராஜா உறுப்பினர்களை அமைதியாக இருக்குமாறு கோரிக்கை விடுத்தார். அனைவரும் ஒற்றுமையாக நாளை நடைபெறவுள்ள பகிரங்க தேசிய மாநாட்டை நிறைவு செய்வதற்கு ஒத்துழைப்புக்களை வழங்குமாறு கோரியபோதும் நிலைமைகள் சுமூகமடைந்திருக்கவில்லை. இதனையடுத்து மாவை.சோ.சேனாதிராஜா ஒலிவாங்கியைப் பெற்று 17ஆவது தேசிய மாநாட்டை தான் ஒத்திவைப்பதாக அறிவித்து விட்டு கூட்டத்தினை முடிவுக்கு கொண்டுவந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174918
-
‘வீடு வாங்கினால் மனைவி இலவசம்’ என அறிவித்த ரியல் எஸ்டேட் நிறுவனம்
போட்டி நிறைந்த உலகில் தங்கள் பொருட்களை வாடிக்கையாளர்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு வியாபார நிறுவனங்கள் பல்வேறு யுக்திகளை கையாண்டு வருகிறது. மேலும், வியாபாரத்தை பெருக்குவதற்காகவும், வாடிக்கையாளர்களை கவர்வதற்காகவும் சில நிறுவனங்கள் பம்பர் பரிசு, கேஷ் பேக் தள்ளுபடி உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை அறிவிக்கின்றன. அதுபோன்ற விளம்பரங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு சில நேரங்களில் எதிர்மறையாகவும் அமைந்து விடுகிறது. அப்படி ஒரு நிகழ்வு சீனாவில் நடைபெற்றுள்ளது. சீனாவின் டிரையஜின் நகரை சேர்ந்த பிரபல ரியல் எஸ்டேட் நிறுவனம் ஒன்று சமீபத்தில் வாடிக்கையாளர்களை கவர்வதற்காக ஒரு விளம்பரம் செய்தது. அதில் எங்கள் நிறுவனத்தில் வீடு வாங்கினால் உங்கள் மனைவியை இலவசமாக பெறுங்கள் என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. இந்த விளம்பரம் சமூகவலைத்தளங்கள் மற்றும் சுவர் போஸ்டர்கள் மூலம் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வீடு வாங்கினால் மனைவி இலவசமா? என அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சம்பந்தப்பட்ட நிறுவனம் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரசுக்கு கோரிக்கை வைத்தனர். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு ரூ.3 இலட்சம் அபராதம் விதித்து அரசு உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. அதில், இந்த விளம்பரத்தை மக்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை. அதாவது தங்கள் முயற்சியில் வீடு வாங்கி உங்கள் மனைவிக்கு கொடுங்கள் என்ற அர்த்தத்தில் விளம்பரம் செய்யப்பட்டதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. https://thinakkural.lk/article/289577
-
இனப்படுகொலை நினைவு தினம்: யூதர்களை கொன்று குவித்த ஹிட்லரின் 'கொடூர வதை முகாம்கள்'
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஹோலோகாஸ்ட்டின் அழியா சுவடுகள் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஹோலோகாஸ்ட்(இனப்படுகொலை) என்பது இரண்டாம் உலகப் போரின்போது (1939-1945), கோடிக்கணக்கான யூதர்கள் அவர்கள் யூதர்கள் என்பதற்காகவே கொல்லப்பட்ட வரலாற்றின் கொடூரமான சம்பவம். இந்தப் படுகொலைகள் ஜெர்மனியின் நாஜி கட்சியால் அடால்ஃப் ஹிட்லர் தலைமையில் நிகழ்த்தப்பட்டது. இதில் யூத மக்களே நாஜிக்களின் இலக்காக இருந்தனர். அவர்களே அதிக எண்ணிக்கையில் கொல்லவும் பட்டனர். கிட்டத்தட்ட ஐரோப்பாவை சேர்ந்த ஒவ்வொரு 10 யூதர்களில் 7 பேர் அவர்களின் இன அடையாளத்திற்காகவே என்பதற்காகவே கொல்லப்பட்டனர். அவர்களை மட்டுமின்றி ரோமா(ஜிப்ஸிக்கள்) மற்றும் மாற்றுத் திறனாளிகளையும் கொன்று குவித்தனர் நாஜிக்கள். மேலும் அவர்களது எதிர் குழுக்கள் மற்றும் பால் புதுமையினர் உள்ளிட்ட மக்களின் உரிமைகளையும்கூட அவர்கள் பறித்தனர். இவர்களில் பலர் சித்ரவதை செய்யப்பட்டு இறந்து போயினர். இந்த ஹோலோகாஸ்ட்தான் இனப்படுகொலைக்கு எடுத்துக்காட்டு. இனப்படுகொலை என்பது உள்நோக்கத்தோடு குறிப்பிட்ட நாடு, இனம் மற்றும் மதத்தைச் சார்ந்த மக்களைக் கொத்துக் கொத்தாகக் கொன்று குவிப்பதாகும். யார் இந்த நாஜிக்கள்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1920இல் பெர்லினில் வாழ்ந்த ஒரு குடும்பத்தின் நிலை நாஜி(Nazi) என்பது ஜெர்மன் தேசிய சோசலிச தொழிலாளர் கட்சி(NSDAP) என்பதன் சுருக்கம். இது 1919ஆம் ஆண்டில் முதல் உலகப் போருக்குப் பிறகு ஜெர்மனியில் உருவாக்கப்பட்ட அரசியல் கட்சி. முதல் உலகப்போரில் ஏற்பட்ட பின்னடைவால் ஜெர்மனி போராடிக் கொண்டிருந்த நேரத்தில் 1920 காலகட்டங்களில் இந்தக் கட்சி பிரபலமடைந்தது. அந்தப் போரில் ஜெர்மனி தோற்றதால், போரில் வெற்றி பெற்ற நாடுகளுக்குப் பெரும் தொகை கொடுக்க வேண்டியிருந்தது. இந்நிலையில் மக்கள் பலரும் ஏழைகளாகவும், அந்த நேரத்தில் தேவையான அளவு வேலைவாய்ப்புகள் இல்லாமலும் இருந்தது. மேலும், ஜெர்மானியர்கள் நாஜிக்களை நோக்கி வந்ததற்கான காரணம் மாற்றம் குறித்து நாஜி கட்சி கொடுத்த நம்பிக்கை. நாஜிக்கள் இனவெறியர்களாகவும், தங்களது இனம் என்று அழைக்கப்படும் ஆரிய இனத்தைத் தவிர வேறு எதுவும் மேலானது இல்லை என்று நம்புபவர்களாகவும் இருந்தனர். ஜெர்மானியர்களாக இருப்பவர்களே ஆரியர்கள் என்று கூறினர் நாஜிக்கள். மேலும் யூதர்கள், ரோமா (ஜிப்ஸிக்கள்), கறுப்பினத்தவர்கள் மற்றும் இதர இனங்களைச் சேர்ந்த மக்கள் அனைவரும் ஆரியர்களுக்குக் கீழானவர்கள் என்றும் நம்பினார்கள். ஜெர்மனி மற்ற நாடுகளைவிடச் சிறந்த நாடு என்றும், தங்கள் மக்களின் உயர்ந்த தன்மை மூலம் மற்றவர்களை ஆதிக்கம் செலுத்த முடியும், எனவே அவர்கள் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்றும் அவர்கள் நம்பினர். இதுவே இரண்டாம் உலகப் போருக்கு முன்பும் பின்பும் பிற நாடுகளை ஜெர்மனி கைப்பற்ற வழிவகுத்தது. யார் இந்த அடால்ஃப் ஹிட்லர்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, அடால்ஃப் ஹிட்லர் அடால்ஃப் ஹிட்லர் என்ற பெயர் கொண்ட நபர் 1921ஆம் ஆண்டு நாஜி கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். பிறகு 1933ஆம் ஆண்டு ஜனவரியில், நடந்த தேர்தலில் அதிக வாக்குகள் பெற்றதால் நாஜிக்கள் ஆட்சியமைக்க அழைக்கப்பட்டனர். தனது கட்சி அதிகாரத்திற்கு வந்த தருணத்தில் இருந்து, ஜெர்மானியர்களின் வாழ்க்கையில் அனைத்து அம்சங்களிலும் நாஜி கொள்கைகளை புகுத்தத் தொடங்கினார் அடால்ஃப் ஹிட்லர். மேலும் பயம் மற்றும் அச்சுறுத்தலைப் பயன்படுத்தி அவர்களைத் தனது கட்டுக்குள் கொண்டு வந்தார். ஜெர்மனியின் அதிபர் ஹிண்டன்பர்க் 1934இல் இறந்தபோது, ஹிட்லர் தன்னைத் தானே தலைவர்(Fuhrer) அல்லது 'ஜெர்மனியின் உச்சபட்ச தலைவர்' (supreme leader of Germany) என்று அறிவித்துக்கொண்டார். (தற்போது, Fuhrer என்ற சொல்லுக்கு மக்கள் மீது மிருகத்தனமான ஆட்சியைத் திணிக்கும் இரக்கமற்ற தலைவர் என்ற எதிர்மறையான அர்த்தம் உள்ளது.) ஹிட்லருக்கும் நாஜிகளுக்கும் முக்கியமான மூன்று விஷயங்கள்: ஆரிய இனத்தின் புனிதம் ஜெர்மனியின் மகத்துவம் அடால்ஃப் ஹிட்லரை உச்சமாகக் கருதுவது இவற்றை மக்களைப் பின்பற்றச் செய்ய நாஜி கட்சி பல்வேறு பிரசாரங்களைச் செய்தது. அதற்காகப் பெரும் பேரணிகள், பெரிய ஸ்பீக்கர்கள் அமைத்து பொதுக்கூட்டங்களில் நாஜிக்கள் குறித்த தகவல்களைப் பரப்புவது போன்ற பணிகளைச் செய்தனர். ஹோலோகாஸ்ட் என்றால் என்ன? ஹோலோகாஸ்ட் என்பது யூத மக்களை ஒடுக்குவதில் தொடங்கி, இறுதியாக அவர்களின் இன அடையாளத்திற்காகவே மில்லியன் கணக்கான யூத மக்களை கொன்று குவித்ததில் முடிந்த துயர சம்பவம். இது காலப்போக்கில் கொடூரமானதாக மாறிய ஒரு செயல்பாடு. நாஜிக்களின் கொடுமைகள் நாஜிக்கள் 1933இல் அதிகாரத்திற்கு வந்தது முதல், "சமூகத்தில் வாழத் தகுதியான அங்கத்தினர்" என்று தாங்கள் நினைக்காத மக்களை, குறிப்பாக யூத மக்களைத் துன்புறுத்தினார்கள். அவர்களுக்கு எதிராக பாரபட்சம் காட்டும், அவர்களின் உரிமைகளைப் பறிக்கும் சட்டங்களை அறிமுகப்படுத்தினர். இதனால் யூதர்கள் சில இடங்களில் அனுமதிக்கப்படவில்லை மற்றும் சில வேலைகளைச் செய்யத் தடை விதிக்கப்பட்டது. "அரசின் எதிரிகள்" என்று அவர்கள் நினைக்கும் மக்களை சிறையில் அடைத்து வேலை செய்ய நிர்ப்பந்திக்கக்கூடிய வதை முகாம்களையும் அமைக்கத் தொடங்கினர். இதில் யூத மக்களும் நாஜிக்களை ஆதரிக்காத பிற மக்களும் அடங்குவர். அதுபோன்ற டச்சாவ் என்று அழைக்கப்படும் முதல் முகாம் மார்ச் 1933இல் முனிச்சிற்கு வெளியே திறக்கப்பட்டது. 1933 மற்றும் 1945 ஆண்டுகளுக்கு இடையில், நாஜிக்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் 40,000க்கும் மேற்பட்ட முகாம்களை உருவாக்கினர். அதில் சில வேலை செய்வதற்கான முகாம்கள், சில கைதிகளை தற்காலிகமாக தங்க வைப்பதற்கான முகாம்கள், மற்றவை வதை முகாம்கள். அப்படி 1941இல் முதலில் வதை முகாம்கள் தொடங்கப்பட்டன. இங்குதான் நாஜிக்கள் அதிக எண்ணிக்கையில் மக்களைக் கொல்வார்கள். இங்கு எந்தக் காரணமும் இல்லாமல் பலர் முகாம் காவலர்களால் கொல்லப்பட்டனர். மேலும் பலர் அவர்களின் மோசமான நிலைமைகளின் காரணமாக இறந்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1934ஆம் ஆண்டில், தீங்கிழைக்கும் வதந்திகள் சட்டம் என்று அழைக்கப்படும் ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நாஜிக்கள் அனைவரின் வாழ்க்கையையும் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருக்கத் தொடங்கினார்கள். 1934ஆம் ஆண்டில், தீங்கிழைக்கும் வதந்திகள் சட்டம் என்று அழைக்கப்படும் ஒரு சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது நாஜிக்களுக்கு எதிரான நகைச்சுவை சொல்வதை குற்றமாகக் கருதும் சட்டம். ஜாஸ் இசை தடை செய்யப்பட்டது, பாடப் புத்தகங்கள் நாஜிக் கருத்துகளை உள்ளடக்கியதாக மாற்றி எழுதப்பட்டன, ஹிட்லரின் படங்கள் எல்லா இடங்களிலும் வைக்கப்பட்டன, நாஜிக்களுக்கு பிடித்தது போல் எழுதப்படாத புத்தகங்கள் அழிக்கப்பட்டன. கடந்த 1935இல், 1,600 செய்தித்தாள்கள் மூடப்பட்டன, மீதமுள்ள செய்தித்தாள்கள் நாஜிக்களால் அங்கீகரிக்கப்பட்ட கட்டுரைகளை மட்டுமே அச்சிட அனுமதிக்கப்பட்டன. ஹிட்லர் யூத் (ஆண்கள்) மற்றும் பிடிஎம் (பெண்கள்) என்ற இளைஞர்களுக்கான கட்டாயக் குழுக்களை அமைத்தனர் நாஜிக்கள். இதன் மூலம் அவர்கள் வளரும்போது ஹிட்லரை வணங்கும் இளம் நாஜிக்களாக மாறுவார்கள் என்று நம்பினார்கள். சிறுவர்களுக்கு நாஜிக்களின் விழுமியங்கள்(Values) கற்பிக்கப்பட்டன மற்றும் அவர்கள் போருக்குத் தயார்படுத்தப்பட்டனர். பெண்களுக்கு சமையல் மற்றும் தையல் போன்ற திறன்கள் கற்பிக்கப்பட்டன. பட மூலாதாரம்,GETTY IMAGES கிரிஸ்டல்நாக்ட்(Kristallnacht) மற்றும் கோடிக்கணக்கானோரின் கொலை கடந்த 1938ஆம் ஆண்டு, நவம்பர் 8ஆம் தேதி மிகவும் முக்கியமானது. அன்றுதான் யூத மக்களுக்கு எதிராக பயங்கரமான வன்முறை நடந்தது. இது கிரிஸ்டல்நாக்ட் - 'உடைந்த கண்ணாடியின் இரவு' என்று அறியப்படுகிறது. அன்று இரவு நடத்தப்பட்ட சோதனையில் ரெய்டு செய்யப்பட்ட கடைகளில் இருந்து உடைந்து தெருக்களில் கிடந்த கண்ணாடிகளின் காரணமாக இந்தப் பெயர் வந்தது. இதில் 91 யூதர்கள் கொல்லப்பட்டனர். 30,000 பேர் கைது செய்யப்பட்டு வதை முகாம்களுக்கு அனுப்பப்பட்டனர். 267 ஜெப ஆலயங்கள் அழிக்கப்பட்டன. செப்டம்பர் 1, 1939இல், ஜெர்மனி போலந்தில் படையெடுத்தது. இதுவே இரண்டாம் உலகப் போரின் தொடக்கமாக வரலாற்றில் பதிவாகியுள்ளது. போலந்தில் உள்ள யூத மக்கள் கெட்டோக்கள் என்று அழைக்கப்படும் தேர்வு செய்யப்பட்ட பகுதிகளில் வாழ கட்டாயப் படுத்தப்பட்டனர். அங்கு அவர்கள் மிகவும் மோசமாக நடத்தப்பட்டனர் மற்றும் பலர் கொல்லப்பட்டனர். அங்கு நிலை மிகவும் மோசமாக இருந்த காரணத்தால் பலரும் நோய் மற்றும் பட்டினியால் இறந்து போயினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 1941ஆம் ஆண்டின் இறுதியில், போலந்தில் செல்ம்னோ என்று அழைக்கப்படும் முதல் வதை முகாம் அமைக்கப்பட்டது. நாஜிக்கள் 1940களின் முற்பகுதியில், மிக குறுகிய காலத்தில் ஐரோப்பாவின் யூத மக்கள்தொகையில் அதிக எண்ணிக்கையிலான மக்களைக் கொல்வதற்கான வழியைத் தேடினர். அப்போதுதான் ஏராளமான மக்களைக் கொல்லக்கூடிய வதை முகாம்களின் யோசனையைக் கொண்டு வந்தனர். இதைத்தான் அவர்கள் 'இறுதி தீர்வு' என்று அழைத்தனர். 1941ஆம் ஆண்டின் இறுதியில், போலந்தில் செல்ம்னோ என்று அழைக்கப்படும் முதல் வதை முகாம் அமைக்கப்பட்டது. நாஜிக்களால் கட்டுப்படுத்தப்பட்ட போலந்தின் பகுதிகளில் மொத்தம் ஆறு வதை முகாம்கள் இருந்தன: ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ் (மிகப் பெரியது), பெல்செக், செல்ம்னோ, மஜ்டானெக், சோபிபோர் மற்றும் ட்ரெப்ளிங்கா. போலந்துக்கு வெளியே (பெலாரஸ், செர்பியா, யுக்ரேன் மற்றும் குரோஷியாவில்) நாஜிக்கள் மற்றும் அவர்களது கூட்டாளிகளால் முகாம்கள் தொடங்கப்பட்டன. அங்கு பல நூறாயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். உலகம் இதுவரை கண்டிராத அளவில் 1941 மற்றும் 1945ஆம் ஆண்டுக்கு இடையில், மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். கோடிக்கணக்கான மக்கள் முகாம்களுக்கு ரயில் மூலம் அனுப்பட்டனர். அங்கு அவர்கள் வேலை செய்ய கட்டாயப்படுத்தப்பட்டார்கள் அல்லது கொல்லப்பட்டார்கள். ஹோலோகாஸ்டில் கொல்லப்பட்டவர்கள் அல்லது துன்புறுத்தப்பட்டவர்கள் யார்? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்த முகாம்களை அழிப்பதன் மூலம் தங்கள் குற்றங்களுக்கான ஆதாரங்களை மறைக்க முயன்றனர் நாஜிக்கள். பாதிக்கப்பட்டவர்கள் யூதர்கள் ரோமா மற்றும் சிந்திக்கள் ('ஜிப்சிகள்') ஸ்லாவிக் மக்கள், குறிப்பாக சோவியத் யூனியன், போலந்து மற்றும் யூகோஸ்லாவியாவை சேர்ந்தவர்கள். மாற்றுத் திறனாளிகள் பால் புதுமையினர் கருப்பின மக்கள் யெகோவாவின் சாட்சிகள் அரசியல் எதிரிகள் ஹோலோகாஸ்ட் எப்படி முடிவுக்கு வந்தது? இரண்டாம் உலகப் போரில் ஜெர்மனிக்கு எதிராகப் போரிட்ட பிரிட்டன், அமெரிக்கா, சோவியத் யூனியன் மற்றும் அவர்களது நட்பு நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் நாஜிக்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஐரோப்பாவின் பகுதிகள் வழியாகச் செல்லும்போது, இந்த வதை முகாம்களைக் கண்டுபிடிக்கத் தொடங்கினர். நாஜிக்கள் தோற்கடிக்கப்படுவார்கள் என்பது முன்பே தெளிவாகத் தெரிந்ததால், அவர்கள் இந்த முகாம்களை அழிப்பதன் மூலம் தங்கள் குற்றங்களுக்கான ஆதாரங்களை மறைக்க முயன்றனர். அவர்கள் போலந்தில் மீதமிருந்த கைதிகளை ஜெர்மனியில் உள்ள முகாம்களுக்குத் திரும்பிச் செல்லும்படி கட்டாயப்படுத்தினர். இந்தக் கடினமான பயணத்தில் பல கைதிகள் உயிரிழந்தனர். நாஜிக்களால் தாங்கள் செய்ததை மறைக்க முடியவில்லை. அதேநேரம் இந்த இனப்படுகொலையின் கொடூரம் எவ்வளவு ஆழமானது என்பதை உலகம் அறிந்துகொள்வதற்கு நீண்ட காலம் தேவைப்படவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பலர் முகாமில் நடந்த சித்திரவதையின் காரணமாக நோய்வாய்ப்பட்டு விடுதலைக்குப் பின் இறந்து போயினர். மஜ்தானெக் தான் 1944 கோடைக்காலத்தில் விடுவிக்கப்பட்ட முதல் முகாம். முகாம்களில் இருந்தவர்களை விடுவிக்கச் சென்ற மக்கள், அங்கு தாங்கள் எதிர்கொண்ட கொடூரமான காட்சிகளைப் பற்றிப் பேசியுள்ளனர். முகாம்களில் இருந்து விடுவிக்கப்பட்டவர்களில் பலர் முகாமில் நடந்த சித்திரவதையின் காரணமாக நோய்வாய்ப்பட்டு விடுதலைக்குப் பின் இறந்து போயினர். அவர்களுக்கு யுத்தம் முடிவடைந்த பின்னரும்கூட வாழ்க்கை மிகவும் கடினமாக இருந்தது. தப்பிப் பிழைத்தவர்கள் பலரும் தங்கள் வீடுகளில் வேறு யாரோ வசிப்பதைக் கண்டனர். மேலும் வாழ்வதற்கான வேறு இடத்தை அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லை. இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான அகதிகளை ஏற்றுக்கொள்ள பிற நாடுகளும் விரும்பவில்லை. ஹோலோகாஸ்ட் குற்றத்திற்காக நாஜிக்கள் தண்டிக்கப்பட்டனரா? பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, போர் முடிவதற்குள் அடால்ஃப் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டதால் அவரை நீதியின் முன் நிறுத்த முடியவில்லை. ஐக்கிய நாடுகளின் பொதுச் சபை 1946ஆம் ஆண்டு டிசம்பர் 11ஆம் தேதி, சர்வதேச சட்டத்தின் கீழ் இனப்படுகொலையை குற்றம் என்று தீர்ப்பளித்தது. போர் முடிவதற்குள் அடால்ஃப் ஹிட்லர் தற்கொலை செய்துகொண்டதால் அவரை நீதியின் முன் நிறுத்த முடியவில்லை. இரண்டாம் உலகப் போருக்குப் பின் வந்த ஆண்டுகளில், நாஜிக்களின் மீது அவர்கள் செய்த குற்றங்களுக்காக வழக்குத் தொடரப்பட்டது. சமீபத்தில் ஜூலை 2015இல் கூட, ஆஷ்விட்ஸில் காவலராகப் பணிபுரிந்த 94 வயதான ஆஸ்கர் க்ரோனிங்கிற்கு அவரது குற்றங்களுக்காக தண்டனை வழங்கியது ஜெர்மன் நீதிமன்றம். ஆனால் அனைவரையும் நீதியின் முன் நிறுத்துவது சாத்தியமாகவில்லை. பல நாஜிக்கள் போருக்குப் பிறகு தலைமறைவாகினர். அதற்குப் பின் அவர்கள் கண்டுபிடிக்கப்படவில்லை அல்லது அவர்களின் குற்றங்கள் கண்டுபிடிக்கப்படுவதற்கு முன்பே இறந்துவிட்டனர். பட மூலாதாரம்,VIEW PICTURES படக்குறிப்பு, ஜனவரி 27 அன்று இங்கிலாந்தில் உள்ள மக்கள் ஹோலோகாஸ்ட் நினைவு தினத்தைக் கடைபிடிக்கின்றனர். இனப்படுகொலையை நினைவில் கொள்வது எப்படி? தற்போது, இந்த இனப்படுகொலையின் தீவிரம் உலகம் முழுவதும் அறியப்பட்ட ஒன்றாக உள்ளது. மேலும் இனப்படுகொலையின் கொடூரங்களுக்கும், சில நடத்தைகள் எப்படி வழிநடத்தக்கூடும் என்பதற்கும் இதுவோர் எடுத்துக்காட்டு. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இது ஒன்றும் இனப்படுகொலை வரலாற்றில் நடந்த ஒரே இனப்படுகொலை அல்ல. கம்போடியா, ருவாண்டா, போஸ்னியா மற்றும் டார்பூர் ஆகிய நாடுகளில் லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் இன அடையாளத்திற்காகவே கொல்லப்பட்டுள்ளனர். ஒவ்வோர் ஆண்டும் ஜனவரி 27 அன்று, பிரிட்டனில் உள்ள மக்கள் ஹோலோகாஸ்ட் நினைவு தினத்தைக் கடைபிடிக்கின்றனர். 1945இல் சோவியத் ராணுவத்தின் வீரர்களால் மிகப்பெரிய நாஜி வதை முகாமான ஆஷ்விட்ஸ்-பிர்கெனாவ் விடுதலை செய்யப்பட்ட நாளில் இந்தத் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ஹோலோகாஸ்ட் நினைவு நாள் என்பது இனப்படுகொலையில் பாதிக்கப்பட்ட கோடிக்கணக்கானவர்களை நினைவுகூர்வது மட்டுமின்றி, உலகெங்கிலும் நடத்தப்பட்டுள்ள இதர இனப்படுகொலைகளில் கொல்லப்பட்டவர்களையும் நினைவுகூரும் தினமாகப் பார்க்கப்படுகிறது. மேலும் மற்றவர்களின் நம்பிக்கைகள் மற்றும் வேறுபாடுகளை சகித்துக்கொள்வது எவ்வளவு முக்கியம் என்பதையும், மக்களை ஒதுக்கி வைப்பதோ அல்லது வெறுப்பு செய்தியைப் பரப்புவதோ தவறு என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது. இது ஹோலோகாஸ்டில் நடந்தவற்றை ஒருபோதும் மக்கள் மறக்காமல் இருக்கவும், மீண்டும் இதுபோன்ற ஒரு மோசமான சம்பவம் நடக்காமல் தடுக்கவும் உதவுகிறது. இந்த நாள் எப்படி ஒரு "பாதுகாப்பான, சிறந்த எதிர்காலத்தை உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுவதற்கான நாள்" என்பதை விளக்குகிறது ஹோலோகாஸ்ட் நினைவு நாள் அறக்கட்டளை. https://www.bbc.com/tamil/articles/c87nj5843mvo
-
பாடசாலை மாணவர்களின் உணவுக்கான தொகை அதிகரிப்பு
பாடசாலை மாணவர் ஒருவரின் உணவுக்காக தற்போது வழங்கப்படும் 85 ரூபாயை 115 ரூபாவாக அதிகரிப்பது தொடர்பில் கல்வி அமைச்சு கவனம் செலுத்தியுள்ளது. அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையேற்றித்தினால் இந்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் இது தொடர்பில் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதுடன், நிதியமைச்சின் பிரதிநிதிகளுடனும் கலந்துரையாடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இது தொடர்பிலான இறுதித் தீர்மானம் அடுத்த வாரமளவில் எடுக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதேவேளை, 100,000 பாடசாலை மாணவர்களுக்கு இலவச மதிய உணவு தற்போது வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/289571
-
120 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பதற்கு திட்டம்
உமாஓயா திட்டத்தின் கீழ் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 15ஆம் திகதியிலிருந்து 120 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசன இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடக மையத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அதேநேரம் 31 நீர்த் தேக்கங்கள் மூலம் நீரில் மிதக்கும் சோலார் பேனல்களைப் பயன்படுத்தி 3,077 மெகாவோட் மின்சாரத்தை உற்பத்தி செய்து தேசிய மின்கட்டமைப்பில் இணைக்க முடியும் எனவும் இதற்குப் பொருத்தமான நீர்த்தேக்கங்கள் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். உணவு உற்பத்தியை அதிகரிப்பதன் ஊடாக தேசிய உணவுப் பாதுகாப்பிற்கு பங்களிப்பதையே, 2024 ஆம் ஆண்டில் நீர்ப்பாசன அமைச்சு முக்கிய நோக்கமாக கொண்டுள்ளது. நீர்ப்பாசன அமைச்சின் ஊடாக பல பாரிய பல்நோக்கு அபிவிருத்தித் திட்டங்கள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதில் பெரும்பாலான திட்டங்கள் வெளிநாட்டுக் கடன்களின் கீழ் செயல்படுத்தப்படுகின்றன. அந்தவகையில் ஆரம்பிக்கப்பட்ட உமாஓயா திட்டத்தின் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. எனவே, பெப்ரவரி மாதம் 15ஆம் திகதிக்குள் 120 மெகாவோட் மின்சாரத்தை தேசிய மின் கட்டமைப்பில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/289543
-
இலங்கையின் வர்த்தக மற்றும் கலாசார கண்காட்சி சீனாவில் நடைபெறவுள்ளது
இலங்கையின் வர்த்தகம், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் கலாசார கண்காட்சி 2024 மார்ச் மாதம் சீனாவின் சியான் மாகாணத்தில் உள்ள பாவோஜி நகரில் நடைபெறவுள்ளது. 100க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் மற்றும் வர்த்தகர்களின் பங்கேற்புடன் இலங்கை தயாரிப்புகளை காட்சிப்படுத்த 40க்கும் மேற்பட்ட இலங்கையின் காட்சிக்கூடங்கள் அமைக்கப்படும் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இக்கண்காட்சியின் சீன மற்றும் இலங்கை ஏற்பாட்டாளர்கள் குழுவொன்று, இந்த வாரம் பிரதமர் தினேஷ் குணவர்தனவை அலரிமாளிகையில் சந்தித்து, சின்ஜியாங்கில் இலங்கையின் உத்தேச கண்காட்சி குறித்து விளக்கமளித்தது. இக்கண்காட்சியானது இலங்கையின் வர்த்தகம், முதலீடு மற்றும் சுற்றுலாத் துறைகளையும் ஊக்குவிக்கும் என அவர்கள் தெரிவித்தனர். https://thinakkural.lk/article/289483
-
ஜனாதிபதி தேர்தல் : தேர்தல்கள் ஆணையாளரின் அறிவிப்பு!
ஜனாதிபதி தேர்தல் உரிய தினத்தில் நடத்தப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதேநேரம், ஜனாதிபதி தேர்தலை ஒத்திவைப்பதற்கான எந்தவொரு சாத்திய கூறுகளும் இல்லை. ஜனாதிபதி தேர்தலுக்கு 10 பில்லியன் ரூபா நிதி கோரப்பட்டுள்ளது. இந்தநிலையில், ஜனாதிபதி தேர்தல் எந்தவொரு சந்தரப்பத்திலும் பிற்போடப்படமாட்டாது என அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://thinakkural.lk/article/289460
-
இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் புதிய நிர்வாகத் தெரிவுகள் திருகோணமலையில் இன்று
27 JAN, 2024 | 11:29 AM இலங்கை தமிழ் அரசு கட்சியின் 17ஆவது தேசிய மாநாட்டுக்காக புதிய நிர்வாகத் தெரிவுகள் இடம்பெற்று வருகின்றன. அந்த வகையில் கடந்த 21ஆம் திகதி இடம்பெற்ற தலைவர் தெரிவில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் புதிய தலைவராக பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் ஜனநாயகத் தேர்தல் மூலம் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இந்நிலையில், ஏனைய பதவிகளுக்கான தெரிவுகள் இன்று சனிக்கிழமை (27) திருகோணமலையில் இடம்பெறுகின்றன. அவ்வாறு ஏனைய பதவிகளுக்கான தெரிவுகள் இடம்பெறுவதற்கு முன்னதாக தற்போது திருகோணமலை முருகாபுரி ஜேக்கப் கடற்கரை தனியார் விடுதியில் இலங்கை தமிழ் அரசு கட்சியின் மத்திய செயற்குழுவினர் ஒன்றுகூடி கலந்துரையாடி வருகின்றனர். அதன் பின்னர், பொதுச்சபை உறுப்பினர்களையும் உள்வாங்கி கட்சியின் முக்கிய பதவிகளுக்கான தெரிவுகள் இடம்பெறவுள்ளன. அதேவேளை இன்று பதவிகளுக்கான தெரிவுகள் நிறைவடைவதை தொடர்ந்து, நாளை (28) இலங்கை தமிழ் அரசு கட்சியின் 17ஆவது தேசிய மாநாடு இடம்பெறவுள்ளது. https://www.virakesari.lk/article/174902
-
ஏடன் வளைகுடாவில் தீப்பிடித்து எரிகின்றது கப்பல் - ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்
Published By: RAJEEBAN 27 JAN, 2024 | 08:31 AM ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் காரணமாக ஏடன் வளைகுடாவில் எண்ணெய் கப்பலொன்று தீப்பிடித்து எரிவதாக அதன் உரிமையாளர் தெரிவித்துள்ளார். ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் மேற்கொண்ட ஏவுகணை தாக்குதலால் மார்லின் லுவான்டா என்ற கப்பல் தீப்பிடித்துள்ளது என கப்பலை இயக்கும் நிறுவனம் தெரிவித்துள்ளது. கப்பலின் எண்ணெய் தாங்கியொன்று தாக்கப்பட்டுள்ளதால் கப்பல் தீப்பிடித்து எரிவதாக தகவல் வெளியாகியுள்ளது. கப்பல் எதிர்ப்பு ஏவுகணை எண்ணெய் கப்பலை தாக்கியுள்ளது என தெரிவித்துள்ள அமெரிக்க அதிகாரிகள் கடற்படை கப்பலொன்று உதவிக்கு விரைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளனர். காயங்கள் குறித்த தகவல்கள் எதுவுமில்லை என அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். போர்க்கப்பல்கள் அந்த கப்பலை நோக்கி சென்றன மாலுமிகள் பாதுகாப்பாக உள்ளனர் என பிரிட்டனின் கடல்சார்வர்த்தக நடவடிக்கை அமைப்பு தெரிவித்துள்ளது. ஏனைய கப்பல்கள் எச்சரிக்கையுடன் பயணிக்கவேண்டும் சந்தேகத்திற்கு இடமான விடயங்களை அவதானித்தால் அறிவிக்கவேண்டும் என பிரிட்டன் அமைப்பு தெரிவித்துள்ளது. இதேவேளை மார்லின் லுவான்டா கப்பலை இலக்குவைத்ததை ஹெளத்தி கிளர்ச்சியாளர்கள் உறுதி செய்துள்ளனர். பல பொருத்தமான ஏவுகணைகளை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டதாக ஹெளத்திகிளர்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/174888
-
70 ஆண்டுகளுக்கு பிறகு சவூதியில் மதுபானக்கடை.
சவுதி அரேபியாவில் முதல் மதுபானக்கடை விரைவில் திறக்கப்படும் மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டு இருந்த சவுதி அரேபியாவில், முதல் முதலாக மதுபானக்கடையை திறக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டு உள்ளதாக இளவரசர் முகமதுபின் சல்மான் அறிவித்து உள்ளார். சவுதி அரேபியா நாட்டின் ரியாத் நகரத்தில் முஸ்லிம் அல்லாத வெளிநாட்டினருக்காக மதுபானங்கள் விற்பனை செய்ய மதுபானக்கடை ஒன்று விரைவில் திறக்கப்பட உள்ளது. இவர்கள் மது பெற வேண்டும் என்றால் வெளியுறவு அமைச்சிடம் அனுமதி குறியீடு பெற்று, ’மொபைல் செயலி’ மூலம் பதிவு செய்ய வேண்டும் எனவும் நிபந்தனை விதிக்கப்பட்டு உள்ளது. இந்த மதுபானக் கடையின் வாடிக்கையாளர்களாக பெரும்பாலும் தூதரகங்களில் பணியாற்றுபவர்களே இருப்பார்கள். கடந்த 70 ஆண்டுக்கால வரலாற்றில் சவுதி அரேபியாவில் மதுபானம் கடை மூலம் விற்கப்படுவது இதுவே முதல்முறை. சவுதிஅரேபியா நாட்டில் முதல் மதுபான கடை திறக்கப்படுவதன் மூலம் இஸ்லாமிய சட்ட கோட்பாட்டில் இருந்து விலகி செல்கிறாரா இளவரசர் முகமதுபின் சல்மான் என கேள்வி எழுந்து உள்ளது. https://thinakkural.lk/article/289529