Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: DIGITAL DESK 3 29 JAN, 2024 | 10:47 AM பெருந்தோட்ட கைத்தொழில் மற்றும் மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக லொஹான் ரத்வத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டார். ஜனாதிபதி செயலகத்தில் வைத்து சற்று முன்னர் பதவிப்பிரமாணம் செய்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/175034
  2. Australia v West Indies 2023-24 | Second Test | Day 4 ஷமர் ஜோசஃப்பின் பந்து வீச்சை கண்டு இரசியுங்கள்.
  3. 62 ரன்னுக்கு 7 விக்கெட்: இந்திய அணியின் வெற்றியை இங்கிலாந்து அறிமுக வீரர் தட்டிப் பறித்தது எப்படி? பட மூலாதாரம்,GETTY IMAGES 2 மணி நேரங்களுக்கு முன்னர் முதல் இன்னிங்சில் இந்தியா முன்னிலை ஐதராபாத்தில் இந்தியாவுடனான முதல் டெஸ்ட் ஆட்டத்தில் பின் தங்கியிருந்த இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் சிறப்பான கம்பேக்கை கொடுத்து வெற்றி வாகை சூடியிருக்கிறது. ஆலி போப் பேட்டிங்கில் வலு சேர்க்க டாம் ஹார்ட்லி பந்துவீச்சில் இந்திய அணியை சுருட்டியிருக்கிறார். என்ன நடந்தது? இந்தியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் ஆட்டம் ஐதராபாத்தில் ஜனவரி 25ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் ஆடியது. இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 246 ரன்களை மட்டுமே சேர்த்து ஆல் அவுட்டானது. அடுத்து களமிறங்கிய இந்தியா 436 ரன்களை சேர்த்தது. யசஷ்வி ஹெய்ஸ்வால் 80, கே.எல்.ராகுல் 86, ஜடேஜா 87 ரன்களை சேர்த்தனர். முதல் இன்னிங்சில் இங்கிலாந்தை விட இந்திய அணி 190 ரன்கள் முன்னிலை பெற்றது. 2-வது இன்னிங்சில் தனி ஆளாக சாதித்த ஆலி போப் 190 ரன்கள் பின் தங்கியிருந்த இங்கிலாந்து அணி, 2வது இன்னிங்ஸை தொடங்கியது. ஒருபக்கம் இந்தியாவின் பந்துவீச்சில் இங்கிலாந்தின் விக்கெட்டுகள் மளமளவென சரிய, மறுபுறம் களத்தில் நங்கூரமிட்டு ஆடிக்கொண்டிருந்தார் ஆலி போப். அவரைத் தவிர்த்து இங்கிலாந்து தரப்பில் எந்த ஒரு வீரரும் அரைசதம் கூட அடிக்க முடியவில்லை. நிதானமாக விளையாடி சதத்தை பதிவு செய்தார் ஆலி போப். இந்திய அணியின் பவுலர் ஆலி போப்பை வீழ்த்த கடுமையாக போராட வேண்டியிருந்தது. ஆனால் கடைசி விக்கெட்டாகத்தான் அவரை இந்திய வீரர்களால் ஆட்டமிழக்கச் செய்ய முடிந்தது. அப்போது ஆலி போப் 196 ரன்களை விளாசியிருந்தார். பும்ராவின் பந்துவீச்சில் அவுட்டான அவர் வெறும் 4 ரன்னில் இரட்டை சதத்தை நழுவவிட்டார். ஆலி போப்பின் சிறந்த பங்களிப்பால் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சில் 420 ரன்களை சேர்த்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES பந்துவீச்சில் அசத்திய அறிமுக வீரர் டாம் ஹார்ட்லே 231 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கியது இந்தியா. பேட்டர்களுக்கு கடும் நெருக்கடியை அளித்தார் இங்கிலாந்தின் அறிமுக வீரர் டாம் ஹார்ட்லே. யஷஸ்வி ஹெய்ஷ்வால், சுப்மன் கில், ரோஹித் சர்மா, அக்சர் படேல் என அவர் வரிசையாக விக்கெட்டுகளை சாய்த்தார். 42 ரன்னில் தொடக்க விக்கெட்டை பறிகொடுத்த இந்திய அணி அடுத்த 78 ரன்களில் 7 விக்கெட்டுகளை தாரை வார்த்துவிட்டது. மிடில் ஆர்டரில் வந்த வீரர்களாலும் நிலைத்து ஆட முடியவில்லை. ஒரு கட்டத்தில் விக்கெட் கீப்பர் பரத்தும் ஆல் ரவுண்டர் அஷ்வினும் ஜோடி சேர்ந்து நிதானமாக ஆடினர். ஆனால் அந்த கூட்டணியையும் உடைத்துவிட்டார் டாம் ஹாட்லே. இந்தியாவின் இறுதி நம்பிக்கையாக அஷ்வின் மட்டுமே இருந்தார். அவரும் டாமின் பந்துவீச்சில் அடித்து ஆட முயன்று விக்கெட்டை பறிகொடுத்தார். பும்ராவும் சிராஜும் விக்கெட்டை விட்டுக் கொடுக்காமல் போராடினர். ஆனால் அது வெகு நேரம் நீடிக்கவில்லை. மீண்டும் டாம் ஹார்ட்லே மூலம் விக்கெட் எடுக்கச் செய்து இந்தியாவின் தோல்வியை உறுதி செய்தார் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ். 28 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வெற்றிபெற்றது. பட மூலாதாரம்,GETTY IMAGES ஆட்ட நாயகன் ஆலி போப் இந்தியாவின் டெஸ்ட் வரலாற்றில் 190 ரன்கள் முன்னிலையில் இருந்தபோதும் சொந்த மண்ணில் தோல்வியைத் தழுவியிருப்பது இதுவே முதல்முறை. இங்கிலாந்தின் அறிமுக வீரர் டாம் ஹார்ட்லே அறிமுக ஆட்டத்திலேயே கிரிக்கெட் உலகின் கவனத்தை ஈர்த்திருக்கிறார். முதல் இன்னிங்ஸில் டாம் ஹார்ட்லே 131 ரன்கள் விட்டுக்கொடுத்திருந்தார். ஆனால் 2வது இன்னிங்சில் சிறப்பான கம்பேக்கை அளித்தார். வெறும் 62 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தது மட்டுமின்றி 5 மெய்டன் ஓவர்களை வீசியதோடு 7 இக்கெட்களையும் சாய்த்து அமர்க்களப்படுத்தினார். இதேபோல, சரிவில் இருந்து அணியை மீட்டு பேட்டிங்கில் நேர்த்தியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆலி போப் ஆட்டநாயகனாக தேர்வானார். இந்திய மண்ணில் 2வது இன்னிங்ஸ்களில் ஐந்துக்கும் குறைவான போட்டிகளில் மட்டுமே 230 ரன்களை சேசிங் செய்ய முடிந்திருக்கிறது. கேப்டன் ரோகித் பேசியது என்ன? முதல் டெஸ்டில் கிடைத்த தோல்விக்குப் பிறகு பேசிய இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, டாப் ஆர்டர் சரிந்ததே தோல்விக்கு காரணம் என்றார். "190 ரன்கள் முன்னிலையில் இருந்தவரை ஆட்டம் நம் கட்டுப்பாட்டில் இருந்தது. ஆனால் ஆலி போப் மிகச் சிறப்பாக விளையாடினர். நான் பார்த்ததிலேயே இந்திய ஆடுகளத்தில் அவர் ஆடியது சிறப்பான ஆட்டங்களில் ஒன்று. 230 ரன்களை எடுத்துவிடலாம் என நினைத்தோம். ஆனால் முடியவில்லை. எங்கள் பேட்டிங் நன்றாக இருக்கவில்லை. லோயர் ஆர்டரில் வந்தவர்கள் போராடினார். டாப் ஆர்டர் என்ன செய்ய வேண்டும் என்பதை அவர்கள் உணர்த்தினர்" என்று ரோகித் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES இங்கிலாந்து கேப்டன் கருத்து இந்தியாவுக்கு எதிராக முதல் டெஸ்டில் கிடைத்த வெற்றியால் உற்சாக மிகுதியில் பேசிய இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ், "நான் கேப்டனாக பொறுப்பேற்ற பிறகு கிடைத்த வெற்றிகளிலேதே இந்த வெற்றிதான் மகத்தானது" என்று தெரிவித்தார். இந்தியா - இங்கிலாந்து இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 1 – 0 என்கிற கணக்கில் இங்கிலாந்து அணி முன்னிலை வகிக்கிறது. 2வது டெஸ்ட் போட்டி பிப்ரவரி 2ம் தேதி விசாகப்பட்டினத்தில் தொடங்குகிறது. https://www.bbc.com/tamil/articles/cd1942034plo
  4. வெஸ்ட் இண்டீசில் இருந்து அடுத்த வேகப்புயல் - அறிமுக தொடரிலேயே ஆஸ்திரேலியாவை சாய்த்தது எப்படி? 2 மணி நேரங்களுக்கு முன்னர் எழுமிச்சை பழம், கொய்யாப் பழம் என பழங்களைக் கொண்டு ஒரு காலத்தில் கிரிக்கெட் விளையாடியவர், இன்று ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி 27 ஆண்டுகள் கழித்து வெஸ்ட் இண்டீஸ் வரலாறு படைக்க காரணமாகியிருக்கிறார். பெருவிரலில் ஏற்பட்ட காயத்தையும் பொருட்படுத்தாது வெஸ்ட் இண்டீசை உலக அரங்கில் தலை நிமிரச் செய்திருக்கிறார் ஷமர் ஜோசஃப். யார் அவர்? என்ன நடந்தது?. காபா மைதானத்தில் ஒருவித நிசப்தம். ஆஸ்திரேலிய கைவசம் ஒரேயொரு விக்கெட் மட்டுமே எஞ்சியிருந்தது. 2வது டெஸ்டை வெல்ல 9 ரன்கள் மட்டுமே தேவை. 91 ரன்கள் எடுத்திருந்த ஸ்டீவ் ஸ்மித் தனி ஆளாக வெற்றிக்கு போராடிக் கொண்டிருந்தார். அதுவரை ஸ்மித் எதிர்கொண்டிருந்த அந்த ஓவரின் 5வது பந்தை ஹேசில்வுட் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. துல்லியமாக பந்தை வீசினார் ஷமர் ஜோசஃப். பந்து பேட்டை கடந்து ஸ்டம்புகளை சிதறடித்தது. 27 ஆண்டுகள்... ஆஸ்திரேலியாவை அதன் கோட்டையிலேயே வெஸ்ட் இண்டீஸ் வெல்வதற்கு 27 ஆண்டுகள் ஆகியிருக்கின்றன. போட்டியை வென்ற உற்சாகத்தில் ஷமர் ஜோசஃப் உணர்ச்சிப்பெருக்கில் காபா மைதானத்தை சுற்றி ஓட, வீரர்களையும் அவரை ஆரத்தழுவி வெற்றியை கொண்டாடினர்.. வெஸ்ட் இண்டீஸ் ஜாம்பவான் பிரையன் லாரா கண்கள் குளமாகிப்போனதையும் காண முடிந்தது. கார்ல் ஹூப்பர் அழுதேவிட்டார். ஆதம் கில்கிறிஸ்ட் வர்ணணை அரங்கில் இருந்தவாறு வெஸ்ட் இண்டீசை மனதார பாராட்டினார். 24 மணி நேரத்திற்கு முன்பு பெருவிரலில் அடிபட்டு வெளியேறிய அதே ஷமர் ஜோசஃப் வெஸ்ட் இண்டீசுக்கு வரலாற்று வெற்றியை தேடித் தந்திருக்கிறார். முதல் டெஸ்டில் அறிமுக வீரராக களமிறங்கி தான் வீசிய முதல் பந்திலேயே தலைசிறந்த டெஸ்ட் ஆட்டக்காரரான ஸ்டீவ் ஸ்மித்தை வெளியேற்றி பலரையும் பிரமிக்க வைத்த ஷமர் இந்த முறை 11.5 ஓவர்கள் மட்டுமே வீசி ஒன்றல்ல இரண்டல்ல 7 விக்கெட்களை சாய்த்து ஆட்டநாயகன், தொடர் நாயகன் என இரண்டு விருதுகளையும் தட்டிச் சென்றிருக்கிறார். காயத்தில் பாதிக்கப்பட்ட போதும் தனது அணியை வெற்றிபெற வைத்துள்ளார் ஷமர் வெஸ்ட் இண்டீஸ் அணி வெற்றி காபா டெஸ்ட் ஆட்டத்தில் 8 ரன்கள் வித்தியாசத்தில் வரலாற்று வெற்றியை படைத்திருக்கிறது வெஸ்ட் இண்டீஸ் அணி. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடியது. முதல் டெஸ்டில் 10 விக்கெட் வித்தியாசத்தில் ஆஸ்திரேலியா அபார வெற்றிபெற்றது. 2வது டெஸ்ட் ஆட்டம் காபாவில் ஜனவரி 25ம் தேதி தொடங்கியது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் முதலில் பேட்டிங் ஆடி முதல் இன்னிங்ஸில் 311 ரன்களை சேர்த்தது. தொடர்ந்து ஆடிய ஆஸ்திரேலியா 289 ரன்களை சேர்த்து டிக்ளேர் செய்தது. 2வது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் 193 ரன்கள் சேர்த்து ஆல் அவுட்டானது. பேட்டிங்கின்போது ஸ்டார்க் வீசிய அதி வேக யார்க்கர் பந்து ஷமர் ஜோசஃப் பெருவிரலை பதம் பார்க்க, வலியில் துடித்த ஷமர், விளையாட முடியாமல் களத்தை விட்டு வெளியேறினார். அவர் விளையாடுவது சந்தேகம் என்றே முதலில் பேசப்பட்டது. 216 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் எளிய இலக்குடன் களமிறங்கியது ஆஸ்திரேலியா. வலியை பொருட்படுத்தாது பந்துவீச்சுக்கு தயாரானார் ஷமர் ஜோசஃப். 11.5 ஓவர்களை வீசி அடுத்தடுத்து 7 விக்கெட்களை அவர் சாய்க்க, 27 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியவை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து வரலாறு படைத்தது வெஸ்ட் இண்டீஸ். இதுகுறித்து பேசிய ஷமர் ஜோசஃப், உண்மையை சொல்ல வேண்டும் எனில், காலையில் இருந்தே நான் இந்த மைதானத்தின் பக்கம் வரவே இல்லை. என் மருத்துவருக்குத்தான் நான் நன்றி சொல்ல வேண்டும். என் விரலை அவர் ஏதோ செய்தார். நிச்சயமாக அவர் என்ன செய்தார் எனத் தெரியாது. நான் களத்திற்குச் சென்றேன். என் அணியை வெற்றிபெற வைத்தேன் என போட்டிக்குப் பிறகு நெகிழ்ச்சியுடன் கூறினார். மேலும் என் கண்கள் குளமாகின. ஆனால் நான் ஏற்கனவே முதல் டெஸ்டில் அழுதுவிட்டேன் என ஷமர் ஜோசஃப் கூறினார். முதல் டெஸ்டிலும் ஷமர் ஜோசஃப் 5 விக்கெட்களை சாய்த்திருந்தார். ஷமர் ஜோசஃப் இணைய வசதி, தொலைதொடர்பு வசதி உள்ளிட்ட பெரிய வசதிகள் ஏதுமின்றி வளர்ந்தவர். ஷமர் ஜோசஃப் பின்னணி என்ன? முன்னணி கிரிக்கெட் ஊடகமான கிரிக்பஸ் இணையதளத்தின் படி, ஷமர் ஜோசஃப் 1999ம் ஆண்டு பிறந்தவர். கயானாவில் பரகாரா எனும் ஒரு சிறிய கிராமத்தைச் சேர்ந்த ஷமர் ஜோசஃப் இணைய வசதி, தொலைத்தொடர்பு வசதி உள்ளிட்ட பெரிய வசதிகள் ஏதுமின்றி வளர்ந்தவர். தந்தையுடன் மர வேலைக்குச் செல்வதும், கட்டட தொழில், காவலாளி என கிடைத்த வேலைகளைச் செய்துள்ளார் ஷமர் ஜோசப். "எங்கள் கிராமத்தில் வசதிகள் குறைவு. தரமான கிரிக்கெட் பந்துகள் கிடைக்காது. நாங்கள் பழங்களையும் சில சமையம் பிளாஸ்டிக் பாட்டில்களை உருக்கி அதை பந்து வடிவத்திற்கு கொண்டு வந்து கிரிக்கெட் விளையாடுவோம்" என்கிறார் ஷமர் ஜோசஃப்பின் உறவினரான ஓர்லாண்டோ டான்னர்(Orlando Tanner). ஷமர் ஜோசஃப் உள்பட பரகாராவில் உள்ள எந்த குழந்தைகளுக்கும் பெரியளவில் கிரிக்கெட் விளையாடுவதற்கான வசதிகள் இருந்ததில்லை என்றும் ஓர்லாண்டோ டான்னரை மேற்கோள்காட்டி இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது. "2018 வரை இண்டெர்நெட் என்றால் என்ன வென்றே தெரியாது. நான் ஒரு சிறிய கிராமத்தில் இருந்து வந்தவன். ஸ்மார்ட் ஃபோன்களைக் கண்டு என்ன இது என ஆச்சரியப்பட்டேன். சிறிது பணத்தை சேகரித்து ஸ்மார்ட் ஃபோன் வாங்கி அதில் என்ன இருக்கிறது என்பதை அறிய ஆவலாக இருந்தது" என ஷமர் ஜோசஃப் கிரிக்பஸ் இணையளத்திற்கு தனது வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துளார். பிரசன்னா எனக்கு ஒரு தாயும் தந்தையும் போல என கூறியுள்ளார் ஷமர் கிரிக்கெட் வாய்ப்பு 2023-ல் கயானா அணிக்காக விளையாடும் வாய்ப்பு ஜோசஃப் ஷமருக்கு கிடைத்தது. அதுதான் அவரது முதல் தர கிரிக்கெட் போட்டி முதல் ஆட்டத்திலேயே 6 விக்கெட்களை கைப்பற்றி பலரது கவனத்தையும் ஈர்த்தார். 2023 கரீபியன் ப்ரீமியர் லீக் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியின் நெட் பவுலராகும் வாய்ப்பு ஷமருக்கு கிடைத்தது. அப்போது அவருக்கு பயிற்சியாளரும் கிரிக்கெட் வல்லுநருமான இந்தியாவைச் சேர்ந்த பிரசன்னா உடன் தொடர்பு ஏற்பட்டது. பிரசன்னா எனக்கு ஒரு தாயும் தந்தையும் போல. சிபிஎல்லில் நெட் பவுலராக இருக்கும்போது அவரை சந்தித்தேன். நான் இரண்டு பந்துகள் தான் வீசியிருப்பேன். பிரசன்னா என்னிடம் வந்து நீ ஏன் கயானா அணியில் இல்லை என கேட்டார். நான் திகைத்துப்போனேன். எனக்கு அப்போது ஒன்றும் புரியவில்லை. சிபிஎல் தொடரிலும் டெஸ்ட் ஆட்டத்திலும் நீ விரைவில் விளையாடுவாய் என பிரசன்னா கூறியதை கிரிக்பஸ் உடனான நேர்காணலில் பகிர்ந்தார் ஜோசஃப் ஷமர். இதே விஷயத்தை பிரசன்னாவும் ஒரு நேர்காணலில் பேசியிருந்தார். நெட் பவுலராக வந்த ஷமரை அணியில் எடுக்கும்படி கூறினேன். என் மீது நம்பிக்கை வைத்து அணியில் சேர்த்தார்கள். மிகச்சிறந்த வேகப்பந்துவீச்சாளராக வருவார் என இரண்டே பந்துகளில் கணித்தேன் என பிரசன்னா கூறினார். ஒரு மாதத்திற்கு முன்பு, ரவிச்சந்திரன் அஷ்வினுடனான கலந்துரையாடலிலும் ஷமர் ஜோசஃப்பின் திறமைகள் குறித்து பிரசன்னா பேசினார். "ஷமர் ஜோசஃப் அடுத்த ஒரு வருடத்தில் எங்கிருப்பார் என்பதை பாருங்கள். ஒரு தலைசிறந்த வேகப்பந்துவீச்சாளர் ஐபிஎல் ஏலத்தின்போது என்னிடம் ஒரு சிறந்த வேகப்பந்துவீச்சாளரை பரிந்துரைக்கச் சொன்னார். நான் ஷமர் ஜோசஃபை பரிந்துரைத்தேன்." என்றார் அவர். மிக குறுகிய காலத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் இடம்பிடித்த ஷமர் ஜோசஃப் இன்று தனக்கான வரலாறையும் ஆஸ்திரேலியாவில் படைத்திருக்கிறார். https://www.bbc.com/tamil/articles/cldqe5kdkvgo
  5. இதுதான் Test Cricket' Ollie Pope, Tom செய்த 'Magic'; தவறை ஒப்புக்கொண்ட Rohit | India vs England டெஸ்ட் கிரிக்கெட்டின் வரலாற்றில் இன்றைய தினம் முக்கியத்துவம் வாய்ந்தது. காபாவில் வெஸ்ட் இண்டீஸ், ஐதராபாத்தில் இங்கிலாந்து... என வெளிநாட்டு மண்ணில் மகத்தான வெற்றியை படைத்திருக்கிறது இரண்டு அணிகள்...
  6. வாங்கோ, உங்கள் வரவு நல்வரவாகட்டும்.
  7. ஐபிஎல்லில் எடுத்து காயங்கள் வர வைக்கிறாங்களோ தெரியாது.
  8. ஷமர் ஜோசப்(Shamar Joseph): அன்று பாதுகாப்பு ஊழியர் வேலை; இன்று ஆஸ்திரேலியாவை ‘சுருட்டிய’ மேற்கிந்திய நட்சத்திரம்...
  9. போப் துடுப்பாட்டத்திலும் ஹாட்லி பந்துவீச்சிலும் அசத்தல்; இந்தியாவை 28 ஓட்டங்களால் வென்றது இங்கிலாந்து 28 JAN, 2024 | 10:13 PM (நெவில் அன்தனி) ஹைதராபாத் உப்பல் ரஜீவ் காந்தி சர்வதேச விளையாட்டரங்கில் இன்று முடிவடைந்த இந்திய - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து 28 ஓட்டங்களால் வெற்றியீட்டியது. ஒலி போப் மிக நிதானத்துடன் குவித்த 198 ஓட்டங்கள், ஜோ ரூட் கைப்பற்றிய 4 விக்கெட்கள், அறிமுக சுழல்பந்துவீச்சாளர் டொம் ஹாட்லி பதிவு செய்த 7 விக்கெட் குவியல் என்பன இங்கிலாந்தின் வெற்றியில் பிரதான பங்காற்றின. உலக டெஸ்ட் சம்பியன்ஷிப் புள்ளிகள் நிலையில் முதலிடத்தில் உள்ள நடப்பு உலக டெஸ்ட் சம்பியன் அவுஸ்திரேலியாவும் இரண்டாம் இடத்திலுள்ள இந்தியாவும் ஒரே நாளில் சில மணித்தியாலங்கள் இடைவெளியில் இரு வேறு டெஸ்ட்களில் தோல்வி அடைந்தன. அந்த இரண்டு அணிகளும் தத்தமது சொந்த நாட்டில் தோல்வி அடைந்தமை குறிப்பிடத்தக்கது. முதல் இன்னிங்ஸ் நிறைவில் இந்தியாவை விட 190 ஓட்டங்களால் பின்னிலையில் இருந்ததால் இங்கிலாந்து தொல்வி அடையலாம் என கருதப்பட்டது. ஆனால், இரண்டாவது இன்னிங்ஸில் ஒலி போப் 6 மணித்தியாலங்களுக்கு மேல் துடுப்பெடுத்தாடி 278 பந்துகளை எதிர்கொண்டு 21 பவுண்டறிகளுடன் 196 ஓட்டங்களைக் குவித்தமை போட்டியில் பெரும் திருப்பு முனையாக அமைந்தது. அவரது துடுப்பாட்டத்தின் உதவியுடன் இந்தியாவுக்கு 231 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்த இங்கிலாந்து, 2ஆவது இன்னிங்ஸில் டொம் ஹாட்லியின் துல்லியமான பந்துவீச்சைக் கொண்டு இந்தியாவை 202 ஓட்டங்களுக்கு ஆட்டம் இழக்கச் செய்து அற்புதமான வெற்றியை ஈட்டியது. இப் போட்டி 25ஆம் திகதி ஆரம்பமாகி இன்று 28ஆம் திகதி மாலை முடிவடைந்தது. எண்ணிக்கை சுருக்கம் இங்கிலாந்து 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 246 (பென் ஸ்டோக்ஸ் 70, ஜொனி பெயாஸ்டோவ் 37, பென் டக்கட் 35, ரவிச்சந்திரன் அஷ்வின் 68 - 3 விக்., ரவிந்த்ர ஜடேஜா 88 - 3 விக்.) இந்தியா 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 436 (கே.எல். ராகுல் 86, யஷஸ்வி ஜய்ஸ்வால் 80, அக்சார் பட்டேல் 44, அறிமுக வீரர் ஸ்ரீஹர் பாரத் 41, ஜோ ரூட் 79 - 4 விக்.) இங்கிலாந்து 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 420 (ஒலி போப் 196, பென் டக்கட் 47, ஜஸ்ப்ரிட் பும்ரா 41 - 4 விக்., ரவிச்சந்திரன் அஷ்வின் 126 - 3 விக்.) இந்தியா 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 231 ஓட்டங்கள்) சகலரும் ஆட்டம் இழந்து 202 (ரோஹித் ஷர்மா 38, ஸ்ரீஹர் பாரத் 28, ரவிச்சந்திரன் அஷ்வின் 28, டொம் ஹாட்லி 62 - 7 விக்) ஆட்டநாயகன்: ஒலி போப் https://www.virakesari.lk/article/175021
  10. Published By: VISHNU 28 JAN, 2024 | 05:55 PM யாழ்ப்பாணம் இணுவிலைச் சேர்ந்த 27 வயது இளைஞர் ஒருவரைக் காணவில்லை என அவரது உறவினர்களால் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. கடந்த 26 ஆம் தேதி வியாழக்கிழமை முதல் குறித்த இளைஞன் காணாமல் போனதாக அவரது உறவினர்கள் முறைப்பாடு செய்துள்ளனர். இளைஞர் காணாமல் போன தினத்தில் மஞ்சள் நிற டீசேர்ட் மற்றும் கறுப்பு நிற அரைக்காற்சட்டை அணிந்திருந்ததாக இளைஞனின் உறவினர்கள் தெரிவிக்கின்றனர். இவரைப் பற்றிய தகவல் அறிந்தாலோ அல்லது இவரை எங்காவது கண்டாலோ சுன்னாகம் பொலிஸ் நிலையத்திற்கோ அல்லது இளைஞரது உறவினர்களது தொலைபேசி இலக்கங்களான 077-2690673 அல்லது 077-6523229 அறிவிக்குமாறு உறவினர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். https://www.virakesari.lk/article/175012
  11. பையா தமிழில் சிறிய விளக்கம் கொடுத்து இணையுங்கோ. எந்தெந்த அணிகள் விளையாடுகிறார்கள் என்பது போன்ற விபரங்களை போட்டால் பார்க்க உந்துதலாக இருக்கும்.
  12. Published By: VISHNU 28 JAN, 2024 | 03:22 PM மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 37 ஆவது ஆண்டு நினைவேந்தல் இன்று ஞாயிற்றுக்கிழமை (28) இடம்பெற்றது. இதன்போது மகிழடித்தீவில் அமைக்கப்பட்டுள்ள நினைவு தூபியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணி கட்சி உறுப்பினர்கள் சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். கடந்த 1987 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 28 ஆம் திகதி கொக்கட்டிச்சோலை பிரதேசத்தை சுற்றிவளைத்த இராணுவத்தினர் அங்கிருந்த அப்பாவி பொதுமக்கள் 152 பேரை கைது செய்து துப்பாக்கியால் சுட்டு படுகொலை செய்தனர். இந்த நிலையில் 37 ஆவது நினைவு தினத்தையிட்டு தமிழ் தேசிய மக்கள் முன்னணி வெல்லாவெளி அமைப்பாளர் குமாரசிங்கம் தலைமையில் கட்சி உறுப்பினர்கள் உயிரிழந்தவர்களின் ஆத்ம சாந்தியடைய நினைவு தூபியில் சுடர் ஏற்றி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர். https://www.virakesari.lk/article/174989
  13. மாயையை கிழித்திருக்கிறது சர்வதேச நீதிமன்றம்; மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் - அமைச்சர் டக்ளஸ் 28 JAN, 2024 | 09:58 PM தமிழ் அரசியல் தரப்புக்களினால் தமிழ் மக்கள் மத்தியில் ஏற்படுத்தப்படும் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான எதிர்பார்ப்புக்கள் அர்த்தமற்றவை என்பது வெளிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, மக்கள் அர்த்தமற்ற மாயைகளை தொடர்ந்தும் நம்பிக்கொண்டிருக்காமல் தீர்வுகளை அடைவதற்கான நடைமுறைச் சாத்தியமான முயற்சிகளை வலுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார். காஸா மீது இஸ்ரேல் முன்னெடுத்து வருகின்ற தாக்குதல் தொடர்பாக தென்னாபிரிக்காவினால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிற்கு தீர்ப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த போதே ஈ.பி.டி.பி. கட்சியின் செயலாளர் நாயகம் அமைச்சர் டக்ளஸ் மேற்கண்டாவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், கடந்த 14 வருடங்களுக்கு மேலாக சர்வதேச நீதிமன்றத்தின் ஊடகா தமிழ் மக்களுக்கு நீதி பெற்றுத் தரப்படும் என்ற கோஷங்களை சில தமிழ் தரப்புக்கள்; மக்கள் மத்தியில் விதைத்து வருகின்றன. குறிப்பாக இறுதி யுத்தத்தின்போது இடம்பெற்ற உயிரிப்புக்களுக்கான நீதி மற்றும் காணாமல் போனோருக்கான பரிகாரம் போன்றவற்றை சர்வதேச நீதிமன்றத்தின் மூலமே பெற்றக்கொள்ள முடியும் எனவும் உள்நாட்டு பொறிமுறையில் நம்பிக்கை கொள்ள முடியாது எனவும் சொல்லுகின்ற தமிழ் அரசியல் தரப்புக்கள், தமிழ் மக்கள் மத்தியில் சர்வதேச நீதிமன்றம் தொடர்பான மாயையை ஏற்படுத்தி இருக்கின்றனர். தற்போது, இஸ்ரேல் விவகாரத்தில் தென்னாபிரிக்காவினால் சர்வதேச நீதிமன்றில் தொடரப்பட்ட வழக்கிற்கு வழங்கப்பட்டுள்ள தீர்ப்பானது, சர்வதேச நீதிமன்றின் சிந்தனை மற்றும் பார்வை எத்தகையது என்பதை வெளிப்படுத்தியிருக்கின்றது. ஆயிரக்கணக்கான மக்களை தினமும் அழித்துக் கொண்டிருக்கிற தாக்குதல்களை நிறுத்துமாறு உலகின் அதியுச்ச நீதிமன்றக் கட்டமைப்பான சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிடவில்லை. இனப்படுகொலை மற்றும் யுத்த குற்றம் தொடர்பான சர்வதேச நியமங்களை மதித்து நடக்குமாறு சொல்லியிருக்கிறது. காஸாவில் குறுகிய பிரதேசத்தில் பல லட்சம் அப்பாவி மக்கள் செறிந்து வாழ்கிறார்கள் என்பதோ, தாக்குதல் தொடர்ந்தால் அப்பாவி மக்களின் அழிவுகள் தவிர்க்க முடியாதவை என்பதோ சர்வதேச நீதிமன்றிற்கு தெரியாத சமாச்சாரங்கள் இல்லை. அப்படியிருந்தும் தாக்குதலை நிறுத்துமாறு தீர்ப்பில் சொல்லப்படவில்லை. இவ்வாறான சம்பங்கள் ஊடாக, சர்வதேச கட்டமைப்புக்களின் மனோநிலையையும் அவற்றின் நிகழ்ச்சி நிரல்கள் எத்தகையவை என்பதையும் எமது மக்கள் புரிந்துகொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/175018
  14. உயர்நீதிமன்றம் வழங்கிய திருத்தங்கள் நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்தில் உள்வாங்கப்படும் - வஜிர அபேவர்தன 28 JAN, 2024 | 05:45 PM (எம்.ஆர்.எம்.வசீம்) நிகழ்நிலை காப்புச் சட்டமூலத்துக்கு உயர் நீதிமன்றம் வழங்கியிருக்கும் திருத்தங்கள் உள்வாங்கப்படும். அவ்வாறு உள்வாங்காமல் இருந்தால், அது தேவையில்லை என்பதால் உள்வாங்காமல் இருக்க முடியும். அத்துடன் உலக நாடுகளில் இருக்கும் சட்டத்தை விட மிகவும் தளர்வான சட்ட திட்டங்களே குறித்த சட்டமூலத்தில் உள்வாங்கப்பட்டிருக்கின்றன என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் வஜிர அபேவர்த்தன தெரிவித்தார். பாராளுமன்றத்தில் கடந்த வாரம் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் குறித்து தெரிவிக்கப்படும் விமர்சனங்கள் தொடர்பில் குறிப்பிடுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் கூறு‍கையில், பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் காரணமாக டிஜிட்டல் பொருளாதாரத்துக்கு பாதிப்பு ஏற்படும் என சிலர் தெரிவித்து வருகின்றனர். உலகில் 137 நாடுகளில் இந்த சட்டம் செயற்பட்டு வருகிறது. அப்படியாயின், அந்த நாடுகளில் டிஜிட்டல் பொருளாதாரம் பாதிக்கப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு எதுவம் இல்லை. அதனால் இதனை அரசியலாக்க வேண்டாம். ஒட்டுமொத்த இலங்கை நாகரிகத்தை எதிர்பார்ப்பதாக இருந்தால் இந்த விடயங்கள் செயற்படுத்தப்பட வேண்டும். அத்துடன், உலகில் 194 நாடுகளில் 137 நாடுகளில் சமூக வலைத்தளங்கள் தொடர்பில் இருக்கும் சட்ட திட்டங்களைவிட மிகவும் இலகுவானதாகும். அதன் பிரகாரம் இலங்கையின் நாகரிகம் இந்த சட்டத்தின் மூலம் பாதுகாக்கப்பட்டிருக்கிறது. இந்த சட்ட திட்டங்கள் போதாது. உலகில் வளர்ச்சியடைந்த நாடுகளில் போன்று இதனை செயற்படுத்த வேண்டியிருக்கிறது. மேலும், இந்த சட்டமூலத்துக்கு உயர்நீதிமன்றம் வழங்கியிருக்கும் திருத்தங்களை உள்வாங்குவோம். அவ்வாறு உள்வாங்காமல் இருப்பதாக இருந்தால் அது தேவையில்லை என்பதால் உள்வாங்காமல் இருக்க முடியும். என்றாலும், உயர்நீதிமன்றம் சில பிரிவுகளில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு தெரிவித்த விடயங்களுக்கு மாற்றமாக எதுவும் இடம்பெறப்போவதில்லை. அத்துடன், இந்த சட்டத்தை செயற்படுத்த ஆணைக்குழு ஒன்று அமைக்கப்படும். உலக நாடுகளிலும் இதற்காக ஆணைக்குழு அமைக்கப்பட்டிருக்கிறது. தற்போது இலங்கையில் கொண்டுவந்திருக்கும் இந்த சட்டம், சிங்கப்பூரில் இருப்பதை விட கடுமையானது அல்ல. சிங்கப்பூரில் சில விடயங்களுக்கு ஒரு மில்லியன் டொலர் வரை தண்டப்பணம் விதிக்க முடியும். அந்தளவு கடுமையான சட்டமல்ல. மாறாக, அவற்றை விட இலகுவான, ஜனநாயக ரீதியான, பிரித்தானிய அரசியலமைப்புக்கு அமைய, இந்தியாவின் அரசியலமைப்புக்கு அமைய ஆசிய நாடுகளின் அரசியலமைப்புகளுக்கு அமைவாக மிகவும் தளர்வான அளவே இந்த சட்டமூலத்தின் ஊடாக சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறது என்றார். https://www.virakesari.lk/article/175011
  15. Published By: VISHNU 28 JAN, 2024 | 01:50 PM கேப்பாப்பிலவு பகுதியில் வீட்டில் வசிப்பதற்கு பாதுகாப்பு இல்லை, பொலிஸார் நியாயமான நீதியை பெற்றுக்கொடுக்கவில்லை என தெரிவித்து, தமக்கான நீதி வேண்டி இரு குடும்பங்கள் சனிக்கிழமை (27) முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. முல்லைத்தீவு கேப்பாப்பிலவு கிராமத்தில் சட்டவிரோத செயற்பாட்டில் ஈடுபட்டு வரும் அயல்வீட்டுக்காரருக்கும் கிராமத்தில் வசிக்கும் இரு குடும்பங்களுக்கும் இடையே தொடர்ச்சியாக வாக்குவாதம் இருந்து வந்தது. இது தொடர்பாக பொலிஸாருக்கு முறைப்பாடு அளித்தும், இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இந்நிலையிலேயே கேப்பாப்பிலவு மாதிரி கிராமம் பிள்ளையார் கோவிலுக்கு முன்பாக சனிக்கிழமை (27) மாலை 3 மணியில் இருந்து இரு குடும்பங்களை சேர்ந்த 12 பேர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த இரு குடும்பத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டவேளை, வீட்டில் 14 வயதுடைய இரு சிறுவர்கள் தனிமையில் இருந்தபோது, பிரச்சினைக்குரிய அயல்வீட்டு குடும்பஸ்தர், குறித்த வீட்டினுள் சென்று போதைப்பொருளை வைத்துவிட்டு, பொலிஸாரை அழைத்து வந்ததை தொடர்ந்து, இரு சிறுவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இச்சம்பவத்தினை கண்டித்தும், அடாவடியில் ஈடுபடும் அயல்வீட்டுக்காரர் மீது பொலிஸில் முறைப்பாடு அளித்தும் நியாயம் கிடைக்கவில்லை. இது தொடர்பில் தமக்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும், வீட்டில் இருப்பதற்கு தமக்கு பாதுகாப்பு இல்லை எனவும் தெரிவித்தே இந்த இரண்டு குடும்பங்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றன. https://www.virakesari.lk/article/174973
  16. ஜனாதிபதி நிதியத்தினால் வழங்கப்படும் புலமைப்பரிசில் தொகை அதிகரிப்பு! Published By: VISHNU 28 JAN, 2024 | 12:59 PM 2021 (2022) ஆம் ஆண்டில் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு முதன் முறையாக தோற்றி ஒரே தடவையில் சித்தியடைந்து 2024 ஆம் ஆண்டில் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றவுள்ள, பொருளாதார பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ள மாணவர்களுக்கு வழங்கப்படும் புலமைப்பரிசில் கொடுப்பனவை 2024 பெப்ரவரி மாதம் முதல் ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார். மாணவ, மாணவிகளின் கோரிக்கை தொடர்பில் கவனம் செலுத்திய நிலையில் ஜனாதிபதி ரணில் விகரமசிங்க இந்த பணிப்புரையை விடுத்துள்ளார். இலங்கையின் அனைத்துப் பகுதிகளிலும் வாழும், கற்கும் திறன் கொண்ட, ஆனால் பொருளாதாரச் சிரமங்களுள்ள மாணவர்களை இனங்கண்டு அவர்களின் எதிர்காலத்தை மேம்படுத்தும் வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரையின் பிரகாரம் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்கவின் வழிகாட்டலின் கீழ் ஜனாதிபதி நிதியம் இந்த புலமைப்பரிசில் திட்டத்தை நடைமுறைப்படுத்துகிறது. 2021/2022 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் வழங்கும் திட்டத்தின் கீழ், ஜனாதிபதி நிதியத்தினால் புலமைப்பரிசில் பெறுபவர்களுக்கு மாதாந்தம் 5,000 ரூபா கொடுப்பனவு வழங்கப்பட்டதுடன் இதுவரை 10 மாதாந்த தவணைகள் செலுத்தப்பட்டுள்ளன. இதன்படி, புலமைப்பரிசில் தொகை அதிகரிப்புடன், 2024 பெப்ரவரி முதல் க.பொ.த உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் வரை ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் ஜனாதிபதி நிதியிலிருந்து 6,000 ரூபா மாதாந்த உதவித்தொகை வழங்கப்படும். மேலும் 2022/2023 ஆண்டு தொடர்பாக க.பொ.த சாதாரண தர பரீட்சையில் உயர் தேர்ச்சி பெற்ற 5,000 மாணவர்கள் தெரிவு செய்யப்பட்டு அந்த மாணவர் க.பொ.த உயர்தர பரீட்சைக்கு தோற்றும் வரை மாதாந்தம் ரூ. 6000 தொகையை வழங்குவதற்காக ஜனாதிபதி நிதியம் தற்போது நடவடிக்கை எடுத்து வருகின்றது. இதன்படி, இலங்கையின் அனைத்து மாகாணங்களையும் உள்ளடக்கும் வகையில் தற்போது பிராந்திய மட்டத்தில் தெரிவுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதுடன், தெரிவுகள் நிறைவடைந்தவுடன் உரிய மாணவ மாணவிகளுக்கு புலமைப்பரிசில்கள் வழங்க எதிர்பார்க்கப்படுகிறது. இது தொடர்பான புதுப்பிக்கப்படும் தகவல்களை எதிர்காலத்தில் அறிந்து கொள்வதற்கு , ஜனாதிபதி நிதியத்தின் www.facebook.com/president.fund என்ற உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தை மற்றும் உத்தியோகபூர்வ YouTube சேனலான www.youtube.com/@PresidentsFund ஐ like/follow அல்லது subscribe செய்யுமாறும் www.presidentsfund.gov.lk எனும் உத்தியோகபூர்வ இணையத்தளத்தைப் பார்வையிடுவதன் மூலம் இது தொடர்பான தகவல்களைப் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் ஜனாதிபதி நிதியம் அறிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/174979
  17. இனவாத, மதவாத குடும்ப அரசியலில் இருந்து விடுபட்டு தூய்மையான ஜனநாயக கலாசாரத்தை இளைஞர்களிடையே வளர்க்க வேண்டும் - மஹிந்த தேசப்பிரிய 28 JAN, 2024 | 12:17 PM எதிர்காலத்தில் இலஞ்சம் மற்றும் ஊழலற்ற தூய்மையான அரசியல் கலாசாரத்துக்கு இளைஞர்களை தயார்ப்படுத்துவதுடன், இனவாத, மதவாத குடும்ப அரசியலில் இருந்து விடுபட்டு ஒரு தூய்மையான ஜனநாயக கலாசாரத்தை இளைஞர்களுக்கிடையில் வளர்த்தெடுக்க வேண்டும். இவ்வாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவரும் முன்னாள் தேர்தல் ஆணையாளருமான மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் அமைப்பினர் ஏற்பாடு செய்த மாகாண சபைகளை வலுப்படுத்தல் தொடர்பாக இளைஞர், யுவதிகளுக்கு விளக்கமூட்டும் செயலமர்வு மட்டக்களப்பில் இன்று (28) நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விளக்கமளிக்கும்போதே மஹிந்த தேசப்பிரிய இவ்வாறு தெரிவித்தார். ஜனநாயக இளைஞர் காங்கிரஸ் தலைவர் கே.அர்ஜுனா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் பெரும் எண்ணிக்கையிலான இளைஞர், யுவதிகள் கலந்துகொண்டனர். இதன்போது மஹிந்த தேசப்பிரிய இளைஞர், யுவதிகள் மற்றும் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கும் பதிலளித்தார். மேலும், எதிர்கால இளைஞர்களின் அரசியலில் அவர்களது பங்களிப்பு மற்றும் தேர்தல்களின் முக்கியத்துவம் பற்றியும் விரிவாக ஆராயப்பட்டது. https://www.virakesari.lk/article/174974
  18. ஷமர் ஜோசப்பின் பந்துவீச்சில் அவுஸ்திரேலியாவை அதிரவைத்தது மேற்கிந்தியத் தீவுகள் 28 JAN, 2024 | 02:33 PM (நெவில் அன்தனி) பிறிஸ்பேன் கபா விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (28) நிறைவுபெற்ற மிகவும் பரபரப்பான 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் (பகல் இரவு) நடப்பு உலக டெஸ்ட் சம்பயின் அவுஸ்திரேலியாவை 8 ஓட்டங்களால் இளம் வீரர்களைக் கொண்ட மேற்கிந்தியத் தீவுகள் அபார வெற்றிகொண்டது. தனது 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் ஷமர் ஜோசப் மிகத் துல்லியமாக அவுஸ்திரேலியாவின் 7 விக்கெட்களை வீழ்த்தியதன் மூலம் மேற்கிந்தியத் தீவுகளின் வெற்றி உறுதி செய்யப்பட்டது. ஷமர் ஜோசப் தனது அறிமுக டெஸ்ட் போட்டியிலும் 5 விக்கெட் குவியலைப் பதிவு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியுடன் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1 - 1 என மேற்கிந்தியத் தீவுகள் சமப்படுத்திக்கொண்டது. அடிலெய்டில் நடைபெற்ற முதலாவது டெஸ்ட் போட்டியில் அவஸ்திரேலியா 10 விக்கெட்களால் வெற்றிபெற்றிருந்தது. 216 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா சகல விக்கெட்களையும் இழந்து 207 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது. அவுஸ்திரேலியாவின் வெற்றிக்காக ஸ்டீவன் ஸ்மித் கடுமையாக முயற்சித்த போதிலும் ஏனையவர்களிடம் இருந்து போதுமான பங்களிப்பு கிடைக்கவில்லை. போட்டியின் நான்காம் நாளான ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தனது 2ஆவது இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 62 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த அவுஸ்திரேலியா 3ஆவது விக்கெட்டில் ஸ்டீவன் ஸ்மித், கெமரன் க்றீன் ஆகியோர் பகிர்ந்த 71 ஓட்டங்களின் உதவியுடன் மொத்த எண்ணிக்கையை 113 ஓட்டங்களாக உயர்த்திக்கொண்டது. ஆனால், அதன் பின்னர் சீரான இடைவெளியில் வீரர்கள் ஆட்டம் இழக்க கடைசி 7 விக்கெட்கள் 94 ஓட்டங்களுக்கு சரிந்தன. ஷம்ரன் ஜோசப் 68 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்களை வீழ்த்தியுடன் அவருக்கு பக்கபலமாக பந்துவீசிய அல்ஸாரி ஜோசப் 2 விக்கெட்களையும் ஜஸ்டின் க்றீவ்ஸ் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். வியாழக்கிழமை (25) ஆரம்பமான இந்த டெஸ்ட் போட்டியில் மேற்கிந்தியத் தீவுகள் முதல் இன்னிங்ஸில் பெற்ற 311 ஓட்டங்களையே அதிகப்பட்ச மொத்த எண்ணிக்கையாக இருந்தது. எணிக்கை சுருக்கம் மேற்கிந்தியத் தீவுகள் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 311 (ஜொஷுவா டா சில்வா 79, கவெம் ஹொஜ் 71, கெவின் சின்க்ளயா 50, அல்ஸாரி ஜோசப் 32, மிச்செல் 82 க்கு 4 விக்,, ஜொஷ் ஹேஸல்வூட் 38 - 2 விக்., நெதன் லயன் 81 - 2 விக்.) அவுஸ்திரேலியா 1ஆவது இன்: 289 - 9 விக். டிக்ளயார்ட் (உஸ்மான் கவாஜா 75, பெட் கமின்ஸ் 64, அலெக்ஸ் கேரி 65, அல்ஸாரி 84 - 4 விக்., கெமர் ரோச் 47 - 3 விக்.,) மேற்கிந்தியத் தீவுகள் 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 193 (கேர்க் மேக்கென்ஸி 41, அலிக் அத்தானேஸ் 35, ஜஸ்டின் க்றீவ்ஸ் 33) அவுஸ்திரேலியா 2ஆவது இன்: (வெற்றி இலக்கு 216) சகலரும் ஆட்டம் இழந்து 207 (ஸ்டீவன் ஸ்மித் 91 ஆ.இ., கெமரன் க்றீன் 42, மிச்செல் ஸ்டார்க் 21, ஷமர் ஜோசப் 68 - 7 விக், அல்ஸாரி ஜோசப் 62 - 2 விக்.) ஆட்டநாயகன் மற்றும் தொடர்நாயகன்: ஷமர் ஜோசப் https://www.virakesari.lk/article/174987
  19. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், மாயகிருஷ்ணன். க பதவி, பிபிசி தமிழுக்காக 4 மணி நேரங்களுக்கு முன்னர் சோழ, பாண்டிய, சேரர், விஜயநகர அரசர்களின் காலகட்டத்தில் கோவில்கள் சமூகத்தின் முக்கிய அங்கமாக இருந்துள்ளன. அக்கால மக்களின் வரலாற்றை நாம் அறிந்துகொள்ளும் ஆதாரமாக கோவில் கல்வெட்டுகள் இருக்கின்றன. அந்தக் கல்வெட்டுகள் பெரும்பாலும், அந்தக் காலத்தில் வாழ்ந்த மன்னர்களின் சாதனைகள், போர்கள், தானங்கள் பற்றியே அமைந்திருக்கும். ஆனால், கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள இலவனாசூர் கோட்டை சிவன் கோவிலில் அந்தக் கால மன்னர்களின் கீழ் பணியாற்றிய அதிகாரிகள் செய்த தவறுகள் மற்றும் அதற்காக அவர்களுக்குக் கிடைத்த தண்டனைகள் போன்ற சுவாரஸ்யமான சம்பவங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதன்மூலம் அக்கால மக்களின் வாழ்வியல், மன்னர்களின் ஆட்சி முறை, அதிகாரிகளின் மெத்தனப் போக்கு, குறிப்பாக அதற்கு வழங்கப்பட்ட தண்டனை முறைகள் குறித்து நாம் தெரிந்துகொள்ள முடிகிறது. அது பற்றி விரிவாக இக்கட்டுரையில் காண்போம். பிரெஞ்சு படையால் கைப்பற்றப்பட்ட இலவனாசூர் கோட்டை படக்குறிப்பு, கி.பி. 1801ஆம் ஆண்டு இலவனாசூர்கோட்டை பகுதி அனைத்தும் ஆங்கிலேய கம்பெனி வசமானது. படக்குறிப்பு, இங்கு 80க்கும் மேலான கல்வெட்டுகள் உள்ளன. ஆங்கிலேயர் வருகைக்குப் பின் இலவனாசூர் கோட்டையும் அதைச் சார்ந்த இடங்களையும் கண்காணிக்கும் பொறுப்பை மீர் உசைன் கான் சாகிப் ஏற்றிருந்தார். கி.பி.1755ஆம் ஆண்டில் தொத்தேய் தலைமையில் 200 ஐரோப்பியர்கள், ஆயிரம் சிப்பாய்கள், பீரங்கி முதலான போர் தளவாடங்களுடன் கூடிய பிரெஞ்சு படையானது இலவனாசூர் கோட்டையைத் தாக்கத் தொடங்கியது. போரில் ஏற்பட்ட காயத்தால் மீர் உசைன் கான் இறந்தார். மிக எளிதாக பிரெஞ்சுகாரர்கள் இந்தப் பகுதியை கைப்பற்றினர். இலவனாசூர்கோட்டை சிவன் கோவில் யானை ஏறாத வண்ணம் மிக உயரமான பீடத்தில் அமைக்கப்பட்ட மாடக்கோவில். தமிழகத்தில் சில இடங்களில் மட்டுமே இந்த அமைப்பு காணப்படுகிறது. பல்வேறு காலகட்டங்களில் இறையானறையூர் சோழ கேரள சதுர்வேதி மங்களம், சோழ கேரள நல்லூர், பிடாகை பற்று எனப் பலவகையான பெயர்களைப் பெற்றிருந்த இந்த ஊர் தற்போது இலவனாசூர்கோட்டை என அழைக்கப்படுகிறது. கி.பி.1801ஆம் ஆண்டு இலவனாசூர்கோட்டைப் பகுதி அனைத்தும் ஆங்கிலேய கம்பெனி வசமானது. இதில் ஆற்காடு பகுதிக்கு கேப்டன் கிரகாம் என்னும் ஆங்கிலேயர் ஆட்சித் தலைவராக நியமிக்கப்பட்டார். அந்தக் காலகட்டத்தில் பாலாற்றுக்கும் வெள்ளாற்றுக்கும் இடைப்பட்ட பகுதியை நிர்வாகத்தின் பொருட்டு இராவென் ஷா என்னும் ஆங்கிலேயர் 21 கோட்டங்களாகப் பிரித்தார். அவற்றில் இலவனாசூர் கோட்டமும் ஒன்று. ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் பெருமதிப்பு மிக்க நகரம் படக்குறிப்பு, ஊர் கணக்கராகப் பணியாற்றிய அதிகாரிகளின் தவறான செயலையும் ஊர் சபையாரின் செயலையும் நடவடிக்கைகளையும் விளக்கும் கல்வெட்டு இங்கு உள்ளது. இலவனாசூர் கோட்டை கோவில் கல்வெட்டு விபரங்கள் பற்றித் தெரிந்துகொள்ள, பிபிசி தமிழுடன் திருவண்ணாமலை வட்டாட்சியரும் திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவ செயலாளருமான பாலமுருகன் மற்றும் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியின் வரலாற்றுத் துறை பேராசிரியர் ரமேஷ், வரலாற்று ஆர்வலரும் எழுத்தாளருமான உளுந்தூர்பேட்டை லலித்குமார் ஆகியோர் வந்தனர். இலவனாசூர்கோட்டை ஊர் பாகம் கொண்ட அருளிய மகாதேவர் என்ற சிவன் கோவிலில் திரும்பும் இடமெல்லாம் கல்வெட்டுகள், வித்தியாசமான கலைச் சிற்பங்கள், கலை நுணுக்கத்துடன் மெருகேற்றப்பட்ட புடைப்புச் சிற்பங்களுடன் கூடிய தூண்கள் என்று நம்மை ஆச்சரியப்படுத்தின. “நாம் நிற்கும் இந்த ஊர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே கி.பி. 10ஆம் நூற்றாண்டு முதல் கி.பி.18ஆம் நூற்றாண்டு வரை பெருமதிப்புக்குரிய நகரமாக இருந்துள்ளது,” என்று திருவண்ணாமலை வட்டாட்சியரும் மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவச் செயலாளருமான பாலமுருகன் விளக்க ஆரம்பித்தார். இங்கு 80க்கும் மேலான கல்வெட்டுகள் உள்ளன. சோழர் கால கல்வெட்டுகள், பாண்டியர் கால கல்வெட்டுக்கள், கோப்பெருஞ்சிங்கன் கல்வெட்டுகள், விஜயநகர அரசர்கள் காலத்திய கல்வெட்டுகள் இங்கு காணப்படுகின்றன. வரிப் பணத்தைக் கையாடல் செய்த அதிகாரிகளுக்கு என்ன நடந்தது? படக்குறிப்பு, திருவண்ணாமலை மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவ செயலாளர் பாலமுருகன் இன்றைய காலகட்டத்தில் வசூல் செய்யப்பட்ட வரிப் பணத்தில் கையாடல் செய்த அதிகாரிகள் தற்காலிக பணிநீக்கம் செய்யப்படுவது உட்படப் பல நடவடிக்கைகளைப் பார்க்கிறோம். அதைப் போலவே, கி.பி. 1116ஆம் ஆண்டிலும் முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் அதிகாரிகள் வசூல் செய்த வரியைக் கட்டாமல் ஓடிப் போன சம்பவம் நிகழ்ந்துள்ளது என்றார் திருவண்ணாமலை வட்டாட்சியரும் மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவச் செயலாளருமான பாலமுருகன். அது தொடர்பான கல்வெட்டு இலவனாசூர் கோட்டை கோவிலில் உள்ளது என்று கூறி, இரண்டாம் கோபுர வலப்பக்கச் சுவர் பகுதிக்கு அழைத்துச் சென்று கல்வெட்டைக் காண்பித்தார். 'ஸ்வஸ்தி ஸ்ரீ புகழ் மாது விளங்க ஜயமாது விரும்பநிலமாக...' எனத் தொடங்கும் இந்தக் கல்வெட்டை படித்து அதை விவரித்தார். அதன்படி, முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் இளமை வேங்கடமான பண்டித பிரியன், கருமாணிக்கமான பட்டப் பிரியன் என்ற இரண்டு அதிகாரிகளும் ஊர் கணக்கராகப் பணியாற்றினர். கி.பி. 1116ஆம் ஆண்டில் அவர்கள் வசூலித்த வரித் தொகையை ஊர் சபையோரிடம் ஒப்படைக்காமல் ஊரைவிட்டு ஓடிவிட்டனர் .இதை அறிந்த ஊர் சபையார் அவர்களது சொத்துகளை விற்று அந்தத் தொகைக்கு ஈடுகட்ட முயன்றனர். படக்குறிப்பு, வரி வசூலிக்காத அதிகாரி, கிராம மக்கள் வரி செலுத்தாத நிகழ்வுகளும் அக்காலங்களில் நிகழ்ந்துள்ளன. "இளவனாசூருக்கு அருகில் உள்ள செம்பியன் மாதேவி என்ற கிராமத்தில் உள்ள வானவன் மாதேவி பேரேரி என்ற இடத்திற்குக் கிழக்கே, முதல் கண்ணாறு என்ற இடத்தில் உள்ள நஞ்சை நிலமும் அங்கிருந்த கிணறும் மேற்கூறிய இரண்டு கணக்கர்களுக்குச் சொந்தமான சொத்துகளாக இருந்துள்ளன. ஊர் சபையினர் கி.பி. 1118ஆம் ஆண்டில் நிலம், கிணறு, வீட்டு மனை ஆகிய அனைத்தையும் வீதி விடங்கண் கோலால் அளந்து 20 குழியும் கிணறும் மனையும் விற்கப்பட்டது. பதின்மூன்றே நாலு மா முக்காணிக் காசுக்கும் (இது பழங்கால தமிழர்களின் கணக்கீடு வகை. நான்குமா என்பது 400 குழிகளைக் கொண்டது, அதேபோல் முக்காணி அல்லது மூன்று வீசம் என்பது 375 குழிகளாகக் கணக்கீடு செய்யப்படுகின்றது. அதாவது 4/20 என்பது நான்குமா எனவும் 3/80 என்பது முக்காணி எனவும் கணக்கீடு செய்யப்பட்டது), மூன்று கழஞ்சு பொன்னுக்கும் (கழஞ்சு என்பது தங்கத்தை அளவிட பழங்கால தமிழர்கள் பயன்படுத்திய அளவீட்டு முறை. ஒரு கழஞ்சு என்பது தற்போதைய கணக்கின்படி 5.1கிராம்) விற்றனர். கி.பி. 1116இல் நடந்த முறைகேடுக்கு கி.பி. 1118இல் தொண்டைமானார் என்ற அதிகாரி வந்த பின் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது," என்று கல்வெட்டு கூறும் தகவல்களை விவரித்தார் பாலமுருகன். மேலும் அதிகாரி தொண்டைமான் என்பவரே இவற்றை விலைக்கு வாங்கியதையும் இந்தக் கல்வெட்டில் பதிவு செய்துள்ளதாகக் கூறினார் அவர். இவ்வாறு ஊர் கணக்கராகப் பணியாற்றிய அதிகாரிகளின் தவறான செயலையும் ஊர் சபையாரின் செயலையும் நடவடிக்கைகளையும் இலவனாசூர் கல்வெட்டு விளக்குகிறது. வரி வசூலிக்காத அதிகாரிக்கு என்ன நடந்தது? படக்குறிப்பு, பேராசிரியர் ரமேஷ் இதுமட்டுமின்றி, இதே கோவிலில் வரி வசூலிக்காமல் மெத்தனமாக இருந்த அதிகாரிகள் குறித்தும் அதற்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் விளக்கும் கல்வெட்டு உள்ளதாகக் குறிப்பிட்டார் விழுப்புரம் அறிஞர் அண்ணா கலைக் கல்லூரியின் வரலாற்றுப் பேராசிரியர் ரமேஷ். கோவிலின் முதல் பிரகார திருச்சுற்று மாளிகையின் தெற்குச் சுவரில் உள்ள சடையவர்மன் வீரபாண்டியன் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டைப் படித்துக் காட்டி விளக்கமளித்தார். 'ஸ்வஸ்திஸ்ரீ கோற்சடைய பன்மரான திரி புவனச் சக்கரவர்த்திகள் ஸ்ரீ வீரபாண்டிய தேவற்க்கு யாண்டு எட்டாவது கற்கட நாய...' எனத் தொடங்கும் கல்வெட்டைப் படித்து விரிவாகக் கூறினார். இந்தக் கல்வெட்டு கி.பி. 1261ஆம் ஆண்டில் சடையவர்மன் வீரபாண்டியனின் எட்டாவது ஆட்சி ஆண்டில் பொறிக்கப்பட்டுள்ளது. படக்குறிப்பு, வித்தியாசமான கலைச் சிற்பங்கள், கலை நுணுக்கத்துடன் மெருகேற்றப்பட்ட புடைப்புச் சிற்பங்களுடன் கூடிய தூண்களும் இங்குள்ளன. இலவனாசூருக்கு தென்கிழக்கில் மலையனூர் என்னும் சிற்றூர் உள்ளது. பேராசிரியர் ரமேஷின் கூற்றுப்படி, அது குடி நீங்க தேவதானம் என்று குறிக்கப்பட்டுள்ளது. அதாவது அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய வரித்தொகை அனைத்தும் கோவில் காரியங்களுக்குச் செலவிடப்படுவது அந்தக் கால வழக்கம். "அங்குள்ள மக்கள் அனைவரும் அரசுக்குச் செலுத்த வேண்டிய வரி தொகைகளை கோவிலுக்குச் செலுத்த வேண்டும். அது போலவே மலையனூர் மக்கள் தாங்கள் பயன்படுத்தி வந்த கோவில் நிலத்திற்கான தங்களது வரிகளை இலவனாசூர் சிவன் கோவிலுக்கு செலுத்தி வந்தனர். இந்நிலையில், வீரபாண்டியன் ஆட்சிக் காலத்தில் இளவனாசூர்கோட்டை அருகில் உள்ள மலையனூர் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் பயன்படுத்திய நிலத்திற்கான வரிகளை அதிகாரிகள் வசூல் செய்யாமல் பல ஆண்டுகள் மெத்தனமாக இருந்துள்ளனர். அதாவது, விக்கிரம பாண்டியன் ஏழாவது ஆட்சி ஆண்டு வரை 637 காசு, வீரபாண்டித் தேவர் நான்காவது ஆட்சியாண்டு வரை 121 காசு, மீண்டும் வீரபாண்டியன் ஏழாவது ஆட்சியாண்டு வரை 547 காசு என ஆக மொத்தம் 3.100 காசுகள் வரிவசூலிக்கப்படவில்லை,” என்கிறார் பேராசிரியர் ரமேஷ். இதற்கு மக்கள் மட்டும் காரணமல்ல அவர்களிடம் வரி வசூலிக்காத தானத்தார்கள் அதாவது அதிகாரிகளுமே காரணம் என்பதைக் கருத்தில் கொண்டு அப்போதே தானத்தார்கள் கைது செய்யப்பட்டு கோவிலில் தடுத்து வைக்கப்பட்டதாக பேராசிரியர் ரமேஷ் தெரிவித்தார். மேலும் வரி செலுத்தத் தவறிய பெருந்தொகையை ஒட்டுமொத்தமாக செலுத்த இயலாததால், பட்டர்கள் அனுபவித்து வந்த மலையனூர் நிலங்களை கோவிலுக்கு விற்று அந்தத் தொகையைச் செலுத்தி தானத்தார்களை சிறை மீட்டதாக கல்வெட்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஓடிப்போன கடனாளி; சிக்கிய ஜாமீன்தாரருக்கு என்ன ஆனது? படக்குறிப்பு, ஜாமீன்தாரர் ஓடிப் போனவருக்காக நிலத்தை விற்று கடமையை நிறைவேற்றிய சம்பவமும் நடந்துள்ளது. வரி வசூலில் முறைகேடு செய்யும் அதிகாரிகள் மற்றும் தண்டனைகள் கல்வெட்டில் குறிக்கப்பட்டுள்ளது போலவே, கடன் கொடுக்கும்போது வாங்கியவர் பணத்தைத் திருப்பிச் செலுத்தாத பட்சத்தில் அதற்காக ஜாமீன் கையெழுத்து போட்டவர் பணம் செலுத்திய நிகழ்வும் மாறவர்மன் விரபாண்டியன் காலத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதை விவரிக்கும் கல்வெட்டு கோவிலின் வடக்குச் சுவரில் உள்ளது. இது மாறவர்மன் வீரபாண்டியனின் ஏழாவது ஆட்சி ஆண்டில் எழுதப்பட்டது என்று கூறி விவரிக்கத் தொடங்கினார் பேராசிரியர் ரமேஷ். ”திருமுனைப்பாடி நாட்டின் திருநாவலூரைச் சேர்ந்த வியாபாரி பானூர் கிழவன் ஆட்கொண்ட தேவன் தொண்ட பிள்ளை என்பவர் கோவிலினுடைய பூஜைக்கு திருவமுது படைப்பது உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு முதலீடாக 10 பணம் ஒரு திருநாளுக்கு எனக் கணக்கிட்டு நான்கு நாட்களுக்கு 40 பணம் சபையில் இருப்பவரிடம் வழங்குகிறார். சபையில் எழுத்தழகியரான சோமதேவப்பட்டர் என்பவர் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டு கடமை ஆற்றாமல் ஓடிப் போய்விட்டார்‌. அப்பொழுது அவருக்குப் பிணையாக (ஜாமீன்தாரர்) ஒருவர் கையெழுத்துடுகிறார்,” என விவரிக்கிறார் ரமேஷ். அவரது கூற்றுப்படி, அந்தப் பணத்தைப் பெற்றுக்கொண்டவர் ஓடிப் போனதால் ஜாமீன்தாரர் தனது இலுப்பஞ்செய்தடி, களரிதடி, குலச்செய்தடி, குண்டல் தடி என நான்கு நிலமும் 1250 குழி திருநாமத்துக் காணியாக கோவில் தானத்தார் பெறுகின்றனர். இவ்வாறு கடமையாற்ற வேண்டியவர், ஓடிப் போக அதற்கு ஜாமீன்தாரராக இருந்தவர் தனது நிலத்தை விற்று கடமையை நிறைவேற்றிய செய்தியை இந்தக் கல்வெட்டு மிகத் தெளிவாக விளக்குகிறது. மக்கள் மீது அரசன் விதித்த வரிச்சுமை படக்குறிப்பு, உளுந்தூர்பேட்டை லலித் குமார் அதிகாரிகளின் மெத்தனப்போக்கு மற்றும் முறையற்ற செயல்பாடுகள் பற்றிய கல்வெட்டுகள் இந்தக் கோவிலில் இருப்பதைப் போல் அரசன் அதிக வரியை மக்கள் மீது விதித்ததும் மீண்டும் கோரிக்கையை ஏற்று மக்கள் மீது சுமத்திய மிகுதியான வரிகளைக் குறைத்த செயலும் இங்கு கல்வெட்டாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவிலின் இரண்டாம் பிரகாரத்து கிழக்குச் சுவரில் உள்ள விஜயநகர மன்னர்களின் கல்வெட்டை காண்பித்த எழுத்தாளர் உளுந்தூர்பேட்டை லலித் குமார் அதை விவரிக்கத் தொடங்கினார். "விஜயநகர மன்னர்களில் வீர பிரதாப விசய ராயரின் கி.பி. 1446ஆம் ஆண்டைச் சேர்ந்த கல்வெட்டு இது. இதில் மிகுதியான வரிகள் காரணமாக மக்கள் துயருற்றதும் அதைத் தொடர்ந்து அரசே வரிகளைக் குறைத்து மக்களின் துயர் நீக்கியதும் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது." இதில், வழிதிலம்பட்டு சாவடி நாடும் கரணிகரும் பரிவாரமும், தொண்டைமானார் கச்சிராயரும்கூடி விஜயநகர மன்னரான ராயரிடம் வரி தொடர்பாக முறையிட்டனர். உடனே அவர் கோரிக்கையை ஏற்று மக்களின் துயரங்களை நீக்கி அவர்கள் துயர் துடைக்க இடங்கை, வலங்கை இன வரிகள் நீக்கப்பட்டு வரி குறைப்பு செய்த செயல்பாடுகள் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக லலித் குமார் கூறினார். https://www.bbc.com/tamil/articles/c9w4k2dwzzvo
  20. இரண்டாவது டெஸ்டில் அவுஸ்திரேலியாவை 8 ஓட்டங்களால் தோற்கடித்தது மேற்கிந்திய அணி - இளம் வேகப்பந்து வீச்சாளர் 7 விக்கெட் Published By: RAJEEBAN 28 JAN, 2024 | 01:17 PM அவுஸ்திரேலியா அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் மேற்கிந்திய அணி 8 விக்கெட்களால் வெற்றிபெற்றுள்ளது. வெற்றிபெறுவதற்கு 215 ஓட்டங்களை பெறவேண்டிய நிலையில் தனது இரண்டாவது இனிங்சில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி 207 ஓட்டங்களிற்கு தனது அனைத்து விக்கெட்களையும் இழந்தது. மேற்கிந்திய அணியின் சார்பில் தனது இரண்டாவது டெஸ்ட்போட்டியை விளையாடிய இளம்வேகப்பந்து வீச்சாளர் சமார் ஜோசப் ஏழு விக்கெட்களை வீழ்த்தினார். https://www.virakesari.lk/article/174982
  21. இரத்து செய்யப்பட்ட உயர்தர விவசாயப்பாட பரீட்சைக்கான புதிய திகதி அறிவிப்பு கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாளுக்கான பரீட்சை இரத்து செய்யப்பட்ட நிலையில் மீண்டும் அந்த பரீட்சையை நடத்துவதற்கான புதிய திகதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, குறித்த பரீட்சையின் இரண்டாவது பரீட்சை தாள் எதிர்வரும் பெப்ரவரி முதலாம் திகதி காலை 8.30 முதல் 03 மணி வரை நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரீட்சைக்கு முன்னதாகவே குறித்த வினாத்தாள் சமூக ஊடகங்களில் கசிந்ததாக வெளியான தகவலை அடுத்து மூன்று மொழிகளிலும் குறித்த வினாத்தாள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதேவேளை, கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் விவசாயப்பாடத்தின் இரண்டாம் வினாத்தாள் கடந்த 10 ஆம் திகதி சமூக வலைத்தளங்களில் வெளியானமை குறிப்பிடத்தக்கது. https://thinakkural.lk/article/289588
  22. https://www.espncricinfo.com/series/icc-under-19-world-cup-2023-24-1399722/match-schedule-fixtures-and-results கிறிக்கின்போ அட்டவணையில் முதல் 3 அணிகளும் விளையாடுவதாகப் போட்டிருக்கிறது.
  23. 27 JAN, 2024 | 04:47 PM (ஆர்.ராம்) நிகழ்நிலைச் சட்டவாக்கத்தின்போது உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகளுக்கு அமைவாக அனைத்து திருத்தங்களும உரிய முறையில் உள்வாங்கப்பட்டதா என்பது குறித்து சட்டமா அதிபர் திணைக்களம் ஆய்வுகளை நடத்துமென சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் கடந்த 23 மற்றும் 24ஆம் திகதிகளில் விவாதம் நடத்தப்பட்டு நிகழ்நிலை பாதுகாப்புச் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டதைத் தொடர்ந்து, அச்சட்டமூலம்நிறைவேற்றப்பட்ட முறைமை தொடர்பிலும், உயர்நீதிமன்றம் சுட்டிக்காண்பித்த விடயங்கள் குழுநிலையில் திருத்தப்பட்டதா என்பது தொடர்பில் மீளாய்வுக்கு உட்படுத்துமாறு இலங்கை தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் உட்பட எதிர்க்கட்சியினர் கோரிக்கை விடுத்திருந்தனர். இந்நிலையில் கருத்து வெளியிட்ட சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்த்தன, சட்டமூலங்கள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர் அவற்றை சட்டங்களாக அங்கீகரித்து சான்றுரைப்படுத்தி கையெழுத்திடப்படுவதற்கு முன்பு மேலும் சட்ட ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. குறிப்பாக, அச்சட்டங்கள் சட்ட நடைமுறைகளுக்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் சாத்தியமான குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்கும் சட்டமா அதிபர் அலுவலகத்தால் ‘ஒவ்வொரு சட்டமூலங்களும்’ திருத்தங்களின் பின்னர் அத்தகைய ஆய்வுக்கு உட்படுத்தப்படுகிறது. மேலும், சட்டமா அதிபரிடமிருந்து உறுதிப்படுத்தப்பட்ட பின்னர் பாராளுமன்ற அதிகாரிகள் குழு இரண்டாவது மீளாய்வை மேற்கொள்ளும். இச்செய்பாடுகள் நிறைவேற்றப்பட்டதன் பின்னரே நான் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்துவது வழக்கமானது. அந்த வழக்கம் நிகழ்நிலை காப்புச் சட்டத்திற்கும் பொருந்தும் என்றார். முன்னதாக, நிகழ்நிலைப் பாதுகாப்புச் சட்ட மூலத்தின் இரண்டாவது வாசிப்பு 46 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. சட்டமூலத்துக்கு ஆதரவாக 108 வாக்குகளும் எதிராக 62 வாக்குகளும் அளிக்கப்பட்டன. அதன் பின்னர் சட்டமூலத்தின் மூன்றாம் வாசிப்பு வாக்கெடுப்பின்றி நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/174920
  24. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், தனிஷா சவுகான் பதவி, பிபிசி செய்தியாளர் 27 ஜனவரி 2024 புதுப்பிக்கப்பட்டது 37 நிமிடங்களுக்கு முன்னர் சமீபத்தில் ஆஸ்திரேலியா அரசு கோல்டன் விசா வழங்குவதை நிறுத்துவதாக அறிவித்தது. வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக இருந்த இந்த விசாவால் அந்நாட்டிற்கு எந்தவொரு பொருளாதார நன்மைகளும் இல்லை என்பதை அதன் அரசாங்கம் கண்டறிந்தது. கடந்த 2021ஆம் ஆண்டில், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துக்கு ஐக்கிய அரபு அமீரகம் கோல்டன் விசா வழங்கியதைத் தொடர்ந்து பல விவாதங்கள் எழுந்தன. ஆனால் இந்த கோல்டன் விசா என்றால் என்ன, பணக்காரர்கள் ஏன் இந்த விசாவிற்காக மற்ற நாடுகளில் கோடிகளில் முதலீடு செய்யத் தயாராக இருக்கிறார்கள், இந்த விசாக்கள் ஏன் இப்போது ரத்து செய்யப்படுகின்றன போன்றவற்றை இக்கட்டுரையின் மூலம் தெரிந்துகொள்ளலாம். கோல்டன் விசா என்றால் என்ன? பட மூலாதாரம்,SANJAY DUTT/TWITTER இந்த விசாக்கள் அந்தந்த நாட்டின் அரசாங்கத்தால் வழங்கப்படுகின்றன, இதனால், முதலீட்டாளர்கள் அந்த நாட்டின் குடியுரிமையைப் பெற அதிக அளவு பணத்தை முதலீடு செய்கிறார்கள். நாட்டின் பொருளாதாரத்தை வலுப்படுத்துவதே இதன் நோக்கமாகும். இந்த விசா வழங்குவதில் ஒவ்வொரு நாட்டிலும் தனி விதிகள் இருக்கின்றன. 'இன்வெஸ்டோபீடியா' இணையதளத்தின்படி, கோல்டன் விசா என்பது முதலீட்டாளர் ஒரு நாட்டில் அதிக முதலீடு செய்வதன் மூலம் தனது குடும்பத்துடன் குடியுரிமை அல்லது நிரந்தர குடியுரிமை பெறுவதற்கு வழிவகுக்கும் ஒரு வகையான முதலீட்டுத் திட்டமாகும். கோல்டன் விசாவின் கீழ், பலவிதமான நன்மைகள் இருக்கின்றன. ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பெருமளவு வரி விலக்கும் கூட பெறுவார்கள். இருப்பினும், ஒவ்வொரு நாட்டிலும் மூதலீட்டிற்காக சிறப்பு வசதிகள் செய்யப்படுகின்றன. கோல்டன் விசாவின் கீழ் பல்வேறு 'முதலீட்டு திட்டங்கள்' இருக்கிறது, அதற்காக ஒருவர் ஒரு குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய வேண்டும். ஹென்லி & பார்ட்னர்ஸின் கருத்துகளின் படி , பொதுவாக கோல்டன் விசா திட்டத்தின் கீழ் விசாவைப் பெற குறைந்தது 12 மாதங்கள் வரை ஆகலாம். கோல்டன் விசாவுக்கு பதிலாக இனி 'திறன்மிகு தொழிலாளர் விசா' பட மூலாதாரம்,GETTY IMAGES சிட்னியைச் சேர்ந்த பிபிசி பத்திரிகையாளர் ஹன்னா ரிச்சியின் அறிக்கையின்படி, இந்த விசா கொள்கையானது ஆஸ்திரேலியாவால் வெளிநாட்டு வணிகர்களுக்காகவே தொடங்கப்பட்டது. ஆனால் அதனால், பலன்கள் சரியாக இல்லாததால், குடியேற்றக் கொள்கையில் திருத்தங்களுக்குப் பிறகு அது ரத்து செய்யப்பட்டது. ஏற்கெனவே இந்தக் கொள்கையை, சட்டவிரோத பணப்புழக்கம் செய்யும் ஊழல்வாதிகள் பயன்படுத்துவதாக விமர்சகர்கள் கூறினார்கள். அந்த அறிக்கையின்படி, இதற்குப் பதிலாக 'திறன்மிகு தொழிலாளர் விசா' (திறமையான தொழிலாளர்களுக்கான விசா) கொண்டு வரப்படும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது. ஆஸ்திரேலிய கோல்டன் விசாவின் கீழ், முதலீட்டாளர்கள் குறைந்தது 3.3 மில்லியன் டாலர்கள் அதாவது சுமார் 27 கோடியே 44 லட்சம் ரூபாய் முதலீடு செய்ய வேண்டும். பல விசாரணைகளுக்குப் பிறகு, இந்தக் கொள்கையால் அதன் இலக்கை நிறைவேற்ற முடியாது என்பதை ஆஸ்திரேலிய அரசாங்கம் புரிந்துகொண்டது. இந்த விசாவை ரத்து செய்வதன் மூலம், தங்கள் நாட்டிற்கு வந்து, ஆஸ்திரேலிய பொருளாதாரத்திற்கு சிறந்த பங்களிப்பை அளிக்கும் திறமையானவர்களுக்கான விசாக்களை கொண்டு வருவார்கள் என்று அரசாங்கம் கூறியது. இது குறித்து ஆஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சர் கிளேர் ஓ நீல் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இந்த விசா நமது பொருளாதார எதிர்பார்ப்புகள் மற்றும் தேவைகளை பூர்த்தி செய்யவில்லை என்பது தெளிவாகிறது' என்றார். கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு என்ன வசதிகள் கிடைக்கும்? பட மூலாதாரம்,GETTY IMAGES குடியுரிமை அல்லது நிரந்தர குடியுரிமை ஆகியவற்றை கோல்டன் விசாவை வைத்து ஒருவர் அவரது குடும்பத்துடன் அந்த நாட்டில் வசிக்கவும் பணி புரியவும் அனுமதிக்கிறது. சில சூழ்நிலைகளில், ஒருவர் நிரந்தர குடியுரிமை அல்லது அந்த நாட்டின் குடியுரிமையையும் பெறலாம். முன்னதாக இதற்கு ஸ்பான்சர் தேவைப்பட்டது. சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பெற்றோர்களும் நிதியுதவி செய்யலாம். பயணம் - ஒரு நாட்டின் கோல்டன் விசாவைப் பெற்றால், ஒருவர் அந்த நாட்டின் எந்தப் பகுதியிலும் சுதந்திரமாகச் செல்லலாம். சில ஐரோப்பிய நாடுகளின் கோல்டன் விசா வைத்திருப்பவர்களை ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் எங்கு வேண்டுமென்றாலும் பயணிக்க அனுமதிக்கின்றது. கல்வி மற்றும் சுகாதாரம் - பல்வெறு நாடுகளில் கோல்டன் விசாவுடன் ஒருவர் அந்த நாட்டின் உள்ளூர் கல்வி முறை மற்றும் சுகாதார அமைப்பின் வசதிகளையும் பெறலாம். வரி - பல்வெறு நாடுகளில் கோல்டன் விசா வைத்திருப்பவர்களுக்கு சில அல்லது முழு வரி விலக்கும் அளிக்கின்றன. எந்த நாடுகளில் எல்லாம் கோல்டன் விசா சர்ச்சை இருக்கிறது? பட மூலாதாரம்,GETTY IMAGES கோல்டன் விசா கொள்கையை ஒரு நாடு ரத்து செய்வது இது முதல் முறை அல்ல, இதற்கு முன், 2022 ஆம் ஆண்டில் பிரிட்டனும் இந்தக் கொள்கையை ரத்து செய்தது. மிகவும் பணக்கார 'ஐரோப்பியர்கள் அல்லாதவர்கள்' அங்கு குடியுரிமை பெறத் தொடங்கிய போது ஐரோப்பிய நாடுகளான மால்டாவிலும் இந்த விசா பற்றிய கவலைகள் எழுந்தன. பண மோசடி, வரி செலுத்தாமல் இருப்பது மற்றும் ஊழல் வழக்குகள் அதிகரிக்கும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கவலை தெரிவித்தது. பிபிசி செய்தியின் அறிக்கையின்படி, 2019 ஆம் ஆண்டில், ஐரோப்பிய நாடுகளை 'கோல்டன் விசா' மூலம் தங்கள் நாட்டில் குடியுரிமை பெறும் முதலீட்டாளர்களிடம் கவனமாக இருக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் கேட்டுக் கொண்டது. ஊடகத்தில் வெளிவந்த அறிக்கைகளின்படி, பாலிவுட் நடிகர்கள் உட்பட இந்தியாவின் பல பிரபலங்கள் துபாயில் கோல்டன் விசா பெற்றுள்ளனர். இதன் மூலம் அவர்கள் அங்கு தங்கி பல வசதிகளை பெற முடியும். டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் அறிக்கையின்படி, 2022 ஆம் ஆண்டில் போர்ச்சுகல் நாட்டின் கோல்டன் விசாவைப் பெறும் நபர்களின் பட்டியலில் இந்திய குடிமக்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த பட்டியலில் இந்தியா நான்காவது இடத்தைப் பிடித்தது, அதாவது இந்த விசாவைப் பெறும் இந்தியர்களின் எண்ணிக்கை நான்காவது அதிகமாக இருந்தது. மற்ற நாடுகளில் கோல்டன் விசா பெற எவ்வளவு செலவாகும்? அமெரிக்கா - 5 மில்லியன் டாலர்கள் ஆன்டிகுவா மற்றும் பார்படாஸ் - ஒரு லட்சம் டாலர்கள் சைப்ரஸ் - இரண்டு மில்லியன் யூரோக்கள் அயர்லாந்து குடியரசு - ஒரு மில்லியன் யூரோக்கள் செயின்ட் கிட்ஸ் - 1,50,000 டாலர்கள் வனுவாட்டு - 1,60,000 டாலர்கள் https://www.bbc.com/tamil/articles/c1917kj9v4wo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.