Jump to content

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    20094
  • Joined

  • Last visited

  • Days Won

    15

Everything posted by ஏராளன்

  1. சிங்கப்பூரில் கோட்டாபயவை கைது செய்ய வலுக்கும் கோரிக்கை - நாட்டை விட்டு வெளியேறுகிறாரா? சதீஷ் பார்த்திபன் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஷ, இலங்கை முன்னாள் ஜனாதிபதி இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை கைது செய்ய வேண்டும் என்று சிங்கப்பூரில் கோரிக்கை வலுத்து வருகிறது. இது தொடர்பாக சிங்கப்பூர் அரசு தலைமை சட்ட அதிகாரியிடம் (அட்டர்னி ஜெனரல்) குற்றவியல் புகார் அளிக்கப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவை மையமாகக் கொண்டு இயங்கும் அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டங்களுக்கான அமைப்பு இந்தப் புகாரை அளித்துள்ளது. அனைத்துலக சட்ட வரம்புக்கு உட்பட்டு கோத்தபாய மீது நடவடிக்கை நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் சிங்கப்பூர் அரசாங்கமும்கூட தனது நாட்டுச் சட்டங்களின் கீழ் இந்த நடவடிக்கையை மேற்கொள்ள இயலும் என்றும் அந்த அமைப்பு கூறியுள்ளது. கடந்த 2009ஆம் ஆண்டு இலங்கை பாதுகாப்பு அமைச்சராகப் பொறுப்பு வகித்தார் கோட்டாபய ராஜபக்ஷ, அப்போது இலங்கை ராணும் தமிழர்களுக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிட்டதாக அவர் மீது புகார்களும் குற்றச்சாட்டுகளும் எழுந்தன. ஆயிரக்கணக்கான தமிழர்கள் முள்ளிவாய்க்கால் இறுதிப்போரில் பலியானதாக் கூறப்பட்ட நிலையில், அவர் இலங்கை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த நிலையில், போர் குற்றங்கள் உட்பட கோட்டாபயவுக்கு எதிராக அளிக்கப்பட்டுள்ள பல்வேறு புகார்கள் குறித்து சிங்கப்பூரிலேயே அவர் மீது சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள முடியும் என்கிறது அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டங்களுக்கான அமைப்பு. அதற்கான காரணங்களையும் அது பட்டியலிட்டுள்ளது. இலங்கையில் நிகழ்ந்த இறுதிகட்ட போரின்போது கோட்டாபய பல்வேறு போர்க்குற்றங்களைப் புரிந்ததாக அந்த அமைப்பு சாடியுள்ளது. இது தொடர்பாக பல்வேறு தகவல்களைத் திரட்டி இருப்பதாகவும் உறுதி செய்யப்பட்ட தகவல்களின் அடிப்படையிலேயே முன்னாள் இலங்கை ஜனாதிபதிக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் அந்த அமைப்பின் வழக்கறிஞர் அலெக்சாண்டிரா லில்லி கேதர். இலங்கை மக்கள் நிராகரித்த ரணில் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்ற முரண்: அரசியலமைப்பில் தீர்வு உண்டா? ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தனித்தீவு போல மாறிய கொழும்பு காலிமுகத் திடல் - கள நிலவரம் புகார் என்ன? படக்குறிப்பு, அலெக்சாண்டிரா லில்லி கேதர் அலெக்சாண்டிரா தற்போதுபெர்லின் நகரில் உள்ளார் என்றும், ராய்ட்டர்ஸ் செய்தி முகமை அவரை தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது மேற்கண்டவாறு தெரிவித்தததாகவும் கூறப்பட்டுள்ளது. "கோட்டாபயவுக்கு எதிராக புகார் செய்துள்ளோம். சிங்கப்பூர் அரசாங்கம் அவரை கைது செய்வதன் மூலம் அதிகாரத்தில் உள்ளவர்களுக்கு உண்மை நிலையைப் பறைசாற்ற முடியும். அதற்கான அரிய வாய்ப்பு இப்போது சிங்கப்பூருக்கு அமைந்துள்ளது," என்கிறார் அலெக்சாண்டிரா லில்லி கேதர். சிங்கப்பூர் தனது சொந்த சட்டங்களையும் கொள்கைகளையும் கொண்டுள்ளது. அவற்றின் அடிப்படையிலேய கோத்தபாய ராஜபக்ஷ மீது நடவடிக்கை எடுக்க முடியும் என்று அவர் சுட்டிக்காட்டி உள்ளார். சிங்கப்பூர் தலைமைச் சட்ட அதிகாரியிடம் அளிக்கப்பட்டுள்ள புகார் கடிதத்தை தயாரித்த குழுவில் அலெக்சாண்டிராவும் ஓர் உறுப்பினர். இற்கிடையே, சிங்கப்பூரில் உள்ள கோத்தபாயவை தொடர்புகொள்ள ராய்ட்டர்ஸ் முயற்சி மேற்கொண்ட போதிலும், பலன் கிடைக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. இறுதிக்கட்ட போரின்போது கோத்தபாய ராஜபக்சே ஜெனிவா ஒப்பந்தங்களை மீறிவிட்டதாகவும், அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டங்களுக்கான அமைப்பு அளித்துள்ள 63 பக்கங்களுக்கு நீளும் குற்றவியல் புகார் மனுவில் குறிப்பட்டுள்ளதாக ராய்ட்டர்ஸ் முகமை கூறியுள்ளது. கோத்தபாயவைக் கைது செய்வது தொடர்பாக அந்த அமைப்பிடம் இருந்து ஒரு கடிதம் கிடைக்கப் பெறற்றுள்ளதாக சிங்கப்பூர் தலைமைச் சட்ட அதிகாரி அலுவலகத்தின் செய்தித்தொடர்பாளர் கூறியுள்ளார். கடந்த 23ஆம் தேதி இந்தக் கடிதம் பெற்றபட்டுள்ள நிலையில், இந்த விவகாரம் குறித்து மேலதிக கருத்துகள் எதையும் தெரிவிக்க இயலாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். வெளியுறவுத்துறை விளக்கம் படக்குறிப்பு, சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சகம் கோட்டாபய ராஜபக்ஷ தனிப்பட்ட காரணங்களுக்காக சிங்கப்பூர் வந்திருப்பதாகவும், அவர் புகலிடம் கோரவில்லை என்றும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது. "போர்க்குற்றம், இனப்படுகொலை, சித்ரவதை தொடர்பான குற்றச்சாட்டுகளை சிங்கப்பூர் நீதிமன்றத்தால் விசாரிக்க இயலும் என்றாலும், சிங்கப்பூர் அந்த நடவடிக்கையை கடைசி வாய்ப்பாக மட்டுமே பயன்படுத்தும்," என்று அரசு பலமுறை தெரிவித்துள்ளது என்றுறார் பிரிட்டனில் உள்ள போர்ட்ஸ்மவுத் பல்கலைக்கழக சட்டப் பள்ளியின் பேராசிரியர் ஷுபாங்கர் டாம். இவர் சிங்கப்பூரிலும் சில காலம் பணியில் இருந்துள்ளார். ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தனித்தீவு போல மாறிய கொழும்பு காலிமுகத் திடல் - கள நிலவரம் இலங்கை நெருக்கடி: 'மத அரசியல்' விளைவித்த துன்பங்கள் - வரலாறு மாற்றியமைக்கப்படுமா? சிங்கப்பூர் தனது வெளியுறவுக் கொள்கையில் நடுநிலையைக் கடைப்பிடிப்பதாக அதிகாரபூர்வமா அறிவிக்கவில்லை என்றாலும் அந்நாடு நீண்டகாலமாக அவ்வாறு செயல்பட்டு வருவதாகவும் ஷுபாங்கர் தெரிவித்துள்ளார். எனவே, ஒரு வெளிநாட்டுத் தலைவரை மீது வழக்கு தொடுக்கப்பட வேண்டும் எனில், சிங்கப்பூரின் வெளிநாட்டுக் கொள்கைகளுக்கு ஏற்ப அதை சமநிலைப்படுத்த வேண்டிய அவசியம் எழும் என்றும் அவர் சுட்டிக்காட்டி உள்ளார். இதற்கிடையே, கடந்த 2008ஆம் ஆண்டு போர்ப் பகுதியில் இருந்து ஐ.நா, நிவாரண முகமைகளை உடனடியாக வெளியேறுமாறு உத்தரவிட்டதாகவும், அனைத்துலக உண்மை மற்றும் நீதித் திட்டங்களுக்கான அமைப்பு கூறியுள்ளது. "இதன் மூலம் தமிழர்களுக்கு எதிராக இலங்கை ராணுவம் கட்டவிழ்த்துவிடும் வன்முறைக்கும் படுகொலைகளுக்கும் சாட்சிகள் இல்லை என்பதை உறுதி செய்துகொண்டார் கோத்தபாய. கோட்டாபயவை கைது செய்து விசாரணை செய்து, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய வேண்டும் என்று தலைமை சட்ட அதிகாரியிடம் மனு அளிதி்துள்ளோம். இதுவே எங்கள் வழக்கின் அடிப்படையாக இருக்கும்," என்கிறார் அந்த அமைப்பின் செயல் இயக்குநர் யாஸ்மின் சூக்கா (Yasmin Sooka). சிங்கப்பூரில் இருந்து கோட்டாபய வெளியேற வேண்டுமா? பட மூலாதாரம்,GETTY IMAGES இதற்கிடையே கோட்டாபய எங்கும் ஓடி ஒளியவில்லை என்றும் அவர் மீண்டும் இலங்கைக்கு வர உள்ளதாகவும் அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தணா தெரிவித்துள்ளார். தனிப்பட்ட காரணங்களுக்காக SOCIAL PASS அடிப்படையில்தான் சிங்கப்பூருக்குள் நுழைய அனுமதிக்கப்பட்டுள்ளார் என்றும், இவ்வாறான ஏற்பாட்டில் ஒருவர் சிங்கப்பூர் வந்தால், சம்பந்தப்பட்டவர் அங்கு 14 நாள்கள் மட்டுமே தங்கி இருக்க முடியும். கோத்தாபய கடந்த 13ஆம் தேதியே சிங்கப்பூர் சென்றடைந்தார். எனவே அவர் வெளியேற வேண்டிய நேரம் நெருங்கிவிட்டதாகக் கூறப்படுகிறது. இலங்கையின் முன்னாள் அதிபர் கோட்டாபய ராஜபக்ஷவக்கு, குறுகிய கால விசா வழங்கப்பட்டுள்ளதாக சிங்கப்பூர் குடிநுழைவு சோதனைச் சாவடிகள் ஆணையம் தெரிவித்துள்ளது. பொதுவாக இலங்கையிலிருந்து சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொள்ளும் சுற்றுலா பயணிகளுக்கு 30 நாள்களுக்கான 'சோஷியல் விசிட்' எனும் சுற்றுப்பயண விசா வழங்கப்படும். அந்த விசா 30 நாள்களுக்குச் செல்லுபடியாகும். ஆனால் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு 14 நாள் விசா வழங்கப்பட்டதாக 'ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ்' ஊடகம் தெரிவித்துள்ளது. எனவே, அவர் மேலும் சில காலம் தங்க சிங்கப்பூரின் குடிநுழைவு சட்டங்கள் அனுமதிக்குமா என்பது குறித்து அரசுத்தரப்பில் இன்னும் தெளிவுபடுத்தப்படவில்லை. https://www.bbc.com/tamil/global-62306565
  2. கடலூரில் கபடி வீரர் மரணம்: விளையாட்டின்போது நம் ஆரோக்கியத்தில் எதையெல்லாம் கவனிக்க வேண்டும்? க. சுபகுணம் பிபிசி தமிழ் 26 ஜூலை 2022, 05:01 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கடலூர் மாவட்டம் காடாம்புலியூரை அடுத்த புரங்கணி கிராமத்தைச் சேர்ந்த கபடி வீரர், கபடி போட்டியில் விளையாடிக் கொண்டிருந்த களத்திலேயே மயங்கி உயிரிழந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியதோடு விளையாட்டு வீரர்கள் என்ன மாதிரியான உடற்பயிற்சிகளை மேற்கொண்டு ஆரோக்கியத்தை பேண வேண்டும் என்ற கேள்விகளும் எழுந்துள்ளன. என்ன நடந்தது? கபடி வீரர் விமல், கபடி போட்டியின்போது ஒருவரைப் பிடிக்க முயன்று அப்படியே கீழே மயங்கி விழும் காட்சி அவருடைய நண்பர்கள் அவர் விளையாடுவதைப் பதிவு செய்த காணொளியில் பதிவாகியுள்ளது. அதைத் தொடர்ந்து அங்கிருந்தவர்கள் விமலை மீட்டு பண்ருட்டி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், விமல் ஏற்கெனவே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் கூறினர். அதைத் தொடர்ந்து, அவருடைய உடல் விழுப்புரம் முண்டியம்பாக்க மருத்துவக் கல்லூரியில் பிரேத பரிசோதனைக்குக் கொண்டு செல்லப்பட்டது. 'இது முதல் முறையல்ல' விளையாட்டு வீரர் ஒருவர் இப்படி விளையாடிக் கொண்டிருக்கும்போதே உயிரிழப்பது இது முதல்முறையல்ல. உலகளவில் இதுபோல் பலமுறை நிகழ்ந்துள்ளது. 1993-ஆம் ஆண்டு, அமெரிக்க கூடைப் பந்து வீரர் ரெஜ்ஜி லூவிஸ், மாசாசூஸட்ஸில் விளையாடிக் கொண்டிருக்கும்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். 2007-ஆம் ஆண்டில், ஸ்பானிய கால்பந்து வீரர் ஆன்டோனியோ புவெர்டா, ஆக்ஸ்ட் 25-ஆம் தேதியன்று லா லிகா ஆட்டத்தின்போது மைதானத்தின் பெனால்டி பகுதியில் மாரடைப்புக்கு உள்ளாகி, 28-ஆம் தேதியன்று உயிரிழந்தார். போலி ஐபிஎல்: ரஷ்ய சூதாட்டக்காரர்களை ஏமாற்றிய குஜராத் கிராமத்தினர் வெள்ளிப்பதக்கம் வென்ற நீரஜ் சோப்ரா – உலக தடகள சாம்பியன்ஷிப்பின் இறுதிச்சுற்று எப்படி நடந்தது? ஃபிபா உலகக்கோப்பை: மைதானங்களைப் பாதுகாக்க ட்ரோன்களை பயன்படுத்த திட்டம் இந்தியாவிலும் கூட 2019-ஆம் ஆண்டு கேரளாவில் நடந்த கால்பந்து போட்டியின்போது ராதாகிருஷ்ணன் தனராஜன் என்ற கால்பந்து வீரர் ஆட்டத்தின்போது மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். விளையாட்டின்போது ஏற்படும் இத்தகைய உயிரிழப்புகளுக்கு என்ன காரணம், அதிலிருந்து தற்காத்துக் கொள்ள என்ன மாதிரியான ஆரோக்கியம் சார்ந்த கவனிப்புகள் தேவை என்பதைத் தெரிந்துகொள்ள விளையாட்டு மருத்துவ நிபுணரான மருத்துவர்.சத்ய விக்னேஷிடம் பேசினோம். "இதய ஆரோக்கியம் மிகவும் முக்கியம்" "இதய ஆரோக்கியம் மிகவும் முக்கியம். பொதுவாக, ஓடும்போதோ அதீத ஆற்றலைச் செலவழித்து விளையாடும்போதோ, அவர்களுடைய இதயம் அதற்கு ஏற்றாற்போல் ஈடுகொடுக்க வேண்டும். இத்தகைய செயல்பாடுகளின்போது இதயத் துடிப்பு மிகவும் வேகமாக இருக்கும். இதயத்துடிப்பு தொடர்ச்சியாக வேகமாக இருக்கையில், ஒருவேளை இதயத்தில் ஏதேனும் பிரச்னை இருந்து கவனிக்காமல் விடப்பட்டிருந்தால் இப்படியான உயிரிழப்பு நிகழ வாய்ப்புண்டு. விளையாட்டின் போது ஒருவர் மயங்கி விழுகிறார் என்றால் அதற்கு குறைசர்க்கரைத்தன்மை (hypoglycemia) தான் பெரும்பாலும் காரணமாக இருக்கும். விளையாடும்போது அதீதமாக வியர்ப்பது, நீர்ச்சத்து குறைவாக இருப்பது, மின்பகுபொருள் (Electrolytes) குறைவாக இருப்பது, குளுகோஸ் முற்றிலுமாகக் குறைவது போன்ற சூழல்களின்போது மயக்கம் வரும். சில நேரங்களில், வெறும் வயிற்றில் சாப்பிடாமல், ஆற்றல் குறைவாக இருக்கும்போது இப்படி நிகழலாம். ஆகையால், உடற்பயிற்சி, விளையாட்டு, சைக்கிளிங் போன்ற எந்தச் செயல்பாட்டிற்கு முன்பும், கார்போஹைட்ரேட் உள்ள செவ்வாழைப் பழம் போன்ற சிற்றுண்டியை எடுத்துக் கொள்வது நல்லது. அதன்மூலம், தொடக்கத்திலேயே ஊட்டச்சத்துகளை எரித்து ஆற்றலை உருவாக்காமல், உடலும் கார்போஹைட்ரேட்டில் இருந்து ஆற்றலை எடுக்கும்," என்று கூறுகிறார். பட மூலாதாரம்,DR.SATHYA VIGNESH உடல் பரிசோதனை பொதுவாக, விளையாட்டுப் போட்டிகளில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கு உடல் பரிசோதனை செய்யப்படும். அத்தகைய பரிசோதனைகளில், "இதய ஆரோக்கியம், ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு போன்றவற்றைக் கண்காணிப்பார்கள். அதுபோக, குறிப்பிட்டு ஏதேனும் பிரச்னை யாருக்காவது அதுகுறித்த பரிசோதனையும் செய்யப்படும். இத்தகைய பொதுவான ஆரோக்கியத்தைத் தான் பார்ப்பார்களே தவிர, இளைஞர்களாக இருப்பதால் மிகவும் ஆழமான பரிசோதனை வழக்கமாக நடக்காது," என்கிறார் மருத்துவர் சத்ய விக்னேஷ். அவரிடம் உடல்ரீதியான குறிப்பிட்ட பிரச்னை இருப்பவர்கள் விளையாட்டில் பங்கெடுக்கக்கூடாது என்று ஏதேனும் கட்டுப்பாடுகள் உண்டா என்பது குறித்துக் கேட்டபோது, "தசைநார் காயங்கள் இருந்தால், அதில் அறுவை சிகிச்சை செய்திருந்தால், குறிப்பிட்ட கால அளவுக்கு பங்கெடுக்கக்கூடாது என்று கூறப்படும். தசைநார் முழுமையாகக் குணமடைய எடுத்துக் கொள்ளும் கால அளவு வரை விளையாட்டுகளில் கலந்து கொள்ள வேண்டாம் என வலியுறுத்தப்படுவார்கள். சிலநேரங்களில், போட்டிகளுக்கு இடையில் இருக்கும்போது இதுபோன்ற பிரச்னை ஏற்பட்டிருக்கும். அந்த நேரத்தில் அவர்கள் முழு போட்டிகளையும் முடிக்க வேண்டியிருக்கும். அப்படியான சூழல்களில், அதற்கான உடனடி சிகிச்சைகளை வழங்குவது, பிசியோதெரபி, பிரேசிங் போன்ற நடவடிக்கைகள் கையாளப்படும். அவற்றின் மூலம், பங்கெடுத்தாக வேண்டிய குறிப்பிட்ட போட்டிகளை மட்டும் முடித்துவிட்டு வரவைத்து, பிறகு முழுமையான சிகிச்சை அளிக்கப்படும். ஆனால், இதயத்தில் ஏதும் பிரச்னை, உயர் ரத்த அழுத்தம் போன்ற பிரச்னைகளைக் கொண்டிருப்பவர்கள் அதிகமாக உடலை வருத்தக்கூடிய விளையாட்டுகளில் பங்கெடுப்பது பரிந்துரைக்கப்படுவதில்லை," என்று கூறினார். திடீர் விளையாட்டு/உடற்பயிற்சிகள் ஆபத்து அதிகமாக உடலை வருத்தி விளையாடும்போது, சிலருக்கு உடலில் நீர்ச்சத்து குறைந்துவிடும். அதிக நீர் அருந்த வேண்டியது அவசியம். உடலில் நீர்ச்சத்து அளவை சமநிலையில் வைக்க வேண்டியது முக்கியம் என்கிறார் மருத்துவர் சத்ய விக்னேஷ். பட மூலாதாரம்,GETTY IMAGES "அதோடு, எப்போதும் விளையாட்டையோ உடற்பயிற்சியையோ தொடங்கும்போது, வார்ம் அப் செய்வதும் இறுதியில் முடிக்கும்போது கூல் டன் பயிற்சிகளைச் செய்வதும் அவசியம். அதைச் செய்வதன் மூலம் சதைகள் காயமடைவது தசைநார் பாதிக்கப்படுவது குறையும்," என்பவர், இதில் ஸ்டிரெச்சஸ் எனப்படும் உடற்பயிற்சிகளைக் கட்டாயமாகச் செய்ய வேண்டும் என்றும் கூறுகிறார். மேலும், "சாஃப்ட்வேர் நிறுவனங்களில் பணியாற்றுவோர் அவ்வப்போது திடீரென ஒன்றாகச் சென்று விளையாடுவார்கள். அப்படி விளையாடும் போதெல்லாம் இத்தகைய பாதிப்புகளைப் பலரும் சந்திக்கிறார்கள். சிலர் மாதக்கணக்கில் விளையாடாமல் இருப்பார்கள். அப்படியிருக்கும் சூழலில், திடீரென ஒரு நாள் அதிகமாக உடலை வருத்தி விளையாடும்போது இத்தகைய பிரச்னைகள் எழும். அதைத் தவிர்ப்பதற்கு இது அவசியம். நம்முடைய வாழ்க்கை முறை, அலுவலகப் பணிகளில் பெருமளவு உட்கார்ந்தே இருக்க வேண்டிய, ஓடியாடிச் செயலாற்றாத நிலைக்கு மாறிவிட்டது. இந்த மாதிரியான வாழ்க்கை முறையில், தசைகள் மிகவும் சுருங்கியிருக்கும். ஒரு விளையாட்டோ அல்லது உடற்பயிற்சியோ செய்யும்போதும் அப்படியே இருப்பதால், நரம்புப் பிடிப்புகள், தசைப் பிடிப்புகள் ஆகியவை ஏற்படும். சிலருக்கு நீண்ட காலத்திற்கு அந்தப் பிடிப்போ வலியோ இருந்து கொண்டேயிருப்பதற்கும் வாய்ப்புகள் உள்ளன. ஸ்டிரெச்சஸ் என்ற உடற்பயிற்சிகளைச் செய்யும்போது, அவற்றைத் தவிர்க்க முடியும்," என்றார். அதோடு, விளையாட்டு வீரர்கள் தொடர்ந்து சமநிலையிலான ஊட்டச்சத்துகளைப் பெறும் வகையில் உணவு முறையைப் பின்பற்றுவது மற்றும் இதயத்தின் ஆரோக்கியத்தைப் பேணுவதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும் என்கிறார் மருத்துவர் சக்தி விக்னேஷ். https://www.bbc.com/tamil/india-62297246
  3. விருத்தாசலத்தில் பிளஸ் டூ மாணவி தற்கொலை - முழு விவரம் 31 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES விருத்தாசலத்தில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி தற்கொலை செய்து கொண்டுள்ளார். சரியாக படிக்க முடியாத மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று அவரது உறவினர்கள் கூறுகின்றனர். கடலூர் மாவட்டம் விருத்தாசலம் ஆயியார் மடத்தை சேர்ந்த தம்பதி கோபி மற்றும் இளவரசி. விருத்தாசலத்தில் உள்ள செல் சர்வீஸ் சென்டரில் கோபி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், இரண்டாவது மகள், விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில், பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று பள்ளிக்குச் சென்ற மாணவி மாதாந்திர தேர்வு எழுதியுள்ளார். தேர்வு எழுதி விட்டு, பள்ளி முடிந்து வீட்டுக்கு வந்த மாணவி மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு சுமார் 9 மணி அளவில், வீட்டில் யாரும் இல்லாத போது, வீட்டில் தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சூழலில் நீண்ட நேரமாகியும் வெளியே வராது மாணவியின் அறைக்கு சென்று பெற்றோர் பார்த்த போது அவர் தற்கொலை செய்திருப்பது தெரியவந்துள்ளது. இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் விரைந்து சென்று, மாணவியின் உடலை மீட்டு கீழே இறக்கி உள்ளனர். பின்னர் மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று போது அவர் உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். அவரது உடலை அடக்கம் செய்வதற்காக, மாணவியின் பெற்றோர் மற்றும் அவரது உறவினர்கள், இறுதிச் சடங்குக்கு ஏற்பாடு செய்தனர். இதற்கிடையே மாணவியின் மரணம் தொடர்பாக தகவலறிந்து வந்த விருத்தாசலம் காவல் துறையினர், இறுதி சடங்குக்காக வைக்கப்பட்டிருந்த மாணவியின் உடலை மீட்டு, உடல் கூராய்வு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். தற்கொலை எண்ணங்கள் ஏற்படுவதாக யாராவது சொன்னால் என்ன செய்வது? தற்கொலை எண்ணத்துக்கான காரணம் என்ன? விடுபடுவது எப்படி? இது குறித்து விருத்தாசலம் காவல் துறையினரை பிபிசி தமிழ் தொடர்பு கொண்டு பேசியது. "மாணவி விருத்தாசலத்தில் உள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்துள்ளார். மாணவி முன்பு நன்றாக படித்ததாகவும், தற்போது சரியாக படிக்கவில்லை என்று மாணவியின் வீட்டில் சில நாட்களுக்கு முன்பு திட்டியுள்ளனர். மேலும் மகளை ஐஏஎஸ் படிக்க வைக்க வேண்டும் என்ற கனவு மாணவியின் பெற்றோருக்கு இருந்துள்ளது. அதனால் மாணவியின் படிப்பு விஷத்தில் அழுத்தம் இருந்ததாக தெரிகிறது. இதற்கிடையே சமீபத்தில் நடந்த தேர்வில் தன்னால் சரியாக எழுத முடியவில்லை என்று அருகே உள்ளவர்களிடம் கூறி கவலையுடன் இருந்துள்ளார். குறிப்பாக கடந்த ஒரு வார காலமாக மன அழுத்தத்தில் இருந்த மாணவி நேற்று வீட்டின் அறையில் தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாகியும் மகள் வெளியே வராததால் மகள் தங்கியிருந்த அறைக்கு அவரது பெற்றோர் சென்று பார்த்தபோது அவர் தற்கொலை செய்து கொண்டிருந்தது தெரியவந்துள்ளது. பின்னர், மாணவியின் உடலை இன்று காலை அடக்கம் செய்ய ஏற்பாடு செய்தனர். ஆனால் ,காவல் துறைக்கு தகவல் தெரிந்த பின்னர் மாணவியின் உடலை மீட்டு விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் உடற்கூராய்வு பரிசோதனை அனுப்பி வைத்தோம்," என்று காவல் துறையினர் தெரிவித்துள்ளனர். மாணவியின் தற்கொலை தொடர்பாக காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் மாணவி தற்கொலை தொடர்பாக அவர் படித்த பள்ளிக்கு எந்த தொடர்பும் இல்லை என இதுவரை நடந்த முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது என்றும் காவல்துறையினர் கூறினர். தற்கொலை எண்ணம் வந்தால் அழைக்க வேண்டிய தொலைபேசி உதவி எண் '104' பட மூலாதாரம்,GETTY IMAGES அப்படிப்பட்ட எண்ணம் வரும்போது, மருத்துவரைத்தான் பார்க்க வேண்டும் என்றில்லை. உங்கள் மீது அக்கறை வைத்துள்ள யாரிடம் வேண்டுமானாலும் பேசலாம். பள்ளிகளில் ஆசிரியர்கள் சிலர் அக்கறையுடன் இருப்பார்கள். வளரிளம் சிறார்கள் மத்தியில் இதனைக் கையாள்வதில் சிக்கல் இருக்கலாம். இதற்காக '104' என்ற உதவி எண் உள்ளது. அதனைத் தொடர்பு கொண்டால் உரிய வழிகாட்டுதல்கள் கிடைக்கும். இதன் அடுத்தகட்டமாக, `மருத்துவரைப் பார்க்க வேண்டிய தருணம் இதுதானா?' என்பது தெரியவரும். இந்த விவகாரத்தில் மனநல மருத்துவரைத்தான் சென்று பார்க்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. உங்கள் குடும்ப மருத்துவரை முதலில் சென்று பாருங்கள். அதன்பிறகு தேவைப்பட்டால் மனநல மருத்துவரிடம் செல்லலாம். அப்போதும் உடனடியாக மருந்துகள் கொடுக்கப்படுவதில்லை. `இதனை வெளியில் சொன்னால் அவமானம்' என நினைப்பதைவிட `உயிர் முக்கியம்' என நினைக்க வேண்டும். `தற்கொலை முடிவு என்பது எவ்வளவு தவறானது' என்பதை அவர்கள் உணர வேண்டிய நிலையை உருவாக்க வேண்டும். https://www.bbc.com/tamil/india-62307011
  4. முருகன் பாடல் | 2022 New Year Murugan Song Tamil | Aaru Padai | Kovai Kamala | Vijay Musicals ஆறு படை வீடும் அருள் வழங்கும் முருகா அருகே நீ ஓடோடி வா மூவிரண்டு முகம் ஜொலிக்க ஆறிரண்டு கரங்களுடன் ஆதரவு தர ஓடி வா
  5. இயக்குநர் வஸந்த் பேட்டி: "எனக்கு நான்தான் வாத்தியார்" வீ. விக்ரம் ரவிசங்கர் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, வசந்த் சாய், திரைப்பட இயக்குநர் பெண்ணை ஆணின் கண்ணுக்கு விருந்தாகக் காட்சிப்படுத்துவது அல்லது பெண்ணை மையமாக வைத்துப் படமெடுப்பதாகச் சொல்லி, நாயகனின் சாகசங்களைத் தானும் செய்கிறவளாக வடிவமைப்பது. இந்த இரண்டைத் தவிர பெண்ணை பெண்ணாகவே காட்டி பெண்ணியம் பேசும் கதைகளைக் கையாளும் வெகு சில இயக்குநர்களில் முக்கியமானவர் இயக்குநர் வஸந்த் சாய். அவரது இயக்கத்தில் வெளியான 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' படமும் அப்படித்தான். வெவ்வேறு காலகட்டங்களை சேர்ந்த மூன்று பெண்களின் மூன்று தனித்தனி கதைகளைச் சொல்லும் ஆந்தாலஜி வகைப் படம் அது. எழுத்தாளர்கள் அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகிய மூவரும் எழுதிய சிறுகதைகளை மையமாக வைத்து இந்தப் படத்தை உருவாக்கியிருக்கிறார் வஸந்த். ஆண்மை, பெண்மை என்று இந்தச் சமூகம் வகுத்து வைத்திருக்கிற கற்பிதங்களை இந்தப் படம் கேள்விக்குட்படுத்துகிறது. எதை ஆண்மை என நாம் கொண்டாடுகிறோமோ அது இவ்வளவு கேவலமானதா என்பதை 'பொட்டில் அடித்தது போல்' இயல்பாகச் சொல்கிறது. 2020ஆம் ஆண்டு வெளியான திரைப்படங்களுக்கான 68-வது தேசிய திரைப்பட விருதுகளுக்குத் தேர்வான படங்கள், 'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' சினிமா ரசிகர்களின் கவனத்தை வெகுவாக ஈர்த்திருக்கிறது. சிறந்த தமிழ் படத்துக்கான தேசிய விருது, சிவரஞ்சனி கதாபாத்திரத்தில் நடித்த லக்‌ஷ்மி பிரியா சந்திரமௌலிக்கு சிறந்த துணை நடிகர் விருது, ஸ்ரீகர் பிரசாத்துக்கு சிறந்த படத்தொகுப்புக்கான விருது என, மூன்று தேசிய விருதுகளை வாங்குகிறது இந்தப்படம். படத்தின் இயக்குநர் வஸ்ந்துடன் பிபிசி தமிழ் நடத்திய நேர்காணலை, கேள்வி பதில்களாக இங்கே வழங்குகிறோம்… தேசிய திரைப்பட விருதுகள்: சூர்யா, அபர்ணா, ஜி.வி. பிரகாஷ், சூரரைப் போற்று, மண்டேலா படங்கள் தேர்வு "5 விருதுகள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை" - சுதா கொங்கரா பிரத்யேக நேர்காணல் சிறந்த தமிழ் படம், சிறந்த துணை நடிகர், சிறந்த படத்தொகுப்பு- மூன்று தேசிய விருதுகள் கிடைத்திருக்கின்றன. இது நீங்கள் எதிர்பார்த்தது தானா? படம் எடுக்கும்போது, இத்தனை விருதுகள் கிடைக்கும் என்று நினைச்சீங்களா? எதிர்பார்க்காமல் இருக்க முடியுமா? கண்டிப்பாக கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பை விட, கண்டிப்பாக கிடைக்க வேண்டும் என்று எதிர்பார்த்தேன். பெண்களை மையப்படுத்தி எடுக்கப்பட்ட இந்தப் படத்திற்கு அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்று நினைத்தேன். இன்னும் அதிகம் பேர் படத்தைப் பார்ப்பார்கள் என்பதால் எதிர்பார்த்தேன். அந்த வகையில், விருதுகள் கிடைத்ததில் மகிழ்ச்சி. பெண்களுக்காக எடுக்கப்பட்ட படத்தை இன்னும் நிறைய பேர் கூடுதலாகப் பார்ப்பதற்கு இந்த விருதுகள் காரணமாக இருக்கின்றன என்பதில் மிக்க மகிழ்ச்சி. இந்த படம் வெளியாகும் முன்பே பல சர்வதேச விருதுகளை வாங்கிக் குவித்திருந்தது. படம் உருவாகும்போது குறிப்பிட்ட பிரிவில், விருது உறுதி என்று நினைத்தீர்களா? அப்படியென்றால் அது எந்த பிரிவு? ஒரு விஷயத்தை தெளிவுபடுத்த விரும்புகிறேன். எனது முதல் படத்தில் இருந்தே, விருதுக்காக படம் எடுப்பதை நான் விரும்புபவனும் அல்ல. அதை நம்புபவனும் அல்ல. நோக்கம் அதில் இருக்கக் கூடாது. செய்வதை முழு ஈடுபாட்டுடன் செய்ய வேண்டும். செடியை வளர்க்க விரும்புபவன், தினமும் அந்தச் செடியைப்பிடுங்கி வளர்கிறதா என்று பார்த்தால், அது வளராது. ஏமாற்றம்தான் மிஞ்சும். எனக்குப் பிடித்ததை எடுக்கிறேன். எனக்குள் ஒரு சவாலை உருவாக்கிக்கொண்டு, அதை எவ்வளவு தூரம் எதிர்கொள்ள முடியும் என்று நானே சோதித்துப் பார்க்கிறேன், அவ்வளவுதான். அதுபோன்ற படைப்புகளை நானே தயாரிப்பதும் அதற்காகத்தான். உங்கள் படத்திற்கான கதைகளை எப்படி தேர்வு செய்கிறீர்கள்? சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்திற்கான கதைத்தேர்வு எப்படி நடந்தது? நான் படத்திற்காக கதைகள் படிக்கவில்லை. கதைகளை எழுதுவதும், படிப்பதும் எனக்குப் பிடிக்கும். எனது அன்றாட நடவடிக்கைள் அவை. இந்தப் படத்திற்காக தேர்வு செய்த இந்த கதைகளும் நான் இப்போது படித்தவை அல்ல. எனது 20 வயதில் படித்திருக்கிறேன், 40 வயதில் படித்திருக்கிறேன், ஒவ்வொரு முறை படிக்கும்போதும் என்னுடைய முதிர்ச்சிக்கு ஏற்ற தாக்கத்தை இந்தக் கதைகள் ஏற்படுத்தின. எனது திருமணத்திற்கு முன் இந்தக் கதைகளை நான் படித்தபோது ஒரு தாக்கம் ஏற்பட்டது. திருமணத்திற்கு பின் படித்தபோது வேறொரு தாக்கம் ஏற்பட்டது. இப்படி, எனக்குள் ஏற்பட்ட தாக்கத்தை படமாக்கினேன். அதை முடிந்தவரை எந்த வகையிலும் சமரசம் செய்துகொள்ளாமல் படமாக்க ஒவ்வொரு முறையும் தொடர்ந்து முயற்சிக்கிறேன். என்னால் முடியுமா என்று நானே செய்து பார்க்கும் முயற்சிதானே தவிர, வேறொன்றுமில்லை. எனது பார்வையில், அப்படிப்பட்ட முயற்சிகளை மேற்கொள்பவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். அந்த வகையில், `வாழ்` படத்தின் இயக்குநர் அருண் பிரபுவை நான் பாராட்டுகிறேன். அந்தப் படமும் இன்னும் கவனிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அருவி என்கிற படத்தைக் கொடுத்த அவர், அதற்கு அடுத்ததாக எடுத்த முயற்சிக்கு எனது பாராட்டுகள். சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும் படத்தின் பிரதான கதாபாத்திரங்களான, சரஸ்வதி, தேவகி, சிவரஞ்சனி மூவரும் காலத்தால் வேறுபட்டாலும் இரண்டாம் பாலினமாக ஒடுக்கப்படுவதில் ஒரே கோட்டில் நிற்கிறார்கள். ஆண்களுடன் வாழும் பெண்கள் அனைவரது நிலையும் இந்த மூன்றில் ஏதேனும் ஒன்றுதானா? அப்படியெல்லாம் நான் சொல்லவில்லை. 'இந்த கேள்வி கேட்டால்' அதுதான் நீங்கள். இன்னும் இதுபோல், கதை சார்ந்தோ, கதாபாத்திரம் சார்ந்தோ என்னென்ன கேள்விகள் யார் யாருக்குத் தோன்றுகிறதோ, அது அவர்களது எண்ணத்தை பிரதிபலிப்பதாக இருக்குமே தவிர, அதை நான் சொல்வதாக ஆகிவிடாது. ஆதே சமயம், அவரவர் எண்ணங்களையும், கருத்துக்களையும் நான் மதிக்கிறேன். ஆனால், நான் நினைத்ததை படத்தில் சொல்லிவிட்டேன். அதுதான் அந்தப் படம். அதில் எல்லாம் இருக்கிறது. ஜெயகாந்தன் அருமையாகச் சொல்வார், ``கதையில் சொல்லாததையா நீங்கள் கேட்கும்போது சொல்லப் போகிறேன்`` என்று. அப்படித்தான் அது. உங்கள் முதல் படமான கேளடி கண்மணி, ஆசை, அப்பு, ரிதம், சத்தம் போடாதே, நேருக்கு நேரில் 'அண்ணி' கதாபாத்திரம், பூவெல்லாம் கேட்டுப்பார் படத்தில் நாயகனின் 'தாயார்' கதாபாத்திரம் என, பெண்களுடைய உளவியல் சார்ந்த சிரமங்களை ஒவ்வொரு முறையும் இவ்வளவு அழுத்தமாக தொடர்ந்து பதிவு செய்வதற்கான காரணம் என்ன? நான் அதை கவனித்ததுதான் காரணம். பெண்களின் வாழ்க்கையோ, நிலையோ அப்படி இல்லை என்று யாரும் சொல்ல முடியாதே… உங்கள் அம்மாவைப் பற்றிய காட்சிகள்தான் அவை, என் அம்மாவை பற்றிய காட்சிகள்தான் அவை. தினமும் காலையில் எழுந்து குழந்தைகளை கிளப்பி பள்ளிக்கூடத்திற்கு அனுப்புவது, கணவர் வேலைக்குச் செல்லும்வரை அவருக்கு தேவையானதைச் செய்வது, வீட்டு வேலைகளை கவனிப்பது, பெரியவர்களை கவனிப்பது என, இதிலேயே அவர்கள் சுழல்வதைப் பார்க்கையில், இதில் ஏதோ ஒன்று இருக்கு. காட்சிப்படுத்த வேண்டும் என்று எனக்கு தோன்றியது. எடுத்தேன், எடுத்துக்கொண்டிருக்கிறேன். அதில் கூட கைத்தட்டல்கள் வாங்க முடிகிறதே… இந்தப் படத்தில் கூட, இறுதிக்காட்சிக்கு முன் சிவரஞ்சனிக்கு கிடைத்த கைத்தட்டல்களை அப்படித்தான் நான் பார்க்கிறேன். திடீரென ஆந்தாலஜி பக்கம் திரும்பியது ஏன்? இந்தக் கதையை ஆந்தாலஜியாதா எடுக்கணும்னு நினைச்சதுக்கு காரணம் என்ன? எல்லாத்தையும் முயற்சி செய்யுறது எனக்குப் பிடிக்கும். இந்தக் கதைகளை இணைத்து ஹைபர்லிங்க் படமாகக் கூட எடுத்திருக்க முடியும். நவீனமாகவும் கொடுத்திருக்க முடியும். அதையெல்லாம் தாண்டி, இதை ஒரு கிளாசிக் சினிமாவாக உருவாக்க வேண்டும் என்று நினைத்தேன், செய்தேன். அப்படிச் செய்யவேண்டும் என்று எனக்குள் இருந்த பிடிவாதம்தான் அதைச் செய்ய வைத்தது. இன்னும் சொல்லப்போனால், ஒரே கதையாகச் செல்வதைவிட, இந்த விஷயத்தை 3 கதைகளில் சொல்லும்போது தாக்கம் அதிகமாக இருக்கும் என்று நம்பினேன். அதோடு, எனக்குப் பிடித்த மூன்று எழுத்தாளர்களின் கதைகளும் கூட. அசோகமித்ரன், ஆதவன், ஜெயமோகன் ஆகிய மூன்று பேரின் கதைகளைத் தழுவிய திரைக்கதைதான் சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும். இந்த மாதிரி சிறுகதைகள், இலக்கியங்கள மெயின் ஸ்ட்ரீம்க்காக ஒரு முழுநீள படமா காட்சிப்படுத்துறதுல என்னென்ன சவால்கள் இருப்பதாக நினைக்கிறீர்கள்? முழு நீள படமான்னு கேட்டால் இல்லை… காட்சிப்படுத்துறதுனாலே சவால்தான். ஏனென்றால் அது வேறு ஒருவர் எழுதிய கதை. இன்னொருவரின் கதையை காட்சிப்படுத்துவது என்றாலே சவால்தானே. என்னைப் பொறுத்தவரை, என்னால் எழுதாமல் படமெடுக்க முடியாது. ஒரு ரைட்டர் டைரக்டர் ஆகத்தான் என்னை நான் பார்க்கிறேன். ஆனால் ஒரு கட்டத்தில் பிடித்த கதைகளை எடுக்கத் தோன்றியது. என்னை கேள்வி மேல் கேள்வி கேட்டு, ஒரு விஷயத்தை செய்யத்தூண்டுவது நானேதான். எனக்கு நானே வாத்தியார் என்கிற வகையில், எனக்குப் பிடித்த கதை படமாக வரவில்லை என்றால், என்னை நானே ஏன் என்று கேட்டுக்கொள்வதுண்டு, கோபப்படுவதும் கூட உண்டு. அந்தக் கேள்விக்கான விடையாகத்தான் படித்த பிடித்த கதைகளை எடுக்கிறேன். அதையும் பெர்பெக்டாக எடுக்க வேண்டும் என்று நானே என்னை வற்புறுத்துகிறேன். பெர்பெக்ஷன் என்பது என்னைப்பொறுத்தவரை பெர்சப்ஷன் தான். யாராவது ஒருவருக்கு அது புரியும். அந்த ஒருவருக்காக பெர்பெக்ஷன் அவசியப்படுகிறது. உதாரணத்திற்கு கேளடி கண்மணி படத்தை கூறலாம். மொத்த கதையையும் இரண்டே ஷாட்டில் சொல்லியிருப்பேன். அதை நான் சொன்னால்தான் பலருக்குப் புரியும். அனாதை ஆசிரமத்திற்குச் சென்ற குழந்தைய அழைத்துவர எஸ்.பி.பி-யும், ராதிகாவும் ஒரு குடையில் செல்வார்கள். வரும்போது குழந்தையும், எஸ்.பி.பி-யும் மட்டும் குடைக்குள் இருப்பார்கள், ராதிகா தனியாக நிற்பார். யாராவது இருவர் மட்டுமே அந்தக் குடையில் இருக்க முடியும், இதுதான் அந்தப் படத்தின் மொத்தக் கதை. இதைச் செய்ய வேண்டும் என்று யாரும் என்னை கேட்கவில்லை. நானும் சொல்லவில்லை. ஆனால், ஒரு மேடையில் இதைக் குறிப்பிட்டுப் பேசினார் பாரதிராஜா. அந்தத் தருணம்தான் எனக்குத் தேவைப்பட்டது. ஓடிடி தளங்கள் அதிகரிக்கத் தொடங்கியதில் இருந்து ஆந்தாலஜி வகை படங்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கத் தொடங்கியிருக்கிறது. இதை எப்படி பார்க்கிறீர்கள்? ஒவ்வொருவருக்கும் ஒன்னொன்னு பிடிக்கும். அதில் ஆந்தாலஜி வகை என்பதும் ஒன்று, அவ்வளவுதான். இதை நல்ல விஷயமாகத்தான் நான் பார்க்கிறேன். நான் தனியாக மூன்று கதைகளை எடுத்திருக்கலாம். ஆனால், இந்த பார்மட்டில், நான்கைந்து பேர் சேர்ந்து ஆளுக்கொரு கதையாக படமெடுக்கும் வாய்ப்புகள் இருக்கின்றன. குறைந்த பொருட்செலவில் எடுக்க முடிகிறது. ஆனால், குறும்படத்திற்கும் ஆந்தாலஜிக்குமான வித்தியாசத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். ஆளுக்கொரு ஷார்ட்பில்ம் பண்ணா ஆந்தாலஜி என்று எண்ணிவிடக் கூடாது. அந்தக் குறுங்கதையை எந்தளவுக்கு எபக்டிவ்வா சொல்ல முடியும் என்பதில் கவனம் செலுத்த வேண்டு. அப்போதுதான் சினிமாவின் தரத்தைப் பராமரிக்க முடியும். மூன்று தசாப்தங்களை கண்ட இயக்குநர் நீங்கள்… இத்தனை ஆண்டுகளில் தமிழ் சினிமாவின் வளர்ச்சியை எப்படிப் பார்க்கிறீர்கள்? உங்கள் பார்வையில் வளர்ச்சி என்றால் என்ன? நன்றாகவே வளர்ந்திருக்கிறது. வித்தியாசமான கதைகள் சொல்வதிலும், நம்ம ஊர் கதைகளைச் சொல்வதிலும் பலர் கவனம் செலுத்தி வருவது ஆரோக்கியமான விஷயம்தான். அதே சமயம், சினிமாத்துறை தொழில்நுட்ப ரீதியில் எந்தளவுக்கு வளர்ச்சி அடைந்திருக்கிறதோ, அதற்கு ஈடுகொடுத்து, அதையெல்லாம் பயன்படுத்தி, அதன் மூலம் வித்தியாசமான கதைகளையும், நம்ம ஊர் கதைகளையும் சொல்வதில் கவனம் செலுத்த வேண்டும். https://www.bbc.com/tamil/arts-and-culture-62294123
  6. ஆணுறுப்பில் குரங்கம்மை புண்கள்: ' தீயில் இருப்பது போல் இருக்கும்' - பாதிக்கப்பட்ட பிரேசில் மனிதரின் அனுபவம் ஜூலியா ப்ரான் பிபிசி நியூஸ் பிரேசில் 25 ஜூலை 2022, 07:46 GMT பட மூலாதாரம்,GETTY IMAGES 2022 ஜூலை மாதம் நிலவரப்படி, உலகம் முழுவதும் 15,000 க்கும் மேற்பட்டவர்களுக்கு குரங்கம்மை நோய் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்று உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் அமெரிக்க நோய் கட்டுப்பாட்டு மையங்கள் (CDC) தெரிவிக்கின்றன. உலக சுகாதார அவசரநிலை என உலக சுகாதார அமைப்பு WHO வகைப்படுத்த வேண்டுமா என்று விவாதிக்க குரங்கம்மை நோய் நிபுணர்கள் வியாழக்கிழமை சந்தித்தனர். இதன்பிறகு, குரங்கம்மை பாதிப்பை பொது சுகாதார அவசரநிலையாக உலக சுகாதார அமைப்பு அறிவித்திருக்கிறது. சாவோ பாலோவில் வசிக்கும் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவரான தியாகோ, அதிக காய்ச்சல், சோர்வு, நடுக்கம் மற்றும் உடல் முழுவதும் புண்கள் உள்ளிட்ட அறிகுறிகளுடன் உள்ளூர் மருத்துவமனைக்குச் சென்ற பிறகு, அவர் குரங்கம்மை பாதிக்கப்பட்டவர்களுள் ஒருவர் என்பதை அறிந்தார். ஆனால், அவரது ஆணுறுப்பு பகுதியில் வலி, வீக்கம் மற்றும் எரியும் உணர்வு இருப்பதே அவரதுமுக்கிய பிரச்னை. அந்த உறுப்பில் குறைந்தது ஒன்பது தோல் புண்கள் தோன்றின. "இது மிகவும் வலிக்கும்; அரிப்பு எடுக்கும்," என்று அவர் பிபிசி நியூஸ் பிரேசிலிடம் கூறினார். "எல்லா பாகங்களும் மிகவும் வீங்கியிருக்கிறது. சில சமயங்களில் அது தீயில் எரிவது போல் இருக்கும்." பெரியம்மை பாதிப்பு ஏற்படுத்தும் வைரஸால்தான் குரங்கம்மையும் ஏற்படுகிறது, ஆனால் பெரியம்மை மிகவும் குறைவான தீவிரத்தன்மை கொண்டது. இது குரங்கு, எலி அல்லது அணில் போன்ற பாதிக்கப்பட்ட விலங்கிலிருந்து மனிதர்களுக்குப் பரவும். மனிதனிடமிருந்து மனிதனுக்கு பரவும் வாய்ப்பு குறைவாகவே உள்ளது. ஆனால் பாதிக்கப்பட்ட நபருடன் யாராவது நெருங்கிய தொடர்பில் இருக்கும்போது அப்படி ஏற்படலாம். தோலில் கீறல், சுவாசக்குழாய், கண்கள் மற்றும் வாய் வழியாக இந்த தொற்று பரவுகிறது. குரங்கம்மை பாதிக்கப்பட்ட ஒருவர் பயன்படுத்தும் ஆடைகள், படுக்கை அல்லது துண்டுகளைத் தொடுவதும் நோய் பரவும். குரங்கம்மை பாதிப்பு ஏற்பட்டவர்கள் எப்படி உணர்வார்கள்? பட மூலாதாரம்,UKHSA படக்குறிப்பு, படிப்படியாக ஏற்படும் குரங்கம்மை புண் தியாகோவின் அறிகுறிகள் ஜூலை 10ம் தேதி அன்று தொடங்கியது. "முதலில் நான் கடுமையான குளிரை உணர்ந்தேன், அதைத் தொடர்ந்து அதிக காய்ச்சல், தலைவலி மற்றும் பொதுவாக ஏற்படும் அசெளகரியம் ஏற்பட்டது. என் உடல் முழுவதும் நொறுங்கியதைப் போல் உணர்ந்தேன்," என்று அவர் கூறுகிறார். "இது காய்ச்சலாகவோ அல்லது கோவிட் -19ஆகவோ இருக்கலாம் என்று நான் நினைத்தேன், ஆனால் அடுத்த நாள், நான் குளிக்கும்போது, என் முதுகிலும் ஆண்குறியிலும் புண்கள் இருப்பதை முதலில் கவனித்தேன்." அப்போது முதல், தியாகோ தனது கால்கள், தொடைகள், கை, வயிறு, மார்பு, முகம் மற்றும் ஆணுறுப்பில் புண்கள் இருப்பதைப் பார்த்தார். "இது கிட்டத்தட்ட வீங்கிய, வலிமிகுந்த பருக்கள் போன்றது," என்று அவர் கூறுகிறார். ஒரு வாரத்திற்கு முன்பு அவர் தொடர்பு கொண்ட நண்பருக்கு குரங்கம்மை பாதிக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டதை அடுத்து, அறிகுறிகள் தென்பட்ட மூன்றாவது நாளில் அவர் மருத்துவமனைக்குச் சென்றார். ரத்த பரிசோதனையில் அவருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. அவர் பாலியல் ரீதியாக பரவும் நோய்த்தொற்றுகளுக்கான பரிசோதனை மேற்கொண்டார். அது நெகட்டிவ் என்று வந்தது. ""மருத்துவமனைக்கு செல்ல எனக்கு சில நாட்கள் பிடித்தது. ஏனென்றால் வலி மிகவும் கடுமையானதாக இருந்ததால், ஆடைகளை அணிய முடியாமல் இருந்தது. . கார் பயணம் கூட வலியையும் வீக்கத்தையும் மிகவும் மோசமாக்கியது. "மருத்துவமனையில், மருத்துவர்களால் பரிந்துரைக்கப்பட்ட அழற்சி எதிர்ப்பு, வலி மருந்து மற்றும் ஒரு மயக்க மருந்து, இது எரிச்சல் ஏற்படும் உணர்வை போக்கியது" என்கிறார். அந்த மருத்து உதவுகிறது. ஆனால் நான்கு மணி நேரம் கழித்து, அது வேலை செய்வது நின்றுவிடும் மற்றும் வலி மீண்டும் ஏற்படும்," என தியாகோ மேலும் கூறுகிறார். அவரும் அவரது நண்பரும் சமீப காலமாக பிரேசிலை விட்டு வெளியே வரவில்லை. "நான் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்தவுடன், முந்தைய சில நாட்களில் நான் தொடர்பு கொண்ட நண்பர்களை அழைத்து, எனக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதை பற்றி அவர்களிடம் கூறினேன்," என்று அவர் கூறுகிறார். பாதிக்கப்பட்டவர்கள் எதிர்கொள்ளும் பிற சவால்கள் பட மூலாதாரம்,REUTERS படக்குறிப்பு, காங்கோவில் 1996 முதல் 1997 வரை குரங்கம்மை பரவியது இந்த போராட்டங்களுடன், தியாகோ மருத்துவமனையில் தான் கடினமான தருணங்களைச் சந்தித்ததாக கூறுகிறார். "புண்களை எவ்வாறு சுத்தம் செய்வது, எவ்வளவு காலம் நான் நோய்வாய்ப்பட்டிருப்பேன் அல்லது எப்போது தனிமைப்படுத்தலில் இருந்து வெளியே வர முடியும் என்பது பற்றி எனக்கு எந்த தகவலும் தரவில்லை. இந்த தகவலை நான் இணையத்தில் பார்க்க வேண்டும் அல்லது மருத்துவ நண்பர்களிடம் கேட்க வேண்டும்," என்று அவர் கூறுகிறார். "குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிறப்பு மையம் எதுவும் இல்லை. நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைக்குள் நுழைந்து சுதந்திரமாக நடமாடுகிறார்கள். இந்த சூழ்நிலையை சமாளிக்க அவர்கள் தயாராக இருப்பதாக நான் உணரவில்லை" என்று தியாகோ மேலும் கூறுகிறார். டாக்டர்கள் மற்றும் செவிலியர்கள் "முரட்டுத்தனமாகவும், அவமதித்தாகவும் அவர் குறிப்பிட்டார். "நான் சென்ற மருத்துவமனையில் எல்லா இடங்களிலும், நான் எச்.ஐ.வி பாசிட்டிவ்வா அல்லது எனக்கு வேறு ஏதேனும் பாலியல் ரீதியாக தொற்று இருக்கிறதா என்று கேட்கப்பட்டது." என்கிறார். குரங்கம்மையை பொது சுகாதார அவசரநிலையாக அறிவித்தது உலக சுகாதார அமைப்பு இந்தியாவில் குரங்கு அம்மை பாதிப்புக்கு முதலாவதாக இலக்கான கேரளா இளைஞர் டெல்லியில் ஒருவருக்கு குரங்கம்மை: எப்படி பரவுகிறது? சிகிச்சை, அறிகுறிகள் என்ன? எல்.ஜி.பி.டி.க்யூ (LGBTQ) சமூகத்தில் உள்ளவர்களிடையே இந்த நோய் அதிகம் பரவுவதாக ஒரு கூற்று இருப்பதால் அது தொடர்பாக நான் அவமானப்படுத்தப்பட்டேன். உலக சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, ஆண்களுடன் பாலியல் உறவு கொள்ளும் ஆண்களில் பாலியல் சுகாதார மருத்துவமனைகள் மூலம் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. ஆனால், பாதிக்கப்பட்ட ஒருவருடன் நீங்கள் தொடர்பு கொண்டால் யாருக்கும் இந்த நோய் வரக்கூடும் என்று இந்த அமைப்பு எச்சரிக்கிறது. பிரிட்டன் மற்றும் ஐரோப்பாவில் சமீபத்திய பாதிப்புகளில் "குறிப்பிடத்தக்க விகிதத்தில்" தன்பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் மற்றும் இருபாலின ஆண்களிடம் கண்டறியப்பட்டுள்ளன. ஆகவே, அறிகுறிகளைப் பற்றி எச்சரிக்கையாக இருக்கவும், தேவைப்பட்டால் உதவியை நாடவும் நாங்கள் அவர்களுக்கு குறிப்பாக அறிவுறுத்துக்கிறோம்," என்று பிரிட்டன் சுகாதார பாதுகாப்பு நிறுவனம் கூறியுள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குரங்கம்மை வைரஸ் குரங்கம்மை பற்றி பொதுவாக மத்திய ஆப்பிரிக்கா மற்றும் மேற்கு ஆப்பிரிக்காவில் மேலும் குறிப்பாக மழைக்காடு பகுதிகளில் காணப்படுகிறது. அடர்ந்த காடுகளைக் கொண்ட காங்கோ ஜனநாயகக் குடியரசில், இந்த ஆண்டு மட்டும் 1,200 க்கும் மேற்பட்ட பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும் 2022 மே 1ம் தேதி வரை 57 இறப்புகள் பதிவாகியுள்ளன என்ற உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. வைரஸின் இரண்டு முக்கிய விதங்கள் உள்ளன. அவை மேற்கு ஆப்பிரிக்க மற்றும் மத்திய ஆப்பிரிக்க இருப்பதாக அறியப்படுகிறது, இது மேற்கு ஆப்பிரிக்காவில் இருந்து வரும் பாதிப்பு சற்றே வலு குறைந்தது. இது இப்போது உலகின் பிற பகுதிகளில் பரவுகிறது. வழக்கத்திற்கு மாறாக, இந்த பிராந்தியத்திற்கு எந்த பயண இணைப்புகளும் இல்லாத நிலையில், அதிக எண்ணிக்கையிலான மக்கள் ஆப்பிரிக்காவிற்கு வெளியே குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதாவது வைரஸ் இப்போது சமூகத்தில் பரவுகிறது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, குரங்கம்மை காரணமாக ஏற்பட்ட தோல் புண் பிரிட்டன் ஹெல்த் செக்யூரிட்டி ஏஜென்சி கூறுகையில், தங்களுக்கு நோய்த்தொற்று ஏற்படக்கூடும் என்று கவலைப்படுபவர்கள் தங்கள் உள்ளூர் பாலியல் சுகாதார கிளினிக்கைத் தொடர்பு கொள்ள வேண்டும். ஆனால் வருகைக்கு முன்னதாக அழைக்கவும் அல்லது மின்னஞ்சல் செய்யவும்", என தெரிவிக்கிறது. நோய்த்தொற்று ஏற்பட்டவர்கள் அறிகுறிகள் இருக்கும் போது உடலுறவு கொள்ள வேண்டாம் என்றும், நோய்த்தொற்று ஏற்பட்ட எட்டு வாரங்களுக்கு முன்னெச்சரிக்கையாக ஆணுறைகளைப் பயன்படுத்தவும் அறிவுறுத்தப்படுகிறது. வைரஸின் பெரும்பாலான பாதிப்புகள் மிதமானவை. சில சமயங்களில் சின்னம்மை போலவே இருக்கும். மேலும் சில வாரங்களில் அவை தானாகவே மறைந்துவிடும். ஆனால், குரங்கம்மை சில சமயங்களில் மிகவும் கடுமையானதாக இருக்கலாம். உலக சுகாதார அமைப்பு இதுவரை பதிவு செய்யப்பட்ட அனைத்து இறப்புகளும் ஆப்பிரிக்க நாடுகளில் பதிவு செய்யப்பட்டவை. நோய்த்தொற்றுக்குப் பிறகு, முதல் அறிகுறிகள் தோன்றுவதற்கு வழக்கமாக 5 முதல் 21 நாட்கள் ஆகும். தோல் பகுதியில் வெடிப்பு தோன்றும், பொதுவாக முகத்தில் தொடங்கி பின்னர் உடலின் மற்ற பகுதிகளுக்கு, குறிப்பாக கைகள் மற்றும் கால்களில் பரவுகிறது. அடிக்கடி மிகவும் எரிச்சலூட்டும், வலிமிகுந்ததாக இருக்கும் இந்த வெடிப்பு , மாறும். அது வெவ்வெறு நிலைகளுக்கு செல்லும், - சிக்கன் பாக்ஸ் போன்றது - ஒரு சிரங்கு உருவாவதற்கு முன், பிறகு அது விழும். இந்த தொற்று பொதுவாக 14 முதல் 21 நாட்களுக்குப் பிறகு முடிவடைகிறது. https://www.bbc.com/tamil/science-62283889
  7. திருவள்ளூர் பள்ளி மாணவி சந்தேக மரணம்: சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றம் - முழு விவரம் 7 மணி நேரங்களுக்கு முன்னர் தமிழ்நாட்டின் திருவள்ளூரில் உள்ள பள்ளி மாணவி உயிரிழந்தது தொடர்பான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ளது. மாணவியின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக உள்ளூர் காவல் நிலையம் கூறியதைத் தொடர்ந்து மாநில குற்றப்பிரிவு குற்றப்புலனாய்வுத்துறை விசாரணை மாற்றப்பட்டுள்ளதாக காவல்துறை துணைத் தலைவர் (டிஐஜி) சத்ய பிரியா தெரிவித்துள்ளார். திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கீழச்சேரியில் அரசு உதவி பெறும் தனியார் மகளிர் மேல் நிலைப்பள்ளி உள்ளது. திருவள்ளூர் மாவட்டத்தை சார்ந்த பல்வேறு கிராமங்களில் இருந்து 600க்கும் மேற்பட்ட மாணவிகள் இங்கு படித்து வருகின்றனர். இதில் திருத்தணி அருகே தெக்களூர் கிராமத்தைச் சேர்ந்த விவசாய தம்பதியின் மகள் இந்த பள்ளியின் விடுதியில் தங்கி பன்னிரண்டாம் வகுப்பு படித்து வந்தார். இந்த நிலையில், இன்று காலை வழக்கம் போல விடுதியில் இருந்து பள்ளிக்கு புறப்பட்ட மாணவி, மற்ற மாணவிகள் காலை உணவு அருந்தச் சென்ற நேரத்தில் தமது அறையில் தூக்கிட்ட நிலையில் கிடந்தார். இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் அளித்த தகவலின் அடிப்படையில் சம்பவம் இடத்துக்கு வந்த போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி திருவள்ளூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் உடற்கூராய்வு செய்ய அனுப்பி வைத்தனர். இதற்கிடையே, மாணவி உடல்நிலை பாதிக்கப்பட்டதால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கிறார் என்று மட்டுமே தகவல் கூறப்பட்டதாக மாணவியின் உறவினர்கள் தெரிவித்தனர். அவரது நிலை தொடர்பாக பெற்றோருக்கு முறைப்படி பள்ளி நிர்வாகம் தெரியப்படுத்தவில்லை என்றும் கூறப்பட்டது. இதையடுத்து மாணவியின் இறப்பில் சந்தேகம் உள்ளதாகக் கூறி அவரது சொந்த ஊரான தெக்கலூரில் மாணவியின் உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் சாலைகளில் கற்களால் தடுப்புகளை அமைத்து அரசு பேருந்துகளை சிறைப் பிடித்தனர். கள்ளக்குறிச்சி மாணவி இறுதி சடங்கு: ஊர் மக்கள் பங்கேற்பு, வெளியூர் ஆட்களுக்கு அனுமதி மறுப்பு அரியலூர் மாணவி மரணம்: குழந்தைகள் ஆணையம் கூறும் புதிய புகார்கள் இந்த நிலையில், மாணவி உயிரிழந்த தகவல் அவரது சொந்த கிராமத்தில் பரவியதை தொடர்ந்து அவரது உறவினர்களும் கிராமத்தினரும் பள்ளி வளாகத்தை நோக்கி வரத் தொடங்கினர். இதையடுத்து முன்னெச்சரிக்கையாக காஞ்சிபுரம், ராணிப்பேட்டை, திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் இருந்து போலீசார் பெருமளவில் கிராமத்தில் குவிக்கப்பட்டனர். வட்டார வருவாய்த்துறை அலுவலர் அர்ஷத் பேகம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் சாரதி ஆகியோர் மறியலில் ஈடுபட்டவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பள்ளிக்கு விடுமுறை அறிவிப்பு இதற்கிடையே, மாணவி உயிரிழந்ததைத் தொடர்ந்து அப்பபள்ளிக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் மாணவியுடன் தங்கி இருந்த சக மாணவிகள், விடுதி காப்பாளர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்யப் பிரியா மற்றும் திருவள்ளூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கல்யாண் நேரடியாக தனித்தனியே விசாரணை மேற்கொண்டார்கள். மாணவி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து விடுதியில் தங்கிப் படிக்கும் மற்ற மாணவிகளின் பெற்றோரும் பல்வேறு கிராமத்திலிருந்து அங்கு வந்தனர். யாரையும் பள்ளி வளாகத்துக்குள் போலீஸார் அனுமதிக்கவில்லை. இதனால் சக மாணவிகளின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது மேலும் பதற்றத்தை ஏற்படுத்தியதால், விடுதியில் தங்கியிருந்த மற்ற சக மாணவிகளை பெற்றோருடன் விடுதி நிர்வாகம் அனுப்பி வைத்ததது. சிபிசிஐடிக்கு மாற்றம் இந்த நிலையில், செய்தியாளர்களை சந்தித்த காஞ்சிபுரம் சரக டிஐஜி சத்ய பிரியா, சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி பள்ளிகளில் ஏதாவது மாணவர்கள் உயிரிழக்க நேர்ந்தால் அந்த வழக்கை உடனடியாக சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும். அதன் அடிப்படையில் மாணவி உயிரிழந்த வழக்கை முதல் கட்டமாக சந்தேக மரண வழக்காக பதிவு செய்து இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றுகிறோம். இதுவரை நடத்திய விசாரணையில் மாணவியை மாடியில் இருந்து தள்ளியோ மாடியில் இருந்து விழுந்ததாகவோ தெரிய வரவில்லை. அதற்கான காயங்களோ வேறு அறிகுறியோ அவரது உடலில் இல்லை. தூக்கிட்டதாலேயே அவர் இறந்துள்ளார். சிபிசிஐடி விசாரணைக்கு பிறகே மற்ற விவரங்கள் தெரிய வரும்," என்று கூறினார். https://www.bbc.com/tamil/india-62292201
  8. பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? பாம்புகள் பழிவாங்குமா? பிரஷாந்த் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பாம்பு கடித்தால் உடனே நாம் என்ன செய்ய வேண்டும்? பாம்புகளால் பழிவாங்க முடியுமா? பாம்புக்கடிக்கான சிகிச்சைமுறைகள் என்ன? இந்த கேள்விகளுக்கான பதில்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம். பாம்புக்கடியால் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் ஏற்படுகின்ற உயிரிழப்பில் பாதி எண்ணிக்கை இந்தியாவில் பதிவாகிறது. 2017-ம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு, பாம்புக்கடியை புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களின் பட்டியலில் முன்னிலை படுத்தியுள்ளது. இதற்கு சில முக்கியமான காரணங்கள் உண்டு. இறப்புகளைப் பற்றிய போதுமான தரவுகள் இல்லாமை, பாம்புக்கடியால் பாதிக்கப்பட்டவர்வகள் பெரும்பாலும் கட்டுக்கதைகளை நம்பி தவறான சிகிச்சைகளை எடுப்பது, பாம்பு விஷ எதிர்ப்பு மருந்துகளின் பற்றாக்குறை. பாம்புக்கடி விவகாரத்துல இது போன்று பல்வேறு சவால்கள் உண்டு. இந்தியாவில் பாம்புக்கடியால் எத்தனை பேர் உயிரிழக்கின்றனர்? ஒவ்வொரு ஆண்டும் உலகளவில் ஐம்பது லட்சம் பேர் பாம்புக்கடியை எதிர்கொள்வதாகவும் அதில் கிட்டத்தட்ட இருபத்து ஏழு லட்சம் விஷமுள்ள பாம்புக்கடிகள் என்றும் உலக சுகாதார அமைப்பு மதிப்பிட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் 81 ஆயிரம் முதல் ஒரு லட்சத்து 38 ஆயிரம் பேர் வரை பாம்புக்கடியால் இறப்பதாக பல்வேறு அறிக்கைகள் மூலமாக தெரிய வந்துள்ளது. பெரும்பாலான பாம்புக்கடிகள் பதிவு செய்யப்படுவதே இல்லை, ஏனெனில் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவம் அல்லாத சிகிச்சை முறையை தேடி செல்கிறார்கள் அல்லது போதுமான மருத்துவ வசதிகள் அவர்களுக்கு கிடைப்பது இல்லை. இந்தியாவில் இரண்டாயிரமாவது ஆண்டு முதல் 2019-வது ஆண்டு வரை 12 லட்சம் பேர் பாம்புக்கடியால் இறந்திருப்பதாக 2020-ம் ஆண்டு ஜூலை மாதம் வெளியான ஒரு ஆய்வறிக்கை சொல்கிறது. அதாவது சராசரியாக ஒவ்வொரு ஆண்டும் 58 ஆயிரம் உயிர்கள் பாம்புக்கடியால் பறிபோகிறது. இந்தியாவில் நிலவும் மூட நம்பிக்கைகள் என்ன? பாம்புகள் மற்றும் பாம்புக்கடி தொடர்பாக இந்தியாவில் பல்வேறு மூடநம்பிக்கைகள் இருப்பதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். கடவுள் வழிபாடு பட மூலாதாரம்,GETTY IMAGES பொதுவாக இந்தியாவில் உள்ள சில சமூகங்கள் பாம்புகளை கடவுளாக வழிபடுகிறார்கள். தங்களின் விவசாய நிலங்களை பாதுகாப்பதற்கு கடவுள் பாம்புகளை அனுப்பி வைத்துள்ளதாக பழங்குடி சமூகங்கள் நம்புகிறார்கள். ஆணுறுப்பில் குரங்கம்மை புண்கள்: ' தீயில் இருப்பது போல் இருக்கும்' - பாதிக்கப்பட்ட பிரேசில் மனிதரின் அனுபவம் சூரிய கிளர்ச்சி என்றால் என்ன? இதனால் பூமிக்கு ஆபத்தா? மேலும், பாம்புகள் தொடர்பாக இந்த சமூகங்கள் மத்தியில் நிலவும் சில நம்பிக்கைகள் பாம்புக்கடி உயிரிழப்புகள் அதிகரிப்பதற்கு காரணமாக இருப்பதாக இது தொடர்பான ஆய்வில் ஈடுபட்ட மருத்துவர் ராஹு கஜ்பியே தெரிவிக்கிறார். பாம்புகள் பழிவாங்குமா? பாம்புகள் பழிவாங்குவதற்காக மனிதர்களை தேடி வந்து கொல்லும் என்று பல இந்திய சினிமாக்களில் காட்டப்பட்டதுண்டு. இது ஒரு மோசமான கட்டுக்கதைனு ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். முக்கியமாக ஒருத்தர் ஒரு நாகப்பாம்பை அடித்து கொன்றுவிட்டால் அந்த பாம்பின் துணை அடித்து கொன்னவர தேடி வந்து பழிவாங்கும்னு பழங்குடி சமூகங்கள் நம்புவதாகவும், ஆனால் இது மோசமான கட்டுக்கதைனு மருத்துவர் கஜ்பியே தெரிவிக்கிறார். இது போன்ற சில மூட நம்பிக்கைகள் மற்றும் நிறுவப்படாத மருத்துவ சிகிச்சைகள் இந்தியாவின் சில இடங்களில் இன்னும் கடைபிடிக்கப்படுகிறது. கடிபட்ட இடங்களில் வாய் வைத்து உறிதல் இந்தியாவின் சில இடங்கள்ள பாம்பு கடித்தால் மருத்துவர்களை பார்க்காமல் மந்திரவாதிகளை பார்ப்பதுண்டு. YouTube பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 அது மட்டும் அல்லாமல் முதலுதவி செய்வதாக நினைத்து மந்திரங்களை ஓதுவது மற்றும் நிறுவப்படாத மூலிகைகளை பயன்படுத்தும் பழக்கமும் பரவலாக உண்டு. பாம்புக் கடித்த இடத்தை அறுத்துவிட்டு வாய் வைத்து உறிஞ்சி விஷத்தை எடுக்குறமாதிரி பல திரைப்படக் காட்சிகள் வெளிவந்துள்ளது. ஆனால் இந்த மாதிரி நிச்சயம் செய்யக்கூடாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? இந்தியாவில் பதிவாகும் பாம்புக்கடி எண்ணிக்கையில் 70 சதவீதம் விஷமற்ற பாம்புகள், 30 சதவீதம் விஷமுள்ள பாம்புகள் என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். பாம்புக் கடித்த உடனே அருகில் இருக்கும் மருத்துவனைக்கு செல்ல வேண்டும். மருத்துவமனைக்கு செல்வதற்கு முன்னதாக வேறு ஏதேனும் உணவோ அல்லது மாற்று மருந்துகளையோ உட்கொள்ளக் கூடாது. கடிபட்டவர் தானாக நடந்தோ அல்லது வண்டியை ஓட்டி கொண்டோ மருத்துவமனைக்கு போக கூடாது. அவசர ஊர்தியோ அல்லது வேறு விதமான வாகனத்தில் பாதுகாப்பாக போக வேண்டும். பாம்பு கடிபட்ட இடத்தில் இருந்து காலனிகள், மோதிரம், நகைகள் மற்றும் இறுக்கமான ஆடைகள் இருந்தால் அதை கண்டிப்பாக அகற்ற வேண்டும். பட மூலாதாரம்,GETTY IMAGES காயங்களை கழுவுதல், கீறி விடுதல், துணியை வத்து இறுக்கமாக கட்டுதல், ஏதேனும் மூலிகைகள பயன்படுத்துதல், என்று செய்வதால் ஏற்படும் நன்மைகளை விட தீமைகள் தான் அதிகம். குறிப்பாக, பாம்பு கடித்த உடனே ஒரு நபர் மாற்று மருத்துவம் என்ற பெயரில் நேரத்தை வீணடிக்காமல் உடனே மருத்துவமனைக்கு செல்வதுதான் சரியான வழிமுறை என்று நிபுணர்கள் உறுதியா தெரிவிக்கின்றனர். இந்தியாவில் போதுமான மருந்துகள் உள்ளதா? முள்ளை முள்ளால் எடுக்க வேண்டும் என்று சொல்கின்ற மாதிரி பாம்பு விஷத்த முறிப்பதற்கும் பாம்போட விஷம் தான் பயன்படுத்தப்படுகின்றது. பாம்புகளில் இருந்து எடுக்கப்படும் விஷத்தை வைத்துதான் விஷ முறிவு மருந்துகள் தயாரிக்கப்படுகின்றன. 1895-ம் ஆண்டு, இந்திய நாகப்பாம்பு விஷத்திற்கு எதிராக பிரெஞ்சு மருத்துவர் ஆல்பர்ட் கால்மேட் முதல் விஷ எதிர்ப்பு மருந்தை உருவாக்கினார். ஆனால், இந்தியாவில் விஷ எதிர்ப்பு மருந்துகளை பயன்படுத்துவதில் இரண்டு முக்கியமான சவால்கள் இருப்பதாக மருத்துவர் ஷர்மா தெரிவிக்கிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES மருந்துகள் கிடைப்பதில் தட்டுப்பாடு இருப்பதகாவும், விஷ முறிவு மருந்துகள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்துக்கு கொண்டு போறதில் பல சிக்கல்கள் இருப்பதாகவும் மருத்துவர் ஷர்மா கூறுகிறார். இதுமட்டும் இல்லாமல், நோயாளிக்கு எவ்வளவு மருந்து கொடுக்க வேண்டும் என்பது போன்ற போதுமான விழிப்புணர்வு இல்லை. மருத்துவ ஊழியர்களுக்கு முறையான பயிற்சி வழங்கப்படவில்லை என்றும் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். முக்கியமான நான்கு பாம்புகள் நீங்கள் பார்க்கும் எல்லா பாம்புகளுக்கும் விஷம் இருக்காது. இந்தியாவில் கிட்டத்தட்ட 300 பாம்பு இனங்கள் உள்ளன. அதுல அறுபது வகையான பாம்புகள் தான் விஷமிக்கவை. அதில் குறிப்பா நான்கு பாம்புகள் தான் பெரும்பாலான பாதிப்புகளுக்கு காரணம். கண்ணாடி விரியன் இந்தியாவில் காணப்படும் மிகவும் ஆபத்தான பாம்புகளில் கண்ணாடி விரியனும் ஒன்று. கண்ணாடி விரியனின் தலை முக்கோண வடிவத்தில் காணப்படும். மேலும் 'வி' வடிவத்திலான வெள்ளைநிறக் கோடும் காணப்படும். கண்ணாடி விரியன் பொதுவாக புல் மற்றும் புதர் நிறைந்த பகுதிகளில் காணப்படும். கட்டு விரியன் பட மூலாதாரம்,GETTY IMAGES அடுத்ததாக கட்டு விரியன் பாம்பு. இந்த பாம்பு பொதுவாக இரவு நேரத்தில்தான் அதிகமாக தென்படும். சற்று கறுமை நிறமான இதன் உடம்பில் இருக்கும் வெள்ளை நிற பட்டைகள் மூலம் இதை அடையாளப்படுத்தலாம். இந்திய நாகம் நாகப்பாம்பு வெவ்வேறு வகையான நிறங்கள் மற்றும் தகவமைப்புகளை கொண்டிருக்கும். காடுகள், சமவெளிகள் மற்றும் விவசாய நிலங்களில் இது பொதுவாக காணப்படும். மேலும், மக்கள் நெருக்கம் அதிகமான நகர்ப்புறங்களிலும் இதை பார்க்க முடியும். சுருட்டை விரியன் இறுதியாக சுருட்டை விரியன் பாம்பு, இதடோ வடிவம் சிறியதாக இருந்தாலும் அதோட தாக்கும் திறன் மிகவும் ஆபத்தானது. விரியன் வகைப் பாம்புகளில் சுருட்டை விரியன் பாம்புகள் பொதுவாக வளர்ச்சியில் சிறிய அளவிலேயே காணப்படும். ஆனா, இதன் விஷம் மிகவும் கொடூரமான பாதிப்புகளை ஏற்படுத்தும். பாம்பு கடிச்ச உடனையே பதட்டப்படாம உடனடியாக மருத்துவமனைக்கு செல்வது சிறந்த முடிவாக இருக்கும். மொத்தத்தில் பாம்புகளிடம் இருந்து மக்களைக் காப்பாற்றவும் அதே நேரத்துல பாம்புகளின் அழிவை கட்டுப்படுத்தவும் பல்வேறு நடவடிக்கைகள் தேவையானதாக உள்ளது. https://www.bbc.com/tamil/science-62289118
  9. இளையராஜா எம்.பி பதவிப் பிரமாணம் எடுத்தபோது என்ன செய்தார்? 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SANSAD RAJYA SABHA படக்குறிப்பு, எம்.பி ஆக பதவிப்பிரமாணம் செய்து கொண்ட பிறகு ஆவணத்தில் கையெழுத்திட வரும் இளையராஜா இளையராஜா எனும் நான் என்று தொடங்கி கடவுளின் பெயரால் மாநிலங்களவை உறுப்பினராக பதவியேற்கிறேன் என்று கூறி பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டுள்ளார் இசையமைப்பாளர் இளையராஜா. குடியரசு தலைவராக ராம்நாத் கோவிந்த் இருந்தபோது இளையராஜா, முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா, ஆந்திராவைச் சேர்ந்த கதாசிரியர் விஜயேந்திர பிரசாத், கர்நாடகாவைச் சேர்ந்த வீரேந்திர ஹெக்கடே ஆகியோரை மாநிலங்களவை நியமன உறுப்பினர்களாக முன்மொழிந்தார். இதில் இளையராஜா நீங்கலாக மற்ற மூவரும் நடப்பு மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியபோது எம்.பி ஆக பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டனர். இளையராஜா அமெரிக்காவில் ஏற்கெனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றிருந்ததால் அவர் முதல் நாள் நிகழ்வில் பதவிப்பிரமாணம் எடுத்துக் கொள்ள வரவில்லை. இந்த நிலையில், குடியரசு தலைவராக திரெளபதி முர்மூ இன்று பதவிப்பிரமாணம் செய்து கொண்டதையொட்டி இரு அவை உறுப்பினர்களும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர். நாடாளுமன்றத்தின் மைய மண்டபத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதன் முடிவில் உணவு இடைவேளைக்குப் பிறகு மாநிலங்களவையும் மக்களவையும் பிற்பகல் 2 மணிக்கு கூடியது. அப்போது இரு அவைகளிலும் விலைவாசி பிரச்னையை எழுப்ப எதிர்கட்சிகள் ஆயத்தமாகின. நாடாளுமன்ற விதிகளின்படி புதிய உறுப்பினராக ஒருவர் பதவியேற்கும்போது அவைக்குள் எவ்வித கூச்சலோ குழப்பமோ இருக்கக் கூடாது. அந்த வகையில், மாநிலங்களவை பிற்பகல் 2 மணிக்கு அதன் துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண்சிங் தலைமையில் கூடியபோது எதிர்கட்சி உறுப்பினர்கள் அமளியில் ஈடுபடுவதற்காக அவையின் மையப் பகுதியை நோக்கி வர முற்பட்டனர். இளையராஜா எம்.பி ஆனார் - சாதனை, சர்ச்சைகளுடன் 50 வருட திரைப்பயணம் இளையராஜா சர்ச்சை: அம்பேத்கருடன் நரேந்திர மோதியை ஒப்பிட்டு அவர் எழுதியது என்ன? 103 சர்வதேசப் பதக்கங்கள் பெற்ற பிபிசி வாழ்நாள் சாதனையாளர் பி.டி. உஷா அமைதி காத்த எதிர்கட்சிகள் ஆனால், 'புதிய உறுப்பினர் பதவியேற்பு நடைமுறை' என மாநிலங்களவை துணைத் தலைவர் அறிவித்ததும் எதிர்கட்சி எம்.பிக்கள் அவரவர் இருக்கைகளில் அமர்ந்தனர். இதையடுத்து இளையராஜாவை பதவியேற்க வரும்படி மாநிலங்களவை செகரட்டரி ஜெனரல் அழைப்பு விடுத்தார். அப்போது கையில் தமிழில் எழுதப்பட்ட காகிதத்துடன் வந்த இளையராஜா, தமது பதவிப்பிரமாணத்தை தமிழ் மொழியில் எடுத்துக் கொண்டார். பட மூலாதாரம்,SANSAD TV - RAJYA SABHA "மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் இளையராஜா எனும் நான், சட்டத்தினால் நிறுவப்பெற்றதான இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும் பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும் இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் உறுதியாக பற்றிருப்பேன் என்றும் நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும் 'கடவுளின்' பெயரால் ஆணையிட்டுக் கூறுகிறேன்," என்று இளையராஜா பதவிப்பிரமாணம் எடுத்துக் கொண்டார். பின்னர் நடைமுறைப்படி பதவியேற்பு ஆவணத்தில் அவர் கையெழுத்திட்டபோது உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி வரவேற்றனர். தமிழ் திரையுலகத்தை தனது இசையால் அரை நூற்றாண்டு காலம் ஆண்ட இளையராஜா, 1000 படங்களுக்கு மேல் ஸ்கோர் செய்து 5 தேசிய விருதுகளை பெற்றுள்ளார். தற்போது 79 வயதாகும் இளையராஜாவுக்கு 2010ஆம் ஆண்டு பதம் பூஷண் விருது வழங்கி மத்திய அரசு கெளரவித்தது. அதன்பிறகு 2018ஆம் ஆண்டு பத்மவிபூஷண் விருது அவருக்கு வழங்கப்பட்ட நிலையில், இசைத்துரையில் அவர் ஆற்றி வரும் சேவையை கெளரவிக்கும் விதமாக கலைத்துறையில் இருந்து அவரை நியமன எம்.பி.யாக குடியரசு தலைவர் நியமித்திருக்கிறார். https://www.bbc.com/tamil/india-62292209
  10. பூலன் தேவி கொல்லப்பட்ட நாள் ஜூலை 25: சம்பல் பள்ளத்தாக்கு மீண்டும் ஒரு பயணம் - #SpotVisit சின்கி சின்ஹா, பிபிசி இந்திக்காக 25 நவம்பர் 2020 புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,JEAN-LUC MANAUD / GAMMA-RAPHO VIA GETTY IMAGES அந்த நிலப்பரப்பின் வெறுமை என்பது அந்திப்பொழுதில் சம்பல் நதியின் கரையோரத்தில் நின்றுகொண்டிருக்கும்போதுதான் முகத்திலறைந்தாற்போல உறைக்கிறது. ஒரு பாடலைப் போல சுழித்தோடும் சம்பல் நதியினூடே எப்போதோ இறந்துபட்ட ஒரு பெண் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். கொள்ளைக்காரியாக அறியப்பட்ட அந்தப் பெண் ஒரு ராபின்ஹுட்டைப் போல மற்றவர்கள் சார்பில் பழிவாங்கியிருக்கிறார், தாகூர்களின் ஆதிக்கத்துக்கு சவால்விட்ட ஒடுக்கப்பட்ட சமூகத்தின் பெண் அவர். இங்கே, அவர் பிறந்த இந்த கிராமத்தில், இன்னும் அவரின் குழந்தைப் பருவத்தைப் பற்றியும் கொள்ளை வாழ்வு பற்றியும், அவரது பழி தீர்க்கும் படலம் பற்றியும் அவர் கைது செய்யப்பட்டதைப் பற்றியும் பாடல்கள் பாடப்படுகின்றன. திருமணங்களிலும் பிற விழாக்களிலும் இந்தப் பாடல்கள் இசைக்கப்படுகின்றன. ராஜஸ்தான், மத்திய பிரதேசம், உத்தர பிரதேசம் ஆகிய மூன்று மாநிலங்கள் சந்திக்கும் ஒரு துண்டு நிலத்தில் நின்று கொண்டிருக்கும் பகுதி சம்பல், ஒரு பழுப்பு நிற வெட்டவெளி. இங்கே இப்போது கொள்ளைக்காரர்கள் யாரும் இல்லை. தரிசு நிலம் மட்டுமே மீதமிருக்கிறது. 2000 ஆண்டுகளின் தொடக்கத்தில் இங்கு நல திட்டங்கள் மூலமாகப் போடப்பட்ட எந்த சாலையாலும் இந்த முரட்டு நிலப்பரப்பை சாதுவாக்க முடியவில்லை. பட மூலாதாரம்,CHINKI SINHA / BBC தூரத்து நதி, எல்லாவற்றையுமே விழுங்கிவிடும் ஆற்றல் கொண்டதாகக் காட்சியளிக்கிறது. இந்த சபிக்கப்பட்ட நிலத்தில் இருக்கிற எல்லாவற்றையும் ஏற்கனவே அது அரித்துவிட்டது. இதைப் போல ஒரு காட்சியை இதற்கு முன்பு நீங்கள் பார்த்திருக்கவே முடியாது. இதயமானியில் தெரிகிற வளைந்த இதயத்துடிப்பு வரைபடம் போல இது தோற்றமளிக்கிறது. இது வேறு ஏதோ ஒரு இடமாகத்தான் தெரிகிறது எப்போதும். வரைபடம் உருவாக்குபவர்களையே குழப்புகிற நிலப்பரப்பு இது. ஒவ்வொரு முறையும் ஒடுக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒரு பெண் வன்புணர்வு செய்யப்பட்டதாக செய்திகள் வரும்போதும் பூலன் தேவியின் கதை உயிர்தெழும். BBC 100 WOMEN 2020: சாதனை பெண்கள் பட்டியலில் சென்னை கானா பாடகி இசைவாணி கிருஷ்ணவேணி: தனது மரணத்தை தொட்டுப் பார்த்த ஒரு தலித் பெண் ஹாத்ரஸில் ஒரு 19 வயது பெண் தாகூர் சமூக ஆண்களால் வன்புணர்வு செய்து கொல்லப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தபோது தலித் பெண்களுக்கு எதிரான வன்முறைகளைக் குறிப்பிட்டுப் போராட்டக்காரர்கள் எச்சரித்தார்கள். அநீதி இழைக்கப்பட்ட பெண் பூலன் தேவியைப் போல துப்பாக்கியைத் தூக்கக்கூடும் என்றார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES "நீங்கள் நீதி தராவிட்டால் பூலன் தேவியின் வழிமுறையைக் கையிலெடுப்போம்" என்று போராட்டங்களில் குரல்கள் ஒலித்தன. அவ்வப்போது எழுந்த #dalitlivesmatter ஹேஷ்டேகுகளையும் சமூக ஊடகக் கோபங்களையும் தாண்டி, செய்திச் சுழற்சி அடுத்தடுத்த செய்திகளில் கவனம் செலுத்தத் தொடங்கிவிட்டது. இன்னமும் சிபிஐ அந்தக் குடும்பத்தை விசாரணை செய்துகொண்டிருக்கிறது, குற்றம் சாட்டப்பட்டவர்கள் சிறையில் இருக்கிறார்கள். பாதிக்கப்பட்ட பெண்ணின் வீட்டை சி.ஆர்.பி.எஃப் காவல் காக்கிறது. சிபிஐ அறிக்கை எப்போது வரும் என்று யாருக்கும் தெரியவில்லை. பூலன் தேவி 22 தாகூர் ஆண்களைக் கொன்றதாக சொல்லப்படும் பெஹ்மாயிலிருந்து ஹாத்ரஸ் ஐந்து மணிநேர தொலைவில் இருக்கிறது. தாகூர் சமூக ஆண்களைக் கொல்லவில்லை என்று பூலான் தேவி மறுத்தார். நிலப்பரப்பு திடீரென்று மாறுகிறது. உடைந்த வாயில் ஒன்றின்மீது பெஹ்மாய் என்று எழுதப்பட்டிருக்கிறது. எழுத்துக்கள் மங்கலாகத் தெரிகின்றன. பாம்பாக வளையும் ஒரு குறுகலான பாதையில் நடந்தால் கிராமத்தை அடையலாம். ஆற்றங்கரையோரமாக தூசிபடிந்தபடி இருக்கிறது அந்த கிராமம். எப்போதும் காற்றில் மிதக்கும் தூசி இருப்பதால் கிராமத்துக் கொள்ளைக்காரர்களாலும் பெருவழிச்சாலைகளில் செல்பவர்களாலும் எளிதில் ஒளிந்து மறைந்துகொள்ள முடிந்தது. இறந்த 20 பேரின் பெயர்கள் தாங்கிய நினைவுச்சின்னமாக நின்றுகொண்டிருக்கிறது ஒரு சுவர். எளிய மக்களுக்காக ஒளிரும் சுடர்கள் - இது காஞ்சி மக்கள் மன்றத்தின் கதை நர்த்தகி நடராஜ்: தடைகளைத் தகர்த்த நாட்டிய கலைஞர் - சாதித்த கதை இங்கிருந்துதான் பூலன் தேவி, பெஹ்மாய் கிராமத்தை நோக்கிச் சென்றதாக சொல்லப்படுகிறது. 84 கிராமங்கள் நிறைந்த அந்த இடத்தில் பெரும்பாலும் தாக்கூர் மக்களே வசித்துவந்திருந்தார்கள். பெஹ்மாயும் அப்படிப்பட்ட ஒரு கிராமம்தான். பூலன் தேவிக்கு 17 வயது இருக்கும்போது பெஹ்மாயின் தாக்கூர் ஆண்களால் பிணைக்கைதியாகப் பிடிக்கப்பட்டதாகவும், கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. எப்படியோ தப்பித்த அவர், தன் தலைமையில் ஒரு கொள்ளைக் கூட்டத்தை உருவாக்கிக்கொண்டார். 18 வயதான பின்பு பூலன் தேவி 30 தாகூர் ஆண்களை ஆற்றங்கரைக்கு இட்டுச் சென்றதாகவும், அதில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும் சொல்லப்படுகிறது. பட மூலாதாரம்,GEORGE ALLEN & UNWIN நாற்பது வருடம் என்பது ஒரு நீண்ட காலம் என்றாலும், பலருக்கும் அந்த பெஹ்மாய் வன்முறை சம்பவம் நினைவிலிருக்கிறது. ஆனால் உலகத்தைப் பொருத்தவரை இது ஒரு பழிதீர்க்கும் நிகழ்வாகவும் நியாயத்தை மீட்டெடுத்த ஒரு நிகழ்வாகவும்தான் இருக்கிறது. உலகைப் பொறுத்தவரை பூலான் தேவி ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்து வந்த ஒரு தைரியமான இளம்பெண். அவர் இறந்து இருபது வருடங்களாகிறது. கார்கில் போருக்கு செயற்கைக்கோள் வடிவமைத்த தமிழ் பெண் விஞ்ஞானி கனவுகள் ஓய்வதில்லை: சாதனை பயணத்தில் 'சர்ஃபிங்' வீராங்கனை கிராமத்திற்குள் நுழையும் இடத்தில் சில ஆண்கள் நின்றுகொண்டிருக்கிறார்கள். அவர்கள் எல்லாருடைய குடும்பத்திலும் அன்று நடந்த சம்பவத்தில் கொல்லப்பட்ட ஒரு உறவினராவது இருக்கிறார். 16 முதல் 55 வயது வரை கொண்ட அந்த 20 ஆண்களுக்கான நினைவுக்கோயிலை சென்று பார்க்குமாறு அவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள். கொல்லப்பட்ட 20 பேரில் 18 பேர் பெஹ்மாயைச் சேர்ந்தவர்கள், ஒருவர் ராஜ்பூரைச் சேர்ந்தவர், ஒருவர் சிகந்த்ராவைச் சேர்ந்தவர். சுவர்களின் அவர்களது பெயர்கள் சிகப்பு நிறத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. இன்னும் நினைவுக்கோயிலில் மணிகள் ஒலிக்கின்றன. நாற்பது ஆண்டுகளுக்கு முன்பு ஓடிய ரத்த ஆற்றை அங்கு இருக்கிற யாரும் மறக்கவில்லை. இன்னும் அந்த வழக்குக்கான தீர்ப்புக்காக அவர்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள். ஒரு தசாப்தம் கடந்துவிட்டது. இந்த ஜனவரியில் தீர்ப்பு வந்திருக்கவேண்டும். ஆனால் ஒரு காவல் நினைவேடு தொலைந்துவிட்டதால் வழக்கில் தாமதம் ஏற்பட்டிருக்கிறது. அந்த 84 கிராமங்களிலும் தாக்கூர் இனத்தவர் தாக்கூர்களையே மணந்துகொள்கிறார்கள். பெஹ்மாயில் தாக்கூர்களைத் தவிர வேற்று இனங்களைச் சேர்ந்த இரு குடும்பங்கள் மட்டுமே உண்டு - ஒன்று ஒரு பிராமணக் குடும்பம், ஒன்று தலித் குடும்பம். நினைவேந்தலில் வைக்கப்பட்டுள்ள பலகை இப்படி அறிவிக்கிறது : "பிப்ரவரி 14, 1981ல், மாலை நான்கு மணிக்கு, கொள்ளைக்காரர்களின் கூட்டம் ஒன்று கீழ்க்கண்ட, ஆயுதம் ஏந்தாத, குற்றமற்ற, மேன்மையான கிராமத்தவர்களைக் கொன்றுவிட்டது" பெஹ்மாயில் இருப்பவர்கள் ஊடகங்களிடமிருந்து பரிதாபத்தை எதிர்பார்ப்பதில்லை. அவர்கள் துக்கமாக இருந்தபோது எழுந்த பூலன் தேவியின் புகழ் அவர்கள் பக்கத்துக் கதையாடலை மறைத்துவிட்டிருந்தது. பூலன் தேவியை ஒரு கொடூரமான கொலைகாரி ஆக அவர்கள் பார்க்கிறார்கள். 1981ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதத்தின் குளிர் மதியப்பொழுதில் இந்த ஆண்கள் வரிசையாக நிற்கவைக்கப்பட்டபோது கிராமத் தலைவரான ஜெய் வீர் சிங் வீட்டில் இருக்கவில்லை. "தன் கூட்டத்தினரோடு பூலன் அந்த காடுகளில் அலைந்துகொண்டிருப்பாள். கொள்ளைக்காரனும் பூலன் தேவியின் காதலன் என்று சொல்லப்பட்டவனுமான விக்ரம் மல்லாவைக் கொன்ற ஶ்ரீராமும் லாலாராமும் எங்கள் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் அல்ல" என்கிறார் அவர். "அவர்களது கிராமமான தமன்பூர் 11 கிலோமீட்டர் தள்ளி இருக்கிறது. பிஜேபி ஆட்சியில் எங்களுக்கு நியாயம் கிடைக்கும் என்று நினைத்தோம். ஆனால் நாங்கள் தொடர்ந்து போராடுவோம். அவர்கள் செய்ததற்காக அவர்களுக்கு நிச்சயம் தண்டனை கிடைக்கவேண்டும்" என்கிறார். இந்த கிராமத்தில் பல பக்கா வீடுகளும் இடிந்த கோட்டைகளும் உண்டு. அடிப்பவர்களின் குரலையும் மீறிய ஒரு குரலாக ஒலிக்கிறது தலைவரின் குரல். "பூலன் தேவிக்கு எந்த அநீதியும் இழைக்கப்படவில்லை" என்கிறார் அவர். காவல்துறையும் ஊடகங்களும் தயாரித்த கட்டுக்கதை அது என்கிறார். பட மூலாதாரம்,CHINKI SINHA / BBC "ஒவ்வொரு விழாவின்போதும் இந்த விதவைகள் அழுகிறார்கள். குழந்தைகள் அழுகிறார்கள். பிப்ரவரி 14 அன்று நாங்கள் நினைவுகூரும் சடங்கு ஒன்றை நடத்துகிறோம்" என்கிறார். இந்தியாவில் தேடப்பட்ட நபர்களில் முக்கியமானவராக பூலன் தேவி மாறினார். அவர் தலைக்குப் பத்தாயிரம் டாலர்கள் விலை வைக்கப்பட்டது. அந்த கிராமத்தில் யார் காவல்துறையைச் சேர்ந்தவர் யார் கொள்ளைக்காரர் என்று அடையாளமே கண்டுபிடிக்க முடியாமல் இருந்ததாகக் கூறுகிறார் தலைவர். எல்லாரும் காக்கி உடைகள் அணிந்திருந்தார்கள் என்கிறார். அடிக்கடி உணவு உண்ணவும் நீர் அருந்தவும் அவர்கள் கிராமத்துக்கு அருகில் வருவார்கள் என்றும், சட்டத்துக்குப் புறம்பானவர்கள் என்பதால் அவர்கள் தரிசுக்காடுகளில் மறைந்திருந்தார்கள் என்றும் சொல்கிறார். வீட்டின் முன்னால் இருக்கிற இரும்புக்கதவில் "வீழ்த்தப்பட்ட வீரமங்கை பூலன் தேவியின் வீடு" என்று எழுதப்பட்டிருக்கிறது. ஒடுக்கப்பட்ட சமூகத்தினருக்கு எதிரான அநீதிகளுக்கு எதிராகப் போராடுவதற்காக பூலன் தேவியால் தொடங்கப்பட்ட ஏகலைவ சேனா அமைப்பினர், வீட்டு வளாகத்துக்குள்ளேயே அவருக்கு ஒரு சிலை வைத்திருக்கிறார்கள். வீடு புதிதாகக் கட்டப்பட்டிருக்கிறது. அதில் தற்போது பூலான் தேவியின் தாயார் மூலா தேவி வசிக்கிறார். படிகள் கொண்ட ஒரு பீடத்தின்மேல் அமைக்கப்பட்டுள்ள பூலன் தேவியின் பளிங்குச்சிலையில் சேலை அணிந்து, கை கூப்பியவாறு அவர் காட்சி தருகிறார். இடுப்பிலிருந்து துப்பாக்கி தொங்க, காக்கி பேண்ட் சட்டையுடன், பறக்கிற தலைமுடியை இழுத்துப் பிடிக்குமாறு நெற்றியில் கட்டப்பட்ட சிவப்பு ரிப்பனோடு நாம் பார்த்துப் பழகிய பூலான் தேவிக்கும் இதற்கும் எத்தனையோ தூரம். அவரை ஒரு சாதுவானவராக, காப்பாளராக, கூப்பிய கைகளோடு நிற்கும் ஒரு சேலை அணிந்த பெண்ணாகக் காட்ட விரும்புகிறார்கள் அவர்கள். அதுதான் அவரது அரசியல்வாதி அவதாரம். மீட்டெடுக்கப்பட்ட ஒன்று அது. அவர்கள் அந்த அவதாரத்தோடுதான் வாழ விரும்புகிறார்கள். ஆற்றுக்கு அருகில் பிரதான சாலையிலிருந்து தள்ளி அமைந்திருக்கும் இந்த கிராமத்தில் பெரும்பாலும் மல்லாக்கள்தான் இருக்கிறார்கள், அவர்கள் "வேறு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்" என்ற பிரிவுக்குள் வருபவர்கள். பட மூலாதாரம்,CHINKI SINHA / BBC ஆற்றங்கரையை ஒட்டிய கிராமத்தில் அவர் ஒரு தேவதை, தேவி. ஆற்றங்கரைக்கு அப்பால் இருக்கிற கிராமத்தில் அவர் ஒரு கொலையாளி. மொத்தத்தில் அங்கே இரண்டு நினைவுக்கோயில்கள் இருக்கின்றன. ஒன்று, ஒடுக்கப்பட்ட மக்கள்மீது ஆதிக்கம் செலுத்திய தாகூர்களின்மீது அவர் தீர்த்துக்கொண்ட பழியை நினைவுகூர்வதற்காக. மற்றொன்று, படுகொலை நிகழ்வில் அன்று கொல்லப்பட்டவர்களின் நினைவேந்தலாக. வாழ்வை முடக்கிய நோய் பாதிப்பை வெல்லும் கவிஞர் யாழினிஸ்ரீ நடிகை ஊர்வசி: 'ஸ்கிரிப்ட் கொடுக்காமல் நடிக்க வைத்த ஆர்ஜே பாலாஜி" - ஏன் தெரியுமா? அவ்வபோது இரு கிராமங்களிலும் மணிகள் ஒலிக்கின்றன. இரு கிராமங்களைச் சேர்ந்த மக்களும் ஒருவரை ஒருவர் சந்தித்த்தேயில்லை. அவர்கள் விலகியே வாழ்கிறார்கள். இப்போதும், மிர்சாபூரில் பூலன் தேவிக்காக தேர்தல் பிரசாரம் செய்யப்பட்டபோது அனில் குமார் பூலன் தேவியின் குழுவில் ஒருவர். நிலைமை பெரிதாக மாறவில்லை. "தாகூர்கள் எங்களைப் பார்த்துப் பொறாமைப்படுகிறார்கள்" என்கிறார் அவர். பேண்டிட் க்வீன் பூலான் தேவியைப் பற்றியும் அவரது கைது நிகழ்வைப் பற்றியும் அவர் பாடுகிறார். மல்லா சாதியில் பிறந்தவரான பூலன் தேவியைப் பற்றிய நாட்டார் பாடல்களைத் திருமணங்களின்போது அவர்கள் பாடுகிறார்கள். எல்லா பண்டிகைகளின்போதும் அவரை நினைவிலிருத்துகிறார்கள். குறிப்பாக, அக்டோபர் மாதம் துர்க்காதேவியின் வருகையின்போது அவர் கட்டாயமாக நினைவுகூரப்படுகிறார். தன் பாக்கெட்டில் பூலன் தேவி எப்போதும் ஒரு துர்க்கை உருவத்தை வைத்திருந்ததாக சொல்லப்படுகிறது. அவர் சரண் அடைந்ததைப் பற்றிய அறிக்கைக் குறிப்புகளிலும், சரண் அடைந்தபோது அவர் பாக்கெட்டில் இந்த உருவம் இருந்தது சொல்லப்பட்டிருக்கிறது. அட்லாண்டிக் பத்திரிக்கையில் 1996ல் பூலன் தேவி சரணடைந்ததைப் பற்றிய ஒரு கட்டுரையில் விவரிக்கிறார் மேரி ஆன் வீவர்: "கடுங்குளிரான பிப்ரவரி மாலை. 1983. பழுப்பு நிற கம்பளிப் போர்வையின்மேல் ஒரு பளீர் சிவப்புப் போர்வையையையும் போர்த்திக்கொண்டு வந்தார் பூலன் தேவி. அவர் பின்னாலேயே பன்னிரெண்டு ஆண்கள் வந்தார்கள். அவர் இடுப்பிலிருந்து .315 மௌசர் துப்பாக்கி ஒன்று தொங்கிக்கொண்டிருந்தது. அவரது பெல்ட்டில் ஒரு வளைந்த குறுங்கத்தி செருகப்பட்டிருந்தது. அவர் மார்பின் குறுக்கே துப்பாக்கி குண்டுகளாலான தோளணிப்பட்டை ஒன்று. அந்த பன்னிரண்டு ஆண்களையும் மத்தியப் பிரதேசத்தின் சம்பல் நதியை ஒட்டிய தரிசுப்பகுதிகளில் அவர் நடத்திச் சென்றார்". அவரை ராபின் ஹுட்டைப் போல பாவித்த ஏழை மக்களின் ஆதரவு அவருக்கு இருந்தது. அவர்கள் கொள்ளைக்காரர்களாக இருந்தாலும் ஏழை மக்கள் ஆதரவு தந்தனர். "கிராமங்களில் உள்ள குடும்பங்களுக்கு அவர் பணம் தந்தார். பெண்களுக்குத் திருமணங்களின்போது நகை தருவார்" என்கிறார் அனில். ஒருமாதிரியான இந்த அன்பு இந்த கிராமப்புறங்களில் தொடர்ந்து இருந்துகொண்டிருந்தது. பிண்ட் கிராமத்தில் அவர் சரணடைந்தபோது பூலன் தேவி எப்படி இருப்பார் என்பதே யாருக்கும் தெரிந்திருக்கவில்லை. காவல்துறையிடம் அவரது புகைப்படம் இல்லை. அவராகவே அவரது ஆயுதங்களைக் கீழே வைத்தார். மத்திய பிரதேசத்தின் முதல்வர் அர்ஜுன் சிங்கின் மக்கள் தொடர்பு நிகழ்வு தேசிய சர்வதேச ஊடகங்களால் எழுதப்பட்டது. ஒரு பெண் தானாகவே வந்து, கூட்டத்தை நோக்கித் திரும்பி, துப்பாக்கியைக் காட்டிவிட்டு அதைக் கீழே வைத்து கைகூப்பி நின்றுகொண்டதாகப் பத்திரிகையாளர்கள் குறிப்பிட்டார்கள். அது பெரும் ஏமாற்றமாகப் பார்க்கப்பட்டது. ஒரு அபாயகரமான, அழகான பெண்ணாக அவர் இருப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. சாகசப் பிரியையான கொள்ளைக் கூட்டத் தலைவி, கொள்ளைக்காரர்களின் கறுப்பு அழகி, கொள்ளைக்கார அழகி என்றெல்லாம் வர்ணிக்கப்பட்ட ஒருவரைப் பற்றி இப்படி எழுதுகிறார் அப்போதைய இந்தியா டுடேவின் ஒரு பத்திரிக்கையாளர்: "வெறிச்செயல் புரிந்துகொண்டிருக்கிற,மிக சாதாரணமாகத் தோற்றமளிக்கும், மனநிலைகளை மாற்றிக்கொண்டேயிருக்கிற, குழந்தைத்தனமான ஒரு மோசமான முன்கோப உள்ள சிறு பெண்". வழக்கு நடக்காமலேயே அவர் பதினோரு ஆண்டுகள் சிறைவைக்கப்பட்டார். பிப்ரவரி 1994ல் அப்போதைய உத்தர பிரதேச முதல்வரான முலாயம் சிங் யாதவ், அவருக்கு எதிரான எல்லா புகார்களையும் ரத்து செய்யுமாறு மாநில வழக்கறிஞர்களுக்கு உத்தரவிட்டதன்பேரில் பூலன் தேவி விடுதலை செய்யப்பட்டார். ஆதிக்க சாதியினரின் அடக்குமுறைக்கான ஒரு நியாயமாக அவரது விடுதலை பார்க்கப்பட்டது. ஒடுக்கப்பட்டவர்களின் மீது கட்டவிழ்த்துவிடப்படும் வன்முறைக்கு எதிராகப் பழிதீர்ப்பவராக இருந்த பூலன் தேவி, சாதி என்ற அமைப்புக்கான ஒரு சவாலாக மாறினார். விடுதலை செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர் அவர் மிர்சாபூர் தொகுதியில் சமாஜ்வாதி கட்சியின் சார்பாகப் போட்டியிட்டார். வெற்றிபெற்று மக்களவை உறுப்பினரானார். மீண்டும் 1999 தேர்தலிலும் வெற்றி பெற்றார். 38வது வயதில் புது தில்லியில் அவரது வீட்டுக்கு அருகே கொல்லப்பட்டார். தான் இறப்பதற்குள் இந்தப் படுகொலைக்கு நீதி கிடைக்கும் என்று ஒரு முதிய பெண்மணி காத்துக் கொண்டிருக்கிறார். "நம்பிக்கை இல்லாமல் தான் காத்துக்கொண்டிருக்கிறார்கள் இவர்கள்" என்கிறார் படுகொலையில் கணவனையும் கொழுந்தனையும் மாமனாரையும் இழந்த ஶ்ரீதேவி. "அப்போது எனக்கு 24 வயது. எனக்கு நான்கு சிறு மகள்கள் இருந்தனர். என்வீட்டு ஆண்களை எங்கே கூட்டிப்போகிறார்கள் என்றே எங்களுக்குத் தெரியவில்லை. மாலையில் இறந்த உடல்களைப் பார்த்தோம். எங்களுக்கு என்ன நீதி கிடைத்துவிடும்? பூலன் தேவி இறந்துவிட்டார். அந்த நாளைப் பற்றிப் பேசாதீர்கள், தேவையில்லாத நினைவுகள் வருகின்றன.... அவற்றை நாங்கள் மறந்துவிடவில்லைதான், இருந்தாலும்" என்கிறார். இது ஒரு பழமையான சிக்கல். ஹத்ராஸில் 19 வயது தலித் பெண் தாகூர் ஆண்களால் வன்புணரப்பட்டு கொல்லப்பட்டதாக சொல்லப்படும் வழக்கில் வெளிவந்த அதே சிக்கல். அந்தப் பெண்ணின் நடத்தை கேள்விக்குள்ளாக்கப்பட்டது. வழக்கின்போது, அது குடும்பத்தினர் செய்த ஆணவக்கொலையாக இருக்கலாம் என்றும் ஒரு பேச்சு நிலவியது. பட்டியலின பெண்கள் வன்புணரப்படுவது கடந்த சில வருடங்களாக அதிகரித்துகொண்டே இருக்கிறது என்கிறது தேசிய குற்றப் பதிவேடு ஆவணக் காப்பகத்தின் (NCRB) தரவு. கடந்த ஆண்டு ஒவ்வொரு நாளும் பத்து தலித் பெண்கள் வன்புணர்வுக்கு உள்ளாகியிருக்கிறார்கள் என்று அதிகாரபூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. பெண்களுக்கு எதிரான வன்முறைசம்பவங்கள், சிறுமிகளுக்கெதிரான பாலியல் தாக்குதல்களில் உத்தர பிரதேசம் நாட்டிலேயே முதல் இடத்தில் இருக்கிறது. மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த நிஷாத் ஜாதியைச் சேர்ந்தவர் பூலான் தேவி. தாகூர்களின் ஆதிக்கத்துக்கு எதிரான ஒடுக்கப்பட்ட மக்களின் சின்னமாக அவர் மாறிவிட்டார். பட மூலாதாரம்,RAJENDRA CHATURVEDI / BBC "அது ஒரு இலகுவான வாழ்க்கை அல்ல. எங்களைப் பொறுத்தவரை அவர்கள் புரட்சியாளர்கள். பாகீகள் ஒரு கடினமான வாழ்வை வாழ்கிறார்கள். நீதி மறுக்கப்பட்டதால் அவர்கள் புரட்சியாளர்களாக மாறினார்கள். ஒடுக்கப்பட்ட மக்கள் தாகூர்களின் அச்சுறுத்தலால் அவதிப்பட்டிருக்கிறார்கள். அவர்கள் அதற்கு ஒரு முடிவு கட்ட விரும்பினார்கள்" என்கிறார் அனில். பூலன் தேவியின் இறப்புக்குப் பின்னால் அந்த கிராமமே சோகத்தில் இருந்ததாக நினைவுகூர்கிறார் அவர். ஆனாலும் அந்த கிராமம் துண்டிக்கப்பட்டதாகவே இருக்கிறது. ஒரு பாலம் வரவேண்டியிருந்தும் ஒன்றும் நடக்கவில்லை. பல காலமாக அவர்கள் ஒரு இளங்கலைக் கல்லூரி வேண்டும் என்று கோரிக்கை வைத்துக்க்கொண்டிருக்கிறார்கள். இது பூலான் தேவியின் தொகுதி இல்லை என்றாலும் அவர் இருந்திருந்தால் நிச்சயம் உதவியிருப்பார். பூலன் தேவியின் பெயரில் ஒரு அருங்காட்சியகம் அமைப்பதாகவும் கிராமத்தில் பேச்சு நிலவுகிறது. அவரது சீருடைகள், சிவப்பு ரிப்பன், சிவப்புப் போர்வை, காலணிகளை அங்கே வைப்பார்கள். தங்கள் நாட்டார் கதைகளில் அவரது கதையை அவர்கள் சேர்த்துக்கொண்டிருக்கிறார்கள். தங்களுக்காகப் பழி தீர்த்தவரை நினைவிலிருத்த அவர்கள் எல்லா முயற்சியும் மேற்கொள்கிறார்கள். கிராமத்து சிறுமிகளுக்குப் பூலன் தேவியின் கதை தெரியும். இந்த கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் என்பதில் அவர்களுக்குப் பெருமையாக இருக்கிறது. ஆனால் அநீதிக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்த ஒரு பெண்ணின் கதை காலப்போக்கில் மறைந்துவிடும் என்பதை நினைத்து அனில் வருந்துகிறார். இந்த கிராமத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசிக்கின்றன. தங்கள் பெண்களை அவர்கள் "சிடியா" (பறவை) என்று அழைக்கிறார்கள். பூலன் தேவியின் சிலை நிறுவப்பட்டபோது அவரது அம்மா "பறவை கூட்டுக்குத் திரும்பிவிட்டது" என்றார். பூலன் தேவிக்கு மூன்று சகோதரிகள். தங்கை ராம்கலி தான் அம்மாவைப் பலகாலம் கவனித்துக்கொண்டிருந்தார். அவர் இப்போது இறந்துவிட்டார். ராம்கலியின் மகனும் மருமகளும் அதே கிராமத்திலேயே இன்னும் இருக்கிறார்கள். மூத்த சகோதரி ருக்மணி இப்போது ஒரு அரசியல்வாதி குவாலியரில் வசிக்கிறார். பூலன் தேவியின் அம்மா அதிகம் பேசவில்லை ஹாத்ரஸில் கொல்லப்பட்ட பெண்ணின் உடல், குடும்பத்தினரின் அனுமதியின்றியே எரிக்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. அந்த சாம்பல் இன்னும் அங்கேயே இருக்கிறது. ஜலாவுன் கிராமத்தில், பூலன் தேவியின் மேன்மைகளைப் பாடும் பாடல் இன்னும் இசைக்கப்படுகிறது. இரண்டு கிராமங்களுக்கு இடையேயான தூரத்தை ஐந்து மணி நேரத்தில் கடந்துவிடலாம். இடையே நாற்பது வருடங்கள். ஒரு நீதி. ஒரு அநீதி. இறுதியில் எல்லாமே தூரம் தான். நீதியும்கூட. ஒருவருக்கும் இன்னொருவருக்குமிடையே. நீதிமன்றத்துக்கும் மக்களுக்கும் இடையே. மக்களுக்கும் மக்களுக்கும் இடையே. https://www.bbc.com/tamil/india-55061863
  11. எஸ்.ராமகிருஷ்ணன் உரை | 4வது அமர்வு | உண்டாட்டு | S Ramakrishnan | பவா செல்லத்துரை, கே.வி.ஷைலஜா
  12. இலங்கை மக்கள் நிராகரித்த ரணில் நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்ற முரண்: அரசியலமைப்பில் தீர்வு உண்டா? யூ.எல்.மப்ரூக் பிபிசி தமிழுக்காக 5 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,PMD படக்குறிப்பு, ரணில் விக்கிரமசிங்க 'போலிப் பெரும்பான்மை' மூலம் ரணில் விக்ரமசிங்க - ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் கூறியிருக்கிறார். 'மக்களின் விருப்பத்தினை ரணிலுக்குக் கிடைத்த நாடாளுமன்றப் பெரும்பான்மை பிரதிபதிக்கவில்லை' என்பது சுமந்திரனின் கருத்தாக உள்ளது. அரசியலமைப்பிலுள்ள 'ஒட்டை' வழியாகவே, ரணில் இந்தப் 'போலி'ப் பெரும்பான்மையைப் பெற்று, ஜனாதிபதியாகத் தெரிவாகியுள்ளார் என பலரும் விமர்சிக்கின்றனர். 69 லட்சம் வாக்குகளைப் பெற்ற கோட்டாபய ராஜபக்ஷ, மக்களின் போராட்டத்துக்குப் பயந்து - ஜனாதிபதிப் பதவியை ராஜிநாமா செய்த நிலையில், மக்களால் புறக்கணிக்கப்பட்டு பொதுத் தேர்தலில் தோற்றுப் போய் - தேசியப்பட்டியல் வழியாக நாடாளுமுன்றம் வந்த ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி ஆகியுள்ளமை - திகைப்பூட்டும் ஆச்சரியமாகும். இலங்கை அரசாங்கத்தில் ஜனாதிபதி மற்றும் பிரதமர் பதவிகள் உச்சமானவையாக உள்ளன. இந்த இரண்டு பதவிகளும் ரணில் விக்ரமசிங்கவுக்கு கிடைத்திருக்கின்றன. இதில் விசித்திரமான விடயம் என்னவென்றால், எதிர்பாராத வகையில் ஜனாதிபதி பதவிகள் வெற்றிடமான சந்தர்ப்பங்களில்தான், மேற்படி இரண்டு பதவிகளும் ரணில் விக்ரமசிங்கவுக்கு முதன்முதலில் கிடைத்திருக்கின்றன. 1993ஆம் ஆண்டு மே 01ஆம் தேதி, அப்போதைய ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாஸ - குண்டுவெடிப்பில் கொல்லப்பட்டதையடுத்து, பிரதமராக இருந்த டி.பி. விஜேதுங்க - ஜனாதிபதியானார். இதனால் காலியான பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார். அது அவர் பிரதமரான முதலாவது சந்தர்ப்பமாகும். இப்போது, ஜனாதிபதியாகப் பதவி வகித்த கோட்டாபய ராஜபக்ஷ, அவரின் பதவியை ராஜிநாமா செய்தமையினை அடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இது அவர் ஜனாதிபதியான முதல் தடவையாகும். தமிழர்கள் மீதான 1983 கருப்பு ஜூலை வன்முறையும், தற்போதைய ராணுவ தாக்குதலும்: ஒப்பிடும் சிங்களர்கள் ராணுவத்தின் கட்டுப்பாட்டில் தனித்தீவு போல மாறிய கொழும்பு காலிமுகத் திடல் - கள நிலவரம் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி - அரசியல் நெருக்கடியாக மாறியதையடுத்து, கடந்த மே 09ஆம் தேதியன்று பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த ராஜபக்ஷ விலகினார். அதனையடுத்து பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்க நியமிக்கப்பட்டார். இதன் பின்னர் கோட்டாபய ராஜபக்ஷ - ஜனாதிபதி பதவியை ராஜிநாமா செய்தமையினை அடுத்து, அந்த இடத்துக்கு ரணில் விக்ரமசிங்க தேர்வு செய்யப்பட்டுள்ளார். இலங்கை அரசியலமைப்பின் உறுப்புரை 40(1) பின்வருமாறு கூறுகிறது. 'ஜனாதிபதியின் பதவி - அவரின் பதவிக் காலம் முடிவடைவதற்கு முன்னர் காலியானால் ஜனாதிபதி பதவிக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்குத் தகைமையுடையவராயுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை நாடாளுமன்றம் தேர்ந்தெடுத்தல் வேண்டும்'. இதற்கு அமையவே ஜனாதிபதி பதவிக்கு முன்மொழியப்பட்ட மூன்று நபர்களில் ஒருவரைத் தெரிவு செய்யும் பொருட்டு, நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே நடத்தப்பட்ட ரகசிய வாக்கெடுப்பில் 134 எனும் பெரும்பான்மை வாக்குகளைப்பெற்று, ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டார் என்பதெல்லாம் நாம் அறிந்த விடயங்களாகும். இந்த நிலையில், ரணில் விக்ரமசிங்க - போலிப் பெரும்பான்மையின் ஊடாக ஜனாதிபதியானார் என்கிற குற்றச்சாட்டுக்களும், மக்களின் விருப்பத்தினை ரணிலுக்குக் கிடைத்த நாடாளுமன்றப் பெரும்பான்மை பிரதிபதிக்கவில்லை என்கிற விமர்சனங்களும் சரியா? தவறா என்கிற கேள்விகள் விவாதங்கள் உருவாகியுள்ளன. இதுகுறித்து அரசிலமைப்பில் நிபுணத்துவம் வாய்ந்த இருவரிடம் பிபிசி தமிழ் பேசியது. "ஒரு ஜனநாயக நாட்டில் மக்களுடைய விருப்பு - வெறுப்புகள்தான் அவர்களின் பிரதிநிதிகள் ஊடாக வெளிப்பட வேண்டும்" என்கிறார் கொழும்பு பல்கலைக்கழக சட்ட பீடத்தின் சர்வதேச சட்டத் துறை சிரேஷ்ட விரிவுரையாளரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.எம். ஹக்கீம். "மக்கள் தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்யும் போது, இரு தரப்புக்கும் இடையில் உட்கிடையான ஓர் ஒப்பந்தம் ஏற்படுகிறது" என்றும், "அது - 'சமூக ஒப்பந்தம்' என அழைக்கப்படுகிறது" எனவும் அவர் தெரிவிக்கிறார். "மக்களின் அடிப்படைச் சுதந்திரம், உரிமைகள், பாதுகாப்பு, மேம்பாடு, முன்னேற்றம், நலன்புரி அம்சங்கள் மற்றும் வாழ்வாதாரங்கள் அனைத்தும் பாதுகாத்து மேம்படுத்தப்படும் என அந்த ஒப்பந்தம் அமையும். இதனடிப்படையிலேயே மக்கள் தமது பிரதிநிதிகளை தெரிவு செய்கின்றனர். இது 'மக்கள் ஆணை' அல்லது 'ஜனநாயகத்தின் அடிப்படை' எனக் கூறப்படுகிறது. மக்களின் விருப்பு - வெறுப்புகளின் அடிப்படையில்தான் ஆட்சி அமைய வேண்டுமென ஜனநாயகத்தின் அடிப்படை கூறுகின்றது. சிலவேளை ஆட்சியாளர்களின் நடவடிக்கை காரணமாக, மக்களின் அடிப்படைச் சுதந்திரம், உரிமைகள், பாதுகாப்பு, மேம்பாடு, முன்னேற்றம், நலன்புரி அம்சங்கள் மற்றும் வாழ்வாதாரம் போன்றவற்றில் பிரச்சினைகள் ஏற்படுமாயின், மக்களுக்கும் அவர்களின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சமூக ஒப்பந்தம் முறிவடையும். அப்போது 'ஆட்சியாளர்கள் - மக்கள் பிரதிநிதிகள் இல்லை' எனும் நிலை ஏற்படும் என்பது கோட்பாடாகும். தேர்தல்களின் போது மக்கள் தமது இறைமையை தமது பிரதிநிதிகளுக்கு வழங்குகின்றனர். இலங்கை ஒரு குடியரசு என்பதனால் - இங்கு மக்களின் பிரதிநிதிகளைக் கொண்ட ஆட்சியே நடைபெறுகிறது. மக்களுக்கும் - மக்கள் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சமூக ஒப்பந்தமானது நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் ஜனாதிபதி ஆகியோருடன் 5 வருடங்களைக் கொண்டதாக இருக்கும் என அரசியலமைப்பு கூறுகின்றது. பட மூலாதாரம்,PMD படக்குறிப்பு, பதவியேற்கும் ரணில். 'அரசியலமைப்பின் கறுப்பு எழுத்துக்கள் மாத்திரம் - மக்களின் இறைமையினைத் தீர்மானிக்க முடியாது. யதார்த்தத்திலும் நடைமுறையிலும் உள்ள விடயங்களே அதனைத் தீர்மானிக்கும்' என்கிற ஓர் அரசியல் கோட்பாடு உண்டு என்கிறார் அவர். எனவே அரசியலமைப்பை பொருள்கோடல் செய்ய வேண்டிய கடமை நீதித்துறையைச் சென்றடைகிறது. அரசியலமைப்பை நீதித்துறை பொருள் கோடல் செய்யும் போது, மக்களின் இறைமையை பாதுகாக்கும் அடிப்படையில் நடந்து கொள்தல் வேண்டும். அவ்வாறு பொருள்கோடல் செய்யாமல் அரசியலமைப்பின் எழுத்துக்களுக்கு பொருள் கொண்டால், அரசியலமைப்பியம் தோற்றுவிடும். ஆனாலும் அரசியலமைப்பு பாதுகாக்கப்படும்," என சிரேஷ்ட விரிவுரையாளர் ஹக்கீம் கூறுகின்றார். "இலங்கையைப் பொறுத்த வரையில் இப்போது நடைமுறையில் மக்களின் எதிர்பார்ப்புகள் தோல்வியடைந்துள்ளன, தேவைகள் நிறைவேற்றப்படவில்லை, மக்களின் பிரதிநிதிகளாக ஆட்சியாளர்கள் செயற்படவில்லை. இந்த நிலைவரத்தை அரசியலமைப்பின் கறுப்பு எழுத்துக்களின் படி பார்த்தால், அனைத்தும் சரியாக நடப்பதாகவே தோன்றும். ஆனால் யதார்த்தத்தைப் பிரதிபலிக்காத அரசியலமைப்பு தோல்வி கண்டதாகிவிடும்" என அவர் குறிப்பிட்டார். "மக்களின் இறைமையைப் பாதுகாக்கும் வகையில் அரசியலமைப்புக்கு பொருள் கொள்ளப்பட்டால், நாடாளுமன்றம் தற்போது மக்களுடைய யதார்த்தமான அபிலாசைகளைப் பிரதிபலிக்கவில்லை என்று சொல்ல முடியும்". "இது இலங்கையினுடைய ஜனநாயக கட்டமைப்பு, ஜனநாயக மரபு, ஜனநாயக பாரம்பரியம் போன்றவற்றின் தோல்வியே தவிர - அரசியலமைப்பின் தோல்வியல்ல" எனவும் ஹக்கீம் விவரித்தார். உச்ச நீதிமன்றில் கேள்விக்குட்படுத்தலாம் "பொதுத் தேர்தலில் மக்களால் நிராகரிக்கப்பட்ட நிலையில் தோல்வியடைந்த ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றின் மூலம் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டமை தொடர்பில், எந்தவொரு இலங்கைப் பிரஜையும் உச்ச நீதிமன்றில் தன்னுடைய அடிப்படை உரிமை மீறல் மனுவை தாக்க செய்ய முடியும்" என்கிறார் சிரேஷ்ட விரிவுரையாளர் சட்டத்தரணி ஹக்கீம். "அதாவது "நாட்டின் அதியுட்ச சட்டமான அரசியலமைப்பு, எனது அடிப்படை உரிமையை, மக்கள் ஆணையை, இறைமையை பாதுகாக்கவில்லை" எனக் கூறி, அரசியலமைப்பின் 12(1)இன் கீழ் சாட்டுதல் செய்து மனுவொன்றைத் தாக்கல் செய்யலாம். அப்போது அரசியலமைப்பின் அடிப்படை நோக்கத்தின் அடிப்படையிலேயே உச்ச நீதிமன்றம் பொருள்கொள்ள வேண்டுமே தவிர, எழுத்துக்களின் அடிப்படையில் பொருள்கொள்ள முடியாது. அப்படி உரிய முறையில் பொருள் கொண்டால், 'இது ஜனநாயகத்தையும், மக்களின் உண்மையான அபிலாசைகளையும் பிரதிபலிக்கவில்லை' என நீதிமன்றம் கூறும். ஆனால் நாடாளுமன்றத்தைக் கலைக்குமாறோ அல்லது நடைபெற்ற ஜனாதிபதித் தெரிவை ரத்துச் செய்யுமாறோ உச்ச நீதிமன்றம் உத்தரவிட முடியாது". "ஏனென்றால் சட்டவாக்க சபையான நாடாளுமன்றம், நிறைவேற்றுத் துறையான ஜனாதிபதி மற்றும் நீதித்துறை ஆகியவை தனித்துவமான துறைகளாக செயற்பட முடியுமே தவிர, ஒரு துறை - இன்னொரு துறையில் தலையீடு செய்ய முடியாது. உதாரணமாக நாடாளுமன்றம் எதைச் செய்ய வேண்டும், எதைச் செய்யக் கூடாது என, நீதித்துறை கூற முடியாது," என்றும் அவர் தெரிவித்தார். அரசியலமைப்பும் திருத்தங்களும் "நமது அரசியலமைப்பு 20 தடவை திருத்தப்பட்டுள்ளது. அநேகமாக ஆட்சிக்கு வந்தவர்கள் தமது விருப்பு - வெறுப்புகளின் அடிப்படையிலும், ஆட்சியைத் தக்க வைத்துக் கொள்வதற்காகவுமே அரசியலமைப்பைத் திருத்தினார்கள். அரசியலமைப்பின் ஊடாக மக்களின் உரிமை, சுதந்திரம், நாட்டின் பொருளாதார வளர்ச்சி, ஒற்றுமை, பன்மைத்துவத்தைப் பாதுகாத்தல், இனப் பிரச்சினை மற்றும் தேசிய பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்குதல் போன்ற நோக்கங்களுக்காக அரசியலமைப்பு திருத்தப்படவில்லை. 13ஆவது திருத்தம் (மாகாண சபை முறைமை) மட்டும் இதற்கு விதிவிலக்காக அமைந்துள்ளது. மேலும் 17 மற்றும் 19ஆவது திருத்தங்கள் அதிகாரங்களைக் குறைப்பனவாக அமைந்துள்ளன. ஜனாதிபதிக்கான அதிகாரங்களை நாடாளுமன்றுக்கு வழங்குவனவாக அமைந்திருந்தன. எனவே மக்களுக்குத் தேவையானதாகவும், பிரச்சினைகளைத் தீர்க்கக் கூடியதாகவும் அரசியல் அமைப்பைத் திருத்த வேண்டும். அது எவ்வாறெனில், இலங்கை சுதந்திரமடைந்ததில் இருந்து இன்று வரையுள்ள தேசியப் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்கக் கூடிதாக அரசியலமைப்பு திருத்தப்பட வேண்டும். குறிப்பாக தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளுக்கு பன்மைத்துவ அடிப்படையில் தீர்வு வழங்கக் கூடிய வகையில் அரசியலமைப்பு அமைதல் வேண்டும். மேலும் கட்சிமுறை அரசியல்வாதிகளின் செயற்பாடுகளுக்கு இடமளிக்காத அரசியலமைப்பாக அது இருக்க வேண்டும். பொருளாதார ரீதியான தீர்மானங்களுக்கு பதில் சொல்லும் வகையிலான அரசியலமைப்பாகவும் இருக்க வேண்டும். அதாவது அரசியல் ரீதியாக பொருளாதார நடைமுறைகளைத் தீர்மானமாக எடுக்கும் (Political economy) நிலையிலிருந்து அரசியலமைப்பு சார் பொருளாதாரம் (Constitutional economy) எனும் கருத்து நிலைக்கு மாற்றமடைதல் வேண்டும். அதாவது பொருளாதார ரீதியான தீர்மானங்களை எடுப்பதற்காக வழிமுறைகளையும் வழிகாட்டிக் கோட்பாடுகளையும் அரசியலமைப்பு குறிப்பிடுதல் வேண்டும்". "இந்த ஏற்பாடுகள் இலங்கையின் அரசியலமைப்பில் இருக்கிறதா? இல்லையா எனக் கேட்டால், இருக்கிறது". "அரசியலமைப்பின் 6ஆவது அத்தியாயத்தில் 'அரச கொள்கையின் வழிகாட்டிக் கோட்பாடுகளும் அடிப்படைக் கடமைகளும்' எனும் தலைப்பில் உள்ளது. கொள்கைகளை வகுக்கின்ற போதும் சட்டங்களை ஆக்குகின்ற போதும் - நாடாளுமன்றமும் அமைச்சரவையும் 06வது அத்தியாயத்தைப் பின்பற்ற வேண்டும் என கூறுகிறது. ஆனால், அந்த அத்தியாயம் பின்பற்றப்படுவதில்லை. ஆனாலும் அதனைப் பின்பற்றாமல் விட்டால், அதற்காக நீதிமன்றத்தில் அதனைக் கேள்விக்குட்படுத்த முடியாது என்றும் அந்த அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், அரசியலமைப்பின் அந்த ஏற்பாடுகள் அர்த்தமற்றவையாக மாறிவிட்டன". "அரசியலமைப்பின் 06ஆவது அத்தியாயத்தில் குறிப்பிடப்பட்டுள்ள விடயங்களைப் பின்பற்றாமல் விடும் போது, அதனை நீதிமன்றில் கேள்விக்குட்படுத்தும்படியாக மாற்றினால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டிவிடும். அரசியலமைப்பின் 06ஆவது அத்தியாயத்தில் இலங்கையில் தற்போதுள்ள அனைத்துப் பிரச்சினைகளுக்கும் கிட்டத்தட்ட தீர்வுகள் உள்ளன" என அவர் விளக்கமளித்தார். பட மூலாதாரம்,PMD "இலங்கை வரலாற்றில் தற்போதைய போராட்டக்களம் என்பது ஒரு சாதனையாகும்" எனக்கூறுகின்ற ஹக்கீம்; "இந்தப் போராட்டம் - மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது" என்கிறார். "அது அர்த்தமுள்ளதாக மாற வேண்டுமென்றால், மக்கள் - அரசியல் ரீதியான விழிப்புணர்ச்சியைப் பெறுதல் வேண்டும். தங்களுடைய அரசியல் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதற்கான அடிப்படைகளை மக்கள் விளங்கிக் கொள்தல் வேண்டும்" என சிரேஷ்ட விரிவுரையாளர் ஹக்கீம் வலியுறுத்தினார். அரசியலில் மக்கள் முதிர்ச்சியடையவில்லை - பேராசிரியர் சர்வேஸ்வரன் 'போலிப் பெரும்பான்மை மூலமாக - ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியானார்' எனக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக கொழும்பு பல்கலைக்கழக சட்டப் பேராசிரியர் ஆர். சர்வேஸ்வரனிடம் பிபிசி தமிழ் பேசியது. "ரணில் விக்ரமசிங்க மக்களால் நிராகரிக்கப்பட்டவர் எனும் வாதம் ஒன்று இருந்தாலும், அதற்கு மறுவாதமாக; 'கொழும்பு மாவட்டத்திலுள்ள மக்கள் அவருக்கு வாக்களிக்காமல் விட்டிருந்தாலும் கூட, இலங்கை முழுவதையும் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்கள் பிரதிநிதிகள் அவரை ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுத்துள்ளார்கள்' என, ரணில் தரப்பு கூற முடியும்" என்றார். "ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்காக நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட தேர்தலில் ரணில் விக்ரமசிங்க வெற்றிபெறுவார் என்பது எதிர்பார்க்கபட்டதுதான். ஆனாலும் இந்தளவுக்கு பெருவெற்றியாக அமையும் என எதிர்பார்க்கப்படவில்லை". "நாடாளுமன்றைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பெரும்பாலான அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அவர்களின் பிடியை கட்சிகளுக்குள் இழந்து விட்டனர். ஜே.வி.பியை தவிர ஏனைய கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், தத்தமது கட்சித் தலைமையின் தீர்மானத்துக்கு மாறாக வாக்களித்தமையினைக் காணக்கூடியதாக இருந்தது. அதனால்தான் ரணில் விக்ரமசிங்க 134 வாக்குகளைப் பெற்றார்" என, பேராசிரியர் சுட்டிக்காட்டினார். "ரணிலுடன் போட்டியிட்ட டளஸ் அழகப்பெருமவைப் பொறுத்தவரையில் அவர் ரணிலைப் போல் படித்த, செல்வாக்குப் பெற்ற நபரில்லை. மேலும், தமிழ் - முஸ்லிம் மக்களிடையே பெரிதாக அறியப்பட்டவராகவும் இல்லை. ரணில் விக்ரமசிங்கவின் அபார வெற்றிக்கு அதுவும் காரணமாகும்". "ஜனாதிபதி பதவி வெற்றிடமாகும் போது, அந்தப் பதவிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தேர்வு செய்யப்படுவார் எனவும், அவர் முந்தைய ஜனாதிபதியின் மீதமுள்ள பதவிக் காலத்துக்கு ஜனாதிபதியாக இருப்பார் எனவும் அரசியலமைப்பு கூறுகிறது. அரசியலமைப்பில் கூறப்பட்டதற்கிணங்கவே ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவர் அரசியலமைப்பை அவர் துஷ்பிரயோகம் செய்து இந்தப் பதவியை அவர் அடையவில்லை" என, பேராசிரியர் சர்வேஸ்வரன் குறிப்பிட்டார். பட மூலாதாரம்,PMD படக்குறிப்பு, ரணில் விக்கிரமசிங்க "69 லட்சம் மக்களின் ஆதரவுடன் ஜனாதிபதியாக வந்த கோட்டாபய ராஜபக்ஷவை, மூன்று வருடங்கள் நிறைவடைவதற்குள் மக்கள் விரட்டியடித்து விட்டார்கள். அதேவேளை மக்களால் நிராகரிக்கப்பட்ட ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவிக்கு கொண்டுவரப்பட்டுள்ளார். இலங்கை மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் அரசியலில் முதிர்ச்சி பெற்றவர்களாக இல்லை. அவர்கள் பெரும்பாலும் மனவெழுச்சியின் அடிப்படையில் செயற்படுகின்றவர்கள். அதாவது அப்போதுள்ள உணர்வுகளின் அடிப்படையில் தேர்லில் வாக்களிக்கின்றவர்களாகத்தான் இருந்து வருகின்றார்கள். மக்களின் மன எழுச்சியின் அடிப்படையில்தான் கோட்டாபய ராஜபக்ஷவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த வகையில் மக்களின் விருப்பு - வெறுப்பு என்பது கொள்கை சார்ந்ததாகவோ, நிலையானதாகவோ இருப்பதில்லை" என, அவர் விவரித்தார். திருத்துவதுதான் ஒரே வழி இதேவேளை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட முறைமை இனி இலங்கையில் இனி இருக்கக் கூடாது என்றால், அதற்குள்ள ஒரே வழி - அரசியலமைப்பைத் திருத்துவதுதான் என, கூறிய பேராசிரியர் சர்வேஸ்வரன்; "ஜனாதிபதி பதவி வெற்றிடமாகும் போது, ஜனாதிபதி தேர்தலொன்றினை நடத்த வேண்டுமென அரசியலமைப்பு திருத்தப்படுதல் வேண்டும்" என்கிறார். "அப்படி திருத்தப்பட்டாலும், இன்றுள்ள சூழ்நிலையை வைத்துப் பார்க்கும் போது, ஜனாதிபதித் தேர்தலொன்றினை நடத்துவதற்கான பொருளாதார நிலை இலங்கையில் இல்லை" என்கிறார். "அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானங்களை எடுக்கின்ற போது, தமது கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற மக்களின் விருப்புகளை அறிந்து அவற்றுக்கு அமைய முடிவுகளை எடுப்பதாகவும் கூற முடியாது. படக்குறிப்பு, ஜனாதிபதி பதவிக்கு வாக்கெடுப்பு கட்சிகளின் தீர்மானங்களுக்கு மாறாக, அந்தக் கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடந்து கொள்வதைப் போல, கட்சிகளின் தலைமைகளும் தமது கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மக்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாகவும் முடிவுகளை எடுப்பதுண்டு. மக்களின் பெரும் ஆதரவுடன் ஆட்சிக்கு வருபவரும், மக்களால் நிராகரிக்கப்பட்டவரும் ஒரு குறுகிய காலத்துக்குள் - அந்த நிலையிலிருந்து மாறலாம். மக்களால் ஆதரிக்கப்பட்டவர் மக்களாலேயே வெறுக்கப்படலாம். மக்கள் வெறுத்தவரை - பின்னர் மக்களே ஆதரிக்கலாம்" எனவும் அவர் குறிப்பிட்டார். சஜித் பிரேமதாசவின் பலவீனம் நாடாளுமன்றம் மூலம் ஜனாதிபதியைத் தெரிவு செய்யும் வாக்கெடுப்பில் சஜித் பிரேமதாச போட்டியிட்டிருக்க வேண்டும் எனக்கூறும் பேராசிரியர் சர்வேஸ்வரன்; வி யூகங்களை வகுப்பது அரசியலின் ஒரு பகுதி எனவும், சஜித் பிரேமதாச தனது கட்சியின் ஆதரவுடனும், தமிழ் - முஸ்லிம் கட்சிகளின் ஆரவுடனும், பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தனது பக்கத்துக்கு இழுத்து, அவர்களின் ஆதரவைப் பெற்றும், அவர் வெற்றிபெற முயற்சித்திருக்க வேண்டும் என்கிறார். "அவ்வாறு செய்யாமல் அவர் பின்வாங்கியமை மட்டுமல்லாமல், ராஜபக்ஷ குடும்பத்தினரின் பொதுஜன பெரமுன கட்சியின் முக்கியஸ்ரான டலஸ் அழக பெருமவை தேர்தலில் நிறுத்தி - ஆதரித்தமை, சஜித் பிரேமதாசவின் அரசியல் பலவீனத்தினையே காட்டுகிறது" எனக் குறிப்பிட்டதோடு, "பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரை ஜனாதிபதி தேர்வின் போது சஜித் ஆதரித்திருக்கவே கூடாது" என்றும் கூறினார். மேலும், "மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டவர், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் மற்றும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர் என்பவை கூட இலங்கையில் ஒரு மாயையாகவே இருக்கின்றது" எனவும் சர்வஸே்வரன் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/sri-lanka-62283253
  13. "சூரரைப் போற்று படத்திற்கு 5 தேசிய விருதுகள் என்பதை என்னால் நம்ப முடியவில்லை" - சுதா கொங்கரா பேட்டி ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழுக்காக 21 நிமிடங்களுக்கு முன்னர் 2020 ஆம் வருடத்திற்கான தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதில் சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த திரைக்கதை, சிறந்த படம், சிறந்த இசையமைப்பாளர் என 5 தேசிய விருதுகளை வென்றுள்ளது சூரரை போற்று திரைப்படம். நெகிழ்ச்சியான இந்த தருணம் குறித்து இத்திரைப்படத்தின் இயக்குனர் திரு சுதா கொங்கரா பிபிசி தமிழுக்காக ஹேமாராக்கேஷிடம் பகிர்ந்து கொண்ட தகவல்களை பார்க்கலாம். 5 தேசிய விருதுகள் "சூரரை போற்று " திரைப்படத்திற்கு கிடைத்திருக்கிறது? எப்படி இருக்கிறது இந்த தருணம்? "சூரரை போற்று " திரைப்படத்தில் மாறா என்ன நினைத்தாரோ அதையே தான் இப்போது நான் நினைக்கிறேன். திரைப்படத்தில் அத்தனை கஷ்டங்களுக்கு பிறகு மாறாவின் முதல் பிளைட்டில் மக்கள் அனைவரும் வந்து இறங்கும் போது " ஜெயிச்சிட்டே மாறா " என்ற வார்த்தைகளின் பெருமிதம் இன்றைக்கு எனக்கும் ஏற்பட்டுள்ளது. அதேப் போல் 5 தேசிய விருதுகள் என்பதை இப்போது வரை என்னால் நம்ப முடியவில்லை. மிகவும் பெருமிதமாக இருக்கிறது. ரஜினிகாந்த்: "அறிவில் அடங்கியது ஜாதி" - சர்ச்சையாகும் ஆன்மிக பேச்சு ரண்வீர் வழியில் விஷ்ணு விஷால்: நிர்வாண பட காட்சிக்கு வலுக்கும் விமர்சனம் கார்மென்ட்ஸில் வேலை பார்த்த 'சரவணன்' நடிகர் சூர்யாவானது எப்படி? இந்த படத்தை இயக்கும் போது தேசிய விருது பெறுவோம் என்று நினைத்தீர்களா? நிச்சயமாக இல்லை. படம் இயக்குகிறோம். அது மக்களுக்கு போய் சேர வேண்டும். அது மக்களுக்கு பிடிக்க வேண்டும். அதை அவர்கள் உணர வேண்டும் என்று தான் நினைத்தேன். ஆனால் படத்தொகுப்பின் போது பார்க்கையில் சூர்யா எத்தனை உழைப்பை கொடுத்திருக்கிறார். ஜிவி பிரகாஷ் எத்தனை அழகாய் இசையமைத்திருக்கிறார். இவர்களுக்கு விருது கிடைத்தால் நன்றாக இருக்கும் என்று மனதோரத்தில் ஒரு சிறிய ஆசை இருந்தது. சூரரை போற்று படம் இயக்கும் போது, இந்த படம் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டால் யாருக்கு முதலில் விருது கிடைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டீர்கள்? நிச்சமாக சூர்யாவுக்கு தான். ஒரு நல்ல கதை நம்மிடம் இருக்கும் போது, முதலில் அதை ஸ்டார் நடிகர் நடிக்க ஒப்புக் கொள் வேண்டும். பின்னர் நல்ல தயாரிப்பாளர் கிடைக்க வேண்டும். இந்த இரண்டு விஷயங்களையுமே சூர்யா எனக்கு மிகச்சிறப்பாக கொடுத்தார். சூர்யா என் மீது நம்பிக்கை வைத்தார். என்னை எந்த கேள்வியும் கேட்கவில்லை. நான் 100 மடங்கு சூர்யாவிடம் உழைப்பை எதிர்ப்பார்த்தால் அவர் 1000 மடங்கு உழைப்பை கொடுப்பார். அதற்காக அங்கீகாரம் இன்று அவருக்கு கிடைத்திருப்பதில் மகிழ்ச்சி. YouTube பதிவை கடந்து செல்ல, 1 காணொளிக் குறிப்புஎச்சரிக்கை: வெளியார் தகவல்களில் விளம்பரங்கள் இருக்கலாம் YouTube பதிவின் முடிவு, 1 இந்த படத்திற்காக கதை எழுத ஏன் 3 வருடங்கள் எடுத்துக்கொண்டீர்கள்? ஏனென்றால் கேப்டன் கோபிநாத் அவர்களின் வாழ்க்கையில் பல சம்பவங்கள் இருந்தன. காந்திய வழியை பின்பற்றும் அவரின் குடும்பம், அவருடைய பள்ளி வாழ்க்கை , பர்சனல் வாழ்க்கை என பல சுவாரஸ்யமான சம்பவங்கள் இருந்தன. எதை சொல்ல வேண்டும், எதை சொல்லக்கூடாது? எவற்றை சுவாரஸ்யமாக சொல்ல வேண்டும் என பல கேள்விகள் எனக்கு இருந்தது. படத்தில் கூட ஒரு காட்சியில் பிளைட் லேண்ட் ஆக வேண்டும், அதே சமயத்தில் அதை தீப்பிடித்தது போல் காட்ட வேண்டும். அது அவருடைய வாழ்க்கையில் நிஜமாக நடந்தது. இதை எப்படி ஒரே சமயத்தில் காண்பிப்பது என பயங்கர குழப்பமாக இருந்தது. அதனால் திரைக்கதை வடிவமைப்பு மிகத்தெளிவாக இருக்க வேண்டும் என்பதால் இத்தனை காலம் எடுத்துக் கொண்டேன். கேப்டன் கோபிநாத் அவர்களின் கதையை திரைப்படமாக எடுக்க அவர் உடனடியாக ஒப்புக் கொண்டாரா அல்லது உங்களுக்கு அதிக நேரம் எடுத்ததா? 2010 ஆம் ஆண்டு தான் இவருடைய வாழ்க்கைய நாம் படமாக எடுக்க வேண்டும் என்று தோன்றியது. அப்போது என்னுடைய எந்த படமும் வெளிவரவில்லை. அடுத்து வந்த என்னுடைய முதல் படமும் சரியாக போகவில்லை. அதனால் கேப்டன் நிச்சயம் என்னுடைய கதையை ஒப்புக் கொள்ள மாட்டார் என்று தான் நினைத்தேன். 2016 ஜனவரி மாதம் இறுதி சுற்று படம் வெளியானது. பல தரப்பில் அது வரவேற்பை பெற்றதும் 2016 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் கேப்டன் கோபிநாத் அவர்களை சந்தித்து, உங்களுடைய வாழ்க்கை வரலாற்றை படமாக எடுக்க வேண்டும் என விரும்புகிறேன் என கூறி கதையை சொல்ல தொடங்கினேன். அடுத்த 5 வது நிமிடம், ஓகே சுதா, இதை படமாக பண்ணலாம் என ஒப்புக் கொண்டார். இது தான் நடந்தது. பட மூலாதாரம்,SUDHA KONGARA/TWITTER சிறந்த நடிகைக்கான விருது அபர்ணாவிற்கு கிடைத்த தருணம் எப்படி இருந்தது? இந்த விருதுகளில் மிக பெரிய விருதாக நான் அதைத்தான் பார்க்கிறேன். ஒரு மிகப்பெரிய ஹீரோ உள்ள படத்தில், 150 படக்காட்சிகளில் வெறும் 25 காட்சிகளில் மட்டுமே வந்த அவரின் கதாபாத்திரம், அதற்காக அபர்ணவின் உழைப்பு இந்த விருதை பெற்றுத்தந்துள்ளது. அதேப்போல் நாங்கள் பெண்கள் 2 பேரும் இந்த கதாபாத்திரத்திற்கு கூடுதல் கவனம் எடுத்து திரைக்கதை எழுதினோம். எந்த இடத்திலும் பெண்களுக்குரிய கதாபாத்திரத்தை தவறாக திசைதிருப்பி விடக்கூடாது என்பதில் தெளிவாக இருந்தோம். அதேப்போல் கேப்டன் கோபிநாத்தின் மனைவி பார்கவி, அவர்களின் நிஜவாழ்க்கையில்,10 வருடங்கள் அவருக்கு எந்த வருமானமும் இல்லாத போது, அவருடைய பேக்கரியில் இருந்து வந்த வருமானத்தில் தான் குடும்பத்தை நடத்தியிருக்கிறார். அதனால் வரலாற்றில் என்ன நடந்ததோ அதை காட்சியாக வைத்தேன். அபர்ணாவும் சிறப்பான நடிப்பை கொடுத்திருந்தார். சூரரைப்போற்று படத்தில் கணவன் மனைவி இருவருமே ஜெயிப்பது போன்ற காட்சிகள் வரும் ? இதற்கு தூண்டுகோலாக இருந்தது எது? நிச்சயமாக பார்கவி தான். அவரிடம் பலமுறை பேசிய போது ஒரு விஷயம் தெளிவாக புரிந்தது. கேப்டன் கோபிநாத்தின் வெற்றிக்கு பின்னால் முதுகெலும்பாக இருந்தது அவரின் மனைவி பார்கவி தான். அதைத்தான் படத்தில் வைத்தேன். பட மூலாதாரம்,SUDHA KONGARA/TWITTER படக்குறிப்பு, சூரரைப் போற்று திரைப்படத்திற்கு விருது கிடைத்ததை கொண்டாடிய சுதா கொங்கரா மாறா பொம்மியிடம் கடன் கேட்கும் காட்சி பலதரப்பை ஈர்த்தது? இதை எப்படி தேர்வு செய்தீர்கள்? இந்த காட்சியை முதலில் வைக்கும் போது ஆண் ஸ்கிரிப்ட் ரைட்டர்கள் பதறினார்கள். ஒரு பெரிய ஹீரோ இதை எப்படி செய்வார் ? இதை மாற்றிவிடலாம் என்று சொன்னார்கள். நிறைய குடும்பங்களில் ஆண்கள் மனைவியிடம் கடன் வாங்குவது நடந்து கொண்டு தானே இருக்கிறது ? அதை ஏன் காட்டக்கூடாது என்று சொன்னேன். சூர்யா ஒரு உண்மையான பெண்ணியவாதி. கதைக்கு தேவை என்றால் எந்த காட்சியிலும் நடிக்க தயார் என்று சொன்னதால் இயல்பாக நடக்கும் எந்த விஷயத்தையும் நான் அகற்றவில்லை. ஆரம்ப காலகட்டத்தில் நீங்கள் சினிமாவில் நுழையும் போது என்ன தடைகளை எதிர்கொண்டீர்கள்? நான் சினிமா துறைக்கு செல்வதில் முதல் எதிர்ப்பை தெரிவித்தது என் குடும்பத்தினர்.எனக்கு 20 வயதில் திருமணம் ஆனது. திருமணத்திற்கு பிறகு கணவரிடம் என்னுடைய ஆசையை சொன்ன போது அவர், உனக்கு என்ன விருப்பமோ அதைச் செய் என்று ஊக்கப்படுத்தினார். நான் முதன்முதலில் நடிகை ரேவதி அவர்களிடம் பணிபுரிந்தேன். எனக்கு 2 சிறிய குழந்தைகள் உள்ளனர் அதனால் இத்தனை மணி நேரம் தான் என்னால் வரமுடியும் என்று தயக்கத்துடன் கூறியதற்கு Quantity of Time ஐ விட Quality of Time மிகவும் முக்கியம் என்று சொன்னார். நான் அவரிடம் வேலைபார்த்த வரை பெண் என்பதில் எந்த சலுகையையும் அவரிடம் நான் பெறவில்லை. பிறகு மணிரத்தினம் அவர்களிடம் பணிபுரிந்தது எனக்கு வேறொரு அனுபவமாக இருந்தது. பல கடினமான கட்டங்களை தாண்டி தான் இன்றைய நிலைக்கு வந்திருக்கிறேன். உங்கள் முதல் படம் சரியாக வெற்றியடைவில்லை என்ற போதிலும் முதல் வெற்றிக்காக நீங்கள் 6 வருடங்கள் காத்திருந்தீர்கள். அந்த தருணங்களை எப்படி எதிர்கொண்டீர்கள்? இறுதிச்சுற்று படத்தின் போது முதலில் தயாரிப்பாளர் கிடைக்கவில்லை. முதன்முதலில் நடிகர் மாதவன் அவர்களிடம் தான் கதை சொன்னேன். கதை அவருக்கு பிடித்து போகவும் தான் அதில் நடிப்பதாக சொன்னார். அது மட்டும் தான் எனக்கு எளிதாக நடந்தது. மற்றது அனைத்தும் எனக்கு சிரமமாக தான் நடந்தது. நீங்கள் கடந்து வந்த பாதை மூலமாக பெண்களுக்கு நீங்கள் சொல்ல விரும்புவது? பெண்களாகிய நாம் இன்னும் ஆணாதிக்க சமுதாயத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்.பெண்கள் தங்கள் வேலை மற்றும் தொழிலுக்குள் வரும் போதே தங்களுக்கான தடைகளை உடைத்து பணிபுரிந்தால் வெற்றி நிச்சயம். ஆண்கள் தங்களுடைய வேலையை நிருபிக்க 50 சதவீத உழைப்பை கொடுக்கும் ஒரு இடத்தில் பெண்கள் தங்களை நிருபிக்க 100 சதவீதத்தை உழைப்பை கொடுத்தால் மட்டுமே வெற்றி சாத்தியமாகிறது. யார் என்ன சொன்னாலும் அது மறுக்க முடியாத உண்மை. https://www.bbc.com/tamil/arts-and-culture-62283481
  14. உலகில் மிகப்பெரிய படிக குகை - எங்கு உள்ளது? எப்படி உருவானது? நெக்ஸ்ட் ஸ்டாப் ஸ்டோரிஸ் பிபிசி ட்ராவல் 2 மணி நேரங்களுக்கு முன்னர் ஸ்பெயினில் கைவிடப்பட்ட சுரங்கம் ஒரு பிரகாசமான பொக்கிஷத்தை மறைத்து வைத்துள்ளது. அது தான் உலகின் மிகப்பெரிய ஜியோட் (ஜியோட் - பாறையில் படிக அல்லது கனிமப் பொருட்களைக் கொண்ட உட்குடைவுப் பள்ளம்). இது இயற்கையான நிகழும் படிக நிகழ்வாகும். இது விஞ்ஞானிகளை திகைக்க வைத்துள்ளது. ஸ்பெயினின் தென்கிழக்கு அல்மேரியா மாகாணத்தில் புல்பி என்ற பகுதியில் உள்ள சுரங்கத்தில், விலைமதிப்பற்ற உலோகத்தால் உருவாக்கப்படாத புதையலாக இது உள்ளது. புவியியலாளரும் 'புல்பி ஜியோட்' டின் ஒருங்கிணைப்பாளருமான மிலா கர்ரெடெரோ, ஜியோட் என்பது பாறையில் படிக அல்லது கனிமப் பொருட்களைக் கொண்ட உட்குடைவுப் பள்ளமாகும் என்று விளக்குகிறார். அவர் ஒரு பெரிய பளப்பளப்பான படிக கற்கள் மீது அமர்ந்துக்கொண்டு இதனை விளக்குகிறார். இதற்கு ஒரு ஒப்பீடு செய்ய உள்ளே சிறிய படிக கற்கள் கொண்ட ஒரு சிறிய பாறையை உடைக்கிறார். "என் பின்னால் இருப்பதை போல்தான், இது மட்டும் சூப்பர் சைஸ் பதிப்பு," என்று அவர் சிரிக்கிறார். 'புல்பி ஜியோட்' எட்டு மீட்டர் அகலம், இரண்டு மீட்டர் உயரம் மற்றும் இரண்டு மீட்டர் ஆழம் கொண்டது. "ஜியோட் என்று வரும்போது, அதன் வரையறையின்படி, இது மிகப்பெரிய கண்டுபிடிப்பாகும்," என்று அவர் குறிப்பிட்டார். புல்பி மற்றொரு படிக அதிசயமான மெக்ஸிகோவில் உள்ள நைக்கா மைனுடன் குழப்பிக்கொள்ளக்கூடாது என்று அவர் கூறுகிறார். நைக்கா மைன் பெரிய பளப்பளப்பான படிக கற்கள் கொண்டுள்ளது (15 மீ நீளம் கொண்டது. புல்பி இரண்டு மீட்டர்)./ ஆனால் அது படிகங்களால் வரிசையாக இருக்கும் குகை. ஜியோட் அல்ல. ஸ்பெயினில் உள்ள இந்த ஜியோட் முதலில் 1873 முதல் 1969 வரை செயல்பட்ட வெள்ளி சுரங்கமான மினா ரிகாவில் உள்ள சுரங்கத் தொழிலாளர்களால் கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் பல ஆண்டுகளுக்குப் பிறகு, 1999ம் ஆண்டு, புவியியலாளர்கள் அதை மீண்டும் கண்டுபிடித்து, உலகின் கவனத்திற்குக் கொண்டு வந்தனர். "[சுரங்கத் தொழிலாளர்கள்] இந்த பாறையை வெடிக்கச் செய்து ஒரு ஜியோடைக் கண்டுபிடித்தபோது, அவர்கள் இந்த படிகங்களைக் கண்டுபிடிப்பதை விரும்பாததால் அவர்கள் ஒருவேளை வருத்தமடைந்திருக்கலாம். அவற்றை அகற்ற கூடுதல் வேலை இருந்தது. அவை நிறைய எடை கொண்டவை. அவை லாபம் அளிக்கும் ஒன்றல்ல," என்று கர்ரெடெரோ தெரிவித்தார். கூகுள் செயற்கை நுண்ணறிவுக்கு உணர்வு இருப்பதாகக் கூறிய பொறியாளர் பணி நீக்கம் தேஜாவு - அமானுஷ்யமா, மறுபிறவியா, மற்றொரு பிரபஞ்சத்தின் வாசலா? - உங்கள் அறிவுக்கு தீனிபோடும் அறிவியல் கட்டுரைகள் "விஞ்ஞானிகள் இன்னும் ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தாலும், இதன் முழு பகுதியும் ஒரு காலத்தில் நீருக்கடியில் இருந்ததாக அவர்கள் நம்புகிறார்கள். ஒரு கட்டத்தில், எரிமலை செயல்பாடு காரணமாக வண்டல் பாறைகளை உடைத்து, சூடான திரவங்களால் நிரப்பப்பட்டது. திரவங்கள் குளிர்ந்தவுடன், படிகங்கள் உருவாகத் தொடங்கின. பட மூலாதாரம்,GETTY IMAGES புல்பியில் உள்ள அன்ஹைட்ரைட் (பாறைகளை உருவாக்கிய தாது) சுமார் 250 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு டைனோசர்களின் காலத்தில் இருந்ததாக புவியியலாளர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால் 'ஜிப்சம்' படிகங்களின் ( gypsum crystals) வயது குறித்து அவர்கள் குறிப்பாக கூறமுடியவில்லை. அவை மிகக் குறைந்த அசுத்தங்களைக் கொண்டிருக்கின்றன என்பதால், அதன் காலம் குறிப்பிட்டு சொல்லும் அளவில் இல்லை. 2 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பே வளர ஆரம்பித்தன என்பது அவர்களின் கணிப்பு. "படிகம் எவ்வளவு மெதுவாக வளருமோ, அதன் அளவு பெரியதாகும். மேலும், படிகம் துல்லியமாகவும் இருக்கும்," என்று கர்ரெடெரோ கூறினார். 2019ம் ஆண்டு, இந்த சுரங்கம் பொதுமக்களுக்கு திறக்கப்பட்டது. சில இடிபாடுகள் அகற்றப்பட்டு, 42 மீ அவசரகால படிக்கட்டு போன்ற பாதுகாப்பு நடவடிக்கைகள் நிறுவப்பட்ட பின்னர், இங்கு, சுரங்கத் தொழிலாளர்கள் விட்டுச் சென்ற பொருட்களைக் கண்டறிந்தனர். இதில் சிகரெட், ஜாக்கெட்டுகள், ரப்பர் செருப்புகள், பீர் பாட்டில்கள் மற்றும் சுவரில் கீறல்கள் ஆகியவை இருந்தன. இதுவரை 100,000க்கும் மேற்பட்ட மக்கள் ஜியோடை பார்வையிட்டுள்ளனர். மேலும் படிகங்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக கரேட்டெரோவின் குழு வெப்பநிலை, கார்பன் டை ஆக்சைடு மற்றும் ஈரப்பதத்தை கவனமாக கண்காணித்து வருகிறது. "[மனித தொடர்புகளிலிருந்து வரும்] கார்பன் டை ஆக்சைடை விட, ஈரப்பதம் உண்மையில் படிகங்களுக்கு தீங்கு விளைவிக்கும்," என்று அவர் கூறினார். "ஏனென்றால் ஓர் அடுக்கு [ஈரப்பதம்] படிகங்களில் படிந்தால், அவை அவற்றின் தெள்ளத் தெளிந்த தன்மையை இழக்கின்றன." ஆனால், புல்பியின் படிகங்கள் குறிப்பிடத்தக்க வகையில் கண்ணாடிப்போன்ற தன்மையில் இருக்கின்றன. மேலும் பார்வையாளர்களும் விஞ்ஞானிகளும் ஒரே மாதிரியான இயற்கை நிகழ்வால் தொடர்ந்து பிரமிப்பு அடைந்துள்ளனர். "நான் அதைப் பார்த்தபோது என்ன உணர்ந்தேன் என்பதை என்னால் வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை," என்று கர்ரெடெரோ கூறினார். "இது விவரிக்க முடியாதது. ஏனென்றால் நாம் எவ்வளவு சிறியவர்கள் என்பதை இது நமக்கு உணர்த்துகிறது. இயற்கை நமக்கு என்ன கொடுத்திருக்கிறது என்பதைப் பாருங்கள்," என்றார். https://www.bbc.com/tamil/science-62280418
  15. ஜோசப் ஸ்டாலின்: சோவியத் சர்வாதிகாரி இறுதி நாட்களில் டாக்டரை வரவழைக்க தாமதம் ஆனது ஏன்? ரெஹான் ஃபசல் பிபிசி செய்தியாளர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES (உலக நாடுகளில் பதிவான பழங்காலச் சுவடுகள், முக்கிய சம்பவங்கள் மற்றும் வரலாற்றில் அதிகம் அறியப்படாத நபர்கள் பற்றிய தகவல்களை 'வரலாற்றுப் பதிவுகள்' என்கிற பெயரில் ஞாயிறுதோறும் வெளியிட்டு வருகிறது பிபிசி தமிழ். அந்த வரிசையில் 50ஆவது கட்டுரை இது.) 1952 டிசம்பர் 21 அன்று ஸ்டாலின், 'பில்ஸ்னாயா' பண்ணை வீட்டில் தனது பிறந்தநாள் விழாவை நடத்தினார். அதில் அவருக்கு நெருக்கமானவர்கள் அனைவரும் அழைக்கப்பட்டிருந்தனர். கிராமபோனில் நாட்டுப்புற இசையும் நாட்டியப் பாடல்களும் ஒலித்துக் கொண்டிருந்தன. ஸ்டாலினே அந்த இசைதட்டுகளை தேர்வு செய்தார். இதையெல்லாம் விரும்பாத குறைந்தபட்சம் இரண்டு விருந்தினர்கள் அங்கே இருந்தனர். அவர்களில் ஒருவர் நிகிதா குருஷேவ். அவர் நடனத்தை வெறுத்தார். அவரை கிண்டல் செய்ய, உக்ரைனின் 'கோபக்' நடனத்தை ஆடுமாறு ஸ்டாலின் அவரிடம் சொன்னார். ஸ்டாலினுக்கு நடன அசைவுகளில் தேர்ச்சி இல்லை. எனவே நடனம் தெரியாத மற்றவர்களை நடனமாடச்சொல்லி அவர்களை அசெளகரியப்படுத்தி மகிழ்வார். அந்த மாலைப் பொழுதை விரும்பாத மற்றொருவர், ஸ்டாலினின் மகள் ஸ்வெட்லானா அல்லிலுயவா. அந்த நேரத்தில் அவருக்கு 26 வயது. ஆனால் அதற்குள் அவருக்கு இரண்டு முறை விவாகரத்து ஆகியிருந்தது. யாரேனும் ஏதாவது செய்யும்படி கட்டளையிடுவதை ஸ்வெட்லானாவால் பொறுத்துக்கொள்ளமுடியாது. அவருடன் நடனமாட ஸ்டாலின் விருப்பம் தெரிவித்த போது, ஸ்வெட்லானாஅதை மறுத்துவிட்டார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்டாலினின் மகள் ஸ்வெட்லானா அல்லிலுயவா ஸ்வெட்லானாவின் முடியைப் பிடித்த ஸ்டாலின் இந்த மறுப்பை ஸ்டாலினால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அவர் மிகவும் கோபமடைந்தார். அவர் தனது மகளின் தலைமுடியைப் பிடித்து அவளை முன்னோக்கி இழுத்தார். அவமானத்தால் ஸ்வெட்லானாவின் முகம் சிவந்து கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தது. "ஸ்வெட்லானாவுக்கு பிரச்சனையை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காக ஸ்டாலின் இவ்வளவு கொடூரமாக நடந்து கொள்ளவில்லை. உண்மையில் அது ஸ்வெட்லானாவின் மீது பாசம் காட்டும் விதம். ஆனால் அவர் அட்டூழியம் செய்வதாக மற்றவர்கள் கருதினர். இதுபோன்ற செயல்களை ஸ்டாலின் அடிக்கடி செய்து வந்தார்," என்று நிகிதா குருஷேவ் தனது சுயசரிதையான 'குருஷேவ் ரிமம்பர்ஸ்' இல் எழுதியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்டாலின் தனது மகளுடன் ஸ்டாலினின் பண்ணை இல்லத்தில் விருந்து இரண்டு மாதங்களுக்குப் பிறகு, பிப்ரவரி 28 அன்று ஸ்டாலின் தனது நான்கு மூத்த சகாக்களான ஜார்ஜி மெலன்கோவ், பேரியா, குருஷேவ் மற்றும் புல்கானின் ஆகியோரை ஒரு படம் பார்ப்பதற்காக, தனது பண்ணை வீட்டிற்கு அழைத்தார். படம் பார்த்தபிறகு அனைவருக்கும் நல்ல உணவும், மதுவும் பரிமாறப்பட்டன. சாவர்க்கர்: இந்தியாவில் இவர் சிலருக்கு ஹீரோ, சிலருக்கு வில்லன் - ஏன்? எமர்ஜென்சி: இந்திரா காந்தி சிறையில் அடைத்த இரு ராணிகளின் வரலாறு இந்தியாவில் முஸ்லிம் சாம்ராஜ்ஜியத்திற்கு அடித்தளமிட்ட 'அடிமை' குத்புதீன் ஐபக் ஸ்டாலினுக்கு அதிருப்தி ஏற்படுத்தும் எதையும் கட்சித் தலைவர்கள் செய்யவில்லை. மார்ச் 1ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பார்ட்டி முடிந்தது. ஸ்டாலினுக்கு உடல்நிலை சரியில்லை என்று அப்போது யாருக்குமே தெரியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES 'நாங்கள் அங்கிருந்து புறப்படும்போது ஸ்டாலின் நன்றாகவே இருந்தார். அவர் எங்களை கேலி செய்தபடி இருந்தார். பலமுறை விரல்களால் என் வயிற்றில் குத்தினார். அவர் வேண்டுமென்றே என்னை யுக்ரேனிய உச்சரிப்பில் 'மிகிதா' என்று அழைத்தார்," என்று குருஷேவ் குறிப்பிட்டார். . அறைக்கு வரவேண்டாம் என்று பாதுகாவலர்களுக்கு அறிவுறுத்தல் பின்னர் தான் தூங்கப் போவதாக ஸ்டாலின் பாதுகாவலர்களிடம் கூறினார். 'தானே அழைக்கும் வரை தனது அறைக்குள் நுழைய வேண்டாம் என்று ஸ்டாலின் எங்களிடம் கூறினார்' என்று அவரது மெய்க்காப்பாளர்களில் ஒருவரான பாவெல் லோஸ்காசேவ், அவரது வாழ்க்கை வரலாற்றாசிரியர் ((Edward Radzinsky) எட்வார்ட் ராட்ஸின்ஸ்கையிடம் கூறினார். 'மார்ச் 1 ஆம் தேதி முழுவதும் ஸ்டாலினின் அறையில் இருந்து எந்த சத்தமும் இல்லை. ஒவ்வொரு மெய்க்காப்பாளருக்கும் இரண்டு மணி நேர 'ஷிப்ட்' இருந்தது. அதன் பிறகு இரண்டு மணி நேரம் ஓய்வெடுத்துவிட்டு அவர் மீண்டும் பணிக்கு வருவார். காவலர்கள் எப்போதும் உஷாராக இருக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் மந்தமாக இருக்கக்கூடாது என்பதற்காகவும் இந்த ஏற்பாடு செய்யப்பட்டது," என்று ஸ்டாலினின் மற்றொரு வாழ்க்கை வரலாற்றாசிரியர் ராபர்ட் சர்வீஸ் எழுதுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES நாள் முழுவதும் அறையில் இருந்து சத்தம் இல்லை ஸ்டாலின் காலையில் எழுந்ததும் எலுமிச்சைத் துண்டுடன் ஒரு கப் டீ கேட்பது வழக்கம். "ஸ்டாலின் நாள் முழுவதும் ஒரு கோப்பை தேநீர்கூட கேட்காததால் நாங்கள் அனைவரும் சிறிது கவலைப்பட்டோம்," என்று அவரது மெய்க்காப்பாளர்களில் ஒருவரான மார்ஷல் அலெக்சாண்டர் யோகோரோவ் பின்னர் தெரிவித்தார். தெர்மோஸில் வைத்திருந்த டீயை குடித்ததால் அவர் டீ கேட்கவில்லை என்று சிலர் நினைத்தனர். மாலை 6.30 மணியளவில் வீட்டின் விளக்குகள் போடப்பட்டன. ஆனால் அப்போதும் ஸ்டாலின் அறையை விட்டு வெளியே வரவில்லை. அவர் சாப்பிட உணவும் கேட்கவில்லை, எதையும் செய்ய உத்தரவும் இடவில்லை. இரவு 10 மணியளவில் மாஸ்கோவின் மத்திய குழு அலுவலகத்தில் இருந்து ஸ்டாலினுக்கு ஒரு பாக்கெட் வந்தது. காவலர்கள், தங்களுக்குள் விவாதித்த பிறகு, பாவெல் லோஷ்காச்சேவ் அந்த பாக்கெட்டுடன் ஸ்டாலினின் படுக்கையறைக்குச் செல்வார் என்று முடிவு செய்தனர். படுக்கையறைக்குள் நுழைந்த பாவெல் திகைத்துப் போனார். பட மூலாதாரம்,GETTY IMAGES தரையில் விழுந்திருந்த ஸ்டாலின் "ஸ்டாலின் தரையில் விழுந்திருந்தார். அவர் கை சற்று தூக்கியவாறு இருந்தது. அவர் முழுமையான மயக்கத்தில் இருக்கவில்லை. ஆனால் அவரால் எதுவும் பேச முடியவில்லை. பைஜாமாவில் சிறுநீர் கழித்திருந்தார். அருகில் 'பிராவ்தா' செய்தித்தாள் மற்றும் மினரல் வாட்டர் பாட்டில் இருந்தது. ஸ்டாலின் விளக்கை போட முயன்றபோது கீழே விழுந்திருக்க வேண்டும் என்று காவலர்கள் ஊகித்தனர்,"என்று ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் எட்வர்ட் ராட்ஜின்ஸ்கி எழுதுகிறார். இவ்வளவு நடந்திருந்தபோதிலும், டாக்டரை அழைக்கவேண்டும் என்று யாருக்கும் தோன்றவில்லை. மெய்க்காப்பாளர்கள் தொலைபேசியில் மாஸ்கோவில் இருந்த உள்துறை அமைச்சர் செர்ஜி இக்னாடியேவை தொடர்புகொண்டனர். இக்னாடியோவ், மெலன்கோவ் மற்றும் பேரியாவுக்குத் தெரிவித்தார். அந்த நேரத்தில் பேரியா தனது பெண் நண்பர் ஒருவருடன் இருந்தார். ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றில் அவருக்கு இருந்த நோய் பற்றி எதுவும் சொல்லக்கூடாது என்று பேரியா உத்தரவிட்டதாக, வோல்கோகோனோவ் மற்றும் ராட்ஜின்ஸ்கி இருவரும் எழுதுகிறார்கள். இதற்கிடையில், ஸ்டாலினின் பண்ணைவீட்டில் இருந்தவர்கள்,மேலிடத்தின் அறிவுறுத்தல்களுக்காக காத்திருந்தனர். இதற்கு நடுவே, ஸ்டாலினை தரையில் இருந்து தூக்கி கட்டிலில் படுக்க வைத்து கப்பளிப்போர்வையால் போர்த்தியதுதான் அவர்கள் செய்த ஒரே செயல். சிறிது நேரம் கழித்து, சாப்பாட்டு அறையில் இருந்த மற்றொரு படுக்கைக்கு அவர்கள் ஸ்டாலினை மாற்றினர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, லாவ்ரேந்தி பேரியா பேரியா காவலர்களை வெளியே அனுப்பினார் முதலில் பேரியாவும் மெலென்கோவும் அங்கு வந்தனர். 'மெலன்கோவ் தனது காலணிகளைக் கழற்றி கையில் எடுத்துக்கொண்டார். ஏனெனில் ஸ்டாலினின் அறையின் பளபளப்பான தரையில் காலணி சத்தம் கேட்டது. அவரும், பேரியாவும் ஸ்டாலினுக்கு அருகே சென்றபோது ஸ்டாலின் சத்தமாக குறட்டை விடத் தொடங்கினார். டாக்டரைக் கூப்பிடுவதற்குப் பதிலாக பேரியா காவலர்களிடம்' ஸ்டாலின் நன்றாகத் தூங்குகிறார். நீங்கள் அனைவரும் அறையை விட்டு வெளியேறுங்கள். அவர் நிம்மதியாக தூங்கட்டும்' என்று கூறினார்," என்று டிமிட்ரி வோல்கோகோனோவ் ஸ்டாலினின் வாழ்க்கை வரலாற்றான 'ஸ்டாலின் - ட்ரையம்ஃப் அண்ட் டிராஜெடி'யில் எழுதியுள்ளார். மருத்துவரை அழைப்பதில் தாமதம் 'எல்லா தலைவர்களும் மார்ச் 2 ஆம் தேதி காலை ஸ்டாலினின் பண்ணை வீட்டிற்கு வரத் தொடங்கினர். ஆனால் அதுவரையிலும் ஸ்டாலினைப் பார்க்க எந்த மருத்துவரும் அழைக்கப்படவில்லை' என்று குரு‌ஷேவ் தனது சுயசரிதையில் எழுதுகிறார். காலை 10 மணிக்கு ஸ்வெட்லானாவுக்கு செய்தி கிடைத்தது. அப்போது அவர் பிரெஞ்சு மொழி வகுப்பில் இருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES 'ஸ்டாலினின் உடல்நிலை வேண்டுமென்றே மோசமடைய அனுமதிக்கப்பட்டது என்ற சந்தேகத்திற்கு இது வலுவூட்டுகிறது. ஆனால், ஸ்டாலின் குணமடைந்துவிட்டால், தனக்கு உடல்நிலை சரியில்லாத போது நாட்டின் தலைமைப் பொறுப்பை எடுத்துக்கொண்டதற்காக அவரின் கோபத்தை சந்திக்க நேரிடும் என்ற அச்சத்தில் அவரது அரசியல் சகாக்கள் வேண்டுமென்றே முடிவெடுக்கத் தயங்கிருக்கலாம்," என்றும் ராபர்ட் சர்வீஸ் குறிப்பிட்டுள்ளார். இதற்குப் பின்னால் இன்னொரு கதையும் சொல்லப்படுகிறது. "1953-ல், ஸ்டாலின் பல முறை மயக்கமடைந்தார். மேலும் அவரது இரத்த அழுத்தம் மிக அதிகமாக இருந்தது. அவர் சிகரெட் பிடிப்பதை நிறுத்திவிட்டார். ஆனால் கடைசி வரை அவர் தனது மருத்துவர்களை நம்பவில்லை. மேலும் அவர்களை தன் வீட்டிலிருந்து விலக்கி வைக்க தன்னால் முடிந்த அனைத்தையும் செய்தார்," என்று வோல்கோகோனோவ் எழுதுகிறார். பிரிட்டிஷ் வரலாற்றில் மறக்கப்பட்ட லண்டனின் இந்திய ஆயாக்கள் - இவர்கள் செய்தது என்ன? முகலாயர்களை வீழ்த்தி டெல்லியை கைப்பற்றிய ஹேமு விக்ரமாதித்யா வரலாறு பேரரசர் பிருத்விராஜ் சௌஹான் vs முகமது கோரி: வரலாற்றில் எது கற்பனை? எது உண்மை? ரத்த வாந்தி இறுதியில் டாக்டர்கள் அங்கு சென்றபோது, ஸ்டாலினுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு 12 மணி நேரம் ஆகியிருந்தது. ஸ்டாலினின் உடல் மீது சிறுநீர் கறை படிந்திருப்பதை அவர்கள் கண்டனர். ஸ்டாலினின் ஆடைகளை கழற்றி வினிகர் கரைசலில் சுத்தம் செய்தனர். அதே நேரம் ஸ்டாலின் ரத்த வாந்தி எடுத்தார். பின்னர் டாக்டர்கள் ஸ்டாலினின் நுரையீரலை எக்ஸ்ரே எடுத்தனர். 'ஸ்டாலினின் மோசமான நிலையை மருத்துவர்கள் விரைவில் உணர்ந்தனர். அவரது உடலின் வலது பக்கம் முழுவதும் செயலிழந்திருந்தது. மதியத்திற்கு முன் ஸ்டாலினுக்கு எனிமா கொடுக்க அவர்கள் முயன்றனர். ஆனால் இதனால் பலன் கிடைப்பது கடினம் என்பதை அவர்கள் அறிந்திருந்தனர்," என்று ஜொனாதன் ப்ரெண்ட் மற்றும் விளாடிமிர் நௌமோவ் ஆகியோர் ஸ்டாலின்ஸ் டாக்டர்ஸ் ப்ளாட்' என்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்டாலினுடன் ஜார்ஜி மெலன்கோவ் ஸ்டாலின் தொடர்ந்து மூன்று நாட்கள் இதேபோல சுயநினைவின்றி இருந்தார். இதற்கிடையில் கட்சியின் இரண்டு தலைவர்கள் அவரது படுக்கைக்கு அருகில் தொடர்ந்து அமர்ந்திருந்தனர். பேரியா மற்றும் மெலென்கோவ் பகலிலும், குருஷேவ் மற்றும் புல்கானின், இரவிலும் அவரது படுக்கைக்கு அருகே இருந்தனர். ஸ்டாலினின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதால் அவருக்கு என்னவேண்டுமானாலும் ஆகலாம் என்று மார்ச் 3ம் தேதி டாக்டர்கள் தெரிவித்தனர். முக்கிய தலைவர்களின் கூட்டம் இதற்கிடையில், மார்ச் 4 ஆம் தேதி சோவியத் ஒன்றியத்தின் உயர்மட்டத் தலைவர்கள் சந்தித்தனர். மோசமான செய்திக்கு தயாராக இருக்குமாறு மருத்துவர்கள் ஏற்கனவே அவர்களிடம் கூறிவிட்டனர். இந்தக் கூட்டத்தில் புல்கானின் தவிர, எல்லா தலைவர்களும் கலந்து கொண்டனர். (அந்த நேரத்தில் ஸ்டாலினின் அருகில் அவர் இருந்தார்.) ஸ்டாலினின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது என்று மெலென்கோவ் கூறினார். மெலென்கோவ் ஸ்டாலினின் இடத்தில் உடனடியாக பொறுப்பேற்கவேண்டும் என்று பேரியா முன்மொழிந்தார். இதில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டு கூட்டம் முடிந்தது. ஆனால் ஸ்டாலின் இன்னும் காலமாகவில்லை. பிரிசிடியத்தின் எல்லா உறுப்பினர்களும் ஸ்டாலின் படுத்திருந்த பண்ணை விட்டை அடைந்தனர். ஸ்டாலின் கட்டிலில் குப்புற படுத்திருந்தார். ஸ்டாலினால் இனி எழுந்திருக்க முடியுமா என்று அவரது நெருங்கிய தோழர்கள் தங்கள் மனதிற்குள் நினைத்துக் கொண்டனர். பாதி சுயநினைவின்றி மரணத்தை நோக்கிச்சென்றுகொண்டிருந்தவர் மீதான அச்சம் அவர்களுக்கு அப்போதும் விலகியிருக்கவில்லை. ஜொனாதன் ப்ரெண்ட் மற்றும் நௌமோவ் ஆகியோர் தங்களது 'ஸ்டாலின்ஸ் டாக்டர்ஸ் ப்ளாட்' புத்தகத்தில், 'மார்ச் 5 அன்று, ஸ்டாலின் மீண்டும் ரத்த வாந்தி எடுத்தார். அவரது வயிற்றுக்குள் ரத்தம் சேர ஆரம்பித்தது," என்று எழுதுகிறார்கள். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சோவியத் தலைவர் ஜோசப் ஸ்டாலினின் பாதுகாப்புத் தலைவர் பேரியாவின் மடியில் ஸ்டாலினின் மகள் ஸ்வெட்லானா அல்லிலுயவா ஸ்டாலினின் கடைசி நிமிடம் இதற்கிடையில், ஸ்டாலினின் கையைப் பிடிப்பதன் மூலம் ஸ்டாலினுக்கு மிகவும் நெருக்கமானவர் என்ற தோற்றத்தை ஏற்படுத்த முயன்ற பேரியாவின் மீது அனைவரின் பார்வையும் இருந்தது. ஸ்டாலினின் மகள் ஸ்வெட்லானா அல்லிலுயவா பின்னர் தனது சுயசரிதையான 'டுவென்டி லெட்டர்ஸ் டு எ ஃப்ரெண்ட்' என்ற புத்தகத்தில், 'அவரது முகம் முற்றிலும் மாறிவிட்டது. அவருடைய உதடுகள் கருப்பாக மாறி முகம் அடையாளம் தெரியாமல் இருந்தது. கடைசி நேரத்தில் அவர் திடீரென்று கண்களைத் திறந்து அறையில் இருந்த அனைவரையும் பார்த்தார். யாரையோ காட்டி திட்டுவது போல் கையை உயர்த்தினார். அடுத்த நொடியே அவர் உயிர் பிரிந்தது,"என்று குறிப்பிட்டுள்ளார். அப்போது மணி காலை 9.50. பட மூலாதாரம்,GETTY IMAGES தலைவர்கள் அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டித் தழுவி கதறி அழுதனர். குருஷேவ் ஸ்வெட்லானாவை கட்டியணைத்து தனது இரங்கலை தெரிவித்தார். ஸ்டாலினை கடைசியாகப் பார்க்க எல்லா ஊழியர்களும், மெய்க்காவலர்களும் அனுமதிக்கப்பட்டனர். இரண்டு தசாப்தங்களாக ஸ்டாலின் ரஷ்யாவின் மிக உயரிய தலைவராக கருதப்பட்டார். 1924ல் லெனினின் உடலுக்கு செய்ததுபோலவே, ஸ்டாலினின் உடலுக்கும் செய்வது என்று சோவியத் தலைமை முடிவு செய்தது. ஸ்டாலின் உடலை பாதுகாக்கும்விதமாக பதனிடல் செய்வது என முடிவு செய்யப்பட்டது. 1953 மார்ச் 9 ஆம் தேதி நடந்த அவரது இறுதி நிகழ்வில் சீனப் பிரதமர் சூ என் லாய், கம்யூனிஸ்ட் தலைவர் பால்மிரோ டோக்லியாட்டி மற்றும் மான்ரிஸ் தோரெஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். ஸ்டாலினின் பழைய எதிரிகளான வின்ஸ்டன் சர்ச்சில் மற்றும் அமெரிக்க அதிபர் ஹாரி ட்ரூமன் ஆகியோர் இரங்கல் செய்தி அனுப்பினர். பட மூலாதாரம்,GETTY IMAGES கம்யூனிஸ்ட் நாடுகளின் செய்தித்தாள்கள் 'வரலாற்றில் இடம்பிடித்த மாமனிதர் இப்போது நம்மிடையே இல்லை' என்று எழுதின. அதே நேரம் மேற்கத்திய நாடுகளின் பத்திரிகைகள், மனிதகுலத்திற்கு எதிரான ஸ்டாலினின் குற்றங்களை நினைவு கூர்ந்ததோடு கூடவே, சோவியத் யூனியனின் பொருளாதார மீட்சி மற்றும் ஹிட்லருக்கு எதிரான ரஷ்யாவின் வெற்றிக்கான பெருமை ஸ்டாலினையே சாரும் என்று எழுதின. https://www.bbc.com/tamil/global-62277270
  16. இந்தத் தலைமுறை கற்பனையை இழந்து கொண்டிருக்கிறது- Writer S.Ramakrishnan | எஸ். ராமகிருஷ்ணன்
  17. மின்சாரக்கட்டமைப்பை இணைப்பது இலங்கைக்கு இலாபகரமான தீர்வு by யே.பெனிற்லஸ் 2022/07/12 in ஆசிரியர் தெரிவு, இலங்கை, கொழும்பு, சிறப்புக் கட்டுரைகள், முக்கிய செய்திகள் 86 1 A A 0 37 SHARES 1.2k VIEWS Share on FacebookShare on Twitter இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியின் ஒரு முக்கிய அம்சமாக நாளொன்றுக்கான முழுமையான மின்சாரத்தேவையை வழங்க முடியாத பலவீனமான நிலைமைகள் நீடித்துக்கொண்டிருக்கின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர். மின்சார உற்பத்திப் பற்றாக்குறையானது, உற்பத்திகள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளையும் வெகுவாகப் பாதித்துள்ளது. இது ஏற்கனவே நலிவடைந்த பொருளாதாரத்தை மேலும் மோசமான நிலைக்கு தள்ளிவிடுவதாகவே இருக்கப்போகின்றது. இலங்கையில் தற்போதைய மின் தட்டுப்பாடுக்கு பல வருடங்களாக் குறுகிய நோக்கத்துடன் ஏதேச்சதிகாரமாகவும், குறுகிய சிந்தனைகளுடனும் எடுக்கப்பட்ட முடிவுகளின் விளைவாகவே எனக்கொள்ள வேண்டியுள்ளது. குறிப்பாக அரசுக்கு சொந்தமான இலங்கை மின்சார சபையின் அனைத்து சீர்திருத்த முயற்சிகளும் தோல்வி கண்டுவிட்டன. இலங்கையின் தற்போதைய மின்சார தேவையானது உச்சபட்சமாக 2,600 மெஹாவாற்றாக உள்ளது. எவ்வாறாயினும், தற்போதைய நிலையில் நாட்டில் 4,000 மெஹாவாற்றுகளுக்கு மேல் உற்பத்தித் திறன் இருந்த போதிலும் சுமார் 2,300 மெஹாவாற்றுக்களை மட்டுமே உற்பத்தி செய்ய முடிகிறது. நுரைச்சோலையில் சீனாவினால் நிர்மாணிக்கப்பட்டுள்ள மிகப்பெரிய நிலக்கரி மூலம் இயங்கும் லக்விஜய கட்டமைப்பானது, அடிக்கடி பழுதடைந்து மின்சாரத் துறையின் சீரான மின்வழங்கலுக்கு தடையாக அமைந்துள்ளது. இப்போதும் கூட, லக்விஜய சுமார் 500 மெஹாவாற்றை மட்டுமே உற்பத்தி செய்து வருகிறது. இது 900 மெஹாவாற்றுக்கும் அதிகமான அதன் உரிமைக் கொள்ளளவிற்கு மிகவும் குறைவாக உள்ளது. எனவே, இலங்கை தற்போது கிட்டத்தட்ட 700 மெஹாவாற் பற்றாக்குறையை எதிர்கொண்டுள்ளது. கடந்த பல வருடங்களாக இலங்கை எந்த புதிய தலைமுறைத் திறனையும் உள்ளீர்ப்பதற்குத் தவறியமையால் சவால்களை மேலும் மோசமாக்கியுள்ளது. இந்நிலையில், மின்உற்பத்தியாளர்களிடமிருந்து அதிக விலைக்கு மின்சாரத்தை பெற்றுக்கொள்வதன் மூலம், தொடரும் தட்டுப்பாட்டினால், இலங்கை மின்சார சபை உள்ளிட்டவை பலனடைந்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தற்போது நாட்டுக்குத் தேவையான மின்சாரத்தின் பெரும்பகுதி திரவ எரிபொருளில் இயங்கும் கட்டமைப்பால் உருவாக்கப்படுகிறது இதனால் அது விலை உயர்ந்ததாக உள்ளது. தற்போதைய நிலையில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியில் உள்ள எந்தவொரு புதிய மின் திட்டங்களுக்கும் ஏற்படவில்லை. இந்த நிலை தொடர முடியாது என்பதை நாட்டின் தலைவர்களும் நிபுணர்களும் உணர வேண்டிய நேரம் இதுவாகும். தற்போது நெருக்கடிகள் இருக்கின்ற நிலையில், இவ்வாறான தவறுகளை நிவர்த்தி செய்வதற்கும் எதிர்காலத்தில் அவை மீண்டும் நிகழாமல் தடுப்பதற்கும் ஒரு சிறந்த வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. நவீன சமுதாயத்தில் வளர்ச்சி முன்னோக்கி பார்க்கக்கூடிய, தொழில்நுட்ப ரீதியாக சாத்தியமான மற்றும் மலிவு விலையில் தீர்வுகளை நோக்கி நகர்வதற்கு இலங்கைக்கு வலுவான சந்தர்ப்பம் தற்போது ஏற்பட்டுள்ளது. இலங்கையில் மின்சாரம் தொடர்பான பிரச்சினைகளைத் தணிப்பதில் இலகுவாகச் செயற்படுத்தக்கூடிய மற்றும் நீண்ட தூரம் செல்லக்கூடிய தீர்வு முன்மொழிவொன்று காணப்படுகின்றது. குறிப்பாக, இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மின் இணைப்புகளை நிறுவுவதற்கான முன்மொழிவாகும். இது ஒரு தசாப்தத்திற்கும் மேலாக விவாதத்தில் உள்ளது. நிறைவுக்கு வந்துள்ள இந்த திட்டத்தினை முன்னெடுப்பதற்கான சாகமான நிலைமைகளைச் சுட்டிக்காட்டியுள்ளன. மேலும் இந்த திட்டத்தை செயல்படுத்துவது மட்டுமல்லாமல், அதற்கு நிதியளிக்கவும் இந்திய அரசாங்கம் தயாராக இருப்பதாக தகவல்கள் உள்ளன. அதன்மூலம், இலங்கையில் ஏற்பட்டுள்ள தற்காலிக மின் பற்றாக்குறையை நிவர்த்தி செய்வதுடன், இந்த திட்டத்தின் முக்கிய பயனாளியாக இலங்கையாகவே உள்ளது. அதுமட்டுமன்றி, இத்திட்டத்தின் ஊடாக, இலங்கை தனக்கு உபரியாகவுள்ள புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை இந்தியாவிற்கு ஏற்றுமதி செய்து அந்நிய செலாவணியை ஈட்ட முடியும். புதுப்பிக்கத்தக்க எரிசக்தி ஆற்றல், குறிப்பாக இலங்கையின் வடக்கு கடற்பகுதிகளில் முழுமையாக அபிவிருத்தி அடைந்தவுடன் நாட்டின் தேவைகளுக்கு அப்பாற்பட்டதாக இருக்கும். எனவே, பெரிய எரிசக்தித் தேவைகளைக் கருத்தில் கொண்டு, இந்த சக்திக்கான மிகவும் இயற்கையான ஏற்றுமதி இடமாக இந்தியா இருக்கும். இந்தியாவுடன் மின்சாரக்கட்டமைப்பு இணைப்புகளை நிறுவியுள்ள நேபாளம், பூடான் மற்றும் பங்களாதேஷ் போன்றவை ஏற்கனவே பயனுள்ளதாக நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேசமான நிலையில் உள்ள இலங்கை, இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் இயற்கையான ஒற்றுமையைப் பயன்படுத்துவதற்கு உரிய நேரம் இதுவாகும். நாட்டின் கடன்களை ஒப்பிடும்போது, அவற்றை மீளச் செலுத்துவதற்கான நடவடிக்கைகளில் ஒன்றாக நீண்ட காலத்திற்கு மின் கட்டமைப்புக்களில் முதலீட்டு செய்யும் வகையில் இருநாடுகளுக்கு இடையிலான இணைப்பு நாட்டிற்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். அந்த வகையில், இந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்த அதிகாரிகள் உறுதியான நடவடிக்கை எடுப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. https://athavannews.com/2022/1290983
  18. இலங்கை நெருக்கடி: "போராட்டக்காரர்கள் மீதான தாக்குதலை விவாதிக்க நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும்" - எதிர்க்கட்சி கோரிக்கை 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,LAKSHMAN KIRIELLA/TWITTER (இந்தியா, இலங்கையில் இன்று (24.07.2022) நாளிதழ்கள் மற்றும் இணையத்தில் வெளியான செய்திகளில் கவனிக்க வேண்டிய சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) காலிமுகத் திடல் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்து விவாதம் நடத்துவதற்கு நாடாளுமன்றத்தைக் கூட்டுமாறு பிரதமரிடம் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரிக்கை விடுத்துள்ளதாக வீரகேசரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. அதுகுறித்த செய்தியின்படி, ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் பிரதான ஒருங்கிணைப்பாளும் நாடாளுமன்ற உறுப்பினருமான லக்ஷ்மன் கிரியெல்ல பிரதமர் தினேஷ் குணவர்தனவிற்கு கடிதம் மூலம் இந்தக் கோரிக்கையை விடுத்துள்ளார். அந்தக் கடிதத்தில், "காலிமுகத் திடல் கோட்டா கோ கம அமைதிப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட அடக்குமுறை தாக்குதல் மற்றும் தாக்குதல் நடத்தப்பட்ட விதம் ஜனநாயகத்திற்கு கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. அதைப் பலரும் வன்மையாகச் சுட்டிக்காட்டியுள்ளனர். காலிமுகத் திடல் மக்கள் எழுச்சிப் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல் குறித்து விவாதம் நடத்துவதற்காக நாளைய தினம் திங்கட்கிழமை நாடாளுமன்றத்தைக் கூட்டுங்கள். மேலும், காலிமுகத் திடல் போராட்டக்காரர்கள் மீது பாதுகாப்பு தரப்பினர் கடுமையான தாக்குதல் தொடர்பில் பல்வேறு சர்வதேச சமூகம் சார்ந்த அமைப்புகளும் சர்வதேச நாடுகளும் கடும் கண்டனங்களைத் தெரிவித்து வருகின்றன. இலங்கை ராணுவத்தின் தாக்குதல்: பிபிசி செய்தியாளர் நேரில் கண்டது "பிள்ளையைப் போல தென்னை மரங்களை வளர்த்தேன். விலையில்லாததால் வெட்டிவிட்டேன்" தஞ்சாவூரில் திருடப்பட்ட முதல் தமிழ் பைபிள் லண்டனில் கண்டுபிடிப்பு இந்நிலையில், இவ்விடயம் இலங்கை தற்போது எதிர்நோக்கும் பொருளாதார நெருக்கடியை மேலும் உக்கிரமடையச் செய்யும். அதற்கமைவாக, குறித்த தாக்குதல் குறித்து விவாதிக்க நாளைய தினம் நாடாளுமன்றத்தைக் கூட்டி விவாதத்திற்கு ஏற்பாடு செய்யுமாறு பிரதான எதிர்க்கட்சி என்ற ரீதியில் கோரிக்கை விடுக்கிறோம்," என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.bbc.com/tamil/india-62281894
  19. ஜெயகாந்தனின் சபை அறிவார்ந்த சபை - WRITER S.RAMAKRISHNAN - CHAI WITH CHITHRA | SOCIAL TALK - PART 13
  20. பல புத்தகக் கண்காட்சிகளில் எழுத்தாளர்களை அழைப்பதே இல்லை | S.Ramakrishnan | CWC-SOCIAL TALK| PART 12
  21. நல்ல விமர்சனம் எழுத பணம் தர முன் வந்த தயாரிப்பாளர்! S.Ramakrishnan | CWC-SOCIAL TALK| PART 11
  22. “என் கணவர் இப்படித்தான் 11 பெண்களை ஏமாற்றி திருமணம் செய்தார்,” - ஐதராபாத்தில் பாதிக்கப்பட்ட பெண்கள் கூறும் புகார் சுரேகா அப்பூரி பிபிசி தெலுங்கு சேவை 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு, அடப்பா சிவசங்கர் பாபு "நான் சம்பாதித்த பணம் மட்டுமல்ல, என் உறவினர்களிடம் இருந்தும் பணம் வாங்கிக் கொடுத்தேன். இப்போது அவர் என் பணத்தை திருப்பிக் கொடுப்பதாகக் கூறுகிறார். ஆனால், அவருடன் என் உடலையும் நான் பகிர்ந்துக்கொண்டேன். அந்த ஆளுக்கு என்ன நற்பண்பு உள்ளது? இது வைதேகியின் (பெயர் மாற்றப்பட்டுள்ளது). ஜதராபாத்தை சேர்ந்த அடபா சிவசங்கர் பாபு என்பவரால் அவர் ஏமாற்றப்பட்டிருக்கிறார். இதுவரை எட்டு பெண்களை ஏமாற்றி திருமணம் செய்திருப்பதாக அவர் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது. சிவசங்கர் திருமணம் செய்ததாகக் கூறப்படும் பெண்களில் ஒருவர். "என் கணவர் பல பெண்களை திருமணம் செய்துள்ளார் என்று உணர்ந்த நேரத்திலிருந்து, நான் அவரை நீதிக்கு முன் நிறுத்த என்னால் முடிந்த அளவுக்குப் போராடிக் கொண்டிருக்கிறேன்", என்கிறார் வைதேகி. கடந்த ஜூலை 13ஆம் தேதியன்று ஜதராபாத்தில் உள்ள பத்திரிகையாளர்கள் மன்றத்தில், இரண்டு பெண்கள் சிவசங்கர் தங்களை மணந்துக்கொண்டதாகவும் இறுதியில் ஏமாற்றிவிட்டதாகவும் கூறினார்கள். "கொண்டாபூரில், நான் குடியிருக்கும் வீட்டில் இருந்து இரண்டு வீதிகள் தள்ளி ஒரு குடும்பத்தை அவர் வைத்தார். 200 மீட்டர் தள்ளி, மற்றொரு குடும்பத்தை அவர் வைத்தார்," என்று வைதேகி கூறுகிறார். அதேபோன்று அவர் தங்களை ஏமாற்றியதாக இன்னும் சில பெண்களும் கூறினார்கள். "இதுவரை அவர் 11 பெண்களை திருமணம் செய்துள்ளார். ஆனால், எங்களால் 8 பெண்கள் குறித்த விவரங்களை மட்டுமே சேகரிக்க முடிந்தது," என்று செய்தியாளர்கள் சந்திப்பில் ஒரு பெண் கூறினார். சிவசங்கர் ஒருவரை திருமணம் செய்துகொண்ட ஒரு மாதத்திற்குள் மேலும் இரண்டு பெண்களை திருமணம் செய்து கொள்கிறார். இது தெரிய வந்ததும் அவரிடம் விசாரித்த போது புதுமணப் பெண்ணை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து ஷூரிட்டி தருவதாக உறுதியளித்தார். இதற்கு முன் திருமணம் செய்துகொண்டவர்களுக்கு பணத்தைத் திருப்பித் தருவதாகக் கூறுகிறார் . சில காலமாக இது அவருடைய வேலையாக இருந்தது. இதைக் குறைந்தபட்சம் இப்போதாவது நிறுத்த வேண்டும்," என்றார் வைதேகி. சிவசங்கர் இந்த குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார். யார் இந்த அடபா சிவசங்கர் பாபு? ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள மங்களகிரி மண்டலத்தில் உள்ள பெத்தாபுடியை சேர்ந்தவர் அடபா சிவசங்கர் பாபு. தனியார் துறையில் பணிபுரிந்து வருகிறார். "அவர் 2018ஆம் ஆண்டு, மங்களகிரி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை மணந்தார். அதன் பிறகு அவர் ஐதராபாத் சென்றார். அப்போது முதல், அவர் விவாகரத்தான பெண்கள் மீது கவனம் செலுத்தினார். புதிய வாழ்க்கையைத் தொடங்க விரும்பும் விவாகரத்து ஆன பெண்களை மேட்ரிமோனி இணையதளங்களில் தேடுவது அவரது வழக்கம். கள்ளக்குறிச்சி மாணவி இறுதி சடங்கு: ஊர் மக்கள் பங்கேற்பு, வெளியூர் ஆட்களுக்கு அனுமதி மறுப்பு இலங்கை நெருக்கடி: "இந்த நாட்டில் பிரசவிக்க பயமாக இருக்கிறது" - கர்ப்பிணிகள் நிலை என்ன? 'மனைவி தாலியை கழற்றியதால் மன உளைச்சல் ஆகிறது’ எனக் கூறி கணவன் விவாகரத்து பெறலாமா? மேல்தட்டு பெண்களை குறிவைத்தும் வேலைக்குச் செல்லும் பெண்களைக் குறிவைத்தும், அவர்களின் கைபேசி எண்களை எடுத்து அவர்களிடம் பேசத் தொடங்கினார். மேலும் அவர்களுடைய பெற்றோரிடமும் குடும்பத்தினரிடமும் பேசினார். அவரது குடும்பத்தைப் பற்றி கேட்டால், அவர் தனது பெற்றோர் இப்போது இல்லை என்றும் விவாகரத்து பெற்றவர் என்றும் அவர்களிடம் கூறுவது வழக்கம். தனக்கு ஒரு பெண் குழந்தை இருப்பதாகச் சொல்லி, அவர்களை ஒரு குழந்தையைச் சந்திக்க வைப்பது வழக்கம். மேலும், அத்தை மற்றும் மாமா வேடத்தில் ஒருவரை நடிக்க வைத்து, அவர் அந்தப் பெண்ணை திருமணம் செய்து கொள்வார். அதன்பிறகு அவர்களிடமிருந்து சாமர்த்தியமாக பணம் பறித்து வந்தார். திருமணமாகி ஒன்றரை மாதம் ஆன நிலையில், அந்தப் பெண்ணை வேலையை விட்டுவிடுமாறு வற்புறுத்தத் தொடங்குவார். இதற்கிடையில், தான் முன்பு திருமணம் செய்து கொண்ட பெண்கள் சந்தேகப்பட ஆரம்பித்தால், அவர்களிடம் வாங்கிய பணத்தைத் திருப்பி தருவதாகக் கூறுவார். பணத்தை திருப்பி தருவதாக உறுதியளித்ததற்குக் காரணம், புது மனைவி பணம் தருவார் என்ற நம்பிக்கைதான். புது மனைவியிடம் தனக்கு ஏதோ தேவை இருப்பதாகச் சொல்லி, அவரிடம் இருந்து பணத்தைப் பெற்று, அதில் ஒரு பகுதியை அவர் மீது சந்தேகப்பட்ட மற்றொரு மனைவிக்குக் கொடுப்பார். புதிய மனைவி அவரிடம் பணத்தைத் திரும்பக் கேட்கத் தொடங்கும் போது, அவர் ஒரு புதிய பெண்ணுடன் நட்பு கொண்டு அவரை திருமணம் செய்து கொள்வார். இதுபோல் இன்று வரை 11 பேரை திருமணம் செய்துள்ளார்", என்றார் வைதேகி. இதுவரை 8 பெண்கள் பற்றிய ஆதாரங்களை மட்டுமே சேகரிக்க முடிந்தது என்றும் அவர் கூறினார். சில பெண்கள் ஏற்கெனவே ஒருமுறை விவாகரத்து ஆனதால், இந்த விவகாரத்தில் தாங்கள் ஏமாற்றப்பட்டதாக வெளியே வந்தால், அது தங்களின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் என்ற அச்சம் காரணமாக முன்வருவதில்லை என்றும் அவர் கூறினார். சிவசங்கர் திருமணம் செய்துகொண்டதாகக் கூறப்படும் பெண்களில் வர்ஷினியும் ஒருவர். (பெயர் மாற்றப்பட்டுள்ளது) "என்னை 2021ஆம் ஆண்டு நவம்பரில் திருமணம் செய்தார். 2022ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வைதேகியை திருமணம் செய்தார். எங்கள் திருமணம் 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பதிவு செய்யப்பட்டது. அதே மாதத்தில் அவர் வேறொரு பெண்ணை மணந்தார். இந்தப் பெண் இப்போது கர்ப்பமாக உள்ளார். சிவசங்கரை பற்றி நாங்கள் கூறியும் சிவசங்கருடன் சென்றுவிட்டார்," என்று வர்ஷினி பிபிசியிடம் பேசினார். "விவாகரத்துக்குப் பிறகு புது வாழ்க்கையைத் தொடங்க நினைக்கும் எங்களைப் போன்ற பெண்கள் சிவசங்கரால் ஏமாற்றப்பட்டுள்ளனர். உங்களுக்குத் தெரிந்ததைப்போல், எங்களுக்கு நல்ல, வேலைக்குச் செல்லும் கணவர் வேண்டும், எங்கள் பெற்றோர்களுக்கு தங்கள் மகளின் எதிர்காலம் பிரகாசமாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். அவர் எங்களுக்குப் பாதுகாப்பு அளித்தால் போதும், இந்த ஆசைகளை அவர் பயன்படுத்திக் கொண்டார்," என்று வர்ஷினி புலம்புகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES பெண்கள் அவரை எப்படி நம்பினார்கள்? பெண்களைச் சந்திக்கும் போது, மாதம் லட்சக்கணக்கில் சம்பாதிப்பதாகக் கூறுவார். "அதன் பிறகு, ஆரம்பக் கட்டம் திருமணத்தை நோக்கி நகரும்போது, அவர் போலி சம்பள சீட்டுகளையும் ஊழியர் அடையாள அட்டைகளையும் உருவாக்குவார். இப்படி அந்த பெண்ணை மட்டுமின்றி அவரது பெற்றோர், உறவினர்களையும் நம்ப வைக்கிறார்," என்கிறார்கள் சிவசங்கர் தங்களை ஏமாற்றிவிட்டதாகக் கூறும் பெண்கள். "திருமணமான ஒரு மாதத்திலேயே அந்தப் பெண் வேலை செய்வது பிடிக்கவில்லை என்று சொல்லி வேலையை விட்டுவிடுமாறு அவரை வற்புறுத்தத் தொடங்குவார். அந்தப் பெண் வேலை செய்து வெளியுலகம் தெரிந்தால், அவரது திட்டம் அம்பலமாகிவிடுமோ என்ற பயம். தனக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்பு கிடைத்ததாகவும் தனது நிறுவனம் தன்னை விரைவில் வெளிநாட்டுக்கு அனுப்புவதாகவும் மெதுவாகக் கதை கட்டுவார். எல்லோரும் அங்கே மகிழ்ச்சியாகக் குடியேறலாம் என்று அவர் அந்தப் பெண்னை நம்ப வைப்பார். அதன்பிறகு, தனது பாஸ்போர்ட்டை தொலைத்துவிட்டதாகவும் அதனால், தனது அமெரிக்கப் பயணம் தாமதமாகி வருவதாகவும் கூறுவார். இந்தச் செயல்பாட்டில், நிறுவனம் பணம் செலுத்துவதை நிறுத்திவிட்டதாகவும் இப்போது தனது அனைத்து ஆவணங்களையும் மீண்டும் பெறுவதற்கு லட்சங்கள் செலவாகும் என்றும் அவர் அவர்களை நம்ப வைப்பார். இது போல் பெண்ணிடம் மட்டும் கடன் வாங்காமல், அந்தப் பெண்ணின் உறவினர்களிடம் கடன் வாங்கிக் கொடுக்கவும் செய்கிறார். ஒவ்வொரு பெண்ணிடமிருந்தும் 25-30 லட்சம் பெற்றுள்ளார்," என்றார் வர்ஷினி. எப்படி சந்தேகம் எழுந்தது? வர்ஷினியை திருமணம் செய்த பிறகு, தனது நிறுவனம் தன்னை ஒரு ப்ராஜெக்ட் வேலைக்காக அமெரிக்காவுக்கு அனுப்புவதாக சிவசங்கர் அவரிடம் கூறினார். வர்ஷினியையும் அழைத்துச் செல்வதாகச் சொல்லி அவர்களது திருமணத்தைப் பதிவு செய்து வைத்தார். வர்ஷினியின் சகோதரிக்கும் அமெரிக்காவில் வேலை வாங்கித் தருவதாக அவரிடம் கூறினார். விசா நடைமுறைக்கு பணம் தேவை என்று கூறி, அவரிடமும் அவரது பெற்றோரிடமும் கடன் வாங்கினார். சில நாட்களுக்குப் பிறகு, அவர் தனது அமெரிக்க பயணம் ஒத்திவைக்கப்பட்டதாக அவரிடம் கூறினார். பணத்தைத் திருப்பி செலுத்தாததால், வர்ஷினியின் பெற்றொர்கள் விசாரணை நடத்தினர். பல காரணங்களைக் கூறி அவர்களைத் தவிர்த்துவிட்டார். அவரது நடத்தையில் சந்தேகம் எழுந்ததால், அவரிடம் தீவிரமாக விசாரித்தபோது, வேண்டுமானால் காவல்துறையில் புகார் செய்யலாம் என அலட்சியமாக பதில் அளித்துள்ளார். வர்ஷினி தனது பெற்றோருடன் சேர்ந்து மேடக் மாவட்டம் ராமசவுத்ராபுரம் காவல்துறையில் புகார் செய்தார். காவல்துறை அவரை காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். வைதேகியுடன் ஸ்டேஷனுக்கு வந்தார். அவரை தன் மனைவி என்று அறிமுகப்படுத்தினார். அதுமட்டுமில்லாமல் வைதேகியை பொய் சொல்லி சமாதானப்படுத்தினார். தன்னை ஏமாற்றியது வர்ஷினி தான் என்று கூறிய அவர், காவல் நிலையத்தில் தனக்கு ஆதரவாக நிற்கும்படி வைதேகியிடம் கேட்டுக் கொண்டார். வர்ஷினிக்கும் அவருடைய பெற்றோருக்கும் திருப்பிச் செலுத்துவது அவருடைய பொறுப்பு என்று வைதேகியிடம் சொல்ல வைத்தார். ரத்த உறவு திருமணத்தால் பிறக்கும் குழந்தைக்கு குறைபாடா? எச்சரிக்கும் மருத்துவர் மீச வச்ச பொம்பள: அழகை நினைத்து அவதிப்படுகிறாரா? முறுக்கிவிட்டு பெருமைப்புடகிறாரா? கூகுள் செயற்கை நுண்ணறிவுக்கு உணர்வு இருப்பதாகக் கூறிய பொறியாளர் பணி நீக்கம் ஆனால், வைதேகியும் மெதுவாக அவரைச் சந்தேகிக்கத் தொடங்கினார். "அவர் தினமும் இரவு நேரப் பணி செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு பெண்ணிடம் எப்போதும் பேசிக்கொண்டிருப்பார். கேட்டால், அவர் தங்கள் வாடிக்கையாளர் என்று கூறுவார். ரகசியமாக வேறொரு ஃபோனை உபயோகித்து, அந்த ஃபோனை காரில் வைத்துவிட்டு வருவார். உண்மையில், அவர் குளியலறையிலும் ரகசியமாக தொலைபேசியில் பேசுவதை நாங்கள் கவனித்தோம். அந்த ஃபோனை பிடுங்கி, எதிர்முனையில் இருக்கும் அந்த பெண்ணிடம் பேசிய போது அவரது மனைவி என்று சொன்னார். இந்த விஷயங்களை அறிந்ததும் நான் அதிர்ச்சியடைந்தேன். அதன் பிறகு வர்ஷினியிடம் பேசினேன். நாங்கள் இருவரும் கூடுதல் தகவல்களைத் தேடத் தொடங்கியபோது, அவர் பக்கத்து வீதிகளில் மூன்று குடும்பங்களை நடத்தி வருவதைக் கண்டோம். கடந்த 2018ஆம் ஆண்டு முதல் அவர் பெண்களின் வாழ்க்கையில் விளையாடி வருவதை நாங்கள் கண்டுபிடித்தோம். கடந்த காலங்களிலும் அவர் மீது பெண்கள் வழக்குப் பதிவு செய்தனர். அந்த விவரங்களைச் சேகரித்தோம்.' என்றார் வைதேகி. 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டுகளில் பெண்களை திருமணம் செய்து ஏமாற்றியதாக சிவசங்கருக்கு எதிராக ஐதராபாத்தில் உள்ள குகட்பல்லியில் 2 வழக்குகளும் ஆந்திர மாநிலம் அனந்தபுரத்தில் ஒரு வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது ஐதராபாத்தில் உள்ள கேபிஎச்பி, ஆர்சி புரம், கச்சிபௌலி, எஸ்ஆர் நகர் காவல் நிலையங்களிலும், அனந்தபுரம் காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் தெரிவித்தனர். இதற்கு சிவசங்கரின் பதில் என்ன? சிவசங்கர் திருமணம் செய்து ஏமாற்றியதாக பெண்கள் கூறியதை அடுத்து அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டார். தான் தலைமறைவாகவில்லை என்றும் ஆந்திர மாநிலம் குண்டூரில் இருப்பதாகவும் அந்த வீடியோவில் கூறியுள்ளார். "நான் 8-11 பெண்களை திருமணம் செய்து கொண்டேன் என்பது உண்மைக்குப் புறம்பானது. பெண்களின் பெற்றோர்(பல) மற்றும் ஒரு நபர் நிறுவனங்களை நிறுவி மோசடி செய்ய விரும்பினர். அதற்கு நான் உடன்படாததால் அவர்கள் இரண்டு பெண்களைக் கொண்டு என் மீது புகார் செய்தனர். நான் இத்தனை பெண்களைத் திருமணம் செய்து கொண்டேன் என்றால், அதை அவர்கள் நிரூபிக்க வேண்டும் என்று கேட்கிறேன். அவர்களிடம் ரூ.60 லட்சம் வாங்கியிருந்தால் அதற்கான ஆதாரத்தைக் காட்டுங்கள். நான் ஒருமுறை தான் திருமணம் செய்து கொண்டேன். ஆனால் கருத்து வேறுபாடு இருப்பதால், நாங்கள் பிரிந்து வாழ்கிறோம். எங்களுக்கு இன்னும் விவாகரத்து ஆகவில்லை. இன்று வரை, நான் வேறொரு பெண்ணுடன் லிவ்-இன் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறேன்," என்று குற்றம் சாட்டப்பட்ட சிவசங்கர் அந்த வீடியோவில் கூறியுள்ளார். இதுகுறித்து காவல்துறை என்ன கூறுகிறது? இந்த வழக்கு குறித்து காவல்துறை வாய் திறக்கவில்லை. விசாரணை நடத்துகிறோம் என்று மட்டும் கூறி வருகின்றனர். சிவசங்கர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தப் பெண்களின் விவரங்களைச் சேகரிக்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர். https://www.bbc.com/tamil/india-62280413
  23. நீரஜ் சோப்ரா: உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் வெள்ளிப்பதக்கம் வென்றது எப்படி? இறுதிச்சுற்று எப்படி நடந்தது? க. சுபகுணம் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதலில் தனது சிறப்பான திறமையைக் காட்டி நீண்டகாலமாக நம்மைக் கவர்ந்து வருகிறார். அதைப் போலவே இந்த முறையும் அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரின் ஈட்டியெறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கம் வென்று இந்தியாவின் இருபது ஆண்டுக்கால ஏக்கத்தைப் பூர்த்தி செய்துள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் ஈட்டி எறிதலில் சாம்பியனான நீரஜ் சோப்ரா, உலக தடகள சாம்பியன்ஷிப்பில் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் இறுதிப் போட்டிக்குத் தேர்வானார். இந்தப் போட்டிகளில், தங்கத்தின் மீது தனது கவனத்தைக் குவித்திருந்த அவர், வியாழக்கிழமை அன்று 88.39மீட்டர் தொலைவுக்கு ஈட்டியெறிந்து இறுதிச்சுற்றுக்குள் நுழைந்ததோடு, இப்போது வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்று ஓராண்டு நிறைவடையவுள்ள நிலையில், அமெரிக்காவின் ஒரேகானிலுள்ள யூஜீனில் நடக்கும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில், ஈட்டியெறிதல் பிரிவில் பங்கேற்ற இந்தியாவைச் சேர்ந்த நீரஜ் சோப்ரா, ரோஹித் யாதவ் இருவருமே தகுதிச்சுற்றிலிருந்து இறுதிப் போட்டிக்கு முன்னேறினார்கள். இந்தியாவின் 20 ஆண்டுக்கால ஏக்கம் இருபது ஆண்டுக்காலமாக உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டிகளில் பதக்கம் வெல்ல வேண்டுமென்ற இந்தியாவின் ஏக்கத்தைத் தீர்க்கும் வாய்ப்பு இந்த முறை கிட்டியது. உலக சாம்பியன்ஷிப் தொடரில் இதற்கு முன்பு இந்தியா சார்பாக 2003-ஆம் ஆண்டில் நீளம் தாண்டுதல் வீராங்கனை அஞ்சு பாபி ஜார்ஜ் மட்டுமே பதக்கம் வென்றுள்ளார். பாரிஸில் நடந்த போட்டிகளின்போது அவர் வெண்கல பதக்கத்தை வென்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES இந்நிலையில், இறுதிச் சுற்றுக்கு முன்னேறிய நீரஜ் சோப்ரா இருபது ஆண்டுகளாக இந்தியாவுக்கு இருக்கும் ஏக்கத்தைத் தீர்ப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. தகுதிச் சுற்றில் 83.50 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்தால் இறுதிச் சுற்றுக்கு முன்னேறலாம். நீரஜ் சோப்ரா முதல் வாய்ப்பிலேயே 88.39 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து தகுதி பெற்றார். அதேவேளையில், குறிப்பிட்ட இலக்கை எட்டாமல் 80.42 மீட்டர் தொலைவுக்கு மட்டுமே ஈட்டியை எறிந்திருந்தாலும் கூட, சிறந்த தரவரிசையின் அடிப்படையில் 11வது இடத்தைப் பெற்று அவர் இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் நீரஜ் சோப்ரா 87.58 மீட்டர் ஈட்டியெறிந்தார். இந்த முறை தகுதிச் சுற்றிலேயே 88.39 மீட்டருக்கு ஈட்டியெறிந்தார். ஆனால், ரோஹித் யாதவின் தனிப்பட்ட சிறப்பான தூரமே 82.54 மீட்டர் தான். ஆகவே அமெரிக்காவில் நடக்கின்ற உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் பதக்கம் வெல்லும் வாய்ப்பு ரோஹித் யாதவை விட நீரஜ் சோப்ராவுக்கு அதிகம் இருப்பதாகக் கணிக்கப்பட்டது. அதுமட்டுமின்றி, டோக்கியோ ஒலிம்பிக்ஸுக்கு பிறகு, பாவோ நுர்மி போட்டிகள் (89.30மீட்டர்), குவோர்டானே போட்டிகள் (86.69மீட்டர்), டைமண்ட் லீக் (89.94மீட்டர்) ஆகிய மூன்று தொடரிலுமே நீரஜ் சிறப்பாகச் செயல்பட்டார். Twitter பதிவை கடந்து செல்ல, 1 Twitter பதிவின் முடிவு, 1 அமெரிக்காவில் நடக்கும் தொடர் தொடங்குவதற்கும் முன்னமே அவருடைய தேசியளவிலான ரெக்கார்டுகளை அவரே முறியடித்தார். குறிப்பாக 89.94 மீட்டர் என்பது அவருடைய தனிப்பட்ட சிறப்பான தொலைவாகப் பதிவானது. போட்டி எப்படி நடந்தது? இறுதிச்சுற்றில் 6 வாய்ப்புகள் ஒரு வீரருக்கு வழங்கப்பட்டன. முதல் மூன்று வாய்ப்புகளின் இறுதியில் கடைசி நான்கு இடங்களில் இருக்கும் வீரர்கள் வெளியேற்றப்பட்டார்கள். அடுத்த மூன்று வாய்ப்புகள், முதல் 8 இடங்களில் இருப்போருக்குத்தான் வழங்கப்பட்டன. வழக்கமாக முதல் இரண்டு வாய்ப்புகளிலேயே தனது சிறப்பான திறனை நீரஜ் வெளிப்படுத்துவார். ஆனால், இந்த முறை அவர் முதல் மூன்று வாய்ப்புகளில், முதல் வாய்ப்பு ஃபவுலாகவே, அடுத்த இரண்டு வாய்ப்புகளிலும் நீரஜ், 82.39 மீட்டர், 86.37 மீட்டர் என்ற வகையிலேயே தனது ஈட்டியை எறிந்தார். தகுதிச் சுற்றில், டோக்கியோ ஒலிம்பிக்ஸின் தகுதிச்சுற்றைப் போல முதல் வாய்ப்பிலேயே இறுதிச்சுற்றுக்குத் தகுதி பெற்றிருந்தார். இந்நிலையில், இறுதிப்போட்டியின் முதல் மூன்று வாய்ப்புகளில் அவர் எட்டிய தொலைவு பதக்கத்திற்கான வாய்ப்பையும் தொலைவுக்குக் கொண்டு சென்றதைப் போன்ற தோற்றம் உருவானது. ஆனால், ஆண்டர்சன் பீட்டர்ஸ் இரண்டாவது வாய்ப்பில் 90.46 மீட்டருக்கு ஈட்டியெறிந்து தொடர்ந்து முதலிடத்தில் இருந்தார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஆண்டர்சன் பீட்டர்ஸ் இரண்டாவது வாய்ப்பில் 90.46 மீட்டருக்கு ஈட்டியெறிந்தார் அதைத் தொடர்ந்து, மூன்று சுற்றுகளின் இறுதியில் வேளியேற்றம் முடிந்த பிறகு, இந்தியாவுக்குப் பதக்கம் கிடைக்குமா கிடைக்காதா என்ற அச்சத்தோடு பார்த்துக் கொண்டிருந்த இந்தியர்களின் மனதில் நம்பிக்கையை ஊட்டும் வண்ணமாக, தனது நான்காவது வாய்ப்பில் நீரஜ் சோப்ரா 88.13 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்து வெள்ளிப் பதக்கத்திற்கான நம்பிக்கையை விதைத்தார். வெளியேற்றப்பட்ட ரோஹித் யாதவ் முதல் மூன்று வாய்ப்புகளைத் தொடர்ந்து, நீரஜ் சோப்ரா நான்காவது இடத்தில், ரோஹித் யாதவ் 10வது இடத்திலும் இருந்தனர். அதற்குப் பிறகு நான்காவது வாய்ப்பின் இறுதியில் முதல் 8 இடங்களில் ஆண்டர்சன் பீட்டர்ஸ், நீரஜ் சோப்ரா, யகோப் வாட்லேஜ், ஜூலியன் வீபர், அர்ஷாத் நதீம், லாஸி எடல்டாலோ, ஆண்ட்ரியன் மார்டேர், ஆலிவர் ஹெலாண்டர் ஆகியோர் இருந்தனர். பட மூலாதாரம்,WORLDATHLETICS.ORG சவாலான சக போட்டியாளர்கள் இறுதிச்சுற்றின் தொடக்கத்தில் நீரஜ் சோப்ரா ஈட்டியெறிந்தபோது 82.39 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியை எறிந்தார். மூன்றாவது சுற்றில் 86.37 மீட்டருக்கு ஈட்டியெறிந்தார். இறுதிச்சுற்றில் ஈட்டியெறிந்த போட்டியாளர்களில் நடப்பு சாம்பியனான ஆண்டர்சன் பீட்டர்ஸ், தொடக்கத்திலேயே 90.21 மீட்டர் தொலைவுக்கு ஈட்டியெறிந்து முன்னிலை வகிக்கத் தொடங்கினார். பட மூலாதாரம்,GETTY IMAGES ஆண்டர்சன், 2019-ஆம் ஆண்டு உலக தடகள சாம்பியன்ஷிப்பில் 86.69 மீட்டருக்கு ஈட்டியெறிந்து தங்கம் வென்றவர். இந்த சீசனில் மூன்று முறை 90 மீட்டருக்கும் மேல் ஈட்டியெறிந்துள்ளார். செக் குடியரசை சேர்ந்த யாகோப் வாட்லேஜ், முதல் முறை ஈட்டியெறிந்தபோது 85.52 மீட்டரில் தொடங்கியவர், மூன்றாவது முறையில் 88 மீட்டருக்கும் மேலாக ஈட்டியெறிந்து நீரஜ் சோப்ராவை விட முன்னிலையில் இருந்தார். டோக்கியோ ஒலிம்பிக்ஸில் நீரஜுக்கு அருகில் வெள்ளிப் பதக்கத்தோடு நின்ற இவர், இந்த சீசனில் 90.88 மீட்டர் வரை ஈட்டியை எறிந்திருந்தார். ஜெர்மனியை சேர்ந்த ஜூலியன் வீபரும் தொடக்கத்திலேயே 86.86 மீட்டருக்கு ஈட்டியை எறிந்தார். இப்படியாக, ஆண்டர்சன், வீபர், வாட்லேஜ் ஆகியோர் முதல் மூன்று வாய்ப்புகளிலேயே நீரஜ் சோப்ராவுக்கு பெரும் சவால் விடுத்தனர். ஆனால் அந்த சவால்களை நான்காவது வாய்ப்பில் கடந்து வந்த நீரஜ், வெள்ளிப் பதக்கத்திற்கான நம்பிக்கையை விதைத்தார். டோக்கியோ ஒலிம்பிக்ஸில், 87.58 மீட்டரே தங்கப் பதக்கம் வெல்வதற்குப் போதுமானதாக இருந்தது. ஆனால், உலக தடகள சாம்பியன்ஷிப் தொடர் அதைவிட மிகவும் கடினமானது. ஆகையால், டைமண்ட் லீகில் 89.94 மீட்டர் தூரத்திற்கு ஈட்டியெறிந்த சோப்ரா, அடுத்த இரண்டு வாய்ப்புகளிலும் அதைத் தக்க வைத்தாக வேண்டியிருந்தது. ஆனால், அவருடைய ஐந்தாவது வாய்ப்பு ஃபவுலானது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நீரஜ் சோப்ரா, ஐந்தாவது வாய்ப்பின் இறுதியில் அவர் வெள்ளிப் பதக்கத்திற்கான தனது இடத்தைத் தக்க வைத்திருந்தார் இருப்பினும், ஐந்தாவது வாய்ப்பின் இறுதியில் அவர் வெள்ளிப் பதக்கத்திற்கான தனது இடத்தைத் தக்க வைத்திருந்தார். இருபது ஆண்டுகளுக்குப் பிறகு வென்ற பதக்கம் இறுதிச் சுற்றின் 6 வாய்ப்புகளும் முடிந்தபோது, ஆண்டர்சன் தங்கப் பதக்கத்தையும் நீரஜ் சோப்ரா வெள்ளிப் பதக்கத்தையும் யாகோப் வாட்லேஜ் வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர். ஒலிம்பிக்ஸில் தங்கம் வென்ற தனிப்பட்ட இந்திய வீரராக முன்பு வரை இருந்த அபினவ் பிந்த்ரா, டோக்கியோ ஒலிம்பிக்ஸில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றபோது, "தேசத்தின் கனவை நீங்கள் நிறைவேற்றிவிட்டீர்கள். மிகவும் பெருமையாக உள்ளது," என்று பாராட்டினார். இந்தமுறையும், உலக தடகள சாம்பியன்ஷிப் தொடரில் ஈட்டியெறிதல் பிரிவில் வெள்ளிப் பதக்கத்தை வென்று இந்தியர்களின் இருபது ஆண்டுக்கால ஏக்கத்தை நீரஜ் சோப்ரா பூர்த்தி செய்துள்ளார். https://www.bbc.com/tamil/sport-62281562
  24. மீசை வைத்த கேரளப் பெண் ஷைஜா: அழகை நினைத்து அவதிப்படுகிறாரா? முறுக்கிவிட்டு பெருமைப்படுகிறாரா? மெரில் செபாஸ்டியன் பிபிசி நியூஸ், கொச்சி. 23 ஜூலை 2022 பட மூலாதாரம்,SHYJA படக்குறிப்பு, தமது மீசையைப் பார்த்து யாராவது கேலி செய்தால் அதைப் பற்றிக் கவலைப் படுவதில்லை என்று கூறும் ஷைஜா, சில நேரங்களில் தாமும் சிரிப்பதுண்டு என்கிறார். கேரளத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு முறுக்கு மீசை முளைத்திருக்கிறது. சிலர் இதைப் பார்த்து வியக்கிறார்கள். சிலர் கேலி செய்கிறார்கள். ஷைஜாவுக்கு எப்படி இப்படி ஆனது? இந்த மீசை தனது அழகைக் கெடுப்பதாக அவர் கவலைப் படுகிறாரா? முறுக்கிவிட்டு பெருமைப்படுகிறாரா? கேரளாவில் கண்ணூர் மாவட்டத்தைச் சேர்ந்த அவரது பெயர் ஷைஜா (35 வயது). அவரது முறுக்கு மீசையை சிலர் கேலி செய்வார்கள். சிலர் ஆச்சரியமாகப் பார்ப்பார்கள். ஆனால், இந்தக் கருத்துகளைப் பற்றியெல்லாம் தாம் அலட்டிக் கொள்வதில்லை என்கிறார் ஷைஜா. தமது வாட்சாப் ஸ்டேட்டசில் மீசையோடு இருக்கும் தமது படத்தை வைத்து, அதில் தனது மீசையை மிகவும் நேசிப்பதாக குறிப்பு எழுதியுள்ளார் இவர். "நீங்கள் ஏன் மீசை வைத்துள்ளீர்கள்" என்று பலரும் கேட்பார்கள். "எனக்குப் பிடிச்சிருக்கு" என்பதுதான் எப்போதும் என் பதிலாக இருக்கும். இவருக்கு எப்படி இப்படி மீசை வந்தது? பல பெண்களுக்கு வருவதைப் போல இவருக்கும் மூக்குக் கீழே லேசான பூனை முடிதான் ஆரம்பத்தில் வந்தது. ஷைஜா அடிக்கடி தனது புருவ முடியை திரெட்டிங் செய்து ஒழுங்குபடுத்திக்கொள்வார். ஆனால், ஒருபோதும் தமது மேலுதட்டுக்கு மேலே உள்ள பூனைமுடியை நீக்கிக்கொள்ளவேண்டும் என்று தாம் நினைத்ததில்லை என்கிறார். ஆனால், அந்தப் பூனை முடி 5 ஆண்டுகளுக்கு முன்பு திடீரென அடர்த்தியான மீசையாக வளரத் தொடங்கியது. ஷைஜா கவலைப்படவில்லை. அதற்குப் பதில் அவருக்கு உற்சாகமாகிவிட்டது. அப்படியே மீசையாகவே வைத்துக்கொள்வோம் என்று அவர் முடிவெடுத்துவிட்டார். "இப்போது இந்த மீசையில்லாமல் வாழ்வதுபற்றி என்னால் யோசிக்கவே முடியவில்லை. கோவிட் நோய்த் தொற்றுக் காலத்தில்கூட என்னுடைய முகத்தை மறைக்கிறது என்பதற்காக முகக் கவசம் அணிவதை வெறுத்தேன்," என்கிறார் அவர். பலரும் அந்த மீசையை நீக்குவதற்கு முயற்சியும் செய்யும்படி ஷைஜாவுக்கு அறிவுரை கூறினார்கள். ஆனால், அவர் மறுத்துவிட்டார். "மீசை இருப்பதாலோ வேறு ஒன்றாலோ என் அழகு பாதிப்பதாக நான் கருதவில்லை" என்கிறார் அவர். பெண்களை உடல் முடியுடன் காட்டிய விளம்பரம்: கொண்டாடிய பெண்கள் ஆண்களைப் போல இந்தப் பெண் தாடி வளர்ப்பது ஏன்? பெண்களுக்கு முகத்தில் முடி இருப்பது விரும்பத்தக்கதல்ல என்றும் அதை நீக்குவதற்கு செலவு செய்தாலும் பரவாயில்லை என்றும் கூறுகிறார்கள். முடியை நீக்குவதற்கான கிரீம்கள், மெழுகுகள், ஸ்ட்ரிப், ரேசர், எபிலேட்டர் போன்றவற்றின் வணிகம், பல்லாயிரம் கோடி புழங்கும் தொழில் ஆகும். ஆனால், இந்த வழக்கமான சிந்தனைக்கு மாற்றாக, பல பெண்கள் முகத்தில் இருக்கும் முடி குறித்து அலட்டிக் கொள்ளத்தேவையில்லை என்று கருதுகிறார்கள். சிலர் இதில் பெருமையும் கொள்கிறார்கள். உடல் குறித்த நேர்மறை பிரசாரம் செய்துவரும் செயற்பாட்டாளரான ஹர்னாம் கௌர் என்ற பெண்ணுக்கு முழுமையான தாடி மீசை இருப்பது 2016ல் செய்தியானது. மிக இளம் வயதில் இப்படி தாடி மீசை வளர்த்தவராக அவர் அறியப்பட்டார். கேலிப் பிரசாரங்களை எதிர்கொள்ளும் வகையில், முகத்தில் உள்ள முடியை அப்படியே ஏற்றுக்கொள்வது எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை அவர் பல பேட்டிகளில் வலியுறுத்தியுள்ளார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முழு தாடி மீசையோடு இளம்பெண் ஹர்னாம் கௌர். "எனக்குப் பிடித்தபடி நான் வாழ்கிறேன். ஒருவேளை எனக்கு இரண்டு வாழ்நாள் இருந்தால், ஒன்றை மற்றவர் விருப்பம் போல வாழலாம்," என்கிறார் ஷைஜா. உடல் உபாதைகளோடு பல ஆண்டுகளாகப் போராடியதன் மூலம் அவருக்கு இந்த மனவலிமை வாய்த்துள்ளது. பத்தாண்டு காலத்தில் அவர் 6 அறுவைசிகிச்சைகளை செய்துகொண்டுள்ளார். மார்பகத்தில் இருந்த கட்டியை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை, சினைப்பையில் உள்ள நீர்க் கட்டிகளை அகற்றுவதற்கான அறுவை சிகிச்சை... இப்படி பல அறுவை சிகிச்சைகள். "ஒவ்வொரு முறையும் அறுவை சிகிச்சை முடித்து மீண்டு வந்த பிறகு, இனி வாழ்க்கையில் அறுவை சிகிச்சை அரங்கத்துக்கு போகவே கூடாது என்று நினைப்பேன்," என்கிறார் ஷைஜா. தமிழ்நாட்டில் கண்டுணர்ந்த சுதந்திரம் 6 மணிக்கு மேல் பெண்கள் வீட்டைவிட்டே வெளியில் வராத மிகப் பின்தங்கிய கிராமத்தில் பிறந்து வளர்ந்த ஷைஜா, தாம் சிறுவயதில் மிகுந்த கூச்ச சுபாவமுள்ள பெண் என்கிறார். இந்தியாவிலேயே மிகவும் முற்போக்கான மாநிலங்களில் ஒன்றான கேரளாவிலும், பல இடங்களில் ஆணாதிக்க போக்குகள் நிலவுகின்றன. பெண்கள் தனியாக, பயணிக்கவும் வாழவும் கூடாது என்ற மனப்போக்கு அங்கும் சில இடங்களில் உள்ளது. திருமணம் செய்துகொண்டு தமிழ்நாட்டுக்கு வந்த பிறகு புது வகையான சுதந்திரத்தை அனுபவித்ததாக அவர் கூறினார். "என் கணவர் வேலைக்கு சென்று தாமதமாக வருவார். மாலை நேரம் வீட்டுக்கு வெளியே உட்காருவேன். இரவில் கடைக்கு தனியாக சென்று வருவேன். யாரும் என் மீசை பற்றி கண்டுகொள்வது கிடையாது. நானே சில வேலைகளை செய்வேன். இதெல்லாம் எனது நம்பிக்கையை வளர்த்தது" என்கிறார ஷைஜா. தற்போது பதின் பருவத்தில் இருக்கும் தனது மகளுக்கும் இந்த நம்பிக்கையை ஊட்டுவதாக அவர் கூறுகிறார். பட மூலாதாரம்,SHYJA படக்குறிப்பு, கோவிட் காலத்தில் தமது முகத்தை மறைத்து கவசம் அணிந்தது பிடிக்கவில்லை என்கிறார் ஷைஜா. ஷைஜாவின் குடும்பத்தாரும், நண்பர்களும் மீசை வைத்துள்ள தமக்கு ஆதரவாக இருப்பதாக கூறுகிறார் அவர். இந்த மீசை தமது தாய்க்கு மிக அழகாக இருப்பதாக அவர் மகள் கூறுவாராம். ஆனால், தெருவில் எல்லா விதமான கேலிகளையும் தான் எதிர்கொண்டிருப்பதாக கூறுகிறார் ஷைஜா. உள்ளூர் ஊடகங்களில் பலமுறை இவர் குறித்த செய்தி இடம் பெற்றுவிட்டது. ஒரு உள்ளூர் ஊடகம் அவர் பற்றிய செய்தியை ஃபேஸ்புக்கில் பகிர்ந்தபோது பல கேலிசெய்யும் கருத்துகள் வெளியானதாக அவர் குறிப்பிடுகிறார். புருவ முடியை திரெட்டிங் செய்து நீக்கும்போது ஏன் பிளேடு எடுத்து மீசையை மழித்துவிடக்கூடாது என்று ஒருவர் ஃபேஸ்புக்கில் கேள்வி எழுப்பினார். "ஆனால், எதை வைத்துக்கொள்வது, எதை மழித்துவிடுவது என்பது என் விருப்பம் இல்லையா?" என்கிறார் அவர். கேலி செய்யும் பதிவுகளுக்கு ஃபேஸ்புக்கில் ஷைஜாவின் நண்பர்கள் கோபமாக எதிர்வினை ஆற்றுகிறார்கள். ஆனால், அந்தக் கேலியெல்லாம் தம்மை பாதிப்பதில்லை என்று கூறும் ஷைஜா சில நேரங்களில் அவற்றைப் பார்த்து தாமும் சிரிப்பதுண்டு என்கிறார். https://www.bbc.com/tamil/india-62276051
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.