Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. வழமையான போட்டியாளர்கள் விரைவாக பங்கு பற்றுங்கோ, பஸ் வெளிக்கிடப்போகிறது. @வாதவூரான், @கறுப்பி, @Eppothum Thamizhan, @தமிழ் சிறி, @வீரப் பையன்26, @நிலாமதி, @புலவர், @nilmini, @சுவைப்பிரியன், @Ahasthiyan, @நந்தன், @goshan_che, @நீர்வேலியான், @ரசோதரன், @குமாரசாமி, @ஈழப்பிரியன், @முதல்வன், @பிரபா, @nunavilan @kalyani அண்ணாக்கள், அக்காக்கள், தம்பிகள், தங்கச்சிகள் எல்லோரும் ஓடி வாங்கோ.
  2. 25 Sep, 2025 | 01:34 PM (எம்.மனோசித்ரா) தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ கிராம் போதைப்பொருட்கள் மீட்கப்படுகின்றமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் தங்காலை 'ஐஸ்லாந்து' ஆவதை தடுத்துள்ள அரசாங்கம், மீரிகமையை 'கஞ்சா தோட்டமாக' மாற்றுவது சரியா? கடந்த காலங்களில் இந்த திட்டத்தை முன்வைத்தவர்கள் மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்டுள்ளனர் என்பதை ஜனாதிபதி தலைமையிலான அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துவதாக ஓமல்பே சோபித தேரர் தெரிவித்தார். வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதற்காக அரசாங்கத்தால் உத்தேசிக்கப்பட்டுள்ள கஞ்சா உற்கபத்தி திட்டம் தொடர்பில் அகில இலங்கை மகா பௌத்த சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்ட அவர், 2022 மற்றும் 2023ஆம் ஆண்டு காலப்பகுதியில் சமூகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த, மக்களால் முற்றாக நிராகரிக்கப்பட்ட காரணி தற்போது மீண்டும் பேசுபொருளாகியுள்ளது. கஞ்சா உற்பத்தியை நாட்டுக்கு அந்நிய செலாவணியை ஈட்டும் ஒரு வருமான மூலமாகப் பார்ப்பதை அங்கீகரிக்க முடியாது. அப்போதைய இராஜாங்க அமைச்சர் டயானா கமகே இதில் பிரதான காரண கர்த்தாவாக செயற்பட்டார். கடந்த அரசாங்கத்தால் இதற்கான முன்மொழிவு முன்வைக்கப்பட்ட போது மகா சங்கத்தினர் உட்பட சகல மதத் தலைவர்களும் கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டனர். இறுதியில் இந்த யோசனையை முன்வைத்தவர்கள் முற்றாக மக்களால் நிராகரிக்கப்பட்டு தற்போது காணாமல் போயுள்ளனர். இது குறித்து அப்போதைய பாராளுமன்ற உறுப்பினரும் தற்போதைய ஜனாதிபதியுமான அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கத்திடம் பாராளுமன்றத்தில் சில கேள்விகளை எழுப்பினார். 'இந்த கஞ்சா உற்பத்தி வெற்றியளிக்கும் வேலைத்திட்டம் என நீங்கள் கூறினால் அதற்கான சந்தை என்ன எனக் கூறுங்கள்? , எந்தெந்த நாடுகள் இவற்றை கொள்வனவு செய்யப் போகின்றன? , எந்த அளவுகளில் அவர்கள் இவற்றை கொள்வனவு செய்யப் போகின்றனர்? , ஏதேனுமொரு வகையில் வெளிநாடுகள் இவற்றை கொள்வனவு செய்யாவிட்டால் உற்பத்திகளுக்கு என்னவாகும்?' என்ற கேள்விகளே அவரால் அப்போதைய அரசாங்கத்திடம் கேட்கப்பட்டன. ஆனால் இதில் எந்தவொரு கேள்விக்கும் அன்று பதில் கிடைக்கவில்லை. இன்று நாம் அதே கேள்விகளை ஜனாதிபதி அநுரவிடம் கேட்கின்றோம். அன்று இந்த கேள்விகளை எழுப்பிய சாதாரண பாராளுமன்ற உறுப்பினர் இன்று நிறைவேற்றதிகாரம் கொண்;ட ஜனாதிபதியாவார். அன்று நிராகரிக்கப்பட்ட சடலங்களை இன்று மீண்டும் உயிர்ப்பிக்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கின்றதா? தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் வாக்களிப்பதற்கு இதுவும் ஒரு பிரதான காரணியாகக் காணப்பட்டது. எனவே ஆட்சியாளர்கள் இதனை மறந்து விடக் கூடாது. நிராகரிக்கப்பட்ட ஒரு வேலைத்திட்டத்தை மீள ஆரம்பிக்க தீர்மானித்தால் அரசாங்கம் அது குறித்து மக்களுக்கு தெளிவுபடுத்த வேண்டும். எமக்கு இதுவரை கிடைத்துள்ள தகவல்களின் அடிப்படையில் 7 நிறுவனங்களுக்கு இது குறித்த பொறுப்புக்கள் வழங்கப்பட்டுள்ளதோடு, அவற்றுடன் ஒப்பந்தங்களும் கைசாத்திடப்பட்டுள்ளன. மீரிகம பிரதேசத்தில் 64 ஏக்கர் நிலப்பரப்பில் இவ்வாறு கஞ்சா உற்பத்தி மேற்கொள்ளப்படவுள்ளது. இது தொடர்பில் அரசாங்கம் எந்தவொரு பகிரங்க கலந்துரையாடல்களையும் முன்னெடுக்கவில்லை. எவ்வாறிருப்பினும் எமக்கு இது குறித்த தகவல்கள் கிடைத்தவுடன் நாம் எமது போதை;பொருள் எதிர்ப்பு பிரிவுடன் சென்று சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவை சந்தித்தோம். ஒரு இலை கூட வெளிச் செல்லாமல் கடுமையான பாதுகாப்புடனேயே இந்த உற்பத்தியை மேற்கொள்ளத் தீர்மானித்துள்ளதாக அவர் தெரிவித்தார். எமது நாட்டுக்கு இது உகந்ததல்ல என்றால், ஏனைய நாடுகளுக்கு மாத்திரம் எவ்வாறு சிறந்ததாகும்? இது மனிதாபிமானமற்ற செயல் அல்லவா என நாம் அமைச்சிடம் கேட்டோம். எதற்காக நாம் தவறான முறைமையின் கீழ் வருமானம் ஈட்டுகின்றோம்? இந்த திட்டத்தை முன்வைக்கப்பட்டாதால் மக்களால் நிராகரிக்கப்பட்ட அந்த பெண் தற்போது அரசாங்கம் தனது வேலைத்திட்டத்தை முன்னெடுத்துச் செல்வது மகிழ்ச்சியளிப்பதாகக் கூறுகின்றார். அவர் அதற்கு வாழ்;த்துக்களையும் தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கத்தின் கீழ் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கிலோ கிராம் போதைப்பொருட்கள் மீட்கப்படுகின்றமை மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஆனால் தங்காலை 'ஐஸ்லாந்து' ஆவதை தடுத்துள்ள அரசாங்கம், மீரிகமையை 'கஞ்சா தோட்டமாக' மாற்றுவது சரியா? எனவே தூய்மையாகக் கழுவிய ஆடையை மீண்டும் சேற்றில் இட வேண்டாம் என அரசாங்கத்திடம் கேட்டுக் கொள்கின்றோம் என்றார். https://www.virakesari.lk/article/226048
  3. பட மூலாதாரம், NASA படக்குறிப்பு, ஆர்டெமிஸ் II குழுவினர்: இடமிருந்து கிறிஸ்டினா கோச், பின்புறம் விக்டர் க்ளோவர் (விமானி), முன் ரீட் வைஸ்மேன் (தளபதி), வலது ஜெரெமி ஹேன்சன். கட்டுரை தகவல் பல்லப் கோஷ் அறிவியல் செய்தியாளர் 25 செப்டெம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, அடுத்தாண்டு பிப்ரவரி மாதத்துக்குள்ளேயே விண்வெளி வீரர்களை நிலவைச் சுற்றி பத்து நாள் பயணத்துக்கு அனுப்ப விரும்புவதாகத் தெரிவித்துள்ளது. ஏப்ரல் மாத இறுதிக்குள் இந்தத் திட்டத்தைத் தொடங்க உறுதி பூண்டிருந்த நாசா, இப்போது இந்தப் பணியை முன்கூட்டியே செய்ய விரும்புவதாகக் கூறியுள்ளது. 50 ஆண்டுகளாக எந்த நாடும் மனிதர்களை நிலவுக்கு அனுப்பும் பயணத்தை மேற்கொண்டதில்லை. நாசா நான்கு விண்வெளி வீரர்களை அங்கு அனுப்பி, அமைப்புகளைச் சோதிக்க உள்ளது. ஆர்டெமிஸ் II திட்டம் என்பது ஆர்டெமிஸ் திட்டத்தின் இரண்டாவது ஏவுதல் ஆகும். இந்த திட்டத்தின் நோக்கம் விண்வெளி வீரர்களை நிலவில் தரையிறங்க வைப்பதும், இறுதியில் நிலவின் மேற்பரப்பில் நீண்ட கால இருப்பை ஏற்படுத்துவதுமாகும். பட மூலாதாரம், NASA படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்: ஆர்டெமிஸ் II, பல ஆண்டுகளுக்குப் பிறகு மனிதர்கள் செல்லும் முதல் நிலவுப் பயணமாக இருக்கும். நாசாவின் (பொறுப்பு) துணை நிர்வாகி லாகீஷா ஹாக்கின்ஸ், இது மனிதர்கள் மேற்கொள்ளும் விண்வெளி ஆய்வில் ஒரு முக்கியமான தருணமாக இருக்கும் என்று கூறினார். "வரலாற்று நிகழ்வுக்கு மிக நெருக்கமான ஒரு தருணத்தில் நாம் உள்ளோம்," என்று அவர் இன்று பிற்பகல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். "ஏவுதலுக்கான வாய்ப்பு பிப்ரவரி ஐந்தாம் தேதிக்கு முன்னதாகவே ஏற்படலாம், ஆனால் பாதுகாப்புதான் எங்கள் முதன்மை முன்னுரிமை என்பதை நாங்கள் வலியுறுத்த விரும்புகிறோம்." விண்வெளி வீரர்களை நிலவுக்குக் கொண்டு செல்ல உருவாக்கப்பட்ட சக்திவாய்ந்த ராக்கெட் அமைப்பான விண்வெளி ஏவுதல் அமைப்பு (SLS), "ஏறக்குறைய ஏவுவதற்குத் தயாராக உள்ளது" என்று ஆர்டெமிஸ் ஏவுதல் இயக்குநர் சார்லி பிளாக்வெல்-தாம்சன் விளக்கினார். எஸ்எல்எஸ் உடன் இணைக்கப்படும் ஓரியன் (Orion) எனப்படும் விண்வெளி வீரர் காப்ஸ்யூல் தயாரிப்பு மற்றும் தரைவழி சோதனைகளை நிறைவு செய்வது மட்டுமே மீதமுள்ளது. ஆர்டெமிஸ் திட்டத்தின் முதல் பணி 25 நாட்கள் நீடித்தது. அது 2022 நவம்பர் மாதம் ஆட்கள் இல்லாத விண்கலத்தை ஏவியது. அந்த விண்கலம் நிலவைச் சுற்றி பயணம் செய்து பூமியின் வளிமண்டலத்தில் மீண்டும் நுழைந்தது. அந்தப் பணி மிகப்பெரிய வெற்றியை அடைந்தது. இருப்பினும், விண்கலம் மீண்டும் பூமியின் வளிமண்டலத்தில் நுழையும் போது வெப்பக் கவசத்தில் சில சிக்கல்கள் இருந்தன. அவை இப்போது சரி செய்யப்பட்டுள்ளன. ஆர்டெமிஸ் II ஏவுதலில் நான்கு விண்வெளி வீரர்கள் நிலவுக்குச் சென்றுவர பத்து நாள் பயணம் மேற்கொள்வார்கள். நாசாவின் ரீட் வைஸ்மேன், விக்டர் க்ளோவர் மற்றும் கிறிஸ்டினா கோச் மற்றும் கனடிய விண்வெளி அமைப்பைச் சேர்ந்த ஜெரெமி ஹேன்சன் ஆகியோர் நிலவில் தரையிறங்க மாட்டார்கள். இருப்பினும், 1972-ஆம் ஆண்டு அப்போலோ 17-க்குப் பிறகு குறைந்த புவி சுற்றுப்பாதைக்கு அப்பால் பயணிக்கும் முதல் குழுவினர் இவர்களாகத்தான் இருப்பார்கள். ஆர்டெமிஸ் II இன் தலைமைப் பயண இயக்குநர் ஜெஃப் ரடிகன், விண்வெளி வீரர்கள் இதுவரை யாரும் சென்றிராத அளவு தொலைவுக்கு விண்வெளியில் பயணிப்பார்கள் என்று விளக்கினார். "அவர்கள் நிலவுக்கு அப்பால் குறைந்தது 5,000 கடல் மைல்கள் (9,200 கி.மீ) பயணம் செய்வார்கள், இது முந்தைய பயணங்களைவிட மிக அதிகம்," என்று அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். திட்டத்தின் நோக்கம் நிலவில் தரையிறங்குவதற்கான அடித்தளத்தை அமைப்பதற்காக ராக்கெட் மற்றும் விண்கலத்தின் அமைப்புகளைச் சோதிப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கம். விண்வெளி வீரர்கள் ஓரியன் காப்ஸ்யூலில் நுழைவார்கள். இது அவர்களின் பயணத்தின்போது அவர்களுக்கு வீடாக இருக்கும். இது எஸ்எல்எஸ்-இன் உச்சியில் அமர்த்தப்பட்டுள்ளது. ஆரம்பத்தில் இது, இரண்டு திட ராக்கெட் பூஸ்டர்களின் உதவியுடன் புவி சுற்றுப்பாதைக்குக் கொண்டு செல்லப்படும். அவை கனமான உந்துவிசையை அளித்த பின் ஏவப்பட்ட இரண்டு நிமிடங்களுக்குப் பிறகு மீண்டும் பூமிக்கு வந்துவிடும். ஏவப்பட்ட உடன் என்ன நடக்கும்? ஏவப்பட்ட எட்டு நிமிடங்களுக்குப் பிறகு ராக்கெட்டின் பிரமாண்டமான கோர் ஸ்டேஜ், இடைக்கால க்ரையோஜெனிக் உந்துவிசை அமைப்பு (Interim Cryogenic Propulsion System - ICPS) மற்றும் ஓரியன் விண்வெளி வீரர் பகுதியிலிருந்து பிரிந்து செல்லும். ஓரியனின் சூரிய மின் தகடுகள் விரிந்து விண்கலத்தின் பேட்டரிகளுக்குச் சூரிய ஒளி இல்லாதபோது மின்சாரம் வழங்கத் தொடங்கும். தொண்ணூறு நிமிடங்களுக்குப் பிறகு ஐசிபிஎஸ் தனது என்ஜின்களை இயக்கி வாகனத்தை ஒரு உயர் புவி சுற்றுப்பாதைக்கு உயர்த்தும். அடுத்த 25 மணி நேரத்துக்கு ஒரு முழு அமைப்புகள் சரிபார்ப்பு நடைபெறும். எல்லாம் சரியாக இருந்தால், ஓரியன் ஐசிபிஎஸ்-இலிருந்து பிரிந்து செல்லும். விண்வெளி வீரர்கள், நிலவில் தரையிறங்குவதற்கான ஒரு வாகனத்துடன் இணைக்கும் செயல்முறைகளை ஒத்திகை பார்க்க, ஓரியனின் நகர்வுக்கான உந்துகருவியை (Manoeuvring thruster) கட்டுப்படுத்தி ஐசிபிஎஸ்-ஐ நோக்கிச் செல்வார்கள். இருபத்தி மூன்று மணி நேரத்துக்குப் பிறகு ஓரியனின் சேவை அமைப்பு ஒரு 'நிலவு நோக்கி உந்துதல் (TLI) எரியூட்டலை' நடத்தும் - இது விண்கலத்தை நிலவை நோக்கி குறிவைக்கும் ஒரு உந்துவிசையாகும். அதற்குப் பிறகு ஓரியன் நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு விண்வெளி வீரர்களை பூமியிலிருந்து 2,30,000 மைல்களுக்கு அப்பால் கொண்டு செல்லும். பயணத்தின் போது விண்வெளி வீரர்கள் தொடர்ந்து அமைப்புகள் சரிபார்ப்புகளை மேற்கொள்வார்கள். ஒரு வகையில், குழுவினர் சோதனை எலிகளாக இருப்பார்கள். அவர்களின் உடல்கள் விண்வெளியால் எவ்வாறு பாதிக்கப்படுகின்றன என்பதை கண்காணிக்கும் சோதனைகள் நடத்தப்படும். விஞ்ஞானிகள் விண்வெளி வீரர்களின் ரத்தத்திலிருந்து அவர்களின் பயணத்துக்கு முன்னும் பின்னும் பெறப்பட்ட திசு மாதிரிகளை அதாவது ஆர்கனோய்ட்ஸை, வளர்ப்பார்கள். விண்வெளி வீரர்களின் உடல்கள் விண்வெளியால் எவ்வாறு பாதிக்கப்பட்டுள்ளன என்பதைப் பார்க்க, ஆர்கனோய்ட்ஸின் இரண்டு தொகுப்புகளும் ஒப்பிட்டுப் பார்க்கப்படும் என்று நாசாவின் அறிவியல் துறைத் தலைவர் டாக்டர் நிக்கி ஃபாக்ஸ் தெரிவித்தார். "எங்களிடம் அந்த விண்வெளி வீரர்களே இருக்கும்போது ஏன் இதையெல்லாம் செய்கிறோம் என்று நீங்கள் யோசிக்கலாம். இந்த மாதிரிகளின் மீது புவியீர்ப்பு விசை இல்லாத சூழல் மற்றும் கதிர்வீச்சின் விளைவை ஆழமாக ஆய்வு செய்ய நாங்கள் விரும்புகிறோம். நான் நிச்சயமாக ஒரு விண்வெளி வீரருக்கு உடல் ரீதியில் பாதிப்பை ஏற்படுத்தப் போவதில்லை! ஆனால், இந்தச் சிறிய ஆர்கனோய்ட் மாதிரிகளை அறுத்து, வித்தியாசத்தை உண்மையில் பார்க்க முடியும்." என்று அவர் பிபிசி நியூஸிடம் தெரிவித்தார். விண்கலம் நிலவைத் தாண்டி செலுத்தப்பட்டபின் பூமியின் ஈர்ப்புவிசையைப் பயன்படுத்தி விண்வெளி வீரர்கள் பூமி திரும்பும் நான்கு நாள் பயணத்தைத் தொடங்குவார்கள். பூமியை வந்தடைந்ததும், விண்கலத்தின் முதன்மை உந்துவிசையமைப்பைக் கொண்ட சேவை அமைப்பு, குழு அமைப்பிலிருந்து பிரிந்துவிடும். விண்வெளி வீரர்கள் பின்னர் பூமியின் வளிமண்டலத்துக்குள் மீண்டும் நுழைந்து, கலிபோர்னியாவின் கடற்கரையில் பாராசூட் மூலம் தரையிறங்குவார்கள். இது பயணத்தின் மிகவும் ஆபத்தான பகுதியாகும். பட மூலாதாரம், NASA/Robert Markowitz படக்குறிப்பு, ஓரியன் விண்கலத்துக்குள் நான்கு குழு உறுப்பினர்கள் ஏவுதலுக்கு எவ்வாறு அமர வைக்கப்படுவார்கள் என்பதை பொறியாளர்கள் (spacesuit engineers) விளக்குகிறார்கள், இவர்களே விண்வெளி வீரர்களுக்கான உயிர்காக்கும் கருவிகளை வடிவமைக்கின்றனர். இந்தப் பயணத்தின் வெற்றி, நாசா எப்போது ஆர்டெமிஸ் III-ஐ ஏவ முடியும் என்பதையும், உண்மையில் நிலவில் தரையிறங்க முடியும் என்பதையும் தீர்மானிக்கும். ஆனால், இந்தப் பயணம் சரியாக நடந்தாலும் கூட, விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் "2027-ஆம் ஆண்டின் நடுப்பகுதிக்கு முன்னதாக இல்லை" என்ற இலக்கு, ஓபன் பல்கலைக்கழகத்தின் டாக்டர் சிமியோன் பார்பரின் கூற்றுப்படி, யதார்த்தமற்றது. "'முன்னதாக இல்லை' என்பது நாசாவுக்கு நன்கு தெரிந்த ஒரு சொல்தான், அதற்கு அதுதான் அர்த்தம். அதுதான் மிக விரைவான சாத்தியமாக உள்ளது," என்று அவர் கூறினார். ஆர்டெமிஸ் III-ஐ சரியான பாதையில் வைத்திருப்பதற்கான செலவு காரணமாக அது கூட அதிக நம்பிக்கைக்குரியதாகத் தெரிகிறது என்று அவர் மேலும் கூறினார். "[ஈலோன் மஸ்க்கின்] ஸ்பேஸ்எக்ஸ் ஸ்டார்ஷிப் விண்வெளி வீரர்களை நிலவின் மேற்பரப்புக்கு அழைத்துச் செல்லவும், அழைத்து வரவும் தேவைப்படும். சமீபத்திய மாதங்களில், பூமியைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதைப் பயணத்தை அடையவே ஸ்டார்ஷிப் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டும் எனும் நிலையில் விண்வெளி வீரர்களை அதில் அமர்த்துவது மிகவும் கடினம்." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/czrpkd625m0o
  4. முத்து நகர் காணி அபகரிப்பு: எதிர்வரும் 10 நாட்களுக்கு தீர்வு வழங்குவதாக பிரதமர் அலுவலகம் உறுதி Published By: Vishnu 25 Sep, 2025 | 10:31 PM (செ.சுபதர்ஷனி) திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்து நகர் விவசாய காணி அபகரிப்பு விடயம் தொடர்பில் எதிர்வரும் 10 நாட்களுக்கு தீர்வு வழங்குவதாக பிரதமர் அலுவலகம் உறுதியளித்துள்ளது. புதன்கிழமை அன்று சுமார் 12 மணித்தியாலங்கள் பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஆர்ப்பாட்டக்கார்கள் அன்றைய தினம் இரவு பிரதமர் அலுவலக அதிகாரிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர். திருகோணமலை பட்டினமும் சூழலும் பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட முத்து நகர் பகுதியில் பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி சுமார் 800 ஏக்கர் விவசாய காணி சூரிய மின்சக்தி திட்டத்துக்காக அரசாங்கத்தால் இந்திய தனியார் நிறுவனத்திடம் கையளிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் காணி அபகரிப்புக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தமது விளை நிலங்களை தமக்கு பெற்றுத்தருமாறு வலியுறுத்தியும் புதன்கிழமை (24) முத்து நகர் விவசாயிகள் கொழும்பில் அமைந்துள்ள பிரதமர் அலுவலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். காலை 10.30 மணியளவில் ஒன்று கூடிய ஆர்பாட்டக்காரர்கள் அன்றைய தினம் இரவு வரை உரிமைக் கோரி போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் பிரதமர் அலுவலகம் போராட்டக்காரர்களை அழைத்து கலந்துறையாடியிருந்ததுடன், விவசாய காணி அபகரிப்பு விடயம் தொடர்பில் எதிர்வரும் 10 நாட்களுக்குள் தீர்வை வழங்க எதிர்பார்ப்பதாகவும் உறுதியளித்துள்ளது. இதன்போது போராட்டக்காரர்கள் தாம் எதிர்நோக்கியுள்ள பிரச்சினைகள் தொடர்பில் பிரதமர் அலுவலகத்தில் மகஜர் ஒன்றையும் கையளித்திருந்தனர். போராட்டத்துக்காக 2 பேருந்துகளில் பொதுமக்கள் வருகைத் தந்திருந்ததுடன், சுமார் 12 மணி நேர போராட்டத்தின் பின்னர் அம்மக்கள் முத்து நகர் நோக்கி பயணமானார்கள். விவசாயிகளிடமிருந்த காணியை அரசாங்கம் பறித்து வெளிநாட்டு நிறுவனத்திடம் கையளித்துள்ளது. எனினும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு உரிய தீர்வு இதுவரை வழங்கப்படவில்லை. விவசாயிகளுக்கு உரிய காணியை அரசாங்கம் சூரிய மின்சக்தி திட்டத்துக்காக ஒதுக்கியுள்ளதோடு மாற்றுக் காணிகளை வழங்காது விவசாயத்துக்கு பயண்படுத்தப்பட்ட குளங்களையும் மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் முத்துநகர் விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். https://www.virakesari.lk/article/226089
  5. பட மூலாதாரம், ANI 2 மணி நேரங்களுக்கு முன்னர் அணு ஆயுதங்களை தாங்கிச் செல்லும் நடுத்தர தூர அக்னி-பிரைம் பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா புதன்கிழமை முதல் முறையாக ரயிலில் இருந்து ஏவியது. இந்த சோதனை வெற்றிகரமாக அமைந்தது. இந்த ஏவூர்தி (launcher) ரயில் தண்டவாளங்களில் இயங்கும், அங்கிருந்து ஏவுகணையை ஏவ முடியும். இது 2,000 கி.மீ. தூரம் வரையிலான இலக்குகளை தாக்கும் திறன் கொண்ட அடுத்த தலைமுறை ஏவுகணை ஆகும். இந்த சாதனைக்காக பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (டிஆர்டிஓ), மூலோபாய படைகள் மற்றும் ஆயுதப்படைகளுக்கு இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்துள்ளார். பாதுகாப்பு படைகளின் வலிமையை அதிகரிப்பதில் இது முக்கிய பங்காற்றும் என்று டிஆர்டிஓ குறிப்பிட்டுள்ளது. இந்த சோதனை ஏன் முக்கியம் என்பதற்கான ஐந்து காரணங்களை தெரிந்துக் கொள்ளலாம். 1. இந்தியாவுக்கு இது ஏன் சிறப்பு வாய்ந்தது? இந்த சோதனை இந்தியாவின் பாதுகாப்புக்கு மிகவும் முக்கியமானது என்று கருதப்படுகிறது. பிபிசி நிருபர் அபய் குமார் சிங் இந்த விவகாரம் குறித்து பாதுகாப்பு நிபுணர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவாவுடன் பேசினார். சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "பாலிஸ்டிக் ஏவுகணையான அக்னி-பிரைம் ரயில் நெட்வொர்க் மூலம் வெற்றிகரமாக செலுத்தப்பட்டது. இது ஒரு பெரிய வெற்றி." என்றார். இந்த ஏவுகணை இரண்டு நிலைகளை கொண்டது, திட எரிபொருள் அடிப்படையிலான தரையிலிருந்து தரையில் மற்றொரு இலக்கை தாக்கும் ஏவுகணை என்று அவர் கூறினார். இது ஒரு கானிஸ்டர் (canister) அமைப்பிலிருந்து விரைவாக ஏவப்படலாம். (கானிஸ்டர் என்பது ஒரு சீல் செய்யப்பட்ட, உருளை வடிவிலான கொள்கலன் – இது ஏவுகணையை வைத்துக் கொள்ளவும், ஏவவும் உதவும். ) ரயிலில் இருந்து ஏவப்படுவதால், இந்த அமைப்பை அணுகுவதற்கு கடினமான பகுதிகளுக்கு கொண்டு செல்ல முடியும் என்று சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா கூறுகிறார். "எங்கெல்லாம் ரயில் நெட்வொர்க் இருக்கிறதோ, அங்கெல்லாம் இதை எளிதாக பயன்படுத்த முடியும், எதிரியின் எந்த இருப்பிடத்தையும் குறிவைக்க முடியும்," என்று அவர் கூறுகிறார். இதன் காரணமாக, இது இந்தியாவுக்கு உத்தி ரீதியாக மிகுந்த வலு சேர்க்கும் என்று கருதப்படுகிறது. 2. எந்தெந்த நாடுகள் ஏற்கனவே இதைச் செய்துள்ளன? இந்த சாதனைக்குப் பிறகு, உலகின் குறிப்பிட்ட சில நாடுகளின் வரிசையில் இந்தியா இணைந்துள்ளது. இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தனது எக்ஸ் பதிவில், "இந்த வெற்றிகரமான சோதனை ரயில் நெட்வொர்க்கில்கானிஸ்டர் ஏவுகணை அமைப்புகளை பயன்படுத்தும் திறன் கொண்ட நாடுகளின் வரிசையில் இந்தியா இணைந்துள்ளது" என்று குறிப்பிட்டார். 'ஏவூர்தி நேரடியாக ரயில் தண்டவாளங்களில் இயங்க முடியும், முன் தயாரிப்பு தேவையில்லை, அதை நாடு முழுவதும் எளிதாக கொண்டு செல்ல முடியும்' என்றும் அவர் விளக்கினார். இது குறுகிய காலத்தில் ஏவுகணைகளை ஏவும் திறனையும் கொண்டுள்ளது, அதே நேரத்தில் எதிரியின் பார்வையில் படாமல் இதனை செய்ய முடியும். "இந்தியாவைத் தவிர, அமெரிக்கா, சீனா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் இந்த திறனைக் கொண்டுள்ளன. வட கொரியாவும் இதைச் செய்ததாகக் கூறியுள்ளது, ஆனால் அதனை இன்னும் உறுதிப்படுத்த முடியவில்லை" என்று சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா சுட்டிக்காட்டுகிறார். பட மூலாதாரம், X/@rajnathsingh 3. அக்னி-பிரைம் ஏவுகணையின் அம்சங்கள் மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள தகவலின்படி, அக்னி-பிரைம் ஏவுகணை அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்துடன் உருவாக்கப்பட்டுள்ளது. இது 2000 கி.மீ. வரை இலக்குகளை தாக்கும், எதிரியின் கண்களுக்கு புலப்படாமல் மிக விரைவாக ஏவப்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ஏவுகணை முற்றிலும் தன்னிறைவு பெற்ற அமைப்பாகும், இதில் தகவல் தொடர்பு மற்றும் பாதுகாப்பு தொடர்பான அனைத்து அமைப்புகளும் ஏற்கனவே நிறுவப்பட்டுள்ளன. இந்த சோதனை முழுமையான வெற்றி பெற்றதாகவும், அனைத்து நோக்கங்களையும் பூர்த்தி செய்ததாகவும் டிஆர்டிஓ தெரிவித்துள்ளது. ஏவுகணையின் பாதை பல்வேறு கண்காணிப்பு நிலையங்களால் கண்காணிக்கப்பட்டது. இந்த வெற்றி எதிர்காலத்தில் ராணுவ சேவைகளில் ரயில் அடிப்படையிலான அமைப்புகளை இணைப்பதற்கு வழிவகுக்கும் என்றும் பத்திரிகை தகவல் அலுவலகம் தெரிவித்துள்ளது. பல வெற்றிகரமான சோதனைகளுக்குப் பிறகு சாலையிலிருந்து ஏவப்படும் அக்னி-பிரைம் ஏற்கனவே ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. பட மூலாதாரம், ANI 4. தண்டவாளம் சார்ந்த ஏவுதல் அமைப்பின் முக்கியத்துவம் தண்டவாளம்-சார்ந்த ஏவுதல் அமைப்பு பல வகையில் பயனளிக்கிறது. ரயில்‌ போன்ற ஒரு ஏவூர்தியிலிருந்து எந்த தண்டவாளத்திலும் நின்றபடி ஏவுகணையை செலுத்த முடியும். இது குறித்து, முன்னாள் ரயில்வே வாரிய உறுப்பினர் (போக்குவரத்து) ஸ்ரீபிரகாஷ் பிபிசி நிருபர் சந்தன் ஜஜ்வரேவிடம், "நாட்டில் எங்கும் ரயில் தண்டவாளங்கள் உள்ளன. இதன் பொருள், ஏவுகணையை நாடு முழுவதும் இருந்து ஏவுவதற்கான சாத்தியம் உருவாகிவிட்டது. எதிரியால் ஏவுகணை எங்கிருந்து ஏவப்படும் என்பதை விரைவாக அறிந்துகொள்ள முடியாது." என்று தெரிவித்தார். இவ்வாறான அமைப்பு, எதிரியால் அடையாளம் காணக்கூடிய நிரந்தர ஏவுதளங்களிலிருந்து வேறுபட்டது. "ஏவுகணைகளை சுரங்கப்பாதையில் மறைத்து வைக்கலாம், தேவைப்படும் போது வெளியே கொண்டு வந்து ஏவ முடியும்" என்றும் அவர் கூறுகிறார். ஆனால், ஏவுதல் நடக்கும் வரை அந்த தண்டவாளத்தில் சாதாரண ரயில் போக்குவரத்தை நிறுத்த வேண்டியது அவசியம் என்பதையும் அவர் ஒப்புக்கொண்டார். மின்வசதி குறித்த கேள்விக்கு, மின்சாரம் தடைப்பட்டால் டீசல் இயந்திரங்களைப் பயன்படுத்தலாம் என ஸ்ரீபிரகாஷ் தெளிவுபடுத்தினார். "இரயில் பாதைகளில் டீசல் இயந்திரங்களும் இருக்கும். டீசல் இயந்திரங்கள் மின்சாரத்தைச் சார்ந்து இல்லை, அவற்றை எங்கும் இயக்க முடியும். அத்தகைய சூழ்நிலையில், டீசலைப் பயன்படுத்துவது மிகவும் சாதகமானது" என்றும் அவர் கூறினார். 5. டிஆர்டிஓவிற்கு பெரும் வெற்றி இந்த சாதனை இந்தியாவின் சுய-சார்பை நோக்கிய முன்னேற்றத்தின் ஒரு முக்கியமான படியாகக் கருதப்படுகிறது. இந்த வெற்றியால், தண்டவாளத்தில் நகரும் ஏவுகணைகளை ஏவும் திறன் கொண்ட ஒரு சில நாடுகளின் குழுவில் இந்தியாவும் சேர்ந்துள்ளது என்று இந்திய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறினார். "டிஆர்டிஓ தொடர்ச்சியாக பெரிய வெற்றிகளை அடைந்து வருகிறது. இந்த ஏவுகணை அந்த வெற்றிகளுக்கு ஒரு முக்கிய மைல்கல்லாகும். இது இந்தியாவிற்கு பெருமையான விஷயம்" என்று சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா கூறினார். இந்தியா இப்போது தனது ராணுவத்திற்கான மட்டுமல்லாமல், ஆயுத ஏற்றுமதிகளையும் ஊக்குவித்து வருகிறது என்றும் அவர் கூறினார். "அது ஏவுகணைகளாக இருந்தாலும் சரி, போர் விமானங்களாக இருந்தாலும் சரி, பல நாடுகள் இந்திய தயாரிப்புகளில் ஆர்வம் காட்டுகின்றன. இந்த துறையிலும் இந்தியா முன்னேறி வருகிறது." - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cg7dy2rxy24o
  6. 26 Sep, 2025 | 11:01 AM கொழும்பு, கோட்டை, ஒல்கொட் மாவத்தை பகுதியில் உள்ள கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் காரியாலயத்தின் 6ஆவது மாடியில் திருட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் காரியாலயத்தின் பொறுப்பதிகாரி இது தொடர்பில் கொழும்பு மத்திய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு செப்டெம்பர் 24 ஆம் திகதி முறைப்பாடு அளித்துள்ளார். இந்த திருட்டு சம்பவம் ஆகஸ்ட் 01 ஆம் திகதியிலிருந்து செப்டெம்பர் 24 ஆம் திகதிக்கு உட்பட்ட காலப்பகுதியில் இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் காரியாலயத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு சிசிரிவி கமராக்கள் பொருத்தப்பட்டிருந்த போதிலும் திருடர்கள் உள்நுழைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். திருடர்கள் கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் காரியாலயத்தின் கதவை உடைத்து உள்நுழைந்துள்ளதாக பொலிஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த திருடர்கள் கொழும்பு பிரதி பொலிஸ் மாஅதிபர் காரியாலயத்தில் உள்ள மின்சாரக் கம்பிகளைத் திருடிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். இது தொடர்பில் கொழும்பு மத்திய பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/226112
  7. குருணாகலை – நா உயன ஆரண்ய சேனாசன கேபிள் கார் விபத்தில் 7 பிக்குகள் பலி Published By: Vishnu 25 Sep, 2025 | 03:52 AM குருணாகலை – மெல்சிரிபுரவின் பன்சியாகமவில் அமைந்துள்ள பௌத்த வன ஆசிரமமான நா உயன ஆரண்ய சேனாசனத்தில் இடம்பெற்ற கேபிள் கார் விபத்தில் உயிரிழந்த பிக்குகளின் எண்ணிக்கை ஏழாக அதிகரித்துள்ளது. உயிரிழந்தவர்களில் இருவர் வெளிநாட்டு பிரஜைகள் எனத் தெரிவிக்கப்படுகிறது. இவர்களின் உடல்கள் கொகருல்ல மாவட்ட வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. ஏனைய பிக்குகளின் உடல்கள் குருணாகலை போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளன. விபத்து இடம்பெற்ற வேளையில் 13 பிக்குகள் கேபிள் காரில் இருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. படுகாயமடைந்த பிக்குகள் தற்போது குருணாகலை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். https://www.virakesari.lk/article/226011
  8. வனவிலங்கு கணக்கெடுப்பின் போது பொதுமக்களால் வழங்கப்பட்ட தரவுகளில் 50 சதவீதமானவை மாத்திரமே துல்லியமானவை : பிரதி அமைச்சர் Published By: Digital Desk 1 25 Sep, 2025 | 01:32 PM அண்மையில் வனவிலங்கு கணக்கெடுப்பின் போது பொதுமக்கள் வழங்கிய தகவல்களில் சுமார் 50 சதவீதமானவையே துல்லியமானது என கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை (25) உரையாற்றும் போதே இந்தத் தகவலை அவர் வழங்கினார். உணவுப் பயிர்களுக்கு தீங்கு விளைவிக்கும் விலங்குகளை அடையாளம் காணவும், அவற்றை முறையாக ஆய்வு செய்யவும், தகுந்த நடவடிக்கை எடுக்கவும் நோக்கமாகக் கொண்டு, 2025 மார்ச் மாதம் 15 ஆம் திகதியன்று நாடு முழுவதும் வனவிலங்கு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. நாடு முழுவதும் ஒரே நேரத்தில் மக்களினால் குரங்குகள், மக்கா குரங்குகள், மயில்கள் மற்றும் இராட்சத அணில் போன்ற விலங்குகளை அடிப்படையாகக் கொண்டு கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. குரங்குகள் மற்றும் மக்கா குரங்குகள் பற்றி பொதுமக்கள் வழங்கிய தரவுகளில் 50 சதவீதமானவையே துல்லியமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். மேலும் கருத்து வெளியிடுகையில், தரவுகள் சரிபார்ப்பின் போது, குரங்குகள் மற்றும் மக்கா குரங்குகள் பற்றி பொதுமக்கள் அளித்த தகவல்களில் 50சதவீதமானவை துல்லியமானது என்பது உறுதிப்படுத்தப்பட்டது. அதன்படி, உணவுப் பயிர்களுக்கு வனவிலங்கு சேதத்தைக் குறைப்பதற்கான பரிந்துரைகளை வழங்குவதற்குப் பொறுப்பான குழு, கணக்கெடுப்புத் தரவுகளின் அடிப்படையில் அவை உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதிகாரப்பூர்வ அறிக்கையின் அடிப்படையில் மதிப்பிடப்பட்ட விலங்கு எண்ணிக்கையையும் அவர் இதன்போது வெளிப்படுத்தியுள்ளார். அதன்படி, மக்கா குரங்குகள்– 5,197,517 குரங்குகள்– 1,747,623 முள்ளம்பன்றிகள் – 2,666,630 ராட்சத அணில்கள் – 4,285,745 யாழ்ப்பாணத்தில் உள்ள டெல்ஃப்ட் தீவின் ஆறு கிராம அலுவலகர் பிரிவுகளில், தொடர்புடைய விலங்குகள் இல்லாததால், கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை எனவும் கமத்தொழில் மற்றும் கால்நடை வளங்கள் பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/226045
  9. 25 Sep, 2025 | 06:20 PM (எம்.நியூட்டன்) வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தினரின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் இன்று (25) ஆரம்பமானது. இப்போராட்டம் யாழ்ப்பாணம் செம்மணியில் இன்று காலை ஆரம்பமான நிலையில் எதிர்வரும் 29ஆம் திகதி வரை தொடர்ந்து நடத்தப்படவுள்ளது. இலங்கையில் உள்நாட்டு யுத்தத்தின்போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்கள் உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி மனிதப் புதைகுழி விவகாரத்திற்கு நீதி கோரியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. தியாகதீபம் திலீபனின் திருவுருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டு ஆரம்பமான இந்தப் போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களைச் சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், சமூக செயற்பாட்டாளர்கள், பொதுமக்கள் என பெருந்திரளானோர் கலந்துகொண்டுள்ளனர். போராட்டத்தில் கலந்துகொண்டவர்கள், நாட்டின் உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரிக்கின்றோம், தமிழ் இன அழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் உள்ளிட்ட போர்க் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் முதலான விடயங்களில் நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம் முதலான கோரிக்கைகளை இதன்போது முன்வைத்துள்ளனர். https://www.virakesari.lk/article/226043
  10. பட மூலாதாரம், PAWAN JAISHWAL படக்குறிப்பு, பிஸ்மில்லா கோலா கட்டுரை தகவல் ராக்ஸி காக்டேகர் பிபிசி செய்தியாளர் 25 செப்டெம்பர் 2025, 05:11 GMT நூர் ஜஹான் ஒரு மருத்துவ பரிசோதனையிலிருந்து திரும்பி வந்துள்ளார். அவர் மூன்று நாட்களை ஒரு ஆய்வகத்தில் கழித்துள்ளார், அங்கு ஆராய்ச்சியாளர்களும் மருந்து நிறுவனங்களும் அவர் மீது புதிய மருந்துகளை பரிசோதித்துள்ளன. நூர் ஜஹான் தனது சிறிய வீட்டிற்குள் நுழைந்தபோது, அவரது குழந்தைகளும் கணவரும் அவரை வரவேற்கக் காத்திருந்தனர். நூர் ஜஹானின் வீட்டில் ஒரு சிறிய சமையலறை, ஒரு படுக்கை மற்றும் சில பெட்டிகள் உள்ளன. நூர் ஜஹான் தனது மகளின் திருமணத்திற்கான பொருட்களை ஏற்பாடு செய்து வருகிறார். தனது குடும்பச் செலவுகள் மற்றும் மகளின் திருமணத்திற்காக சிறிது பணத்தை சேமிக்க, நூர் ஜஹான் தனது உடலில் மருத்துவ பரிசோதனைகளை செய்ய அனுமதிக்கிறார். "என் குழந்தைகள் இரவில் பசியுடன் தூங்கச் செல்லக்கூடாது என்பதை உறுதி செய்கிறேன்" என்று அவர் கூறினார். மூன்று மாத கால மருத்துவ பரிசோதனைகள் பட மூலாதாரம், PAWAN JAISHWAL படக்குறிப்பு, தனது மகளின் திருமணத்திற்காக பணத்தைச் சேமித்து வருகிறார் நூர் ஜஹான் நூர் ஜஹான் தற்போது மூன்று மாத கால மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கிறார். பரிசோதனைகளுக்காக அவர் தொடர்ந்து ஆய்வகத்திற்குச் செல்ல வேண்டும். மருத்துவ பரிசோதனையின் முடிவில், அவருக்கு 51,000 ரூபாய் வழங்கப்படும். பிபிசி அவரை நேர்காணல் செய்தபோது, அவர் ஏற்கனவே ரூ.15,000 பெற்றிருந்தார். அடுத்து பெறப்போகும் 36,000 ரூபாயை தனது மகளின் திருமணத்திற்குப் பயன்படுத்த இருப்பதாக நூர் ஜஹான் கூறினார். "நாங்கள் ஏழைகள். எப்படியும் இந்த சிறிய குடிசையில் நாங்கள் இறக்கப் போகிறோம். நான் என் ரத்தத்தைக் கொடுத்து பணம் பெறுகிறேன். நான் வேறு எந்தத் தவறும் செய்யவில்லை. மீதமுள்ள பணத்தைப் பெற்ற பிறகு, என் மகளுக்கு திருமணம் செய்து வைப்பேன்" என்று நூர் ஜஹான் பிபிசியிடம் கூறினார். ஆமதாபாத்தில் உள்ள சபர்மதி நதிக்கரையில் இருந்து வெளியேற்றப்பட்ட மக்களின் மறுவாழ்வுக்காக கட்டப்பட்ட ஒரு குடியிருப்பான கணேஷ் நகரில் நூர் ஜஹான் வசிக்கிறார். அருகிலுள்ள ஆய்வகங்களில் நடத்தப்படும் மருத்துவ பரிசோதனைகளில் இந்தப் பகுதியிலிருந்து பங்கேற்கும் நூற்றுக்கணக்கான மக்களில் இவரும் ஒருவர். பட மூலாதாரம், PAWAN JAISHWAL படக்குறிப்பு, பிஸ்மில்லா தன் உடலில் உள்ள தழும்புகளைக் காட்டுகிறார் நூர் ஜஹானைப் போலவே, 60 வயதான ஜாசிபென் சுனாராவும் மருத்துவ பரிசோதனைகளில் கலந்துகொள்கிறார். சில ஆண்டுகளுக்கு முன்பு தனது கணவர் மற்றும் மகனை இழந்த அவர் ஆமதாபாத்தின் ஜமால்பூரில் உள்ள காய்கறி மற்றும் பூ சந்தைக்கு அருகில் வசித்து வந்தார். "நான் ஜமல்பூரில் வசித்தபோது, எனக்கு ஒருபோதும் பணக் கஷ்டம் ஏற்பட்டதில்லை. வியாபாரிகள் வேண்டாம் என ஒதுக்கும் காய்கறிகளை சந்தையில் இருந்து எடுத்து வந்து, விற்பேன்" என்று ஜாசிபென் கூறினார். "இப்போது நான் கணேஷ்நகருக்கு மாறியதால், எனக்கு வருமானத்திற்கு வழி இல்லை. மருத்துவ பரிசோதனையில் சேருவதைத் தவிர எனக்கு வேறு வழியில்லை." என்கிறார். ஒரு சிறிய குடிசையில் அவர் வசிக்கிறார். "இப்போது என்னால் காய்கறிகளை விற்க முடியாது. என் உடல்நிலை சரியில்லை. என் கைகள் வலிக்கின்றன. ஆனாலும் பட்டினி கிடக்காமல் இருக்க மருத்துவ பரிசோதனைகளுக்குச் செல்கிறேன்" என்று ஜாசிபென் சுனாரா கூறுகிறார். ஆமதாபாத்தின் புறநகரில் உள்ள பிரனா குப்பை கிடங்கிற்கு அருகில் அமைந்துள்ள கணேஷ்நகரில் சுமார் 15,000 மக்கள் வசிக்கின்றனர். அவர்களில் பெரும்பாலோர் குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள். இவர்களில் பலர் ஆற்றங்கரைகளுக்கு அருகிலுள்ள பகுதிகளில் வசித்து வந்தனர். அதேசமயம், ஆகமதாபாத்தின் சந்தைகளில் தினக்கூலித் தொழிலாளர்களாக வேலை செய்து வந்தனர். பெண்கள் சந்தைகளில் வேலை செய்தனர் அல்லது வீடுகளில் பணியாளர்களாக இருந்தனர். அவர்கள் ஒரு நாளைக்கு 200 முதல் 400 ரூபாய் வரை சம்பாதித்தனர். வேறு பகுதியில் குடியமர்த்தப்பட்ட பிறகு அவர்களில் பலர் வேலை இழந்துவிட்டனர். பிஸ்மில்லாவின் கதை பட மூலாதாரம், PAWAN JAISHWAL படக்குறிப்பு, நிறுவனங்களுக்கும் மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்பவர்களுக்கும் இடையே முகவர்கள் ஒரு முக்கிய இணைப்பாக உள்ளனர். ஆமதாபாத் மாநகராட்சியின் அறிக்கையின்படி, சுபாஷ் பாலம் முதல் வாஸ்னா தடுப்பணை வரையிலான ஆற்றங்கரைப் பகுதியில் வசித்த 12,000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் 29 அரசு குடியிருப்புகளுக்கு மாற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இடம்பெயர்ந்தவர்களுக்கு அவர்கள் முன்பு வசித்த பகுதிகளில் இருந்து இரண்டு முதல் மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள பகுதியில் வீடு வழங்கப்படும் என்று உறுதியளிக்கப்பட்டது. 48 வயதான பிஸ்மில்லா கோலா, கணேஷ்நகருக்கு இடம்பெயர்வதற்கு முன்பு விவாகரத்து பெற்றார். ஒரு காலத்தில், அருகிலிருந்த குடியிருப்புகளில் வீட்டு வேலைகள் செய்து வந்த அவர், அவரது மகன் ஒரு குற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட பிறகு அந்த வேலையை இழந்தார். பின்னர் பிஸ்மில்லா மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்கத் தொடங்கினார். "நான் தனியாக இருக்கிறேன். எனக்கு எந்த ஆதரவும் இல்லை. என் மகனின் வழக்கை நடத்த என்னிடம் பணம் இல்லை. என் வீட்டை பழுதுபார்க்க கூட என்னிடம் பணம் இல்லை. நான் என்ன செய்ய வேண்டும்? மருத்துவ பரிசோதனைகளில் கொஞ்சம் பணம் கிடைக்கும் என்று ஒருவர் சொன்னபோது நான் அதில் சேர்ந்தேன்" என்று அவர் கூறினார். பிஸ்மில்லா பல மருத்துவ சோதனைகளில் பங்கேற்றுள்ளார். கணேஷ்நகரின் உள்ளூர்வாசிகள் இதுபோன்ற மருத்துவ பரிசோதனைகளை 'STD'-கள் என்று அழைக்கிறார்கள். 'Study' (ஆய்வு) என்பதையே அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள். "நான் குறைந்தது ஏழு முதல் பத்து ஆய்வுகளில் பங்கேற்றுள்ளேன், ரூ.12,000 முதல் ரூ.15,000 வரை சம்பாதித்துள்ளேன். நான் மூன்று நாட்கள் ஆய்வகத்தில் தங்க வேண்டும். மருந்து எடுத்துக் கொண்ட பிறகு, அவர்கள் என் ரத்தத்தை தொடர்ந்து எடுத்து பரிசோதிப்பார்கள்" என்று பிஸ்மில்லா கூறுகிறார். பரிசோதனைகள் தொடர்பான விதிகள் பட மூலாதாரம், PAWAN JAISHWAL படக்குறிப்பு, கணேஷ்நகரில் இடம்பெயர்ந்தவர்களுக்கு அடிப்படை வசதிகள் கூட இல்லை. உள்ளூர் முகவர்கள் மூலம் பிஸ்மில்லா இந்த மருத்துவ பரிசோதனைகளுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். முகவர்கள், அவர்கள் அழைத்து வரும் ஒவ்வொரு தன்னார்வலருக்கும் ரூ.500 முதல் ரூ.1,000 வரை ஊதியம் பெறுகிறார்கள். "பொதுவாக ஆய்வகங்கள் ஒரு குறிப்பிட்ட வயது அல்லது பாலினத்தைச் சேர்ந்தவர்களுக்காக எங்களைத் தொடர்பு கொள்கின்றன. அவர்களிடம் எங்கள் எண் இருக்கும். அவர்கள் எங்களை அழைப்பார்கள்," என்று பெயர் வெளியிட விரும்பாத ஒரு முகவர் பிபிசியிடம் கூறினார். "நாங்கள் ஒரு வாட்ஸ்அப் குழுவில் இருக்கிறோம், அங்கு இதற்கான அறிவிப்புகள் வெளியிடப்படுகின்றன. சில நேரங்களில் நாங்களே மக்களை ஆய்வகத்திற்கு அழைத்துச் செல்கிறோம், சில நேரங்களில் அவர்களை நேரடியாகவே அங்கு செல்லுமாறு கூறுகிறோம்." என்கிறார் அவர். இந்த முகவரே மருத்துவ சோதனைகளில் பங்கேற்றவர்தான். இப்போது அவர் பிஸ்மில்லா, நூர் ஜஹான் மற்றும் ஜாசி பென் போன்றவர்களை ஒருங்கிணைத்து ஒரு குழுவை நடத்தி வருகிறார். "இதில் என்ன தவறு? ஆராய்ச்சி நிறுவனங்கள் சட்டவிரோதமாக எதையும் செய்வதில்லை. அவை சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுகின்றன. எழுத்துப்பூர்வமாகவும் காணொளி பதிவு மூலமாகவும் ஒப்புதல் பெறப்படுகிறது" என்று அந்த முகவர் கூறுகிறார். "மருந்து மற்றும் அதன் பக்க விளைவுகள் பரிசோதிக்கப்படுவதாக பங்கேற்பாளர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது. மருத்துவரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்ணும் வழங்கப்பட்டுள்ளது, இதனால் பங்கேற்பாளர்கள் வீடு திரும்பிய பிறகும் மருத்துவரிடம் உதவி பெற முடியும்." என்கிறார் அவர். ஆனால் உள்ளூர் சமூக ஆர்வலர் பினா ஜாதவ், "முன்னதாக, ஒன்று அல்லது இரண்டு முறை என அவ்வப்போது இந்த மக்கள் பணம் சம்பாதிப்பதற்காக சோதனைகளில் சேர்ந்தனர், ஆனால் இப்போது அது ஒரு தொழிலாகவே மாறிவிட்டது. இதனால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து நாங்கள் அவர்களை எச்சரிக்கிறோம். ஆனால் இப்பகுதியில் வேலைவாய்ப்பு இல்லாததால், இதில் ஈடுபடும் மக்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது" என்று கூறுகிறார். பட மூலாதாரம், PAWAN JAISHWAL படக்குறிப்பு, பினா ஜாதவ் போன்ற சமூக ஆர்வலர்கள் மருத்துவ பரிசோதனைகளின் பக்க விளைவுகள் குறித்து மக்களை எச்சரிக்க முயற்சிக்கின்றனர். உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் இந்திய அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட மருத்துவ நடைமுறை வழிகாட்டுதல்களின்படி இந்த சோதனைகள் நடத்தப்படுகின்றனவா என்பதைக் கண்டறிய பிபிசி ஒரு முக்கிய நிறுவனத்தின் ஆய்வகத்தைத் தொடர்பு கொண்டது. மருத்துவ பரிசோதனைகளில் பங்கேற்பதற்காக பணம் பெறும் நபர்களுக்கான உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல்கள், "அத்தகைய தொகை பொதுவாக ஆய்வின் நன்மைக்காக அல்லாமல் ஆட்சேர்ப்பு செயல்முறையின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது" என்று கூறுகின்றன. "நிச்சயமாக, ஐஇசி- ஐஆர்பி (IEC - IRB) செலுத்தப்படும் தொகை மற்றும் முறையை மறுபரிசீலனை செய்ய வேண்டும். வற்புறுத்தல் அல்லது தேவையற்ற அழுத்தம் காரணமாக மக்கள் இதில் பங்கேற்கவில்லை என்பதை உறுதி செய்ய வேண்டும். மேலும், மக்கள் இந்த ஆய்வுகளில் சேர அல்லது தொடர்ந்து பங்கேற்க ஊக்குவிக்கும் அளவுக்கு ஊதியம் அதிகமாக இருக்கக்கூடாது." உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் சஞ்சய் பாரிக் இந்த நடைமுறையை "மனித உரிமைகளை மீறும் ஒரு கொடூரமான செயல்" என்று விவரிக்கிறார். பிபிசியிடம் பேசிய அவர், "இந்த சோதனையின் தீய விளைவுகள் பற்றி அறியாதவர்களைக் குறித்து நாங்கள் பேசுகிறோம். சட்டப்படி, அவர்களின் சம்மதத்தை தகவலறிந்த சம்மதமாகக் கருத முடியாது" என்று கூறினார். மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த 'ஸ்வஸ்த் அதிகார் மன்ச்' என்ற அமைப்பு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், சஞ்சய் பாரிக் அந்த அமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். இந்தூரில் மருத்துவ பரிசோதனைகள் தொடர்பான பல இறப்புகளுக்குப் பிறகு, அந்த அமைப்பு மனு தாக்கல் செய்தது "இது குஜராத்தில் மட்டும் நடப்பதில்லை. மும்பை, ஹைதராபாத் மற்றும் பிற நகரங்களில் உள்ள ஆய்வகங்களும் மக்களை 'சோதனை எலிகளாகப்' பயன்படுத்துகின்றன" என்று அந்த அமைப்பின் தேசிய ஒருங்கிணைப்பாளர் அமுல்யா நிதி கூறுகிறார். மருத்துவ சோதனைகளில் நடந்த முறைகேடுகளை விசாரிக்கும் ஒரு நாடாளுமன்றக் குழுவும், நாட்டின் அடித்தட்டு மக்களைக் குறிக்க 'கினி எலி' என்ற வார்த்தையை பயன்படுத்தியது. "தன்னார்வலர்களின் ஆட்சேர்ப்பு முதல் மருத்துவ பரிசோதனைகளின் முடிவுகள் வரை ஒவ்வொரு கட்டத்தையும் கண்காணிக்க ஒரு முறையான அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். அதுவரை, பாதிக்கப்படக்கூடியவர்கள் தொடர்ந்து சுரண்டப்படுவார்கள். சோதனைகளின் குறிப்பிட்ட முடிவுகளைத் தவிர மற்ற அனைத்து தகவல்களும் பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்" என்று சஞ்சய் பரிக் கூறுகிறார். அமெரிக்காவைச் சேர்ந்த 'கிராண்ட்வியூ ரிசர்ச்சை' மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி முகமை செய்தி ஒன்றை வெளியிட்டது. அதன்படி, 'இந்தியாவின் மருத்துவ பரிசோதனை சந்தை 2025-ஆம் ஆண்டுக்குள் 1.51 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. சோதனைகள் தோல்வியுற்றாலும் அதிக செலவு கிடையாது என்பதால், நிறுவனங்கள் இந்தியாவை நோக்கி ஈர்க்கப்படுகின்றன. "ஒருபுறம், மக்களுக்கு பணம் தேவை, மறுபுறம், நிறுவனங்களுக்கு மருந்துகளை சோதிக்க தன்னார்வலர்கள் தேவை. எல்லாம் சட்டம் மற்றும் அரசாங்க தரநிலைகளின்படி செய்யப்படுகிறதா என்று எனக்குத் தெரியவில்லை," என்று காமன்வெல்த் மருந்து சங்கத்தின் தலைவர் டாக்டர் ராவ் வி.எஸ்.வி. வட்லமுடி பிபிசியிடம் தெரிவித்தார். "இதுபோன்ற கேள்விகளைக் கேட்டு நாம் யாரைப் பாதுகாக்கிறோம் என்று கூட எனக்குத் தெரியவில்லை. மருந்து உற்பத்தி ஒரு உன்னதமான தொழில், சமூகம் பெரிய அளவில் பயனடைய மனித தன்னார்வலர்கள் தேவை, ஆனால் அனைத்து தரநிலைகளும் பின்பற்றப்பட வேண்டும்." என்று அவர் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c9dx9gqvd92o
  11. வட்ட வடிவில் வானவில் நாயின் வித்தியாசமான செயல்
  12. 25 Sep, 2025 | 11:48 AM எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகை உருவாக்குவதற்கு முழு மனதுடன் அர்ப்பணிப்போம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் உரையாற்றிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார். அதன்போது, ஒருவருக்கொருவர் எதிராகச் செல்வதற்குப் பதிலாக, ஒருவருக்கொருவர் கைகோர்த்துச் செல்லும் பயணத்தை நாம் மேற்கொள்ள வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வு, நியூயோர் நகரில் ஐக்கிய நாடுகள் சபை தலைமையகத்தில் ஆரம்பமானதுடன், இலங்கை நேரப்படி இன்று (25) காலை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அமர்வில் உரையாற்றினார் காசா பகுதியில் தொடர்ந்து இடம்பெரும் கொடூரமான பேரழிவு குறித்து கவலை தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய அனைத்து தரப்பினரின் இணக்கப்பாட்டுடன் இரு தரப்பும் உடனடியாக போர்நிறுத்தத்தில் ஈடுபடுவதுடன், அனைத்து மனிதாபிமான உதவிகளையும் தடையின்றி வழங்கவும், அனைத்து தரப்பிலிருந்தும் பணயக்கைதிகளை விடுவிக்க குரல் எழுப்புவதாகவும் வலியுறுத்தினார். இந்த கொடூரமான கொலைகளை நிறுத்துவதற்கு வலுவான அழுத்தம் கொடுக்கப்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். ஆயுதங்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மனித நாகரிகத்தின் மதிப்புகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனிற்கு அனைவரும் செல்ல வேண்டும் என்று ஜனாதிபதி வலியுறுத்தினார். மேலும், பல உலகளாவிய பிரச்சினைகளை உருவாக்கியுள்ள வறுமை குறித்து தனது உரையில் சிறப்பு கவனம் செலுத்திய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, சமத்துவமின்மை மற்றும் வறுமையை உலகளாவிய பேரழிவாகக் கருதி அவற்றை நிவர்த்தி செய்ய வேண்டும் என்றும் தெரிவித்தார். உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களைப் பாதிக்கும் ஒரு சிக்கலான சவாலாக மாறியுள்ள உலகளாவிய போதைப்பொருள் பிரச்சினையை ஒழிக்க இலங்கை எடுத்துள்ள சாதகமான நடவடிக்கைகளையும் இங்கு எடுத்துரைத்த ஜனாதிபதி, உலக சுகாதாரம், உலக ஜனநாயகம், உலக அரசியல் மற்றும் உலக நல்வாழ்விற்கு சவாலாக அமைந்துள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான உலகளாவிய நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த உலகத் தலைவர்கள் இணைய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தார். போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்கு எதிரான சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவது, அவ்வாறான கடத்தல்காரர்கள் அந்தந்த நாடுகளுக்கு இடம்பெயர்வதற்கான வாய்ப்புகளை அதிகரிப்பது மற்றும் போதைக்கு அடிமையான புனர்வாழ்வு நிலையங்களை உருவாக்குவது குறித்த விடயங்கள் தொடர்பில் ஜனாதிபதி உலகத் தலைவர்களின் கவனத்திற்கு கொண்டுவந்தார். சமூகத்தில் பாரிய அழிவுகளையும் அவலங்களையும் ஏற்படுத்தும் ஊழல், அபிவிருத்திக்கு தடையாக இருப்பதுடன் ஜனநாயகம் மற்றும் உலக நலனுக்கு தீர்க்கமான அச்சுறுத்தல் மற்றும் வறுமைக்கும் காரணமாகின்றன என இங்கு சுட்டிக்காட்டிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஊழலுக்கு எதிரான போராட்டம் கடினமான நடவடிக்கையாக இருந்தாலும், அடுத்த தலைமுறைக்காக இலங்கை அதை ஆரம்பித்துள்ளதுடன், ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒவ்வொரு நாட்டின் கலாசாரத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார். இருளுக்கு பதிலாக ஒளியின் பாதையைத் தேர்ந்தெடுத்த இலங்கை மக்கள் இன்று ' வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற நடைமுறை தொலைநோக்குப் பார்வையைச் சுற்றி ஒன்றுபட்டுள்ளனர் என்று மேலும் தெரிவித்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, இந்த வரலாற்றுச் சாதனையை நனவாக்க, ஊழலற்ற நெறிமுறைமிக்க நிர்வாகம், வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் தூய்மையான நாடு ஆகிய முக்கிய துறைகளில் அவதானம் செலுத்தியுள்ளதுடன், அதனுடன் இணைந்தவகையில் கல்வி, சுகாதாரம் ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், படிப்படியாக அவை அனைத்தும் வெற்றிகொள்ளப்படுவதாகவும் குறிப்பிட்டார். ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 80 ஆவது அமர்வில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆற்றிய முழுமையான உரை கீழே பின்வருமாறு, தலைவர் அவர்களே, சிறப்பு விருந்தினர்களே, அதிதிகளே, உலக நாடுகளிடையே நீதியான மற்றும் நீடித்த அமைதியை நிலைநாட்டிப் பேணுவதை உன்னத குறிக்கோளாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த தனித்துவமான அமைப்பின் 80 ஆவது அமர்வின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, ஐரோப்பாவின் மையப்பகுதியில் உள்ள அற்புதமான ஜெர்மனியைச் சேர்ந்த அதிமேதகு அந்தெலேனா பெயபெராக் அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். மேலும், உலகையே வியக்க வைக்கும் புவியியல் மற்றும் கலாசார பன்முகத்தன்மை கொண்ட நாடான கேமரூனின் முன்னாள் ஜனாதிபதி அதிமேதகு பிலிமோன் யாங் வழங்கிய தலைமைத்துவத்திற்கு இலங்கை தனது பாராட்டுகளைத் தெரிவிக்க இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்கிறேன். அமைதியும் ஜனநாயகமும் நிறைந்த அழகிய உலகத்திற்காக எட்டு தசாப்தங்களாக தன்னை அர்ப்பணித்துள்ள ஒரு அமைப்பின் பல்தரப்புப் போக்கிற்கும் எதிர்காலத்திற்கும் திட்டங்கள் வகுக்கப்படும் இந்தச் சிறப்புச் சந்தர்ப்பத்தில் இலங்கையின் ஜனாதிபதி என்ற முறையில் முதல் தடவையாக இந்த கௌரவமான சபையில் உரையாற்றுவதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த உலகின் பல்வேறு நாடுகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் நீங்கள் ஒவ்வொருவரும் அந்தந்த நாட்டு மக்களின் பிரதிநிதிகள். எனது நாடான இலங்கையைப் போலவே, ஏனைய எல்லா நாட்டு மக்களாலும் எங்களிடம் ஒப்படைக்கப்பட்ட வரலாற்றுப் பொறுப்பு நம் அனைவரின் தோள்களிலும் சுமத்தப்பட்டுள்ளது. நாம் எடுக்கும் ஒவ்வொரு முடிவும் இந்த உலகில் எங்கேனும் வாழும் அனைவரையும் பாதிக்கிறது. அந்த முடிவுகள் மற்றும் தீர்மானங்கள் அனைத்தும் உலகின் எதிர்கால இருப்பிற்கு ஒரு தீர்க்கமான பங்களிப்பைச் செய்கின்றன. மனித நாகரிகத்தின் தொடக்கத்தில் இருந்து எதிர்கொள்ளும் மிகக் கடுமையான துயரமாக வறுமையை அறிமுகப்படுத்தலாம். அந்தப் பாரிய பேரழிவின் விளைவாக எழுந்த பல கடுமையான பிரச்சினைகள் நம் முன் ஒரு இருண்ட துயரத்தை உருவாக்கியுள்ளன. இந்த சிறப்பு மாநாட்டின் கவனம் அதில் குவிய வேண்டும் என்று என் மனசாட்சி உரக்கச் சொல்கிறது. பெரும்பாலும் இவை அனைத்தும் உங்கள் மனசாட்சியை ஓரளவுக்கேனும் பாதிக்கும் என்று நான் நினைக்கிறேன். மதிப்பிற்குரிய பிரதிநிதிகளே, வறுமை என்பது உலகின் பெரும்பாலான நாடுகளில் பல நூற்றாண்டுகளாக அனுபவித்து வரும் ஒரு தொடர்ச்சியான மற்றும் மிகவும் வேதனையான போராட்டமாக அடையாளப்படுத்தலாம். இது பல வடிவங்களில் வரும் ஒரு பயங்கரமான எதிரி, இந்த மாநாட்டில் நாங்கள் கூடியிருக்கும் தருணத்தில் கூட, நான் உட்பட இந்த ஒவ்வொரு பிரதிநிதிகளின் நாடுகளிலும் கணிசமான எண்ணிக்கையிலான குழந்தைகள் பட்டினியால் வாடுகிறார்கள். அனைத்து பிள்ளைகளுக்கும் கல்வி கற்கும் உரிமை என்பது சர்வதேச மனித உரிமைகள் சட்டத்தால் உத்தரவாதம் அளிக்கப்பட்டு அரசியலமைப்பில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு அடிப்படை மனித உரிமையாகும். ஆனால் உலகம் முழுவதும் இலட்சக்கணக்கான குழந்தைகள் ஏழ்மை மற்றும் வறுமை காரணமாக இந்த உரிமை மறுக்கப்படுகிறார்கள். தொழில்நுட்பம் நிறைந்ததாக பெருமை பேசும் உலகில், குழந்தைகள் பாடசாலைக் கல்வியை இழப்பது எவ்வளவு துரதிர்ஷ்டவசமானது? ஒவ்வொரு பாரிய தேசத்தையும் கட்டியெழுப்புவதற்கான அடித்தளம் கல்வி ஆகும். எதிர்கால உலகின் இருப்பை தீர்மானிக்கும் முக்கிய காரணியாகும். கல்வியில் முதலீடு செய்வதை உலக முன்னேற்றத்திற்கான முதலீடாக நாங்கள் கருதுகிறோம். பல அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளில் வறுமையை நிவர்த்தி செய்வதில், முன்னேற்றத்திற்கு கடன் சுமைகள் தொடர்ந்து தடையாக உள்ளன. பொதுவாக, குறைந்த வருமான நாடுகள் சுகாதாரம் அல்லது கல்வி சேவைகளை விட நிகர வட்டி செலுத்துதல்களுக்கு இரண்டு மடங்கு அதிகமான நிதியை ஒதுக்குகின்றன. பிரஜைகளாகவும் நாடுகளாகவும் நாம் கடன் பொறிகளில் சிக்கிக் கொண்டுள்ளோம். இந்த சூழ்நிலைக்கு ஒரு சாதகமான தீர்வு அவசியம். நிலைபேறான அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரல், யாரையும் கைவிடாது என்றும் முதலில் பின்தங்கியவர்களை சென்றடையவும் உறுதியளிக்கிறது. இன்று உலகம் எதிர்கொள்ளும் மிகப்பெரிய உலகளாவிய சவாலான வறுமையை ஒழிக்கும் சவாலை நிலைபெறு அபிவிருத்திக்கான 2030 நிகழ்ச்சி நிரல் அடையாளம் கண்டுள்ளது. 1995 ஆம் ஆண்டு கோபன்ஹேகனில் நடைபெற்ற சமூக அபிவிருத்திக்கான உலக உச்சி மாநாட்டில் எடுக்கப்பட்ட ஒரு முக்கியமான முடிவை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன். இருப்பினும், எதிர்பாராத யுத்தங்கள், அரசியல் கொந்தளிப்புகள் மற்றும் உலகமே புயலில் சிக்கிய கோவிட் தொற்றுநோய் ஆகியவை இலட்சிய நிகழ்ச்சி நிரலை சீர்குலைத்துள்ளன. எனவே, ஏழை பணக்காரர் இடைவெளி மற்றும் வறுமையை ஒரு உலகளாவிய பேரழிவாக நாம் கருத வேண்டும். மதிப்பிற்குரிய தலைவர் அவர்களே, கௌரவ விருந்தினர்களே, இந்த அற்புதமான உலகை சீர்குலைத்து, குழப்பும் புதிய பிரச்சனையாக போதைப்பொருள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை அடையாளம் காண முடியும். ஐக்கிய நாடுகளின் போதைப்பொருள் குற்றங்கள் தொடர்பான அலுவலகம் அதன் 2025 உலக போதைப்பொருள் அறிக்கையில் கூட இதை உறுதிப்படுத்தியுள்ளது. உலகளாவிய போதைப்பொருள் பிரச்சனை உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு சிக்கலான சவாலாக மாறியுள்ளது. நாளுக்கு நாள், போதைப்பொருள் மற்றும் தொடர்புடைய பொருட்கள் உலக சந்தையை வேகமாக ஆக்கிரமித்துள்ளன. போதைப்பொருள் வர்த்தகமும் அதன் மூலம் செயல்படும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றமும் பல உலக நெருக்கடிகளுக்கு வழி வகுத்துள்ளன. இவற்றில் ஈடுபட்டுள்ள குழுக்கள் நாடுகளை இரையாக மாற்றுகின்றன. இந்த கொள்ளைநோய் உலக சுகாதாரம், உலக ஜனநாயகம், உலக அரசியல் மற்றும் இறுதியாக உலக நல்வாழ்வுக்கு எதிரான ஒரு பெரிய போக்காக மாறியுள்ளது. இலங்கையில் இந்த பெரும் கொள்ளைநோயை ஒழிப்பதற்கான ஒரு சாத்தியமான திட்டத்தை நாங்கள் செயல்படுத்தி வருகிறோம், மேலும் இந்த அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான உலகளாவிய நிகழ்ச்சி நிரலை செயல்படுத்துமாறு நான் உங்களை கௌரவத்துடன் அழைக்கிறேன். இந்த கடத்தல்காரர்களுக்கு எதிராக சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துதல், அத்தகைய கடத்தல்காரர்கள் தத்தமது நாடுகளுக்கு குடிபெயர்வதைத் தடுத்தல் மற்றும் இந்த போதைப்பொருட்களுக்கு அடிமையானவர்களின் மறுவாழ்வு மையங்களை நிறுவுதல் போன்ற அநேக விடயங்களை உங்கள் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்: ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு அங்கமாக இருக்க வேண்டும் கௌரவ தலைவர் அவர்களே, மதிப்புமிக்க விருந்தினர்களே, ஊழல் என்பது சமூகத்தில் பரவலான அழிவு மற்றும் சோகத்தை ஏற்படுத்தும் ஒரு நயவஞ்சக தொற்றுநோய் என்று நாங்கள் கருதுகிறோம். ஊழல் என்பது அபிவிருத்திக்கு ஒரு தடையாக இருப்பது எங்கள் நிலைப்பாடு. இது ஜனநாயகம் மற்றும் உலக நல்வாழ்வுக்கு ஒரு முக்கியமான அச்சுறுத்தல் மற்றும் வறுமைக்கு ஒரு காரணம் என்பது எமது நிலைப்பாடாகும். ஊழலுக்கு எதிரான போராட்டம் ஆபத்தானது. ஆனால் ஊழலுக்கு எதிராகப் போராடாதிருப்பது இன்னும் ஆபத்தானது என்பதை மிகுந்த மரியாதையுடன் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். 1948 ஆம் ஆண்டு மனித உரிமைகள் பிரகடனம் உலகில் மனித சமூகத்திற்கு ஒரு பெரிய வெற்றியைக் கொண்டு வந்தது. மனித நாகரிகத்தின் பல்வேறு சாதனைகள் ஒரே இரவில் கிடைத்துவிடவில்லை. இவை அனைத்தும் மகத்தான தியாகம் மற்றும் விடாமுயற்சியின் பெறுபேறுகள். ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒரு கடினமான முன்னெடுப்பாகும். ஆனால் நாம் அந்த முன்னெடுப்பை மேற்கொள்ள வேண்டும். நாம் எடுக்கும் முதல் படி கடினமாக இருக்கலாம். ஆனால் நாம் தைரியமாக எடுக்கும் படி சரியானதாக இருந்தால், அதனை பின்தொடர்ந்து ஆயிரக்கணக்கான பல படிகள் எடுத்துவைக்கப்படும் என்று நான் நம்புகிறேன். தைரியமாக இருங்கள் எஞ்சிய அனைத்தும் தானாக நடக்கும் என்ற ஜவகர்லால் நேருவின் கருத்தை இத்தருணத்தில் நான் நினைவுபடுத்துகிறேன். நான் சுமார் 22 மில்லியன் மக்கள் தொகை கொண்ட ஒரு சிறிய, பிரகாசமான தீவை பிரதிநிதித்துவப்படுத்துகிறேன். இலங்கையின் மக்கள் தொகை மொத்த உலக மக்கள்தொகையில் சுமார் 0.3% ஆகும். நமது நாட்டின் மக்கள் தொகை அளவு மற்றும் எண்ணிக்கையின் அடிப்படையில் சிறியது என்பது உண்மைதான். ஆனால் நமது நாட்டிற்காகவும் உலகத்திற்காகவும் எதிர்கால சந்ததியினருக்காகவும் ஊழலுக்கு எதிரான போராட்டத்தை தொடங்கியுள்ளோம். ஊழலுக்கு எதிரான போராட்டம் ஒவ்வொரு நாட்டின் கலாச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன். நீங்கள் எந்த நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தினாலும், அனைத்து பிரதிநிதிகளும் யுத்தத்தை நிராகரிப்பதில் என்னுடன் கைகோர்ப்பார்கள் என்று நான் உறுதியாக நம்புகிறேன். உலகில் யுத்தத்தை விரும்பும் எந்த தேசமும் கிடையாது.எங்காவது எப்படியாவது யுத்தமோ அல்லது மோதலோ ஏற்படும் போதெல்லாம் அது ஒரு துயரம் என்பதை நாங்கள் அறிவோம். இப்போதும் கூட, அந்த துயரத்தின் வலி உலகின் பல பகுதிகளிலும் உணரப்படுகிறது. மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக யுத்தத்தின் கசப்பான அனுபவத்தை அனுபவித்த ஒரு நாடாக, அதன் அழிவை நாம் நன்கு அறிவோம். யுத்தத்தினால் உயிரிழந்த ஆயிரக்கணக்கானவர்களின் நினைவிடங்களுக்கு வரும், அவர்களின் பெற்றோர், குழந்தைகள் மற்றும் மனைவியர் எழுப்பும் வேதனையான வேண்டுகோள்களைப் பார்க்கும் எவரும், யுத்தத்தைப் பற்றி கனவு காணக்கூட தயங்குகிறார்கள். அந்த வேதனையான காட்சியை நாம் நம் இரு கண்களால் பார்த்திருக்கிறோம். மோதல்களால் ஏற்படும் துன்பங்கள் முன்னெப்போதும் இல்லாத அளவை எட்டவில்லை என்றாலும், மில்லியன் கணக்கான மக்களின் துன்பத்தை முடிவுக்குக் கொண்டுவர தவறி பெரும்பாலும் சர்வதேச சமூகம் வெறும் பார்வையாளராகவே இருந்து வருகிறது. குழந்தைகள் மற்றும் அப்பாவி பொதுமக்களின் வாழ்க்கையை ஒரு கால்பந்தாட்டமாக மாற்றுவது சந்தர்ப்பவாத அதிகார அரசியலின் துயரமாகும். மற்றவர்களின் வாழ்க்கையை தங்கள் அதிகாரத்தை அதிகரிக்க செல்வாக்கு செலுத்தவும் ஒடுக்கவும் யாருக்கும் உரிமை கிடையாது. ஆட்சியாளர்களின் பங்கு உயிர்களை அழிப்பது அன்றி, உயிர்களைப் பாதுகாப்பதாகும். காஸா பகுதியில் நடந்து வரும் கொடூரமான பேரழிவு எங்களுக்கு ஆழ்ந்த கவலையை ஏற்படுத்துகிறது. குறிப்பாக, காஸா பகுதி ஒரு வேதனையான மற்றும் சோகமான திறந்தவெளி சிறைச்சாலையாக மாறியுள்ளது. அப்பாவி குழந்தைகள் மற்றும் பொதுமக்களின் அவலக் குரல்கள் நாளாபக்கமும் கேட்கின்றன . ஐக்கிய நாடுகள் சபை மற்றும் ஏனைய அனைத்து தரப்பினர்களின் உடன்பாட்டின் படி, இரு தரப்பினரும் உடனடியாக போர்நிறுத்தம் செய்ய வேண்டும். அனைத்து மனிதாபிமான உதவிகளையும் தடையின்றி அணுக வேண்டும். அனைத்து தரப்பினரும் பணயக்கைதிகளை விடுவிக்க வேண்டும் என்று நாங்கள் குரல் கொடுக்கிறோம். இந்த கொடூரமான கொலைகளை முடிவுக்குக் கொண்டுவர நாம் வலுவான அழுத்தத்தை கொடுக்க வேண்டும். பலஸ்தீன நாடொன்றுக்கான பிரிக்க முடியாத உரிமையை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அதே போன்று இஸ்ரேலிய மற்றும் பலஸ்தீன மக்களின் நியாயமான பாதுகாப்பு மற்றும் மனிதாபிமான பிரச்சினைகளை அடையாளங் காண வேண்டும் . 1967 எல்லைகளில் இரண்டு நாடுகள் அருகருகே இருப்பதற்கான அடிப்படையை வழங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்களின்படி ஒரு நியாயமான மற்றும் நீடித்த தீர்வைத் தேடுவதில் நாம் இணைய வேண்டும். அர்த்தமற்ற போர் காரணமாக உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கான மக்களின் வேதனைக்கு முன்பாக வெறும் பார்வையாளராக இருப்பதை முடிவுக்குக் கொண்டுவர வேண்டிய ஒரு முக்கியமான தருணத்தை நாம் அடைந்துவிட்டோம். உலகைப் பாதிக்கும் யுத்த மோதல்களுக்கு மத மற்றும் இனவாதம் பாரதூரமான காரணிகளாக உள்ளன. அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டு ஒரு நூற்றாண்டுகள் கடந்த பிறகும், இனவெறியின் விஷம் இன்னும் ஆங்காங்கே உள்ளது என்பதை மீண்டும் மீண்டும் நினைவுபடுத்த வேண்டும். தீவிரவாத மற்றும் இனவாதக் கருத்துக்கள் கொடிய தொற்றுநோய்களைப் போலவே கொடியதாக மாறிவிட்டன. இவ்வளவு முற்போக்கான உலகில் கூட, இந்த இனவெறி மற்றும் இனவாதக் கருத்துக்கள் சாம்பலுக்கு அடியில் உள்ள தீப்பொறிகள் போல இருப்பது நகைப்பிற்கும் ஆச்சரியத்திற்கும் உரிய விடயமாகும். மிகவும் பயங்கரமான சூழ்நிலை என்னவென்றால், அந்த தீப்பொறிகள் அவ்வப்போது, சந்தர்ப்பவாதமாக, பிரபஞ்சத்தின் நல்வாழ்வுக்கு எதிராக பெரும் தீப்பிழம்பாக மாற்றப்படுகின்றன. உலக சமாதான குடியேற்றங்களை உருவாக்கும் உன்னத சமாதான யாத்ரீகர்களாக மாறுவோம். ஆயுதங்கள் மூலம் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக, மனித நாகரிகத்தின் மதிப்புகள் மூலம் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறனுக்குள் நாம் பிரவேசிக்க வேண்டும். மில்லியன் கணக்கான குழந்தைகள் பசியால் இறக்கும் உலகில், நாம் பில்லியன் கணக்கான பணத்தை ஆயுதங்களுக்காக செலவிடுகிறோம். சரியான சுகாதார வசதிகள் இல்லாமல் மில்லியன் கணக்கான மக்கள் மரணத்தின் பாதையைத் தேர்ந்தெடுக்கும்போது, அர்த்தமற்ற போர்களுக்கு பில்லியன்களை செலவிடுகிறோம். இலட்சக்கணக்கான குழந்தைகள் கல்வி எனும் சிறகுகள் கிடைக்காமல் பெருமூச்சு விடும்போது, நாம் மில்லியன் கணக்கில் நில ஆக்கிரமிப்புகளுக்கு செலவிடுகிறோம். உண்மையில், இந்த உலகில் உள்ள ஒவ்வொரு அங்குல நிலத்தையும் அமைதி எனும் குடியேற்றமாக மாற்ற முடிந்தால், அந்த உலகம் ஒரு அற்புதமான உலகமாக மாறும் என்று நாங்கள் உண்மையிலேயே நம்புகிறோம். இந்த மாநாட்டில் இணைந்த நாம் அனைவரும் உலக சமாதான குடியேற்றங்களை உருவாக்கும் உன்னத சமாதான யாத்ரீகர்களாக மாற வேண்டும் என்று நான் முன்மொழிகிறேன். ஒரு வரலாற்று முக்கியமான தேர்தலில், இலங்கை மக்கள் பல நூற்றாண்டுகளாக தங்கள் மனதில் இருந்த ஒரு கனவிற்காக தீர்மானம் எடுத்தார்கள் என்பதை நான் உங்களுக்கு நினைவூட்ட விரும்புகிறேன். இதன் விளைவாக சட்டவாக்கம் பன்முகத்தன்மை கொண்டது . ஒருபுறம், நாட்டின் முழு மக்களும் அரசாங்கத்தின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்தனர். மறுபுறம், கட்புலனற்ற பாராளுமன்ற உறுப்பினர் உட்பட பெண்கள் மற்றும் ஏனைய இனக்குழுக்களின் பிரதிநிதித்துவம் ஒரு வரலாற்று மைல்கல்லை உருவாக்கியது. பாராளுமன்றத்தில் உள்ள இந்த பன்முகத்தன்மை இலங்கையின் ஆட்சியில் இன பன்முகத்தன்மையை உறுதி செய்கிறது .அனைத்து பிரஜைகளுக்கும் சம உரிமைகள் மற்றும் வாய்ப்புகளை வழங்குவதற்கான எங்கள் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகிறது. அதேபோன்று மக்கள் பிரதிநிதிகள் என்பது பொதுமக்களுக்காக சேவையாற்றும் ஊழியர்கள் அன்றி தேவையற்ற சலுகைகளைப் பெறுபவர்கள் அல்ல என்பதற்கு நாங்கள் ஒரு முன்மாதிரியை காட்டியுள்ளோம். மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு நாட்டையும் மக்களையும் மேம்படுத்துவதாக இருக்க வேண்டும், தங்களைத் தாங்களே வளர்த்துக் கொள்வது அல்ல என்று நாங்கள் கருதுகிறோம். இருளுக்கு பதிலாக ஒளியின் பாதையைத் தேர்ந்தெடுத்த நமது நாட்டு மக்கள், 'வளமான நாடு - அழகான வாழ்க்கை' என்ற நடைமுறை தொலைநோக்குப் பார்வைக்கு தங்கள் ஆசிர்வாதத்தை வழங்கியுள்ளனர். இந்த வரலாற்று சாதனையை நனவாக்க, ஊழல் இல்லாத நெறிமுறையான ஆட்சி, வறுமை ஒழிப்பு, டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சுத்தமான நாடு ஆகிய முக்கிய துறைகளில் எங்கள் கவனத்தை செலுத்தியுள்ளோம். அதனுடன் இணைந்ததாக , கல்வி மற்றும் சுகாதாரம் குறித்து நாங்கள் அதிக கவனம் செலுத்தியுள்ளோம். அவை அனைத்தையும் படிப்படியாக வென்று வருகிறோம். இன்று, டிஜிட்டல் ஜனநாயகம் எங்கள் புதிய இலக்காகும். ஒவ்வொரு தனிநபரும் ஒவ்வொரு நாடும் டிஜிட்டல் யுகத்தின் வாய்ப்புகளை அணுக முடியும் என்பதை உறுதி செய்வதே உலகின் முன் உள்ள சவாலாகும். அதில் நாம் வெற்றி பெற்றால், தொழில்நுட்பத்திற்கான பிரவேசம் திறக்கப்படுவதையும் அபிவிருத்தி துரிதப்படுத்தப்படுவதையும் ஆட்சி பலப்படுத்தப்படுவதையும் தவிர்க்க முடியாது. ஆனால் நாம் அவ்வாறு செய்யத் தவறினால், தொழில்நுட்பம் சமத்துவமின்மை, பாதுகாப்பின்மை மற்றும் அநீதிக்கு வழிவகுக்கும் மற்றொரு சக்தியாக இது மாறும் என்று நாங்கள் கருதுறோம். டிஜிட்டல் கருவிகளை அணுக முடியாத நாடுகளுக்கு இடையே டிஜிட்டல் பிளவு தெளிவாகத் தெரிகிறது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் இன்னும் பாரிய இடைவெளி உருவாகி வருகிறது. இலங்கை உட்பட தெற்காசியாவின் பல நாடுகளிலும், உலகெங்கிலும் உள்ள பல நாடுகளிலும், அபிவிருத்திக்கான கருவியாக செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்துவதற்கு உள்கட்டமைப்பு வசதிகள் குறைவாக இருப்பது தடையாக உள்ளது. மிகச் சிறந்த உலகத்தை உருவாக்குவோம் நாம் மிகச் சிறந்த உலகத்தை, மனிதர்களின் நித்திய கௌரவத்தை மதிக்கும் உலகத்தை உருவாக்க வேண்டும். இந்த மாநாட்டின் உறுப்பினர்களான நீங்கள், ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதற்கான சிற்பிகளாக இருக்க வேண்டும். 1945 இல் ஐக்கிய நாடுகள் சபையை நிறுவும் சாசனத்தில் கையெழுத்திட்டபோது அமெரிக்க ஜனாதிபதி எஹரி எஸ். ட்ரூமன் கூறியது போல், நமது எதிர்காலம் உங்கள் கைகளில் உள்ளது. நாம் அச்சம் அல்லது கடப்பாட்டுக்கு உட்படாமல் நம்பிக்கையை முன்னிறுத்தி செயல்பட வேண்டும். உலகை பேரழிவிற்கு இட்டுச் செல்வதற்குப் பதிலாக, எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான உலகத்தை உருவாக்க உறுதிபூண்டுள்ள ஒரு தலைமுறையாக மாற இந்த உச்சிமாநாட்டில் தீர்மானிப்போம். இறுதியாக, எனக்கு என் நாட்டின் மீது நம்பிக்கையின் கனவு இருக்கிறது. உங்களுக்கும் உங்களுடைய நாடுகள் தொடர்பில் நம்பிக்கையின் கனவு இருக்கிறது. எனது ஒரே கனவு, என் நாட்டு மக்களுக்கு மகிழ்ச்சியான மற்றும் வளமான வாழ்க்கையை வழங்குவதுதான். உங்கள் நாட்டு மக்களுக்கும் இதே போன்ற வாழ்க்கையை வழங்குவதே உங்கள் கனவு என்று நான் நம்புகிறேன். அந்தக் அனைத்துக் கனவுகளுக்காகவும் நம்மைப் பிரிக்கும் பயணத்திற்குப் பதிலாக, கைகளை இணைக்கும் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என்று நாங்கள் நம்புகிறோம். ஆரோக்கியமான பூகோளத்தில் அமைதி, கண்ணியம் மற்றும் சமத்துவத்திற்கு அர்ப்பணிப்போம் என்று ஐக்கிய நாடுகள் சபையின் குறிக்கோளில் குறிப்பிடப்பட்டுள்ளது. உலகத்தை உண்மையாகவே மாற்றியமைப்பவர்களாகுவோம் என நான் உங்களை மரியாதையுடன் அழைக்கிறேன். மிக்க நன்றி. https://www.virakesari.lk/article/226038
  13. Published By: Digital Desk 1 25 Sep, 2025 | 02:27 PM டென்மார்க்கின் பல விமான நிலையங்களில் அடையாளம் தெரியாத ட்ரோன்கள் ட்ரோன் தென்படுவதாக தகவல் வெளியானதை அடுத்து ஆல்போர்க் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மூன்று சிறிய விமான நிலையங்களில் இன்று வியாழக்கிழமை (25) அதிகாலை ட்ரோன்கள் தென்பட்டதாக, டேனிஷ் பொலிஸ் உறுதிப்படுத்தியுள்ளது. இருப்பினும் ஏனைய விமான நிலையங்கள் மூடப்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. டென்மார்க்கின் முக்கிய விமான நிலையமான கோபன்ஹேகன் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டிருந்த நிலையில், வணிக மற்றும் இராணுவ விமானங்களுக்குப் பயன்படுத்தப்படும் ஆல்போர்க் விமானநிலையமும் தற்போது மூடப்பட்டுள்ளது. எஸ்டோனியன், போலந்து மற்றும் ருமேனிய வான்வெளியில் ட்ரோன்கள் மற்றும் விமானங்களுடன் தொடர்புடைய, அண்மைய சம்பவங்கள், ரஷ்யா நேட்டோ பாதுகாப்புகளை சோதித்து வருவதாக கூறப்படும் குற்றச்சாட்டுகளுக்கு வழிவகுத்தன. இதன் பின்னணியில் உள்ளவர்களை விசாரித்து வருவதாகவும், ஒரு வேடிக்கையான என்பதை நிராகரிக்க முடியவில்லை எனவும் டென்மார்க் பொலிஸ் தெரிவித்துள்ளது. வடக்கு டென்மார்க்கில், ஜட்லாண்ட் பகுதியில் அமைந்துள்ள, மக்கள்தொகை அடிப்படையில் நாட்டின் நான்காவது பெரிய நகரமான ஆல்போர்க் விமான நிலையத்திற்கு அருகில் ஒன்றுக்கும் மேற்பட்ட ட்ரோன்கள் காணப்பட்டதாக பொலிஸ் அறிக்கை ஒன்றினூடாக தெரிவித்துள்ளது. ஆல்போர்க்கில் ட்ரோன்கள் தென்பட்ட சம்பவங்கள், திங்கற்கிழமை, கோபன்ஹேகன் விமான நிலையத்தில் 4 மணி நேரம் விமானங்களை நிறுத்தியதை போன்று இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர். ஸ்காண்டிநேவியாவின் விமான நிலையமொன்றின் அருகில் பெரிய மற்றும் அடையாளம் தெரியாத பல ட்ரோன்கள் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. ஆல்போர்க் விமான நிலையம் மூடப்பட்டமையானது, டென்மார்க்கின் ஆயுதப் படைகளைப் பாதித்துள்ளது. ஏனெனில் அது ஒரு இராணுவ தளமாகப் பயன்படுத்தப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆளில்லா விமானங்களின் நோக்கம் என்ன, அதன் பின்னணியில் உள்ளவர்கள் யார் என்பது மிக விரைவில் அறியமுடியும் என பொலிஸார் தெரிவித்ததாக சர்வதேச ஊடகமொன்று குறிப்பிட்டுள்ளது. விசாரணைகளில் அந்த நாட்டின் மற்றும் தேசிய பெரிஸாருக்கு உதவுவதாக டென்மார்க் ஆயுதப் படைகள் தெரிவித்துள்ளன. ஆனால் மேலும் கருத்து தெரிவிக்க மறுத்துவிட்டன. https://www.virakesari.lk/article/226052
  14. Published By: Digital Desk 1 25 Sep, 2025 | 08:12 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இந்திய பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ள இலங்கை, அதன் இருப்பிடத்தின் சிறப்புரிமையையும் பொறுப்பையும் உணர்ந்துள்ளது. இது ஒரு அதிசயமான அமைவிடமாகும். அந்த இடத்தை ஆக்கிரமித்துள்ளோம். இந்த தருணம் அந்த அதிசயமான இருப்பிடம் நமக்கு மட்டும் அல்ல, நாம் ஆக்கிரமித்துள்ள அந்த நிலைப்பாட்டிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று தெரிவித்த பிரதமர் ஹரிணி அமரசூரிய, இந்தியப் பெருங்கடல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும், நிலையானதாகவும், நியாயம் மற்றும் ஒத்துழைப்பின் மூலம் ஆளப்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து பங்காளிகளுடனும் இணைந்து பணியாற்றுவதே இலங்கையின் அர்ப்பணிப்பாகும் என்றும் குறிப்பிட்டார். இந்திய பெருங்கடல் பிராந்தியத்தின் பாதுகாப்பு கலந்துரையாடலான 12 ஆவது காலி கலந்துரையாடல் நேற்று புதன்கிழமை ஆரம்பமானது. இதில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறுகையில், இந்திய பெருங்கடலின் எதிர்காலத்தைப் பற்றிய கலந்துரையாடலுக்கான ஒரு தளத்தை ஒன்றிணைப்பதில் இலங்கை கடற்படையின் தொலைநோக்குப் பார்வையையும், தொடர்ச்சியான அர்ப்பணிப்பையும் பாராட்டுகிறேன். இது உலகளாவிய கடல்சார் பங்குதாரர்களிடையே ஒத்துழைப்பை பலப்படுத்துகிறது. இந்த ஆண்டிற்கான கருப்பொருள், 'மாறிவரும் இயக்கவியலின் கீழ் இந்தியப் பெருங்கடலின் கடல்சார் கண்ணோட்டம்' என்பது காலத்திற்கு ஏற்றதும் முக்கியமானதும் ஆகும். இந்தியப் பெருங்கடல் உலகின் மிகவும் நீட்டிக்கப்பட்ட மூலோபாய கடல்சார் களங்களில் ஒன்றாகும், இது வர்த்தகம் மற்றும் எரிசக்தி பாதுகாப்பிற்கான ஒரு முக்கிய உயிர்நாடியாகவும் உள்ளது. ஆயினும் அது புவிசார் அரசியல் போட்டிஇ சுற்றுச்சூழல் அழுத்தம், ஒழுங்கற்ற குடியேற்றம் மற்றும் நிர்வாக சவால்களிலிருந்து அதிகரித்து வரும் அழுத்தங்களை இந்த பிராந்தியம் எதிர்கொள்கிறது. பல நூற்றாண்டுகளாக, இந்தியப் பெருங்கடல் நாகரீகங்களின் ஒரு மையமாக இருந்து வர்த்தகம், கலாச்சார பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றங்களை சாத்தியமாக்கியுள்ளது. இன்று, மூலோபாய நலன்கள் ஒன்றிணையும் ஒரு அரங்கமாக உள்ளது. இதனால் இது போட்டியின் அரங்கமாகவும் ஒத்துழைப்புக்கான ஒரு தளமாகவும் அமைகிறது. இந்திய பெருங்கடலின் மையத்தில் அமைந்துள்ள இலங்கை, அதன் இருப்பிடத்தின் சிறப்புரிமையையும் பொறுப்பையும் உணர்ந்துள்ளது. இது ஒரு அதிசயமான அமைவிடமாகும். அந்த இடத்தை நாம் ஆக்கிரமித்துள்ளோம். இந்த தருணம் அந்த அதிசயமான இருப்பிடம் நமக்கு மட்டும் அல்லஇ நாம் ஆக்கிரமித்துள்ள அந்த நிலைப்பாட்டிற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நினைக்கிறேன். இந்தியப் பெருங்கடல் அமைதியாகவும், பாதுகாப்பாகவும், நிலையானதாகவும், நியாயம் மற்றும் ஒத்துழைப்பின் மூலம் ஆளப்படுவதை உறுதி செய்வதற்காக அனைத்து பங்காளிகளுடனும் இணைந்து பணியாற்றுவதே இலங்கையின் அர்ப்பணிப்பாகும். இந்திய பெருங்கடல் முன்னோடியில்லாத அழுத்தத்தில் உள்ளது. காலநிலை மாற்றம், கடல் மட்டம் உயர்வு, அதிகப்படியான மீன்பிடித்தல் மற்றும் மாசுபாடு ஆகியவை பல்லுயிர், மனித பாதுகாப்பு மற்றும் பொருளாதார அமைதிக்கு அச்சுறுத்தல் விடுகின்றன. கடல்சார் சுற்றுச்சூழலைப் பாதுகாப்பது தேசிய உயிர்வாழ்வுக்கு அத்தியாவசியமானது. அதனால்தான், வலுவான பாதுகாப்பு கட்டமைப்புகள், கடல்வாழ் உயிரினங்கள் பாதுகாக்கப்பட்ட பகுதிகளின் விரிவாக்கம் மற்றும் நாடுகளிடையே ஆழமான அறிவியல் ஒத்துழைப்புக்கு அழைக்கிறோம். பயனுள்ள கடல்சார் நிர்வாகம் சமமாக முக்கியமானது. பாரம்பரிய அச்சுறுத்தல்களுக்கு அப்பால், போதைப்பொருள் கடத்தல் உட்பட பாரம்பரியமற்ற சவால்களையும் இலங்கை எதிர்கொள்கிறது. இது நமது கடற்படை மற்றும் கடலோர காவல்படையின் முக்கியப் பங்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. தேசிய பாதுகாப்பு மற்றும் பொது சுகாதாரத்தைப் பாதுகாக்க அரசாங்கம் உறுதியாக உள்ளதுடன், போதைப்பொருள் கடத்தலை எதிர்த்துப் போராட முன்முயற்சி நடவடிக்கைகளையும் எடுத்துள்ளது. மாறிவரும் கடல்சார் பாதுகாப்பு நிலை மற்றும் இலங்கை கடற்படையின் முக்கியப் பங்கைப் அங்கீகரிக்கும் வகையில், 2025 பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தில் கடற்படைக்கு 92.5 பில்லியன் இலங்கை ரூபாயை அரசாங்கம் ஒதுக்கியுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 12 சதவீதமான அதிகரிப்பாகும். இந்த முதலீடு தேசிய பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் நமது கடல்சார் களத்தைப் பாதுகாப்பதற்கும் அரசாங்கத்தின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. வழக்கமான ரோந்துப் பணி, ஆய்வு மற்றும் உளவுத்துறை சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு, கப்பல்களை இடைமறித்து, கடத்தல்காரர்களைக் கைது செய்து, அதன் மூலம் கடல்சார் களத்தை பாதுகாப்பதில் இலங்கை கடற்படையின் அசைக்க முடியாத அர்ப்பணிப்பை பாராட்டுகிறேன். ஆயினும், இந்த சவால்களை இலங்கை மட்டும் சமாளிக்க முடியாது. இந்தியப் பெருங்கடலில் பயனுள்ள கடல்சார் பாதுகாப்பு மற்றும் போதைப்பொருள் எதிர்ப்பு நடவடிக்கைகளை உறுதி செய்வதற்கு மற்ற நாடுகளின் தீவிர ஆதரவும் ஒத்துழைப்பும் தேவைப்படுகிறது. கப்பல் போக்குவரத்து சுதந்திரம், சர்வதேச சட்டத்திற்கு மரியாதை மற்றும் கடற்கொள்ளை, கடத்தல் மற்றும் ஒழுங்கற்ற குடியேற்றத்திற்கு பதிலளிப்பது ஆகியவை தகவல் பகிர்வு, கடற்படைகள் மற்றும் கடலோர காவல்படைகளுக்கு இடையிலான ஒருங்கிணைப்பு மற்றும் நம்பிக்கையை வளர்க்கும் நடவடிக்கைகளைப் பொறுத்தது. கடலில் ஒரு விதிகளின் அடிப்படையிலான ஒழுங்கு ஸ்திரத்தன்மையின் மூலக்கல்லாக இருக்க வேண்டும். கப்பல் போக்குவரத்து, மீன்வளம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் சுற்றுலா ஆகியவற்றில் நீலப் பொருளாதாரம் வாய்ப்புகளை வழங்குகிறது. இந்தியப் பெருங்கடலின் முக்கியத்துவம் அதன் கரைகளுக்கு அப்பால் பரந்து விரிந்துள்ளது. இது உலகளாவிய வர்த்தகம் மற்றும் எரிசக்தி ஓட்டங்களுக்கு மையமானது. இது பிராந்திய சக்திகள் மற்றும் உலகளாவிய கடற்படைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பை அவசியமாக்குகிறது. ஒத்துழைப்பின் மூலம்இ கடற்படைகள் கடல்வழிப் பாதைகளைப் பாதுகாக்கலாம்இ ஆக்கிரமிப்பைத் தடுக்கலாம், சட்டவிரோத நடவடிக்கைகளை எதிர்த்துப் போராடலாம் மற்றும் மனிதாபிமான நெருக்கடிகளுக்கு பதிலளிக்கலாம். உள்ளடக்கம், வெளிப்படைத்தன்மை மற்றும் சர்வதேச சட்டத்திற்கான மரியாதை ஆகியவற்றில் வேரூன்றிய ஒரு பகிரப்பட்ட கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பிற்கு பங்களிக்குமாறு இலங்கை அனைத்து தரப்பினரையும் வலியுறுத்துகிறது. ஒத்துழைப்பின் மூலம் மட்டுமே இந்தியப் பெருங்கடல் அமைதி, செழிப்பு மற்றும் வாய்ப்புகளின் களமாக இருக்க முடியும். சவால்கள் வலிமையானவைஇ ஆனால் செய்தி தெளிவாக உள்ளது. எந்தவொரு நாடும் தனியாக அவற்றை எதிர்கொள்ள முடியாது. அவர்களுக்கு பல்தரப்புவாதம், கூட்டாண்மை மற்றும் கடற்படைகள், அரசாங்கங்கள், தொழில் மற்றும் சிவில் சமூகங்களுக்கு இடையிலான ஈடுபாடு தேவை. “காலி கலந்துரையாடல்” இந்த உணர்வை உள்ளடக்கியது என்றார். https://www.virakesari.lk/article/226018
  15. பட மூலாதாரம், KDP via Getty Images படக்குறிப்பு, குழந்தை பருவ மறதி என்பது பெரியவர்கள் தங்கள் குழந்தைப் பருவத்திலிருந்து குறிப்பிட்ட நிகழ்வுகளை நினைவில் கொள்ள இயலாமையைக் குறிக்கிறது. கட்டுரை தகவல் மரியா சக்காரோ பிபிசி உலக சேவை 25 செப்டெம்பர் 2025, 09:50 GMT புதுப்பிக்கப்பட்டது 21 நிமிடங்களுக்கு முன்னர் நாம் பிறந்த அந்த நாள், நாம் எடுத்து வைத்த முதல் அடி, நாம் பேசிய முதல் வார்த்தைகள் அனைத்தும் நம் வாழ்வின் முக்கியமான தருணங்கள். ஆனாலும் அவற்றில் எதையும் நாம் நினைவில் கொள்வதில்லை. ஏன்? நரம்பியல் விஞ்ஞானிகள் மற்றும் உளவியலாளர்கள் பல்லாண்டுகளாக இந்தக் கேள்விக்கு விடைகாண போராடி வருகின்றனர். வாழ்க்கையின் முதல் சில ஆண்டுகளில் இருந்து குறிப்பிட்ட நிகழ்வுகளை நினைவில் கொள்ள இயலாமை 'குழந்தைப் பருவ மறதி நோய்' என்று அழைக்கப்படுகிறது. பல ஆண்டுகளாக அதை விளக்கும் முயற்சியில் பல கோட்பாடுகள் உருவாக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் யேல் பல்கலைக்கழகத்தின் உளவியல் மற்றும் நரம்பியல் அறுவை சிகிச்சை பேராசிரியரான நிக் டர்க்-பிரவுன், "இந்த விவாதம் இரண்டு முக்கிய கேள்விகளை எழுப்புகிறது. நாம் நமது குழந்தைப் பருவத்தின் தொடக்க ஆண்டுகளில் நினைவுகளை உருவாக்குகிறோம், ஆனால் பின்னர் அவற்றை நம்மால் அணுக முடியவில்லையா? அல்லது நாம் வளரும் வரை அத்தகைய நினைவுகளை உருவாக்குவதில்லையா?" என்று கூறுகிறார். பேராசிரியர் டர்க்-பிரவுனின் கூற்றுப்படி, 'கடந்த தசாப்தம் வரை, குழந்தைகள் நினைவுகளை உருவாக்கும் திறன் இல்லாதவர்கள் என்று ஆராய்ச்சியாளர்கள் கருதினர். குழந்தைகளால் பேச்சு மூலம் தொடர்பு கொள்ள முடியாது என்பது அல்லது தாங்கள் யார் என்பதைப் பற்றிய முழுமையான புரிதலை அவர்கள் வளர்த்துக் கொள்ளாதது தான் காரணம்' என சிலர் கூறினார்கள். பட மூலாதாரம், Science Photo Library via Getty Images படக்குறிப்பு, மூளைக்குள் இருக்கும் கடல் குதிரை வடிவிலான ஹிப்போகேம்பஸ் எனும் பகுதி நினைவாற்றலில் முக்கிய பங்கு வகிக்கிறது. மற்றொரு கோட்பாடு, 'புதிய நினைவுகளை உருவாக்கும் மூளைப் பகுதியான ஹிப்போகேம்பஸ் (Hippocampus) இன்னும் முழுமையாக வளர்ச்சியடையாததால், நான்கு வயது வரை நம்மால் நினைவுகளை உருவாக்க முடியாது' என்று அவர் விளக்குகிறார். பேராசிரியர் டர்க்-பிரவுனின் கூற்றுப்படி, "குழந்தைப் பருவம் முழுவதும் இது தொடர்கிறது. எனவே, நமது ஆரம்பகால அனுபவங்களைச் சேமிக்க முடியாமல் போகலாம், ஏனெனில் அவ்வாறு செய்வதற்குத் தேவையான அமைப்பு அப்போது நம்மிடம் இருப்பதில்லை." குழந்தையின் மூளையை ஸ்கேன் செய்தல் இருப்பினும், இந்த ஆண்டின் தொடக்கத்தில் பேராசிரியர் டர்க்-பிரவுன் வெளியிட்ட ஓர் ஆய்வு அவரது கருத்துக்கே முரணாகத் தெரிகிறது. குழந்தைகளின் ஹிப்போகேம்பஸ் செயல்பாட்டை அளவிடுவதற்கு, நான்கு மாதங்கள் முதல் இரண்டு வயது வரையிலான 26 குழந்தைகளின் மூளையை ஸ்கேன் செய்யும் செயல்முறையில் பேராசிரியர் டர்க்-பிரவுனின் குழு ஈடுபட்டது. அப்போது அந்தக் குழந்தைகளுக்கு தொடர்ச்சியாக சில புகைப்படங்களையும் அவர்கள் காட்டினார்கள். பின்னர் அவர்கள் குழந்தைகளுக்கு, முன்பு காட்டிய ஒரு புகைப்படத்துடன் சேர்த்து புதிய புகைப்படம் ஒன்றைக் காட்டினர். இரண்டு படங்களில் குழந்தைகள் எதை அதிகம் பார்த்தார்கள் என்பதை பகுப்பாய்வு செய்ய குழந்தைகளின் கண் அசைவுகளை கணக்கில் கொண்டனர். குழந்தைகள் ஒருவேளை பழைய புகைப்படத்தை அதிகம் பார்த்தார்கள் என்றால், (முந்தைய ஆய்வுகளில் பரிந்துரைக்கப்பட்டபடி) குழந்தைகளால் அந்தப் படத்தை நினைவில் வைத்துக் கொள்ளவும் அதை அடையாளம் காணவும் முடிந்தது என்பதற்கான அறிகுறியாக ஆராய்ச்சியாளர்கள் இதை எடுத்துக் கொண்டனர். பட மூலாதாரம், 160/90 படக்குறிப்பு, குழந்தைகள் விழித்திருக்கும் போதும் சுறுசுறுப்பாக இருக்கும் போதும் அவர்களின் மூளையை ஸ்கேன் செய்யும் ஒரு முறையை பேராசிரியர் டர்க்-பிரவுனும் அவரது குழுவினரும் கொண்டுவந்தனர். குழந்தைகள் ஆரம்பத்தில் ஒரு படத்தைப் பார்த்தபோது அவர்களின் ஹிப்போகேம்பஸ் செயல்பாடு அதிகமாக இருந்தால், குறிப்பாக குழந்தையின் வயது 12 மாதங்களுக்கு மேல் இருந்தால், அவர்கள் பின்னர் அதை நினைவில் வைத்திருக்க அதிக வாய்ப்புள்ளது என்று ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்தனர். இதன் பொருள், ஒரு குழந்தைக்கு ஒரு வயது ஆகும்போது, ஹிப்போகேம்பஸ் ஏதோ ஒரு வகையான நினைவை சேமித்து வைக்கக்கூடும். நினைவுகள் எங்கே போயின? இன்னும் நிறைய ஆராய்ச்சி தேவைப்பட்டாலும் கூட, குழந்தைகள் உண்மையில் ஹிப்போகேம்பஸில் நினைவுகளை உருவாக்குகிறார்களா என்பதைத் தீர்மானிப்பதில் தனது குழுவின் ஆய்வு 'முதல் படி' என்று பேராசிரியர் டர்க்-பிரவுன் கூறுகிறார். "அவ்வாறு அந்த நினைவுகள் சேமிக்கப்படுகின்றன என்றால், அவை எங்கே போயின? அவை இன்னும் அங்கே இருக்கின்றனவா? அவற்றை நாம் அணுக முடியுமா போன்ற முக்கியமான கேள்விகளை இது எழுப்புகிறது" என்கிறார் டர்க்-பிரவுன். 2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஓர் ஆய்வின்படி, குட்டிகளாக இருக்கும்போது ஒரு புதிர்ப்பாதையிலிருந்து (Maze) தப்பிப்பது எப்படி என்பதைக் கண்டுபிடித்த எலிகள், வளர்ந்தபிறகு அந்த நினைவை இழந்துவிட்டன. இருப்பினும், ஆரம்பக் கற்றலில் ஈடுபட்டிருந்த ஹிப்போகேம்பஸ் பகுதிகளை செயற்கையாகத் தூண்டுவதன் மூலம் அந்த நினைவாற்றலை மீண்டும் பெறலாம். மனிதக் குழந்தைகள் பிற்கால வாழ்க்கையில் (எப்படியோ) செயலற்றதாகிவிடக்கூடிய நினைவுகளைச் சேமித்து வைக்கிறார்களா என்பது இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. பிரிட்டனில் உள்ள வெஸ்ட்மின்ஸ்டர் பல்கலைக்கழகத்தின் நரம்பியல் உளவியல் பேராசிரியரான கேத்தரின், 'குழந்தைகளுக்கு நினைவுகளை உருவாக்கும் திறன் உள்ளது, குறைந்தபட்சம் பேசத் தொடங்கும் நேரத்திலாவது' என்று நம்புகிறார். "சிறு குழந்தைகள் நர்சரி வகுப்பிலிருந்து திரும்பி வருவார்கள், அங்கு நடந்த ஒன்றை விவரிப்பார்கள். ஆனால், சில ஆண்டுகளுக்குப் பிறகு அதை அவர்களால் விவரிக்க முடியாது. எனவே நினைவுகள் அப்படியே இருக்கின்றன. அவை ஒட்டிக்கொள்வதில்லை," என்று அவர் வாதிடுகிறார். "காலப்போக்கில் அந்த நினைவுகளை நாம் எந்த அளவுக்கு உள்வாங்கிக் கொள்கிறோம், அவை மிக விரைவாக மங்கிவிடுகின்றனவா, அவை எந்த அளவுக்கு நனவான நினைவுகள், அவற்றைப் பற்றி நாம் உண்மையிலேயே பிற்காலத்தில் சிந்திக்க முடியுமா என்பதே முக்கியமான கேள்விகள் என்று நான் நினைக்கிறேன்," என்று அவர் கூறுகிறார். பட மூலாதாரம், ullstein bild via Getty Images படக்குறிப்பு, குழந்தைகள் பிற்காலத்தில் அணுக முடியாத நினைவுகளை உருவாக்குகிறார்களா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அவை போலியான நினைவுகளாக இருக்க முடியுமா? பேராசிரியர் கேத்தரினின் கூற்றுப்படி, "மக்கள் தங்கள் முதல் நினைவு என்று நம்பும் ஒன்று உண்மையில் அவர்களின் முதல் நினைவா என்பதைத் தீர்மானிப்பது கிட்டத்தட்ட சாத்தியமற்றது. இது குழந்தைப் பருவ மறதி பற்றிய நமது புரிதலை மேலும் குழப்புகிறது." நம்மில் சிலருக்கு, நாம் குழந்தையாக இருந்தபோது நடந்த ஒரு குறிப்பிட்ட சம்பவம் நினைவுக்கு வரலாம். "அத்தகைய நினைவுகள், உண்மையான அனுபவங்களின் அடிப்படையிலான துல்லியமான நினைவுகளாக இருக்க வாய்ப்பில்லை." என பேராசிரியர் கேத்தரின் கூறுகிறார். "நினைவைப் பற்றிய விஷயம் என்னவென்றால், அது எப்போதும் மறுகட்டமைப்பை சார்ந்தது தான். எனவே யாராவது உங்களிடம் ஏதாவது சொன்னால், அதைப் பற்றிய போதுமான தகவல்கள் உங்களிடம் இருந்தால், முற்றிலும் உண்மையானதாக உணரக்கூடிய ஒன்றை மூளையால் மீண்டும் உருவாக்க முடியும்," என்று அவர் விளக்குகிறார். "நாங்கள் இங்கே உண்மையில் பார்ப்பது விழிப்புணர்வு நிலை, அதைப் பற்றி துல்லியமாக விவரிப்பது என்பது முடியாத விஷயம்" என்று கேத்தரின் கூறுகிறார். பேராசிரியர் டர்க்-பிரவுனின் கூற்றுப்படி, 'குழந்தை பருவ மறதி நோயைச் சுற்றியுள்ள மர்மம், நாம் யார் என்பதன் சாரத்தைப் பேசுகிறது'. "இது நமது அடையாளத்தைச் சார்ந்தது. வாழ்க்கையின் முதல் சில வருடங்களில் நடந்தவற்றை நாம் மறந்துவிடுகிறோம் என்ற கருத்து, தனிநபர்கள் தங்களை எப்படிப் பார்க்கிறார்கள் என்பதற்கு கடுமையான சவால்களை விடுக்கிறது என்றே நான் நம்புகிறேன்." என்கிறார் பேராசிரியர் டர்க்-பிரவுன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg91qe356po
  16. Published By: Digital Desk 1 25 Sep, 2025 | 09:23 AM இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக நுழைந்த இலங்கை பொலிஸ் அதிகாரியை தமிழகம் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் விடுதலை செய்து உத்தரவிட்டுள்ளது. இலங்கை கொழும்பு துறைமுக பொலிஸ் நிலையத்தில் பணிபுரிந்த பொலிஸ் அதிகாரி பிரதீப்குமார் பண்டார(35). இவர் கடந்த 5.9.2020-ம் திகதி நள்ளிரவு இலங்கை படகில் ராமேஸ்வரம் அருகே தனுஷ்கோடி கடற்கரையில் வந்திறங்கிய போது முறையான ஆவணங்களின்றி இந்தியாவிற்குள் நுழைந்ததாக மண்டபம் மரைன் பொலிஸ் கைது செய்து, சென்னை புழல் சிறையில் அடைத்தனர். விசாரணையில் கொழும்பில் கைப்பற்றப்பட்டு துறைமுகம் பொலிஸ் நிலையத்தில் வைக்கப்பட்ட 23 கிலோ ஹெரோயின் போதைப்பொருள் மாயமானதில் அவரது சகோதரர் இலங்கை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் போதைப்பொருளை பிரதீப்குமார் பண்டார கடத்தி வந்து தன்னிடம் கொடுத்ததாக தெரிவித்தார். இந்நிலையில் இவ்வழக்கு சி.பி.சி.ஐ.டி பொலிஸாருக்கு மாற்றப்பட்டது. ராமநாதபுரம் சி.பி.சி.ஐ.டி பொலிஸாரால் வழக்கு பதிவு செய்து, பிரதீப்குமார் பண்டாரவை விசாரணை செய்தனர். விசாரணையில் போதைப்பொருள் கடத்தலில் தனது சகோதரர் தன்னை மாட்டி விட்டதாகவும், அந்த கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க சட்டவிரோதமாக இந்தியா வந்ததாகவும் தெரிவித்தார். இதையடுத்து அவர் ராமநாதபுரம் முதன்மை மாவட்ட அமர்வு நீதிமன்ற உத்தரவுப்படி திருச்சியில் உள்ள இலங்கை அகதிகளுக்கான விசேட முகாமில் தங்க வைக்கப்பட்டார். அதன்பின் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் நுழைந்ததை பிரதீப்குமார் பண்டாரே ஒத்துக் கொண்டு, குறைந்தபட்ச தண்டனை வழங்க வேண்டும் என நீதிமன்றத்தில் மனு செய்திருந்தார். இந்த நிலையில் இவ் வழக்கில் நேற்று புதன்கிழமை (24) முதன்மை மாவட்ட அமர்வு நீதிபதி ஏ.கே.மெஹ்பூப் அலிகான், பிரதீப்குமார் பண்டாரேவுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்தார். பிரதீப் குமார் பண்டார சென்னை புழல் சிறையில் 3 மாதங்கள்,அதனையடுத்து பிணையில் திருச்சி சிறப்பு முகாம் என 5 ஆண்டுகளுக்கு மேல் நீதிமன்ற கண்காணிப்பில் இருந்துள்ளார். அவர் நீதிமன்றம் விதித்த அபராதத் தொகையும் செலுத்தினார். விதிக்கப்பட்ட சிறை தண்டனை 2 ஆண்டுகளுக்கு மேல், அவர் சிறை மற்றும் விசேட முகாமில் இருந்து உள்ளதால் அவரை நீதிபதி விடுதலை செய்தும், அவர் காவல்துறை மற்றும் குடியேற்ற நடைமுறைகளை முடித்துக் கொண்டு சொந்த நாட்டிற்கு செல்லலாம் எனவும் நீதிபதி உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/226023
  17. Published By: Digital Desk 1 25 Sep, 2025 | 08:10 AM (லியோ நிரோஷ தர்ஷன்) பல நாடுகளின் அதிக அளவு தேசிய நலன்கள் இந்தியப் பெருங்கடல் பகுதி வழியாக பயணிக்கின்றன. இது அதிக எண்ணிக்கையிலான நெரிசலான நெருக்கடி புள்ளிகளின் தாயகமாகும். அனைத்து வகையான சவால்களிலிருந்தும் பாதிக்கப்படக்கூடிய தன்மைகள் உள்ளன. எனவே கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கூடுதல் பிராந்திய சக்திகள் இருப்பதால் அது ஒரு வகையான சமநிலைக்கு வழிவகுக்கும் என்ற கருத்துடன் உடன்பட்டாலும், பிராந்திய பிரச்சனைகளுக்கு பிராந்திய தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும். மேலும் அந்த தீர்வுகளைக் கண்டறிய பிராந்தியத்திற்குள் போதுமான திறன் உள்ளது. எதுவும் கல்லில் எழுதப்படவில்லை. எனவே வேறு எந்த பயனரிடமிருந்தும் உதவி அல்லது ஆலோசனை பெற்றால் மோதலுக்கு வழிவகுக்க கூடும் என இந்திய கடற்படை அதிகாரி அட்மிரல் தினேஷ் கே. திரிபதி தெரிவித்தார். 12 ஆவது காலி கலந்துரையாடல் மாநாட்டில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை குறிப்பிட்டார். தொடர்ந்தும் குறிப்பிடுகையில், பிராந்திய பிரச்சனை என்னவென்றால், அதிக அளவு எரிசக்தி, அதிக அளவு வர்த்தகம், பல நாடுகளின் அதிக அளவு தேசிய நலன்கள் இந்தியப் பெருங்கடல் பகுதி வழியாக பயணிக்கின்றன. இது அதிக எண்ணிக்கையிலான நெரிசலான நெருக்கடி புள்ளிகளின் தாயகமாகும். அனைத்து வகையான சவால்களிலிருந்தும் பாதிக்கப்படக்கூடிய தன்மைகள் உள்ளன. எனவே, கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் கூடுதல் பிராந்திய சக்திகள் இருப்பதால், அது ஒரு வகையான சமநிலைக்கு வழிவகுக்கும் என்ற கருத்துடன் உடன்படுகிறேன். மேலும், நாம் அனைவரும், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள அனைவரும், பிராந்திய பிரச்சனைகளுக்கு பிராந்திய தீர்வுகளை கண்டுபிடிக்க வேண்டும். மேலும், அந்த தீர்வுகளைக் கண்டறிய பிராந்தியத்திற்குள் போதுமான திறன் உள்ளது. அதுவே முன்னோக்கி செல்வதற்கான ஒரே வழியாகும். ஆனால், எதுவும் கல்லில் எழுதப்படவில்லை. எனவே, கடல்களின் வேறு எந்த பயனரிடமிருந்தும் உதவி அல்லது ஆலோசனை தேவைப்பட்டால், அது ஒரு கட்டத்தில் தவிர்க்க முடியாததாகி, மோதலுக்கு வழிவகுக்கக்கூடாது. “உரையாடல்” என்பது ஒன்றாகச் சிந்திக்கும் கலை என்று வில்லியம் ஐசக்ஸ் கூறியுள்ளார். அந்த வகையில், பல்வேறு பங்கேற்பாளர்களுக்கு, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்து இங்கு வந்திருக்கும் அனைவருக்கும், போட்டியிடும் நிலைகளிலிருந்து ஒரு பகிரப்பட்ட புரிதலுக்கு செல்ல இந்த கலந்துரையாடல் உதவுகிறது. இன்றைய விவாதத்தின் கருப்பொருளுக்கு ஏற்ப, வெளிப்படையாகத் தோன்றும் இரண்டு அம்சங்கள் உள்ளன. ஒன்று, பிராந்தியத்தின் மூலோபாய முக்கியத்துவம் மற்றும் மாறிவரும் இயக்கவியல் என்ன? இந்தியப் பெருங்கடல் பார்வை என்பது வர்த்தகம், செழிப்பு மற்றும் பாதுகாப்பு ஆகியவை ஒன்றிணையும் இடமாகும். அது பிராந்தியத்திற்கு மட்டுமல்ல, புவியியலின் தன்மையின் காரணமாக உலகம் முழுவதற்கும் முக்கியமானது. எனவே, ஒன்றிணைதல் என்பது, வளங்கள், செழிப்பான பொருளாதாரங்கள், வர்த்தகப் பாதைகள், பல்வேறு கடலோர நாடுகள் ஆகியவற்றைக் குறிக்கிறது. மேலும், இவை அனைத்தும் பல சிக்கலான புள்ளிகளில் நமக்கு வாய்ப்புகளை உருவாக்குகின்றன. இது அதிக மக்கள் தொகையையும் குறிப்பிடுகிறது. உலகின் மக்கள் தொகையில் சுமார் 35 முதல் 40ம% பேர் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழ்கின்றனர். எனவே, இங்கு ஒரு வாய்ப்பும் உள்ளது, ஒரு சவாலும் உள்ளது. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தை உலுக்கிக் கொண்டிருக்கும் மூன்று முக்கிய இயக்கவியல்கள் என்ன என்பதை கூறுகிறேன். முதலாவதாக, வெளிப்படையாக, சிந்தனையின் வேகத்தில் வேகமாகப் பாயும் தொழில்நுட்பமாகும். இதுதான் எங்கும் ஆபத்தின் கணக்கீட்டை எழுதுகிறது. குறிப்பாக இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், குறைந்த விலை வணிக ரீதியாக கிடைக்கும் ஆயுதங்கள் மற்றும் ஆளில்லா அமைப்புகள் அரசு சாரா சக்திகளின் கைகளில் இருப்பது, மக்களை அச்சுறுத்துகிறது. உங்களுக்கு முன்வைக்க விரும்பும் இரண்டாவது இயக்கவியல், செல்வாக்கின் சங்கமம் என்று அழைப்பது. ஏனெனில், நாடுகளின் மூலோபாய நலன்கள் உருவாகி வருகின்றன. மேலும், வர்த்தகம், எரிசக்தி மற்றும் பாதுகாப்பு ஆகியவற்றில் ஒரு போட்டி உள்ளது. இது வெளிப்படையாக, மாநிலங்களுக்கு இடையில், பிராந்திய மற்றும் கூடுதல் பிராந்திய ரீதியாக உள்ளது. எனவே, நிலப்பரப்பு, அல்லது கடல் அளவைப் பயன்படுத்தலாம், இது சிக்கலான தன்மை மற்றும் போட்டியால் குறிக்கப்பட்டுள்ளது. வெள்ளை கப்பல் போக்குவரத்து குறைந்து வருவதைக் காண்கிறோம். நான் என்ன பேசுகிறேன் என்பதை பல்வேறு சர்வதேச எதிர்கால மையங்கள் பாராட்டும் என்று நம்புகிறேன். மேலும், மூன்றாவது இயக்கவியல் காலநிலை மாற்றம் ஆகும். புயல்கள் மிகவும் வன்முறையாகவும் கணிக்க முடியாததாகவும் உள்ளன. மேலும், கடல்சார் சுற்றுச்சூழல் அமைப்புகள் வேகமாக அழுத்தத்தில் உள்ளன. ஆசிய பசிபிக் பிராந்தியத்தில் கடந்த 50 ஆண்டுகளில் கடல்சார் உயிரினங்களில் 60மூ சரிவை சுட்டிக்காட்டுகிறது. இது கவலைக்குரிய விஷயமாகும். காலநிலை மாற்றம் தொடர்பான அரசுகளுக்கு இடையேயான குழு, உலக வெப்பமயமாதல் 1.5 டிகிரி சென்டி கிரேடுக்கு உள்ளேயே பவளப் பாறைகளில் 70 முதல் 90% இறந்துவிடும் என்று கணித்துள்ளது. கிட்டத்தட்ட 330 மில்லியன் மக்கள் கூறிய அனைத்தாலும் பாதிக்கப்படுவார்கள். எனவே, உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 35% பேருடன், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் இருக்கிறோம். தாமதமாக வெடிக்கக் கூடிய குண்டில் அமர்ந்திருக்கிறோம். இந்தியாவின் மிக உயர்ந்த பார்வை, ஒத்துழைப்பு மற்றும் ஒத்துழைப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது. இது நாகரீக தர்மமான ஒரு குடும்பம் என்ற உணர்வோடு ஒத்திருக்கிறது. உங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்பும் மூன்று வழிகள் உள்ளன. முதலாவது, நாம் உண்மையிலேயே உள்ளடக்கிய கடல்சார் கள விழிப்புணர்விற்காக தொழில்நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும். அதுதான் நாம் உறுதி செய்ய வேண்டிய முதல் விஷயம். இதற்கு உள்நாட்டு அளவில் தொடர்பு மற்றும் தகவல் பகிர்வு வலைப்பின்னல்கள் தேவை. இரண்டாவதாக, நெகிழ்வான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும். மேலும்இ கடல்சார் கேபிள்கள் மற்றும் எரிசக்தி குழாய்களை முக்கியமான பகிரப்பட்ட உலகளாவிய உள்கட்டமைப்பாக அங்கீகரிக்க வேண்டும். அதில் எந்த விவாதமும் அல்லது சந்தேகமும் இருக்க முடியாது. மேலும், இணைய அச்சுறுத்தல்கள், கடற்கொள்ளை, கடத்தல் போன்றவற்றுக்கு எதிராக ஒரு கூட்டுப் பாதுகாப்பையும் கொண்டிருக்க வேண்டும். காலநிலை சார்ந்த பேரழிவுகளுக்கு எதிராக நெகிழ்வாக இருக்க வேண்டும். மேலும், பேரழிவுக்கான நெகிழ்வான உள்கட்டமைப்பிற்கான கூட்டணியை முன்மொழிகிறேன். https://www.virakesari.lk/article/226017
  18. 23 Sep, 2025 | 05:11 PM உலக அளவில் அதிகரித்து வரும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence - AI) தொழில்நுட்பத்தின் தாக்கம், ஆண்களை விட பெண்களின் வேலைவாய்ப்பை அதிகமாகப் பாதிக்கும் என ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. இந்த ஆய்வின்படி, உலகளவில் பணியாற்றும் ஆண்களில் 21 வீதம் பேரின் வேலைவாய்ப்பு ஏஐ தொழில்நுட்பத்தால் பாதிக்கப்படும். ஆனால், பெண்களைப் பொறுத்தவரை, இந்த பாதிப்பு விகிதம் 28 வீதமாக இருக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்த மாற்றம் பெண்களின் பொருளாதார சுதந்திரம் மற்றும் சமூகத்தில் அவர்களின் பங்கு ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என ஆய்வு குறிப்பிடுகிறது. பெரிய தொழில்நுட்ப நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் ஊழியர்களைப் பணிநீக்கம் செய்துவரும் சூழலில், இந்த ஆய்வறிக்கை முக்கியத்துவம் பெறுகிறது. நிறுவனங்கள் ஏஐ காரணமாகப் பணிநீக்கம் செய்யவில்லை என்று கூறினாலும், மறைமுகமாக ஏஐ-யின் பயன்பாடு ஒரு முதன்மையான காரணமாகக் கருதப்படுகிறது. ஏஐ தொழில்நுட்பம், குறிப்பாக மீண்டும் மீண்டும் செய்யப்படும் பணிகளைச் செய்யும் வேலைகளை தானியங்கிமயமாக்குவதால், இத்தகைய வேலைகளில் அதிக எண்ணிக்கையில் உள்ள பெண்களுக்குப் பாதிப்பு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/225880
  19. Published By: Digital Desk 3 24 Sep, 2025 | 02:51 PM நோர்வேயின் தலைநகர் மத்திய ஒஸ்லோவில் செவ்வாய்க்கிழமை (23) குண்டு வெடிப்பு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அத்தோடு, அதே இடத்தில் கண்டுபிடிக்கப்பட்ட இரண்டாவது வெடிகுண்டு கட்டுப்படுத்தப்பட்ட முறையில் வெடிக்கச் செய்ததாகவும், சந்தேக நபர் ஒருவர் விசாரணைக்காக கைது செய்யப்பட்டுள்ளதாகவும் நோர்வே பொலிஸார் தெரிவித்தனர். இந்நிலையில், குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பில் விசாரணை நடைபெற்று வருகிறது. பல்கலைக்கழக வளாகத்திற்கு அருகிலும், அரச அரண்மனை மற்றும் இஸ்ரேலிய தூதரகத்திலிருந்து சுமார் 500 மீட்டர் (546 கெஜம்) தொலைவிலும், அந்த இடத்தில் காயங்கள் ஏற்பட்டதாக எந்த தகவலும் வெளியாகவில்லை. ஒஸ்லோ மற்றும் கோபன்ஹேகனின் விமான நிலையங்களுக்கு அருகில் ட்ரோன்கள் தென்பட்டு ஒரு நாளுக்குப் பின்னர் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. https://www.virakesari.lk/article/225948
  20. 24 Sep, 2025 | 05:24 PM ஐக்கிய நாடுகள் சபையின் 80 ஆவது பொதுச் சபை அமர்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்காவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவுக்கு (Cyril Ramaphosa) இடையிலான சந்திப்பு நியூயோர்க் நகரில் ONE Plaza வில் செவ்வாய்க்கிழமை (23) பிற்பகல் (அமெரிக்க நேரப்படி ) இடம்பெற்றது. இங்கு, தென்னாபிரிக்க ஜனாதிபதியினால், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு அமோகமாக வரவேற்பளிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு கலந்துரையாடல் ஆரம்பமானதோடு இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேலும் பலப்படுத்துவது குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத், ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் நிரந்தர பிரதிநிதி, முன்னாள் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி ஜயந்த ஜெயசூரிய மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஸ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் இணைந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/225980
  21. 24 Sep, 2025 | 05:09 PM தொல்லியல் திணைக்கள ஆளணி நிரப்பப்படும் போது திட்டமிட்ட முறையில் தமிழ் பேசுவோர் புறக்கணிக்கப்படுகின்ற அதேவேளை தொல்லியல் திணைக்களம், தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பதில் போதிய அக்கறை செலுத்துவதில்லை என ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் ஊடக பேச்சாளர் பன்னீர்செல்வம் சிறீகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். யாழ் . ஊடக அமையத்தில் இன்றைய தினம் புதன்கிழமை (24) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில், எமது பாரம்பரியங்களையும் தொன்மையையும் பாதுகாப்பதற்கு மரபுரிமை சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகும். அதனை பாதுகாக்க வேண்டிய கடப்பாடினை உடைய தொல்லியல் திணைக்களம், தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பதில் போதிய அக்கறை செலுத்துவதில்லை கடந்த காலங்களில் ஆட்சியில் பங்களித்து எமது மக்களின் அபிலாசைகளுக்காக மானசீகமாக உழைக்கின்ற தரப்பு என்ற அடிப்படையில் எமக்கும் தொல்லியல் திணைக்களம் தொடர்பாக விமர்சனங்கள் இருக்கின்றன. தொல்லியல் திணைக்கள ஆளணி நிரப்பப்படும் போது திட்டமிட்ட முறையில் தமிழ் பேசுவோர் புறக்கணிக்கப்படுகின்றனர். இதுதொடர்பாக கடந்த காலங்களில் எமது செயலாளர் நாயகம் சம்மந்தப்பட்டவர்களின் கவனத்திற்கு கொண்டு வருகின்ற சந்தர்ப்பங்களில் எதிர்காலத்தில் தவறு நிவர்த்திக்கப்படும் என்று உறுதியளிக்கின்ற போதிலும், இதுவரை தவறுகள் நிவர்த்திக்கப்படவில்லை. இவை, தொல்லியல் திணைக்களத்தில் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் இருப்பதனையே வெளிப்படுத்துகின்றது. இவ்வாறான சூழலில், எமது தாயக பிரதேசத்தில் தமிழ் மக்களின் பூர்வீகத்தை பேணிப் பாதுகாக்கும் வகையில், சிதைவடைந்த சங்கிலியன் சிலை புனரமைக்கப்பட்டதுடன், யாழ் மணிக்கூட்டு கோபுரத்தினை சுற்றி தமிழ் மன்னர் களின் சிலைகள், தனிநாயகம் அடிகளாருக்கு சிலை, யாழ் பண்ணையில் தமிழ் மங்கையின் சிலை என்று பல உருவாக்கப்பட்டுள்ளன. அதேவேளை, எமது மரபுரிமை சின்னங்களை அழிப்பதில் சில கோடாரிக் காம்புகளும் பின்னணியில் செயற்படுகின்றன என்பதுதான வேதனையான விடயம். குறிப்பாக, இந்தப் பிரதேசத்தில் மாறி மாறி அதிகாரத்திற்கு வருகின்ற தரப்புக்களுடன் தனக்கு உறவு இருப்பதாக வெளிப்படுத்தி தன்னுடைய வர்த்தகத்தினை வளப்படுத்துவதில் விண்ணாதி விண்ணனான ஒரு வர்த்தகர், மந்திரிமனை அழிவிற்கும் காரணமாக இருக்கின்றார். மந்திரிமனை வளாகத்தில் நீண்டகாலமாக காணப்படுகின்ற குறித்த வர்த்தகரின் வாகனத் தரிப்பிடத்தில் நிறுத்தப்பட்டுள்ள கனரக வாகனங்களினால் ஏற்படும் அதிர்வுகளும் மந்திரிமனை அழிவிற்கு காரணமாக இருக்கின்றது என்று பல வருடங்களாக சுட்டிக்காட்டப்படுகின்றது. வடக்கு மாகாண சபையிலும் பிரஸ்தாபிக்கப்பட்டிருந்தது. எனினும் சம்மந்தப்பட்ட தரப்புக்கள் உள்நோக்கம் காரணமாக இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, ஊழல் அற்ற ஆட்சி, அனைவருக்கும் சமத்துவமான எதிர்காலம் போன்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் பரப்பி வருகின்ற தற்போதைய அரசாங்கம், தமிழ் மக்கள் சார்ந்த மரபுரிமை சின்னங்களை பாதுகாப்பதற்கு, காணப்படும் தடைகள் மற்றும் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரல் தொடர்பாக அவதானம் செலுத்தி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்த விரும்புகின்றோம் என தெரிவித்தார். https://www.virakesari.lk/article/225975
  22. 24 Sep, 2025 | 09:55 AM (இணையத்தள செய்திப் பிரிவு) சீன கடற்படையின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட முதலாவது மின்காந்த உந்துகணை தொழில்நுட்பம் கொண்ட விமானம் தாங்கிக் கப்பல் ‘புஜியான்’ (CNS Fujian), வெற்றிகரமாக உந்துகணை மூலம் விமானங்களை ஏவி, தரையிறக்கும் திறனைப் பரிசோதனை செய்துள்ளது. இது சீனாவின் விமானம் தாங்கிக் கப்பல்களின் வளர்ச்சியில் ஒரு முக்கிய திருப்புமுனையாகக் கருதப்படுகிறது. இந்நிலையில், சீனாவின் உள்நாட்டு தயாரிப்பான முதல் மின்காந்த உந்துகணை தொழில்நுட்பம் கொண்ட விமானம் தாங்கிக் கப்பலான ‘புஜியான்’ (Fujian), J-15T, J-35 மற்றும் KJ-600 ஆகிய மூன்று வகையான போர் விமானங்களை வெற்றிகரமாக ஏவி, தரையிறக்கும் பயிற்சியை மேற்கொண்டதாக சீன மக்கள் விடுதலை இராணுவக் கடற்படை அறிவித்துள்ளது. இந்த வெற்றிகரமான பயிற்சி, சீனாவின் உள்நாட்டு மின்காந்த உந்துகணை மற்றும் விமான நிறுத்த அமைப்புகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்துள்ளது. இந்த தொழில்நுட்பம் பல்வேறு வகையான விமானங்களுடன் இணக்கமாகச் செயல்படுவது நிரூபிக்கப்பட்டுள்ளது. இந்த வெற்றி, 'புஜியான்' கப்பல் முழுமையாகத் தனது செயல்பாடுகளை ஆரம்பிப்பதற்கு வழி வகுக்கிறது. இதன் மூலம், பல வகையான விமானங்களை இந்த கப்பலுடன் ஒருங்கிணைத்து, முழுமையான ஒரு கடற்படை அணியை உருவாக்க முடியும். சீன விமானப் போக்குவரத்து மற்றும் கடற்படைப் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஹான் வெய், இந்த வெற்றி சீன கடற்படையின் மூலோபாய மாற்றத்திற்கு முக்கிய ஆதரவு அளிக்கும் என்று தெரிவித்துள்ளார். இது சீன கடற்படையை, கடலோரப் பாதுகாப்பிலிருந்து ஆழ்கடல் பாதுகாப்பு நோக்கி நகர்த்தும் ஒரு முக்கிய படியாகும். செப்டம்பர் 3 ஆம் திகதியன்று, சீன மக்கள் எதிர்ப்புப் போரின் 80 வது ஆண்டு நிறைவையொட்டி இடம்பெற்ற இராணுவ அணிவகுப்பில்,J-15T, J-35 மற்றும் KongJing-600 ஆகிய விமானங்கள் காட்சிப்படுத்தப்பட்டன. சீனாவின் முதல் கப்பல் அடிப்படையிலான, நிலையான இறக்கைகள் கொண்ட இந்த ஆரம்ப எச்சரிக்கை விமானம், கண்காணிப்பு மற்றும் வான்வெளிப் பாதுகாப்பின் வரம்பை கணிசமாக விரிவாக்கும். ஐந்தாம் தலைமுறை மறைந்து தாக்கும் விமானமான J-35, எதிரிகளின் பாதுகாப்பு வளையத்தை ஊடுருவும் திறனைக் கொண்டுள்ளது. அதேசமயம் J-15T, கடல் மற்றும் நிலப்பரப்பு இலக்குகளைத் தாக்கும் வலுவான திறனைக் கொண்டுள்ளது. மின்காந்த உந்துகணைகள் இந்த விமானங்களை முழு எரிபொருள் மற்றும் ஆயுதங்களுடன் மிக வேகமாக ஏவவும், தரையிறக்கவும் உதவுவதால், கப்பலின் போர் திறன் வெகுவாக அதிகரிக்கும் என பேராசிரியர் ஹான் வெய் விளக்கினார். 'புஜியான்' கப்பல், சீனாவின் மூன்றாவது விமானம் தாங்கிக் கப்பலாகும். இது ஜூன் 2022 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. சீனாவின் முதல் இரண்டு கப்பல்களான 'லியாவோனிங்' மற்றும் 'ஷாண்டோங்' ஆகியவற்றுக்கு மாறாக, 'புஜியான்' கப்பல் ஒரு தட்டையான விமான ஓடுதளத்தைக் கொண்டுள்ளது. அதன் மொத்த எடை 80,000 தொன்களுக்கு அதிகமாகும். மே 2024 இல் தனது முதல் கடல் சோதனைகளைத் தொடங்கியதில் இருந்து, 'புஜியான்' கப்பல் திட்டமிட்டபடி பல சோதனைகளை நடத்தி வருகிறது. https://www.virakesari.lk/article/225921
  23. பாகிஸ்தானிடம் தோல்வி அடைந்த இலங்கையின் ஆசிய கிண்ண இறுதி ஆட்ட வாய்ப்பு நழுவியது 24 Sep, 2025 | 05:59 AM (நெவில் அன்தனி) இலங்கை - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையில் அபுதாபி ஸய்யத் கிரிக்கெட் விளையாட்டரங்கில் செவ்வாய்க்கிழமை இரவு மின்னோளியில் நடைபெற்ற சுப்பர் 4 ஆசிய கிண்ண கிரிக்கெட் போட்டியில் 5 விக்கெட்களால் பாகிஸ்தான் வெற்றியீட்டியது. இந்த முடிவை அடுத்து ஆசிய கிண்ண கிரிக்கெட்டிலிருந்து வெளியேறும் துர்பாக்கிய நிலைக்கு இலங்கை தள்ளப்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் வெற்றிபெற்றே ஆகவேண்டும் என்ற நோக்கத்துடன் இரண்டு மாற்றங்களுடன் இலங்கை அணி களம் இறங்கியது. காமில் மிஷார, துனித் வெல்லாலகே ஆகிய இருவரும் நீக்கப்பட்டு சாமிக்க கருணாரட்ன, மஹீஷ் தீக்ஷன ஆகியோருக்கு அணியில் இடம் வழங்கப்பட்டது. இலங்கையைப் போன்றே பாகிஸ்தானுக்கும் இந்தப் போட்டி தீர்மானம் மிக்கதாக இருந்தது. நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பாகிஸ்தான் அணி களத்தடுப்பை முதலில் தெரிவு செய்தது. இதற்கு அமைய முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மிகவும் சிரமத்திற்கு மத்தியில் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து 133 ஓட்டங்களை மாத்திரம் பெற்றது. குசல் மெண்டிஸ் (0), பெத்தும் நிஸ்ஸன்க (8) ஆகிய இருவரும் ஷஹீன் ஷா அப்றிடியின் பந்துவீச்சிலும் குசல் ஜனித் பெரேரா (15) ஹரிஸ் ரவூப்பின் பந்துவீச்சிலும் ஆட்டம் இழந்தனர். (43 - 3 விக்.) மொத்த எண்ணிக்கை 58 ஓட்டங்களாக இருந்தபோது சரித் அசலன்க (20), தசுன் ஷானக்க (0) ஆகிய இருவரும் ஹுசெய்ன் தலாத்தின் அடுத்தடுத்த பந்துகளில் ஆட்டம் இழந்தனர். தொடர்ந்து வனிந்து ஹசரங்க 15 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்க இலங்கை அணி நெருக்கடியை எதிர்கொண்டது. (80 - 6 விக்.) இந் நிலையில் கமிந்து மெண்டிஸ், சாமிக்க கருணாரட்ன ஆகிய இருவரும் 7ஆவது விக்கெட்டில் 43 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு சிறு உற்சாகத்தைக் கொடுத்தனர். கமிந்து மெண்டிஸ் 50 ஓட்டங்களைப் பெற்றதுடன் சாமிக்க கருணாரட்ன 17 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் ஷஹீன் ஷா அப்றிடி 28 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் ஹுசெய்ன் தலாத் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ஹரிஸ் ரவூப் 37 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். 134 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்களை இழந்து 138 ஓட்டங்களைப் பெற்று மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டியது. ஷிப்ஸதா பர்ஹான் (24), பக்கார் ஸமான் (17) ஆகிய இருவரும் 45 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறப்பான ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். எனினும், 35 ஓட்டங்கள் வித்தியாசத்தில் முதல் 5 விக்கெட்கள் வீழ்ந்ததால் பாகிஸ்தான் நெருக்கடியை எதிர்கொண்டது. சய்ம் அயூப் (2), அணித் தலைவர் சல்மான் அகா (5), மொஹம்மத் ஹரிஸ் (13) ஆகியோர் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறினர். ஆனால், ஹுசெய்ன் தலாத், மொஹம்மத் நவாஸ் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் பெறுமதிமிக்க ?? ஓட்டங்களைப் பகிர்ந்து பாகிஸ்தானுக்கு மிகவும் அவசியமான வெற்றியை ஈட்டிக்கொடுத்தனர். மொஹம்மத் நவாஸ் 3 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 38 ஓட்டங்களுடனும் ஹுசெய்ன் தலாத் 32 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். துஷ்மன்த சமீர வீசிய 18ஆவது ஓவரில் மொஹம்மத் நவாஸ் 3 சிக்ஸ்களை விளாசியமை குறிப்பிடத்தக்கது. பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வனிந்து ஹசரங்க 27 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். https://www.virakesari.lk/article/225906
  24. படக்குறிப்பு, மண்டபத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் (கோப்புப் படம்) கட்டுரை தகவல் சாரதா வி பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னையில் வசிக்கும் ஆர்.பகிசன் (34) இந்திய பாஸ்போர்ட் உட்பட இந்திய குடிமகனுக்கு வழங்கப்படும் பல ஆவணங்களை கொண்டுள்ளார். சென்னையில் தனது பள்ளிப் படிப்பையும், கல்லூரி படிப்பையும் முடித்து ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். அவர் பாஸ்போர்ட்-ல் தனது மனைவியின் பெயரை சேர்க்க விண்ணப்பித்த போது அவரது பெயரை சேர்த்து இந்த ஆண்டு மார்ச் மாதம் பாஸ்போர்ட் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் பாஸ்போர்ட் வழங்கிய பின்னர், அவர் பாஸ்போர்ட் பெற்றிருப்பது சட்டவிரோதமானது என்று அதிகாரிகள் கூறியுள்ளனர். அவரது பெற்றோர் இருவரும் இலங்கை நாட்டவர். 1991-ம் ஆண்டு இலங்கையில் உள்நாட்டுப் பிரச்னை ஏற்பட்ட போது அகதிகளாக இந்தியாவுக்கு வந்தனர். பகிசன் தமிழ்நாட்டிலேயே பிறந்து, 30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கேயே தொடர்ந்து வசித்து வந்தாலும், அவரது பெற்றோர் இருவரும் இந்தியர் அல்ல (இலங்கை நாட்டவர்) என்பதால் அவர் இந்திய குடிமகனாக கருதப்பட மாட்டார், எனவே அவர் 'நாடற்றவர்' என்று தெரிவித்துள்ளனர். இதையடுத்து பகிசன், இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்துள்ளனர். 30 ஆண்டுகளுக்கும் மேலாக சென்னையில் வசிப்பவர் இந்திய குடியுரிமைச் சட்டத்தின் படி, 1987-ம் ஆண்டுக்கு ஜூலை 1ம் தேதி அல்லது அதன் பின் இந்தியாவில் பிறந்த ஒருவரது பெற்றோரில் யாரேனும் ஒருவர் இந்தியராக இருந்தால் மட்டுமே, அவர் இந்திய குடியுரிமை பெறமுடியும். மேலும், பெற்றோர் இருவரும் 'சட்டவிரோத குடியேறிகளாக' இருக்கக் கூடாது. இந்தியாவில் அகதிகள் குறித்த தேசிய அளவிலான தெளிவான சட்டமும் கொள்கையும் இல்லாததால், இலங்கை தமிழர்கள், தமிழ்நாட்டில் பல தசாப்தங்களாக வசித்து வந்தாலும் அவர்கள் 'சட்டவிரோத குடியேறிகளாகவே' கருதப்படுகின்றனர். இந்திய குடியுரிமை சட்டம் 1955 பிரிவு 2(1) (b) நாடற்றவர்களையும், அகதிகளையும் 'சட்டவிரோத குடியேறிகள்' என்று வரையறுக்கிறது. "நான் எப்போதுமே என்னை இந்திய குடிமகனாகவே நினைத்திருக்கிறேன். இத்தனை ஆண்டுகளில் யாரும் என்னை இந்திய குடிமகன் இல்லை என்று எங்கும் கூறியதில்லை. என்னிடம் உள்ள ஆவணங்களை முறையாகவே பெற்றுள்ளேன். என் பெற்றோர் இலங்கை நாட்டவர் என்பதை எங்கும் மறைத்ததில்லை. ஒவ்வொரு ஆண்டும் சென்னையில் காவல் நிலையத்துக்குச் சென்று நாங்கள் கையெழுத்திட்டு வருகிறோம். நாங்கள் வசிக்கும் இடத்திலும் எங்கள் அடையாளத்தை மறைத்து எந்த தவறான நடவடிக்கையிலும் ஈடுபடவில்லை. முதல் முறையாக நான் 'நாடற்றவன்' , இந்தியன் அல்ல என்று என்னிடம் கூறிய போது, என்னால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. அது தெரிந்தவுடன், உடனே சட்டப்படி இந்திய குடியுரிமைக்கு விண்ணப்பித்தேன்" என்று பிபிசி தமிழிடம் பேசிய ஆர்.பகிசன் கூறினார். 1991-ம் ஆண்டு இந்தியா வந்த பகிசனின் குடும்பம் பகிசனின் குடும்பத்தினர் 1991-ம் ஆண்டு தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர். அப்போது அவரது தாய் பகிசனை கர்ப்பத்தில் கொண்டிருந்தார். ராமேஸ்வரம் மண்டபம் முகாமில் இலங்கை அகதிகளாக தங்களை பதிவு செய்தனர். பின்னர் புதுக்கோட்டையில் உள்ள செந்தலை முகாமுக்கு மாற்றப்பட்டனர். "1991 மே மாதத்துக்குப் பிறகான காலத்தில் இலங்கை தமிழர்கள் மீதான கோபம் இருந்தால், சில முகாம்கள் மூடப்பட்டன. அப்போது நாங்கள் இருந்த முகாமும் மூடப்பட்டதால், 1992-ம் ஆண்டில் அங்கிருந்து பொது சமூகத்தில் வாழ அனுப்பப்பட்டோம். எனினும் தலைமை குடியேற்ற அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் தொடர்ந்து இருந்து வந்தோம். சென்னையில் முதலில் சிறிய காலம் வளசரவாக்கத்தில் இருந்தோம். பிறகு ராமாபுரத்துக்கு வந்த நாங்கள் அங்கேயே தான் இருந்து வருகிறோம்" என்கிறார் பகிசன். பகிசன் 2024-ம் ஆண்டு பாஸ்போர்ட் விண்ணப்பித்து பெற்றுள்ளார். அவருக்கு 2024-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இலங்கை நாட்டைச் சேர்ந்த பெண்ணுடன் திருமணம் நடந்தது. இலங்கையில் அவரது திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. "என் மனைவியை திருமணம் செய்வதற்காக மட்டுமே நான் இலங்கை சென்றுள்ளேன். அதற்கு முன் சென்றதில்லை." என்று அவர் கூறுகிறார். அவர் இந்திய குடியுரிமைக்காக விண்ணப்பித்த பிறகு, அவர் சட்டவிரோதமாக இந்திய பாஸ்போர்ட் வைத்திருந்தது உட்பட்ட காரணங்களுக்காக பாஸ்போர்ட் சட்டம் 1967-ன் கீழ் குற்றம் சுமத்தப்பட்டு கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்டார். புழல் சிறையில் 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டிருந்தார். முதல் முறை மறுக்கப்பட்ட அவரது ஜாமீன் மனு, இரண்டாவது முறை ஏற்றுக் கொள்ளப்பட்டது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அக்டோபர் 8ம் தேதி வரை பகிசன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று மத்திய மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் அவரை திருச்சி சிறப்பு முகாமில் அடைக்க உள்ளதாக அரசு தரப்பில் அவரது ஜாமீன் மனு மீதான விசாரணையின் போது நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. அவ்வாறு தன்னை முகாமில் அடைத்தால் தனது பெற்றோர்களை பார்த்துக் கொள்ள முடியாது, தான் பணிக்கு செல்ல முடியாது என்று பகிசன் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மூத்த வழக்கறிஞர் பி ஆர் ராமன் வழக்கு தொடர்ந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எம்.தண்டபாணி அக்டோபர் 8ம் தேதி வரை பகிசன் மீது அதிகாரிகள் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என்று உத்தரவிட்டுள்ளார். பகிசன் தற்போது தனது இந்திய ஆவணங்களை அதிகாரிகளிடம் சரண் செய்துள்ளார். இலங்கையிலிருந்து அகதிகளாக வந்தவர்களுக்கும், இந்தியாவில் பிறந்த அவர்களது குழந்தைகளுக்கும் இந்திய குடியுரிமை பெறுவது சாத்தியமில்லை. 1987-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதிக்கு முன்பாக இந்தியாவில் பிறந்த அனைவருக்கும் கூடுதல் நிபந்தனைகள் இல்லாமல் இந்திய குடியுரிமை வழங்கப்படும். இந்திய குடியுரிமை சட்டம் 1955 திருத்தப்பட்ட பிறகு, அதாவது 1987-ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அல்லது அதற்கு பிறகு ஒருவர் இந்தியாவில் பிறந்திருந்தாலும், அவரது பெற்றோரில் ஒருவராவது இந்தியராக இருக்க வேண்டும் என்றும் அவர்கள் இருவரும் சட்டவிரோத குடியேறிகளாக இருக்கக் கூடாது என்று விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதன் அடிப்படையிலேயே பகிசன் 'நாடற்றவர்' என்று அறிவிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது குடியுரிமை சட்டம் 1955, பிரிவு 6- ன் கீழ் 'naturalization' (இயல்புப்படுத்துதல்) அடிப்படையில் தனக்கு இந்திய குடியுரிமை வழங்க வேண்டும் என்று கோருகிறார். " Naturalization அடிப்படையில் குடியுரிமை வழங்குவதற்கான நிபந்தனைகளை அவர் பூர்த்தி செய்கிறார். குடியுரிமைக்கு விண்ணப்பிக்கும் முன், ஓராண்டு காலம் தொடர்ந்து இந்தியாவில் வசித்திருக்க வேண்டும். அதற்கு முன்பு 14 ஆண்டுகள் இந்தியாவில் வசித்திருக்க வேண்டும் சட்டம் கூறும் நிபந்தனைகளை அவர் பூர்த்தி செய்கிறார். குடியுரிமை சட்டத்தின் படி, இலங்கை அகதிகளுக்கு எந்த உரிமைகளும் கிடையாது. அரசின் கருணையை நம்பியே அவர்கள் இருக்க வேண்டியுள்ளது" என்று இந்த வழக்கில் ஈடுபட்டுள்ள வழக்கறிஞர் சந்தேஷ் சரவணன் கூறினார். குடியுரிமைக்காக காத்திருக்கும் இலங்கைத் தமிழர்கள் தமிழ்நாட்டில் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட தமிழர்கள் உட்பட 58,357 இலங்கைத் தமிழர்கள் (19,300 குடும்பங்கள்) தமிழ்நாட்டில் உள்ள ஒரு சிறப்பு முகாம் உட்பட 105 முகாம்களில் இருக்கின்றனர். முகாம்களுக்கு வெளியே, சம்பந்தப்பட்ட காவல் நிலையத்தில் பதிவு செய்த 13,400 குடும்பங்களில் 33,479 இலங்கைத் தமிழர்கள் வசிக்கின்றனர் என்று வெளிநாடு தமிழர்களின் நலன் மற்றும் மறுவாழ்வு ஆணையரகத்தின் தரவுகள் (2023) தெரிவிக்கின்றன. இலங்கைத் தமிழர்களின் நலன் மற்றும் தீர்வுகளுக்காக 2021-ம் ஆண்டு தமிழ்நாடு அரசு உருவாக்கிய ஆலோசனைக் குழுவின் இடைக்கால அறிக்கை 2023-ம் ஆண்டு சமர்ப்பிக்கப்பட்டது. இலங்கை தமிழர்களுக்கான நீண்ட கால தீர்வுகள் குறித்து பேசிய அந்த குழுவின் அறிக்கை, பகிசனைப் போன்று 1987-க்கு பிறகு, பெற்றோர் இருவரும் இலங்கை நாட்டவராக இருக்கும் குடும்பங்களில் இந்தியாவில் பிறந்த 22,058 பேர் இருப்பதாக கூறுகிறது. இவர்களை தவிர மேலும் 848 பேர், இலங்கைத் தமிழர் பெற்றோர்களுக்கு 1987-ம் ஆண்டு பிறகு பிறந்து, ஆனால் பிறந்த இடம் குறிப்பிடாமலும் உள்ளனர். இவை தமிழ்நாட்டில் 104 முகாம்களில் உள்ள 57,391 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த தரவுகள் பெறப்பட்டன. "இலங்கைத் தமிழர்களை இந்தியாவுக்குள் அனுமதிப்பது மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதலுடன் நேரடி ஈடுபாட்டுடன் நடைபெற்றது. எனவே அவர்களை 'சட்டவிரோத குடியேறிகள்' என்று வகைப்படுத்துவதை மறு ஆய்வு செய்ய வேண்டும்" என்று ஆலோசனைக் குழு பரிந்துரைத்தது. தமிழ்நாடு அரசின் இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான கோவி லெனின், பிபிசி தமிழிடம் பேசும் போது, " இலங்கை தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை பெறுவதில் ஆவணங்கள் இல்லாதது முக்கிய பிரச்னையாக உள்ளது. இதில் சிலர் இந்தியாவை பூர்வீகமாக கொண்ட மலையக தமிழர்களாக இருப்பார்கள். அவர்கள் முன்னோர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்திருப்பார்கள், ஆனால் அதற்கான ஆவணங்கள் இருந்திருக்காது. இந்த ஆவணங்களைப் பெற்று தருவதில் தமிழ்நாடு அரசு உதவி வருகிறது. இந்திய குடியுரிமை கேட்டு நீதிமன்றத்தை நாடிய 13 பேருக்கு அவ்வாறான உதவிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டில் சுமார் 56 ஆயிரம் பேர் முகாம்களில் உள்ளனர். அவர்களில் 35 வயதுக்கு கீழ் உள்ளவர்களில் பெரும்பாலானவர்கள் இங்கேயே பிறந்து வளர்ந்தவர்களாக தான் இருப்பார்கள். முதலில் இவர்களுக்கு மட்டுமாவது இந்திய குடியுரிமை வழங்க மத்திய அரசு முடிவு செய்ய வேண்டும்" என்று கூறினார். திருச்சி முகாமில் இருந்த கே.நளினி இந்திய குடிமகளாக 2022-ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்டார். இலங்கை அகதிகள் முகாம்களில் வசிப்பவர்களில் இந்திய குடியுரிமை பெற்ற முதல் நபர் அவர் ஆனார். அவர் 1986-ம் ஆண்டு இந்தியாவில் மண்டபம் முகாமில் பிறந்திருந்தார். 1950-க்கும் 1987-க்கும் இடையில் இந்தியாவில் பிறந்த அனைவரும் இந்திய குடிமக்கள் ஆவர் என்று இந்திய குடியுரிமைச் சட்டம் கூறுவதால், அவரது குடியுரிமையை அங்கீகரிப்பதாக சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரை கிளை 2022-ம் ஆண்டு தெரிவித்திருந்தது. நளினி போன்று 1987-க்கு முன்பு இந்தியாவில் பிறந்த 148 பேர் முகாம்களில் இருப்பதாக இலங்கைத் தமிழர் நலன் ஆலோசனைக் குழுவின் தரவுகள் தெரிவிக்கின்றன. படக்குறிப்பு, வழக்கறிஞர் ரோமியா ராய் நளினி உட்பட பல இலங்கைத் தமிழர்களின் குடியுரிமை வழக்குகளை கையாண்டு வரும் மதுரையை சேர்ந்த வழக்கறிஞர் ரோமியோ ராய், "இந்தியாவில் அகதிகளுக்கான தனிச் சட்டம் இல்லாதது பாகுபாடுகளையும் குழப்பங்களையும் ஏற்படுத்துகிறது. 'அகதிகள்' யார் என்ற தெளிவான வரையறை கிடையாது. திபெத்திய அகதிகளுக்கு இமாச்சல பிரதேசத்தில் கிடைக்கும் வசதிகள், வெளிநாடு செல்லும் அனுமதி ஆகியவை இலங்கைத் தமிழர்களுக்கு கிடைப்பதில்லை. இலங்கை தமிழர்களின் நிலையை விட ரோஹிங்க்யா மக்களின் நிலை மோசமாக உள்ளது. இந்திய குடியுரிமை வழங்குவது மத்திய உள்துறை அமைச்சகத்தின் பிரத்யேக அதிகாரங்களில் ஒன்று. ஒரு துறையில் சிறந்து விளங்கும், வேறு நாட்டை சேர்ந்தவருக்கு கூட அரசு நினைத்தால் குடியுரிமை வழங்க முடியும். எனவே அரசு நினைத்தால் எந்த நிபந்தனைகளையும் தளர்த்தி மனிதாபிமான அடிப்படையில் குடியுரிமை வழங்க முடியும்" என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg976gl5zeo

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.