Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஏராளன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by ஏராளன்

  1. Published By: Digital Desk 1 02 Oct, 2025 | 09:56 AM யாழ். நகர் பகுதியில் நேற்று புதன்கிழமை (01) மாலை 5.40 மணியளவில் வன்முறை குழுக்கள் அட்டகாசத்தில் ஈடுபட்டனர். இதன்போது தாக்குதல்களும் நடாத்தப்பட்டது. இந்த தாக்குதலை நடாத்தியவர்கள் யார்? தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்ற விடயங்கள் வெளியாகவில்லை. பொது இடத்தில் இவ்வாறு வன்முறையில் ஈடுபட்டதால் மக்கள் அச்ச நிலையில் காணப்பட்டதை அவதானிக்க முடிந்தது. இது குறித்து பொலிஸார் உடனடியாக நடவடிக்கை எடுத்து பொது இடத்தில் அமைதிக்கு குந்தகம் விளைவித்து, மக்களிடையே அச்சத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். https://www.virakesari.lk/article/226638
  2. நாட்டில் நீதித்துறை செயல்முறையை வலுப்படுத்துவதற்காக, சுயாதீன சட்டத்தரணி அலுவலகம் நிறுவுவதற்கு அரசாங்கம் நிபுணர் குழு ஒன்றை நியமித்துள்ளது. நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தலைமையில், நேற்று (01.10.2025) இக்குழுவின் உறுப்பினர்களிடையே கலந்துரையாடல் நடைபெற்றதாக நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சு குறிப்பிட்டுள்ளது. இதன்போது, சுயாதீன சட்டத்தரணி அலுவலகத்தை நிறுவுவதற்கான அடிப்படைத் திட்டங்களைத் தயாரிப்பது குறித்து விவாதிக்கப்பட்டது. அமைச்சு, இதற்கான அடிப்படைக் கருத்துப் பத்திரத்தைத் தயாரித்த பின்னர், பொதுமக்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் கருத்துக்களைப் பெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இக்கலந்துரையாடலில் உயர் நீதிமன்ற நீதிபதியும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான யசந்த கோதாகொட, சட்டமா அதிபரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான பாரிந்த ரணசிங்க, இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவரான சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். https://adaderanatamil.lk/news/cmg8rxgr200rro29nma7dwrh3
  3. 01 Oct, 2025 | 03:58 PM (இராஜதுரை ஹஷான்) வசீம் தாஜூதின் மரணத்தை தமது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளாமல் அரசாங்கம் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தை அரசியலுக்கு பயன்படுத்துவது அவரது ஆத்மாவுக்கும் இழைக்கும் மாபெரும் அநீதியாகும். அரசியல் பேசுபொருளுக்காகவே பொலிஸ் ஊடக பிரிவு புதிய விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் புதன்கிழமை (01) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ராஜபக்ஷர்கள் இந்த அரசாங்கமும் நல்லாட்சி அரசாங்கமும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன. விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன. தேர்தல் மேடைகளில் குறிப்பிட்ட பொய்களை உண்மையாக்குவதற்கு முயற்சித்தார்கள். வசீம் தாஜூதின் மரணம் தொடர்பில் நாராஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை கைது செய்து போலியான வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கும் கடந்த அரசாங்கத்தின் அதிகாரிகள் முயற்சித்தார்கள். அந்த அதிகாரிகள் தான் இந்த அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ளார்கள். முன்னாள் கடற்படைத் தளபதி கைது விவகாரத்தில் போலியான வாக்குமூலம் வழங்குவதற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக குறிப்பிட்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீதிமன்றம் சென்றுள்ளார். ஒருசில அதிகாரிகள் போலியான சாட்சியங்களை திரட்டி அரசாங்கத்தையும்,ஆட்சியாளர்களையும் திருப்திப்படுத்த முயற்சிக்கிறார்கள். வசீம் தாஜூதின் மரணம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஊடகங்களுக்கு விடயங்களை குறிப்பிடுகிறார். இந்த விடயம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றத்தை நீதிமன்றத்துக்கு அறிக்கையிட வேண்டுமே தவிர ஊடகங்களுக்கு குறிப்பிட கூடாது. அரசியல் பேசுபொருளுக்காகவே இந்த விடயம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது. வசீம் தாஜூதின் மரணம் தொடர்பில் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இந்த விடயத்துடன் தொடர்புடைய சி.சி.டி காணொளியில் இடப்பில் கை வைத்துக் கொண்டிருப்பவர் தனது கணவர் என்று அவரது மனைவி குறிப்பிட்டதாக பொலிஸார் குறிப்பிடுகிறார். அந்த நபர் கடந்த காலங்களில் யாருடன் இருந்தார்,யாருக்காக செயற்பட்டார் என்பதை பொலிஸார் விசாரிக்க வேண்டும். வசீம் தாஜூதின் மரணத்தை தமது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளாமல் அரசாங்கம் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தை அரசியலுக்கு பயன்படுத்துவது அவரது ஆத்மாவுக்கும் இழைக்கும் மாபெரும் அநீதியாகும். ரணில் வாரம், ஐஸ் வாரம் முடிவடைந்து விட்டது.தற்போது வசீம் தாஜூதின் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரங்கள் எவ்வாறானதாக இருக்கும் என்று தெரியவில்லை. அரசாங்கத்தின் நோக்கத்துக்கு அமைய பொலிஸ் ஊடக பேச்சாளர் ஊடங்களுக்கு பொய்யான விடயங்களை குறிப்பிடுவதும், நீதிமன்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தகவல்களை குறிப்பிட்டால் அவருக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றார். https://www.virakesari.lk/article/226599
  4. 'குழந்தைகளை இழுத்து செல்லும் ஓநாய்கள்' - உத்தரபிரதேசத்தில் இங்கே என்ன நடக்கிறது? பிபிசி கள ஆய்வு படக்குறிப்பு, செப்டம்பர் 20 ஆம் தேதி காலை, தனது மூன்று வயது மகனை வீட்டின் முற்றத்தில் இருந்து ஓநாய் ஒன்று திடீரென இழுத்துச் சென்ற சம்பவத்தை அனிதா நடுங்கும் குரலில் விவரிக்கிறார். கட்டுரை தகவல் சையத் மோஜிஸ் இமாம் பிபிசி செய்தியாளர் 1 அக்டோபர் 2025 "நாங்கள் மசாலா அரைத்துக் கொண்டிருக்கும்போது, எனது மகன் தன் சகோதரியின் மடியில் அமர்ந்து கொண்டிருந்தான் . அப்போது இரண்டு ஓநாய்கள் வந்து அவனை இழுத்துச் சென்றன. நாங்கள் ஒருபுறம் பிடித்துக் கொண்டிருந்தோம், ஆனால் மற்றொரு ஓநாய் எங்கள் மீது பாய்ந்த போது என் மகன் எங்கள் கைகளிலிருந்து நழுவினான் " என்று அனிதா விவரிக்கிறார். செப்டம்பர் 20 ஆம் தேதி காலை, தனது மூன்று வயது மகனை வீட்டின் முற்றத்தில் இருந்து ஓநாய் ஒன்று திடீரென இழுத்துச் சென்ற சம்பவத்தை அனிதா நடுங்கும் குரலில் விவரிக்கிறார். அன்றிலிருந்து குழந்தையை காணவில்லை. அனிதாவின் முழு குடும்பமும் அதிர்ச்சியில் உள்ளது. லக்னோவிலிருந்து சுமார் 150 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தின் கைசர்கஞ்ச் தாலுகாவில் சில கிராமங்கள் தற்போது கடும் பயத்தில் வாழ்கின்றன. காரணம், இரவும் பகலும் தாக்கும் ஓநாய்கள். "ஓநாய் தான் இப்படி தாக்குகிறது. இது எங்கள் டிரோன் கேமராவில் பதிவாகியுள்ளது. கிராமவாசிகள் வீடியோவும் எடுத்துள்ளனர்" என்று பஹ்ரைச் துணை நிதி அதிகாரி ராம் சிங் யாதவ் பிபிசியிடம் தெரிவித்தார். செப்டம்பர் 23-ஆம் தேதி பிபிசி குழு அனிதாவின் வீட்டிற்கு வந்தபோது, அருகிலுள்ள பாபா பங்களா கிராமத்தில் (வெறும் 300 மீட்டர் தொலைவில்) திடீரென பரபரப்பு ஏற்பட்டது. மக்கள் அலறிக் கொண்டிருந்தனர், பெண்கள் அழுது கொண்டிருந்தனர். இந்தப் பகுதியிலும் ஒரு ஓநாய் மதியம் 1 மணியளவில் தாயின் கைகளில் இருந்து மூன்று வயது குழந்தையைப் பறித்துச் சென்றுள்ளது. உடனடியாக கிராம மக்கள் தைரியமாக ஓநாயை விரட்டியுள்ளனர். இதனால், ஓநாய் குழந்தையை விட்டுவிட்டு ஓடியுள்ளது. பின்னர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட குழந்தை, ஆபத்தான நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறது. அதனைத் தொடர்ந்து, செப்டம்பர் 24 அன்று, அருகிலுள்ள பாபா படாவ் கிராமத்தில் ஒரு சிறுமி தாக்கப்பட்டுள்ளார். இங்கும், கிராமவாசிகள் ஓநாயை விரட்டிச் சென்று சிறுமியை மீட்டுள்ளனர், ஆனால் பலத்த காயமடைந்த சிறுமி இறந்துவிட்டார். கடந்த இரண்டு வாரங்களாக நடந்து வரும் ஓநாய் தாக்குதல்கள் செப்டம்பர் 9-ஆம் தேதி பராக் பூர்வா கிராமத்தில் தொடங்கியது. ஒருநாள் இரவு 8 மணியளவில் தனது தாத்தா முன் அமர்ந்து உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்த ஒரு மூன்று வயது சிறுமியை ஓநாய் இழுத்துச் சென்றது. மறுநாள் காலை அருகிலுள்ள கரும்புத் தோட்டத்தில் சிறுமியின் உடல் கண்டெடுக்கப்பட்டது, அச்சிறுமியின் உடலில் பாதியைக் காணவில்லை. இதுகுறித்துப் பேசிய பஹ்ரைச் மாவட்ட ஆட்சியர் அக்ஷய் திரிபாதி, "மூன்று குழந்தைகள் இறந்துவிட்டனர்" என்று கூறினார். அனிதாவின் குழந்தை இறந்ததாக நிர்வாகம் இன்னும் கருதவில்லை, ஏனென்றால் குழந்தையின் உடல் இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு, 2024 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில், பஹ்ரைச்சில் இப்படியான சம்பவங்கள் நடந்தன. அப்போது, வனத்துறை 10 குழந்தைகள் இறந்துவிட்டனர் என உறுதிப்படுத்தியது. ஆனால், இப்போது தாக்குதல் முறை முற்றிலும் மாறிவிட்டது. கடந்த ஆண்டு, பெரும்பாலான தாக்குதல்கள் இரவில் நடந்தன. ஆனால் இப்போது அவை இரவும் பகலும் தொடர்ச்சியாக நடக்கின்றன. பகலில் தாக்குதல் நடப்பதைப் போலவே மற்றொரு புது முறையிலும் தாக்குதல் நடப்பதாக மக்கள் குறிப்பிடுகிறார்கள். இந்தத் தாக்குதல்களை நேரில் பார்த்த கிராமவாசிகள் இரண்டு ஓநாய்கள் ஒன்றாக வருவதாகக் கூறுகிறார்கள். "அவை மிகவும் ஆரோக்கியமாகத் தெரிகின்றன," என்று ஓநாயைத் துரத்திச் சென்ற சாலிக் ராம் கூறினார். கடந்த ஆண்டு, ஓநாய் தாக்குதல்களின் மையமாக மஹ்சி தாலுகா இருந்தது, ஆனால் இந்த முறை கைசர்கஞ்ச் தாலுகாவின் மஞ்ச்ரா தௌக்லி பகுதி மையமாக உள்ளது. இந்த கிராமத்தில் சுமார் 45,000 மக்கள் வசிக்கின்றனர் என்று கூறும் கிராமத் தலைவர் தீப் நாராயண், இந்த முழுப் பகுதியும் இந்த ஆண்டு தாக்குதல்களின் மையமாக உள்ளது என்றும் இது காக்ரா நதிக்கு அருகில் அமைந்துள்ளது என்றும் விளக்குகிறார். மழைக்காலத்தில், நீர் அணையை அடைகிறது. கிராமத்தில் கான்கிரீட் வீடுகள் குறைவாகவும், கூரை வீடுகள் அதிகமாகவும் உள்ளன. இப்பகுதி முழுவதும் கரும்பு பயிரிடப்படுகிறது, ஆங்காங்கு நெல் வயல்களும் கால்நடைகளும் உள்ளன. "இதுவரை மூன்று குழந்தைகள் இறந்துள்ளனர், ஒருவரைக் காணவில்லை. ஏழு பேர் காயமடைந்துள்ளனர்" என்று பஹ்ரைச் டி.எஃப்.ஓ. ராம் சிங் யாதவ் தெரிவித்தார். தனது குழு உட்பட 32 குழுக்கள் மற்ற மூன்று டிஎஃப்ஓக்களின் வழிகாட்டுதலின் கீழ் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். "இரண்டு ஆபரேட்டர்களால் இயக்கப்படும் நான்கு டிரோன் கேமராக்கள் உள்ளன. இவற்றில் ஓநாய் தென்பட்டது. இன்றும் கூட, எங்கள் ஊழியர்கள் சம்பவம் நடந்த இடத்திற்கு அருகில் ஒரு ஓநாய் இருப்பதைக் கண்டனர்" என்று அதிகாரி ராம் சிங் யாதவ் கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "ஓநாய் நடமாட்டத்தை கண்டுபிடிக்க பாதிக்கப்பட்ட பகுதிகளில் 20 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இதற்குப் பிறகும், கிராமத்தில் சிறு குழந்தைகள் சுற்றித் திரிவது சோகமான விஷயம். தனியாக எங்கும் செல்ல வேண்டாம் என்று அவர்களிடம் தொடர்ந்து கூறப்படுகிறது," என்று கூறினார். பயத்தில் வாழும் கிராம மக்கள் சுமார் 45,000 மக்கள் வசிக்கும் இந்தப் பகுதியில் யாரும் பாதுகாப்பாக உணரவில்லை. இரவில் மாறிமாறி இந்தப் பகுதியைக் காவல் காத்த கிராமவாசிகள், இப்போது பகலில் கூட குழந்தைகளைத் தனியாக விட்டுச் செல்ல முடியவில்லை எனக் கூறுகிறார்கள். இதனால் கிராம மக்கள் மிகவும் பயந்து போயுள்ளனர், நிரந்தர வீடுகள் இல்லாத பலர் தற்காலிகமாக உயரமான பலகைகள் அமைத்து தூங்குகிறார்கள். சிலர் மரங்களின் மேலும், சிலர் தள்ளுவண்டிகளிலும், வீட்டுக்குள் மூங்கில் கம்புகளைப் பயன்படுத்தியும் உயரமான மேடை போன்ற அமைப்புகளை உருவாக்கியுள்ளனர். "ஓநாய்கள் மீதான பயம் அதிகரித்துள்ளதால், நாங்கள் கம்புகளை வைத்து ஒரு மேடை கட்டியுள்ளோம். ஆனால் பகலில் அதன் மீது உட்கார முடியாது, அதனால் இரவில் அதன் மீது தூங்குகிறோம். முன்பு, ஓநாய் இரவில் எங்களைத் தாக்கும், எனவே பகலில் விவசாய வேலைகளை எளிதாகச் செய்ய முடிந்தது, ஆனால் இப்போது பகலில் வயல்களுக்குச் செல்லக் கூட எங்களுக்கு பயமாக உள்ளது" என்று ஜமீல் என்பவர் பிபிசியிடம் கூறினார். பாதிக்கப்படும் முதியவர்கள் கிராமத்தில், குழந்தைகள் மட்டுமல்ல, முதியவர்களும் ஓநாய் தாக்குதல்களுக்கு இரையாகி வருகின்றனர். சமீபத்தில், ஒரே இரவில் ஐந்து பேர் ஓநாய்களால் தாக்கப்பட்டனர். அவர்கள் உயிர் பிழைத்தாலும், பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. சுமார் 60 வயதுடைய சீதாபி, ஒரு ஓலைக் கூரையின் கீழ் தூங்கிக் கொண்டிருந்தார். இரவில் அங்கு வந்த ஒரு ஓநாய் அவரைத் தாக்கியது. இதுகுறித்து அவர் கூறுகையில், "அது என் காலைக் கடித்தபோது, அது ஒரு விலங்கு என்பதை உணர்ந்தேன். அது என்னை இழுத்துச் சென்றது, ஆனால் கொசு வலை இருந்ததால், நான் தரையில் விழுந்தேன். உடனே சத்தமாக கத்தினேன், அக்கம்பக்கத்தினரும் குடும்பத்தினரும் வந்தனர், ஓநாய் ஓடிவிட்டது"என்றார். அன்று இரவு சாந்தி தேவி என்ற பெண்ணும் தாக்கப்பட்டுள்ளார் . 80 வயதான சாந்தி தேவி தனது வீட்டின் வராண்டாவில் படுத்துக் கொண்டிருந்தார். அதிகாலை 1 மணியளவில் ஓநாய் அவரைத் தாக்கியுள்ளது. "அவை என் தலையைப் பிடித்தன . நான் கத்தினேன், குடும்பத்தினர் இரும்புத் தட்டை வைத்து அடிக்க ஆரம்பித்தார்கள். ஆனால் அவை ஓடவில்லை. பின்னர் அதிகமானோர் கூடியபோது, அவை ஓடிவிட்டன. அங்கு இரண்டு ஓநாய்கள் இருந்தன. அவற்றின் கண்கள் கண்ணாடி போல பிரகாசித்தன"என்கிறார் சாந்தி தேவி. பகலில் தாக்குதல்கள் நடக்கத் தொடங்கியதிலிருந்து தங்கள் கவலைகள் அதிகரித்துள்ளதாக கிராமவாசிகள் கூறுகின்றனர். குழந்தைகளும் முதியவர்களும் இதனால் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள். இந்தப் பகுதியில் வசிக்கும் முன்னாள் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் விஜய் சிங் இதுகுறித்துக் கூறுகையில், "மக்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இவ்வளவு பெரிய சம்பவத்திற்குப் பிறகும், வனத்துறை டிரோன்கள் மற்றும் கூண்டுகளைப் பற்றி மட்டுமே பேசுகிறது"என்கிறார். தாக்குதல் முறைகளில் மாற்றம் இரவில் அதிக ஆபத்து இருந்தாலும், இதுபோன்ற தாக்குதல்கள் பகலிலும் அதிகம் நிகழ்கின்றன, இதனால் அச்சம் அதிகரித்துள்ளது. குழந்தைகள் மீது சிறப்பு கண்காணிப்பு உள்ளபோதிலும், ஓநாய்கள் தாக்குகின்றன. ஓநாய்கள் பகலில் தாக்குவது குறித்து, டேராடூனில் உள்ள இந்திய வனவிலங்கு நிறுவனத்தின் விஞ்ஞானி டாக்டர் ஷஹீர் கான் கூறுகையில், "அறிவியல் ரீதியாக, பகலில் ஓநாய்கள் தாக்குவதாக இதுவரை எந்த தகவலும் இல்லை. இது பஹ்ரைச்சில் நடக்கிறது என்றால், அது புதிய மற்றும் தனித்துவமான சம்பவம். இது குறித்து விசாரிக்க வேண்டும்" என்றார். இந்த முறை ஓநாய் தாக்குதல்கள் வித்தியாசமாக நிகழ்கின்றன என்று நிபுணர்கள் கூறுகின்றனர். கடந்த ஆண்டு, இதுபோன்ற சம்பவங்கள் இரவில் மட்டுமே நடந்தன, அதிலும் குறிப்பாக ஒரு ஓநாய் மட்டுமே தாக்குதலில் ஈடுபட்டது. ஆனால் இந்த முறை, இரண்டு ஓநாய்கள் ஒரே நேரத்தில் தாக்குகின்றன, பகலில் கூட அவை சுறுசுறுப்பாக உள்ளன. "மழைக்குப் பிறகு, ஓநாய்களின் குகைகள் வெள்ளத்தில் மூழ்கியிருக்க வேண்டும். அதனால்தான் அவை புதிய இடங்களையும் உணவையும் தேடிப் புறப்பட்டிருக்க வேண்டும்" என்கிறார் வனவிலங்கு நிபுணர் அபிஷேக். ஓநாய்களின் வாழ்க்கை முறைகள் மாறிவிட்டன என்பதை டிஎஃப்ஓ ராம் சிங் யாதவும் ஒப்புக்கொள்கிறார். "காலப்போக்கில் அவை தங்கள் வழிமுறைகளை மாற்றிக் கொள்கின்றன. இதனால்தான் அவற்றைப் பிடிப்பது கடினமாகி வருகிறது" என்று அவர் கூறுகிறார். வனத்துறை முன்னுள்ள சவால்களும், உத்திகளும் ஓநாய்களின் அச்சுறுத்தல் காரணமாக நிர்வாகம் இப்பகுதியை கண்காணித்து வருவதாக பஹ்ரைச் கோட்ட வன அதிகாரி(DFO) ராம் சிங் யாதவ் குறிப்பிட்டார். "நாங்கள் டிரோன் கேமராக்கள் மூலம் அவற்றைக் கண்காணித்து வருகிறோம், கூண்டுகள் மற்றும் பொறிகள் நிறுவப்பட்டுள்ளன, ஆனால் இந்த பகுதியின் பரப்பளவு மிகப் பெரியது" என்கிறார் ராம் சிங் யாதவ். இதுகுறித்து முன்னாள் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர் விஜய் சிங் கூறுகையில், "மக்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது. இவ்வளவு பெரிய சம்பவத்திற்குப் பிறகும், அரசாங்கம் டிரோன்கள் மற்றும் கூண்டுகளைப் பற்றி மட்டுமே பேசுகிறது. எங்களுக்கு உடனடி பாதுகாப்பு தேவை" என்றார். குழந்தைகள் தனியாக வெளியே செல்வதைத் தவிர்க்கவும், இரவில் குழுக்களாக இருக்கவும் மக்களை வனத்துறை வலியுறுத்தியுள்ளது. பொதுமக்களிடையே இந்த பயம் மிகவும் அதிகமாக இருப்பதால், பகலில் கூட மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியே வரத் தயங்குகிறார்கள். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp3q25k1xw6o
  5. ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை 2025 ; இலங்கை வந்தடைந்தது இந்தியா மற்றும் இலங்கை அணிகள் 02 Oct, 2025 | 10:05 AM ஐ.சி.சி மகளிர் கிரிக்கெட் உலகக் கோப்பை - 2025 போட்டிகளுக்காக இந்தியா சென்றிருந்த இலங்கை மற்றும் இந்திய தேசிய மகளிர் கிரிக்கெட் அணிகள், நாட்டில் நடைபெறவிருக்கும் போட்டிகளில் பங்கேற்க சிறப்பு விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தன. அவர்கள் நேற்று திங்கட்கிழமை (01) இரவு 08.35 மணிக்கு ஃபிட்ஸ் ஏர் ஏர்லைன்ஸின் சிறப்பு விமானம் 8 D. - 522 இல் இந்தியாவின் குவஹாத்தியில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர். மேலும், அவர்களை வரவேற்க இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தின் அதிகாரிகள் குழு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/226642
  6. ஷொப்பிங் பைகள் போன்ற பொலித்தீன் பைகளை இலவசமாக வழங்க முடியாத வகையில், நவம்பர் 1 ஆம் திகதி முதல் ஒரு குறிப்பிட்ட தொகையை வசூலிக்க வர்த்தமானி அறிவிப்பை வெளியிட எதிர்பார்ப்பதாக சுற்றாடல் அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகள் இன்று உயர் நீதிமன்றுக்கு அறிவித்தனர். . பொலித்தீன் பயன்பாடு சுற்றுச்சூழல் அழிவை ஏற்படுத்துவதால், அவற்றின் பயன்பாட்டைக் குறைக்க ஒரு திட்டத்தை வகுக்க உத்தரவிடக் கோரி சுற்றுச்சூழல் நீதி மையம் தாக்கல் செய்த அடிப்படை உரிமைகள் மனு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சுற்றுச்சூழல் நீதி மையம் தாக்கல் செய்த மனு, பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன, குமுதுனி விக்ரமசிங்க மற்றும் சம்பத் அபேகோன் உள்ளிட்ட மூவரடங்கிய உயர் நீதிமன்ற அமர்வு முன் அழைக்கப்பட்டது. சிறப்பு அங்காடிகள் மற்றும் பிற வணிக நிறுவனங்களால் நுகர்வோருக்கு வழங்கப்படும் ஷொப்பிங் பைகளின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக அவற்றின் மீது வரி விதிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுற்றாடல் அமைச்சர் உள்ளிட்ட பிரதிவாதிகளால் 2024 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 28 ஆம் திகதி உயர்நீதிமன்றில் இணக்கம் வௌியிட்டிருந்ததாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த இணக்கத்திற்கு அமைய பிரதிவாதிகள் செயற்படாமை காரணமாக இந்த மனுவை தாக்கல் செய்ய வேண்டி ஏற்பட்டதாக சுற்றுச்சூழல் நீதி மையம் சார்பில் ஆஜரான சட்டத்தரணி ரவீந்திரநாத் தாபரே, தெரிவித்துள்ளார். இதன்போது பிரதிவாதிகள் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் அவந்தி பெரேரா, நவம்பர் 1 ஆம் திகதி முதல் ஷொப்பிங் பைகளுக்கு கட்டணம் வசூலிக்கும் வகையில் வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். அதன்படி, அந்த அறிவிப்புக்கு சுற்றுச்சூழல் நீதி மையம் இணக்கம் வௌியிட்டதால் வழக்கு விசாரணையை நிறுவுறுத்தி உத்தரவிடப்பட்டது. https://adaderanatamil.lk/news/cmg7wkw5j00qtqplpdo3d4a71
  7. 01 Oct, 2025 | 06:14 PM வங்கியொன்றின் பண வைப்பு இயந்திரத்தில், பெண்ணொருவரின் பணத்தை வங்கிக்கணக்கொன்றுக்கு வைப்பிலிட உதவி செய்வது போல் வந்த இளைஞன், அந்தப் பணத்தை தனது வங்கிக்கணக்கில் வைப்பிலிட்டு, பெண்ணை ஏமாற்றிச் சென்ற சம்பவம் கிளிநொச்சியில் இடம்பெற்றுள்ளது. இது தொடர்பில் தெரியவருவதாவது, கிளிநொச்சி பொன்னகர் கிராமத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் தனது வீட்டு மின்சார கட்டணத்தை செலுத்துவதற்காக வங்கியொன்றுக்குச் சென்றுள்ளார். அங்குள்ள பண வைப்பு இயந்திரத்தில் பணத்தை வைப்பிலிடத் தெரியாத அந்தப் பெண், மின் கட்டணத்தை வைப்புச் செய்வதற்காக அருகில் நின்ற இளைஞர் ஒருவரிடம் உதவி கோரியுள்ளார். பணத்தை வைப்பிலிடுவதற்காக அந்த இளைஞனிடம், தனது வீட்டு மின்சார கணக்கு இலக்கத்தையும் ஆறாயிரம் ரூபாய் பணத்தையும் வழங்கியுள்ளார். அந்த இளைஞன், அப்பெண்ணுக்கு உதவி செய்வது போல் செயற்பட்டு, அவர் வழங்கிய கணக்கு இலக்கத்துக்கு பணத்தை வைப்புச் செய்வது போல் பாசாங்கு காட்டி, தனது வங்கிக் கணக்கு இலக்கத்திறகு பணத்தை வைப்புச் செய்துள்ளார். பின், அருகில் இருந்த குப்பை கூடைக்குள் இருந்து பணம் வைப்புச் செய்த பற்றுச்சீட்டு ஒன்றை பெண்ணிடம் கொடுத்துவிட்டு, அவ்விடத்தை விட்டுச் சென்றுள்ளார். வீடு திரும்பிய பெண், அந்தப் பற்றுச்சீட்டை மகனிடம் காட்டியபோதே, அது, மின்கட்டணத்துக்கான கணக்கில் வைப்பிலிட்டதற்குரிய பற்றுச்சீட்டு அல்ல என்பது தெரியவந்துள்ளது. பின்னர், அந்தப் பெண் குறித்த வங்கிக்குச் சென்று, இளைஞனின் வங்கிக் கணக்கு பற்றிய விபரங்களை கேட்டு, நடந்த சம்பவத்தை விபரித்துள்ளார். அதற்கு வங்கி நிர்வாகத்தினர் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துவிட்டு, முறைப்பாட்டு சீட்டைக் கொண்டுவந்தால் மாத்திரமே விபரங்களை வழங்க முடியும் எனக் கூறியுள்ளனர். அதனையடுத்து, முறைப்பாடு அளிப்பதற்காக அப்பெண் பொலிஸ் நிலையத்துக்குச் சென்றுள்ளார். அங்கு பொலிஸ் உத்தியோகத்தர்கள், “ஆறாயிரம் ரூபாய்க்கெல்லாம் முறைப்பாடு எடுக்க முடியாது” என தெரிவித்துள்ளனர். இதனால் அப்பெண் கடும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/226622
  8. அமெரிக்க அரசு முடக்கம்: அப்படி என்றால் என்ன? மக்களுக்கு என்ன பாதிப்பு? பட மூலாதாரம், WHITE HOUSE படக்குறிப்பு, வெள்ளை மாளிகை தனது இணையதளத்தில் "ஜனநாயகக் கட்சியினர் அரசை முடக்கியுள்ளனர்'' எனக் குறிப்பிடும் ஒரு கவுண்டவுன் கடிகாரத்தை சேர்த்தது. 1 அக்டோபர் 2025, 09:58 GMT புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் மத்திய (Federal) அரசு நிர்வாகம் முடங்கியுள்ளது. இதனால் ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் சம்பளமின்றி விடுப்பில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற அரசு திட்டங்கள் மற்றும் சேவைகள் மூடப்படலாம் என்ற அபாயமும் உள்ளது. அமெரிக்க அரசு நிர்வாகத்தின் பணி முடக்கம் என்றால் என்ன, அது ஏன் ஏற்படுகிறது, அது டிரம்ப் நிர்வாகத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதைத் தெரிந்துகொள்வோம். அமெரிக்க செனட் சபையால், அரசாங்க நிதி ஒதுக்கீட்டைப் பற்றிய மசோதாவில் ஒருமித்த கருத்தை எட்ட முடியவில்லை. எனவே, அந்த மசோதா நிறைவேறவில்லை. 2018-ஆம் ஆண்டுக்குப் பிறகு அமெரிக்க அரசாங்கப் பணிகள் முடங்குவது இதுவே முதல் முறை. இது பல மத்திய அரசு ஊழியர்களை சம்பளமின்றி விடுப்பில் செல்ல கட்டாயப்படுத்தக்கூடும். அரசாங்கத்திற்கு நிதியளிக்க ஜனநாயகக் கட்சியினர் கொண்டு வந்த அரசு நிதி மசோதா 47-53 என்ற வாக்குகளால் தோல்வியடைந்தது. அரசாங்க முடக்கத்தைத் தடுக்கும் நோக்கில் கொண்டுவரப்பட்ட இந்த முன்மொழிவு, 100 உறுப்பினர்களைக் கொண்ட அவையில் தேவையான வாக்குகளைப் பெறத் தவறிவிட்டது. அதைத் தொடர்ந்து குடியரசுக் கட்சியின் நிதி மசோதா 55-45 என்ற கணக்கில் தோற்கடிக்கப்பட்டது. பின்னர் வெள்ளை மாளிகை தனது இணையதளத்தில் "ஜனநாயகக் கட்சியினர் அரசை முடக்கியுள்ளனர்'' எனக் குறிப்பிடும் ஒரு கவுண்டவுன் கடிகாரத்தை சேர்த்தது. மக்கள் ஜனநாயகக் கட்சியுடன் ஒத்துப்போகவில்லை" என்றும் அதில் கூறப்பட்டது. பணி முடக்கம் என்றால் என்ன? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பணி முடக்கத்தால் அத்தியாவசியமற்ற சேவைகள் மற்றும் அலுவலகங்கள் மூடப்படுகின்றன. அமெரிக்க அரசு இயங்க ஒவ்வொரு ஆண்டும் ஒரு பட்ஜெட் நிறைவேற்றப்பட வேண்டும். செனட் மற்றும் பிரதிநிதிகள் சபை (அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகள்) அந்த நிதி மசோதாவில் உடன்படவில்லை என்றால், மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்க முடியாது. இதனால், "அத்தியாவசியமற்ற" சேவைகள் மற்றும் அலுவலகங்கள் தற்காலிகமாக மூடப்படுகின்றன. இது தான் பணி முடக்கம் என்று அழைக்கப்படுகிறது. வெள்ளை மாளிகை என்ன சொன்னது? பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, வெள்ளை மாளிகை பணி முடக்கத்தை அறிவித்துள்ளது. இதற்கிடையில், ஜனநாயகக் கட்சியினரும் குடியரசுக் கட்சியினரும் இந்த முடக்கத்திற்கு ஒருவரையொருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். குடியரசுக் கட்சியினர் நாடாளுமன்றத்தைக் கட்டுப்படுத்துகிறார்கள், ஆனால் செனட்டில் 60 வாக்குகள் இல்லாததால் எந்தவொரு பட்ஜெட் மசோதாவையும் நிறைவேற்ற முடியவில்லை. இந்த பணி முடக்கத்தின் தாக்கம் பரவலாக இருக்கும். தேசிய பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன. தொழிலாளர் துறையின் கீழ் செயல்படும் புள்ளிவிவர பணியகமும் மூடப்படும். இதனால் வெள்ளிக்கிழமை வெளியிடப்படவிருந்த மாதாந்திர வேலைவாய்ப்பு அறிக்கை வெளியிடப்படாது. சமீப காலமாக வேலைவாய்ப்பு குறைந்திருப்பதால், இந்த அறிக்கை பொருளாதார நிலையை புரிந்துகொள்ள முக்கியமானதாக இருந்தது. அறிக்கை இல்லாதது பொருளாதாரத்தின் நிலையை மேலும் குழப்பமாக்கும் என்றும், ஏற்கெனவே உள்ள நிச்சயமற்ற தன்மையை அதிகரிக்கும் என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். ஆயிரக்கணக்கான அரசு ஊழியர்கள் பாதிக்கப்படுவார்கள். பல மத்திய அரசு நிறுவனங்கள் மூடப்படும். இருப்பினும், ராணுவம், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற அத்தியாவசிய சேவைகள் தொடர்ந்து இயங்கும். அரசாங்கத்தின் செயல்பாட்டில் என்ன மாற்றங்கள் ஏற்படும் ? பட மூலாதாரம், Getty Images இந்த பணி முடக்கம் அரசு செயல்பாடுகளை முழுமையாக நிறுத்தாது. எல்லைப் பாதுகாப்பு, மருத்துவமனைகளில் சிகிச்சை, சட்ட அமலாக்கம், விமானப் போக்குவரத்து கட்டுப்பாடு போன்ற முக்கிய சேவைகள் தொடரும். சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவ காப்பீட்டுக்கான பணம் அரசாங்கத்தால் தொடர்ந்து அனுப்பப்படும், ஆனால் பலன் பெறுவோர் குறித்த சரிபார்ப்பு மற்றும் அட்டை வழங்கல் போன்ற சேவைகள் நிறுத்தப்படலாம். அத்தியாவசியத் தொழிலாளர்கள் பொதுவாக பணி முடக்கத்தின் போது வழக்கம் போல் செயல்படுவார்கள். அத்தியாவசிய ஊழியர்கள் வழக்கம்போல் பணியில் ஈடுபடுவார்கள். ஆனால் சிலருக்கு அந்த காலத்தில் சம்பளம் வழங்கப்படாது. அத்தியாவசியமற்ற துறைகளில் உள்ள ஊழியர்கள் சம்பளமின்றி தற்காலிக விடுப்பில் அனுப்பப்படுகிறார்கள். இதனால், உணவு உதவித் திட்டங்கள், மத்திய அரசு நிதியுதவி பெறும் மழலையர் பள்ளிகள், மாணவர் கடன் வழங்கல், உணவு ஆய்வுகள், தேசிய பூங்கா செயல்பாடுகள் போன்ற சேவைகள் குறைக்கப்படலாம் அல்லது நிறுத்தப்படலாம். இந்த முடக்கம், 2018-ஆம் ஆண்டின் பிற்பகுதியில் ஏற்பட்ட பணி முடக்கத்தை விட பெரியதாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கணிக்கின்றனர். மத்திய அரசின் ஊழியர்களில் சுமார் 40 சதவிகிதம் பேர், அதாவது 800,000க்கும் அதிகமானோர், தற்காலிக விடுப்பில் அனுப்பப்படலாம் என்று அவர்கள் மதிப்பிடுகின்றனர். பொருளாதாரத்தில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்? இந்த பணி முடக்கம் எவ்வளவு காலம் நீடிக்கும், அது எவ்வளவு பரவலாக உள்ளது என்பதைப் பொறுத்து இந்த முடக்கம் பொருளாதாரத்தில் ஏற்படுத்தும் தாக்கம் குறித்து மதிப்பிடலாம். முந்தைய காலங்களில் இத்தகைய இடையூறுகள் தற்காலிகமாக இருந்தன. பணி முடக்கத்தால் பாதிக்கப்பட்ட அரசு துறைகள் பெரும்பாலும் சில மாதங்களில் இழப்பீடு பெற்றன. ஆனால் தற்போதைய பணி முடக்கம், ஒவ்வொரு வாரமும் அமெரிக்க பொருளாதார வளர்ச்சியை சுமார் 0.1% முதல் 0.2% வரை குறைக்கக்கூடும் என ஆய்வாளர்கள் மதிப்பிடுகின்றனர். டிரம்ப், சில ஊழியர்களை சம்பளமின்றி விடுப்பில் அனுப்புவது மட்டுமல்லாமல், அவர்களை நேரடியாக பணிநீக்கம் செய்வதாகவும் எச்சரித்துள்ளார். இந்த மோதல், ஏற்கெனவே வரி (tariffs) மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) போன்ற மாற்றங்களால் சவால்களை எதிர்கொண்டு வரும் அமெரிக்க பொருளாதாரத்தில் மேலும் குழப்பத்தை ஏற்படுத்துகிறது. பட மூலாதாரம், Anadolu via Getty Images படக்குறிப்பு, இந்த முடக்கத்தின் தாக்கம் பரவலாக இருக்கும். தேசிய பூங்காக்கள் மூடப்பட்டுள்ளன, மேலும் தொழிலாளர் துறையின் கீழ் செயல்படும் தொழிலாளர் புள்ளிவிவர பணியகமும் மூடப்பட உள்ளது. அமெரிக்காவில் பணி முடக்கம் எவ்வளவு பொதுவானவை? கடந்த 50 ஆண்டுகளில் அமெரிக்காவில் அரசு பணி முடக்கம் என்பது மிகவும் சாதாரணமாகிவிட்டது. இது டிரம்பின் முதல் பதவிக்காலத்தில் மூன்று முறை நடந்தது, இதில், வரலாற்றில் மிக நீண்ட காலமாக 36 நாட்கள் நீடித்த முடக்கம் ஒன்று, ஜனவரி 2019 இல் முடிவடைந்தது. 1980களில், ரொனால்ட் ரீகனின் ஆட்சிக் காலத்தில் எட்டு முறை இவ்வாறான முடக்கம் ஏற்பட்டது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3vz25r7k66o
  9. தீ மிதிப்பின்போது யாரையும் தூக்காதீங்க! எவரெஸ்டில் ஒக்சிசன் சிலிண்டர் இல்லாது பனிச்சறுக்கு செய்து சாதனை.
  10. 01 Oct, 2025 | 03:12 PM இந்தோனேசியாவின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோயர்ஜோ (Sidoarjo) நகரில் இயங்கிவரும் 'அல் கோஜினி' (Al Khoziny) என்ற இஸ்லாமியப் பாடசாலையின் கட்டடம் ஒன்று இடிந்து விழுந்ததில், 3 மாணவர்கள் பலியாகினர். இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கும் 91 மாணவர்களைத் தேடும் பணி தொடர்ந்து தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் செவ்வாய்க்கிழமை (30) பிற்பகல் இடம்பெற்றுள்ளது. கட்டடப் பணிகள் நடைபெற்று வந்த ஒரு கட்டடத்தின் கீழ்த்தளத்தில் உள்ள மசூதியில் மாணவர்கள் தொழுகையில் ஈடுபட்டிருந்தபோது, கட்டடத்தின் மேல்தளம் திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்தில், 13 வயது சிறுவன் உள்ளிட்ட 3 மாணவர்கள் உயிரிழந்தனர். 99 மாணவர்கள் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். இவர்களில் பலர் தீவிர சிகிச்சை பெறும் நிலையில் உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என்ற அச்சம் நிலவுகிறது. விபத்தில் சிக்கியவர்களில் சுமார் 91 மாணவர்கள் இடிபாடுகளுக்குள் சிக்கியிருப்பதாகக் கருதப்படுகிறது. உள்ளூர் அதிகாரிகளின் கூற்றுப்படி, இந்தக் கட்டடத்திற்கு அனுமதியின்றி கூடுதலாக தளங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருந்ததால், கீழ் தளத்தின் அத்திபாரம் அதிக பாரத்தைத் தாங்க முடியாமல் இடிந்து விழுந்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. 91 பேரைத் தேடும் பணியில் அந்நாட்டுப் பொலிஸார், மீட்புப் பணியாளர்கள் மற்றும் இராணுவ வீரர்கள் என பலர் ஈடுபட்டுள்ளனர். இடிபாடுகளுக்குள் சிக்கியுள்ள மாணவர்கள் உயிருடன் இருக்கக்கூடும் என்ற நம்பிக்கையில், அவர்களுக்குக் குழாய்கள் மூலம் ஒட்சிசன் மற்றும் குடிநீர் செலுத்தப்பட்டு வருகிறது. குறித்த கட்டிடம் பலவீனமடைந்து காணப்படுவதால், மேலும் சரிவு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் பாரிய உபகரணங்களைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. மீட்புப் பணிகள் மிகுந்த சவாலாக உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். காணாமல் போன மாணவர்களின் கதி என்ன என்று அறிய முடியாமல் அவர்களது குடும்பத்தினர் பாடசாலையைச் சுற்றியுள்ள பகுதிகளில் மிகுந்த சோகத்துடன் காத்திருக்கின்றனர். https://www.virakesari.lk/article/226594
  11. குஜராத்தில் Clinical Trail-ல் உயிரை பணயம் வைக்கும் குடிசைப் பகுதி மக்கள் | BBC Ground Report ஆமதாபாத் குடிசைப் பகுதியில் வாழும் வேலையற்ற மக்கள் clinical trials எனப்படும் மனிதர்கள் மீது மேற்கொள்ளப்படும் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கின்றனர். இது அவர்களின் முக்கிய வருமான ஆதாரமாக மாறியுள்ளது. சிலருக்கு இது மட்டுமே வாழ்வாதாரமாக உள்ளது. உணவு, வீடு பராமரிப்பு போன்ற அவர்களின் அன்றாட தேவைகளை இதன் மூலமே பூர்த்தி செய்கின்றனர். இவர்கள் வாழ்வில் சந்திக்கும் சவால்கள் என்ன? பிபிசி அதனை அறிய முயற்சித்தது. Reporter - Roxy Gagdekar Chhara Shoot Edit – Pavan Jaishwal. Additional Shoot – Kushal Batunge Producer – Shivalika Shivpuri Holding Editor – Sushila Singh #ClinicalTrail #India #Medicine இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
  12. பட மூலாதாரம், OHSU/Christine Torres Hicks கட்டுரை தகவல் ஜேம்ஸ் கல்லாகர் சுகாதாரம் மற்றும் அறிவியல் செய்தியாளர் 1 அக்டோபர் 2025, 11:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் அமெரிக்க விஞ்ஞானிகள் முதல் முறையாக மனிதர்களின் தோல் செல்களில் இருந்து டிஎன்ஏ எடுத்து, அதை விந்தணுக்களால் செறிவூட்டி, கருவை உருவாக்கியுள்ளனர். இந்த முறையால், உடலில் உள்ள எந்த செல்லையும் பயன்படுத்தி ஒரு குழந்தையை உருவாக்க முடியும். முதுமை அல்லது நோயால் குழந்தை பெற முடியாதவர்களுக்கு இது உதவும். மேலும், தன்பாலின தம்பதிகளும் மரபணு ரீதியாக தொடர்புடைய குழந்தையைப் பெற வாய்ப்பு உருவாகலாம். ஆனால், இந்த முறையை கருத்தரிப்பு மருத்துவமனைகளில் பயன்படுத்த மேம்பாடுகள் செய்ய வேண்டும். இதற்கு குறைந்தது 10 ஆண்டுகள் ஆகலாம். இதை ஒரு முக்கிய முன்னேற்றம் என்று நிபுணர்கள் குறிப்பிட்டாலும், இதுபோன்ற அறிவியல் முயற்சிகள் குறித்து பொதுமக்களுடன் வெளிப்படையான விவாதத்தை மேற்கொள்ள வேண்டும் என்றும் கூறுகின்றனர். பொதுவாக குழந்தை பெறுவது எளிதான ஒன்று. ஆணின் விந்து, பெண்ணின் கருமுட்டையைச் சந்தித்து, கரு உருவாகி, ஒன்பது மாதங்களில் குழந்தை பிறந்துவிடும். இப்போது விஞ்ஞானிகள் இந்த விதிகளை மாற்றுகின்றனர். இந்தப் புதிய முயற்சி மனித தோலில் இருந்து தொடங்குகிறது. ஓரிகன் சுகாதாரம் மற்றும் அறிவியல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், உடலை உருவாக்கத் தேவையான முழு மரபணு (டிஎன்ஏ) இருக்கும் தோல் செல்லின் நியூக்ளியஸை (nucleus) எடுக்கின்றனர். பின்னர், அதை மரபணு தகவல்கள் நீக்கப்பட்ட ஒரு கருமுட்டையில் வைக்கின்றனர். இந்த கட்டம் வரை, 1996-ல் உலகில் குளோனிங் முறையில் உருவாக்கப்பட்ட முதல் பாலூட்டி விலங்கான டோலி ஆட்டை உருவாக்கிய முறையைப் போன்றது இது. பட மூலாதாரம், OHSU படக்குறிப்பு, பெரிய வட்டம், நுண்ணோக்கியில் பார்க்கப்படும் கருமுட்டையைக் குறிக்கிறது. கீழே உள்ள வெள்ளைப் புள்ளி, தோல் செல்லில் இருந்து எடுக்கப்பட்டு கருமுட்டையில் வைக்கப்பட்ட மரபணு பொருளாகும். 46 குரோமோசோம்கள் ஆனால், விந்தணுவால் இந்த கருமுட்டையை கருத்தரிக்க முடியவில்லை. ஏனெனில் தானமாக பெறப்பட்ட இந்த கருமுட்டைக்குள் ஏற்கெனவே முழு குரோமோசோம்களும் உள்ளன. ஒரு குழந்தை உருவாக, தாயிடமிருந்தும் தந்தையிடமிருந்தும் தலா 23 குரோமோசோம்கள் (மொத்தம் 46) தேவை. ஆனால், இந்த முட்டையில் ஏற்கெனவே 46 குரோமோசோம்கள் இருக்கின்றன. அதனால், கருமுட்டை தனது குரோமோசோம்களில் பாதியை வெளியேற்ற வேண்டும். அதன் பின் தான் கருமுட்டையால் விந்தணுவுடன் சேர முடியும். இந்தச் செயல்முறையை ஆராய்ச்சியாளர்கள் "மைட்டோமியோசிஸ்" என்று அழைக்கின்றனர். (இது "மைட்டோசிஸ்" மற்றும் "மியோசிஸ்" என்ற செல்கள் பிரியும் இரண்டு முறைகளின் கலவை). 'எதிர்காலத்தில் முக்கியமானதாக இருக்கும்' நேச்சர் கம்யூனிகேஷன்ஸ் என்ற அறிவியல் இதழில் வெளியான ஆய்வு, 82 செயல்படும் கருமுட்டைகள் உருவாக்கப்பட்டதாக கூறுகிறது. அவை விந்தணுக்களால் கருத்தரிக்கப்பட்டன. சில கருமுட்டைகள் கருவின் ஆரம்ப கட்டத்துக்கு வளர்ந்தன. ஆனால், ஆறு நாட்களுக்கு மேல் எதுவும் வளரவில்லை. "சாத்தியமற்றது என்று நினைக்கப்பட்ட ஒன்றை நாங்கள் செய்துவிட்டோம்," என்கிறார் ஓரிகன் சுகாதார மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தின் கரு உயிரணு மற்றும் மரபணு சிகிச்சை மைய இயக்குநர் பேராசிரியர் ஷௌக்ரத் மிட்டாலிபோவ். ஆனால், இந்த செயல்முறை இன்னும் முழுமையாகவில்லை. கருமுட்டை எந்த குரோமோசோம்களை வெளியேற்றுவது என்பதை தற்செயலாகத் தேர்ந்தெடுக்கிறது. நோய் வராமல் இருக்க, 23 வகைகளில் ஒவ்வொரு வகையிலிருந்தும் ஒரு குரோமோசோம் இருக்க வேண்டும். ஆனால், சில வகைகள் இரண்டாகவும், சில வகைகள் எதுவும் இல்லாமலும் இருக்கின்றன. மேலும், இந்த முறையின் வெற்றி விகிதம் 9% மட்டுமே. குரோமோசோம்கள் 'கிராசிங் ஓவர்' என்ற முக்கியமான டிஎன்ஏ மறுசீரமைப்பு செயல்முறையையும் தவறவிடுகின்றன. "இந்த முறையை இன்னும் மேம்படுத்த வேண்டும்," என்கிறார் உலகப் புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர் மிட்டாலிபோவ். "எதிர்காலத்தில் இது முக்கியமானதாக இருக்கும், ஏனெனில் குழந்தை பெற முடியாதவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது." பட மூலாதாரம், OHSU/Christine Torres Hicks படக்குறிப்பு, பேராசிரியர் ஷௌக்ரத் மிட்டாலிபோவ் இந்தப் புதிய தொழில்நுட்பம், 'இன் விட்ரோ கேமடோஜெனீசிஸ்' எனப்படும் ஒரு வளர்ந்து வரும் துறையின் பகுதி. இதில், உடலுக்கு வெளியே விந்தணுவும் கருமுட்டைகளும் உருவாக்கப்படுகின்றன. இது இன்னும் மருத்துவமனைகளில் பயன்படுத்தப்படவில்லை. ஆனால், போதிய விந்தணு அல்லது கருமுட்டைகள் இல்லாததால் செயற்கை கருத்தரித்தல் (ஐவிஎஃப்) மூலம் குழந்தை பெற முடியாத தம்பதிகளுக்கு உதவுவதே இதன் நோக்கமாக உள்ளது. வயதான பெண்கள், விந்தணு குறைவாக உற்பத்தி செய்யும் ஆண்கள், அல்லது புற்றுநோய் சிகிச்சையால் மலட்டுத்தன்மை அடைந்தவர்களுக்கு இந்த முறை நம்பிக்கை தரும். இந்தத் தொழில்நுட்பம் பெற்றோராவதற்கான பாரம்பரிய விதிகளை மாற்றுகிறது. இதற்கு பெண்ணின் தோல் செல்கள் மட்டுமல்ல, ஆணின் தோல் செல்களையும் பயன்படுத்தலாம். இதனால், தன்பாலின தம்பதிகள் இருவரும் மரபணு ரீதியாக தொடர்புடைய குழந்தையைப் பெற முடியும். உதாரணமாக, ஆண் தம்பதிகளில் ஒருவரின் தோல் செல்களால் கருமுட்டை உருவாக்கி, மற்றவர் விந்தணுவால் கருத்தரிக்கலாம். "போதிய விந்தணு அல்லது கருமுட்டைகள் இல்லாததால் குழந்தை பெற முடியாத கோடிக்கணக்கான மக்களுக்கு இது நம்பிக்கை தருவதோடு, தன்பாலின தம்பதிகளுக்கு இருவருடனும் மரபணு ரீதியாக தொடர்புடைய குழந்தையைப் பெறும் வாய்ப்பையும் கொடுக்கும்," என்கிறார் ஓரிகன் சுகாதார மற்றும் அறிவியல் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் பவுலா அமடோ. பொதுமக்களின் கவனத்துக்குக் கொண்டு செல்ல வேண்டும் ஹல் பல்கலைக்கழகத்தின் இனப்பெருக்க மருத்துவப் பேராசிரியர் ரோஜர் ஸ்டர்மி, இந்த அறிவியல் முயற்சி "முக்கியமானது" மற்றும் "சிறப்பானது" என்று தெரிவித்தார். "இதுபோன்ற ஆராய்ச்சிகள், இனப்பெருக்கத்தில் ஏற்படும் புதிய கண்டுபிடிப்புகள் பற்றி மக்களுடன் திறந்த உரையாடல் நடத்த வேண்டியதன் முக்கியத்துவத்தை காட்டுகின்றன," என்று அவர் கூறினார். "மக்களின் நம்பிக்கையை வளர்க்கவும், பொறுப்பை உறுதி செய்யவும் வலுவான நிர்வாகம் தேவை என்பதை இது நமக்கு உணர்த்துகிறது." எடின்பரோ பல்கலைக்கழகத்தின் எம்ஆர்சி இனப்பெருக்க சுகாதார மையத்தின் துணை இயக்குநர் பேராசிரியர் ரிச்சர்ட் ஆண்டர்சன், புதிய கருமுட்டைகளை உருவாக்கும் இந்தத் திறன் "பெரிய கண்டுபிடிப்பு" என்று கூறினார். தொடர்ந்து பேசிய அவர், "பாதுகாப்பு குறித்து சில கவலைகள் இருக்கலாம். ஆனால், இந்த ஆய்வு பல பெண்கள் தங்கள் மரபணு ரீதியாக தொடர்புடைய குழந்தைகளைப் பெற உதவும் ஒரு முக்கிய படியாக இருக்கும்,"என்றார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvgqze2pq4vo
  13. Published By: Priyatharshan 01 Oct, 2025 | 08:23 PM இந்த ஆண்டு உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு, பெண்கள் மற்றும் சிறுவர்கள் விவகார அமைச்சு ஒரு வார கால தேசிய சிறுவர்கள் தின வாரத்தை பிரகடனப்படுத்தியுள்ளது. அதன் நிறைவு விழா மற்றும் உலக சிறுவர்கள் தின தேசிய கொண்டாட்ட நிகழ்வு இன்று புதன்கிழமை (ஒக்டோபர் 01) அலரி மாளிகையில் நடைபெற்றது. பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் பல முக்கிய அம்சங்கள் இடம்பெற்றன. இதன்போது, உலக சிறுவர்கள் தின நினைவு முத்திரை மற்றும் தபால்தலை வெளியிடப்பட்டது. உலக சிறுவர்கள் தினத்தை முன்னிட்டு நன்னடத்தை மற்றும் சிறுவர் பராமரிப்புச் சேவைகள் திணைக்களத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இலக்கியப் போட்டிகளின் தொகுப்பாகிய "க்ஷேம பூமி" (Kshema Bhoomi) இலக்கியத் தொகுப்பு வெளியீட்டு வைக்கப்பட்டது. தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகாரசபையினால் ஏற்பாடு செய்யப்பட்ட "சிந்துவெளி சித்தம்" (Sithuvili Siththam) ஓவியப் போட்டியின் வெற்றியாளர்கள் இன்றைய நிகழ்வில் கௌரவிக்கப்பட்டனர். நிகழ்வில் கலந்துகொண்ட சிறுவர்களுக்காகப் பல்வேறு செயல்பாடுகளை அடிப்படையாகக் கொண்ட விசேட நிகழ்ச்சித் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன. சிறுவர்கள் கலந்துகெண்ட இந்த முக்கிய நிகழ்வில், பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ், பிரதி அமைச்சர் வைத்தியர் நாமல் சுதர்ஷன, பாராளுமன்ற மகளிர் மன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தி பெண் பாராளுமன்ற உறுப்பினர்கள், பல நாடுகளின் தூதுவர்கள் உள்ளிட்ட இராஜதந்திரப் பிரதிநிதிகள், அரச அதிகாரிகள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்கள் பலரும் கலந்துகொண்டனர். https://www.virakesari.lk/article/226627
  14. RESULT 2nd Match (D/N), Indore, October 01, 2025, ICC Women's World Cup PrevNext Australia Women 326 New Zealand Women (43.2/50 ov, T:327) 237 AUS Women won by 89 runs Player Of The Match Ashleigh Gardner, AUS-W 115 (83)
  15. பட மூலாதாரம், Win McNamee/Getty Images படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் ஒப்புதலுடன் காஸாவில் அமைதிக்காக 20 அம்சத் திட்டத்தை முன்வைத்துள்ளார். கட்டுரை தகவல் தில்நவாஸ் பாஷா பிபிசி செய்தியாளர் 1 அக்டோபர் 2025, 12:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் திங்கட்கிழமை, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு முன்னிலையில் காஸாவில் அமைதிக்கான ஒரு திட்டத்தை முன்வைத்தார். 20 அம்சங்களை கொண்ட இந்தச் சமாதானத் திட்டத்தின் கீழ், காஸாவில் சண்டை நிறுத்தப்படும், இஸ்ரேலியப் பணயக் கைதிகள் விடுவிக்கப்படுவார்கள், மேலும் காஸாவின் நிர்வாகத்திற்காக ஒரு சர்வதேச 'அமைதி வாரியம்' (Board of Peace) அமைக்கப்படும். இதில் பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேரும் இடம் பெறுவார். அதிபர் டிரம்ப், வெள்ளை மாளிகையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் இந்த அமைதித் திட்டத்தை அறிவித்து, இது ஒரு வரலாற்று நடவடிக்கை என்று வர்ணித்தார். அப்போது பிரதமர் நெதன்யாகு, இந்தத் திட்டத்தை ஆதரிப்பதாகவும், இது இஸ்ரேலின் போர்க் குறிக்கோள்களை நிறைவேற்றும் என்றும் கூறினார். எனினும், ஹமாஸ் இன்னும் இந்த அமைதித் திட்டத்தை ஆய்வு செய்து வருவதால், இது குறித்து எந்தப் பதிலையும் அளிக்கவில்லை. இந்தச் சமாதானத் திட்டத்தின் கீழ், அனைத்து நிபந்தனைகளும் பூர்த்தி செய்யப்பட்டால், எதிர்காலத்தில் பாலத்தீன தேசம் உருவாவதற்கான வழியும் திறக்கப்படலாம். இருப்பினும், இந்தத் திட்டம் பாலத்தீன தேசத்தை உருவாக்குவதைக் குறிக்கவில்லை என்றும், இஸ்ரேல் இந்த யோசனையை முழு பலத்துடன் எதிர்க்கும் என்றும் இஸ்ரேலியப் பிரதமர் நெதன்யாகு வலியுறுத்தினார். ஹமாஸ் இந்தத் திட்டத்தை ஏற்க மறுத்தால், ஹமாஸை அழிப்பதில் இஸ்ரேலுக்கு அமெரிக்கா முழு ஆதரவையும் அளிக்கும் என்றும் அதிபர் டிரம்ப் கூறினார். பட மூலாதாரம், PA படக்குறிப்பு, இந்தத் திட்டத்தின் கீழ், பிரிட்டனின் முன்னாள் பிரதமர் டோனி பிளேர், டிரம்ப் தலைமையிலான "அமைதி வாரியத்தில்" இணைவார். காஸாவுக்கான அமைதித் திட்டத்தை அறிவிப்பதற்கு முன், இஸ்ரேலியப் பிரதமர் வெள்ளை மாளிகையில் இருந்தபடியே கத்தார் பிரதமர் (மற்றும் வெளியுறவு அமைச்சர்) ஷேக் முகமது பின் அப்துல்ரஹ்மான் பின் ஜாசிம் அல் தானியை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டார். இந்த அழைப்பில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பும் பங்கேற்றார். இந்தத் தொலைபேசி உரையாடலின் போது, செப்டம்பர் 9 அன்று கத்தார் தலைநகர் தோஹாவில் ஹமாஸ் அமைப்பினரை குறி வைத்து நடத்தப்பட்ட தாக்குதலுக்காக நெதன்யாகு மன்னிப்பு கேட்டார். மேலும், இந்தத் தாக்குதலில் ஒரு கத்தார் குடிமகன் உயிரிழந்ததற்காகவும் வருத்தம் தெரிவித்தார். ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே அமைதிப் பேச்சுவார்த்தையில் கத்தார் மத்தியஸ்தராக இருந்து வருகிறது. அமைதிப் பேச்சுவார்த்தையில் மீண்டும் பங்கேற்க, இஸ்ரேல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கத்தார் நிபந்தனை விதித்திருந்தது. ஊடக செய்திகளின்படி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் வலியுறுத்தலின் பேரில் இஸ்ரேல் கத்தாரிடம் மன்னிப்பு கேட்டது. எதிர்காலத்தில் இஸ்ரேல் கத்தார் நாட்டின் இறையாண்மையை மீறாது என்றும் நெதன்யாகு கத்தாரிடம் உறுதியளித்தார். இந்தத் தொலைபேசி அழைப்புக்குப் பிறகு வெளியிடப்பட்ட அறிக்கையில், காஸாவில் அமைதியை நிலைநாட்டுவதற்காக மத்தியஸ்தம் செய்யத் தயாராக இருப்பதாக கத்தார் கூறியது. 'இஸ்ரேல் உங்களைத் தேடி அழிக்கும்' பட மூலாதாரம், Michael M. Santiago/Getty Images படக்குறிப்பு, ஐ.நா. பொதுச் சபையில் செப்டம்பர் 26 அன்று நெதன்யாகு, "உடனடியாகப் பணயக் கைதிகளை விடுவியுங்கள், அவ்வாறு செய்தால் நீங்கள் உயிர் பிழைப்பீர்கள். இல்லையென்றால், இஸ்ரேல் உங்களைத் தேடி அழிக்கும்" என்று கூறியிருந்தார். இந்த நிகழ்வுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பு, செப்டம்பர் 26 அன்று ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் ஆற்றிய உரையில், "ஹமாஸ் எங்கள் நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால், போர் இப்போதே முடிவுக்கு வரும், காஸாவில் இருந்து ராணுவம் அகற்றப்படும், இஸ்ரேல் தனது பாதுகாப்புக் கட்டுப்பாட்டை வைத்திருக்கும், மேலும் எங்கள் பணயக் கைதிகள் திரும்புவார்கள்" என்று நெதன்யாகு கூறியிருந்தார். காஸாவில் பெரிய ஒலிபெருக்கிகள் அமைத்து நெதன்யாகுவின் பேச்சு நேரடியாக ஒலிபரப்பப்பட்டது. "உடனடியாகப் பணயக் கைதிகளை விடுவியுங்கள், அவ்வாறு செய்தால் நீங்கள் உயிர் பிழைப்பீர்கள். நீங்கள் அவ்வாறு செய்யவில்லை என்றால், இஸ்ரேல் உங்களைத் தேடி அழிக்கும்" என்று நெதன்யாகு ஹமாஸை வலியுறுத்தியிருந்தார். அதே நேரம், டிரம்ப்புடன் இணைந்து அமைதித் திட்டத்தை அறிவித்தபோது, ஹமாஸ் இந்தத் திட்டத்தை நிராகரித்தால், காஸாவில் இஸ்ரேல் தனது பணியை முடிக்கும் என்றும் நெதன்யாகு கூறினார். அக்டோபர் 7, 2023 அன்று ஹமாஸ் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தியது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்ரேலிய குடிமக்களைக் கொன்றதுடன், 250-க்கும் மேற்பட்டவர்களைப் பணயக் கைதிகளாகப் பிடித்தது. ஹமாஸுடனான போர் நிறுத்த ஒப்பந்தங்கள் மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்பு படைகளின் முயற்சிகள் மூலம் இதுவரை 207 பணயக் கைதிகள் இஸ்ரேலுக்குத் திரும்பியுள்ளனர். காஸாவில் இன்னும் 48 பணயக் கைதிகள் உள்ளனர், அவர்களில் இருபது பேர் உயிருடன் உள்ளனர். அக்டோபர் 7 தாக்குதலுக்குப் பிறகு, ஹமாஸை ஒழிக்கும் நோக்குடன் இஸ்ரேல் காஸாவில் பதிலடி ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. இந்த நடவடிக்கையில் இதுவரை 66 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கும் மேற்பட்டோர் குழந்தைகளும் பெண்களும் ஆவர். மேலும், 1 லட்சத்து 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலத்தீனர்கள் காயமடைந்துள்ளனர். நெதன்யாகு ஏன் கத்தாரிடம் மன்னிப்பு கேட்டார்? பட மூலாதாரம், EPA/Shutterstock படக்குறிப்பு, டிரம்ப்பைச் சந்திப்பதற்கு முன் நெதன்யாகு கத்தாரிடம் மன்னிப்பு கோரினார். தொலைபேசி அழைப்பில் நெதன்யாகு கத்தாரிடம் மன்னிப்பு கேட்டார். இஸ்ரேலோ, நெதன்யாகுவோ ஒரு மத்திய கிழக்கு நாட்டிடம் மன்னிப்பு கோருவது ஒரு அரிதான நிகழ்வு. இதற்கு முன் 2010-ல் காஸாவுக்கு உதவிப் பொருட்கள் ஏற்றிச் சென்ற துருக்கியின் மாவி மர்மாரா கப்பல் மீது தாக்குதல் நடத்தியதற்காக இஸ்ரேல் துருக்கியிடம் மன்னிப்பு கேட்டிருந்தது. கத்தார் மீதான தாக்குதலுக்குப் பிறகு நெதன்யாகு சர்வதேச அரங்கில் தனிமைப்படுத்தப்பட்டதாலேயே அவர் மன்னிப்பு கேட்டார் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். ஐக்கிய நாடுகள் சபையில் நெதன்யாகு தனது உரையைத் தொடங்கியபோது பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில் வெளிநடப்புச் செய்தனர். "கத்தார் மீது தாக்குதல் நடத்தி இஸ்ரேல் அனைத்து சர்வதேச ராஜீய விதிகளையும் மீறிவிட்டது. கத்தார் மத்திய கிழக்கில் பல மோதல்களில் மத்தியஸ்தராகப் பணியாற்றியுள்ளது, ஹமாஸுடனான மத்தியஸ்தத்திலும் அதன் பங்கு முக்கியமானது. கத்தார் மீதான தாக்குதல் இஸ்ரேலின் தன்னிச்சையான போக்காகப் பார்க்கப்பட்டது, மேலும் ஐரோப்பிய கூட்டாளிகள் உட்பட பல நாடுகள் இஸ்ரேலிடமிருந்து விலகிச் சென்றன. கத்தாரிடம் மன்னிப்புக் கேட்க வேண்டிய அழுத்தம் நெதன்யாகு மீது இருந்தது என்பது வெளிப்படையானது," என சர்வதேச விவகார நிபுணர் பேராசிரியர் ஃபஸ்ஸுர் ரஹ்மான் சொல்கிறார். ஆனால் இஸ்ரேல் அல்லது நெதன்யாகு மீது சர்வதேச அழுத்தம் ஏதாவது தாக்கத்தை ஏற்படுத்துமா என்பதே கேள்வி. "நடைமுறையில் பார்த்தால், இஸ்ரேல் அதன் சொந்த வழியில், அதன் சொந்தத் திட்டத்தின்படி முன்னேறி வருகிறது, அதன் சொந்தப் பாதுகாப்புக் குறிக்கோள்கள் சர்வதேச விமர்சனங்களை விட முக்கியம். ஆனால் கத்தாரிடம் மன்னிப்புக் கேட்டதன் மூலம் காஸாவில் அமைதிப் பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாக இஸ்ரேல் சமிக்ஞை கொடுத்துள்ளது" என்று கூறுகிறார் பேராசிரியர் ஃபஸ்ஸுர் ரஹ்மான். "நெதன்யாகு ஹமாஸுடனான பேச்சுவார்த்தைக்கு எதிராகவே இருந்தார். காஸாவில் இப்போது இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் தலையீடு மட்டுமே இருப்பதாகவும், மற்ற நாடுகள் அனைத்தும் பின்வாங்கிவிட்டதாகவும் அவர் நினைத்தார். இந்தச் சூழ்நிலையில், அவர் கத்தாரில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது தாக்குதல் நடத்த முடிவெடுத்தார். இப்போது நெதன்யாகு மன்னிப்பு கேட்டுள்ளார், இதற்கு முன் அவர் ஒன்றரை தசாப்தங்களுக்கு முன்புதான் மன்னிப்பு கேட்டிருந்தார். அதாவது, டிரம்ப்பின் அழுத்தத்தாலோ அல்லது ஐ.நா.வில் ஏற்பட்ட எதிர்ப்பாலோ நெதன்யாகு கத்தாரிடம் மன்னிப்பு கேட்டார். அவர் சர்வதேச சமூகத்தில் நம்பிக்கை வைத்துள்ளார் என்பதற்கான சமிக்ஞையையும் அளித்துள்ளார்," என ஃபஸ்ஸுர் ரஹ்மான் கூறினார். பின்வாங்குகிறாரா நெதன்யாகு? பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, டிரம்ப்பின் திட்டத்தில் பாலத்தீன தேசம் குறித்து உறுதியான எதுவும் கூறப்படவில்லை. உள்நாட்டு அளவில் நெதன்யாகு விமர்சனங்களை எதிர்கொள்ள நேரிடும் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். "இது நெதன்யாகுவின் கூட்டாளிகள் அறிவித்த நிலைப்பாட்டுக்கு எதிரானது. இதற்காக நெதன்யாகு உள்நாட்டில் விமர்சனத்தைச் சந்திக்க நேரிடும்" என்கிறார் சர்வதேச விவகார நிபுணர் மஞ்சரி சிங். தற்போது சமர்ப்பிக்கப்பட்டுள்ள அமைதித் திட்டத்தின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால், காஸா மக்கள் கட்டாயப்படுத்தி வெளியேற்றப்பட மாட்டார்கள். காஸா மக்கள் தாமாக விரும்பிப் பகுதியைக் காலி செய்வதற்கோ அல்லது திரும்புவதற்கோ சுதந்திரம் இருக்கும் என்று நெதன்யாகு செவ்வாயன்று கூறியிருந்தார். மேலும், காஸாவின் பாதுகாப்பிற்காக சர்வதேசப் படைகளை நிலைநிறுத்துவதற்கான முன்மொழிவும் இதில் அடங்கும். நெதன்யாகு தனது பழைய மற்றும் கடுமையான நிலைப்பாட்டிலிருந்து சற்றுப் பின்வாங்குவதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். சர்வதேச விவகார நிபுணர் மஞ்சரி சிங், "நெதன்யாகு கடுமையான போக்கை பின்பற்றும் திட்டத்திலிருந்து பின்வாங்குவது போல் தெரிகிறது. கத்தார் மீதான தாக்குதலுக்குப் பிறகு நெதன்யாகுவும் இஸ்ரேலிய அரசாங்கமும் தங்கள் நாட்டின் பாதுகாப்பே முதன்மையானது என்று கூறியிருந்தன. இப்போது நெதன்யாகு கத்தார் விவகாரத்தில் தனது தவறை ஒப்புக்கொண்டுள்ளார், மேலும் அமைதித் திட்டத்திற்குச் சம்மதம் தெரிவித்துள்ளார், ஒரு வகையில் அவர் சமரசம் செய்து கொள்வது போல் தெரிகிறது" என்று கூறுகிறார். "இஸ்ரேல் உருவாவதில் முக்கியப் பங்காற்றிய பிரான்ஸ் மற்றும் பிரிட்டன் போன்ற நாடுகளும் இஸ்ரேலைத் தவிர்க்க முயன்றன, இந்தச் சூழ்நிலையில் தான் முழுமையாக தனிமைப்படுத்தப்படக் கூடாது என்று நெதன்யாகு நினைத்திருக்கலாம்" என்கிறார் ஃபஸ்ஸுர் ரஹ்மான். சிக்கலில் மாட்டினாரா நெதன்யாகு? பட மூலாதாரம், AFP via Getty Images படக்குறிப்பு, அக்டோபர் 2023-க்குப் பிறகு காஸாவில் நடந்த இஸ்ரேலியத் தாக்குதல்களில் குறைந்தது 66,000 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இந்த அமைதி ஒப்பந்தத்தை நெதன்யாகு முழுமையாக ஏற்றுக்கொண்டு அது நடைமுறைப்படுத்தப்பட்டால், அவர் உள்நாட்டில் சிக்கலில் சிக்குவார் என்று ஆய்வாளர்கள் கருதுகின்றனர். உண்மையில், நெதன்யாகுவின் லிகுட் கட்சி பல தீவிர வலதுசாரி கட்சிகளுடன் சேர்ந்து அரசாங்கத்தை நடத்தி வருகிறது. இந்தக் கட்சிகள் காஸாவிலிருந்து எந்தச் சூழ்நிலையிலும் பின்வாங்க விரும்பவில்லை. இந்தக் கட்சிகளில் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச்சின் கட்சியும் அடங்கும். டிரம்ப்பின் அமைதித் திட்டத்தின் மையத்தில் காஸாவை ஆக்கிரமிப்பிலிருந்து விடுவிப்பது உள்ளது. ஸ்மோட்ரிச் போன்ற தலைவர்களுக்கு இது ஒரு அபாயக்கோடு ஆகும். "நெதன்யாகு இந்தத் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளார், ஆனால் இது நடைமுறைக்கு வந்தால், நெதன்யாகு தொடர்ந்து பிரதமராக இருப்பது கடினம். ஏனெனில் அவருக்கு ஆதரவளிக்கும் யூதக் கட்சிகள் காஸா மீதான இஸ்ரேலிய ஆக்கிரமிப்பைக் கைவிட ஒருபோதும் ஒப்புக்கொள்ள மாட்டார்கள். நெதன்யாகு அமெரிக்கா செல்வதற்கு முன், அவரது அரசாங்கத்தில் உள்ள ஸ்மோட்ரிச் போன்ற வலதுசாரி அமைச்சர்கள் சில விஷயங்களில் சமரசம் செய்யக் கூடாது என்று கூறியிருந்தனர். இதில் காஸாவிலிருந்து இஸ்ரேலியப் படைகள் பின்வாங்குவது அடங்கும். இந்தக் கட்சிகள் நெதன்யாகுவின் இந்த நடவடிக்கையை எளிதில் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள்" என்று பேராசிரியர் ஃபஸ்ஸுர் ரஹ்மான் கூறுகிறார். நெதன்யாகு மீது பணயக் கைதிகளின் குடும்பங்களின் அழுத்தமும் உள்ளது. ஐ.நா.வில் உரையாற்றும்போதும் அவர் பணயக் கைதிகளின் குடும்பங்களை நோக்கியே உரையாற்றத் தொடங்கினார். "பணயக் கைதிகளை விடுவிக்க நெதன்யாகு மீது கடுமையான அழுத்தம் உள்ளது. இந்த அழுத்தம் அவரது பேச்சிலும் தெரிந்தது. மீண்டும் மீண்டும் அவர் பணயக் கைதிகள் பற்றி பேசி, 'நீங்கள் எங்கள் நினைவில் இருக்கிறீர்கள்' என்று கூறினார்" என்கிறார் பேராசிரியர் ஃபஸ்ஸுர் ரஹ்மான், ஹமாஸை நம்பினாரா நெதன்யாகு? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தத் திட்டம் பாலத்தீன தேசத்தை உருவாக்குவதைக் குறிக்கவில்லை என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வலியுறுத்தினார். இந்தத் திட்டத்திற்கு ஹமாஸ் இன்னும் பதிலளிக்கவில்லை. இருப்பினும், ஹமாஸ் இந்தத் திட்டத்தை நிராகரிக்க அதிக வாய்ப்பு இருப்பதாக ஆய்வாளர்கள் நம்புகின்றனர். உண்மையில், ஹமாஸ் மற்றும் இஸ்ரேல் இடையே ஒருபோதும் நம்பிக்கை இருந்ததில்லை. ஹமாஸ் இஸ்ரேலை நம்புவதும் இல்லை, இஸ்ரேல் ஹமாஸை நம்புவதும் இல்லை. இதற்கு முன்னர் போர் நிறுத்த ஒப்பந்தங்கள் ஏற்பட்டபோதும், அவை அதிகம் பலனளிக்கவில்லை. "ஹமாஸ் இன்னும் பதிலளிக்கவில்லை. ஹமாஸ் இதை ஏற்றுக்கொண்டால், அது ஆயுதங்களைக் கைவிட்டு தனது கட்டமைப்பை கலைக்க வேண்டும். ஹமாஸ் இந்தத் திட்டத்தை ஏற்காது என்று நெதன்யாகு கருதுகிறார். அப்படிப்பட்ட சூழ்நிலையில், அவர் வாய்ப்பளித்தும் ஹமாஸ் அமைதியை விரும்பவில்லை என்று கூறி, மேலும் தீவிர நடவடிக்கையை நியாயப்படுத்த முடியும்" என்று கூறுகிறார் ஃபஸ்ஸுர் ரஹ்மான், கார்னகி எண்டோவ்மென்ட் ஃபார் இன்டர்நேஷனல் பீஸின் (Carnegie Endowment for International Peace) மூத்த ஆய்வாளரான ஆரோன் டேவிட் மில்லர், இதே கருத்தை ஒரு பகுப்பாய்வில் வெளிப்படுத்தியுள்ளார். "ஹமாஸ் திட்டத்தை நிராகரிப்பதை நெதன்யாகு நம்பியிருப்பது போல் தெரிகிறது. ஹமாஸ் இந்தத் திட்டத்தை நிராகரித்தால், அதிபர் டிரம்ப் கூறியது போல, இஸ்ரேலுக்கு அமெரிக்காவின் முழு ஆதரவும் கிடைக்கும்." இதற்கிடையில், "நெதன்யாகுவுக்கு உள்ள சிக்கல் என்னவென்றால், இந்தச் சமாதானத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால், அவருக்கு உள்நாட்டில் அரசாங்கத்தை நடத்துவது மிகவும் கடினம். அவரது கூட்டாளிகள் இதற்குச் சம்மதிக்க மாட்டார்கள், ஆதரவை விலக்கிக் கொள்வார்கள்" என்று மஞ்சரி சிங் கூறுகிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cdxqp55wdx9o
  16. 01 Oct, 2025 | 12:39 PM அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப்புடனான அமைதிப் பேச்சுவார்த்தையை முடித்துக்கொண்டு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு உடனடியாக நாட்டுக்குத் திரும்பிய நிலையில், பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கும் திட்டம் குறித்து அவர் ஆவேசமாக கருத்து தெரிவித்துள்ளார். டெல் அவிவ் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு கருத்துத் தெரிவித்தபோது, பாலஸ்தீனத்தை தனிநாடாக அங்கீகரிக்கவுள்ளீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த நெதன்யாகு, "பாலஸ்தீனத்தை தனியாக ஒருபோதும் அங்கீகரிக்க மாட்டேன்" என ஆவேசமாகக் கூறினார். நெதன்யாகு மேலும் கூறுகையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்பின் அமைதி உடன்படிக்கை மற்றும் 20 அம்சத் திட்டத்திற்கு மட்டுமே இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது என்றார். அவர் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திப் பேசியபோது, "போர் நிறுத்தம் வேண்டும் என்பதே நமது நிலைப்பாடு. அதற்கு ஒருபோதும் தனிநாடு அங்கீகாரம் அளிக்க மாட்டோம்” என்று திட்டவட்டமாகத் தெரிவித்தார். இந்தச் சூழ்நிலையில், அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் முன்வைத்த காசா அமைதித் திட்டத்தை ஹமாஸ் மறுபரிசீலனை செய்வதாகக் கூறியுள்ளது. இதுதொடர்பாக ஹமாஸ் தரப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிரம்பின் 20 அம்ச அமைதித் திட்டம் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்படுகிறது" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைமை உறுப்பினர்கள் மற்றும் தகவல் தொடர்பு சிக்கல்கள் காரணமாக இந்தப் பேச்சுவார்த்தை முடிவுக்கு வரச் சில நாட்கள் எடுக்கும் என்றும், அதன்பின்னர் தான் இதற்கு முழுமையான தீர்வு காணப்படும் என்றும் ஹமாஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/226570
  17. சர்வதேச நீதி கோரி யாழில் தொடரும் உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் நிறைவு 01 Oct, 2025 | 06:27 PM வடக்கு கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தின் இறுதிநாள் போராட்டம் இன்றைய தினம் புதன்கிழமை (1) நடைபெற்றது. யாழ். செம்மணியில் கடந்த 25ஆம் திகதி ஆரம்பமான இந்தப் போராட்டம் இன்று வரை முன்னெடுக்கப்பட்டது. போராட்டத்தின் இறுதி நாளான இன்றைய தினம் பகல் 1 மணியளவில் கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தீப்பந்தங்களை ஏந்தி நின்றனர். அதேவேளை சர்வதேச சிறுவர் தினத்தில் இனப்படுகொலை செய்யப்பட்ட சிறுவர்களுக்கு நீதி கோரியும் கோஷங்களை எழுப்பினர். உள்நாட்டு யுத்தத்தின்போது நடத்தப்பட்ட மனித உரிமைமீறல்கள் மற்றும் வலிந்து காணாமலாக்கப்பட்டமை உள்ளிட்ட விவகாரங்களுக்கு நீதி வேண்டியும், உள்நாட்டுப் பொறிமுறையை நிராகரித்தும், சர்வதேச விசாரணையை வலியுறுத்தியும், செம்மணி விவகாரத்திற்கு நீதி கோரியும் இந்த உண்ணாவிரதப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டது. இப்போராட்டத்தில், வடக்கின் ஐந்து மாவட்டங்களை சேர்ந்த வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டுள்ள நிலையில், போராட்டத்தின் ஆரம்பத்தில் “அணையா விளக்கு” பகுதியில் சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி போராட்டத்தை ஆரம்பித்தனர். இதில் கலந்துகொண்டவர்கள் “சிறிலங்காவில் உள்நாட்டு பொறிமுறையை நிராகரிக்கின்றோம்”, “தமிழ் இன அழிப்புக்கும் காணாமல் ஆக்கப்படுதல் போர் குற்றங்கள் மற்றும் மனிதப் புதைகுழிகள் குறித்து நாம் சர்வதேச சுயாதீன விசாரணையை மட்டுமே கோருகின்றோம்” என்பது போன்ற கோரிக்கைகளை முன்வைத்திருந்தனர். https://www.virakesari.lk/article/226587
  18. பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் மோகன் பிபிசி தமிழ் 1 அக்டோபர் 2025, 01:52 GMT கரூரில் கடந்த சனிக்கிழமை நடைபெற்ற தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜயின் பரப்புரை கூட்டத்தில் நெரிசல் ஏற்பட்டு 41 பேர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட 2 தவெக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டு, நீதிமன்ற காவலில் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அக்கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் உள்ளிட்டோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தச் சம்பவத்தை விசாரிக்க ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது. இதனைத் தொடர்ந்து அரசியல் கட்சிகள் மற்றும் இதர அமைப்புகள் நடத்தும் பொதுக் கூட்டங்களுக்கு தெளிவான விதிகள் மற்றும் பாதுகாப்பு விதிமுறைகள் வகுக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். "ஒருநபர் ஆணையம் விசாரணையை அறிக்கை கிடைத்த பிறகு அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு இனி இதுபோன்ற சம்பவங்கள் நடக்காது என்பது உறுதி செய்யப்படும்," எனத் தெரிவித்தார் ஸ்டாலின். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, பெங்களூரு ஆர்சிபி வெற்றிக் கொண்டாடத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 11 பேர் உயிரிழந்தனர். கரூரைப் போலவே, கடந்த ஜனவரியில் பிரயாக்ராஜ் கும்பமேளாவில் 37 பேரும் (பிபிசி புலனாய்வில் 82 பேர் பலியானது தெரியவந்தது) பெங்களூருவில் ஜூன் மாதம் ஆர்சிபி வெற்றிக் கொண்டாட்டத்தில் 11 பேரும் உயிரிழந்தனர். இதுபோன்ற பொது நிகழ்ச்சிகளில் ஏற்படும் கூட்ட நெரிசல் மற்றும் பாதிப்புகளுக்கு யார் பொறுப்பு? கடந்த காலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளில் யார்யார் தண்டிக்கப்பட்டார்கள்? என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. கரூரில் என்னென்ன பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது? கருர் கூட்ட நெரிசல் தொடர்பாக 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாரதிய நியாய சன்ஹிதாவின் பிரிவுகள் 105, 110, 125 பி, 223 மற்றும் தமிழ்நாடு பொதுச் சொத்து சேதம் மற்றும் இழப்பு தடுப்புச் சட்டத்தின் பிரிவு 3 ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பிரிவுகள் உயிரிழப்புகளை ஏற்படுத்தியது, அலட்சியத்தால் மனித உயிருக்கு ஆபத்து ஏற்படுத்தியது, சட்டப்பூர்வமாக பிறப்பிக்கப்பட்ட உத்தரவுகளை மீறியது போன்றவற்றை குறிக்கின்றன. பட மூலாதாரம், Getty Images அனுமதி பெறும் நடைமுறை என்ன? ஒரு கட்சி அல்லது அமைப்பு பொது நிகழ்ச்சி நடத்த விரும்புகிறதென்றால் அவர்கள் முதலில் விருப்பமான இடங்களைக் குறிப்பிட்டு காவல்துறையிடம் விண்ணப்பிக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளர்கள் தரப்பிலிருந்து கொடுக்கப்பட வேண்டிய அடிப்படை தகவல்கள் என்னென்ன? நிகழ்ச்சிக்கு எத்தனை பேர் வருவார்கள்? நிகழ்ச்சிக்கு முடிவு செய்யப்பட்டுள்ள இடங்கள் எந்த நேரத்திற்குள் நிகழ்ச்சி நடத்தப்படும்? என்னென்ன வசதிகள் செய்து தரப்படும்? எத்தனை வாகனங்கள் வரும், வாகனங்களுக்கான நிறுத்துமிடம் எங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது? ஒவ்வொரு காவல்நிலையத்திலும் பார்ட் 4 என்கிற பதிவு பராமரிக்கப்படும். அதில் அந்த சரகத்திற்கு உட்பட்ட கடந்த கால நிகழ்வுகள் உள்ளிட்ட முழுமையான தகவல்கள் இருக்கும். அதன் அடிப்படையில் ஒருங்கிணைப்பாளர்கள் கேட்கின்ற இடத்தில் நிகழ்ச்சியை சுமூகமாக நடத்த முடியுமா என்பதை பொறுத்து இடம் தேர்வு செய்து அனுமதி வழங்கப்படும். பரப்புரையைத் தாண்டி பேரணி நடத்தப்படுகிறது என்றால் அதற்கு தனியாக அனுமதி பெற வேண்டும் என்கிறார் ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கருணாநிதி. "பேரணி எந்த இடத்தில் தொடங்கி எங்கு முடிவடைகிறது, எத்தனை மணிக்கு தொடங்கி எப்போது முடிவடையும், எந்த வழித்தடத்தில் பேரணி நடத்தப்பட உள்ளது, எத்தனை பேர் வர உள்ளார்கள்? என்பன போன்ற தகவல்களை வழங்க வேண்டும். காவல்துறை அந்த இடங்களின் தன்மை, போக்குவரத்து நெரிசல், பொதுமக்களுக்கான சாத்தியமான இடையூறுகள் போன்றவற்றை ஆராய்ந்து தான் அனுமதி வழங்கவோ அல்லது மறுக்கவோ செய்வார்கள்." என்றார் அவர். ஒருங்கிணைப்பாளர் பொறுப்பு என்ன? நிகழ்ச்சிக்காக அனுமதி பெறுகிற போது ஒப்புக்கொள்ளப்பட்ட நிபந்தனைகளை முழுமையாக கடைபிடிப்பது ஒருங்கிணைப்பாளர்களின் பொறுப்பு என்கிறார் கருணாநிதி. அரசியல் நிகழ்ச்சிகளுக்கு குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள் வர வேண்டாம் என்பதை ஒருங்கிணைப்பாளர்கள் உறுதி செய்ய வேண்டும், அதனை தீவிரமாக விளம்பரப்படுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். "நிகழ்ச்சியில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு தண்ணீர், உணவு, கழிப்பிடம், நிழற்குடை, போதுமான இடவசதிகள், நெரிசல் ஏற்படாத வண்ணம் கூட்டத்தை சமாளிக்க தன்னார்வலர்கள் போன்றவற்றை ஒருங்கிணைப்பாளர்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்." என்றார் கருணாநிதி. ஒரே இடத்தில் அதிக அளவில் கூட்டம் கூடுவதைத் தவிர்க்க வெவ்வேறு இடங்களில் பெரிய திரைகள் அமைத்து ஒளிபரப்பு செய்வது, நேரலை செய்வது போன்ற ஏற்பாடுகளையும் ஒருங்கிணைப்பாளர்கள் மேற்கொள்ளலாம் என்று சில பரிந்துரைகளையும் அவர் முன்வைத்தார். பட மூலாதாரம், Karunanidhi படக்குறிப்பு, ஓய்வுபெற்ற காவல் அதிகாரி கருணாநிதி காவல்துறையின் பொறுப்பு என்ன? நிகழ்ச்சிகளுக்கு அனுமதி வழங்குவதோடு, தேவையான கட்டுப்பாடுகளை விதித்து முறையான பாதுகாப்பு வழங்குவது காவல்துறையின் முதன்மையான கடமை என்கிறார் கருணாநிதி. காவல்துறையின் பொறுப்புகளை விளக்கிய அவர், "கூட்ட நெரிசல், பொதுமக்களுக்கு இடையூறு, அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுப்பது போன்றவை தான் காவல்துறையின் முதன்மையான பொறுப்புகள். நிகழ்ச்சி நடைபெறும் இடம் மட்டுமல்லாது அதனை ஒட்டியுள்ள இடங்களை ஆராய்வதும் அனுமதிக்கப்பட்ட அளவை விட கூட்டம் அதிகமாகிறதா என்பதை தொடர்ந்து கண்காணிப்பதும் காவல்துறையின் பணி" என்றும் தெரிவித்தார். நெரிசல் ஏற்பட்டால் யார் பொறுப்பு? நெரிசல் ஏற்பட்டால் அதற்கு இரண்டு தரப்புக்குமே பொறுப்புண்டு என்கிறார் கருணாநிதி. கடந்த கால கூட்ட நெரிசல் சம்பவங்களில் யாரும் தண்டிக்கப்பட்டதில்லை என்கிறார் ஓய்வு பெற்ற நீதிபதியான ஹரிபரந்தாமன். "நிகழ்ச்சி நடத்துவது என்பது இரு தரப்பின் பொறுப்பு என்கிறோமோ அதே போல நிகழ்ச்சியில் நெரிசல் ஏற்பட்டால் அதை இரு தரப்பின் தோல்வியாகவே பார்க்க வேண்டும்." என்று கூறுகிறார் கருணாநிதி. வருகின்ற கூட்டத்திற்கு தேவையான ஏற்பாடுகளைச் செய்யத் தவறினால் ஒருங்கிணைப்பாளர்கள் தான் பொறுப்பாவார்கள் எனக் கூறும் அவர் காவல்துறையும் தனக்கு பொறுப்பில்லை என்று தட்டிக்கழிக்க முடியாது என்கிறார். "காவல்துறைக்கு உளவு அறிக்கையின் மூலம் எத்தனை பேர் கூடுவார்கள் என்கிற கணிப்பு இருக்கும். அளவுக்கு அதிகமாக மக்கள் கூடுவார்கள் அல்லது கூடுகிறார்கள் என்று தெரிந்தால் காவல்துறை நிகழ்ச்சிக்கு முன்பாகவோ அல்லது நிகழ்ச்சியின்போதோ தடுத்து நிறுத்துவதற்கான அதிகாரம் உள்ளது," என்றும் அவர் தெரிவித்தார். இரு தரப்பிலிருந்தும் ஒலி பெருக்கிகள் மூலம் முறையான அறிவிப்புகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார். பட மூலாதாரம், Hariparanthaman படக்குறிப்பு, ஓய்வு பெற்ற நீதிபதியான ஹரிபரந்தாமன் விசாரணை எப்படி நடக்கும்? கூட்ட நெரிசல் வழக்குகளை விசாரிப்பதும் குற்றத்தை நிரூபிப்பதும் கடினமானது என இருவரும் ஒப்புக் கொள்கின்றனர். ஆனால் முன்பிருந்ததைவிட விசாரணை தற்போது நவீனமடைந்துவிட்டது என்கிறார் கருணாநிதி, "நிகழ்ச்சி நடத்த யார் பெயரில் அனுமதி பெறப்படுகிறதோ, யார் முக்கிய ஒருங்கிணைப்பாளர்களாக உள்ளார்களோ அவர்களிடம் முதலில் விசாரணை நடத்தப்படும். அதோடு கூட்ட நெரிசல் எதனால் நடைபெற்றது, அதற்கு யார் காரணம், யாராவது ஒருவரின் குறிப்பிட்ட செயல் காரணமா என்கிற நோக்கிலும் விசாரணை நடத்தப்படும். நிகழ்ச்சியின் முழு காணொளி பதிவுகள் இப்போது கிடைக்கின்றன, நேரலை செய்யப்படுகிறது, சிசிடிவி காட்சிகள் உள்ளன, நேரடி சாட்சிகளின் பதிவுகள் உள்ளன. இவையெல்லாம் விசாரணையை எளிமையாக்கும்." என்று அவர் தெரிவித்தார். தமிழ்நாட்டிலும் அரசு மற்றும் தனியார் நடத்திய பல நிகழ்ச்சிகளில் கூட்ட நெரிசல் சம்பவங்கள் ஏற்பட்டுள்ளன, ஆனால் யாரும் தண்டிக்கப்பட்டதில்லை என்கிறார் ஹரிபரந்தாமன். "சட்டப்பூர்வமாக பார்த்தால் கூட்ட நெரிசல் வழக்குகளும் சாலை விபத்து வழக்குகளைப் போன்றது தான். கடந்த ஆண்டு தான் மெரினாவில் நெரிசல் ஏற்பட்டு உயிரிழப்புகள் ஏற்பட்டன. ஆனால் யாரும் விசாரிக்கப்பட்டதாகவோ தண்டிக்கப்பட்டதாகவோ தெரியவில்லை. காவல்துறை பதிவு செய்துள்ள வழக்கில் அலட்சியம் தான் முக்கியமான குற்றச்சாட்டாக உள்ளது. ஆனால் அதனை நிரூபிப்பது கடினம்." என்றும் அவர் தெரிவித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/cly17055x1vo
  19. 01 Oct, 2025 | 02:41 PM அனைத்து சிறுவர்களுக்கும் அன்பும் பாதுகாப்பும் நிறைந்த, வளமான வாழ்க்கையை உருவாக்குவதற்காக தொடர்ந்து பாடுபடுவது எமது கடமையாகும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். அனைத்து சிறுவர்களுக்கும் உலக சிறுவர் தின வாழ்த்துக்களை முன்வைத்து பொலிஸார் இதனை தெரிவித்துள்ளனர். சிறுவர்கள் நமது எதிர்காலம். அவர்களின் பாதுகாப்பும் நலனும் நமது முக்கிய பொறுப்பாகும். சிறந்த கல்வி, பாதுகாப்பான சூழல், நற்பண்பு வளர்ச்சிக்கு ஒவ்வொரு குழந்தைக்கும் சமமான வாய்ப்புகள் வழங்குவதே இலங்கை பொலிஸின் நோக்கம். எல்லா சிறுவர்களும் நலமுடன், பாதுகாப்புடன் வளர வேண்டும் என்பது எமது முக்கிய நோக்கமாகும். சிறுவர் உரிமைகள் பாதுகாக்கப்படுவதோடு, அவர்கள் கனவுகள், ஆசைகள் நிறைவேற உதவுவதே எமது கடமை. இன்று சிறுவர் தினத்தில், நாம் அனைவரும் குழந்தைகளுக்கு ஒரு நன்மையான, அன்பான, பாதுகாப்பான சூழலை உருவாக்க முனைந்திட வேண்டும் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதே நோக்கத்தில், சமூகத்துடன் இணைந்து, சிறுவர்களின் பாதுகாப்பு மற்றும் கல்வி மேம்பாட்டுக்கான அனைத்து முயற்சிகளிலும் முழுமையாக செயல்படுவோம் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/226584
  20. பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, பணியில் ஈடுபட்டிருந்த 30க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளனர் 30 செப்டெம்பர் 2025 சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் கட்டுமான பணிகளில் ஈடுபட்டிருந்த போது முகப்பு சாரம் சரிந்து குறைந்தது 9 பேர் பலியாகி உள்ளனர். பிரதமர் மோதி, முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்டோர் இறந்த தொழிலாளர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர் சுமார் 45 அடிக்கு மேல் பணி செய்து கொண்டிருக்கும்போது திடீரென சாரத்தின் ஒரு பகுதி சரிந்து இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில், பணியில் ஈடுபட்டிருந்த 30க்கும் மேற்பட்ட வடமாநில இளைஞர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். அவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். என்ன நடந்தது? பொன்னேரி அருகே வாயலூரில் எண்ணூர் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் அனல்மின் திட்ட கட்டுமான பணிகள் நடைபெற்று வருகிறது. இதன் புதிய அலகு கட்டுமானத்தில் ராட்சத வளைவு அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகளில் வடமாநில தொழிலாளர்கள் ஈடுபட்டனர். அப்போது ராட்சத வளைவு அமைக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த போது, திடீரென சாரம் சரிந்து விழுந்தது. அதில், 9 வடமாநில தொழிலாளர்கள் உயிரிழந்தனர். பலரும் காயம் அடைந்துள்ள நிலையில், அவர்கள் ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். விபத்து தொடர்பாக சிஐடியூ மாநில துணைத் தலைவர் விஜயன் பிபிசியிடம் பேசுகையில், " சுமார் 45 மீட்டர் உயரத்தில் வளைவு அமைக்கும் பணி நடைபெற்றது. ஒருபக்கம் பணிகள் நிறைவடைந்து மற்றொரு பக்கத்தில் பணி நடைபெற்று கொண்டிருந்தது. இந்நிலையில் தான், அந்த சாரம் ஒரு பக்கத்திலிருந்து சரிந்துவிட்டது. அதன் மேல் வேலை பார்த்துக்கொண்டிருந்தவர்கள் கீழே விழுந்துவிட்டனர். பாதுகாப்பு பெல்ட் அணிந்திருந்தும் அதனுடன் சேர்ந்தே விழுந்துவிட்டனர்." என்றார். பட மூலாதாரம், ANI படக்குறிப்பு, ராதாகிருஷ்ணன் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) தலைவர் ராதாகிருஷ்ணன், ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இங்கு மொத்தமாக 3,200 தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். பெரும்பாலும் வட இந்திய தொழிலாளர்கள் தான். அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரியின் கருத்துப்படி 45 அடி உயரத்தில் பாதுகாப்பு உடை அணிந்து 10 பேர் பணியாற்றிக் கொண்டிருந்துள்ளனர். ஆனாலும், திடீரென சாரம் சரிந்து விழுந்ததால், இதுவரை 9 தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதுதொடர்பாக காவல்துறை, மருத்துவமனை நிர்வாகம் உள்ளிட்டோருடன் பேசி இருக்கிறோம். அடுத்ததாக BHEL நிறுவனத்திடம் தான் பேசி உள்ளோம். ஏனென்றால் அந்த நிறுவனம் தான் ஒப்பந்ததாரர்கள்" என்று தெரிவித்துள்ளார். மேலும், "இருவருக்கு அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்கள் நலமாக உள்ளனர். மற்ற ஒன்பது பேர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அரசு ஸ்டான்லி மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளன" என ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார் சம்பவ நடந்த இடத்தில் அனைத்து அதிகாரிகளும் இருப்பதாகவும் விபத்து குறித்து காவல்துறையினர் சார்பில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். முதலமைச்சர் ஸ்டாலின், பிரதமர் மோதி இரங்கல் இந்த விபத்து குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "எண்ணூரில் பெல் (BHEL) நிறுவனம் மேற்கொண்டு வரும் மின் உற்பத்தி நிலையக் கட்டுமானப் பணியில் ஏற்பட்ட விபத்தில், அசாம் மாநிலத்தைச் சேர்ந்த ஒன்பது பணியாளர்கள் இறந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். மின்துறை அமைச்சர் எஸ்.எஸ். சிவசங்கரையும் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் (TANGEDCO) தலைவர் ராதாகிருஷ்ணனையும் உடனே நேரடியாகச் சென்று நிவாரணப் பணிகளை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தியுள்ளேன். உயிரிழந்த பணியாளர்களின் குடும்பங்களுக்குத் தலா ரூ.10 லட்சம் நிவாரணமாக வழங்கிடவும், அவர்களது உடலை அவர்களது சொந்த மாநிலத்திற்கு எடுத்துச் செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் ஆணையிட்டுள்ளேன்." என பதிவிட்டுள்ளார். பிரதமர் மோதி தன் எக்ஸ் பக்கத்தில், இச்செய்தி அறிந்து வருத்தமடைந்ததாகவும் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு ஆறுதலையும் தெரிவித்துள்ளார். சிகிச்சை பெற்று வருபவர்கள் விரைந்து குணமடைய வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து ரூ. 2 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ. 50,000 வழங்கப்படும் என மோதி தெரிவித்துள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு. https://www.bbc.com/tamil/articles/c5yvl1lze3eo
  21. உயர்தர தொழிநுட்ப துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற ஒட்டுசுட்டான் ம.வி மாணவன் சுகயீனத்தால் உயிரிழந்துள்ளார். முல்லைத்தீவு, கற்சிலைமடுவைச் சேர்ந்த ஒட்டுசுட்டான் மகாவித்தியாலய மாணவன் பரமேஸ்வரன் பாணுசன் என்பவர் கடந்த சில மாதங்களாக சிறுநீரக நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிறுநீரக மாற்று சிகிச்சை அளிக்கப்பட்டும் அது பயனளிக்காமல் நேற்று (29) இரவு உயிரிழந்த சம்பவமானது முல்லைத்தீவில் பெரும் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. கடந்த வருடம் உயர்தர தொழிநுட்ப துறையில் முல்லைத்தீவு மாவட்ட மட்டத்தில் முதலிடம் பெற்ற இம்மாணவன், குடும்பத்திற்கு ஒரேயொரு பிள்ளை என்பதும் பலருடனும் மிகவும் பண்பாக பழகும் ஒரு மாணவனான இவனது இழப்பு மக்களை மேலும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. -முல்லைத்தீவு நிருபர் தவசீலன்- https://adaderanatamil.lk/news/cmg6874nz00prqplpy9mk2wom
  22. ரக்பி வீரர் வசீம் தாஜுதீனை படுகொலை செய்ய வந்த குழுவில், சமீபத்தில் மித்தெனிய பகுதியில் தனது இரண்டு குழந்தைகளுடன் படுகொலை செய்யப்பட்ட அருண விதானகமகே எனப்படும் 'கஜ்ஜா'வும் இருந்ததாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் மினுர செனரத் தெரிவித்தார். இன்று (30) பிற்பகல் பொலிஸ் ஊடகப் பிரிவில் நடைபெற்ற ஊடக சந்திப்பில், பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் இவ்வாறு தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmg6kzasy00rao29nd1r2xywx
  23. Published By: Digital Desk 3 30 Sep, 2025 | 01:23 PM நீண்டகாலமாக நிலவும் தண்ணீர் மற்றும் மின்சாரத் தடைகள் காரணமாக இளைஞர்கள் தலைமையிலான போராட்டங்கள் பல நாட்களாகத் தொடர்வதால், மடகஸ்கார் ஜனாதிபதி தனது அரசாங்கத்தைக் கலைப்பதாக அறிவித்துள்ளார். "அரசாங்க உறுப்பினர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட பணிகளைச் செய்யவில்லை என்றால் நாங்கள் ஒப்புக்கொள்கிறோம், மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம்," என திங்களன்று தொலைக்காட்சியில் ஒளிபரப்பான தேசிய உரையில் மடகஸ்கார் ஜனாதிபதி ஆண்ட்ரி ராஜோலினா தெரிவித்துள்ளார். "நாங்கள் வாழ விரும்புகிறோம், உயிரிழக்க விரும்பவில்லை" என கோசமிட்டு “ஜென் Z” போராட்டங்கள் என்று அழைக்கப்படும் இந்த ஆர்ப்பாட்டத்தில், வியாழக்கிழமை முதல் மடகஸ்கார் முழுவதும் உள்ள நகரங்களில் ஆயிரக்கணக்கான இளம் ஆர்ப்பாட்டக்காரர்கள் வீதிகளில் இறங்கினர். அமைதியின்மையை அடக்க பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தியமையினால் போராட்டக்காரர்கள் 22 பேர் உயிரிழந்துள்ளதோடு, 100 பேர் காயமடைந்துள்ளனர். இது தேவை அற்ற செயல் என ஐ.நா.வின் மனித உரிமைகள் ஆணையாளர் கண்டித்துள்ளார். மடகஸ்காரின் வெளிவிவகார அமைச்சு ஐ.நா.வின் புள்ளிவிவரங்களை நிராகரித்துள்ளதோடு, "வதந்திகள் அல்லது தவறான தகவல்களை அடிப்படையாகக் கொண்டது" என குற்றம் சாட்டியுள்ளது. முதலில் தலைநகர் அன்டனனரிவோவில் போராட்டங்கள் ஆரம்பமாகின. ஆனால் பின்னர் மடகஸ்கார் நாடு முழுவதும் எட்டு நகரங்களுக்கு பரவியுள்ளன. வன்முறை மற்றும் கொள்ளைச் சம்பவங்கள் பற்றிய செய்திகளைத் தொடர்ந்து அன்டனனரிவோவில் மாலை முதல் விடியற்காலை வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது, கூட்டத்தைக் கலைக்க பொலிஸார் ரப்பர் தோட்டாக்கள் மற்றும் கண்ணீர் புகை குண்டுகளை வீசினர். பாதுகாப்புப் படையினரின் வன்முறை அடக்குமுறையால் தான் "அதிர்ச்சியடைந்ததாக" ஐ.நா ஆணையாளர் வோல்கர் டர்க் தெரிவித்துள்ளார். கைதுகள், தடியடிகள் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எதிராக துப்பாக்கிச் சூடுகள் பயன்படுத்தப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். "தேவையற்ற மற்றும் விகிதாசாரமற்ற சக்தியைப் பயன்படுத்துவதைத் தவிர்த்து, தன்னிச்சையாக தடுத்து வைக்கப்பட்டுள்ள அனைத்து போராட்டக்காரர்களையும் உடனடியாக விடுவிக்குமாறு பாதுகாப்புப் படையினரை நான் கேட்டுக்கொள்கிறேன்," என்று டர்க் திங்களன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். ஐ.நா.வின் கூற்றுப்படி, உயிரிழந்தவர்களில் "பாதுகாப்புப் படையினரால் கொல்லப்பட்ட போராட்டக்காரர்கள் மற்றும் பார்வையாளர்கள், ஆனால் போராட்டக்காரர்களுடன் தொடர்பில்லாத தனிநபர்கள் மற்றும் கும்பல்களால் அடுத்தடுத்த பரவலான வன்முறை மற்றும் கொள்ளையில் கொல்லப்பட்ட மற்றவர்களும் அடங்குவர்". கடந்த வாரம், மடகஸ்கார் ஜனாதிபதி வேலையைச் சரியாகச் செய்யத் தவறியதற்காக மின்சக்தி அமைச்சரை பதவி நீக்கம் செய்ததாக அறிவித்தார், ஆனால் ஜனாதிபதியும் அவரது அரசாங்கத்தின் ஏனையவர்களும் பதவி விலக வேண்டும் என போராட்டக்காரர்கள் வலியுறுத்தினர். இந்நிலையில் திங்கட்கிழமை மீண்டும் ஆயிரக்கணக்கானோர் வீதிகளில் இறங்கினர். "மின்வெட்டு மற்றும் குடிநீர் வழங்கல் பிரச்சனைகளால் ஏற்பட்ட கோபம், கவலை மற்றும் சிரமங்களை நான் புரிந்து கொள்கிறேன்," என ரஜோலினா, தேசிய ஊடகமான டெலெவிசியோனா மலாகாசி வாயிலாக தனது உரையில் தெரிவித்தார். அண்ட்ரி ராஜோலினா, "பிரதமர் மற்றும் அரசாங்கத்தின் பொறுப்புகளை நிறுத்திவிட்டேன்" எனவும், அடுத்த மூன்று நாட்களில் புதிய பிரதமருக்கான விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் எனவும், பின்னர் புதிய அரசாங்கம் அமைக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். எனினும், புதிய அரசாங்கம் அமைக்கப்படும் வரை தற்போதைய அமைச்சர்கள் இடைக்கால அமைச்சர்களாகச் செயல்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை இளைஞர்களுடன் கலந்துரையாட விருப்பம் இருப்பதாகவும் ரஜோலினா தெரிவித்துள்ளார். 1960ஆம் ஆண்டு சுதந்திரம் பெற்றதிலிருந்து, மடகஸ்கார் பல எழுச்சிகளால் அதிர்ச்சி அடைந்துள்ளது. 2009ஆம் ஆண்டில் நடந்த பெரும் போராட்டங்கள், முன்னாள் ஜனாதிபதி மார்க் ரவலோமானனாவை பதவி விலகச் செய்தன. அப்பொழுது ரஜோலினா அதிகாரத்தில் வந்தார். 2023இல் மூன்றாவது முறையாக தெரிவு செய்யப்பட்ட பின்னர் இந்தப் போராட்டங்களே ஜனாதிபதி எதிர்கொண்ட மிகப்பெரிய சவாலாக அமைந்துள்ளன. https://www.virakesari.lk/article/226477

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.