Everything posted by Cruso
-
இலுப்பைக்கடவை காவல் நிலைய பொறுப்பதிகாரியின் அட்டகாசம்?
ஐயோ நான் ஒன்றும் அரசியல்வாதியும் இல்லை அரசாங்கத்திலும் இல்லை. என்னை மக்கள் தெரிவு செய்தால் நிச்சயமாக ஒரு முடிவு காட்டுவேன். இது அரசியல் வாதியான பாராளுமன்ற உறுப்பினர் அடைக்கலத்தின் ஊர். அவரே இதெல்லாம் பார்த்து சிரித்துவிட்டு போகும்போது நான் என்ன செய்ய முடியும். பொலிஸாரின் அடடாகாசம் அங்கு மட்டுமில்லை எல்லா இடமும் தான் நடக்கிறது. நேற்று நாரம்மல என்னும் இடத்தில சும்மா போன ஒருவனை வாகனத்தை நிறுத்தி மணடயில் போட்டு விடடான் ஒரு போலீஸ்காரன். அங்கு பெரிய குழப்பம். அதட்கு முதல் காலியில் ஒரு போலீஸ்காரனை சுட்டு தள்ளி விடடாரக்ள். எல்லா இடமும்தான் நடக்கிறது.
-
ஏவுகணைத் தாக்குதல்; ஈரானை எச்சரிக்கும் பாகிஸ்தான்!
பொதுவாக ஈரானியர்கள் நாகரீகமாக படித்து வளர்ந்தவர்கள். ஷாவின் ஆட்சி முடியும் வரைக்கும் சுதந்திரமாக வாழ்ந்தவர்கள். கொமேனியின் ஆட்சி வந்த பின்னர் எல்லாம் தலைகீழாக மாறியது. அதுதான் அவர்களுக்கு எரிச்சலை மூட்டியது. ஐம்பதுக்கு ஐம்பது வீதமானோர் எதிராகத்தான் இருக்கிறார்கள். இருந்தாலும் அவர்களின் கொடுங்கோல் ஆட்சியில் கட்டுப்பாடுகளும், மரண தண்டனைகளும் இருப்பதால் அடக்கி வாசிக்கிறார்கள். பாகிஸ்தான் அப்படி இல்லை. அந்த நாள் தொடக்கம் மதவாத சிந்தனை கொண்ட இஸ்லாமிய அடிப்படைவாதிகளினால்தான் வழி நடத்தப்படுகின்றது. எனவே இன்னும் அந்த அடிப்படையில் பிற மதத்தினரை கொலை செய்வதும் மத மாற்றம் செய்வதும் நடக்கின்றது. பிற மதத்தினர் யார் மீதாவது கோபம் இருந்தால் தெய்வ நிந்தனை செய்தார்கள் என்று கூறி கொலை செய்து விடுவார்கள்.
-
நேபாளத்தில் 'குட்டிப் புத்தர்' என அழைக்கப்படுபவர் பாலியல் துஷ்பிரயோக குற்றச்சாட்டில் கைது
அவர்களை குற்றம் சொல்லாதீர்கள். பாலமறவா பச்சைக்குழந்தைகளையே நன்மை தீமையறியாத பிள்ளைகளை கொண்டு போய் விடுகிறார்களே பெற்றோர். அவர்களைத்தான் குற்றம் சொல்ல வேண்டும். ஒருவன் விரும்பி போய் சேர்வதிலும் , இப்படி குழந்தைகளை கொண்டு போய் விடுவதிலும் உள்ள வித்தியாசத்தை பெற்றோர் அறிவதில்லை. சிறு பிள்ளைகளை அங்குள்ள பெரிசுகள் கெடுத்து விடும். பிறகு அது தொடர் கதைதான். பாவம் புத்தர்.
-
தமிழ் எழுத்துக்களால் வடிவமைக்கப்பட்ட பிரமாண்ட திருவள்ளுவர் சிலையை திறந்து வைத்தார் முதலமைச்சர்!
ஆளுநர் ரவி திருவள்ளுவருக்கு காவியடித்து விட்டிருக்கிறார். எப்படியோ தமிழ் நாட்டிடை காவியாக்கும் திடடத்துடன்தான் செயட்படுகிறார்.
-
ஏவுகணைத் தாக்குதல்; ஈரானை எச்சரிக்கும் பாகிஸ்தான்!
அதாவது உங்கள் நாட்டுக்குள் நாங்கள் தாக்குதல் நடத்தலாம். நீங்கள் பார்த்துக்கொண்டு சும்மா இருக்க வேண்டும். ஈரானின் கடடளை எப்படி இருக்குது? எப்படியோ சீன இப்போது களத்தில் இறங்கி இருக்கிறது. தனது இரு நடபு நாடுகள் சண்டை பிடிப்பது அவர்களுக்கு பிரச்சினைதானே.
-
ஜெனீவாவை திருப்திப்படுத்த இரகசிய திட்டமா?
அப்படி எல்லாம் ரகசியமாக செய்ய தேவை இல்லை. வெளிப்படையாகவே செய்யலாம். ஏன் என்றால் இந்த ஜெனீவா போன்ற மைப்புக்களை திருப்தி படுத்துவதால் ஒன்றும் நடக்கப்போவதில்லை என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். ஒவ்வொரு வருடம் கூடி பேசிவிட்டு செல்லுவார்கள். இந்த மாதிரி பிரச்சினைகள் இருந்தால்தான் அவர்களுக்கும் வசதி.
-
மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அநாகரிகமாக நடக்கின்றனர் –கருணா அம்மான்
அண்ணாவை புலம் பெயர் அமைப்புக்கள் உதவியும் ஊக்கமும் அளித்து வருகிறார்களாம். இது எப்படி இருக்கு? இங்குள்ள அனபர்கள் எத்தனை பேர் ஊக்கமளிக்கிறீர்கள். அவர் சொன்னதில் ஓரளவு உண்மையும் இருக்கிறது. நல்ல முன்னேற்றம்.
-
பொருளாதார மீட்சிக்கான ஆரம்ப அறிகுறிகள் தென்படுகின்றன - சவால்கள் தொடர்ந்தும் நீடிக்கின்றன - சர்வதேச நாணயநிதியம்
அரசியல்வாதிகள் கொள்ளையடித்த பணம் , ஊழல்கள் மூலம் வியாபாரிங்க கொள்ளையடித்த பணம் மீட்கப்படும் வரை மீட்சி இல்லை.
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
- “யுக்திய” செயற்பாட்டை யாராலும் நிறுத்த முடியாது : அமைச்சர் டிரான் அலஸ்!
நிற்கலாம். பிரச்சினை இல்லை. ஆனால் உங்கள் கருத்துக்களை பார்க்கும்போது வரமாடடீர்கள் என்று எனக்கு தெரியும். 😜- ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
கேள்வியா? என்ன கேள்வி? ஆ அதுவா? ஊரில் நான் மட்டுமில்லை இன்னும் நிறைய பேர் இஇருக்கிறார்கள் என்று எழுதி இருந்தீர்கள். நான் ஒரு நாளும் நான் மட்டும்தான் இருக்கிறேன் என்று எழுதவில்லை. நன்றி.- ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
நல்லது- ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
அப்படியா ? அப்படி என்றால் இப்போது என்ன நடக்குதென்று உங்களுக்கு தெரியுமா?- ஹமாஸ் ஆயுதக் குழுவை இஸ்ரேல்தான் உருவாக்கியதா? உண்மை என்ன?
இதுதான் இயறகை. காலத்துக்கு காலம் இயக்கங்களைஉருவாக்குவதும் பின்னர் அவர்களுக்கு எதிராய் திரும்புவதும் நடக்கின்றது. புலிகளை இந்தியா உருவாக்கவில்லையா? பின்னர் என்ன நடந்தது? இதுதான் சரித்திரத்திலிருந்து பாடம் கட்காவிடடால் இது தொடர் கதைதான்.- ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
இலங்கை போராளிகளுக்கு இந்தியா ஆய்தம் கொடுத்து பயிட்சி வழங்கியது எதட்காக? இலங்கையில் ஈழம் சாத்தியம் இல்லை என்பது இந்தியாவுக்கு தெரியாதா? அப்படி பெற்று கொடுத்தால் இந்தியாவில் உள்ள மாநிலங்கள் என்ன செய்யும்? போராட்டத்தால் கண்ட பலன் என்ன? இருந்ததை எல்லாம் இழந்ததுதான் மிச்சம். பிச்சை வேணாம் நாயை பிடி என்ற நிலைமைக்கு தமிழ் மக்கள் வந்துள்ளார்கள். 13 திருத்த சடடதுக்கு என்ன நடந்தது? இந்தியாவுக்கு தேவைப்படும்போது கையில் எடுப்பார்கள், பின்னர் கை நழுவி விடுவார்கள். இவை எல்லாமே இந்தியாவின் நாடகம்தான்.- உள்ளூர் உற்பத்திகளை அதிகரிப்பதனூடாக சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் - அமைச்சர் டக்ளஸ்
இவர்கள் மீனின் விலை குறைந்து விட்ட்து என்று சொல்வதெல்லாம் அதன் விலை ஆயிரத்துக்கு மேலேதான். நான் பேலியகொடையில் வாங்குவதால் அந்த விலைகளைத்தெரியும். மற்ற இடங்களில் வாங்கினால் அதனையும் விட ஒன்றரை இரண்டு மடங்கு அதிகம். உண்மையாகவே பிள்ளகைளின் ஊடட சத்து என்பது பாரதூரமானது. முடடையின் விலையும் அப்படி. அரசு எப்படியோ வரி வரி என்று போட்டு மக்களை வதைக்கிறது. எப்படியாவது IMF இடம் நல்ல பெயர் எடுத்து கடன் வாங்கத்தான் முயட்சிக்குதே ஒழிய மக்களை பற்றி சிந்திப்பதாக தெரியவில்லை. தேர்தலின் பின்னர் ஒரு மாற்றம் நிச்சயமாக வரும். ஆனால் அதன் விளைவுகள் எப்படியோ , பொறுத்திருந்து பார்ப்பம்.- உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
அப்போ இலங்கைக்கு வாற எண்ணமில்லை போல? எப்படியோ குடும்பத்துடன் சந்தோசமாக இருங்கள்.- டிரம்ப் மீண்டும் ஜனாதிபதியானால் அமெரிக்காவுக்கு நல்லதல்ல: கமலா ஹாரிஸ்
இவர் ஜனாதிபதியானால் நிச்சயமாக இஸ்ரேலுக்கு ஆதரவும் உதவியும் அதிகரிக்கும். நேட்டோ இல் பிளவு உண்டாக சந்தர்ப்பம் உண்டு. மத்திய கிழக்கில் எப்படியான பிரச்சினை, தீர்வு வரும் என்று கூற முடியாது. எனவே ஒரு குழப்பமான நிலைமை உருவாக சந்தர்ப்பம் அதிகம். அதட்காக இப்போது குழப்பம் இல்லை என்றில்லை.- தமிழ் வாக்குகளுக்காக இராணுவத்தைக் காட்டிக் கொடுக்க ரணில் முயற்சி - விமல் வீரவன்ச
நான் ரணிலுக்கு எதிராக வாக்களிக்க இருந்தேன். இவர் கூறுவதை பார்த்தல் ரணிலுக்கு வாக்களிக்க வேண்டும் போல இருக்குது.- ரணில் விக்கிரமசிங்க ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் - மஹிந்த ராஜபக்ஷ
நிச்சயமாக ராஜபக்சேக்கள் வெற்றியடைய முடியாது. எனவே தங்களை பாதுகாக்க கூடிய தலைவர் என்றால் அது ரணில்தான். வேறு தெரிவு இல்லை. நிச்சயமாக இவர்கள் ரணிலை ஆதரிப்பார்கள் .- உள்ளூர் உற்பத்திகளை அதிகரிப்பதனூடாக சுய பொருளாதாரத்தை வலுப்படுத்த முடியும் - அமைச்சர் டக்ளஸ்
அந்தந்த நேரத்துக்கு அந்தந்த பதில்களும் , செயட்பாடுகளும். இங்கு அரசு என்றெல்லாம் ஒன்றுமில்லை, எப்படி பதவியை வைத்து கொள்ளையடிக்கலாமோஅப்படி கொள்ளையடிப்பதுதான் நோக்கம். எதிர் காலத்தையும் , சுகாதாரத்தையும் பற்றி எந்த அரசு(?) சிந்திக்கிறது. கொண்டு வரும் மருந்துகளிலேயே கொள்ளையடிக்கிறார்கள். இதையும் விட பெரிய மோசடி என்ன இருக்கிறது?- ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
அப்படியா? இஸ்ரேலுடன் சேர்ந்து வாழும்தபாலஸ்தீனர்கள் சரியாகத்தான் இருக்கிறார்கள். இலங்கையில் வாழும் இலங்கையர்கள் ஆய்தம் தூக்க வில்லையா. அதுபோலத்தான் இதுவும். சிலர் தங்கள் சுய நலத்துக்காக மற்றவர்களை தூண்டிவிடுவதுதான் எல்லாவற்றிட்கும் முக்கிய காரணம். இஸ்ரேல் இஸ்ரேலுக்குத்தான் சொந்தம் . வேறு யாரும் சொந்தம் கொணட முடியாது. அங்குள்ள மற்றயவர்களை விட்டு வைத்திருப்பதே பெரிய காரியம். இலங்கைஇலங்கையர்களுக்குத்தான் சொந்தம்.- “யுக்திய” செயற்பாட்டை யாராலும் நிறுத்த முடியாது : அமைச்சர் டிரான் அலஸ்!
உண்மையாகவே இது ஒரு நல்ல செயட்பாடு , மக்களும் இதனை வரவேட்கிறார்கள். இனி மேல் இலங்கை முழுவதும் போலீஸ் பதிவு கொண்டு வரப்போகின்றார்கள். புதிதாக எவர் வந்தாலும் போலீசில் பதியப்பட வேண்டும். வாடகைக்கு இருப்போர் கண்காணிக்கப்பட உள்ளார்கள். போக்கு வரத்து ஒழுங்குகளை மீறுவோர் கமெரா மூலம் கண்காணிக்கப்பட்டு தண்டிக்கப்பட உள்ளார்கள். இதுக்காக கொழும்பு முழுவதும் கமெராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. இது சிலவேளைகளில் சிரமங்களை கொடுக்கும் செயட்பாடாக இருந்தாலும் நன்மைகளுமுண்டு. இனி தேவை இல்லாமல் கொழும்புக்கு வந்து சொந்தக்காரர்களுக்கு தொல்லை கொடுக்காமல் இருக்க சந்தர்ப்பம் உண்டு.😜- பொலிஸ் விசேட சுற்றிவளைப்புகளில் 4 நாட்களில் 8 ஆயிரம் பேர் கைது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்
இது பற்றி நேற்று ஒரு பெரிய பத்திரிகையாளர் மஹா நாடே நடந்தது. அதில் அவர்கள் கூறியது என்னவென்றால் கைது செய்யப்படட எல்லோரையும் சிறையில் அடைக்கவில்லையாம். அவர்களின் மோசமான, முக்கியமானவர்கை மட்டுமே சிறையில் அடைத்தும் , புனர்வாழ்வு முகாமுக்கும் அனுப்பி வைத்துள்ளார்கள். இது வரைக்கும் ஏறக்குறைய 40 ,௦௦௦ இட்கும் மேட்படுத்தவர்கள் கைது செய்யப்பட்ட்தாகவும் அநேகமானோர் நீதி மன்றில் நிறுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட்தாகவும் கூறினார். ஏறக்குறைய 5000 பேர் மட்டில் சிறையிலும் புனர்வாழ்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் கூறினார்.- உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
அப்படி என்றால் நன்றாக உலகம் சுற்றுகிறீர்கள் போல தெரியுது. - “யுக்திய” செயற்பாட்டை யாராலும் நிறுத்த முடியாது : அமைச்சர் டிரான் அலஸ்!
Important Information
By using this site, you agree to our Terms of Use.