Everything posted by Cruso
-
அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலை அதிகரிப்பு !
இப்படியாக வரி விதிக்கும்போது நிச்சயமாக பொருட்களின் விலை அதிகரிக்கும். அரசாங்கம் கொஞ்சமாவது மக்களை பற்றி சிந்திப்பதாக தெரியவில்லை. ஒரே நாளில் மக்களை கொள்ளையடிப்பது ஏற்றுக்கொள்ள கூடியதல்ல. வளமை போல படிப்படியாக கொள்ளையடித்தல் பரவாயில்லை. IMF உம இதட்கு துணை போகின்றது. கொள்ளையடித்த பணங்களை கொண்டுவருவதட்கான நிபந்தனைகளை விதித்திருக்க வேண்டும். நிச்சயமாக இந்த அரசு தேர்தலுடன் அகற்றப்படும். அது சரியானதா பிழையானதோ என்று கூற முடியாது.
-
மின் கட்டணம் செலுத்தாத 10 இலட்சம் பாவனையாளர்களின் மின் விநியோகம் துண்டிப்பு - காஞ்சன
இப்போதைக்கு மின்சார கடடனத்துக்கு வரி இல்லை என்றுதான் கூறப்பட்டிருக்கிறது. வருங்காலத்தை பற்றி கூற முடியாது. மின் கடடன அதிகரிப்பு என்றால் உடனடியாக செய்வார்கள். ஆனால் அதில் குறைப்பு செய்வதென்றால்தான் நிறைய படி முறைகள் இருக்கும். அதைத்தான் அமைச்சர் இங்கு கூறுகின்றார்.
-
வறுமை நிலைக்குள்ளாகியுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை தாண்டியுள்ளது
ஆனாலும் ஏழைகளுக்கு வழங்கப்படும் சமூர்த்தி போன்ற கொடுப்பானுவுகளை பெறுபவர்களை பார்த்தல் வறுமையில் வாடுபவர்களை போல தெரியவில்லை. இருந்தாலும் இலங்கையில் பொருட்களின் விலையேற்றம் , மற்றும் வரிகள் போன்றவற்றால் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்பது உண்மை.
-
செங்கடலிற்கு ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக கப்பலை அனுப்புவதா ? ஆராய்கின்றது இலங்கை கடற்படை
அது நிலைமையை பொறுத்தது. காலத்துக்கு காலம் அது மாற்றம் பெரும். ஹூத்தி அமைப்பு ஒரு பயங்கரவாத அமைப்பு என்பதால்தான் இலங்கை அதட்கு எதிராக நடவடிக்கை எடுப்பதாகவும், இன்னும் இலங்கையில் மேலும் விலையேற்றம் உருவாக்கி மக்கள் பாதிக்கப்படாமல் இருப்பதட்காகவும் இந்த நடவடிக்கையில் இறங்கி இருப்பதாக அமைச்சர் கூறுகிறார். மக்கள் நலனில் அரசு கவனம் செலுத்துவதை தவறென்று கூற முடியாதுதானே.
-
பருத்தித்துறை பொலிஸாரால் ஒரு தொகுதி கஞ்சா மீட்பு!
அதில் உண்மை இல்லாமல் இல்லை. சில அரசியல்வாதிகளும் அதில் சிக்கலாம். அது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும், வெளி நாடுகளில் உள்ள பாதாள குழுக்கள், போதை பொருள் வியாபாரிகள் சம்பந்தமாகவும் நடவடிக்கை எடுத்திருப்பதாகவும் அமைச்சர் கூறியுள்ளார். இருந்தபோதிலும் இங்கு நிறைய விலையுயர்ந்த வாகனங்கள், கட்டிடங்கள், நிறைய பணங்கள் அரசுடைமையாக்க பட்டிருக்கிறது.
-
தென்னிலங்கையை சேர்ந்தவர்களுக்கான முதலீட்டு தளமாக மாற்றப்படுகிறதா பூநகரி அபிவிருத்தி திட்டம் - செல்வராஜா கஜேந்திரன்
நீங்கள் வருகிறீர்கள் பேசுகிறீர்கள் போகின்ரீர்கள். ஏதாவது பயன் உண்டா என்றால் பூச்சியம்தான். உங்களை மக்கள் தெரிவு செய்து அனுப்புவது இதற்கல்ல. அவர்களின் பிரச்சினைகளை தீர்பதட்கே. நீங்களே போய் அவர்களிடம் உங்கள் பிரச்சினைகளை சொன்னால் எப்படி? அப்படி என்றால் நீங்கள் கூறுகின்ற ஈபிடிபி இனரை மக்கள் தெரிவு செய்து தங்கள் பிரச்சினைகளை தீர்க்கும்படி கூறுகிண்றீர்களா?
-
கிழக்கு ஆளுநரின் ஏற்பாட்டில் கிண்ணியாவில் படகோட்ட போட்டி!
ஆளுநர் செந்தில் தொண்டமான் இம்முறை பொங்கல் திருநாளை எவருமே எதிர்பாராத விதமாக செய்து கொண்டிருக்கிறார். நேற்றுகூட கோலம் போட்டு, பாற்சோறு பொங்கி, கலை நிகழ்ச்சிகள் என்று மிக பிரமாதமாக செய்து காட்டினார்கள். இவ்வளவு காலமும் இனவாதத்தினால் எல்லாமே தடைப்பட்டிருந்தது. முன்னாள் ஆளுநர்களுக்கு இது உண்மையாகாவே எரிச்சலை உருவாக்கி இருக்கும். வாழ்த்துக்கள் தொண்டமான் அவர்களே.
-
பருத்தித்துறை பொலிஸாரால் ஒரு தொகுதி கஞ்சா மீட்பு!
இலங்கை முழுவதும் இந்த வேடடை தொடர்கின்றது. உண்மையாகவே இது மக்களால் வரவேற்கப்படுகின்ற ஒரு விடயம்தான். இளைய தலைமுறையை காப்பாற்ற செய்யும் ஒரு நல்ல முயட்சி. இருந்தாலும் சில அரசியல் செயட்பாடுகளும் குளறுபடிகளும் நடக்கத்தான் செய்கின்றது. நான் இருக்கும் தெஹிவல பகுதியில் மரின் டிரைவ் இல் உள்ள ஒரு பீச் ரெஸோர்ட்யயும் அடித்து நொறுக்கிவிடடார்கள். வியாபார போட்டி காரணமாக இதனை பயன்படுத்தி உள்ளார்கள். இன்னும் வேறு சில அசம்பாவிதங்களும் நடந்துள்ளன. மற்றப்படி இது ஒரு நல்ல முயட்சி.
-
ஊழல்வாதிகளைப் பாதுகாக்கும் வரியாக பெறுமதிசேர் வரி - எதிர்க்கட்சி தலைவர்
IMF ஏனோ இந்த விடயத்தில் பாரா முகமாக இருக்கின்றது. இங்கு நடந்த ஊழல்கள், கொள்ளையடிப்புகள் , வெளிநாட்டு வங்கிகளில் வைப்புக்கள் எல்லாமே அவர்களுக்கு நன்றாக தெரியும். இருந்தாலும் இவற்றில் கவனம் செலுத்தாமல் மக்களை சுரண்டுவதட்கு கடன் கொடுக்கிறார்கள். இவர்களையும் இலங்கை அரசு மடக்கி விடடார்கள் போலத்தான் தெரிகின்றது.
-
ஜனாதிபதியின் யாழ். விஜயத்தில் எந்த பயனுமில்லை என்கிறது ஜேவிபி!
இவர்கள் வந்தால் நாட்டிடை அபிவிருத்தி செய்வார்கள் என்றும் கூற முடியாது. இவர்களும் 13 ஆவது திருத்தத்தை எதிர்ப்பவர்களே. எனவே தமிழர்களுக்கு எப்படியான தீர்வு என்று அதட்கு மேல் நினைப்பதட்கு ஒன்றுமில்லை. இவர்கள் ஒரு வாகனம் நிறைய ஒவ்வொரு அரசியல் வாதிகளின் ஊழல் கோப்புகள் என்று நாடு முழுவதும் கொண்டு சென்றார்கள். ஆனால் ஒரு அரசியல் வாதியையாவது சடடதுக்கு முன் நிறுத்த முடியவில்லை. எனவே இவர்களது வெற்று கோசம் எப்படி முடியுமென்று சொல்ல முடியாது. இருந்தாலும் இப்போது சிங்கள மக்களின் ஆதரவு அதிகரித்துள்ளது போன்ற ஒரு தோற்றப்பாடு உள்ளது.
-
உண்மையான நல்லிணக்கம் என்றால் எமது உறவுகளை விடுதலை செய்யுங்கள் : மகஜரைக் கையளித்த குரலற்றவர்களின் குரல் அமைப்பு ஜனாதிபதியிடம் கோரிக்கை
இது நியாயமான கோரிக்கை என்றாலும் இதனுடன் அரசியலும் சம்பந்தப்பட்டுள்ளது. எப்படி இருந்தாலும் சடடபடி தண்டிக்கப்படடவர்களின் விடுதலையை தவிர மற்ற யாவரையும் விடுதலை செய்வதில் எவருக்குமே பிரச்சினை இருக்க முடியாது. எனவே ஒரு நல்ல முடிவை எதிர்பார்க்கலாம்.
-
பொருளாதார நெருக்கடி! மக்களின் வருமானத்தில் பெரும் வீழ்ச்சி !
வருமானத்தில் வீழ்ச்சி என்று சொல்ல முடியாது. சில ஏற்ற தாழ்வுகள் இருக்கலாம். ஆனால் , அளவுக்கதிகமான வரிகள், உட்பத்தியின்மை என்பவைகளே மக்களின் பொருளாதார நெருக்கடிக்கு முக்கிய காரணம். சோமாலிய போன்ற ஒரு நாட்டில் மேற்கத்திய நாடுகளின் வரி விதிப்பு கொள்கையை நடைமுறை படுத்தினால் எப்படி இருக்கும்? அதே நிலைமைதான் இங்கும்.
-
அரச இயந்திரம் மீதான எதிர்ப்பை ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பின் மூலமே காண்பிக்கலாம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
செய்விக்கலாம். ஆனால் அதட்கு முன்னர் தமிழ் காட்சிகள் எல்லாம் ஒற்றுமைப்பட வேண்டும். இல்லாவிட்ட்தால் பகிஷ்கரிப்பு, தமிழர் தரப்பு தனியாக கேட்பது என்பதெல்லாம் வெற்று கோஷம்தான். ஒன்று பாடடால் உண்டு வாழ்வு இல்லாவிட்ட்தால் எல்லோருக்குமே தாழ்வு.
-
என்னை கொல்ல வந்தவரை மன்னித்து விட்டேன் - டக்ளஸ் தேவானாந்தா
ஒருவர் செய்த தவறுக்கு பாதிக்கப்படடவர் மன்னிப்பு வழங்கினால் சடடம் என்ன செய்யும்? மன்னிப்பு வளங்களினாலும் சடடப்படி தண்டிக்கப்படுவாரா? இவருக்கு சடடபடி தீர்ப்பு வழங்கினாலும் சடடமா அதிபர் திணைக்களம் இதில் மிகவும் கரிசனை காட்டிட காரணம் என்னவோ? தமிழ் பெண்மணி என்பதால் அப்படி இருக்கலாம்.
-
அரச இயந்திரம் மீதான எதிர்ப்பை ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பின் மூலமே காண்பிக்கலாம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் அவர் அந்த பகிஷ்கரிப்புக்கு சொல்லும் காரணம்தான் வேடிக்கையாக இருக்கிறது.
-
இம்முறையாவது வாக்குறுதிகளை நிறைவேற்றுங்கள்.
அடுத்த முறை அவர் வரும்போதும் இதைத்தான் கூற போகிண்றீர்கள்.
-
யாழ் சூழலை மாசுபடுத்திய ஜனாதிபதியின் பாதுகாப்பு வாகனம்!
இந்த டிபெண்டெர் வாகனம் பிரித்தானிய தயாரிப்பாக இருக்க வேண்டும். எப்படியோ இலவசமாக கிடைத்தால் இலங்கை எல்லாவற்றையும் எடுத்து கொள்ளும்.
-
வற் வரி அதிகரிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டம்
வட் வரி தவிர்க்க முடியாதுதான். ஆனால் அரசு ஒரேயடியாக எல்லாவற்றையும் செய்ய நினைப்பதுதான் மக்களின் ஆத்திரத்துக்கு முக்கிய காரணம். இம்முறை தேர்தலில் அதன் வெளிபாடடை காணலாம். இனிமேல் எல்லோருமே TIN இலக்கம் எடுத்தே ஆக வேண்டிய நிலைமை. இல்லாவிட்ட்தால் எந்த ஒரு அரச செயட்பாடடையும் செய்யமுடியாது. உதாரணத்துக்கு வாகன லைசென்ஸை புதுப்பிக்க முடியாது. எனவே இனி ஒவ்வொருவரும் பதிவு செய்து வரி காட்டியே ஆக வேண்டும். வரி ஏய்ப்பாளர்கள் இனி தப்புவது கஷடம்தான்.
-
செங்கடலிற்கு ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக கப்பலை அனுப்புவதா ? ஆராய்கின்றது இலங்கை கடற்படை
எதட்கு ஆராட்சி எல்லாம். இலங்கையில் இல்லாத போர் கப்பல்களா, ஆட்பலமா. சும்மா அனுப்பி விடுங்கள்.
-
கொள்ளுப்பிட்டியில் பொலிஸார் அடாவடித்தனமான சோதனை ; பொருட்களை வீசி எறிந்தனர் ; ஆடைகளை களைந்தனர் - சமூக ஊடகங்களில் கடும் எதிர்ப்பு
குரு எவ்வழியோ சீஷர்களும் அவ்வழியே.
-
ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியின் கல்லறை அருகே நடந்த குண்டுவெடிப்பில் 73 பேர் கொல்லப்பட்டனர்.
ஈரான்தான் உருவாக்கியது. எனக்கு அப்படி எல்லாம் பயம் இல்லை. இப்ப சந்தோசம்தான்? 😂
-
நாட்டின் முன்னேற்றத்திற்காக வட மாகாணத்திலிருந்து பெரும் பங்களிப்பை பெற்றுக்கொள்ள முடியும் - ஜனாதிபதி
அதாவது வெளி நாட்டு முதலீட்டுகளை எதிர்பார்க்கிறார். நீங்கள் முதலீடுகளை செய்தால் வடமாகாணம் மேல் மாகாணத்தை போல அபிவிருத்தி அடைந்து விடும், இலங்கைக்கும் டொலர்கள் வந்த மாதிரி இருக்கும் என்று சொல்லாமல் சொல்லுகிறார். அதாவது 13 ஆவது திருத்தும் இப்போதும் அமுலில் இருக்கிறது எனவே நீங்கள் வேறு எதுவும் கேட்க வேண்டாம். நீங்கள் உங்கள் பிரதேசத்தை அபிவிருத்தி செய்தால் எல்லா பிரச்சினையும் தீர்ந்து விடும். ஆனால் எல்லா நடைமுறைகளையும் பின்பற்றுவதட்கு கொழும்பு சென்று நாயாய் பேயாய் அலையை வேண்டுமென்று இந்த நாட்டின் தலைவருக்கு தெரியாமல் இருப்பது ஆச்சரியமாக இருக்குது. பாவம் ரணில். தேர்தல் நெருங்க நெருங்க என்னவோவெல்லாம் பேசுகிறார். இங்குள்ளவர்கள் எல்லோருமே ஜனாதிபதியை புகழ்வதை பார்க்கும்போது தமிழர் பிரச்சினை எல்லாமே தீர்ந்து விடடதை போல இருக்கின்றது. இனி என்ன தமிழர்களுக்கு கொண்டாட்டம்தான்.
-
இலங்கைக்கு 20 ரயில் எஞ்ஜின்களை இலவசமாக வழங்கும் இந்தியா!
இந்தியாவில் இப்போது எல்லாமே மின்சார ரயிலாக மாறி விட்ட்து. எனவே இந்த பக்கம் இலவசமாக கொடுப்பதாக கூறி தள்ளி விட்டுது. இனி என்ன நம்மட ஆட்கள் இடைவெளியில் நிண்டு ரயிலை தள்ள வேண்டியதுதான். இலவசம் எண்டால் இலங்கை எதையும் எடுக்கும் எண்டு அவர்களுக்கு நாளாகவே தெரியும். இந்தியாவில் கழிவுகளையும் சுத்தப்படுத்தின மாதிரிஇருக்கும் , இலங்கையை சந்தோசப்படுத்தின மாதிரியும் இருக்கும்.
-
ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியின் கல்லறை அருகே நடந்த குண்டுவெடிப்பில் 73 பேர் கொல்லப்பட்டனர்.
ஹமாஸ், ஹிஸ்புல்லா, தலிபான், ஹூத்தி பயங்கரவாதிகளை உருவாக்கியவர்கள்தான் இவர்களையும் உருவாக்கி இருக்க வேண்டும். 😜
-
செங்கடல் பகுதியில் கப்பலை கைப்பற்ற முயன்ற ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்
இலங்கைஅரசும் போர்க்கப்பலை செங்கடல் பகுதிக்கு பாதுகாப்பு காரணங்களுக்காக அனுப்பி வைத்துள்ளது. அநேகமாக ஹுதிகளுக்கு இது பிரச்சினையை உருவாக்கலாம்.