Everything posted by Cruso
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
இன்று ஆயுதம் தூக்கிய பயங்கரவாதிகள் யார் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். அந்த ஆறு நாள் யுத்தத்தில் நடந்ததை நீங்கள் அறிந்திருக்க வேண்டும். அப்போது இஸ்ரேலை சுற்றியுள்ள நாடுகள் இஸ்ரேலை முழுமையாக இல்லாதொழிப்பதட்காக அங்குள்ள பலஸ்தீன அல்லது இஸ்லாமிய மக்களை வெளியேறும்படி அறிக்கை விட்ட்து. அவர்களும் அவர்களை நம்பி லட்ச்ச கணக்கில் வெளியேறினார்கள். அவர்களும் இஸ்ரேல் இனி இல்லை நாம்தான் முழு இஸ்ரேலுக்கும் சொந்தம் என அவர்களை நம்பி வெளியேறினார்கள். இஸ்ரயேல் அவர்களை வெளியேறாதிருக்கும்படி வருந்தி கேட்டு கொண்டது. அவர்கள் அதனை ஏற்றுக்கொள்ளவில்லை. இஸ்ரேல் அழிக்கப்பட வேண்டுமென்பதில் உறுதியாக இருந்தார்கள். என்ன நடந்தது என்பது சரித்திரம். அப்படி வெளியேறினவர்கள்தான் இன்று எல்லா நாடுகளிலும் இன்றும் அகதி முகாம்களில் வாழ்கிறார்கள். அவர்களை இஸ்ரேல் மீண்டும் உள்ளே நுழைய அனுமதிக்கவில்லை. அவர்கள்தான் இன்று பயங்கரவாதிகளாக மாறி இருக்கிறார்கள். எனவே பலஸ்தீனியர்களை இன்று அகதிகளாக , பயங்கரவாதிங்களாக ஆயுதம் தூக்க வைத்தவர்கள் அரபு நாடுகளே. இஸ்ரேல் இல்லை.
-
ஏவுகணைத் தாக்குதல்; ஈரானை எச்சரிக்கும் பாகிஸ்தான்!
அப்படி எல்லாம் பாகிஸ்தான் ஈரானை தாக்காது. பாகிஸ்தானின் அரசியல் நிலைமை அதட்கு இடம் கொடுக்காது. எல்லா பக்கமும் பிரச்சினை. இந்தியாவை சமாளிக்க வேண்டும். ஆபிகானிஸ்தானை சமாளிக்கவேண்டும். ஏறக்குறைய ஒரு லட்ச்சம் அபிகானிஸ்தானியர்களை வெளியேற்றி கொண்டிருக்கிறது. பலுசிஸ்தான் போராளிகள்தாக்குதல் நடத்துகிறார்கள். ஷீஆ சுன்னி என குண்டு வெடிப்புக்கள். எனவே இந்த எச்சரிப்புடன் அது முடிவுக்கு வந்து விடும். அமெரிக்காவிடம் இனி அவர்கள் போக மாடடார்கள். இப்போது பாகிஸ்தான் சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ளது.
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
இனி என்ன, அடுத்த செய்தி அவர்கள் விடுதலை செய்யப்பட்டுள்ளார்கள் என்பதுதான். இவர்கள் மீன் பிடித்து விட்டு போனால் பரவாயில்லை. கடலில் உள்ள மீன் உட்பத்தியாகும் அடித்தட்டுகளையெல்லாம் பெயர்த்து எறிகிறார்கள். இதனால் மீன் உட்பத்தி பாதிக்கப்படுகின்றது. இது அந்த இந்திய மர மண்டைகளுக்கு எடுத்து சொன்னாலும் பண ஆசையினால் ஒன்றயும் கேட்பதில்லை. கஞ்சா அடைக்கலத்துக்கு இந்தியாவில் சொத்துக்கள் இருப்பதால் இது பற்றி ஒன்றும் பேசுவதுமில்லை.
- ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை அமர்வு தொடர்பான செய்திகள்
-
14 அரசியல் கைதிகளே சிறையில் உள்ளனர் : அவர்களுக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு இடம்பெறுகிறது - நீதி அமைச்சர்
இன்னும் 14 அரசியல் கைதிகள்? முன்னர் அரசியல் கைதிகள் இல்லை எல்லோரும் பயங்கரவாதிகள் என்று சொன்ன மாதிரி இருந்தது. தேர்தல் வருகிற படியால் அடக்கி வாசிக்கிறார்கள். எப்படியோ காணாமல் போனவர்கள் வெளி நாட்டிட்கு சென்று விடடார்கள் என்று கூறவில்லை. அந்த பக்கம் போய் மாற்றி சொல்லுவாரோ தெரியாது.
-
துமிந்த சில்வாவின் மன்னிப்பு சட்டவிரோதமானது – உச்ச நீதிமன்றம் தீர்ப்பு
இவர் முறைப்படி மன்னிப்பு வழங்கவில்லை என்றுதான் நீதி மன்றம் கூறி இருக்கிறது. இதைக்கூட சரியாக செய்ய தெரியாத இவர் எல்லாம் ஒரு ஜனாதிபதி. ஒரு கொலை காரனை நாட்டின் நலனை கருத்தில் கொண்டு விடுதலை செய்தாராம். சாது சாது சாது.
-
உச்சம் தொட்ட மரக்கறி விலைகள்!
இதில் அநேகமானவை உள்ளூர் மரக்கறிதான். முன்னர் பாதைகளில் வைத்து விட்ப்பார்கள். இப்போது பாதைகளும் வெறிச்சோடி கிடக்குது.
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
இதட்குரிய பதிலை இஸ்ரேலுக்குள் புகுந்து பெண்களை கட்பளித்து, குழந்தைகளை வெட்டிக்கொலை செய்து, பொதுமக்களை கொலை செய்து, பெண்கள் குழந்தைகளை கடத்தியவர்களிடம்தான் கேட்க வேண்டும். வேண்டுமென்றால் நிலக்கீழ் சுரங்கங்கள் அமைக்க உதவி செய்த , பயங்கரவாதிகளுக்கு ஆயுதங்கள் கொண்டுவர உதவி செய்த ஐக்கிய நாடுகள் சபையிடமும் கேட்கலாம். எங்கள் கருத்துக்கள் எல்லாம் உங்களுக்கெல்லாம் புரியாது. அதட்கான காரணம் உங்களுக்கு தெரியாதா என்ன?
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
ஈரானை எதுக்கு தொடணும்? எவன் சொறிய வருகிறானோ அவனுக்குத்தான் சொரிந்து விட வேண்டும்.
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
ஹமாஸுக்கு தனி கொடுத்துதானே இவ்வளவு பிரச்சினைகளும். பயங்கரவாதிகளை அவர்களின் இடத்தில வைக்க வேண்டும். இல்லாவிட்ட்தால் எங்கும் பயங்கரவாதம்தான்.
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
ஹூத்தி என்பது பயங்கரவாத இயக்கம். அதட்கு எந்த கட்டுப்பாடுகளும் கிடையாது. எனவே எல்லா பயங்கரவாத தாக்குதல்களையும் நடத்துவார்கள். அதேபோல அதட்குமேலான பலாபலன்களையும் பெற்று கொள்ளுவார்கள். அயன் டோமை தாக்கியவர்களுக்கு இப்போது என்ன நடந்துள்ளது? அயன் டோம் இல்லாதிருந்திருந்தால் அதேயளவு மக்கள் இந்த பக்கமும் கொல்லப்பட்டிருப்பார்கள். அது ஒரு தட்காப்பு பொறிமுறையே தவிர எதிரிகளை தாக்குவதட்கு அல்ல. பயங்கரவாதிகள் ஐக்கிய நாடுகளின் உதவியுடன் நிலத்தின் கீழ் பாதுகாப்பு அரண்களை தங்கள் பாதுகாப்புக்காக அமைத்திருந்தார்களே அதுபோல. திருப்பி அடித்தவுடன் ஐயோ அடிக்கிறேன் ஓடி வாருங்கள் என்று அலறுவது அழகல்ல. அவர்கள் (இரான்) அணுகுண்டை தனது நாட்டின் பாதுகாப்பிட்கு தயாரித்துக்கொண்டிருக்கிறது என்பதை நம்பி விடடோம். அமெரிக்கா இல்லை, உலக நாடுகளே தோற்றுக்கொண்ட போதுதான் அணுகுண்டு வீசப்பட்ட்து.
-
ஈராக்கில் இஸ்ரேலின் புலனாய்வு பிரிவை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்
அப்படி சொல்ல முடியாது. ஈரானை போன்ற ஒரு நாடுதான் வட கொரியா. அவர்களிடம் அணு ஆய்தம் இருக்கின்றது. அதட்காக அமெரிக்கா அடங்கி போய் விட வில்லை. நாடுகளிடம் அணு ஆயுதம் இருந்தாலும் அப்படி இலகுவாக பாவித்து விட மாடடார்கள். அரை பயித்திய தலைவர்கள் கூட இலகுவாக அதனை பாவிக்க மாடடார்கள். இரான் அணு ஆய்தத்தை பெறுவதட்கு அதனை சுற்றியுள்ள அரபு நாடுகளே எதிர்க்கின்றன. இல்லாவிட்டால் சீனாவோ, ருசியாவோ கூட வழங்கி இருக்கும். அமெரிக்கா இத்தேட்கெல்லாம் பயந்தால் உலக போலீஸ் காரன் என்ற தரத்தை இழந்து விடும்.
-
ஸ்ரீலங்கா டெலிகொமில் முதலீடு செய்வது குறித்து முகேஸ் அம்பானி ஆர்வம் - இந்திய ஊடகம்
இந்தியர்களுக்கு கொடுக்க கூடாது என்பதுதான் இங்குள்ள சீனாவாதிகளின் போராட்டமே. அப்படி அதையும் மீறி கொடுக்கிறார்களா என்று பார்ப்பம்.
-
பிக்குகள் மாத்திரம் காவி உடையணியும் சட்டம் வேண்டும்: ஒரு சில தேரர்களுக்கு வெளிநாடுகளிலிருந்து கோடிக்கணக்கில் நிதி கிடைக்கிறது! - உதய கம்மன்பில
அந்த காவி வேற இந்த காவி வேற.
-
கொழும்பில் உள்ள 500 கட்டடங்களை அகற்ற தீர்மானம்
அதாவது எந்த கட்டிடங்களும் அகற்றப்படாது என்று சொல்ல வருகிறீர்கள். நிச்சயமாக.
-
ஸ்ரீலங்கா டெலிகொமில் முதலீடு செய்வது குறித்து முகேஸ் அம்பானி ஆர்வம் - இந்திய ஊடகம்
இப்போது மூன்று நிறுவனங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது. அம்பானி, லைக்கா, இன்னுமொரு சீன நிறுவனம். இப்போதே SLT தொழிலாளர்கள் போர்க்கொடி தூக்கி இருக்கிறார்கள். பொறுத்திருந்து பார்ப்பம்.
-
யாழ்ப்பாணத்திற்கு நீதி அமைச்சர் விஜயதாச விஜயம்
நமது மத தலைவர்கள் எழுந்து நிட்கும் வரைக்கும் அவர்களை அவர்களை எழுந்து நிற்க வைக்க முடியாது. எப்போது எமது மத தலைவர்கள் உடகார்க்கிறார்களோ அப்பபோதுதான் அவர்கள் எழுந்து நிட்ப்பார்கள். நல்லஇணக்கம் என்றெல்லாம் ஒன்றுமில்லை.
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
நான் உங்கள் கருத்துக்கள் சிலவற்றுடன் உடன்படுகின்றேன். இனவாதம், மதவாதம் மட்டுமல்ல பிரதேச வாதமும் இருந்தது என்பது என் கருத்து. புலிகள் காலத்திலும் அது இருந்தது என்பது உண்மை. நீங்கள் விரும்பினால் நான் இதனை பெயர்களுடன் ஆதார பூர்வமாக எழுதுவேன். உண்மையாக நடந்தவற்றை எழுதலாம். நான் இங்கு கிறிஸ்தவர்களை பற்றி மத தலைவர்களாக இருக்கலாம், அரசியல் தலைவர்களாக இருக்கலாம் விமர்சிக்காமல் இருந்ததில்லை. ஆனால் இந்து என்றவுடன் கொதித்தெழுகிறார்கள் பாருங்கள். அதுதான் மத வாதம். அதட்காக ஒரு இந்து தமிழ் (?) தலைமைதான் வேண்டுமென்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதில்லை. அதுதான் தலைமை போட்டியில் நடக்கின்றது.
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
நான் எழுதுவது தலைமைத்துவத்தின் மதவாதத்தை பற்றியது. மற்றவர்கள் மேல்பூச்சாய் பூசி அப்படி இல்லை என்று எழுதலாம். உண்மையில் அப்படி இல்லை. இங்கு நான் சுமந்திரன் மக்களாலதெரிவு செய்யப்பட்ட்து பற்றியோ அவரது தலைமைத்துவ போட்டி பற்றியோ அல்ல. தலைமைத்துவம் எப்படி போகின்றது என்பது பற்றியதே. அப்படி என்றால் அடுத்த தலைமைத்துவத்துக்கு ஒருவரை கட்ச் வளர்ந்திருக்க வேண்டும். சம்பந்தன் அவர்கள் சுமந்திரனைத்தான் உள்நாட்டிலோ வெளி நாட்டிலோ அடையாள படுத்தி இருந்தார். அப்படி திடீரென மாற்றுவதட்கு அங்குள்ளவர்கள் மதவாதத்தை பயன்படுத்தியதை பத்திரிகைகளிலும் பார்த்தேன். எனவே தலைமை பிழையானால் எல்லாமே பிழையாகத்தான் இருக்க போகின்றது. சுமந்திரனை நல்லவர் என்று சொல்ல வர வில்லை. அவரும் சாதாரண அரசியல்வாதியை போலத்தான் நடந்து கொள்கிறார். எப்படி இருந்தாலும் நாங்கள் எங்கள் உரிமை விடயத்தில் கவனமாக இருக்கிறோம். இந்தியாவில் என்ன நடக்குதென்று எல்லோருக்கும் தெரியும்தானே.
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
இது மத வாதம் இல்லை. தலைமுத்துவ போட்டியில் நடக்கும் உண்மையை சொல்லுகிறேன். நான் இங்கு மதவாதமாக எழுதவில்லை. எமது குருமார் போப்பணடவர், கர்தினால், பிஷப் எல்லோருஞ்யும்விமர்சித்து எழுதி இருக்கிறேன். யார் பிழை செய்தாலும் பிழைதான். அவர்கள் மற்ற மதத்தவரை மதிக்காவிடடாள் அதுவும் பிழை என்று தெளிவாக எழுதி இருக்கிறேன். கபித்தான் உடனானன கருத்தாடலில் விரிவாக எழுதியம் இருக்கிறேன்.
-
ஒரு இலட்சம் கோடி ரூபா நிலுவை வரியை அறவிட நடவடிக்கை எடுக்கவில்லை - சம்பிக்க குற்றச்சாட்டு
அரசியல்வாதிகளுக்கு அரசியல் செய்ய பணம் கொடுப்பவர்கள் அவர்கள். அவர்களிடம் எப்படி வரிப்பணம் எடுக்க முடியும்? பொது மக்கள் இருக்கும் வரைக்கும், கொடுக்கும் வரைக்கும் அவர்கள் அந்த வரிப்பணத்தை வசூலிக்க மாடடார்கள். சம்பிக்கவுக்கும் இது நன்றாக தெரியும். அவரும் அரசியல் செய்கிறார்.
-
தமது வீதியை புனரமைத்து தருமாறு வடமாகாண ஆளுநருக்கு 96 ஆயிரம் ரூபாய் பணம் அனுப்பியுள்ள மக்கள்
ஆளுநர் வசதியாகத்தானே இருக்கிறார்? அவருக்கு ஏன் பணம் அனுப்புகிறார்கள்.
-
யாழ்ப்பாணத்திற்கு நீதி அமைச்சர் விஜயதாச விஜயம்
வடக்கில் ஒரு பேச்சு தேடகில் ஒரு பேச்சு. குடிகாரன் பேச்சு விடிந்தால் போச்சு. இன்னுமாடா இவர்களை அங்குள்ள மக்கள் நம்புகிறார்கள்?
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
IMF ஒரு பக்கம் கிடக்கிறான். அது சரி நீங்கள் எவ்வளவு கடன் கொடுத்தீர்கள்?🤣 மேலே எனது கருத்துக்களுக்கு சும்மா down vote பண்ணிவிட்டு ஓடாமல் கருத்து எழுதுங்கள். நிறைய பேர் அப்படிபோடுகிறார்கள் அனால் ஏன் என்று எழுதுவதில்லை. உண்மை சுடத்தான் செய்யும். ? 😜
-
போகி பண்டிகையால் நிலைகுலைந்த சென்னை: காற்று மாசுபாடு ஏற்படுத்திய பாதிப்புகள்
இந்த மாசுபாடு யாழ்ப்பாணம், மன்னாரையும் தாக்கி இருக்கிறது. மன்னாரில் பெரிதாக பொங்கல் விழா வெடி கொளுத்தி கொண்டாடப்பட விடடாலும் மாசுபாடு நிலைமை அதிகரித்திருக்கிறது.