Everything posted by Cruso
-
நிகழ்நிலைக் காப்புச்சட்டம் திரும்பப்பெறல் வேண்டும்! சர்வதேச மன்னிப்புச்சபை வலியுறுத்து
என்ன இருந்தாலும் இலங்கை எப்போதுமே சர்வதேச சட்ட்ங்களை மதித்து இல்லை. சர்வதேச அமைப்புக்கள் சில நாளைக்கு சத்தம் போடுவார்கள், பின்னர் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள் என்று அவர்களை பற்றி நன்றாகவே அறிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களும் தங்கள் இருப்புக்காக அறிக்கைகளை விட்டுக்கொண்டு இருப்பார்கள்.
-
விபத்தில் சிக்கிய ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிந்தார் ..
எனக்கு தெரிந்த வரைக்கும் இந்தப்பாதைகளில் மோர்ட்டார் சைக்கிள் , முச்சக்கர வண்டிகள்செல்ல முடியாது. அப்படி என்றால் இவர்கள் அதிவேக நெடுஞ்சாலைக்கு வர முன்னரும் மிக வேகமாகத்தான் வந்திருக்கிறார்கள்.
-
விபத்தில் சிக்கிய ராஜாங்க அமைச்சர் சனத் நிஷாந்த உயிரிந்தார் ..
ஒருவரின் மரணத்தின் பின்னர் குறையாக எழுதுவது சரியில்லைதான். ஆனாலும் சிங்களவர்கள் எழுதுவதை பார்க்கும்போது எவ்வளவு சந்தோச படுகிறார்கள் என்பதை காணலாம். ராஜபக்சேவின் வலது கரமாக திகழ்ந்தவர். நிறைய வழக்குகளும் உண்டு.
-
வடக்கில் மீன்பிடித்துறைசார் முதலீட்டு வலயம் தொடர்பில் சீனாவுடன் பேச்சுவார்த்தை - இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த தகவல்
இராவணன் பாலம் எண்டு எழுதினத்தை இந்திக்காரன் கண்டால் அடிக்க வரப்போகின்றான். சீனா காரன் அந்த வெட்டுபோடதான் வருகின்றான். அது என்ன ராமர் பலம். இப்படி பல நாடுகளில் இந்த அமைப்பு காணப்படுகின்றதாம். ஒரு தடவை நான் திருகோணமலை சென்றபோது திருக்கோணேஸ்வரர் கோவிலுக்குச்சென்றிருந்தேன். அப்பத்து அங்கு சில வெள்ளைக்காரர்களும் வந்திருந்தார்கள். அப்போது அவர்களுக்கு ஒருவர் அந்த கோவில் மலைகள் பற்றியும் கல்வர்ட்டுகள் பற்றியும் கூறி விட்டு ஒரு இடத்தை காண்பித்து இது ராவணன் வெட்டு (Cut ) என்று கூறினார். அவர் சிரித்து விட்டு நக்கலாக தங்கள் ஊரில் இப்படி நிறைய வெட்டுக்கள் இருப்பதாக கூறினார். அந்த ஆளுக்கு வெள்ளைக்காரன் பின்னர் பணம் கொடுத்தானோ இல்லையோ தெரியாது.
-
கண்டியில் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தை நிறுவ நடவடிக்கை
முடடையை பற்றி எழுதி இருந்தீர்கள். மீண்டும் ஒரு முறை எழுதாதீர்கள். எனக்கு பொல்லாத கோபம் வரும். அந்த சடடம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளுது. ஆனாலும் எவருக்குமே சரியாக தெரியாது. சுமந்திரன் மட்டும் சடடபடி அது உச்சநீதி மன்றத்தின் திருத்தங்களுடன் நிறைவேற்றப்படவில்லை என்று பேசினார். எப்படி இருந்தாலும் சபாநாயகர் இன்னும் அதில் கையெழுத்து போடவில்லை. அப்படி போடடாள் அது சடடமாகும். இருந்தாலும் உச்ச நீதி மன்றம் கூறிய திருத்தங்கள் உள்ளடக்கப்பட விடடாள் அது மீண்டும் பிரச்சினையை உருவாக்கும். அதாவது உச்ச நீதி மன்றம் இப்படி கூறி இருக்கிறது பாராளுமன்ற சடடம் அப்படி இருக்கின்றது என்ற பிரச்சினை உருவாகும். நீங்கள் இனிமேல் எதுவாக இருந்தாலும் சரி பிழை பார்த்துதான் மாட்றவர்களுக்கு அனுப்ப வேண்டும். விசாரணை என்று வரும்போது நிரூபிக்க வேண்டும். மாட்றவர்கள் அனுப்பிய செய்திகளை உடனே Forward பண்ண முடியாது. விசாரித்து சரி பிழை பார்த்துதான் அனுப்ப வேண்டும். இப்படி நிறைய இருந்தாலும் இன்னும்சரியாக வெளிப்படுத்தவில்லை. இதில் நிறைய அரசியல் சூழ்ச்சிகளும் உண்டு. எப்படி இருந்தாலும் நீங்கள் பயமில்லாமல் எழுதுங்கள். அப்படி எல்லாம் தேடி பிடித்து கண்டு பிடிக்கும் அளவில் அவர்கள் இல்லை.
-
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
அப்படி இப்படி என்று சொல்லிக்கொண்டு அரசியல் செய்ய வருவது பணம் சுருட்டாதான். அதன் எல்லை பற்றி பேச வேண்டாம். மக்களின் பணம்தான் சுருட்டப்படுகின்றது. இவர்களை யாரும் பாராட்டுவதில்லை. அவர் எதனை கூறி அரசியல் செய்கிறார் என்பதைத்தான் எழுதி இருந்தேன். இலங்கையில் சுருட்டாத பணமா? வங்கிகளே பணக்காரர்களுக்கு பணம் கொடுத்து விட்டு பின்னர் bad loan என்று தள்ளி விடுவார்கள். போனவருடம்கூட மக்கள் வாங்கி அவ்வாறாக 54 பில்லியன் ரூபாவை தள்ளுபடி செய்தது. அதன் பெயர் விபரங்கள் இருந்தாலும் இங்கு பதிவிட விரும்பவில்லை. எல்லோருமே கொழுத்த பணக்காரர்கள். பகல் கொள்ளையே இப்படி நடக்கும்போது இரவு கொள்ளையை சொல்ல வேண்டியதில்லை.
-
சீனாவின் ஷியாங் யாங் ஹோங் 3 கப்பல் எவ்வித ஆய்வுகளையும் மேற்கொள்ளாது!
ஓம் ஓம் இப்படி எதையாவது சொல்லி சமாதான பட்டு கொள்ளுங்கள். அடுத்தது இலங்கைக்கும் வருவான் கெதியில் உங்களுக்கு இன்னுமொரு ஆப்பு வைக்க.
-
அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான குடியரசு கட்சி வேட்பாளர்; முன்னிலையில் டொனால்டு டிரம்ப்
இந்த முறை டொனால்ட் டிரம்ப் தான் ஜனாதிபதி. மாற்று கருத்துக்கு இடமில்லை. சீனாவுடன் அடுத்த மோதல் தொடங்கப்போகுது.
-
சீன ஆய்வுக் கப்பலுக்கு மாலைதீவு பச்சைக் கொடி!
அப்ப எதுக்கு அங்கு போய் நங்கூரமிடுவான். எப்படியோ இந்தியாவுக்கு இது சோதனையான காலம்தான்.
-
அரசாங்கம் திருடர்களை சரியாக பிடித்திருந்தால் வற் வரியை விதித்து மக்களை நசுக்க வேண்டிய தேவை ஏற்பட்டிருக்காது - எதிர்க்கட்சித் தலைவர்
நீங்கள்தானே அடுத்த தலைவர். நீங்கள் கூறியபடி எப்படியாவது அந்த திருடர்களை பிடித்து பணத்தை எல்லாம் மீட்பீர்கள் என்று எதிர்பார்க்கிறோம்.
-
கண்டியில் ஐஐடி மெட்ராஸ் வளாகத்தை நிறுவ நடவடிக்கை
அப்படி இல்லை என்றுதான் நினைக்கிறேன். அவர்கள் இலங்கை அரசின் சடட திட்ட்ங்களின் அடிப்படையில் அமைக்கும் பொது பிரச்சினை இருக்காது. அப்படியான நிறைய கல்லூரிகள் இலங்கையில் எட்கேனவே நிறைய இருக்கின்றன. அந்த கல்லூரிகளின் பாட திடடம் சர்வதேசத்தில் அங்கீகரிக்க படடதாக இருக்குமாகஇருந்தால் நாட்டுக்கு நல்லதுதானே. சிங்கப்பூர், மலேசியா போன்ற நாடுகளில் நிறைய கல்லூரிகள் அவ்வாறுதான் காணப்படுகின்றன. இதனால் அந்தந்த நாடுகள் அந்நிய செலாவணியை மிச்சப்படுத்துவதால் பொருளாதார ரீதியாக அபிவிருத்தியடைய சந்தர்ப்பமும் அதிகம்.
-
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
நான் அறிந்த வரைக்கும் கொர்பசோவின் காலத்துக்கு பின்னர் ருசியா கூட்ட்டமைப்பு உடைந்து கிழக்கு ஐரோப்பிய நாடுகள் பிரிந்த பின்னர் உள்ள நிலைமை அவரை பாதித்திருக்க வேண்டும். அமெரிவாவின் அலாஸ்கா பிராந்தியமும் கூட ரசியாவுடன் இருந்த பகுதிதான். புட்டின் தன்னை ஒரு ராணுவ தலைவராக, பலமுள்ள தலைவராக காண்பிக்க விரும்புகிறார். பலவீனமான தலைவர்கள் ரசியாவை ஆளுவது தமது நாட்டுக்கு ஆபத்தை வருவிக்கலாம் என்ற எண்ணமும் உண்டு. இப்போது சீனாவும்கூட ரசியாவின் சில பகுதிகளை உரிமை கோருகின்றது. இரண்டு நாடுகளும் நடபு நாடுகளாக இருந்த போதிலும் உள்ளுக்குள் புகைச்சல் இருக்கின்றது. எனவே புட்டின் உயிரோடு இருக்கும் வரைக்கும் ஆட்சியில் இருப்பதுதான் அவரது நோக்கம்.
-
தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சி.சிறீதரன்
இப்போது அங்கிருந்துதான் சவுண்ட் விடுகிறார்கள். அதட்காகத்தான் இப்போது இலங்கை இந்தியா இணைப்பு பாலம் பற்றி பேசப்படுகின்றது. என்னை பொறுத்த வரைக்கும் அது ஒரு நல்ல விடயம்தான். இங்கிருந்து கோவிலுக்கு செல்வத்தாட்கொ வியாபாரதிட்கு செல்வதட்கோ அது இலகுவாகவும் குறைந்த கடடனமாமாகவும் இருக்கும். நிச்சயமாக சீனாவோ, சிங்கள தீவிரவாதிகளா அதை அனுமதிக்கமாட்ட்டார்கள். ஆனால் தமிழர்கள் இப்படி இருக்க வேண்டும், இதுதான் முடிவு எண்டு இந்தியா தீர்மானிக்க முடியாது. இதில் நாங்கள் உறுதியாக இருக்க வேண்டும்.
-
தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சி.சிறீதரன்
சிறியர் இப்போது தலைவர்தான். அதை ஏற்று கொள்ளுகிறேன். இனிதான் தெரிய வரும் அவர் சம் சும்மா இல்லை சிறி சும்மா என்று. அப்படி ஒன்றும் தலைமை பதவிக்கு வந்தவுடன் ஒன்றும்நடக்கப்போவதில்லை. சும்முக்கு அரசியல் தந்திரம் தெரியவில்லை, அதை சிறியர் இந்தியாவின் உதவியுடன் பயன்படுத்தி கொண்டார். இனி என்ன இந்தியாவின் உத்தரவின்றி அணுவும் அசையாது.😜 இருந்தாலும் சும் அதுக்கெல்லாம் அசைந்து கொடுக்க மாடடார் என்று நம்பலாம்.
-
செங்கடல் பகுதியில் கப்பலை கைப்பற்ற முயன்ற ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்
அப்படி இல்லை. அதை எப்படி எங்கே பாவிக்கிறார்கள் என்பதை பொறுத்தது. அதுக்கெல்லாம் தலைக்குள்ளே அது வேணும். இல்லாவிட்ட்தால் பிரயோசனம் இல்லை. 😜
-
ரஷ்ய ஜனாதிபதியின் சொத்து விபரம்
புதின் நேர்மையாக உழைத்த சொத்து ஒன்றும் அவரிடம் இல்லை. அங்குள்ள எண்ணெய் கிணறுகளை பயன்படுத்தி எப்படி கொள்ளையடித்தார் என்று வாசித்த ஞாபகம் இருக்கிறது. ராஜபக்சேக்கள் கொள்ளையடித்தது இன்று வரை பேசு பொருள் மட்டும்தான். கண்டுபிடிக்க முடியவில்லை. புட்டினின் கொள்ளையடிப்புக்கள் எல்லாம் பில்லியன் கணக்கில்தான். எப்படியோ மனுஷன் போகும்போது கையை விரித்துபோட்டுத்தான் போக வேண்டும்.
-
செங்கடல் பகுதியில் கப்பலை கைப்பற்ற முயன்ற ஹெளத்தி கிளர்ச்சியாளர்களின் படகுகள் மீது அமெரிக்க ஹெலிகொப்டர்கள் தாக்குதல்
அப்படி என்றால் இனி இஸ்ரேலுக்குக்கான பொருட்களை சீன , ருசியா கப்பல்களில் கொண்டு செல்லலாம். ஆயுதம் ஒன்றாக இருந்தாலும் சவூதி தாக்குவதட்கும் அமெரிக்கா , பிரிட்டன் தாக்குவதட்கும் வித்தியாசம் இருக்குது. 😛
-
மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அநாகரிகமாக நடக்கின்றனர் –கருணா அம்மான்
அவர் அறியாத வயசில அப்படி செய்துவிடடார். அதை எல்லாம் மன்னித்து அவருக்கும் ஒரு சந்தர்ப்பத்தை கொடுத்தால் என்ன?
-
மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு இந்தியா அழுத்தம் கொடுக்கவேண்டும்-தமிழ்த் தேசியக் கட்சிகள் கோரிக்கை!
அந்தப்பக்கம் ஒரு ஆள் சமஷடி எண்டு கேக்குது, இன்னொன்று வடக்கு கிழக்கு மீண்டும் இணைக்க வேண்டிமெண்டு கேக்குது, இன்னொன்று ஒற்றை ஆட்சி ஏற்றுக்கொள்ள மாடோம் எண்டு சொல்லுது , இப்ப இவர்கள் இதையாவது தாங்கப்பா எண்டு கெஞ்சுற மாதிரிஇருக்குது. எல்லாமே குழப்பமா இருக்குடா சாமி. 😂
-
தமிழரசுக் கட்சியின் தலைவர் யார்?
Kapithan, இவர்கள் ஒன்றை விளங்கி கொள்ள வேண்டும். இந்த இந பிரச்சினை தொடங்கிய நாட்களிலிருந்து தமிழ் கிறிஸ்தவர்கள் ஒரு நாளும் கிறிஸ்தவ மக்களுக்காக போராடியது கிடையாது. அவர்கள் தமிழரகளுக்காகவே போராடினார்கள். எமது குருமார் எத்தனையோ பேர் மக்களுடன் சேர்ந்து போராடி தங்கள் இன்னுயிரையே நீர்த்தார்கள். வேறு எவரும் இப்படி செய்ததில்லை. வேறு எந்த மத குருமாரும் வீதிக்கு மக்களுடன் இறங்கியதில்லை. எமது குருவான பஸ்தி அவர்களும் கொலை செய்யப்படடார். இவர்கள் எல்லாவற்றையும் மறந்து இந்தியாவின் ஆட்ட்துக்கு ஆடுவார்களாக இருந்தால் அந்த கனவு பலிக்காது. அது இலவு காத்த கிளியாகத்தான் இருக்கும். அவர்களுக்கு புரிந்தால் சரி. 😗
-
தமிழரசுக் கட்சியின் தலைவரானார் சி.சிறீதரன்
ஜேவிபி இன்னாரை அமெரிக்கா விரும்பாதுதான். நீங்கள் சொல்வது உண்மை. ஆனால் சீனா அதில் தீவிரமாக இருக்கிறது. ரணில் இருப்பதை அவர்கள் விரும்பவில்லை. இந்தியா வடக்கு கிழக்கில் அமைக்கும் பவுத்த விகாரைகள் பற்றி அக்கறைப்பட வில்லை. நீங்கள் சொன்ன மாதிரி புத்தரும் அவர்களுடைய ஆள்தான் என்பதுடன் இலங்கையுடன் எந்த விதமான மோதலையும் தவிர்க்கவே விரும்புகின்றது. எப்படியோ சீன மாலைதீவுக்குள் புகுந்து விட்ட்து. மற்றைய முஸ்லீம் நாடுகளும் அதனையே விரும்புவதாக தெரிகின்றது. அவர்கள் கச்சத்தீவில் ஒளிவதட்கு நாம் அதனை விட்டு கொடுக்க முடியாது. இப்போதே எமது மீனவர்களின் வாழ்வாதாரம் அழிந்து கொண்டு போகின்றது. கச்சத்தீவும் போனால் அம்போதான்.
-
மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் அநாகரிகமாக நடக்கின்றனர் –கருணா அம்மான்
அது நெற்றியில் மட்டும்தான் படடை. ஐயோ அவருக்கு உடம்பெல்லாம் படடை. 😂 மதமா? அது என்ன மதம்? பகிடி அவர்கள் இங்கு ஒரு கருத்தை உங்களுக்கு எழுதி இருந்தார். அதை நீங்கள் சரியாக வாசித்து விளங்கவில்லை என நினைக்கிறேன். மீண்டும் ஒரு முறை வாசியுங்கள். 😜 நீங்கள் மட்டுமல்ல எல்லா இந்துக்களும் வாசிக்க வேண்டும். அப்பபோதுதான் தமிழர்களுக்கு தீர்வு கிடைக்குமா இல்லையா என்பதை புரிந்து கொள்ளுவார்கள் .😗
-
இனப்பிரச்சினைக்கான நிரந்தர தீர்வுக்கு அழுத்தமளியுங்கள் : புதிய இந்திய உயர்ஸ்தானிகரிடம் தமிழ்த் தேசியக் கட்சிகளின் தலைவர்கள் கூட்டாக கோரிக்கை
இந்தியா எதை எதிர்பார்க்கிறது? @பகிடி அவர்கள் எழுதிய கருத்தை பார்த்தேன். அது உண்மையாக இருக்குமா இருந்தால் தமிழர் பிரச்சினைதீரப்போவதில்லை. கோரிக்கைகள் தொடர் கதையாகத்தான் இருக்க போகின்றது. அடுத்த தீபாவளி, அடுத்த பொங்கல் என்று சொல்லிக்கொண்டு தெரிவதட்க்கு ஐயாவும் அதிக காலம் இருக்கமாடடார் போல தெரிகின்றது.
-
அபே ஜனபல கட்சியின் தலைவர் சமன் பெரேரா துப்பாக்கிச் சூட்டில் பலி!
இவர் அத்துரலியே ரத்தன தேராவின் கட்சி தலைவராக இருந்தார். கட்சிக்குள்ளும் நிறைய பிரச்சினைகள். தேசிய பட்டியல் மூலம் இவர்களுக்கு ஒரு ஆசனம் கிடைத்தது. அதனால்தான் நிறைய பிரச்சினைகள். இவர்க்கு எதிரான பாதாள கோஸ்ட்டி, போதைப்பொருள் கடத்தல் சம்பந்தமான வழக்குக்கு செல்லும் வழியில்தான் கொல்லப்படடார்.
- இலுப்பைக்கடவை காவல் நிலைய பொறுப்பதிகாரியின் அட்டகாசம்?
Important Information
By using this site, you agree to our Terms of Use.