Everything posted by Cruso
-
3400 ஆண்டு பழமையான நாக மனித எச்சங்கள் யாழ்ப்பாணம் வேலணையில் கண்டுபிடிப்பு
புத்தர் இல்லாத அகழ்வாராச்சி இலங்கையில் நடந்ததுண்டா? அவர் அடியில் இருக்கிறார். அவர் இல்லாத இடத்தில அகழ்வாராச்சி நடக்காது. இதுக்கெல்லாம் அவசரப்பட கூடாது. விரைவில் திருக்கேதீஸ்வரம் ஆலயத்தை சுற்றியும் அகழ்வாராச்சி நடக்க போகுது. அப்போ பாருங்கள் எப்படியான சிலைகள் அகப்பட போகுதென்று.
-
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் : இலங்கை பிடித்த இடம் எது ?
பாகிஸ்தான் கடைசியில் நாலாம் இடத்தை எடுக்கும்போது, வங்குரோத்தான நிலையிலும் எமது இடத்தை வைத்து இலங்கைத்தமிழர் என்று பெருமை (?) கொள்ளலாம்.
-
4வது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
இதெல்லாம் அரசியலில் ஒரு அங்கம். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு திட்ட்ங்கள் அபிலாஷிகள் இருக்கும். அதட்கு எப்படியான வழிகள் என்பதை யோசிக்கும்போது அதை எப்போதும் உயிர்ப்புடன் வைத்திருப்பார்கள். எனவே இலங்கையாக இருக்கட்டும், உலக நாடுகளாக இருக்கட்டும், அயல் நாடாக இருக்கட்டும் அவர்களுக்கு இலங்கை பிரச்சினை தேவைப்படுகின்றது. எனவே என்னை பொறுத்த வரைக்கும் தமிழர் பிரச்சினை தீர்க்கப்படாது என்பது எனது நம்பிக்கை. ஏன் என்றால் உலக நடப்புக்கள் அப்படிதான் இருக்கின்றன.
-
நாய்களை கொல்லக் கூடாது – தென் கொரியாவில் புதிய சட்டம்
அப்படியா? நாய் ஒரு நன்றியுள்ள நல்ல ஒரு மிருகம். இதையும்விட பெரிதாக யாரும் எதையும் சொல்லிவிட முடியாது.
-
இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் நினைவுச் சிலை திறப்பு.
தப்பு தப்பாக செய்வது எல்லாம் தவறுதான்.
-
இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் நினைவுச் சிலை திறப்பு.
ஊர் கட்டுப்பாடு இருப்பது நல்லதுதான். போதைப்பொருள் பாவிக்க கூடாது, மக்களுக்கு தொந்தரவு செய்யக்கூட்ட்து போன்ற நல்லவற்றை அமுல்படுத்தினால் நல்லது. மற்றப்படி ஊர் கட்டுப்பாடு என்று மக்கள்தவறாக சென்றால் ஏற்றுக்கொள்ள முடியாது.
-
இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் நினைவுச் சிலை திறப்பு.
- நாய்களை கொல்லக் கூடாது – தென் கொரியாவில் புதிய சட்டம்
நாய்களுக்கு இனியாவது விடுதலை கிடைக்கட்டும். நாய் பண்ணை வைத்திருப்பவருக்கு 2027 வரைக்கும் கால இருக்கின்றது. அதட்குள் அவர் பண்ணையை மூடி விட்டு கோழி பண்ணை வைக்கலாம்.- அரசாங்கத்தின் செயற்பாடே, தமிழ் மக்கள் பொது வேட்பாளரை நிறுத்த காரணம் ! - சுரேஷ் க. பிரேமச்சந்திரன்
யார் அந்த பொது வேட்பளர்? நீங்கள் எல்லோரும் ஒற்றுமையாகிவிடடீர்களா? அப்படி இல்லாவிட்ட்தால் முதலில் அதை செய்யுங்கள். இலாவிடடால் அதில் பிரயோசனம் இல்லை.- கப்பலில் விருந்து தொடர்பில் வெளியான செய்தியை இலங்கை துறைமுக அதிகாரசபை மறுப்பு
இது எல்லா தொலைக்காட்சிகளிலும் விரிவாக காண்பிக்க படைத்து. முழு பூசணியை சோற்றில் புதைக்க முயலுகிறது துறைமுக அதிகார சபை. அரசியல்வாதிகளுக்கு உல்லாசமாகஇருக்க எந்த நேரத்திலும் இங்கு வசதிகள் உண்டு. ராஜபக்ஷே நடக்க முடியாமல் கைத்தாங்கலாக கூடிக்கொண்டு போனார்கள்.- IMF பிரதிநிதிகள் குழு நாளை நாட்டிற்கு விஜயம்
ஐக்கிய நாடுகள் அதிகாரிகளையே யுத்த காலத்தில் சமாளித்த இவர்களுக்கு, இந்த பொருளாதார யுத்த காலத்தில் IMF கார்களை சமாளிப்பது ஒன்றும் கஷடமான காரியம் இல்லை. இந்த அதிகாரிகள் உண்மையாகவே நீதியாக வேலை செய்பவர்களாக இருந்தால் நாட்டில் கொள்ளையடித்த பணத்தை மீட்பதட்கு அரசை வலியுறுத்தி இருக்க வேண்டும். சும்மா வந்து உல்லாசமாக இருந்துவிட்டு பணத்தை கொடுத்துவிட்டு போவதில் பயனில்லை.- சுகாதார சேவைகளுடன் இணைந்த 10 தொழிற்சங்கங்கள் 48 மணித்தியால பணிப்புறக்கணிப்பு
சுகாதார அமைச்சரும் ஒரு வைத்தியர். அரசியலை விட்டு போனால் வைத்திய தொழில்தான் செய்ய வேண்டும். அதை எல்லாம் கணக்கில் கொண்டு நல்ல ஒரு சம்பளஉயர்வு கொடுத்திருக்கிறார். என்ன, இப்போது மக்கள்தான் படாத பாடு பட்டு திரிகிறார்கள்.- தரமற்ற தடுப்பூசிக் கொள்வனவு : 6 பேரின் விளக்கமறியல் நீடிப்பு!
இருந்தாலும் முக்கியமான புள்ளி வெளியில்தான் இருக்குது. என்னதான் களவு செய்தாலும் அரசியல் செல்வாக்கு இருந்தால் சமாளித்து விடலாம்.- வடக்கு காணி உரிமைப் பிரச்சினையை இரண்டு மாதங்களில் தீர்த்து வைப்பதாக பிரதமர் உறுதி
மேட்குறிப்பிடட காரியங்கள் சம்பந்தமாக ஒருங்கிணைப்பு குழுக்கள்கூடத்தில் ஒவ்வொரு முறையும் விவாதிக்கப்படுகின்றது. ரணில் ஐயா சொல்லியே நடக்கவில்லை. இப்போது பிரதமர் சொல்லி இருக்கிறார். எப்படியோ தேர்தல் வரைக்கும் இழுத்துக்கொண்டு போய் விடடாள் சரிதான்.- யாழ். உரும்பிராயில் 80 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேகபர் கைது!
ரணில் ஐயா இது சம்பந்தமாக இந்திய பிரதமருடன் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறி இருக்கிறார். அதாவது ராமேஸ்வரத்துடன் நிலத்தொடர்பு இணைப்பை உருவாக்குவதாக கூறியிருக்கிறார். சிங்கள தீவிரவாதிகள் இதட்கு நிச்சயம் எதிர்ப்பு தெரிவிப்பார்கள். கேரளாவுடன் இணைப்பு சம்பந்தமாக நீங்கள் கூறிய கருத்து செயல்படுத்துவது இலகுவாக இருக்காது. இருந்தாலும் ஒரு இணைப்புக்கு முயட்சிக்கிறோம். உங்களாசை நிறைவேறும்.- 4வது உலகத்தமிழாராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 50 ஆவது ஆண்டு நினைவேந்தல்!
தேர்தல் நடந்தால் அது ஜனநாயக அரசுதானே? பொதுவாக தேர்தல் நடந்தால் ஜனநாயக அரசு என உலக நாடுகள் கருதுகின்றன போலும். ஆனால் தமிழர்களுக்கு அதிகார பகிர்வு(?) என்று கொண்டுவரப்படட மாகாண சபை மட்டும் நடக்காது.- முட்டாள் அமைச்சர்! சட்டங்களால் எதுவும் நடக்காது!!!
சட்ட்ங்களால் ஒன்றும் நடக்காது என்று தெரியும்தான். ஆனால் வெளிநாடுகளுக்கு காட்டிட வேண்டி இருக்கிறது. இது கூடவா தெரியாமல் இருக்கிறது?- யாழ். உரும்பிராயில் 80 கிலோ கேரள கஞ்சாவுடன் சந்தேகபர் கைது!
அம்மணி என்ன சொல்கிறா எண்டால் கொண்டுவருவதில் பிரச்சினை இல்லை. அதை சடடபடி கொண்டுவரடடாம். கடத்தல் கும்பலுடன் அம்மணிக்கு சம்பந்தமில்லையாம்.- வறுமை நிலைக்குள்ளாகியுள்ள இலங்கையர்களின் எண்ணிக்கை 50 இலட்சத்தை தாண்டியுள்ளது
பொதுவாக அரச நிறுவனங்களில் லஞ்சம் கொடுக்காமல் எதுவும் செய்ய முடியாது. அதட்கு அவர்களை குறை சொல்லவும் முடியாது. அவர்களுக்கு வழங்கும் சம்பளம் அப்படி. உழைப்புக்கேற்ற ஊதியம் என்பதை நீங்கள் எப்படி வரைவிலக்கணம் செய்கிறீர்கள் என்று தெரியவில்லை. இங்கும் உழைப்புக்கேற்ற ஊதியம் என்றுதான் அரசு சொல்கிறது. ஆனால் அதனை கொண்டு சீவிக்க முடியாது. அதாவது பிச்சை சம்பளத்துக்கு மேட்கு நாடுகளின் வரி விதிப்பு கொள்கை ஏற்றுக்கொள்ளக்கூடியது இல்லை.- இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் நினைவுச் சிலை திறப்பு.
எனது அனுபவத்தில்தான் எழுதினேன். நீங்கள் வேண்டுமென்றால் அங்கு போய் அந்த ஆலயத்தின் நிலைமையையும் காணலாம். உண்மையாகவே நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமென்றால் இதில் தெரிவியுங்கள் நான் விளக்கமாக அதனை எழுதுகிறேன். இன்று எம்மில் அநேகருக்கு எமது உரிமையை சிங்களவர் தர வேண்டும் சுயஆட்ட்ச்சி தர வேண்டும் என்றெல்லாம் கூச்சல் போடுகிறோம். ஆனால் அவர்களில் எதனை பேர் அவர்களுக்குள் மத ரீதியாக , இந ரீதியாக சிறு பான்மையாக இருப்பவர்களுக்கு உரிமைகளை கொடுக்கவேண்டுமென்று நினைக்கிறார்கள். தனக்கு வந்தால் சிவப்பு ரத்தம், மற்றவர்களுக்கு வந்தால் தக்காளி சட்னி என்ற நிலைமையில்தான் நிறைய பேர் இருக்கிறார்கள். மூன்றாம் தரப்பில் நாங்கள் கேள்விப்பட்டு எழுதவில்லை. உண்மையைத்தான் எழுதினேன். நீங்கள்,வேணுமென்றால் செபஸ்தியார் ஆலயத்தின் நடுவில் உள்ள கல்லறையை தட்டி கேளுங்கள். நாங்கள் எப்போதும் இங்கு உண்மையைத்தான் எழுதுவோம்.- தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டமூலத்தின் பின்னணியில் பாரிய சூழ்ச்சி - வீரசேகர
இமாலயம் இப்போது எங்கு இருக்குதென்றே யாருக்கும் தெரியாது. யார் வந்தது போனதென்றே எல்லோரும் மறந்து விடடார்கள். நீங்கள் இதில் எழுதிய பின்னர்தான் எனக்கும் ஞாபகம் வந்தது. ஐயோ ஐயோ.- இராயப்பு யோசேப்பு ஆண்டகையின் நினைவுச் சிலை திறப்பு.
ஆமோதிக்கிறேன். இவர் மன்னாரில் ஆயராக இருந்தபோது நடந்த ஒரு சம்பவத்தை கூறுகிறேன். மன்னாரில் கத்தோலிக்கர்கள் பெரும்பான்மையாக இருந்தாலும் குறிப்பிட தக்க அளவு கிறிஸ்தவர்களும் வாழ்கிறார்கள். ஒரு குறிப்பிடட கிறிஸ்தவ மதத்தினர் ஆலயம் கட்டியபோது இவர்களால் எரிக்கப்பட்ட்து. முறையாக அனுமதிபெற்றே கடடபட்ட்து. இருந்தாலும் ஆயரும் அதட்கு அனுமதிக்கவில்லை. அதாவது நீங்கள் சிறுபான்மையினர் எமது அனுமதி இன்றி செய்ய முடியாது என்று கூறப்படடதாம். அப்படி என்றால் எப்படி இவர் தமிழ் சிறுபான்மையினருக்காக பாடுபடடார் என்று எப்படி கூற முடியும். எல்லாமே மற்றவர்களுக்கு உபதேசம்தான். தங்களுக்கு என்று வரும்போது ........... இந்த விடயம் சம்பந்தமாக சிங்கள இனவாதிகளுக்கு அவர்கள் தெரிவித்திருந்தால் சிறுபான்மையினரின் போராட்டம் வெளிச்சத்துக்கு வந்திருக்கும்.- செங்கடலிற்கு ஹெளத்தி கிளர்ச்சியாளர்களிற்கு எதிராக கப்பலை அனுப்புவதா ? ஆராய்கின்றது இலங்கை கடற்படை
அது வேறு. இது வேறு. கடன் கொடுப்பதட்கு நிறைய பேர் இருக்கும்போது எதட்கு அப்படி எல்லாம் அலையை வேண்டும். இங்கும் றால் போட்டு சுறா பிடிக்கும் வேலைதான் நடக்குது ஐயா. 😜- பொங்கலை மண்பானையில் கொண்டாடுவோம் - பொ.ஐங்கரநேசன் அழைப்பு
எனக்கு தெரிந்த வரையில் மக்கள் மண் பானைதான் பாவிக்கிறார்கள். கொழும்பில் நிறைய பேர் மண் பானையை வாங்கி செல்வத்தையும் காண முடிகின்றது. ஒரு சிலர் அலுமினியம் பாவிக்கலாம்.- தேசிய ஒற்றுமைக்கும் நல்லிணக்கத்துக்குமான அலுவலக சட்டமூலத்தின் பின்னணியில் பாரிய சூழ்ச்சி - வீரசேகர
அதானே பார்த்தேன். எங்கடா இந்த ஆளை காணவில்லை எண்டு. இவரை உசுப்பேற்றுவதென்றால் வடகிழக்கு தமிழ் மக்கள் சம்பந்தமாக ஏதாவது பேச வேண்டும். தமிழ் மக்களுக்கே புரியாத ஒரு சடடத்தை நேற்று பாராளுமன்றுக்கு கொண்டு வந்தவுடன், அது தமிழ் மக்களுடன் சம்பந்தப்படடென்று அறிந்தவுடன் குழம்பி விடடார். பாவம் மனுசன். இன்னும் ஓரிரண்டு பேர் இருக்கிறார்கள். அவர்கள் என்ன கூறினன்ர்களோ தெரியவில்லை. - நாய்களை கொல்லக் கூடாது – தென் கொரியாவில் புதிய சட்டம்
Important Information
By using this site, you agree to our Terms of Use.