Everything posted by Cruso
-
ஈரான் ராணுவ தளபதி காசிம் சுலைமானியின் கல்லறை அருகே நடந்த குண்டுவெடிப்பில் 73 பேர் கொல்லப்பட்டனர்.
அமெரிக்காவோ , இஸ்ரவேலோ தங்கள் செய்யவில்லை என்று மறுப்பறிக்கை விட்டிருக்கிறார்கள். இதட்கு ISIS பொறுப்பேற்றிருக்கிறது.
-
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை பாதுகாப்பு உத்தியோகத்தரின் அநாகரிகமான செயல்!
இவருக்கு ஏதாவது ஒரு மன வியாதி இருக்கலாம். இவர் அங்கு வேலை செய்வதால் அவருக்கு மருத்துவம் செய்வது இலகுவாக இருக்கும். எனவே அங்குள்ள வைத்தியர்கள் எதாவது நடவடிக்கை எடுத்தால் நல்லது.
-
ஐ. நா. அகதிகளுக்கான உயர்ஸ்தானிகர் அலுவலகம் மூடப்படின் எமது எதிர்காலம் என்னவாகும் ? - இலங்கையிலுள்ள ரோஹிங்கிய அகதிகள் கவலை
அலி சபரி இது சம்பந்தமாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். அநேகமாக இவர்களுக்கு இலங்கை பிரஜாவுரிமை கிடைக்கலாம். மற்ற விடயங்களை ரிசார்ட் பதியதீன் பார்த்துக்கொள்ளுவார். அதாவது, அநேகமாக மன்னாரில் கொண்டுபோய் குடியேற்றம் செய்து விடுவார். இதெல்லாம் அவருக்கு கை வந்த கலை.
-
யாழில். தொடரும் காணி மோசடிகள் – ஐந்து நொத்தாரிசுகள் முன் பிணையில்!
விசேடமாக புலம் பெயர் உறவுகளே உங்களுக்கு அங்கு காணி பூமி இருக்குமென்றால் கொஞ்சம் எச்சரிக்கையாக இருப்பது நல்லது. அங்குஆட்கள் இருக்கும்போதே இப்படி நடக்குதென்றால், ஆட்கள் இல்லாதபோது என்னவெல்லாம் நடக்கும்.
-
யாழ் பொலிஸாரின் நடவடிக்கைகளில் சந்தேகம் : அமைச்சர் டக்ளஸ்!
தேர்தல் நெருங்க நெருங்க இப்படியான சந்தேகங்கள், மக்கள் தொடர்பான அக்கறைகள் நிறையவே வரும்.
-
வடக்கு, கிழக்கில் புகையிரத கடவை காவலர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் ஆரம்பம்
அதுதான் டக்லஸ் ஐயா அதை எல்லாம் தீர்த்து தருகிறேன் எண்டு இரண்டு வருடத்துக்கு முன்னர் சொன்ன ஞாபகம் இருக்குது. பிறகு எதுக்கு போராட்டம்.
-
அரச இயந்திரம் மீதான எதிர்ப்பை ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பின் மூலமே காண்பிக்கலாம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
அது நடக்காது பாருங்கோ. ஊருக்குத்தான் உபதேசம் உனக்கில்லையடி.
-
ஜனாதிபதிக்கு எதிரான போராட்டத்தைத் தடுக்கும் வகையில் கஜேந்திரகுமார், கஜேந்திரன் உட்பட 8 பேருக்கு எதிராக வழக்குத் தாக்கல்
பத்தோடு பதினொன்றாக ஒரு வழக்கு. விட்டு தள்ளுங்கய்யா.
-
மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு வடக்கிற்கு செல்கிறார் ரணில்
இந்த பாலி ஆற்று நீர் திடத்தை ஒன்றும் 250 மில்லியன் ரூபாயில் செய்ய முடியாது. நான் அறிந்த வரைக்கும் அந்த நிதி ஒதுக்கீடானது அங்கு சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்க ஒதுக்கப்படட பணம் என்றே அறிகிறேன். அதுவும் நடக்குமா என்பதும் சந்தேகம்தான். எனவே இதெல்லாம் தேர்தலுக்கான நடவடிக்கையே தவிர மற்றப்படி கண்துடைப்புதான்.
-
ஜனாதிபதி தேர்தல் வேட்பாளர் யார் ? மகிந்த தெரிவித்திருப்பது என்ன?
ரணிலை ஆதரிப்பதட்கு சந்தர்ப்பம் அதிகமாகஇருக்கிறது. தங்களது கடந்தகால மோசடிகள், பொருளாதார குற்றங்கள் எல்லாவற்றையும் மறைக்க கூடிய தலைவர் என்றால் அது ரணில்தான் என்று அவர்களுக்கு நன்றாகவே தெரியும். அரசில் உள்ள அனேகரும் ரணிலை ஆதரிக்கிறார்கள். எனவே இப்போது போட்டியிட்டு தோல்வியடைவதிவிட ஒரே மாற்று வழி இதுதான்.
-
அரச இயந்திரம் மீதான எதிர்ப்பை ஜனாதிபதித் தேர்தல் பகிஷ்கரிப்பின் மூலமே காண்பிக்கலாம் - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
இவருக்கு இப்போதுதான் தெரியுமோ? அப்படி என்றால் இவர் எப்படி அந்த அரச எந்திரத்தில் போட்டிபோட்டு பாராளமன்ற உறுப்பினராகினார்? எப்படி மாகாண சபை தேர்தலில் போட்டிபோடடார்? இனி வரும் தேர்தல் எல்லாவற்றையும் இவர் பகிஷ்கரிக்க போகின்றாரா? ஐயோ ஐயோ.
-
இனப்பிரச்சினைக்கு தீர்வு குறித்து மார்ச் மாதம் முக்கிய அறிவிப்பு – ஜனாதிபதி
தமிழ் சிறி இப்படியான தேவை இல்லாத செய்திகளை இங்கு பரப்பாமல் இருந்தால் உங்களுக்கும் நல்லது எங்களுக்கும் நல்லது. எனக்கு உயர் ரத்த நோய் உருவாக கூடிய நிலைமையை தயவு செய்து உருவாக்க வேண்டாம்.
-
பாலி ஆற்றின் குடிநீர் செயற்றிட்டத்தினால் பாதகம் நிகழக்கூடாது: ஜீவன் தொண்டமானுக்கு அவசர கடிதம்
ஸ்ரீதரனுக்கு கிளிநொச்சிதான் வாழக்கை கொடுத்தது. அவரது சொத்துக்கள் வயல்காணிகள் எல்லாம் அங்குதான் இருக்கிறது. அந்த வயல் காணிகள் இரணைமடு குளத்தின் கீழ் அமைந்துள்ளதால்தான் அங்குள்ள விவசாயிகளின் உதவியுடன் யாழுக்கு நீர் கொண்டு செல்வதை எதிர்த்தவர். அதை தடுத்தும் விடடார்கள்.இப்போது மன்னார் மக்களின் நீராதாரத்தை யாழுக்கு கொண்டுபோவது அவருக்கு பிரச்சினை இல்லை. இப்போதும்கூட மன்னார் மக்கள் இந்த திடத்தை எதிர்க்கவில்லை என்றுதான் நினைக்கிறேன். இந்த சிவகாரன் கூட மன்னார் மாவட்த்தை சேர்ந்தவர் இல்லை. ஆனால் அங்கு அரசியல் செய்கிறார். எனவே அவருக்கு ஸ்ரீதரனைப்போல ஒரு போராட்டம் தேவைப்படுகின்றது. இந்த திடடம் இப்போது தொடங்கப்பட்ட்து இல்லை. பல வருடங்களுக்கு முன்னர் பேசப்பட்டு தொடங்கப்படட ஒன்று. நிதி நெருக்கடியினால் இடைநிறுத்தப்பட்ட்து. இதெல்லாம் இப்போது வந்த சிவகாரனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. எனவே ஸ்ரீதரன், சிவகாரன் எல்லாம் சுயநல அரசியல்வாதிகள். இவர்கள்தான் தமிழர்களை வழிநடத்த போகிறார்கள். தலை எழுத்து.
-
தரமற்ற மருந்து இறக்குமதி - அமைச்சர் செய்ய சொன்னார் ; நான் செய்தேன்
இங்கு அமைச்சரை காப்பாற்றுவதட்கான முயட்சிகள் கன கச்சிதமாகவே நடக்கின்றன. எனவே அமைச்சர் சொன்னதட்கான ஆதாரத்தை கேட்க்கிறார்கள். இப்படி நிறையவே சிக்கல்கள் இருக்கின்றன. பொறுத்திருந்து பார்ப்போம். ராஜபக்சேக்களின் ஆளுக்கு துணிகளை வெளுப்பதில் மிகவும் பெயரானவர் இந்த ரம்புக்வெல்ல.
-
மயிலத்தமடுவின் குரூரமான சிங்களக் குடியேற்ற வரலாறு
சிங்களவர்களின் திடடமே தமிழர் பெரும்பான்மையாக வாழும் பிரதேசம் இல்லாமலாக்குவதே. எந்த அரசு வந்தாலும் அதில் மாற்றமில்லை. அதை எந்த விலை கொடுத்தாவது செய்வார்கள். மகாவலி குடியற்ற திடடமே அதட்காக உருவாக்க படடதுதான். வடக்கு நோக்கிய முன்னேற்றம் இப்போது வவுனியாவை தாண்டி விட்ட்து. இரணைமடு குளம் மஹாவலியுடன் இணைக்கபட்டவுடன் பெரிய குடியேற்ற திடடமே வகுக்கப்பட்டிருக்குது.
-
தமிழ் மக்கள் பக்கம் நின்றே நாம் தீர்க்கமான முடிவை எடுப்போம்-சம்பந்தன்!
அப்போ யாழ், வவுனியா, மடடகலப்பு சிறைகளில் இருந்து விடுவிக்கப்படட அத்தனை பெரும் சிங்களவர்களா? தமிழர்கள் யாருமே சிறையில் இல்லைபோல.
-
அடுத்த தேர்தலிலும் ஆட்சி அதிகாரம் கிடைக்கும் என்பது எனது எதிர்பார்ப்பு - மஹிந்த ராஜபக்ஷ
ஐயாவுக்கு நடக்கவே முடியலே. நாலு பேர் பக்கத்தில போக வேணும். இருந்தாலும் பதவி ஆசை இன்னும் போகவில்லை. சம்பந்தன் ஐயா வயது போனாலும் இவர்களைப்போலகொள்ளையடித்து அரசியல்செய்யவில்லை. கொள்ளையடித்து கொள்ளையடித்து பழகினவர்களுக்கு சும்மா இருக்க முடியாதாம். இன்னும் கொள்ளையடிக்கவேண்டுமென்று ஆசை. உச்சநீதி மன்றமே இவர்களுக்கு எதிராக தீர்ப்பு வழங்கியும் மானம் கேட்டு திரிகிறார்கள். அது சரி யார் அந்த நாலைந்து பேர் உங்களிடம் உள்ளவர்கள். தெரிந்து கொள்ளா ஆசையாக இருக்கிறேன்.
-
இலங்கை இந்தியாவின் கரிசனைகளையும் கருத்தில்கொள்ளவேண்டும் - இந்தியாவின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர்
இந்தியாவின் பாதுகாப்பை கருத்தில் கொண்டே இலங்கை சீனாவின் ஆய்வு கப்பல் வருகையை தடுத்து நிறுத்தியது. இலங்கை ஒரு நாளும் இந்தியாவுக்கு துரோகம் செய்யாது. அப்படி எல்லாம் செய்ந்நன்றி மறப்பதற்கு நாங்கள் ஒன்றும்நன்றி கெடடவர்கள் இல்லை. 😜
-
பயணிகள் போக்குவரத்து பேருந்துகளில் நடைமுறையாகும் சட்டம்
வருடா வருடம் சொல்லப்படும் செய்திதான் இது. ஆனால் நடைமுறையில் இல்லை. அதிகாலையிலேயே இலங்கையில் சத்தங்களால் சுற்றுசூழல் பாதிக்கப்படுகின்றது. சம்பிக்க அமைச்சராக இருந்த பொது இதனை நிறுத்துவதட்கு முயட்சி செய்தார். ஆனாலும் மற்றைய அரசியல்வாதிகள் தடுத்து விடடார்கள். அநேகமான பஸ் வண்டிகள் அரசியல்வாதிகளுக்கு சொந்தமானதுதான். எனவே நடவடிக்கை எடுக்க மாடடார்கள். இலங்கையை பொறுத்த வரைக்கும் சட்ட்ங்கள் திட்ட்ங்கள் எல்லாம் சிங்கபூரைபோல. ஆனால் நடைமுறையில் சோமாலியவைபோல . சொல்வார்கள் செய்யமாடடார்கள்.
-
ஜனாதிபதி தேர்தலை முற்றாகப் பகிஷ்கரிப்பதே ஒரே தெரிவு - கஜேந்திரகுமார் பொன்னம்பலம்
அதாவது இவர் இன்னும் ஈழ கனவுடன் இருக்கிறார் போலத்தான் தெரிகிறது. ஒற்றையாட்சி தீர்வுக்கே சிங்களம் அடிதடியில் நிக்குது. இதுக்குள்ள இவரின் கனவு வேறு. தமிழர்கள் பகிஷ்கரித்தால் ஜனாதிபதி முதல் சுற்றிலேயே தெரிவு செய்யப்படுவார். இரண்டாவது சுற்று தேவையாயின் தமிழர் தரப்பு தமிழர்களால் ஏற்றுக்கொள்ளப்பட கூடிய ஒருவரை இறக்க வேண்டும். குறைந்தது சில நிபந்தனைகளை விதிப்பதுடன் தமிழர்களின் பலத்தையும் காண்பிக்கலாம். இருந்தாலும் பொன்னா சடடம் படித்தவர். அரசியல் குடும்பத்தில் இருந்து வந்தவர். இதட்கு மேலே சொல்வதட்கு ஒன்றுமே இல்லை.
-
ஊழல்வாதிகளை பாதுகாக்கும் அரசாங்கத்திடமிருந்து நாடு விடுதலை பெறும் காலம் வெகு தொலைவில் - பேராயர்
ஆமென் என்பதன் அர்த்தம் என்ன தெரியுமா? அதாவது போப்பாண்டவரின் இந்த மேன்மையான தொண்டை ஆதரிக்கிறீர்கள். ஆமென்.
-
இயேசுவைப் பற்றி குர்ஆனில் கூறப்பட்டுள்ளது என்ன? இரு சித்தரிப்புகளில் எது உண்மை?
குரானை வாசித்தால் உண்மையாக ஈஷா நபி (இயேசு கிறிஸ்து ) மிகவும் நேசிக்க படடவராக காணப்படுகிறார். ஆனால் மிகவும் மோசமாக மும்மது விபரிக்கப்படுகிறார். ஆனாலும் அவரது அந்த மோசமான , தீவிரமான கொள்கைகளையே அவர்கள் பின்பற்றுகிறார்கள். அவர் இறுதியாக கூறிய ஒன்றுதான் யூதர்கள், கிறிஸ்தவர்கள், காபிர்கள் (பிற மதத்தவர்) எல்லோரையும் கொலை செய்ய வேண்டுமென்று. இது எப்படி இருக்குது?
-
மன்னிப்புக் கோரிய ஸ்ரீலங்கன் ஏயார்லைன்ஸ் நிறுவனம்!
நடந்தவற்றிட்கு மன்னிப்பு கேடடாள் பரவாயில்லை. நடக்கபோவதட்கும் மன்னிப்பு கேட்டிருக்கிறார்கள் பாருங்கள். அதுதான் இலங்கையின் சிறப்பம்சம். இது எப்படி இருக்கு?
-
கெஹலியவிடம் சிஐடி வாக்குமூலம்!
நேற்றைய செய்தியில் தடடை மாற்றி விடடார். தான்தான் முதலில் இது பற்றி புகார் கூறியதாகவும் அதட்கான ஆதாரங்களை கொடுப்பதட்காகவே அவர்களை அழைத்ததாகவும் கூறினார். அந்த ஆதாரங்களைக்கொடுக்கு கிடடதடட எட்டு மணித்தியாலங்களுக்குமேல் சென்றுள்ளது. 😜
-
ஊழல்வாதிகளை பாதுகாக்கும் அரசாங்கத்திடமிருந்து நாடு விடுதலை பெறும் காலம் வெகு தொலைவில் - பேராயர்
ஆமாம் அவரின் ஆசீவாதம் எப்போதுமே எமக்கு இருக்கிறது. இயேசு சொன்னார் குருடனே குருடனுக்கு வழி காட்டும் ஆன்மீக தலைமைகள் என்று . மக்கள்தான் அறியாமல் செய்கிறோம் என்றால் ஆன்மீக தலைமையும் அதனை ஆசீர்வதிக்கிறது. வாழ்க போப்பாண்டவரின் ஆன்மீக தொண்டு. 🤣