Everything posted by Kapithan
-
சங்கியாக முடியாது ! நாதகவிலிருந்து ஜெகதீச பாண்டியன் அவுட்
தமிழ்நாட்டு அரசியல் என்பது எப்போதுமே ஈழத் தமிழருக்குத் தேவையில்லாத ஆணிதான். அது எங்களைச் சார்பு நிலையெடுக்க வைக்கும். அந்த ஆணி ஈழத் தமிழருக்குத் தேவையில்லை.
-
சங்கியாக முடியாது ! நாதகவிலிருந்து ஜெகதீச பாண்டியன் அவுட்
தேவையில்லாத இன்னுமொரு ஆணி. 🥺
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
தேவையா இது? இப்போது இன்னுமொரு அறிக்கை வெளிவரும் நாம்தான் ஒரிஜினல் புலிகள். சீமானுக்கு பயிற்சி கொடுத்தோம். பாடம் எடுத்தோம் என்று கூறிக்கொண்டு. இதனால் யாருக்கு நன்மை? என்றோ ஒருநாள் சீமானும் உதயநிதியும் கைலாகு கொடுக்கத்தான் போகிறார்கள். அப்போது ஈழத் தமிழரில் ஒரு பகுதியினர் சீமானுக்கு எதிரியாகவும் இன்னொரு பகுதியினர் திமுகவுக்கு எதிரிகளாகவும் இருப்பர். யாழ் களத்தில், வேலை வெட்டி இல்லை என்பது போல எந்த நேரமும் எதையாவது ஒன்றை வைத்து சிரைச்சுக்கொண்டிருக்கிற புத்தியைச் சீவின ஆட்கள் பதில் கூறுவார்களா?
-
”சீமானுடன் எந்தவித தொடர்பும் இல்லை” தமிழீழ விடுதலைப் புலிகள் பெயரில் விளக்கம்!
தேவையில்லாத ஆணி. 🥺
-
குரானை எரித்து பெரும் பதற்றத்தை ஏற்படுத்திய நபர் சுவீடனில் சுட்டுக்கொலை
எப்போது எரித்தாரோ அப்போதே அவரது மரணம் நிச்சயிக்கப்பட்டுவிட்டது……சனநாயகம் என்கிற சிந்தனையின் கட்டுப்பாடின்மைக்கு குர்ரான் எரிப்பு ஒரு உதாரணம் 🥺
-
ஜெர்மனியின் பொருளாதாரம் மந்த நிலையில்!
உனக்கேன் உந்த வேண்டாத வேலை?
-
'தமிழ்நாடு மீனவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யும் யாழ் மீனவர்களிற்கு பாதிப்பு ஏற்படாத தீர்வு' - தமிழ்நாடு காங்கிரஸ் யோசனை
அடங் கொய்யால,......😡
-
இமானுவேல் சேகரன் கொலை- முத்துராமலிங்க தேவர் கைது..பெரியார்- புதிய சர்ச்சையில் சீமான்- விசிக கண்டனம்!
கருத்தாடல்கள் ஆரோக்கியமானவையாக இருக்க வேண்டும். எம்மை பிளவுபடுத்துவதாக இருக்கக் கூடாது. உண்மையை அறிய வேண்டும் என்பதில் ஒருவருக்கும் மாற்றுக்கருத்து இருக்கப்போவதில்லை. ஆனால் யார் கூறுவது உண்மை யார் கூறுவது பொய் என்று அறிய முடியாத சூழலில் மெளனம் காப்பதே மேல். அது தவிர தமிழக சாக்கடை அரசியலில் நாங்கள் முக்குளித்து எழுந்தவர்கள் போன்று சவடால் அடித்து நான் சொல்வதெல்லாம் உண்மை என்கிற போக்கு ஈழத் தமிழருக்கு நன்மை பயக்காது. கூரையேறிக் கோழி பிடிக்க முடியாத தமிழர் நாம், உண்மையைக் கூறி தமிழக அரசியலின் போக்கை மாற்றப்போவதாக கூறுவது இரசிக்கத் தக்கதாக இல்லை.
-
இமானுவேல் சேகரன் கொலை- முத்துராமலிங்க தேவர் கைது..பெரியார்- புதிய சர்ச்சையில் சீமான்- விசிக கண்டனம்!
தமிழ்நாட்டவர் என்கிற ரீதியில் அவர்களை நோக்கலாமே தவிர அவர்களைப் பிரித்து நோக்க முடியாது. எமக்கென்று தனித்துவம் மிக்க அரசியல் culture என்றை நாம் உருவாக்க வேண்டும். அது யாரையும் பிரதிபலிக்கக் கூடாது, யாரையும் சார்ந்து நிற்கக் கூடாது. ""நாம் இலங்கையர் ஆனால் தனித்துவமானவர்கள்"" என்பதாக அமைய வேண்டும். உ+ம்: சிங்கப்பூர்.
-
இமானுவேல் சேகரன் கொலை- முத்துராமலிங்க தேவர் கைது..பெரியார்- புதிய சர்ச்சையில் சீமான்- விசிக கண்டனம்!
யாழ் களத்திற்கு இது தேவையில்லாத ஆணி. திரும்பத் திரும்ப பெரியார், சீமான், திமுக என்று யாழ் களம் திட்டமிட்டே அதகளப்படுத்தப்படுவதாக எண்ணத் தோன்றுகிறது. தமிழக அரசியல்வாதிகள் தங்களுக்குள் அடிபடுவார்கள். நாளை சேர்ந்து கொள்வார்கள். அவர்களது அரசியலில் இலங்கைத் தமிழர் கொஞ்சம் தள்ளி நிற்பதே சாலச் சிறந்தது.
-
வீட்டில் தவறி விழுந்த நிலையில் மாவை , வைத்தியசாலையில்!
வயதானவர்களது இறுதிக் காலத்தில் அவர்கள் பாதிப்படைவதற்கான பிரதான காரணிகளுள் ஒன்று கீழே விழுதல். தமிழர் அழியும்போது வராத பிரசர் கட்சி அழியும்போது வருகிறதா? 🤣
-
கட்டைக்காட்டில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் காலில் இருந்து வடிந்த நீர்!
தனிப்பட்ட ரீதியில் நான் கூட எனக்கு நெருக்கமான அல்லது நன்கு தெரிந்த குருக்களுக்கு பல சமயங்களில் பணத்தை அன்பளிப்பகக் கொடுத்துள்ளேன். குறிப்பாக வெளிநாடுகளுக்கு அவர்கள் செல்லும்போது இவ்வாறான அன்பளிப்புக்கள் அவர்களுக்குக் கொடுப்பது மிகவும் சாதாரணமாக நடைபெறும். அது தவிர கத்தோலிக்கக் குருக்கள் ஊடாக உதவி தேவைப்படுவோர்க்கு பணத்தை அனுப்பி உதவுவது காலங்காலமாக நடைபெற்றுவருகிறது. அது நம்பிக்கை அடிப்படையில் இடம்பெறுவது. (குருக்களும் கன்னியாஸ்திரிகளும் ஒன்றும் தேவதூதர்கள் அல்லவே. புறநடை எங்கேயும் உண்டு. 🤣)
-
கட்டைக்காட்டில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் காலில் இருந்து வடிந்த நீர்!
கத்தோலிக்க குருமார் தேவாலயங்களில் தனிப்பட்ட ரீதியில் பணமீட்ட எந்தவிதமான நடவடிக்கைகளும் மேற்கொள்வதில்லை. ஏறக்குறைய அது தடை செய்யப்பட்டுள்ளது என்றே கூறலாம். உண்டியல் காசு, டொனேசன் எல்லாம் கண்க்கு வைக்கப்பட்டு பங்குச் சபையினரின் மேற்பார்வையில் மறைமாவட்ட ஆயர் இல்லத்திற்கு அனுப்பப்படும். அங்கிருந்து தேவைக்கு ஏற்றபடி பங்குகளுக்கு பிரித்து அனுப்பபடும். சில விதிவிலக்குகள் ஆங்காங்கே உண்டு. இதுவே பொதுவான நடைமுறை.
-
சீமான் சந்திப்பில் நடந்தது இதுதான் மனம்திறக்கும் மெய்ப்பாதுகாவலர்.........உண்மையின் தரிசனம்
இது அரசியல். இலங்கைத் தமிழரின் இருப்பு தொடர்பானது. சீமானுக்குப் பின்னால் திரிவதினாலோ அல்லது திமுகவுக்குப் பின்னால் இழுபடுவதாலோ எமக்கு எந்த நன்மையும் ஏற்படப்போவதில்லை. நாளைக்கு அவர்கள் ஒன்று சேர்வார்கள் பின்னர் பிரிவார்கள். அப்போது அணில் ஏறவிட்ட நாய்களாக வாய் பிளக்கப்போவது நாம்தான். ஏற்கனவே தமிழ்நாட்டில் பிரபாகரனை வைத்து எல்லோரும் வியாபாரம் செய்து முடித்தாயிற்று. இப்போது வி புக்களின் படப்பிடிப்பாளர் vs தலைவரின் மெய்ப்பாதுகாப்பாளர் என்று வி புக்களே பிரிந்தாயிற்று. இனம் அழிந்த பின்னர் வரலாறு toilet paper க்குச் சமம்.
-
கட்டைக்காட்டில் சிலுவையில் அறையப்பட்ட இயேசுவின் காலில் இருந்து வடிந்த நீர்!
காற்றில் உள்ள ஈரப்பதனை இந்த சொரூபம் உள்ளிழுத்து அது நீர்த் துளியாக வடிகிறது போலத் தென்படுகிறது. வட மாகாணத்தில் மழை பெய்யும் என்றும் வேறு கூறப்படுகிறது. 🤣
-
சீமான் சந்திப்பில் நடந்தது இதுதான் மனம்திறக்கும் மெய்ப்பாதுகாவலர்.........உண்மையின் தரிசனம்
தற்போது தமிழ்நாட்டு ஊடகங்களில் தேசியத் தலைவரை இழிவுபடுத்தும் செய்திகள் வர ஆரம்பித்து விட்டன. மேற்படி பேட்டியுடன் + படப்பிடிப்பாளர் அமரதாசின் கட்டுரையும் சேர்த்து எரியும் நெருப்பில் எண்ணையை ஊற்றுவதாகி விட்டது. தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் ஆமைக்கறி பிரபாகரன் என்று வேறு கூற ஆரம்பித்துவிட்டார்கள். இது எங்கே போய் முடியும்? விபு க்களை தமிழ்நாட்டில் இழிவுபடுத்துவதில் கொண்டுபோய் முடியும். நாளைக்கு சீமானும் உதயநிதியும் ஒன்றாக ஒரே மேடையில் தோன்றுவார்கள். நாம் அணில் ஏறவிட்ட நாய் போல வாய் பிளக்க வேண்டியதுதான். இதனால்தான் தமிழ்நாட்டு அரசியலில் நாம் தலையீடு செய்யக் கூடாது என்று கூறிவருகிறேன். யாழ் களத்தில் இந்த பிளவை சிலர் மேலும் திட்டமிட்டு ஊக்கிவிக்கிறார்களோ என்று சந்தேகப்படுகிறேன். ☹️
-
மகிந்தவின் உடல் பதப்படுத்தப்பட வேண்டும்! விடுக்கப்பட்ட கோரிக்கை
பஞ்சம் வந்தால் பசியாற வசதியாக இருக்கும். 😁
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
இங்கே திட்டுபவர்களது உண்மையான பிரச்சனை சும்மிற்கு பாதுகாப்பு கொடுப்பதனூடாக அவர் முக்கியமானவராகக் காட்டப்படுகிறார் என்பதுதானே? உயிராபத்து இருந்தால் பாதுகொடுப்பது வழமை. இதில் உங்களுக்கு என்ன பிரச்சனை? டமில் குப்பை ஊடகங்களுக்கும் தீவிர டமில் தேசியர்களுக்கும் சரியான தீனியில்லாமல் வறண்டுபோய்க்கிடக்கிறார்கள். யாழ் பல்கலைக்கழகத்தில் நடக்கும் பிரச்சனையோ அல்லது ஒரு முக்கியஸ்தர் பார் லைசென்ஸ் எடுத்துக்கொடுத்து பணம் பார்ப்பதுடன் சமூகத்திற்கு தீங்கு விளைவிப்பதும் முக்கியான விடயங்களாகத் தெரியவில்லை. ஆனால் உயிராபத்து உள்ளதாகக் கருதப்படும் ஒருவருக்கு பாதுகாப்பு கொடுப்பது பிரச்சனையாகத் தெரிகிறது. உந்த வறட்சியை எங்கே போய்ச் சொல்லுவது,? 🥺
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
உங்களுடன் சேர்ந்து திட்டவில்லையென்றால், திட்டாதவன் துரோகி,.....🤦🏼♂️
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
மழைக்கும் பள்ளிக்கூடப் பக்கம் ஒதுங்காத தத்தைகளையெல்லம் ஸ்மாட் போனில் தன்னைப்பற்றி திட்டும் அளவுக்கு வளர்த்துவிட்டிருக்கிறார் என்பது பெரிய விடயமில்லையா,.🤣
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
பாதுகாப்பு கொடுப்பதை நியாயப் படுத்துகிறீர்கள். 🤣
-
சிவஞானம் - பொன்னம்பலம் இடையில் சந்திப்பு
இத்தனை சகாப்தங்களாக ஒரு உரோமமும் பிடுங்காத ஆட்கள்தான் சுமந்திரன் இல்லாவிட்டால் பிடுங்குவார்கள் என்பது,..🤣
-
சுமந்திரனுக்கு பாதுகாப்பு வழங்கும் சிங்கள படைகள்- வெடித்தது சர்ச்சை
உங்களைப் போன்ற அட்களை நம்பித்தான் தமிழ்வின், தாரகம் போன்ற குப்பை ஊடகங்கள் ஓடிக்கொண்டு இருக்கின்றன. 😁
-
சிவஞானம் - பொன்னம்பலம் இடையில் சந்திப்பு
சந்திப்பின் நோக்கம் என்ன? கழுத்தறுப்புத்தானே,..😁 அந்தக் கூழ் முட்டையை அரவணைத்து சும்மை நிரந்தரமாக வெளியேற்றுவதுதான் நோக்கம்.
-
“நமது கதைகள் பின்னிப்பிணைந்துள்ளன, நமது எதிர்காலம் ஒன்றோடு ஒன்று இணைக்கப்பட்டது" - 76ஆவது குடியரசு தின செய்தியில் இந்திய பதில் உயர்ஸ்தானிகர்
மொழி பெயர்ப்பு ; இலங்கை இந்தியாவின் ஒரு முக்கிய பங்காளியாக உள்ளது.; நீ என்ன விட்டுகினு ஓடிட முடியாது. புரியுதா? . 😉 இந்தியாவும் இலங்கையும் சக ஜனநாயக நாடுகள் மாத்திரமல்ல. நாங்கள் நமது பன்முகத்தன்மை மற்றும் முனைப்புடமை ஆகியவற்றையும் பகிர்ந்துகொள்கின்றோம். நாங்கள் நாகரிகம் மிக்க சகாக்கள். எங்கள் வரலாறு, மொழி, மதம், நெறிமுறைகளை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்கின்றோம்.; நாங்களும் நீங்களும் ஒன்னுக்கு ஒன்னா ரிக்கனும். புரிஞ்சுக்கோ 😡 புவியியல் ரீதியிலான நெருக்கம் எங்களை இயற்கையான பங்காளிகளாக மாற்றியுள்ளது. அதேவேளை அருகில் இருப்பதால் இரு நாடுகளும் பரஸ்பரம் ஏனைய நாட்டின் நலன்கள் குறித்த உணர்வை கொண்டிருப்பது அவசியமாகிறது.; நீ என்ன செஞ்சாலும் உன்னை ஒருத்தனும் தள்ளிக்கீனு போக முடியாது. 😁 மேலும், ஒப்பிட முடியாத தன்னிச்சையுடன் மூன்றாம் தரப்பின் அழுத்தங்களால் பாதிக்கப்படாமல் நாம் ஒருவரையொருவர் ஆதரிக்கவேண்டும்.; நீ யாரையும் வைச்சீக்கோ, ஆனா என்னை விட்டுப்புட்டு இன்னா ஒருத்தன கலியாணம் கட்டிக்க ப்புடாது. 🙏 இந்தியா இலங்கையின் நம்பகமான சகா என்பதை இலங்கையின் நம்பகத்தன்மை மிக்க நண்பர் என்பதை மீண்டும் மீண்டும் நிரூபித்துள்ளது. இயற்கை பேரிடர்களாக இருக்கலாம், கடலில் ஏற்படும் விபத்துக்களாக இருக்கலாம், கொவிட் பெருந்தொற்றாக இருக்கலாம் அல்லது சமீபத்தைய பொருளாதார நெருக்கடியாக இருக்கலாம்... எதுவாக இருந்தாலும், இந்தியா முதலாவது நாடாக இலங்கைக்கு உதவ விரைந்து முன்வந்துள்ளது.; நீ எத்தீனு தடவ மாதவி கிட்ட போனாலும் நா உன்ன கூடையில வைச்சு காவிக்கீனு திரிவேன். புரிஞ்சுதா,.😍