Everything posted by Kapithan
-
யாழ்ப்பாணம் பண்பாட்டு மையத்திற்கு “ திருவள்ளுவர் கலாச்சார மையம்“ என பெயர் மாற்றம்
“”இந்திய - இலங்கை மக்களிடையிலான கலாசார, மொழி, வரலாற்று, மற்றும் நாகரிக பிணைப்புகளுக்கான சான்றாகவும் இது திகழ்வதாக”” இந்தியப் பாதிப்பு எல்லாவற்றிலும் இருக்க வேண்டும் என்பதுதான் நோக்கம். அடுத்தது காவி நிறம் திருவள்ளுவருக்குப் பூசப்படும். எங்கள் அடிமைகளும் அதற்குத் தலையாட்டுவர்.
-
கல்முனையில் நீதிமன்றத் தடையை மீறி, திருவள்ளுவர் சிலை
சைவத்திற்கும் இந்தச் சிலை திறப்பிற்கும் என்ன தொடர்பு? யாழ் களத்தில் உள்ளவர்களுக்கு திருவள்ளுவர் என்கிற சொல்தான் பிரச்சனையாகத் தெரிகிறது. செய்தியில் உள்ள திருவள்ளுவருடைய பெயரை நீக்கிவிட்டால் செய்தியின் சாரம்சம் புரியும். 😁
-
மதுபானசாலைகளுக்கான அனுமதி விவகாரம் : உண்மைகளை உடன் வெளியிடுங்கள்; இல்லையேல், நீங்களும் ஊழல்வாதிகள்தான் - சுமந்திரன்
முள்ளிவாய்க்காலில் தப்பிப் பிழைத்து வந்த மக்களுக்குச் செய்த துரோகம்தான் இந்த Bar License.
-
சீனாவுக்கு எதிரான எந்தவொரு செயற்பாடுகளுக்கும் இலங்கையை பயன்படுத்துவதற்கு இடமளிக்கமாட்டேன் - ஜனாதிபதி
சிச்சுவேசன் கொமடி
-
கொழும்பில் கட்டப்பட்டுவரும் பல மாடி ஆடம்பர ஹோட்டலிற்கும் இந்தியாவில் இடம்பெற்ற பாரிய பணமோசடிக்கும் தொடர்பா? இந்தியாவில் விசாரணைகள் ஆரம்பம்
அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு செயற்பாடு.
-
ஜனவரி மாதத்தை தமிழ் மொழி, பாரம்பரிய மாதமாக அறிவிக்க முடிவு: அமெரிக்க காங்கிரசில்தீர்மானம்
Congressman Raja Krishnamoorthi Leads Resolution to Designate January as Tamil Language and Heritage Month January 14, 2025 Press Release WASHINGTON – Today, Congressman Raja Krishnamoorthi (D-IL) introduced a bipartisan resolution designating January as Tamil Language and Heritage Month. More than 80 million people worldwide, including 360,000 Americans, speak Tamil, one of the world’s oldest languages. The resolution coincides with Pongal, a major Tamil festival that begins in mid-January. Pongal, celebrated as a time of gratitude and prosperity, is also a time when those in the Tamil community come together to observe with family, friends, and loved ones. https://krishnamoorthi.house.gov/media/press-releases/congressman-raja-krishnamoorthi-leads-resolution-designate-january-tamil வைச்சான் பாரு ஆப்பு. இந்தியன் தலையைச் சொறிய வேண்டியதுதான்,..😁
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
சிங்களம் , தமிழனை இரண்டாம் பிரசையாக நோக்குகிறது என்றுதானே போராடினோம்? இப்போது தமிழனே இன்னொரு தமிழனை இழிவுபடுத்தும்போது குப்புறப் படுத்துக்கிடந்துவிட்டு இப்போது வந்து வெறியர் என்றால் என்ன அர்த்தம்? பிழையைக் கண்டிக்கத் துணிச்சல் இல்லை,... உங்களைப்போன்ற ஆட்களைவிட மீரா எவ்வளவோ திறம். அவர் ஒன்றையும் மறைக்காது தனக்குப் பட்டதை நேரடியாகக் கூறுகிறார். அத்துடன் அது முடிந்தது.... 😏
-
மன்னார் நீதிமன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு; இருவர் பலி, இருவர் காயம்
போதைப்பொருள் கடத்தலை நொச்சிக்குளத்தைச் சேர்ந்த ஒரு பகுதியினர் காட்டிக்கொடுத்ததுடன் தொடர்புபட்ட கொலை. அத்துடன் இதற்குள் சாதிப் பிரச்சனையும் ஒன்று சேர்ந்துள்ளது. முன்னர் கொல்லப்பட்டவர்கள் இருவரும் தற்போது கொல்லப்பட்டவர்களது ஊருக்குள் குறிப்பிட்ட ஆட்களைக்/சகோதரர்களைக் கொலை செய்ய முயற்சித்தபோது ஊரவர்களால்/குடும்பத்தவர்களின் பதில் தாக்குதலில் கொல்லப்பட்டவர்கள். துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்ட ஆட்களுக்கு மகிந்தவின் பிள்ளைகளதும் அவர்களது அரசியல் கட்சியினரின் பாதுகாப்பும் பொலிசாரின் அனுசரணையும் கிடைக்கப்பெற்றுள்ளது. பிரச்சனையின் உண்மையான தொடக்கம் பல வடுடங்களுக்கு முன்னர் பொங்கலை முன்னிட்ட மாட்டுவண்டிச் சவாரிப் போட்டியில் தொடங்கியது. இது ஒரு பழி தீர்க்கும் வகையிலான தொடர் கொலை. இப்போதைக்கு முடிவுக்கு வருவது போலத் தெரியவில்லை.
-
தேசிய மக்கள் சக்தியின் நிர்வாக காரியாலயம் வடமராட்சி கிழக்கில் திறந்துவைப்பு!
சமூகத்தில் முக்கிய பொறுப்புக்களில் உள்ளவர்களுக்கு அழைப்பினைக் கொடுத்தால் அவர்கள் பங்குபற்றுவது வழமை. அது தவிர, அவர் இலங்கை வங்கி சார்பாக கலந்துகொண்டார் என்று நான் கருதவில்லை.
-
மன்னார் நீதிமன்றுக்கு அருகில் துப்பாக்கிச் சூடு; இருவர் பலி, இருவர் காயம்
போதைவஸ்து கடத்தலுடன் தொடர்புபட்ட பழைய கொலை வழக்காக இருக்கும்.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
""தைப்பொங்கல் விழா மத ரீதியானதா அல்லது இன ரீதியானதா"" என்று நாலு பக்க புகைச்சலுக்குப் பிள்ளையார் சுழி போட்ட @RishiK அதற்குப் பின்னர் இந்தப் பக்கம் தலை வைத்தும் படுக்கவில்லை. ⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️⁉️
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
தமிழ்க் கிறீஸ்தவர்களோ அல்லது கிறீஸ்தவ தேவாலயங்களோ இந்தத் திருநாளைக் கொண்டாடுகிறார்களோ என்று சமயத்தை இதற்குள் கொண்டுவந்தவர் தாங்களே. உங்கள் கேள்விக்கு தேடிப்பிடித்து ஒரு யூரியூப் காணொளி ஒன்றை இணைத்துவிட்டேன். அதற்கு நீங்கள் ""15 வருசம், அதற்கு முதல் தெரியாது"" என்று விடத்தைக் கக்கினீர்கள். தமிழ்க் கத்தோலிக்கரிடையே இந்த மாற்றம் எப்போதிலிருந்து ஏற்பட்டது என்பதை பதிலாகத் தந்திருந்தேன். உங்கள் பதிலோ ""கிறீஸ்தவர்களது பொங்கலைப் ""புக்கைப் பானை"" என்று அடுத்த துளி விடத்தைக் கக்கினீர்கள். அதன் பின்னர் நடப்பதுதான் உங்களுக்குத் தெரியுமே,........ உங்கள் உண்மையான பிரச்சனை கிறீஸ்தவம் அல்ல. உங்கள் பிரச்சனை என்னவென்று என்னால் அடையாளம் காட்ட முடியும். ஆனால் அது நீண்டுகொண்டே போகும் அது யாழ் களத்திற்கு நன்மையானது அல்ல. 😏
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
ஆரம்பத்தில் கூறியதுதான்: உங்கள் சாதி சமய வெறுப்பை இனம் காட்டுவதுதான் எனது நோக்கம். அதைச் செவ்வனே செய்கிறேன். தாங்களும் நன்கு ஒத்துழைக்கிறீர்கள். தங்கள் ஆதரவுக்கு நன்றி. (புகைந்தது இப்போது கொழுந்துவிட்டு எரிகிறது 🤣)
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
@குமாரசாமி@பகிடி
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
அவர் கடந்து செல்ல மாட்டார். அவரால் அது முடியாது. தொடக்கியது அவர். முடிக்காமல் எப்படிக் கடந்து செல்வது? 🤨
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
நான் கூறியது மீராவுக்கு. வேறு யாருக்கும் அல்ல. வேறு யாரையும் சிறிதும் இங்கே இணைக்கவும் முயற்சிக்கவில்லை. எனது கருத்தை ஒழிவு மறைவின்றி முகத்துக்கு நேரே கூறுகிறேன். அது சிலவேளை ஏற்றுக்கொள்ளக் கடினமாக இருக்கலாம். ஆனால் உண்மையாக உரையாடுகிறேன். உள்ளொன்று வைத்துப் புறமொன்று நான் பேசுவதில்லை. பூசி மெழுகுவதுமில்லை. நிற்க, தமிழர்களுடன் விசுவாசமாக இல்லாமல் இருப்பது முஸ்லிம்கள் என்று கூறிவிட்டு அடுத்தது என்று அம்புக்குறியிட்டுள்ளீர்கள். அவர்கள் யாரென்று வெளிபடையாகக் கூறலாமே? சைவர்கள் பொங்கினால் அது தைப் பொங்கள். கிறீஸ்தவர்கள் பொங்கினால் அது புக்கைப் பானையா? உங்கள் சாயத்தை வெளுக்க வைப்பதில் நான் வெற்றியடைவதில் மகிழ்ச்சியடைகிறேன். 😁
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
மீராவுக்கு உண்மை பலமாகச் சுட்டுவிட்டது போல,... உண்மை வெளிப்படும்போது இருள் அகன்று போம்.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
செய்தி என்னவென்றால்"" கிறீஸ்தவம் எப்பொழுது மாற்றங்களை உள்வாங்குகிறது "" என்பதுதான். கிறீஸ்தவத்தின் பலமே அதுதான். கிறீத்தவ நிறுவனங்கள் தைப் பொங்கலைக் கொண்டாடும் அல்லது தவிர்க்கும். அங்கு அது கட்டாயம் அல்ல. Juatin இணைத்த கண்டி குருமடம் இரு இன மாணவர்களுக்குமானது. தமிழ் குரு மாணவர்கள் தைப் பொங்கலைக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் தேவாலையத்தினுள்ளும் அதைக் கொண்டாடுவார்கள். தேவாலயத்தின் சுற்றாடலிலும் அதை கொண்டாடுவார்கள். ஏனென்றால் அது மக்களை ஒன்று சேர்க்கும் ஒரு நிகழ்வு. அதனால் அந்த நிறுவனம் பலமடைகிறது. மக்களும் ஒன்று சேர்கிறார்கள். 🤨
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
மாற்றம் எப்போதிலிருந்து ஆரம்பமாகியது என்பதற்கு மேலே ஆதாரம் கொடுத்திருக்கிறேன். அப்படியிருந்தும் Facts ஐ ஏற்றுக்கொள்ள உங்களால் முடியவில்லை. உங்கள் உண்மையான பிரச்சனை தமிழ்க் கிறீத்தவர்களும் தங்களைத் தமிழர்களாகக் கொள்வதில் உங்களுக்கு உடன்பாடில்லை என்பதுதான். அதைப் புரிந்துகொள்ள முடிகிறது. தாழ்வுச் சிக்கலிலிருந்து வெளியே வாருங்கள். புண்ணியமாப் போகும்.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
சமூகவியல் கற்றிருந்தால் இப்படி ஒரு கேள்வி எழுந்திருக்க வாய்ப்பில்லை. சூரியனுக்கு நன்றி கூறுதல் என்பது ஒவ்வொரு நாகரீகங்களிலும் இருந்து வரும் ஒரு பண்பாடு. இன்ரநெற் முழுவதும் இது தொடர்பாக கட்டுரைகள் ஏராளமாக இருக்கின்றன. சாதாரண தேடலுக்கே கிடைக்கும்.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
ஒவ்வொன்றாகச் சொல்வதற்கு நாள் போதாது. ஏனென்றால் நன்றி செலுத்துதல் என்பது உலகளாவிய பண்பாடு. சமூகவியல் கற்றவர்களுக்கு அது தெரியும்.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
தமிழர்களுடன் விசுவாசமாக இல்லாமல் இருப்பது யார் என்று நீங்கள் நேரடியாகவே அவர்களைக் கூறலாம். பூடகமாகச் சொல்வதால் பயனில்லை.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
இயற்கைக்கு நன்றி செலுத்தும் வழக்கம் உலகம் முழுவதும் உள்ள நடைமுறைதான். இந்தியக் கண்டத்தில் மாத்திரம் அதனை சாதி சமய ரீதியில் பிரித்துப் பார்க்கிறார்கள். ஒரு இனத்தை ஒன்று சேர்க்கும் விடயங்கள் எல்லாம் வரவேற்கப்பட வேண்டும்.
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
நீங்கள் ஆதாரம் கேட்பது உண்மையை அறிந்துகொள்வதற்காக அல்ல, மாறாக கிறீஸ்தவர்களின் மீதான காழ்ப்புணர்வின் காரணமாக ஏற்பட்ட சந்தேகம்தான். நீங்கள் ஒரு சாதி, சமய வெறியர் என்கிற எனது அனுமானம் சரி என்பதை மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறீர்கள். எனது தேவையும் ஆட்டுத் தோல் போர்த்த ஓநாய்களை இனம் காட்டுவதுதான். உங்கள் கோபமே உங்களை யார் என்று காட்டிக் கொடுக்கிறது. அதற்கு முதற்கண் உங்களுக்கு எனது நன்றிகள் உரித்தாகுக. உங்களுக்குரிய ஆதாரத்தை நீங்களே தேடிப் பாருங்கள். 🤣 👉. Second Vatican Council
-
நாடளாவிய ரீதியில் ஆலயங்களிலும் வீடுகளிலும் சிறப்பாக இடம்பெற்ற தைப்பொங்கல் பண்டிகை
இந்த மாற்றம் ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியின் பின்னரே ஏற்பட்டது. உலகெங்கிலும் கத்தோலிக்க திருச்சபை மேற்கொண்ட ஆய்வுகளின் முடிவில், கத்தோலிக்கர் தங்கள் இனத்தின் கலை கலாசார பண்பாட்டு அடிப்படையில் மதச் சடங்குகளை நடாத்தும் மாற்றம் 1970களில் கொண்டுவரப்பட்டது. அதில் ஒன்று சொந்த மொழிகளில் பிரார்த்தனை செய்தல். அதற்கு முன்னர் லத்தீன் மொழியிலேயே பிராரசெய்யப்பட்டதாக நினைக்கிறேன். (எங்கிருந்தோ வயிறெரிந்து புகை கிளம்புகிற மணம் வருகிறது )