Everything posted by Kapithan
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
ரஞ்சித் நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கிறார் என்பதற்கு இது நல்ல உதாரணம். ""சிலரின் சில்லறைத்தனங்களைப் பார்க்கும்போது சிரிப்பதைத்தவிர வேறு எதையும் செய்யத் தோன்றுவதில்லை."" கேள்வியின் அர்த்தத்தைக்கூட புரிந்துகொள்ளும் அளவிற்கு கோபம் கண்ணை மறைக்கக்கூடாது ரஞ்ஜித் ? நேர்மையுடன் கருத்தாடப் பழகுங்கள். உங்களிடம் கேட்ட கேள்வி ""இலங்கை இனவழிப்பையொட்டி மேற்கு நாடுகள் இதுவரை வாய் திறக்காதிருப்பது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன"" இதற்கும் நீங்கள் எழுதும் முள்ளிவாய்க்கல் ஒப்பீட்டிற்கும் என்ன சம்பந்தம்? இதற்குப் பதில் இருக்கிறதா உங்களிடம் ? முழு உலகமே கைவிட்ட முள்ளிவாய்க்காலும், முழு உலகுமே ஒன்று சேர்ந்து சண்டையிடும் மரியுபொலும் ஒன்றா ? இந்த இலட்சணத்தில்தான் உமது புரிதல் இருக்குமென்றால், நீங்கள் எழுதும் துரோகத்தின் நாட்காட்டியின் நிலையை நினைக்கத்தான் சிரிப்பு வருகிறது. ஏனென்றால் துரோகத்தின் நாட்காட்டியை சரி பிழை பார்க்கவோ அல்லது ஒப்பிட்டு நோக்கவோ அல்லது எதிர்த்து வாதாடவோ யாழ் களத்தில் ஒருவரும் இல்லையே. ஒருவரது எழுத்தின் நம்பகத்தன்மை அவரது எழுத்தில் உள்ள உண்மையின் அளவில் தங்கியிருக்கிறது. அதற்கு பக்கச்சார்பான கட்டுரைகள் பலம் சேர்க்காது. புரிந்துகொள்ளுங்கள்.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
இந்தக் கட்டுரை/மொழிபெயர்ப்பை வெளியிடும் ரஞ்சித் அவர்கள், இலங்கை இனவழிப்பையொட்டி மேற்கு நாடுகள் இதுவரை வாய் திறக்காதிருப்பது தொடர்பாக உங்கள் நிலைப்பாடு என்ன என்பதைக் கூறுவீர்களா?
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
தரையிறங்குவார்கள் அது வடக்கு கிழக்கில். தென்பகுதியில் அல்ல.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
"மேலே ரஞ்சித் எழுதின கொலைகள் நடக்கவில்லை என்கிறீர்களா? இவ்வளவு எங்களுக்கு நடந்தும், படை எடுக்கும் ஒரு ராணுவம், அது எந்த ராணுவமா இருக்கட்டும், என்ன செய்யும் என்று எங்களுக்கே புரியாவிட்டால் வேறுயாருக்கு புரிய வைக்கலாம்?" கொலைகளை யாரும் நியாயப்படுத்த முடியாது. ஆனால் அந்தக் கொலைகள் நடைபெற்றுள்ளனவா, நடைபெற்றிருந்தால் அது யார் செய்தது என்பது முக்கியமானது. அதனை பக்கச்சார்பான ஊடகங்களின் கட்டுரைகளை வைத்து நம்ப முடியாது. "இலங்கை ராணுவம் போகும்பொழுது, அதன் பரப்புரைகள் சர்வதேசத்தில் எப்படி வேலை செய்ததென்று எமக்கு நன்றாகவே தெரியும், அது ஒரு மீட்பு போராக வெளியில் நம்பவைக்கப்பட்டது, எவ்வளவு கொலைகள் நடந்தேதென்று உள்ளே இருந்த நம்மவர்களுத்தான் தெரியும்." நீங்கள் கூறுவதை நான் ஆமோதிக்கிறேன். பக்கச்சார்பான ஊடகங்கள் உண்மையை கூறும் என்று எப்படி எதிர்பார்க்கலாம் ? ரஞ்சித் குறிப்பிட்ட ஊடகங்களின் கட்டுரைகளை அப்படியே google translation செய்து தானும் கொஞ்சம் கூடுதலாக ரஸ்யாவுக்கு சேறடிக்கிறார். சேறடிப்பதல்ல பிரச்சனை, அவரின் இந்த கட்டுரையின் ஊடாக எமக்கு என்ன கூற வருகிறார் ? கட்டுரை எப்போதும் உண்மையை/ கூறவேண்டும். இவரது பக்கச்சார்பான எழுத்துக்கள் இவரது துரோகத்தின் நாட்காட்டி மீதான நம்பகத்தன்மையை அடியோடு இல்லாமல் செய்கிறதே. இது அவருக்குப் புரியவில்லையா ? விடுதலைப்புலிகளையும் Tamil Net ஐயும் நாங்கள் இன்றளவும் நம்புவதற்குக் காரணம் அவர்களது தகவல்களில் இருந்த உண்மையே. போராட்ட காலத்தில், கொழும்பில் இருந்த மேற்கு நாட்டின் தூதர்களுக்கு தினமும் காலையில் Tamilnet ன் செய்திகளை print எடுத்துக் கொடுப்பது நடைமுறையாயிருந்ததாக அறிந்திருக்கிறேன். அந்த அளவு Tamil-net ல் நம்பிக்கையிருந்தது. அந்த நம்பிக்கையை மேற்கொண்டு தொடர முடியாதபோது tamilnet செயற்படுவதை நிறுத்திவிட்டது. "புடின் போன்ற தனி மனித ஆளுமையில் இருக்கும் ராணுவம், மனிதாபினாமமாக நடக்கிறது என்று நீங்கள் நம்புவதே ஆச்சரியமாக இருக்கிறது." இரணுவம் என்பதே கொல்வதற்கும் வெல்வதற்கும் தயார்படுத்தப்பட்ட இயந்திரம்தான். இதில் மனிதாபிமானம் எங்கே வருகிறது. "அதிகாரத்தை பிடித்து, நாட்டை சர்வாதிகார நாடா மாற்றி, தமது சொத்துக்களைபெருகியதால் பூட்டினுக்கும் கோத்தாவுக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது?" புடின் மீதான தங்களின் குற்றச்சாட்டிற்கு என்ன அடிப்படை ? யூகம்தானே ? அந்த யூகம் எப்படி ஏற்பட்டது ? ஆனால் ராசபக்ச குடும்பத்தின் ஊழலுக்கு நாம் எல்லோரும் சாட்சிகள். முடிந்தால் இதற்குப் பதில் கூறுங்கள். ரஸ்ய ஊடகங்க்ளை ஏன் தடை செய்தார்கள்? ரஸ்யாவின் கருத்துக்களை நாம் அறியக்கூடாது என்பதற்காகத்தானே ? நாம் அறிந்துகொள்வதால் இவர்களுக்கு என்ன பிரச்சனை?
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
ரஞ்சித் எழுதுவது உண்மையோ பொய்யோ, ஒரு பக்கச்சார்பான செய்திகளை அடிப்படையாக வைத்து விளையாடுகிறார. அவரின் நோக்கம் என்ன என்பதுதான் கேள்வி?
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
ஈராக் மீது படையெடுப்பதற்கு அமெரிக்காவும் அதன் நேச நாடுகளும் சொன்ன Weapons of Mass Distraction கதைகள் நினைவிற்கு வருகிறது. தற்போது மேற்குலகினரே தங்கள் அரசுகளையும், தங்கள் தகவல்தொடர்புச் சாதனங்களையும் ந்ம்பாதபோது, மேற்கின் லங்காபுவத் கயிறுகளை விழுங்க தற்போதும் எங்களில் ஆட்களிருக்கிறார்கள் என்பதுதான் ஆச்சரியமானது. Empire of Lies என்று ரஸ்ய அதிபர் சொன்னது சரியான அளவீடுதான்.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
மேற்குலக ஊடகங்களில் அனேகமானவை அரை லங்காபுவத் தான். தங்கள் நலனுக்கு உகந்த செய்திகளை மட்டுமே வெளியிடுகின்றன அல்லது திரித்துக் கூறுகின்றன. தமிழ்நெற்றையும் லங்காபுவத் தையும் ஒருங்கே வாசித்தபடியால்தான் எனக்கு லங்காபுவத்தின் உண்மைத்தன்மையின் அளவு புலப்பட்டது. மேற்குலகு ரஸ்ய ஊடகங்களைத் தடை செய்ததன் காரணம் தங்களால் வெளியிடப்படும் செய்திகளின் உண்மைத் தண்மையை ஒப்பிட்டு நோக்கக்கூடாது என்பதற்காகவே. ரஸ்ய ஊடகங்களைத் தடைசெய்த மேற்கு ஏன் இரஸ்ய எரிபொருள், எரிவாயு என்பவற்றைத் தடை செய்யவில்லை ? மேற்கின் சனநாயகம், பன்முகத்தன்மை, வெளிப்படைத்தன்மை என்பவற்றின் சீழ்பிடித்த பக்கங்கள் இதுதான். இதைச் சொன்னா என்னைப் பைத்தியக்காறன் எங்குறாவுக.. 😉
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
அட மொழிபெயர்ப்பு செய்கிறீர்கள். புரிந்துகொண்டேன்.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
அந்த செய்தி ஆய்வு எதுவென்று கூற முடியுமா, தயைகூர்ந்து 🙏
-
முள்ளிவாய்க்காலும் உக்கிரேனும்... சமன்பாடும் ஒப்பீடும்
இன்னுமா மேற்கை நம்புகிறீர்கள்? நாங்கள் எப்படி வாய்கிழியக் கத்தினாலும் ஒன்றுமே நடக்கப்போவதில்லை. அவர்கள் தங்களுக்குத் தேவையென்றால் எங்களைப் பாவிப்பார்கள், தேவை இல்லையென்றால் தூக்கி எறிவார்கள். தேவைக்கு ஆட்கள் இல்லையென்றல் உருவாக்கிக்கொள்வார்கள். தேவை முடிந்தவுடன் தூக்கி எறிவார்கள். இப்போது உக்ரேனுக்கு என்ன நடந்ததோ/ நடக்கிறதோ அதைத்தான் இந்தியா எமக்குச் செய்தது. மேற்கும் செய்கிறது. சிங்களம்சீனாவிடம் போகாமல் மேற்கிடம் அல்லது இந்தியாவிடம் சரணடைந்தால் எங்கள் நிலை என்னாகும் ?
-
ஈழத்திருநாடே என்அருமைத் தாயகமே
உண்மை
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
நடைபெறப்போவதை எதிர்வு கூறியிருப்பினும் ஆரம்பத்தில் நானும் ஏமாந்துபோனேன். 👍
-
நானும் மனம் திருந்திய யூதாசும்
சம்பவம் 1 யேசு ஏன் பூமியில் அவதரித்தார் ? மக்களை மீட்க ! எப்படி மீட்க ? சிலுவையில் அறையப்பட்டு. எப்படி சிலுவையில் அறைந்தார்கள் ? யூதாசால் காட்டிக்கொடுக்கப்பட்டு. காட்சி 1 யூதாஸ் கெட்டவன். ஏன் ? அவன் தூய இரத்தத்தைக் காட்டிக் கொடுத்தவன். காட்சி 2 யூதாஸ் காட்டிக் கொடுத்திராவிட்டால்........ ? யேசுவின் நிலை....... ? யேசு அவதரித்த நோக்கம் நிறைவேறியிருக்குமா ? கேள்வி இப்போது, யூதஸ் நல்லவனா கெட்டவனா ? 😉
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
வணக்கம் பிரபா, எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் அவர் தனது கட்டுரையை விமர்சனம் செய்ய வேண்டாம் என்று தெளிவாக/வெளிப்படையாகக் கூறவில்லை. பலதடைவைகளில் விமரிசனம் வேண்டாம் என்று ரஞ்ஜித் வெளிப்படையாகக் கூறும்படி குறிப்பிட்டிருந்தேன். தற்போதுதான் நேராகவே கூறியிருக்கிறார். நல்ல விடயம். 1) எனக்கு உள்ள கடுங்கோபம் முள்ளிவாய்க்காலை மரியுபோலுடன் ஒப்பிடுவது. 2) தவறான தகவல்கள், பக்கச்சார்பான, முழுமையற்ற கருத்துக்கள் (என நான் கருதும்) வரும்போது அதனை விமர்சிக்கிறேன். ஆனாலும் தற்போது குறிப்பிட்டுள்ளதுபோல ஆரம்பத்தில் தனது கட்டுரையை விமர்சிக்க வேண்டாம் என்று வெளிப்படையாகவே கூறியிருந்தால் இந்தப் பிரச்சனையை பெருமளவு தவிர்த்திருக்கலாம் என நம்புகிறேன். மற்றது.. சக மனிதனது துன்பத்தை நியாயப்படுத்தும் எவனும் மனிதன் இல்லை என்பது எனது நிலைப்பாடு. ஆதலால் பொது மக்களது அழிவில் பெருமைகொள்ள எதுவுமே இல்லை. அது உக்ரேனாகட்டும் அல்லது பலஸ்தீனமாகட்டும். துரோகத்தின் நாட்காட்டியை நினைவுபடுத்தியதற்கு நன்றி பிரபா, துரோகத்தின் நாட்காட்டியை நான் பெரிதாக வாசிப்பதில்லை. அதற்குக் காரணம் 1) முரளிதரனது செயற்பாடு எங்களால் ஏற்றுக்கொள்ளப்படாவிட்டாலும் அவரும் ஒரு தமிழர், எமது போராட்ட/துரோக வரலாற்றில் அவருக்கும் பெரும் பங்கிருக்கிறது. இதனை எம்மால் மாற்ற முடியாது. எனவே அது தொடர்பாக எழுதப்படவேண்டி இருந்தாலும் அதுவும் ஒருவகை எமது பல்லைத் தோண்டி மணக்கக் கொடுக்கும் வேலைதானே. அதனால் அதனை வாசிக்கும்போது ஏற்படும் வேதனையும் வெட்கமும் மேற்கொண்டு வாசிப்பதைத் தடுக்கிறது. 2) துரோகத்தின் நாட்காட்டியில் குறிப்பிடப்படும் விடயங்கள் தொடர்பாக எனக்கு எதுவுமே தெரியாது. ஆகவே அது தொடர்பாக என்னால் கருத்துக்கூற முடியாது. தற்போது என்னுள் எழும் கேள்வி. உக்ரேன் தொடர்பான கட்டுரையில் உள்ள(தாக நான் கருதும்) பக்கச்சார்பும் தவறான தகவல்களும், துரோகத்தின் நாட்காட்டியில் இருக்காதா ? இந்தக் கட்டுரையும் அதனை விமர்சிக்கும்போது எழும் அவரது கோபமும் ரஞ்ஜித்தின் ஏனைய எழுத்துக்களில் உள்ள நம்பகத்தன்மையைக் கேள்விக்குள்ளாக்குகிறதே ?
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
1) இதை ஆரம்பத்தில் கூறியிருக்கலாம். 2) விமரிசனங்களுக்கு அஞ்சுபவன் பொதுத் த்ளத்திற்கு வரக்கூடாது. வந்தாலும் பொய் புனைவுகளை ஓரளவுக்கு மேல் சொல்லக் கூடாது. அளவு மீறினால் விமரிசனங்கள் வரும். 3) தூற்றுதலுக்கும் விமரிசனத்துக்கும் இடையில் உள்ள வேறுபாடு புரியாத அளவில்தான் உங்கள் புரிதலின்அளவு உள்ளதென்றால் நீங்கள் எழுதும் கட்டுரையும் அதே அளவிலான புரிந்துகொள்ளலின் அடிப்படைல்தான் எழுதப்படுகிறதென்று பொருள்படும். ஆகவே முள்ளிவாய்க்காலுக்கும் மரியுபோலிற்கும் இடையில் முடிச்சுப்போடும் உங்களின் புரிதலின் அளவை புரிந்துகொள்கிறேன். 4) இத்துடன் உங்கள் புனைவுகளின் மீதான விமரிசனங்கள் நிறுத்தப்படுகிறது( திரும்பவும் இதற்குப் பதில் எழுதாதீர்கள் புண்ணியமாப் போகும்) விமரிசனங்களை ஏற்கமாட்டாதவர்கள் தயவுசெய்து அதனை முன்கூட்டியே தெரியப்படுத்தி எங்கள் நேரத்தை மிச்சப்படுத்துங்கள். 🙏
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
முழு உலகத்தாலும் கைவிடப்பட்ட முள்ளிவாய்க்கால் எங்கே, முழு மேற்குலகும் ஆயுதம் அள்ளிக்கொடுக்கும்/மக்கள் மீதான தாக்குதல் முடிந்த அளவு தவிர்க்கப்படும் உக்ரேன் எங்கே ? முள்ளிவாய்க்கால் என்ன உங்கள் எல்லோருக்கும் கிள்ளுக்கீரையா போவோர் வருவோர் எல்லாம் நுள்ளிப் பார்ப்பதற்கு ? ரஞ்சித் தனது ஆக்கத்தை விமர்சிக்க வேண்டாம் என்று கூறட்டும். எல்லா விமரிசனங்களும் முடிவுக்கு வரும். சொல்வாரா ? அவர் அப்படிச் சொல்லாதவரைக்கும் நீங்கள்தான் உணர்ச்சிவசப்படாமல் இருக்க வேண்டும். 😏
-
புட்டினும் புதுமாத்தளனும்
Hitter ஐ ரஸ்யா வென்ற கோபம்/இழிவு ஜேர்மனியர்கள் பலருக்கு இருப்பதாகக் கருதுகிறேன். எனது யூகம் சரியானதா குசாமியாரே?
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
உங்கள் கட்டுரையை விமச்சிக்க வேண்டாம் என்று கூறுங்கள். அத்துடன் யாரும் கட்டுரையை விமர்சிக்கப்போவதில்லை. நீங்களும் மற்றும் பலரும், எல்லோரும் நிம்மதியாக உறங்கலாம். உங்கள் பிரச்சனையும் முடிவுக்கு வந்துவிடும். 🙏
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
✅ ✅ ✅
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
நீங்கள் ஆதாரம் எதனையும் கொடுக்க்வில்லை. பிழைகளை, பக்கச்சார்பை சுட்டிக்காட்டுவது ஆத்திரத்தில் அல்ல. அது பிழை என்பதாலே. உங்களால்தான் அதனை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. உங்கள் ஆக்கத்தை இதுவரை எவருமே குப்பை என்று கூறவில்லை. ஆனால் தவறுகளைச் சுட்டிக்காட்டும் கருத்துக்களை நீங்கள்தான் குப்பை என்று கூறுகிறீர்கள். வேருபாடு புரிகிற்தா ? உண்மையைக் கூறுங்கள் ரஞ்சித்தின் இந்தக் கட்டுரையை முழுமையாக வாசித்து வருகிறீர்களா ? வாசித்திருந்தால் முள்ளிவாய்க்காலுடன் இதனை ஒப்பிடுவது நீதியானதுதானா ?
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
சரியைச் சரியென்றும், பிழையைப் பிழையென்றும் கூறுவது வன்மம் அல்ல, நேர்மை. . (நேர்மையா அது என்னவென்று தயவுசெய்து கேட்காதீர்கள். ) பூவை பூ என்றும் கூறலாம், புஸ்ட்பம் என்றும் கூறலாம். நீங்கள் கூறுவது போலவும் கூற்லாம். பதில் இல்லையென்றால் நீங்கள் கூறுவது போலவும் கூற்லாம்.
-
புட்டினும் புதுமாத்தளனும்
இந்தியர் மட்டும்தானா ? கறுப்பர்களுக்கு அங்கே என்ன நடக்கிறதாம் ? இன்று இரண்டு வீடியோக்கள் பார்த்தேன், மனம் கல்லாகிப்போனது. அவற்றை இங்கே இணைத்தால் யாழில் என்னைத் தடை செய்வார்கள். 😔
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
😀 நீங்கள் உங்கள் சொந்தக் கருத்தை இங்கே எழுதுகிறீர்கள் என்பது என்க்கு மட்டுமல்ல, வாசிப்பவர்கள் எல்லோருக்குமே புரியும். ஆனால் அந்த சொந்தக் கருத்தை எங்கிருந்து பெற்றீர்கள், ஏன் பக்கச் சார்பாக இருக்கிறது, தவறான தகவல்களை எங்கிருந்து பெற்றிருக்கிறீர்கள் என்பது யூகிப்பது கடினமேயல்ல. Mகவும் முக்கியமாக கிழக்கு உக்ரேனில் இடம்பெறும் அநீதி தொடர்பாக ஒன்றுமே பேசாதிருப்பதும், இனச் சிறுபான்மையினருக்கு நடைபெறும் அநீதி தொடர்பாகவும், நாசித் தத்துவத்தை வரிந்து கட்டிக்கொண்டுள்ள Azov Battalion தொடர்பாக நீங்கள் வாயே திறக்காது மெளனம் காப்பதும் ஏன் என்று புரிந்துகொள்வதற்குக் கடினமான ஒன்று அல்ல. நீங்கள் உளச்சுத்தியுடன்தான் இதனை பக்கச்சார்பின்றி எழுத முனைகிறீர்களென்று எடுத்துக்கொண்டால், உங்களுக்கு இரு பக்கங்களிலும் இருந்து உண்மையான தகவல்கள் அல்லது செய்திகளை தாங்கிவரும் ஊடகங்களைதெரியாது என்று பொருள்படும். முக்கியமாக, உங்கள் எழுத்தில் உள்ள தவறு/பிழையான தகவல்களை மறுக்க அல்லது பிழைதிருத்த முற்படுகிறேனே தவிர உங்களுக்கு எழுதுவதற்கு உள்ள உரிமையில் தலையிடவில்லை. ஆனால் முள்ளிவாய்க்காலை இதற்குள் செருகினீர்கள் பாருங்கள், அங்கேதான் உங்கள் நோக்கம் கேள்விக்கு உள்ளாகிறது. முள்ளிவாய்க்காலை இந்த யுத்தத்துடன் இணைத்து எழுதியது த்வறென்று உணர்ந்தீர்களென்றால் தலைப்பை மாற்றிவிடுங்கள். புண்ணியமாகப் போகும். சனநாயகம், பன்முகத்தன்மை, கருத்துச் சுதந்திரம் போன்ற கருத்துருவாக்கங்கள் தேவைக்குத் த்குந்தாற்போல மாறுபடும் என்பது இவர்களுக்கு மிகவும் நன்றாகவே தெரியும். ஆனால் இந்தக் கேள்வியை இலகுவாகவே கடந்து செல்வர். 😌
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
ரஞ்சித்தின் கட்டுரை, ரஸ்யாவையும் புட்டினையும் தூற்றுவதற்காக எழுதப்படுகின்றது என்று உறுதிப்படுத்தியதற்கு நன்றி. ஆனால் tamilwin ஐயும் lankasri ஐயும் நம்பி கட்டுரை எழுதினால் இப்படுத்தான் இறுதியில் முடியும். ☹️
-
புட்டினும் புதுமாத்தளனும்
வெள்ளைக்கு விசுவாசமாக இருப்பீர்கள் என்பதை உறுதிப்படுத்தியதற்கு மிக்க ந்ன்றி 👍