Everything posted by Kapithan
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
பேய் அரசாண்டால் பிணம் தின்னும் சாஸ்திரங்கள் என்பதுபோல, கோமாளி (Comedy piece) ஒரு நாட்டின்அதிபராக வந்தால் நாடு நாடாக பிச்சைப் பாத்திரம் ஏந்த வேண்டி வரும் என்பதற்கு கோமாளி செலன்ஸ்கி ஒரு எம்வாழ்நாள் உதாரணம்.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
நகைச்சுவையாளர் (Comedy piece) செலன்ஸ்கியை நிலைதான் கவலைக்கிடமாக இருக்கிறது. நாடு நாடாய் அலைந்து, என்னையும் கவனியுங்கள் எனக் கையேந்தினாலும் யாரும் கவனிப்பாரில்லை. ☹️ செலன்ஸ்கி பிச்சைக்காறன் லெவலுக்கு இறங்கினாலும் ஒருவரும் மனம் இரங்குவதாக இல்லை. ☹️
-
யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் நடிகை ரம்பா!
கற்பனைக் குதிரையைத் தட்டிவிடல் என்பது இதுதானோ 🤣
-
யாழிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார் நடிகை ரம்பா!
அவரை தற்போதும் நடிகை என்று அழைப்பது பொருத்தமானதா? 😁 (இலங்கையில் தற்போது இலண்டனா அல்லது கனடாவா என்று போட்டி?🤣)
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ஹாஸாவில் போர் நடப்பதையே எல்லோரும் மறந்துவிடும் நிலைக்கு வந்துவிட்டனர். இதில் உக்ரேனை யார் மனதில் வைத்திருக்கப் போகின்றனர்?
-
அழிந்துபோகப்போகும் அரச உத்தியோகத்தர்கள் இனமும் புதிய வரிக்கட்டுப்பாடுகளும் - TIN No
“” டேய் நாங்கள் குடுக்கிற டக்ஸ் காசிலதானே சம்பளம் வாங்கிறியள் இப்ப இந்த காயம் மாறோனும் இல்லையெண்டால் டீம் இறங்கும்......”” இப்படியொரு சம்பவம் நடந்தது என்பது கட்டுரையாளரின் புனைவு. இலங்கையில் பொது மக்களுக்கு வரி தொடர்பான அடிப்படை விளக்கம் இல்லை.
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
100% ✅
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
யார் யாரெல்லாம்பேச்சுவார்த்தையில் பங்கு கொள்ளலாம்? யார் யாரெல்லாம் பங்கெடுக்கக் கூடாது? ஏதாவது பரிந்துரை?
-
சூரியனை ஆய்வு செய்ய நாளை விண்ணில் பாய்கிறது ஆதித்யா எல்-1
நானும் ரெளடிதான் 😁
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
ஆமாஞ்சாமி, பழைய அல்ல, அதரப் பழசு 😁
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
அது கிடக்கட்டும் ஒரு பக்கம், ""உங்கடை ஆள்தானே...பிரச்சினை இல்லை..அதுவும் ஒன்றுக்குள்ளை ஒன்று.."" இதன் அர்த்தம் what what ?
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
கஞ்சாவை நான் பாவிப்பதில்ல.
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
மீண்டும் வாசித்து மூளையைக் கசக்கிப் பார்க்கிறேன். (கசக்கிறதுக்கு மூளை என்ன கஞ்சாவோ என்று கேட்க வேண்டாம். 😁)
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
ஊரில் மதில் மேலிருந்து விசிலடித்துப் பட்டம் சூட்டும் கூட்டத்தில் தாங்கள் ஒருவர் இல்லை என்பது என் நம்பிக்கை. மேலும் தாங்கள் மேலும்கொஞ்சம் ஆக்கபூர்வமாகச் சிந்திக்க வேண்டும் என்பது என் விருப்பம்.
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
1) பேச்சு வார்த்தை விற்பனைக்கான பொருளல்லவே....✅ 2) அதில் இதய சுத்தியும் ...ஆக்கபூர்வமன செயல்பாடும் வேண்டும்...✅ இதில் உங்களுக்குச் சந்தேகம் இருக்கிறதா? 3) இதனை விட பேசப்போகிற்வர்... தமிழரால் விடும்பப் படுபவராக இருக்கவேண்டும்...⁉️ சுரேந்திரனை தமிழர் விரும்பவில்லையா? 4) லண்டனில் இருக்கும் தழரின் எழுச்சியை இவரால் கட்டுப் படுத்தமுடியுமா?❌ ஏன் கட்டுப்படுத்த வேண்டும்? எழுச்சி கொள்வதற்கான தேவை தற்போது ஏன் வந்தது? இலங்கைத் தமிழர்தான் இறுதியில் எழுச்சி கொள்வதா என்று தீர்மானிக்க வேண்டும். நாம் அவர்களுக்கு துணையாக மட்டுமே இருக்க முடியும். 5) பெயர் மட்டும் இருந்தால் போதாது...❌ சுரேன் சுரேந்திரன் அல்லது உலக தமிழர் பேரவை என்கிற பெயரில் என்ன பிரச்சனை?
-
ஜனாதிபதியை சந்திக்கும் உலக தமிழர் பேரவை
1) பேச்சுவார்த்தை நடத்துவது நன்மையானதா அல்லது தீமையானதா? 2) பேச்சுவார்த்தை நன்மையானது என்றால் யார், யாருடன் பேசலாம்? 3) பிரித்தானியாவில் இருந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபடுபவர்களுக்கு மேற்குலகின் அனுசரணை இன்றி பேச்சுவார்த்தை நடாத்த முடியுமா? 4) பேச்சுவார்த்தை தீங்கானது என்றால், அங்குள்ள தமிழர்களுக்கு பயன்படுவகையில் உதவ எங்களுக்கு உள்ள மாற்று வழி என்ன? (இந்தக் கேள்விகள் உங்களுடன் முரண்படுவதற்காக அல்ல. )
-
தலைமைத்துவத்திற்கான போட்டியில் சுமந்திரன், சிறீதரன் !
கம்பீரமாக வெள்ளை வேட்டி சேட்டுடன் காட்டியளித்த சிறீதரன் தற்போது காவியுடன் காட்சிதருவது எதனால் என்று நினைக்கிறீர்கள்? இந்தியாவின் தற்போதைய அவசர தேவை இந்திய பார்ப்பனீயத்திற்கு ஈடாக இலங்கையில்இ ந்துத்துவாவைத் தூக்கிப்பிடிக்கக் கூடிய, தனது சொல் கேட்கக்கூடிய ஒரு தலைமை. ஆனால் அந்தத் தலைமை வடக்கு கிழக்குத் தமிழர்களைப் பிரதிநிதிப்படுத்தவும் வேண்டும். தனது சொல்லைக் கேட்கவும் வேண்டும். அம்புட்டுதே. 😉 நீங்கள் கேட்கிறீர்களா அல்லது கிழக்கு மாகாணத்தினர் கேட்கின்றார்களா? (வாய் சும்மதானே இருக்குது அதுதான்,.......😃) சிறீதரன் Google இருக்கிற துணிவில் போட்டியில் இறங்கியிருப்பார்,. ......🤣
-
தலைமைத்துவத்திற்கான போட்டியில் சுமந்திரன், சிறீதரன் !
West Vs. India போட்டியில் சம்பந்தர் உயிரோடு இருப்பதைப் பலர் மறந்தே விட்டனர். 🤣
-
தலைமைத்துவத்திற்கான போட்டியில் சுமந்திரன், சிறீதரன் !
தலைமைத்துவப் போட்டி என்பது இலங்கைத் தமிழர்கள் இந்தியாவின் தலைமையை ஏற்பதா அல்லது மேற்குலகின் தலைமையை ஏற்பதா என்பதுதான். இதில் சிறீதரன்ஹிந்துத்துவ+அகண்ட பாரத ideology ஐக் கொண்ட RSS இந்தியாவின் பிரதிநிதி, சுமந்திரன் மேற்குலகின் பிரதிநிதி. இங்கே நாம் எந்த அதிகாரத்திற்குக் கட்டுப்பட்டு எமது நலன்களை அடையப்போகிறோம் என்பதுதான் கேள்வி. 😁
-
துவாரகா உரையாற்றியதாக...
அந்தத் தேவை இலங்கைக்கு இல்லை. தமிழர் எல்லோரும் நம்பக்கூடிய, தமிழரை ஒன்று சேர்க்கக்கூடிய இந்திய சார்புத் தலைமைத்துவம் ஒன்றைக் கொண்டுவரவேண்டிய தேவை இந்தியாவிற்கு மட்டும்தான் உள்ளது. தலைமைத்துவ வெற்றிடத்தை இந்தியா தனது தேவைக்குப் பாவிக்கிறது.
-
துவாரகா உரையாற்றியதாக...
இந்த ஈனச் செயலைச் செய்தது இந்தியா என்பதில் யாருக்கும் சந்தேகம் இருக்கப்போவதில்ல. ஆனால் ஏன் செய்தார்கள் என்பதுதான் முக்கியம். இன்று இலங்கையர் எல்லோருக்கும் பொதுவாக ஒத்துப்போகும் ஒரு விடயம் இந்திய வெறுப்பு. அதை நிவர்த்தி செய்து, எம்மிடையே உள்ள தலைமைத்துவ வெற்றிடத்தை இலங்கைத்த மிழர்களால் ஏற்றுக்கொள்ளப்படக் கூடிய ஒருவரை முன்னிறுத்தி தமிழர்கள் எல்லோரையும் மீண்டும் தனது பக்கம் கொண்டு வரும் அற்பத்தனமான ஒரு முயற்சியே இந்தியாவின் இந்த துவாரகா விளையாட்டு. இதில் நல்ல விடயம் என்னவென்றால், துவாரகா எனும் நாடகம் ஆரம்பமாகி 24 மணித்துளிகளிலேயே இழுத்து மூடப்பட்டதுதான். இதில் இன்னொரு நல்ல விடயமும் நடைபெற்றுள்ளது. அது என்னவென்றால் இந்திய ஏஜன்ட்கள் பலரும் அம்பலப்பட்டுப் போயினர். இதை இந்தியாவே எதிர்பார்த்திருக்க மாட்டாது. இது தொடர்பாக புரட்சிகரத் தமிழ்த் தேசியனிடம் கேட்டால் அவர் நிறையவே சொல்லுவார். 😉
-
துவாரகா உரையாற்றியதாக...
இதற்காகத்தான் ஹிந்தியா துவாரகா என்கிற பெயரில், இலங்கையில் தோற்றுவிட்ட தனது வெளியுறவுக் கொள்கைக்கு புதிய (போலித்) தலைமையை உருவாக்க நினைக்கிறது. இலங்கைத் தமிழும் சிங்களமும் ஹிந்தியாவிக்கெதிராகத் திரும்பி வெகு நாளாச்சு கண்டியளோ,..... இனி மலையகத் தமிழரும் திரும்புவார்கள். அப்போது மெல்ல இந்தியா சாகும்.
-
துவாரகா உரையாற்றியதாக...
இவர்களுடைய பேட்டிகளை நோக்குவீர்களானால் இவர்கள் அமெரிக்க அதிபரிலிருந்து சைபீரியாவின் கடைக்கோடிவரை தங்களுக்கு எல்லாம் தெரியும் என்கிற வகையில் கூறுவார்கள். தமிழரின் விடுதலைப் போராட்டம் தொடர்பாக இவர்கள் எங்களுக்கே பாடம் எடுக்கும் காலம் தொலைவில் இல்லை.
-
துவாரகா உரையாற்றியதாக...
""ஏர்போர்ட்மூர்த்தி ஒரு அரசியல் வாதியாக கருத்து சொல்கிறார் எண்டால், அட நம்ம நம்ம பயில்வான் ரங்கநாதனும் இறங்கி கருத்து சொல்கிறார்."" தடி எடுதவணெல்லாம் தண்டல்காறன் என்பதுதான் தமிழ்நாட்டின் நிலை.
-
ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்
ரஸ்-உக்ரேன் அமைதி உடன்படிக்கை ஒன்றை கைச்சாத்திட ஆயத்தமாகிய வேளையல் UK யின் பொறிஸ் ஜோண்சன் தலையிட்டு எல்லாவற்றையும் குட்டிச் சுவராக்கிவிட்டதாக தற்போது செய்திகள் வெளிவரத் தொடங்கிவிட்டன.