Everything posted by Kapithan
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
அசாத்தை நீக்கிவிட்டு அந்த இடத்திற்கு அசாத்தை விட மனித உரிமையில் முன்னேற்றகரமான அரசையோ அல்லது கிளர்ச்சியாளர்களையோ கொண்டுவந்திருந்தால் நீங்கள் சொல்வது சரியாக இருக்கும். ஆனால் தற்போதைய கிளர்ச்சியாளர்கள் முன்னைய ஆட்சியாளர்களைவிட மோசமானவர்களெல்லோ,.? அசாத் தூக்கில் மாட்டிக் கொலை செய்தாரானால் கிளர்ச்சியாளர்கள் கழுத்தை அறுக்கிறார்கள் அல்லது உயரமான கட்டடத்தின் உச்சியில் அல்லது கோட்டை கொத்தளத்தின் உச்சியில் வைத்து கீழே தள்லிவிடும் ஆட்களல்லவா? சிறுவர்களின் கழுத்தை அரிந்துவிட்டு அல்லாஹு அக்பர் என்கிறார்கள். பெண்களை பாலியல் அடிமைகளாக வைத்திருக்கிறார்கள். சிறுபான்மையினரை அழிக்கிறார்கள். அசாத் செய்தது பிழை என்று கூறும் தாங்கள் கிளர்ச்சியாளர்களது பக்கத்தை மூடி மறைப்பது பக்கச் சார்பானது அல்லவா,......?
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
மத்திய கிழக்கு முழுவதுமே ஓரளவுக்குமேல் நாகரீகமடையாத மக்கள் கூட்டத்தைக் கொண்டது. இந்த வகையான ஆட்சிக்குத்தான் அது பழக்கப்பட்டது. அங்குள்ள மக்களின் நாளாந்த வாழ்க்கை முறைகளை உற்றுக் கவனித்திருந்தீர்களென்றால் அது ஏன் என்று புரியும். குர்ரானைக் கட்டிப்பிடித்து வரிக்குவரி அதனைக் கடைப்பிடிக்க முயற்சித்தால் இது அப்படியே தொடரும்.
-
தமிழர் பிரதேசங்களை பௌத்த மயமாக்கும் செயற்பாடுகள் தொடர்சியாக இடம்பெற்று வருகின்றன!
சிங்களமும் பெளத்தமும் ஒன்றா,....?
-
போர்க்களமாக மாறிய தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு கூட்டம்!
1) வடக்கன்ஸ் அர்ச்சுனா ரமநாதனுக்கும் அனுரவுக்கும் வாக்களித்து டமில் தேசியத்தை காற்றினிலே பறக்கவிட்டபோது, வீரம் விளை நிலம்தான் தமிழரின் மானத்தைக் காப்பாற்றியது. ஆகவே சாணக்கியன் தொடர்பாக அவதூறு கூற சாத்தானுக்கு அருகதை இல்லை. 2) ஒரு நிகழ்வு குறிக்கப்பட்ட நேரத்திற்கு ஆரம்பிக்கப்பட வேண்டும் என்பது சாதாரணமாக பள்ளிக்கூடம் சென்ற எல்லோருக்கும் தெரியும். ஆகவே, குறித்த நேரத்திற்கு நிகழ்வை ஆரம்பிக்குமாறு கோருவது தவறான விடயம் அல்ல. நிகழ்வை காலம் தாழ்த்தி ஆரம்பிக்குமாறு கோருவது தவறு என்பது பாடசாலை செல்லும் சிறு குழந்தைக்கும் தெரியும். 3) இப்படியான கூட்டங்களில் கருத்து முரண்பாடுகள் ஏற்படுவது வழமையான ஒன்று. இருவருக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதத்தை ""போர்களமாக மாறிய "" என்று போடும் ஆதவனின் வறுமைத்தனத்தை நம்பிக் கருத்து கூறுவது ஆபத்தான முயற்சி. 😁
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
ஆம். எனக்குத் தெரிந்த ஒரு யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த குடும்பத்தை விபு க்களே இந்தியாவிற்கு தங்கள் படகில் கொண்டு சென்று இறக்கியிருந்தனர். சமாதான காலத்தில் அவர்கள் விமானம் மூலம் இலங்கை வந்தடைந்து வவுனியாவில் மீளக் குடியமர்ந்தனர். அவர்கள் தற்போது வட அமெரிக்காவில் இருக்கிறார்கள். அக் குடும்ப உறுப்பினர் ஒருவர் மாற்று இயக்கம் ஒன்றின் பெரிய பொறுப்பில் முன்னர் இருந்து பின்னர் பொது வாழ்க்கைக்கு திரும்பியிருந்தார். இதே போன்று பல சம்பவங்கள் நடந்துள்ளன. அவைகளை எனக்கு தனிப்பட்ட ரீதியில் தெரியும். @விசுகுகுஎ ஏன் -1 போட்டிருக்கிறீர்கள்? காரணத்தை அறியத்தர முடியுமா?
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
ஆறுதலாக வாசித்து, கிரகித்த காரணத்தால்தான் சிறுபான்மையினர் கொண்டாட வேண்டும் என்று எழுதியிருந்தேன். 😁 யார் கொண்டாடுகிறார்கள் என்பது முக்கியமல்லவா? கழுத்தை அறுக்கும் பெரும்பான்மை சுனி முஸ்லிம்கள் கொண்டாடுவதால் என்ன பயன்? விபு க்கள் இலங்கை அரச சார்பு, இந்தியா சார்பு உளவாளிகள், போராளிக் குழுக்கள் பலவற்றின் குடும்ப உறுப்பிணர்களைக் கது செய்து (?) அல்லது கூட்டிக்கொண்டுபோய் இரவிரவாக இந்தியாவிற்கு நாடு கடத்தியிருந்தார்கள், பாஸ் கொடுத்து வடக்கு கிழக்கிற்கு வெளியே அனுப்பியிருந்தார்கள். இது வரலாறு. பலருக்கும் இது தெரியும். எனக்கும் தெரியும். சிலர் இவற்றை அறியாமல் இருக்கலாம். ஆனால் விடயம் உண்மை.
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
நன்றி கிருபன், யாம் ஒன்றும் சிறுவன் இல்லையே,..விடயங்களை கிரகிக்கும் ஆற்றல் எமக்கும் உண்டு. 🤣
-
சிரிய முன்னாள் ஜனாதிபதியின் தந்தை கல்லறையை தீ வைத்து அழித்த கிளர்ச்சியாளர்கள்!
"சிறீலங்கன் ஆமி நல்லம்" என்று சிங்களவர்கள் சொல்வதுபோல இருக்கிறது மேற்படி கூற்று,.🤣 ஜிஹாதிக்கள் நல்லவர்கள் என்று சிரிய குர்திஸ் இன மக்களும் சிறுபான்மை மதங்களைச் சேர்ந்தவர்களும் குறிப்பாகப் பெண்களும் சொல்ல வேண்டும். குறிப்பு: ஒவ்வொருவருடைய உண்மையான நிறங்கள் வெளிச்சத்திற்கு வருவது நன்மையானதே. 😁
-
சிரியாவின் அசாத்தின் நிலவறைக்குள்…! – சித்திரவதை மற்றும் சொல்ல முடியாத கொடுமைக்கான ஆதாரங்கள்
100% உண்மை. இரு பகுதியினரும் மாறி மாறிக் கழுத்தை அறுப்பார்கள். அறுக்கும்போதும், அறுத்த பின்னரும் இரு பகுதியினரும் அல்லாஹு அக்பர் என்பார்கள். கற்கால மனிதர்கள். 😏
-
சிரியாவின் அசாத்தின் நிலவறைக்குள்…! – சித்திரவதை மற்றும் சொல்ல முடியாத கொடுமைக்கான ஆதாரங்கள்
இத்தனை இலட்சம் பொது மக்களின் இரத்தத்தில்தான் டேவிட் அரசனின் கடவுள் கர்த்தர் ஆசீர்வாதம் வழங்குவார்? கர்த்தர் இத்தனை இரத்த வெறி பிடித்த கடவுளாயிருப்பாரோ ....🤣 சும்மா போங்க வாலி,....தமாஸ் பண்ணுறியள்.
-
சிரியாவின் அசாத்தின் நிலவறைக்குள்…! – சித்திரவதை மற்றும் சொல்ல முடியாத கொடுமைக்கான ஆதாரங்கள்
எல்லாவற்றிற்கும் இரு பக்கங்கள் இருக்கின்றன. அதில் ஒரு செய்தியை கிருபன் இணைத்திருக்கிறார். தற்போது மேற்குலகு கொண்டாடும் Moderate rebels ன் ஒரு பக்கத்தை கப்பித்தான் இணைத்திருக்கிறேன். அம்புட்டுதே. இங்கே முன்னாள் சிரிய ஆட்சியாளர்களை ஒருவருமே வெள்லையடிக்கவோ மறுக்கவோ முனையவில்லை என்பதைக் கவனிக்க வேண்டும். ஆனால் கிளர்ச்சியாளர்களின் ( மத்திய கிழக்கு வாழ் முஸ்லிம்களின்) ஒரு பக்கத்தை காட்டியவுடன் யாழ் களத்தில் சிலருக்கு கோள்வம் பொத்துக்கொண்டு வருவது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. இவர்களுக்கு ஏன் கோள்வம் வருகிறது என்பதை ஆராயும் பணியை வாசகர்களுக்கே விட்டுவிடுகிறேன்.........🤣
-
சிரியாவின் அசாத்தின் நிலவறைக்குள்…! – சித்திரவதை மற்றும் சொல்ல முடியாத கொடுமைக்கான ஆதாரங்கள்
இணையவன், மட்டுறுத்தினராக தாங்கள் இருந்துகொண்டு நியாயமாக நடந்துகொள்ளாதவர் என்பது அனுபவம். எனவே… உங்கள் கேள்விக்குப் பதிலளிப்பது நேரத்தை வீணாக்கும் செயல். ✋
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்
ஒருபக்கச் செய்திகளை மட்டும் கேட்டு அதனை அப்படியே நம்புவதும் மற்றவர்கள் அதனை மட்டும் நம்ப வேண்டும் என்று வற்புறுத்துவதும் மற்றைய தரப்புச் செய்திகளை இணைப்போரை எதிரிகளாகக் கொள்வதும் சரியான அணுகுமுறை அல்ல என்பது எனது உறுதியான நம்பிக்கை. ஆனால் ஒரு சிலர் தாங்கள் பொலிடோல் குடித்தால் மற்றவர்களும் பொலிடோல் குடிக்க வேண்டும் என்று வற்புறுத்துகிறார்கள். 🤣
-
சிரியாவின் அசாத்தின் நிலவறைக்குள்…! – சித்திரவதை மற்றும் சொல்ல முடியாத கொடுமைக்கான ஆதாரங்கள்
Moderate rebels சிறுபான்மையினருக்கெதிரான தங்கள் அழித்தொழிப்பை ஆரம்பித்துவிட்டதாக ஏராளமான வீடியோக்கள் வெளிவர ஆரம்பித்துவிட்டன. இளகிய மனமுள்ளவர்கள் இதனைப் பார்ப்பதைத் தவிர்க்கவும். 😏 SYRIA: RADICALS UNLEASH CARNAGE UNDERMINING HTS LEADERS’ GUEST FOR INTERNATIONAL RECOGNITION (VIDEOS, 18+) https://southfront.press/syria-radicals-unleash-carnage-undermining-hts-leaders-guest-for-international-recognition-videos-18/
- மத அடையாள தேசம்: உருவாகிவிட்ட யூத இஸ்ரேலும், இந்துத்துவம் உருவாக்க விரும்பும் இந்து இந்தியாவும்
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
ஒரு பழைய மாணவன் தனது முன்னாள் பாடசாலைக்குப் போவதானாற்கூட , வாசலில் நிற்கும் காவளாளியிடம் அனுமதி பெற வேண்டும். பின்னர் அலுவலகப் பியோனிடம் அனுமதி பெற்று தலைமையாசிரியரையோ அல்லது பொறுப்பாசிரியரையோ சந்தித்து அனுமதி பெற்றுத்தான் தனது பாடசாலையச் சுற்றிப்பார்க்க முடியும். இது பாடசாலைகளுக்கு அல்லது கல்லூரிகளுக்குச் சென்ற பழைய மாணவர்களுக்குப் புரியும். 😁
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
திண்ணையில் குந்திக்கொண்டு இருந்த ஆட்களுக்கு, பள்ளிக்கூடத்தைக் கட்டி, சீருடை கொடுத்து, புத்தகம் பென்சில் கொடுத்து, உயர் கல்வியை இலவசமாகக் கொடுத்து, அங்கே கற்பதற்கு பணமும் கொடுத்து, படிப்பு முடிய வேலையும் கொடுத்துவிட, கல்வி என்பது தன்னைப் பண்படுத்துவதற்குப் பதிலாக அந்தக் கல்வித் தகமையை கொழுத்த சீர்தனத்திற்கு மூலதனமாகப் பாவித்த யாழ்ப்பாணீஸ் க்கு இதுவும் தேவை. இதற்கு மேலும் வரும் யாழ்ப்பாணீஸ் இப்போ தலையில் கை வைத்தபடி,........ 🤣
-
சர்ச்சைக்குரிய குருந்தூர்மலைக்கு விஜயம் செய்த எம்.பி ரவிகரன்!
தவறான நேரம், காலம். சிங்களத் தேசியர்களுக்கும் டமில் தேசியர்களுக்கும் தடியெடுத்துக் கொடுக்கும் வேலை. யார் அனுப்பியது? இந்தியா? யாழ் களத்திலும் இந்த உருவேற்றும் வேலை ஆரம்பமாகி வீறுநடை போடுகிறது. ☹️
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்
அது ஏலவே தொடங்கிவிட்டது. எமது நிலைதான் துருக்கிய குர்தீஸ் மக்களுக்கு. மேற்குலகால் அவர்கள் கைகழு நட்டாற்றில் விடப்படுவர். துருக்கி அவர்களைத் தின்று தீர்க்கும். சிரியாவில் இஸ்ரேல் சிரியாவின் தென் மேற்குப் பகுதியை ஏப்பம் விடத் தொடங்கிவிட்டது. துருக்கி சிரியாவின் வட பகுதியை ஏப்பம் விடத் தொடங்கிவிட்டது. மேற்கை நம்பினோர் கைவிடப்படுவர். அனுபவம். ☹️
-
சிரியாவின் முன்னாள் ஜனாதிபதி ரஷ்யாவில் தஞ்சம்!
ஜெரூசலேம் போஸ்ற் இன் இன்றைய தலையங்கம். Assad falls, Khamenei wobbles: Will events in Syria lead to something similar in Iran? - analysis https://m.jpost.com/middle-east/article-832724
-
சிரியா: 'அசாத் நாட்டை விட்டு வெளியேறிவிட்டார், நாடு விடுவிக்கப்பட்டது' எனக் கூறும் கிளர்ச்சியாளர்கள்
துருக்கியைக் கையாள்வதற்கு இருக்கவே இருக்கிறது PKK Kurdistan Workers Party பிறகென்ன,..வெடிக்குப் பஞ்சாமா என்ன,.?
-
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா மீது யாழ்.பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு
சிறீலங்கன் Trump 🤣
-
இந்தியாவிலிருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்வதற்குக் கோரிக்கை!
வெங்காயத்திடமிருந்து வெங்காயம் இறக்குமதி,......😁
-
அமெரிக்க கேபிடல் கலவரத்தில் ஈடுபட்டோருக்கு ட்ரம்ப் மன்னிப்பு!
Kpital ? 🤣
-
அதிதீவிர சிகிச்சை பிரிவில் முன்னாள் எம்.பி சிவாஜிலிங்கம்.
ஆயிரம்தான் சொன்னாலும் சரி பிழைகளுக்கப்பால் தனது கொள்கையில் உறுதியாக நிற்கும் மனிதன். நலம்பெற வேண்டும்.