Everything posted by Kapithan
-
கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
அவரை விடுங்கள். அவர் சராசரி அரசியல்வாதி என்று நிரூபித்து பல காலம் ஆகிவிட்டது. அவருக்கு வெள்ளையடிப்வர்களது அட்டகாசம்தான் சகிக்க முடியவில்லை. 😏
-
முள்ளிவாய்க்கால் செல்வதை தவிர்க்கும் மெல்கம் ரஞ்சித்
மகிந்தவின் தயவால் கர்தினாலாக (Cardinal) வந்தவர் எப்படி முள்ளிவாய்க்கால் செல்வார்?
-
இராணுவத்தின் காணிகளை விடுவிக்குமாறு மக்கள் கோரவில்லை: தமது சொந்த காணிகளையே கோருகின்றனர் - ஆளுநர் தெரிவிப்பு
ஆளுநரது பெயரை சிறியர் சுமந்திரன் என்று கவனக் குறைவாக வாசித்திருப்பார், உடனே கோபம் கண்மண் தெரியாமல் வந்திருக்கும். பொரிந்து தள்ளிவிட்டார்........🤣
-
கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
என்ன இப்புடி பொசுக்கென்று போட்டுடைச்சுவிட்டீர் ? சாயம் கழன்றுவிட்டது என்றவுடன் மீரா தன்னையறியாமலேயே தன்னை அடையாளம் காட்டிவிட்டார் ,....🤣
-
கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
யாம் ஏற்கனவே மேலே கூறியதைத்தான் சிறீதரன் MP யும் சொல்கிறார். சவால் விடுகிறார். ""ஏலுமென்றால் நிரூபியுங்கள் பார்ப்போம் "" நான் ஒருபோதும் எவருக்கும் சிபாரிசு செய்யவில்லை என்று அவரால் கூற முடியவில்லை. இறுதியில் இன்னுமொன்றையும் மறைமுகமாகச் சொல்கிறார். ஒன்றரை லட்சம் மக்களைக் கொண்ட கிளிநொச்சி க்கு இந்தத் தொகையில் liquor bar என்பது அதிகம் அல்ல. ஆனால் bar ன் அடர்த்தி கிளிநொச்சி நகரப் பகுதியில் அதிகமாக அமைந்துள்ளது. அதுதான் பிரச்சனை என்கிறார். எங்கப்பன் குதிருக்குள் இல்லை என்று தம்பட்டமடித்த யாழ் களத்தினர் ஓட்டைச் சிரட்டையில் தண்ணீரை நிரப்பி அதற்குள் குதித்துத் தற்கொலை செய்துகொள்ளலாம். அவர்களின் சாயம் கழன்றதுதான் மிச்சம். 😏
-
கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
அனுபவஸ்தர் இப்படி மேலெழுந்த விதமாகக் கதைக்கக் கூடாது. சுய கட்டுப்பாட்டிற்கும் easy access க்கும் இடையிலான வேறுபாடு தெரியாத ஆள் தாங்கள் அல்ல.
-
கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
உங்கள் வாயில் சர்க்கரையை அள்ளிக் கொட்ட,.....🤣 உந்த ஆர்ப்பாட்டம் Bar களுக்கு எதிரானதே தவிர சிறியருக்கு எதிரானது அல்ல. சிறியரை இதற்குள் இழுத்துவிட்டு தாங்களாகவே மாட்டிக்கொண்டீர்களே,.. .🤣 தலையில் இருக்கும் கொண்டையை மறைக்க மறந்துவிட்டீர்கள் புலவர்? 🤣
-
கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
கிளிநொச்சியில்அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள்போராட்டம் பிழையானது என்கிறீர்களா? 1) சரியான ஒரு விடயத்திற்காக யாரும் குரல் கொடுக்கலாம். 2) அதே மக்கள்தான் இந்தப் போராட்டத்திலும் நிற்கிறார்கள். 3) தமிழ் மக்களுக்கு எவ்வளவோ பிரச்சனைகள் இருக்க சிறியருக்கு வெள்ளை அடிப்பது, வக்காலத்து வாங்குவதுதான் சிலருக்கு சிலருக்கு முன்னுரிமையாக இருக்கிறது.
-
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த நாடாளவிய ரீதியில் தன்னார்வ தொண்டர் குழு - நளிந்த ஜயதிஸ்ஸ
Over 3.4 Bn people suffering from brain-related diseases globally For the first time in the world, one hundred specially trained brand ambassadors were deployed to educate the public about brain health. The brand ambassadors, selected and trained by the Sir John Kotelawala Defence University and its affiliated hospital, represent various fields across the two institutions. They will focus on raising awareness of “10 Things Right for Brain Health,” a comprehensive guide to fostering brain health. The programme will be implemented countrywide, starting at the grassroots level. The “10 Things Right for Brain Health” campaign emphasises key practices: 1. Healthy eating habits. 2. Staying physically active. 3. Being a good citizen and establishing social relationships. 4. Managing body weight and waist circumference. 5. Avoiding smoking. 6. Managing cholesterol levels. 7. Managing blood sugar levels. 8. Managing blood pressure. 9. Managing positive stress levels. 10. Getting healthy sleep. https://www.dailynews.lk/2024/12/21/local/692484/over-3-4-bn-people-suffering-from-brain-related-diseases-globally/
-
மூளை ஆரோக்கியத்தை மேம்படுத்த நாடாளவிய ரீதியில் தன்னார்வ தொண்டர் குழு - நளிந்த ஜயதிஸ்ஸ
மூளை ஆரோக்கியமா அல்லது மனநலன் தொடர்பானதா? ? 🥺
-
"உண்டியலில் விழுந்த ஐபோன் சாமிக்கே சொந்தம்" - திருப்போரூர் முருகன் கோவிலில் நடந்தது என்ன?
தற்போது இதை வைத்து சமூக வலைத்தளங்களில் சீவுகிறார்கள். வங்கிகளில் எடுத்த கடன் பத்திரங்கள், கிரடிற் காட் கடன் விவரங்களைப் போடலாமா என்று போட்டு வாங்குகிறார்கள். 🤣
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மனிதாபிமானமாவது மயி,.....வது. 2009 க்குப் பின்னர் எனது நலன் மட்டுமே. 😡
-
கொழும்பை வந்தடைந்த சீனக் கப்பல்!
வடக்கு கிழக்கில் வசிப்பவர்கள் இந்தியர்கள் என்று நினைக்கிறது. உண்மையும் அதுதானே.........🤣
-
கிறிஸ்மஸ் மரம் எரிப்பு; சிரியாவில் வெடித்தது போராட்டம்!
எரித்தவர்கள் மனம் திருந்திய நல்ல பயங்கரவாதிகளாக இருப்பினமோ, 🤣
-
கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
சிறியர், ஏலுமென்றால் நிரூபியுங்கள் என்று சவால் விட்டுள்ளார். நான் ஒருவருக்கும் சிபாரிசு செய்யவில்லை. நான் ஒரு Bar license ம் எடுத்துக் கொடுக்கவில்லை என்று சொல்லவில்லையே,.........அதைக் கவனித்தீர்களா? தனது தொகுதியில் 16 license கொடுக்கப்பட்டிருக்கிறது என்றால் அவர்தான் எல்லோருக்கும் முன்னுக்கு நின்று சிபாரிசு செய்தவர்களை வெளிப்படுத்தி இருக்க வேண்டும். அதை விடுத்து சவால் விடுகிறார். உண்மை வெளிவரும் போது நான் சட்டத்திற்குப் புறம்பாக எதுவும் செய்யவில்லையே என்பார் . விக்கியருக்கு உள்ள வெகுளித்தனமும் தனது பிழையை ஏற்றுக்கொள்ளக் கூடிய பெருந்தன்மையும் சிறிதரனுக்கு இல்லாமல் போனது துரதிர்ஷ்டம். இதில் கவனிக்கப்பட வேண்டிய விடயம் என்னவென்றால், யாழ் களத்தில் தங்களை உண்மை விளம்பிகள் என்கிற ரீதியில் கம்பு சுற்றிய பலரின் உண்மை நிறம் வெளித் தெரிய ஆரம்பித்திருக்கிறது. சமூகத்திற்கு தீங்கானது என்று தெரிந்துகொண்டே சிறீதரன் MP யில் தவறை மூடி மறைக்க முயற்சிப்பதன் ஊடாக பலரின் சாயம் வடிந்தோடுகிறது. அப்படிப்பட்டவர்கள் தங்களின் சாயம் வெளுப்பது கூட அவர்களுக்குப் புரியவில்லை. எப்போதோ ஒரு நாள் எல்லாமே வெளிவரத்தான் போகிறது. அதற்காகவேனும் தாங்கள் கொஞ்சம் அடக்கி வாசிப்பது நன்று. 😏
-
கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
எங்கப்பன் குதிருக்குள் இல்லை. 🤣
-
கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
சிறியரின் பதட்டம் சந்தேகத்தை உண்டாக்குகிறது.
-
கிளிநொச்சியில் அதிகரிக்கும் மதுபானக் கடைகள்: மக்கள் போராட்டம்!
நல்ல அறிகுறி. 👏
-
வடக்கில் மக்களுக்கு சேவை செய்வது சவாலான விடயம் - வடக்கு ஆளுநர்
தான் சிபாரிசு செய்ததை வெளிப்படையாக ஆளுநரால் கூற முடியுமென்றால் அதற்கு நியாயமான காரணங்கள் இருக்கும் என யூகிக்கலாம். எனக்குத் தெரிந்த ஒருவரின் மனைவிக்கு குழந்தை பிறந்து பத்து மாதங்கள் கூட ஆகாத நிலையில் அவரை மன்னாருக்கு இடமாற்றம் செய்திருந்தனர். அவரோ மூன்று பிள்ளைகளின் தாய். அவர் தனது நிலையை பரிபூரணமாக அறியத் தந்தும் கல்வி அமைச்சின் ஒரு சிலர் அவரது இட மாற்றத்தை தற்காலிகமாக இடைநிறுத்தி வைக்க தடையாக இருந்தனர். இறுதியில் அவர் ஆளுநர் வரைக்கும் சென்றுதான் தனது இடமாற்றத்தை நிறுத்த வேண்டி ஏற்பட்டது. அது தவிர வட மாகாண கல்வி அமைச்சு என்பது சாதி மதம் பிரதேசவாதம் என்பன தாண்டவமாடும் இடம். அங்கே என்ன நடைபெறுகிறது என்பது அதனுடன் தொடர்புபட்ட ஆட்களுக்கு நன்கு தெரியும். வட மாகாண கல்வி அமைச்சு என்பது கூவம் ஆறு போன்றது.
-
யாழ். போதனா வைத்தியசாலையில் இருந்து நீக்கப்பட்ட தொண்டர் ஊழியர்கள்: சுகாதார அமைச்சிற்கு அழைத்துச் சென்ற அர்ச்சுனா எம்.பி
மிகவும் முட்டாள்தனமான ஆரம்பம். தனது இருப்புக்குத் தானே குழிதோண்டுகிறார். மிகவும் நிதானமாகச் செயற்பட வேண்டிய விடயங்களில் அவசரக் குடுக்கைத்தனமான வேலைகள் எங்கே கொண்டுபோய் விடும் என்பதை இப்போதே யூகிக்க முடியும். Good Luck Dr. அர்ச்சுனா 🥺
-
வடக்கில் மக்களுக்கு சேவை செய்வது சவாலான விடயம் - வடக்கு ஆளுநர்
எல்லோரும் என்று நான் குறிப்பிட்டது சகட்டுமேனிக்கு Dr. ல் குறை கூறுபவர்களை மட்டும்தான். யாழ் பல்கலையில் பாதுகாவலர்கள் முதற்கொண்டு சகல துறைகளிலும் டக்கியரின் ஊடுருவல்களைக் க்ண்களால் கண்டவன் என்கிற வகையில் வைத்தியசாலை நிலவரத்தை நன்கு என்னால் உணரக் கூடியதாக இருக்கிறது. பலருக்கு அது புரிவதில்லை. Dr. சத்தியமூர்த்தி பக்கச சார்பில்லாமல் அல்லது அரசியல்வாதிகளுடன் ஒத்துழைக்காது அங்கே இயங்க முடியுமா? இதற்கு விமர்சிப்பவர்கள் பதில் தர வேண்டும்.
-
கனடாவில் ட்ரூடோ அரசு தப்புமா? இந்திய வம்சாவளி தலைவரின் கட்சி ஆதரவு வாபஸ்
அவரது தேர்தலுக்கு உதவிய சமூக ஊடகங்கள் மேற்குலகின் பண உதவி பெற்றவை என்று தற்போது விசாரணையில் தெரிய வந்துள்ளதாகத் தகவல் வெளிவந்துள்ளது. Justin க்கு உந்தக் கடி போல,..🤣
-
வடக்கில் மக்களுக்கு சேவை செய்வது சவாலான விடயம் - வடக்கு ஆளுநர்
முள்ளிவாய்க்கால் அவலத்தின் பிரதான சாட்சிகளாயிருப்பவர்களில் ஒருவரான Dr. சத்தியன், இலங்கையில் உயிருடன் இருப்பதற்கு எவ்வளவு விட்டுக்கொடுப்புக்களையும் சமரசங்களையும் செய்ய வேண்டி ஏற்பட்டிருக்கும். இதை ஒருவரும் சிந்தித்துப் பார்ப்பதில்லை. யாழ் பல்கலைப் பேராசிரியர், துணை வேந்தர் பதவியில் இருந்து சமூகத்தின் அடிமட்டத்தில் மக்களோடு மக்களாக வேலை செய்யும் கிராம சேவையாளர் வரை அரசியல் தலையீடு நிலவும் சூழலில் அதுவும் டக்கியரின் கட்டுப்பாட்டில் யாழ்ப்பாணம் இருக்கும் சூழலில் யாழ் போதனா வைத்தியசாலையை எத்தகைய சூழலில் நிர்வகிக்க வேண்டி இருக்கும் என்பதையும் எமது புலன் பெயர் வியாபாரிகள் உணராமல் விசிலடிச்சான் குஞ்சுகளாகவும் பக்கவாத்தியக் காறர்களாகவும் இருப்பது வருந்தத் தக்கது. ☹️
-
வடக்கில் மக்களுக்கு சேவை செய்வது சவாலான விடயம் - வடக்கு ஆளுநர்
சுமந்திரனுக்கு டமில் தேசிக்காய்களிடம் அரசியல் செய்யத் தெரியாது. அவர் எதனையும் மறைக்காது நேராகப் பேசுவது என்பது எல்லோரும் அறிந்ததே. ஆனால் அவர் இலங்கையின் அதி உயர் மன்றத்தில், பிரதிநிதிகள் எல்லோரும், தான் பிரதிநிதித்துவம் செய்த மக்களைப் பார்த்து சிரிக்கும்படி செய்யவில்லை. சிறீதரன் போன்று வாயைத் திறக்காமல் (அவருக்கு வாயைத் திறக்கத் தெரியாது என்பது வேறு 😉) நமுட்டுச் சிரிப்புச் சிரித்தபடி 20 Bar Licence எடுத்து விற்றிருந்தால் உந்த புலன் பெயர் சமூகம் அவரைத் தலையில் வைத்துக் கொண்டாடியிருக்கும். உந்தத் திருவிளையாடல் உவருக்குத் தெரியாமல் போனது சுமந்திரனின் துரதிஸ்ரமே. அதில் ஒருவர் Dr. சத்தியமூர்த்தி. அவரை உயிருடன் விட்டு வைத்திருப்பதே பெரிய சாதனைதான்.
-
கனடாவில் ட்ரூடோ அரசு தப்புமா? இந்திய வம்சாவளி தலைவரின் கட்சி ஆதரவு வாபஸ்
🤦🏼♂️ Donald Trump மீதான கொலை முயற்சிகள், அவரை அரசியலில் இருந்து அகற்றுவதற்காக மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முயற்சிகள் என்பன எனது கற்பனை அல்லவே,.Facts. Canada, Germany, France, Grorgia போன்ற நாடுகளில் ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி என்பதும் Facts. இதில் அகதி, சோசல் காசு, பிள்ளைப் பேறு, கவுன்சில் வீடு என்பன எங்கே வருகிறது? இந்த உண்மைகளை எந்தவித காய்ப்பு உவர்ப்பும் இன்றிக் குறிப்பிட்டுச் சொன்னால் சிலருக்கு கோபம் வருகிறது? கோபம் வரக் காரணம் என்ன?