Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by நியாயம்

  1. நான் உவப்பானவற்றுக்கு சில சமயங்களில் ஆதரவு அளிக்கின்றேன். ஆனால், உவப்பானவை எல்லாம் உண்மை என நம்புவது இல்லை. உண்மைகள் பல கசக்கவே செய்யும். நீங்கள் ஈரான் ஏவிய ஏவுகணைகள் போயிங்க் விமானத்தை விட வேகம் குறைவானது என எப்படி கணித்தீர்கள் என அறியத்தாருங்கள். அதன் உண்மை தன்மையை பார்ப்போம். உங்களுக்கு உவப்பாக இருக்கவேணும் என்பதற்காக உண்மைக்கு புறம்பாக நீங்கள் வேகத்தை குறைத்து மதிப்பிட்டீர்களா என பார்ப்போம்.
  2. நான் இரண்டு பகுதிகளின் ஊடகங்களையும் அவதானிக்கின்றேன். மத்திய கிழக்கில் ஏற்படும் ஸ்திரமற்ற தன்மை எமக்கும் பல பாதிப்புக்களை ஏற்படுத்தும். விமான பயணங்கள் தொடக்கம், எரிபொருட்கள் விலையேற்றம், வேலை வாய்ப்புக்கள் என பல ரூபங்களில் எமது வாழ்வாதாரங்களை பலவீனப்படுத்தலாம். உளவியல் போர், ஊடக/பிரச்சாரப்போர் பெரும் எடுப்பில் நடக்கின்றது. எமக்கு இலங்கை உள்நாட்டு போர் காரணமாக நீண்ட வாழ்வியல் (அவல) அனுபவம் உள்ளமையால் நடப்பு மத்திய கிழக்கு பிரச்சனைகளில்; பல விடயங்களை பொது சராசரியை விட அதிகளவில் கிரகிக்கக்கூடிய ஆற்றல் உள்ளது. இவ்வாறே போரில் நேரடியாக பாதிக்கப்படும் மக்கள் மீதும் கரிசனை உள்ளது. திரிவுபடுத்தப்படும் செய்திகள், பிரச்சார உத்திகள், இதர விகாரங்கள் கண்டுகொள்ளப்பட கடினமானவை அல்ல.
  3. விரும்பியோ விரும்பாமலோ சிங்களவருடனே இலங்கையில் சேர்ந்து வாழ்கின்றோம், சேர்ந்து வாழ்வோம். தமிழர் எனும் ஒரே காரணத்திற்காக அயோக்கியர்களுக்கு ஆதரவு கொடுக்க முடியாது. அதேசமயம் சிங்கள அரசியல்வாதிகள் யோக்கியர்கள் என்றும் இல்லை. நீங்கள் இலங்கைக்கு வந்து சிறிதுகாலம் வாழவேண்டும். அப்போது பல விடயங்களில் உங்களுக்கு தெளிவு கிடைக்கலாம்.
  4. என்ன சார் நெத்தன்யாகுவை எல்லாம் எக்ஸ் தளத்தில் பின் தொடர்கின்றீர்கள். நீங்கள் ரொம்ப பயங்கரமான ஆள்தான் போல. சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் மூலம் பிடியாணை பிறப்பிக்கபெற்ற உத்தமர் இவர்தானே?
  5. ஆம் ஐயா. ஆடி ஆடி வானத்தில் மிதந்து வந்த ஈரானின் ஏவுகணைகளை இஸ்ரேல் கல்லெடுத்து கட்டபோலில் வைத்து அடித்து கையால் விழுத்தியதாக மேற்குலக ஊடகங்கள் பேசி பெருமைப்படுகின்றார்கள்.
  6. களவாணிக்கூட்டத்திற்கு தோள்கொடுப்பது உங்கள் சொந்த விருப்பம். தமிழ்த்தேசியத்தை அணிந்துள்ள குருக்கள்மார் ஏதும் செய்யலாம் என்பதை நாம் காலம் காலமாக காண்கின்றோம். பிழைக்க தெரிந்தவர்கள் இவர்கள்.
  7. மேற்கோளில் காண்பிக்கப்படுவது பற்றிய எனது அபிப்பிராயம் ஒருபுறம் கிடக்க, முதலில் இந்த மேற்கோளை நான் எழுதவில்லை. இது செய்தியில் வந்துள்ளது.
  8. வெறும் போத்தல் அல்லாமல் போத்தலை சுற்றி பற்றி பிடிக்கும் பத்து கைகள் பொதுசின்னம் எப்படி? ஆளாளுக்கு தங்கள் சுய தேவைகளை பூர்த்திசெய்ய தமிழ்த்தேசியத்தை போர்த்து உள்ளார்கள்.
  9. விரிவான பதில்களுக்கு நன்றி புத்தன். கே.இன்பராசாவின் யூரியூப் காணொளிகளை நானும் முன்பு பார்த்துள்ளேன். சுவிஸ் துவாரகா விடயத்தில் தேசிய தூண்களே இங்கு சரிந்ததை நாம் பார்த்தோம். இந்தியாவுக்கு எல்லாரும்தான் அடிக்கடி போய் வருகின்றார்கள். பல தரப்பினரையும் உள்ளடக்கிய அரசியலே முழுமையான ஜனநாயகமானது. புனர்வாழ்வு பெற்ற முன்னாள் விடுதலை புலிகள் அமைப்பின் போராளிகள் சுயேட்சை குழுவாக தேர்தலில் போட்டியிடுவது தவறாக தெரியவில்லை.
  10. வரலாற்றில் இடம்பெற்ற பெரும்போர்கள், அதில் ஏற்பட்ட அழிவுகள் பற்றி சரித்திரத்தில் கற்றுள்ளோம். எமது காலத்தில் அதை இப்போது காண்கின்றோம். எதுவும் நிரந்தரம் இல்லை. ஒரு புறம் ஹமாஸ், ஹிஸ்புல்லா, ஈரான் எல்லாம் சேர்ந்து குழுவாக இயங்குகின்றன. மறுபுறம் அமெரிக்கா, இஸ்ரேல் தரப்பு. எமது போராட்டத்தில் குழுநிலை இல்லை. இல்லாவிட்டால் ஆயுதங்கள் மெளனிக்க வாய்ப்பில்லை.
  11. கொள்கை ரீதியாக பார்த்தால் சோசலிஸ்டுகளுடன் தமிழ்த்தேசியம் இலகுவாக கைகோர்க்க வேண்டுமே? சோசலிசத்தின் அத்திவாரத்தில் தானே விடுதலை புலிகள் அமைப்பு கட்டப்பட்டது? விடுதலை புலி உறுப்பினர்கள் எடுக்கும் உறுதிமொழியில் (முன்பு) சோசலிட் நாடு எனும் பதம் வருகின்றது அல்லவா? சிங்கள சோசலிஸ்டுகளும் தமிழ் சோசலிஸ்டுகளும் ஒன்று சேர்ந்து பயணித்தால் தமிழ்த்தேசியமும் சிங்களதேசியமும் மதிப்பிழந்து போய்விடும் என இரு இனத்தின் தேசிய தூண்களும் எண்ணுகின்றார்களா? @putthan நீங்கள் இன்னமும் கே. இன்பராசாவின் சுயேட்சை குழுவுக்கு தூண்கள் வழங்கக்கூடிய ஆதரவு பற்றி தெளிவாக ஏதும் தெரிவிக்கவில்லை.
  12. அரசாங்கத்தை விடுங்கள். மில்லியன் டொலர் கேள்வி என்ன என்றால் நமது தூண்கள் இவர்களை ஏற்றுக்கொள்ளுமா என்பதுதான்.
  13. வெற்றி வெற்றி வெற்றி என சங்கே முழங்கு! ஊஊஊஊஊ
  14. இஸ்ரேல் மூலம் ஆயுதங்களை மெளனிக்க வைக்கமுடியாது. ஆனால், ஆயுதரீதியான பலத்தை பெருமளவில் பலவீனம் செய்யமுடியும். வழங்கல்களையும் பெருமளவில் கட்டுப்படுத்தமுடியும். இவ்வாறே ஆளனிகளையும் குறிப்பிட்டளவு பலவீனம் செய்யமுடியும். ஈரான் விமானங்கள் பேரூட்டில் தரை இறங்குவதற்கு தடை விதித்துள்ளார்கள். மீறினால் பேரூட் விமானநிலையத்தை தாக்குவோம் என எச்சரிக்கை செய்துள்ளார்கள். இவ்வாறே ஒரு பகுதி லெபனான்-சிரியா எல்லையிலும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு உள்ளது. இவை எல்லாம் கூறுவன என்ன என்றால் ஹிஸ்புல்லாவிற்கு முன்புபோல் இனி ஆயுதங்கள் கிடைக்கப்போவது இல்லை. ஏற்கனவே உள்ள ஹிஸ்புல்லாவின் ஏவுகணைகள், ஆயுத கிடங்குகள்/களஞ்சியங்களை தேடித்தேடி மோப்பம் பிடித்து அழித்துவிடுவார்கள்.
  15. இங்கு பெரியதொரு வித்தியாசம் என்ன என்றால் ஹமாஸ்/ஹிஸ்புல்லா ஆயுதங்களை மெளனிக்கபோவது இல்லை.
  16. யாழ் கருத்துக்களத்தில் உள்ள தமிழ்த்தேசிய தூண்கள் இவர்களுக்கு ஆதரவு அளிப்பார்களா என அறிய ஆவல். சுரேஸ் பிரேமச்சந்திரன், சித்தார்த்தன் தொடக்கம் விநாயக மூர்த்தி முரளிதரன், பிள்ளையான் வரை அரசியலில் ஈடுபடலாம் என்றால் இவர்களுக்கு அரசியலில் கிடைக்கக்கூடிய இடம், பெறப்படக்கூடிய இடம் என்ன?
  17. புதிய ஜனாதிபதி அநுரவின் கட்சிக்கு கணிசமான அளவு வாக்குகள் வடக்கு/கிழக்கில் வரும் பொதுதேர்தலில் கிடைக்கலாம். ஆனால் அவை ஆசனத்தை பெறுவதற்கு போதுமானதாக அமையுமா என்பது சந்தேகமே.
  18. புலனாய்வு, ஆயுதங்கள், தொழில்நுட்பம், நிதியுதவி.. சகல வளங்களையும் இஸ்ரேலுக்கு வழங்கிவிட்டு அமெரிக்கா வேடிக்கை பார்க்கின்றது. தற்போது அமெரிக்காவின் சொல்லையே இஸ்ரேல் காது கொடுத்து கேட்பதாக இல்லை. அமெரிக்காவின் ஸ்திரமற்ற அரசியல் நிலவரத்தை இஸ்ரேல் தனக்கு சாதகமாக பாவிக்கின்றது. இங்கே அமெரிக்காவுக்கு தேவை இல்லாத நேரத்தில் மத்திய கிழக்கில் போரில் நுழையவேண்டிய ஆபத்து ஒருபுறம். மறுபுறம் செலன்ஸ்கி அரித்து எடுக்கின்றார். உக்ரைனுக்கு வளங்களை கொட்டவேண்டிய நிர்ப்பந்தம் அமெரிக்காவிற்கு. அமெரிக்கா வங்குரோத்து அடிக்கும் காலமும் வரலாம். மறுபுறம் சீனா, ரஷ்யா, வட கொரியா தமது கத்திகளை கூர்மைப்படுத்துகின்றன. மிக வேகமாக பல மாற்றங்கள் உலகில் நடந்தேறுகின்றன. தொடர்ந்து அவதானிப்போம். பெரும் போர்ஏற்படுமாயின் வெளிநாட்டு சீவியத்தை விட இலங்கை பாதுகாப்பான நாடோ என எண்ணத்தோன்றுகின்றது.
  19. கந்தையர் மனதில் மாற்றம் வந்துவிட்டது. குத்துகல்லாட்டம் கிடந்த மயிலிட்டி இராணுவத்தை நிபந்தனை இல்லாமல் எழுப்பிபோட்டார். அநுரவுக்கு புள்ளடி போட வேண்டும் என மாற்றம் ஒன்றை தன்னில் இருந்து ஆரம்பிக்கின்றார்.
  20. தகவலுக்கு நன்றி வாலி. ஒரே கொள்கை உடையவர்கள் ஒரு குழுவை உருவாக்கி இறக்கலாமோ? சிறியர், குதிரைக்கு கடிவாளம் இல்லை என்றால் உதறிக்கொண்டு தறிகெட்டு ஓடிவிடும். உங்களுக்கு பிடிக்காதது வேறுவிடயம். சுமந்திரன் ஒரு கடிவாளம். அவர் அரசியலில் நிலைக்கவேண்டும் என்பது எனது அவா.
  21. ஜனாதிபதி தேர்தலில் நிற்பதற்கு கட்டுப்பணம் ஆக இலங்கை ரூபாய்கள் 18,000 என ஒரு தகவல் பார்த்தேன். சுயேட்சையாக யாரும் கேட்கலாம். இது சமூக ஊடக யுகம். தமிழரசு கட்சி மூலம்தான் வேட்பாளராகி வெற்றிபெறலாம் என நியதி இல்லை.
  22. பிழையான புரிதல். கோயில்களில் தவம் கிடக்க தேவையில்லை. அநியாயம் செய்யாவிட்டாலே போதும்.
  23. பல்கலைக்கழக மாணவர் என்பது ஒரு தகுதியா? உங்களுக்கு ஆர்வம் என்றால் நீங்களும் வேட்பாளர் ஆகலாம் @ஏராளன்
  24. கடவுள் நம்பிக்கை உள்ளவர்களுக்கு இந்த தர்க்கம் பொருந்தலாம். இது தமிழ் பழமொழி. முன்னோர் ஏதோ காரணத்தினால் இப்படியோர் முதுமொழியை உருவாக்கி உள்ளார்கள். இதை மூட நம்பிக்கை வகையினுள் இடுவது அவரவர் இஸ்டம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.