Everything posted by நியாயம்
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
ஆளாளுக்கு போட்டி போட்டுக்கொண்டு தாம் வரலாறை கரைச்சு குடித்தது போலவும், நேரே நின்று பார்ர்தது போலவும் எழுதுவது யாழ் கருத்துக்களத்துக்கு புதிய விடயம் அல்ல. தமிழீழ விடுதலை புலிகள் செய்த பயங்கரவாதங்களை முன்னாள் புலனாய்வு உறுப்பினர்களிடம் கேட்டால் சொல்வார்கள். தலை சுற்றும். மனிதநேயம் இல்லாத இடத்தில் சுதந்திரம், சுக வாழ்வு எப்படி சாத்தியம்?
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
உங்கள் யாருக்காவது இந்த பகுதிகளுக்கு சென்று பார்த்த நேரடி அனுபவம் உள்ளதோ?
-
வவுனியா தீ வைப்பு சம்பவம் : மேலும் ஒருவர் உயிரிழப்பு !
இலங்கையில் கொலை குற்றங்களுக்கு நீதி மன்றத்தினால் வழங்கப்படும் மரண தண்டனை தீர்ப்பு நிறைவேற்றப்படுவது இல்லை. இலங்கையில் ஒருவரை கொலை செய்வதால் வரக்கூடிய ஆபத்து பற்றிய பயம் இல்லாமல் போய்விட்டது போல. கொலை குற்றத்திற்கு நீதி மன்றினால் வழங்கப்படும் மரண தண்டனை தீர்ப்பு நிறைவேற்றப்படுவது ஒருவேளை இப்படியான கொலைகள் எதிர்காலத்தில் நடைபெறுவதை குறைக்குமோ? சிங்கப்பூர், மலேசியா வழியை இந்த விடயத்தில் இலங்கை பின்பற்றலாமா?
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நானும் இதே கேள்வியை கேட்க நினைத்தேன். ஆழ்ந்த அனுதாபங்கள் குடும்பத்தினர், உறவினர்கட்கு.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
பன்முக எழுத்தாளர் சுவை அவர்களிற்கு பிறந்தநாள் நல் வாழ்த்துக்கள்! 🎂🎈
-
இலங்கையில் ஆறு மாதங்கள்
அம்மாச்சி உணவகம் அருமையானதொரு பயனுள்ள திட்டம். நானும் பல தடவைகள் அங்கு சென்று உணவு உட்கொண்டு உள்ளேன். வெவ்வேறு அமைவிடங்களில் உள்ளவை பற்றி நல்லதும், குறைகளுமான அபிப்பிராயங்கள் உள்ளன. கிளிநொச்சி அமைவிடத்தில் உள்ள அம்மாச்சி உணவகம் பற்றிய உங்கள் கருத்து வருத்தமளிக்கிறது. இப்படியான திட்டங்களுக்கு நாமே ஆதரவளிக்காவிட்டால் வேறு யார் செய்வார்கள். உங்களைப்போன்றோர் ஆதரவு நிச்சயம் பல்வேறு பிரச்சனைகளின் மத்தியில் தொழில் செய்யும் பெண்களுக்கு தேவை. இங்குள்ள பணியாளர்கள் எப்படியான அடிகளை வாழ்க்கையில் வாங்கினார்கள் என்பது உங்களுக்கு தெரியாமல் இல்லை. எமது வாய்சுவைக்காக மட்டும் செல்லாது அவர்களை ஊக்குவிக்கவும் அங்கு சென்று உணவு உட்கொள்ளலாம்.
-
செயற்கை நுண்ணறிவு பொறி சட்ஜிபிடி அனுபவங்கள்..!
சிக்கல் தான் உடையார். பல்வேறு புதிய பரிமாணங்களில் புதிய பிரச்சனைகள் உருவாகும். எதிர்காலத்தில் செயற்கை நுண்ணறிவின் பிரயோகம் விடயத்தில் புதிய சட்டங்கள், விதிமுறைகள், ஒழுக்க கோவைகள் என பல உருவாக்கப்படும். அனைவரின் ஒத்துழைப்பும் கிடைத்தால் நன்மை. அல்லது மனித சமூகத்திற்கு தீமையே.
-
செயற்கை நுண்ணறிவு பொறி சட்ஜிபிடி அனுபவங்கள்..!
தகவல்/திருத்தத்திற்கு நன்றி பெருமாள். நான் செய்தியை மேலோட்டமாக பார்த்தேன். இத்தாலியில் தடை என காண்பித்தது. விஞ்ஞானம் & தொழில்நுட்பம், வர்த்தகம்/வியாபாரம், அரசியல், நடைமுறை தனிமனித/சமூக வாழ்வு: இவை ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்தவை. கால தேவதையின் கரங்களில் நாமும் நனைந்து/தழுவுண்டு செல்கின்றோம். மீண்டும் இவ்வுலகில் மனிதனாக பிறக்கும் வாய்ப்பு கிடைத்தால் வாழ்ந்து பார்க்கத்தான் வேண்டும்.
-
செயற்கை நுண்ணறிவு பொறி சட்ஜிபிடி அனுபவங்கள்..!
சட் ஜி பிடியை இத்தாலி நாட்டு அரசு இன்று தடை செய்துள்ளது என சொல்லப்படுகின்றது. சட்ஜிபிடி தனிப்பட்ட/தனிநபர் தகவல்களை சேகரிப்பதும் பயன்படுத்துவதுமான விடயங்களில் உள்ள தெளிவின்மை காரணமாக கூறப்படுகின்றது. இத்தாலியை தொடர்ந்து வேறு நாடுகளும் சட்ஜிபிடிக்கு எதிராக இவ்வாறான கட்டுப்பாடுகளில் இறங்கக்கூடும்.
-
காங்கேசன்துறை - காரைக்கால் (பாண்டிச்சேரி) படகு சேவை ஏப்ரல் 28 இல் ஆரம்பம்
படகில் பயம் இல்லாமல் நம்பி ஏறலாமோ.
-
செயற்கை நுண்ணறிவு பொறி சட்ஜிபிடி அனுபவங்கள்..!
சட் ஜிபிடி தமிழில் புலமை பெற காலம் எடுக்கும். அதன் பிறகு வெண்பா தொடக்கம் ஹைக்கூ வரை எல்லாமே அழகு தமிழில் எழுதி ஜமாய்க்கும் என எதிர்பார்க்கலாம். தமிழில் பாண்டித்தியம் பெற்றவர்கள் செயற்கை நுண்ணறிவு பொறிக்கு தமிழ் கற்பிக்க வேண்டும். விரைவில் நிச்சயம் தமிழ் ஆர்வலர்கள் இந்த விடயத்தில் அக்கறை எடுப்பார்கள்.
-
செயற்கை நுண்ணறிவு பொறி சட்ஜிபிடி அனுபவங்கள்..!
நிச்சயம் காசு பார்ப்பதுதானே இவர்கள் நோக்கம். மட்டுப்படுத்தப்பட்ட அளவில் இலவச சேவையை வழங்குவார்கள். உதாரணமாக 2021 வரை உள்ள தகவல்களை மட்டும் வைத்து செயற்கை நுண்ணறிவு செயல்படுவது போல். நடப்பு, நேரடி தகவல்கள் அடிப்படையில் செயற்படும் செயற்கை நுண்ணறிவு பொறி பயன்பாட்டுக்கு தனிநபர்களிடமும், வர்த்தக தேவைகளுக்கு வெவ்வேறு தரங்களில் கட்டணங்கள் அறவீடு செய்வார்கள். கைத்தொலைபேசி நிறுவனங்கள் போல இவர்களும் ஒரு காலத்தில் வந்துவிடுவார்கள். இத்தனை நிமிடங்கள் பயன்பாட்டுக்கு, இத்தனை கேள்விகளுக்கு, என காசு நன்றாக பார்க்கும் வகையில் இந்த பொறிமுறையை நிர்வகிப்பார்கள்.
-
செயற்கை நுண்ணறிவு பொறி சட்ஜிபிடி அனுபவங்கள்..!
நன்றி @பெருமாள் உங்கள் அனுபவங்களை தொடர்ந்து பகிருங்கள். நான் பலவிதமான பரீட்சார்த்த உரையாடல்கள் செய்து உள்ளேன். பல விடயங்களை இங்கு பகிர்வது உசிதமாக தெரியவில்லை. @putthan இது மற்றையவற்றை விட பலபடிகள் நெருக்கமானதும், உக்கிரமானதும். முழு உலகமும் செயற்கை நுண்ணறிவின்பால் சாயும்போது தனிநபர்கள் என்னதான் செய்யமுடியும்? @Nathamuni நல்ல விடயங்களை முடிவில்லாமல் பட்டியலிடலாம். அருந்துவதற்கு எமக்கு நீர் தேவை. அதே நீர் எம்மை மூழ்கடித்து கொல்லவும் கூடியது. எல்லாம் அளவுடன் நின்றால் நல்லது. ஆனால், அளவு அறிந்து பயன்பாட்டை பெறும் பக்குவம் நமக்கு இல்லையே. @ரதி இந்த பொறியை பரீட்சார்த்தமாக பயன்படுத்துங்கள். பல விடயங்கள் தெளிவாகும். அதேசமயம் புதிய சிக்கல்களும் உருவாகலாம். நன்றி @சுவைப்பிரியன் @நிலாமதி @புங்கையூரன் @ஈழப்பிரியன் @suvy @குமாரசாமி @தமிழ் சிறி @உடையார்
-
எப்படி வெளிக்கிட்டனான்.. இப்படி ஆனேன் - நிழலி
இந்தியா என்றால் விவேக் பகிடிகளில் வருவது போலவே உள்ளது போல.. 🥴 நம்பி விமானநிலையத்தில் உள்ள கதிரையிலேயே உட்கார முடியாது என்றால் கிந்தியன் விமானத்தில் எப்படி பயம் இல்லாமல் ஏறுவது? 😦
-
புலம்பெயர்ந்த ஈழத் தமிழரின் எதிர்காலம் - பகுதி 2
முதற் பகுதியும் இன்றுதான் பார்த்தேன். இலங்கையில் பிறந்து வளர்ந்த எம்மால் மீண்டும் இலங்கையில் வாழ முடியாது என்று இல்லை. ஆனால், வெளிநாட்டு வாழ்க்கையை வாழ்ந்துவிட்டு இலங்கையில் வாழும்போது பலவிதமான மன உளைச்சல்களுக்கு ஆளாகலாம். குளிர்காலங்களில் கிட்டத்தட்ட ஆறு மாதங்கள் ஒவ்வொரு வருடமும் இலங்கையில் நிற்கலாம். இப்போது காசை காட்டித்தான் அலுவல் பார்க்கவேண்டி உள்ளது. நேரடியாக கேட்காவிட்டாலும் எல்லாவற்றுக்கும் மறைமுகமாக காசு/கையூட்டு கேட்கும் நிலை அங்கு உண்டு. பலருக்கும் உள்ள பெரியதொரு பிரச்சனை வண்டி. அங்குள்ள உணவுப்பழக்கங்கள் வேகமாக உடல் நிறையை அதிகரிக்கின்றன. போட்டி, பொறாமை, எரிச்சல், ஏமாற்றல் என எல்லாவற்றையும் இலங்கையில் அதிகளவு உணரலாம்.
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
நன்றி நில்மினி. நான் விவசாய பாடம் எடுக்கவில்லை. ஆசிரியரை நினைவு வரவில்லை. மரவேலை கற்பித்த ஆசிரியர் ஒருவர் இந்திய இராணுவத்திடம் பிடிபட்டு அடிவாங்கினார் என நினைக்கின்றேன். அவர் இப்போது இல்லை என்று கேள்விப்பட்டேன் சரியாக தெரியவில்லை. எமது முன்னாள் ஆசிரியர்கள் பலரும் அகவை இருநூறு நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்கள் என அறிந்தேன். நீங்கள் குறிப்பிடும் பகுதி எனது அம்மம்மாவின் தந்தையின் இடம். அவர் அப்போது பலராலும் அறியப்பட்டவர, கிட்டத்தட்ட 1880 சொச்சம் பிறந்து 1945 சொச்சம் மறைந்தார் என நினைக்கின்றேன். அப்பகுதியில் இப்போதும் ஒரு சில உறவுகள் உள்ளார்கள். ஆனால் பெருன்பான்மையோர் பல்வேறு இடங்களுக்கு சிதறிவிட்டார்கள். அம்மம்மா தந்தை பெயர் குறிப்பிட விரும்பவில்லை. எப்படியும் உங்கள் அடி அந்தப்பகுதி என்றால் ஏதோ ஒரு விதத்தில் எமக்கு தொடர்பு காணப்படும். சுப்பரின் கொல்லைக்குள் தானே எல்லாம் அடங்குகின்றது. முகம் சற்று மாறி உள்ளது. பெளதிகவியல் ஆசிரியர் சோதிராஜ் தானே இவர்? முன்பு மோட்டார் சைக்கிளில் வகுப்புக்கு வருவார். இவரை பார்க்கும்போது ஒரு தமிழ் நகைச்சுவை நடிகர் நினைவுக்கு வருவார்.
-
நில்மினியின் ஒளிப்படங்களின் கதைகள்
@nilmini பல தலவல்கள்; நான் அங்கு வசிக்கவில்லையாயினும் அதிகம் சென்று இடம். எனது அம்மாவின் பக்கம் உறவுகள் முன்பு வாழ்ந்தார்கள். ஓய்வுபெற்ற பரியோவான் கல்லூரி விவசாய ஆசிரியர் பெயர் என்ன? சிவன் விக்கிரகம்/புங்கையூரன் கூறிய அர்த்தநாரீசுவரர் சிலை அழகாக உள்ளது. ஆனால் முன்நோக்கி எடுக்கப்பட்ட படத்தில் உடம்பின்/தோள்பட்டை/நெஞ்சு அளவுக்கு ஒப்பீட்டளவில் பார்க்கும்போது கழுத்து/தலை சரியாக பொருந்தவில்லை. முழுமையாக செதுக்கப்பட்ட சிலை என்றால் ஏன் இப்படி உருவாக்கப்பட்டது என விளங்கவில்லை. பொருத்து சிலையோ தெரியவில்லை. @Nathamuni யாழ் இந்துவோ/செங்குந்தாவோ அல்லது குருகுலமோ? எழுதுமட்டுவாள் பெயர் இப்படி ஒரு அர்த்தம் இப்போதுதான் அறிகின்றேன். அந்த காலத்தில் அங்கு யாழ் இணையம் போல ஏதும் கருத்துக்களம் இயங்கிய காரணத்தால் ‘மட்டு வெட்டக்கூடும் பார்த்து எழுது!’ எனும் அர்த்தத்தில் பெயர் வைக்கப்பட சாத்தியம் உள்ளதோ? @nunavilan சோதிலிங்கம் ஆசிரியரிடம் நானும் சிறிதுகாலம் பெளதிகவியல் கற்றேன். அவர் காலமாகிய செய்தி முன்பு அறியவில்லை. ஆழ்ந்த அனுதாபங்கள்! எவ்வளவு வயது அவருக்கு இப்போது உயிருடன் என்றால்?
-
அவை கொஞ்சம் குறைவான ஆட்கள்?
உள ஆரோக்கியம் பாதிக்கப்பட்டவர்கள் வழமையாகவே நையாண்டி செய்யப்படுகின்றார்கள். குறிப்பாக தமிழ் சினிமா அதை மிக நன்றாக செய்து வந்துள்ளது. இதைவிட பெரிய கொடுமை என்ன என்றால் தங்களுடன்/கருத்துக்கள்/கொள்கைகளுடன் உடன்படாதவர்களை, தாங்கள் எதிர்பார்க்கும் நிலமைக்கு மாறுபாடாக செயற்படுபவர்களை: குறிப்பிட்டவர்களின் செயல் சிறப்பானது என்றாலும் மூளை சுகம் இல்லாதவர்கள் என பட்டம் கொடுக்கப்படுகின்றார்கள். ஒரு உதாரணம் குறிப்பிடுவது என்றால்: தமது பிள்ளை தமக்கு பிடிக்காத ஒருத்தனை காதல் செய்தாலோ/திருமணம் முடித்தாலோ பிள்ளைக்கு மூளை சுகம் இல்லை என கூறுவார்கள்.
-
படம் கூறும் கதைகள்
மணல்வெளியை பார்த்தாலே மிதிவெடிகள், நேவி போர்ட், ஷெல் குண்டுகள், அடிபாடு இவைதான் கண் முன் முதலில் வருகின்றன.
-
படம் கூறும் கதைகள்
மாதகல் மயிலிட்டி தொண்டமானாறு கரையோரமாக செல்லும் இந்து சமுத்திரத்தின் உப்புக்காற்றை கொண்டுவரும் வீதி வழி சென்று உள்ளேன். மிக மோசமான நிலையில் வீதி உள்ளது. நிறைய திருத்த வேலைகள் செய்யவேண்டும். வாகனத்தில் சென்று ஆசனம் புளிக்கின்றது. கிட்டத்தட்ட அந்த கரையோரம் முழுவதும் இப்படியான காட்சிகள் தொடரும். இந்த பெரிய பிரபஞ்சம் எல்லைகள் இன்றி எவ்வளவு பரந்து விரிந்துள்ளது. சற்று உன் கண்களை அகலத்திறந்து பார்த்து, உணர்ந்து அமைதி கொள்வாய் மனிதா!
-
எங்கே கனவுகள் தொலைந்து போனதா-பா.உதயன்
மனம் போல வாழ்வு. அனைத்தும் திரும்ப கிடைக்கும் எமது மனக் கதவுகள் அகலத்திறந்தால்!
-
நடுவீதி...
வீதிக்கு வந்து கையேந்துபவர்களை நான் மட்டுக்கட்டுவதை தவிர்க்கவே விரும்புவது. முடியுமானால் வாகனத்தில் சில்லறைகள் கிடந்தால் எடுத்து கொடுப்பேன். நான் விரைவாக அலுவல்கள் நிமித்தம் செல்லும்போது அவர்களை கண்டு கொள்வது, முகத்தை பார்ப்பது கூட இல்லை. ஆனால், இவர்கள் மூலம் விபத்துக்கள் ஏற்படாதபடி அவதானம் தேவை. காலம், சூழ்நிலை, வசதி, வாய்ப்புக்கள், உறவு, நட்பு, சமூகம் என பல விடயங்கள் எமது வாழ்க்கையின் நிலமையை தீர்மானிக்கின்றன. எமக்கு கிடைத்த வசதி, வாய்ப்பு, அறிவு, ஆரோக்கியம், இனிமை, சுகம், செளகரியங்களுக்கு நாம் நன்றி கூறுவோம். வாழ்க்கையில் இக்கட்டான நிலையில் உள்ளவர்களில் கரிசனை அவசியம். 🙏🏾🙏🏾🙏🏾
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
நான் மோபைல் மூலம் யாழ் கருத்துக்களத்தினுள் உள் நுழையும்போது தன்னிச்சையாக சிறிதுநேரத்தில் வெளியேற்றப்படுகின்றேன். பிரைவேட் மோடில் உள்நுழைவது இதற்கு காரணமா? இப்படி உங்கள் வேறு யாருக்காவது ஏற்படுகின்றதா? எதையாவது எழுதும் போது சிறிதுநேரத்தில் நான் எனது கணக்கில் இருந்து லொக் அவுட் ஆக்கப்படுவதால் கருத்துக்களை இடுவது சிரமமாக உள்ளது. இப்படி கடந்த ஒரு ஆறு மாத காலமாக உள்ளது என நினைக்கின்றேன்.
-
காக்கா நரிக் கதை #I ain’t playin - ஒரு நிமிடக்கதை
நேற்று இன்னோர் சுய ஆக்க பகுதியில் பூமிக்கு வெளியில் இன்னோர் கோளில் நின்று பூமியை தரிசிக்கும் ஓர் சிந்தனை பகிரப்பட்டது. அப்படியான கற்பனை சுவாரசியத்தை ஏற்படுத்தியது, சிந்தனையை தூண்டியது. அவ்வாறே உங்கள் சுய ஆக்கத்தில் காலங் காலமாக கூறப்படும் இந்த காகம்-வடை-நரி கதையில் நரி, காகம் ஆகியவற்றின் உளப்பாடு பற்றி கற்பனை செய்வது சிந்தனையை தூண்டுகின்றது. மிருகங்களின் மொழி, பறவைகளின் மொழி வேறுபட்டாலும் அடிப்படையில் நாம் உட்பட தக்கன பிழைத்தல் பற்றிய கொள்கையின் கீழ் அனைவரும் கட்டுப்படுகின்றோம். வாழ்வாதார போட்டி!
- மனிதா உன்னைத்தான்!