Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by நியாயம்

  1. இவை மனித எலும்புக்கூடுகள் என்பதை அடையாளம் கண்டுள்ளார்களா அல்லது இவை எவருடைய எலும்புக்கூடுகள் என அவற்றுக்குரிய தனிநபர்களை அடையாளம் கண்டுள்ளார்களா?
  2. நான் தலையின் உரையை கேட்கவில்லை. விளங்க நினைப்பவனுக்கும் விளங்கியது எது என எனக்கு விளங்கவில்லை. ஆனால், கிருஷாந்தி குமாரசாமி பற்றிய தேடல் செய்தபோது அவரை காணவில்லை என்பதை அறிந்து காவலரண் சென்று விசாரித்த தாயார், சகோதரர், அயலவர் ஆகியோரும் கொலை செய்யப்பட்டார்கள் என தகவல் உள்ளது. In 1997, we were part of a campaign calling for action against soldiers who raped and killed a Tamil schoolgirl, Krishanti Kumaraswamy, while she was in custody. Her mother, brother and a neighbour who went looking for her were also murdered. https://web.archive.org/web/20070614032831/http://www.unesco.org/courier/1999_09/uk/dires/txt1.htm
  3. தலை தடைகள் எல்லாம் தாண்டி அரசியலில் தொடர்ந்து நிலைப்பார் என்றே தோன்றுகின்றது.
  4. 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்களா? 1200 மில்லியன் அமெரிக்க டொலர்கள். நம்பக்கூடிய மாதிரி இல்லையே. இவ்வளவு முதலீட்டை எப்படி பெற்றார்கள்? இந்த நிர்மாணிப்பு எங்கே இடம்பெறுகின்றது? 1.2 பில்லியன் அமெரிக்க டொலர்கள் என்றால் நிச்சயம் பிரமாண்டமானாக அமையும் என ஊகிக்கலாம்.
  5. 2000 - 2003 யாழ் மருத்துவபீடத்தின் பீடாதிபதி என செய்தியில் உள்ளது. பீடாதிபதி பதவி யார் தயவினால் கிடைத்தது? இவருக்கு பல தகமைகள் உள்ளன. ஆனால் பதவியேற்கும் இந்த பல்கலைக்கழகம் தனியார் பல்கலைக்கழகம். இவரிடம் ஏதோ உள்ளமையால் தானே இந்த பதவியை தனியார் நிறுவனம் வழங்குகின்றது?
  6. சிறிது தேடல்கள் செய்து பார்த்தேன். இது உண்மை இல்லை போல தெரிகின்றது. தெண்டூல்கர் தனது மகனை கிரிக்கெட்டில் முன்னிலைக்கு கொண்டு வர பாடுபட்டார். சரிவரவில்லை. தற்போதைய இந்தியன் கிரிக்கெட் கப்டனுக்கும் இவர் மகனுக்கும் ஒரே வயதுதான். மகள் மகனை விட வயதில் மூத்தவர் என நினைக்கின்றேன்.
  7. கில்/ஜில் என்பவர் தெண்டூல்கரின் மருமகனா? மருமகன் என்றால் எந்த முறையில் மருமகன்? நான் இப்போதுதான் இதுபற்றி அறிகின்றேன். 20/20 துடுப்பாட்ட வீரர் சாய் சுதர்சனை 5நாள் போட்டியில் சேர்த்தது பயன் அளிக்குமா? இவரால் தனது திறமையை டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு வெளியில் நிரூபிக்க முடியுமா?
  8. ஐந்து போட்டிகளில் மூன்று போட்டிகளில் இந்தியா வெல்லும் என தெண்டூல்கர் கணித்துள்ளதாக ஒரு தகவல் வாசித்தேன். முதலாவது இந்தியா தோல்வி. இவர் எதிர்வுகூறல் எப்படி என்று பார்ப்போம்.
  9. ஆறாம் நூற்றாண்டுக்கு எந்த பெண்களையும், மக்களையும் முல்லாக்கள் கொண்டு சென்றார்கள்? தமிழ் பெண்களையா? தமிழ் மக்களையா? ஆப்கானிஸ்தான், ஈராக் நாடுகளில் அமெரிக்கா சாதித்தது என்ன என்று கூறுங்கள்? அங்கே உள்ள பெண்கள், மக்கள் அமெரிக்க அரசின் போர் தொடுப்பின் பின் சுதந்திரமாக, மகிழ்ச்சியாக முல்லாக்களின் கட்டுப்பாடுகள் இல்லாமல் இப்போது வாழ்கின்றார்களா? இஸ்ரேலில் உள்ள மக்கள் சுதந்திரமாக, மகிழ்ச்சியாக வாழ்கின்றார்களா? ஆயுத பலம் உள்ள இடத்தில் மகிழ்ச்சி, சுதந்திரம் உள்ளதா? இங்கு உள்ள வெவ்வேறு கருத்துக்கள் ஒவ்வொருவரின் விருப்பு, வெறுப்புக்களை காட்டுகின்றன. இவை 2009 போரின் முடிவுகளை மாற்றியமைக்குமா தெரியவில்லை. அண்மையில் வவுனியாவில் மனைவி தலையை கொய்த தமிழ்மகனின் செயலுக்கு வந்து குவிந்த பாராட்டுக்கள், வாழ்த்துக்களை பார்த்தால் தமிழ் சமுதாயம் ஆறாம் நூற்றாண்டையும் தாண்டி பின்னால் ஓடும்போல் உள்ளதே.
  10. டிரம்ப் ஐயா டிரில் பேபி டிரில் என கூறியுள்ளார். வெய்யில் அகோரம் என்றால் ஏசிக்குள் உட்காரவேண்டியதுதானே ஐயா. மத்திய கிழக்கு நாடுகளில் சவூதி, டுபாய்க்காரர் வாழும் வாழ்க்கையை அமெரிக்கர்கள் வாழ முடியாதா? அனைத்துலக வியாபார மையம் மத்திய கிழக்கு நோக்கி நகரும்போது அங்குள்ள வெப்ப தட்பத்தை அமெரிக்கர்கள் உணர்ந்தால் நல்லதுதானே.
  11. ரஞ்சித் பகிர்ந்த சொந்த கதை முன்பு வாசித்துள்ளேன். சில விடயங்கள் கிரகிப்பதற்கு கடினமானவை. இப்படியும் நடக்குமா என எண்ண தோன்றும் அதேசமயம் தந்தையார் என்ன மன/உள பாதிப்பு அடைந்தாரோ எனவும் சிந்தித்தேன். உலகில் எமது பெற்றோரின் அன்புதான் முதன்மையானது. அவர்கள் அரவணைப்பிற்கு பின்னர்தான் மிகுதி எல்லாம் வருகின்றது. ஆனால் முதன்மை நிலை அன்பு/அரவணைப்பு மறுக்கப்படும்போது ஒருவரின் வாழ்க்கையே சூனியமாகிவிடும். ஒவ்வொருவரும் தனித்துவமானவர்கள். ஒவ்வொருவர் வாழ்க்கையும் தனித்துவமானது. மிகவும் கடினமான, கரடு முரடான பாதையை கடந்து வந்துள்ளீர்கள். உங்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்த பரிசுத்த ஆத்துமன் அமைதியில் இளைப்பாறட்டும்!
  12. @வீரப் பையன்26 ஈரானிடம் சவுண்ட் விட்ட அளவிற்கு சரக்கு ஏதும் இல்லை. சரக்கு இல்லாமல் சவுண்ட் விட்டது பெரிய தவறு. இது மற்றைய பல நாடுகளுக்கும் நல்லதொரு படிப்பினை. வான் எல்லை பாதுகாக்கபட முடியாத நிலையில் அணுவாயுதமும் பயன் அற்றது.
  13. @வீரப் பையன்26 ஈரானிய வெளிவிவகார அமைச்சர் இரசியா செல்வதாக ஒரு செய்தி பார்த்தேன். ஈரானின் வேண்டுதல் வான் பாதுகாப்பு ஆயுதங்களாக அமையலாம். ஈரான் தனது வான்பரப்பை பாதுக்காக்க முடியாத நிலையில் இஸ்ரேல் தாக்குதல்களுக்கு ஈடு கொடுக்க முடியாது. இஸ்ரேல் ஒரு கிழமையில் ஈரான் தமது கட்டுப்பாட்டுக்குள் விழும் என தவறாக கணித்து விட்டார்கள். கடந்த வியாழ கிழமையின் போது உலகமே வியக்கும்படி சரித்திரத்தில் நிலைக்கும்படியான ஒரு சம்பவம் இடம் பெறும் என இஸ்ரேல் தரப்பில் கூறப்பட்டது. அப்படி சொல்லிக்கொள்ளும்படியாக எதுவும் நடைபெற்றதாக தெரியவில்லை. ஈரானின் உளவு கண்காணிப்பு இஸ்ரேலின் எதிர்பாராதா தாக்குதலின் பின் உசாரடைந்து விட்டது. பல மொசாட் முகவர்கள் கைது செய்யப்பட்டுள்ளாக ஈரானிய தரபின் தகவல்கள் செய்திகளின் வந்துள்ளன. இஸ்ரேலின் பின்னடைவுக்கு முகவர்களின் கைதுகள் காரணமாக அமையக்கூடும்.
  14. சீனா ஈரானுக்கு ஆயுதங்கள் கொடுக்கின்றது என்பதற்கு என்ன ஆதாரங்கள்? அறிய ஆவல்.
  15. நான் நினைக்கின்றேன் ஸ்புட்னிக் செய்திகளின் அடிப்படையில் இவ்வாறான கருத்துக்கள் வைக்கப்படுகின்றன. ஸ்புட்னிக் செய்தி தளம் ஈரான் சார்பு நிலையை கடைப்பிடிக்கின்றது. எந்தவொரு விமானமும் விழுத்தப்பட முடியாத ஒன்று அல்ல. ஆனால், உண்மையில் விழுந்தால் அதை ஈரான் காட்சிப்படுத்தும். இதுவரை அப்படியொரு காணொளி வந்ததாக தெரியவில்லை. இஸ்ரேல் டிரோன் ஒன்றை வீழ்த்திய காணொளி ஒன்று நேற்று பார்த்தேன். நியூ யோர்க் டைம்ஸ் கட்டுரை ஒன்றின் பிரகாரம் பூமியை அதிக ஆழம் ஊடுருவி செல்லும் குண்டை போடக்கூடிய விமானம் சுட்டு வீழ்த்தப்படக்கூடிய சாத்தியம் அறவே இல்லாமல் இல்லை என கூறப்படுகின்றது. அதிகார, ஆணவ, மற்றும் பழிவாங்கள் போட்டிகளின் மத்தியில் மக்கள் அவலங்கள் அனைத்து தரப்பிலும் தொடரப்போகின்றது.
  16. மூன்றாம் உலகப்போர் வரும் என்று சொன்னார்கள். இது தொடங்கி விட்டதோ?
  17. இஸ்ரேல்-ஈரான் போர் விடயத்தில் இந்தியாவின் நிலைப்பாடு என்ன? பம்மிக்கொண்டு நிற்கிறது போலும்.
  18. பாகிஸ்தான் இஸ்ரேலுடனான உறவை துண்டித்ததுடன், ஈரானுக்கு முழு ஆதரவை தெரிவித்துள்ளதாக ஒரு செய்தி பார்த்தேன். ஈரான், பாகிஸ்தான் அண்டைய நாடுகள் எனும் வகையில் பார்க்கும்போது, அத்துடன் முஸ்லீம் நாடுகள் எனும் வகையில் ஒன்றிணையும்போது இது போரில் மாற்றத்தை கொண்டு வரும். உடனடியாக இல்லாவிட்டாலும் ஈரானும் ஆயுத வழங்கல்கள் வெளியில் இருந்து கிடைக்கும் என்றே தோன்றுகின்றது.
  19. இலையான் கில்லர் எங்கோ ஊர் சுற்ற சென்றுவிட்டார் போல. @தமிழ் சிறி
  20. செய்தி தகவல்களை பார்த்தால் ஈரானியர்களில் ஒரு பகுதியினர் இஸ்ரேலுடன் இணைந்து செயற்படுகின்றார்கள் போல் தென்படுகின்றதே. மிகவும் துல்லியமான தகவல்கள் இஸ்ரேலுக்கு தொடர்ந்து கிடைக்கின்றது. ஈரானில் உள்ளே நின்று ஈரானியர்களே தகவல்களை அனுப்புகின்றார்கள் என்றே தோன்றுகின்றது. அணுவாயுதம் அமைக்கும் ஆசையில்/வெறியில் முழு நாட்டையுமே ஈரானிய அரசு நாசமாக்கின்றது என எண்ண தோன்றுகின்றது. ஈரானின் ***யில் அடி விழுந்துள்ளது. இனி எழுந்து நடக்க முடியுமா என்பதே சந்தேகம். ஆன்மிக தலைவர் காலங்காலமாக எச்சரிக்கை அனுப்புகின்றார். இதைவிட பலமான ஆயுதம் அவர்களிடம் வேறு ஏதும் உள்ளது போல் தெரியவில்லை.
  21. @தமிழ் சிறி யரை கொஞ்ச நாட்களாக காணவில்லை. ஜனாதிபதியை வருவது தெரிஞ்சதும் இவர் ஒளிந்துவிட்டாரோ. சிறியர் இவ்வளவு பயந்தாங்கொள்ளி என நான் எதிர்பார்க்கவில்லை.
  22. @ஏராளன் இணைத்துள்ள தமிழ்வின் கட்டுரை தகவலின்படி பார்த்தால் கொலையை செய்தவர் அடிபிடி கோஸ்டி போல் தோன்றுகின்றது. மனைவியின் தந்தையிடம்/மானனாரிடம் கொலையை செய்வதற்கு முன்தினம் கொலையை செய்வதற்கு பயன்படுத்திய கத்தியை பெற்று மறுநாள் அதை பயன்படுத்தி தனது மனைவியின் கழுத்தை அறுத்து கொலை செய்தார் என்பதை பார்க்கும்போது அவரது குரூர புத்தி தென்படுகின்றது. இவருக்கு ஏற்கனவே வாள்வெட்டுக்கள், ஆட்களை வெட்டுவதில் பரீட்சயம் உள்ளதோ எனவும் சந்தேகம் ஏற்படுகின்றது. ஆத்திரகாரனுக்கு புத்தி மத்திமம் என்பது ஒருபுறம் போக இப்படி குரூரமாக கொலையை இவர் செய்தமைக்கு ஏற்கனவே பரீட்சயமான வாள் வெட்டு அனுபவம் ஏதாவது இவரில் தாக்கம் செய்ததோ எனவும் எண்ண வேண்டி உள்ளது.
  23. ஒருவர் உலகில் அதிக செல்வம் மிக்கவர். மற்றவர் உலகில் அதிக அதிகாரம் மிக்கவர். டொனால்ட் டிரம்ப் அவர்களின் கொள்கைகள் புதிய விடயங்கள் இல்லை. குறிப்பாக மின்சாரத்தில் இயங்கும் வாகனங்கள், பூமி வெப்பம் அடைதல் போன்ற விடயங்களில் அவருக்கு ஈடுபாடு இல்லை. இவை எல்லாம் தெரிந்துகொண்டே மாஸ்க் டிரம்ப்புடன் கை கோர்த்தார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.