Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by நியாயம்

  1. பல்கலை கழகத்து பகிடிவதை ஒரு தொற்று வியாதி. பகிடிவதைக்கு உள்ளாகுபவர்களே பகிடிவதையை தொடர்கின்றார்கள். இந்த தொற்று வியாதிக்கு ஒரே ஒரு மருந்துதான் உள்ளது. பகிடிவதை செய்யும் மாணவர்களை வீட்டுக்கு அனுப்பி வைக்க வேண்டும். இதன் மூலமே பகிடிவதைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியும். பகிடிவதை செய்யும் மாணவர்களை பல்கலை கழகத்தை விட்டு நீக்கும் அதிகாரம் பல்கலை நிருவாகத்திற்கு வேண்டும்.
  2. நான் நினைக்கின்றேன் இதன் காரணம் மொழிவரட்சி. மொழி ஆளுமை குறைபாடு. ஆங்கிலம் பேசும்போது பலர் யூ நோ யூ நோ என்று கூறுவார்கள். வசனத்தை முடிக்கும்போது யூ நோ என்று முடிப்பார்கள். இதுவும் ஒருவித மொழி ஆளுமை குறைபாடே. குறிப்பிட்ட மொழிகளில் நிறைய தரமான புத்தகங்கள் வாசித்தால் மொழி ஆளுமையை விருத்தி செய்யலாம் என்று கூறுவார்கள்.
  3. சு.ப. தமிழ்செல்வன் தலைவரை சந்தித்துவிட்டு அதிகாலை இருப்பிடம் திரும்பினார். அந்நேர பொழுதுகளில் இரவு, பகலாக உளவு விமானங்கள் 24 மணிநேரமும் பறந்து தகவல் சேமித்தன. வழமையில் போர் விமானங்கள் புலிகள் கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் நுழையும்போது போராளிகளால் எச்சரிக்கை தகவல் அனுப்பபடும். விமானத்தின் பிரசன்னம் அறிந்தவுடன் சு.ப. தமிழ்செல்வன் முகாமில் உள்ள பதுங்குகுழிக்குள் அங்குள்ளவர்கள் செல்கின்றார்கள். பதுங்குகுழி வாயிலில் குண்டு வீழ்ந்து வெடிக்கின்றது. மிகவும் மெதுவாகவும், தாழ்வாகவும் பறந்து வந்த கிபீர் விமானம் ஒன்று இலக்கை தாக்கிவிட்டு வெளியேறுகின்றது. சம்பவம் நடந்ததும் அந்தப்பகுதிக்கு எவரும் செல்லமுடியாதபடி தெருப்பகுதி தடை செய்யப்படுகின்றது. அவ்விடத்துக்கு உடனடியாகவே புலனாய்வு பொறுப்பாளர் பொட்டம்மான் வந்ததாக கூறப்படுகின்றது. இது இந்த சம்பவம் நடைபெற்றபோது குறிப்பிட்ட விமானம் குண்டு வீசுவதை நேரில் கண்டவர் எனக்கு கூறிய தகவல் ஆகும். மெய்ப்பொருள் காண்பது அவரவரை பொறுத்தது.
  4. அரசாங்க தரப்பு இதை நீதிமன்றம் ஒன்றில் கூறினால் ஏற்பார்களா? இந்த வாதம் எடுபடுமா?
  5. இவர் நடிப்பில் ஒருசில படங்கள் பார்த்துள்ளேன். செய்தியை அறிய துயரமாக உள்ளது. ஆழ்ந்த இரங்கல்கள்!
  6. எங்கள் பின்னணி பற்றியே எங்களிடம் போதிய தகவல்/விளக்கம் இல்லை. உணர்ச்சியை முறுக்கேற்றி வைத்துள்ளோம். என்னிடம் பதில் இல்லை ஓவியர்.
  7. டொக்ரருக்கு பைத்தியம் என்று சொன்னார்களே. பிறகு எப்படி இப்படி? காரிய விசர் வகையுள் டொக்ரர் வருகின்றாரோ?
  8. விடுதலை புலிகளின் அரசியல் பொறுப்பாளர் பிரிகேடியர் சு. ப. தமிழ்ச்செல்வனும் வான்வழி தாக்குதல் மூலம் கொல்லப்பட்டார். அவர் தனது சகாக்களுடன் உறக்க நிலையில் இருந்தபோது பங்கர் பஸ்டர் மூலம் தாக்குதலுக்கு உள்ளாகியதாக விக்கி கலைக்களஞ்சியத்தில் பதியப்பட்டுள்ளது.
  9. ஓவியரே, இப்போது நாங்கள் என்னதான் செய்யவேண்டும்? பழசை எல்லாம் மறக்கலாம், மன்னிக்கலாம் ஒன்றாக கைகோர்த்து நடக்கலாமா? சைவ சமய பாடத்தில் ஒவ்வொரு வகுப்பிலும் ஆரம்பம் தொட்டு இப்படி கதைகள் கூறித்தானே மண்டையை கழுவினார்கள்? எங்கள் கலாச்சாரம், வாழ்க்கை முறை அறிவை விட அதிகம் உணர்ச்சி - பற்றின் பாற்பட்டது. பக்தி வழிமுறையின் மூலம் கடவுளையே அடையலாம் என்று கற்பிக்கப்பட்டதே.
  10. யாழ் இந்து பழைய மாணவர்கள் குறிப்பிடப்பட்டு; இவர்கள் சிலர் தன்னை அரசியலில் ஓரங்கட்டுவதாக கங்கணம் கட்டியுள்ளதாகவும், கெளசல்யா ரரேந்திரனை மிக கேவலமான அளவில் திட்டமிட்ட வகையில் சமூக வலைத்தளத்தில் விமர்சித்ததாகவும் இந்த அழுத்தங்களின் வெளிப்பாடே கெளசல்யா ஒதுங்குவதற்கான காரணமாக அமையலாம் எனும்படியான அர்ச்சனா அவர்களின் ஒரு காணொளி பார்த்தேன்.
  11. நன்கொடையாக பெற்றோர், பெற்றோர் வழி உறவுகள் மூலம் காணி/நிலம்/வீடு/வயல்/தோட்டம்/கடை இவை கிடைத்தால் இதுதான் பிரச்சனை. சொந்த உழைப்பில் சேர்த்ததை உதாசீனம் செய்யமாட்டோம்.
  12. கோவிட் தொற்று காலத்தில் உங்கள் தாயார் அமரத்துவம் அடைந்ததாக அறிவித்தீர்கள். இப்போது தந்தையும் அமரத்துவம் அடைந்துள்ளார். ஆழ்ந்த இரங்கல்கள்! ஓம் சாந்தி!!
  13. நூறு கேள்விகள் உள்ளன. எழுந்தமானமாக பதில் போடுவது என்றாலே பதினைஞ்சு இருபது நிமிசம் எடுக்கும் போல. சங்ககார ஐபிஎல் விளையாடிய காலத்திற்கு பிறகு அதிகம் விபரம் தெரியாது. எதற்கும் முயற்சி செய்து பார்க்கின்றேன்.
  14. நான் ஒரு காலத்தில் வாயிஸ் ஆவ் அமெரிக்கா மூலம் ஆங்கிலம் பயின்றேன். ஆங்கிலம் கற்றமையால் மிகவும் பிடித்த ஒரு வானொலி அது. அண்மை காலத்தில் அவ்வப்போது அதன் இணையத்தளம் சென்று பார்வையிட்டுள்ளேன். டிரம்ப் அவர்கட்கு எதிரான செய்திகள்/முக்கியத்துவம் பைடன் அதிபராக விளங்கிய காலத்தில் அங்கு பரப்புரை செய்யப்பட்டதாக தெரியவில்லை. ஆட்களை வேலையால் தூக்கி செலவை குறைக்கும் நோக்கத்தில் சீல் வைக்கின்றார்களோ தெரியாது. இங்கு ஒரு விசயம் என்ன என்றால் டிரம்ப் அவர்களின் கொள்கைசார் பிரச்சார பீரங்கி டக்கர் கால்சனின் தந்தையார் வாயிஸ் ஆவ் அமெரிக்காவின் பணிப்பாளராக ஒரு காலத்தில் விளங்கியதாக வாசித்துள்ளேன். டக்கரின் அபிப்பிராயம் இந்த விடயத்தில் எப்படி அமையுமோ?
  15. உண்மையில் பாரதூரமான குற்ற செயல்களில் ஈடுபட்டவர்களா? இது பற்றிய செய்தியில் சிறிதளவு காணொளி பார்த்தேன். மண்டை காய்ந்தது. தற்செயலாக இவர்களில் நிரபராதிகள் காணப்பட்டால்? சி.என். என் பொக்ஸ் வெவ்வேறு திசைகளில். முதலில் அமெரிக்கர்கள் தங்களுக்குள் ஒரு பொதுவான ஒருமித்த கருத்தை எட்டும் காலம் வருமா? வொயிஸ் ஆவ் அமெரிக்காவுக்கு மூடுவிழாவாமே? உண்மைதானா?
  16. @Kandiah57 கந்தையர், உங்களை போலவே எனது மனநிலையும். மருத்துவர் பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சனாவிடம் திறமை/ஆளுமை உள்ளது. உட்கிடக்கையை வெளிப்படுத்தாமல் பம்மிக்கொண்டு நிற்பவர்கள் மத்தியில் விடயங்களை வெளிப்படையாக தெளிவாக துணிந்து கூறக்கூடியவர். அவர் பேசுபவை எல்லாம் சரி என்று இல்லை, ஆனால் அவர் உத்வேகம் பிடித்துள்ளது. போர் நிறைவடைந்து கிட்டத்தட்ட பதினைந்து வருடங்கள் கடந்துவிட்டன. இளவு காத்த கிளிபோல் மக்கள், ஏமாற்றப்பட்டார்கள். புதியன புகுதலும், பழையன கழிதலும் நடந்தேறலாம். அவரும் காணாமல் ஆக்கப்பட்டோர் உறவுகளினுள் வருகின்றார். தந்தை விடயத்தில் அவருக்கு நீதி கொடுக்கப்பட்டதா? இங்கு அவருக்கு எதிராக குத்தி முறிபவர்களை கவனித்தால் அவர்களுக்கிடையில் பல விடயங்களில் ஒற்றுமைகள் உள்ளன. நல்லதை எடுக்கலாம். அல்லாதவைகளை விடலாம்.
  17. அவரது தந்தை நாட்டுக்காக உயிரை கொடுத்தவர். இதைப்பற்றிய தங்கள் கருத்து என்ன? எந்த புஸ்தகத்தில் இதை வாசித்தீர்கள்?
  18. அதுவும் சரிதான். அடுத்தவன் வீட்டு பிரச்சனை நமக்கு எதுக்கு. இந்த "ரூ" வை "றோ" என்று மாற்றினால் இன்னும் சிறப்பாக அமையுமோ.
  19. சட் ஜீ பி டி, டீப் சீக் எல்லாம் நம்மளை எழுத்தில் விஞ்சுகின்றது. இனி நாங்கள் எதைத்தான் எழுதுவது? செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்படும் படைப்புக்களை தமது எழுத்துருவாக்கமாக யாராவது பிரசுரம் செய்தாலும் ஒன்றும் செய்ய முடியாது. என்னதான் செய்ய முடியும்? செயற்கை நுண்ணறிவு மூலம் நடாத்தப்படும் கருத்துக்களம் ஒன்று வரவேண்டியதுதான் பாக்கி.
  20. ரூ சிந்தனை பிடித்துள்ளது. முன்னைய காலங்களில் தமிழர் நாணய குறியீடாக எதை பயன்படுத்தினார்கள்? அப்படி ஏதும் காணப்பட்டால் அதை பயன்படுத்துவது இன்னும் சிறப்பு.
  21. அதிக நேரம் ஒதுக்கி சிறப்பாக போட்டியை நடாத்திய @கிருபன் ஜி க்கு நன்றி. எழுதுவது இல்லை என்றாலும் பொழுது போகாத நேரங்களில் வாசிப்பது வழமை. இந்த உரையாடலில் அதிகம் பங்குகொண்டவர்கள் முன்னிலைக்கு வந்தது மகிழ்ச்சி. அனைவருக்கும் வாழ்த்துக்கள்! இந்த போட்டியில் கேள்விக்கொத்து சிறிதளவு என்பதாலும், ஓரளவு குத்து மதிப்பாக அணிகளின் நிலை தெரிந்தமையாலும் பதில் வழங்கினேன். ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து அணிகளின் முன்னேற்றம் நல்ல விடயம். நியூசிலாந்து பல வீரர்கள் முப்பது வயதுக்கு மேற்பட்டவர்கள். அவர்கள் அணி தமது நிலையை தொடர்ந்து தக்க வைக்குமா பார்ப்போம். இந்த சுற்றுப்போட்டியில் இறுதி ஆட்டம் சில பந்துப்பரிமாற்றங்கள் மட்டும் ரோகித் சர்மா துடுப்பாடியபோது பார்த்தேன். இந்திய அணியின் ஆட்டம் போதாது.
  22. இங்கிட்டு உள்ள பரபரப்புக்களை பார்த்துவிட்டு அங்கிட்டு சென்று யோகானியின் பாடல் காணொளிகள் பார்த்தேன். பிள்ளை கொஞ்சும் தமிழில் சின்ன சின்ன ஆசை என்று பாடுகின்றது. லோக்கல் தமிழிலும் பாடுகின்றது. கேட்க நன்றாய்த்தான் உள்ளது. நீங்கள் நடத்துங்கோ.
  23. பொதுவாக ஒரு பயணிக்கு உடல் உபாதை: உயிராபத்து என்றால் விமானத்தை திசை திருப்பி அருகில் உள்ள சிகிச்சை வசதி உள்ள ஒரு விமானநிலையத்தில் இறக்குவார்கள். சாகும் நிலையில் உள்ள ஒருவரை வைத்துக்கொண்டு தொடர்ந்து பறக்க மாட்டார்கள். இந்த செய்தி பற்றி விரிவாக தெரியாமையால் விமானம் ஏன் திசை திருப்பப்படவில்லை என கூறமுடியவில்லை. ஆனால், மறுபுறம் இறந்த பயணியின் உறவினர்கள் இது பற்றி புகார் அளிக்கலாம்/சட்ட நடவடிக்கை எடுக்கலாமோ என ஊகிக்கின்றேன். இந்த நடைமுறை நாட்டுக்கு நாடு வேறுபடுமோ தெரியாது.
  24. இது வழமை போன்றது அல்லாத ஒரு அசாதாரணமான நிலமை. பயணி ஒருவர் பயணத்தின்போது விமானத்தில் இறந்துள்ளார். எனவே, சக பயணிகள் தங்கள் கையில் விடயங்களை எடுக்கக்கூடாது. நிலமையை சரிதாக கையாளவேண்டியது விமானத்தின் கப்டன் தலைமையிலான விமான பணியாளர் குழு ஆகும். இவர்கள் தமது பணியை சரியாக செய்யவில்லை. சக பயணிகள் மேற்கண்ட சம்பவத்தால் பாதிக்கப்பட்டால் இது விமான நிறுவனத்தின் பொறுப்பு. பணியாளர்கள் பயிற்சி பெற்ற பின்னே பணியில் அமர்கின்றார்கள். அவர்கள் பயிற்சியின்போது இவ்வாறான மரணங்கள் பற்றி நிச்சயம் கற்று இருப்பார்கள். செத்தவரை போர்வையால் போர்த்தி சக பயணிகளுடன் பயணிக்க வைக்கவேண்டும் என்பதே அவர்களுக்கு கற்று கொடுக்கப்பட்டது என நான் நினைக்கவில்லை. இப்படி செய்வது தவறு என்பதால்தான் இது செய்தியாக வந்துள்ளது. மற்றும்படி அக்கினி கொக்பிட்டில் இடம் இருந்தால் பணியாளர்களுடன் கதைத்துவிட்டு அங்குபோய் அமரக்கூடியவர் தேவை என்றால் பிளேனையும் ஓட்டக்கூடியவர் என நான் நம்புகின்றேன். ஒரு அசம்பாவிதம் நடக்கும்போதுதான் பயர் ஏன் இடம் மாறி உட்கார்ந்தான் என விசாரணை தொடங்கும்.
  25. வேறு இருக்கைகள் காலி என்றால் நாம் நினைத்தபடி எழுந்து சென்று அவற்றில் அமர முடியுமா? பிணத்துடன் பயணிகளை அமர்த்தியது மிகவும் தவறு. இறந்த உடலை பயணி அருகில் கிடத்துவது தவிர வேறு இடம் கிடைக்க இல்லை என்றால் விமான பணியாளர்கள் தான் அருகில் உள்ள இருக்கையில் உள்ள பயணிகளை காலியாக உள்ள இடக்திற்கு நகர்த்த வேண்டும். @satan @தமிழ் சிறி இலங்கையை விட்டு வெளிக்கிட்டபிறகு இன்னும் விமானத்தில் பயணம் செய்ய இல்லையோ.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.