Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by நியாயம்

  1. அடப்பாவி இரட்டை கொலைக்கேஸ் செய்தியில் எனது பெயரை டாக் செய்துவிட நான் பயந்தே போய்விட்டேன். நாம ஒரு ஓரமா உட்கார்ந்து நாலு வரியில் எதையோ சொல்லிவிட்டு போகின்றோம். அதற்காக இப்படி எல்லாம் பயம் காட்டக்கூடாது சிறியர்.
  2. அந்த தம்பி மேலே தான் கீழே எனும் தாழ்வு மனப்பான்மை என்றும் எடுக்கலாமா? இந்த விடயம் அந்த தம்பிக்கு தெரியுமா?
  3. சிறியர் @தமிழ் சிறி தமிழ் - சிங்கள திருமணங்கள் புதிய விடயங்கள் இல்லை. நான் அறிந்தவரை ஒரு சிலவற்றில் முறிவு ஏற்பட்டாலும் பெரும்பாலான தம்பதிகள் வெற்றிகரமாக வாழ்ந்துள்ளார்கள், வாழ்கின்றார்கள். காவல்துறை பொறுப்பாளர் நடேசன் ஐயாவின் துணைவியாரும் பெருன்பான்மை இனத்தை சேர்ந்தவர் என நினைக்கின்றேன். தமிழ் பெடியள் சிங்கள பெட்டைகளுக்கு பின்னால் எப்படி உருண்டு பிரண்டு திரிந்தார்கள் என யாராவது அனுபவப்பட்டவர்கள் கூறலாம். எனக்கு தெரிந்த ஒரு திருமண உறவு சில வருடங்களில் முறிந்தது. இங்கு பெண் தமிழ் ஆண் சிங்களம். முறிவுக்கான காரணம் அந்த ஆண் பார்ட்டி கை. அதாவது சோமபானம், சொகுசு, கொண்டாட்டம் என வாழும் பேர்வழி. பொறுப்பான ஆள் இல்லை என பெண் பிரிந்துவிட்டார். தமிழ் ஆண்களை மணம் முடித்த பல சிங்கள பெண்கள் பிறப்பில் தமிழாக பிறந்த பெண்களை விடவும் கோயில், கடவுள் பக்தி என அதிகம் ஐக்கியமானவர்களும் உண்டு. இவ்வாறே திருமணத்தின் பின் முழு சிங்கள பண்பாட்டில் மூழ்கிய தமிழ் பெண்களும் உண்டு. வெளிநாடுகளுக்கு கல்விகற்கவும், புலம் பெயர்ந்தும் சென்ற தமிழர்கள் ஆண், பெண் வேறுபாடின்றி எல்லா சமூகத்தினுள்ளும் புகுந்து விளையாடுகின்றார்கள். இதில் பலரது திருமண உறவு வெற்றிகரமாகவே உள்ளது.
  4. இந்த தம்பியின் செய்தி தமிழ்வின். ஐபிசி ஆகியவற்றிலும் வந்தது. தமிழ் சமூகத்தை பொறுத்தவரை இது முக்கிய செய்திதான். வைத்தியர், பொறியியலாளர், சட்டத்தரணி ஆகியோரின் எண்ணிக்கையுடன் ஒப்பிடும் போது எமது சமூகத்தில் எத்தனை விமானிகள் உள்ளனர் என்று பார்த்தால்.. அங்கை ஒருவர் எனக்கு தெரியும். ஆனால் எனக்கு அறிமுகம் இல்லை.. இந்த அளவில்தான் விமானிகளின் பிரசன்னம் உள்ளது. அதிகம்பேர் விமானத்துறையில் கால்பதிக்க வேண்டும். வழங்கல் குறைவான இடத்தில் பொருளுக்கு மவுசு அதிகம் காணப்படும். அதற்காக இந்த தம்பி மீது பொறாமைப்படக்கூடாது. எயார் பஸ் என்றால் இனியும் போடலாம்.
  5. இங்கு குழப்பமான தகவல்கள் பகிரப்படுகின்றன என நினைக்கின்றேன். சினேகா எனும் இந்த பாடகி ஏற்கனவே இலங்கை தொலைக்காட்சி போட்டி நிகழ்ச்சி மூலம் அறியப்பட்டவர் எனவும், வசதியானவர் எனவும் கூறப்படுகின்றது. பிரச்சனை பாடகி சினேகா விடயத்தில் இரண்டு விதமாக உருவெடுத்ததாக கூறப்படுகின்றது. ஒன்று: சரிகம நிகழ்ச்சியில் இலங்கை போட்டியாளர்கள் வசதி இல்லாத, கஸ்டப்பட்டவர்களாக காண்பிக்கப்படுவதாகவும் சினேகா அவர்கள் இவ்விதமான அனுதாப நோக்கில் சரிகமவினால் நோக்கப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்டது விமர்சனங்களுக்கு ஆளாகியதாக சொல்லப்படுகின்றது. இரண்டு: பாடகி சினேகா வசதியானவராக காணப்பட்டும் இவர் வசதியற்றவராக தன்னை இனம்காட்டி சரிகம நிகழ்ச்சியில் அனுதாபம் தேடியது விமர்சனத்துக்கு ஆளாகியதாக சொல்லப்படுகின்றது. இவை பாடகி சினேகா சம்மந்தமாக நான் அறிந்த விடயங்கள்.
  6. மோட்டார் சைக்கிளை யார் ஓடுவது? நீங்களா? மோட்டார் சைக்கிளில் திரிவதை விட ஆட்டோ பிடிப்பது பாதுகாப்பானது. ஊபர் மிகவும் வசதி. கட்டணம் பரவாயில்லை. உண்மையில் வாடகைக்கு வாகனம் இலங்கையில் எடுப்பது கிட்டத்தட்ட் வெளிநாட்டில் தினம் ஆகும் செலவுக்கு ஒப்பானது. அல்லது அதைவிட கொஞ்சம் குறைவு என கூறலாம். உங்களுக்கு பொதுவாக மைல் பிரச்சனை வராது. ஏன் என்றால் ஒரு நாளைக்கு வெளிநாடு போல் 700/800 அல்லது 1000/1200 கிலோமீற்றர் நாங்கள் இலங்கையில் ஓடப்போவது இல்லை. அப்படி ஓடினால் இலங்கை தெரு நிலவரங்களை பொறுத்தவரை ஆபத்தானதும் கூட. நிதானமாக, ஆறுதலாக வாகனம் ஓடக்கூடிய சூழ்நிலை காணப்பட்டால் வாடகைக்கு எடுத்து ஓடலாம். அவசரப்படுவது என்றால் வாகனம் வாடகைக்கு எடுத்து ஓடுவது ஆபத்தானது. நீண்ட தூரங்களுக்கு ஹயரை விட புகையிரதம் அதிகம் பாதுகாப்பானது. ஹயர் ஓடும் சாரதிகள் போதுமான அளவு தூங்கி, ஓய்வெடுத்து வாகனத்தை ஓட்டுகின்றார்கள் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.
  7. Kings Rent a Car எனும் பெயரில் ஒரு நிறுவனம் உள்ளது. உங்கள் சர்வதேச சாரதி அனுமதி பத்திரத்தை அனுப்பினால் போதும். விமானநிலையத்தில் இலங்கை சாரதி அனுமதி பத்திரத்துடன் வாகனமும் நிற்கும். இது ஆறு மாதங்களுக்கு செல்லுபடியாகும் என நினைக்கின்றேன். இவர்கள் கட்டணம் நியாயமானது. வாகனத்தின் தரமும் பரவாயில்லை. https://www.kingsrentacar.com/ நான் பல தடவைகள் இவர்களிடம் வாகனத்தை வாடகைக்கு எடுத்துள்ளேன். நல்ல சேவை.
  8. வெளிநாடுகளில் பேருந்து சாரதிக்கு நல்ல ஊதியம், சலுகைகள் வழங்கப்படுகின்றன. பெண்களும் சாரதிகளாக பணியாற்றுகின்றார்கள். ஊதியம் எவ்வளவு இலங்கையில் கொடுக்கப்படுகின்றது?
  9. நொச்சி அவர்கள் உணர்ச்சிபூர்வமாக உரையாடுபவர். அவரது இந்தக் கருத்தை சில நாட்களின் முன் வாசித்தேன். மிகவும் முரண்பாடான கருத்து இது. பலருக்கு தெரியாத விடயம் ஒன்று என்ன என்றால் தமிழர் அல்லாத இதர சமூகத்து மாணவர்களின் தொகை கணிசமான அளவு யாழ் பல்கலைக்கழகத்தில் உள்ளது. யாழ் மருத்துவபீடத்து மாணவர்களின் தீர்மானங்களுக்கு எதிராக குரலை உயர்த்த வேண்டிய தேவை இங்கு இல்லை.
  10. கரி ஆனந்தசங்கரி அவர்கட்கு திரிசங்கு நிலைதான் போல. இவை எல்லாம் ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட விடயங்களே. ஆனால், கள நிலவரங்களை பார்த்தால் அவரை அசைக்கமுடியாது போல் உள்ளது. ஆட்டிப்பார்க்க மட்டுமே முடியும்.
  11. தேசிய பாடசாலை ஒன்றில் பணிபுரிகின்றீர்கள் போல் உள்ளது.
  12. சிங்கள கடும் கோட்பாளர்கள், கொள்கை வகுப்பாளர்கள் அதிகாரத்தில் உள்ளபோது திட்டமிட்ட வகையில் தமிழ் சமுதாயத்தை சீரழிக்கக்கூடிய வகையில் பல்வேறு திட்டங்களை இரகசியமாக முன்னெடுப்பார்கள் என்பது ஊகிக்கக்கூடியதே. ஆனால், எங்கடையதுகள் தமது சுய நலன்களிற்காக ஏதும் செய்வார்கள் என்பதும் எதிர்பார்க்கப்படக்கூடியதே. தமிழ் சமுதாயத்தை சீரழிப்பவர்கள் வெளியாராக உள்ள தேவை இல்லை. யாழ்ப்பாணத்தில் தனியார் வகுப்புகளிற்கு செல்லும் மாணவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கப்படும் எழுதுகோலினுள் போதைப்பொருள் வைக்கப்பட்டுள்ளதாக கூறும் ஒரு எச்சரிக்கை காணொளி எங்கோ பார்த்தேன். 53 பேருக்கு எல்லா (09 பாடங்களும் அதிவிசேட சித்தி கிடைத்ததா?
  13. நாலைந்து புத்தகங்களை தலையில் தூக்கிவைத்துக்கொண்டு சாரக்கட்டுடன் ஒருவர் வெள்ளத்தில் நடந்து செல்லும் காணொளி ஒன்று பார்த்தேன்.
  14. பொம்பிளைப்பிள்ளைகளை பெடியள் இனி படிப்பிலை அடிக்க ஏலாது போல சிறியர். வீடுகளில் கிச்சின் டிப்பார்ட்மெண்ட் இன்னும் ஒரு 20 வருசத்தில் ஆண்களிடம் முழுதாய் வந்துவிடுமோ?
  15. இதில் நாங்கள் ஊருக்கு அவ்வப்போது அனுப்புகின்ற நிதியும் அடங்குகின்றதோ? வெளிநாடுகளுக்கு செல்லும் இலன்கையர்கள் தாய்நாட்டுக்கு நிதி அனுப்புகின்றார்கள். ஆனால், பலரின் வாழ்க்கைத்தரம் மோசமான நிலையில் உள்ளது. அதிகளவு குடும்ப உறவு விரிசல்கள் என தொடங்கி கொலைகள் வரை பிரச்சனைகள் செல்கின்றன. இவை பற்றி அவ்வப்போது செய்திகளில் அறிகின்றோம்.
  16. முற்றுப்புள்ளியா? விமான ஓட்டிகளில் ஒருவர்தான் திட்டமிட்டு விபத்தை ஏற்படுத்தினார் என ஒரு கருத்து பரவுகின்றது. இன்னும் சரியான காரணம் அறியப்படவில்லை.
  17. யாழ்ப்பாணத்தில் உள்ள பிரபல கல்லூரிகளின் சித்திகள் விபரத்தை காணவில்லையே. வேம்படி மட்டும் உள்ளது.
  18. முள்ளிவாய்க்கால் அழிவு, காசா அழிவுகளை பார்த்துக்கொண்டு அந்த நேரங்களில் அதிகாரத்தை அனுபவித்த ஓபாமாவும், பைடனும் குத்துக்கல்லாக கிடந்தார்கள். இடதுசாரிகளுக்கு "அனுபவிப்பதற்கு" அதிகாரம் தேவைப்படுகின்றது. நோபல் பரிசை பெற்ற ஓபாமா இலங்கையில் நடைபெற்ற பெரு அவலத்தை நிறுத்த என்ன செய்தார் என அறிய ஆவல். பைடன் ஐயா இரண்டாம் தரம் பதவிக்கு வரும்போது நோபல் பரிசுக்கு பரிந்துரை செய்யலாம் என இஸ்ரேல் எண்ணியது. சிங்கம் வென்றுவிட்டது. இடதுசாரிகளின் புண்ணியவதி கிளாரி அம்மா முள்ளிவாய்க்கால், காசா அவலங்களின்போது எப்படி பம்முகின்றார் என்பதை கார்டியன் எழுதினால் வாசித்து பார்க்கலாம்.
  19. இடதுசாரிகளின் பித்தலாட்டமும், சுரண்டல்களும் வலதுசாரிகள் மீதான ஈர்ப்புக்கு வழி வகுத்துவிட்டது. உங்கள் அளவிற்கு எனக்கு புரியப்போவது இல்லை. கார்டியன் எப்படி உருட்டுகின்றது என்பதை அறிய ஆர்வம் இல்லை. உங்களுக்கு கிளுகிளுப்பு ஏற்படுத்தக்கூடிய நியூ யோர்க் டைம்ஸ் பத்திகள் வாசிப்பது உண்டு. ஒபாமாவுக்கு நோபல் பரிசு கொடுக்கப்பட்டதை உங்களால் ஏற்றுக்கொள்ள முடிகின்றதா?
  20. எலான் மாஸ்க் நம்பக்கூடிய ஒருவரா? நேரத்திற்கு நேரம் ஒவ்வொரு போக்கில் செல்கின்றார்.
  21. ஓபாமாவுக்கு சமாதானத்துக்கான நோபல் பரிசு கொடுக்கலாம் என்றால் டிரம்ப் ஐயாவுக்கு ஏன் கொடுக்கமுடியாது? ஓபாமா சமாதானத்திற்காக எதனை சாதித்தார்? இப்போது அவரது துணைவியாரே அவரை வறுத்து எடுக்கின்றார்.
  22. பாரபட்சத்தை பராபட்சம் என பதாகையில் எழுதி உள்ளார். சரி அது ஒரு புறம் கிடக்கட்டும். ஆசிரியர் வட்டாரம் கூறுவது என்ன என்றால் இந்த மாணவன் முன்பும் ஏதோ பிரச்சனைப்பட்டு மருந்து குடித்து வைத்தியசாலை வரை சென்றாராம். ஆள் கொஞ்சம் குழப்படித்தனம் என்றமையால் சுற்றுலாவுக்கு கூட்டிச்செல்வது என்றால் இவர் தனது பெற்றோரையும் அழைத்து வரவேண்டும் என இவரிடம் கூறப்பட்டது. இவரது குழப்படித்தனம் காரணமாக பெற்றோர் இல்லாமல் சுற்றுலாவுக்கு அழைத்து செல்ல ஆசிரியர்கள் இணங்கவில்லை. ஆசிரியர்களையும் குறை கூறமுடியாது. சுற்றுலாவில் இவரது குழப்படித்தனம் காரணமாக ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றால் எப்படி பொறுப்பு கூறுவது?
  23. கில் விளாசி தள்ளியுளார். இனியொரு பத்து ஆண்டுகளை தன்வசப்படுத்துவாரோ?
  24. தலாய்லாமாவின் வாரிசு தமது அங்கீகாரத்துக்குள் வரவேண்டும் என சீனா கூறுகின்றது. சீனாவிற்கு வெளியில் உருவாகக்கூடிய வாரிசை தாம் அங்கீகரிக்கோம் என்கிறது சீனா. சீன இறையாண்மை, கலாச்சாரம், பண்பாடு இவற்றுடன் ஒத்திசையக்கூடிய தலாய்லாமாவை கொண்டுவருவார்களா என்பது சந்தேகம்.
  25. உலக அளவில் ஊடகங்கள் டிரம்ப் ஐயாவினை அவமானப்படுத்தியதை நினைத்து பார்க்கின்றேன். கம்பி எண்ணப்போகின்றார். உள்ளே வைத்து போடப்போகின்றார்கள். மீள முடியாத சட்டப்பிடியில் அவரது சரிதம் முடிகின்றது என அவரவர் கற்பனை வளர்த்தார்கள். சிங்கம் சிலிர்த்து எழுந்தது. இப்போது உலகின் அதிகார பீடம் டிரம்ப் ஐயாவிடம். மாற்றம் ஒன்றே மாறாதது. 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.