Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by நியாயம்

  1. பொதுவாக ஒரு பயணிக்கு உடல் உபாதை: உயிராபத்து என்றால் விமானத்தை திசை திருப்பி அருகில் உள்ள சிகிச்சை வசதி உள்ள ஒரு விமானநிலையத்தில் இறக்குவார்கள். சாகும் நிலையில் உள்ள ஒருவரை வைத்துக்கொண்டு தொடர்ந்து பறக்க மாட்டார்கள். இந்த செய்தி பற்றி விரிவாக தெரியாமையால் விமானம் ஏன் திசை திருப்பப்படவில்லை என கூறமுடியவில்லை. ஆனால், மறுபுறம் இறந்த பயணியின் உறவினர்கள் இது பற்றி புகார் அளிக்கலாம்/சட்ட நடவடிக்கை எடுக்கலாமோ என ஊகிக்கின்றேன். இந்த நடைமுறை நாட்டுக்கு நாடு வேறுபடுமோ தெரியாது.
  2. இது வழமை போன்றது அல்லாத ஒரு அசாதாரணமான நிலமை. பயணி ஒருவர் பயணத்தின்போது விமானத்தில் இறந்துள்ளார். எனவே, சக பயணிகள் தங்கள் கையில் விடயங்களை எடுக்கக்கூடாது. நிலமையை சரிதாக கையாளவேண்டியது விமானத்தின் கப்டன் தலைமையிலான விமான பணியாளர் குழு ஆகும். இவர்கள் தமது பணியை சரியாக செய்யவில்லை. சக பயணிகள் மேற்கண்ட சம்பவத்தால் பாதிக்கப்பட்டால் இது விமான நிறுவனத்தின் பொறுப்பு. பணியாளர்கள் பயிற்சி பெற்ற பின்னே பணியில் அமர்கின்றார்கள். அவர்கள் பயிற்சியின்போது இவ்வாறான மரணங்கள் பற்றி நிச்சயம் கற்று இருப்பார்கள். செத்தவரை போர்வையால் போர்த்தி சக பயணிகளுடன் பயணிக்க வைக்கவேண்டும் என்பதே அவர்களுக்கு கற்று கொடுக்கப்பட்டது என நான் நினைக்கவில்லை. இப்படி செய்வது தவறு என்பதால்தான் இது செய்தியாக வந்துள்ளது. மற்றும்படி அக்கினி கொக்பிட்டில் இடம் இருந்தால் பணியாளர்களுடன் கதைத்துவிட்டு அங்குபோய் அமரக்கூடியவர் தேவை என்றால் பிளேனையும் ஓட்டக்கூடியவர் என நான் நம்புகின்றேன். ஒரு அசம்பாவிதம் நடக்கும்போதுதான் பயர் ஏன் இடம் மாறி உட்கார்ந்தான் என விசாரணை தொடங்கும்.
  3. வேறு இருக்கைகள் காலி என்றால் நாம் நினைத்தபடி எழுந்து சென்று அவற்றில் அமர முடியுமா? பிணத்துடன் பயணிகளை அமர்த்தியது மிகவும் தவறு. இறந்த உடலை பயணி அருகில் கிடத்துவது தவிர வேறு இடம் கிடைக்க இல்லை என்றால் விமான பணியாளர்கள் தான் அருகில் உள்ள இருக்கையில் உள்ள பயணிகளை காலியாக உள்ள இடக்திற்கு நகர்த்த வேண்டும். @satan @தமிழ் சிறி இலங்கையை விட்டு வெளிக்கிட்டபிறகு இன்னும் விமானத்தில் பயணம் செய்ய இல்லையோ.
  4. செயற்கை நுண்ணறிவு செயலி DeekSeek இடம் நான் கீழ்வரும் வினாவை தொடுத்தேன். அதன் பதில் தொடர்கின்றது. ஒரு இனமாக அடையாளம் பெறவும், அங்கீகாரம் அடையவும் மக்கள் கூட்டம் ஒன்றில் காணப்படவேண்டிய தன்மைகள் எவை? ஒரு இனமாக அடையாளம் பெறவும், அங்கீகாரம் அடையவும் மக்கள் கூட்டம் ஒன்றில் காணப்பட வேண்டிய தன்மைகள் பின்வருமாறு: 1. பொதுவான வரலாறு மற்றும் பாரம்பரியம்: ஒரு இனம் பொதுவான வரலாறு, பண்பாடு, மொழி, மதம் மற்றும் பாரம்பரியத்தை பகிர்ந்து கொள்ள வேண்டும். இவை அவர்களின் அடையாளத்தை வரையறுக்க உதவுகின்றன. 2. பொதுவான மொழி: ஒரு இனம் பொதுவாக ஒரு மொழியை பேசுவதோ அல்லது புரிந்து கொள்வதோ அவர்களின் அடையாளத்தை வலுப்படுத்துகிறது. 3. பொதுவான பண்பாடு மற்றும் சடங்குகள்: பண்டிகைகள், விழாக்கள், உணவு முறைகள், கலை மற்றும் இசை போன்றவை ஒரு இனத்தின் பண்பாட்டு அடையாளத்தை வெளிப்படுத்துகின்றன. 4. பொதுவான புவியியல் பகுதி: ஒரு இனம் பொதுவாக ஒரு குறிப்பிட்ட புவியியல் பகுதியில் வாழ்வதோ அல்லது அந்த பகுதியுடன் தொடர்பு கொண்டிருப்பதோ அவர்களின் அடையாளத்தை வலுப்படுத்துகிறது. 5. சமூக ஒற்றுமை: ஒரு இனத்தின் உறுப்பினர்கள் ஒருவருக்கொருவர் ஒற்றுமையுடன் இருப்பதும், ஒரே குறிக்கோள்கள் மற்றும் மதிப்புகளை பகிர்ந்து கொள்வதும் அவர்களின் அங்கீகாரத்தை வலுப்படுத்துகிறது. 6. அரசியல் அங்கீகாரம்: ஒரு இனம் அரசியல் ரீதியாக அங்கீகரிக்கப்பட்டிருக்க வேண்டும். இது அவர்களின் உரிமைகள் மற்றும் தன்னாட்சிக்கு உத்தரவாதம் அளிக்கிறது. 7. சுயமரியாதை மற்றும் தன்னம்பிக்கை: ஒரு இனத்தின் உறுப்பினர்கள் தங்கள் பண்பாடு மற்றும் அடையாளத்தைப் பற்றி பெருமைப்படுவதும், அதைப் பாதுகாப்பதற்கான உணர்வு கொண்டிருத்தல் அவசியம். 8. பொதுவான சவால்கள் மற்றும் போராட்டங்கள்: ஒரு இனம் பொதுவான சவால்கள், போராட்டங்கள் மற்றும் அனுபவங்களை பகிர்ந்து கொள்வது அவர்களின் ஒற்றுமையை வலுப்படுத்துகிறது. இந்த தன்மைகள் ஒரு இனத்தின் அடையாளத்தை வரையறுக்கவும், அங்கீகாரம் பெறவும் உதவுகின்றன.
  5. ஆட்களுக்கு கொலை செய்வதில் பயம் இல்லாமல் போய்விட்டது. இதற்கு கொலையாளிகளுக்கு மரண தண்டனை கொடுப்பது தீர்வு இல்லை என்றால் வேறு என்ன பரிகாரம் உள்ளது?
  6. திகிலுடன் எதிர்வினை ஆற்றுகின்றார்களா? @வாலி இன் செத்தகிளி சிறகடித்து பறக்கின்றது. சரி பார்ப்போம்.
  7. நீங்கள் வரலாற்று புத்தகங்கள் வாசிக்கவில்லை, வரலாற்று புஸ்தகங்கள் வாசித்தது போதாது என அங்கீகாரம் பெற்ற வித்துவான்கள் கூறப்போகின்றார்கள்.
  8. ஐம்பதிலும் ஆசை வரும். ஆசையுடன் பாசம் வரும். 😁
  9. நீங்கள் முண்டு கொடுப்பது உங்கள் விருப்பம். ஆனால், எனக்கு இவ்வளவுக்கு மட்டமான இரசனை இல்லை. யாழ் கருத்துக்களத்தின் குருக்கள் ஆகிவிட்டார் போல.
  10. படம் அழகாய் உள்ளது ஓவியர். எனது உறவினர். நீண்டகாலம் பலவிதமான உடல் உபாதைகளுக்கு உள்ளாகி 78 வயதில் அமரர்துவம் அடைந்துள்ளார். அஞ்சலிகள்!
  11. யாராவது பெரியவர்கள் யாழ் பல்கலைக்கழகத்து இந்த பிரச்சனையை பற்றி ஊடகங்களில் சொல்லப்படுபவை பற்றிய தங்கள் பொழிப்புரையை கூறுங்கள் பார்க்கலாம்.
  12. @goshan_che இணைத்துள்ள சுய விபர படம் யாழ் கருத்துக்கள விதிமுறைகளுக்கு அமைவானதா? இதை நிர்வாகம் அனுமதிக்கின்றதா?
  13. பீங்கான் கோப்பைகள் அநியாயம். பேஸ்புக்கில் ஒரு மொமன்ற் பார்த்தேன். முள்ளு கரண்டியால் ஜேர்மன் மொட்டை பாஸ் கு**யில் நல்ல குத்து கொடுத்து இருக்கலாம். சிறியருக்கு இந்த தாடியை தெரியுமோ?
  14. டாக்கரின் யூரியூப் சனலில் அவரின் கருத்துக்களை பார்க்கக்கூடியதாக உள்ளது. இவ்வாறே பேஸ்புக்கிலும். குறுகிய காலத்தில் அதிபிரபலமான ஒரு நபராகிவிட்டார். யதார்த்தவாதி வெகுசன விரோதி.
  15. 1) குழு A: புதன் 19 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் நியூஸிலாந்து, கராச்சி NZ 2) குழு A : வியாழன் 20 பெப் 09:00 AM – பங்களாதேஷ் எதிர் இந்தியா, துபாய் IND 3) குழு B: வெள்ளி 21 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் தென்னாபிரிக்கா, கராச்சி SA 4) குழு B : சனி 22 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து, லாஹூர் AUS 5) குழு A : ஞாயிறு 23 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் இந்தியா, துபாய் IND 6) குழு A: திங்கள் 24 பெப் 09:00 AM - பங்களாதேஷ் எதிர் நியூஸிலாந்து, ராவல்பிண்டி NZ 7) குழு B :செவ்வாய் 25 பெப் 09:00 AM – அவுஸ்திரேலியா எதிர் தென்னாபிரிக்கா, ராவல்பிண்டி AUS 8 ) குழு B: புதன் 26 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் இங்கிலாந்து, லாஹூர் ENG 9) குழு A :வியாழன் 27 பெப் 09:00 AM – பாகிஸ்தான் எதிர் பங்களாதேஷ், ராவல்பிண்டி PAK 10) குழு B: வெள்ளி 28 பெப் 09:00 AM – ஆப்கானிஸ்தான் எதிர் அவுஸ்திரேலியா, லாஹூர் AUS 11) குழு B: சனி 1 மார்ச் 09:00 AM – தென்னாபிரிக்கா எதிர் இங்கிலாந்து, கராச்சி SA 12) குழு A: ஞாயிறு 2 மார்ச் 09:00 AM – நியூஸிலாந்து எதிர் இந்தியா, துபாய் IND 13) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? IND NZ 14) குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #A1 - IND #A2 - NZ 15) குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? BAN குழு B: 16) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? AUS SA 17) குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. #B1 - AUS #B2 - SA 18) குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? AFG 19) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? IND 20) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? AUS 21) சம்பியன்ஸ் கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? IND 22) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? SA 23) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அணி? AFG 24) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? Rohit Sharma 25) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? IND 26) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? RavindraJadeja 27) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? IND 28) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? Rohit Sharma 29) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? SA 30) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? RavindraJadeja 31) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? SA 32) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? RavindraJadeja 33) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? IND
  16. இதன் அர்த்தத்தை அவர்கள் எல்லோருமே தம்மை ஈழத்தமிழர்களாகவே அடையாளப்படுத்தினார்களே அல்லாமல் திராவிடராக அடையாளப்படுத்தவில்லை என எடுக்கலாமா?
  17. நாம் தமிழர் என்பதை தமக்கு சாதகமாக அவர்கள் பாவிக்கின்றார்கள். போர்க்காலத்தில் தெருவில் நிற்கும் களுசடைகள் எல்லாம் வழியில் செல்லும் தமிழரை ஐசி கேட்டு மிரட்டுவதும், வீட்டினுள் நுழைந்து சோதனை இடுவதும் என பல அடாவடிகளில் ஈடுபட்டார்கள். இப்போதும் பொலிஸ் கிளியரண்ஸ் என்றால் தமிழருக்கு வரக்கூடிய இயல்பான பயத்தை பயன்படுத்தி போலிசார் காசு அடிக்கின்றார்கள். என்னதான் நடந்தாலும் சிங்களம் சிங்களம் தான். அது தமிழரிடம் இறங்கி வராது. அவரவர் உங்கள் திறமையை பாவித்து உடுத்த கோவணத்தை உருவாமல் பார்த்து கொள்ளுங்கள்.
  18. இந்த செய்தி எல்லாத்தையும் நம்ப சொல்லுறீங்க? நான் வாகனத்தில் கொழும்பு சென்றபோது அநுராதபுரத்தில் மறிக்கப்பட்டேன். மறித்தவர் கூறினார் வாகனம் எல்லாம் சரியாத்தான் ஓடினேனாம். ஆவணங்களும் சரியாத்தான் உள்ளதாம். மறித்ததன் காரணம் பின்னர் தான் புரிந்தது. நாட்டில் கஸ்டம் என மறைமுகமாக காசு கேட்டார். கொடுத்துவிட்டு பயணத்தை தொடர்ந்தேன். இந்த போக்குவரத்து போலிசாருக்கு முண்டு கொடுத்து செய்தி வெளியிடும் ஊடகங்கள் கட்டாயம் உண்மை செய்திகளை வெளியே கொண்டுவரும் எனத்தான் நினைக்கின்றேன். என்ன இருந்தாலும் பாருங்கோ இன்னொரு சக தமிழனுக்கு ஒரு பிரச்சனை கஸ்டம் வருகிது என்றால் எங்கடையளுக்கு குஸ்திதான். ஏன் என்றால் எங்கடையள் டிசைன் அப்படி.
  19. தைப்பூசம் பெளர்ணமியில் தானே வருகின்றது. பெளர்ணமி என்றால் போயா. பெளத்தர்களின் புனித நாள். போயாவில் மதுபான கடைகளை திறக்கக்கூடாது என இலங்கையில் ஏதோ சட்டம் உள்ளது அல்லவா?
  20. ஓ அப்படியோ. எங்களுக்கு முகத்திலேயே இலங்கை பக்கம் என எழுதி உள்ளது தானே. அதுதான் அனுமதி இல்லை போலும். எதற்கும் அடுத்த தடவை நீங்கள் ஒரு தடவை முயற்சி செய்து பார்த்துவிட்டு கூறுங்கள். சில வேளைகளில் புதிய அரசாங்கம் வந்தபின் இந்த மாற்றம் வந்ததோ தெரியாது.
  21. நான் இலங்கை காசை வெளியில் மாற்றுவதற்கு ஒரு போதும் முயற்சி செய்தது இல்லை. அப்படியான தேவை ஏற்படவில்லை. விமான நிலையத்தில் உள்ள நாணயம் மாற்றும் இடங்களில் கொடுத்தால் மாற்றித்தரத்தானே வேண்டும்?
  22. விமானத்தில் ஏற முன்னம் கையில் மிஞ்சுகின்ற இலங்கை காசில் ஏதாவது பொருட்களை இலங்கை டியூட்டி பிரீயில் வாங்க முடியாமல் உள்ளதே என்பதே எனது ஆதங்கம் ஈழப்பிரியன். நானும் அமெரிக்கன் எக்ஸ்பிரஸ் பாவிப்பது உண்டு. வருடாந்த கட்டணம் மிக அதிகம் என்றாலும் அந்த கட்டணத்தில் காப்புறுதி/மெடிக்கல்/பொதி காணாமல் போதல்/விமானத்தில் ஏறுவதில் முன்னுரிமை/லோஞ்ச் அனுமதி என பல அம்சங்கள் உள்ளடக்கப்படுவதால் அந்த அட்டை இப்போதும் உள்ளது. ஆனால் விரைவில் அதன் பாவனையை முடிவுக்கு கொண்டுவர வேண்டும் என தீர்மானித்து உள்ளேன்.
  23. இலங்கை காசை இலங்கை விமானநிலையத்தில் தேனீர். ரோல்ஸ் வாங்குவதுதவிர டியூட்டி பிரீ பக்கம் பாவிக்க முடியவில்லை. வேறு நாடுகளில் இப்படியான ஒரு நடைமுறை உள்ளதா?
  24. அண்ணை நீங்கள் கமாசையும் அடிக்கிறீங்கள். பூதினையும் அடிக்கிறீங்கள். சீமானையும் அடிக்கிறீங்கள். நீங்கள் யார்? யார்? யார்? 😁

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.