Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by நியாயம்

  1. இப்படியான சம்பவங்கள் ஒரு சமூகத்தையே விளிம்பு நிலைக்கு கொண்டு வருகின்றது. இங்கு சிலர் அவதானித்தது போல் சமூக ஊடகங்களில் கொலை செய்தவருக்கு வாழ்த்துக்கள்/பாராட்டுக்கள் தெரிவிக்கும் பல கருத்துக்கள் பரவலாக உள்ளன. சில தினங்கள் முன் அல்சகீராவில் ஒரு செய்தி பார்த்தேன். அதில் 17 வயதான சமூக ஊடகத்தில் மிகவும் பிரபலமான ஒரு சிறுமி பாகிஸ்தானில் அவரது வீட்டில் வைத்து நெஞ்சில் இரு தடவைகள் சுடப்பட்டு கொலை செய்யப்பட்டார். 22 வயது மதிக்கத்தக்க கொலையாளி பாகிஸ்தானின் இன்னோர் இடத்தில் வசிப்பவர் மிக நீண்ட பிரயாணம் செய்து சிறுமியை சந்திக்க வந்து கொலையை செய்துவிட்டு தப்பி சென்றுள்ளார். காவல்துறையினர் அவரை பிடித்துள்ளதாக கூறியுள்ளார்கள். எவ்வளவு சாதாரணமாக கொலையை செய்யப்பட்டுள்ளது என்பதை பார்க்கும்போது அதிர்ச்சி ஏற்படுகின்றது. கொலை குற்றங்களுக்கு மரண தண்டனை இலங்கையில் நிறைவேற்றப்படுவது கொலை குற்றங்கள் செய்யப்படுவதை குறைக்கலாம்.
  2. செய்திகளின் பிரகாரம் இன்னொருத்தரின் மனைவியுடன் தொடர்புவைத்து பிள்ளையையும் உருவாக்கிவிட்டு, அதை அந்த பெண்ணின் கணவனிடமும் தெரிவித்து இரண்டு உயிர்களின் கொலை வரை செல்வதற்கு வழிவகுத்த 21 வயது நபருக்கு உங்கள் அறிவுரை என்ன? இவருக்கு என்ன தண்டனை? இவர் சமூகத்தின் முன் அறியப்படவேண்டிய தேவை இல்லையா? இவ்வளவும் நடந்த பின்னர் இன்னோர் பெண்ணை திருமணம் செய்து குடும்பம் நடாத்த போகின்றாரா? இவரது வாக்குமூலம் அறியப்படும்போதே மிகுதி உண்மைகள் புலப்படும்.
  3. கொலை செய்யப்பட்டவர் கற்பிணி பெண் என செய்தியில் கூறப்பட்டுள்ளது. கொலையாளி இரு உயிர்களை கொலை செய்துள்ளார். செய்தியின் பிரகாரம் கொலைகளை திட்டமிட்டு செய்துள்ளார். இந்த செய்தியை நேற்று பார்த்தேன். இவற்றுக்கு என்னதான் பின்னூட்டம் வழங்குவது? வீதி விபத்து மரணங்கள் ஒரு புறம், தற்கொலை மரணங்கள் ஒரு புறம், இவற்றுடன் அவ்வப்போது கொலைகள். இந்த அவலங்களையெல்லாம் எதிர்கொண்டு மக்கள் வாழவேண்டும். அரசாங்கம் என்ன செய்ய வேண்டும்?
  4. புதிய இரண்டு அணிகள் முதல் இரண்டு இடங்களை பெற்றது மகிழ்ச்சி. கோழியின் தொடரில் 7/8 அரை சதங்கள் மேல் அடித்து தனது திறமையை தொடர்ந்து காண்பித்துள்ளார். @கிருபன் ஜின் போட்டி முடிவுகளை அவ்வப்போது பார்ப்பது ஆட்டநிலவரத்தை இணைய தளத்தில் பார்ப்பதை விட சுவாரசியத்தை கொடுத்தது. சாய் சுதர்சன் போல @நந்தன் கடைசிவரை மற்றைய ஆட்டக்காரர்களால் ஓட்ட எண்ணிக்கையில் எட்டிப்பிடிக்க முடியாத நிலையை ஏற்படுத்தினார். இதன் பின்னால் உள்ள சூட்சுமம் யாது என அறிய ஆவல். சட்ஜீபிடி/செயற்கை நுண்ணறிவின் உதவியுடன் போட்டியில் பங்குபற்றலாமா என பார்த்தேன். கேள்விக்கொத்து மிக பெரிதாக காணப்பட்டதால் நேரம் போதவில்லை.
  5. முன்னூற்றுக்கு மேற்பட்ட பயணிகளையும், பொதிகளையும் ஏற்றிக்கொண்டு 45,000 அடி உயரத்தில் பறக்கக்கூடிய விமானத்தை கடலுக்கு மேலால் 1,500 அடி உயரத்தில் பாணந்துறை தொடக்கம் கட்டுநாயக்கா வரை பறப்பது புத்திசாலித்தனமான ஒரு செயலா?
  6. இவ்வளவு காலம் இழுத்துவிட்டு இறுதி போட்டியை ஏன் அவசரமாக முடிக்கின்றார்கள்? இறுதி போட்டியை ஒரு போட்டியாக இல்லாமல் மூன்றாகவோ ஐந்தாகவோ வைக்கலாமே. 😁
  7. தடை செய்யப்பட்டோர் பெயர் பட்டியலில் குமாரசாமி @குமாரசாமி குமாரசாமி @குமாரசாமி என ஒன்றுக்கு இரண்டு தடவைகள் சேர்க்கை செய்து உள்ளார்கள். இவர் @குமாரசாமி யோ ஊருக்கு போய் தோட்டம் செய்யப்போறன், கடை வைக்கப்போறன், ஓய்வு எடுக்கப்போறன் என்று எழுதிக்கொண்டு திரிகிறார். அவ்வப்போது இங்கு லைக்ஸ் போட்டது, பதில் கருத்து கூறியது தவிர இவருடன் எனக்கு எதுவித தொடர்பும் இல்லை என கூறிக்கொள்கின்றேன்.
  8. அந்த 217 தனிநபர்களின் பெயர்களை இணையுங்கள் வாசித்து பார்ப்போம்.
  9. வேலன் சுவாமி பற்றிய தகவல்களை தேடல் செய்தபோது அவரை விக்னேசுவரன் ஐயா பொது வேட்பாளராக ஜனாதிபதி தேர்தலில் நிற்பதற்கு பரிந்துரை செய்த ஒரு செய்தி துணுக்கை பார்த்தேன். வேலன் சுவாமி சமூக ஊடகத்தில் உயிர்ப்புடன் செயற்படுகின்றார். தையிட்டி விகாரைக்கு எதிரான போராட்டத்திலும் வேலன் சுவாமியின் பங்களிப்பு உள்ளது. பல போராட்டங்களில் பங்குகொண்டுள்ளார். கைதும் செய்யப்பட்டுள்ளார். இவர் யாழ் இந்து பழைய மாணவன் என எங்கோ வாசித்த ஞாபகம். வேலன் சுவாமி சமூக செயற்பாட்டாளாராகவே தென்படுகின்றார். அவர் நல்லூர் பிராந்தியத்திலேயே வசிக்கின்றார் என பேஸ்புக் சுயவிபரத்தில் உள்ளது. அவர் விழிப்புணர்வு போராட்டத்தை நடாத்தியது தவறாக தெரியவில்லை. வெளிநாட்டுவாசிகளே பெரிதாக சவுண்ட் விடும்போது நல்லூரை வாழ்விடமாக கொண்டவர் குரல் காட்டக்கூடாதா என்ன?
  10. நல்லூர் பிரதேத்தில் அசைவ உணவகம் அமைத்தால் அது நல்லாய் ஓடும் என யாரோ கணித்தமையால் வந்த வினைதானோ இது? பெயர் பலகையை தூக்கியாச்சாம். ஏற்கனவே சீல் வைத்தாயிற்று போல் உள்ளதே.
  11. இது இலங்கை தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களை கட்டுப்படுத்துவதற்கான வியூகமோ என்னமோ?
  12. மனம் பிரழ்வு அடைந்த, வக்கிர புத்தியுள்ளவர்கள் நீதிபதி பதவியை வகித்தால் இப்படித்தான் தீர்ப்பு வாசிப்பார்கள். இந்த தீர்ப்பு குறிப்பிட்ட நீதிபதிகளின் தனிப்பட்ட கருத்தேயொழிய முழு இந்திய மக்களின் கருத்து அல்ல. வள்ளலார், அரவிந்தர், இராம கிருஷ்ணர், மகா யோகிகள், ரிஷிகள் வாழ்ந்த புண்ணிய பூமியில் மனிதநேயம் இல்லாத, வெறுப்பை, துவேசத்தை உமிழ்கின்ற நீதியும், நீதிபதிகளும் நவீன இந்தியா எங்கு செல்கின்றது என்பதை கட்டியம் கூறுகின்றது. உங்களுக்கு உங்கள் சோழியை பார்க்கவே முடியவில்லை என்றால் என்ன ******* அயல் நாடு இலங்கையின் ஒரு பகுதி மக்களுக்கு ஆயுத பயிற்சி கொடுத்து, ஆயுதங்களும் கொடுத்து வன்முறை கலாச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டீர்கள்? அமைதியான இலங்கை திருநாட்டை சீர்குலைத்துவிட்டு இப்போது உங்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கும் உங்களுக்கும் எதுவித சம்மந்தமுமே இல்லாமல் தீர்ப்பு சொன்னால் எப்படி?
  13. சமூக ஊடகங்களில் யாரும் எதையும் கூறிவிட்டு செல்லலாம். கள யதார்த்தம் ஒன்று உண்டு அல்லவா?
  14. எம்மை கடந்து சென்ற, நாம் கடந்து வந்த பெருந்துயரம். மீண்டும் இப்படியோர் காலம் வரக்கூடாது.
  15. ஐயாவின் தோற்றம் மிக நீண்ட காலமாக ஊடகங்களில் பார்த்து பரீட்சயமான ஒன்று. நேரிலும் சில தடவைகள் கண்டுள்ளேன் என நினைக்கின்றேன். இவரது பணிகள், வாழ்க்கை பற்றிய பதிவுகளை பகிருங்கள் வாசித்து பார்ப்போம். ஓம் சாந்தி!
  16. உவர் @தமிழ் சிறியர் வேலையால வந்து தனது கொதியுக்கு எதையாவது எழுதிவிட்டு போய்விடுவார். வாருங்கோ நாங்களாவது அமத்தி வாசிப்பம் @ஏராளன் இல்லாவிட்டால் நாளைக்கு இந்திய தூதரகத்துகாரர் உள்ளுக்க போக வீசா தரமாட்டம் என்று சொன்னாங்கள் என்றால் எப்படி மனுசி, பிள்ளைகளோட போய் தாஜ்மகால் பார்க்கிறது. ஊட்டிக்கு போறது. கோயில் தரிசனம் எல்லாம் செய்யிறது. பாவங்களை அங்கபோய்த்தானே கழுவியிட்டு வர வேணும். அவங்கள் இன்றைக்கு சண்டை பிடிப்பாங்கள். நாளைக்கு ஒன்றாக கிரிக்கெட் மச் விளையாடுவாங்கள். ஆனால் எங்களுக்கு உள்ளது ஒரு பாஸ்போர்ட் தானே. நீங்கள் என்ன நினைக்கிறீங்கள்.
  17. இந்தியா இஸ்ரேலும் அல்ல. பாகிஸ்தான் லெபனானும் அல்ல. விரைவில் நிலமை அமைதி அடையும் என ஊகிக்கின்றேன்.
  18. குறைகள் இல்லாத ஆட்சி இல்லை. ஆனால், டிரம்ப் ஐயா வந்த பின்னர்தான் பலருக்கு சுயபுத்தி வேலை செய்கின்றது.
  19. இந்த போட்டிகள் இந்த வருடத்துக்குள் முடியுமா சாமி? தொலைக்காட்சி சீரியல் போல இழுபடுகின்றதே.
  20. தலித் எனும் பதம் இலங்கை தமிழ் மக்கள் மத்தியில் எப்போது பிரயோகத்திற்கு வந்தது? இப்படியொரு பெண் முன்னோடி பற்றி இப்போதுதான் அறிகின்றேன். ஆழ்ந்த இரங்கல்கள்!
  21. இவரது தகவல்கள் சிலவற்றை இப்போது தேடி வாசித்தேன். அரசியலில் இறங்கியது தவறான முடிவு போல் தெரிகின்றது. ஆக 38 வயதுதான் இப்போது.
  22. சிறியர் பிழையாக விளங்கினீர்கள் என நினைக்கின்றேன். வலையில் சிக்கிய பாம்பை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டவருக்கே பாம்பு கடித்துள்ளது. பாம்பை பார்த்து பாவப்பட்டு அதை காப்பாற்ற முயற்சி செய்துள்ளார்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.