-
Posts
12150 -
Joined
-
Days Won
12
Content Type
Profiles
Forums
Events
Blogs
Gallery
Everything posted by கந்தப்பு
-
Harry brook இனை இம்முறை டெல்கி அணி 4 கோடி கொடுத்து வாங்கியது. அவருடைய பாட்டி இறந்ததினால் அவர் ஐபிஎல்இல் இருந்து விலகினார். இம்முறை பல இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் இல் இருந்து இறுதி நிமிடத்தில் விலகியிருக்கிறார்கள். Harry Brook (Delhi Capitals) Jason Roy (Kolkata Knight Riders) Mark Wood (Lucknow Super Giants Gus Atkinson (Kolkata Knight Riders) David Willey (Lucknow Super Giants) https://www.bbc.com/sport/cricket/68533187
-
வெற்றிபெற வாழ்த்துகள். 41 வது கேள்வியில் சிறுதிருத்தம் காங்கிரஸ் தமிழகத்தில் 9 தொகுதியிலே போட்டியிடுகிறது. ( புதுச்சேரி தொகுதியினை தவறுதலாக சேர்த்துவிட்டேன்) . உங்களின் 41 வது கேள்விக்கு பதிலாக 9 ஆக ஏற்றுக்கொள்கிறேன் இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள் 1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார் 11)நுணாவிலான் 12)பிரபா
-
இரண்டு கேள்விகளில் ஏதாவது ஒன்று சரியாக வரலாம் என்பதற்காக எழுதுகிறார்கள் என்று நினைத்தேன். இதேபோல வினா 1 - 23 இல் வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில்எத்தனையாம் இடத்தினை பிடிப்பார்கள் என்று கேட்டிருந்தேன். இதில் சில வேட்பாளர்கள் ஓரே தொகுதியில் போட்டியிடுகிறார்கள். அவர்கள் ஒரே இடத்தினை பிடிப்பார்கள் என்றும் பதில்கள் வந்திருக்கின்றன எத்தனையாம் இடமென்று பதில் அளிக்கவேண்டும்? 1,2,3,4,5.. 29வது கேள்விக்கு 3 என பதில் அளித்திருக்கிறீர்கள். ஆனால் மாக்ஸிட் கம்னியூஸ்ட் 2 தொகுதியில் மட்டுமே போட்டியிடுகிறது.
-
யாழ்களப்போட்டியில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை இவர் பெறலாம் என நினைத்துத்தான் டெல்கியின் போட்டி முடியும்வரை பார்த்தபின்பு , யாழ்கள போட்டி முடிவு திகதிக்கு முதல்நாள் அப்பொழுது ஏதாவது ஓரு போட்டியில் அதிக ஓட்டங்கள் பெற்று முதல் இடத்தில் இருந்த கோலியைத் தெரிவு செய்தேன்
-
வெற்றிபெற வாழ்த்துகள்
-
இங்கு பல்கலைக்கழகம் ஒன்றில் வேலை செய்யும் கோயம்புத்தூர்காரார் ஒருவரை சிலவருடங்களுக்கு முன்பு ஏன் தமிழகத்தில் ஊழல் செய்யும் திமுக அதிமுகவுக்கு வாக்களிக்கிறீர்கள் என்று கேட்டேன். திமுக, அதிமுக ஊழல் செய்தாலும் மக்களுக்கு ஓரளவு நலத்திட்டங்கள்செய்கிறார்கள். ஆனால் தேசிய கட்சிகள் தமிழகத்தை கண்டு கொள்வதில்லை என்றார். பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் சாதிக்கட்சிகள். தேதிமுகவுக்கு கொள்கையே இல்லை என்றார். இன்னுமொருவருடன் கதைக்கும்போது திமுகவை வேண்டாதபோது அதிமுகவுக்கும் , அதிமுகவை வேண்டாதபோது திமுகவுக்கும் நடுநிலையானவர்கள் சிலர் வாக்களிக்கிறார்கள் என்றார். தமிழகத்தில் வறுமை கோட்டின் கீழ் இருப்பவர்கள் அதிகம். இவர்களுக்கு தேர்தல் நேரத்தில் பெரியகட்சிகள் பணம் குடுத்து கவருவார்கள் ( திருமங்கலம், R K நகர் தேர்தல் முடிவுகள்). ஒவ்வொரு தொகுதியிலும் , தொகுதியில் அதிக மக்கள் வாழும் சாதிக்காரரை வேட்பாளராக தேர்வு செய்வார்கள். தலித் சாதியினர் வன்னியருக்கு , வன்னியர் தலித்துக்கும் வாக்களிக்க மாட்டார்கள். சில தொகுதிகளில் சில வேட்பாளருக்கு தனிப்பட்ட செல்வாக்கு. திமுக , அதிமுக்வுக்குள்ள நிரந்தரவாக்குகள், கட்சியில் தனக்கு போட்டியாளரை வேட்பாளராக தலைமை தெரிவு செய்ததினால் வேட்பாளரை விழுத்த சதி திட்டம் உட்பட பல காரணங்கள் ஒருவரின் வெற்றி தோல்வியை தீர்மானிக்கிறது. இப்பொழுது தமிழகத்தில் மோடி எதிர்ப்பலை அதிகம். இதனால் அவர்கள் மோடியை தோற்கடிக்க திமுக கூட்டணிக்கு வாக்களிப்பார்கள். எம் ஜீ ஆர், ஜெயலலிதா மாதிரி பிரபல்யமான தலைவராக ஏடப்பாடி இல்லாதது, அதிமுக கூட்டணி, பாஜக கூட்டணி என திமுக எதிர்ப்பு வாக்குகள் பிரிந்திருப்பது திமுகவுக்கு சாதகம்.
-
இந்தியா மட்டுமா காரணம் ? சீனா, பாகிஸ்தான் , ஐரோப்பா, அமெரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் காரணமில்லையா? செப்டம்பர் 11 தாக்குதல் , நீண்டகால சமாதான பேச்சுவார்த்தை, கருணா பிரிவு, தொழில்நுட்ப வளர்ச்சி , குடும்பத்தில் இருந்து ஒருவர் கட்டாயமாக சேர்தல் ( இதில் பல எதிரானவர்களும் இயக்கத்தில் ஊடுருவினார்கள்), காட்டி கொடுப்பு …… 2004 - 2009 காங்கிரஸ் கூட்டணியில் 16 தொகுதியில் திமுக வென்றிருந்தது. அந்த 16 பேரும் ஆதரவை விழக்கியிருந்தால் காங்கிரஸ் ஆட்சி கவிழுமா? பாட்டாளி மக்கள் கட்சி சார்பாக வென்ற 6 பெறும் , தமிழகத்தில் இரு கம்னியூஸ்ட் காட்சிகளிலும் இருந்து வென்ற 4 பேரும் காங்கிரஸ் கூட்டணியில் இருந்தார்கள். திமுக , காங்கிரஸ் ஆதரவை விலக்கினால் பாட்டாளி கட்சியும் ஆதரவை நீக்குமா? இதே கூட்டணியில் இருந்த மதிமுக (4 வேட்பாளர்கள்) 2006 இல் ஆதரவை விலக்கியிருந்தது. அப்படி திமுக, காங்கிரசுக்கு ஆதரவை 2009 ஆரம்பத்தில்விலக்கபூபோவதாக சொன்னால் ( வன்னியை மெல்ல மெல்லமாக சிங்களப்படைகள் 2009 சனவரியில் இருந்து கைப்பற்றியது) , 3 மாதத்தில் தேர்தல் வருகுதுதானே என்பதினால் காங்கிரஸ் தனது இலங்கைக்கு எதிராக செயல்பட்டிருக்குமா?
-
நான் நினைக்கிறேன் , 2009க்கு முன்பு வன்னியில் போராளிகள், தலைவர்கள், புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள செயற்பாட்டாளற்களுடன் தொடர்பில் இருந்தார். 2009 க்கு பிறகு அவர்தொடர்பில் இருந்த வன்னியில் இருந்துதப்பியவர்களில் ஒரு சிலரும் , புலம்பெயர் நாடுகளில் உள்ள செயற்பாட்டாளராக இருந்தவர்களில் சிலரும் தெரிந்தோ தெரியாமலோ இந்திய இலங்கை உளவு அமைப்புகளினால் உள்வாங்கப்பட்டிருக்கலாம். இவர்கள் சொல்வதினை நெடுமாறன் அவர்கள் உண்மை என்று நம்பியிருக்கலாம்.
-
இலங்கை சனாதிபதி தேர்தலுக்கும், இந்தியா தேர்தலுக்கும் வித்தியாசமிருக்கிறது. இந்தியா தேர்தலில் ஒருவருக்கே வாக்களிக்க முடியும். இலங்கை சனாதிபதி தேர்தலில் ஒருவருக்கு மட்டும் அல்லது 1,2,3 விருப்ப வாக்குகள் வாக்களிக்கலாம். 50% வித வாக்குக்கு மேல் ஒருவருக்கும் வாக்குகள் கிடைக்காத பட்சத்தில் இறுதியாக வந்தவரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகள் சேர்க்கப்படும். 50% இன்னும் வராவிட்டால் இரூப்பவர்களில் கடைசியாக இருப்பரை நீக்கிவிட்டு அவருக்கு வாக்களித்தவர்களின் 2 வது வாக்குகளை சேர்த்து பார்ப்பார்கள். இப்படியே கடைசியாக மிஞ்சும் இருவரில் 50% க்கு மேல் வருபவர் தெரிவு செய்யப்படுவார். ஆனால் இதுவரை நடந்த தேர்தல்களில் முதலாவது வாக்குகலிலேயே வேட்பாளர் ஒருவர் 50%க்கு வாக்குகளை பெற்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிறார். இலங்கையில் பலர் இம்முறையை கண்டு கொள்வதில்லை. சிவாஜிலிங்கத்துக்கு முதல் வாக்குகளையும் இரண்டாவது மூன்றாவது வாக்குகளில் பொன்சேகாவுக்கும் வாக்களித்திருக்கலாம். அவுஸ்திரேலியா தேர்தல்களிலும் 1,2,3,4 என்று வாக்களிக்கலாம். ஆனால் இங்கு பல தமிழர்கள் தொழில்கட்சிஅல்லது லிபரல் கட்சிக்கே முதலாவது வாக்காகவாக்களிக்கிறார்கள். ஆனால் நான் 2009 இல் எமக்காக அதிகளவு குரல் குடுத்த பசுமைக்கட்சிக்கே முதலாவது வாக்கை வழங்கி 2 வதாக பெரிய கட்சியான லிபரல் அல்லது தொழில்கட்சிக்கு வாக்களிப்பதுண்டு.
-
இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள் 1) goshan_che 2)பாலபத்ர ஓணாண்டி 3)புரட்சிகர தமிழ்த்தேசியன் 4)சுவி 5)நிழலி 6)கிருபன் 7)ஈழப்பிரியன் 8)தமிழ்சிறி 9)கந்தையா57 10)வாத்தியார்
-
1994 இல் மயிலாப்பூர் சட்டமன்றத்துக்கும் இன்னுமொரு சட்டமன்றத்துக்கும் இடைக்கால தேர்தல் நடைபெற்றது. யாராவது MLA காலமானால் அல்லது வேறு சில காரணங்களுக்காக இடைக்கால தேர்தல் நடைபெறும். தமிழகம் முழுவதும் தேர்தல் நடைபெறாமல் ஒன்று இரண்டு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் நடைபெறுவதினால் முக்கிய தலைவர்களை இத்தொகுதிகளில் அடிக்கடி காணலாம். நான் அடையார் , Besant நகர் பகுதியில் எனக்கு தெரிந்தவர்கள் வீடுகளுக்கு செல்வதுண்டு. அப்பொழுது பல தலைவர்களை பார்த்திருக்கிறேன். பாட்டாளி மக்கள் தலைவர் இராமதாஸ் சென்ற வாகனத்தில் மன்சூர் அலிகானை வந்திருந்தார். ‘ பிரபாகரன் கிரேட், இராவணன் கிரேட்’ என்று அவர் உரையாற்றினார். வைகோவுடன் எஸ் எஸ் சந்திரன் வந்திருந்தார். நடிகர் எஸ் எஸ் சந்திரன் மதிமுகவில் அப்பொழுது இருந்தார் கலைஞ்சர் கருணாநிதிஐக்கண்டதும் பல ஆதரவாளர்கள் தங்கள் குழந்தைகளுக்கு பெயர் சூட்ட சொன்னார்கள். ஒரு பிள்ளைக்கு ‘ கனிமொழி’ என்று பெயர் சூட்டினார். இன்னுமொரு பிள்ளைக்கு ‘இளவரசன்’ என்று பெயர் சூட்ட, ‘இவர் பெண் குழந்தை’ என்று குழந்தையின் தகப்பனார் சொல்ல ‘இளவரசி’,என்று கலைஞர் பெயர் சூட்டினார். ‘அவர்கள் லட்டினுள் மோதிரம் வைத்து குடுக்கிறார்கள் ( அதிமுக கட்சி) . வாங்குங்கள் . ஆனால் வாக்குகளை எமக்கு அளியுங்கள்’ என்றார். பெசன்ட் நகர் பேருந்து நிலையத்தருகில் துவிச்சக்கரவண்டியில் வரும்போது காவல்துறையினர் என்னையும் சேர்ந்து பலரை மறித்து நிறுத்தினார்கள். சில நிமிடங்களில் ‘அதோ அந்த பறவை போல’ பாடலை Band குழு ஒன்று இசை அமைக்க வாகனம் ஒன்று வந்தது. பின்னால் வந்த இன்னுமொரு வாகனத்தில் ஜெயலலிதா அவர்கள் துப்பாக்கிகள் ஏந்திய பாதுகாப்பு படைகளுடன் வந்து உரையாற்றினார். காங்கிரஸ் தலைவர்களில் ஒருவர் வாழப்பாடி ராமமூர்த்தியின் வீட்டின் அருகே செல்லும் போது எப்போதும்கண்டும் காணாமல் மாதிரி செல்வார். ஆனால் தேர்தல் என்றதினால் கை குப்பி என்னை பார்த்து வணங்கினார். தமிழக பத்திரிகைகளில் தேர்தல் செய்திகள் வாசிப்பதுண்டு. இதனால் ஓரளவு ஆர்வம்
-
நெடுமாறன் அய்யா எமக்காக செய்தவற்றில் சில 1982ஆம் ஆண்டு இலங்கையில் தமிழ் நூல்கள் அதிகம் இருந்த யாழ் நூலகம் தீக்கிரையாக்கப்பட்டபோது, அவ்விடம் சென்று அதனை ஆவணப்படுத்தி, அன்றைய முதலமைச்சர் எம்.ஜி.ஆரிடம் அறிக்கை சமர்ப்பித்தார். அதன்பின், எம்.ஜி.ஆர், இலங்கையில் தமிழர் போராட்டம் குறித்து அன்றைய பிரதமர் இந்திரா காந்தியிடம் பேசினார் என்பது வரலாறு. மேலும், 1985ஆம் ஆண்டு, சிங்களப் படைகளால் பாதிக்கப்பட்ட இலங்கை தமிழ்ப்பகுதிகளை, ரகசியமாக பயணம் செய்து காணொலியாகப் பதிந்து, உலகம் முழுக்க தெரியப்படுத்தினார். அதேபோல், 1991ஆம் ஆண்டு இந்திய அமைதிப்படை இலங்கையில் செய்த கொடூரங்களை, ஆவணப்படுத்தி, அன்றைய பிரதமர் வி.பி.சிங்கிடம் இதுகுறித்து பேசி,அவரை திரும்பப்பெற வலியுறுத்தினார். இப்படி தொடர்ந்து ஈழ ஆதரவுப் போராட்டங்களில் ஈடுபட்டார், பழநெடுமாறன். நாங்கள் என்ன செய்தோம். போராடமால் வெளிநாடு சென்று இணையத்தில் மட்டுமே போராடுகிறோம். 2010 தேர்தலில் எம்மை அழித்த சரத் பொன்சேகாவுக்கு யாழில் எம்மவர்கள் வழங்கிய அதிக வாக்குகள். ஆனால் நாங்கள் தமிழக அரசியல்வாதிகளைப் பார்த்து துரோகிகள் என்கிறோம். இது வேடிக்கை இல்லையா?
-
வெற்றிபெற வாழ்த்துகள்
-
சிலவேளை பிஜேபி வரக்கூடாததிற்காக திமுக காங்கிரசுக்கு அவர் ஆதரவு தெரிவித்திருக்கலாம். முள்ளிவாய்க்கால் அவலத்தின் பின்பு நடந்த தேர்தலில் இலங்கையில் யாழ்ப்பாண மாவட்ட தேர்தலில் மக்கள் மகிந்தா தோற்பதற்காக சரத் பொன்சேகாவுக்கு அதிகளவு வாக்களித்தார்கள். அத்தேர்தலில் போட்டியிட்ட விக்கிரமபாகு கருணாரத்னா , சிவாஜிலிங்கத்துக்கு யாழில் குறைந்த வாக்குகளே கிடைத்தது. அத்தேர்தலில் யாழ்மாவட்டத்தில் சரத் பொன்சேகா 63.84%. மகிந்தா 24.75% சிவாஜிலிங்கம் 1.8% விக்கிரமபாகு கருணரட்னா 0.63% வீத வாக்குகளை பெற்றார்கள்.
-
இந்தியா பக்கம் போயிட வேண்டாம். சந்தனக்கட்டைகள் காணாவிட்டால் உங்களுக்கு பிரச்சனையாக போயிடும்
-
மன்சூர் அலிகான் 1994 காலப்பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சிக்கு ஆதரவு . (அப்பொழுது நான் இந்தியாவில் இருந்தேன். ) 1999 இல் Dr கிருஷ்ணசாமியின் புதிய தமிழகத்தில் சேர்ந்து சட்டசபை தேர்தலில் பெரியகுளத்தில் கிட்டதட்ட ஒரு இலட்சம் வாக்குகளை பெற்று 3 ஆம் இடத்தை பிடித்தார். ( புதிய தமிழகம் இம்முறை அதிமுக கூட்டணி). 2009 இல் சுயேட்சையாக கேட்டார். (நாடாளுமன்ற தேர்தல்). 2019 இல் நாம் தமிழர் கட்சி சார்பாக சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார். அதன் பிறகு ‘தமிழ்த் தேசிய புலிகள்’ என்ற கட்சியை உருவாக்கினார். இப்பொழுது காங்கிரஸ். அடுத்தது ?
-
03/06/2024
-
வெற்றிபெற வாழ்த்துகள் வெற்றிபெற வாழ்த்துகள் வெற்றிபெற வாழ்த்துகள்
-
நன்றி, கேள்வி 41 க்கு உங்களின் பதில் 8
-
41 வது கேள்வியில் 10 தொகுதிகளில் காங்கிரஸ் சின்னத்தில் வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள் என்று கேட்டிருந்தேன். உண்மையில் 9 தொகுதியில் தமிழகத்தில் போட்டியிடுகிறார்கள் . தவறுதலாக புதுச்சேரியையும் இணைத்து சேர்த்து 10 என்று கேட்டிருந்தேன். கிருபன் எழுதிய விடைகளை பார்க்கும் போது தவறை உணர்ந்தேன். நன்றி கிருபன். இதனால் 41 வது கேள்விக்கு 10 என்று பதில் அளித்த கிருபன் , புரட்சிகர தமிழ்தேசிகன் , நிழலியின் விடைக்கு 9 என்று ஏற்று கொள்கிறேன். goshan_che குமரி, விருதுநகர், திருநெல்வேலியில் தோல்வி என்று பதில் அளித்தினால் 41 வது கேள்விக்கான இவர்களின் பதில் 6 ஆக ஏற்கிறேன் பாலபத்ர ஓணாண்டி - நீங்கள் இக்கேள்விக்கு 3 என விடை அளித்திருக்கிறீர்கள் . உங்கள் விடை 3 ? அல்லது 2? சுவி நீங்கள் 8 என பதில் அளித்திருக்கிறீர்கள். உங்களது விடை 8 ? அல்லது 7?