Everything posted by putthan
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
கேட்காமலயே அனுப்பி போட்டன்... அப்பே சகோதரயாக்கள் தானே ...😅என்ட பழைய நண்பன் ஜனாதிபதியா வந்திட்டார் இனி பாலும் தேனும் தான் ஓடப்போகிறது ...இப்படி காசை கிசை அனுப்பி ஆளை கைக்குள்ள போடத்தான் ...
-
தமிழர்கள் மீது தீராப்பகை கொண்ட ஜே.வி.பி
நான் முப்படையின்ருக்கு நிதி அனுப்பியிருக்கிறேன்
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்கமாட்டோம் - ஜனாதிபதி செயலக அதிகாரி
நீக்க மாட்டோம் என்பதும் இதுவும் ஒன்றல்ல....ஏக்க ராஜ்ய வுக்கும் யுனிற்றரி ஸ்டேட்க்கும் வித்தியாசம் தெரியாத பத்திரிகையாளர்..😅
-
சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றத்துக்கும் தாக்குதல் நடத்த போவதாக எச்சரிக்கை; நீதிமன்ற வளாகம் தீவிர பாதுகாப்பு கண்காணிப்பில்
நாட்டில பெரிய தொழில்நுடபம் எல்லாம் இப்ப வந்திட்டுது ..மிரட்டல் தொலைபேசியில் வந்திருக்கு அந்த நம்பரை வைச்சு ஆளை கண்டிபிடிக்க முடியாதோ...இல்லை சும்மா தான் கேட்கிறேன்...ஏதாவது உதவி தேவையென்றால் புலம்பெயர்ஸிடம் விண்ணப்பிக்கலாம்.. வடக்கு கிழக்கில் தொடர்ந்து பாதுகாப்பு படையினர் கடமையில் இருக்க வேணும் எண்டு காட்டுவதற்கு இந்த விளையாட்டோ?
-
ஶ்ரீதரனும், சுமந்திரனும் தோற்க வேண்டும் | K.V. Thavarasa |
விளக்கத்துக்கு நன்றிகள் ...ஆனால் "டயஸ்போரா. புலம்பெயர்ஸ்" என்ற பதங்கள் மொத்த தமிழர்களையும் உள்ளடக்கும் சொற்பதம்..என நான் நினைக்கிரேன்...அடுத்த தடவை முட்டை யெரியும் கோஸ்டிகளுக்கு "முட்டையடி புலம்பெயர்ஸ்" என எழுதினால் சிறப்பாக இருக்கும்.. போர் முடிவடைந்த பின்பு வடக்கு கிழக்கு பகுதியில் புலம்பெயர்ஸ் செய்த ,செய்து கொண்டிருக்கிற வேலைகள், இதுவரை அரசாங்கள் செய்த வேலையை விட அதிகம் என்றே சொல்ல வேண்டும் ..முக்கியமாக தனிநபர்களின் முன்னேற்றங்களுக்கு ,பாடசாலைகள் மற்றும் பல...😅 "முட்டையடி புலம் பெயர்ஸ்" தானே சொல்லுறீயல்
-
அனுரகுமார அரசாங்கம் மூன்று மாதங்கள் கூட நீடிக்காது – ரணில்
"2 k kids "யூ டியுப் ஆய்வாளர்களே அப்படி சொல்லும் பொழுது யாழ்கள ஆய்வாளர்கள் ஆய்வு எப்படியிருக்கும் அதுவும் 20 வருடத்திற்கு மேலாக யாழ் களத்தில் அரசியல் ஆய்வு செய்து Phd பெற்றவர்கள் அல்லோ😅
-
ஶ்ரீதரனும், சுமந்திரனும் தோற்க வேண்டும் | K.V. Thavarasa |
"புலம் பெயர்ஸ்"இல்லாமல் தமிழ் அரசியலா? அன்று தொடக்கம் இன்று இந்த புலம்பெயர்ஸ் மீது தானே சேறு வீசப்படுகிறது...சிங்களவர்கள் இனவாதிகளாக மாறினதற்கு காரணம் புலம்பெயர்ஸ் என சொன்னாலும் நாங்கள் நம்பத்தான் வேணும்...
-
இலங்கையின் பிரிக்ஸ் முயற்சி: பொருளாதாரம், அணிசேரா இராஜதந்திரத்தை உயர்த்துவதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கை
நீங்கள் கூறுவது சரி ...ஆனால் இதில் ரஸ்யா சீனா போன்ற நாடுகள் தான் ஆயுள் கால தலைவர்களை கொண்ட நாடு..மற்றும் மத்திய கிழக்கு நாடுகள் ...இந்தியாவின் தலைவர்கள் மாறக்கூடியவர்கள் ...இதனால் இந்தியாவின் பொருளாதாரம் நிலையானதாக இருக்க வாய்ப்பில்லை ....ராகுல்காந்தியை அமேரிக்கா அரவணைக்கின்றது,அமெரிக்கா தூதர்கள் மாநில அரசுகளுகளுடன் தொடர்புகளை மேற்கொள்கின்றனர்...முக்கியமா காஸ்மீர் அரசியல்வாதிகளுடன் இணைப்பில் இருக்கின்றனர்...சந்திரப்பாபு நாயுடு உடனும் தொடர்பில் இருக்கின்றனர்... ஈரானின் பொருளாதாரத்தை வீழ்த்த இஸ்ரேலுடாக பல முயற்சிகள் நடக்கின்றது ... எது எப்படியோ இலங்கை சொந்த காலில் நிற்க வேணுமென்றால் தமிழர்களுக்கு பிரச்சனை இருந்தது அதனால் தான் அவர்கள போராடினார்கள் என்பதை ஆட்சியாளர்கள் கூறவேண்டும் அதை விடுத்து பொருளாதார பிரச்சனை தான் இருக்கின்றது என கூறுவதை நிறுத்த வேணும் ... பனங்கொட்டையில் பொருளாதரம் வளர்த்த எம்மை வறுமை கோட்டுக்கு தள்ளியதும் இந்த ஆட்சியாளர்கள் 😅
-
இலங்கையின் பிரிக்ஸ் முயற்சி: பொருளாதாரம், அணிசேரா இராஜதந்திரத்தை உயர்த்துவதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கை
வடமாகாணசபை முழுமையாக செயல்பட அனுமதிக்க வேண்டும்,காணி அதிகாரம் இருக்க வேண்டும் ... நம்ம டக்கிளஸ் அண்ணேயையே சிங்கள ஆட்சியாளர்கல் சுழிச்சு போட்டார்கள் ... இருபக்க அரசியல்வாதிகள் என கூறுவது தவறு என நினைக்கிறேன் ...பலம் கொண்டவர்கள் ஆட்சியாளர்கள் அவர்கள் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆக்க பூர்வமான தீர்வை கொடுக்க வேண்டும் பிறகு தமிழ் அரசியல்வாதிகள் எதுவும் பேசமாட்டார்கள்...பேசவும் முடியாது ...ஆட்சியாளர்கள் சட்டங்களை இயற்றி அதை நடைமுறை படுத்த முயல வேண்டும் ....அனுரா சில சமயம் நல்லது செய்தால் வர வேற்கலாம்..ஆனால் அவரும் ஊழல் பற்றி பேசி தனக்கு பலமான எதிர்கட்சி உருவாகமல் செயல்படுவதிலயே குறியாக இருக்கின்றார் போல தெரிகின்றது ....
-
இலங்கையின் பிரிக்ஸ் முயற்சி: பொருளாதாரம், அணிசேரா இராஜதந்திரத்தை உயர்த்துவதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கை
அறுகம் பே குண்டு புரளியும் அமெரிக்கா போட்ட ஒர் சின்ன ஊசி தான் இடதுசாரி முத்திரையுடன் அவர்களிடம் கடன் வாங்க முடியுமா?ஒன்றில் அனுரா வலதுசாரி யாக மாறி ஆட்சி நடத்த வேண்டும் இல்லையேன்றால் பகிரங்கமாக சீனா பக்கம் போக வேணும்....
-
உறவுகள் பற்றிய உண்மையை அறிவதற்கான உரிமை குடும்பங்களுக்கு உண்டு - அமெரிக்கத் தூதர் ஜுலி சங்
தமிழர்களுக்காக அவர் சரி அவருடைய நாடு சரி ஒன்றும் செய்யப்போவதில்லை. தமிழருக்கு என்ற ஒர் கோப்பு(file) அவர்களிடம் இருக்கும் அதை இடக்கிட தூசு தட்டி கிளின் பண்ணிவிட்டு அதே இடத்தில் வைத்துவிடுவார்கள்...அவர்கள் நலன்கருதி வடபகுதி தமிழர் பகுதி என்பதை அடிக்கடி நினைவில் வைத்திருப்பார்கள் ....
-
இலங்கையின் பிரிக்ஸ் முயற்சி: பொருளாதாரம், அணிசேரா இராஜதந்திரத்தை உயர்த்துவதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கை
புட்டினும்,சீனா அதிபரும் தங்கள் சொத்துக்களை பெரிப்பிக்க உந்த மற்றைய நாடுகளை தம்வசம் அணிசேர்க்கின்றனர்....அணிசேரா நாடுகள் என்ற ஒர் கட்டமைப்பு இருந்தது இப்ப அது எங்கே என தெரியவில்லை...அதுபோல இதுவும் இல்லாமல் போக வாய்ப்பு உண்டு .... கொளுத்தி போடுவோம் ....உங்களை ஏற்றுக்கொள்ளாமைக்கு இந்தியா தான் காரணம்.
-
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
அதீத பக்தியாகவும் இருக்கலாம் ... காலத்துக்கு காலம் மாற்றங்கள் நடந்து கொண்டே யிருக்கின்றது ... ...சாதாரண் தமிழ் மக்களை 70 வருடங்களாக இனவாத செயல்களை தூண்டி கொலை செய்யும் சிங்கள பேரினவாதிகளை தலையில் தூக்கி வைத்து கொண்டாட சிலர் இருக்கும் பொழுது ...ஏன் சுரேசை மட்டும் பிழை சொல்லவேண்டும் .. எனக்கு இருக்கும் இறை பக்தி,தல வழிபாடு போன்று... உங்களுக்கும் வேறு இறையுடன் ,அல்லது தல அல்லது கருத்து மையங்களில் சிக்குப்பட்டவராக இருக்கலாம் அது தப்பே இல்லை ...
-
இலங்கையின் பிரிக்ஸ் முயற்சி: பொருளாதாரம், அணிசேரா இராஜதந்திரத்தை உயர்த்துவதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கை
இவ்வளவு நாடுகள் சேர்ந்து டொலரின் மதிப்பை குறைக்க போயினமாம்...அதில சிறிலங்காவும் இணையப் போகுதாம்.
-
உறவுகள் பற்றிய உண்மையை அறிவதற்கான உரிமை குடும்பங்களுக்கு உண்டு - அமெரிக்கத் தூதர் ஜுலி சங்
அப்படி ரணில் ஆட்சிக்கு வந்தால் .. தமிழ் மக்களுக்கு பிரச்சனை இருக்கு என சொல்வார் ...இதனால் சிறிலங்கா தேசியவாதிகளும்.....சிவப்பு கோவணக்காரரும் ஆத்திரமடையப் போயினம் ....ஏன் சும்மா அவையளின்டன் இர்த்த கொதிப்பை கூட்டுவான்
-
உறவுகள் பற்றிய உண்மையை அறிவதற்கான உரிமை குடும்பங்களுக்கு உண்டு - அமெரிக்கத் தூதர் ஜுலி சங்
இவர் ஆட்சி மாற்றத்தில் பலே கில்லாடி...என்ற காரணத்தால் இவர் தொடர்ந்து சிறிலங்காவில் பணி புரிய அமேரிக்கா உத்தரவிட்டுள்ளது போல கிடக்கு .....அடுத்த ஆட்சி கவிழ்ப்பு நடந்தால் இவ்ர் தான் சிறிலங்காவின் ஜனாதிபதியோ தெரியல்ல
-
ரஷ்யர்கள், இஸ்ரேலியர்களை தேடுவதற்கு நடவடிக்கை
வெளிநாட்டுக்காரனின் காசும் வேணும்..அதில இடதுசாரிகொள்கையும் வேணும்
-
தேசிய மக்கள் சக்தியின் உண்மை முகங்கள் வெளிவருகின்றன - முருகேசு சந்திரகுமார்
இவர் முன்னாடி டக்கிளசின் கட்சியில் இருந்தவர் அல்லோ?
-
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
கோபம் வராமல் இருக்குமா...சுரேஸ் பிரேமச்சத்திரன் தொடர்ந்து சிறிலங்கா தேசியம் பேசாமல் த்மிழ்தேசியம் பேசிக்கொண்டிருந்தால்கோபம் வராமல் இருக்குமா
-
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
கதிர்காமர் குடும்பம் பிரித்தானியா ஆட்சி காலத்திலிருந்து அரச சார்பாக வேலை செய்பவர்கள்...இவரது ச்கோதரர்கள் மற்றும் உறவினர்கள் கடற்படையில் உயர் அதிகாரிகளாக கடைமை புரிந்துள்ளார்கள் .. அமைச்சர் என்ற வகையில் தனது கடமையை செய்தார் ..அதை பாராட்ட வேண்டும் இனமத பேதமின்றி நாட்டுக்காக செயல் பட்டார்...மகிந்தா,பிள்ளையான் போன்றவர்கலுடன் ஒப்பிடும் பொழுது கதிர் உச்சத்தில் இருக்கின்றார்... நீங்கள் கூறுவது போல புலிக்காச்சல் பிடித்து இன்னும் மாறாமல் உச்சத்தில் இருப்பவர்களை விட கதிர்காமர் போன்ற நேரடி கடமை வீரர்கள் திறம்
-
இலங்கைக்கு கண்காணிப்பு விமானத்தை வழங்கியது அவுஸ்திரேலியா
இது நடக்காது என அவர்களுக்கு தெரியும் இருந்தும் ...இஸ்ரேல்காரனின் பாதுகாப்புக்கு என சொல்லி இலங்கையின் முப்படைகளையும் ,பொலிஸ்,அதிரடிபடை என சிறிலங்காவின் மனித வளத்தையும்,பொருளாதாரத்தையும் வீணாக செலவு செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது நாடு...பூவி சார் அரசியலுக்குள்ள இவையள் விரும்பியோ விரும்பாமலோ தள்ளப்பட்டுவிட்டார்கள்... கொஞச காலத்துக்கு முதல் சிறிலங்காவில் ரஸ்யர்களும் விசா இல்லாமல் ,வியாபரம் செய்து கொண்டிருந்தவர்கள்
-
இலங்கைக்கு கண்காணிப்பு விமானத்தை வழங்கியது அவுஸ்திரேலியா
ஐந்து கண்கள் தீயா வேலை செய்கின்றன இலங்கையில் .....இதில இடதுசாரிகள் ஆட்சியில் ...
-
ஜனாதிபதி அநுர - முன்னாள் அமைச்சர் டக்ளஸ் சந்திப்பு
அந்த ஆளும் அவரின்ட கட்சிகாரரும் பகிரங்கமாக சொல்லுகின்றனர் தமிழ் மக்களுக்கு அரசியல் அபிலாசைகள் இல்லை என்று ....நீங்கள் போய் அபிலாசைகள் பற்றி பேசிவிட்டு வாறீயள்....🤔
-
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
அவர்கள் சிவபக்தர்கள் அவர்களுக்கு இறைச்சி கறியுடன் சோறு கொடுத்தால் எப்படி சாப்பிடுவார்கள்? அவ்ர்கள் விரும்பிய சாம்பாரும் சோறும் கொடுத்திருந்தால் டிசன்டா சாப்பிட்டு வந்திருப்பார்கள் ... இது அந்த சிவனுக்கு நல்லாவே தெரியும்.. இருந்தும் சிவன் வேணுமென்றே இப்படி செய்துள்ளார்...விரும்பாத அசைவத்தை கொடுத்துள்ளார் ....அந்த நாய்கள் சிவனுக்கே பாடம் எடுத்துவிட்டு வந்துவிட்டன.😅😅
-
புதிய அரசாங்கத்தில் சுமந்திரன் வெளிவிவகார அமைச்சர்: கம்மன்பில கூறும் கதை!
நாங்கள் இப்படி சிந்தித்து வரவேற்றாலும்...இந்த களத்தில் சிலர் இன்னும் ரஜினி திரணகம துரோகி கதிர்காமர் துரோகி என்ற பழைய பல்லவியில் தூக்கி கொண்டு திரியினம்