Everything posted by putthan
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
அடுத்த வருடம் நாட்டுக்கு போக வேண்டி வரும் அதுதான் இப்ப்வே தோழர் என ஐஸ் வைக்கிறேன்.😅... தமிழ் தேசிய கட்சிகள் பாராளுமன்றம் செல்வதற்கு தமிழ் தேசியம் பேசாது ...ஒற்றுமையாக தமிழ் தேசியத்தை காப்பாற்ற வேண்டும் ...என்.பி.பி யின் தமிழ் பா.உ க்கள் ஒன்றும் பெரிதாக செய்ய முடியாது மக்களுக்கு ...காரணம் சிங்கள பா,உ க்களுக்கே பணம் இருக்குமோ தெரியவில்லை கிராமங்களை அபிவிருத்தி செய்ய ...கடந்த தேர்தலில் வன்னியிலிருந்து ஈ.பி.டி.பி பா,உ சென்றிருந்தார் அல்லவோ அதே போல இவர்களும் போய் அரசஇன் வரவுசெலவு திட்டத்துக்கு கை உயர்த்திவிட்டு ஆமா போட வேண்டியது தான் ... டக்கிளஸ் 30 வ்ருடம் தாக்கு பிடித்தார் இந்த என்.பி.பி பா.உ. கள் எவ்வளவு காலத்துக்கு என பார்ப்போம்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
விமானத்தை இறங்க விடாமல் செய்தாலும் செய்வார் தோழர் அனுரா... இந்திவின் துணை தூதரகத்தை வெளியேற்றினாலும் ஆச்சரியப்பட தேவையில்லை,,,,அனுராவின் யாழ் மாவட்ட தோழர்கள் இதற்காக உழைப்பார்கள்😅
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தமிழன் ஈழத்தில் இருக்கும் வரை தமிழ் தேசியம் தொடரும் ....தேர்தலுக்கு தமிழ் தேசியம் தேவையின்றி போகலாம் .... தமிழ் தேசியம் ஓர் அடையாளம் ....
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
யாழ்ப்பாண தேர்தல் தொகுதி உத்தியோக அறிவிப்பு ...மன்னிக்கவும் கிருபன் ..பிழையான் கருத்தை நான் பதிந்தமைக்கு
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
நல்ல கேள்வி ...கிருபனும் உசுப்பேத்துகிறார் போல ...😅
-
ஒரு வார காலத்துக்கு பேரணிகள், ஆர்ப்பாட்டங்களுக்கு தடை - பொலிஸ் பேச்சாளர்
கலககாரர்கள் ஆட்சியில் இருக்கும் பொழுது வன்முறைகள் நடை பெற வாய்ப்பில்லை ராஜா..வாய்பில்லை... தேர்தல் அமைதியாக நடைபெற்றதற்கு காரணமும் அதே
-
அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
வன்னி மாவட்டத்தில் என்.பி.பி யின் முதன்மை வேட்பாளர் சிங்கள சகோதரர்...இந்த நிலை யாழ்ப்பாணத்தில் அடுத்த தேர்தலில் வரலாம்...அனுரா மாத்தையா செய்வார்...
-
தேசியமும் ஈழத் தமிழர்களும்; ஒரு விமர்சனக் குறிப்பு
இன்னும் 10 வருடங்களின் பின்பு தமிழ் தேசியம் பேசுவதற்கு தடை வந்தாலும் வரும் அதிகாரவர்க்கத்தினரால்..
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
சிறிலங்கா சிறையில் இருந்தால் நல்ல சாப்பாடு கிடைக்கும் அத்துடன் இர்ண்டு மாதம் ஒய்வும் கிடைக்கும் என இந்த் மீனவர்கள் நினைக்கின்றனர் போல இருக்கின்றது ...தற்பொழுது அதிக இந்திய மீனவர்கள் வருவது இதனால் தானோ?
-
செளதியில் கூடிய இஸ்லாமிய நாடுகள்; இரான் சென்ற செளதி ராணுவ தளபதி- என்ன நடக்கிறது மத்திய கிழக்கில்?
சியா முஸ்லீம் பிரிவு நாடுகள் எங்கே இந்த கூட்டணியில்? ஈரானை அடக்கி பலமிழக்க பண்ணியாச்சு ...இனி சவுதியை உசுப்பேத்தி போரை தொடர போறாங்கள் போலகிடக்கு ...ச்வுதி அரேபியாவில் தேவையில்லாமல் இறக்குமதி செய்து வைத்திருக்கும் ஆயுதங்களை பாவிக்க வேணும் தானே ...அடுத்த போர்முனை தியட்டர் ஒஃப் ஒபெரெசன் சவுதியோ? சன்னி முஸ்லீமகள் தான் இனி வளை குடாவில் பிஸ்தாக்கள் ...சியா முஸ்லீம்கள் அல்ல ....
-
தேசிய மக்கள் சக்தியினர் தமிழர்களுக்கு எதிராக தொடுக்க ஆயத்தமாகியுள்ள போர்; எச்சரிக்கும் அருட்தந்தை மா.சத்திவேல்
சிறிலங்கா தேசிய கட்சியை தானே சொல்கின்றீர்கள்
-
தேசிய மக்கள் சக்தியினர் தமிழர்களுக்கு எதிராக தொடுக்க ஆயத்தமாகியுள்ள போர்; எச்சரிக்கும் அருட்தந்தை மா.சத்திவேல்
தமிழ் தேசிய கட்சிகளுக்கு தான் ....அவர்கள் பிரிந்து நின்றாலும் அவர்களுக்கு போடுவது சிறந்தது என நான் நினைக்கிறேன் ...தாயக் மக்கள் அதை தீர்மானிக்கட்டும்....தமிழ் தேசிய கட்சிகள் காலத்துக்கு காலம் பல பெயர்களில் தேர்தல் களத்தில் நின்றிருக்கிறது... உதயகம்பன்பில அண்மையில் ஒர் அறிக்கை வெளியிட்டிருந்தார் தமிழரசு கட்சி தமிழ்மக்களிடையே செல்வாக்கு இழக்கின்றது என ....அதாவது சிங்கள ஆட்சியாளர்கள் தமிழரின் தனித்துவ அடையாளங்களை இழக்க பண்ணுவதில் குறியாக இருக்கின்றனர்.... தாயக மக்கள் தங்கள் நிலமைகளை நங்கு அறிந்தவ்ர்கள் ...14 ஆம் திகதி வரை காத்திருப்போம்...
-
தேசிய மக்கள் சக்தியினர் தமிழர்களுக்கு எதிராக தொடுக்க ஆயத்தமாகியுள்ள போர்; எச்சரிக்கும் அருட்தந்தை மா.சத்திவேல்
தீரமுடன் போர்டிய மை ந்தர்கள் உள்ள மாகாணம் எம் வடக்கு கிழக்கு மாகாணம்.. என்பதை மறந்து விட்டிர்கள் போல தெரிகின்றது
-
தமிழ்முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தேசியஐக்கிய அரசாங்கம் - விஜித ஹேரத்
உதை தானே உங்கன்ட எஜமானர்காலாகிய பிரித்தானியா நாட்டை உங்களிடம் தந்து விட்டு சென்ற பொழுது சொன்னார்கள் ...இதை புரிந்து கொள்ள உங்கன்ட் ஆட்களுக்கு 75 வருடங்கள் சென்றிருக்கின்றது... ஐக்கிய தேசிய கட்சி உருவானதே அதறகு தானே....புதுசாக நீங்கள் ஐக்கியம் பற்றிபாடம் எடுக்கிறீயல் ....புத்தன் சர்ணம் கச்சாமி.....
-
தேசிய மக்கள் சக்தியினர் தமிழர்களுக்கு எதிராக தொடுக்க ஆயத்தமாகியுள்ள போர்; எச்சரிக்கும் அருட்தந்தை மா.சத்திவேல்
ஐயா தமிழன்பன் ...அந்த சாரயகடையை தமிழர்களுக்கு எடுத்து கொடுத்துள்ளார்கள் ..சிங்களவ்ர்களுக்கு அல்ல ..மேலும் சாரயத்தை அரசாங்கம் தங்களுக்கு வருமானம் வரவேணும் என்ற வகையில் செயல்படுத்துகின்றது....இதில த்மிழ் அரசியல் வாதிகளை குற்றம் சாட்டி குளிர்காய்வது ஏற்புடைய்து அல்ல ....சாராயம் முற்றாக தடைசெய்யப்பட்டுள்ளதா சிறிலங்காவில்..மத்திய கிழக்கு நாடுகள் மாதிரி....சாராயம் சிறிலங்காவில் அங்கிகாரிக்கப்பட்ட வியாபாரம்...இனவாதம் பேசும் சிஙகள அர்சியல்வாதிகள் .இனவாத பொலிசாரை விட சாரய பெர்மிட் பெரிய விடயமல்ல ...
-
யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
சிங்களத்தின் காலை பிடி என வகுப்பு எடுப்பவர்களை ...நாம் என்ன செய்ய முடியும் ...சிங்கள பொலிசார் உத்தமர்கள் என சொல்ல முடியாது ...மீண்டும் சொல்கின்றேன் தமிழ் இளைஞர்கள் ஆயுதம் ஏந்த முக்கிய் காரணம் சிங்கள் பொலிசார் இது இன்றைய இளசுகளுக்கு தெரியாமல் இருக்கலாம் ஆனால் அன்றைய இளசுகளுக்கு நன்றாகவே தெரியும்... சிங்களத்தின் காலை பிடி என்பதை எவனும் ஏற்று கொள்ளமாட்டான் ....ஆனால் டமிழன் அமைதியாக வாழ் நினைப்பவன் ..அவனுக்கு பல சமுகங்களுடன் வாழ்ந்து முன்னுக்கு வந்த அனுபவம் உண்டு..பல தடவைகள் கை நீட்டியுள்ளான் சிங்களத்துடன் ...மீண்டும் நீட்டுகிறான் ...பார்ப்போம் அடுத்த ஐந்து வருடம் என்ன நடக்கின்றது என.......எது எப்படியோ 75 வருட அனுபவம் பாடங்கள் இனி வரும் சந்த்ததிக்கும் கிடைக்குமல்லோ....
-
யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
நீங்கள் எங்கேயோ போய்டியள் ..புலம்பெயர்ந்த காரணத்தால் உங்கள் சிந்தனை ,கருத்து எல்லாம் உச்சத்தில் இருக்கு நீங்கள் வாழும் நாட்டில் எப்படி பொலிசும் மக்களும் செய்ல படுகின்றனரோ அது போல சிறிலங்கனும்ஸ் செயல் பட வேணும் என நினைக்கிறீயள்..... இந்த சிறிலங்கன் பொலீஸ் 1977 லில் யாழ் நகரில் என்ன செய்தார்களோ அதையே இன்றும் செய்கிறார்கள்...இவர்களுக்கு பொலிஸ் பயிற்சி கல்லூரிகளில் இதெல்லாம் சொல்லி கொடுப்பார்களோ தெரியவில்லை... எது எப்படியோ இன்று தொழில்நுடபம் வளர்ந்த்துள்ளது யாவற்றையும் படம் பிடித்து யாவரும் அறிய முடியும்...
-
அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
அடிப்படை பிரச்சனை இல்லை என்று தானே சொல்லுகின்றார் ...யுத்தம் நடந்ததை ஒத்துகொள்கிறார் அந்த யுத்தம் பொருளாதார பிரச்சனைகாரணமாக வந்தது என கூறுகின்றார் .... தமிழ்மக்கள் பல தடவைகள் சிங்கள ஆட்சியாளர்களுக்கு நேசக்கர்ம் நீட்டியுள்ளார்கள் .. அன்றைய அரச அதிபர் லயனல் முதல் அனுரா வரை பார்ப்போம் ... ஆயுத மேந்தி போராடிய போராளிகளும் இதில் அட்ங்கும்
-
அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
பிக்குமார் அமைதியாக இருப்பதற்கு காரணம் நீங்கள் கூறிய சகலதும் அடங்கும்... ஆசியாவில் தேசிய இனங்களின் தனித்துவத்தை உலக வல்லரசுகள் விரும்பவில்லை ...அது சிறிய தீவில் எண்ணிக்கையில் அதிகமாக இருக்கும் தேசிய இனத்துக்கு வசதியாக/வாய்ப்பாக போய்விட்டது ... இடதுசாரி ஆட்சி மலர்ந்துள்ள காரணத்தால் சில மாற்றங்களை/முடிவுகளை வலதுசாரி வல்லரசுகள் எடுக்கும் வாய்ப்பு இருக்கின்றது ... அமெரிக்காவின் விமானதாங்கி கப்பல் சிறிலங்கா என்பதில் மாற்று கருத்துக்கு இடமில்லை என நான் நினைக்கிறேன் ...ஆகவே இந்த விமான தாங்கி கப்பல் முன்பக்கம் தமிழனுக்கு பின்பக்கம் சிங்களவனுக்கு என பிரிந்து இருப்பதை மாலுமிகள் விரும்பவில்லை...பிரிக்ஸ் அமைப்பின் கப்பலாக மாறினால் மக்கள் அமைதியை இழப்பார்கள்
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
அப்பு வெற்றி பெறுபவர்களுக்கு அனுராவுடன் ஒரு பொழுதை களிக்க /படம் எடுக்க ஒழுங்கு செய்வீர்களா பிளிஸ்....
-
எழுத்தாளர் இந்திரா சௌந்தரராஜன் காலமானார்! குளியலறையில் வழுக்கி விழுந்ததால் தலையில் பலத்த காயம்!
ஆழ்ந்த இரங்கல்கள்🙏
-
32 ஆயிரம் மாதிரி வாக்குச்சீட்டுக்கள் சிக்கின
அது தானே ....ஐந்து வருடங்களின் பின்பு வீட்டுக்கு ஒரு கார் வழங்கப்போகிறார் நம்ம தோழர்
-
அரசியல் கைதிகள் விடுதலை - நிலங்கள் விடுவிப்பு – யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி
தமிழன் அநியாயத்துக்கு நல்லவன்....சில சமயம் அணுராவுக்கு செம்பு தூக்க வேணும் என்று அடிபட்டு போய் சிங்கள வேட்பாளர்களை வடபகுதியில் நிறுத்துங்கோ ..தேசிய ஒருமைபாட்டுக்கு நல்லது என சொன்னாலும் சொல்லுவினம் அடுத்த தேர்தலில் நடந்தாலும் நடக்கலாம் ... நம்ம டக்கிளஸ் ஐயா பிக்குமார் இருவரை தனதுகட்சி வேட்பாளராக கொழும்பில் நிறுத்தி உள்ளார் என நினைக்கிறேன் ....அதுபோல நல்லிணக்கம் என்று வரும்பொழுது ... சிங்கள வேட்பாளர் தமிழர் பகுதியில் அதிக வாக்கு பெற்று வெற்றியடைந்தால் அது நல்லிணக்கத்தின் உச்சம்,,கண்டியளோ அப்படி சொல்லப்படாது....தமிழ் தேசிய்த்தை கூறு போட்டு வித்து ....தமிழர் /சிங்கள பிரச்சனைக்கு டீர்வு கிடைக்க வழி விட்டவையள் அல்லோ
-
யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
அரசியல்வாதிகளின் முகம் மாறியுள்ளது,கட்சியின் பெயர் மாறியுள்ளது ஆனால் பொலிசார் செய்ய்யும் அட்டுழியங்கள் அன்று தொடக்கம் இன்று வரை மாறவில்லை ... இது அரசியல்வாதிகள் செய்ய வேண்டிய/அறிக்கை விட வேண்டிய விடயம் அல்ல ...முதலில் இது மாற வேண்டும் ...வடபகுதி உயர்பொலிசஸ் அதிகாரி செய்யவேண்டிய விடயம் தேர்தல் காலங்களில் இப்படியான பொலிஸ் தில்லுமுல்லு சில ஆட்சியாளர்கள் செய்வது வழமை இதை ஊதிபெருப்பித்து வன்முறைகளை வளர்ப்பார்கள் ...இது போன்ற பல வன்முறைகளை யாழ் மண் சந்தித்துள்ளது ...
-
யாழ். சுன்னாகத்தில் விபத்தின் பின்னர் பொலிஸார் அராஜகம் : 2 மாதக் குழந்தையை தூக்கி பற்றைக்குள் வீசி தாய், தந்தையை கடுமையாக தாக்கியதாக குற்றச்சாட்டு
இது அரசியல்வாதிகள செய்ய வேண்டிய செயல் அல்ல அவர் அனுராவின் பக்கம் நிற்கின்றார் என்பதால் அணுராவுக்கு சொல்லி அவர் உடனடியாக பொலிசுக்கு சொல்லி நடவடிக்கை எடுக்க வேண்டிய் அவசியம் இல்லை... பொலிஸ் அதிகாரிகள் செய்ய வேண்டிய விடயம்...வடபகுதி பொலிஸ் அதிகாரி செய்ய வேண்டிய கடமை....ஆட்சியில் இருப்பவர்கள் இப்படியான செயல்களை செய்ய வேணும் என நினைப்பது தவறு... அரசாதிகாரிகள் ,பொலிசார் போன்றவர்களும் மாற வேண்டும் ...இல்லை என்றால் நல்லிணக்கம் சாத்தியமில்லை ....இனவாதம் அரசியல்வாதிகள் பேசுவார்கள் ..ஆனால் நடைமுறைப்படுத்தி இனவாதத்தை வளர்த்ததில் சிறிலங்கா பொலிசாருக்கு முக்கிய பங்கு உண்டு...