Everything posted by putthan
-
இந்திய மீனவர்களின் தொல்லை : இந்தியா தூதரகத்தை முற்றுகையிட முடிவு - யாழ்ப்பாண மீனவ அமைப்புக்கள் தெரிவிப்பு
அமைச்சர் சொல்லியிருப்பார் சீனா மீன்பிடிப்பாளர்களை உள்ளே அனுமதிக்க
-
அப்பா உள்ளே இருப்பது நீதானா?
உண்மை சம்பவத்தை மிகவும் அருமையாக நேர்த்தியாக எழுதியுள்ளீர்கள் ...நன்றிகள்
-
யாழ். மத்திய கல்லூரிக்கு பெண் அதிபர் நியமிக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்
இசை நிகழ்ச்சிகள்,மற்றும் பெண்கள் தலமைத்துவத்தை விரும்பாத சமுகம் ஒன்று யாழில் உருவாகிறது...வீடியோவில் சாரம் அணிந்து ஒரு பதாதை வைத்திருக்கும் நபரின் பிள்ளைகள் இந்த பாடசாலையில் கல்வி கற்கின்றாரா? "பெண்கள் பாடசாலையில் ஆண் அதிபர் ஏன் நிராகரிகப்படுகின்றது"....என்ற பதாதையை வைத்திருக்கின்றார் ..வடிவாக கவனியுங்கள்..சகல பேட்டிகளிலும் முகம் காட்ட ஒடி வருகின்றார்
-
களியாட்டத்தில் கலாட்டாவா
வட்சப் குறூப்பில் இருந்து போஸ்ட்களை தள்ளி விடும் நண்பர்கள் அந்த போஸ்ட்டை அவர்களே பார்ப்பதில்லை .என்பது அதை விட கொடுமை.. யாழ்ப்பாண மக்களுக்காக பேசுவதை விட செயல் பட்டால் சிறப்பாக இருக்கும்...
-
களியாட்டத்தில் கலாட்டாவா
நாங்கள் இன்னும் கிடுகுவேலி கலாச்சாரத்தில் இருக்கின்றோம் என சில யூ டியுப் தம்பிகள் கற்பனையில் இருக்கின்றனர். கிடுகு வேலி கலாச்சாரத்தை உடைத்தெரிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. கொழும்பில் வாழும் பொழுது சில கதியால்,மற்றும் கிடுகளை புடுங்கி எறிந்தோம் ,புலம் பெயர்ந்த பிறகு முற்றாக கிடுகுவேலியை மறந்து விட்டோம்... தாயகத்தில் கொழும்பில் இருந்த வேறு சமுகங்கள்,மற்றும் புலம்பெயர்ந்த சமுகங்கள் மிஞ்சி இருந்த கதியாலையும்,கிடுகளையும் பிடுங்கி எறிந்து விட்டனர்... இன்று தாயமக்கள் தங்கள் தனித்துவத்தை காப்பாற்றி கொள்ள புத்திசாலி தனத்துடன் செயல்பட வேண்டும் ... கல்வி,மனித நேயம் ,பொது நலன் இவற்றில் கவனம் செலுத்த வேண்டும்... வீரம் பேசட்டும்..... புத்திசாலி தனத்துடன் பேசவும் ...செயல்படவும் வேண்டும் நன்றி மோகன் ,நீங்கள் கூறிய விடயங்களை கவனத்தில் எடுக்கிறேன்...
-
களியாட்டத்தில் கலாட்டாவா
"ஜவ்னா" என்ற சொல்லை தமிழக கலைஞர்கள் தங்களை அறியாமல் சொல்கின்றனர் ... காலப்போக்கில் ஒர் சமுகம் உரிமை கோரலாம்,கட்டுரை எழுதலாம் "ஜவ்னா" வை ஆட்சி செய்தது ஜவார் சுல்தான் என்று.. நான் சவுதியில் இருக்கும் பொழுது ஒரு நண்பர் சொன்னார் சாவகச்சேரியை ஆண்டது மலே மன்னன் "ஷா" அதனால் தான் ஷாவகச்சேரீ என்ற பெயர் வந்தது என... மண்ணின் மைந்தர்கள்,யூ டியுப் விண்ணனர்கள் ஆக்க பூர்வமான வீடியோக்களை வெளியிட பயில வேண்டும்..
-
இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024.
JVP வென்றாலும் ...இந்தியாவை எதிர்க்கும் சக்தி சிங்களவரிடம் உண்டு ....இந்தியா ஜனநாயக முறைப்படி சிறிலங்காவின் ராஜதந்திர நகர்வுகளை வெற்றி கொள்வார்களோ தெரியவில்லை.......சில சமயம் மறைமுக வன் முறைகளை பாவித்து சிங்களவரின் ராஜதந்திரத்தை தோற்கடிப்பார்கள்... மேலும் மோடியின் ஆட்சி நிலைத்து நிற்பதை சிறிலங்காவும் ,அமேரிக்கவும் விரும்பவில்லை முக்கியமாக ரணில் ....இந்தியாவில் ஆட்சி மாற்றம் இந்த வருட தேர்தலில் ஏற்படின்...பல மாற்றங்கள் சிறிலங்காவில் ஏற்படலாம்.... இந்தியாவின் தேர்தல் நிலமையை பார்த்து சிறிலங்கா தேர்தலை வைக்கும்... ராகுல் காந்தி ஆட்சி,அல்லது சிறுபான்மை ஆட்சி இந்தியாவில் அமைந்தால் ...ரணில் ,ராஜபக்சா மற்றும் ஏனைய கட்சிகள் மகிழ்ச்சி யடைவார்கள் ,சீனா,அமெரிக்கா போன்ற நாடுளும்...
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
உப்படி எதிர்கருத்காளர்களை உசுப்பேதினால் பிறகு நானும் எழுதி அதிக பச்சைகளை பெற்று விடுவேன் ...
-
புதனும் புதிரும்
அருமையான ஒர் தொடர் ....திரை பட்ம் பார்ப்பது போல் இருந்தது உங்களது எழுத்து நடை...பகிர்வுக்கு மிக்க நன்றி...
-
(தீ) சுவடு
போராளிகளின் நிலமைகளை மிகவும் கவலை யளிக்கிறது...பகிர்வுக்கு நன்றி தனி
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
அவர்களுக்கு ஆதரவாக் இருந்தால் ,அவர்கள் சொல்லும் அறிஜீவித்தனத்திற்கு சலாம் போட்டால் உலகம் அவர்களின் கருத்தை ஏற்று கொண்டது என நம்புவார்கள்
-
இலங்கை ஜனாதிபதி தேர்தல்-2024.
இந்தியா, அனுராவின் வாக்குகளை குறைக்கதான் அங்கு அழைத்தார்களோ தெரியவில்லை... விமல் வீரவம்சா மற்றும் கம்பன்போல போன்றவர்களுக்கு இதனால் கொஞ்ச வாக்கு எண்ணிக்கை அதிகரிக்கும்.. இந்திய விரோத போக்கு சிங்கள மக்களிடம் 80% உண்டு இதை உடைப்பது சரியான கடினம்... சிறிலங்காவில் ...இந்தியாவுக்கு எதிரான கொள்கை உடைய சமுகங்கள் பெளத்த சிங்களவர்கள் 80% கிறிஸ்தவ சிங்களவர்கள் 80% முஸ்லீம் மக்கள் ..100% இந்துக்கள் வட கிழக்கு 50% கிறிஸ்தவ தமிழர்கள் 50% மலையக மக்களின் ஆதரவு கொஞ்சம் அதிகமாக இருக்கும்....அது தான் இந்தியா அவர்களை அதிகம் நம்பியிருக்கு ....
-
களியாட்டத்தில் கலாட்டாவா
சிந்திப்போம் செயல்படுவோம் களியாட்டத்தில் கலாட்டாவா அனைவருக்கும் வணக்கம். அண்மையில் யாழ்நகரில் நடைபெற்ற நிகழ்வின் பொழுது நடந்த ஒர் அசம்பாவிதத்தை பற்றி பல வாத பிரதிவாதங்கள் இடம் பெறுவதை நீங்கள் அனைவரும் அறிந்திருப்பீர்கள். இந்த அசம்பாவிதத்தை ஊதி பெருப்பித்த பெறுமை நெட்டிசன் மாரை சேரும் .அதாவது சமுக வலைத்தளங்களில் அதிக நேரத்தை செலவு செய்யும் நபர்கள்..அநேகமான நபர்கள் தங்களுக்கு அதிக பார்வையாளர்கள்,மற்றும் லைக் வேணும் என்ற காரணத்தால் கவர்ச்சிகரமான தலையங்கங்களை எழுதி தங்களது கற்பனைக்கு எட்டியவற்றை கூறினார்கள் ..அவர்களில் அனேகமானவ்ர்கள் போட்ட படம், அதாவது சனம் தடுப்பு கம்பிகளை உடைத்து கொண்டு முன்னுக்கு செல்லும் காட்சி...இந்த ஒரு காட்சியை ஏதோ ஒரு மூலத்தில் கொப்பி பண்ணி அதை தாங்கள் எடுத்த காட்சி போல பிரசுரித்து கருத்துக்களை அள்ளி வாரி இறைத்தனர். யாழ்ப்பாணத்தவன் உலகத்திலயே சிறந்த பிறவியாக இருக்க வேணும் என்ற கருத்து பட சிலர் எழுதினர்.இன்னும் சிலர் இந்த அசம்பாவிதத்தினால் யாழ்ப்பாணத்தானின் மானம் கப்பல் ஏறிவிட்டது என முதலை கண்ணீர் விட்டனர்.. இந்த யூ டியுப் விண்னர்கள் முழுக்க முழுக்க நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த தொழிலதிபர் இந்திரன்,மற்றும் நடன தயாரிப்பாளர் கலா மாஸ்டர் மற்றும் தமன்னா மீது குற்றங்களை சாட்டுகிறார்கள் அல்லது அவர்களை வசை பாடுகிறார்கள். அவர்களின் ஒழுங்கமைப்பில் தவறுகள் இருக்கின்றது அதை சுட்டி காட்டுங்கள் இனி வரும் காலங்களில் இப்படியான தவறுகள் வராமல் செயல் பட உதவியாக இருக்கும்...இவர்களுக்கு மட்டுமல்ல எந்த ஒழுங்கமைப்பாளர்களுக்கும் அது உதவியாக இருக்கும் அதாவது பொது மனபான்மை ... தொழிலதிபர் தனது கல்வி நிறுவனத்தின் விளம்பரத்திற்காக நிகழ்ச்சியை நடத்தியதாக குற்றம் சாட்டுகிறீர்கள் அதில என்ன தப்பு இருக்கின்றது? தாயகத்தில் இன்று புலம்பெயர்ந்த மண்ணில் வாழும் தொழிலதிபர்கள் பலர் தொழில் முதலீடு செய்ய முன் வருகின்றனர் ,ஈடுபடுகின்றனர்.அவர்கள் புலம் பெயர்ந்த மண்ணிலயோ, இந்தியா,அல்லது ஏனைய ஆசிய நாடுகளில் தங்கள் முதலீடுகளை இலகுவாக செய்யலாம் இருந்தும் தாயகத்தில் இருக்கும் தங்களது பற்று காரணமாக அங்கு முதலீடு செய்ய முன்வருகின்றனர். அவர்களை ஊக்கபடுத்த வேண்டிய பொறுப்பும் கடமையும் தாயக மக்களுக்கு உண்டு என்பதை மறந்து விடாதீர்கள் .சில யூ டியுப் நபர்கள் இந்த விடயத்தில் மிகவும் சிறப்பாக செயல்படுகின்றனர் .அவர்கள் உண்மையிலயே பாராட்ட பட வேண்டியவர்கள் தொழிலதிபர் இந்திரனின் அரவணைப்பால் தாயக மக்களுக்கு கிடைக்கும் நன்மைகள் அதிமாக இருக்கும்..இந்த இசை நிகழ்ச்சியின் பொழுது நடை பெற்ற அசம்பாவிதத்தினால் பாதிப்பு பொருட்களுக்கு மட்டுமே...எனவே எந்த தொழிலதிபர்கள் முதலீடு செய்ய வந்தாலும் அரவணைத்து ஊக்க படுத்த வேண்டியவர்கள் மண்ணின் மைந்தர்களே.. யாழ் மாநகர சபையினர்,மற்றும் பொலிசார்,அரசு போன்ற துறையினரும் இந்த அசம்பாவித் நிகழ்வுக்கு பொறுப்பாளிகள் ..இவர்களை கேள்வி கேட்க வேண்டிய மண்னின் யூ டியுப் விண்ணர்கள்,சமுக வலைத்தள ஜாம்பவாங்கள் எல்லாம் பணத்தை முதலீடு செய்ய முன்வரும் தொழிலதிபர் மீது குற்றம் சாட்டுகின்றனர். காவாலி கூட்டங்கள் உலகில் எல்லா நாடுகளிலும் உண்டு இவர்களை திறுத்த முடியாது .ஆனால் கட்டுப்படுத்த முடியும் அதை சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் பொலிசார் செய்ய வேண்டும் . மக்கள் நடமாட்டம் உள்ள பகுதியில் போதைப்பொருள் பாவிப்பவர்கள் நடமாடுவதை பொலிசார் தடை செய்திருக்க வேணும் .மாநகர சபை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு அனுமதி கொடுக்கும் பொழுது சில கட்டுப்பாடுகளை விதித்திருக்க வேணும் .. ஒர் அரசியல்கட்சியின் எதிர்ப்பு ஊர்வலத்திற்கு மக்களை விட கலகம் அடக்கும் பொலிசார் அதிகமாக நிற்பார்கள் இங்கு அப்படியான எதுவும் ஒழுங்கு செய்ய படவில்லை.. பாதுகாப்பு செய்ய வேண்டியவர்கள் இங்கு தவறு செய்து விட்டார்கள் .. ஏற்கனவே மக்கள் கொந்தளிப்பு நிலையில் இருக்கும் பொழுது மக்களை அமைதி படுத்த வேண்டிய பொலிஸ் அதிகாரி சிங்கள மொழியில் அமைதி காக்கும் மாறு கோருகின்றார் இது இன்னும் மக்களின் மனவேதனையை தூண்டும் செயல் ...அடுத்து தமிழில் பேசிய அதிகாரி கூறியவை எதுவும் மக்களுக்கு புரிந்திருக்க வாய்ப்பு இல்லை.. இன்று தொழிலதிபர் இந்திரன் தனது சார்பில் அறிக்கை விடுத்துள்ளார் அதைப்பற்றி எவரும் பெரிதாக அலட்டி கொள்ளவில்லை...அதை மக்களுக்கு எடுத்து செல்ல வேண்டிய கடமையும் இந்த யூ டியுப் விண்ணர்களுக்கு உண்டு... இளைய வயதில் பிரபல தொழிலதிபராக வந்து தாயக மக்களின் கல்வி வளர்ச்சிக்கு குறிப்பாக வடமாகாண மக்களுக்கு ஒர் கல்வி நிறுவனத்தை தொடங்குவது என்பது உண்மையிலயே பாராட்டபட வேண்டிய ஒன்று ..கல்வி அறிவே எவராலும் அழிக்க முடியாத சொத்து...எம் மக்கள் இதை பாரம்பரியமாக கடைபிடித்து வருகின்றனர். இப்படி எழுதிய காரணத்தால் நானும் இந்திரனிடம் பணம் வாங்கி எழுதுகிறேன் பதிவுகளை போட சிலர் நினைக்கலாம் எனக்கு அவர் யார் என தெரியாது என்பதையும் சொல்லி கொள்ள விரும்புகிறேன்.. எல்லோரையும் குற்றம் சாட்டி, எம் மண்ணின் மைந்தர்கள் தொழில் செய்ய விடாமல் தடுக்க பல முயற்சிகள் திரைமறைவில் நடை பெறுவது கசப்பான உண்மை... நலன் விரும்பி
-
யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை
நல்லூர் தேர் ... தமன்னா... மாம்பழம் ,பிலாப்பழ கலாங்கள் இப்படியான விசேசங்களில் எங்கன்ட ஆட்களை வர பண்ணுவத ற்கு வடமாகாண சபையின் சுற்றுலா துறை தீயா வேலை செய்ய வேண்டும்...
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
பொது தளத்தில் கருத்து பகிர்ந்தால் அதுக்கு கருத்து சொல்ல எல்லோருக்கும் உரிமை உண்டு இப்படியான மனப்பான்மை தான் சில ஆயுததாரிகளிடம் முன் முதல் இருந்தது ...
-
இலங்கை போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ள கனடா
அமேரிக்கா சொல்லியிருக்குமோ ... தொடர்ந்து இந்தியாவுக்கு பின்னால் போனால்போர்குற்ற விசாரணையை தொடங்குவோம் எண்டு...ரணிலை தவிர்த்து பொன்சேகா,விமல்,சர்வேந்திரா என்று இந்தியா காய் ந்கர்த்தினால் நாங்கள் போர் குற்ற விசாரனையை தொடங்குவோம்
-
நீதிமன்ற உத்தரவு: சிறிதரனின் தலைவர் பதவியும் ரத்து?
என்ன தான் நரியாக இருந்தாலும் தன்னுடைய மக்களிடம் தோல்வியை தழுவியவர்...நாட்டை குட்டிச்சுவராக்கியவர் ,நாட்டை திறந்தவெளி சந்தையில் வியாபாரத்திற்கு விட்டவர்...விட்டுகொண்டிருப்பவர்... இதையே எவ்வளவு காலத்திர்கு சொல்லி கொண்டு இருக்க போறீயல்... போராட்டத்தில் இது தவிர்க்க முடியாத விடயம்... நீங்கள் பாதிக்கப்படாத காரணத்தால் இப்படி எழுதுகிறீர்கள் என இதற்கு பதில் வரலாம்...
-
யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை
சொல்லி வேலையில்லை....இந்த லட்சணத்தில் எங்கன்ட யூ டியுப் விண்ணர்கள் .... யாழ் கலாச்சாரம் முற்றவெளியில் காற்றில பறந்து போச்சு என வீடியோக்களை எடுத்து விடுயினம்..
-
இலங்கை போர்க்குற்றங்களுக்கு எதிராக சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடரவுள்ள கனடா
சரியா சொன்னீர்கள் குழப்ப வேண்டாம்... தென் ஆபிரிக்கா இஸ்ரேலுக்கு எதிராக கொண்டு வந்த இனவழிப்பு சம்பந்தமான வழக்கை பார்த்து இஸ்ரேல் பயப்படவில்லை தொடர்ந்து இனவழிப்பை செய்து கொண்டு தான் இருக்கின்றது இஸ்ரேல் தனது திட்டம் நிறைவடைந்த பின்பு இந்த தாக்குதலை நிறுத்தலாம்... இன்னும்20 வருடங்களின் பின்பு பலஸ்தீனருக்கு எதிராக இனவழிப்பு நடைபெற்றது என இஸ்ரெலே சொல்லி மன்னிப்பு கேட் கலாம் ....இதனால் பாதிக்க பட்ட மக்களுக்கு எதுவும் கிடைக்க போவதில்லை...... கட்டு கட்டாக கடுதாசிகளில் முறைப்பாடுகளை சேகரித்து வைக்கும் ஐ.நா.சபை வைலில் ஆயிரத்தில் ஒர் முறைப்பாடாக இதுவும் சேர்த்து கொள்வார்கள்.... ஆர்மேனியாவில் இனப்படு கொலை நடந்த விடயம் கடுதாசியில் உண்டு என்ன பிர ஜோசனம்...
-
யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை
எல்லாம் நம்ம சிறிலங்கா மற்றும் இந்தியாவின் பொருளாதாரத்தை எங்கன்ட புலம் பெயர் மக்களின் உதவியுடன் அதிகமாக்க தான் ...இப்படியான் இலவச ஐடியாக்கள்
-
புதினை கடுமையாக எதிர்த்த நஞ்சூட்டபட்ட அலெக்ஸி நவல்னி இறப்பு
சிவப்பு சிந்தனை உலகம் பூராவும் பரவ வேணும் என்ற சிந்தனையுடன் கடுமையாக உழைக்கும் ரஸ்யாவின் ஜனாதிபதியை, விமர்சிக்கிறோம் என்ற போர்வையில் உங்களின் செல்ல பிள்ளை உரசி பார்க்கலாமா?
-
புதினை கடுமையாக எதிர்த்த நஞ்சூட்டபட்ட அலெக்ஸி நவல்னி இறப்பு
புரியும் ஆனால் புரிந்த மாதிரி காட்டி கொள்ள மாட்டோம்.... புட்டினுடன் இணக்க அரசியல் செய்து தனது செல்வத்தை பெருக்கி ,உயிரையும் காப்பாற்றியிருக்க வேண்டும் ...பிழைக்க தெரியாத மனுசன்
-
இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்
அம்பானி குறூப் இலங்கையை பிடிப்பதை ஒப்பந்தம் என சொல்லி கண்டு கொள்ளாத உத்தமர்கள்.. அப்பாவி மீனவர்கள் மீன்பிடிச்சா எல்லை பிரச்சனை என போர் கொடி ......... வெகு விரைவில் இலங்கை கடற் பரப்பில் யாரும் மீன்பிடிக்கலாம் என்ற சட்டத்தை இலங்கையின் அடுத்த ஜனாதிபதி அறிவிக்க வேண்டிய நிலமை ஏற்படலாம்... சீனாவின் ஆய்வுக்கப்பல் இலங்கையினுள் வரலாம் இந்தியாவின் நீர்மூழ்கி கப்பல் இலங்கையைனுள் வரலாம் அமெரிக்காவின் விமான படை திடிர் விஜயம் செய்லாம் இப்படி பல நாடுகள் சொல்லமல் கொள்ளாமல் வந்து தங்கன்ட நலன் களை பெறும் பொழுது ஏன் இந்த அப்பாவிகள் மீ பிடித்து தங்கள் பிழைப்பை கவ்னிக்க முடியாது.....
-
சமுர்த்தி, ஏனைய நலன்புரி நன்மைகளைப் பெற மார்ச் 31 ஆம் திகதிக்கு முன்னர் பதிவு செய்யுமாறு அறிவிப்பு
நான் பிழையாக வாசித்து விட்டேன் அஸ்வமேத யாகம் என்று....
-
யாழ். பலாலி ஊடாக இந்தியாவுக்கான மற்றுமொரு தினசரி விமான சேவை
என்ன கொண்வூயுஸ் ஆகிட்டியல் பெருமாள் ஒரு காலத்தில் இந்தியாவுக்கு போய் எம.ஜீ.ஆரின் படம் பார்த்திட்டு வாரவயலாம்.. இனி வரும் காலங்களில் இந்தியா ரூபாவை தான் இறையாண்மையுள்ள சிறிலங்கா உப யோகப்படுத்தும் நிலமை வரலாம்.. சிறிலங்கணுக்கு விசா தேவையில்லை இந்தியாவுக்கு செல்ல... கால போக்கில் இந்திய கடவுச்சீட்டு சிறிலங்கனுக்கு வழங்கலாம்...