Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

putthan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by putthan

  1. ஆண்கள் இனி தமிழ்நாட்டு சொப்பிங்க் கடைகளில் குந்திகொண்டிருக்காமல் அம்மணிகளை சொப்பிங் அனுப்பி விட்டு யாழில் கள்ளு குடிச்சு கொண்டிருக்கலாம் ...அமமணிகள் சொப்பிங் முடிச்சு மாலையில் திரும்பி வந்து ஆண்களை வீட்டுக்கு அழைத்து செல்லலாம்...
  2. மிகவும் சோகமான நிகழ்வு ..
  3. சிவப்பு கொடிகாரர் வந்து எல்லாத்தையும் இலவசம் என்று சொல்லுவினம் ....மீண்டும் பழையபடி ...தோழர்களே புரட்சி புரட்சி என கூவ சரியா இருக்கும்...
  4. இனப்பிரச்சனைக்கு தீர்வு கொடுக்கிற மாதிரி தான் ...வரும் ஆனால் வராது ....ஜனாதிபதி பதவியை ஒழிப்போம் ஆனால் ஒழிக்க மாட்டோம்...
  5. எல்லாத்துக்கும் காரணம் புலம் பெயர் தமிழர்கள் என குற்றசாட்ட்டுவினம்....
  6. பலஸ்தீனத்திற்காக பல ஆயுத குழுக்கள் உருவாகி அழிந்து போகின்றது..பேச்சுவார்த்தை என பல நிகழ்வுகள் நடை பெறுகிறது ...PLO போய் காலங்கள் கடந்தும் பலஸ்தீனம் என்ற கருத்தியல் இன்னும் நிற்கின்றது அது போல புலிகள் போனாலும் தமிழ் தேசியம் நிலைத்து நிற்க்கும் ...தமிழ் தேசியம் குறும் தேசியம் என சிலர் புலம்பி கொண்டிருப்பார்கள் அது அவர்கள் சுதந்திரம் ...
  7. நாங்கள் தமிழனின்ட காணியில் விகாரை கட்டுதல் ,தொல் பொருள் திணைக்கள ஆராச்சியில் மட்டும் தான் அக்கறை எடுப்போம் .... வெளிநாட்டு பெண்டிர் சொல்லியினம் சின்ன வெங்காயம் போட்டு ஆட்டிறைச்சி சமைச்சா அந்த மாதிரி இருக்கும் என்று ஆனால் ...இங்க விலை அதிகம் அவ்வங்கி போட மாட்டினம்
  8. சிறிலங்கா வெங்காயங்கள் தமன்னாவுடன் படம் எடுக்க போய்விட்டினமோ? அது உந்த அரசாங்கங்கம் என்ன செய்யுது முட்டை,வெங்காயம் போன்றவற்றையே உற்பத்தி செய்ய முடியாமல் தடுமாறியினம் இதில் செங்கடலுக்கு கடற்படை.....
  9. நம்புவோம் தமிழீழம் நாளை பிறக்கும்...நம்பிக்கை தானே வாழ்க்கை
  10. இந்தியாவும்,அமெரிக்காவும் சொல்லியிருப்பினம் இனி எவன் வந்து உங்களை பயப்படுத்தினாலும் நாங்கள் உங்களை பாதுகாப்போம்....முள்ளிவாய்காலில் மக்களை அழித்து உங்களை காப்பாற்றியது போல்...ஐ நா சபை ,எங்கள் கையில்....பயப்பட வேண்டாம் ..என கூறியிருப்பார்கள்
  11. தலைவா விழித்தெழு ,கிளர்ந்தெழு வெற்றி நடை போடு அடுத்த பொஙகலுக்கு முதல் இதற்கு தீர்வு எடுத்து தா .....அது வரை தீர்வு திட்டத்தை நன்றாக படி
  12. 75 வருடமா சிங்கள அரசியல்வாதிகளிடம் கொடுத்து அவையள் என்னத்தை கிழிச்சவையள் ...அதே மாதிரி இவையளுமெதையாவது சுருட்டி கொண்Tஉ அரசியல் செய்திருப்பினம்
  13. இவரின் தொழில் முயற்சியினால் கிடைக்க போகும் சில நன்மைகளையும் நாம் சிந்திக்க வேணும் ..கலாச்சார பாடம் நாங்கள் எவ்வளவு எடுத்தாலும் மக்கள் திருந்த போவதில்லை...கலாச்சாரம்,கடவுள் இவை யாவும் மாற்றங்களுக்கு உள்ளாகி கொண்டே வருகிறது இது எம்மை அறியாமல் நடை பெறுகிறது ......
  14. எங்களுக்கு பிச்சை போடுங்கள் ஆனால் நாங்கள் பிச்சைகாரர் அல்ல....அப்படி சொன்னா உங்களை என்ன செய்வோம் தெரியுமா?அனுரா ஜனாதிபதியாக வந்தால் நீங்கள் மீண்டும் மாகாணசபை ஆளுனராகவும் வரமுடியாது....என்பதை இடக் கிட நினைத்து பாருங்கள்
  15. வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி ...சங்க காலத்திலயே இருக்கு என்று சொன்ன நம்பவ மாட்டினம் நம்ம ஆட்கள்
  16. வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி Kandiah கருணை தான் கடவுள் என சொன்ன புத்தனையே கடவுளாக்கி அவன் பெயரில் உலகில் எவ்வளவோ அட்டகாசம்... சில்லறை அதிகமானால் சிலை வைப்பார்கள் அம் மனிதர்கள் சொன்ன போதனைகளை சின்னதனமாக நினைப்பார்கள்
  17. செவ்வரத்தை பூ கொடுத்திருப்பார்...நன்றி Nuna வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி Suvy வருகைக்கும் கருத்து பகிர்வுக்கும் நன்றி யாயினி கொஞ்ச நாளைக்கு முருகனுக்கு லீவு கொடுத்து வள்ளுவரை வம்புக்கு இழுக்கிற பிளான்..
  18. திருவள்ளுவர் மிகவும் அழகாக சொன்ன குரளை நான் எனது கிறுக்கல் மூலம் சொல்ல முயற்சிக்கிரேன் ..தப்பாக இருந்தால் தம்ஸ் டவுன் (அதுதான் கட்டை விரலை கீழே காட்டுங்கோ) பண்ணுங்கோ .. வள்ளுவர் இந்த குரளை எப்படி எழுதியிருப்பார்?...எப்படி ஐடியா வந்திருக்கும்? என்ற சந்தேகம் எனக்கு வர எனது கற்பனை ....வாழ்க்கையின் தத்துவத்தை அனுபவ ரீதியாக இரு வரிகளில் எழு சொற்களில் சிறப்பாக சொல்லி சென்றுள்ளார்... ஐயன் திரு... இற்றைக்கு ஏரத்தாள இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் காதலர் தினத்திற்காக வாசுகி மல்லிகை பூ ,மற்றும் ஏனைய வாசனை திரவியங்கள் யாவும் பூசி கொண்டு வள்ளுவரை எதிர் பார்த்து காத்திருந்தாள்.அன்று காலை திரு வெளியே செல்லும் பொழுது "நாதா இன்று மாலை சீக்கிரம் வீடு வந்து சேருங்கள் வழமை போல லெட்டாக வரவேண்டாம்" என சிணுங்கலுடன் சொன்னாள். திரு வேலை பளுகாரணமாக "ஒம் " என சொல்லி தனது குரளை எப்படி எழுதி முடிப்பது என ஆராச்சியில் மண்டையை போட்டு குழப்பி கொண்டிருந்தார் .இரு வரிகளில் ஏழு சொற்களில் எல்லாவற்றையும் அழகிய இலக்கிய இலக்கண தமிழில் எழுதுவது இலகுவான காரியமல்ல என்பது நீங்கள் அறிந்ததே.....தனது நிழலை பார்த்தார், மறைந்து விட்டது வீடு செல்லும் நேரம் என நினைத்து எழுதி கொண்டிருந்த ஒலைச்சுவடிகளையும் எழுத்தாணியையும் தூக்கி கொண்டு வீடு சென்றார். வழமையாக வாசலில் வந்து வரவேற்கும் வாசுகியோ வந்து வரவேற்கவில்லை அதை திரு பெரிதாக கண்டு கொள்ளவில்லை ,வாசுகியோ அவரது கையில் இருப்பது திருநெல்வேலி அல்வா ஆகா இருக்குமோ என ஆசையுடன் எட்டி பார்த்தாள் ,புரிந்து கொண்டாள் கிழவன் வழமை போல ஒலைகளை சுருட்டி கொண்டு வந்திருக்கிறது ..இந்த ஒலைகளினால் என்ன பயன் என மனதில நினைத்தவாறு கையில் இருந்த அகப்பையை தரையில் வீசினாள்.. அன்று ஐயன் திரு 1108 ஆவது குரளை எழுதி கொண்டிருந்தார் . அதுதான் "வீழும் இருவர்க்கு இனிதே வளியிடை போழப் படா அ....." வீடு போகும் வரை இதை எப்படி முடிப்பது என தெரியாமல் திண்டாடிக்கொண்டிருந்து வீடு சென்றும் எழுத முடியாமல் தவித்த வண்ணமிருக்கையில் திரு ,வாசுகியின் அகப்பை சத்ததை கேட்டு ஒடிச் சென்று முயக்கினான் (கட்டி தழுவினார்) ஏற்கனவே திரு மீது மிகவும் கடுப்புடன் இருந்த வாசுகி தள்ளி போங்கள் என கூறி விலகிச்சென்றாள். உடனே வள்ளுவனுக்கு தனது 1108 ஆவது குரலின் இறுதிச் சொல் உதிக்கவே ஒடிச்சென்று "முயக்கு" என அந்த குரளை எழுதி முடித்து விட்டு மீண்டும் வாசுகியிடம் வந்தார். வாசுகியோ அவரை பார்க்காமல் வேறு திசையை பார்த்தவாறு இருந்தாள்.திருவுக்கு புரிந்து விட்டது மிகவும் ஆத்திரத்தில் இருக்கின்றாள் ,இருந்தாலும் என் வரவுக்காகவும் என்னை மகிழ்ச்சி படுத்தவும் மல்லிகை பூ அழங்காரத்துடன் இன்னும் இருக்கின்றாள் ....திரு ஏற்கனவே எழுதிய 1108 குரளினால் உணர்ச்சி பிழம்பாக இருந்தார் ...வாசுகியின் அருகே சென்று கண்ணே ஏன் இந்த ஊடல் என மிகவும் தாழ்மையாக கெஞ்சி குலாவி கேட்க , "உங்களுக்கு காலையில் என்ன கூறி வழி அனுப்பினேன் " சிறுது நேரம் யோசித்த திரு "மாலையில் சற்று விரைவாக வருமாறு" "ஏன் வரவில்லை" "வேலைப்பளு கண்ணே" "இன்று என்ன நாள் என தெரியுமா" "தெரியவில்லையே தேனே" "காதலர் தினம் ,பக்கத்துவீட்டில் அவர்கள் இருவரும் காலையில் இருந்து கொண்டாடுகிறார்கள்,அவளது கணவன் அல்வா வாங்கி கொடுத்ததாக எனக்கு கொண்டு வந்து தந்தாள் .." "அவன் அல்வா தான் கொடுத்தான் நான் உனக்காக குரளே எழுதியுள்ளேன் அந்த குரளின் இறுதி சொல்லும் உன்னை கண்டதும் உதித்தது மலரே" "எங்கே வாசியுங்கள்" திரு உணர்ந்து கொண்டார் தப்பு செய்து விட்டேன் ..உடனே அவளின் அருகில் சென்று அவரது 1108 குரளை வாசித்தார் . வாசுகி தன்னிலை மறந்தாள் ,திருவும் தன்னிலை மறந்தார் .இருவரும் உச்சத்துக்கு சென்று பிரிந்தனர். கண்ணே நீ இன்று என் மீது கோபம் கொண்டாய்,அதன் காரணத்தை உணர்ந்தேன் நீயும் உணர்ந்தாய் முடிவில் கூடினோம், காதல் தினம் அல்வா கொடுப்பதோ பூக்கள் கொடுப்பதோ அல்ல என சிரித்தபடி தனது மீசையும் ,தாடியையும் தடவினார். "மலரே,எனக்கு இன்று இன்னோரு குரளும் எழுத கை துடிக்கின்றது" "எழுதுங்கள் நாதா" "ஊடல் உணர்தல் புணர்தல் இவைகாமம் கூடியோர் பெற்ற பயன்" "அருமை நாதா" வாசுகியை தன் வசம் மயக்கிய மகிழ்ச்சியில் "பூவே ,எனது இந்த அதிகாரத்தை எழுதி முடிக்க இன்னுமொரு குரள் தேவை படுகிறது" "எழுதுங்கோ பிரபு" " அதற்கும் உன் ஒத்துழைப்பு வேண்டும் இளவ்ரசியே" " இன்று இவை போதும் நாதா ,நாளை மிகுதி குரளை எழுதுவோம் " என கூறி திருவின் வயிற்றில் செல்லமாக குத்திவிட்டு சென்றாள் ..
  19. மாகாணசபைக்கு கல்வி அதிகாரங்கள் கொடுத்தால் இப்படியான கேள்விகள் கேட்டு தமிழ் மக்களை பிரிவின கோரிக்கைக்கு வழிநடத்துவார்கள் ஆகவே மாகாணசபைக்கு கல்வி அதிகாரங்களை குறைக்க வேணும் என அதிகார வர்க்கம் முயற்சி செய்வார்கள்
  20. வண்ணை ஆனந்தன் சொன்னதோ? .....காசி ஆனந்தன் சொன்னதோ? அல்லது ஏதோ ஒரு ஆனந்தன் சொன்னதோ😃
  21. தமிழர்களுக்கு முதல் எதிரியாக நான் இருந்து விட்டு போகிறேன் ...அதில் நான் கவலை படவில்லை ...இனி வரும் காலங்களில் இளைஞர்கள் எப்படி தமிழர்களுக்கு எதிரியாக இல்லாது வாழ் வேணும் என சொல்லி கொடுங்கள் ...அது தமிழ் சமுதாயம் முன்னேறட்டும்... குற்றசாட்டுக்களை விடுத்து முன்னேற்ற பாதைகளுக்கான கருத்துக்களை கூறுங்கள் உங்களுக்கே என்ன கேட்டேன் என தெரியவில்லை போலும்
  22. சரியாக சொன்னீர்கள் ...விமல் வீரவம்சாவும் இந்தியாவுக்கு போக துடிக்கின்றார் ...தமிழ் கட்சிகளை முன்பு இந்தியாவுக்கு ஒடுவது போல இப்பொழுது சிங்கள அரசியல்வாதிகள் இந்தியாவுக்கு ஒட வேண்டிய நிலை ...இந்தியாவும் இவர்களை (சிங்கள கட்சிகளை) வாங்கோ வாங்கோ என காலில் விழா குறையாக வரவழைத்து தங்களுக்கு தேவையான காரியங்களை செய்து கொள்கின்றனர் .... இனவாத சிங்கள அரசியல் தலைவர்களால் சிறிலங்கா மாதா தன் இறையாண்மையை இழந்து தவிக்கின்றார்.....அன்று சிறிலங்கா மாதாவின் பிள்ளைகள் யாவருமென நினைத்து அரசியல் நடத்தியிருந்தால் இன்று இந்தியா சிறிலங்கா ஜனாதிபதியை தெரிவு செய்யும் நிலை வந்திருக்காது....
  23. சரி நீங்கள் என்ன கேள்வி கேட்டியள் சொல்லுங்கோ ?பதில் தருகிறேன்.... நீங்கள் வழமையான் குற்றசாட்டுக்களை வைக்கின்றீர்கள் .. வசை பாடுதல் விவாதத்தை திசை திருப்புதல் இப்படியான சொல்லாடல்களை எங்கயோ பல முறை கேட்ட மாதிரி இருக்கு ... தயவு செய்து மீண்டும் உங்கள் கேள்வியை எழுதுங்கள்....
  24. கேள்வியை வடிவா கவனித்தால்...உள் நோக்கம் புரியும்... சிலர் நக்கலாக கேட்கும் கேள்வி ..."முழங்கினர்" என்று தான் கேட்டுள்ளனர் ..."முழங்கி கொண்டிருக்கிறார்கள்" என கேட் கவில்லை நாடு வேணும் என் கேட்டியள் இப்ப ஒரு கோதாரியும் இல்லை என்ற மாதிரி ....

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.