Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

வல்வை சகாறா

கருத்துக்கள உறுப்பினர்கள்
 • Posts

  5,736
 • Joined

 • Last visited

 • Days Won

  37

Everything posted by வல்வை சகாறா

 1. அரிதாரம் போடாத எழுத்துகள் வளவன். எத்தனையோ முறை மனம் சொல்வதை எழுத முயல்வதும் பின்னர் அழிப்பதுமாக கடந்த காலங்களைக் கடந்திருக்கிறேன். நிதர்சனத்தை புரிந்து கொள்ள விரும்பாத பக்கங்களை யாழின் கருத்துக்கள நண்பர்களில் காண்பதுண்டு. சில சமயங்களில் அதுவும் நன்றே என்றும் தோன்றும். எழுத்துக்களில் அதி மேதாவித்தனம் அல்லது அடிமுட்டாள்த்தனம் அவை மட்டுமே கருத்துக்களத்தை கொண்டு நகர்த்தும் அடிப்படையாக உணர்வதுண்டு. போட்டு உடைத்து எழுதும் திராணி எப்போதும் இருந்ததில்லை. மேலே கிருமி சொன்னதைப்போல் யாழ் இணையம் இளமைதான் எழுதும் கருத்தாளர்கள் அரும்பும் முதுமையில்.... எழுத்துகளுக்கு அப்பால் நாமெல்லாம் வெறும் பூஜ்ஜியங்கள் ஆகிவிட்டோமோ என்றும் அதிகம் தோன்றுகிறது. உங்கள் மனதில் தோன்றிய எண்ணம்போல் நமக்கும் தோன்றுகிறது.
 2. ஆகா கிடைக்கிற காப்பில இந்த சிட்னி முருகனை கலாய்க்கிறதில புத்தனுக்கு தனி இன்பம். இந்தக்கதையை வாசித்த பிறகு நாங்கள் பாவம் பார்க்கவேண்டியது புத்தனுக்கா? முருகனுக்கா? கிட்டத்;தட்ட இரண்டு கெரக்டரும் ரிலாக்ஸாக இருக்க ஆசைப்படுகிறார்கள். ஆனால் பக்தை / துணைவி யின் முயற்சி இருவரையும் ஒரு நேர் கோட்டில் நிறுத்தி இப்படி இருவரையும் புலம்ப வைக்கிறதே. புத்தனிள் புலம்பலுக்கும் முருகனின் அங்கலாய்ப்பிற்கும் பாராட்டுகள்.
 3. இந்தப்பிரச்சனைக்குள் அகப்படாமல் தெளிவடைய முடியாது எங்கள் குடும்பத்தில் எனது துணைவரின் தமையனார் மொன்றியலில் வசிக்கிறார் நாங்கள் ரொரன்டோ எங்கள் வீட்டின் எனது பிள்ளைகளுக்கு அவர்களுடைய பெயர் முதற்பெயராகவும் துணைவரின் பெயர் குடும்பப் பெயராகவும் உள்ளது. அதே நேரம் மொன்றியலில் உள்ள துணைவரின் சகோதரரின் மகனுக்கு முதற்பெயராக மகனின் பெயரும் குடும்பப் பெயராக எனது துணைவரின் தந்தை பெயரும் உள்ளது அதே நேரம் அண்ணியாருக்கும் அவரின் குடும்பப் பெயராக மாமாவின் பெயரே அமைந்துள்ளது. ஆனால் எனது குடும்பப் பெயராக எனது துணைவரின் பெயர் இல்லை. பதிவுத் திருமணத்தின்போது ஒரு கேள்வி உள்ளது மணப்பெண்ணிற்கான பகுதியில் அவள் தன்னுடைய குடும்பப் பெயரை துணைவரின் குடும்பப் பெயருக்குக்கீழ் மாற்ற விரும்புகிறாரா என்பது... அதற்கு ஆம் என்று பதிலளித்திருந்தால் அது துணைவரின் தந்தை பெயரை தனது குடும்பப் பெயராக ஏற்றுத் தொடரவேண்டும் இல்லை எனது தந்தையின் பெயரையே வைத்திருக்க விருப்பம் என்று தெரிவித்தால் அவள் தனது கன்னிப்பெயரையே குடும்பப் பெயராக தொடர முடியும். உண்மையிலேயே இந்த நிலை வெளியிடங்களுக்கு செல்லும்போது சிக்கலானதாக உள்ளது நாங்கள் எல்லோரும் ஒரு குடும்பம் என்று பயண இடங்களில் நிரூபிக்க மேலதிக ஆவணங்களை கைவசம் வைத்திருக்கவேண்டியுள்ளது. கட்டுரை நன்றாக உள்ளது கிருமி. நாங்கள்தான் எப்படி தெளியப்போகிறோம் என்று தெரியவில்லை.
 4. இன்றைய நாட்களில் அநேகமாக இந்தமாதிரி சங்கு அமைப்பில்தான் சுவாசம் சீராகிறது. நிறையக்காலம் காத்திருந்து எழுதிய கவிதை மாதிரி இருக்கு கடைசியிலை நாங்களெல்லாம் கொக்குப்பார்த்த குருடன் கதைதான் கேட்டிருக்கிறோம் அம்மாடி யானை பார்த்த குருடனா?????????? கொக்கை என்றாலும் குருடன் தடவிப்பார்த்து புரிந்திருப்பான். யானையை எப்படி? பின்னால வந்து கருத்தெழுத வெளிக்கிட்ட ஆண்சிங்கங்களின் ஆர்வத்தின் வெளிப்பாட்டை நன்றாக இரசிக்கமுடிகிறது. அதிலயும் மாங்காய் பிடுங்கி திண்டதாக எழுதினவர் சுவியாரை விட ஒரு படி மேலே போய் விட்டார்...... சரி சரி வாழ்த்துக்கள் சுவி அண்ணா
 5. அன்புத்தோழி கண்மணி கதை ஆரம்பித்தபோது மனம் திக்கென்றது.... சரி எப்படி போகிறது என்று பார்ப்போம் எனறு தொடர்ந்து வாசித்தேன். ஒரு கணம் கடந்த காலத்தில் லொக்டவுனை நான் அலட்சியம் செய்திருந்தால் நிச்சயம் இப்படி ஒரு சந்தர்ப்பம் அமைந்திருக்கக்கூடும். எல்லோருடைய நலமும் பாதுகாப்பும் இந்நாட்களில் கவனத்தில் கொள்ளவேண்டிய ஒன்று. ஒரு கணம் நான் தவறியிருந்தால் இந்தக்கதை என்னுடையதாக இருந்திருக்கும் என்பது நிதர்சனம். லொக்டவுன் உண்மையின் தரிசனம். வாழ்த்துக்கள் தோழி
 6. கு.சாவை ( நான் குறுக்கி எழுதுவதை யாரும் குட்டிச்சாத்தான் என்று விளங்கக்கூடாது) எல்லாரும் வச்சுச் செய்யிறாங்கள் போல
 7. ஆண்களைப்பற்றி அழகான கவிதை
 8. ஆழ்ந்த அனுதாபங்கள் நெடுக்கு. ஆறுதல் சொல்வதற்கு வார்த்தைகளும் இல்லை மனங்கள்போல் அவையும் மெளனித்துள்ளன.
 9. தேடும் கண்களுக்கும் தெரியாது - உன் தோள் சாயத் துடிக்கும் மனதிற்கும் தெரியாது கூடச் சேர்ந்து நடக்க எண்ணும் கால்களுக்கும் தெரியாது - உன் நாமம் உச்சரிக்கும் உதடுகளுக்கும் தெரியாது தினமும் திண்டாடும் நினைவுக்கும் தெரியாது இன்று என் வீட்டு சுவற்றில் சிரித்தபடி தொங்கும் - நீ எட்டாத தூரத்தில் இனி எப்போதும் இல்லையென்று. கோவிக்கக் கூடாது கன நாளைக்குப் பிறகு உங்கள் வரிகளை பார்க்க ஆசையாக இருந்தது. சரி உங்களைக் கொஞ்சம் கொப்பி பண்ணி சுருக்கி எழுதிப் பார்த்தேன். நல்லதொரு ஆக்கம் தமிழ்நிலா வாழ்த்துகள்
 10. எப்ப பார் பொம்பிளைகளை கள்ளிகள் வில்லிகள் என்டுகொண்டு....
 11. நாதமுனியின் கட்டுரையை வாசித்தபின்னர் சந்தர்ப்பம் கிடைத்தால் சென்று வரவேண்டும் போல் உள்ளது. முதுமையில்தானே சுற்றுலா சாத்தியப்படும்.
 12. பாஞ்ச் எனக்கும் வாட்ஸ் அப்பில் வந்த பிரியாவிடை....... இதற்கு ஒன்றும் குறைச்சல் இல்லை.... தற்போது கிடைக்கப் பெற்ற முக்கிய தகவல்.. பிரிவு உபச்சார விழா! அன்பர்களே! 31ம்திகதி இன்று நள்ளிரவுடன் திருவாளர்.2020 ஓய்வு பெறுகிறார்..... அவருடைய 12 மனைவிகளும், 52 பிள்ளைகளும், 365 பேரக்குழந்தைகளும், டிசெம்பர் 31 அன்று , 23.59 மணிக்கு, இந்த பிரிவு உபச்சார விழாவற்கு வருகை தந்து சிறப்பிக்க உள்ளனர்! (ஏன் படுத்தினது போதாதா. ) திருவாளர்.2020 அவர்களின் குடும்ப உறுப்பினர்கள் தங்களுக்கு நற்செய்தியாக கூறுவது என்னவென்றால்".. திருவாளர் .2020ஓய்வு பெறும் அப்பொழுதே உங்களுடைய அனைத்து பிரச்சனைகளையும் துக்கங்கள், வஞ்சகங்கள், ஏமாற்றங்கள், தோல்விகள், நிகாகரிப்பு,கெட்ட எண்ணங்கள் இன்ன பிறவற்றைகளையும் தன்னுடனே எடுத்து செல்லவதாக கூறியுள்ளார்! (கொரோணா இதில் உள்ளடங்குவதாக தெரியவில்லை) அடுத்ததாக குமாரர்.2021பதவி ஏற்க போகிறார்! குமாரர் 2021தனது வாழ்த்துச் செய்தியில் கூறியதாவது.. நீங்கள் 2020ல், இழந்தவற்றிற்கு ஈடாக.. வெற்றி,நீண்ட ஆயுள், ஆரோக்கயம், அன்பு, மகிழ்ச்சியும், மன சமாதானம்,வற்றாத நிதியமும், தாளாத கீர்த்தியும், வளமையும் , இன்னபிர நீங்கள் நினைக்கும் அனைத்து நற்சிந்தனைகளையும் வாரி வழங்கப்போவதாக சூழுரைத்துள்ளார்! (எதை கிழிக்க போகிறாரோ தெரியவில்லை) எதுவாயினும் நல்லதே நடக்கட்டும் என வரவேற்போம்..." இனிய 2021 வாழ்த்துகள்!!!
 13. நியானியின் 2020 ஆண்டின் இறுதியில் இந்த ஆண்டு யாழ்கருத்துக்களம் கண்ட தலைப்புகளும் அவற்றில் பிரபலமானவற்றையும் தொடர்ந்து சளைக்காமல் எழுதும் கருத்தாளர்கள் விருப்புப்புள்ளி பெற்றவர்கள், மற்றும் புதிய உறுப்பினர்கள் அவர்களில் அதிகமாக எழுதுபவர்கள் என விபரங்களைப்பதிந்தமை நல்ல முயற்சி. வாசிப்பதில் எதையாவது தவறவிட்டுள்ளோமா என்ற சந்தேகமே இல்லாமல் பிரபலமானவற்றை வாசித்திருக்கிறேன். இவற்றில் சிறந்த கருத்தாளர்களையும் காணமுடிகிறது விசமத்தனத்துடன் கருத்திட்டவர்களையும், திரியைத் தொய்வில்லாமல் விகடத்தனத்துடன் நகர்த்தியவர்களையும் காணமுடிகிறது. அதிக தனிமனித தாக்குதல்களையும் காணக்கூடிய திரிகளாக இருந்தவையே பிரபலமான திரிகளாகி இருக்கின்றன. திரிகளில் கருத்து எழுதவதில்லை ஆனால் வாசிப்பேன். வாதியும் பிரதிவாதியும் கருத்திடும்போது அவர்களை அறியாமலே ஒருவரை மற்றவர் காயப்படுத்தக்கூடிய சந்தர்ப்பங்களும் கண்டுள்ளேன். தாங்கும் சக்தியும் தாக்குதல்களுக்கு பதில் அளிக்கும் திறமையும் கருத்திடுபவர்களுக்கு இருந்தால் மாத்திரமே கருத்துக்களத்தில் சிறந்த கருத்தாளராகப் பயணிக்கமுடியும். அந்த வகையில் இந்தக் கருத்துக்களத்தில் கருத்தாடிக் காயப்படுத்தியவர்களையும் காயப்பட்டவர்களையும் வாசகியாக அறிவேன். சோர்ந்து போகாமல் தொடர்ந்தும் கருத்தெழுதும் அனைத்து உறுப்பினர்களுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள் உரித்தாகட்டும்.
 14. நன்றி யாயினி என்னுடைய பேர்த்திக்கு "ருத்ரா" என்று பெற்றோர் பெயரிட்டுள்ளனர் யாயினி வெட்டுக்கிளிக்கும் பிந்திய பிறந்த நாள் வாழ்த்துகள்
 15. ரதி , நுணுக்கம், வெட்டுக்கிளி, பெருமாள், நிலாமதியக்கா அனைவருக்கும் நன்றி பல
 16. நன்றி கவி அருணாசலம் அண்ணா ஓவியத்திற்கும் மனம் நிறைந்த நன்றி இந்த ஓவியத்தை நிச்சயமாக என் சந்ததியே பாதுகாக்கும். புரட்சி, உடையார்,ஜெகதா, அடுப்படிப்பூனை, சுவிஸ் அண்ணா, கிருமி, நண்டு, ஈழப்பிரியன் அண்ணா மற்றும்
 17. ரதி..... எனக்கு வரவர உங்களில் வலுக்கும் சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளியே கிடைக்கமாட்டன் என்கிறது
 18. வணக்கம் தமிழ்நிலா வாருங்கள் எதிர்பார்ப்புகள் அதிகரிக்கும்போது ஏமாற்றங்கள் அதிகமாகும்.
 19. மணமக்களுக்கு இனிய திருமண வாழ்த்துகள் வாத்தியார். ஏற்கனவே தீர்மானிக்கப்பட் ட திருமணங்கள் இங்கும் மிகுந்த சிரமங்களுக்கு மத்தியிலேயே நடந்தேறியிருக்கிறது.
 20. யஸ்ரின் எதிர்ப்பு சக்தி உருவாகாது என்று விஞ்ஞானம் நிரூபித்துக் கொண்டிருக்கிறது. இந்த நோயிற்காக நீண்ட கால செயற்பாடின்மை மனபிறழ்வுகளை உருவாக்குகிறதே. இதுவரை இங்கு கோடைகாலம் இருந்ததால் வெளியே நடமாட்டம் குறைந்திருந்தாலும் வீட்டின் பின்புறம் அல்லது பல்கனி என்று வெளிக்காற்றைச் சுவாசித்தோம் இனி அத்தனையும் முடக்கப்பட்டு கூடுகளுக்குள் சிறைப்படுத்தப்பட்ட பறவைகள்போல வாழ வேண்டிய கட்டாயம். இப்போதே பல முதியவர்களுக்கு மன அழுத்தம் இனிவரும் காலங்களில் இளைய சமூகமும் இந்த மன அழுத்தத்திற்கு உள்வாங்கப்படப்போகிறது. கோவிட் 19 வெளியே தெரியும் நோயாக இருக்க மன அழுத்தம் அதை விடக்கடினமாக எல்லோரையும் தாக்கப்போகிறது. ஒரு வேளை அத்தகைய சூழலைத் தவிர்க்க இத்தகைய விடயங்களை மேற்கொண்டிருப்பார்களோ?
 21. பொருளாதாரத்திற்கும் பாடசாலை திறப்பிற்கும் நேரடியான சம்பந்தம் இருக்க வாய்ப்பில்லை. ஆனால் கோவிட் 19 தொடர்பான அச்சத்தை களைய இந்த உத்தியை மேற்கொண்டிருக்கலாம். அச்ச உணர்வு மிகையாகி செல்லும்போது அன்றாட வாழ்வு பாதிப்படைகிறது. அங்குதான் பொருளாதாரம் பயணிக்கிறது. கனடாவைப் பொருத்தவரை காலநிலை என்பது மிகச்சோதனையானது. தற்சமயம் ப்ளூ எனப்படும் காய்ச்சல் பரவும் நேரம். ஒவ்வொரு வருடமும் குளிர்காலம் ஆரம்பிக்கும்போதும், முடியும்போதும் இந்தத் தாக்கத்தால் அநேகர் பாதிக்கப்படுவார்கள். அதற்கு தடுப்பூசி போடுவதும் செப்ரெம்பர் கடைசி, ஒக்டோபரில் இங்கு நடைமுறையாகும் விடயம். தற்போது தடுப்பூசி பற்றி எத்தகவலும் இல்லை. அத்தோடு இங்கு குடும்ப வைத்தியர்கள் எல்லோரும் தமது அலுவலகங்களைப் பூட்டி வைத்துக்கொண்டு தொலைபேசி வாயிலாகவே உரையாடுகிறார்கள். வைத்தியத் தேவைக்கு பெரும் அவதி ஏற்பட்டுள்ளது. சாதாரண வழமையான வருத்தங்களுக்கும் காட்ட முடியாத சூழல். ஆனால் பல் வைத்தியர்கள் அலுவலகங்களைத் திறந்து சிகிச்சை அளிக்கிறார்கள்.(காரணம் பற்சிகிச்சைக்கு நோயாளிகளே பணம் செலுத்த வேண்டும்) குடும்ப வைத்தியர்கள் அப்படியல்ல அரசாங்கமே அவர்களுக்கான சம்பளத்தைக் கொடுக்கிறது) குடும்ப வைத்தியர்களிடம் போக முடியாதவர்கள் நேரடியாக அவசரச் சிகிச்சைப்பகுதிக்கு சென்று தனிமைப்படுத்தப்பட்டு 4,5 நாட்கள் அப்பிரிவில் மறிக்கப்பட்டு கோவிட் 19 இருக்கிறதா என்று சோதனை செய்தே திருப்பி அனுப்பப் படுகிறார்கள். அரசாங்கம் கொடுக்கும் உதவிப்பணத்தை சந்தர்ப்பம் கிடைத்ததால் நிறையவே சுத்துமாத்து செய்து பிழைப்பவர்கள் இங்கு ஏராளம். ஏன் என்னுடைய பதிவு செய்யப்பட்;ட தொழிலைக் காட்டி 40 ஆயிரம் டொலர்களை எடுக்க வழி சொல்லித்தந்தவர்களும் உண்டு. உண்மையிலேயே பாதிக்கப்படுபவர்களுக்கு சேரவேண்டியதை பலரும் தவறான வழியில் உபயோகிப்பதால் எதிர்வரும் காலத்தில் ஒட்டு மொத்தமாக எல்லோருமே பாதிக்கப்படப்போகின்றோம். இவை இப்படியே இருக்கட்டும். இயல்பு வாழ்க்கைக்கு மக்களைத் திருப்பினாலே அரசாங்கம் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியும். அடிப்படையில் மாணவர்கள் பாடசாலைகளை இயங்க வைப்பதன் மூலம் மற்றவர்களையும் பணிகளுக்கு வரும்படி நிர்ப்பந்திக்கலாம். உரிய வைத்திய காரணி உள்ளவர்களைத் தவிர்த்து மற்றவர்கள் பணியாற்றலாம் என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும் அல்லவா ,)
 22. யாயினி பாடசாலைகளைத் திறந்து வைத்து கூத்தடிக்கிறார்கள் என்று குற்றச்சாட்டை வைக்கமுடியாது. நீண்ட காலத்திற்கு தடுப்பு மருந்து இல்லாத நோயாக இருக்கப் போகிற கோவிட்- 19 இற்கு முகங்கொடுக்க பழக்கப்படுத்தப்படுகிறார்கள் என்றே நினைக்கிறேன். தொடர்ச்சியாக வேறெங்கும் இல்லாத அளவுக்கு மக்கள் பாதுகாப்புக்காக நிறைய பணம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. நாட்டின் பொருளாதாரம் கிடுகிடுவென்று கீழ்நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்நோயை எதிர்கொள்ளும் திராணியை உருவாக்கவில்லை என்றால் அடுத்த வருடம் அரச உதவிப்பணமும் நிறுத்தப்படும்போது மக்கம் மிகவும் நெருக்கடியைச் சந்திப்பார்கள். இப்போதே விலைவாசி ஏற்றம் விழிபிதுங்க வைக்கிறது. பல நிறுவனங்கள் வங்குரோத்து நிலைக்கு சென்று விட்டன. அன்றாட வாழ்க்கை முறை முடக்கத்தால் பலர் வருமானம் இழந்த நிலையில் தொழிலகங்களை இழுத்து மூடிவிட்டார்கள். இயல்பு நிலைக்கு அன்றாட வாழ்வு திரும்பாவிட்டாலும் ஓரளவுக்காவது இவற்றை திருப்ப எத்தனிக்கிறார்கள். என் வீட்டுக்கு முன்னால் இருக்கும் குடும்பம் வேலைக்குச் செல்வதில்லை, பாடசாலை போவதில்லை ஆனால் அவர்களுக்கு கோவிட் -19 எப்படி வந்தது என்று அவர்களுக்கு விளக்கமில்லை வீட்டுக்குள் மூடிக்கொண்டு இருந்தாலும் இந்தப்பிரச்சனை தீராது. எதிர்ப்பாற்றலை நாம்தான் வளர்த்துக் கொள்ள வேண்டும். இதற்காகத்தான் பாடசாலைகள் திறக்கப்படுகின்றன. பாடசாலைகள் யாரையும் வரும்படி வற்புறுத்தவில்லை. ஒன்லைனில் கற்கக்கூடிய வசதியையும் வழஙகுகிறார்கள். எதிர்ப்பாற்றலை வளர்க்கும் எண்ணம் உள்ளவர்கள் அங்கு செல்கிறார்கள். அவ்வளவே
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.