Jump to content

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32991
  • Joined

  • Days Won

    268

Everything posted by nedukkalapoovan

  1. பெளத்த விரிவாக்கம் என்ற போர்வையில் சிங்கள பெளத்த ஆக்கிரமிப்புக்கு மில்லியன் கணக்கில் கொட்டிக்கொடுக்க ஹிந்தியாவும்.. சீனாவும் இருக்கும் போது.. புத்தருக்கு என்ன பஞ்சம். இதனை மேற்குலகம் ரசித்துக் கொண்டிருக்கும் நிலையில்.. புத்தருக்கு தெம்பு பிறக்காதா என்ன. என்ன.. சீனா அடிப்படையில்.. பெளத்த சித்தாந்த நாடு.. அது பெளத்தத்திற்கு உதவுவது.. பெரிய விடயமல்ல.. ஆனால்.. ஹிந்தியா மீண்டும் மீண்டும் தமிழர்களுக்கு முதுகில் குத்தும் காரியத்தையே செய்கிறது. ஆனால் தமிழ் அரசியல்வாதிகள் இன்னும் ஹிந்திய அடிவருடிகளாக வாழாதிருப்பது தான் மிகக் கேவலமாக உள்ளது. ஒருவேளை சீனாவை முறையாக அணுகினால்.. கூட தமிழர்களுக்கு குறைந்த பட்ச நன்மையாவது கிடைக்கலாம்.
  2. இதில் கடைசி ஆக்கத்தில்.. ஈபி பற்றி ஒரு வார்த்தை கூட எழுதப்படவில்லை. ஆனால் விஜிதரன் உட்பட.. அப்போதைய யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் சிலரை பின்னணியில் இருந்து இயக்கியது ரோவின் கட்டளைப்படி.. ஈபி ஆர் எல் எவ். அதில் குறிப்பிடத்தக்கவர்.. ஈ பி ஆர் எல் எவ்.. மன்னார் மாவட்ட பொறுப்பாளராக இருந்து கொண்டே அப்போது யாழ் பல்கலைக்கழக கலைப்பீடத்தில் கல்வி கற்றுக் கொண்டிருந்த சிறீதரன். இவர் ஈபி ஆர் எல் எவ் ஐ விட்டு துரத்தி அடிக்கப்படும் வரை விஜிதரன் கடத்தல் பற்றி வாயே திறக்கவில்லை. ஆனால் விஜிதரன் ஈ பி யால் இயக்கப்பட்டது தான் நிஜ வரலாறு. ஈபியால் மறைத்து வைக்கப்பட்டது தான் நிஜம். ஆரம்பத்தில்.. அது கடத்தல் அல்ல..!!! அதே காலத்தில் யாழ் பல்கலையில் கல்வி பயின்ற தாஸ் எனப்படும் தாசன் (இவர் தமிழீழ விடுதலைப் புலிகள் மாணவர் அமைப்பின் முக்கியஸ்தர்) இவர் மூலம் தான்.. சிறீதரன் தரப்பு உண்மைகளை வெளியில் சொன்னது. அதுவும் வெட்டிப் பெருமைக்காக. பின்னர் ஈபி ஆர் எல் எவ் இன் கதை ஓர் இரவில் முடிவுக்கு வந்தது வேறு விடயம். அதே இரவில்.. புளொட்டின் கதையும் முடிவுக்கு வந்தது.
  3. புலிகளுக்குள் பயங்கரவாத எலிமென்ட் இருக்குது. பாசிச எலிமென்ட் இருக்குது.. உலகத்தில உள்ள எல்லாக் கெட்ட எலிமென்டும் இருக்குது. அதனால்.. புலிகள் அழிக்கப்பட வேண்டியவர்கள். அவர்களோடு சேர்ந்த தமிழர்களும் அழிக்கப்பட வேண்டியவர்கள். அப்படி செய்வது ஒரு இனப்படுகொலை அல்ல.. தூய பயங்கரவாத அழிப்பு. இதனை செய்த.. சொறீலங்கா சிங்கள பெளத்த அரசும் அதன் இராணுவமும் செய்தது ஒரு தூய மனித இனப்பணியாகும். மனித இனத்தை தூய்மைப்படுத்தும் பணியாகும்..??! இதனை சொல்ல ஏற்க இங்கு.. யாழிலும் ஆக்கள் இருக்கினம். இதை சொல்லி சிங்கள பெளத்த பேரினவாத நிகழ்ச்சி நிரலுக்கு காவடி தூக்க.. யாழ் பல்கலைக்கழக சமூகம் மட்டுமல்ல.. எந்த கல்வி சார் அறிவார்ந்த சமூகமும் இடமளிக்காது.. ஏனெனில்.. இதை தான் ஒரு ஆக்கிரமிப்பு இன அழிப்பாளன் செய்ய முனைவான் என்பது எதிர்பார்க்கப்படக் கூடியது. இப்படி பேசிப் பேசி.. கடந்த 14 ஆண்டுகளில் சுவஸ்திகா போன்றவர்கள் கண்ட மிச்சம் என்ன..??! இவா ஆரம்பத்தில் காணாமல் போனவர்களின் ஊர்வலங்களில் தலைகாட்டியே தன்னை பிரபல்யப்படுத்தியவர் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நாசகாரிகளை அவர்களின் நாசகார நோக்கங்களோடு ஒரு அறிவார்ந்த சமூகம்.. அங்கீகரித்து பேச அழைப்பது.. அநாவசியமானது.. நேர விரயமானது. ஏனெனில்.. இவர்களுக்கு உண்மை தெரிந்தும்.. தெரிந்தெடுத்திருக்கும்.. நிகழ்ச்சி நிரல் வேறு. ஏனெனில்.. இவர்களை பின்னணியில் இருந்து இயக்குவது எதிரியும்.. அவன் கூலிகளும்.
  4. தென்பகுதியில் நடப்பது ஒன்றுமே தெரியாது. ஆனால் வடக்கில்.. புலிகளை சிலாகிச்சுக் கிட்டே இருக்கனும். இதை மட்டும் எப்படி எதிர்பார்க்கிறீர்கள். ஏன்..??! ஏன் பேசலாமே.. கிழக்கில்.. முஸ்லிம் அடிப்படைவாதப் பயங்கரவாதமும்.. தமிழ் மக்களும் என்று வெளிப்படையாகப் பேசலாமே... அதுவும் தமிழ் மக்கள்.. 2019 ஏப்ரலில்.. இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்தின் தொடர் குண்டுத்தாக்குதலுக்கு உள்ளாகி படுகொலை செய்யப்பட்டது குறித்து ஏன் முஸ்லிம் சமூகம் பேச மறுக்கிறது. சிங்களம் பேச மறுக்கிறது..?! ஏன் சுவஸ்திகா.. உட்பட.. தமிழ் சட்டத்தரணி பாசிசவாதிகள் இதை எல்லாம் பேச மறுக்கினம். எப்பவும் புலி புலி என்று சிங்களவர்களை முஸ்லிம் மத அடிப்படைவாத பயங்கரவாத கடுப்போக்காளர்களை.. தாஜா பண்ணும் தலைப்புக்களோடு அலைவதேன்.
  5. எல்லாருக்கும் எல்லாம் தெரியும். ஒட்டுக்குழு வெப்சைட்டில் பாய் போட்டு படுத்திருந்தால்.. எதுவும் தெரியாது. ஆமாம்.. பேச ஒன்றுமில்லை.. பிசைஞ்ச மாவையே ஆள் மாறி ஆள் பிசைய.. அதில கேள்வி கேட்டு தெளிவு வேற பெறனுமாம். ஏன்.. உருப்படியான.. சமகால சமூக.. அரசியல்.. உலக இராணுவ பொருண்மிய.. சொறீலங்கா இனப்படுகொலை.. சொறீலங்கா அடக்குமுறை.. சிங்கள பெளத்த விரிவாக்கம்.. ஆக்கிரமிப்பு.. இப்படி பல அவசியமாக பேச வேண்டியதுகள்.. தெளிவு பெற வேண்டியதுகள் இருக்கே. அதைவிட்டிட்டு.. எதற்கு எப்பவும் குண்டுச்சட்டிக்குள் குதிரை ஓட்டுவதிலேயே குறியா இருக்கிறீர்கள். வேற சிந்தனைக்கு வழியில்லைப் போல.
  6. இங்க... மேடம்.. சுவஸ்திகா அருள்லிங்கம் போய்.. முஸ்லிம் காங்கிரஸ்.. முஸ்லிம் ஜிகாத்.. முஸ்லிம் இஸ்லாமிய மத அடிப்படைவாத பயங்கரவாதவமும் பாசிசமும் பற்றிய கட்டமைப்பு உரையை ஆற்றும்.. கருத்துச் சுதந்திரம் கிடைக்குமோ..??!
  7. பிரஞ்சுப் புரட்சி நடந்து இவ்வளவு காலமாகியும் பிரான்ஸிலேயே இன்னும் முழுமையான கருத்துச் சுதந்திரம் இல்லை. புர்காவுக்கு தடை. நபியை விமர்சிக்க தடை... இதெல்லாம்.. பாசிசத்துக்க வராதோ..??!
  8. நெடுந்தீவு.. நயினாதீவு.. தீகவம்.. மன்னார்.. எல்லா கேத்திர முக்கியத்துவம் வாய்ந்த தீவுகளுக்கும் தீவுக் கரைகளுக்கும் போறார். இதன் மூலம்.. ஈபிடிபி கும்பலால்.. வறுமையிலேயே வைக்கப்பட்டிருக்கும்.. தீவுகள்.. செழிப்புப் பெற்றால்.. நன்று. அதோடு.. ஹிந்தியாவின் தென்பகுதியை கண்காணிப்பு வீச்சுக்குள் கொண்டு வந்தால்.. இன்னும் சிறப்பு. 😂
  9. இலங்கையில் எல்லாப் பல்கலைக்கழகங்களிலும் கருத்துச் சுதந்திரம் என்ன விலை தான்..?! களனி.. ஜெயவர்த்தன புரவில் நின்று கொண்டு.. தமிழர்களின் உரிமையை பற்றிக் கதைக்க முடியாது. தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் நின்று கொண்டு.. இஸ்லாமிய மத அடிப்படைவாதப் பயங்கரவாதத்தைப் பற்றிக் கதைக்க முடியாது. அதேபோல்.. பல சிங்களப் பல்கலைக்கழகங்களில்.. ஜே வி பி பயங்கரவாதம் பற்றிக் கதைக்க முடியாது. ஆனால்.. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் மட்டும்.. விபச்சாரி போல்.. நடந்து கொள்ளனும் என்று எதிர்ப்பார்க்கிறார்கள். விபச்சாரி.. விபச்சாரத்துக்கு மறுத்தால் பாசிசம்.. ஆமாம் என்றால்.. கருத்துச் சுதந்திரம். இதுதான் பாசிச கருத்துச் சுதந்திர விபச்சாரம்.
  10. கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்கள் என்ன தூக்கமா.. ?! சாரி.. அது இஸ்லாமிய மயமாகிவிட்டது போலும்.
  11. இவங்கட கட்சி தலைமை பதவி தான்.. இப்ப தமிழ் மக்களின் முக்கியமான பிரச்சனையாகிவிட்டது. போடாங்க்... 🥵
  12. யாழுக்கு விஜயம் செய்யும் சீனத் தூதருக்கு.... தமிழ் மக்களின் அரசியல்.. பொருண்மிய தேவைகள் குறித்தும்.. கடந்த காலங்களில் தமிழ் மக்கள் சிங்கள பெளத்த அரசுகளால்.. ஹிந்தியா.. அமெரிக்கா.. மற்றும் மேற்குலகால் ஏமாற்றப்பட்ட விடயங்கள் குறித்தும்.. எடுத்தியம்பி.. சீன ஆதரவைக் கோருவது முக்கியம். இதனை தமிழ் தேசியக் கட்சிகள்.. கல்வியாளர்கள்.. சமூக பொருண்மிய ஆர்வலர்கள் சேர்ந்து செய்ய வேண்டும். காரணம் சீனா.. பிராந்தியத்தின் முக்கிய பொருண்மிய.. இராணுவ சக்தியாக பரிணமித்திருக்கிறது. இதனை சிங்களம் மட்டும் தனக்கு சாதமாகப் பாவிப்பதை அனுமதிப்பது.. தமிழருக்கு ஆபத்தாகவே முடியும்.
  13. இதனை ஏன் ஐரோப்பிய ஒன்றிய ஆக்கள் சொல்லாமல்.. இவர் அவர்களுக்காகப் பேசுறார்..?! அவை ஊடகங்களை சந்திக்கமாட்டினமோ..???!
  14. இப்பவும் சொறீலங்கா புலனாய்வுப் பிரிவு இதைச் செய்யலாம். செய்துவிட்டு.. யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் மீது பழிபோட்டால்.. அதை வைச்சு.. மிச்சம் மீதம் இருக்கும்.. தமிழ் மக்களின் உரிமைக் குரலை சிங்கள பெளத்த இராணுவ இயந்திரத்தை நேரடியாக ஏவி அடக்கலாம்..! இதற்கும் சாத்தியமுள்ளது. ஏலவே முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி மீது கோள் சொல்லி.. அது ஒரு தனி விடயமாகப் போய்க் கொண்டிருக்குது. அதற்கு விலைபோகக் கூடிய ஆட்களும் உண்டு. அல்லது அம்மையார் இப்படி புலிப் பாசிசம் என்று கத்திவிட்டு.. எனக்கு எதிர்ப்பு கிளம்பிட்டு என்று.. மேற்கு நாட்டில் அகதி அடைக்கலமும் வாங்காலம். அப்படியும் கருத்துச் சுதந்திரக் கோசங்கள் பயன்படுத்தப்பட்டிருக்குது. ஆனால்.. சொறீலங்கா.. உட்பட.. தெற்காசியா.. தென்கிழக்காசியா.. ஒட்டுமொத்தத்திற்கும்.. கருத்துச் சுதந்திரம் என்ன விலை என்ற நிலைதான். இதைவிட மோசம் மத்திய கிழக்கு.
  15. விஜிதரன் காலத்தில் இருந்து புலிகள் எதிர்ப்பு தான் யாழ் பல்கலைக்கழக கருத்துச் சுதந்திரமாக துரோகிகளால் நன்கு கட்டமைக்கப்பட்டு வருகிறது. காலத்துக்கு காலம் அந்த வரிசையில் சிலது வந்து கொண்டே இருக்கிறது. கருத்துச் சுதந்திரம் என்பது.. புலிகள் எதிர்ப்பு.. புலிப் பாசிசம் என்ற தங்கள் சொந்தக் கற்பிதம் பற்றி மட்டும் பேசுவதாக இருந்தால்.. அது இவர்களின் இன்னொரு பாசிச வடிவமாகும். அதாவது புலி எதிர்ப்புக் கும்பல்களின் பாசிச அணி வகுப்பாகும். அதற்கு யாழ் பல்கலைக்கழகத்துள் கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில் ஊடுருவல் செய்ய அனுமதி அளிக்கவே கூடாது. பாசிசக் கோட்பாடுகளை.. ஈபி ஆர் எல் எவ்.. புளொட்.. ஈபிடிபி.. ரெலோ... புதிய ஈரோஸ்.. சொறீலங்கா சிங்களப் பேரினவாத அரசு.. சிங்களக் கட்சிகள்.. அதன் புலனாய்வு அமைப்புக்கள்.. இஸ்லாமிய குழுக்கள்.. எல்லாமே தான் கொண்டிருந்தன. ஏன் யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் மனித உரிமைகள் அமைப்பு என்பது கூட ஒரு பாசிசக் கட்டமைப்புத்தான். தான் சொல்வதும்.. தான் நிறுவதுமே உண்மை.. தமிழ் மக்களின் மனித உரிமை என்று சிங்கள பெளத்த பேரினவாத அரசுக்கு சாதகமாக அறிக்கைகள் தருவதற்கு என்ன பெயராம்..??! அதென்ன.. புலிகளை மட்டும்.. தொடர்ந்து பாசிசத்துக்குள் கட்டமைக்கிறது. எனவே.. தமிழ் மக்களின் உரிமைப் போராட்டதையும்.. தேவையையும்.. அதன் இருப்பையும் கொச்சைப்படுத்தவும்.. இல்லாதொழிக்கவும்.. இந்த பதவி.. புகழாசைக் குடும்பிகளை ஆட விட்டிருக்குது.. சிங்கள பெளத்த பேரினவாதம். அதன் ஊருடுவலுக்கு புலி எதிர்ப்பு கையில் எடுக்கப்பட்டிருக்குதுவே தவிர.. உண்மையான கருத்துச் சுதந்திரம் என்பது.. சொறீலங்காவில் எங்கும் கிடையாது. அதென்ன குறிப்பாக யாழ் பல்கலைக்கழகத்துக்குள்.. புலி எதிர்ப்பு என்ற போர்வையில்.. கருத்துச் சுதந்திரம் தேடப்படுகிறது. விஜிதரன் கும்பலும் இதை தான் செய்ய வெளிக்கிட்டனர். ஹிந்திய ரோவின் அறிவுறுத்தலுக்கு அமைய ஈபி ஆர் எல் எவ் கும்பல் மூலம்.. அப்போது மக்கள் மத்தியில் பெருகி வந்த புலிகள் ஆதரவு செல்வாக்கு.. யாழ் பல்கலைக்கழகத்துக்குள்ளும் இயல்பாகப் பெருக முற்பட்ட வேளை தான்.. விஜிதரன் கும்பல்.. புலி எதிர்ப்பு வாதங்களைக் கொண்டு வந்தது. பின்னர் புலிகள் மீதான மக்கள் வெறுப்பை தூண்டும் வண்ணம்.. விஜிதரன் கடத்தல் நாடகம் அரங்கேறியது. அவரை ரோவின் கட்டளைக்கு ஏற்ப கடத்திச் சென்றது.. முன்னாள் மன்னார் மாவட்ட ஈபி ஆர் எல் எவ் பொறுப்பாளர்.. சிறீதரன் தலைமையிலான.. கும்பல். ஆனால்.. பழி புலிகள் மேல் போடப்பட்டது. இதே சிறீதரன் பின்னர் ஈபி ஆர் எல் எவ்வில் இருந்து விரட்டப்பட்டது வேறு விடயம். இப்படித்தான்.. இவர்களின் புலிப் போலிப் பாசிசம் கட்டமைக்கப்பட்டு வந்திருக்கிறது. இப்போ.. கருத்துச் சுதந்திரம் என்ற போர்வையில்.. மீண்டும் மீண்டும் புலிகள்.. மையப்படுத்தப்படுவது.. ஒட்டுமொத்த தமிழ் மக்களினதும்.. அரசியல்.. சமூக.. பொருண்மிய உரிமைகளை முற்றாகப் பறித்தெடுக்கவும்.. மீண்டும்.. உரிமைக் குரல்கள் ஆணித்தரமாக எழுவதை தடுக்கவுமே அன்றி.. உண்மையான கருத்துச் சுதந்திரம் என்பது ஒட்டுமொத்த சொறீலங்காவிலேயே இல்லை.. யாழ் பல்கலைக்கழகத்துக்குள்.. கிழக்குப் பல்கலைக்கழகத்துக்குள் மட்டும்.... புலிகளின் எதிர்ப்பை முன் வைத்து கருத்துச் சுதந்திரத்தை.. தேடுவதன் நோக்கம்..என்ன..??! அதுவே.. இவர்கள் எப்படியான தேவைகளோடு இவற்றை முன்னெடுத்து வருகின்றனர் என்பதை நன்கு இனங்காட்டுகிறது. உண்மையான கருத்துச் சுதந்திரம் என்றால்.. சிங்கள பெளத்த பேரினவாத Chauvinism தொடங்கி.. சிங்களக் கட்சிகள்.... எல்லா தமிழ் கட்சிகள்.. எல்லா தமிழ் ஒட்டுக்குழுக்கள்.. மற்றும்.... முஸ்லிம் மத அடிப்படைவாதக் கும்பல்களின்.. முஸ்லிம் காங்கிரஸ் உட்பட.. இவர்களின் பாசிசக் கட்டமைப்புக்கள் ஈறாக.. சிங்கள பெளத்த இராணுவ இயந்திரத்தின் வரைந்தெடுத்த இனப்படுகொலை கட்டமைப்பு.. அமெரிக்க.. ஹிந்திய.. இஸ்ரேலிய... சீன.. ரஷ்சிய.. ஐரோப்பிய ஒன்றிய..மனித இனத்துக்கு எதிரான இராணுவ சித்தாந்த வகுப்பெடுப்புக்கள் உட்பட எல்லாம் பேசப்பட வேண்டும். இந்த அம்மையார்.. இதற்கு தயாராமோ..?! இவருக்கு வாக்காளத்து வாங்கி கருத்துச் சுதந்திரம் பேசுறவை தயாராமோ..??!
  16. உக்ரைன் கோமாளியரின் நிலை அந்தோ பரிதாபம் ஆகிவிட்டது. அவர் இன்று இப்படிப் புலம்பிக் கொண்டிருக்கிறார். ஒரு காலத்தில் அமெரிக்காவின் செல்லப்பிள்ளையாக இருந்த சதாம் குசைன் எப்படி அமெரிக்காவால்... பழிவாங்கப்பட்டாரோ.. அதே நிலை இந்த கோமாளிக்கும் வரும். இதனை எப்பவோ.. சொல்லிட்டம். இப்ப திருப்பிச் சொல்லுறம். The Israel-Gaza war is "taking away the focus" from the conflict in Ukraine, the country's President Volodymyr Zelensky has admitted. Ukraine's counter-offensive in the south has so far made little headway. This has prompted fears of war fatigue among Kyiv's Western allies, with suggestions of growing reluctance in some capitals to continue giving Ukraine advanced weapons and funds. https://www.bbc.co.uk/news/world-europe-67321777 தோக்குற குதிரையில பணம் கட்ட அமெரிக்கனும்.. மேற்குலக எஜமானர்களும்.. எப்பவும் தலையாட்டுவினமோ.. உக்ரைன் புலிக்கேசியாரே.
  17. மீன் பிடித்துறை சார்ந்த அமைச்சருக்கு.. அதிபர் நியமனத்தில் என்ன வேலை. ????! வேலை வெற்றிட நிரப்பல்கள் சுயாதீனமாக திறமை.. தகுதி அடிப்படையில் நிகழ வேண்டுமே தவிர.. சொறீலங்கா கூலிகளின் சிபார்சின் பேரில்.. சலுகைகளின் பேரில்.. கொடுக்கப்படும் கப்பங்களின் பேரில் நிகழக் கூடாது. அது மொத்த சமூகத்தினதும் இயங்கு நிலைத்தேவைகளின் தரத்தில் பாரிய பாதிப்புக்களை எதிர்காலத்தில் உண்டு பண்ணும்.. ஆபத்துள்ளது. இதனால்.. பல தகுதி வாய்ந்தவர்கள் புறக்கணிக்கப்பட்டு.. நாட்டை விட்டு வெளியேறும் நிலையே அதிகரிக்கும்.
  18. கடைசியில் அண்ணரும் எங்கட நிலைப்பாட்டுக்கு சமீபமாக வரவேண்டி வந்திட்டுது. இந்த மாற்றம்.. தாயக அரசியல் கல்வி சமூக ஆர்வலர்களிடமும் வர வேண்டும். ஹிந்தியா மேற்குலகம் என்று ஒற்றையடி பாதையில் அல்லது சரணாகதி அரசியல் என்ற இன்னொரு ஒற்றையடிப் பாதையில் பயணித்து எதையுமே சாதிக்க முடியாது. இயல்பாகக் கிடைக்க வேண்டிய பதவிகளுக்கும்.. வெற்றிட நிரப்பல்களுக்கும் தாடிக்காரக் குத்தியனின் வாயைப் பார்த்துக் கொண்டிருக்கிற அங்கலாய் நிலை தான் ஊரில் வளர்ந்திருக்கே தவிர.. வேறு எந்த மாற்றமும் உருப்படியாக இல்லை. எனவே தமிழர்களின் உள்ளூர் அரசியல்.. சர்வதேச.. பிராந்திய தேவைகளுக்கு ஏற்ப ஒரு புள்ளியில் இணையக் கூடிய சக்திகளின் உதவியோடு வெவ்வேறு பாதைகளில் பயணிக்க வேண்டியது கட்டாயம். அதில் சீன.. ரஷ்சிய மற்றும் இலத்தீன் அமெரிக்க.. மற்றும் மத்திய கிழக்கு உறவுகள் தொடர்பில் தனிக்கவனம் செலுத்துவது மிக மிக அவசியம். சர்வதேச ராஜீக உறவுகள் தொடர்பில்.. புலிகள் மேற்குலகையும் ஜப்பானையும் நம்பி இருந்த அளவுக்கு மற்றைய உலக நாடுகளோடு தொடர்புகளை.. தமது நிலைப்பாட்டு விளக்கங்களை.. தேவைகளை பகிர்ந்து கொள்ளாததும்.. அவர்களின் பேரழிவுக்கும்.. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம் மெளனக்கப்பட வேண்டிய சூழலுக்கும் கொண்டு வந்து நிறுத்தியது. இதில் சம் சும் மாவை கும்பல் செய்த துரோகம்.. என்பது சிறிய பங்களிப்புத் தான். அங்காலே.. கருணாநிதியும் திமுக செய்த துரோகமும்.. ஹிந்தியா செய்த துரோகமும் மன்னிக்கப்படக் கூடியவை அல்ல.
  19. இவா சட்டத்தரணியா.. அல்லது சிங்கள பெளத்த பேரினவாத விசுவாசியா என்பது தான் முதல் கேள்வியே. ஏனெனில்.. புலிகள் அமைப்பை எல்லாரும் தங்கள் மண்டை ஓட்டுக்குள் இருக்கும் களிமண்ணுக்கு ஏற்ப கட்டமைப்பு படுத்தி அழிச்சும் முடிச்சிட்டார்கள். இப்போ இவா என்ன மண்ணாங்கட்டிக்கு.. அதே களிமண்ணை பிசைஞ்சு.. இன்னொரு கட்டமைப்பு கட்டுவதில்... ஈடுபடுகிறா..?! இல்லாத புலிகள்.. பாசிசமாக இருக்கட்டும்.. பயங்கரவாதியாக இருக்கட்டும்.. விடுதலைப் போராளியாக இருக்கட்டும்.. புலிகள்.. தாகம் தமிழீழத் தாயகம் என்ற மக்களின் உரிமைக்காக சொந்த மண்ணின் விடுதலைக்காக உயிர்கொடை கொடுத்தவர்களை விமர்சனம்.. கட்டமைக்கிறம் என்ற போர்வையில் மலினப்படுத்த இந்தக் களிமண்களுக்கு எந்த அருகதையும் கிடையாது. ஒரு சட்டத்தரணியாக.. Sinhala Buddhist Chauvinism எந்த அளவுக்கு சொறீலங்கா நீதித்துறைக்குள்ளும் அதன் தீர்ப்புகளுக்குள்ளும் தாக்கம் செய்கிறது அது எப்படி மற்றைய இன மக்களின் நாளாந்த சிவில் வாழ்வியல் உரிமைகளை பறிக்கிறது.. இனப்படுகொலையை ஊக்குவிக்கிறது... இவை பற்றி ஆராய்ந்து கட்டமைக்கலாமே..??! ஏன் இந்த மண்டைகள் உருப்படியாக சிந்திக்க மாட்டம் என்று அடம்பிடிக்கின்றன. இப்ப எல்லாம்.. இலகுவான விளம்பரத்திற்கு புலிகளை கையில் எடுக்கின்றன. ஏனெனில்.. புலிகளை கையில் எடுத்தால்.. தமிழர்களின் ஆழ்மனக் கிடக்கைகளை கிண்டிக் கலாசி.. அதில் எழும் எதிர்ப்பலைகள் மூலம்.. தாம் தம்மை இலகுவாக கீரோவாகக் காட்டிக் கொள்ளலாம். புலி எதிர்ப்பு சித்தாந்திகளிடம் வரவேற்பை பெறலாம். ஆதரவை தக்கவைக்கலாம். ஓசி விளம்பரம் கிடைக்கும். இப்படியான சீப்பான சிந்தனைகள் உள்ள ஒரு சீப்பான கரக்டெர் தான் இந்த அம்மணியிடம் இருக்கிறது. இதை விட இவருக்கு புலிகளை பற்றிய கட்டமைப்புக்கு எந்த முகாந்திரமும் இல்லை. மாறாக... சிங்கள பெளத்த பேரினவாதத்தையும் அதன் ஆழமான தாக்கம் என்பது நீதி.. அரசியல்.. பொருண்மிய சமூக சமய உரிமைகளை எப்படி எல்லாம் மறுக்கிறது என்ற நடைமுறை விடயங்களை ஆராய வக்கற்று நிற்கின்றன. இதை ஒத்த ஒன்று தான் புங்குடுதீவு மாணவி பாலியல் சித்திரவதை கொலை வழக்கில்.. கொலையாளிகளை காப்பாற்றத் துடித்தது. இவர்கள் உண்மையில் ஆராய வேண்டியது.. புலிகளை அல்ல.. எப்படி சொறீலங்கா தமிழ் சட்டத்தரணிகளிடம் சமூக விரோத பண பிசாசுப் பாசிசப் போக்கு கட்டவிழ்ந்து கிடக்கிறது என்பதையும்.. அதை நீக்குவதுமாக இருந்தால்.. அதுதான் சமூக அக்கறையுடைய ஒன்றாக இருக்க முடியும்.
  20. அமெரிக்காவும் ஹிந்தியாவும் மட்டுமா இவரை ஏமாத்தினது.. கொழும்பில இருக்க வீட்டைக் கொடுத்து எதிர்கட்சி தலைவர் பதவி கொடுத்து... 13+ குப்பையில் போட்ட மகிந்த.. இந்தா நல்லாட்சி வருகுது.. தீர்வு வருகுது என்ற ரணில் - சந்திரிக்கா - மைத்திரி முக்கூட்டு கூட்டணி.. எல்லாம் தான் இவரை ஏமாத்தி இருக்குது. ஆனால்.. இவர்..சொந்த மக்களின் மண்ணின் பிள்ளைகளான புலிகளை... சொந்த மக்களை.. மண்ணை அழித்து.. ஆக்கிரமிப்புக்குள் வைத்து.. எதிரிகள் போடப் போகும் பிச்சைக்கு காத்திருந்து.. இப்ப அந்தப் பிச்சையும் கிடைக்கவில்லை.. என்று கொட்டாவி விடுவது போல் இனத்துரோகம் எதுவும் இருக்க முடியாது. சாகும் போதாவது அந்த வலியை உணர்ந்து கொண்டே சாகட்டும்.
  21. சங்கரியர் கடிதம் எழுதவில்லையோ.. யுனிசப் ஒட்டுன்னுவர் வன்னி ஓடியாந்து புலிகள் சிறுவர்கள் போராளிகள் என்று அறிக்கை விட்டதோடு... எப்படி தமிழீழத்தில் பள்ளிப் பிள்ளைகள் மீது விமானக் குண்டு வீசிக் கொல்ல கப் சிப்பாக இருந்து ரசித்தவர்களுக்கு.. இதெல்லாம் யு யு பி. எல்லாம் அமெரிக்கனும் அவன் அடிவருடிகளும்.. அடியெடுத்துக் கொடுத்தால்.. தான்.. மனிதாபிமானமும்.. யுனிசெப்பும்.. மண்ணாங்கட்டியும்.
  22. பெற்ற தாயோடு.. சொறீலங்காவை ஒப்பிடுவது மகா தவறு. சொந்த நாட்டுக்குள் வாழ்ந்த சகோதர மொழி பேசி சகோதர்கள் போல் வாழ்ந்த மக்களையே கலவரங்களாலும்.. இராணுவத்தை ஏவியும்...குண்டு வீசியும்... கொன்றொழித்த... கொலைகார நாட்டை தாயுடன் ஒப்பிடக் கூடாது. இங்கிலாந்தை விட மோசமான தோல்வி சொறீலங்காவினது.
  23. வர வேண்டும். வந்து.. பெளத்த தேரர்களை பத்திரமாக வீட்டுக்கு கூட்டிச் செல்ல வேண்டும். அவர்களும் பாவம் தானே.. சிங்கள பெளத்த பேரினவாத பேராசை அரசியல்வாதிகளின் பேச்சைக்கேட்டு எவ்வளவு காலம் தான் ஆட்டம் போடுவது.
  24. மண் கிள்ள சிங்கள இராணுவத்தை அழைப்பவர்.. வடக்குக் கிழக்கில் இலட்சக்கணக்கில் சிங்கள இராணுவ இருப்பை ரசிப்பவர்.. சிங்கள தொழிலாளர்களை விரட்டுவாராம். முதலில் தமிழர் கடற்பரப்பில்.. அடாத்தாக மீன்பிடிக்கும் சிங்கள மீனவர்களை வெளியேற்றட்டும் பார்க்கலாம்.
  25. சிங்கள பெளத்த இராணுவ இருப்பின்றில் தாடிக்கார குத்தியருக்கு வியாபாரம் ஆகாது. சிங்கள பெளத்த இராணுவம் தாடியருக்கு காவடி தூக்கத்தான் வேணும்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.