Jump to content

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32991
  • Joined

  • Days Won

    268

Everything posted by nedukkalapoovan

  1. அரசியலுக்கு வர முன் ஈழத்தமிழர் மீதும் விடுதலைப்புலிகள் மீதும் மிகுந்த அபிமானமிக்க ஒருவராக இருந்தவர். அதற்காகவே ஈழத்தமிழர்கள் இவரின் படங்களை தெரிவு செய்து பார்த்த காலமும் உண்டு. அபிமானமிக்க கலைஞனுக்கு புகழஞ்சலிகள்.
  2. அடிப்படையே தெரியாமல் தான் வாழ்ந்து வருகிறீர்கள் போலும். கையில் கொண்டு போபவை எல்லாம்.. நேரடியாகவும்.. உதிரப்படும் பிரதான பெரிய பொதிகள் ஸ்கான்.. உட்பட பல்வேறு சோதனைகளுக்கு அப்புறம் தான் விமானத்தில் ஏறும். இதில் எயார்லைனின் பங்களிப்பும் உள்ளது. ஆக.. இந்த துப்பாக்கி ஒன்றில் பிரித்தானியாவில் அனுமதி பெற்று பிரதான பொதியில் கொண்டு செல்லப்பட்டிருக்கும். சொறீலங்காவில் ஸ்கான் செய்து பொதிகள் வெளியே விடப்படும் பொறிமுறை இருந்தால்.. அல்லது பிரித்தானியாவில் இருந்து அறிவிக்கட்டிருந்தால்.. சொறீலங்கா.. ஆட்கள் காசுக்கு இவரை பிடிச்சு வெருட்டி இருக்கலாம். அவர் மசிய மாட்டார் என்றால்.. உடனடியாக.. சொறீலங்கா.. புலனாய்வுத்துறையிடம் கையளிப்போம் என்று வெருட்டு. அப்படி நிகழ்ந்திருக்கவே வாய்ப்பிருக்குது. ஏனெனில்.. ஒரு பயணி என்னென்ன பொருட்களோடு பயணிக்கிறார் என்பது எயார் லைன்சுக்கு தெரியும்.
  3. சொறீலங்கா எயார் லைன்ஸ் பிரித்தானியாவில் வைச்சே இதை தடுத்திருக்கலாமே. காசுக்கு பார்த்தும் பார்க்காமலும் ஏத்திறது.. ஏத்திப் போட்டு கொழும்பில வைச்சு மிச்சம் மீதியை புடுங்கிறது. சொறீலங்கா உல்லாசப் பயணத்துறைக்கு உகந்த நிர்வாக முறைமையற்ற நாடாகி விட்டது.
  4. அடப்பாவிகளா.. சிங்கள அரசியல்வாதிகளை எந்த தமிழன் நம்பினான்.. கூலிகளை தவிர. இதில இவர் ஏமாத்தின கதை அளக்கிறார். நீங்கள் தான்.. ஒவ்வொரு சிங்களத் தலைவர்களையும்.. வைச்சு.. அவர் செய்வார் இவர் செய்வார் என்று சொல்லி தமிழ் மக்களை ஏமாற்றி வருகிறீர்கள்.
  5. நித்தியின் கைலாசத்திற்கு போகும் பக்தர்கள்.. பக்தைகளாக இருக்குமோ..??!
  6. இஸ்ரேல் மட்டுமல்ல.. மேற்குலங்கை.. நம்பி.. ஆப்பிழுந்த குரங்கின் நிலையில்.. உக்ரைன். இப்ப கடைசியா.. தனக்கு ஆயுதம் தா இல்லைன்னா.. யுத்தம் தொடர முடியாது என்ற நிலைக்கு வந்திட்டுது உக்ரைன். இன்றைக்கு 500,000 பேர் உடனடியா தேவையாம்.. போரை முற்கொண்டு செல்ல. அங்கால ஆயுதம் பற்றாக்குறை.. அதோட ஆளும் பற்றாக்குறை. சிலுங்கி.. தலையில துண்டப் போட்டிக்கிட்டு ஓடி ஒளிய வேண்டியான்.
  7. இவர் வடக்கின் ஸ்ராலின் ஆகிட்டார். வெள்ளத்தைக் கண்டதும் திட்டம் போடுவார். வத்தினதும் திரட்டின காசோடு ஆள் எஸ்கேப். முதலில் தீவகத்தின் பிரதான வீதியை போட்டு முடியுங்கப்பா. சனம்.. இந்த மழை காலத்தில் வேலைக்கு பள்ளிக்கூடங்களுக்கு போகப் படும் பாடு. அதுவும் இருந்த ரோட்டை போடுறன் என்று கிண்டிவிட்டு.. அந்த மக்கள் இப்ப 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு உருப்படியான வீதி இன்றித் தவிக்கினம். இவர் மட்டுமல்ல.. எந்த அரசியல் கட்சியும்.. ஊடகங்களும்.. இதில் அக்கறை காட்டுவதில்லை.
  8. ஹிந்தியாவின் அனுசரணையில் நடக்கும் நாடகம் இது. நாய் வாலை நிமிர்த்தலாம் என்று போயிருக்கினம். இருக்கிற கோவணத்தையும் இழந்து திரும்புவினம். ஆனால் இதுகளால் சர்வதேச அரங்கில் நல்லிணக்கம் கூக்குரல் இன்னும் பலமடையும். இதனால்.. தமிழர்களின் இழப்புக்கு எந்த நியாயமும் கிடைக்கப் போவதில்லை. சிறுகச் சிறுக கட்டிய சில நம்பிக்கைகளும்.. சிதைக்கப்பட்டதாகவே முடியும்.
  9. இலங்கை என்பதை விட.. தமிழருக்கு பெருமை சேர்த்த என்று எழுதுவதே சிறப்பு. ஏனெனில்.. சொறீலங்கா சிங்கள பெளத்த அரசுகளிடம் இருந்தான குறைந்த பங்களிப்போடு.. பெரும்பான்மை வேளைகளில்.. அதுவும் இன்றி.. தனிப்பட்ட திறமைகளால்.. சமூகத்தில் பல்வேறு துறைகளில்.. முன்னுக்கு வரும்.. தமிழர்கள்.. தமிழர்களுக்கு தான் பெருமை தேடித்தருகிறார்களே தவிர.. சொறீலங்காவுக்கு அல்ல. அதற்கு சொறீலங்கா உரிமை கோர எந்த தகுதியும் இல்லை. ஏனெனில்.. இதே இனத்தினை கருவறுக்க 1948 இல் இருந்து.. இப்பவும் தொடர்ந்து இனவிரோதச் செயல்களை செய்யும் ஒரு பேரினவாத வெறிப் பிடித்த பயங்கரவாத நாடு அது.
  10. ஒரு 90 வயது.. இயக்கமற்ற நபரின் தோற்றுப்போன அரசியலுக்கு மாற்று அரசியலை முன்வைத்து மக்களுக்காக உழைக்க முடியாதவர்களின் புலம்பல் இது. எல்லாரும் எங்கள் சிந்தனைகளோடு பயணிக்க வேண்டும் என்பதிலும்.. அவரவர் சிந்தனைகளில் அவரவர் பயணிக்கட்டும்.. ஆனால் எல்லாரும் மக்கள் மண்ணின் நலனை முன்னிறுத்தி சோரம் போகாது பயணிக்க வேண்டும்.. என்பதுவே தற்காலத்துக்கான செயலுக்குரிய.. பொருந்தமான சிந்தனையாக இருக்க முடியும்.
  11. ஹிந்தியா ஈழத்தமிழருக்கு எப்பவுமே துரோகம் இழைத்து வருவதோடு.. ஈழத்தமிழின அழிப்பை.. ஆக்கிரமிப்பை.. பெளத்த மயமாக்கலை.. மனதாரா ஊக்குவித்து வரும் ஒரு நாடு. ஆனால்.. கேவலம்.. இதனை தெளிவாக உணர்ந்திருந்தும் ஈழத்தமிழர்களில் ஒரு பிரிவு ஈனத்தமிழர்கள் எல்லாம் ஹிந்தியாவால் தான் சாத்தியம் என்று மாற்று இராஜதந்திர சிந்தனைகளோ அணுகுமுறைகளோ இன்றி கறள்கட்டின மண்டை ஓடுகளோடு எப்போதும் சரணாகதி சுயலாப அரசியல் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதால் ஹிந்தியாவுக்கு எல்லாமே வசதியாக அமைந்து விடுகிறது. ஆனால் சீனாவோடு ஹிந்தியாவுக்கு இது சாத்தியமில்லை. ஹிந்தியாவின் நரித்தனத்துக்கு சவாலாக இருந்த புலிகளை அழிக்க இதுவும் ஒரு காரணம்.
  12. கருங்கடலில்.. செய்யும் விளையாட்டு.. செங்கடலில் வினையாகிக் கிடக்கு. அங்க ஒரு கோமாளி உக்ரைன். இங்க ஒரு ஏமாளி ஏமன்.
  13. சிங்கள பெளத்த இராணுவப் பிசாசு என்பது சிங்கள பெளத்த பேரினவாத பூதத்தை தாங்கிச் சுமக்கும்.. ஒன்று. அதனை அணிலார்.. என்ற சிங்கள பேரினவாத பூத எச்சம்.. எந்த வகையில் காட்டிக்கொடுக்கும். காட்டிக்கொடுத்திட்டு.. அது பதவியில் இருக்க முடியுமா..?! ஆக.. ஆமாம் சாமி தான் பாடனும். அதை தான் அணில் செய்யும் ஏனெனில்.. அது பதவிப்புத்திசாலி.
  14. வளர்க்கிற நாயே கோபம் வந்தால் கடிக்கும்.. சிங்கம்..??! பிற உயிர்களை மதிக்க வேண்டும் அதேவேளை அது அதை வைக்க வேண்டிய இடத்தில்.. தூரத்தில் வைப்பது தான் மனிதனுக்கு அழகு... பாதுகாப்பு.
  15. அண்ண.. ஊரில் வாழ்ந்த காலத்திலும் சரி.. கொழும்பு.. தாயகத்துக்கு வெளியில் வாழ்ந்த காலத்திலும் சரி.. இந்த சினிமாச் சிங்காரங்களின் நிகழ்வுகள் எதற்கும் போவதில்லை. அதேவேளை போறவையை குறை சொல்வதும் இல்லை. தாயகத்தில் தேனிசை செல்லப்பா.. சொர்ணலதா வந்த போது தாயக முத்தமிழ் விழாவில் இவர்களை கண்டதன் பின்.. மேற்கு நாடு ஒன்றில்.. பொங்குதமிழ் நிகழ்வில்.. தேனிசை செல்லப்பாவை கண்டதுதான் கடைசி. அவர் சினிமா பிரபல்யம் கிடையாது. அது வேற. ஆனால்.. ரம்பாவுக்கு இந்திரனின் மனைவி என்பதை தவிர.. யாழில் ஒரு உயர்கல்விக் கூடத்தை திறந்து வைக்க வேறு எந்த தகுதியும் இருப்பதாகத் தெரியவில்லை. ரம்பா திறந்து வைத்தது என்பது.. குறித்த கல்விக்கூடம் குடும்பச் சொந்துப் போல் இருக்கும்.. சமூகத்துக்கான உருப்படியான ஒரு கல்விக் கூடமாக இருக்குமா என்ற சந்தேகத்தை வலுப்படுத்திச் செல்கிறது.
  16. சீனாவை எதிர்கொள்ள ஹிந்தியாவிடம் எதுவுமே உருப்படியாக இல்லை. அதனால் தான் சீனச் சிங்களத்துக்கு அரிதாரம் பூசி மகிழ்கிறது. சிங்களத்தை தாஜா பண்ணலாம் என்று கனவு காண்கிறது. சிங்களம்.. இந்த ஹிந்தியாவை.. ஒரு போதும் முழுமையாக நம்பாது. இக்கட்டில்.. சீனப்பக்கமே அது சாயும். ஹிந்தியா.. இந்து சமுத்திரத்தின் பிரதான நண்பனான.. தமிழீழத்தின் நட்பை குறைத்து மதிப்பிட்டு.. இன்று நிர்க்கதியானது தான் மிச்சம். இப்ப செய்ய எதுவுமற்ற சூழலில்.. செய்யக் கூடாததை எல்லாம் செய்து காலம் கழிக்கிறது. இது ஹிந்தியாவை இன்னும் இன்னும் பலவீனப்படுத்துமே அன்றி பலப்படுத்த ஒரு சதவீதத்திற்கும் உதவாது.
  17. 1990 களிலேயே கிளிநொச்சியை கபளீகரம் செய்யும் நோக்கம் இருந்தது முஸ்லிம் மத பயங்கரவாதிகளிடம். விடுதலைப்புலிகளால்.. கிளிநொச்சியில் வைத்துத்தான் இவர்களிடம் இருந்து ஆயுதங்கள் முதன்முதலில் பறிமுதல் செய்யப்பட்டன. அதன் தொடர்ச்சியாக தான் வடக்கு முஸ்லிம்களின் பாதுகாப்பான வெளியேற்றம் கோரப்படும் அளவுக்கு நிலைமை மோசமானது. இப்ப புலிகள் இல்லை என்ற துணிவில்.. சிங்களத்தின் அடிவருடிக் கொண்டு மீள வந்திட்டினம்.. சேட்டைகளை அரங்கேற்ற. இப்ப காசாவில் இருந்து பலஸ்தீனர்களை வெளியேற்றுவதை இனச்சுத்திரிகரிப்புன்னு சொல்ல வக்கில்லாத அமெரிக்கா.. ஈழத்தில் தமிழர்களின் முஸ்லிம்களின் நலனை பாதுகாக்க மேற்கொள்ளப்பட்ட வடக்கில் இருந்து முஸ்லிம்களின் பாதுகாப்பான வெளியேற்றத்தை இனச்சுத்திரிகப்புன்னு சுமந்திரனுடன் சேர்ந்து கோரஸ் பாட அமெரிக்காவுக்கு எந்த அருகதையும் இல்லை.
  18. ரம்பாவுக்கு ஒழுங்கா சேலை கூட கட்டத் தெரியவில்லை. ரம்பா தனது கணவர் பிள்ளைகளோடு கணவரின் ஊருக்கு வருவது.. விஜயமா..??! விசேசமா..?! ஊர் கோவில்கள்.. காசைக் காட்டினால்.. தான் கடவுளை கிட்டக் காட்டுவினம் போல. பழைய காலத்தில் கோவில் உபயகாரர்களை தலையில தூக்கி வைச்சு ஆடும்... முறைமை மீளுது போல. இது நல்லதல்ல.
  19. இது மிகவும் ஆபத்தான சட்டம். பெளத்த விரிவாக்கத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கை. அப்ப எனி நல்லூரானின் தங்கம்.. பணம் எல்லாம் பிக்குகளின் கையில் எண்டுங்கோ..?!
  20. கோழியே குஞ்சு வளர்ந்த பின் கொத்தி கலைச்சிடும். இதில.. மனுசர் நீங்க.. இதுகளை ஆராய்ஞ்சுகிட்டு... மூளையை தேவையில்லாததில செலவு செய்யுங்கோ. பிறகு குத்துது குடையுதுன்னுங்கோ. பிள்ளைகளை சமூகத்திற்கு தகுந்தவர்களாக உருவாக்கிய பின்.. அவர்கள் வழியில் செல்ல விடுவதே அவசியம். அவர்களா.. உணர்ந்தால்.. பெற்றோரை வந்து பார்க்கலாம்.. போகலாம். அதைவிட மேல எதிர்பார்க்கக் கூடாது. பார்ப்பது தவறு.
  21. அப்ப எதுக்கு வெள்ள நிவாரணப் பணிக்கு.. 5000 கோடி மத்திய அரசிடம் கேட்கப் போவதாகச் சொன்னார். குடும்பச் சேமிப்பில் இடவோ..??!
  22. ஏரி ஏரி என்று கத்தினீங்கள் தானே.. அதுதான் ஒட்டுமொத்த சென்னையையும் ஏரியாக்கிட்டம். அதற்கு செலவு 4000 கோடி. எனி ஏரி வேணுன்னு கேப்பா.. ?! இவாட இடுப்பில இருக்கிற கைக்கு ஒரு குடையை குடுத்தா பிடிக்காதோ..?! இந்த பதவி வெறியாட்டச் சேட்டைகளால்.. தான் தமிழ்நாடு இப்படி சீரழிஞ்சு போய் கிடக்குது. பதவியில இருக்கிறவனை தூக்கி பஞ்சு மெத்தையில் வைக்கிறது.. குடை பிடிக்கிறது. ஈழத்திலும் இந்த நோய் இப்ப வேகமாகப் பரவி வருகுது. குறிப்பாக தாடிக்கார குத்தியருக்கும்.. சுமந்திரன் கும்பலுக்கும் இந்த வியாதி தொற்றி.. முத்திட்டுது.
  23. இவை மட்டுமல்ல.. சொறீலங்காவில் இருக்கிற வீடு வாசலை எல்லாம் வித்திட்டு.. கேயர் டேக்கர் விசாவில எனி வந்தாலும் குடும்ப அங்கத்தவர்களைக் கூட்டி வர முடியாது. மாணவர்களாக வாறவையில்.. ஆராய்ச்சி பட்டங்கள்.. தவிர.. இதர முதுகலைமாணிக்கு குடும்ப அங்கத்தவர்களை கூட்டி வர முடியாது என்று அண்மையில் இயற்றப்பட்ட சட்டத்தை இளமாணிக்கும் விரிவாக்க பரிந்துரைக்க கோரப்பட்டுள்ளது. மேலும்.. குறை நிரப்பு தொழில்கள் பட்டியலை மீளப் பரிசீலிக்கக் கோரப்பட்டுள்ளது. தற்போதைய பட்டியலில்.. பிரிட்டனில் உள்ள கிட்டத்தட்ட எல்லா தொழிலிலும் ஆள் இல்லாத குறை என்பது போல் இருப்பதால்.. ஹிந்தியர்களும் நைஜீரியர்களும் வகைதொகையின்றி வந்து குவிகிறார்கள். மேலும் 70 புள்ளி அடிப்படையில்.. கல்வி தகமைக்குரிய புள்ளி இல்லாமலே.. 70 புள்ளியை சோடிப்புக்கள் மூலம் பெற வாய்ப்பிருக்குது. அதனையும் பரிசீலிக்க வேண்டும்.
  24. என்ன.. இதுக்குள்ள.. நம்மாக்களின் ஒரு கருத்தையும் காணம். வழமையா நாதமுனி தானே விலாவாரியா எழுதிறவர்... ஆளைக் காணம்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.