Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nedukkalapoovan

  1. இவர் வடக்கின் ஸ்ராலின் ஆகிட்டார். வெள்ளத்தைக் கண்டதும் திட்டம் போடுவார். வத்தினதும் திரட்டின காசோடு ஆள் எஸ்கேப். முதலில் தீவகத்தின் பிரதான வீதியை போட்டு முடியுங்கப்பா. சனம்.. இந்த மழை காலத்தில் வேலைக்கு பள்ளிக்கூடங்களுக்கு போகப் படும் பாடு. அதுவும் இருந்த ரோட்டை போடுறன் என்று கிண்டிவிட்டு.. அந்த மக்கள் இப்ப 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு உருப்படியான வீதி இன்றித் தவிக்கினம். இவர் மட்டுமல்ல.. எந்த அரசியல் கட்சியும்.. ஊடகங்களும்.. இதில் அக்கறை காட்டுவதில்லை.
  2. ஹிந்தியாவின் அனுசரணையில் நடக்கும் நாடகம் இது. நாய் வாலை நிமிர்த்தலாம் என்று போயிருக்கினம். இருக்கிற கோவணத்தையும் இழந்து திரும்புவினம். ஆனால் இதுகளால் சர்வதேச அரங்கில் நல்லிணக்கம் கூக்குரல் இன்னும் பலமடையும். இதனால்.. தமிழர்களின் இழப்புக்கு எந்த நியாயமும் கிடைக்கப் போவதில்லை. சிறுகச் சிறுக கட்டிய சில நம்பிக்கைகளும்.. சிதைக்கப்பட்டதாகவே முடியும்.
  3. இலங்கை என்பதை விட.. தமிழருக்கு பெருமை சேர்த்த என்று எழுதுவதே சிறப்பு. ஏனெனில்.. சொறீலங்கா சிங்கள பெளத்த அரசுகளிடம் இருந்தான குறைந்த பங்களிப்போடு.. பெரும்பான்மை வேளைகளில்.. அதுவும் இன்றி.. தனிப்பட்ட திறமைகளால்.. சமூகத்தில் பல்வேறு துறைகளில்.. முன்னுக்கு வரும்.. தமிழர்கள்.. தமிழர்களுக்கு தான் பெருமை தேடித்தருகிறார்களே தவிர.. சொறீலங்காவுக்கு அல்ல. அதற்கு சொறீலங்கா உரிமை கோர எந்த தகுதியும் இல்லை. ஏனெனில்.. இதே இனத்தினை கருவறுக்க 1948 இல் இருந்து.. இப்பவும் தொடர்ந்து இனவிரோதச் செயல்களை செய்யும் ஒரு பேரினவாத வெறிப் பிடித்த பயங்கரவாத நாடு அது.
  4. ஒரு 90 வயது.. இயக்கமற்ற நபரின் தோற்றுப்போன அரசியலுக்கு மாற்று அரசியலை முன்வைத்து மக்களுக்காக உழைக்க முடியாதவர்களின் புலம்பல் இது. எல்லாரும் எங்கள் சிந்தனைகளோடு பயணிக்க வேண்டும் என்பதிலும்.. அவரவர் சிந்தனைகளில் அவரவர் பயணிக்கட்டும்.. ஆனால் எல்லாரும் மக்கள் மண்ணின் நலனை முன்னிறுத்தி சோரம் போகாது பயணிக்க வேண்டும்.. என்பதுவே தற்காலத்துக்கான செயலுக்குரிய.. பொருந்தமான சிந்தனையாக இருக்க முடியும்.
  5. ஹிந்தியா ஈழத்தமிழருக்கு எப்பவுமே துரோகம் இழைத்து வருவதோடு.. ஈழத்தமிழின அழிப்பை.. ஆக்கிரமிப்பை.. பெளத்த மயமாக்கலை.. மனதாரா ஊக்குவித்து வரும் ஒரு நாடு. ஆனால்.. கேவலம்.. இதனை தெளிவாக உணர்ந்திருந்தும் ஈழத்தமிழர்களில் ஒரு பிரிவு ஈனத்தமிழர்கள் எல்லாம் ஹிந்தியாவால் தான் சாத்தியம் என்று மாற்று இராஜதந்திர சிந்தனைகளோ அணுகுமுறைகளோ இன்றி கறள்கட்டின மண்டை ஓடுகளோடு எப்போதும் சரணாகதி சுயலாப அரசியல் பற்றியே சிந்தித்துக் கொண்டிருப்பதால் ஹிந்தியாவுக்கு எல்லாமே வசதியாக அமைந்து விடுகிறது. ஆனால் சீனாவோடு ஹிந்தியாவுக்கு இது சாத்தியமில்லை. ஹிந்தியாவின் நரித்தனத்துக்கு சவாலாக இருந்த புலிகளை அழிக்க இதுவும் ஒரு காரணம்.
  6. கருங்கடலில்.. செய்யும் விளையாட்டு.. செங்கடலில் வினையாகிக் கிடக்கு. அங்க ஒரு கோமாளி உக்ரைன். இங்க ஒரு ஏமாளி ஏமன்.
  7. சிங்கள பெளத்த இராணுவப் பிசாசு என்பது சிங்கள பெளத்த பேரினவாத பூதத்தை தாங்கிச் சுமக்கும்.. ஒன்று. அதனை அணிலார்.. என்ற சிங்கள பேரினவாத பூத எச்சம்.. எந்த வகையில் காட்டிக்கொடுக்கும். காட்டிக்கொடுத்திட்டு.. அது பதவியில் இருக்க முடியுமா..?! ஆக.. ஆமாம் சாமி தான் பாடனும். அதை தான் அணில் செய்யும் ஏனெனில்.. அது பதவிப்புத்திசாலி.
  8. வளர்க்கிற நாயே கோபம் வந்தால் கடிக்கும்.. சிங்கம்..??! பிற உயிர்களை மதிக்க வேண்டும் அதேவேளை அது அதை வைக்க வேண்டிய இடத்தில்.. தூரத்தில் வைப்பது தான் மனிதனுக்கு அழகு... பாதுகாப்பு.
  9. அண்ண.. ஊரில் வாழ்ந்த காலத்திலும் சரி.. கொழும்பு.. தாயகத்துக்கு வெளியில் வாழ்ந்த காலத்திலும் சரி.. இந்த சினிமாச் சிங்காரங்களின் நிகழ்வுகள் எதற்கும் போவதில்லை. அதேவேளை போறவையை குறை சொல்வதும் இல்லை. தாயகத்தில் தேனிசை செல்லப்பா.. சொர்ணலதா வந்த போது தாயக முத்தமிழ் விழாவில் இவர்களை கண்டதன் பின்.. மேற்கு நாடு ஒன்றில்.. பொங்குதமிழ் நிகழ்வில்.. தேனிசை செல்லப்பாவை கண்டதுதான் கடைசி. அவர் சினிமா பிரபல்யம் கிடையாது. அது வேற. ஆனால்.. ரம்பாவுக்கு இந்திரனின் மனைவி என்பதை தவிர.. யாழில் ஒரு உயர்கல்விக் கூடத்தை திறந்து வைக்க வேறு எந்த தகுதியும் இருப்பதாகத் தெரியவில்லை. ரம்பா திறந்து வைத்தது என்பது.. குறித்த கல்விக்கூடம் குடும்பச் சொந்துப் போல் இருக்கும்.. சமூகத்துக்கான உருப்படியான ஒரு கல்விக் கூடமாக இருக்குமா என்ற சந்தேகத்தை வலுப்படுத்திச் செல்கிறது.
  10. சீனாவை எதிர்கொள்ள ஹிந்தியாவிடம் எதுவுமே உருப்படியாக இல்லை. அதனால் தான் சீனச் சிங்களத்துக்கு அரிதாரம் பூசி மகிழ்கிறது. சிங்களத்தை தாஜா பண்ணலாம் என்று கனவு காண்கிறது. சிங்களம்.. இந்த ஹிந்தியாவை.. ஒரு போதும் முழுமையாக நம்பாது. இக்கட்டில்.. சீனப்பக்கமே அது சாயும். ஹிந்தியா.. இந்து சமுத்திரத்தின் பிரதான நண்பனான.. தமிழீழத்தின் நட்பை குறைத்து மதிப்பிட்டு.. இன்று நிர்க்கதியானது தான் மிச்சம். இப்ப செய்ய எதுவுமற்ற சூழலில்.. செய்யக் கூடாததை எல்லாம் செய்து காலம் கழிக்கிறது. இது ஹிந்தியாவை இன்னும் இன்னும் பலவீனப்படுத்துமே அன்றி பலப்படுத்த ஒரு சதவீதத்திற்கும் உதவாது.
  11. ரம்பாவுக்கு ஒழுங்கா சேலை கூட கட்டத் தெரியவில்லை. ரம்பா தனது கணவர் பிள்ளைகளோடு கணவரின் ஊருக்கு வருவது.. விஜயமா..??! விசேசமா..?! ஊர் கோவில்கள்.. காசைக் காட்டினால்.. தான் கடவுளை கிட்டக் காட்டுவினம் போல. பழைய காலத்தில் கோவில் உபயகாரர்களை தலையில தூக்கி வைச்சு ஆடும்... முறைமை மீளுது போல. இது நல்லதல்ல.
  12. இது மிகவும் ஆபத்தான சட்டம். பெளத்த விரிவாக்கத்தை அடுத்த கட்டத்திற்கு நகர்த்த மேற்கொள்ளப்படும் நடவடிக்கை. அப்ப எனி நல்லூரானின் தங்கம்.. பணம் எல்லாம் பிக்குகளின் கையில் எண்டுங்கோ..?!
  13. வாழ்வது வீழ்வது..அவர்கள் தெரிவு.. வாழ்த்துவது நம் கடமை. ஏனெனில்.. நமக்காக அவர்கள் வாழ்ந்தது வழிநடத்தியது போதும். எனி அவர்கள் காட்டிய வழிபற்றி நடப்பதும் விடுவதும் அவரவர் விருப்பு. இனம் வாழ.... நாம் செய்வது.. அவர்கள் இலட்சியத்தை சுமப்பதும் சாத்தியப்படுத்துவதுமே...! அதற்காய் உளமார உழைப்பது ஒவ்வொரு இனமானத் தமிழர் கடமை..!!
  14. கிவ தலைவர் மகளின் வேற புதுப்படங்கள் இணையத்தில் கிடைக்கவில்லை போலும். ஆளாளுக்கு ஒரு இரண்டு படத்தை வைச்சு.. ஒட்டுறாங்கள்.. பிசையிறாங்கள்.. கசக்கி வீசுறாங்கள். ஒன்றுமா பொருந்துதில்லை. என்ன நாங்க முன்னர் சொன்னது போல்.. யு ரியுப் வியாபாரிகளுக்கு நல்ல வசூல் தான்.
  15. மகிந்த கும்பலுக்கு இப்ப புலிகள் மீண்டெழுவதாக கதை எழுதினால் தான்.. தமது குற்றங்கள் மீதான மக்கள் கவனத்தை தேர்தலுக்கு முன் திசை திருப்பலாம். கடந்த காலங்களில் தேர்தல் காலங்களில் இது நடந்தே வந்துள்ளது. கடந்த தேர்தலில் கருணாவை ஆனையிறவில் தான் ஆயிரம் சிங்களப் படைகளைக் கொன்றதாக கூவ விட்டு திரித்துப் பார்த்தார்கள்.. கருணாவுக்கு வேலைக்கு ஆகவில்லை. கோத்தாவுக்கு ஆகிச்சுது. புலிகளின் மீள் எழுச்சியை சித்தரிக்க உண்மையில் சிங்களத்துக்கு துவாரகா அவசியமில்லை. உள்ளூர்.. வெளியூர்க் கூலிகளே போதும்.
  16. தலைவரின் இறப்புச் சான்றிதழும் இன்னும் உருவாக்கப்படவில்லையே..! ஹிந்தியா கேட்டும் கொடுக்கப்படவில்லை. தலைவர் தொடர்பான டி என் ஏ அறிக்கையும் இல்லை. அதை இட்டும் இவர் கோவப்படலாமே. தமிழ்வின் ஒரு காலத்தில் யாழின் கறுப்புப்பட்டியலில் இருந்ததை பலர் வசதியாக மறந்திட்டாங்க. என்ன இப்ப.. சில ஈனத்தமிழர்களுக்கு தலைவரையும் அவர் குடும்பத்தை எப்படியாவது நிந்திக்கனும். அவர்கள் தியாகங்களை கொச்சைப்படுத்தனும். அதற்கு எவர் எந்தக் கட்சி.. சார்ப்பு என்றில்லாமல்.. ஒன்றாக் கூடி நல்லா கழுவி ஊத்தினம். ஆளாளுக்கு நல்லா முதுகு சொறியினம். இது நடந்து முடியும் போது.. உணரப்படும் குற்ற உணர்வில்.. பல தலைகள்... கவிழ்ந்தது நிமிர முடியுமோ தெரியவில்லை.
  17. தலைவர் எங்காவது சொல்லி வைச்சாரா எனக்கு தனியா அஞ்சலி செய்யுங்கோ.. பனர் கட்டுங்கோ.. படையல் வையுங்கோன்னு..??! இதை எல்லாம் யாழ் அனுமதிச்சிருக்குது.. கடந்த காலங்களில். மேலும் முள்ளிவாய்க்கால்.. என்பது.. தலைவருக்கான அஞ்சலிக்குரிய இடம் மட்டுமல்ல.. பல்லாயிரக்கணக்கான மக்களும் போராளிகளும் கூட தியாகம் செய்த இடம். தலைவர் கூட நிச்சயமாக.. இந்த நாளை தனக்கான அஞ்சலி நாளாக கொள்ள இடமளித்திருக்கமாட்டார். மாவீரர் நாள் போல்.. பொதுவான ஒரு அஞ்சலி நிகழ்வு இனப்படுகொலை நினைவு நாளாகவே அது கடைப்பிடிக்கப்பட்டிருக்கும். எந்த ஒரு உண்மையான மக்கள் புரட்சியாளனும் இதை அதை செய்யச் சொல்லி செல்வதில்லை. தலைவரும் செய்யவில்லை. ஏனெனில்.. அவர்களின் வேணவா என்பது.. தமது மக்களுக்கான இலட்சியம் வெல்லப்படனும் என்பது தான். மேலும்.. இந்த நிழல்.. துவாரகாவை வைச்சு கழுவி உத்திறவை.. நிஜ துவாரகாவை தலைவர் போராளிகள் தவிர.. இயக்கம் பொதுவெளியில் அறிமுகம் செய்ததாகத் தெரியவில்லை. தலைவரின் பாரியார் மட்டுமே சில நிகழ்வுகளில் பங்கேற்றிருக்கிறார். அப்படி இருக்க.. ஏன்.. இவை நிழல் துவாரகா மீது அநாவசிய கவனம் செலுத்தினம். வேற செயலுக்கு பற்றாக்குறையா.. இல்லை.. நிழலை வைச்சு... நிஜத்தை நிந்திக்கினமா..??! நிஜமே.. நிழலோ.. சொல்ல வந்த சேதியை.. இங்கு கருத்திட்ட எவரும் அலசவில்லை. வெளியில் உள்ளவையும் அலசவில்லை என்பது.. இவர்களின் அறிவுத்திறனை.. செயல் திறனை அப்பட்டமாக இனங்காட்டி விட்டது. இவர்களால்.. இனத்தின் விடிவுக்கான பயணம்.. காத தூரம் கூட நகராது.
  18. தூவாரகாவின் மீள்வருகை... கொள்கை அளவில் பல செய்திகளை காவி வந்துள்ளது. இது துவாரகாவை வைச்சு தமிழர்களின் ஒற்றுமையை.. உளப்பாங்கை கண்டறிய நடத்திய இந்த தேர்வில்.. 1. தமிழர்களில் ஒரு பகுதி.. சாதாரணமாகக் கடந்து போய் மாவீரர்களுக்கான..தன் கடமையை செய்துவிட்டது. 2.இன்னொரு பகுதி.. ஆளையாளுக்கு துவாரகாவின் நிழலுக்கு பொய் சாயம் பூசுவதில் குறி. மாவீரர் நாளையே மறந்துவிட்டது. இந்தக் கூட்டம் எப்பவுமே இப்படித்தான். இதனால்.. தானும் குழம்பி தன் சார்ந்த கூட்டத்தையும் குழப்புவதே குறி. 3. சிங்களத்திற்கு உள்ளூர ஓர் அச்சம். பிரபாகரன் சம்பந்தப்பட்ட எதுவுமே மிஞ்சி இருக்கக் கூடாது என்ற நிலையில் நிழல் துவாரகா மீளவும் தமிழர்களிடம் பிரபாகரனிசத்துக்கு உயிர் கொடுத்திடுமோ என்ற பயம். 4. ஹிந்தியாவுக்கு மாவீரர் தினத்தின் கனத்தை குறைப்பதில் குறி. ஆனால்.. தமிழ் மக்களின் உள்ளுணர்வோடு கலந்திட்ட மாவீரர்கள் தொடர்பில் அதன் கணக்கு மீண்டும் பிழைத்துவிட்டது. 5. மேற்குலகிற்கு.. இதெல்லாம் ஒரு பெரிய கவனத்தில் கொள்ளத்தக்க தமக்கு ஆதாயமான மாட்டரே இல்லை. 6. தமிழகத்தில் இரண்டும் கெட்டான் கூட்டம் ஆதிக்கம். இன்னும் ஈழத்தமிழர்களின் தேவைகள் குறித்த தெளிவில்லை. 7. கோட்பாட்டு ரீதியில்.. நிழல் துவாரகாவின் வருகை என்பது பலருக்கு வயிற்றில் புளியை கரைத்தது உண்மை. அதில்... பிரபாகரன் போர்களத்தில் இருந்த போது காட்டிக்கொடுத்து பிழைத்த கூட்டம் கூட.. துவாரகாவை வைச்சு உண்டியல் குலுக்கிற பிரச்சாரத்திற்கு முண்டு கொடுத்திருக்குது. பிரபாகரன் இருந்த போது ஒரு சதத்தைக் கூட மண்மீட்புக்கு கொடுக்காத கூட்டம்.. இப்போ நீலிக்கண்ணீர் வடிக்குது. 8. துவாரகாவை முன்னிறுத்திய இந்த மாவீரர் தினம்.. நிச்சயம் வழமையை மாற்றிவிட்டுள்ளது.. என்றால் மிகையல்ல. 9. தத்துவப் பித்துக்கள்.. முடியை பிய்த்துக் கொண்டு அலசி ஆராய்கிறார்கள். இதுகள் கடந்த 14 ஆண்டுகளாக.. தமிழ் மக்களின் எதிர்காலத்திற்காக.. சிந்திக்க மண்டையை பாவிச்சதே இல்லை. 10. தமிழ் தேசிய தாயகக் கட்சிகள். மெளனமாக கடந்து போகப் பிரியப்பட்டுள்ளனர். காரணம்.. இதனை தமது எதிர்காலத்துக்கு முதலீடாக்கலாமா என்ற கோணத்தில்.. சிந்தித்துக் கொண்டிருக்கினம். 11. சர்வதேச சமூக ஊடகங்கள்.. சீன ஊடகங்கள்.. வியாபாரத்தில் குறி. மேற்குலக ஊடகங்கள்.. இரண்டும் கெட்டான் நிலை. 12. யதார்த்தமாக.. நிழல் துவாரகா.. நிஜ துவாரகாவை விட சாதித்து விட்டது... அதிகம்.
  19. அப்போ.. முள்ளிவாய்க்கால் நினைவு தினத்தில் மட்டும் தலைவருக்கு படையல்.. பனர் கட்ட யாழ் அனுமதிப்பது மட்டும்.. அவமானப்படுத்தல் இல்லையோ..??! முள்ளிவாய்க்காலில் மாண்டவர்களில் மக்கள் போராளிகள் என்று பலர் உள்ள போது தலைவரை முன்னிலைப்படுத்துவதன் நோக்கம்..?! தமிழ் மக்களை தொடர்ந்து சோர்வில் வைச்சிருக்கும் எதிரிகளின் தேவைகளுக்காகவா..??!
  20. அப்ப தலைவர் இரண்டு நாள் இறந்தவரோ.. மேலும் தலைவர் மற்றும் அவர் குடும்பம் மாவீரர் இல்லையோ..??!
  21. எம் எஸ் என் காலத்துக் கிழடுகளின் அறுவல் தாங்க முடியவில்லை. ஏதோ ஆனையிறவு அடிச்சு விழுத்தின கணக்கா சிலரில் அலப்பறை ரெம்ப ஓவர். இத்தனைக்கும் களத்தில் ஒரு துரும்பைதானும் ஆக்கிரமிப்பாளனுக்கு எதிராக இவர்கள் நகர்த்தியதில்லை. இந்த தலைப்புக்குரிய துவாரகாவை இங்கும் யாரும் நிஜம் என்றோ.. போலி என்றோ நிறுவ நிற்கவில்லை. அதேபோல்.. இங்குள்ளவர்களினதும்.. வெளியில் உள்ளவர்களினதும் சொல்லால் நிறுவச் சொல்லவில்லை. எது நிஜம் எது நிழல் என்பது எல்லா பாமர ஈழத்தமிழனுக்கும் தெரிந்ததே. இன்றைய தேவை எம் தேசத்தின் விடுதலையும் மாவீரர் கனவை நனவாக்க உழைப்பதுவே. அதற்கு தேவை ஒற்றுமை.. ஒத்துழைப்பு. அதையேன் நாசமாக்குகிறார்கள் இன்னும் இன்னும். பல இளையோர் அமைப்புக்கள்.. எவ்வளவோ காரியங்களை நாட்டுக்காக ஆற்றிக் கொண்டிருக்கினம்.. புலம்பெயர் நாடுகளிலும் சரி.. தாயகத்திலும் சரி. அவர்கள் யாரும் இந்த சலசலப்புக்கு ஆடினதா தெரியவில்லை. ஆனால்.. இங்கு சிலர்.. தங்களை தாங்கள் முதுகு சொறிய இதனைப் பயன்படுத்தி.. மாவீரர் நாளை இழிவுபடுத்தி விட்டுடிருக்கிறார்கள். அவர்கள் யார் என்பதை அவர்களே அறிவார்கள். மற்றவர்களும் அறிவார்கள். உலகில் உள்ள சாத்தியமான எல்லா வடிவங்களினூடும் எமது போராட்டம் முன்னெடுக்கப்படுவதில் இளையோரும் மற்றோரும் தொடர்ந்து இயங்குவது மிக முக்கியம். குறிப்பாக நவீனமயமாக்கலை உள்வாங்கி. எதிரிகளின் நவீனமயமாக்கலை முறியடிக்கக் கூடிய வகையிலும் எதிரியை குழப்பத்தில் ஆழ்த்தக் கூடியதுமாகவும் எமது மண்ணுக்கும் மக்களுக்கும் நன்மை தரக்கூடியதுமாக இருந்தால்.. அதனை பரீட்சித்துப் பார்ப்பதில் தவறில்லை.
  22. நிச்சமாக.. அவர்கள் உயிரோடு இருந்தாலோ இல்லையோ.. மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டத்துக்கு வரமாட்டார்கள். ஊக்குவிக்கவும் மாட்டார்கள். அதற்கான பூகோள ஏதுநிலைகளும் இல்லை. அரசியலில் குதிக்கவும் வாய்ப்பில்லை. ஏனெனில்.. தலைவர் போராட்ட களத்தில் இருந்த போதே தேடி வந்த பதவிகளை உதறித்தள்ளிவிட்டு கொண்ட இலட்சியத்துகாக போராடிக் கொண்டிருந்தவர். தலைவர் இருக்கிறாரோ இல்லையோ.. அவர் சுமந்த இலட்சியம் வாழ்ந்து கொண்டு தான் இருக்குது. அது.. தலைவரின் அயலவரான..தாயகத்தில் வாழும்.. மாவீரர் ஒருவரின் அம்மாவின் கருத்தில் கூட தொனித்தது.
  23. சொறீலங்கா.. ஹிந்தியா கேட்டிருக்கலாம். உள்ள உதவாக்கரை வீடியோக்கள் எல்லாம் யு ரி யுப்பில் அதன் சொற்படிக்கு கீழ் இயங்கிக் கொண்டிருக்கும் போது.. இது மட்டும் இவ்வளவு விரைவாக காணாமல் போயிருக்கு என்றால்.. கூகிள் ஆண்டவருக்கே வெளிச்சம். உங்கடை கதையப் பார்த்தால்.. நாங்கள் எல்லாம்.. லெனின்.. சேகுவரா காலத்து ஆக்கள் போலவும்.. அவர்கள் காலத்தில் கூட வாழ்ந்த ஆக்கள் போலவும் எல்லோ இருக்கு. வரலாறை உள்ளபடி அறியும் ஆர்வம் ஒன்றே எம்மை இயக்கிக் கொண்டிருக்குது. வயதோ.. வசதியோ.. தனிப்பட்ட தேவைகளோ அல்ல.
  24. ஹிந்தியாவின்.. சீனாவின்.. மேற்குலகின்.. ரஷ்சியாவின் தேவைகளோடு சேர்ந்து நாம் ஓடாவிட்டால்.. இலக்கை அடைவது இலகு அல்ல. எமது பூகோள அரசியல் ராஜதந்திரப் பலவீனமே.. முள்ளிவாய்க்கால் மெளனம். இதனை தெளிவாகச் சொல்கிறது பேச்சு. அதனை இன்னும் இனம்காணாமல்.. ஒட்டினால்.. ஒன்றில் ஹிந்தியா.. இல்ல சிங்களம் என்று காலம் கடத்துவோமாக இருந்தால்.. எம் மாவீரர்களின் கனவு நனவாக இன்னும் பல சதாப்தங்கள் தேவைப்படும்.
  25. தனிமனித மரணங்கள்.. ஒரு விடுதலைப் போராட்டத்தை நசுக்கும் என்றால்.. பல தேசிய இனங்கள் இன்று விடுதலை அடைந்திருக்க முடியாது. இதே துவாரகாவும் சாள்ஸ் அன்ரனியும்.. 1987 இல் யாழில் ஹிந்திய சுற்றிவளைப்புக்குள் வந்த போதே.. இறக்க வேண்டியவர்கள். அதே தான் தலைவருக்கும். தலைவர் சாகடிக்கவும் பட்டார். நீங்கள் அப்போது இருந்திருந்தால்.. அப்பவே தலைவரை சாகடித்தவர்கள் அணியில் இருந்து கொண்டிருப்பீர்கள். எங்களைப் பொறுத்தவரை.. தேசிய தலைவர் கொல்லப்பட முடியாதவர். அவர் கொள்கைகள்.. இலட்சியங்கள்.. எப்போதும்.. வழிகாட்டியாக இருக்கும். நேற்றுக் கூட ஒரு சிங்களவர் தலைவரின் பிறந்த நாள் நிகழ்வில்.. தலைவரின் கொள்கைகள் தனக்குப் பிடிக்கும் என்று சொல்கிறார்.. ரோகண விஜயவீர தமக்குப்போராடியது போல என்று ஒப்பிடுகிறார். ஆனால்.. நாம்.. தலைவரின் பெளதீக இருப்பை எதிர்பார்த்து அவரின் இலட்சியங்களை குழிதோண்டிப் புதைக்க முனையும் கூட்டங்களின் எதிரிகளின் பின்னால் போய்க் கொண்டிருக்கிறோம். இது தான் தலைவரை சாகடிப்பதற்கு நிகர். இது பழைய பல்லவி அல்ல. கடந்து வந்த வரலாறு. இப்பவும் சீமான் அண்ணாவை முன்னால் தள்ளி விட்டிட்டு தாங்கள் என்ன செய்து கொண்டிருக்கிறீர்கள். துவாரகா நகலா.. நிஜமா என்று ஆராய்ந்து கொண்டிருக்கிறீர்கள். இது.. தமிழீழத்துக்கு எந்த வகையில்.. உதவும்.. என்று சொன்னால் உங்கள்.. புதிய.. புரட்சிகர வழியை நல்வழி என்று இனங்காட்ட உதவியாக இருக்கும்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.