Everything posted by nedukkalapoovan
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
இந்த சித்திரை முட்டாள் தின தலைப்பு.. இப்ப வேற லெவலில் போய்க்கிட்டு இருக்குது. ஹிந்திய தூதரகம் மறிப்பறிக்கை விடும் வரைக்கு போயிட்டா...?! ஆனால்.. வாட் சப்பிலும் ஒரு செய்தி பகிரப்பட்டு வந்திருந்தது. இதே சாரம்சத்தில்..! ஒருவேளை... எல்லாம் சேர்ந்து ஹிந்திய தூதரகம் மறுப்பறிக்கை விட வைச்சிருக்குமோ..??! அல்லது உண்மையாகவே ஹிந்திய இராணுவம் இறங்கி இருக்குமோ..?! இப்ப எல்லாம் ஹிந்திய உயர் அதிகாரிகள் அடிக்கடி கொழும்பு வந்து போகினம். அதுதான் சந்தேகமா இருக்குது.
-
கோவிட்-டுக்க.. ஊர் போய் வந்தவனின் புதினம்.. உங்களுக்கு விடுப்பு
ஆனால் விம்பகத்துக்குள் இணைக்க குறித்த அளவுக்குள் (MB) படங்கள் இருக்கனும் என்று நினைக்கிறேன். அதற்கு மேல் என்றால் இணைக்க அனுமதிக்காது. முன்னர் முயன்று முடியாததால் தான் இம்முறை முயற்சிக்கவே இல்லை. நன்றி அண்ணா வழிகாட்டலுக்கு. 😀
-
கோவிட்-டுக்க.. ஊர் போய் வந்தவனின் புதினம்.. உங்களுக்கு விடுப்பு
உண்மையில்.. துறைமுக நகர் போகனுன்னு வரேல்ல. One Galle face mall பக்கம் தான் போக என்று வந்தது. ஓசில விட்டதால்.. துறைமுக நகருக்குள் நுழைஞ்சாச்சு. ஓசின்னா.. தெரியும் தானே... 😃
-
கோவிட்-டுக்க.. ஊர் போய் வந்தவனின் புதினம்.. உங்களுக்கு விடுப்பு
வழமையா.. ஒரு கிலோன்னாலும் கீழ தான் கொண்டு போவது. இம்முறை கொஞ்சம் கூடத்தான் போயிட்டுது.. ஏன்னா.. கொண்டு போனது எல்லாமே அவசியம் என்று படும் வகைக்கு நிலைமை அப்படி.. அல்லது வாசிச்ச செய்திகளின் தாக்கம் அப்படி. 😃 இயல்பு கலப்படமாத்தானே இருக்குது. இயல்பை கடந்து மொழின்னு வந்தால்.. மொழித் தூய்மை அதிகம் வரும். 😀 வீட்டுக்காரிக்கு வீட்டில இருந்து வேலை என்பதால்.. அவா முன்னாடியே கிளம்பிட்டா. நம்மளுக்கு வேலை அப்படி. கோவிட்டுக்குள்ளும் ஆஸ்பத்திரியே தான் தஞ்சம் என்பதால்.. நம்மள லேசில விடமாட்டன் என்றிட்டாங்கள். கிடைச்ச அனுமதிக்குள் தானே போய் வர முடியும். கஞ்சப்பையன் இல்லையண்ணா.. சமயோசிதப்பையன். நல்ல காலம்.. அந்த சாண்ட்விச்சும் தண்ணிப் போத்தலும் இல்லைண்ணா.. அடுத்த பிளைட்டுக்குள்ள சாப்பாடு தண்ணி காட்டும் வரை பசியோட தான் இருந்திருக்கனும். ஏன்னா.. ரான்சிட் வழியில் அமைந்த.. டியுடிபிரிக்க.. உணவுச் சாலைகள் எல்லாம் பூட்டு.
-
கோவிட்-டுக்க.. ஊர் போய் வந்தவனின் புதினம்.. உங்களுக்கு விடுப்பு
இதுக்குப் பதில்.. பயணப் புதினத்துக்க வரும். விடுப்புப் பார்த்திட்டே இருங்க. 😀 நீங்க தொடர்ந்து விடுப்புப் பார்க்கனுன்னு தானே எழுதிறம். நன்றி அண்ணா. 😀 சொந்தப் பயணப் புதினம் என்பதால்.. இயல்பைக் கலந்து எழுதினால் தான் விடுப்பு நல்லா இருக்கும் என்பது எண்ணம். வாசிக்க சிரமமாக இருந்தாலும் விடுப்பு இருக்கும். தொடர்ந்து வாசியுங்கோ. படங்களை இணைப்பதில் ஒரு சிக்கல் இருக்குது. படங்களை யாழில் தரவேற்ற முடியாத அளவுக்கு அவை அளவில் கூடி இருக்குது. வேறு சமூக ஊடகங்களின் ஊடாக ஏற்றி இணைப்பைக் கொடுத்தால்.. அதையும் தற்காலிகமாக அனுமதித்து பின் தடை செய்திடுறாங்க. இப்ப எல்லாம் நாம் எடுத்த படங்களை நிரந்தரமாகத் தெரிய யாழில் பகிர்வது சிரமமாக உள்ளது. வேறு வழி இருந்தால் சொல்லுங்கள். எழுத ஆரம்பிக்க முன்னே படம் இணைக்கும் நோக்கமிருந்தது. ஆனால்.. இன்னொரு தலைப்பில் சமூக ஊடகமொன்றில் தரவேற்றி.. போட்ட படங்களே.. தற்காலிக காண்பித்தலுக்குப் பின்.. காணாமல் போயிட்டதால்.. இங்க படம் போடேல்ல. நிச்சயம் படங்கள் இருக்கு.. போட்டால் நல்லாவும் தான் இருக்கும்.. ஆனால்.. நிரந்தரமாக தெரிய தான் வழி தெரியல்ல. 😀
-
கோவிட்-டுக்க.. ஊர் போய் வந்தவனின் புதினம்.. உங்களுக்கு விடுப்பு
கால்கடுக்க.. பொறுமை சோதிக்க கியூவில் நின்று வாஸ் றூமை அடைந்து மாஸ்கை கழட்டினால்.. மாஸ்கை இங்கே குப்பையில் போட வேண்டாம்.. என்று எழுதி அதை போட தனியான ஒரு பாதை அமைச்சு.. அதில ஒரு தொட்டி வைச்சு.. அதில.. கொண்டு போய் போடச் சொல்லிக் கிடக்கு. இதுகளை எல்லாம் சமாளிச்சு.. ஒரு மாதிரி பிரஸப் பண்ணிக் கொண்டு.. பிளைட்டில தந்த சான்விச்சை மிச்சம் பிடிச்சு.. கொண்டு வந்ததால.. அதையும் சாப்பிட்டிட்டு.. பிளைட்டில தந்த தண்ணிப் போத்தலையும்.. மிச்சம் பிடிச்சு கொண்டு வந்ததால.. அதையும் குடிச்சிட்டு (நாம யாரு.. சுழியன்கள் எல்லோ).. அடுத்த பிளைட்டுக்குள்ள ஏறினால்.. அதுக்க ஆடு மாடுகளை ஏத்திற மாதிரி ஏத்துறாங்கள் ஏத்துறாங்கள்.. ஏறி முடியாத அளவுக்கு ஏத்திறாங்கள். கடைசியில நின்று போகாத குறைக்கு.. சனம். அதுக்குள்ள பெரிய பெரிய கான்ட் லக்கேஜ்ஜோட.. இலங்கைக்குப் போக.. என்று வரும்.. மத்திய கிழக்குப் பணியாளர்கள். அதுகளையும் சொல்லிக் குற்றமில்லை.. ஊருக்கு கொண்டு போகக் கூடிய மக்ஸிமத்தை கொண்டு போவம் என்ற துடிப்பு. ஆனாலும்.. சக பயணிகளை.. ரெம்ப அசெளகரியப்படுத்திட்டாய்ங்க. இதுகளை எல்லாம் தாண்டி.. அந்த ஏயார் பஸ் விமானம்.. 30 நிமிடம் முந்தியே.. கட்டுநாயக்காவை அடைந்துவிட்டது. கட்டுநாயக்கா பார்க்க அப்படியே தான் இருக்குது. என்ன மூலைக்கு மூலை புத்தர் தரிசனம் கொடுப்பது அதிகரித்திருந்தது. கட்டுநாயக்காவுக்க இறங்கிட்டு.. புத்தரை அந்நியராப் பார்க்க ஏலுமோ.. நம்ம புத்தர் தானே.. என்ற தோறணையில்.. அவரைத் தாண்டி.. இமிகிரேசனுக்கு போனால்.. என்ன ஒரு பவ்வியம் பணியாளர்கள் இடத்தில். கொஞ்ச வெளிநாட்டவர்கள் தான் கியூவில். பாஸ்போட் செக் எல்லாம் ஒரு 10 நிமிடத்துக்குள் முடிஞ்சு போச்சு. அந்தளவுக்கு வெளிநாட்டவருக்கான கவுண்டர்கள்.. பிறியாக கிடந்துது. செக் முடிஞ்சு.. விசாவையும் குத்திக்கிட்டு வெளில வந்தால்.. இன்னொரு சந்துக்கு போக வேண்டும். அங்க தான்... அங்க என்னாச்சுன்னு பின்னர் தொடரும்...
-
கோவிட்-டுக்க.. ஊர் போய் வந்தவனின் புதினம்.. உங்களுக்கு விடுப்பு
பவுன்சை உருவின கோவம் மனசுக்க முட்டிக்கிட்டு கிடந்தாலும் வெளில..கொட்ட முடியாத சூழலில்.... வந்த கோவத்தை அமுக்கிக்கிட்டு (வேற வழி) கிளம்பி.. எயார்போட் டியூட்டிபிறில.. என்ன இலாபமாக் கிடக்குன்னு பார்க்கப் போனால்.. அங்க எங்க.. எல்லாப் பொருட்களுக்கும்.. கோவிட் கால வருமான இழப்பையும் விலையா வைச்சு.. விக்கிறாங்கள். ஏற்கனவே பஜெட் எகிறிட்டுது.. நமக்கு உது சரிப்பட்டு வராதுன்னுட்டு.. பிளைட்டைப் பிடிக்கப் போனால்.. அங்க.. றீம் லைனர் தான் இருக்கும் என்று பார்த்தால்.. போயிங் 777 விட்டிருந்தாங்கள். அது பார்க்கப் பழசாவே இருந்திச்சு. அதிலையே பாதி மனசு.. சோர்ந்திட்டுது. சரி இதாவது கிடைச்சுதேன்னு மனசை அரையும் குறையுமா தேற்றிக்கிட்டு. பிளைட்டுக்க ஏறினால்.. பிளைட்டுக்க.. எல்லாரும் மாஸ்கோட இருக்காங்க. அதிலும் சிலது டபிள் மாஸ்க் வேற போட்டிருக்குது. ஆனாலும் சிலது மாஸ்கை கழட்டிட்டு செல்பி எடுக்குது.. சிலது மாஸ்கை எடுத்திட்டு மூக்கைச் சிந்துது.. இப்படி பல வித மனிசர்களையும் தாண்டி ஒருமாதிரி நம்ம இருக்கையில் போய் இருந்தாச்சு. யன்னல் சீட் தான். அது புக் பண்ணும் போதே தெரிவு செய்ததால.. அதில பிரச்சனை இருக்கல்ல. எனி என்ன..செய்யலாமுன்னிட்டு.. போனை சார்சரில அடிச்சிட்டு.. பாட்டைப் போட்டு கேப்பம் என்றிட்டு.. எயார்பொட் டை எடுத்து காதுக்க செருக்கிட்டு.. நிம்மதியா இருப்பமுன்னா.. கிளம்பின பிளேனுக்க இருந்து தண்ணி ஒழுகி.. தலையை முழுக்காட்டிவிட்டிச்சு. இதென்னடா கோதாரி.. பிளேனுக்கையும் தண்ணி ஒழுகுமான்னு நினைச்சிட்டு.. பழைய டப்பாவை.. கோவிட் காலத்தில பூசி மொழுகிட்டு விட்டிருக்கிறான் அரபிக்காரனுன்னு திட்டிக்கிட்டே.. அலேட் பட்டினை அமுக்கி.. விமானப் பணியாளை (மனையாள் அல்ல) அழைச்சால்.. நல்ல.. அரபிக்காரியா வருவாள் என்று பார்த்தால்... ஒரு சைனாக்காரி தான் வந்தாள். அரபிக் காரனெல்லாம்.. யூரோப் பக்கம்.. பிளேன் விட்டு நல்லா சம்பாதிச்சாலும்.. அரபிக்காரிகளை விமானப் பணிப்பெண்களாக வைச்சிருக்கிறது குறைவு.! மற்ற நாட்டுக்காரிகளை தான் வைச்சிருக்காங்கள். வந்தது சைனோவோ என்னவோ வந்த விசருக்கு.. இதென்ன.. பிளைட்டுக்க தண்ணி ஒழுகுது.. என்ன நடக்குது என்று அவளோட பாய.. அவளோ கொஞ்சம் பதறித்தான் போயிட்டாள். ஓடிப்போய் தன்ர கெட் டை கூட்டிக்கொண்டு வந்து.. விமானக் கூரையை தொட்டுத் தடவினால்.. ஒரே தண்ணி. என்ன ராயிலட் லீக்கான தண்ணியான்னு கோவமாக் கேட்க.. இல்லை இல்லை.. இது சிலவேளை நடக்கிறது.. ஆக்கள் விடுற மூச்சுக் காத்தில உள்ள தண்ணி ஒடுங்கி நின்று பிளைட் ஏறேக்க.. இப்படி ஒழுகிறது தான் என்றாள். நான் அதுக்கு.. என் வாழ்க்கையில் இப்படி முன்னம் எப்பவும் நடக்கவேயில்லையே.. இதென்ன பழைய பிளைட்டா என்று தொடர்ந்து கேள்வி கேட்டு.. அவளுக்கு தொந்தரவு கொடுக்க.. இன்னொருத்தி.. புதிய போர்வை.. தலையணை எல்லாம் கொண்டு வந்து தந்து.. தண்ணியையும் துடைச்சுவிட்டு.. நம்மளை குசிப்படுத்தி.. சமாதானப் படுத்தினாள். சரி சரி.. போங்கடி.. நடிச்சது காணுமுன்னு.. மனசுக்க தோனினாலும்... கொஞ்சம் விட்டுத்தான் பிடிப்பமேன்னு விட்டால்.. அதுக்குப் பிறகு நம்ம மேல கவனிப்போ.. தனி தான். ஒரு மாதிரி.. ஒழுகிற பிளைட்டை சமாளிச்சு அரபுதேசம் ஒன்றில் இடைத்தங்கலுக்கு இறங்கினால்.. மனசுக்க.. பழைய நினைப்பில்.. ஒரே எதிர்ப்பார்ப்பு. அங்க டியுரிபிறில.. அரபிக் சொக்கலேட்டும்.. ஊரில உள்ள சில பேருக்கு.. தண்ணியும் (பச்சத்தண்ணி இல்லை.. பிறவுன் தண்ணி) வாங்கிட்டுப் போவம் என்று.. மனசு பல திட்டங்களைப் போட்டிச்சு. ஆனாலும்.. பிளேன் இறங்கின கையோட.. அதை தூரத்தில நிப்பாட்டிட்டாங்கள். பிறகு ஒரு அரைமணி நேரம் எல்லாரையும் பிளைட்டுக்க வைச்சிருந்திட்டு... பேரூந்துகளில் ஏத்திக் கொண்டு போய்... ஒரு வழிப் பாதையில விட்டாங்கள். அங்க இறங்கினால்.. அம்புக் கோடுகள் காட்டிற வழியில மட்டும் தான் போகலாம் என்டாங்கள். அரபுக்காரன் தேசத்தில எனி உதுக்கு சண்டை பிடிக்கேலுமோ.. இல்லைத்தானே.. அவன் சொன்னதை வாயை மூக்கை பொத்திக்கிட்டு கேட்டுட்டு நடந்தால்.. அது நேராக் கொண்டு போய் அடுத்த பிளைட் எடுக்கிற இடத்தில விட்டிச்சு. டியுரிபிறி எல்லாம் அடைச்சு காத்துக்கூட போக முடியாத அளவுக்கு மூடிக்கிடக்கு. அட கறுமமே.. இங்க டியுபிரில ஏதாவது வாக்கிட்டுப் போவம் என்று தானே இந்த ரான்சிட் போட்டது.. அதுவும் பாழாப் போச்சா.. என்றிட்டு.. குறைஞ்சது.. மாஸ்கை மாத்திட்டு.. மூஞ்சியைக் கழுவிட்டு.. நம்பர் 1 க்காவது போயிட்டுப் போவம் என்று போனால்.. அங்கையும்.. கியூ. கியூவை தாண்டி.. எப்படி போனது பயணம்.. தொடரும்..
-
கோவிட்-டுக்க.. ஊர் போய் வந்தவனின் புதினம்.. உங்களுக்கு விடுப்பு
கொரோனா வந்து உயிரை வாங்குது.. ஒருக்கால் ஊர் போய் உறவுகளைப் பார்த்திட்டு வருவம்.. என்று வெளிக்கிட்டால்.. ரிக்கெட் போட.. ஒரு மாதம்.. ஒவ்வொரு நாளும்.. kayak க்கோடு கட்டிக்கிடந்தாலும்.. விலை ஏறுவதும் இறங்குவதும்.. கோவிட் கேஸுக்கு ஏற்றமாதிரி இருக்க.. வந்த கடுப்பில்.. இண்டைக்கு புக் பண்ணியே தீருவது என்று முடிவுகட்டி.. 575 பவுனுக்கு ரிக்கெட் போட்டாலும்.. காசு கட்டும் போது விசா கிரடிட் காட்டால பணம் செலுத்தினால் பாதுகாப்புன்னு சொல்லக் கேட்டு அதை பயன்படுத்தினால்.. அவனோ.. விசா டெபிட் காட்டுக்குரிய 25 பவுன் கழிவை கட் பண்ணிட்டு..25 பவுனைக் கூட்டி எடுத்திட்டான். முதற்கோணல் முற்றிலும் கோணல்.. என்ற எங்கட ஆக்களின் பழமொழி ஞாபகத்திற்கு வந்து தொலைச்சாலும்.. அதெல்லாம்.. தாழ்புச் சிக்கலின் வெளிப்பாடுன்னு என்னை நானே சமாதானப்படுத்திக் கொண்டு... அடுத்து என்ன.. இலங்கை விசாவுக்கு அப்பிளை பண்ணப் போனால்.. அங்கு ஒரு ஆறுதல்.. இப்பவும் அப்ப போலவே 32 பவுன் தான் (ஆனால் டொலரிலதான் செலுத்தனும்..) ஒரு மாத கால விசாவுக்கு வாங்கிறாங்கள் என்று. சரி விசாவுக்கு அப்பிளை பண்ணி அது ஒரு இரண்டு மணித்தியாலத்துக்குள்ள வந்து சேர.. கோவிட் கோதாரி என்னென்ன கென்டிசன் போட்டிருக்கு என்று பாப்பமுன்னு.. கூகிளாரைக் கேட்க.. அவர் இங்க கூட்டிணைத்துவிட்டார்.. https://www.gov.uk/foreign-travel-advice/sri-lanka/entry-requirements இங்க போய் வாசிச்சு தலைசுத்தி ஏதோ ஒருமாதிரி ஒரு லிங் கிடைக்க http://www.immigration.gov.lk/web/index.php?option=com_content&view=article&id=151&Itemid=196&lang=en அதைத் தட்டி அங்க போனால்.. அவன் கோதாரிப்படுவான்.. கொவிட் இன்ஸ்சூரனும் எடுக்கனும் என்று போட்டிட்டான். சரின்னு அதுக்கும் ஒரு 1500 ரூபாவுக்கு ஏற்ற அளவில பவுன்ஸை கொட்டி அதையும் ஆன்லைனில எடுத்திட்டு.. கொவிட் வக்சீன் சேர்டிபிக்கட்டும் இருக்குத்தானே எனிக் கிளம்புறது தான் பாக்கின்னு நினைக்க.. அங்கால தட்டினால்.. அங்கால எயார்லைன்ஸ் காரன் ஒரு ஈமெயில் போட்டிருக்கான். அதில இன்னொரு லிஸ்ட். அதில இருந்த லிங்கை தட்டினால்.. கொவிட் சேர்டிபிக்கட் மட்டும் போதாது.. பயணத்துக்கு முன்.. 72 தொடக்கம் 48 மணித்தியாலத்துக்குள் எடுத்த கொவிட் பி சி ஆர் நெகட்டிவ் சேட்டிபிக்கட் தேவைன்னு போட்டுருந்தான். இதென்னடா கோதாரின்னிட்டு.. சரி.. வேலை செய்யுற ஆஸ்பத்திரில ஒரு ரெஸ்டை செய்து அதோட போவம் என்றால்.. நோ நோ.. பி சி ஆர் ரெஸ்ட்.. குறிப்பிட்ட தனியார் கம்பனில தான் செய்யனுன்னும் அதுக்கும் ஒரு லிஸ்ட்.. அதுக்கும் லிங்குகள். எப்படி எல்லாம் பணம் பண்ணுறாங்கள்.. ரிக்கெட்டை வேற போட்டுத் தொலைச்சாச்சு.. அதுவும் சீப்பான ரிக்கெட் என்று றிபன்ட் எடுக்க முடியாத சீப்புக்கு போட்டதால.. வேற வழியின்றி.. சீப்பான பி சி ஆருக்கு தேடினால்.. கோம் கோவிட் கிட் மட்டும் தான் சீப்பென்னு வந்திச்சு. சரின்னு அதை புக் பண்ணினால்.. கோவிட் கிட் வீட்டுக்கு வராது போய் எடுக்கனுன்னு வந்திச்சு. அட கோதாரிப் படுவாரே இதை முதலிலேயே சொல்லி தொலைக்க வேண்டியது தானேன்னு திட்டிட்டு.. சொன்ன இடத்த எடுக்கப் போனால்.. அவன் கடையைச் சாத்திட்டான். பிறகு அடுத்த நாள் வேலைக்குப் போற நேரமா அவசர அவசரமாக் கிளம்பி அங்க போனால்.. கடைக்காரன் ஈயோட்டிக்கிட்டு நிக்கிறான். சரி அது அவன் பிழைப்புன்னு நினைச்சுக் கிட்டு.. நம்ம கொவிட் கிட் பெட்டியை.. பொறுக்கிக்கிட்டு.. போயிட்டன். அடுத்த நாள் அந்த ரெஸ்டை வீட்டில வைச்சு எடுத்திட்டு.. இதை இப்ப எங்க கொண்டு போய் எப்ப போடுறதுன்னா.. தேடினா.. அதுக்கு இன்னொரு இடத்தைச் சொன்னாங்கள். இதென்னடா வடிவேல் காமடி மாதிரி.. இந்தச் சந்தில் இருந்து அந்தச் சந்துக்கு வரச் சொல்லுறான்டான்னு.. நினைச்சுக்கிட்டு அங்க போய் அதை தொபட்டீர் என்று பெட்டியில் போட்டதில்.. சரி சாம்பில் விழுந்த விழுகைக்கு சுக்கு நூறாகி இருக்கும்.. கொடுத்த பவுன்சும் தூள் துளாயிட்டென்னு.. நினைச்சிட்டு நேரம் போக.. கடைசியில ஒரு மெயில் வந்திச்சு.. சாம்பிள் கிடைச்சிட்டுது.. லாப்புக்கு அனுப்பியாச்சுன்னு. அப்ப தான் சுக்குநூறான சிக்கலில் இருந்து வெளிப்பட்டு மனசு.. இன்னொரு சிக்கலுக்க மாட்டிவிட்டுது. எல்லாம் சரி.. தம்பி.. இப்ப உனக்கு றிசல்ட் பொசிட்டுவ் வுன்ன.. வந்துன்னு வைச்சுக்க.. இவ்வளவு காசும் அம்போ. அது தெரியுமோன்னு சொல்லிச்சு. அப்ப தான் மறுபுத்திக்கு உறைக்க வெளிக்கிட்டிச்சு. சரி.. எதுவா கிடந்தாலும் போறது போகத்தானே செய்யுமென்னு.. அப்படிப் போனாலும்.. ஓவர் டைம் செய்து விட்டதைப் பிடிக்கலாமென்னு.. இன்னொரு மனசு.. அந்த சலன மனசை வலிஞ்சு சமாதானப்படுத்த.. நள்ளிரவுக்கு முன்.. மீண்டும்... போன் மணி.. டிங் கன்னு ஒலிக்க.. ஈமெயிலை சொடிக்கினால்.. பி சி ஆர் றிசல்ட் பிடிஎவ்வில வந்திருந்திச்சு. அது நெகட்டிவ் தான். அது எனக்கு எப்பவோ தெரியுமுன்னு.. இப்ப அந்த சலன மனசு.. தனக்கு தானே மார்தட்டிக் கொண்டிச்சு. சரி எனிக் கிளம்புறது தானே பாக்கின்னுட்டு.. ஊருக்கு சும்மா போகேலுமோ.. அங்க பருப்புத் தொடங்கி மஞ்சள்.. வரைக்கும்.. தட்டுப்பாடு. கரண்ட் வேற கட் பண்ணுறாங்கள் என்று யாழில ஒட்டிற செய்திகளை விடாமல் வாசிச்ச அறிவு எச்சரிக்க... எனி ஊரில போய் சொந்தங்களை அதுவேணும்... இதுவேணுன்னா.. கேட்டா.. அதுங்க இருக்கிற கடுப்புக்கு.. செருப்பால அடிக்குங்கள்.. என்றிட்டு.. பல சரக்குகளையும் வாங்கிக் கட்டிக் கொண்டு.. வெயிட்டைப் பார்த்தால்.. 5 கிலோ எல்லை தாண்டிட்டு. சரி இதில எதை எடுத்து வெளில போடுறது.. ஒன்னையும் போடேலாது.. கொண்டு போ.. எயார் போட்டில பார்க்கலாம் என்று ஏதோ ஒரு மனசு தைரியம் கொடுக்க பெட்டியைக் கட்டி ரெடி பண்ணிட்டு இருக்க.. இன்னொரு டிங் மணி கேட்டிச்சு. ஈமெயிலை துறந்து பார்த்தால்.. செக் லிஸ்ட் எல்லாம் சரியோன்னு பாருன்னு எயார்லைன்ஸ் காரன் லிஸ்ட் அனுப்பி இருந்தான். எல்லாம் இருக்கு.. ஆனால் லொக்கேட்டர் போம் இல்லை.. சரின்னு அதை நிரப்புவம் என்று இலங்கை குடிவரவு குடியகழ்வு இணையத்துக்கு போனால்.. அவங்கள் இன்னொரு சந்துக்கு போன்னு இணைப்பைக் கொடுத்தாங்கள். அங்க போனால்... அது பாஸ்போட்டை படம் எடு.. உன் மூஞ்சியை படமெடுன்னு ஆயிரத்தெட்டு ஆலாபரணம். சரின்னு அதெல்லாம் செய்திட்டு.. சில்லெடுப்பில இருந்து வெளில வருவமென்றால்.. கியு ஆர் கேட் வரமாட்டேன்னு நின்னுட்டுது. ஏதோ பிழைச்சுப் போச்சு... அல்லது நம்மட பெயரும் தடை லிஸ்டில இருக்கோன்னு.. கோதாரி உந்த யாழில எழுதப் போய்.. நம்மளையும் தடை பண்ணிட்டாய்களோன்னு.. திட்டித் தீர்த்துக் கொண்டிருக்க.. கியுஆர் கோட்டுக்கு இந்த இந்த புரவுசரில் போனால் தான் அது சரிவருன்னு சொல்லி இருக்க.. அதைக் கண்ட பின் தான்.. யாழை திட்டினதை வாபஸ் வாங்கினது. சரின்னு லாப்டாப்பை விட்டிட்டு.. போனுக்கால போய் மீண்டும் முயற்சி செய்ய கியூஆர் கோட் வந்திச்சு. இப்ப பார்த்தால்.. நமக்கு தலை சுத்திச்சுது. எத்தினை டாக்கிமென்ட் மொத்தமா வேணும். ஒன்றை கூட்டினால்.. மற்றது விடுபடுகுது. சரின்னு எல்லாத்தையும் போனில ஒரு போல்டருக்குள்ள போட்டு அமுக்கிட்டு.. கிளம்ப.. மனசு சொல்லிச்சு.. போன் சார்ச் இறங்கினால்.. மவனே என்ன செய்வாய்..??! வாய் தான் பார்க்க முடியுமுன்னு நினைச்சிட்டு.. உடன எல்லாத்தையும் பிரின்ட் பண்ணி வைச்சும் கொண்டன். இப்படியா... சில்லெடுப்புக்கள் பலதோடு நாள் கழிய.. போற நாளும் வந்திச்சு. வழமையா எயார் போட்டில ராப் பண்ணி தெரிஞ்ச ஒருத்தரை எயார் போட்டில ராப் பண்ணி விடக் கேட்டால்.. அந்தாள் சொல்லிச்சு.. தம்பி உந்த பழைய விலைக்கு எல்லாம் எனி வர முடியாது. இப்ப கொவிட்டோட.. தரிப்பிடக் காசு மட்டுமல்ல.. ஒரு ரோட்டுக்க நுழையவும் காசு வாங்கிறாங்கள்.. புது விலைக்கு ஓமுன்னா வாறனுன்னு. ஏதோ வந்து தொலையப்பான்னு சொல்லி புக் பண்ண.. அந்தாளும் வர.. கட்டின பெட்டிகளையும் ஏத்திக் கிட்டு எயார்போட்டில போய் இறங்கினால்.. அங்க சனம் குறைவில்லாமல் திரியுது. அதில சிலது மாஸ்கை மூக்குக்கு கீழ விட்டிட்டு திரியுது. சிலது மாஸ்கே இல்லாமலும் திரியுது. பார்த்தால் எயார்போட் செக்குரிட்டியே அப்படித்தான் திரியுறான். சரி நாம மனசுக்க வெந்து.. ஊர் திருந்தவா போகுது.. நாம நம்மளைப் பாதுகாத்துக்கிட்டு போவம்.. என்றிட்டு.. எயார்லைன் செக்கப்புக்கு போனால்.. அவன் சொன்னான்.. எல்லாம் சரி.. உம்மட பெட்டியள் நிறை கூடிப் போய் கிடக்குன்னு. ஒரு பெட்டையை திறந்து மறு பெட்டிக்குள் திணிச்சிட்டு வாருமுன்னு. என்னடா கறுமம்.. எப்படி திணிச்சாலும்.. மொத்தம் அவ்வளவும் போகத்தானேடா வேணும்.. என்றிட்டு.. அவனின்ர மனத் திருப்திக்கு பெட்டியை திறந்து.. திணிக்க இப்ப இரண்டு பெட்டியும் மூட முடியாமல்... முக்க வைச்சிட்டுது. வெளிக்கிட்டு வந்த கோலமெல்லாம் அலங்கோலமாகி.. வியர்வை வழிஞ்சு கலைஞ்சோட.. மீண்டும் போய் அவனிட்ட நின்றால்.. இப்பவும்.. 5 கிலோ கூட. எப்படி வசதி.. காசு கட்டுறியா.. இல்லை குப்பையில போடுறியான்னு கேட்டான் பாவி. குப்பையில போடவா.. இவ்வளவு கஸ்டப்பட்டு தூக்கிட்டு வாறன்.. எவ்வளவோ போட்டு எடுத்துக் கோ.. ஓவர் டைம் செய்து சேத்துக்கிறன் என்று நானே எனக்கு தெம்பூட்டிக் கொண்டு.. காட்டை நீட்டினால்.. அவன் பாவி.. 200 பவுனுக்கு கிட்ட உருவிட்டான். ஊருக்கு சும்மா போய் வாறது இப்ப ஒரு சரித்திரமாப் போச்சு.. மிச்சம்.. தொடரும்..
-
சீனா உருவாக்கிய பாலைவனப் பூமி...நகராகுமா..?!
அமைக்கப்பட்டுள்ள நடைபாதை மற்றும் தொங்கு பாலத்தில் இருந்து.. பாலைவனப் பார்வை.. கொழும்புநகர் மற்றும் அண்டிய கடல்.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
தலைப்பே உள்ளடக்கம் எப்படி அமையப் போகிறது என்று செப்பிவிட்டது. எம்மீதான இன அழிப்புப் போரில் நேரடிப் பங்களிப்பு செய்த உக்ரைன்.. எம் மக்கள் மீது எரிகுண்டு எனும்.. பொஸ்பரஸ் குண்டு வீசியவர்கள்..இன்று தங்கள் மீது பொஸ்பரஸ் குண்டு வீசியதாகச் சொல்லி மேற்கு நாடுகளிடம் பல்வேறு இராணுவ உதவிகளைக் கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். மேற்கு ஊடகங்களும் உக்ரைனின் டொன்பாஸ் (DONBAS) ரஷ்சிய மொழி பேசும் மக்களின் இன அழிப்பை மறைத்தும் குறைத்தும் பேசி வருகின்றன. நாமும் அதற்கு இசைவது போல் பக்கச் சார்புக் கட்டுரைகள் வடித்துக் கொண்டிருக்கிறோம். ஒரு காலத்தில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகள் மீது பொருண்மிய தடையும்.. தொடர் குண்டு வீச்சும் நடத்தி மக்களை வவுனியா இராணுவக் கட்டுப்பாட்டுக்குள் இழுத்த போது இதே மேற்குலக ஊடகங்கள் சிங்கள அரசுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தன. மக்கள் விடுவிப்பு என்றும் புலிகள் மனிதக் கேடயமாக மக்களை பாவிப்பதாகவும் உச்சரித்தன. இன்று ரஷ்சியா அப்படிச் செய்வதாக உக்ரைன் சொல்லும் போது... ரஷ்சியா குண்டு வீசி மக்களை தன் பக்கம் இழுப்பதாக குற்றம் சாட்டுகின்றன. இது மேற்குலகின் இரட்டை வேடத்தனத்திற்கு நல்ல உதாரணமும் கூட. அப்படியான மேற்குலக செய்தி ஆதிக்கங்களின் அடிப்படையில்.. எமது மக்களின் வலியை இழப்பை அழிவை தவறான ஒப்பிடலுக்குள் கொண்டு செல்வது எம் மக்களின் வலியை இழப்பை மலினப்படுத்தும்.. அவர்களின் நீதிக்கான குரலை ஓரங்கட்டுவதுமாகிவிடும். உக்ரைன் - ரஷ்சிய போரின் உள்..வெளி நோக்கம் வேறானது. எமக்கு தெரியாத பலதும் அதற்குள் உண்டு. ஆனால்.. எம் மக்கள் மீது எம் மண்மீதும் திணிக்கப்பட்ட போர் மற்றும் இனவழிப்பை தெளிவாகத் தெரிந்திருந்தும்.. அதனை புலிகளோடு சேர்த்து கேள்விக்குட்படுத்தியவர்கள்.. உக்ரைனுக்கு வெள்ளையடிப்பது ஏனோ..??! எம் மக்களைப் பொறுத்த வரை.. உக்ரைன் மற்றும் ரஷ்சியாவின் தமிழின அழிப்பிலான பங்களிப்பு அமெரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளின் பங்களிப்பில் இருந்தும் சற்றும் குறைந்ததல்ல.
-
சீனா உருவாக்கிய பாலைவனப் பூமி...நகராகுமா..?!
கொழும்பு துறைமுக நகர்.. சீனா கடல்மேல் உருவாக்கிய பாலைவன மணற்திட்டு.. எப்போ நகராகும்.??! இது பாலைவன கடல்மேற் திட்டு நுழைவாயில்.. இது தான் சீனா உருவாக்கிய கொழும்பு துறைமுக நகருக்கான மணற்திட்டும்.. நாட்டப்பட்டுள்ள தென்னை மரங்களும். நுழைவாயிலை அலங்கரிக்கும் கடதாசிப் பூச்செடிகள். பழைய கொழும்பு நகரக் கட்டிடங்கள்.. உருவாக்கப்பட்டுள்ள பாலைவனப் பூமியில் இருந்து.. கொழும்பு துறைமுகம்.. பாலைவனப் பூமியில் இருந்து.. பாலைவனப் பூமியில் இருந்து.. கொழும்பு நகர்.. நவீன கட்டிடங்கள் மற்றும் கடல்நீர் தேக்கம்.. பார்வை. பாலைவனப் பூமியில் இதுவரை நிர்மானிக்கப்பட்டதில் உருப்படியானது இது ஒன்றும் தான்.. கொழும்பு துறைமுக நகர் உலகின் பிரதான நகரங்களை விட விஞ்சும் அளவுக்கு அமையும் ஒப்பீட்டு விளம்பரங்கள் மத்தியில்.. அது இப்படித்தான் அமையும் என்ற ஓவிய விளம்பரம். கண்ணுக்கு கவர்ச்சியாக அமைந்தாலும்.. இதன் பின்னால்.. எழும் வினாக்கள் ஆயிரம்..?! அதில் ஒன்று இது எப்போ முடியும்.. அதற்கான சாத்தியம் என்ன..??! === இப்போ இந்தப் பூமி.. கடும் வெயில் சுடும் இலங்கையின் சகாரா என்றால் மிகையல்ல.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
தொடர்ந்து எழுதுங்கள்... வாசிப்பதும் தீர்மானிப்பதும் வாசகராகட்டும்.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
முள்ளிவாய்க்கால் சிங்கள அரசின் நேரடிப் பங்களிப்போடு.. அமெரிக்கா.. ரஷ்சியா.. ஹிந்தியா.. சீனா.. ஐநா.. உட்பட எல்லாரும் சேர்ந்து நடத்தியது. இனப்படுகொலை தொடர்பான.. எந்த ஆதாரமும் சிக்கக் கூடாது என்பதில் உறுதியாக இருந்து நடத்தினார்கள். அதுவும் உலகில் எந்த ஒரு நாட்டுக்கும் எதிராக போராடாத மக்களை கொன்று குவித்தார்கள். சொந்த மண்ணில் சொந்த வாழும் உரிமையைக் கோரியது ஒன்றே அந்த மக்கள் செய்த குற்றம். அது பயங்கரவாதமாக்கப்பட்டது. ஆனால்.. உக்ரைன் - ரஷ்சிய யுத்தம் அப்படி அன்று. நேட்டோ விரிவாக்கம் ரஷ்சிய எல்லைகளை எட்ட எட்ட ரஷ்சிய மக்கள் உக்ரைனில் படுகொலை செய்யப்படப் பட.. எழுந்த யுத்தம். உக்ரைனில் இரண்டு பகுதி ரஷ்சிய மக்களின் சுதந்திரத்தை அங்கீகரிக்க வக்கில்லாத மேற்குலகம்.. அந்த மக்களையும் சேர்த்து முழு உக்ரைனையும் அழிப்பது தான் இந்த யுத்தத்தின் நோக்கம். அதன் மூலம்.. ரஷ்சியாவை இராணுவ ரீதியில் அச்சுறுத்துவதோடு.. ரஷ்சிய பொருண்மியத்தை பலவீனப்படுத்துவம் நோக்கம். ஆக.. தமக்கான எதிரி சீனா.. என்பதோடு இருக்க விரும்பும் மேற்குலகம்.. ரஷ்சியாவை பலவீனப்படுத்த நடத்தும் ஒரு யுத்தத்தில் ரஷ்சியா தன் இருப்பை தக்க வைக்கும் நடவடிக்கையும்.. தமது உயிர்வாழ்வுக்காக.. உரிமை கேட்டுப் போராடிய தமிழ் மக்களை தமிழர் என்பதற்காகவே கொன்று குவித்ததும் ஒன்றல்ல. முள்ளிவாய்க்கால்.. ஒரு கூட்டு இனப்படுகொலையின்.. ஆதாரமற்று நடத்தப்பட்ட ஒரு இனப்படுகொலையின் அடையாளம். ரஷ்சியாவால் மரியுப் போல் சிதைக்கப்பட்டது போல்.. உக்ரைனால்.. ரஷ்சியர்கள் வாழ்ந்த Donbas பிராந்தியம் நிர்மூலமாக்கப்பட்டுள்ளது. உலகின் ஒரு பெரிந்துரோக இனப்படுகொலைக்கு ஆளான நாமே.. மேற்குலகின் பிரச்சாரங்களை மட்டும் கையில் எடுத்துக் கொண்டு சிந்தனைக்குள் வைச்சுக் கொண்டு மரியுப் போலுக்காக குரல் எழும்பி.. Donbas பிராந்திய அழிவுகளை உக்ரைனின் அரச பயங்கரவாதத்தை மறைப்பது மிகக் கேவலமான செய்லாகும். உண்மையில் ரஷ்சியா பலவீனப்படுவது.. உலக யுத்த சமநிலையில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு.. அமெரிக்க சார்பு சக்திகளின் ஏகாதபத்தியத்துக்கு இன்னும் பல முள்ளிவாய்க்கால்கள் உலகெங்கும் ஆதாரமற்ற படுகொலைகள் மூலம் இலக்காகும் அபாயமே அதிகம்.
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
அச்சா பிள்ளை மோகன் அண்ணா.. நீங்க. உம்மா. 😀😁
-
கருத்துக்களம் : பிரச்சனைகளும் தீர்வுகளும்
இன்றைய யாழ் நிலை உயர்ப்பு செயற்பாட்டின் பின்.. நமது தரநிலை "புதிய கருத்துக் கள உறவு" என்றாகி இருப்பதோடு.. எடிட் (திருத்தம்) செய்யும் வசதியும் காணாமல் போய் விட்டது. தற்போதைய நமது தரநிலை "புதிய உறுப்பினர்கள்" நீங்களும் தரநிலை இறக்கம் கண்டு புதிய உறுப்பினர்கள் நிலைக்கு வந்துட்டீங்க. அதுதான் சில அதிசயங்கள் நிகழ்கின்றன. இதில் இதுவும் ஒன்று. நாற்சந்திக்கும் நம்மள போக விடுறாய்ங்கில்லை. கெட்ட பயபுள்ளன்னைன்னு நினைச்சிட்டாய்ங்களோ என்னமோ..! 🤣
-
சிந்தனைக்கு சில படங்கள்...
மேடையில் கறுப்புச்சட்டை.. நாத்திகம்.. வீட்டினில் சாமிப்படம்.. சாமி பக்தி. மேடை.. அரசியலுக்கு. சாமி அறை... வாழ்க்கைக்கு.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
இவர் வாழ்வது சோமாலியாவோ எதியோப்பியாவோ அல்ல. உலகின் முதல் பெரும் பணக்கார நாடு என்று சொல்லிக் கொள்ளும் அமெரிக்காவில்.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- சிந்தனைக்கு சில படங்கள்...
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.