Everything posted by nedukkalapoovan
-
செப்சிஸும் அம்மாவின் இழப்பும்
நன்றி உறவுகளுக்கு இரங்கலுடன் அன்புடன் கூடிய உங்கள் பின்னூட்டங்களுக்கு.
-
செப்சிஸும் அம்மாவின் இழப்பும்
நன்றி நிழலி. உங்கள் அம்மாவை இயன்றவரை பத்திரமாகக் கவனித்துக் கொள்ளுங்கள். உங்கள் அனைவரினதும் அக்கறைக்கும் ஆறுதலுக்கும் நன்றி.
-
செப்சிஸும் அம்மாவின் இழப்பும்
ஆம்.. அம்மாவும் அப்பாவும் கொழும்பில் வாழ்ந்து பின் யுத்தம் முடித்த பின் ஊருக்கு போக விரும்பி போய் தங்கள் பரம்பரை இடத்தில் வாழ்ந்து வந்தார்கள். அது அவர்களின் சுய விருப்பமும் கூட. பிள்ளைகள் நாம் அதில் தலையீடு செய்யவில்லை. மாறாக அவர்களின் விருப்பத்திற்கு எம்மாலான ஒத்தாசை செய்தோம். அம்மாவுக்கு யாழில் நிலவிய கடும் மழை காலத்தின் பின் skin rash வந்தது. அதற்கு antibiotic cream பாவித்தே இருந்தார்கள். ஆனாலும்.. தன்னை அறியாமலே கையால் சொறிந்திருக்க வாய்ப்புள்ளது. அதன் மூலம் பக்ரீரியா தொற்றுக்கு வாய்ப்புண்டு. சிறிய காயம் ஒன்றே போதும்... sepsis வருவதற்கு. குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள வயோதிப வயதினரில்... இது ஒரு பெரும் பிரச்சனை. என்ன தான் கவனமாக இருந்தாலும். இதில் அம்மா தனக்கான நோய் அறிகுறி தென்பட்டதும்.. அப்பா குடும்ப வைத்தியரை அழைத்து சிகிச்சை வழங்கித்தான் இருந்தார். ஆனால்.. குடும்ப வைத்தியர் ஏதோ காரணத்தால்.. செய்ய வேண்டிய பரிசோதனைகளை செய்யாமல் சாதாரண காய்ச்சல் போல் நிலைமையை கையாண்டது தான்.. பிரச்சனைக்கான தோற்றுவாய். இறுதியில் அம்மாவின் கடைசி 48 மணி நேரம்.. மிகவும் சிக்கலானதாக மாறிவிட்டது. சிறுநீரகங்கள் செயலிழக்க ஆரம்பித்துவிட்டன. குருதி அழுத்தம் குறைவடைந்துவிட்டது. இந்த நிலையில் மீண்டும் குடும்ப வைத்தியர் வந்து பார்த்துவிட்டு இந்த நிலையில் அம்மா கன நாள் தாக்குப் பிடிக்க முடியாது என்று சொன்னது தான் மிகவும்.. கோபத்தை தூண்டியது. ஆனாலும்.. நாங்கள் சோரவில்லை. உடனடியாக குடும்ப நண்பராக உள்ள வைத்தியரின் உதவியோடு.. உடனடியாக.. தனியார் வைத்தியசாலைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு.. தேறிவிடுவார் என்று நம்பிக்கை வளர்ந்திருந்த நிலையில்.. மிதமான இதயத் தாக்குக்கு ( Minor heart attack) உட்பட்டார். இருந்தாலும்.. மீண்டும் வைத்தியர்கள் விடா முயற்சி செய்தார்கள். சுமார் 12 மணி நேரத்துக்குள் இரண்டு இதயத்தாக்கு ஏற்பட்டு.. ஒக்சிசன் அளவு குருதியில் ஆபத்தான அளவுக்கு குறைந்த நிலையில்.. மரணம் சம்பவித்துவிட்டது. அப்போதும் வைத்தியர்கள் கூடவே இருந்துள்ளார்கள். இதில்.. குடும்ப வைத்தியராக இருந்து அம்மாவை பாதுகாத்து வந்தவர்.. இறுதி நேரத்தில் நாட்டில்.. கொரோனா அதுஇதென்று சாட்டுச் சொல்லி.. அம்மாவை சரிவர கவனிக்காமல் விட்டதும்.. காய்ச்சல் வந்தும்.. அவருக்கு உரிய பரிசோதனைகளை செய்யாமல் விட்டதும்..தான்... அம்மாவின் இந்த திடீர் இழப்புக்கு முக்கிய காரணம் எனலாம். இது வழமையாக சோதனையில் பெயில் விட்டால் ஆசிரியர் மேல் பழிபோடுவது போன்ற நிலை அல்ல. ஏனெனில் அம்மா ஒரு high risk patient என்பதை அந்த வைத்தியர் நன்கு அறிந்திருந்தும்.. அவருடைய அலட்சியத்தன்மை ( negligence ) தான் அம்மாவுக்கு ஆபத்தும் ஆகிவிட்டது. அம்மாவின் போதாத காலமும் கூடச் சேர்ந்துவிட்டதோ என்னவோ. ஆனால்.. நிச்சயமாக.. அம்மா மனதளவில்.. இந்தப் பூமியில் இருந்து விடைபெற தயார் இல்லாத நிலையில்... தான் அவர் விடைபெற்றிருக்கிறார். அதுதான் மிகக் கவலையாக அமைந்துவிட்டது. அதனை நினைக்கும் போது வலிதான் அதிகமாகிறது.
-
செப்சிஸும் அம்மாவின் இழப்பும்
உலகம் பூராவும் வயதானவர்களையும் குழந்தைகளையும் தாக்கும் முக்கியமான நோய் தாக்கங்களில் ஒன்றாக செப்சிஸும் (Sepsis) மாறி வருகிறது.. செப்சிஸ் என்பது நுண்ணுயிர் நோய் தொற்றும் அதற்கு எதிரான உடலின் வினைத்திறனாற்றலும்.. மோதிக்கொள்ளும் போது.. குறிப்பாக உடலின் நோய் எதிர்ப்பு தன்மை குறைவடையும் வேளையில்..உடல் பகுதி பகுதியாக செயலிழந்து இறப்பு ஏற்படுகிறது. செப்சிஸ் காரணமாக ஒருவர் சில மணி நேரத்தில் இருந்து சில வாரங்களுக்குள் இறப்பை சந்திக்கலாம். அதிதீவிர சிகிச்சையும் உடலின் நோய் எதிர்ப்பு வலிமையும் இதில் இருந்து மீள உதவலாம். குறிப்பாக பிறந்த குழந்தைகளிலும்.. வயதானவர்களிலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால்.. உடலில் உள்ள சாதாரண பக்ரீரியாக்கள் கூட உடலின் பிறபகுதிகளுக்குள் செல்வதால் கூட இந்த நிலை ஏற்படலாம். குறிப்பாக குடலில் உள்ள பக்ரீரியாக்கள்.. இரத்தத்தை அடைவதால் கூட.. அவை உடலால் அழிக்கப்படாது பல்கிப் பெருகி உடலங்கங்களை பாதித்து உயிரிழப்பை ஏற்படுத்தலாம். குறிப்பாக வயதானவர்களில்.. (60 வயதினருக்கு மேல்) நோய் எதிர்ப்பு சக்தி குன்றியவர்கள்.. நாட்பட்ட நோய் கண்டவர்கள்.. தொடர்ந்து படுக்கையில் இருக்கும் வயதானவர்கள்.. நடமாட்டம்.. உடற்பயிற்சி அற்ற நிலையில் வாழ வேண்டி உள்ள வயதானவர்கள்.. நீரிழிவு நோய் கண்டவர்கள்.. தைரொயிட் உட்பட்ட ஹார்மோன் பிரச்சனை உள்ளவர்கள்.. உடற்தசையிழப்பை கண்டு வரும் நோயாளிகள்.. விற்றமின் டி குறைபாடுள்ளவர்கள்.. போதிய உணவின்மை.. போதிய ஊட்டச்சத்தின்மை.. வைத்தியக் கவனிப்பு சரிவரயின்மை.. போதிய சுகாதார வசதிகள் இன்மை.. தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் வாழுதல்.. போதிய வைத்திய பரிசோதனைகள் இன்மை.. இப்படி பல காரணிகள் தனித்தோ கூட்டாகவோ.. இந்த செப்ஸிஸ் உருவாக வாய்ப்பளிக்கின்றன. செப்சிஸ் தாக்கத்தின் பொதுவான அறிகுறிகளாவன.. 1.காய்ச்சல்/ குளிரும் காய்ச்சலும் 2. உடற்சோர்வு 3.சிறுநீர் உற்பத்தி குறைவு 4.மயக்க நிலை 5. அதிகரித்த இதயத்துடிப்பு 6. வாந்தி மற்றும் பேதி 7. தோலின் நிறம் வெளிர்ப்படைதல் 8. குறை குருதி அழுத்தம் சுவாசத்தொற்று எனில் சளி.. மூச்சு விடுவதில் சிரமம்.. மூச்சடைப்பு இவையும் சேர்ந்து கொள்ளும்.. அம்மாவின் விடயத்தில்.. அவருக்கு தைரொயிட் பிரச்சனை இருந்தது உண்டு. நடமாட்டம் வீட்டுக்குள் மையப்படுத்தி தான் இருந்தது. ஆனால் தொடர் வைத்திய கண்காணிப்பு.. மற்றும் எல்லா அடிப்படை வசதிகளும் கொடுக்கப்பட்டே வந்தன. அப்போ எப்படி செப்ஸிஸ் வந்தது.. எப்படி அதனை வைத்தியர் கண்டுபிடிக்கத் தவறினார்..??! இறப்பதற்கு சில வாரங்களுக்கு முன் தோல் சம்பந்தப்பட்ட சின்னப் பாதிப்பு ஏற்பட்டிருந்தது. அதன் விளைவாக.. காய்ச்சல் ஏற்பட்டிருந்தது. ஆனால்.. இது தொடர்பாக குடும்ப வைத்தியர் வந்து காய்ச்சலுக்கு மருந்து கொடுத்துச் சென்றிருக்கிறார்.. ஆனால்.. குருதி பரிசோதனையோ.. சிறுநீர் பரிசோதனையோ செய்யவில்லை. சில நாட்களின் பின் உடல்நிலை தீவிரமாக பாதிப்பட்ட நிலையில்.. அதி தீவிர சிகிச்சை பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்ட போதும் உயிரைக் காக்க முடியவில்லை. செப்சிஸ் (Sepsis).. செப்சிஸ் தாக்கம்/ அதிர்சி (Septic shock) என்பது.. குறிப்பாக.. சுவாச பாதிப்பை அதிகம் ஏற்படுத்தும்.. அதற்கு அடுத்த படியாக.. சிறுநீரகத்தை பாதிக்கும். அதன் தொடர்ச்சியாக இதயத்தாக்கு ஏற்படும்.. மூளை செயலிழப்பு ஏற்படும். இதில் குருதி நஞ்சாதல்.. என்பது சிறுநீரக பாதிப்பின் விளைவாக ஏற்படுவதோடு.. சிறுநீர் தொற்று.. சிறுநீர் உற்பத்தி அளவு குறைவு என்பன செப்சிஸ் தாக்க விளைவுகளாகின்றன. குறிப்பாக மருந்துகளுக்கு எதிர்ப்புக்காட்டும் பக்ரீரியா வகை நுண்ணங்கள் உடலில் தொற்றாகி பெருகுவதால்.. சரியான பகுப்பாய்வுகள் செய்யப்பட்டால் அன்றி சரியான மருந்துகளை கொடுக்க வைத்தியரால் முடியாது. அந்த வகையில்.. குருதிப் பரிசோதனை மற்றும் Blood culture மற்றும்.. சிறுநீர் பரிசோதனை மற்றும் சிறுநீர் மாதிரியில் இருந்தான Urine culture என்பன செய்யப்படுதல்.. செப்சிஸ் தாக்கத்தினை இலகுவாக ஆரம்பத்தில் கண்டறிந்து கொள்ளலாம். ஆனால்.. இலங்கையில் வைத்தியர்கள்.. Blood culture மற்றும் Urine culture செய்வதை அரிதாகவே காண முடிகிறது. அதிலும் High Risk நோயாளிகளுக்கு கூட இவற்றை பரிந்துரைப்பதில்லை. அம்மா விடயத்தில் அவருக்கு காய்ச்சல் ஏற்பட்ட வேளையில்.. குருதிப் பரிசோதனை.. சிறுநீர் பரிசோதனையுடன் Urine culture மற்றும் Blood culture செய்யப்பட்டு தொற்றுக்கான நோய்க்காரணி கண்டறியப்பட்டு சரியான சிகிச்சை அளிக்கப்பட்டிருப்பின் அவரின் வாழ்நாளை நிச்சயம் அதிகரித்திருக்க முடியும். அதைவிடுத்து.. அதிதீவிர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் சென்ற பின்.. பரிசோதனைகளையும்.. கண்காணிப்பையும் செய்வதால் மட்டும் High Risk நோயாளிகளை பாதுகாக்கலாம் என்பது சரியான வழிமுறையாக தெரியவில்லை. உலகில் எங்கு என்றாலும் செப்சிஸ் மரணங்கள் வயதானவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் நிலையில்.. இந்த அனுபவப் பகிர்வு உங்களுக்கும் உதவலாம்.. என்பதால் பகிர்ந்து கொள்கிறோம். தீவிரமான உடற்தொற்று கண்டால்.. நிச்சயமாக உங்கள் வைத்தியர்.. குருதி.. சிறுநீர் பரிசோதனைகளுக்கு மேலதிகமாக.. Urine culture செய்யச் சொல்லி கோருவது.. தேவை எனின் Blood culture செய்யச் சொல்லிக் கோருவது சரியான நோயாக்கியை கண்டறியவும் சரியான மருந்துகளை கன்டறிந்து.. தெரிவு செய்து வழங்கவும்.. உதவும். இது நோயாளிகளின் சடுதியான தேவையற்ற மரணங்களை கட்டுப்படுத்த உதவும். உசாத்துணை: https://www.ncbi.nlm.nih.gov/pmc/articles/PMC3956061/ (யாழிற்கான சுய ஆக்கம்)
-
சிந்தனைக்கு சில படங்கள்...
இது தென் ஆபிரிக்கப் பகுதியில் வாழும் ஒரு பறவையினம் கட்டிய கூடு.
-
சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
- corona-world-map.JPG
From the album: நுண்ணுயிர் உலகம்
- நுண்ணுயிர் உலகம்
நுண்ணங்கிகள் பற்றிய அறிவூட்டல்- UOJvsUSJ
From the album: முள்ளிவாய்க்காலும் அதன் பின்னும்
No to UoJ, but Yes to USJ nd WYB. Is The UGC of Sri lanka a political party of MR nd GR gang. ??!!- சிந்தனைக்கு சில படங்கள்...
அந்த நாள் ஞாபகம்.. பள்ளி கோடை விடுமுறை காலங்களில்.. ஊர் சிறுவர்கள் எல்லாம் கூடி தென்னமரத்துக்கு கீழ் கூட்டாஞ்சோறு பொங்கிப் படைத்துண்பது. அண்மையில் படித்தேன் ஒரு ஆய்வு நீங்கள் மரங்களோடு தொடுகையில் அடிக்கடி இருந்தால்.. அந்த மரங்களில் கனிகளை.. பூக்களைப் பறித்தால்.. அவை.. நிறைய காய்க்கும் பூக்கும்.. செழிக்கும் என்று. எமது தொடுகை உணர்வுகளை அதிர்வுகளாக தாவரங்கள் புரிந்து கொள்கின்றன என்று. ஏன் ஒலி அதிர்வுகளைக் கூட அவை உணர்கின்றன.- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
கனவு.. நிகழ்வு- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
மக்களை ஏய்க்காத ஏமாற்றாத தமக்கு சாத்தியமானத்தை மக்களுக்காகச் செய்த.. தமிழ் தலைமைகள்.- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
- சிந்தனைக்கு சில படங்கள்...
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.
- சிந்தனைக்கு சில படங்கள்...