Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nedukkalapoovan

  1. ஆழில்லாத விமானம் அல்ல.. தற்கொலை ரோன் படகுத் தாக்குதல்.
  2. ரஷ்சிய பாதுகாப்பு முன்னரங்க நிலைகளிலேயே தகர்ந்து போகும் மேற்குலக டாங்கிகள்...கவச வாகனங்கள் - உக்ரைன் தளபதி ஏமாற்றக் குரல் (பிபிசி) The general in charge of Ukraine's stuttering counter-offensive in the south has said Russian defences are making it difficult for military equipment, including Western tanks and armoured vehicles, to move forward. (BBC)
  3. புலிகள் சொறீலங்கா இராணுவப் பயன்பாட்டில் இருந்த.. மதகுக்கு குண்டு வைச்சால்.. பாலத்தை தகர்த்தால்.. மின்மாற்றிகளை தகர்த்தால்.. பயங்கரவாதம் என்ற பிளேக் ஐயா எங்க போயிட்டார். அதை தானே இப்ப உக்ரைனில நின்று இவை செய்யினம். ரஷ்சியா திருப்பிச் செய்தால்.. ஏன் மேற்குலக ஊடகங்கள்.. ஐயோ அம்மா என்று கத்தி குளறுகின்றன. அதே தாங்கள் ரஷ்சியாவுக்கு செய்தால்.. வெற்றி வெற்றி. என்ன ஒரு மனோநிலை.. மேற்குலகத்திடம்.
  4. உக்ரைனில் மனிதப் புதைகிழியாம் என்றால்.. முன் பக்கத்தில்.. பிரேக்கிங் நியூஸ் போடும் உலக முன்னணி ஊடகங்களுக்கு இது தெரியாமல் இல்லை. கண்டுகொள்ளாமை அல்லது புறக்கணிப்புத் தன்மை. என்ன தான் இவர்களை நோக்கி எழுதினாலும்.. அதை அவர்கள் கவனத்தில் எடுக்கமாட்டார்கள். ஏனெனில்.. அவர்கள் எஜமானர்களுக்காக எழுதுபவர்கள். இந்த விடயத்தை.. ஊரில் இருந்து மக்கள்.. சர்வதேச மனித உரிமை அமைப்புக்கள் மற்றும் நடுநிலையான நாடுகளின் உதவியுடன் ஐநா வரைக்கும் எடுத்துச் செல்வதே கூடிய வினைத்திறனாக.. நீதிக்கான குரலாக இருக்க முடியும்.
  5. போனது எல்லாம் பெரிய பணக்காரர்கள். அது Titanic.. இது Titan. இதற்கு முதல் இந்த இடத்தை எத்தனையோ தரம் போய் பார்த்தெல்லாம் வந்திருக்கினம்.. ஆக இது ஒரு புது இடமல்ல. இது என்னவோ சதியா இருக்குமோ என்ற சந்தேகம் தான் மிஞ்சுது. என்ன இன்னும் சில வருடங்களில் ஹொலிவூட்டுக்கு காசு பார்க்க.. ஒரு கதை ரெடி. அதற்குப் பெயர்..Titan. உக்ரைனில்.. ஹொலிவூட் காட்சிகள் அரங்கேறும் ஸ்ரார் வோர் ரேஞ்சில.. உக்ரைன் அடிக்கும் என்று கனவு கண்ட மேற்குலக ஊடகங்களுக்கும் மைன்ட் செட்டுக்கும்.. ஒரு மாற்றம் அவசியம் தானே.
  6. 2023 இன்று.. இது 2009.... உண்மை முகங்களை.. காலம் வெளிக்காட்டும்.
  7. சிறுக ஓர் தேர் கட்டி ஊர் கூடி இழுக்க ஆசை வைச்சு.. தமிழ் தேசியம் சில்லாய் வைச்சு கருத்துக்கள் எனும் தடம் பதித்து ஆண்டுகள் 25 தானிழுக்க வெள்ளித் தேராய் ஓடுகிறது அதுவே யாழ் களம்..! களத்தின் நாயகனே மோகன் எனும் முதல்வரே தேரோட்டியாய் தாங்கள் என்றும் அமைய வேண்டும்...! விலகி நின்றாலும் நீங்கள் வழிநடத்த வெள்ளித் தேரது பொன்னாக வேண்டும் அதன் காலக் கண்ணாடியில்...! வம்புகள் தும்புகள் வந்தாலும் போனாலும் சம்பவங்கள் நொடி மறந்து கருத்தால் வேறுண்டாலும் தமிழால் இணைந்து நவீனத்துவம் உள்வாங்க தொடரட்டும் யாழ் எனும் வெள்ளித் தேர் இழுப்பு...!! இன்று போல் என்றும் ஊர்கூடி இழுக்கட்டும் பொழுதுகள் இனிதே பயனடைய.. மொழியும் மக்களும் தெளிவடைய...!! ஆக்கம்: நெ.போ (31-03-2023)
  8. Images added to a gallery album owned by nedukkalapoovan in விம்பகம்
    இலங்கை முஸ்லீம் பெண்களின் காலாசாரத் தோற்றம் இதுவே. புர்க்கா.. நிகாப் எல்லாம் வலிந்து திணிக்கப்பட்டவை ஆகும்.
  9. இதே வெள்ளையள் என்றால் கோட் கேசென்று போய் மில்லியன் கணக்கில் வாங்கிக் கொண்டு செற்றில் ஆகிடுவாங்கள். நாம தமிழராச்சே.. விசுவாச மடையர்கள். அடுத்தவனுக்கு உழைத்தே தேய்வது நம்ம ஜீன். வாழ்த்துக்கள் சிறியர். உடம்பு ஒத்துழைத்தால் மட்டும் கூடிய நேரம் வேலை செய்ய ஒத்துக்கொள்ளுங்கள். உடம்பை வருத்தி ஒத்துழைக்கச் செய்ய வேண்டாம்.
  10. இலங்கை: பொருண்மிய நெருக்கடி தொடர்ந்தாலும் மக்கள் மீதான நெருக்கடி குறையும் முதன்மை அரசியலில் பெரிய மாற்றங்கள் நிகழாது. சில தேர்தல்கள் நிகழ வாய்ப்புண்டு. தமிழர்கள் தொடர்ந்தும் தீர்வின்றி ஏமாறுவார்கள். ஹிந்தியா: சீன - ஹிந்திய உறவில் புதிய புடுங்குப்பாடு வரும். தமிழகம்: திமுக வின் திட்டமிடலற்ற ஆட்சியின் விளைவு.. பொருண்மிய சிக்கலை நோக்கி நகரும். ரஷ்சியா - உக்ரைன் மோதல்கள் ஒன்றில் இராணுவ ரீதியாக முடிவுக்கு வரும் அல்லது ராஜதந்திர ரீதியான முடிவு எட்டப்படும். இயற்கை: பூமியின் சூடாதல் விளைவின் தாக்கம் அதிகரிக்கும். சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடைமுறைகள் தீவிரமாகும் நாடுகளில். விண்வெளி: சந்திரனுக்கான பயணங்களில் நாடுகளுக்கிடையே மிகுந்த போட்டி நிகழும். செவ்வாய்க்கான பயணங்கள் தொடரும். விண்வெளி சுற்றுலாவில் புதிய மைல் கல் நிகழ்வு நிகழும். நான்: புதிய இடத்தில் வேலை செய்வேன்.
  11. அளவோடு...கருவாடு கொண்டு வந்தது தான். அதனால் முழிக்கத் தேவையில்லை. இங்கிலாந்து இந்த விடயத்தில் அவுஸி... சுவிஸை விட எவ்வளவோ மேல். ஆனால் கருவாடு வாங்கப் போய் பக்கத்தி பக்கத்தி கடைக்காரர் போட்டி போட்டுக் கொண்டு அடிபிடி படும் அளவுக்கு போகப் பார்த்திட்டுது. அவங்கள விலக்குப் பிடிக்கிறதே பெரியப்பாடாப் போச்சு. ஆனாலும்.. இப்ப எல்லாம் நல்லா சின்னதா வெட்டி.. நல்லா பக்கிங் பண்ணி தாறாய்ங்க. தகவலுக்கு நன்றி.
  12. விளக்கம் எல்லாம் நல்லாத்தான் இருக்கு. சொகுசு பயணிகள் விமானம் ஒன்றில்.. இந்த அடிப்படை பெளதீகமாற்றத்துக்கு தீர்வு தேடாமல் விமானம் வடிவமைக்கப்பட்டிருக்கவாய்ப்பில்லை. ஏனெனில்.. மற்றைய விமானங்களில் இப்படி நிகழ்வில்லை. அதற்கேற்ப அந்த விமானங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏன் இந்தக் குறிப்பிட்ட விமானத்தில் மட்டும்..??!
  13. இன்னும் எழுதனுன்னு விருப்பம் தான். ஆனால் நேரம் கிடைப்பது கடினமாக இருப்பதால்.. சுருக்கியாச்சு. உங்கள்.. எங்கள் அனுபவங்கள் எனிப் போறவைக்கு வழிகாட்டலாக அமைந்தால்.. இன்னும் சிறப்பாக அமையும் அவைட பயணங்கள். ஆனால்.. தொடர்ந்து நாட்டு மற்றும் உலக நிலைமைகளை அவதானித்துப் பறப்பது நல்லம். பட இணைப்புக்கான உங்கள் விளக்கத்துக்கு நன்றி. மூன்றாம் வகை மூலதார தரவேற்றம் ( Third party picture uploading platform) குறித்த நம்பகத்தன்மைகள் குறைஞ்சிட்டுது இப்ப. முன்னைய கால அனுபவங்களில் இருந்து.
  14. வந்த வாகனம்.. ஆட்டோ. வரவேண்டிய வானோ.. காரோ கடைசி நேரத்தில் கழுத்தறுத்துவிட்டதால்.. ஆட்டோ தான் வந்திக்கோனும் என்று நினைச்சுக் கொண்டே... சரி.. எனியும் இதில காத்துக் கொண்டிருக்க ஏலாது.. வந்த ஆட்டோவில என்றாலும்.. போய் வீடு சேருவம் என்றிட்டு.. பெட்டிகளை எல்லாம் ஆட்டோவில் ஏத்த ஆயத்தமாக.. ஆட்டோவில் வந்த உறவு சொல்லிச்சு.. கார் கொஞ்சம் தள்ளி நிப்பாட்டி இருக்குது. புக் பண்ணின வான் வராத படியா.. பிரன்டின்ட காரைத் தான் கூட்டிக்கொண்டு வந்தன். அவருக்கு எயார்போட் றைவ் சரியா வராத படியால்.. கொஞ்சம் வெளிய நிப்பாட்டி இருக்குது. சரி.. ஏதோ வந்திச்சேன்னு ஆட்டோவில் ஏறி.. பின் காரில் ஏறி.. களைச்சு விழுந்தவனை இன்னும் களைக்கப் பண்ணி கூட்டிக்கிட்டே போனாய்ங்க. ஒருவாறு.. கொழும்பை அடைந்ததும்.. ரபிக்கை குறைக்க.. கடற்கரை வீதியால் பயணிக்கும் போது தான்..கொஞ்சம் வெளில விடுப்புப் பார்க்கும் எண்ணோட்டமே வந்தது. அப்ப கே எவ் சி தான் முதல்ல கண்ணில் பட்டிச்சு. உடன அதில நிறுத்தி.. சாப்பிடுவம் என்றால்.. அந்த ரபிக்குக்குள்ள போய் பார்க்கிங் தேடுவது பெரும்பாடாகி விட்டது. கே எவ் சி யில்.. விலைப்பட்டியலில் பெரிய மாற்றமிருக்கேல்ல. ஆனால் அளவு சிறிதாகி இருக்குது. அதே தான் பின் நாட்டில் எல்லா இடமும் என்பதையும் காண முடிஞ்சுது. கிலோ கணக்கிற்கு இருந்த விலை எல்லாம்.. இப்ப 100 கிராம்.. 250 கிராம் என்றிருக்குது. ஒரு மாம்பழம்.. 250 ரூபா போகுது. ஆனால் மஞ்சள் தொடங்கி எல்லாம் கிடைக்குது. பெட்டிக்கடையிலும் மஞ்சள் இருக்குது. அங்கர் பால் மாவுக்கும் காஸூக்கும் தான் அப்ப தட்டுப்பாடு. அதிலும்.. காஸ் வரத் தொடங்கி இருந்தது. வர்த்தக செல்வாக்குள்ளவை உள்ளால எல்லாம் பெற்றுக் கொள்ளினம். இல்லாத சனம் கியூவில நின்று ஏமாறுவதும் போவதும் வருவதுமா அவஸ்தைப் படுகுது. எங்கட நல்ல காலம் உயர்தரப் பரீட்சை நெருங்கிக் கொண்டிருந்ததால்.. மின்வெட்டு அதிகம் நேரம் இருக்கவில்லை. ஆனால்.. நுளம்புத் தொல்லை மட்டும் மிக அதிகமாக இருந்திச்சு. மற்றும்படி பயணம்.. சுமூகமாகவே அமைஞ்சுது. முற்றும்.
  15. காத்திருப்பு குறிப்பிட்ட நேரத்தையும் தாண்டி தொடர்ந்து கொண்டிருந்தது.. காரணம் ஏற்ற வர வேண்டிய வாடகை வாகனங்கள் எல்லாம்.. கொழும்பு நகரின் ரபிக் நேரத்தை காட்டி.. முன் கூட்டிய பதிவுகளை (புக்கிங்கை) கான்சல் பண்ணிக் கொண்டிருந்தமையால்.. ஏற்ற வர வேண்டியவர் குறித்த நேரத்துக்கு வரவேயில்லை. இந்த நேர இடைவெளியில்.. நான் காத்திருந்த இடத்துக்கு முன்னால் ஒரு இராணுவ ஆள்.. மோப்ப நாயோடு இருந்தார். அந்த நாய் நம்மையும் நம்ம பெட்டிகளையும் கவனமாகப் பார்த்துக் கொள்வதும்.. பின் சலிப்புத் தட்டி.. சுருண்டு படுப்பதுமாய் இருந்தது. ஆனால் எனக்குள்ளோ.. ஒரு வித பயம். ஏன்னா.. நம்ம பெட்டிக்குள்.. நம்ம சொந்தம் ஒன்று அண்மையில் தனது பாதுகாப்புக்கென்று வாங்கின german shepherd நாய்க்குட்டிக்குரிய சாப்பாடுகளும் இருந்தன. ஆனால்.. அந்த மோப்ப நாய்க்கு pedigree போட்டு வளர்த்திருப்பாய்ங்களோ தெரியவில்லை.. அது என்னையும் பெட்டிகளையும் பாத்து முறாய்ப்பதோடு நின்று விட்டது. குரைக்கவோ.. கொட்டாவி விடவோ இல்லை. அதற்காக.. மனதுக்குள் தங்கியூ உஞ்சு.. என்று சொல்லிக் கொண்டே காத்திருந்தேன். காத்திருப்பு நேரம் நீடிக்க நீடிக்க.. அருகில் காவலுக்கு நின்ற இராணுவ ஆளின் பார்வையில் மாற்றம் வரத் தொடங்கியது. ஒரு கட்டத்தில்.. ஆள்.. அருகே வந்து.. சிங்களத்தில்.. நீங்கள்.. ஓகேயா.. போக வாகனம் ஏதும் பிடிச்சு தாறதோ என்று கேட்டார். நான் அதற்கு.. கொஞ்சமும் பதட்டப்படாமல்.. உடனே பதில் அளித்தேன்.. வாகனம் வந்து கொண்டிருக்குது.. கேட்டதுக்கு நன்றி என்று. அந்த இராணுவ ஆளும்.. அதற்கு மேல் பேசாமல்.. அங்கிருந்து அகன்று சென்றுவிட்டார். இது வழமையான இராணுவ ஆக்களின் கெடுபிடி அணுகுமுறைக்கு முற்றிலும் மாறாகத் தோன்றியது. ஒருவேளை நாட்டுக்குள் வருபவர்களை எந்த தொந்தரவும் செய்யாமல்.. உள்ள அனுமதிக்கும் படி பணிப்புரை வழங்கப்பட்டிருக்குமோ என்னமோ என்று நினைக்கத் தோன்றியது. இந்தப் பக்குவமான நடத்தைக்குரிய பணிப்புரைக்கு.. நாட்டின் தற்போதைய பொருண்மிய நிலையும் ஒரு காரணமாக இருக்கலாமோ என்று எண்ணத்தோற்றியது. ஆனாலும்.. எங்களை எல்லாம் வெளிநாட்டவர்கள் என்று அடையாளம் காணும் பார்வை அங்கு குறைவு. ஏனெனில்.. நம்ம தோற்றம் கலர் அப்படி. இதற்கு நல்ல உதாரணம்.. அதுவும் இந்தப் பயணத்திலேயே நிகழ்ந்தது. குறித்த எயார் பஸ் விமானம்.. இலங்கையில் தரையிறங்க முதல்.. விமானப் பணிப்பெண் (தெற்காசியப் பெண்) வெளிநாட்டவர்கள் நிரப்ப வேண்டிய.. இலங்கை குடிவரவு குடியகழ்வு பத்திரம் ஒன்றை வெள்ளைத் தோல் பயணிகளுக்கு பார்த்துப் பார்த்து வழங்கிக் கொண்டிருந்தார். நானும் தான் அமர்ந்திருந்தேன். நம்மிடம் ஒரு கேள்வியும் கேட்காமல்.. அந்தப் பத்திரத்தையும் தராமல் கடந்து செல்ல முற்பட்ட வேளை.. நானே வலிந்து கேட்டேன்.. ஏன் அந்த பத்திரத்தை எனக்கு தர வேண்டுமா என்று கேட்கவில்லை என்று. அதற்கு அவர் சொன்னார்.. நீங்கள் சிறீலங்கன் என்று நினைத்தேன் என்று. அவருக்குச் சொன்னேன்.. அது தவறு.. நீங்கள் கேட்டிருக்கனும்.. ஏன்னா நான் சிறீலங்கன் இல்லை. எனக்கும் அந்தப் பத்திரம் தேவை என்று. அதற்கு அந்த பணிப்பெண் மன்னிப்கோரிக் கொண்டே.. பத்திரத்தை தந்துவிட்டு நகர்ந்து சென்றார். ஒரு சில மணி நேரக் காத்திருப்பின் பின்.. ஏற்ற வேண்டிய வாகனம் வந்தது. ஆனாலும் வாகனத்தைக் கண்டதும் ஒரு வித அதிர்ச்சியில் உறைந்தேன்.. அதிர்ச்சிக்குரிய காரணத்தோடு தொடரும்..
  16. ஆம்.. அந்தச் சந்தில் தான் கோவிட்-19 தாண்டி நாட்டுக்குள் செல்லவும் நடமாடவும் அனுமதிக்கும் பத்திரம் வழங்கப்படும். அதை வழங்க மூடிய கூட்டுக்குள் ஒருவர் எல்லா சுகாதார நடைமுறைகளையும் பின்பற்றிக் கொண்டு.. குந்தி இருந்தார். அவரிடம்.. நான் ஏற்கனவே பெற்றிருந்த லொக்கேட்டர் கியு ஆர் கோட் டை காட்டி.. அதன் பின் தரவுகள் சரிபார்க்கப்பட்டு.. ஒரு அனுமதித் துண்டு சுகாதார அமைச்சின் இலச்சனை பொறித்து தரப்பட்டிச்சு. அதுதான் கோவிட்டுக்குள் நாட்டுக்குள் சென்று வர அனுமதிக்கும் பத்திரம். அது இன்றேல்.. நாட்டுக்குள் நுழைய அனுமதியில்லை. ஒருவாறு உந்தச் செக்கிங் எல்லாம் முடிச்சு வெளில வந்தால்.. வழமையான நெருக்குவாரமோ.. தொந்தரவோ டியுடிபிறில இல்லை. வாங்க வந்து வாங்குங்க.. என்று ஆக்களுக்கு பின்னால் துரத்துவது முற்றாக இல்லாமல் போயிருப்பது கண்டு வியந்தேன். எல்லாரும் ஒழுங்காக மாஸ்க் அணிந்து அவரவர் வணிக நிலையங்களுக்கு முன் நிற்கிறார்கள் அவ்வளவும் தான். லண்டனில் கூட இந்த ஒழுங்கை காண முடியாது. சிலது மாஸ்க் போடும்.. ஆனால் மூக்கு கீழ். அப்படி எல்லாம்.. அங்கு இருக்கவில்லை. அப்படியே நடந்து.. லக்கேஷ் பொறுக்க வேண்டிய இடத்துக்கு வந்தால்.. போட்டர்கள் தொந்தரவு வெகுவாக குறைச்சிருந்திச்சு. ஆனாலும்..... போட்டர் ஒருத்தன் வந்து.. உதவி தேவையா என்று கேட்டதோடு.. பதிலை எதிர்பார்க்காமலேயே.... ரொலியை தள்ளிக்கிட்டு வந்து நின்றான். கெல்ப் பண்ணுவதாக சொல்லிக்கிட்டே நின்றான். வேண்டாம் வேண்டாம் என்று சொல்லவும் செய்தான். பிறகு திடீர் என்று உங்கள் லக்கேஷின் நிறமென்ன.. அதில என்ன அடையாளம் போட்டிருக்கு.. என்ன அட்ரஸ் எழுதி இருக்கென்று விபரம் கேட்டான். நமக்கு இவங்கட தில்லாலங்கடி ஏலவே தெரிந்திருந்தால்.. சொல்லவேயில்லை. பிறகு எல்லாத்தையும் விட்டிட்டு லக்கேஷ் தள்ளி வரும் பெலிட்டின் உள்பக்கம் போனான்... வந்தான். ஆனால்.. நான் எதுவுமே அவனுக்கு சொல்லாததால்.. அவனின் தில்லாலங்கடி வேலை செய்யவில்லை. நைசாக கழன்று நகர்ந்து சென்று விட்டான். போக முன் பவுன்ஸ் பவுன்ஸ் என்று கெஞ்சிவிட்டுத்தான் சென்றான். எப்படியோ.. விமானங்கள் வரும் நேரம்.. வகை.. நாடுகளை வைச்சு.. இவர் இங்கிருந்து தான் வருகிறார் என்று மோப்பம் பிடிப்பதில்.. போட்டர்கள் செமக் கில்லாடிகளாகவே இருக்கிறாய்ங்க. ஒருவாறு விமான நிலையத்துக்குள் இருந்து வெளிய வந்து பிக் அப் பொயின்றில் நின்றால்.. அங்கு விமானப்படை ஆட்கள் ஒரு சிலர் நின்றாங்கள். அவங்கள்.. இப்ப எல்லாம்.. ரி56 வைத்திருப்பதில்லை. காமாண்டோ.. வகை சிறிய துப்பாக்கிகள் தான் வைச்சிருக்காங்கள். உடைகளும் அமெரிக்க துருப்புக்களின் தரத்துக்கு உயர்ந்திருக்குது. உதுக்கெல்லாம் காசிருக்குது.. என்று நினைச்சுக் கொண்டே அவங்களை கடந்து சென்று காத்திருந்தால்.. காத்திருப்பின் போது நிகழ்ந்தது என்ன..... தொடரும்..
  17. நன்றி தமிழ்சிறி அண்ணா. 😃 புதினம்... விடுப்பு இதெல்லாம் சகஜம்.. தானே தங்கச்சி. அதுவும் ஒரு வகை மன மகிழ்ச்சி தானே. 😀
  18. பெரிசா கவர்ச்சியா இல்லை. இப்போதைக்கு.. நட்டு வைச்ச தென்னை மரம் தான்.. சைனா சாமானக் கிடக்கு. ஆனால் நட்டு வைச்சுள்ள விளம்பரங்கள் மட்டும் சொல்லி வேலையில்ல. வேற லெவல். லண்டன்.. பாரிஸ்.. சிட்னி.. நியுயோர்க்..டுபாய்.. எல்லாம் தோத்திடுமாம்.😆

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.