Jump to content

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    32973
  • Joined

  • Days Won

    268

Everything posted by nedukkalapoovan

  1. காப்பிலி தமிழில் உரையாடுபவர்கள் பாவிப்பத்தால்.. அதன் தாக்கம் சரியாக அந்த நிறத்தவரால் விளங்கிக் கொள்ளப்படவில்லை. ஆனால்.. நீக்குரோ என்பது எப்படி இனரீதியான அவமானச் சொல்லாகப் பார்க்கப்படுகிறதோ.. அதே காப்பிலிக்கும் இருக்கிறது எனலாம்.
  2. நன்னி நீங்கள் பல நல்ல ஆக்களை படைத்து வரும் ஒருவர். ஆனாலும்... பல புகைப்பட ஆதாரங்களுக்கு சொறீலங்கா.. இராணுவ இணையத்தளத்தில் முன்னர் வெளிவந்த படங்களை இணைப்பதை அவதானித்திருக்கிறேன். சொறீலங்கா.. இராணுவத்தின் பிரதான கணனி எந்திரவியல் பிரிவு.. மொரட்டுவ பல்கலைக்கழகத்துடன் இணைந்து இப்பவும் செயற்படுகிறது. அவர்கள் எவ்வளவு திட்டமிட்டு கருமங்களை ஆற்றினம் என்பதை அறிந்தால்.. இதெல்லாம்.. எவ்வளவு நம்பகத்தன்மை வாய்ந்தவை என்பதற்கு இலகுவாக விடை கிடைத்துவிடும். எங்களைப் பொறுத்தவரை.. தமிழீழ விடுதலைக்கான அஞ்சலோட்டத்தில்.. புலிகளின் ஓட்டம் முடிவடைந்துவிட்டது. அவர்களை எனியும் தொந்தரவு செய்யாதிருப்போம். இறுதி இலக்கை நோக்கி அந்த அஞ்சலோட்டம் கொண்டு செல்லப்பட ஏதுவா... புலிகள் விதைத்துச் சென்ற சில தத்துவார்த்தக் கோட்பாடுகள்... குறிப்பாக தமிழ் தேசிய உணர்வு.. தமிழீழ அடையாளம்.. தமிழீழ தேசியக் கொடி.. மாவீரர்கள் சார்ந்த அடையாளங்கள் நினைவுகள் என்பன திட்டமிட்டு அழிக்கப்படுவதும்.. மறைக்கப்படுவதும்... தமிழரின் ஒற்றுமையை குலைக்கும்.. திட்டமிட்ட.. சாதி மத மொழி திணிப்புக்கள்.. புலிகள் மீது தொடர்ந்து சேறடிப்பது.. உட்பட எல்லாத்தையும் தமிழ் மக்களுக்கு எதிரான எதிரிக்கு சார்ப்பான செயற்பாடுகளாகவே பார்க்க வேண்டி இருக்குது. இதுவும் அதே வகை தான்.
  3. இது எப்படி.. செய்தி ஆகும்...???! புலிக்கிலேசம் அடங்குதோ... இல்லையோ.. தமிழ் தேசிய உணர்வை சாகடிக்கனும்.. தமிழர்கள் எனி தலை நிமிரவோ.. உரிமை கோரவோ கூடாது என்பதற்கு இப்படி திடீர் திடீர் என்று பழைய காணொளிகளைப் போட்டு புதுச் செய்தியாக்குவது போல் படம் காட்டுவதும் அதற்குள் சிலர் தங்களை தாங்களே ஆசுவாசப்படுத்த கருத்திடுவதும் என்று யாழ் களம்... அதன் பயணப் பாதையில் இருந்து சிலரால் திட்டுமிட்டு.. எதிரிக்களுக்கு சாதகமான திசைக்கு நகர்த்தப்படுவதாகவே தெரிகிறது. நாங்கள் அறிந்த வரைக்கும் தலைவர்.. பிள்ளைகள்.. மனைவி.. புலிகள் பெயரைச் சொல்லி யாரும் காசு சேர்ப்பதாகத் தெரியவில்லை. ஒரு சில குறுகிய வட்டத்துக்குள் சில ஏமாளிகளைப் பயன்படுத்தி சிங்கள இராணுவ அரச புலனாய்வுக்கூலிகள்.. பிரச்சார நோக்கிலும்.. புலம்பெயர் தமிழர்களிடம் பணம் பறிக்கும் நோக்கிலும் இயங்குகிறார்கள். அவர்களுக்கு உடந்தையாக இப்படியான தலைப்புக்கள் உருவாகுதோ என்பது சந்தேகிக்கப்பட முடிகிறது. ஏனெனில்.. இந்த ஆதாரமற்ற விடயங்களை.. ஊர்ப்புதினம் பகுதியில் செய்தியாக பிரசுரிக்க.. யாழ் கள விதிகள் எப்படி வளைந்து கொடுக்கின்றன.. ஏன்.. எப்படி..???!
  4. “கன்னியர் மடங்களில் கண்கலங்கும் சகோதரிகளின் குரல்கள் என் காதுகளை எட்டுகின்றன. ஆண் மேலாதிக்கத்திற்கும், பாதிரியார்களின் ஏகாதிபத்தியத்திற்கும் அடிமையாக இருக்கின்ற சகோதரிகளின் வாழ்க்கைக்கு வழிகாட்டியாக என்னுடைய எழுத்து அமையும் என நம்புகிறேன்” என்கிற கத்தோலிக்க சகோதரி லூசி களப்புராவின், “கர்த்தரின் நாமத்தில்” நூலினை வாசித்து முடித்தேன். கத்தோலிக்க கிறித்தவர்களைப் பொறுத்தளவில், சேவை செய்வதற்கு ஒரேயொரு வழி பெண்கள் கன்னியராகவும், ஆண்கள் பாதிரியராகவும் ஆக்குவதுதான். அப்படித்தான் ஒரு கதையை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். மேலும், பொருளாதார பாரத்தைத் தாங்க இயலாத பெற்றோர்கள், ‘இறைவா, என்னுடைய குழந்தையை உமக்கு காணிக்கையாக்கி விடுகிறேன்’ என்பார்கள். அந்த குழந்தையின் விருப்பத்தை அறியாமலேயே சபைக்கு அனுப்பி விடுவார்கள். இங்கு சற்று வித்தியாசமாக, பதினைந்து வயதில், முழுநேர சமூகப்பணி செய்வதற்காக கன்னியர் மடத்தில் சேர்வதுதான் நல்லதென லூசி களப்புரா முடிவெடுக்கிறார். பதினைந்து வயது என்பது மங்கைப் பருவம். பூப்பெய்து தாவணி போடும் பருவம். அந்த வயதில் அப்படியெல்லாம் ஆசை ஏற்படுவதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை. அது, முடிவெடுக்க அறியாத பருவம். அந்த பருவத்தில்தான் லூசி களப்புரா துறவற வாழ்க்கையை தேர்வு செய்கிறார். அந்த வயதில்தான் மங்கைகளை கொத்திக்கொண்டு செல்வதற்கு கழுகுகள் வட்டமிடும். இதைக்குறித்து லூசி களப்புரா, “இது, ‘தெய்வத்தின் அழைப்பு’ என்றுகூட சொல்வார்கள்”. மேலும், “தவறாக வழிநடத்தி, திசை திருப்பி குருத்துவத்திற்கும், மடங்களுக்கும் ஆட்களை சேர்ப்பது என்ற இலட்சியம் நிறைவேற்றப்படுகிறது” என்கிறார். அது, உண்மைதான். கன்னியர் இல்லத்தில் அடியெடுத்து வைத்த லூசி களப்புரா சொல்கிறார்: “என் மனம் விரும்பாத சில சம்பவங்கள் மடத்தில் நடந்தது. அங்கு கன்னியர்களிடம் ஒற்றுமை இல்லை. ஒருவருக்கொருவர் குறை கூறுகிறார்கள். இதுவெல்லாம் என் மனதில் ஒரு நெருடலை ஏற்படுத்தியது”. கன்னியர் மடத்தில், சாதிவெறி, மொழிவெறி, பதவிவெறி, குறைகூறுதல், போட்டி மற்றும் பொறாமை ஆகியவை இல்லாத ஒரு சபையை உலகில் காண முடியாது. கன்னியர்களுக்கு மூன்றுவருட பயிற்சி காலங்கள் உண்டு. “கன்னியர் ஆகுவதற்கு கட்டணமாக 20,000/- ரூபாயை அப்பா மடத்திற்கு செலுத்தினார்” என்கிறார் லூசி களப்புரா. கன்னியர் இல்லத்தில் சேரும்போதும், கன்னியர் ஆகும்போதும், வசதியான பெற்றோரிடம் அன்பளிப்பு என்கிற பெயரில் பணம் வசூலிக்கிறார்கள். அவர் மேலும், “பெண்ணிற்கு வரதட்சணையாக தர வேண்டிய தொகையை சந்நியாசத்திற்குரிய கட்டணமாக வாங்கி விடுவார்கள்” என்கிற குற்றச்சாட்டை முன்வைக்கிறார். இந்த குற்றச்சாட்டு ஏற்கத் தகுந்தது அல்ல. எவ்வளவோ ஏழை குடும்பத்தை சார்ந்த பெண்களும் கன்னியராக உள்ளனர். அவர்களில் யாரும் அப்படி பணம் கொடுப்பதில்லை. வசதியானவர்களிடம் அன்பளிப்பு பெறப்படுவதுண்டு. அதனை, அடியேன் பார்த்திருக்கிறேன். மூன்றுவருட படிப்பிற்குப் பின்பாக கற்பு, ஏழ்மை மற்றும் கீழ்படிதல் ஆகிய உறுதிமொழிகளை கன்னியர்கள் எடுத்துக் கொள்கிறார்கள். அன்றுதான் கன்னியருக்கான உடையை அவர்கள் அணிந்து கொள்கிறார்கள். இந்த சடங்கு பல இடங்களில் ஏழ்மை என்கிற உறுதிமொழியைத் தாண்டி பெரும் பணச்செலவில் நிகழ்வுகளை நடத்துகிறார்கள். அதைத்தான் லூசி களப்புரா, “பொதுவாக, இந்த சடங்குகளை ஆர்ப்பாட்டமாக நடத்துவதில் எனக்கு உடன்பாடில்லை” என்கிறார். மடங்களைப் பொறுத்தளவில் பல்வேறு நெறிமுறைகள் புதிதுபுதிதாக அறிமுகப்படுத்தப்படும். அது, மடத்தின் மேலதிகாரியைப் பொருத்தது. பாதிரியாரும், ஆயரும் அதிகாரம் செலுத்துவதும் உண்டும். இதுகுறித்து, “கர்த்தரின் நாமத்தில்”, பிற மடங்களிலிருந்து வரும் கன்னியர்களிடம் பேசக்கூடாது. வங்கிக்கணக்கு வைத்துக் கொள்ளக்கூடாது. கன்னியர்கள் பெறும் அரசு சம்பளத்தை மடத்திற்கு கொடுத்துவிட வேண்டும். ஏழ்மையை ஆடையாக தரிக்க ஓர் அடிமைபோல் வேலை செய்திட வேண்டும். மாதவிடாய் காலத்தில் வழங்கப்படும் நாப்கின்கள் மோசம் என்றோ அல்லது உணவு சரியில்லை என்றோ குறை சொல்லக்கூடாது. மேலதிகாரியின் வார்த்தைகளை மீறக்கூடாது. மீறினால் தண்டிக்கப்படுவார்கள். இடமாற்றம் செய்யப்படுவார்கள். மன்னிப்புக் கடிதம் எழுதிக் கொடுக்க வேண்டும். இல்லையெனில் சபையை விட்டு நீக்கப்படுவார்கள். இப்படிப்பட்ட மேல் பதவிகள் நேர்மையாக, வெளிப்படையாக, சனநாயக முறையில் ஒருபோதும் நடப்பதில்லை என்கிறார். இதுவும் உண்மைதான். ஆண்டிற்கு ஒருமுறை கன்னியர்கள் அவர்களுடைய பெற்றோர் வீட்டிற்கு சென்று வரலாம். ஆனால், இரவில் அருகிலுள்ள கன்னியர் மடத்தில் சென்று தங்க வேண்டும். அதாவது, அவர்கள் பத்தினிகள் என்பது ஊருக்குத் தெரிய வேண்டுமாம். ஆனால், கன்னியர்கள் யாரும் ஒருபோதும் பத்தினியாக இருந்ததில்லை. லூசி களப்புரா சொல்கிறார், ஒரு கன்னியர் என்னை அவருடன் தூங்க வற்புறுத்தினார். “விருப்பம் இல்லாமல்தான் நான் அங்கே படுத்தேன். அவள் என்னை தழுவினாள். உடலில் முத்தமிட்டாள். வாழ்க்கையில் முதன்முதலாக 24 வயதில் பாலியல் தொடர்பான இந்த அனுபவம் என்மேல் திணிக்கப்பட்டது”. இந்த கன்னியர்களின் ஒருபால் உறவை, “ஆமென்” நூல் அதிகமாகவே பேசுகிறது. கன்னியர் பயிற்சிப் படிப்பிற்குப் பின்பாக, ஆசிரியராக அல்லது செவிலியராக என ஏதாவது ஒரு படிப்பை அவர்கள் தொடருகிறார்கள். பூந்தியில், ஆரம்பப் பள்ளிக்கூட ஆசிரியராக லூசி களப்புரா இருந்திருக்கிறார். அதுகுறித்து, “பள்ளி நிர்வாகியாக கோவாவை சேர்ந்த பாதிரியார் இருந்தார். அவருக்கு எங்கள் மடத்திலிருந்து சாப்பாடு வழங்குவார்கள். மடம், பள்ளிக்கூடம், அவரது அறை எல்லாம் அருகருகில் இருந்தது. எனினும், அவர் கன்னியர்களாகிய எங்களுடனே தங்க விரும்பினார். ஒருமுறை அவரது அறைக்கு என்னை அழைத்தபோது நான் மறுத்தேன். இதனால், அவர் கோபமானார். பின்னர், பொது இடத்தில் என்னை அவமதிக்கத் துவங்கினார். அவரது அறைக்குச் சென்றுவந்த கன்னியர்கள் அவரது அன்புக்குள்ளானார்கள் என்பது வேறு விசயம்” என்கிறார் லூசி களப்புரா. இந்த நூலில் பல செய்திகள் மறைக்கப்பட்டுள்ளன என்பதனை நூலினை வாசிக்கும்போது அறிந்துகொள்ள முடிகிறது. வெளிப்படையாக யாருடைய பெயரையும் லூசி களப்புரா குறிப்பிடவில்லை. “பாதிரியார்களிடமிருந்து எனக்கு நான்கு முறை பாலியல் அத்துமீறல் நடந்தது” என்கிறார். சிலவற்றை பட்டும் படாமலும் சொல்லிவிட்டுப் போகிறார். கன்னியர்கள் சபையைவிட்டு வெளியே வந்தால், அவளுக்கு ‘இருப்பு’ கொள்ளவில்லை. அதனால்தான் வெளியே வந்துவிட்டாள் என கோள் சொல்பவர்கள் உண்டு. வெளியே சென்றால் பெற்றோர் சிரமப்படுவார்களே என்று நினைக்கிற கன்னியர்களும் உண்டு. பாலியல் இன்பத்தை அனுபவித்து, அதனை ஒரு பொருட்டாக கருதாத கன்னியர்களும் உண்டு. இருப்பினும், விவிலிய வசனங்கள் அவர்களுடைய மனங்களில் அடிக்கடி கீறலை உருவாக்கிச் சென்றுவிடுகிறது. பெண் குழந்தைகளை கன்னியர்களாக அனுப்புவதை பெற்றோர்கள் மறுபரிசீலனை செய்ய வேண்டும். இருப்பினும், கடவுள் முன்பாக ஏழ்மையையும் கீழ்ப்படிதலையும் ஆடையை தரித்த லூசி களப்புரா, மேலதிகாரிக்கு கீழ்படியாமல் சொந்தமாக வாகனம் வாங்கினேன் என சொல்வது, அவர் எடுத்துக்கொண்ட கொள்கைக்கு முரணாக சபை பார்க்கிறது. கன்னியர்கள், சபைக்கு அடிமையாக வாழ வேண்டுமென எதிர்பார்க்கப்படுகிறார்கள். இப்பொழுது இன்னொரு கேள்வி எழும். ஏழ்மையையும் கீழ்ப்படிதலையும் ஆடையாக தரித்துக் கொண்ட கத்தோலிக்கப் பாதிரியார்கள் வாகனம் வைத்திருக்கிறார்களே. அது எப்படி சாத்தியமாகிறது? ஏழ்மையும் கீழ்ப்படிதலும் செத்துப் போய்விட்டதா? பாப்பரசர் புல்லட் வாகனத்தில் செல்கிறாரே? அவர் ஏழ்மையை கொன்றுவிட்டாரா? ஆண் பெண் சமத்துவ உரிமை என்னாகிறது? ஆயர் பிராங்கோவுக்கு எதிராக போராட்டத்தில் லூசி களப்புரா கலந்து கொண்டது பாராட்டப்பட வேண்டியது. பாதிக்கப்பட்ட கன்னியருக்கு ஆதரவாக அவர் செயல்பட்டது, சபைக்கு அழகல்ல என்பதால் சபையை விட்டு லூசி களப்புரா வெளியேற்றிவிட்டார். பாதிக்கப்பட்ட கன்னியரையும் வெளியேற்றிவிட்டார்கள். கன்னியர் பாலியல் வன்முறைக்கு ஆளானால், அவளை இயேசு விவகாரத்து செய்ய வேண்டும் என்பது எவ்வளவு கீழ்த்தரமான செயல். இருப்பினும், இப்படிப்பட்ட போராட்ட குணமுள்ள கன்னியர்கள் சமூக மாற்றத்திற்கும், சபை மாற்றத்திற்கும் தேவையாக இருக்கிறார்கள் என்பதனை கிறித்தவர்கள் உணர வேண்டும். “கன்னியர்கள் அனைவரும் பாதிரியார்களின் சுயநலத்திற்கு அடிமையாகி, ஆத்மாவை இழக்கிறார்கள்” என்கிற லூசியின் வாதம் ஏற்புடையதே. அதனால்தான் அவர், “சபலப் பாதிரியார்களின் உல்லாச மனதிற்கு பல கன்னியர்கள் ஒத்துழைக்கிறார்கள்” என்கிறார். பாலியல் இன்பம் என்பது மனித உடலுக்கு அத்தியாவசியமான ஒன்றாகும். “இவன், தனிமையில் இருப்பது நல்லதல்ல” என்பதுதான் யகோவா கடவுளின் கட்டளை. தனிமையில் இருக்கிற பாதிரியார்களும் கன்னியர்களும் தவறாக நடந்து கொள்கிறார்கள். இதற்கு மாற்றுதான் என்ன? “பாதிரியார்கள் கைப்படாத யாராவது நம்மிடம் இருக்கிறார்களா?” என்கிற லூசி களப்புராவின் கேள்வி நியாயமானதே. அதற்கு மாற்று என்பது துறவறம் அல்ல; இல்லறம். இல்லறத்தில் இருந்துகொண்டு இறைபணி. சிந்தித்தால், கத்தோலிக்கம் உருப்படும். இல்லையெனில், கடவுளின் பார்வையில் எப்போதும் விபசார குடியாகவே இருக்கும். திருத்தமிழ்த்தேவனார், நாகர்கோவில்.
  5. நீங்கள் வழமை போல்.. சிலரைப் போல்.. முடிவுரையை உங்களுக்கு ஏற்றமாதிரி எழுதிக் கொள்கிறீர்கள். முறிந்த பனைகள்.. படுகொலைக்குரிய ஆக்கமல்ல. ஆனால்.. முறிந்த பனைகள்.. தமிழ் மக்களுக்கான.. நீதிக்கான நடுநிலைத் தேடலும் அல்ல. இது தான் முடிவுரை. ரஜனி திரணகம.. விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவரும் அல்ல. அவரும் தவறுகளை விட்டிருக்கிறார். ஆனால்.. அது படுகொலையால் பதிலளிக்கப்பட வேண்டிய ஒன்றல்ல. தவறுகள் வேறு வழிகளில் உணர்த்தப்பட்டிருக்கலாம். அவரின் படுகொலையை.. நியாயப்படுத்தப்படுவதற்கு முறிந்த பனை முழுக் காரணமாக இருக்க முடியாது. தேசம் இப்போது இயங்குவதில்லை.. போலும். உங்கள் தலை எழுத்துக்கு சிறந்த எழுத்துக்கள் அப்படியானவற்றில் தான் இருக்கும் வழமை போல் தேடிப் பாருங்கள்.. கிடைக்கும்.
  6. ஏன் இவா இன்னும் பிரித்தானிய தூதரின் உதவியையோ பிரித்தானிய வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் உதவியையோ நாடவில்லை..??! அதேபோல்.. பிபிசி போன்ற ஊடகங்கள்.. இவா போன்றவர்களின் நிலையை ஏன் கண்டுகொள்வதும் இல்லை..???!
  7. வடக்குக் கிழக்கில் சிங்களப் படைகளின் பொலிஸாரின் ஆக்கிரமிப்புக் காலத்தில் அவர்களின் ஆதரவோடு சிங்கள அரச அனுசரணையோடு அமைக்கப்பட்ட அனைத்து புத்த ஆலயங்களும் இடித்து அகற்றக்கப்படுவதே.. இதற்கு ஒரே தீர்வு.
  8. தவறுகளை அலசி ஆராய்ந்து நடுநிலையாகச் சொல்லவில்லை.. தவறுகளை அலசி தமது தேவைக்கு ஏற்ப பயன்படுத்திக் கொண்டது தான் முறிந்த பனைகள். முறிந்த பனைகள் முக்கிய பங்காளி (விரிவுரையாளர் கிருஷ்ண....... (அவரின் சுயம் பாதுக்காக்கப்படும் வகையில் முழுப்பெயர் ஒளிக்கப்பட்டிருக்கிறது.) ஒருவரிடம் இது குறித்து பேசிய போது அவரே ஒத்துக்கொண்டது... ரஜனி உட்பட அதில் பங்களித்தோர் விட்ட தவறு... சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் ஊடாக இதன் நியாயம் சோதிக்கப்பட்டிருக்க வேண்டும்.. இந்த நூலை சிலரின் ஆக்கம் போல்.. வெளியிட முதல் சர்வதேச மனித உரிமைகள் அமைப்புகளின் அங்கீகாரத்துக்கு அனுப்பி அதனூடாக வெளியிட்டிருப்பதே.. கூடிய தாக்கமானதாக இருந்திருக்கும் என்பது. ஏனெனில்.. ஹிந்தியப் படைகளின் ஈழத்து மனித உரிமை மீறல்களை முதலில்.. வெளிக்கொண்டர்ந்தது ஜேர்மனி மனித உரிமை அமைப்புக்களும் அதன் ஊடகங்களுமாகும். ரஜனி திரணகமவோ அவர் சார்ந்தவர்களோ அல்ல. ரஜனி இதனை தமக்குள் (தான் சார்ந்த குலாமிடம் மட்டும்) பேசி வெளியிட்டதில்.. உள்நோகமும் தமக்கான சில தரப்புக்களுக்கு வெள்ளையடிப்பதும் நோக்கமாக இருந்துள்ளது. மக்களின் நலனை விட. ராஜனியும் சுய விளம்பரம் தான் தேடினா.. மற்றவங்களும் சுய விளம்பரமும்.. ஆதாயமும் தான் தேடிச்சினம்.. தேடினம். இனம் பற்றிய எந்த அக்கறையும் கருசணையும் உண்மையில் இவர்களிடம் கிடையாது. இருந்திருந்தால்.. இவர்களின் அணுகுமுறைகள் வேறு மாதிரி இருந்திருக்க வேண்டும்.
  9. இல்லாத புலிகள்.. இயங்காத இயக்கங்களின் தவறுகளை அலசி ஆராய்வது.. இல்லாத பொய்களை இட்டு அறிக்கைவிட்டு பதவிகளைப் பெற்றதோடு அடங்கிவிடும்.. யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்.. மனித உரிமை அமைப்புக்கள்.. இவையா... ஈழத்தமிழனத்துக்கான விடிவின் காரணிகள்..???! ஒரு இனத்தை திட்டமிட்டு இன அழிப்புச் செய்யும் சிங்கள பெளத்த விரிவுரையாளர்கள் யாராவது.. மனித உரிமை அதுஇதென்று.. சிங்கள பெளத்த ஆளும் வர்க்கத்தை.. இனப்படுகொலை இராணுவத்தை கண்டித்து ஒரு அறிக்கை விட்டிருக்கிறார்களா..???! சிங்கள.. அரச இயந்திரத்தின் தமிழ் மக்களுக்கு எதிரான.. தவறான செயற்பாடுகளை எந்த சிங்கள மனித உரிமை அமைப்பாவது கண்டிச்சிருக்குதா..??! விமர்ச்சிருக்குதா..????! பெயரளவில்.. சொறீலங்கா.. சனநாயக சோசலிசக் குடியரசு என்று வைச்சுக் கொண்டிருக்கும் ஒரு அரசின் மனித இன விரோதச் செயல்களை தட்டிக்கேட்க வக்கற்றிருக்கும் உள்ளூர் சர்வதேசச் சூழலில்.. நாம் மட்டும் எமது பற் சூத்தைகளை நோண்டிக் கொண்டு.. சுகந்து கொண்டிருப்பதன் நன்மை..?! தமிழின விடிவு...??! சாத்தியமே இல்லை ராஜா. காலத்துக்கு காலம்.. ரஜனிகளும்.. டக்கிளசுகளும்.. சிறிதரன்களும்.. கருணாக்களும்.. பிள்ளையான்களும் தோன்றி.. தங்கள் பிழைப்பையும்.. செல்வாக்கையும் அதிகரிச்சுச் செல்வார்களே அன்றி.. தமிழினத்துக்கு விடிவென்பது.. இதன் மூலம்.. சாத்தியமாகாது.. ஏனெனில்.. இதனை ஒரு உறுதியான தேவையான கருத்துக்களாக உள்வாங்க யாரும் இல்லை. அவரவர் தமக்கு தெரிந்ததை வைச்சு.. ஊதிப் பெருப்பிச்சுட்டு போகினமே தவிர.. தவறு செய்கிற எல்லா தரப்பையும்.. தவறை திருத்தச் சொல்ல.. செய்யாதிருக்கச் சொல்ல.. இவர்கள் எவரும் முனையவில்லை.. முனைவதில்லை. ஏனெனில்.. அது அல்ல இவர்களின் உண்மையான நோக்கம். சுய விளம்பரம்... சுய ஆதாயம்.. தமக்கு நெருக்கமானவர்களை பாதுகாப்பது.. இதுதான் முதன்மை. அது சிங்களவர் ஆயினும் சரி.. தமிழர் ஆயினும் சரி.. சர்வதேசம் ஆயினும் சரி.. ஹிந்தியா ஆகினும் சரி. இதுவே தமிழர்களுக்கு விடிவு கிடைக்காமைக்கு முக்கிய காரணம்.
  10. புலம்பெயர் தமிழ் ஆக்களின் பார்ட்டிக்கு போனால்.. டி ஜே ஒரு பக்கம் கத்தும்.. அதுக்கு மேலால.. தமிழ் சனம் இன்னொரு பக்கம் கத்தும். அப்ப.. மாரடைப்பு வராமல்..???!
  11. இந்த தலைப்புக்குள்ளும் சீமானை.. கொண்டு வருவது ஏனோ. இதையே மற்றவர்கள் செய்தால்.. கருத்துக்களை கடாசுபவர் எங்கே..????!
  12. ஆட்டோகாரரை விடுவம்.... அவர்கள் வயிற்றுப் பிழைப்புக்கு ஏதோ செய்கிறார்கள். ஆனால்.. இந்த வான்.. கார் வாடகைக்கு கொடுக்கிற கூட்டம் இருக்கே.. ஒரு நாளுக்கு வாடகைக்கு விடுவதுமில்லாமல்.. அதில் கிலோமீட்டர் வரையறை வேறு. நாளுக்கு 20,000 ஆயிரத்துக்கு மேல். அதிலும் 80 கிலோமீட்டர் லிமிட்டாம். 100 கிலோமீட்டர் லிமிட்டாம். இதனை யார் கட்டுப்படுத்துவது..????!
  13. அறிவித்தல் தமிழில். அறிவித்தல் பேப்பரில்.. தமிழே இல்லை. தமிழ் தெரிந்த கூலிகளுக்கு இது உறைக்கவில்லை. தின்ன வழியில்லை.. இதெல்லாம் ஒரு கேடு... சொறீலங்காவுக்கு. சொறீலங்காவை இன்னும் சனநாயக நாடு என்று சொல்லிக் கொண்டிருப்பவைக்கு தான்.. இது சமர்ப்பிக்கப்படனும்... சான்றாக.
  14. ரணில் அதிகாரம் இருந்த போதே எதையும் செய்யத் திராணியற்ற முழு சிங்கள பெளத்த பேரினவாதியாகச் செயற்பட்ட ஒருவர். இப்போ பொம்மையாக இருக்கும் அவரிடம்.. போய் கிடைக்கும் கிடைக்காது என்பது எமது அரசியலின் மிக கீழ்த்தரம். மக்களை ஏமாற்றும் செயற்பாடு. ஆனால் தமிழ் மக்கள் ஏமாறமாட்டார்கள். அந்தளவுக்கு ஏமாறி... ஏமாற்றப்பட்டு.. களைத்துவிட்டார்கள்.
  15. மாற்றுக்கருத்து என்று சொல்லி புலி எதிர்ப்பு வாந்திகளை வாசிக்கும் தங்களிடம் வேறு எதனை எதிர்ப்பார்க்க முடியும். இது தான் தங்களின் வழமையான பதில் என்பது தெரிந்ததே. 🤣
  16. சொறீலங்கா நீதித்துறை இப்படியான சிங்கள பெளத்த அரசியல்மயமாக்கப்பட்ட ஒன்று என்பது இவ்வளவு காலமும் தெரியாதாக்கும்..??! என்னமா நடிக்கிறாங்க. இதனால் தான் சர்வதேச நீதி விசாரணைகளை கோருகிறார்கள்.. இதில.....
  17. தலைவரையும் பிள்ளைகளையும் நிம்மதியா விடுங்க. வீரமரணம் அடைந்தவர்கள் அடைந்தவர்களாகவே இருக்கட்டும். இப்ப தலைவர் இருந்தாலும் அவருக்கு 70 வயது. இந்த வயதில்.. 20 வயதுப் போராளியாக அவரால் செயற்படவும் முடியாது.. இன்றைய பூகோளச் சூழலும்.. இன்னொரு ஆயுதப் போராட்டத்திற்கு உகந்ததல்ல. இன்னொரு ஆயுதப் போராட்டத்தை தமிழர் தேசம் தாங்கிக் கொள்ளும் வலிமையிலும் இல்லை. தேசிய தலைவர் ஒரு அரசியல் போராளியாக இருந்து.. தானும் தன் இனமும்.. மற்றவர்களால் ஏமாற்றப்படுவதையும் மற்றவர்களுக்கு காவடி தூக்குவதையும் விரும்பக் கூடிய ஒருவரல்ல. இந்த நிலையில்.. இவை தேவையற்ற செய்திகள். எனினும் புலிகளின் பெயரால்.. சொறீலங்கா அரச கூலிகள் சொறீலங்கா அரசுக்கும்.. பெளத்த விரிவாக்கத்திற்கும் காசு சேர்ப்பது தெரிந்ததே. அந்த வகையில்.. சாந்தி அக்கா இந்த காணொளி வழியாக.. மக்களை விழிப்பூட்ட எண்ணி இருந்தால்.. அதனை வரவேற்கலாம். ஆனாலும் புலம்பெயர் தமிழர்கள்.. புலிகள் காலத்திலேயே கேள்வி கேட்டுத்தான் காசு கொடுத்தவை. இப்ப சும்மா தூக்கிக் கொடுப்பினமா என்பது கேள்விக்குறியே. புலிகளின் தங்கம் என்று காலத்துக்கு காலம் தோண்டிக் கொண்டிருப்பதும்.. பெளத்த விரிவாக்கத்தைச் செய்யவும் சிங்கள இராணுவ தேவைகளை பூர்த்தி செய்யவும்.. சுயநலனுக்காகவுமே.
  18. கடன் வாக்கிறதுக்கு எப்போதாவது சொறீலங்கா அமைச்சரவை.. நோ சொல்லி இருக்கா. சொறீலங்கா இயங்கிக் கொண்டிருப்பதே கடனில் தானே. இதில அமைச்சரவை அங்கீகாரம் முக்கியம் பாருங்கோ. 🤣
  19. பூமியில் மிக உயர் வெப்பநிலையில் (70 - 90 பாகை செல்சியசில் கூட உயிரினங்கள் (பக்ரீரியாக்கள் வாழ்கின்றன.). இவங்கள் இப்படிச் சொல்லி சொல்லி மனித செயற்பாடுகள் மூலம் பூமியை உயிர்கள் வாழத்தகாததாக மாற்றாமல் விட்டால் சரி. அது தான் இப்போ மிகவும் அச்சத்துக்குரிய அச்சுறுத்தலாக இருக்குது பூமிக்கு.
  20. ஆதே போல்.. சீன - ஹிந்திய விவகாரத்தில்.. தாங்கள் யார் பக்கம் என்பதையும் சொல்லி விடுவது நல்லது. அதுபோக.. சொறீலங்கா சனாதிபதியின் ரஷ்சிய சார்ப்பு.. மற்றும் இவரின் ஹிந்திய சார்பு.. சீனச் சார்பு விடயங்களை மையப்படுத்தி.. ஈழத்தமிழர்கள் மேற்குலக கொள்கை வகுப்பாளர்களுக்கு ஒரு தெளிவை ஊட்ட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு ஈழத்தமிழரின் இருப்பும் விடுதலையும் உரிமையும் ஏன் அவசியம் என்பது புரிய நேரிடும். இது ஈழத்தமிழினத்துக்கு பூகோள ராஜதந்திர செயற்பாடுகளுக்கான நல்ல நேரம் என்பதே எங்கள் கணிப்பு. இதையும்.. ஹிந்திய சிங்கள விசுவாசத்திற்கு.. சாதமாக்கிவிட்டு குறட்டை விட்டால்.. ஈழத்தமிழனம்.. தேற வாய்ப்பே இருக்காது. இவங்களிடம் விளக்கம் கேட்டு விளங்கி விளக்கம் வரும் என்று நினைக்கிறீர்கள்..??! ஆனால்.. கண்ணை மூடிக்கொண்டால்.. உலகம் இருட்டென்று நினைத்து வாழும் மேற்குலகின் கண்களை எம்மை நோக்கி எமது அநியாயங்களை நோக்கி திறக்க வைப்பதற்கு இவர்களின் இந்த மொழிவுகள்.. நல்ல ராஜதந்திர வாய்ப்புக்களை அளிக்கின்றன. அதனைப் பயன்படுத்திக் கொள்ள ஈழத்தமிழினம் தவறக் கூடாது.
  21. ஆதே போல்.. சீன - ஹிந்திய விவகாரத்தில்.. தாங்கள் யார் பக்கம் என்பதையும் சொல்லி விடுவது நல்லது. அதுபோக.. சொறீலங்கா சனாதிபதியிம் ரஷ்சிய சார்ப்பு.. மற்றும் இவரின் ஹிந்திய சார்பு.. சீனச் சார்பு விடயங்களை மையப்படுத்தி.. ஈழத்தமிழர்கள் மேற்குலக கொள்கை வகுப்பாளர்களுக்கு ஒரு தெளிவை ஊட்ட வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு ஈழத்தமிழரின் இருப்பும் விடுதலையும் உரிமையும் ஏன் அவசியம் என்பது புரிய நேரிடும். இது ஈழத்தமிழினத்துக்கு பூகோள ராஜதந்திர செயற்பாடுகளுக்கான நல்ல நேரம் என்பதே எங்கள் கணிப்பு. இதையும்.. ஹிந்திய சிங்கள விசுவாசத்திற்கு.. சாதமாக்கிவிட்டு குறட்டை விட்டால்.. ஈழத்தமிழனம்.. தேற வாய்ப்பே இருக்காது.
  22. உங்கள் கேள்விக்கான பதில்கள் ஏலவே தரப்பட்டுள்ளன. வழமை போல்.. வாசிக்கவில்லைப் போலும். நவாலியில் எம் உறவுகள் குண்டு வீசிக் கொல்லப்பட்ட போதும்.. நாகர்கோவிலில்.. பள்ளிக்குழந்தைகள் மீது குண்டு வீசிக் கொன்ற போதும்.. இதே ரஜனி திரணகம வழிவந்த யாழ் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள்.. மனித உரிமை அமைப்பு விட்ட அறிக்கைகளை வாசியுங்கள். யாருக்கு மனச்சாட்சி இல்லை.. எவ்வளவு ஆழமாக... தேசம் போன்ற ஊடகங்கள்.. சதா கக்கும்.. புலி எதிர்ப்பு வாந்திகளை வாசித்ததன் கொடூர விளைவுகள் தங்கள் மனங்களில்.. குடிகொண்டிருக்குது என்பது விளங்கலாம். அற்புதன் யாருக்காக உழைத்தாரோ அவையே அற்புதனை கொல்ல வேண்டியது ஏனோ..??!
  23. நீங்கள் சுண்டுக்குளி.. கொழும்புத்துறை பக்கம் போகவில்லைப் போல. அங்க அந்தோனியாருக்கு அந்தோனியார் சில்லெடுப்புத்தான். என்ன.. இவை எல்லாம் மூடிமறைச்சு.. தொடரப்படலாம். பாடசாலையின் உள்ளக அறிவிப்பு ஒன்று தான்.. மொத்த சமூகத்திற்கும் பிரச்சனை. அதனை திருத்தினால்.. பெரும் புரட்சி நிகழ்ந்து ஓரிரவில் எல்லாரும் திருந்திடுவாங்கள்.. என்பதற்காக நாம் பெரும் உருட்டு உருட்டி அல்லவா.. உழைக்கிறோம்.
  24. இவ்விருவரும்.. மிக முற்போக்குவாதியும்.. எப்போதும் நடுநிலைவாதியுமான தங்களின் புலி எதிர்ப்பு வாந்திக்கும் சமத்துவம் கொடுக்கும் தங்களின் பணியை ரசிக்கிறார்கள் என்பதை சொல்லி வைப்பது தங்கள் பணி தொடர வேண்டும் என்பதற்காகும். தாங்கள் எப்படி தாயின் பணியை பிள்ளைகள் செய்கிறார்கள்.. அதுவும் பாதிக்கப்பட்ட மக்களின் நிழலே படாதவர்கள் செய்கிறார்கள் அதனை நான் ஆதரிக்கிறேன் எனும் போது.. அற்புதன் கொழும்பு நகரில்.. வசதியாக வாழ்ந்து கொண்டு.. ஈபிடிபி பத்திரியையின் விற்பனை உயர்ச்சிடைய எழுதிய எழுத்துக்களை மற்றவர்களும் ஆதரிக்கக்கூடும். ஆனால்.. எல்லாம் உண்மை என்று சொல்லிக் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் அவர்களே உண்மைக்கான சாட்சியங்களை விட்டுச் சென்றிருக்க வாய்ப்புள்ளது. அதனால் தான் அற்புதனை போட்டுத் தள்ளிட்டார்கள். அதற்கும் ரஜனி திரணகமவின் பிள்ளைகளின் முயற்சியே காரணம் என்று காரணம் கண்டுபிடிக்கமாட்டீர்கள் என்று நம்புவோமாக.
  25. யாழ் களத்தில்.. எத்தனை தடவைகள்.. ரஜனி திரணகம விவாதிக்கப்பட்டிருக்கிறார். ஏன் இந்த ஆக்கம் கூட 9 ஆண்டுகளுக்கு முன் உதித்தது தான். இது மீள்பிரசுரமாம்..??! ஒரே விடயத்தை ஒரே பாணியில் எழுதிக் கொண்டு சொந்த இனம் இருப்பழிந்து கொண்டிருப்பதை சகித்துக் கொண்டிருக்கும் கூட்டத்தின் ஆக்கம்.. இங்கே மீண்டும் மீண்டும் ஒட்டப்பட்டு விவாதிக்கப்படுவதன் நோக்கம்..????! இயன்றவரை வெள்ளையடிப்பு.. புலி விரோத சிந்தனையை உயிர்ப்போடு வைத்திருத்தல். சிறீதரன் 1996 கடந்தும் அங்கிருந்து தான் தன் இனத்துக்கு எதிரான துரோகத்தை செய்து கொண்டு தான் இருந்தார். பதவி வெறிபிடித்த.. ------+++
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.