Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nedukkalapoovan

  1. மீண்டும் தவறான புரிதல். புலிகள் தான் இதனை கண்டுபிடித்தார்கள் முதலில் பாவித்தார்கள் என்று எழுதப்படவில்லை. சம காலத்தில் புலிகள் தான் இதனை தமக்கான வசதிக்கு ஏற்ப.. நவீன மயப்படுத்தி தமது திறமைகளையும் உள்ளடக்கி பாவித்தார்கள். குறிப்பாக கடல் நீர்மட்டத்தோடு பயணிக்கத்தக்க.. ஸ்ரெல்த் தர வகைக்கான சிறிய அதிவேகக் கடற் கலங்களை பாவித்து வெற்றிகரமாக இஸ்ரேலிய தயாரிப்பு இலக்குகளையே தகர்த்த பெருமை புலிகளைச் சாரும். இதே வகை தாக்குதலை கொப்பி பண்ணி.. அல்குவைடா அமெரிக்க போர் கப்பலுக்கு எதிராக மத்திய கிழக்கில் நடத்தியது. இப்போ.. உக்ரைனின் வடிவமைப்பில் புலிகளின்.. ஸ்ரெல்த் வடிவமைப்பும்.. கடல் மட்டத்தில் பயணிக்கும் தந்திரங்களும்.. அதிவேகமும்.. உள்வாங்கப்பட்டிருக்குது. நீங்கள் எல்லாம் இரண்டாம் உலகப் போர்.. 1960 களில் நிற்கிறீர்கள். அதன் பின்னான நவீன இராணுவ தொழில்நுட்ப வளர்ச்சிகளின் பின்னும்.. வெற்றிகரமான தாக்குதல்களை நடாத்திய பெருமை புலிகளுக்கு உண்டு. மேலும்.. ஆழமற்ற கடலிலும் இலக்குகளை தாக்கவல்ல கடற்கலங்களை தயாரித்த பெருமையும் புலிகளுக்கு உண்டு. பிரச்சனை என்பது புதிய கண்டுபிடிப்பல்ல. தேவைக்கும் எதிரிகளின் தொழில்நுட்ப முன்னேற்றத்திற்கும் ஏற்ப மீள்வடிமைப்பதும்.. இலக்கை வெற்றிகரமாக அடைவதுமே... இராணுவ தொழில்நுட்ப முன்னோடியாவது. அந்த வகையில் புலிகள் மேற்குலகால் கூட வியக்கப்பட்ட பல தொழில்நுட்ப மறுவடிவமைப்பு முன்னோடிகள் என்றால் மிகையல்ல. குறை அழுத்த.. எளிமையான.. அதிக எண்ணிக்கையான.. மிதிவெடிகள் தயாரிப்பில் கூட புலிகள் முன்னோடிகளாக விளங்கியதுண்டு.. குறிப்பாக ஜொனி மிதிவெடிகள். இதனை ஹிந்திய இராணுவ எழுத்தாளர்களே குறிப்பிட்டும் உள்ளனர். ஜொனி மிதிவெடிகளே.. மணலாற்றுக் காட்டில் ஹிந்திய படைகளின் முன்னோற்றங்களுக்கு மிகப் பெரிய தடையாக இருந்தன. சிறிய படையான புலிகளின் பெரும் தடுப்புச் சுவரானது.
  2. உக்ரைன் ஆக்களுக்கு இன்னும் 18 மாதங்களுக்கு வீசா நீட்டிப்பும்.. பிற வீசாக்களுக்கு விண்ணப்பிக்கவும்.. கல்வி.. சுகாதாரம்.. பொதுச் சேவைகளை பயன்படுத்த அனுமதியும் வழங்கியுள்ள பிரிட்டன்.. இந்த ஈழ அகதிகளை மட்டும் இப்படி நடத்த என்ன காரணம்..????! இதில எம்மவர்கள் சிலர்.. உக்ரைனுக்கு சப்போட்...???!
  3. உக்ரைனே.. கடற்கரும்புலிப் படகுகள் பாணியில் தான் படகுகளை.. வடிவமைச்சு ரடாரில் சிக்காது இலக்கை தாக்கும் புலிகளின் தந்திரத்தை களவெடுத்திருக்கினம். அதேபோல்.. தான் வான்புலிகளின் தந்திரமும் பாவிக்கப்பட்டிருக்குது.. உக்ரைனால். தாளப் பறந்து போய் தாக்குவது. ரடார் அலைகளில் சிக்காதிருக்க இந்த உக்தியை புலிகள் போர்க்களத்தில் பயன்படுத்தினார்கள்.. வலிமையான எதிரியின் முன் தம் திறமையால் வீரத்தால்.. அவர்கள் போராடினார்கள். என்ன உக்ரைனுக்கு.. மேற்குலக நாடுகள் எல்லா வளங்களையும் வசதிகளையும் அளிப்பதால்... தானியங்கி ஆக்கி இருக்கினம். நாங்கள் சுயமாகப் போராடிய இனம் என்பதால்.. அதிக.. உயிர்கொடைகளை செய்ய வேண்டி இருந்தது. வலி கூடியதாக இருந்தது.
  4. வேடிக்கை என்னவென்றால்.. வகுப்பறையில் ஆசிரியைகளை ஏற்றுக் கொள்ளும் மாணவர்களும் பெற்றோரும்.. அதிபர் அலுவலகத்தில் ஒரு ஆசிரியையை ஏற்றுக் கொள்ள தயங்குவது எங்கேயோ இடிக்குதே..?! எல்லாம் குத்தியரின் திருவிளையாடலாகத்தான் இருக்கும். தனக்கு வேண்டியவரை உள்ள போட.. இப்படி புரளியை கிளப்பி விட்டிருப்பார். அவர் பெயருக்குத்தான் மீன்பிடி அமைச்சர். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தவரை முடிசூடா சுயம்பு மன்னன். எல்லாத்துக்குள்ளும் தன் மூக்கை நுழைப்பதே அவரின் கொள்கை. இதனால் தான் முன்னர் அடிவாங்கிக் கொண்டு ஹிந்தியாவுக்கு ஓடினவர்.
  5. கிறிஸ்தவ மிசனரிகளின் ஆதிக்கம் தான் ஆண்கள் தலைமைத்துவப் பாடசாலைகளின் பெருக்கத்திற்கு அடிகோள். யாழ் மத்திய கல்லூரி கிறிஸ்தவ மிசனரி வழி வந்த ஒன்று. ஆனாலும் அங்கு ஆரம்பப் பிரிவு கலப்பு தான். மேலும் யாழ் மத்திய கல்லூரியில் பெருமளவிலான ஆசிரியைகள் பன்னெடுங்காலமாக.. மகத்தான சேவை ஆற்றி இருக்கினம்... சேவை ஆற்றிக் கொண்டும் இருக்கினம். அந்த வகையில் கல்லூரியின் தனித்துவத்தையும் கல்வி மற்றும் விளையாட்டுத்துறையில் முன்னேற்றங்களையும் மற்றும் மாணவர்களை நல்ல சமூகப் பிரஜைகளாவும் ஆக்கக் கூடிய எவரும் அதிபர் பதவியில் அமர்வதில் சிக்கலில்லை. ஏனெனில் கல்லூரி இப்போ கிறிஸ்தவ மிசனரிகளின் கட்டுப்பாட்டில் இல்லை. ஒரு காலத்தில் யாழ் இந்துக் கல்லூரியில்.. ஒரே ஒரு பெண் ஆசிரியை தான் இருந்தார். ஆனால்.. இப்போ சரி பாதி பெண் ஆசிரியைகள். மேலும் இலங்கையின் நிர்வாகம் மற்றும் கல்வித்துறையில் பெண்களே அதிகம். வீட்டில் அம்மா செல்லமெல்லாம்.. இந்த பெண் அதிபர் நியமனத்தை ஏற்றுக் கொண்டு.. போய் படிக்கிற வேலையை பாருங்க. தேவை தரமான கல்வி... உயர்ந்த ஒழுக்கம்.. ஓயாத விளையாட்டு... யாழ் மத்தியின் மைந்தனாகவும் இருந்த ஒருவனாக இக்கருத்தைச் சொல்வதில் பெருமைபட முடிகிறது. விடாப்பிடியாக.. என்னை யாழ் மத்திய கல்லூரிக்கு அழைத்துச் சென்று சேர்ப்பித்ததே என் அம்மா. போர்ச் சூழல் கருதி... இடை நடுவில் யாழ் இந்துவுக்கு பாய்ந்தது வேறு விடயம்.
  6. அப்போ உங்கள் பார்வையில் கொலை செய்யப்பட்டவர்கள்.. நீதி நியாயவான்கள். அப்பாவிகளின் கொலைகளில் சவாரியே செய்யவில்லை. ஒரு இனத்தையே படுகொலை செய்தவன்கள் எல்லாம் வாழுறாங்கள் இன்னும். அதனால்.. இந்த தத்துவார்த்தப் பித்துக்கள் எல்லா சந்தர்ப்பங்களிலும்.. வேலை செய்யாது. என்ன அப்பாவி மக்களை ஏமாற்றிக் கொண்டு கொன்று குவிக்க துணை நின்று.. சுகபோகம் சந்திச்சவன்.. கூடிய விரைவில் போய் சேர்ந்து விடுகிறான்.. சிலது தப்பிப்பிழைச்சிருப்பதற்கு இறைவன் தான் பதில் சொல்லனும். என்ன மரணம் என்பது கர்ணனிற்கும் உண்டு.. கருணாக்களுக்கும் உண்டு. அதனால்.. கர்ணனும் கருணாவும் ஒன்றாகிட முடியாது. இரண்டு மரணங்களிக்கிடையேயும் வேறுபாடுண்டு. அடிப்படையில் இரண்டும் மரணங்கள் ஆகினும்.
  7. இதை தான் காலம் காலமாச் சொல்லிக் கொண்டிருக்கினம். சட்டத்தை அமுலாக்குபவனும் சட்டத்தை மதிப்பவனும் உருவாகினாலும்.. மனிதத்தை இனங்காணாத மிருகங்களாக மனித உருவில் மிருகங்கள் உலாவரத்தக்க சூழ்நிலைகள் களையப்படாமல்.. இவற்றைக் கட்டுப்படுத்துவது இலகு அல்ல. அனுமதியின்றி.. ஒரு பெண்ணை தொட்டால் கடுமையான தண்டனை என்ற மத்திய கிழக்கு நடைமுறைகள் வராமல்.. ஹிந்தியாவில்.. தெற்காசியாவில்.. பெண்களுக்கான பாலியல் பாதுகாப்பு என்பது பலவீனமாகவே இருக்கும்.
  8. யோகேஸ்வரன்: இதோ 1000 இளைஞர்களை தாருங்கள் தமிழீழம் எடுத்துத் தருகிறேன் என்று சொல்லிவிட்டு தங்களின் சிங்கள எஜமான அரசியலை முன்னெடுத்தார் போய் சேர்ந்தார். அவரின் மனைவியும் அதே. சிங்களத்தின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகளை இனப்படுகொலைகளை.. வெண் புறா.. வெண்டாமரைக்குள் மறைக்க.. உதவினார்.. செம்மணி புதைகுழிகள் கூட கண்ணில் படவில்லை.. போய் சேர்ந்தார். அமிர்தலிங்கம்: ஹிந்திய இராணுவ ஆக்கிரமிப்பில் மக்கள் வகைதொகையின்றி இறந்து கொண்டிருக்க.. ஹிந்திய இராணுவம் ரப்பர் செல் அடித்தபடியே முன்னேறுவதாக ஹிந்திய விசுவாச அரசியலை முன்னெடுத்தார்.. போய் சேர்ந்தார். நீலன் திருச்செல்வம்: யாழ்.. மற்றும்.. வன்னியை ஆக்கரமிக்கும் சந்திரிக்காவின் வெண்புறா வேச இன அழிப்புப் போர் நீண்ட போது.. மக்கள் பட்டினி கிடந்தும் இடம்பெயர்ந்தும் செத்துக் கொண்டிந்த போது.. சந்திரிக்காவை சமாதான தேவதையாக சித்தரிக்க.. ஈயன் பொக்ஸ்.. விலகி நினறு விட்ட போதும்.. சிங்களம் கிழித்தெறிந்த போதும்.. புலிகள் நிராகரித்து நின்ற போதும்.. தன் வித்துவத்தையும் சிங்கள விசுவாசத்தையும் காட்டப் போய்.. போய் சேர்ந்தார். இப்ப.. மிஸ்டர்.. சுமந்திரன் அந்தப் பட்டியலில் வந்து குந்தி இருக்கிறார். என்ன தமிழ் மக்கள் கேடயம் இழந்த நிலையில் இருப்பதால்.. இவரால்.. சிங்கள விசுவாசத்தை தமிழர்களின் வாக்குகளை வைச்சே காட்ட முடியுது. இதில் எல்லாமே அரைகுறை.. இனவிரோத சட்டாம்பிகள் தான் கூடிய இனத்துரோகத்தைச் செய்திருக்கினம். அது காசுக்கு கட்சிக்காரனை காப்பாற்ற சாட்சிக்காரனை குற்றவாளி ஆக்கிற குணத்தின் பரினாமம் என்றால் வேறில்லை. இவர்களிடம் நீதி நியாயத்தை எதிர்பார்க்கக் கூடாது. அதனால் தான் சிலது துர்மரணங்களை பரிசாக்கிக் கொண்டன.
  9. இப்ப எல்லாம் பணத்தேவை கருதி தான் எல்லாமே ஊரில நடக்குது. சொந்த மகள்மாரின் மகன்மாரின் வாழ்க்கையையே தங்களின் சொந்த தேவைக்கான.. பணத்துக்காக விலை பேசிற தாய் தகப்பனை காண முடியுது.. நீங்க என்னடான்னா.
  10. இப்ப பழைய படி.. ஆளாளுக்கு பதவிக்கு வந்ததும் சனாதிபதி பதவியை ஒழிப்பென்று என்று கிழப்பிட்டாங்கள். சந்திரிக்கா இதனை ஆரம்பிச்சா.. கடைசியில் ரணிலாரும் கூவினார். ஆனால் எல்லாரும் பதவிக்கு வந்ததும்.. அந்தப் பதவியை ஒழிக்க மனசு வைக்கினமே இல்லை. இப்ப சஜித்தும் தொடங்கிட்டார். வேடிக்கை என்னவென்றால்.. பதவிக்கு வந்து.. 100 நாளைக்குள் சனாதிபதி பதவியை ஒழிப்பன் என்ற மைத்திரி.. மீண்டும்.. சனாதிபதியானால்.. ஒழிப்பாராம். சனத்தை முழு மடையர் என்று நினைக்கிறாங்கள்.. சொறீலங்கா அரசியல் வியாதிகள்.
  11. இதை தேர்தல் நடக்கும் போதே சூரியன் எப் எம் காரர் சொல்லிட்டாங்கள். சுமந்திரன்.. போலி சனநாயக வேடம் போட்டு விட்டுக்கொடுப்பது போல போக்குக்காட்டிக்கொண்டு... விட்ட பதவியை பறிப்பார் என்று. இது இந்த சட்டாம்பிக் கும்பலுக்கு புதிதல்லவே. இதால தான் உதய சூரியன் அந்தமிச்சுது.. எனி வீடும் தரைமட்டமாகிடும். சுமந்திரனுக்கு வழங்கப்பட்ட அலுவலை கச்சிதமாகச் செய்து கொண்டிருக்கிறார்.. சிங்கள எஜமான விசுவாசத்தோடு. தமிழ் தேசியக் கூட்டமைப்பை உடைத்து சின்னாபின்னமாக்கினார். இப்ப தமிழரசுக் கட்சியையும் சின்னாபின்னமாக்கிட்டார். எனி மிஞ்ச ஒன்றுமில்லை. தமிழர்களின் ஒருமித்த குரலுக்கும் வாய்ப்பில்லை. எனி என்ன சுமந்திரன் காட்டில் அடை மழை தான். அடுத்த பாராளுமன்றில்.. நிச்சயம் சுமந்திரன் சிங்கள அமைச்சுப் பதவி பெறுவார். கூட மாவையும் மகனுக்கு இராஜாங்க அமைச்சர் பதவி கேட்பார்.
  12. சீனாவில இருந்து பெற்றோல்.. பாகிஸ்தானில இருந்து உருளைக்கிழங்கு.. மாம்பழம்.. ஹிந்தியாவில இருந்து முட்டை.. வெங்காயம். அப்ப நாட்டில என்னத்தை தான் உற்பத்தி பண்ணுறியள்..??! யாழ்ப்பாணத்தில் போர் காலத்தில் கூட உருளைக்கிழங்கு.. உள்ளூரில விளைஞ்சது. இப்ப பாகிஸ்தான் உருளைக்கிழங்கு விக்கினம். போர் காலத்தில வித்த உள்ளூர் கருவாடு போய்.. இப்ப இந்தோனிசியா.. தாய்லாந்தில் இருந்து கருவாடு யாழ்ப்பாணத்திற்கு வருகுது..??! இந்தக் கொடுமைகளை என்னென்பது..?! சொறீலங்கா சின்ன வெங்காயம்.. கண் எரியுமாமில்ல... பெரிய வெங்காயம் தானாம் வேணும். இது நான் சொல்லேல்ல.. யாழ்ப்பாணப் பெண்டிர் பேசிக் கொண்டதில் இருந்து.
  13. பாவம்.. பழிக்கடா ஆகிட்டார். ஆனால் பங்கு போட்டுக் கொண்ட மிச்சப் பேர்.. எஸ்கேப். மகிந்த குடும்பம் உட்பட. ஏனெனில்.. அணிலார் அவையள்ள கை வைக்க விடமாட்டார். எல்லாம் ஒரு புரிந்துணர்வு தான். 😛
  14. மலேசியா.. மத்திய கிழக்கு.. இந்த விசயத்தில் எப்பவோ எல்லைகளை திறந்துவிட்டு.. இப்போ கல்வியில் நன்கு முன்னேறிப் போய்விட்டன. இவைக்கு இப்பதான் விடிஞ்சிருக்குது. அதுகும்.. என்ன சுயலாபத்துக்கோ..??!
  15. ஊரில இப்ப எல்லாரும் சட்டம் படிக்கினம். ஏனென்றால்.. இதுக்குத்தான்.. சொந்த இனத்துக்குள்.. குடும்பத்துக்குள்.. ஒருத்தரை ஒருத்தர் பழிவாங்க.. முதுகில குத்த. ஆனால்.. தமிழனை இனப்படுகொலை.. செய்த.. சிங்களவனை.. சர்வதேச நீதி விசாரணைக்கு உட்படுத்த விடமாட்டினம். இதுக்குத்தான் இவை இவ்வளவு தீவிரமா சட்டம் படிக்கினம்.
  16. விழுந்தும் மீசையில் மயிர் ஒட்டாத அறிக்கை தான் இது. இவரின் இயலாமை.. தோல்வியை இவரே ஒத்துக்கொண்டதாக அமைகிறது.. அறிக்கை. குறிப்பாக..
  17. இவை தான்.. ஒவ்வொரு.. தீபாவளிக்கு.. பொங்கலுக்கு தமிழருக்கு தீர்வு வேண்டித் தரப்போகினம்.
  18. இதன் தாக்கத்தை சிங்களப் படை ஆக்கிரமிப்பு தமிழர் தேசத்திலும் அவதானிக்க முடிக்கிறது. பெரும் பணச் செலவில்.. அமைக்கப்பட்டிருந்த.. சொகுசு விடுதிகளுடன்.. பூங்காக்கள்.. தடாகங்களுடன்... மைதானங்களுடன் அமைக்கப்பட்ட இராணுவ தலைமையகங்கள் எல்லாம் வெறிச்சோடிப் போயுள்ளன. இவங்கள் இவ்வளவு வசதிகளையும் விட்டிட்டு போவாங்களா.. என்று அங்கலாய்த்த மக்கள்.. இந்த வெறிச்சோடிப் போன ஆக்கிரமிப்பு வளாகங்களை அண்டிய காணிகளில் இம்முறை நெல் மற்றும் தமது விவசாய நடவடிக்கைகளை செய்துள்ளமை அவதானிக்கப்படக் கூடியதாக இருக்குது.
  19. ஹரிகரனின் இசை நிகழ்ச்சிகள் சர்ச்சைக்கு உள்ளாவது இது முதற்தடவை அல்ல. அதேபோல்... கொழும்பில்.. சுகதாசவில் எல்லாம் நல்லப்படியா நடந்து முடிஞ்சதாகவும் இல்லை. அங்கும் சல சலப்புக்கள் நிகழ்ந்த சம்பவங்கள் உண்டு. யாழ் நிகழ்ச்சியில் ஏற்பட்ட சலசலப்புக்கு.. நிகழ்ச்சியை ஒழுங்கமைத்தவர்கள்.. செய்த தவறுகளே அதிகம். மக்களை கட்டுப்பாட்டுக்குள் வைச்சிருக்கக் கூடிய எந்த ஒழுங்குகளும் இன்றி.. இசை நிகழ்ச்சியை குறைந்த பாதுகாப்புச் செலவில் கூடிய வருவாய் நோக்கில் நடத்த முனைந்தது அப்பட்டமாக தெரிகிறது. மேலும்.. இந்த நிகழ்ச்சியை குழப்ப அல்லது குழப்பி அடிச்சு அதில் ஆதாயம்.. கவனயீர்ப்புப் பெற மேலும் சிலர் பின்னணியில் இருந்து காவாலிகளை இயக்கி இருக்கலாம். இதில் தாடிக்காரக் குத்தியர் எதற்கு முந்திரிக்கொட்டை கணக்காய் அறிக்கைவிட்டவர். அவருக்கும் இந்த இசை நிகழ்ச்சிக்கும் என்ன தொடர்ப்பு..?! ஒருவேளை தன்னை பிரதம விருந்தினராக அழைத்து தாமன்னாவுக்கு பக்கத்தில் இருந்தவில்லை என்ற கோபமோ என்னவோ..??! இது முழுக்க முழுக்க தனியார்.. தங்களின் வருமானத்துக்காக நிகழ்த்திய நிகழ்வு. இதற்கும் யாழ் மக்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை. அந்த தனியார் நிகழ்வை ஒருங்காக ஒழுங்கமைக்காமை தான் தவறுகளுக்கு முழுக்காரணமே தவிர.. மக்களை இளைஞர்களை குறை சொல்லி பிரயோசனமில்லை. சில இளைஞர்கள் வெளியார் தூண்டலில் செயற்பட்டிருந்தாலும் கூட. இந்த நிகழ்ச்சி தவறுகளுக்கு இந்திரன் - ரம்பா - கலா மாஸ்டர் உள்ளிட்ட மற்றும் இந்த நிகழ்ச்சியை ஒருங்கமைத்த முஸ்லிம் நபர் உட்பட ஆக்களே.. இதற்கு முக்கிய பொறுப்பு. அவர்களின் அனுபவமின்மை.. சரியான திட்டமிடலின்மையே.. இந்த நிகழ்ச்சி தோல்வியில் முடியக் காரணம்.
  20. இந்த இசை நிகழ்ச்சியை பல மில்லியன் செலவு செய்து ஒழுங்கு செய்தது.. இந்திரன் (நடிகை ரம்பாவின் கணவர்). காரணம்.. தான் அமைத்த நொதேர்ன் யுனி க்கு புரமோசனுக்கு. இவர் வெளியில் சொல்வது போரால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கல்வி வழங்குவதாக.. ஆனால்.. இவரின் யுனியில் முதுமானிப் பட்டங்களுக்கான கல்வி தான் வழங்கப்படுகிறது தற்போது. அதற்காக அறவிடப்படும் பணம்.. இலங்கையின் இதர அரச சார் பல்கலைக்கழகங்களில் அறவிடப்படும் தொகையிலும் அதிகம்.மேலும் இவரின் யுனியில் கல்வி கற்பிப்பது.. 90% தென்னிலங்கை பேராசிரியர்களும்.. விரிவுரையாளர்களும். ஆக.. கல்வி தமிழர்களின் முதலீடு என்று தெரிந்து.. அதில் முதலிட்டு இலாபம் ஈட்டுவதற்காக நடத்தப்படும் ஒரு நிகழ்வே இது. தனது மனைவிக்கிருந்த செல்வாக்கை.. இதற்காகப் பயன்படுத்திக் கொள்கிறார் அவ்வளவே. இதில்.. தமிழர்கள் பெருமைப்பட எதுவும் இல்லை. இசை நிகழ்ச்சிக்கு போனாமா.. ரசிச்சமா என்றுவிட்டுப் போக வேண்டியான். அந்தச் சந்தர்ப்பத்தை பாவிப்பது தவறாகத் தெரியவில்லை. அதற்கு மாறாக நடிகைகளோடு.. கலைஞர்களோடு காசு கொடுத்து படமெடுக்கனும் என்பதை எல்லாம் ஒரு அறிவார்ந்த மக்கள் கூட்டமாக யாழ்ப்பாண கலாரசிகர்கள் செய்ய மாட்டினம் என்று நம்புவோமாக.
  21. கொழும்பில் கூட சாதாரண சிங்கள தமிழ் முஸ்லிம் மக்கள் இதனை கொண்டாட வேண்டும் என்று செயற்படவில்லை. விடுமுறை நாளில் சுதந்திர தினம் வந்த போதும் மக்கள் தங்கள் அன்றாடக் கடமைகளை செய்யதனரே தவிர... இந்தக் கொண்டாட்டங்களில் ஈடுபாடு காட்டவில்லை. வழமையை விட சிங்கள தேசியக் கொடி குறைவாகவே பறக்கவிடப்பட்டிருந்தது. ஆனால் அரசாங்கம் மட்டும் காலிமுகத்திடலில்.. அநாவசிய செலவு செய்து கொண்டாட்டம் செய்வதாக சிங்கள மக்களே ஆதங்கப்பட்டதை அவதானிக்க முடிந்தது. அதிலும்.. பரசூட் வேடிக்கை காட்டப் போய் வினையானது தான் மிச்சம். உவர் வீரசேகரவுக்கு மூன்று வேளையும் சாப்பாடு ஒழுங்கா விழுகுது போல. ஆனால்..மக்கள் காலை உணவை தவிர்த்து 100 ரூபா பார்சலுக்கு மதியம் காத்துக்குக் கிடப்பதை காண முடிகிறது. இரவுச் சாப்பாட்டுக்கும் மக்கள்.. மலிவு விலை இடியப்பம்.. கொத்து வாங்க ஆட்டோக்களில் உணவு கொண்டு வந்து விற்கும் ஆட்களிடம் வரிசை கட்டுகின்றனர். இது கொழும்பில் சாதாரண குறைந்த நடுத்தர வருமானமுள்ள மக்களின் நிலை. மற்றும்படி.. வெளிநாட்டுப் பயணிகளை தவிர.. உள்நாட்டு மக்களை கே எப் சி.. மக்டொலாட்... பேர்கர் கிங்.. பிசா கட் இவற்றில் பார்ப்பது கொழும்பில்... குறைந்திருக்கிறது. வெகு சிலர் தான் வந்து போகின்றனர்.
  22. இவை இரண்டு பேரும்.. தனிப்பட்ட விடயம் காரணமாக குற்றச்சாட்டுக்களை வைக்கினம் என்றே தோன்றுகிறது. இலங்கையில் உள்ள ஏஜென்டுக்கோ.. கனடாவில் உள்ள ஏஜென்டுக்கோ.. இவர் கொடும்மால்.. எப்படி இவரின் தொலைபேசி இலக்கம் உட்பட விபரங்கள் போய் சேர்ந்தது...???! தன்ரை நம்பர மாறிக் கொடுத்திட்டினமாம்.. அப்ப கனடாவில் உள்ள மச்சான் தான் கொடுத்திருக்கிறார்..?! அப்புறம் என்ன.. ஏஜென்சி காரனுக்கு ஏச்சு..??!
  23. அமெரிக்கா.. மத்திய கிழக்கு எங்கும் தனது இராணுவ பிரசன்னத்தை வைச்சிருக்குது. அண்மையில் அபுடாபி விமான நிலையம் போனப்போ.. அங்கு சர்வதேச விமான நிலையத்தை அண்டி அமெரிக்க விமானப்படை விமானங்கள் அடுக்கி விடப்பட்டுள்ளதுடன் அடிக்கடி பறப்புகளில் ஈடுபட்டத்தை அவதானிக்க முடிகிறது. வட அமெரிக்க கண்டத்தில் இருக்கும் ஒரு நாட்டுக்கு மத்திய கிழக்கில் என்ன வேலை. அமெரிக்கா ரஷ்சியாவுக்கு வகுப்பெடுக்க ஒரு அருகதையும் கிடையாது. ஏனெனில்.. அமெரிக்கா எந்த நாட்டினதும்.. சுயாதிபத்தியத்தையும்.. தன் ஏகாதிபத்தியத்திற்கு முன் மதிப்பதில்லை.
  24. ஒருத்தர் போய் மற்றவர் வந்திட்டார். ஏதாவது ஒரு திட்டத்தையாவது நீண்டு நிலைக்க செய்யுது முடியுங்கப்பா. ஆரிய குளம்.. பழைய படி.. காடு பத்தப் போகுது. பண்ணைக்கடலுக்குள்.. அட்டை வளர்ப்பு வந்திட்டுது.. விட்ட உல்லாசப் படகுகள் கொஞ்சக் காலம் கவிழ்ந்து கிடந்து.. இப்ப அதையும் காணம். தெருவெல்லாம்.. பிளாஸ்டிக் குப்பை. பண்ணைக் கடலுக்குள்ளும்.. கடற்கரையிலும் பிளாஸ்டிக். பண்ணை தொடங்கி குறிக்காட்டுவான் வரை கடலெங்கும் பிளாஸ்டிக். தென்னிலங்கை.. வெளியூர் உல்லாசப் பயணிகளுக்கு ஒரு தெளிவான வரையறை இல்லை.. பிளாஸ்டிக்கை எப்படி கையாள்வது என்று. சிங்கள இராணுவ.. கடற்படை.. காவலன் அரண்களை அகற்றிவிட்டு நவீன கண்காணிப்பு கமராக்களை பொருத்தினால்.. குற்றத்தையும் குற்றவாளிகளையும் வெகுவாகக் குறைக்கலாம். வீதி போக்குவரத்துக் கண்காணிப்புக் கமராங்களின் வரவும் அவசியம். இராணுவத்தை வேறு தேவைகளுக்கு பாவிக்கலாம். அல்லது வேறு துறைகளில் வேலை பெற்றுச் செல்ல அனுமதிக்கலாம். இராணுவ செலவீனங்களை வெகுவாகக் குறைத்து அதனை இப்படியான கமராத் திட்டங்களுக்கு பாவிக்கலாம்.
  25. இவை தரமானவை என்றால்.. அரச கூட்டுத்தாபனங்கள் ஊடாக மக்களுக்கு விற்கப்படலாமே. எதற்கு வீணா அழிக்கனும்..???! நீதிபதிகள்.. சட்ட அமுலாக்கம் பற்றி மட்டும் சிந்திக்காமல்.. சட்டத்தோடு நாட்டு மக்களின் நலன் குறித்தும் சிந்திக்கலாமே. யாழில் தொடங்கப்பட்ட பண்ணை படகுச் சேவை.. ஆரிய குளம் படகுச் சேவை.. இப்படி எதுவுமே நடைமுறையில் இல்லை. பல கோடி ரூபா செலவு. ஒரு வருமானமும் இல்லை.. எந்த திட்டமும் நீண்டு நிலைப்பதாகவும் இல்லை..???! மக்களின் பணம் இப்படி விரையமாவது.. கேவலம். ஆள் மாறி ஆள் மாறி அதிகாரிகளும்.. அரசியல்வாதிகளும் பதவிக்கு வந்து போகினம்.. ஆனால் எந்த திட்டங்களும் உருப்படியாக இல்லை. இவர்களை விட... ரில்கோ.. போன்ற தனியார் நல்லாச் செய்யினம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.