Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nedukkalapoovan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nedukkalapoovan

  1. அடுத்த முறை போக முன்னமே.. போய் வாற நோக்கத்தைச் சொல்லிட்டால் மகிந்தரே ரெட் காப்பெட் போட்டு வரவேற்பார்..! ஏன் ஆமி பொலிஸ் கவலை..???! இதனை இப்போதாவது பொயட் உணர்ந்திருக்கனும்..! இல்லைன்னா..????!
  2. சூறாவளி நீங்க கவலைப்படுற அளவுக்கு அவர் சாதாரண தமிழன் அல்ல. பின்புலங்கள் பல உள்ள ஒரு வி ஐ பி.
  3. இது கைதாகத் தெரியவில்லை. அன்பான உபசரிப்புப் போலவே தெரிகிறது. அதுவும் பொயட் போன்ற பலமான இந்திய.. சிறீலங்கா அரசியல் தொடர்புகள் உள்ள ஒருவரை கைது செய்ய வேண்டிய அவசியம்..???!
  4. இவை கல்லறைகள் அல்ல. பெற்ற வயிறுகள் பேசிக்கொள்ளும் கருவறைகள்..!
  5. எங்கள் படை தான் எங்களுக்கு அரண்.
  6. ஏன் யாழ் இணைய முகப்பு இப்படி சீர்குலைந்து காணப்படுகிறது.நாங்க அவதானிக்க ஆரம்பித்ததில் இருந்து.. கிட்டத்தட்ட ஒரு வாரமாக இப்படி தான் தெரிகிறது.
  7. எங்கள் கல்லறைகளுக்கு உயிர் இருக்கு உணர்விருக்கு.. உண்மையான மானுடன் அதனை இடிக்க மனமே கொள்ளான். !!!
  8. சே - உலக மக்களின் போராளி. நே - விடுதலை இந்தியாவின் மக்கள் போராளி. வே - உலகத் தமிழர்களின் போராளி.
  9. பழ.நெடுமாறன் உள்ளிட்ட 82 பேருக்கும் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் ஜாமீன்: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு. கடந்த 13ஆம் தேதி தஞ்சாவூர் விளார் சாலையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன்புறம் உள்ள பூங்கா மற்றும் மரங்கள், சுற்று சுவர் ஆகியவற்றை காலை 5 மணிக்கு மாவட்ட எஸ்.பி. தர்மராஜன் தலைமையில் வந்த நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆக்கிரமிப்பை அகற்றுகிறோம் என்ற பெயரில் உடைத்து எறிந்தனர். சில நிமிடங்களில் அனைத்தையும் உடைத்துவிட்டு, இது நெடுஞ்சாலைக்கு சொந்தமான இடம் என்ற பெயர் பலகையையும் வைத்தனர். காலையில் 9 மணி அளவில் தகவல் அறிந்து திரண்டு வந்த உணர்வாளர்கள், நெடுஞ்சாலைத்துறை வைத்திருந்த வேலி மற்றும் பெயர் பலகைகளை உடைத்து அகற்றினர். இதனால் போலீசாருக்கும் தமிழின உணர்வாளர்களுக்கும் இடையே வாக்குவாதம் மோதல் ஏற்பட்டது. இதில் தடியடி நடத்திய போலீசார், 80க்கும் மேற்பட்டோரை கைது செய்தனர். கைது செய்யப்பட்ட அனைவரும் திருச்சி மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டனர். பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக உலக தமிழர் பேரமைப்பு தலைவர் பழ.நெடுமாறன், ஓய்வு ஏடிஎஸ்பி பொன்நிறைவன், அயனாவரம் முருகேசன் மற்றும் கைது செய்யப்பட்ட அனைவருக்கும் தஞ்சாவூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம், மாவட்ட நீதிமன்றத்தில் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 19ஆம் தேதி மதுரை ஐகோர்ட் கிளையில் ஜாமீன் கேட்டு மனுத்தாக்கல் செய்யப்பட்டது. நெடுமாறன் தரப்பிற்காக தடா சந்திரசேகரன், வடிவேல் ஆகிய வழக்கறிஞர்கள் வாதாடினார்கள். அரசு தரப்பிற்காக ஆஜரான அடிசனல் அட்வகேட் ஜெனரல் செல்லப்பாண்டியன், இவர்களுக்கு ஜாமீன் வழங்கவே கூடாது என்று வாதாடினார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சி.பி.செல்வம், பழ.நெடுமாறன் உள்ளிட்ட 82 பேருக்கும் எவ்வித நிபந்தனையும் இல்லாமல் ஜாமீன் வழங்கினார். புதன்கிழமை இந்த வழக்கு முடிந்தவுடன் அதற்கான உத்தரவை எடுத்துக்கொண்டு திருச்சி வர காலதாமதமாகும். எனவே வியாழக்கிழமை மதியத்திற்கு மேல் பழ.நெடுமாறன் உள்ளிட்டவர்கள் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார்கள். பகத்சிங் நன்றி:நக்கீரன்
  10. பழ.நெடுமாறன் உள்ளிட்ட 81 பேருக்கும் ஜாமீன்: நடராஜனுக்கும் முன்ஜாமீன்: மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவு. தஞ்சை அருகே உள்ள விளாரில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் சுற்று சுவர் இடிப்பின் போது, எதிர்த்து போராட்டம் நடத்திய பழ.நெடுமாறன் உள்ளிட்ட 81 பேர் கடந்த 13ஆம் தேதி கைது செய்யப்பட்டனர். ஜாமீன் கோரி கைது செய்யப்பட்டவர்கள் சார்பில் மதுரை ஐகோர்ட் கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இதனை விசாரித்த நீதிபதி செல்வம், 81 பேருக்கும் ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். நடராஜன், செல்வராஜ் ஆகியோருக்கும் இந்த வழக்கில் முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். http://www.nakkheeran.in/Users/frmNews.aspx?N=111520
  11. இவர் எல்லாம் சோரம் போகல்லைன்னாத் தான் அதிசயமாப் பார்க்கனும். நன்றி முகநூல்.
  12. அலை அக்கா மாதிரி ஆக்களின் சில கருத்தைப் பார்த்த பிறகு ஈழத்துப் பெண்ணை எங்களுக்கே பார்க்கப் பிடிக்குதில்ல. உப்படியும் ஆக்களா என்று. சீமானுக்கு பிடிச்சிருந்து கசந்திருந்தால் கூட அதற்கும் நம்மவர் தான் பொறுப்பென்று உறுதியாகச் சொல்லலாம்.
  13. ஏன் அலையக்கா சீமான் என்ற பெயரைக் கேட்டாலே ஒரு மாதிரியா ஆகிடுறீங்க. ஏன் உங்களை நம்ப வைச்சு கையை விட்டவரா.. இல்லைத் தானே. அந்தாள்.. தனக்குத் தெரிந்த வகையில்.. தன் இன மக்கள் சார்ந்து எதையாவது செய்யனுன்னு விரும்புறார். செய்யட்டும் விடுங்களன். கொஞ்ச நாள் பிரபாகரனை தூற்றித் திரிந்தார்கள். வரி வாங்கினம்.. பாஸ் சட்டம்..கொண்டு வரினம்.. வீடுகாணி விற்க முடியாத சட்டம் கொண்டு வருகினம்.. சீதனம் வாங்க தடை கொண்டு வருகினம்..... வெளிநாட்டில இருந்து போறவையிட்ட காசு பறிக்கினம்.. பிள்ளை பிடிக்கிறாங்கள்... படிப்பை பாழாக்கிறாங்கள்.. என்று. யாழின் பழைய பதிவுகளை பார்த்தால் தெரியும்.. சமாதான காலத்தில் வன்னியில் வைச்சு காசு பறிக்கிறாங்கள் என்று சொன்னவைய. அவை எல்லாம் வெளிநாடு பார்த்ததே பிரபாகரன் பிஸ்டல் தூக்கினப் பிறகு தான் என்றதை மறந்திட்டு திட்டினவை...! உங்களால ஒரு துரும்பைக் கூட சொந்த மக்களுக்காக செய்யமுடியல்ல (அதிலும் சில பேர்.. கொஞ்சக் காசை வெளில சொல்லுறதுக்கு கொடுத்ததை தவிர). அத்தகைய எம்மவர்கள் மத்தியில்.. அந்தாள் சீமானம்.. சொந்த முயற்சியில.. குறைஞ்சது மறைக்கப்பட்ட உண்மைகள் மீது படிந்து கிடக்கும்.. தூசியையாவது தட்டி விடுகுதே என்று சந்தோசப்படுங்க.
  14. விகடன் இப்படித் திட்டியுள்ளதே. இதுக்கு...???! சீமான்..... சாதித்தவற்றுள் இந்த உணர்வூட்டல் தான் முக்கியமானது. அதனை புகலிடத்தில் உள்ள எம்மவர் கூட செய்யவில்லை.
  15. என்ன நீதி.. சட்டம்.. சாதாரண ஒரு நடிகை.. இத்தனை கோடி சொத்துக்களை சுருட்டினது.. சட்டத்துக்குள்ளாகவா..??! கொடநாடு.. சென்னை.. போயஸ்காடின்னு.. நிலங்களை அபகரிச்சிருப்பது எல்லாம் சட்டத்துக்குள்ளாவா..??! ஏன் தலைவர் ராஜீவ் காந்திக்கு நினைவு சின்னம் உள்ள சிறீபெரும் புத்தூர் காணி ஆரோடு.. அவரோட பாட்டினதா.. தாத்தானடாதா..????! எங்க இருக்கு நீதி.. விபச்சாரம் இல்லை என்று சொல்லிக்கிற சட்டம் இருக்கிற இடத்தில தானே விபச்சாரிகளை வைச்சிருக்கீங்க.. தமிழ்நாட்டில. யாரு அதை செய்யுறாங்க. சினிமாக்காரங்க தானே. செல்வி போட்டுக்கிற.. ஜெயலலிதா சுத்தமான பொண்ணு.. உந்த விஜயதாரணி சுத்தமான பொண்ணுன்னு.. மெடிக்கல் சாட்டிப்பிக்கட் காட்டுங்க பார்க்கலாம். பச்சைத் தமிழன்.. பச்சையாச் சொன்னாலும்.. அது தான் உண்மை.. நீதி..! அதை பெரிய புத்தகம் புத்தகமா படிச்ச நீதிபதி கூட இப்படி நேர சொல்ல முடியாது. அந்தளவுக்கு தான் சட்டம் உள்ளது. சட்டம் நீதி நியாயம் பார்க்காது.. கெளரவம்.. பார்க்கும். ஆனால்.. அவன் தமிழன் அப்பட்டாமாகவே சொல்லிட்டான்..!!! அவன் பொதுமகன். அவன் உண்மையைச் சொன்ன பொதுமகன். அவனை தண்டிக்க கூடாது.
  16. அப்படின்னா நீங்க எல்லாருமே கற்பனையா தான் பேசிக்கிட்டு இருக்கீங்களா. சாரி.. அதில கருத்து வைச்சது தப்புத் தான்.
  17. சீமான் சவாரி செய்கிறார் என்ற போது வருந்தாத நீங்கள் அசைலம் என்றதும் ஓடி வந்து ஒப்பாரி வைக்கிற நிலையில்.. ஒற்றுமை.. புரிந்துணர்வு எப்படி வரும். சீமான் அவரின் குடும்பத்திற்காகவா உழைக்கிறார். தன் இனம் என்று தானே பாடுபடுறார். அதை சவாரி என்று வரையறுத்தால்.. தாயக மக்களின் சாவிலும் வலியிலும் கிடைக்கும்.. அசைலத்தை என்னென்று வரையறுப்பது என்று தான் கேட்டோம். அந்த நியாயத்திற்கு பதில் தெரிந்தால் சொல்லுங்கள்..???! இல்ல ஒற்றுமை.. ஒருமைப்பாடு.. தான் உண்மையான விருப்பம் என்றால்.. எல்லோரினதும் செயற்பாடுகளை எல்லாரும் நீதி நியாயம் நேர்மை.. இருந்தால் மதிக்கனும்.. அதைவிட்டிட்டு.. ஒற்றுமையை எப்படி உருவாக்கிறது..???!
  18. பிரச்சனை சாட்டாமல் வந்த தமிழன் மற்றவர்கள் முதுகில் சவாரி செய்யும் குற்றச்சாட்டுக்கு ஆளாக வாய்ப்பில்லை. அவனை ஆக்கவும் முடியாது. தாயகத் தமிழனின் பிரச்சனையில்.. ஊதிப் பெருத்த புலம்பெயர் அகதித் தமிழன் என்ற சுயபட்டம் தீட்டுக் கொண்டோர் தான்.. அதற்கான விடையை தேடிக் கொள்ளனும். தாயகத்தில் போராடினவன் கூட துணிந்து வாழ முயல்கிற போது.. அசைல மடிச்சவன் மட்டும் இன்னும் அவன் மீது சவாரி செய்தபடி..! அசைலத்திற்குத் தான் தேவை சவாரி. பிரச்சனை..! முதலே சொல்லிட்டம் சிலதைக் கிண்ட வெளிக்கிட்டால்.. சுரண்ட சொறிய வெளிக்கிட்டால்.. பலரின் முதுகால் இரத்தம் கொட்டும் என்று. விடுங்க சீமான் தான் சார்ந்த நிலத்தில் இருந்து தான் வாழ்ந்த மக்களின் மனதறிந்து தன் இனம் காக்க ஏதோ செய்கிறார். அதையேன் கொச்சைப்படுத்திக்கிட்டு இருக்காங்களோ..??! அதில புலம்பெயர் தமிழர்கள் சிலருக்கு அலாதி சந்தோசம்.
  19. இப்படியே புடுங்கப்பாடுகள் வளர்த்துக் கொண்டிருந்தால் தானே புகலிடத்தில் பொழுது போகும். இதுவும் தாயகத்தமிழனை வைச்சு செய்யும் சவாரி தான். இதனை தாயகத்தில் போய் இருந்து கொண்டு சொல்லலாமே. அதில கொஞ்சமாவது நியாயம் இருக்கும்.
  20. முள்ளிவாய்க்கால் முற்றம் பகுதியை சுற்றி ஆயிரக்கணக்கான தமிழக பொலிஸார். குவிக்கப்பட்டுள்ளதுடன் அதன் சுற்றுமதில்கள் இடிக்கப்பட்ட நிலையில் மாவீரர் திருவுருவப்படங்களை அகற்றுமாறு நிர்பந்திக்கப்பட்டுவருவதாக தஞ்சையிலிருந்து நாம் தமிழர் கட்சியின் சர்வதேச தொடர்பாளர் செந்தில் நாதன் தெரிவித்துள்ளார். புனிதபூமி இணையத்தளத்திற்கு அங்கிருந்து கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.அவர் மேலும் தெரிவிக்கையில், முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கப்படுவதற்கு முன்பாக நெடுஞ்சாலைகள் துறை போக்குவரத்து அதிகாரிகளிடம் அந்தப் பகுதி தொடர்பிலா அனுமதி பெறப்பட்டே முள்ளிவாய்க்கால் முற்றம் அமைக்கப்பட்டது. தற்போது திட்டமிட்ட வகையில் அதே துறையினரைக் கொண்டு முள்ளிவாய்க்கால் முற்றப்பகுதியை இடித்தழிப்பதற்கான அனுமதி பெற்றிருப்பதாக பொலிஸார் தெரிவித்திருக்கின்றனர். சம்பவம் தொடர்பில் செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்கள் பொலிஸாரால் தாக்கப்பட்டிருக்கின்றனர். நீதி கேட்ட பிரதிநிதிகள் பொலிஸாரால் மிக மோசமாகத் தாக்கப்பட்டு கைது செய்யப்பட்டிருக்கின்றனர். தானும் தாக்குதலில் காயமடைந்திருப்பதாகவும் செந்தில்நாதன் தெரிவித்தார். முள்ளிவாய்க்கால் முற்றத்தின் மதில் சுவர்கள் இடித்தழிக்கப்பட்டிருப்பதுடன் மாவீரர்களின் நினைவுப் படங்களை அழிக்குமாறு பொலிஸார் மிரட்டிவருவதாகவும் முள்ளிவாய்க்கால் முற்றம் முற்றாக சீல் வைக்கப்பட்டிருப்பதுடன் ஆயிரக்கணக்கான பொலிஸார் சுற்றிவளைத்து நிற்பதாகவும் தெரிவித்தார். - See more at: http://www.punithapoomi.com/news/1-1-1-2#sthash.5evxEhGA.R1cARfih.dpuf

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.