Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. தோனியின் முதலாவது போட்டி இந்திய கிறிக்கட் குழுவின் தலைவனாக....
  2. கவிஞர்கள் என்றுமே வளமாக வாழ்ந்ததில்லை. ஒரு புலவர் தன் நிலைமையை இப்படிக் கூறுகிறார் கல்லைத்தான் மண்ணைத்தான் .காய்ச்சித்தான் குடிக்கத்தான் கற்பித்தானா? இல்லைத்தான் பொன்னைத்தான் .எனக்குத்தான் கொடுத்துத்தான் இரட்சித்தானா? அல்லைத்தான் சொல்லித்தான் ஆரைத்தான் நோவத்தான் அச்சோ எங்கும் பல்லைத்தான் திறக்கத்தான் பதுமத்தான் .புவியில்தான் பண்ணினானே! பாடியவர்: இராமச்சந்திரக் கவிராயர்
  3. கல்பனா சாவ்லாவின் கடைசி நிமிடங்கள் நாசாவின் அலட்சியம்தான் விபத்துக்கு காரணமா?
  4. கபில் தேவின் 8 விக்கட்டுகள்...
  5. மாடு மேய்க்கும் கண்ணே பாடலுக்கான அபிநயம்
  6. சபேசுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  7. 56 வருடங்களாக இமயமலையில் புதைந்திருக்கும் மர்மம்இமயமலை அணு கதிர்வீச்சு வெளியிடுகிறதா? 56 வருடங்களுக்கு முன், அமெரிக்காவின் CIA இமயமலைக்கு வர காரணம் என்ன?
  8. அன்னபூரணி அம்மாள் கப்பலுடன் அமெரிக்க சென்ற வல்வெட்டித்துறை மாலுமிகள்(1938). டைரனிக்கை வென்ற சாதனை. Facebook Twitter LinkedIn Tumblr Pinterest Reddit VKontakte Odnoklassniki Pocket யாழ்.வல்வையிலிருந்து வேப்பமரத்தினாலான கப்பல் ஒன்று அமெரிக்காவுக்கு ஈழத்தமிழர்கள் கொண்டுசென்றார்கள் என்றால் நம்பமுடிகிறதா…? கோடிக்கணக்கான செலவில் உருவான டைடானிக்கே பாதித்தூரத்தில் மூழ்கியது ஆனால் ஈழத்தமிழன் உருவாக்கிய பாய்மரக்கப்பலாகிய அன்னபூரணி புயலுக்கும்,மழைக்கும் தப்பி அமெரிக்கா சென்றதென்றால் தமிழனின் சாதனை எத்தகையது என எண்ணிப்பாருங்கள்… அன்னபூரணி அம்மாளின் அமெரிக்கப்பயணம் – 1938 வல்வெட்டித்துறையில் உள்ள மேற்குத்தெரு வாடியில் வைத்து, 1930ஆம் ஆண்டில் சுந்தரம் மேத்திரியாரினால் உள்ளுர் வேப்ப மரத்தில் தயாரிக்கப்பட்ட “அன்னபூரணி அம்மாள்” என்ற பெயரிலான இரட்டைப்பாய்மரக் கப்பல் 89 அடி நீளமும், 19 அடி அகலமும் கொண்ட ஒரு பாரிய கப்பலாக அந்த நாட்களில் விளங்கியது. அன்னபூரணி என்பது இமயமலையில் அமைந்திருக்கும் மலைச்சிகரங்களில் ஒன்றாகும். இன்றைய நேபாளத்தின் எல்லைக்குட்பட்ட இதன்உயரம் 26504 அடிகளாகும். அத்துடன் அள்ளஅள்ளக் குறையாத அமுதசுரபி கொண்ட தெய்வமாக இந்துக்களால் ஆராதிக்கப்படும் பெண் தெய்வத்தின் பெயரும் அன்னபூரணியாகும். இப்பெயரே அன்னபூரணிஅம்மாளின் சுட்டுப் பெயராக பல இடங்களிலும் பயன்படுத்தப்படுகின்றது. 1936 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் வல்வெட்டித்துறைக்கு வருகை தந்திருந்த அமெரிக்கரான பிரபல கடலோடியான அமெரிக்கர் றொபின்சன் “Florence C. Robinson” அன்னபூரணியின்; அழகால் கவரப்பட்டவராக அதனை வாங்கிக் கொண்டு அமெரிக்காவுக்குக் கொண்டு செல்ல வேண்டுமென்று விரும்பினார். அதனைக் கொள்வனவு செய்ததும்,அன்னபூரணி அம்மாள் என்ற பெயரில் உள்ள அந்தக் கப்பலை “Florence.C.Robinson” என்ற தனது மனைவி யின் பெயருக்கு மாற்றியபின்னரே அமெரிக்காவுக்குக் கொண்டு சென்றார். வல்வெட்டித்துறை மாலுமிகளின் உதவியுடன் கொந்தளிக்கும் இராட்சச அலைகளையும் கடந்து சுயஸ் கால்வாயி னூடாக அமெரிக்காவின் போஸ்ரன் துறைமுகத்திற்குக் கொண்டு செல்லப்பட்ட சாதனை இன்றும் உலகளாவிய ரீதியில் பேசப்படு கின்றது. சூயெஸ் கால்வாயினூடாக மத்தியதரைக் கடலில் பயணம் செய்த போது, ஏற்பட்ட புயலில் சிக்கிய கப்பல் 250 கடல்மைலகள் பின்புறமாக பெய்ரூத் வரை அடித்துச் செல்லப்பட்டது. இவ்வாறு பல்லாயிரக்கணக்கான மைல்களையும் பல கடல்களையும் கடந்து சென்ற இத்துணிகர கடற்பயணம் 1938 ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் முதலாம் திகதி அமெரிக்காவின் மசாசுசெட்ஸ் (Massachusetts) மாநிலத்தில் உள்ள குளோசெஸ்ரர் (Gloucester) துறைமுகத்தில் நிறைவடைந்தது. தெற்காசிய நாடொன்றில் உள்ள சின்னஞ்சிறிய தீவான இலங்கை யில் உள்ள வல்வெட்டித்துறையில் கட்டப்பட்டு காற்றின் துணை யுடன் இயங்கும் கப்பலொன்று இந்து சமுத்திரத்தைக் கடந்து ஐரோப்பாவின் ஊடாக மத்திய தரைக் கடலையும் கடந்து அத்திலாந்திக் சமுத்திரத்தின் ஊடாக அமெரிக்காவின் குளோசெஸ்ரர் துறைமுகம் வரை பயணம் செய்தது…உலக வரலாற்றில் இதுதான் முதல் தடவையும் கடைசித் தடவையு மாகும். இச்சாதனை நிறைந்த கடற்பயணத்தில், வல்வெட்டித்துறையைச் சேர்ந்த தண்டையல் கனகரத்தினம் தம்பிப்பிள்ளை (48வயது) அவர்களின் தலைமையில், திரு.பூரணவேலுப்பிள்ளை சுப்பிரமணியம் (29 வயது), திரு.தாமோதரம்பிள்ளை சபாரத்தினம் (28வயது) திரு.சின்னத்தம்பி சிதம்பரப்பிள்ளை, (28வயது) திரு.ஐயாத்துரை இரத்தினசாமி(24 வயது) ஆகிய ஐந்து கடலோடிககளும் பயணத்தின் இறுதி இலக்கு வரை பங்கேற்றிருந்தனர். அமெரிக்காவின் தலைநகரான வாசிங்டன் நகருக்கு அண்மையில் உள்ள பால்ரிமோர் என்ற துறைமுகத்தில் தரித்து நின்றபொழுது எடுக்கப்பட்ட படத்தை அது தொடர்பான கட்டுரையுடன், பால்ரிமோரில் இருந்து வெளிவரும் “Baltimore Sun” என்ற செய்தித்தாள் பிரசுரித்திருந்தது. அன்னபூரணி அம்மாள் கப்பலை அமெரிக்காவுக்குக் கொண்டு செல்லும் பொழுது கப்டன் மக்குயிஸ் என்பவரின் தலைமையில், வல்வெட்டித்துறை மாலுமி களின் உதவியுடன் பயணம் செய்து குளோசெஸ்டர் துறை முகத்தைச் சென்றடைந்தது. அன்று குளோசெஸ்டர நகரில் இருந்து வெளியிடப்பட்ட ஊடகங்கள் பிரசுரித்த கருத்துக்கள் மிகச் சிறந்த சான்றுகளாகவும், ஆதாரங்களாகவும் விளங்கின. அன்னபூரணி அம்மாளின் இந்த திகில் நிறைந்த பயணம் பற்றிய இலக்கியங்கள் நூல்களாகவும் பத்திரிகைகள் சஞ்சிகைகளில் கட்டுரைகளாகவும் வெளிவந்துள்ளமை அதன் சிறப்பைப் பல மடங்கு உயர்த்தியுள்ளது. இச்சாதனைப் பயணம்பற்றிய விபரங்கள் 02 ஓகஸ்ட் 1938 வெளிவந்த The Boston Globe பத்திரிகையில் Voyage Ended By Brigantine . Barrows என்பவரால் விவரிக்கப் பட்டிருந்தது. மற்றும் அன்றையநாளில் வெளிவந்த மற்றாரு தினசரியான 02.08.1938 அன்று வெளியிடப்பட்ட Gloucester Time பத்திரிகையில் Ceylon Brige Arrives After Long Voyage எனவும் மேற்படி அன்னபூரணி யின் நீண்ட கடற்பயணம் அதன் முன்பக்க செய்தியாக வெளிவந்த ருந்தது. அதில் குறிப்பிடப்பட்ட பின்வரும் செய்திக் குறிப்பினூடாக தமிழர்களின் கடல் ஆளுமைகளை பற்றி மேற்கத்தைய நாட்டவர்க ளின் உள்ளக் கிடக்கையையும் கருத்தையும் அறிய முடிகின்றது. “வல்வெட்டித்துறையில் கட்டப்பட்ட ஒன்பது பாய்களையும் விரித்தபடி கம்பீரமாக ஆடிஆடிப் பயணம் செய்து கொண்டிருந்த கப்பல் ஒன்று அத்திலாந்திக் சமுத்திரத்தையும் கடந்து அமெரிக்கக் கிழக்குக் கரையை அடைந்ததோர் நீண்ட கடல் பயணம் பற்றிய உண்மைக் கதை. இத்தகைய கப்பல்கள் வல்வெட்டித்துறையிலும் அதனை அடுத்துள்ள பருத்தித்துறையிலும் கட்டப்பட்டு வல்வெட்டித்துறைக் கடலோடிகளால் செலுத்தப்பட்டன. இவை தமிழ் நாட்டில் பணம் படைத்த செட்டிமாருக்காகவும் வல்வெட்டித்துறையை வதிவடமாகக் கொண்ட செட்டிமாருக்காகவும் வல்வெட்டித்துறை வணிகர்களுக்காகவும் இலங்கை வடக்கில் உள்ள வல்வெட்டித்துறை பருத்தித்துறை மேஸ்திரிமார்களால் கட்டப்பட்டவை.” அன்னபூரணி அம்மாளுடன் அமெரிக்கா சென்றடைந்த வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாலுமிகள் அங்கிருந்து திரும்பும்போது தம்முடன் எடுத்துவந்த இருபத்திரிகைக் குறிப்புகளே மேற்கண்டவையாகும். அமெரிக்கா சென்ற மூன்றாவது மாதத்தில் அன்னபூரணி 22 நவம்பர் 1938 இல் தென்பசிபிக் (South Pacific) சமுத்திரத்தில் உள்ள Tahiti தீவைநோக்கி ஒரு துணிகர பயணத்தை மேற்கொண்டது. இம்முறையும் மீண்டும் மூன்றுநாட்கள் கடும் புயலில் சிக்கிக்கொண்டது. அத்திலாந்திக்கடலில் 100மைல் வேகத்தில் வீசியகாற்றையும் 40அடி உயரத்திற்கு எழுந்தஅலைகளையும் அன்னபூரணி அனாசயமாக வெற்றிகொண்டவாறு தனது பயணத்தை தொடர்ந்தது. வல்வெட்டித்துறையின் உறுதியான வேப்பமர கட்டுமானமும் அதன் செய்வினைத் தொழில்நுட்பத்திறனும் இவ்வெற்றிக்கு காரணங்களாகின. இறுதியில் 8196 மைல்களைக் கடந்து 15 பெப்ரவரி 1939 இல் பசிபிக் சமுத்திரத்தில் உள்ள Tahiti தீவை அடைந்து தனது இரண்டாவது உலகசாதனைப் பயணத்தையும் வெற்றி கரமாக முடித்துக்கொண்டது. அன்னபூரணியின் Tahiti பயணம்பற்றி Tahiti Bound மற்றும் Wandere எனும் இருநூல்கள் வெளிவந்துள்ளன. Florence C. Robinson இன் இப்பயணத்தின்போது அமெரிக்க தலைநகரான Washington நகருக்கு அண்மையில் உள்ள Baltimore துறைமுகத்திற்கு அண்மையில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலின் படத்தின் மூலம்> தனது ஒன்பது பாய்களையும் முழுமையாக விரித்தபடி ஓடிவரும் இரட்டைப்பாய்மரக்கப்பலான அன்னபூரணியின் கண்ணைக்கவரும் கம்பீரத்தோற்றத்தை இதில் உள்ள புகைப்படத்தில் பார்க்கலாம். பொங்கியெழும் கடலின் இராட்சத அலைகளின் மத்தியில் துணிகரப் பயணத்தின் மூலம் சுயெஸ் கால்வாயினூடாக அமெரிக்காவின் போஸ்ரன் துறைமுகத்திற்கு வல்வை மாலுமிகளால் கொண்டு போய்ச் சேர்க்கப்பட்ட அந்த வரலாற்றுச் சாதனை இன்றும் உலக மக்களால் பெருமையாகப் பேசப்படுகின்றது. இவ்வளவு சாதனைகளையும் செய்து இந்துசமுத்திரம் அத்திலாந்திக்சமுத்திரம் பசுபிக்சமுத்திரம் என உலகத்தை சுற்றிய அன்னபூரணியின் பயணம் 1957 ஆம் ஆண்டு Tahiti யில் மூழ்கி தனது வாழ்வை முடித்துக் கொண்டது. ஆயினும்> சாகசம் மிக்க கடற்பயணத்தை மேற்கொண்ட அன்னபூரணி என்ற அந்த இரட்டைப் பாய்க்கப்பல் வல்வெட்டித்துறையின் பெருமை மிக்க ஒரு முதுசொமாகும். அமெரிக்க மற்றும் ஸ்ரீPலங்காப் படையினர் இணைந்து நடத்திய ‘ஒப்ரேசன் பசுபிக் ஏஞ்சல்’ நிகழ்விற்காக(15.08.2016) அமெரிக்க தூதுவரான அதுல்ஹேசப் (Atul Keshap) யாழ்ப்பாணத்திற்கு வருகைதந்திருந்தார். அங்கு அவர் தனதுரையில் 1813இல் அமெரிக்க மிசனரியினர் ஏற்படுத்திய இலங்கைக்கான தொடர்பினை தாம் உருவாக்கிய அன்னபூரணிஅம்மாள் என்ற பாய்க்கப்பலில் அமெரிக்காவின் குளோஸ்ரர்துறை முகத்திற்கு வந்த வல்வெட்டித்துறை கடலோடிகள் மீளவும் தொடர்ந்துள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டினார். அத்துடன் ஆச்சரியமிக்க அன்னபூரணியின் இக்கடல்வழிப் பயணம் சரித்திரபூர்வமானது என்பதையும் அவர் குறிப்பிடத் தவறவில்லை. இலங்கைமக்கள் அனைவரும் குறிப்பாக ஈழத்தமிழர்கள்கூட மறந்துவிட்ட ஒருநிகழ்வினை எழுபத்தைந்து வருடங்களின்பின் யாழ்ப்பாண மண்ணில் மீண்டும் ஓர் அமெரிக்கர் நினைவு கூர்ந்துள்ளார். இதுபோலவே 1987 மே மாதத்தில்; வடமராட்சியை கைப்பற்றுவதற்காக அப்போது பாதுகாப்பு அமைச்சராக இருந்த லலித் அத்துலத்முதலியின் பணிப்பின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சிறிலங்கா படையினரின் ‘லிபரேசன் ஒப்பரேசன்’ எனும்பெயரில் பெரும் தாக்குதலை தொடுத்திருந்தனர். இதனைத் தொடர்ந்து உலகவங்கியைச் சேர்ந்த சில அதிகாரிகள் வல்வெட்டித்துறைக்கு விஜயம்செய்திருந்தனர். அவர்களில் ஒருவர் குறிப்பிட்ட அன்னபூரணி அம்மாளின் பயணம்பற்றி அன்று உதவி அரசாங்க அதிபராக இருந்த திரு.வை.வேலும்மயிலும் அவர்களிடம்; தெளிவாக உரையாடியிருந்தமையும் இவ்விடத்தில் குறிப்பிடத்தக்கது. 75 ஆண்டுகளுக்கு முன்னர் தொழி;ல் நுட்பத்திறனும் அறிவியல் நுட்பங்களும் விரு;ததியடைந்திராத காலத்தில் உள்ளு}ர் வேப்ப மரங்களைக் கொண்டு பாயும் நீரையும் கிழித்துச் செல்லக்கூடிய பல கப்பல்களைத் தயாரித்த தமிழர்கள்அன்று அமெரிக்கா மட்டுமின்றி பர்மா காக்கிநாடா தூத்துக்குடி போன்ற பல துறைமுகங்களுக்குச் சென்று வர்த்தகத் தொடர்பை ஏற்படு;ததித் திரவியம் தேடி நமது நாட்டுக்கே பெருமை சேர்த்தவர்கள்….ஆனால் காலத்திற்குக் காலம் தமிழ் அரசியல் தலைவர்களின் துணையுடன் பதவி ஏற்றுவரும் இலங்கை அரசுகளின் இனவாதப் போக்குகளின் காரணத்தால் தமிழ் மக்களின் கப்பல் கட்டும் தொழிலுக்கே சாவுமணி அடிக்கப்பட்டது. அன்றே அவர்களுடைய கப்பல் கட்டும் தொழில் இங்கையின் அரசுகளினால் அங்கீகரிக்க்பட்டு கப்பல் பயணங்களினூடாக மேற்கொள்ள்பபட்டு வந்த ஏற்றுமதி இறக்குமதி வர்த்தகத்தைச் சட்ட பூர்வமானதாக்கியிருந்தால் எமது நாட்டின் பொருளாதார வளமும் உயர்ந்திருக்கும், இலங்கையில் இனவாதமும், அதனால் எழுந்த யுத்தமும் தோனறியிருக்காதல்லவா…. ஆனால் இன்றும் கூடத் தமிழர்களின் கண்களைத் தமிழர்களின் கைளினாலேயே குத்திக் காயப்படுத்த வைக்கின்ற செயலில் சிங்கள பேரினவாத அரசும், அதற்குத் துணைபோகின்ற இனவாதிகளும் ஈடுபட்டுக் கொண்டிருக்கும் பொழுது நாட்டில் சாந்தி, சமாதானம் ஏற்படுவதற்கு, இலங்கையில் ஒற்றுமையாகவே வாழ ஆசைப்படுகின்ற சிங்கள,தமிழ், முஸ்லிம் மக்கள் இன்னும் நீண்ட தூரம் பயணிக்கவேண்டியுள்ளது……..! விலைபோகாத நல்லதொரு தலைமைத்துவத்தைக் கொண்டு நிமிர்ந்து நின்ற எமது மக்களின் தலைவிதியென்றால் என்ன செய்வது….? ஆதாரம்: வல்வையின் முதுசொம் https://montamil.ca/?p=14132
  9. இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள், நந்தன்.
  10. கு.மா அண்ணா, புத்தன் இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள். சாணக்கியனுக்கும் பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  11. https://www.bbc.co.uk/sounds/play/b04bn086?fbclid=IwAR3RvdJipaTL3_yPc5q8XAO4Z8e8u36YEqHtYI47aR0oV-iyXEucccFCRqA
  12. கோல்களை எண்ணுவதை விட பார்வையாளர்கள் மஞ்சள், சிவப்பு மட்டைகளின் எண்ணிக்கையை எண்ணினார்கள்.
  13. பாடல்: காட்டு பயலே படம்: சூரரை போற்று இசை: ஜி.வி. பிரகாஸ்குமார் பாடியவர்: டீ(Dhee) வரிகள்: கவிஞர் சிநேகன்
  14. பிறேசிலிய நட்சத்திரம் நெய்மாரின் சில வெட்டுக்கள்
  15. கிருபனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
  16. இப்போட்டியில் ஐவரி கோஸ்ரை சேர்ந்த cheikh tiote என்பவர் (ஐவரி கோஸ்ட் சார்பாக முதலில் பெனல்டி கோல் உதைப்பவர்) சீனாவில் பயிற்சியின் போது இதய வருத்தத்தால் மரணம்டைந்தார் 2017ல். இவர் Newcastle united எனும் உதைப்பந்தாட்ட குழுவுக்கும் விளையாடியவர். சுவாரசியமான பெனால்டி உதை போட்டி.
  17. Shawn Mendes, Camila Cabello - Señorita (Live From The MTV VMAs / 2019)
  18. கோலி வெள்ளி பார்த்த சில தருணங்கள்
  19. கியூபாவின் தொழில் துறை மந்திரியாக இருந்த தருணத்தில் ''சே குவரா '' இலங்கைக்கு விஜயம் செய்து இருந்தார்அப்பொழுது இருந்த தொழில் துறை வர்த்தக மந்திரி ஆர்.ஜி சேனநாயக்காவுடன் ஒரு வர்த்தக உடன்படிக்கையில் கையெழுத்திடும் பொழுதுஎடுக்கப்பட்ட புகைபடத்தை இங்கே காணலாம்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.