Everything posted by nunavilan
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஏராளனுக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
-
தொங்குடா.. தொங்கு..!
றிஸ்க் எடுக்காமல் பெடியள் விடமாட்டாங்கள் போல.
-
எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
My Heart Will Go On (Titanic) Daniele Vitale & Karolina Protsenko
-
உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
- சிந்தனைக்கு சில படங்கள்...
- உங்களுக்கு தெரியுமா?
உலகின் முதல் மனிதன் யார்?- நடனங்கள்.
- பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
நிழலிக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- மனதைக் கவர்ந்த கவிதைகள்
இரண்டு_கோடிகள்_கொடுத்து ஒரு ஜோடி நாய்கள் வாங்கும் எங்கள் தேசத்தில்... இருபது கோடிகள் கொடுத்து ஒருவர் மட்டுமே பயணிக்க கார் வாங்கும் எங்கள் தேசத்தில்..!! இருநூறு கோடிகள் கொடுத்து கிரிக்கெட் அணியை ஏலமெடுக்கும் எங்கள் தேசத்தில்..!! இரண்டாயிரம் கோடிகளை கடன்சுமையாய் தள்ளுபடி செய்யும் எங்கள் தேசத்தில்...!! இருபதாயிரம் கோடிகளை பொழுதுபோக்க ஒதுக்கும் எங்கள் தேசத்தில்...!! இரண்டு இலட்சம் கோடிகளுக்கு அலைக்கற்றை ஏலமெடுக்கும் எங்கள் தேசத்தில்...!! எங்களையோ அல்லது நாங்கள் விளைவிக்கும் பொருளையோ ஏலமெடுக்கத்தான் எவருமில்லை....!! விளைவித்தவன் பிச்சைக்காரன்...!! விலை வைத்தவன் இலட்சக்காரன்...!!- உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு
இரண்டு முறை வாசித்தாலும் பயனுள்ளது! கல்வி என்றால் என்ன? இரண்டாம் உலகப் போரின் முடிவில், இந்த கடிதம் நாஜி வதை முகாமில் கண்டுபிடிக்கப்பட்டது. இது ஆசிரியர்களுக்கு விளக்கப்படுகிறது. அன்புள்ள ஆசிரியர்களே, நான் வதை முகாமில் இருந்து தப்பியவன். எந்த மனிதனும் பார்க்கக்கூடாததை என் கண்கள் கண்டன: கற்றுத் துறைபோன பொறியாளர்களால் கட்டப்பட்ட எரிவாயு அறைகள். படித்த மருத்துவர்களால் நஞ்சூட்டப்பட்ட குழந்தைகள், பயிற்சி பெற்ற செவிலியர்களால் கொல்லப்பட்ட குழந்தைகள், உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி பட்டதாரிகளால் பெண்களும் குழந்தைகளும் சுட்டு எரிக்கப்பட்டனர். அதனால், கல்வியில் எனக்கு சந்தேகம் உள்ளது. எனது வேண்டுகோள்: உங்கள் மாணவர்கள் மனிதர்களாக மாற உதவுங்கள். உங்கள் முயற்சிகள் ஒருபோதும் அறிவுவளம் நிரம்பிய அரக்கர்களை, திறமை வாய்ந்த மனநோயாளிகளை, படித்த முட்டாள்களை உருவாக்கக்கூடாது. வாசிப்பு, எழுதுதல், எண்கணிதம் ஆகியவை நம் குழந்தைகளை மனிதாபிமானமுள்ளவர்களாக மாற்றுவதற்கு உதவுவதாக இருந்தால் மட்டுமே அவை முக்கியத்துவம் உடையதாக இருக்கும். WORTH READING TWICE What is Education At the end of World War II, this letter was found in a Nazi concentration camp. It is addressed to Teachers. Dear Teachers, I am a survivor of a concentration camp. My eyes saw what no man should witness: Gas chambers built by learned engineers. Children poisoned by educated physicians. Infants killed by trained nurses. Women and babies shot and burnt by high school and college graduates. So, I am suspicious of education. My request is: Help your students become human. Your efforts must never produce learned monsters, skilled psychopaths, educated illiterates. Reading, writing, arithmetic are important only if they serve towards making our children more humane.- எனக்கு பிடித்த வாத்தியங்களின் மொழி
பொத்தி வைச்ச மல்லிகை மொட்டு- சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
- மனதைக் கவர்ந்த கவிதைகள்
உன்னையும் என்னையும் போன்ற இளம்பிள்ளைகள் சிலர் வாழ்ந்தனர்.. நம் சம காலத்தில் உனக்கு தெரியுமா..? உன் நாவிலும் என் நாவிலும் நாள்தோறும் பேசும் தாய் தமிழைத்தான் அவர்களும் பேசினர்.. உன்னையும் என்னையும் போல் அந்த இளம்பிள்ளைகள்.. வானுயர்ந்த புகழ்மிக்க பல்கலைகழங்களில் பட்டம் பெற்றவர்கள் அல்ல.. வானத்தைவிடவும் புகழ்மிக்க இலட்சியங்களோடு அவர்கள் வாழ்ந்தனர்.. எந்த நடிகரையும் அவர்கள் தலைவராக கொண்டாடியதில்லை.. ஆனால் உன்னதமான ஒருவனை அவர்கள் தலைவனாக கொண்டிருந்தனர்.. அவர்கள் திரையரங்குளில் சத்தம் போட்டதில்லை.. பதுங்கு குழிகளின் நிசப்தம் அறிந்தவர்கள்.. விக்கெட்கள் விழுந்துவிட்டதற்காக பொறுமியவர்கள் அல்ல.. விழும் பிணங்களுக்கு இடையே ரவைகளை பொறுக்கி கொண்டிருந்தவர்கள்... அவர்கள் பொறியியல் படித்தவர்கள் அல்ல.. மின்சாரம் உற்பத்தி செய்யவும் வாகனங்களை தயாரிக்கவும் அவர்களுக்கு தெரியும்.. விடுதலை வேள்விக்கான மூலப்பொருட்களிலிருந்து முழுமையான தளவாடங்கள் வரை அவர்களே தயாரித்தனர்.. அவர்கள் மாலுமிகள் அல்ல.. கப்பலோட்டினர்.. அவர்கள் விமானிகள் அல்ல. விமானம் இயக்கினர்.. அவர்கள் தத்துவம் படித்தவர்கள் அல்ல.. தத்துவமாகவே வாழ்ந்தனர்.. அவர்களில் பலர் பள்ளிப்படிப்பையே முடித்தது கிடையாது. ஆனாலும் அவர்களைப்போல் களத்தில் யாரும் பாடம் கற்பிக்க முடியாது.. அவர்கள் வாழ்வின் அர்த்தம் அறிந்தவர்கள் அல்ல.. ஆனால் அவர்களைப்போல் அர்த்தமுடைய வாழ்வை யாரும் வாழ்ந்துவிட முடியாது. அவர்கள் புனித நூல்களின் வார்த்தைகளை ஓதியவர்கள் அல்ல.. ஆனால் அவர்கள் உச்சரித்த மண் விடுதலை என்ற வார்த்தையை விட புனிதமானது வேறில்லை.. எந்த துறவியைவிடவும் அவர்களுடைய துறவறம் உயர்ந்தது.. எந்த தவசிகளின் தவங்களை விடவும் அவர்களின் விடுதலை தவம் உயர்ந்தது. அவர்கள் ஒவ்வொரு நாளும் அடிபட்டு வாழ்ந்தனர். ஒரு நாளும் அடிமையாய் வாழ்ந்ததில்லை. அவர்கள் இருந்தவரை அவர்களுடைய மண் அவர்களுடையதாக இருந்தது. அவர்கள் இருந்தவரை அவர்களுக்கென்று ஒரு தேசம் இருந்தது.. அவர்கள் மண் அவர்களிடம் இல்லாமல் போனபோது அவர்கள் இந்த மண்ணிலேயே இல்லாமல் போயினர்... நன்றி சேரன்- களைத்த மனசு களிப்புற ......!
16 வயது சச்சின் முதல் முறையாக கபில்தேவுடன் தலைக்கவசம் இல்லாமல் ........- தமிழீழ பாடல்கள்
மாவீரர்நாள் 2021- தமிழீழ பாடல்கள்
CMR Music Connects | இணைக்கும் இசை | Farnandu & Rachel- மனதைக் கவர்ந்த கவிதைகள்
Murali Thiyaga எனக்கு அழுது பழக்கமில்லை ==================== 1983ம் தமிழர் படுகொலையின் போது சிங்களவர் பசில் பெர்னாண்டோ என்பவர் எழுதிய கவிதை.. அந்த ஒரு கார் மட்டும்.... எனக்கு அழுது பழக்கமில்லை.. அந்தளவு எனக்கு உணர்ச்சிகள் இல்லை. அதெல்லாம் மறந்துவிடு என்றது என் அரசாங்கம்.. ஆனால் என் வீட்டில் இருந்து பார்த்த அந்த காரை மட்டும் மறக்க முடியவில்லை. அந்த காரில் நான்கு பேர் இருந்தார்கள். அம்மா அப்பா மகன் மகளாக இருக்கலாம்.. அந்த காரை ஏனைய கார்களை போலத்தான் நிறுத்தினார்கள். ஏனைய கார்களை போல உள்ளே அவர்களை பூட்டி அந்த காரின் மேல் பெட்ரோல் ஊத்தினார்கள், ஏனைய கார்களை போலவே அதனையும் கொளுத்த போனார்கள். திடீரென அந்த கூட்டத்தில் ஒருவன் காரை திறந்து அந்த சின்ன பிள்ளைகளை மட்டும் வெளியே எடுத்து விட்டான்.. பின்னர் கொளுத்தினார்கள்.. எரிந்தது.. பிள்ளைகள் அழுதுகொண்டு வெளியே நின்றார்கள்.. திடீரென கார் கதவு திறந்தது.. அப்பா வெளியே எரிந்துகொண்டு வந்தார்.. தலை பின்புறம் எரிந்து கொண்டு இருந்தது.. மகனையும் மகளையும் தூக்கினார்.. காரின் உள்ளே சென்று கதவை பூட்டிக்கொண்டார்! முற்றாக எரிந்த அந்த காரை அடுத்த நாள் கார்பொரேஷன் வண்டி வந்து அள்ளிக்கொண்டு போனது.. அரசாங்கத்துக்கு நகரை சுத்தமாக வைத்து இருப்பது கடமை அல்லவா? எனக்கு அழுது பழக்கமில்லை...- மனதைக் கவர்ந்த கவிதைகள்
நிகழ்காலம் ஒருவனை வாழ்த்துகின்றது வரலாறு ஒருவனை பாடுகின்றது எதிர்காலத்தை உருவாக்கத் தேடுகின்றது இது தலைமைத்துவத்தின் அடையாளம் இனி வரும் தலைவனுக்கான பாடம் யாரையும் எதிர்பார்க்காமல் வாழக் கற்றுத்தந்த ஞானம் இனி அவன் வழியே எமக்கு மார்க்கம் வட்டக்கச்சி வினோத்- இன்றைய மாவீரர் நினைவுகள் ..
மாவீரர்களுக்கு வீரவணக்கங்கள்.- தமிழீழ பாடல்கள்
கல்லறை மேனியர் கண் திறப்பார்களே கார்த்திகை நாளிலே- உங்களுக்கு தெரியுமா?
Important Information
By using this site, you agree to our Terms of Use.
- சிந்தனைக்கு சில படங்கள்...
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.