Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

nunavilan

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by nunavilan

  1. நில்மினி அக்காவுக்கு பிறந்தநாள் வாழ்த்துகள்.
  2. யாழ் சாவகச்சேரி வைத்தியசாலை தில்லுமுல்லுகளை அம்பலப்படுத்திய மருத்துவர் ; அதிர்ச்சியை ஏற்படுத்திய காணொளி! வைத்தியர் அர்ச்சுனா இராமநாதன் சாவகச்சேரி வைத்தியசாலை
  3. கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடும் சுகவீனம் கட்சிப் பொறுப்புகளை ஒப்படைத்தார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் புற்றுநோய் காரணமாகக் கடும் சுகவீனமுற்றிருப்பதாகத் தெரியவருகிறது. கடந்த சில மாதங்களாக அவர் வெளிநாடொன்றில் சிகிச்சை பெற்று வருவதாகவும் இருப்பினும் உடல்நிலையில் முன்னேற்றம் எதுவும் காணப்படவில்லை எனவும் அவருக்கு நெருங்கிய வட்டாரங்களின் மூலம் அறியமுடிந்தது என தென்னிலங்கை பத்திரிகையான லங்கா சார செய்தி வெளியிட்டுள்ளது. இதன் காரணமாக அவர் தனது கட்சிப் பதவிகளை அடுத்தவர்களிடம் கையளித்துள்ளதாகவும் அதே வேளை பாராளுமன்ற அலுவல்களிலிலிருந்து மூன்று மாத ஓய்வுக்கு விண்ணப்பித்து அதற்கான அனுமதி கிடைத்திருக்கிறதெனவும் அறியப்படுகிறது. கடந்த ஜனவரியில் 50 வயதை எட்டிய திரு பொன்னம்பலம் லண்டன், இங்கிலாந்து மற்றும் இலங்கையில் வழக்கறிஞராகப் பணிபுரிவதற்குரிய தகமைகளைப் பெற்றவர் எனினும் அவர் சட்டத்தரணியாகத் தொழில் செய்யவில்லை எனக் கூறப்படுகிறது. 2000 ஆம் ஆண்டில் அவரது த்ந்தையார் கொலைசெய்யப்பட்டதைத் தொடர்ந்து 2001 இல் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் யாழ்ப்பாணத்தில் தேர்தலில் போட்டியிட்டு வெற்ரியீட்டியதுடன் அதைத் தொடர்ந்து 2004 இலும் த.தே.கூ. சார்பில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினராகப் பாராளுமன்றம் சென்றிருந்தார். பின்னர் 2010 இல் அவர் த.தே.கூட்டமைப்பிலிருந்து வெளியேறி ஈ.பி.ஆர்.எல்.எஃப், ரெலோ, தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகிய கட்சிகளுடன் இணைந்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை ஆரம்பித்தார். ஆனாலும் 2010, 2015 பாராளுமன்றத் தேர்தல்களில் அவரால் வெற்றிபெற முடியவில்லை. இறுதியில் 2020 இல் அவரும் செல்வராஜா கஜேந்திரனும் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சார்பில் யாழ். மாவட்டத்திலிருந்து பாராளுமன்றத்திற்குத் தெரிவானார்கள். கஜேந்திரகுமார் பொன்னம்பலம் பல பரம்பரைச் சொத்துக்களுக்கு வாரிசாக இருந்தாலும் கொழும்பு பங்குச்சந்தையில் பாரிய முதலீடுகளைச் செய்திருப்பதாகத் தெரிகிறது. இவற்றில் ஜீ.ஜீஸ் புறொப்பெர்ட்டீஸ் பிரைவேட் லிட், கீதாஞ்சலி கஜலக்ஸ்மி பிரைவேட் லிட், செறெண்டிப் லாண்ட் பி.எல்.சி, எல்.ஓ.எல்.சீ ஹோல்டிங்ஸ், லங்கா ஓறிக்ஸ் லீசிங் கொம்பனி புக்கிற் டாறா (பாம் ஒயில்) பி.எல்.சி. ஆகிய நிறுவனங்கள் சில அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமாகவும் தனிச்சொத்தாகவும் இருக்கின்றன. https://marumoli.com/கஜேந்திரகுமார்-பொன்னம்ப/#google_vignette
  4. அரை இறுதிக்கு இங்கிலாந்து சுவிசை 5-3 பெனால்டி உதை மூலம் வென்று சுவிசை வீட்டுக்கு அனுப்பி உள்ளது. அடுத்த துருக்கி 1 - நெதர்லாந்து 0 45 நிமிடம் வரை.
  5. Al Green - Let's Stay Together
  6. ஆழ்ந்த அஞ்சலிகள். முன்னாள் வி.புலிகளின் உறுப்பினர்களை நாசுக்காக சிங்கள இனவாத அரசு கொல்வதற்கான சாத்தியக்கூறுகளே அதிகம் உள்ளது.
  7. யாழ்ப்பாணத்தில் சிங்களவர்கள் அநேகமாக வாழ்வதாக கேள்விப்பட்டுள்ளேன். நீங்கள்? சாந்தனின் மரணத்துக்கு மக்கள் பயத்தில் வராமல் விட்டதே 1ஓ வீத உண்மை. நீங்கள் ஆமிக்கு புலிகள் அடித்ததால் தான் ஆமி மக்களை கொல்ல்கிறான் என்று சொன்னவராச்சே. கில்மிசா என்ன சச்சியையே நிறுத்தலாம். வசதி எப்படி??? தந்தை செல்வாவின் ஊர்வலத்துக்கு வந்தவர்களின் எண்ணிக்கையாவது தெரியுமா??
  8. லேபர் கட்சி அமோகமாக போவதாக பிபிசி உலக செய்திகள் சொல்லி வருகின்றது. சிஎன் என் ஜூலை 4 கொண்டாட்டங்களில் மூழ்கி கிடக்கிறது.
  9. அப்படியா? அப்போ மக்களால் தெரிவு செய்யப்பட்ட தமிழர் கூட்டணியின் தலைவரின் பூத உடலை கூட தூக்க 4 பேர் கூடவா இல்லை? இப்போதும் மக்கள் விழித்து கொண்டார்கள் எனலாமா?? மக்கள் எச்சரிக்கை அடைந்து விட்டார்கள் என நான் சொல்கிறேன் நீங்கள் எப்படி?? "டேய் கள்ளா "என்பது பொய்யா??😁 இல்லை. நீங்கள் புலிகளை நாசுக்காகவும் ,நேரடியாகவும் தாக்கும் ஒருவர் என நான் அடையாளம் காண்கிறேன். எனது நீண்ட கால அவதானிப்பு இது. இது பற்றிய உங்களின் நேர்மையான பதில் தேவை.
  10. சிங்கள உறுமய மாதிரி ஒரு கூட்டத்தை உருவாக்காமல் இந்தாள் விடாது. நிச்சயமாக ஓட்டுக்குழுக்களினை வைத்து இந்தியா செயற்பட இப்போது சச்சி அவர்கள் செயற்படுகிறார் போலுள்ளது. சச்சி யாழ் மாநகர முதல்வர் ஏன் கிறிஸ்தவராக இருக்க வேண்டும் போன்ற பதிவுகள் அவரின் முகப்புத்தகத்தில் வரும் போதே அவர் பற்றிய தெளிவான இந்திய முகம் தெரிந்தது.
  11. பிரான்சின் தேர்தலுக்கு பிறகு ஜேர்மன் தேர்தலுக்கு (செப்டம்பர் 2025 ஆக இருந்தாலும்) ஒலாவ் சுல்ஸ்(Olaf Scholz) துண்டை காணோம் துணியை காணோம் என ஓடுவார் என சக ஜேர்மன் நண்பன் சொல்கிறார். உங்களின் கருத்து என்னவாக இருக்கும் கு.மா அண்ணா.??
  12. எல்லா முடிவும் வர நியூயோர்க நேரம் அதிகாலை 2 மணியாகுமாம்.
  13. http://aruvi.com/img/uploads/2015/aruvi-news-photos/sivasakthi_ananthan.jpg விடுதலைப் புலிகள் மீதான சுமந்திரனின் வசைபாடலுக்கு வித்திட்டவர் சம்பந்தனே: சிவசக்தி ஆனந்தன்! Posted: 2020-05-17 06:25:27 EST தமிழீழ விடுதலைப்புலிகள் மீது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளர் சுமந்திரன் வசைபாடுவதற்கு வித்திட்டவர் அதன் தலைவரான சம்பந்தனாக இருக்கின்றார் என்று சுட்டிக்காட்டியுள்ள தமிழ் மக்கள் தேசியக் கூட்டணியின் பொதுச்செயலாளர் சிவசக்தி ஆனந்தன் வேலிக்கு ஓணான் சாட்சியா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார். அவர் விடுத்துள்ள ஊடக அறிக்கையில், தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட ஆயுதப்போராட்டம் சம்பந்தமாக எதிர்மறையான கருத்துக்களை கூட்டமைப்பின் பேச்சாளர் சிங்கள் ஊடகத்திற்கு வழங்கிய நேர்காணலில் குறிப்பிட்டிந்தார். அதற்கு கடுமையான கண்டனங்கள் எழுந்தததை அடுத்து கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் அக்கூற்று பற்றி தெளிவுபடுத்தல் அறிக்கையொன்றை விடுத்து அதற்கான நியயப்படுத்தல்களையும் செய்திருந்தார். உண்மையிலேயே சுமந்திரன் தன்னுடைய அரசியல் தலைவராக சம்பந்தனையே கொள்வதாக பகிரங்கமாக தெரிவித்துள்ளார். அதேநேரத்தில் சம்பந்தனைப் பொறுத்தவரையில் அவரும் தமிழீழ விடுதலைப்புலிகள் உட்பட ஆயுத இயக்கங்கள் பற்றி வெளிப்படையான நிலைப்பாடுகளை தெரிவிக்கும் ஒருவர் அல்லர். பாராளுமன்றத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட தடவைகள் தமிழ் மக்களுக்கான ஆயுத விடுதலைப் போராட்டத்தினை பயங்கரவாதமாக சித்தரித்து உரையாற்றியிருக்கின்றார். குறிப்பாக, போரின் பின்னரான நிலைமையிலும், கடந்த நல்லாட்சி அரசாங்கத்துடனான தேனிலவுக்காலத்திலும் இத்தகைய சித்தரிப்புக்களை அதிகமாகச் செய்திருந்தார். அதுமட்மன்றி, விடுதலைப்புலிகளை பயங்கரவாதிகள் என்றும் பாராளுமன்றத்திலே கூறியுள்ளார். அரச தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினை விடுதலைப்புலிகள் உருவாக்கவில்லை என்றும் கூறியிருக்கின்றார். அவர்கள் தன்னை கூட்டமைப்பின் தலைவராக நியமிக்கவில்லை என்றும், அவர்களின் கருத்துக்களுடன் இணைந்து செயற்படவில்லை என்றும் முழுப்பூசனிக்காயை சோற்றில் மறைப்பதுபோல் ஆயுதப்போராட்டம் மௌனிக்கப்பட்ட காலத்தில் பொய்யுரைத்திருந்தார். இவ்வாறான நிலையில் அவரினை தலைவராக ஏற்றிக்கும் சுமந்திரன் விடுதலைப்புலிகளையும், ஆயுதப்போராட்டத்தினையும் எவ்வாறு ஆதரிப்பார். குருவுக்கு மிஞ்சிய சீடன் என்பது போன்று சம்பந்தனை விட ஒருபடி மேலே சென்று போராட்டத்தினை கொச்சைப்படுத்தியிருக்கின்றார். பின்னர் சர்ச்சைகள் ஏற்படவும் அவருடைய கருத்துக்களை தெளிவு படுத்தி சம்பந்தன் அறிக்கை விடுகின்றார். இது வேடிக்கையாக இருக்கின்றது. வேலிக்கு ஓணான் சாட்சியா? மூன்று தசாப்தங்களாக எத்தனையோ உயிர்த்தியாகங்கள் நடைபெற்றிருக்கின்றன. அந்த தியாகங்களை மதிக்காது வெறுமனே வாக்குகளைப் பெறுவதற்காக அவர்களை தியாகிகள் என்பதும் பின்னர் அவர்களை துரோகிகள் என்பது மேட்டுக்குடி அரசியல் தரப்பின் வழக்கமாகிவிட்டது. ஆகவே சம்பந்தன், சுமந்திரன் கூட்டணியே கடந்த நான்கரை வருடங்கள் தமிழர்களை ஏமாற்றி நீதிக்கான கோரிக்கையையும் மலினப்படுத்தியது. இப்போது அவர்களின் உண்மையான முகத்திரையும் கிழிந்துவிட்டது. எனவே தமிழ் மக்களே தீர்க்கமான தீர்மானம் எடுப்பதற்கு தலைப்பட்டள்ளார்கள் என்றுள்ளது. https://www.aruvi.com/article/tam/2020/05/17/11896/
  14. சம்பந்தன் மௌனம் கலைய வேண்டும்-சிவசக்தி ஆனந்தன் Posted on October 17, 2016 by நிலையவள் 322 0 http://www.kuriyeedu.com/wp-content/uploads/2016/10/sivasakthi-ananthan.pngதமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் மௌனத்தை கலைத்து உண்மைகளை வெளியிட வேண்டும் என்று கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் வலியுறுத்தியுள்ளார். புதிய அரியல் யாப்பைத் தயாரிக்கும் பணிகள், இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வு மற்றும் காணி அபகரிப்பு, மீள்குடியேற்றம், அரசியல் கைதிகளின் விடுதலை, காணாமல் போனோர் விவகாரம் உட்பட தமிழ் மக்களின் பிரதான பிரச்சனைகள் தொடர்பில் கூட்டமைப்பு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தொடர்பில் ஓரிரு நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் மாத்திரம் கதைப்பதை நிறுத்திவிட்டு, அனைவருடனும் கலந்துரையாட வேண்டும் என்றும் சிவசக்தி ஆனந்தன் கோரிக்கை விடுத்துள்ளார். கொழும்பிலுள்ள ஊடகமொன்றிற்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான தீர்வுகள் தொடர்பில் அரசாங்கத்துடன் இந்த வருட இறுதிக்குள் பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டும் எனவும் கட்சிக்குள் எவ்வாறான விடயங்கள் இடம்பெறுகின்றது என்பதனை அனைவருக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும் வலியுறுத்திய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் மேலும் கருத்து வெளியிடுகையில், மீள்குடியேறிய மக்களுக்கான வீட்டுத் திட்டம் யுத்தம் நிறைவடைந்து 7 வருடங்கள் கடந்துள்ளது. இந்த காலப்பகுதியில் யுத்தத்தால் இடம்பெயர்ந்துள்ள மக்களில் ஒரு பகுதியினர் தமது சொந்தக் காணிகளில் மீள்குடியேறியிருக்கின்றனர். மேலுமொரு பகுதியினர் கால்நூற்றாண்டு காலமாக அகதி முகாம்களில் இருக்கின்றார்கள். மீளக்குடியேறியுள்ள மக்கள் தமது சொந்தக்காணியில் வசித்தாலும் அவர்களுக்கான அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படாத நிலைமையே உள்ளது. அவர்களுக்கு தேவையான நிரந்தர வீட்டுத்திட்டம் வாழ்வாதாரம் அல்லது ஏனைய உட்கட்டமைப்பு வசதிகள் பல கிராமங்களுக்கு இன்னும் செய்து கொடுக்கப்படவில்லை. அதனால் வருடந்தோறும் ஏற்படும் பருவமழை காரணமாக தற்காலிக வீடுகளில் உள்ள மக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். ஆகவே 7 வருட காலத்தில் இந்த மக்களுக்கான வீட்டுத்திட்டம் வழங்குவதில் கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கமாக இருந்தாலும் சரி தற்போதைய அரசாங்கத்தின் காலத்திலும் சரி வீட்டுத்திட்டம் வழங்கப்படவில்லை என்பது பாரிய குற்றச்சாட்டாகும். நாங்கள் புதிய அரசாங்கத்துடனும் கூட 65 ஆயிரம் வீட்டுத்திட்டத்தை ஒரு இலட்சத்தி 30 ஆயிரமாக மாற்றி 21 இலட்சமான அந்த தொகையை இருவருக்கு வழங்குமாறும் கோரியிருந்தோம். அத்துடன் பொருத்து வீடு என்பது எமது பகுதி காலநிலைக்கு ஏற்றதாக இருக்காது என்பதனால் நிரந்தரமான வீடாக அமைக்குமாறும் கேட்டுள்ளோம். குறிப்பாக ஜனாதிபதி, பிரதமர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் சுவாமிநாதன் ஆகியோரின் கவனத்திற்கு கொண்டு வந்தும் இந்த பொருத்து வீட்டை நிரந்தரமான வீடாக வழங்குமாறு கேட்டிருந்தும் அரசாங்கமோ அமைச்சரோ இதுவரை எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை. கடந்தவாரம் கூட சுவாமிநாதன் தலைமையில் வட மாகாண நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான மாகாண அபிவிருத்தி சம்பந்தமான கலந்துரையாடல் இடம்பெற்றது. அந்த இடத்திலும் இது தொடர்பாக வலியுறுத்தப்பட்டது. ஆனால் அந்த இடத்திலும் சுவாமிநாதன் பொருத்து வீட்டைப்பற்றித்தான் பேசிக்கொண்டிருக்கின்றார். எவரும் இந்த வீட்டைத் தருவதற்கு முன்வருகின்றார்கள் இல்லை என்றார். ஆனால் அரசாங்கம் குறைந்தபட்சம் இந்த போரால் பாதிக்கப்பட்டு உயிரிழப்புகள் சொத்திழப்புகள் மட்டுமன்றி காணாமல்போனோரின் உறவுகள், நீண்டகாலம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்கள், பெண் தலைமைத்துவ குடும்பங்கள் போன்றோர் அடிப்படை வசதிகள் எதுவும் இன்றி உள்ளனர். ஆனால் அவர்களுக்கு இந்த 7 வருடங்களில் நிவாரணங்களை வழங்காமல் இந்த பாதிப்புக்கு முக்கிய காரணமாக உள்ள முப்படையினரையும் அவர்களது குடும்பங்களையும் அவர்களுக்கு தேவையான சலுகைகளையும் வசதிகளையும் வழங்குவது தொடர்பாகவே ஜனாதிபதியும் பிரதமரும் பேசிக்கொண்டிருக்கின்றார்களே தவிர பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான வசதிகளை செய்வதற்கு இந்த அரசாங்கம் முன்வரவில்லை. இது கண்டிக்கத்தக்க விடயம். கிடைத்துள்ள வீடுகளையாவது நிரந்தரமான வீடுகளாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். இது தொடர்பாக பிரதேச, மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் பேசப்பட்டாலும் கூட அதில் எந்தவிதமான முடிவும் எடுக்கமுடியாத நிலை உள்ளது. ஒட்டுமொத்தத்தில் இந்த அரசாங்கம் மக்களினுடைய அபிவிருத்தி வாழ்வாதாரம் ஆகியவற்றிலும் கவனம் செலுத்தவில்லை. இரா.சம்பந்தன் கட்சி உறுப்பினர்களுடன் இணைந்து செயற்பட வேண்டும் நீண்ட காலமாக புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சனைக்கான அரசியல் தீர்வைக் காணும் விடயத்திலும் கூட அக்கறையற்ற போக்கே உள்ளது. இந்த விடயம் தொடர்பாக கூட்டமைப்பின் தலைவர் எதிர்க்கட்சித்தலைவர் என்ற வகையில் சம்பந்தன் ஐயா தனது மௌனமான போக்கை கலைக்கவேண்டும். இந்த அரசாங்கத்துடன் நேரடியான பேச்சுக்கு செல்லவேண்டும். அந்த பேச்சுவார்த்தையில் எங்களுடைய உடனடிப்பிரச்சனைகள் என்ன? அரசியல் தீர்வு சம்பந்தமான விடயத்தில் அரசாங்கம் என்ன நிலைப்பாட்டை கொண்டிருக்கின்றது? என்பது தொடர்பாக எமது கட்சி கூட்டங்களில் பல தடைவை வலியுறுத்தியும் கூட சம்பந்தனால் இந்த அரசாங்கத்திற்கும் தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குமிடையில் ஓர் உத்தியோகபூர்வ பேச்சுவார்த்தைக்கு செல்வதற்கு சம்பந்தனும் விரும்பவில்லை அரசாங்கமும் விரும்பவில்லை. ஆனால் மக்கள் மாவட்டம் தோறும் தங்களது பிரதிநிதிகளுக்கு கடுமையான அழுத்தங்களைக் கொடுத்துக்கொண்டிருக்கின்றார்கள். ஆட்சியில் இருக்கின்ற அரசாங்கத்தை வெறுமனே பாதுகாப்பது தான் எதிர்க்கட்சித் தலைவரதோ அல்லது கூட்டமைப்பின் தலைவரது கடமை என்று இல்லாமல் எமக்கு மக்கள் வழங்கிய ஆணைக்கு நாங்கள் மதித்து நடக்கவேண்டும். இதில் கூட்டமைப்பு தலைவரின் மௌனம் அல்லது அசமந்தம் இராஜதந்திர ரீதியாக பின்பற்றுகின்றார் என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய விடயம் அல்ல. அரசாங்கத்தில் உள்ள் பிரதான இரு கட்சிகளும் தங்களது நிகழ்ச்சி நிரலில் சரியாக சென்று கொண்டிருக்கின்றார்கள். எனவே அரசாங்கததின் நிகழ்ச்சி நிரலுக்கு பின்னால் நாங்கள் இழுபட்டு செல்ல முடியாது. கூட்டமைப்பின் தலைவர் எந்த விதமான அழுத்தமும் கொடுக்காமல் மென்போக்காக இருந்து பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியாது. அடுத்த ஆண்டைப் பொறுத்தவரையில் தெற்கிலும் வடக்கிலும் பல தேர்தல்கள் இடம்பெறவுள்ள காரணத்தால் அடுத்த ஆண்டு இந்த அரசாங்கத்துடன் இணைந்து எதையும் செய்ய முடியாது. ஆனால் சம்பந்தன் ஒரு சிலரோடு பல விடயங்களை பேசிக்கொண்டிருக்கின்றார். அதனால் 2016 முடிவதற்குள் தீர்வு வரும் என்ற வாக்குறுதியை கொடுத்துள்ளார். ஆகவே அந்த நாட்களும் இன்னும் சொற்ப நாட்களாகவே உள்ளது. ஆனால் இதுவரை அவ்வாறாக தீர்வு கிடைப்பதற்கான சூழ்நிலை எதுவும் இல்லை என்பது சிறுபிள்ளைக்கு கூட தெரியும். ஆகவே எமக்கு ஆதரவளித்த மக்களை தொடர்ச்சியாக ஏமாற்றிக்கொண்டிருக்க முடியாது என தெரிவித்தார். https://www.kuriyeedu.com/?p=19364
  15. பிரான்சில் 7500 private பாடசாலைகள் உள்ளன.அவற்றில் 85 வீதமானவை கத்தோலிக்க பாடசாலைகள். கனடாவில் கத்தோலிக்க பாடசாலை வட்டாரம் உண்டு. அவற்றின் கீழ் நிறைய கத்தோலிக்க பாடசாலைகள் இயங்குகின்றன.
  16. இந்தியாவின் அப்பட்டமான அடிமைகள். மக்கள் இவர்களுக்கு தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும்.
  17. தொடர்ந்து 3 பெனால்டிகளை தடுத்த டியாகோ கோஸ்டா பற்றி ஒரு வரி கூட பி பி சி எழுதவில்லை. அங்கே நிற்கிறது பி பி சி.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.