Everything posted by கிருபன்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
சொன்னது சுத்துமாத்து சுமந்திரன் ஆட்களாக்கும்🤪 திகாம்பரம் - தொலைபேசி, ஜீவன் தொண்டமான் - யானை அநுர அலையில் எல்லோரும் அள்ளுப்பட்டுப்போனார்கள் போலிருக்கு😆 BALAPITIYA Logo Candidate Vote Pre % Jathika Jana Balawegaya 21,681 65.14% Samagi Jana Balawegaya 5,588 16.79% Sarvajana Balaya 1,855 5.57% New Democratic Front 1,471
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
POSTAL VOTES - NUWARA-ELIYA DISTRICT Logo Candidate Vote Pre % Jathika Jana Balawegaya 13,937 71.84% Samagi Jana Balawegaya 2,477 12.77% United National Party 1,660 8.56% Sri Lanka Podujana Peramuna 303 1.56% POSTAL VOTES - MATALE DISTRICT Logo Candidate Vote Pre % Jathika Jana Balawegaya 17,123 79.59% Samagi Jana Balawegaya 2,201 10.23% New Democratic Front 954 4.43% Sri Lanka Podujana Peramuna 637 2.96%
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
POSTAL VOTES - BADULLA DISTRICT Logo Candidate Vote Pre % Jathika Jana Balawegaya 33,780 81.01% Samagi Jana Balawegaya 3,866 9.27% New Democratic Front 2,227 5.34% Sri Lanka Podujana Peramuna 675 1.62%
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
POSTAL VOTES - TRINCOMALEE DISTRICT Logo Candidate Vote Pre % Jathika Jana Balawegaya 9,705 61.05% Samagi Jana Balawegaya 2,853 17.95% Ilankai Tamil Arasu Kadchi 1,749 11.00% New Democratic Front 382 2.40%
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
ஆம். உறுதிப்படுத்த நேரம் எடுக்கும்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
General Elections 2024: Kalutara, Postal; NPP - 29,076 SJB - 3,340 NDF - 1,528 SLPP - 1,160 SB - 613- adaderana.lk நண்பனின் பதிவு (யாழ்ப்பாணத்தில் இருந்து) . யாழ்ப்பாணத்தில் NPP 3 ஆசனங்களைப் பெற்றுள்ளது, இது எமது அரசியல் களத்திற்கு பெறுமதியான பாடமாக விளங்குகிறது. தமிழ் தேசியத்தை சீர்திருத்துவதில் கவனம் செலுத்த வேண்டிய தருணம் இது. அனைத்து தமிழ் தேசியவாத தலைவர்களும் இந்த முக்கிய தருணத்தை உணர்ந்து, ஒரு மன்றத்தை உருவாக்க ஒன்றிணைந்து, தற்போதுள்ள பிரச்சினைகளைத் தீர்ப்பதில் பணியாற்ற வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். இந்த சமீபத்திய முன்னேற்றங்களுக்கு விடையிறுக்கும் வகையில் தமிழ் தேசியத்தை வலுப்படுத்தவும் நிறுவவும் ஒரு கூட்டு, அர்த்தமுள்ள முயற்சியை மேற்கொள்வோம்.
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
Kalutara Cumulative 29,076 - 0 Jathika Jana Balawegaya 78.99%78.99% Order 3,340 - 0 Samagi Jana Balawegaya 9.07%9.07% Order 1,913 - 0 New Democratic Front 5.20%5.20% Order 1,160 - 0 Sri Lanka Podujana Peramuna 3.15%3.15% Order 613 - 0 Sarvajana Balaya 1.67%1.67% Order 708 - 0 Other
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
எல்லோரும் ஓம் என்றால் தேர்தல் முடிவுகளுக்கு இந்தத் திரியைப் பாவிக்கலாம். ☺️
-
பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
மாவட்ட ரீதியில் பதிவான வாக்குகள் சதவீதம் ! kugenNovember 14, 2024 2024 பாராளுமன்றத் தேர்தலில் மாவட்ட ரீதியாக பதிவாகியுள்ள வாக்கு சதவீதம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. கொழும்பு 65% நுவரெலியா 68% குருநாகல் 64% மட்டக்களப்பு 61% மாத்தறை 64% புத்தளம் 56% அனுராதபுரம் 65% பதுளை 66% மன்னார் - 70% திருகோணமலை - 67% முல்லைத்தீவு - 63 பொலனறுவை - 65% இரத்தினபுரி - 65 காலி - 64% யாழ்ப்பாணம் - 69% ஹம்பாந்தோட்டை - 60% மாத்தளை - 67% கேகாலை - 65% மொனராகலை - 63% வவுனியா -65 கிளிநொச்சி - 62% கண்டி - 62% களுத்துறை - 64% அம்பாறை - 62 % கம்பஹா - 66% இதேவேளை, வாக்காளர் பட்டியலின்படி, ஒரு கோடியே எழுபத்தி ஒரு லட்சத்து நாற்பதாயிரத்து முந்நூற்று ஐம்பத்து நான்கு வாக்காளர்கள் இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க தகுதிப்பெற்றுள்ளனர். 22 தேர்தல் மாவட்டங்களில், கம்பஹா மாவட்டம் அதிக வாக்காளர்களைக் கொண்ட மாவட்டமாக காணப்படுவதுடன் அந்த மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 18 லட்சத்து 81,129 பேர் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. கொழும்பு மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்காளர்களின் எண்ணிக்கை 17 இலட்சத்து 65,351 ஆகும். வன்னி தேர்தல் மாவட்டத்தில் குறைந்தளவான வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன் அந்த எண்ணிக்கை மூன்று இலட்சத்து 6,081 ஆகும். அதேநேரம், 2034 வாக்கு எண்ணும் நிலையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது. நள்ளிரவுக்குள் முதல் தபால் வாக்கு முடிவுகளை வௌியிட எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. https://www.battinews.com/2024/11/blog-post_203.html
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
முடிவுகளை அறிவிக்க வேண்டாம் Editorial / 2024 நவம்பர் 14 , பி.ப. 06:13 - தேர்தல்கள் ஆணைக்குழுவினால், உத்தியோகபூர்வ முடிவுகள் அறிவிக்கப்படும் வரையிலும், உத்தியோகபூர்வமற்ற முடிவுகளை அறிவிக்க வேண்டாம் என்று ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது. https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/முடிவுகளை-அறிவிக்க-வேண்டாம்/150-347131
-
சட்டவிரோத திஸ்ஸ விகாரை கட்டுமானத்திற்கு எதிராக கவனயீர்ப்புப் போராட்டம் தொடர்கிறது
சட்டவிரோத திஸ்ஸ விகாரை; தையிட்டியில் தொடர் கவனயீர்ப்பு போராட்டம் மீண்டும் இன்று ஆரம்பம் தையிட்டியில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ள திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும், சூழவுள்ள தமிழ்மக்களுக்குச் சொந்தமான தனியார் காணிகளை மீளவும் உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை மாலை 4.30 மணியளவில் மேற்படி விகாரைக்கு அருகில் மீண்டும் தொடர் கவனயீர்ப்புப் போராட்டம் ஆரம்பமாகவுள்ளது. இந்த கவனயீர்ப்புப் போராட்டம் முழுநோன்மதி நாளான நாளை வெள்ளிக்கிழமை மாலை 6 மணி வரை தொடர்ச்சியாக இடம்பெறவுள்ளதாகவும் இந்தப் போராட்டத்தில் அனைத்துத் தரப்பினரையும் கலந்து கொள்ளுமாறும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் அழைப்பு விடுத்துள்ளார். கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக திஸ்ஸ விகாரைக் கட்டுமானத்தை அகற்றக் கோரியும், விகாரைக்கு சூழவுள்ள காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்குமாறு கோரி மாதம் தோறும் முழுநோன்மதி தினத்தை முன்னிட்டு தையிட்டியில் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது https://akkinikkunchu.com/?p=299111
-
வடமராட்சி கிழக்கில் அகற்றப்பட்ட வீதி தடைகள்!
அகற்றப்பட்டுள்ளன என்று வந்திருக்கவேண்டும்! எனக்கு ரிப்போர்ட்டர் வேலை தந்திருந்தால் இப்படி நீட்டி முழக்கி எழுதியிருப்பேன்😉👇🏿 இராணுவம், மற்றும் பொலிஸ் இணைந்த வீதி தடைகள் அகற்றப்பட்டு நேற்று காலை முதல் பொதுமக்களின் சுதந்திரமான போக்குவரத்திற்கு வழங்கப்பட்டுள்ளன.
-
”எக்ஸ் பக்கம் ஒரு நச்சு பிளாட்பார்ம்” : வெளியேறிய ‘தி கார்டியன்’பத்திரிகை!
”எக்ஸ் பக்கம் ஒரு நச்சு பிளாட்பார்ம்” : வெளியேறிய ‘தி கார்டியன்’பத்திரிகை! Kumaresan MNov 14, 2024 12:12PM பிரிட்டனின் கவுரவமிக்க பத்திரிகைகளில் ‘தி கார்டியன்’ முக்கியமானது. 1821 ஆம் ஆண்டு ‘தி மான்செஸ்டர் கார்டியன்’ என்ற பெயரில் இந்த பத்திரிகை மான்செஸ்டர் நகரில் தொடங்கப்பட்டது. பின்னர், ‘தி கார்டியன்’ என்ற பெயருடன் லண்டனுக்கு மாறியது. தற்போது, தலைமையகம் லண்டனில் உள்ளது. நாள் ஒன்றுக்கு 10 லட்சத்துக்கும் மேல் இந்த பத்திரிகை விற்பனையாகிறது. ‘தி அப்சர்வர் ‘ என்ற பத்திரிகையும் இந்த குழுமத்துக்கு சொந்தமானதுதான். இந்த நிலையில், தி கார்டியன் பத்திரிகை எக்ஸ் பக்கத்தில் இருந்து விலகுவதாக தெரிவித்துள்ளது. தீவிர வலது சாரிகளுக்கு ஆதரவாகவும் இனவாதத்துக்கு ஆதரவான கருத்துக்களும் எக்ஸ் பக்கத்தில் பகிரப்படுவதால் இந்த முடிவு எடுத்துள்ளதாக தி கார்டியன் தெரிவித்துள்ளது. ‘இனிமேல், தங்களது செய்திகள் எதுவும் எக்ஸ் பக்கத்தில் பகிரப்படாது . அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெறவிருந்ததால் மட்டுமே இவ்வளவு நாள் காத்து கொண்டிருந்தோம். எக்ஸ் பக்கம் நச்சு செய்திகளை பரப்பும் ஒரு தளம் ஆகும். அதன் உரிமையாளர் எலான் மஸ்க் தனது அரசியல் கருத்துக்களை பரப்பும் ஒரு களமாக அதை மாற்றி கொண்டிருக்கிறார்’ என்று கார்டியன் குற்றம் சாட்டியுள்ளது. மேலும், வாசகர்கள் நேரடியாக தங்கள் ஆன்லைன் தளத்தில் வந்து செய்திகளை வாசிக்கும்படியும் தி கார்டியன் கேட்டுக் கொண்டுள்ளது. அதே வேளையில், வாசகர்கள் தங்கள் கட்டுரைகள், செய்திகளை பகிர எந்த தடையும் இல்லை என்றும் தெரிவித்துள்ளது. கார்டியன் வெளியேறினாலும் அதன் ஊழியர்கள் தொடர்ந்து எக்ஸ் பக்கத்தில் செயல்பட எந்த தடையும் விதிக்கப்படவில்லை. செய்திகளை சேகரிக்கும் நோக்கத்தில் அந்த பத்திரிகையின் செய்தியாளர்கள் எக்ஸ் பக்கத்தில் செயல்படுவார்கள். தி கார்டியன் எடுத்த இந்த முடிவு குறித்து எலான் மஸ்க் பொருத்தமற்றது என கருத்து தெரிவித்துள்ளார். தி கார்டியன் பத்திரிகையை 1 கோடியே 8 லட்சம் பேர் ட்விட்டர் பக்கத்தில் பின் தொடர்ந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. https://minnambalam.com/india-news/british-news-portal-the-guardian-quits-x-page/
-
பாராளுமன்ற தேர்தல்கள் அனைத்திலும் வாக்கை செலுத்திய 106 வயது முதியவர் !
பாராளுமன்ற தேர்தல்கள் அனைத்திலும் வாக்கை செலுத்திய 106 வயது முதியவர் ! ShanaNovember 14, 2024 106 வயது முதியவர் யோன் பிலிப் லூயிஸ் இன்று (14) பாராளுமன்றத்தேர்தலுக்கான தமது வாக்கை திருகோணமலை புனித மரியாள் கல்லூரியில் உள்ள வாக்குச்சாவடியில் செலுத்தினார். யாழ்ப்பாணத்தில் 18.11.1918 இல் தாம் பிறந்து, தமது 22 வயதில் திருகோணமலைக்கு வந்து தொடர்ந்து அங்கே வாழ்ந்து வருவதாகவும், இலங்கையின் பாராளுமன்ற தேர்தல்கள் அனைத்திலும் தாம் வாக்களித்துள்ளதாகவும் அவர் கூறினார். https://www.battinews.com/2024/11/106.html
-
பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது
பாராளுமன்றத் தேர்தல் 2024: வாக்குப்பதிவு தொடங்கியது இலங்கையின் 10ஆவது பாராளுமன்றத்துக்கான தேர்தல், இன்று வியாழக்கிழமை காலை 7 மணிக்கு ஆரம்பமாகியது. பாராளுமன்றத்திலுள்ள 225 ஆசனங்களில் மக்களின் நேரடி வாக்குகள் மூலம் தெரிவாகும் 196 பாராளுமன்ற ஆசனங்களுக்காக 8,352 வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளனர். இந்த தேர்தலில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளைச் சேர்ந்த 5006 வேட்பாளர்களும் 3346 சுயேச்சைக்குழு வேட்பாளர்களும் போட்டியிடும் நிலையில் இவர்களுக்கு 17,140,354 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். நாடு முழுவதும் 22 தேர்தல் மாவட்டங்களிலும் 160 தொகுதிகளில் அமைக்கப்படவுள்ள 13,421 வாக்களிப்பு நிலையங்களில் காலை 7 மணி முதல் மாலை 4 மணிவரையில் வாக்களிப்புகள் இடம்பெறவுள்ளன. https://www.tamilmirror.lk/liveblog/347084/பாராளுமன்றத்-தேர்தல்-2024-வாக்குப்பதிவு-தொடங்கியது தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும் 2024 பாராளுமன்றத் தேர்தலின் முதல் தேர்தல் முடிவுகள் இரவு 10 மணிக்கு வெளியாகும். தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இன்று தெரிவித்தார்.
-
வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும்
வாக்காளர் அட்டை இன்றியும் வாக்களிக்க முடியும் November 14, 2024 வாக்காளர்கள் காலையலேயே சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.செல்லுபடியாகும் அடையாள அட்டையுடன் நேரத்துடனே வாக்களிப்பு நிலையத்திற்கு சென்று வாக்களிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க அறிவித்துள்ளார். எவ்வாறாயினும் இதுவரை உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டைகள் கிடைக்காவிட்டாலும் அது வாக்களிக்க தடையாக இருக்காது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.’உத்தியோகபூர்வ வாக்காளர் அட்டை கிடைக்காவிட்டால் எந்தப் பிரச்சினையும் இல்லை.உங்களிடம் செல்லுபடியாகும் அடையாள அட்டை இருந்தால் வாக்களிக்க வாய்ப்பு கிடைக்கும். தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு, செல்லுபடியாகும் சாரதி அனுமதிப் பத்திரம், முதியோர் அடையாள அட்டை, மத குருமார்களுக்கான அடையாள அட்டை, ஆட்பதிவு திணைக்களத்தால் வழங்கப்பட்ட தகவல் உறுதிப்படுத்தல் கடிதம், மாற்றுத்திறனாளிகளுக்கான தேர்தல் ஆணைக்குழுவால் வழங்கப்பட்ட அல்லது தற்காலிக அடையாள அட்டை ஆகியவற்றில் ஒன்றை பயன்படுத்தி வாக்களிக்க முடியும். குறிப்பாகஇ எப்படி வாக்களிக்க வேண்டும் என்பதை சுருக்கமாக குறிப்பிட்டால் நீங்கள் பெறும் வாக்குச் சீட்டின் மேல் பகுதியில் அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சைக் குழுக்களின் பெயர்கள் மற்றும் சின்னங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன.ஒரு அரசியல் கட்சி அல்லது நீங்கள் விரும்பும் சுயேச்சைக் குழுவிற்கு முன்னால் உள்ள பெட்டியில் புள்ளடி இடுவதன் மூலம் நீங்கள் வாக்களிக்கலாம். ஒரு புள்ளடி மாத்திரமே இதன்போது பயன்படுத்த முடியும். அத்துடன் நீங்கள் விருப்பு வாக்கினை அளிக்க நினைத்தால் வாக்குச் சீட்டின் கீழே உங்கள் மாவட்டம் தொடர்பான வேட்பாளர்களின் விருப்ப எண்ணுக்கான சில பெட்டிகள் உள்ளன.அந்தப் பெட்டிகளில் ஒன்று இரண்டு அல்லது மூன்று வேட்பாளர்களுக்கு உங்கள் விருப்பு வாக்கினை அளிக்க முடியும் வாக்களிக்க அந்த பெட்டிகளில் புள்ளடி மாத்திரமே பயன்படுத்த வேண்டும்’ என்றார். https://eelanadu.lk/வாக்காளர்-அட்டை-இன்றியும/
-
வடமராட்சி கிழக்கில் அகற்றப்பட்ட வீதி தடைகள்!
வடமராட்சி கிழக்கில் அகற்றப்பட்ட வீதி தடைகள்! யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட மருதங்கேணி, நாகர்கோவில், வலிக்கண்டி பகுதிகளில் போடப்பட்டிருந்த இராணுவம், மற்றும் பொலிஸ் இணைந்த வீதி தடைகள் நேற்று காலை முதல் வழங்கப்பட்டுள்ளன. இதேவேளை, சட்டவிரோத மணல் அகழ்வு உட்பட்ட செயற்பாடுகளை கட்டுப்படுத்த போடப்பட்ட குறித்த வீதித்தடைகளால் மக்களின் சுதந்திரமான போக்குவரத்துக்கு இடையூறாக அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. (ச) https://newuthayan.com/article/வடமராட்சி_கிழக்கில்_அகற்றப்பட்ட_வீதி_தடைகள்!
-
எதிர்க்கட்சி அரசியல் பண்பாடு
எதிர்க்கட்சி அரசியல் பண்பாடு sudumanalNovember 13, 2023 கீழைத்தேய பண்பாட்டு கட்டமைவுள் உணர்வுசார் அல்லது உணர்ச்சி சார் வெளிப்பாடுகள் தூக்கலாகவே தெரிவதுண்டு. அது மனிதப் பெறுமதி கொண்ட பண்பாற்றலாகும். அதேநேரம் இது அரசியல் தளத்தில் உணர்ச்சிவாத அரசியலுக்கு (emotional politic) சாதகமானதாக அமைந்து, அறிவை பின்னுக்குத் தள்ளுகிற செயற்பாட்டை நிகழ்த்துகிறது. இலங்கையைப் பொறுத்தவரை தமிழ் மக்களும் 70 களிலிருந்து இதற்குள் அகப்பட்டு சுழன்றிருக்கிறார்கள். அது இப்போதும் தொடர்கிறது. எமது அறிவை மீறி இன்றைய என்பிபி அலையினுள் எமது உணர்ச்சிவாத அரசியல் மூழ்கிப் போயிருக்கிறதா என எண்ணத் தோன்றுகிறது. இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடு. பருண்மையாக இங்கு சிங்கள மக்கள், வடக்க கிழக்கு தமிழ் மக்கள், முஸ்லிம் மக்கள், மலையக மக்கள் என நான்கு தேசிய இனங்கள் இருப்பதாக தற்போது பல அரசியலாளரும் வரைபு செய்கிறார்கள். இந்த தேசிய இனங்கள் தங்கள் மொழி, பண்பாடு, நிலப்பரப்பு சார்ந்த தனித்துவங்களை பேணும் ஓர் அரசியல் கட்டமைப்பு அரசு (state) வடிவத்துள் பேணப்படுகிறபோது, அமைதியான வாழ்வை தரிசிக்க முடியும். அப்போதான் சகலரும் இத் தனித்துவங்களோடான பரஸ்பர புரிந்துணர்வுடன் இலங்கையராக தம்மை முழுமையாக உணர முடியும். ஜனநாயக சோசலிச குடியரசு என பெயர்ப்பலகை தொங்கவிட்ட நாடான இலங்கை இந்த திசையில் கடந்த 70 வருடமும் பயணிக்கவில்லை. வெள்ளையர்கள் வெளியேறியபின் அது பெருந்தேசிய, பௌத்த மேலாதிக்க அரசுக் கட்டமைப்புடன் உருப்பெற்று, அதன்வழி பயணித்ததால் இன்று நாம் இந்த நிலையை வந்தடைந்திருக்கிறோம். போரும், போராட்டத்தின் தோல்வியும், தமிழ் விடுதலை இயக்கங்களினது பிழையான அரசியல் போக்குகளும் தீர்மானங்களும் கூடவே கொலைக் கலாச்சாரமும் எல்லாம் சேர்ந்து தமிழ் மக்களை “பிச்சை வேண்டாம் நாயைப் பிடி” என்ற நிலைக்குள் தள்ளி 15 வருடங்களுக்கு மேலாகிறது. அரசுக் கட்டமைப்பானது இன்னும் இறுக்கமடைந்து விட்டது. அதை நிகழ்த்திய அரசாங்கங்களின் யுத்தச் செயற்பாடுகள் அவர்களது ஊழல் மோசடிகளுக்கான கதவுகளை மேலும் அகலத் திறந்து, எல்லா இன மக்களையும் பின்கதவால் பிச்சைப் பாத்திரத்துடன் துரத்தியது. இது நாட்டின் பொருளாதாரத்தை மோசமாகப் பாதித்து, அதன் எதிர்ப்புப் போராட்ட வடிவமாக 2022 இல் அரகலய எழுச்சி தோன்றியது. அது ஒரு முற்போக்கான பாத்திரத்தை வகித்தது எமக்கு கிடைத்த ஓர் அரசியல் படிநிலை வெற்றியாகும். அது அரசாங்கத்துக்கு எதிராக “மாற்றம்” (அதை அரசியல் பண்பாட்டு மாற்றம் எனலாம்) என்ற கோசத்தை மட்டுமல்ல, நிலவுகிற அரசுக் கட்டமைப்புக்கும் (state structure) எதிராக “முறைமை மாற்றம்” என்ற மிக காத்திரமான முழக்கத்தையும் முன்வைத்துப் போராடியது. இதற்குக் காரணம் அரகலயவை நடத்திய இளஞ் சத்ததி பேரினவாத கட்சிகளுக்கு வெளியில் இருந்தவர்களாக மட்டுமல்ல, சோசலிசம் சமத்துவம் போன்ற சிந்தனைப் போக்கை கொண்டவர்களாகவும், இனவாதத்துக்கும் போருக்கும் எல்லாவகை ஒடுக்குமுறைகளுக்கும் எதிரானவர்களாகவும் இருந்தது முக்கிய காரணம். அத்தோடு 30 வருட போரின் தாக்கத்தை -வெவ்வேறு அளவுகளில்- எல்லா இன மக்களும் அனுபவித்ததும் களைப்படைந்ததும் இன்னொரு காரணம். அரகலயவை முன்னின்று நடத்திய “முன்னிலை சோசலிசக் கட்சி” ஆனது ஜேவிபியின் இனவாதப் போக்கு, போர் ஆதரவு நிலைப்பாடு, அதிகாரப் பகிர்வின் மீதான ஒவ்வாமை என்பவற்றுக்கு எதிராகவும், அதன் சோசலிச நழுவல் போக்குக்கு எதிராகவும் அதிலிருந்து வெளியேறியவர்களால் 2012 இல் ஆரம்பிக்கப்பட்ட ஒரு முன்னணியாகும். இவர்களோடு சேர்ந்து பல முற்போக்கு சிந்தனை கொண்ட குழுக்களும், உதிரிப் புத்திஜீவிகளும் செயற்பாட்டாளர்களும் அரகலவை முன்னெடுத்தார்கள். இந்தப் போராட்டத்தில் இடையில் வந்து சேர்ந்த ஜேவிபியானது அரகலய இடைக்காலத்தில் பலவீனப்பட்டிருந்தபோது அதிலிருந்து விலகிக் கொண்டது. பின் மீண்டுமான அரகலய புத்தெழுச்சியின் பின் திரும்பவும் அதற்குள் வந்து இணைந்து கொண்டது. நாடு முழுவதும் அரகலய ஏற்படுத்திய சிந்தனைத் தூண்டலானது அரசியல் பண்பாட்டில் ஒரு பண்பு மாற்றத்தைக் கோரியது. அந்தக் கோரலை அல்லது முழக்கத்தை ஏற்கனவே பெரும் அமைப்புக் கட்டுமானமாக இருந்த ஜேவிபி தன்வசமாக்கியது. 2019 இல் 3 வீத வாக்குகளைப பெற்ற ஜேவிபி 2024 இல் 42 வீத வாக்குகளைப் பெறுமளவுக்கு வளர்ச்சியுற -கட்சி என்ற அடிப்படையில்- எந்த புரட்டிப் போடலையும் செய்ததில்லை. எதுவும் வெளித் தெரியவுமில்லை. அநுரகூட தனது வெற்றியை எதிர்பார்த்திருக்கவில்லை என்றால் இந்த வளர்ச்சியின் இயங்கியலை எப்படி விளக்க முடியும். ஆக, அரகலய மக்கள் போராட்டத்தின் விளைவு இது. எனவே இன்று அரகலய அவர்களை நிறுத்தியிருக்கிற இடத்திலிருந்து அவர்கள் முன் செல்ல விழைவதே அவர்களது இருத்தலுக்கான ஒரே வழி. அதுவே அவர்கள் அரகலயவிடமிருந்து தமதாக்கிய முழக்கமான “மாற்றம்” என்பதும் “முறைமை மாற்றம்” என்பதுமாகும். எது எப்படியோ இது ஒரு நல்ல மாற்றம். மிக ஆரோக்கியமான மாற்றம். அது வரவேற்கப்பட வேண்டியது என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை. (சந்ததி அரசியலின் வேரை புரட்டிய ஒரு மூன்றாவது சக்தி என்றளவிலும், ஒரு கிராமியப் பின்னணியிலிருந்து, ஓர் உழைக்கும் வர்க்கத்திலிருந்து வெளித்தோன்றிய தலைமை என்றளவிலும் இந்த மாற்றம் மிகக் காத்திரமானது). அரகலய போராட்டம் சம்பந்தப்பட்ட மேற்கூறிய உண்மையை என்பிபி யோ அனுரவோ எங்கும் வெளிப்படையாகப் பேசியதில்லை. பழைய அரசியல் பண்பாட்டிலிருந்து புதிய அரசியற் பண்பாட்டுக்குள் மாற்றத்தை நிகழ்த்துவோம் என சொல்லும் அவர்கள் பழைய அரசியற் பண்பாட்டில் தாம் -புரிந்தோ புரியாமலோ- அரசாங்க பங்காளிகளாக இருந்ததை சுயவிமர்சனம் செய்து, இந்த புதிய காலடியை வைக்கவுமில்லை. போரின் விளையை பரிவுபட பேசும் அநுர அந்தப் போருக்கு தமது கட்சி ஆதவளித்ததை சொல்ல முன்வருவதாயில்லை. 2004 இல் மகிந்த ஆட்சியில் அங்கம் வகித்து போரை நடத்த பங்களித்தவர்கள். ஓர் இனப்படுகொலையை நாட்டின் இராணுவ வெற்றியாகக் கொண்டாடியவர்களில் இவர்களும் அடக்கம். 2015 இல் மைத்திரி ஆட்சியின் புதிய அரசியலமைப்பு மாற்றத்துக்கான முயற்சிகளை எதிர்த்தவர்கள் அவர்கள். அதற்கான சுயவிமர்சனமும் இல்லை. வடக்கு கிழக்கு பிரிப்பை அந்த நிலப்பரப்பில் வாழும் மக்களின் தேர்வு மூலம் தீர்மானிப்பதைக் கோருவதற்குப் பதிலாக நீதிமன்றத்தை நாடியவர்கள். மாகாண சபை (காணி,பொலிஸ்) அதிகாரங்களை எதிர்த்து அதிகாரப் பரவலாக்கலை உப்புச்சப்பற்றதாக ஆக்கியதில் அவர்களுக்கு பங்கு இருக்கிறது. மாகாணசபை தேர்தலை நடத்தி அதிகாரப் பரவலாக்கலை அடுத்து நிகழ்த்தப் போகிறோம் என இப்போது சொல்லும்போது கூட காணி, பொலிஸ் அதிகாரங்கள் குறித்து எந்தப் பேச்சும் இல்லை. (மிகச் சிறந்த அதிகாரப் பரவலாக்கல் முறைமையைக் கொண்டுள்ள சுவிற்சர்லாந்தின் கன்ரோன் முறைமையில் இந்தவகை -காணி, பொலிஸ்- அதிகாரங்கள் பகிரப்பட்டு செழுமையாகச் செயற்படுகின்றன. மத்தியில் நாட்டின் அரசியல் அதிகாரம் 7 பேர் கொண்ட சபையாக பகிரப்பட்டு உள்ளது). இவையெல்லாம் குற்றப் பத்திரிகை அல்ல. விமர்சனங்கள். நிகழக்கூடிய அரசியல் தவறுகள் என்றளவில் அதை ஏற்றுக் கொண்டு சுயவிமர்சனத்துடன் அதை தாண்டிவந்து தெளிவாகப் பேச வேண்டிய பொறுப்பு அவர்களுக்கு உள்ளது. தவறிழைப்பதல்ல பிரச்சினை. அது தவறு என்று காலம் உணர்த்துகிறபோதாவது அதை ஏற்றுக்கொண்டு தம்மை புதுப்பித்து வெளிவருவது நல்ல தொடக்கமாக இருக்கும். இது அவர்கள் மீது நம்பிக்கை கொள்ள வைக்குமேயொழிய எதிராக அமையாது. பேசாமைதான் சந்தேகத்தை தேக்கி வைத்திருக்கும். அதுவே சிறுபான்மை இன மக்களிடம் புகாராக படிந்திருக்கிறது. அதனாலேயே சிறுபான்மை தேசிய இனங்கள் தமது பிரதிநித்துவத்தை தனித்துவமாக பேணும் நியாயமான முயற்சியை தவிர்க்க முடியாமல் பழைய அரசியற் பண்பாட்டில் பழசாகிப்போன கட்சிகளினூடாகவோ சுயேச்சைக் குழுக்களினூடாகவோ பேண வழிவகை தேடுகிறார்கள். தமது உரிமைகளை நிலைநாட்டுதல் என்பதற்குப் பதிலாக, அது கேட்டுப் பெறப்பட வேண்டிய ஒரு பேரம் பேசும் (deal) அரசியலாக கொண்டுள்ள அவலம் சிறுபான்மையினர் தரப்பில் தொடர்கிறது. யாழ்ப்பாணத்தில் நடந்த கூட்டத்தில் தமிழ் மக்களின் இந்த கையறுநிலையை தீர்க்கும் வகையிலான எந்த முன்மொழிவும் வைக்கப்படாமல் பொருளாதாரப் பிரச்சினையை மையப்படுத்தியே அநுரவின் பேச்சு இருந்தது. இன மத மொழி கடந்த இலங்கையர் என மொத்தத்துவப் படுத்துவதையும் அப் பேச்சு குறிவைத்திருந்தது. “நாங்கள் இலங்கையர்… ஒற்றுமையாக வாழவேண்டாம்.. இல்லை வாழவேண்ண்டும்..டும்” என மகிந்தவும்தான் அழுத்தி திருத்தி செல்லத் தமிழில் பேசியது பலருக்கும் ஞாபகமிருக்கலாம். முன்னிலை சோசலிசக் கட்சி சிறுபான்மையின பிரச்சினைக்கு தீர்வாக சுயாட்சியை வெளிப்படையாக முன்வைப்பதைப் போலவோ, அன்றி வேறேதும் வழிமுறையையோ அநுர முன்வைக்கவில்லை. அதை புகார் படிந்த நிலையில் விட்டுச் சென்றுள்ளார். அவரது பேச்சு இதில் வெளிச்சம் எதையும் பாய்ச்சவில்லை. எதிர்காலத்தில் என்பிபி அரசாங்கத்தினதும் அரசினதும் புத்துணர்ச்சியான மாற்றம் கொண்ட செயற்பாட்டினூடு இதை சாதிக்க கால அவகாசம் தேவை என்பது உண்மை. ஆனால் அதுவே அதை இப்போ ஒரு வகைமாதிரியாகக் கூட முன்மொழியாமல் தவிர்ப்பதற்கான நியாயமாகக் கொள்ள முடியாது. பாரம்பரிய தேசியக் கட்சிகளின் வாக்குறுதிகளை 70 வருடமாக நம்பி ஏமாந்த சிறுபான்மை இனங்களை முதன்முதலாக ஆட்சியதிகாரத்துக்கு வரும் அரசாங்கத்தின் -முதன்முதலான- வாக்குறுதிகளை நம்புங்கோ..வாங்கோ என அழைப்பது “இயேசு வருகிறார்… எமது மீட்பர் வருகிறார்” என ஜெபிப்பதற்குச் சமம். அதற்குள்ளால் ஓடும் மான் மாய மானா அல்லது நிஜ மானா என்பதை புதிய அரசாங்கம் செயலின் மூலம்தான் காட்ட வேண்டும். (குறிப்பு: இக் கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும்போது சிறுபான்மை இனங்களை உட்படுத்திய தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க என்பிபி தயாராக இருப்பதாக அமைச்சர் விஜித ஹேரத் அவர்கள் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு செவ்வியளித்ததாக செய்தி வந்திருக்கிறது. உண்மையெனில் நல்ல ஆரம்பம் இது) இதே ஜேவிபி யினூடாகத்தான் சோமவன்ச அமரசிங்க, விமல் வீரவன்ச போன்ற இனவாதிகள் ஆளுமைகளாக உருவெடுத்தார்கள். இப்போ அதன் பொதுச் செயலாளர் ரிஸ்வின் சில்வா தடாலடியாக தமிழ் மக்களுக்கு அதிகாரப் பகிர்வு தேவையில்லை என அண்மையில் ஒரு போடு போட்டார். இவர்களைப் போன்றவர்கள் உருவாவதற்கான சூழலைக் கொண்ட கட்சியாக ஜேவிபி இருக்கிறதா என்று ஒருவர் எண்ணத் தலைப்படுவதில் தவறு இல்லை. ஆட்சியதிகாரத்துக்கு வரமுன்னர் பயங்கரவாதத் தடைச் சட்டத்துக்கு எதிராக பேசிய என்பிபி இப்போ பயங்கரவாதத் தடைச்சட்டம் பிழையாகப் பயன்படுத்தப்படுவதுதான் தவறு என்கிறார்கள். வேட்டையனில் ரஜனி என்கவுண்டருக்கு கொடுத்தது போன்ற விளக்கம் இது. எனவே பழைய அரசியற் பண்பாட்டின் பிரதிநிதிகளான பாரம்பரிய கட்சிகளை அகற்றி புதிய அரசியற் பண்பாட்டின் பிரதிநிதிகளை அரசாங்கத் தரப்பு மட்டுமல்ல, வலுவான எதிர்க் கட்சியும் கொண்டிருக்க வேண்டிய தேவை உள்ளது. இது சிறுபான்மை இனங்கள் சம்பந்தப்பட்ட நோக்குநிலை மட்டுமல்ல, மாற்றத்துக்கு வித்திட்ட -மக்கள்நலன்சார் அரசியலை உயர்த்திப் பிடித்து போராடிய- அரகலய சக்திகளும் சமூகப் புத்திஜீவிகளும் சம்பந்தப்பட்ட நோக்குநிலையும் கூட. இவற்றினூடுதான் பழைய அரசியற் பண்பாட்டு நீக்கத்தை பாராளுமன்றத்துள் முயற்சிக்க முடியும். எனவே தேர்தலில் வாக்களிப்பதன் மூலமான மக்களின் பங்கு புதிய அரசாங்கத்துக்கு மட்டுமல்ல புதிய பலமான எதிர்க்கட்சி அதிகாரத்துக்குமானதாக இருக்க வேண்டும். இதில் ஏற்படக்கூடிய தோல்வியானது சஜித் தலைமையிலான எதிர்க்கட்சிக்கு கதிரையை இழுத்துப் போடுவதாக அமையும். அதாவது பழைய அரசியற் பண்பாட்டின் பிரதிநித்துவத்துக்கான இடத்தை முன்னரைப்போலவே அங்கீகரித்ததாகப் போய்விடும். (எனது கணிப்பில் அதுவே நடக்கும் வாய்ப்பு உள்ளது). இது பற்றி சிந்திக்காமல் என்பிபியை மட்டுமே தேருங்கள் என கோருவதைத்தான் அலையில் மூழ்குதல் என்பது. அதிகமான சுயேச்சைக் குழுக்கள் வடகிழக்கு மலையகப் பகுதிகளில் இத் தேர்தலில் நிற்பது என்பது வாக்குகளை பிரிக்கும் என்ற கணிப்பில் ஓரளவு உண்மை இருக்கிறபோதும் அதன் பாதிப்பு சிறுபான்மையின பாரம்பரிய கட்சிகளுக்குத்தான் இருக்குமேயொழிய என்பிபி க்கு அல்ல. என்றபோதும் அத்தோடு இவளவு சுயேச்சைக் குழுக்கள் தோன்றியிருக்கிறது என்பது ஒருவகையில் அரசியலானது மக்கள்மயமாவதின் அறிகுறி எனவும் எடுத்துக் கொள்ளலாம். இந்த மாற்றம் ஏற்கனவே இருந்த பழைய அரசியல் பண்பாட்டின் சிதைவை கோரிய அரகலயவுக்கும், அதைத் தோற்றுவித்த அனுரவுக்குமான வெற்றி என எடுத்துக் கொள்ளலாம். இவ்வாறான சிதைவுகளின் போது அரசியல் தளத்தில் இவ்வாறான குழுக்கள் தோன்றுவதும் மறைவதும் தவிர்க்க முடியாதது. அதுவும்கூட புதிய அரசியல் பண்பாட்டிற்கு சாதகமான விளைவுகளை ஏற்படுத்தக் கூடியது. அத்தோடு, இலங்கை பூராகவும் ஆணாதிக்க நிலையில் அரசியல் சீவியம் நடத்திக் கொண்டிருந்த கட்சிகளிலும், அதைத் தாண்டி சுயேட்சை குழுக்களிலும் பெண்கள் அரசியல் களத்துள் பிரவேசிப்பதை சாத்தியமாக்கியுள்ளது. இது இன்னொரு சாதகமான மாற்றம் ஆகும். எனவே சிறுபான்மையினங்களின் பழைய அரசியற் பண்பாட்டுக் கட்சிகளினுள் புதிய அரசியற் பண்பாட்டு மாற்றம் நிகழாவிடின், அவர்களது பிரதிநித்துவம் குறைய நேரும். சுயேச்சைக் குழுக்கள் புதிய வீரியமான அரசியலாளர்களை அடையாளம் காட்டி அரசியல் அரங்குக்குக் கொண்டு வரும் சாத்தியம் உள்ளது. அநுர நல்லவராக இருக்கலாம். அடுத்து வரப்போகிறவரும்கூட நல்லவராக இருக்கலாம். அதிகாரமற்றவர்களாக இருக்கும்போது நல்லவர்களாக இருப்பவர்கள் அதிகாரம் கிடைக்கிறபோது ‘நல்லவர்களாக’ தொடர்வார்கள் என்பது அரசியல் தர்க்கமற்றது. சிக்கலான அகமுரண்களால் கட்டமைக்கப்பட்டிருக்கிற மனிதஜீவியை நல்வர் கெட்டவர் என இருமையாக மட்டும் புரிந்துகொள்வது முழுமையற்றது. மனிதஜீவி ஓர் அரசியல் மிருகம் என்பது முக்கியமானது. இதனடிப்படையில் அதிகாரம் அவர்களை மாற்றியமைக்காது என்பதற்கு எந்த உத்தரவாதமுமில்லை. மிகக் குறைந்த முன்னுதாரணங்களே உலக வரலாற்றில் காட்டப்படக் கூடியதாக உள்ளன. அரசு (state) கட்டுமானத்தின் இனவாத, பெரும்பான்மைவாத, பௌத்த மேலாதிக்க கருத்தியலை மாற்றியமைப்பதில் எதிர்நோக்க முடியாத இறுக்கமான நிலை ஏற்படும் சந்தர்ப்பத்திலும் அரசாங்கத்தில் பண்பு மாற்றங்கள் நிகழும். அத்தோடு பூகோள அரசியல் சதிகளும் நலன்களும், (கடன் மூலமான) பொருளாதார தங்குநிலைகளும் அவர்களின் நிபந்தனைகளும் நெருக்கடிகளும், இடதுசாரியத்துக்கு எதிரான மேற்குலகின் வன்மங்களும் நெருக்குதல்களும் என பல சவால்களை ஒரு சிறிய நாடு எதிர்நோக்க வேண்டி வரும். இவற்றை இராஜதந்திர ரீதியாக அணுக வேண்டிய பணி கட்டாயமானது. இப் புறக் காரணிகள் தவிர்க்க முடியாதபடி அரசாங்கத்தை பண்புரீதியில் மாற்றியமைக்கலாம். (சோவியத் இல் மட்டுமல்ல, எமது விடுதலை இயக்கங்களிலும் இவ்வாறான அதிகாரத்துவ பண்பு மாற்றம் நடந்து நாசமாய்ப் போனது ஞாபகமிருக்கும்). இவை நிகழாதபடி அரசாங்கத்துக்கு பக்கத் துணையாக நின்று பாராளுமன்றத்தினுள் நெறிப்படுத்த அல்லது கட்டுப்படுத்த பலமான மாற்று எதிர்க்கட்சி தேவை. அப்போதான் புதிய அரசியல் பண்பாடு அரசியல் தளத்தில் உதயமாகும். இதை சமூகத் தளத்தில் நிறுவி முன்னேறிச் செல்ல பலமான அறிவுசார் சிவில் சமூக நிறுவனங்கள் தேவை. இது மக்கள் சார்பான பொறுப்பு. மாற்றத்துக்கான முயற்சியின் நிலையை தக்கவைக்க என்பிபி க்கு பெரும்பான்மைப் பலம் (113 ஆசனங்களுக்கு மேல்) தனிப்பட கிடைக்க வேண்டும். ஆனால் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கு சிறுபான்மையின பிரதிநித்துவங்களின் தேவையும், -அரகலய போராட்டத்துக்கு தலைமை தாங்கியவர்களின் கூட்டணியாக தேர்தலில் நிற்கும்- “மக்கள் போராட்ட முன்னணி” இன் பிரதிநித்துவத் தேவையும் தவிர்க்க முடியாததாக இருக்க வேண்டும் என்ற கருத்தை முன்மொழிய வேண்டியிருக்கிறது. இது அநுர அரசாங்கத்தை எதிர்ப்பது அல்லது அவர்களின் பாராளுமன்ற தேர்தல் வெற்றியை எதிர்ப்பது என்ற பொருளில் அல்ல! https://sudumanal.com/2024/11/12/எதிர்க்கட்சி-அரசியல்-பண்/
-
எலோன் மஸ்க் – விவேக் ராமசாமிக்கு முக்கிய பொறுப்பு : டிரம்ப் அதிரடி!
எலோன் மஸ்க் – விவேக் ராமசாமிக்கு முக்கிய பொறுப்பு : டிரம்ப் அதிரடி! christopherNov 13, 2024 09:29AM அமெரிக்க அரசின் செயல்திறன் துறையை வழிநடத்த எலோன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி இருவரையும் நியமித்து டொனால்ட் டிரம்ப் இன்று (நவம்பர் 13) உத்தரவிட்டுள்ளார். நடந்து முடிந்தஅமெரிக்க தேர்தலில் 312 தேர்தல் வாக்குகளை பெற்று பெரும்பான்மை வெற்றியுடன் 2வது முறையாக அதிபர் ஆகியுள்ளார் குடியரசு கட்சியின் வேட்பாளரான டொனால்ட் டிரம்ப். வரும் ஜனவரி மாதம் பதவியேற்க அவர் உள்ளார். அவரது தேர்தல் வெற்றிக்கு உலகின் நம்பர் 1 பணக்காரரான எலோன் மஸ்க் மற்றும் இந்திய வம்சாவளியும், தொழிலதிபருமான விவேக் ராமசாமி கடுமையாக உழைத்தனர். அவரது வெற்றிகரமான தேர்தல் பிரச்சாரத்திற்கு இருவரின் பங்களிப்பும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த நிலையில் டிரம்ப் ஏற்கெனவே கூறியபடி, எலோன் மஸ்க் மற்றும் விவேக் ராமசாமி இருவருக்கும் தனது ஆட்சியில் அரசின் செயல்திறன் துறையை (“DOGE”) வழிநடத்துவார்கள் என அவர் இன்று அறிவித்துள்ளார். அமெரிக்காவை பொறுத்தவரை அரசின் செயல்திறன் துறை என்பது பொருளாதாரம், நிதி மேலாண்மை பணிகளை மேற்கொண்டு வரும் அங்கீகரிக்கப்படாத நிறுவனமாக உள்ளது. ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்கும்! இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது, “அமெரிக்க தேசபக்தர் விவேக் ராமசாமியுடன் இணைந்து எலோன் மஸ்க் இருவரும் அரசாங்கத் திறன் துறைக்கு தலைமை தாங்குவர் என்பதை அறிவிப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த இரண்டு அற்புதமான அமெரிக்கர்களும் சேர்ந்து, எனது நிர்வாகத்திற்கு அரசாங்க அதிகாரத்துவத்தை அகற்றுவதற்கும், அதிகப்படியான விதிமுறைகளைக் குறைப்பதற்கும், வீண் செலவுகளைக் குறைப்பதற்கும், கூட்டாட்சி நிறுவனங்களை மறுசீரமைக்கவும், அமெரிக்காவைக் காப்பாற்றவும் வழிவகுப்பார்கள். குடியரசுக் கட்சி அரசியல்வாதிகள் “DOGE” இன் நோக்கங்களைப் பற்றி மிக நீண்ட காலமாக கனவு கண்டுள்ளனர். இந்த வகையான கடுமையான மாற்றத்தை ஏற்படுத்த, அரசாங்கத்தின் செயல்திறன் துறையானது அரசாங்கத்திற்கு வெளியே இருந்து ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்கும். மேலும், பெரிய அளவிலான கட்டமைப்பு சீர்திருத்தங்களை இயக்குவதற்கும், அரசாங்கத்திற்கு இதுவரை கண்டிராத ஒரு தொழில் முனைவோர் அணுகுமுறையை உருவாக்குவதற்கும், வெள்ளை மாளிகை மற்றும் மேலாண்மை மற்றும் பட்ஜெட் அலுவலகத்துடன் கூட்டாளியாக இருக்கும். எலோன் மற்றும் விவேக் ஃபெடரல் பீரோக்ரசியில் செயல்திறனைக் கருத்தில் கொண்டு மாற்றங்களைச் செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். அதே நேரத்தில், அனைத்து அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் சிறப்பாக வழிநடத்துவார்கள். அவர்களின் பணி ஜூலை 4, 2026 இல் முடிவடையும். அதிக செயல்திறன் மற்றும் குறைந்த அதிகாரத்துவத்துடன் செயல்படும் சிறிய அரசாங்கம், சுதந்திரப் பிரகடனத்தின் 250 வது ஆண்டு விழாவில் அமெரிக்காவிற்கு சரியான பரிசாக இருக்கும். அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்” என டிரம்ப் தெரிவித்துள்ளார். எலோன் மற்றும் விவேக் ஃபெடரல் பீரோக்ரசியில் செயல்திறனைக் கருத்தில் கொண்டு மாற்றங்களைச் செய்வார்கள் என்று நான் எதிர்நோக்குகிறேன். அதே நேரத்தில், அனைத்து அமெரிக்கர்களின் வாழ்க்கையையும் சிறப்பாகச் செய்வார்கள். முக்கியமாக, எங்களின் வருடாந்த $6.5 டிரில்லியன் டாலர்கள் அரசாங்க செலவினங்கள் முழுவதும் இருக்கும் பெரும் கழிவுகள் மற்றும் மோசடிகளை நாங்கள் வெளியேற்றுவோம். நமது பொருளாதாரத்தை விடுவிக்கவும், “நாம் மக்களுக்கு” அமெரிக்க அரசாங்கத்தை பொறுப்புக்கூறச் செய்யவும் அவர்கள் ஒன்றிணைந்து செயல்படுவார்கள். அவர்களின் பணி 2026, ஜூலை 4ஆம் தேதி முடிவடையும். அதிக செயல்திறன் மற்றும் குறைந்த அதிகாரத்துவத்துடன் ஒரு சிறிய அரசாங்கம், சுதந்திரப் பிரகடனத்தின் 250 வது ஆண்டு விழாவில் அமெரிக்காவிற்கு சரியான பரிசாக இருக்கும். அவர்கள் வெற்றி பெறுவார்கள் என்று நான் நம்புகிறேன்!” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://minnambalam.com/political-news/trump-order-that-elon-musk-vivek-ramasamy-get-key-responsibility/
-
வேட்பாளர் பட்டியலில் பெயர் ; பெண் முறைப்பாடு
வேட்பாளர் பட்டியலில் பெயர் ; பெண் முறைப்பாடு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் யாழ் . தேர்தல் மாவட்டத்தில் போட்டியிடும் சுயேட்சை குழுவொன்று தனக்கு தெரியாமல் தன்னுடைய பெயரை வேட்பாளர் பட்டியலில் குறிப்பிட்டுள்ளதாக பெண்ணொருவர் தேர்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்துள்ளார். யாழ்ப்பாண உதவி தேர்தல் ஆணையாளரிடம் செவ்வாய்க்கிழமை (12) அன்று முறைப்பாடு செய்துள்ளார். அப்பெண் மேலும் தெரிவிக்கையில் , “சுயேட்சை குழுவொன்று தன்னுடைய அனுமதி இன்றி , வேட்பாளர் பட்டியலில் எனது பெயரை குறிப்பிட்டுள்ளனர். இதுவரை காலமும் எனக்கு இந்த விடயம் தெரிய வரவில்லை. நேற்றைய தினம் திங்கட்கிழமை எனது மாணவி ஒருவர் எனக்கு தொலைபேசி அழைப்பினை எடுத்து , தேர்தலில் போட்டியிடுகிறீர்களா ? என வினாவிய போதே , எனது பெயர் வேட்பாளர் பட்டியலில் வந்திருந்தமை தெரிய வந்தது. அதனை உறுதிப்படுத்திக்கொள்ள யாழ் . மாவட்ட தேர்தல் திணைக்கள அலுவலகத்திற்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை அது என்னுடைய பெயர் தான் என்பதனையும் எனது அனுமதியின்றி எனது பெயரை வேட்பாளர் பட்டியலில் சுயேட்சை குழு தலைவர் உள்ளடக்கி உள்ளார் என்பதனையும் உறுதிப்படுத்திக்கொண்டேன்.” அது தொடர்பில் யாழ் . மாவட்ட உதவி தேர்தல் ஆணையாளரிடம் எழுத்து மூலம் முறையிட்டுள்ளேன்" என தெரிவித்துள்ளார். https://www.tamilmirror.lk/பிரசித்த-செய்தி/வேட்பாளர்-பட்டியலில்-பெயர்-பெண்-முறைப்பாடு/150-347050
-
தமிழ் மக்களுக்கு உறுதியான பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் ஆபத்து!
தமிழ் மக்களுக்கு உறுதியான பிரதிநிதித்துவம் இல்லாமல் போகும் ஆபத்து! Veeragathy Thanabalasingham on November 12, 2024 Photo, Economy Next நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னமும் இரண்டு நாட்களே இருக்கின்றன. முன்னைய நாடாளுமன்ற தேர்தல்களை விடவும் இந்தத் தடவை இலங்கையின் அரசியல் கோலங்கள் பெருமளவுக்கு மாறியிருக்கும் சூழ்நிலையில் தேர்தல் நடைபெறுகிறது. பாரம்பரியமான பிரதான அரசியல் கட்சிகளில் எந்த ஒன்றுமே தங்களை ஆட்சிக்கு கொண்டுவருவதற்கு வாக்களிக்குமாறு மக்களை கேட்கவில்லை. பலம்பொருந்திய எதிர்க்கட்சியாக நாடாளுமன்றத்தில் செயற்படுவதற்கே வாக்களிக்குமாறு அவற்றின் தலைவர்கள் கேட்கிறார்கள். அதேவேளை, முதன்முதலாக ஆட்சியதிகாரத்துக்கு வந்திருக்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தலைமையிலான தேசிய மக்கள் சக்தியும் கூட ஒழுங்கான முறையில் அரசாங்கத்தை நடாத்துவதற்குத் தேவையான உறுதியான நாடாளுமன்ற பெரும்பான்மையைத் தருமாறு மக்களை கேட்கிறதே தவிர, மூன்றில் இரண்டு அல்லது ஆறில் ஐந்து பெரும்பான்மை போன்று எதுவும் தேவையில்லை என்றுதான் கூறுகிறது. அதன் பல தலைவர்களின் தேர்தல் பிரசார உரைகளும் ஊடக நேர்காணல்களும் இதை வெளிக்காட்டுகின்றன. ஆனால், ஜனாதிபதி திசாநாயக்கவும் அரசாங்கத்தின் ஒரேயொரு அமைச்சரான விஜித ஹேரத்தும் நாடாளுமன்றத்தை தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களால் நிரப்புமாறும் எதிர்க்கட்சியே தேவையில்லை என்றும் தேர்தல் பிரசாரங்களின் தொடக்கத்தில் மக்களிடம் கேட்டுக் கொண்டார்கள். அதற்கு கடுமைான எதிர்ப்பு கிளம்பியது. எதிரணி அரசியல்வாதிகள் குறிப்பாக, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாசவும் ஜனாதிபதி திசாநாயக்கவின் ஒன்றரை மாதகால ஆட்சியில் தவறு கண்டுபிடிப்பதிலும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களினால் நீண்ட நாட்களுக்கு ஆட்சிசெய்யக்கூடிய ஆற்றலும் அனுபவமும் இல்லை என்று பிரசாரம் செய்வதிலுமே கூடுதல் அக்கறை காட்டுகிறார்கள். ஒரு குறுகிய காலத்துக்குள்ளாகவே தேசிய மக்கள் சக்தியில் மக்கள் நம்பிக்கை இழக்கத் தொடங்கிவிட்டார்கள் என்ற ஒரு எண்ணத்தை உருவாக்க அவர்கள் முயற்சிக்கிறார்கள். ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்ற கட்சியையே அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் ஆதரித்து பதவிக்கு கொண்டுவரும் வழக்கத்தில் இருந்து இந்தத் தடவை மக்கள் விலகுவார்கள் என்று நம்பமுடியாது. மக்களிடம் எதைக்கூறி வாக்கு கேட்பது என்றே தெரியாமல் எதிர்க்கட்சிகள் தடுமாறுகின்றன. ஜனாதிபதி திசாநாயக்க தனது வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு வசதியாக உறுதியான அரசாங்கத்தை அமைப்பதற்கு தேசிய மக்கள் சக்திக்கு மக்கள் ஆணையை வழங்குவார்கள் என்று எதிர்பார்க்கிறார். அரசியல் குழப்பநிலை ஒன்று உருவாவதை மக்களும் விரும்பமாட்டார்கள். தென்னிலங்கை நிலைவரம் இவ்வாறிருக்கையில், வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தேர்தல் நிலைவரம் மிகவும் குழப்பகரமானதாக இருக்கிறது. அடுத்த நாடாளுமன்றத்தில் சிறுபான்மைச் சமூகங்களின் குறிப்பாக தமிழ் மக்களின் பிரதிநிதித்துவம் ஒரு கட்டுறுதியானதாக இல்லாமல் ஒவ்வொரு கட்சியும் ஓரிரு உறுப்பினர்களுடன் நாடாளுமன்றத்துக்கு வரக்கூடிய வாய்ப்பே இருக்கிறது. இரு மாகாணங்களிலும் உள்ள ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும் முன்னென்றும் இல்லாத வகையில் பெரும் எண்ணிக்கையில் அரசியல் கட்சிகளும் சுயேச்சைக் குழுக்களும் தேர்தலில் போட்டியிடுகின்றன. அதனால் வாக்குகள் சிதறடிக்கப்படக்கூடிய ஆபத்து இருக்கிறது. ஐந்து மாவட்டங்களிலும் உள்ள மொத்தம் 28 நாடாளுமன்ற ஆசனங்களுக்கு 2067 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். வட மாகாணத்தில் மாவட்ட ரீதியாக நோக்கும்போது ஆறு ஆசனங்களைக் கொண்ட யாழ்ப்பாணத்தில் 23 அரசியல் கட்சிகளும் 21 சுயேச்சைக் குழுக்களும் போட்டியிடுகின்றன. மொத்தம் 396 வேட்பாளர்கள் களத்தில் இறங்கியிருக்கிறார்கள். வன்னி மாவட்டத்தின் ஆறு ஆசனங்களுக்காக 23 கட்சிகளையும் 25 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 432 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை மாவட்டத்தின் நான்கு ஆசனங்களுக்காக 17 கட்சிகளையும் 14 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 217 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். ஐந்து ஆசனங்களைக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் 22 கட்சிகளும் 27 சுயேச்சைக் குழுக்களும் 392 வேட்பாளர்களை களமிறக்கியிருக்கின்றன. அம்பாறை மாவட்டத்தின் ஏழு ஆசனங்களுக்காக 23 கட்சிகளையும் 40 சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 630 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். நாடாளுமன்றத் தேர்தலில் மொத்தம் 8888 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். நாடாளுமன்றத்தின் 225 ஆசனங்களில் 29 தேசியப்பட்டியல் ஆசனங்களைத் தவிர்த்தால் 196 உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கே மக்கள் வாக்களிக்கப் போகிறார்கள். வடக்கு, கிழக்கின் 28 ஆசனங்களைத் தவிர்த்துப் பார்த்தால் எஞ்சிய ஏழு மாகாணங்களிலும் உள்ள 17 தேர்தல் மாவட்டங்களில் உள்ள 168 ஆசனங்களுக்கு 6821 வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். அதாவது, தென்னிலங்கையில் ஒரு ஆசனத்துக்கு 40 வேட்பாளர்கள் போட்டியிடுகின்ற அதேவளை, வடக்கு, கிழக்கில் ஒரு ஆசனத்துக்கு 73 பேர் போட்டியிடுகின்றார்கள். ஐந்து மாவட்டங்களின் வேட்பாளர்களில் அதிகப் பெரும்பான்மையானவர்கள் தமிழ் கட்சிகளையும் சுயேச்சைக் குழுக்களையும் சேர்த்தவர்களாகவே இருக்கிறார்கள். இவற்றில் பெரும்பாலானவை மக்கள் மத்தியில் குறிப்பிடத்தக்க ஆதரவு இல்லாதவை என்பதுடன் பல வேட்பாளர்களும் மக்களுக்கு அறிமுகம் இல்லாதவர்கள். தமிழ் அரசியல் கட்சிகள் மாத்திரமல்ல, சுயேச்சைக் குழுக்களும் கூட உணர்ச்சிகளைத் தூண்டுவதன் மூலமாக தமிழ் மக்களின் வாக்குகளைப் பெறவதற்காக தமிழ்த் தேசியவாத சுலோகங்களை தாராளமாகப் பயன்படுத்துகின்றன. நாடாளுமன்றத் தேர்தலுக்கான அறிவிப்பு வெளிவருவதற்கு முன்னதாக அரசியலில் எந்தவிதமான அக்கறையும் இல்லாமல் இருந்த பேர்வழிகளும் கூட திடீரென்று சுயேச்சைக் குழுக்களாக தேர்தல் களத்தில் இறங்கி தமிழ்த் தேசியவாதத்தை பாதுகாக்கப்போவதாக கூறுகிறார்கள். இலங்கை தமிழர் அரசியலை தங்களது கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்ட புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் உள்ள பல்வேறு குழுக்களும் தனவந்தர்களும் பல தமிழ்க்கட்சிகளுக்கு நிதியுதவி செய்கிறார்கள். பல்வேறு சுயேச்சைக் குழுக்கள் களத்தில் இறங்கியதற்கு அந்த வெளிநாட்டுப் பணமே பெரிதும் காரணமாக இருக்கிறது. தங்களுடன் தொடர்பு கொண்ட சில புலம்பெயர் தமிழ்க்குழுக்கள் பணம் தந்தால் சுயேச்சைக் குழுவை அமைத்து தேர்தலில் போட்டியிட முடியுமா என்று கேட்டதாக யாழ்ப்பாணத்தில் உள்ள பல கல்விமான்களும் சமூகத்தில் மதிப்புடைய முக்கியஸ்தர்களும் இந்தக் கட்டுரையாளரிடம் நேரடியாகவே கூறினார்கள். இலங்கை தமிழர் அரசியல் முன்னென்றும் இல்லாத வகையில ஊழல் மயப்படுவதற்கு புலம்பெயர் தமிழ்ச் சமூகத்தில் உள்ள அரசியல் குழுக்கள் உதவியாக இருக்கின்றன. உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னரான காலகட்டத்தில் வடக்கு, கிழக்கு தமிழ் மக்களினால் நாடாளுமன்றத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட தமிழ்க் கட்சிகள் தமிழரின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை வென்றெடுப்பதற்கான உரிமைப்போராட்டத்தை அடுத்தக் கட்டத்துக்கு நகர்த்துவதில் நடைமுறைச் சாத்தியமானதும் விவேகமானதுமான அணுகுமுறைகளைக் கடைப்பிடித்திருந்தால் இன்று தமிழர் அரசியல் சமுதாயம் இந்தளவுக்கு சிதறிச் சீரழிந்திருக்காது. உள்நாட்டுப் போரின் முடிவுக்குப் பின்னர் தமிழ் மக்களின் அரசியல் தலைமைத்துவம் காலஞ்சென்ற தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசிய கூட்டமைப்பிடம் இயல்பாகவே வந்து சேர்ந்தது. அதற்குப் பிறகு வடக்கு, கிழக்கு தமிழர்களை நாடாளுமன்றத்தில் பிரதிநிதித்துவம் செய்யும் பிரதான சக்தியாக கூட்டமைப்பே விளங்கியது. போர் முடிவுக்கு வருவதற்கு முன்னர் 2004 நாடாளுமன்றத் தேர்தலில் 22 ஆசனங்கைளைக் கைப்பற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பு 2010 தேர்தலில் 14 ஆசனங்களையே பெறக்கூடியதாக இருந்தது. மீண்டும் 2015 நாடாளுமன்ற தேர்தலில் கூட்டமைப்பின் ஆசனங்கள் 16 ஆக அதிகரித்தன. 2020 தேர்தலில் அதன் ஆசனங்கள் பத்தாகக் குறைந்தன. தமிழ் தேசிய கூட்டமைப்பைத் தவிர கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணி, டக்ளஸ் தேவானந்தா தலைமையிலான ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி, முன்னாள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனின் தமிழ் மக்கள் கூட்டணி போன்ற சில தமிழ் கட்சிகளும் ஓரிரு ஆசனங்களுடன் நாடாளுமன்றத்தில் அங்கம் வகித்தன. இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளுக்கு இடையில் முரண்பாடுகள் வளரத்தொடங்கின. பிரதான அங்கத்துவ கட்சியான இலங்கை தமிழரசு கட்சி தங்கள் மீது ஆதிக்கம் செலுத்துவதற்கு முயற்சிப்பதாக குற்றஞ்சாட்டிய எஞ்சியிருந்த தழிழீழ விடுலை இயக்கம் (ரெலோ ), தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) போன்றவை கடந்த வருட முற்பகுதியில் கூட்டமைப்பில் இருந்து வெளியேறி உள்ளூராட்சி தேர்தல்களில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி என்ற அமைப்பின் சார்பில் போட்டியிடுவதற்கு முடிவெடுத்தன. கூட்டமைப்பில் இருந்து ஏற்கெனவே வெளியேறியிருந்த சுரேஷ் பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியும் வேறு சில குழுக்களும் புதிய கூட்டணியில் இணைந்து கொண்டன. கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப் பொதுவேட்பாளரை களமிறக்கியதில் இந்த புதிய கூட்டணி முக்கிய பங்கு வகித்தது. அந்தத் தேர்தல் தமிழ்க் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகளை மாத்திரமல்ல கட்சிகளுக்குள் நிவவிய பூசல்களையும் அம்பலப்படுத்தியது. தமிழ் தேசிய கூட்டமைப்பை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் பலம்பொருந்திய அரசியல் இயக்கமாக கட்டியெழுப்புவதில் தங்களுக்கு இருந்த வரலாற்றுப் பொறுப்பை உணர முடியாதவர்களாக கட்சி அரசியல் நலன்களை மேம்படுத்துவதில் அங்கத்துவ கட்சிகளின் தலைவர்கள் தீர்க்கதரிசனமற்ற முறையில் செயற்பட்டதன் விளைாகவே தமிழ் அரசியல் சமுதாயம் இன்று சிதறுப்பட்டுக் கிடக்கிறது. தற்போது தமிழரசு கட்சி, தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி ஆகிய மூன்று அணிகளையுமே வடக்கு, கிழக்கில் போட்டியிடும் முக்கியமான கட்சிகளாகும். மூன்று கட்சிகளுமே தங்களை குறைந்தது பத்து ஆசனங்களுடனாவது நாடாளுமன்றத்துக்கு அனுப்புமாறு தமிழ் மக்களிடம் கேட்கின்றன. இவற்றில் இரு மாகாணங்களிலும் பரந்தளவில் மக்கள் ஆதரவைக் கொண்டதாக இதுவரை தமிழரசு கட்சியே விளங்கிவந்தது. அண்மைக்காலமாக நிலவிவரும் உள் முரண்பாடுகள் தமிழரசு கட்சிக்கு தமிழர்கள் மத்தியில் இருந்த ஆதரவை எந்தளவுக்குப் பாதித்திருக்கின்றது என்பதை இந்த வாரத்தைய தேர்தல் நிச்சயம் வெளிக்காட்டும். இறுதியாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு கிடைத்த பத்து ஆசனங்களில் ஆறு ஆசனங்கள் தமிழரசு கட்சிக்குரியவை. இந்தத் தடவை அந்த ஆறு ஆசனங்களையாவது அந்தக் கட்சியினால் காப்பாற்றக்கூடியதாக இருக்குமா என்பது முக்கியமான கேள்வி. உட்கட்சி முரண்பாடுகளை தேர்தல் காலத்தில் வெளிக்காட்டாமல் இருக்கவேண்டும் என்ற குறைந்தபட்ச அரசியல் பக்குவமோ, சாதுரியமோ கூட இல்லாதவர்களாக தமிழரசு கட்சியின் சில தலைவர்கள் நடந்து கொள்கிறார்கள். அதேவேளை, ஏனைய தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் தேர்தல் பிரசாரங்களில் தமிழரசு கட்சியை தாக்கிப் பேசுகிறார்களோ இல்லையோ அதன் பேச்சாளரான எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான பிரசாரத்தை முன்னெடுப்பதில் தீவிரமாக இருக்கிறார்கள். அண்மைக்காலத்தில் சுமந்திரனைப் போன்று வேறு எந்தவொரு தமிழ் அரசியல்வாதியும் இந்தளவு விமர்சனங்களுக்கு உள்ளாகியதில்லை எனலாம். இந்த தேர்தலுடன் அவரது அரசியலுக்கு முடிவு கட்டிவிட வேண்டும் என்று அவர்கள் கங்கணம் கட்டிநிற்கிறார்கள். காரணத்தைக் கேட்டால் சுமந்திரனால் தமிழ்த் தேசியத்துக்கு ஆபத்து என்கிறார்கள். தாங்கள் எல்லோரும் குடாநாட்டுக் ‘குண்டுச் சட்டிக்குள்’ இருந்துகொண்டு அவ்வப்போது மக்களை உணர்சிவசப்படுத்தும் பேச்சுக்கள் மற்றும் கற்பனாவாத சுலோகங்கள் மூலமாக தமிழ்த் தேசியத்தை பாதுகாத்து வருவதாக அவர்களின் நினைப்பு. சுயேச்சைக் குழு ஒன்றை அமைத்து யாழ்ப்பாண மாவட்டத்தில் போட்டியிடும் வைத்தியர் ஒருவரும் கூட தமிழ்த் தேசியத்தின் பேரில்தான் வாக்குக் கேட்கிறார். அவருக்கு கணிசமானளவு மக்கள் வாக்களித்து விடுவார்களோ என்று தமிழ் அரசியல்வாதிகளே பயப்படுகிறார்கள்.. பாவம் தமிழ்த் தேசியம். இத்தகைய சூழ்நிலையில், குறைந்தது ஒரு பத்து ஆசனங்களுடனாவது எந்த கட்சியையும் தங்களது பிரதான அரசியல் அணியாக நாடாளுமன்றத்துக்கு அனுப்பக்கூடியதாக தமிழர்கள் வாக்களிப்பார்களா என்பது இன்னொரு முக்கியமான கேள்வி. இதனிடையே, ஜனாதிபதித் தேர்தலில் திசாநாயக்கவின் வெற்றியை அடுத்து ஒரு மாற்றத்துக்காக தேசிய மக்கள் சக்திக்கு வாக்களிப்பதில் ஓரளவுக்கு நாட்டம் காட்டுவதாக தமிழ் அரசியல்வாதிகளே கூறுகிறார்கள். அதற்கு தமிழ் கட்சிகளின் இதுகாலவரையான செயற்பாடுகள் மீதான மக்களின் வெறுப்பைத் தவிர, வேறு என்ன காரணம் இருக்கமுடியும்? தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் அரசியல் மாற்றத்துக்கு மத்தியில் அடுத்த நாடாளுமன்றத்தில் உறுதியான தமிழ்ப் பிரதிநிதித்துவம் இருக்கவேண்டியது வெகுவாக உணரப்படுகின்ற போதிலும், சிதறுப்பட்டுக் கிடக்கும் தமிழ் அரசியல் சமுதாயம் அதற்கான வாய்ப்புக்கு இடையூறாக அமையக்கூடும் என்று அஞ்ச வேண்டியிருக்கிறது. அத்துடன், வடக்கில் தமிழ் மக்கள் பெருமளவில் வாக்களிப்பில் கலந்துகொள்ளாமல் இருக்கக்கூடிய சூழ்நிலையும் இருக்கிறது. மக்கள் நிதானமாகச் சிந்தித்து செயற்படக்கூடியதாக எமது அரசியல்வாதிகள் நடந்துகொள்ளவில்லையே! வீரகத்தி தனபாலசிங்கம் https://maatram.org/articles/11846
-
தேசிய மக்கள் சக்தி போன்ற சக்திகளை தமிழ் இளைஞர்கள் நாடிச்செல்லும் காரணம் என்ன? – மட்டு.நகரான்
தேசிய மக்கள் சக்தி போன்ற சக்திகளை தமிழ் இளைஞர்கள் நாடிச்செல்லும் காரணம் என்ன? – மட்டு.நகரான் November 12, 2024 இலங்கையின் பாராளுமன்ற தேர்தல் திருவிழா வடக்கு கிழக்கிலும் இடம்பெற்றுவருகின்றது. தமிழர்களின் உரிமைப்போராட்டம் திட்டமிட்டு மழுங்கடிக்கப்பட்ட நிலையில் இலங்கையின் பாராளுமன்ற தேர்தலின் மூலம் தமிழர்களுக்கு தீர்வு பெற்றுக்கொடுப்போம் என்ற வகையில் தொடர்ச்சியான பிரசாரங்கள் வடகிழக்கில் முன் னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த நாட்டில் தமிழர்கள் பௌத்த பேரின வாதத்தினால் நசுக்கப்பட்டபோது அதற்கு எதிராக பல்வேறு போராட்டங்கள் வெடித்த நிலையில் தொடர்ச்சியாக தமிழர்களின் உரிமைக்காக தொடர்ந்து குரல் எழுப்பும் நிலைமைகள் காரணமாக இந்த நாட்டில் தமிழர்களுக்கான உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்று சர்வதேசம் வரையில் பேசப்படும் நிலையில் எந்த உரி மைக்காக இழப்புகளை எதிர்கொண்டோமோ அந்த உரிமையினை அந்த சமூகம் மறந்துசெல்லும் நிலைமையினை இலங்கையின் இந்த தேர்தல் களம் வெளிப்படுத்தி நிற்பதை காணமுடிகின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்த வரையில் இன்று கிழக்கு மாகாணத்தில் தமிழ் தேசியமானது மரணப்படுக்கையில் இருக்கும் நிலைமையே காணப்படுகின்றது.தமிழ் தேசிய அரசியலின் வாக்கு அரசியலை முன்னிலைப்படுத்தி முன்னெடுக்கப்படும் செயற்பாடு கள் காரணமாக இன்று தமிழ் தேசிய அரசியல் மரணப்படுக்கைக்கு செல்லும் நிலையேற் படுத்தப்பட்டுள்ளது. கிழக்கு மாகாணத்தின் தற்போதைய நிலையில் இளம் சமூகத்தினர் மத்தியில் அபிவிருத்தி அரசியல் அல்லது தேசிய அரசியல் நிகழ்ச்சி திட்டங்கள் விதைக்கப்பட்டாலும் ஆரம்பத்தில் தேசிய அரசியல் தொடர்பில் அலையொன்று காணப்பட்டாலும் காலப்போக்கில் அந்த அலை யானது குறைந்துவருவதை காணமுடிகின்றது.கிழக்கின் தற்போதைய நிலைமையினை உணர்ந்த நிலையிலேயே இந்த மாற்றம் ஏற்பட்டுள்ளதை காணமுடிகின்றது. இன்றைய நிலையில் கிழக்கில் தமிழர்களின் இருப்பினை தக்கவைக்க வேண்டுமானால் தமிழ் தேசிய அரசியல் உறுதிப்படுத்தப்படவேண்டும்.கிழக்கினைப் பொறுத்த வரையில் தமிழர்களின் அரசியல் இருப்பினை உறுதிப்படுத்துவதற்காக தமிழ் தேசிய கூட்டமைப்பு மட்டும் தமிழ் தேசியம் சார்ந்த கட்சிகள் மட்டுமே செயற்பட்டுவந்தது.இந்த நிலைமையே இன்றும் காணப்படுகின்றது.இவ்வாறான நிலையிலேயே கிழக்கில் தமிழ் தேசிய அரசியலின் இருப்பு என்பது மிக முக்கியம் என்பதை நாங்கள் தொடர்ச்சியாக வலியுறுத்திவருகின்றோம். ஆனால் கிழக்கில் தமிழ் தேசிய அரசி யலுக்குள் ஏற்பட்டுள்ள வாக்கு அரசியல் போட்டி மற்றும் கட்சிகளுக்கு இடையே கட்சிகளுக்குள் ஏற்பட்டுள்ள பிளவுகள் என்பது கிழக்கில் தமிழர்களின் அரசியல் இருப்பினை கேள்விக்குட்படுத்துமா என்ற வகையில் சென்று கொண்டிருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில் இன்று முன்னெடுக் கப்படும் பாராளுமன்ற தேர்தலுக்கான செயற்பாடுகள் குறித்து பார்க்கவேண்டியது கட்டாய மாகும். குறிப்பாக தமிழ் தேசிய அரசியல் செயற் பாடுகளை இங்கு பார்க்கவேண்டியது காலத்தின் கட்டாயமாக பார்க்கின்றேன். குறிப்பாக கிழக்கிலும் இந்த தேர்தலில் தேசிய மக்கள் சக்தியின் அலையொன்று இளையோர் மத்தியில் ஏற்பட்டுள்ளதுடன் சில கற்ற சமூகமும் இதற்கு பின்னால் உள்ளதை காணமுடிகின்றது.இந்த கோஷ்டி தமிழ் பேசும் மக்கள் தங்களின் பாராளு மன்ற பிரதிநிதித்துவத்தை காப்பது தொடர்பில் சிந்தித்துச் செயற்படுவதை, புதிய புரட்சி மாற்றக் கோஷ்டியினர், இனவாத சிந்தனை என்று விமர்சிக்கிறார்கள். இலங்கையின் அரசியல் வரலாறு முழுவதும், புரட்சிகர சிந்தனைகளைப் பேசிய இடதுசாரிக் கட்சிகளில் அநேகமானவை பேரினவாத அரசி யலுக்குள் சிக்கிக் சீரழிந்திருக்கின்றன. நாட்டையும் சீரழித்திருக்கின்றன. அதிக தருணங்களில் புரட்சி, புதிய மாற்றங்கள் என்று பேசிய இடதுசாரி இயக்கங்கள் எல்லாமும் அதிகாரத்துக்காக இனவாதத்தையும் மதவாதத்தையும் தூக்கிச் சுமந்திருக் கின்றன. தேசிய மக்கள் சக்தியின் கடந்த கால வரலாறும் அப்படித்தான் இருக்கின்றது. ஜே.வி.பி.யாக இருந்து, அவர்கள் பேசாத இனவாதம் என்று ஏதுமில்லை. இன்றைக்கு முகமூடிகளை அணிந்து வந்து நின்று, புதிய புரட்சி மாற்றம் குறித்துப் பேசினாலும், அவர்களின் அடிப்படை சிந்தனையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. திரும்பத் திரும்ப சொல்ல வேண்டியிருக்கின்றது; அடுத்து ஆட்சி நடத்தப் போவது ரில்வின் சில்வா, விஜித ஹேரத், கேடி லால்காந்த தரப்பினரின் சிந்தனைதான். அது, மிக ஆபத்தான பேரினவாத – அடிப்படைவாதம் நிறைந்தது. அதுபோக, அந்தக் கட்சியில் யார் வெற்றி பெற்றாலும், அவர் களை தூக்கியெறியும் முடிவை, ஜே.வி.பி எடுத்து விட்டால், அதற்கு எதிராக யாராலும் போராட முடியாது. அந்தக் கட்சியின் கட்டமைப்பு அப்படித்தான் இருக்கிறது. ஆகவே, தமிழ் பேசும் மக்கள், புதிய மாற்றம் என்கிற மாய வலைக் குள் சிக்கி தங்களது பிரதிநிதித்துவத்தினை வீணாக்காமலிருக்கவேண்டியது அவசியமாகும்.இது தொடர்பிலான பூரண தெளிவுபடுத்தல் இளையோர் மத்தியில் முன்னெடுக்கவேண்டியது காலத்தின் கட்டாயமாகும். இன்று கிழக்கில் தமிழ் தேசிய அரசியல் வாதிகள் மத்தியில் ஏற்பட்டுள்ள போட்டி அரசியல் என்பது தமிழ் தேசிய அரசியலை கேள்விக்குட்படுத்திவருவதுடன் இளையோர் மத்தியிலும் கேள்விக்குட்படுத்திவருகின்றது. இதன்காரணமாகவே இன்று தமிழ் தேசிய அரசியலுக்கு பதிலாக தேசிய மக்கள் சக்தி போன்ற சக்திகளை தமிழ் இளைஞர்கள் நாடிச்செல்லும் நிலைமை ஏற்பட்டுள்ளது. இன்று தமிழ் தேசிய அரசியலுக்குள் போட்டியிடுவோர் பெருமளவான பணத்தை செலவிட்டு தமது வாக்கு அரசியலை முன்னிறுத் திவருவதானது எதிர்கால சமூகத்திற்கு பிழையான வழிகாட்டல்கள் காட்டப்படுகின்றதா என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.பெருமளவான பணத் தினை செலவிட்டு சமூக ஊடக பிரசாரங்களும் முன்னெடுக்கப்படுகின்றன.எனினும் மட்டக் களப்பு மாவட்டத்தினை தவிர கிழக்கின் ஏனைய திருகோணமலை மற்றும் அம்பாறை மாவட்டங்களில் தமிழர்களின் பிரதிநிதித்துவம் என்பது கேள்விக்குறியாகவே இருந்துவருகின்றது. தமிழ் தேசிய அரசியல் பரப்பில் இலங்கை தமிழரசுக்கட்சி,ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி,தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஆகியவற்றிற்கு இடையே போட்டி அரசியல் நிலவிவருகின்றது. தமிழ் தேசிய மக்கள் முன்னணி கிழக்கில் மிகக்குறைந்த வாக்குகளையே பெறும் என்பதுடன் இலங்கை தமிழரசுக்கட்சிக்கும் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணிக்கும் இடையே கடும்போட்டி நிலவுகின்றது.கிழக்கில் இணைந்து தேர்தலில் போட்டியிட்டு தமிழர்களின் பிரதிநிதித்துவத்தினை உறுதிப்படுத்தவேண்டி யவர்கள் இன்று பிரிந்து நின்று தமிழ் தேசிய அரசியலை கேள்விக்குட்படுத்திவருகின்றனர். ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியை பொறுத்த வரையில் விடுதலைப்புலிகள் நீக்க பிரசாரத்தினையே அதிகளவில் கிழக்கில் முன்னெடுத்துவருவதை காணமுடிகின்றது.கடந்த காலத்தில் பிள்ளையானுடன் இணைந்து செயற்பட்டவர்கள்,அரசாங்க கட்சிகளுடன் இணைந்து தமிழ் தேசிய அரசியலுக்கு எதிராக செயற் பட்ட பலர் இன்று ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் தேர்தல் பிரசாரப்பீரங்கிகளாக மாற்றம்பெற்றுள்ளதே பல்வேறு சந்தேகங்களை கிழக்கில் தோற்றம்பெற்றுள்ளது. குறிப்பாக கடந்த காலத்தில் கிழக்கு மாகாணசபை உறுப்பினராகயிருந்து பிள்ளையானு டன் இணைந்து செயற்பட்டு வந்த புஸ்பராஜ ஜன நாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் தலைமை வேட்பாளராக அம்பாறை மாவட்டத்தில் நியமிக் கப்பட்டுள்ளார்.இதேபோன்று மட்டக்களப்பு மாவட்டத் தில் கடந்த உள்ளுராட்சிமன்ற தேர்தலில் பிள்ளையானின் கட்சியில் வேட்பாளராக பெயரிடப்பட்டு பிரசாரங்களை முன்னெடுத்த குருக்கள் ஒருவர் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் மட்டக்களப்பு மாவட்ட வேட் பாளராக களமிறக்கப்பட்டுள்ளார். இதேபோன்று தமிழ் தேசிய அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரக்கூட்டத்தின் ஆரம் பத்தில் யுத்ததில் தமிழ் மக்களின் விடிவுக்காக மடிந்த மாவீரர்களுக்கும் பொதுமக்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டே பிரசார கூட்டங்கள் நடைபெறுகின்றன.ஆனால் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் பிரசாரக்கூட்டங்களில் மாவீரர்கள் என்ற பெயர் உச்சரிப்பதற்கே பின் னடிக்கும் நிலைமைகள் காணப்படுகின்றன. இவ்வாறான நிலையில் ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் செயற்பாடுகள் தொடர்பில் கிழக்கு தமிழ் மக்களுக்கு நம்பிக்கை யிழக்கும் நிலைமையே காணப்படுகின்றது.தமிழ் தேசிய பரப்பில் தமிழர்கள் விடுதலைப் போராட்டத்தினையும் மாவீரர்களையும் யாரும் பிரித்துப்பார்க்கமுடியாது.அதனை தமிழ் மக்கள் ஒருபோதும் அனுமதிக்கமாட்டார்கள். இவ்வாறான நிலைமையிலேயே கிழக்கு மாகாணத்தில் தேர்தல் பணிகள் முன்னெடுக்கப் பட்டுள்ளது.அரசாங்க தரப்பு ஏனைய தரப்பின ரின் கடுமையான பிரசாரங்களுக்கு மத்தியில் தமிழ் தேசிய பரப்பின் பிரசாரங்களும் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில் தமிழ் மக்கள் சிறந்த வேட்பாளர்களை தெரிவுசெய்து கிழக்கு மாகாணத்தின் இருப்பினை உறுதிப்படுத்த வேண்டியது காலத்தின் கட்டாயமாகும். https://www.ilakku.org/தேசிய-மக்கள்-சக்தி-போன்ற/
-
தமிழ்முஸ்லீம் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து தேசியஐக்கிய அரசாங்கம் - விஜித ஹேரத்
தமிழ், முஸ்லிம் எம்.பிகளை இணைத்து தேசிய ஐக்கிய அரசாங்கம் தமிழ், முஸ்லிம் கட்சிகளை இணைத்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தை நிறுவுவதற்கு தேசிய மக்கள் சக்தி எதிர்பார்த்துள்ளதாக அமைச்சர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார். ”பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையை பெறும். எவ்வாறாயினும், தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் நாடாளுமன்ற உறுப்பினர்களை அழைத்து தேசிய ஐக்கிய அரசாங்கத்தை நிறுவுவதற்கு நாம் எதிர்பார்த்துள்ளோம். தேசிய ஐக்கிய அரசியல் சூழலை வளர்ப்பதில் கட்சி ஆர்வமாக உள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்பினர்களைத் தவிர்த்து தமிழ் மற்றும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்கு தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பதற்கான அழைப்பு விடப்படும் தேசிய ஐக்கிய அரசாங்கத்தை அமைப்பதன் மூலம் இந்த நாட்டில் தேசிய ஐக்கியத்தை உண்மையாகவே அடைய முடியும். எனினும் ஐக்கிய அரசாங்கம் இல்லாவிட்டாலும் எம்மால் அரசாங்கத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் மற்றும் அனைத்து சமூகங்களுக்கும் சேவை செய்யவும் முடியும்” என்றும் கூறியுள்ளார். என்றாலும் அண்மையில் யாழ்ப்பாணத்தில் பிரச்சாரத்தில் ஈடுபட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்று குழு உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான பிமல் ரத்நாயக்க, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவானந்தாவிற்கு தேசிய மக்கள் சக்தி தலைமையிலான அரசாங்கத்தில் அமைச்சுப் பதவி வழங்கப்பட மாட்டாது. கடந்த தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை ஆதரித்த டக்ளஸ் தேவானந்தா, நாட்டில் ஏற்பட்ட கணிசமான பிரச்சினைகளுக்கு பங்களிப்பை வழங்கிய முன்னைய அமைச்சரவையில் அங்கம் வகித்தவர். டக்ளஸ் தேவானந்தா , அண்மையில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை சந்தித்திருந்தார். இதுதொடர்பிலான புகைப்படத்தை சமூக ஊடகங்களிலும், பத்திரிகைகளிலும் அவரது பிம்பத்தை உயர்த்துவதற்காக அவரது தரப்பு பயன்படுத்தியிருந்தது. இலங்கைக்கு பாதகமான கொள்கைகளை வகுத்து மகிந்த ராஜபக்ச, ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோரின் அமைச்சரவையிலும் டக்ளஸ் தேவானந்தா, உறுப்பினராக இருந்தார். றிசாத் பதியுதீன், சுமந்திரன், ஸ்ரீதரன் மற்றும் சில தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்களின் வாக்குகளைப் பெறுவதற்காக தவறான பிரச்சாரங்களில் ஈடுபடுகின்றனர்.” எனக் குற்றம் சுமத்தியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. https://oruvan.com/sri-lanka/2024/11/12/national-unity-government-to-include-tamil-and-muslim-mps-vijitha-herath-announces
-
விந்தணுவால் மட்டும் மாதம் 5 லட்சம் லாபம்… எருமை மாடுனு யாரையும் திட்டாதீங்க!
விந்தணுவால் மட்டும் மாதம் 5 லட்சம் லாபம்… எருமை மாடுனு யாரையும் திட்டாதீங்க! Kumaresan MNov 12, 2024 16:33PM ராஜஸ்தானில் எருமை மாடு ஒன்றை 23 கோடிக்கு ஏலம் கேட்ட சம்பவம் ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் ஆண்டுதோறும் சர்வதேச புஷ்கர் கண்காட்சி நடைபெறும். இதுவே இந்தியாவின் பெரிய கால்நடை கண்காட்சி ஆகும். இந்த கண்காட்சியில் கோடிக்கணக்கில் குதிரைகள் ஏலம் போகும். குதிரைகளை விட இந்த கண்காட்சியில் இருந்த அன்மோல் என்கிற முரா ரக எருமை மாடு அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. ஹரியானா மாநிலம் சிர்ஷா பகுதியை சேர்ந்த ஜகத் சிங் என்பவருக்கு இந்த எருமை சொந்தமானது. சுமார் 13 அடி நீளம், 6 அடி அகலம் 1500 கிலோ எடை கொண்ட அன்மோல் எருமை கண்காட்சியில் ஹீரோவாக வலம் வந்தது. 8 வயதாகும் அன்மோலுக்கு ஒரு நாள் உணவுக்கு மட்டும் 2000 ரூபாய் செலவு செய்யப்படுகிறது. தினசரி உணவில் 5 லிட்டர் பால் 4 லிட்டர் மாதுளை ஜூஸ், 30 வாழைப்பழங்கள், 20 முட்டைகள் மற்றும் கால் கிலோ பாதாம் தவிர பசுந்தீவனத்தை சாப்பிடும். மேலும் ஒரு நாளைக்கு இரு முறை குளிப்பாட்டப்படும் பின்னர், கடுகு மற்றும் பாதாம் எண்ணெய் மூலம் மசாஜ் செய்யப்படுகிறது. அன்மோலின் விந்தணுவிற்கு சந்தையில் செம டிமாண்ட் இருக்கிறது. வாரத்திற்கு இரண்டு முறை விந்தணு எடுக்கப்படுகிறது. இதன் மூலம் மாதம் ரூ.5 லட்சம் வரை லாபம் கிடைப்பதாக அதன் உரிமையாளர் ஜக்தர் சிங் தெரிவித்துள்ளார். இந்த கண்காட்சியில் அன்மோலை ரூ. 23 கோடி வரை ஏலம் கேட்ட போதும் அதை கொடுக்க மறுத்து விட்டார். அதாவது இரு ரோல்ஸ் ராய்ஸ் 10 மெர்சிடஸ் கார்களுக்கு இதன் விலை சமம். நொய்டாவில் 20 வீடுகளையும் இந்த விலையில் நாம் வங்கி விட முடியும். தான் பெற்ற பிள்ளை போல வளர்ப்பதால் எவ்வளவு பணம் கொடுத்தாலும் அன்மோலை கொடுக்கப் போவதில்லை என்று ஜகத் சிங் கூறுகிறார். https://minnambalam.com/india-news/rs-23-crore-buffalo-eats-dry-fruits-worth-rs-1500-daily/
-
சுழிபுரத்தில் சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம் - தலையிட்ட பொலிஸார்!
சுழிபுரத்தில் சுமந்திரனின் கூட்டத்தில் குழப்பம் - தலையிட்ட பொலிஸார்! வட்டுக்கோட்டை - சுழிபுரம் பகுதியில் நேற்று திங்கட்கிழமை(11) நடைபெற்ற இலங்கை தமிழரசுக் கட்சியின் பிரசார கூட்டத்தில் குழப்பம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்; குறித்த கூட்டத்தில் சுமந்திரன் உரையாற்றிய பின்னர் கூட்டத்தில் இருந்த சிலர் கேள்விகள் கேட்க முற்பட்டனர். இதன்போது கூட்டத்தில் குழப்ப நிலை ஏற்பட்டது. அங்கு முறுகல் நிலை ஏற்பட்டவேளை அவ்விடத்திற்கு வருகை தந்த பொலிஸார் கேள்வி கேட்டவர்களை வெளியேற்றினர். அதன்பின்னர் சுமந்திரனை அழைத்துச் சென்ற ஆதரவாளர்கள் பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். (ச) https://newuthayan.com/article/சுழிபுரத்தில்_சுமந்திரனின்_கூட்டத்தில்_குழப்பம்_-_தலையிட்ட_பொலிஸார்!