Everything posted by கிருபன்
-
ஐபிஎல் டி20 செய்திகள் - 2025
IPL Retentions : ஒவ்வொரு அணியும் தக்கவைத்த வீரர்கள் யார் யார்? – முழு விவரம்! christopherOct 31, 2024 19:07PM அடுத்த ஆண்டு ஐபிஎல் 2025 தொடருக்கு முன்னதாக வரும் டிசம்பர் மாதம் மெகா ஏலம் நடைபெற உள்ளது. அதற்கு முன்னதாக தக்கவைத்த வீரர்களின் பட்டியலை ஒவ்வொரு அணியும் இன்று (அக்டோபர் 31) மாலை 5 மணிக்குள் வெளியிட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்தது. ஒவ்வொரு அணியும் தங்கள் 2024 அணியில் இருந்து அதிகபட்சமாக ஆறு வீரர்களை தக்க வைத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதன்படி ஐபிஎல் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொரு அணியும் தாங்கள் தக்கவைத்த வீரர்களின் பட்டியலை தற்போது வெளியிட்டுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் : கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் (ரூ.18 கோடி) ரவீந்திர ஜடேஜா (ரூ.18 கோடி), மதீஷா பத்திரனா (ரூ.13 கோடி), சிவம் துபே (ரூ.12 கோடி) ஆகியோருடன் அன்கேப் வீரராக எம்.எஸ் தோனியை (ரூ.4 கோடி) சென்னை சூப்பர் கிங்ஸ் தக்கவைத்துள்ளது. வீரர்களை தக்கவைக்க 65 கோடி ரூபாய் செலவழித்துள்ள சென்னை அணி, மீதமுள்ள ரூ.55 கோடியுடன் ஏலத்திற்கு செல்கிறது. பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்! விராட் கோலி (ரூ.21 கோடி), ரஜத் படிதார் (ரூ.11 கோடி) யஷ் தயாள் (ரூ.5 கோடி) ஆகிய மூவரை மட்டுமே ஆர்.சி.பி அணி தக்கவைத்துள்ளது. இதன்மூலம் 37 கோடியை செலவழித்துள்ள பெங்களூரு, மீதம் 83 கோடி ரூபாயை ஏலத்திற்காக கைவசம் வைத்துள்ளது. மும்பை இந்தியன்ஸ் : மும்பை இந்தியன்ஸ் அணியை பொறுத்தவரை ஜஸ்பிரித் பும்ரா(ரூ.18 கோடி), சூர்ய குமார் யாதவ் (ரூ.16.35 கோடி), ஹர்திக் பாண்டியா(ரூ.16.35 கோடி), ரோஹித் சர்மா(ரூ.16.30 கோடி) மற்றும் திலக் வர்மா (ரூ.8 கோடி) ஆகியோரை தக்கவைத்துள்ளது. இதன்மூலம் வீரர்களை தக்க வைக்க 75 கோடி ரூபாய் செலவழித்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி, ஏலத்திற்காக 45 கோடி ரூபாயை கைவசம் வைத்துள்ளது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் : நடப்பு சாம்பியன் அணியான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அதிகபட்சமாக 6 வீரர்களை தக்கவைத்துள்ளது. அதன்படி ரிங்கு சிங் (ரூ.13 கோடி) ஆண்ட்ரே ரசல் (ரூ.12 கோடி), சுனில் நரைன் (ரூ.12 கோடி), வருண் சக்ரவர்த்தி (ரூ.12 கோடி) ஆகியோருடன் அன்கேப் வீரர்களாக ஹர்ஷித் ராணா மற்றும் ரமன்தீப் சிங் ஆகிய இருவரும் தலா ரூ. 4 கோடிக்கு தக்கவைத்துள்ளது. மொத்தம் ரூ.69 கோடி செலவழித்துள்ள நிலையில் மீதம் ரூ.51 கோடியுடன் ஏலத்தில் பங்கேற்கிறது கே.கே.ஆர். பஞ்சாப் கிங்ஸ் : ஷஷாங்க் சிங் (ரூ.5.5 கோடி) மற்றும் பிரப்சிம்ரன் சிங் (ரூ.4 கோடி) ஆகிய இரு அன்கேப் வீரர்களை மட்டும் பஞ்சாப் கிங்ஸ் அணி தக்க வைத்துள்ளது. இதன்மூலம் ரூ. 9.5 கோடி செலவழித்துள்ள நிலையில், அதிகபட்சமாக ஏலத்திற்கு 110 கோடி ரூபாயை கைவசம் வைத்துள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் : அக்சர் படேல் (ரூ.16.5 கோடி), குல்தீப் யாதவ் (ரூ.13.25 கோடி), டிரிஸ்டன் ஸ்டப்ஸ் (ரூ.10 கோடி), ஆகியோருடன் அன்கேப் வீரராக அபிஷேக் போரல் (4 கோடி) டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி தக்கவைத்துள்ளது. இதன்மூலம் ரூ.43.75 கோடியை செலவழித்து, ஏலத்திற்காக 76.25 கோடி ரூபாயை கைவசம் வைத்துள்ளது. லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் : எல்எஸ்ஜி அணியில் நிக்கோலஸ் பூரன் (ரூ.21 கோடி), ரவி பிஷ்னோய் (ரூ.11 கோடி), மயங்க் யாதவ் (ரூ.11 கோடி) ஆகியோருடன் அன்கேப் வீரர்களாக மோசின் கான் மற்றும் ஆயுஷ் படோனி தலா ரூ. 4 கோடிக்கு தக்கவைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் ரூ.51 கோடியை செலவழித்து, 69 கோடி ரூபாயை கைவசம் வைத்துள்ளது லக்னோ. ராஜஸ்தான் ராயல்ஸ் : சன்ரைசர்ஸ் ஹைதராபாத் : ஹென்ரிச் கிளாசென் (ரூ.23 கோடி), கேப்டன் பாட் கம்மின்ஸ் (ரூ.18 கோடி) , அபிஷேக் சர்மா (ரூ.14 கோடி) மற்றும் டிராவிஸ் ஹெட் (ரூ.14 கோடி) மற்றும் நிதிஷ் ரெட்டி (ரூ.6 கோடி) ஆகிய 5 வீரர்களுக்கு மொத்தம் ரூ.75 கோடி செலவழித்துள்ளது. இதன்மூலம் மீதமுள்ள 45 கோடியுடன் ஏலத்திற்கு செல்கிறது எஸ்.ஆர்.ஹெச். குஜராத் டைட்டன்ஸ் : கேப்டன் ரஷித் கான் (ரூ.18 கோடி), சுப்மன் கில் (ரூ.16.5 கோடி), சாய் சுதர்சன் (ரூ.8.5 கோடி) ஆகியோருடன் அன்கேப் வீரர்களாக ராகுல் தெவாடியா மற்றும் ஷாருக்கானை தலா ரூ.4 கோடிக்கு தக்கவைத்துள்ளது குஜராத் அணி. மொத்தம் 51 கோடி ரூபாய் செலவழிக்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள ஒரு ஆர்டிஎம் மற்றும் 69 கோடியுடன் ஏலத்திற்கு செல்கிறது ஜி.டி. https://minnambalam.com/sports/ipl-retentions-who-are-the-players-retained-by-each-team-full-details/
-
புதிய அரசும் சிங்கள தேசியவாதத்தையே பேசுகிறது - செல்வம் அடைக்கலநாதன்
புதிய அரசும் சிங்கள தேசியவாதத்தையே பேசுகிறது தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை விரும்பாதவர்கள் மீது மக்களின் கோபம் பிரதிபலித்திருப்பதை தேர்தலின் பின்னர் பார்க்கமுடியும் என்பதுடன் அனுர அரசாங்கமும் சிங்களதேசிய வாதத்தையே பின்தொடர்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வன்னிமாவட்ட ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வேட்பாளருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார். இன்று வியாழக்கிழமை (31) வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் , தமிழ்கட்சிகள் ஒற்றுமை தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வெளியிடப்பட்டுள்ள ஆதங்கம் உண்மையானது. அதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம். இந்த தேர்தலில் தமிழ்கட்சிகளாகிய நாம் அனைவரும் ஒரு பொதுச்சின்னத்தின் கீழே போட்டியிடுவோம் என்று முயற்சிகளை எடுத்திருந்தோம். அது சாத்தியப்படவில்லை. எனவே அது மனவேதனையை அழிக்கிறது.இருப்பினும் நாம் ஐந்து கட்சிகள் தற்போது ஒன்றாக இருக்கிறோம். ஏனையவர்களையும் உள்ளேகொண்டுவருவதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் செய்வோம். தேர்தலின் பின்னராவது தமிழ்கட்சிகள் இணைந்துசெல்வதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்படவேண்டும். அத்துடன் தேர்தலின் பின்னர் ஒற்றுமையை விரும்பாதவர்கள் மீது மக்களின் கோபம் பிரதிபலித்திருக்கும். அவ்வாறு மக்கள் பாடம் புகட்டும் போது ஒற்றுமையினை ஏற்ப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்ப்படலாம்.எனவே மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயற்ப்படுபவர்களை அவர்களே பார்த்துக்கொள்வார்கள். கடந்த அரசாங்கத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த அரசாங்கமும் புதிய ஜனாதிபதியும் அது தொடர்பான கருத்துக்களை கூறமறுக்கின்றனர். எனவே அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்படவுள்ளதாக சொல்லப்பட்ட ஊதியம் கூட்டப்படவேண்டும். எமது கட்சி இதற்காக தொடர்ந்தும் குரல்கொடுக்கும். பாராளுமன்றத்தேர்தலில் ஆசனங்களை கூடுதலாக எடுக்கவேண்டும் என்பதை நோக்கமாக கொண்டே ஊழல் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என அரசால் காட்டப்பட்டுகிறது. அத்துடன் மாகாணசபை முறைமையை ஒழிக்கவேண்டும் என்பது இந்த அரசாங்கத்தின் குரலாக உள்ளது.குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கவேண்டும் என்று குரல் கொடுத்தவர்கள் இவர்களே. ஆனால் அதனை நீக்குவதற்கான சூழலில் அவர்கள் இருப்பதுபோல தெரியவில்லை. இடதுசாரித்துவத்தினை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி இன்று சிங்களதேசிய வாதத்தோடு இணைந்து செயற்படுகின்றது. அந்தவகையில் திடமான ஒரு அரசாங்கம் அமைவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே இருக்கும். எனவேநாம் 11 ஆசனங்களை பெறும் போது அதிகாரம் மிக்கவர்களாக இருப்போம்.இம்முறை தமிழ்த்தரப்பை புறந்தள்ளி புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது. அதனை நிர்ணயிக்கின்ற சக்தியாக தமிழ்த்தரப்பு இருக்கும் என்றார். https://akkinikkunchu.com/?p=297479
-
கனடாவில் நடந்த கொள்ளைச் சம்பவம் - தமிழர் ஒருவர் கைது
கனடாவில் நடந்த கொள்ளைச் சம்பவம் - தமிழர் ஒருவர் கைது கனடாவின் நோபல்டன் நகரில் வீடொன்றில் கடந்த வாரம் நிகழ்ந்த கொள்ளை சம்பவம் குறித்த குற்றச்சாட்டில் தமிழர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பகல் நேரத்தில் இடம்பெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் தொடர்பில் யோர்க் பிராந்திய பொலிஸார் சம்பவ இடத்திற்கு அழைக்கப்பட்டனர். இந்நிலையில், சம்பவ இடத்தில் இருந்து தப்பி செல்ல முயன்ற இரண்டு சந்தேக நபர்கள் அங்கிருந்த பொலிஸாரின் வாகனம், பொது மக்களின் வாகனங்கள் மீதி மோதி சென்றதாகக் கூறப்படுகிறது. எனினும், இந்த விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்பட்டதா என்ற விபரங்கள் வெளியாகவில்லை. இந்நிலையில், குறித்த சம்பவம் தொடர்பில் சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைதானவர் யசந்தன் கந்தையா என அடையாளம் காணப்பட்டார். இந்தச் சம்பவம் தொடர்பாக 10 குற்றச்சாட்டுகளை அவர் எதிர்கொண்டுள்ளார். கைது செய்யப்படும் போது இவருக்கு எதிராக தடை உத்தரவுகள் இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த சம்வபத்துடன் தெடர்புடைய இரண்டாவது சந்தேக நபரின் விரிவான விபரங்கள் வெளியிடப்படவில்லை. இந்நிலையில், சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://oruvan.com/diaspora/2024/10/30/a-tamil-man-was-arrested-in-connection-with-the-robbery-incident-in-canada
-
சத்தமாக பிரார்த்தனை செய்யவோ, குர்ஆன் ஓதவோ கூடாது: பெண்களுக்கு தலிபான் புதிய தடை
சத்தமாக பிரார்த்தனை செய்யவோ, குர்ஆன் ஓதவோ கூடாது: பெண்களுக்கு தலிபான் புதிய தடை October 31, 2024 ஆப்கானிதானில் பெண்கள் சத்தமாக பிரார்த்தனை செய்வதோ அல்லது மற்ற பெண்களின் முன்பு குர்ஆனை ஓதுவதோ தடைசெய்யப்பட்டுள்ளது என்று தலிபான் அமைச்சர் ஒருவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் பெண்கள் தங்களின் குரல்களை உயர்த்துவதற்கும், வீட்டுக்கு வெளியே தங்களின் முகங்களை காட்டுவதற்கும் தடைவிதிக்கும் அந்நாட்டு அறநெறிச் சட்டங்களில் சமீபத்திய கட்டுப்பாடு இதுவாகும். அங்கு ஏற்கனவே பெண்கள் மூன்றாம் வகுப்புக்கு மேல் படிப்பதற்கும், பொது இடங்கள், வேலைக்குச் செல்வதற்கும் தடைவிதிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து ஆப்கனின் கிழக்கு லோகர் பிராந்தியத்தில் அக்.27-ம் திகதி ஞாயிற்றுக்கிழமை நடந்த நிகழ்ச்சியில் பேசிய நல்லொழுக்கத்துறை அமைச்சர் காலித் ஹனாஃபி கூறியதாவது: ஒரு வளர்ந்த பெண் குர்ஆனின் வாசங்களை ஓதுவது, மற்றொரு வளர்ந்த பெண்ணின் முன்பாக சத்தமாக பிரார்த்தனை செய்யவது தடைசெய்யப்பட்டுள்ளது. ‘தக்பிர்’ (அல்லா ஹு அக்பர்) கோஷம் எழுப்பவும் அனுமதி கிடையாது. அதேபோல் இஸ்லாமிய நம்பிக்கையின் மையமான ‘சுபானுல்லா’ போன்ற வார்த்தைகளையும் உச்சரிக்கக்கூடாது. தொழுகைக்கான அழைப்பு விடுக்க பெண்கள் அனுமதிக்கப்படவில்லை. எனவே அவர்கள் பாடல் பாடுவதற்கும் அனுமதி இல்லை” இவ்வாறு அவர் தெரிவித்தார். அவரது கருத்துகள் அமைச்சகத்தின் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டு பின்னர் நீக்கப்பட்டது. கடந்த 2021-ம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் ஆட்சியைக் கைப்பற்றிய பின்பு தலிபான்கள் நல்லொழுக்கத்தைப் பரப்புவதற்கும், தீமைகளைத் தடுப்பதற்கும் அமைச்சகம் ஒன்றை அமைத்தனர். அப்போது முதல் தலிபான்கள் பிறப்பித்த ஆணைகளை அமைச்சகம் செயல்படுத்தி வருகிறது. இவை அனைத்தும் பெண்களுக்கு எதிரானதாக அவர்களை சமமற்ற முறையில் நடத்தும் வகையில் அமைந்துள்ளன. குறிப்பாக, பெண்கள் சிறுமிகளுக்கு ஆடை கட்டுப்பாடுகள், கல்வி கற்க, வேலைக்குச் செல்லத் தடை, பொது இடங்களுக்கு ஆண்களின் துணையில்லாமல் செல்லவும் தடைவிதித்திருக்கின்றன. https://www.ilakku.org/சத்தமாக-பிரார்த்தனை-செய்/
-
மன்னார் காற்றாலையை அமைக்கும் அதானியின் திட்டம் கைவிடப்படுமா?: புதுடில்லி செல்லும் அரச உயர்மட்ட குழு
மன்னார் காற்றாலையை அமைக்கும் அதானியின் திட்டம் கைவிடப்படுமா? இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்கும் பணி தொடர்பில கலந்துரையாடல்களை நடத்த எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவொன்று புதுடில்லி செல்ல உள்ளது. கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையமொன்றை அமைப்பதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டு ஆரம்பகட்ட பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. இத்திட்டத்தின் ஊடாக 250 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தன. என்றாலும், இத்திட்டத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் வெளியாகியிருந்ததுடன், தற்போதைய அரசாங்கமும் இத்திட்டத்தை மீள் பரிசீலனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த 10ஆம் திகதி இதுதொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தும் இருந்தார். காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்திற்கு கடந்த அமைச்சரவை வழங்கிய அனுமதியை வலுவற்றதாக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி வனஜீவராசிகள், இயற்கை வளங்கள் பாதுகாப்பு சங்கம், சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் உள்ளிட்ட சில தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் திட்டத்தை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை உயர்நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்தியிருந்தார். இலங்கை அரசாங்கம் மற்றும் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு இடையே காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் குறித்து ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம் கலந்துரையாடலை நடத்த உள்ளது. பொதுத் தேர்தலின் பின்னர் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் திட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. இந்த நிலையில், காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்த இலங்கை அரசாங்கத்துக்கு புதுடில்லியில் இருந்து அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. அதன் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவொன்று புதுடில்லி செல்ல உள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன. https://oruvan.com/sri-lanka/2024/10/30/will-adanis-plan-to-set-up-mannar-wind-farm-be-shelved
-
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது
ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது. இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது. நிகழ்வில் கூட்டணியின் வேட்பாளர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், குருசுவாமி சுரேந்திரன், சி.வேந்தன், பா.கஜதீபன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்ததோடு, கட்சியின் முதன்மை பெண் வேட்பாளரான சசிகலா ரவிராஜ்ஜீம் கலந்து கொண்டிருந்தார். இம்முறை , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சசிகலா ரவிராஜ் போட்டியிடுவதோடு, தமிழர்களின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படவும் , சாந்தி , சமாதானம் , தன்னாட்சி உரிமையுடன் ,ஒற்றுமையுடன் அனைவரும் ஒன்றாக வாழ நாளைய தினம் பிறக்கவுள்ள தீப திருநாளாம் தீபாவளி நன்னாள் அனைவருக்கும் சிறப்பானதொரு நாளாக அமைய வேண்டும் என்றும் சசிகலா ரவிராஜ் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார். https://akkinikkunchu.com/?p=297413
-
யாழில் படுகொலை செய்யப்பட்ட கணவன், மனைவியின் சடலங்கள் மீட்பு!
வடமராட்சியில் இரட்டைக் கொலை: இருவர் கைது பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சலவைத் தொழிலில் ஈடுபட்டு வரும் மாணிக்கம் சுப்பிரமணியம் (வயது 54), அவரது மனைவியான சுப்பிரமணியம் மேரி ரீட்டா (வயது 53) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். பருத்தித்துறை ஆதார மருத்துவமனையில் ஒப்பந்த அடிப்படையில் சலவைத் தொழிலில் ஈடுபட்டு வரும் மாணிக்கம் சுப்பிரமணியம் (வயது 54), அவரது மனைவியான சுப்பிரமணியம் மேரி ரீட்டா (வயது 53) ஆகியோரே சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களின் வீட்டுக்கு நேற்று காலை அயலவர்கள் சென்று பார்த்தபோது இருவரும் உயிரிழந்த நிலையில் காணப்பட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்னர். இந்நிலையில், கொலை சப்பவம் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். காங்கேசன்துறை பிரிவுக்குட்பட்ட பொலிஸ் உளவுத்துறையினருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கொலையாளிகள் மூவரில் இருவரைக் கைது செய்துள்ளனர். ஒருவர் தலைமறைவாகியுள்ளார். தொழிற் போட்டியினால் மூவர் சேர்ந்து வயோதிபத் தம்பதியினரை கொலை செய்துள்ளனர். [எ] https://newuthayan.com/article/வடமராட்சியில்_இரட்டைக்_கொலை:_இருவர்_கைது
-
காங்கேசன்துறை சுங்கத்தில் ஊழல் செயற்பாடுகள்!
காங்கேசன்துறை சுங்கத்தில் ஊழல் செயற்பாடுகள்! நாகபட்டினம் காங்கேசன்துறை கப்பல் சேவை தொடர்பில் தொடர்ச்சியாக மக்கள் பல்வேறு விதமான குற்றாச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற நிலையில் காங்கேசன்துறை சுங்கத்தில் ஊழல் செயற்பாடுகள் இடம் பெறுவதுடன் மக்களை திட்டமிட்டு தாமதப்படுத்தும் செயற்பாடுகளிலும் சுங்க அதிகாரிகள் ஈடுபடுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தி உள்ளனர் காங்கேசன்துறை சுங்கத்தில் இரண்டு கருமபீடங்கள் மாத்திரமே காணப்படுவதாகவும் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளிடம் நீண்ட நேர விசாரணைகள் மேற்கொள்வதாகவும் நபர் ஒருவருக்கு 35 தொடக்கம் 40 நிமிடம் வரை விசாரணை செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் பாதிக்கப்பட்ட பயணிகள் தெரிவிக்கின்றனர் அடிப்படை வசதிகள் அற்ற அமர்வதற்கு கதிரைகள் கூட அற்ற காத்திருக்கும் பகுதியில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய தேவை காணப்படுவதாகவும் மலசல கூட வசதிகள் கூட ஒழுங்குபடுத்தப்படவில்லை எனவும் சில பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிப்பதாகவும் வரியில் பாதி அளவிலான தொகைக்கே பற்று சீட்டு வழங்குவதாகவும் மீதி தொகைக்கு பற்றுசீட்டு வழங்குவதில்லை எனவும் பயணிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.[ ஒ ] https://newuthayan.com/article/காங்கேசன்துறை_சுங்கத்தில்_ஊழல்_செயற்பாடுகள்!
-
அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது
அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது adminOctober 31, 2024 அமைச்சர்கள் கொழும்பில் இருந்து செயற்படுவதை விட சமூகங்களுக்குள் உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க , அமைச்சர்களுக்கு எதிர்வரும் காலங்களில் கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது எனவும் வறுமையை ஒழிப்பதிலேயே அரசாங்கத்தின் முதன்மை கவனம் செலுத்தப்படும் எனவும் தொிவித்துள்ளாா். மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தொிவித்துள்ளாா். மேலும் தங்களுக்கு மக்களுடன் நேரடியாக இணைக்கும் அரசாங்கம் தேவை எனத் தொிவித்த அவா் தலைவர்கள் தொலைதூரத்தில் இருப்பதை விட உள்ளூர் பிரச்சினைகளை தீர்க்க தங்கள் மாவட்டங்களில் பணியாற்ற வேண்டும் எனவும் வலியுறுத்தினார். நவம்பர் 14 க்குப் பிறகு புதிய அமைச்சரவை மற்றும் அரசாங்கத்தை நிறுவுவதற்கான திட்டங்களை வெளிப்படுத்திய ஜனாதிபதி “இந்த அரசாங்கம் தனது பணிகளைச் செய்வதற்கு கிராமங்களைச் சென்றடைய வேண்டும் எனவும் கிராமப்புறங்களில் வறுமையை அகற்றுவதே தன் முன்னால் உள்ள மிக முக்கியமான பணி எனவும் ஜனாதிபதி மேலும் குறிப்பிட்டாா். https://globaltamilnews.net/2024/207923/
-
ஈழத் தமிழரின் ‘ஒற்றைப் பனைமரம்’ படத்தை வெளியிட சீமான் கடும் எதிர்ப்பு
ஆம். கோவிட்டுக்கு முன்னர் Surbiton இல் ஒரு ஹோலில் பிரத்தியேகமாக திரையிடப்பட்டபோது பார்த்தேன்! கதை மறந்துபோயிருந்தது.. ஆனால் விமர்சனங்களை வாசித்து பல காட்சிகள் நினைவுக்கு வந்தது. சில காட்சிகள் திணிக்கப்பட்டவை போலிருந்தாலும், இறுதிப் போருக்குப் பின்னர் நிகழ்ந்தவற்றை ஓரளவு வெளியே கொண்டுவந்தது உண்மைதான். இப்போது எல்லோருமே இறுதிப் போரிலும் அதன் பின்னரும் நிகழ்ந்தவற்றை மறந்து, அல்லது தவிர்த்து வாழப்பழகிவிட்டோம், காணாமல் போன உறவுகளை இன்னும் தேடிக்கொண்டு இருப்பவர்களைத் தவிர! குறிப்பு: புதியவன் என்ற பெயருடன் படங்கள் எடுக்க முன்னரே அவரை 90களின் ஆரம்பத்தில் இருந்து ஓரளவு பழக்கம்😀 அப்போது London Tooting இல் இருந்ததனால் அடிக்கடி காணும் சந்தர்ப்பம் இருந்தது. இடது சாய்வான மாற்றுக் கருத்துக்காரர்களில் ஒருவர். எனினும் அவருடைய நண்பர்களில் பலர் புலிகளின் ஆதரவாளர்கள். அவருக்கு தடிப்புக் கதையும், ஊரில எவடம் என்று பூர்வீகம் தேடும், தமது பரம்பரையின் பெருமை பேசும் யாழ்ப்பாணிகளைப் பிடிக்காது! நண்பர் @பெருமாள் க்கும் தெரிந்திருக்கும், ஆனால் அவர் கறுப்பு-வெள்ளை என்று பிரிப்பவர். நான் சாம்பலில் எத்தனை நிழல்கள் என்று எண்ணுபவன்😎
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
கவனித்தேன்! ”ல” வுக்கு கால் போட்டு குழப்பியிருக்கின்றார் @கந்தப்பு😜 ஆனால் எனது பதில்கள் ஒரு தேர்தல் மாவட்டத்தில் எந்தக் கட்சிக்கு அதிக வாக்குகள் கிடைக்கும் என்ற கணிப்பின் அடிப்படையில் உள்ளது😁 @alvayan ஐப் போல ஊருக்குப் போகவும் இல்லை! கீழேயுள்ள பதிவை முன்னரே பார்க்கவும் இல்லை! பார்த்திருந்தால் தமிழரசுக் கட்சியை🏠 கீழே இறக்கி திசைகாட்டியை 🧭 மேலே ஏற்றியிருப்பேன்🙃 ——- அரசியல் அப்டேட்! தமிழரசு கட்சியின் நிலமை படு மோசம். பிரச்சாரத்திற்கு போகும் வேட்பாளர்கள் பல இடங்களில் மோசமாக திட்டு வாங்குவது அதிகரித்து வருகிறது. சைக்கிள் ஒரு தளம்பல் நிலையில் உள்ளது. பெரியளவு மக்கள் அலை இல்லாது விட்டாலும் களத்திலே எதிர்ப்பு குறைவான கட்சியாக சைக்கிள் உள்ளது. இன்னும் கணிசமான மக்கள் சைக்கிளா , திசைகாட்டியா என்ற குழப்பத்தில் உள்ளனர். அவர்கள் எடுக்கப்போகும் முடிவுதான் இறுதி ஆசனங்களை முடிவு செய்யும். சங்கு சித்தார்த்தனுக்கு இருக்கும் பாரம்பரிய ஆதரவாளர்களோடு மட்டும் தடுமாறுகிறது. புதிய தலைமுறை சங்கு மற்றும் மாம்பழத்தை பெரிதாக கண்டுகொள்ளவில்லை. மான் : நிலமை கஷ்டமாகி வருகிறது. திசைகாட்டி கணிசமான ஆதரவு பெருகியுள்ளது. தலைமை வேட்பாளரின் பொறுப்பற்ற பதில்கள் , 2k கிட்ஸ் போல் அடிப்படை பிரச்சினையே தெரியாமல் முகநூல் போஸ்டை வைத்து அரசியல் பேசும் குழந்தைப்புள்ள தனம் மான் ஒரு சீட்டும் சைக்கிள் 3 சீட்டும் பெறும் நிலையை உருவாக்கலாம். கணிசமான மக்கள் இன்னும் தளம்பல் நிலையிலேயே உள்ளனர். வீணை பாரம்பரிய வாக்களர்களுடன் ஒரு ஆசனத்துக்கான போடீடியில் இன்னும் உள்ளது. இன்று லீக் ஆன ஓடியோவால் ஊசி கட்சிக்கு பாரிய பின்னடைவு வரலாம். https://www.facebook.com/share/p/qkAvbaGNRnnGhyBd/?mibextid=WC7FNe
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
உங்கள் பதில்கள் சைக்கிள் 🚲 சவாரியில் விருப்பமுள்ளவர் என்று காட்டுகின்றது! போட்டியில் பங்குபற்றியமைக்கு நன்றி பல! ஆனால் வெற்றி எனக்குத்தான்😄
-
தமிழ்நாட்டில் தீபாவளி உருவான வரலாறு!
தமிழ்நாட்டில் தீபாவளி உருவான வரலாறு! -இலக்குவனார் திருவள்ளுவன் தீபாவளி கொண்டாட்டத்திற்கான சுவையான கதைகள் என்னென்ன? இதன் தொடக்கம், காரணம், நோக்கங்கள் யாவற்றையும் அறிந்தால் பல புதிர்கள் விடுபடும். வரலாறு, இலக்கியம் சார்ந்து இந்தக் கட்டுரை சொல்லும் நுட்பமான அரிய தகவல்கள் தீபாவளியின் வரலாறு குறித்த ஒரு புரிதலைத் தருகிறது; விசய நகரப் பேரரசு தமிழ்நாட்டில் கி.பி. 15ஆம் நூற்றாண்டு நுழைந்தது. அப்பொழுது முதல் தான் தீபாவளி இங்கே கொண்டாடப்படுகிறது. அவ்வாறு தமிழகத்திற்கு வந்த தீபாவளி. நேரடியாக இல்லாமல் இருக்கின்ற விழாவை மாற்றி அமைக்கும் வகையில் புகுந்தது. பரதகண்டம் முழுவதும் இருந்த கார்த்திகை நாளே தீபாவளியாக மாறியுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தீபாவளி என்ற சொல் தமிழ்ச் சொல்லே அல்ல” என்று பண்பாட்டு ஆய்வாளர் தொ. பரமசிவன் தன்னுடைய ‘அறியப்படாத தமிழகம்’ என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளதும் கவனத்திற்கு உரியதாகும்.. முதலில் நாம் தீபாவளிபற்றிய கதைகளைப் பார்ப்போம். இராமன் வனவாசம் முடிந்து திரும்பிய நாள்; வால்மீகி இராமாயணத்தில் இராமன் தனது வனவாசத்தை முடித்துச் சீதையுடனும், இலட்சுமணனுடனும் அயோத்திக்குத் திரும்பினான். அந்த நாளை மக்கள் மகிழ்ச்சியுடன் விளக்கேற்றி கொண்டாட்டமாக வரவேற்றார்கள். மிதிலை நகரம் மக்கள் ஏற்றிய ஒளி வெள்ளத்தில் மிதந்த அந்த நாளே தீபாவளி என்பது ஒரு கதை. கேதார கெளரி நாள்; கேதாரம் என்றால் பாலி மொழியில் விளை நிலம் எனப் பொருள். இமய மலையில் இருந்த ஒரு விளைநிலம் சிவனின் தலமாகக் கருதப்பட்டதால் கேதாரம் என்றால் சிவதலம்/ சிவன் என்றானது. ஒரு நாட்டிய முடிவில் பிருங்கி முனிவர் பார்வதியை விட்டு விட்டுச் சிவனை மட்டும் வலம் வந்து வணங்கினார். இதனால் பார்வதி 21 நாள் நோன்பு இருந்து மேற்கொண்ட நடவடிக்கைகளால் சிவன் பார்வதியை – கெளரியை –த் தன்னில் பாதியாக ஏற்று மங்கையொரு பாகன் ஆக மாறினார். இந்த நாள் இறைவனை வழிபடும் சிறப்பு நாளாகக் கருதப்படுகிறது. நோன்பு இருந்து கேதார கெளரியாக (சிவன் பார்வதி இணைவாக) மாறிய இந்நாளே தீபாவளி என்பது மற்றுமொரு கதை. சங்க இலக்கியங்களுக்குக் கடவுள் வாழ்த்து எழுதப் பெற்ற பிற்காலத்தில் இறைவனும், இறைவியும் கலந்த உருவமாகக் கடவுளை உருவகப்படுத்தினர். இதை ஐங்குறுநூற்றுக் கடவுள் வாழ்த்து(அடி 1), “நீலமேனி வாலிழை பாகத்து ஒருவன்” என்கிறது. “பெண்ணுரு ஒரு திறன் ஆகின்று; அவ்வுருத் தன்னுள் அடக்கிக் கரக்கினும் கரக்கும்” என்று புறநானூற்றுக் கடவுள் வாழ்த்து (அடி 7-8) கூறுகிறது. இவற்றுக்குப் பின்னர் உருவாக்கப்பட்ட கதையே இக்கதை. நரகாசுரன் கொல்லப்பட்ட நாள்; நரகாசுரன் கொல்லப்பட்ட நாள் தீபாவளி என்பது ஒரு கதை. இவனது உண்மைப் பெயர் பவுமன். திருமால் பன்றித் தோற்றம் எடுத்துப் பூமியைத் துளைத்து அசுரர்களை அழிக்கச் சென்றாராம். அப்பொழுது அவருக்கும் பூமாதேவிக்கும் பிறந்தவன் தான் நரகாசுரனாம். அசுரர்களை வதம் செய்த பொழுது பிறந்ததால் அசுரர்களின் குணம் வந்து விட்டதாம். எனவே, நரன்(மனிதன்)+அசுரன் நரகாசுரன் எனப்பட்டானாம். அசுரர்களை வதம் செய்த பொழுது பிறந்தவனுக்கு வதம் செய்த திருமாலின் குணம் தானே வந்து இருக்க வேண்டும்? இவன் தாயைத் தவிர வேறு யாராலும் கொல்லப்பட முடியாத வரம் பெற்றிருந்தானாம். ஆகவே, சத்தியபாமாவாக இருந்த பூமாதேவியால் கொல்லப்பட்டானாம். கிருட்டிணன், நரகாசுரனைக் கொன்ற போது, அவன் தான் இறக்கும் நாளை மக்கள் கொண்டாட வேண்டும் என்று கேட்ட வரத்திற்கிணங்க, தீபாவளி கொண்டாடப்படுவதாக ஒரு கதை. ஆரியக் கதைகளின்படி முறையற்ற முறையில் கொன்றவன் அருளால் கொல்லப்பட்டவன் இறந்த நாளை மக்கள் கொண்டாட வேண்டும்! முன்னோர் நினைவு நாள்; நீத்தார் நினைவுநாள் இறுதிச் சடங்கில் எண்ணெய் தேய்த்துக் குளித்தல் தமிழர்களின் வழக்கம். தீபாவளியன்று தமிழ்நாட்டில் எண்ணெய் தேய்த்துக் குளிக்கின்றனர். தமிழ்நாட்டுப் பிராமணர்களும் இதனைப் பின்பற்றுகின்றனர். புரட்டாசி மாதம் எம உலகிலிருந்த வந்திருந்த முன்னோர் நினைவாக அவர்களுக்குப் படையலிட்ட பின், ஐப்பசியில் அவர்கள் மீளவும் எம உலகம் செல்வர். அப்பொழுது, அப்பாதையில் வெளிச்சம் இருக்க வேண்டுமாம். வந்த பொழுது இருட்டிலேயே வந்தவர்களுக்குப் போகும்பொழுது வெளிச்சம் தேவைப்படுகிறது போலும். எனவே, வீட்டு வெளி வாசலில் தென்திசை நோக்கி முன்னோர் ஒவ்வொருவருக்கும் ஒரு விளக்கு என்ற முறையில் விளக்கேற்றி வைக்க வேண்டும். எனவே, முன்னோர்களுக்காகக் கடைப் பிடிக்கப்படும் நீத்தார் நினைவு நாள்தான் தீபாவளியாக மாற்றப்பட்டது என்ற கூற்றும் உள்ளது. மகாவீரர் வீடுபேறடைந்த நாள் சமண மதத்தின் 24ஆவது அருகன் (தீர்த்தங்கரர்) வருத்தமான மகாவீரர் வீடு பேறடைந்த இந்த நாளில் இன்றும் சமணர்கள் இல்லங்களில் வரிசையாக விளக்குகளை ஏற்றி ஒளி விழா கொண்டாடுகின்றனர். இது இந்துக்களுக்கு தீபாவளி எனப்படுகிறது. பிராமணிய மதத்திற்கு மாற்றாக வந்ததே சமண மதம். சமணர்களின் இருபத்தி நாலாவது தீர்த்தங்கரரான வர்த்தமான மகாவீரர், பாவாபுரி நகர அரசனுடைய அரண்மனையில் இரவு முழுவதும் ஆன்மீகச் சொற்பொழிவு நிகழ்த்தினார். அதிகாலையில் சொற்பொழிவு முடிவடைந்த நிலையில் அமர்ந்திருந்த ஆசனத்தில் இருந்தபடியே வருத்தமான மகாவீரர் இறைவனோடு கலந்தார். உலகுக்கு ஞான ஒளியாகத் திகழ்ந்த மகாவீரரை வழிபடும் வகையில், அவர் வீடுபேறடைந்த நாளில் வீடுதோறும் விளக்குகளை ஏற்றி அன்று முதல் இன்று வரை சமணர்கள் கொண்டாடும் விழாவே தீபாவளி. சமண மதம் பலவீனம் அடைந்த பிறகு, சமணர்கள் கணிசமாக இந்து மதத்தில் சேர்ந்த பிறகும் தீபாவளியைக் கொண்டாடினர். அவர்களை பார்த்தே இந்துக்களும் தீபாவளியைக் கொண்டாட ஆரம்பித்தார்கள்.” என்று மயிலை சீனி. வேங்கடசாமி ‘சமணமும் தமிழும்’ என்ற நூலில் கூறியுள்ளார். ஐப்பசி மாதம் தேய்பிறை 14ஆம் நாளில் தீபாவளி கொண்டாடப்படுகிறது. இதனால் நரக சதுர்தசி என்கின்றனர். அஃதாவது காருவாவாகிய அமாவாசை அன்று கொண்டாடாமல் அதற்கு முதல்நாளே இக்கதையின்படி தீபாவளி கொண்டாடப்படுகிறது. கி.பி.1117 இல் சாளுக்கிய திரும்புவன மன்னன், சாத்துயாயர் என்னும் அறிஞருக்கு ஆண்டுதோறும் தீபாவளிப்பரிசு வழங்கியதாகக் கன்னடக் கல்வெட்டு ஒன்றுகூறுகிறது. கி.பி.1250இல் மராத்தியில் எழுதப்பெற்ற நூல் (இ)லீலாவதி. இதில்எண்ணெய் தேய்த்து நீராடுது பற்றிய குறிப்புகள் இடம் பெறுகின்றன. தமிழர் திருநாள் நான்கு நாள் கொண்டாடப்படுவது. இதற்குப் போட்டியாக ஐந்து நாள் விழாவாகத் தீபாவளி உருவாக்கப்பட்டிருக்கலாம் என எண்ணுகிறேன். வடநாட்டு ஆண்டுத் தொடக்கம் சைத்திர/சித்திரை மாதம் மார்ச்சு 21 அல்லது 22 வருகிறது. எனவே, அம்முறைப்படி கார்த்திகை மாதம் அக்டோபர் 23இல் தொடங்குகிறது. நமக்கு ஏப்ரலில் சித்திரை தொடங்குவதால் அப்பொழுது ஐப்பசி தான். எனவே, வடவர்கள் வடநாட்டில் அவர்கள் கார்த்திகைப்படி கார்த்திகை நாளைக் கொண்டாடினர். நமது விழாதான் அது என்பதை உணராத நாம் அயலவர்கள் விழா, பழக்க வழக்கம் போன்றவற்றில் பிடிப்பு உள்ள நாம், அக் கார்த்திகையைத் தீபாவளியாகக் கொண்டாடுகிறோம். அயோத்திதாசப் பண்டிதர் பெளத்தர்கள் ஆமணக்கு நெய்யைப் பயன்படுத்தி கார்த்திகை மாதத்து முழுநிலவு நாளிலே தீபமேற்றி, ஈகை அளித்து இறைவழிபாடு செய்தனர் என்று ஒரு கதையின் அடிப்படையில் குறிப்பிடுகிறார். கார்த்திகை தீபத் திரு நாளே தீபாவளியாயிற்று; தமிழில் உள்ள விளக்கு வரிசையே மறு பெயரில் தீபம் ஆவளியாக – வரிசையாக-க் கூறப்பட்டுத் தீபாவளி என்றானது. எனவே, தீபாவளி என்பது கார்த்திகை விளக்கு வரிசை தான். கார்த்திகை விளக்கு வரிசையாக ஏற்றப்படுவதைக் குறித்த ஒரு பாடலைப் பார்ப்போம். நலம் மிகு கார்த்திகை, நாட்டவர் இட்ட தலை நாள் விளக்கின் தகை உடையவாகி, புலம் எலாம் பூத்தன தோன்றி;-சிலமொழி!- தூதொடு வந்த, மழை. என்கிறார் புலவர் கண்ணங் கூத்தனார்(கார்நாற்பது, 26); இப்பாடலில் கார்த்திகையில் விளக்கு வரிசையாக ஏற்றப்படுவதைக் குறிப்பிட்டு, அதுபோல் எங்கும் பூக்கள் வரிசையாகப் பூத்துள்ளன என்கிறார். கார்த்திகை ஒளிநாள் தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் தொன்மையான விழாவாகும். கார்த்திகை குறித்துத் தொல்காப்பியத்திற்கும் முந்தைய இலக்கியமான மலைபடுகடாம் தெரிவிக்கிறது. நற்றிணை, சீவகசிந்தாமணி, முதலான இலக்கியங்களும் கார்த்திகைபற்றிக் கூறுகின்றன. எனவே தான், ‘தொல் கார்த்திகை நாள்’ என்கிறார் திருஞானசம்பந்தர். இலக்கியங்கள் கூறுவனவற்றில் இருந்து பருவநிலை மாற்றத்திற்கேற்பக் கொண்டாடிய இயற்கை விழாவாகத்தான் கார்த்திகை நாளைக் கொண்டாடினார்கள் என்பது உறுதியாகிறது. ஆனால், பின்னர் இதற்கும் கதை கட்டினார்கள். சிவனின் அடியையும் முடியையும் தேடித் தோற்ற நான்முகனும் திருமாலும் வேண்டியதற்கிணங்க சிவன் ஒளிப்பிழம்பாகத் தோன்றியதாகக் கூறிக் கதை சொன்னர். சிவன் ‘திரிபுராசுரர்’ என்று அழைக்கப்படும் கமலாட்சன், தாரகாட்சன், வித்தியுன்மாலி ஆகிய மூவரைக் கொன்ற நாள் தான் கார்த்திகை என்றனர். தமிழ் நூல்கள் போல் கல்வெட்டுகளும், கார்த்திகைப் பெருவிழா கொண்டாடியதை எடுத்துக் கூறுகின்றன. சான்றாக, முதலாம் இராசேந்திர சோழன் ஆட்சியில், கார்த்திகைத் திங்கள் கார்த்திகை நாளில் விளக்கெரித்ததற்குப் பதினாறு நாழி நெய்க்காகப் பதினாறு ஆடுகளைத் திருப்பாற்றுத்துறை மக்கள் கோவிலுக்குத் தானமாகக் கொடுத்துள்ளனர். இதனை கி.பி.1021 ஆண்டு கல்வெட்டொன்று தெரிவிக்கிறது. `குமரி முதல் இமயம் வரை முழுமையும் தமிழ்நிலமாக இருந்த பொழுது கார்த்திகையில் கொண்டாடப்பட்ட ஒளிவிழா பின்னர் வடக்கே தீபாவளியாயிற்று. ஆவளி என்றால் வரிசை. விளக்குகளை / தீபங்களை வரிசையாக ஏற்றி வைப்பதால் இவ்விழாவிற்கு இப்பெயர் வந்தது. வடக்கே நமது ஐப்பசியில் இவ்விழா கொண்டாடப்படுகிறது. இது தெற்கே புதிய மற்றொரு விழாவாக மாறி ஏற்கப்பட்டுள்ளது. நமது கார்த்திகை தான் தீபாவளியாக மாறித் திரும்பி வந்துள்ளது என்பதை உணரலாம். கார்த்திகை நம் விழா! தீபாவளி இரவல் விழா! கட்டுரையாளர்; இலக்குவனார் திருவள்ளுவன், https://aramonline.in/19663/history-of-deepawali-karthigai/
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
கஷ்டப்பட்டுத் தேடியும், மூளையைக் கசக்கிப் பிழிந்தும் பதில்களைக் கணித்திருக்கின்றேன்!😁 தேர்தலைப் பற்றிய எனது சொந்த அலசலை எழுதக்கூட நிறைய நேரம் எடுக்கவில்லை! கெளரவ முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் மதியாபரணம் ஏப்ரஹாம் சுமந்திரன் சேர் இம்முறையும் பாராளுமன்றம் செல்வார் எனக் கணித்தமையால் (எப்படி எனக் கேட்கக்கூடாது!) இந்தப் போட்டியில் எனக்குத்தான் வெற்றி😎 ::::::::::::::::::::::::::::::::::::::::::::::::: பின்வரும் வேட்பாளர்கள் தேர்தலில் தேசிய பட்டியல் மூலமாக அல்லாது நேரடியாக வெற்றி பெற்று நாடாளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்படுவார்களா ( ஆம் / இல்லை என்று பதில் அளிக்கவும். ஒவ்வொரு சரியான பதில்களுக்கும் தலா 1 புள்ளி வழங்கப்படும்). 1) கஜேந்திரகுமார் பொன்னம்பலம்( தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) ஆம் 2)சசிகலா ரவிராஜ்( ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 3)வி.மணிவண்ணன் (முன்னாள் மேயர்)( தமிழ் மக்கள் கூட்டணி) ஆம் 4)டக்ளஸ் தேவானந்தா ( ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி) ஆம் 5)ஸ்ரீதரன்( தமிழரசு கட்சி) ஆம் 6)செல்வராசா கஜேந்திரன் (தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 7)சுமந்திரன்( தமிழரசு கட்சி) ஆம் 8)அங்கஜன் இராமநாதன்(ஜனநாயக தேசிய கூட்டணி) இல்லை 9)முருகேசு சந்திரகுமார்( ஐக்கிய மக்கள் கூட்டணி - சஜீத் பிரேமதாசாவின் கட்சி) இல்லை 10)ஐங்கரநேசன்( சுயேட்சை குழு 14) இல்லை 11)நடராசா காண்டீபன் ( தமிழ் தேசிய மக்கள் முன்னணி) இல்லை 12)சுரேஷ் பிரேமச்சந்திரா (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 13) சரவணபவன் ( சுயேட்சை குழு 14) இல்லை 14) அருச்சுனா இராமநாதன் (சுயேட்சை குழு - 17 ) இல்லை 15)தர்மலிங்கம் சித்தார்த்தன் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) ஆம் 16) எஸ் சிறிபவானந்தராஜா ( தேசிய மக்கள் சக்தி) இல்லை 17)சிவாஜிலிங்கம் (ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி) இல்லை 18)சிவப்பிரகாசம் மயூரன் (சுயேட்சை குழு - 17) இல்லை 19) ரவிகரன் (தமிழரசுக் கட்சி, வன்னி தொகுதி) ஆம் 20)மனோ கணேசன் ( கொழும்பு மாவட்டம்) ஆம் 21)ஞானமுத்து - சிறினேசன் ( தமிழரசு கட்சி - மட்டக்களப்பு) ஆம் 22) விநாயகமூர்த்தி முரளிதரன்( கருணா- மட்டக்களப்பு, தேசிய ஜனநாயக முன்னணி) இல்லை 23)சிவனேசதுரை சந்திரகாந்தன் ( மட்டக்களப்பு, தமிழ் மக்கள் விடுதலை புலிகள் கட்சி) ஆம் 24) சாணக்கியன் (தமிழரசு கட்சி , மட்டக்களப்பு) ஆம் 25) செல்வம் அடைக்கலநாதன் ( ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணி -வன்னி) ஆம் 26) குகதாசன் ( தமிழரசு கட்சி - திருமலை மாவட்டம்) ஆம் வினா 27 - 34 வரை பின்வரும் மாவட்டத்தில் முதல் இடத்தினை பெறும் அணி எது? ( தலா 2 புள்ளிகள்) எத்தனை இடங்களை பிடிக்கும்? ( தலா 2 புள்ளிகள்) 27) யாழ் மாவட்டம் ( கிளிநொச்சியும் தேர்தல் மாவட்டம் யாழ்ப்பாணத்தில் இருக்கிறது) தமிழரசுக் கட்சி இரண்டு இடங்கள் 28) வன்னி ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி (சங்கு) இரண்டு இடங்கள் 29) மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி இரண்டு இடங்கள் 30)திருமலை தேசிய மக்கள் சக்தி இரண்டு இடங்கள் 31)அம்பாறை தேசிய மக்கள் சக்தி மூன்று இடங்கள் 32)நுவரெலியா புதிய ஜனநாயக முன்னணி (ஐக்கிய தேசியக் கட்சி) மூன்று இடங்கள் 33)அம்பாந்தோட்டை தேசிய மக்கள் சக்தி நான்கு இடங்கள் 34)கொழும்பு தேசிய மக்கள் சக்தி 12 இடங்கள் 35)திருகோணமலை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) ஒன்று 36)அம்பாறை மாவட்டத்தில் தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ்தேசிய கூட்டணி,தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி ஆகிய மூன்றும் சேர்ந்து எத்தனை இடங்களை பிடிக்கும்? ( 1 புள்ளி) பூச்சியம் 37) யாழ் மாவட்டத்தில் அதிக விருப்பு வாக்குகள் பெறுபவர் யார்? ( 2 புள்ளிகள்) சிறிதரன் வினா 38 - 48 வரை பின்வரும் தேர்தல் தொகுதிகளில் முதல் இடம் பிடிக்கும் அணி எது? (தலா 2 புள்ளிகள்) 38) மானிப்பாய் தமிழரசுக் கட்சி 39) உடுப்பிட்டி ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி (சங்கு) 40) ஊர்காவற்றுறை தமிழரசுக் கட்சி 41) கிளிநொச்சி தமிழரசுக் கட்சி 42) மன்னார் ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி (சங்கு) 43) முல்லைத்தீவு தமிழரசுக் கட்சி 44) வவுனியா ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி (சங்கு) 45) மட்டக்களப்பு தமிழரசுக் கட்சி 46) பட்டிருப்பு தமிழரசுக் கட்சி 47) திருகோணமலை தமிழரசுக் கட்சி 48) அம்பாறை தேசிய மக்கள் சக்தி 49) எந்த கட்சியில் இருந்து பிரதமர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) தேசிய மக்கள் சக்தி 50) எந்த கட்சியில் இருந்து எதிர்க்கட்சி தலைவர் தெரிவு செய்யப்படுவார்? ( 1 புள்ளி) ஐக்கிய மக்கள் சக்தி (சஜித்) 51 - 52 வரை வடக்கு கிழக்கில் பின்வரும் கட்சிகள் எத்தனை இடங்களை பிடிக்கும் ( தலா 1 புள்ளி) 51) ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) மூன்று 52) தேசிய மக்கள் சக்தி ( அனுரா அணி) ஆறு 53 - 60 வரை பின்வரும் கட்சிகள் தேசிய பட்டியலையும் சேர்த்து எத்தனை இத்தேர்தலில் இடங்களினை பிடிக்கும்? ( 53 - 56 வினாக்களுக்கு தலா 1 புள்ளிகள். 57 - 60 வினாக்களுக்கு சரியாக சொன்னால் 2 புள்ளிகள் 1 - 5 வித்தியாசமாக இருந்தால் 1 புள்ளி வழங்கப்படும். 53)தமிழ் தேசிய மக்கள் முன்னணி ஒன்று 54)தமிழரசு கட்சி ஏழு 55)ஜனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு நான்கு 56)தமிழ் மக்கள் கூட்டணி (விக்னேஸ்வரன் அணி) ஒன்று 57)இலங்கை பொதுஜன முன்னணி ( நாமல் ராஜபக்சா அணி ) ஐந்து 58)ஐக்கிய மக்கள் சக்தி ( சஜித் அணி) 65 59)தேசிய மக்கள் சக்தி (அனுரா அணி) 120 60)புதிய சனநாயக முன்னணி ( ரணில் அணி) 15
-
ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கின்ற வரலாற்றுத் தவறினை இழைத்துவிடக்கூடாது - கஜேந்திரகுமார்
ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கின்ற வரலாற்றுத் தவறினை இழைத்துவிடக்கூடாது October 30, 2024 ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கின்ற வரலாற்றுத் தவறினை தமிழ் மக்கள் இழைத்துவிடக் கூடாது. அதற்கு எதிராகப் போராடக் கூடிய கட்சியாகிய தமிழ்த் தேசிய முன்னணிக்கு வாக்களித்து அக்கட்சியைப் பலப்படுத்த வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். ஞாயிற்றுக் கிழமை (27.10) மன்னார் நகரசபை கலாச்சார மண்டபத்தில் மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்திற் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில் ‘இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்காகத் தாங்கள் ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டு வர இருப்பதாகச் சர்வதேச மட்டத்திற்குக் கூறியுள்ளார்.’ ‘அந்த அரசியலமைப்பு 2015 ஆம் ஆண்டு. மைத்திரிபால சிறிசேன ரனில் விக்ரமசிங்க அவர்களுடைய காலப்பகுதியிலே. நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த ஒரு புதிய அரசியலமைப்புக்கான முயற்சி.’ ‘அந்த காலகட்டத்திலே அந்த முயற்சிலே ஒரு இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டு ஸ்தம்பிக்கபட்டது காரணம் அப்போதிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரனில் விக்கிரமசிங்காவை பதவி நீக்கம் செய்து மஹிந்த ராஜபக்சவை பிரதமர் ஆக்கினார்.’ ‘அந்த பிரச்சனை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உச்ச நீதிமன்றம் ரணில் விக்ரகமசிங்காவின் பதவிநீக்கம் பிழை என்று தீர்ப்பளித்து மீண்டும் அவர் பிரதமர் ஆனார். ஆனால் அந்த குழப்பம் நடைபெற்றதற்குப் பிற்பாடு அந்த புதிய அரசியலமைப்பிற்கான முயற்சியை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை. ஆகவே இன்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிற அனுர குமார திசாநாயக்கா மிகத் தெளிவாக எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடம் அளிக்காமல் அந்த 2015 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அந்த முயற்சியைத் தான் முடிவுக்கு கொண்டு வர இருப்பதாகக் கூறியுள்ளார்.’ ‘இதிலே நாங்கள் தெளிவாக பார்க்கக் கூடியது. அந்த இடைக்கால அறிக்கை தமிழ் மக்களுக்கு. ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு அரசியலமைப்பு அறிமுகப்படுத்துகிறதா இல்லையா என்று.’ ‘அந்த இடைக்கால அறிக்கையை நீங்கள் எடுத்துப் பார்த்தால் அறிக்கையினுடைய முன்னுரையாக அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில் பாராளுமன்றத்தை ஒரு அரசியல் நிர்ணய சபையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட போது அதிலே செய்த முதலாவது உரையைத்தான் அதனுடன் அவர்கள் இணைத்து இருக்கிறார்கள்.’ ‘காரணம் அதுதான் அந்த முயற்சியினுடைய நோக்கத்தை குறிக்கின்ற. ஒரு பேச்சு. அந்தச் சட்டத்தினுடைய இலக்கு என்ன என்பதைத் தெளிவுபடுத்துவதற்கு ஒரு அறிமுகம் என்பது இருக்கும். அந்த வகையிலே இந்த புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியிலே மைத்திரிபால சிறிசேனவுடைய பேச்சை தான். முன்னுரையாக அவர்கள் அதிலே இணைத்தார்கள்.’ ‘அந்த முன்னுரையில் மைத்திரிபால சிறிசேன தெளிவாகக் கூறுகின்றார் இலங்கை ஒரு ஒற்றை ஆட்சி நாடு. இலங்கையினுடைய இன்றைய அரசியல் அமைப்பு மாத்திரம் அல்ல. கடந்த மூன்று அரசியலமைப்புகளும் ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பாக தான் இருந்துள்ளதென்று.’ ‘இன்று அந்த ஒற்றையாட்சி முறைமையைத்தான் புதிய ஜனாதிபதி நிறைவேற்ற இருக்கின்றார்.’ ‘அதுதான் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சவால் அதை எதிர்ப்பதாக இருந்தால் அதை செய்யக்கூடிய செய்ய தயாராக இருக்கின்ற ஒரே ஒரு அணி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிற தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே அவ்வாறு நிகழ வேண்டும் என்றால் வடகிழக்கிலே சைக்கிள் சின்னம் குறைந்தது 10 ஆசனங்களை பெற வேண்டும். 18 ஆசனங்களில் 10 என்றால் மட்டுமே பெரும்பான்மை. அதற்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் குறைந்தது இரண்டு ஆசனங்களைச் சைக்கிள் கட்சி பெற வேண்டும். ‘ ‘வன்னித் தேர்தல் தொகுதியிலே இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை நாங்கள் தெரிவு செய்தே ஆக வேண்டும். வன்னியிலே தெரிவு செய்யப்படும் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களில் நாலு பேர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார்கள். அந்த நான்கு பேரில் இரண்டு பேர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளாக இருந்தால் மட்டுமே. ஒற்றை ஆட்சியை எதிர்க்கக் கூடிய பலத்தோடு நம்முடைய அணி பாராளுமன்றத்திற்கு செல்லும். அது ஒரு சாதாரண விடயம் அல்ல.’ ‘நாங்கள் வெறுமனே தேர்தலில் போட்டியிட்டு எத்தனையோ ஆசனங்களை வென்று இருக்கிறோம் என்று புகழ் பாடுகின்ற ஒரு அமைப்பு அல்ல. எங்களுக்கு என்று ஒரு இலக்கு இருக்கிறது. அந்த இலக்கை நோக்கி பயணிக்கிற ஒரு அமைப்பாக தான் நாங்கள் செயற்பட்டு வருகிறோம். அந்த இரண்டு ஆசனங்களை உறுதிப்படுத்துவதாக இருந்தால் மன்னார் மாவட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அந்த பாராளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்தே ஆக வேண்டும். இதுவரைக்கும் இந்த மண்ணிலே சாதிக்காத ஒரு விடயத்தை தமிழ் இனத்துக்காக நாம் சாதித்தே ஆகவேண்டுமென்று அவர் மேலும் தெரிவித்தார். குறித்த கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா. கஜேந்திரன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஜோன்சன் ஆசிரியர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்டச் செயளாளர் விக்ரர் தற்குரூஸ் மற்றும் அக்கட்சியின் மன்னார் வேட்பாளர் சோமநாதன் பிரசாத் உட்பட அனைத்து வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர். (வாஸ் கூஞ்ஞ) https://www.supeedsam.com/208415/
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
செந்தமிழன் சீமான் சீறிப்பாய்ந்து உறுமி வழக்குத் தொடுத்திருப்பார்😁🤣
-
தமிழக வெற்றிக் கழக மாநாடு இன்று - மன்னர்கள் முதல் பெரியார் வரை கட் அவுட்
தாயகத்தில் தேசிய அரசியலில் குதிப்பவர்கள் சிவப்பு-மஞ்சள் வர்ணங்களின் வெவ்வேறு கலவைகளில் கொடிகள் வைப்பது போல தலீவர் விஜயும் தமிழ்த் தேசியத்தை முன்னெடுக்க கொஞ்சம் கடுமையான சிவப்பையும் மஞ்சளையும் (ஸ்பானிஸ் தேசியக்கொடி மாதிரி) தேர்ந்தெடுத்துள்ளார். விஜயின் கலவையான கதம்ப அரசியலுக்கு ஈழத்தமிழரும் முட்டுக்கொடுக்க இந்த வர்ணங்களே போதும்😆
-
பல்கலைக்கழக மாணவர்களின் பொறுப்புக் கூறலும் அரசியற் கடப்பாடும்
பல்கலைக்கழக மாணவர்களின் பொறுப்புக் கூறலும் அரசியற் கடப்பாடும் October 29, 2024 — கருணாகரன் — “தமிழரின் வாக்குகள், தமிழ்த்தரப்புகளுக்கே அளிக்கப்பட வேண்டும். மாறாகத் தென்னிலங்கைத் தரப்புகளுக்கு அளிக்கக் கூடாது‘ என்று திருவாய் மலர்ந்திருளியிருக்கின்றனர் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினர். யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் இப்படியொரு அறிவிப்பை விடக் கூடுமென்றால் நாங்கள் மட்டுமென்ன குறைந்தவர்களா, என்று கிளம்பிய கிழக்குப் பல்கலைக்கழகத்தின் (மட்டக்களப்பு) கலைத்துறை மாணவர்கள், இதே தொனியில் இன்னொரு அறிவிப்பை விட்டுள்ளனர். இந்த அறிவிப்போடு இரண்டு தரப்பினரும் தங்களுடைய தேசியக் கடமையையும் இனப் பொறுப்பையும் நிறைவேற்றிக் கொண்டனர். இனி இன்னொரு தேர்தலோ அல்லது வேறொரு நிகழ்ச்சியோ வரும்போது ஊடக நிலையத்துக்கு வந்து இன்னொரு அறிக்கையை விட்டு வரலாற்றுச் சாதனையை நிறைவேற்றிக் கொள்வார்கள். வரலாற்றுச் சாதனைக்கு இதை விட வேறு என்ன செய்ய வேண்டும்? இது இந்த மாணவர்களின் அரசியல் சாதனையென்றால், இந்த ஊடக அறிக்கை ஏதோ வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது என்ற எண்ணத்தில் – நம்பிக்கையில் – இதை வலு கவனமாகக் காவிக் கொண்டு வந்து, தங்களுடைய ஊடகங்களிலும் இணையப்பக்கங்களிலும் நிரப்பிக் கொண்டனர் ஊடகவியலாளர்கள். இதொன்றும் புதிய சங்கதியே இல்லை. வழமையாகத் தேர்தலின்போது நடக்கின்ற திருவிளையாடல்தான். முன்பு தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு ஆதரவளிக்க வேண்டும் என்று சொல்லப்படுவதுண்டு. இப்பொழுது அப்படிச் சொல்ல முடியாது. கூட்டமைப்புக் காணாமற்போய் விட்டது. பதிலாக தமிழ்த்தேசியம் என்ற பெயரில் பத்துப் பன்னிரண்டு மஞ்சள் – சிவப்புக் கட்சிகளும் குழுக்களும் களத்தில் நிற்கின்றன. இப்படிப் பத்துப் பன்னிரண்டு அணிகளாகப் பிரிந்து நின்றால் அதில் எதைத் தேர்வு செய்வது? எந்தத் தரப்புக்கு ஆதரவளிப்பது? என்று முடிவெடுக்க முடியாது. அதனால் “தமிழரின் வாக்குகள், தமிழ்த்தரப்புகளுக்கே அளிக்கப்பட வேண்டும். மாறாகத் தென்னிலங்கைத் தரப்புகளுக்கு அளிக்கக் கூடாது‘ என்று மிகச் சாதுரியமாக, ஒரு அறிவிப்பை விடுத்திருக்கின்றனர், இந்த மாணவர் தலைவர்கள். இப்படிப் பொத்தாம் பொதுவாக அறிவிப்பைச் செய்தால் யாரோடும் – எந்தத் தரப்போடும் நேரடியாகப் பகைத்துக் கொள்ள வேண்டியதில்லை. அதேவேளை இனப்பற்றோடும் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டோடும் தாம் உள்ளதாகவும் காட்டிக் கொள்ளலாம். அப்பப்பா, எவ்வளவு சாதுரியமான செயலிது? எப்படித் திறமையான ராசதந்திரம்? உண்மையில் இது மிகத் தவறான – ஏற்றுக் கொள்ளவே முடியாத – செயலாகும். ஏனென்றால், கடந்த 15 ஆண்டுகளாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியமும் கிழக்குப் பல்கலைக்கழக மாணவர்களும் செயற்பாடற்ற – அறிக்கை விடுநர்களாகவே உள்ளனர். (‘இதை விட வேறு எப்படித்தான் அவர்களால் செயற்பட முடியும்? ஏனென்றால், இந்த மாணவர்களின் வியப்புக்குரிய தலைவர்களாக இருப்போரும் அறிக்கைப் புலிகளாகத்தானே உள்ளனர்! எனவே தலைவர்கள் எப்படியோ அப்படியே மாணவர்களும்‘ என்கிறார் நண்பர் ஒருவர்.) அப்படி விடப்படுகின்ற அறிக்கைகள் கூட யதார்த்தம், நடைமுறை, சமூக நிலவரம், அரசியற் சூழல் என எதைப்பற்றிய புரிதலுமற்றனவாகவே இருக்கின்றன. நீண்டதொரு விடுதலைப் போராட்டத்தை நடத்தி, அதில் வெற்றியடைய முடியாமற்போன – பாதிப்புகளோடும் இழப்புகளோடுமிருக்கும் ஒரு சமூகத்தின் தலைவிதியைத் தீர்மானிக்கும் அரசியல் நடவடிக்கைகளில் பல்கலைக்கழக மாணவர்களின் பங்கு பெரியது. பொறுப்புமிக்கது. அதன்படி போராடிய மக்களை ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீட்டெடுக்கும் பணிகளில் இணைந்து பணியாற்றியிருக்க வேண்டும். அவர்களுடைய துயரங்களை ஆற்றுப்படுத்தியிருக்க வேண்டும். அவர்களுடைய வாழ்க்கையை மீளக் கட்டியெழுப்புவதற்கான பணிகளில் பங்களிப்புச் செய்திருக்க வேண்டும். அவர்களுடைய பிரதேசங்களை மீள்நிலைப்படுத்தும் அபிவிருத்தியில் பங்களிப்புச் செய்திருக்க வேண்டும். கல்வி வளர்ச்சிக்குத் தாராளமாக உதவியிருக்க வேண்டும். பொதுவாகச் சமூக, பொருளாதார, பண்பாட்டு மீள்நிலைக்கும் வளர்ச்சிக்கும் ஆதரவளித்திருக்க வேண்டும். ஆக, இவற்றுக்காகக் களப்பணிகளை ஆற்றியிருப்பது அவசியமாகும். பல்கலைக்கழகத்தில் மாணவர்களாக இருக்கும்போது மட்டுமல்ல, பட்டம்பெற்று வெளியேறிய பிறகும் கூட இதைத் தொடர்ந்திருக்க முடியும். மட்டுமல்ல, ‘உளவியல் ரீதியாக உங்களோடு நிற்கிறோம்‘ என ஆதரவு நிலையைக் காண்பித்திருக்கலாம். போரிலே பாதிக்கப்பட்டோரில் மிகக்கூடிய தாக்கத்துக்குள்ளாகியோர் உளப்பாதிப்புக்கு (Trauma) உள்ளானோரே. ஆகவே இவர்களை ஆற்றுப்படுத்தும் பணியில் நிச்சயமாக இந்த மாணவர்கள் ஈடுபட்டிருக்க வேண்டும். தங்களுடைய கல்வித்துறையின் மூலமாக சமூக, பொருளாதார, பண்பாட்டு, மருத்துவ, அரசியல் ஆய்வுகளைச் செய்திருக்க வேண்டும். அப்படிச் செய்திருந்தாலே அது பெரியதொரு வரலாற்றுப் பணியாக இருந்திருக்கும். அதில் பெற்ற புள்ளி விவரங்கள், உண்மையான நிலவரங்களை உள்ளடக்கிய தகவல்கள் – தரவுகளின் மூலமாகத் தமிழ்ச் சமூகத்தைப் புதிய தளமொன்றுக்கு நகர்த்தியிருக்க முடியும். கூடவே இவற்றின் மூலம் சர்வதேச ரீதியாக அரசியலிலும் மனித உரிமைகள், மனிதாபிமானப் பணிகளிலும் பெரும் செல்வாக்கையும் பேராதரவையும் பெற்றிருக்க முடியும். ஆனால், அப்படி எதுவுமே நடக்கவில்லை. அதில் எந்த மாணவர் ஒன்றியத்தினரும் கரிசனை கொள்ளவில்லை. ஆகச் செய்ததெல்லாம் நினைவு கூரல்களில் பங்கெடுத்ததும் தேர்தல்களுக்கு அறிக்கை விடுத்ததும்தான். அதாவது நோகாமல் போராட்டப் பங்களிப்பைச் செய்வதாகக் காண்பித்ததேயாகும். பட்டம்பெற்று வெளியேறிய பிறகு, ‘மாணவர் ஒன்றியமும் கத்தரிக்காயும்’ என்று அந்த லேபிளைத் தூக்கியெறிந்து விட்டு, வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தை ஆரம்பித்து அரசசார்பு அரசியல்வாதிகளின் காலடியில் நின்ற – நிற்கின்ற வரலாறே மாணவர்கள் தலைவர்களுடையது. சிலர் இப்பொழுது தாங்களும் வேட்பாளர்களாக அரசியலில் குதித்துள்ளனர். ஆனால், தெற்கிலே, சிங்களத்தரப்பின் நிலைமை வேறு. அவர்கள் அங்கே மாணவப் பருவத்தைப் புரட்சிகர சமூக உருவாக்கத்துக்காகவே பெரும்பாலும் பயன்படுத்துகிறார்கள். மக்கள் போராட்டங்களை நடத்துகிறார்கள். அரசுக்கும் அதிகார வர்க்கத்துக்கும் எதிராகப் போராடுகிறார்கள். முக்கியமாக அறிவுபூர்வமாகச் செயற்படுகிறார்கள். இதற்கொரு பெரிய பாரம்பரியமே அவர்களுக்குண்டு. அங்கே மாணவர்களுடைய சிற்றுண்டிச் சாலைக்கோ விடுதிக்கோ சென்றால் தெரியும், அவர்களுடைய உள நிலையையும் போராட்டத் தன்மையையும் சமூக அக்கறையையும். அதனுடைய ஒரு வெளிப்பாடே அரகலய. அதன் தொடர்ச்சியே தற்போது நடந்து கொண்டிருக்கும் மாற்றத்துக்கான அரசியல் (Politics of change or systemchange). இப்பொழுது மட்டுமல்ல, தெற்கின் (சிங்கள) மாணவர்களுடைய பாரம்பரியம் என்பது எப்போதும் புரட்சிகரமானதாக – யதார்த்தத்தை நோக்கியதாகவே இருந்திருக்கிறது. என்பதால்தான் அவர்கள் தொடர்ந்தும் அரசியல் மாற்றங்களை நிகழ்த்தி வந்திருக்கிறார்கள். அல்லது அதற்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள். அந்த மாற்றங்கள் முழுமையடையாதிருக்கலாம். ஆனால், ஒரே கட்சியோ, ஒரே தலைமையோ தொடர்ந்தும் ஆட்சி அதிகாரத்தில் இருந்ததில்லை. அதற்கு அவர்கள் அனுமதித்ததும் இல்லை. இங்கே எழுபது, எண்பது ஆண்டுகளாக ஒன்றுக்கும் உதவாத கட்சிகள்தானிருக்கின்றன. அவை சிதைந்தாலும் பழைய குப்பைகள், ஓட்டை ஒடிசல்கள் என்ற நிலையை எட்டினாலும் தமிழர்களுக்கு அவை தூண்டாமணி விளக்குகள் என்பதேயாகும். மாற்றத்தையோ புதிதையோ எளிதில் ஏற்காத, அங்கீகரிக்காத, நம்பத் தயாரில்லாத ஒரு சமூகாகவே இருக்கிறது. மக்கள் அப்படியிருந்தால் பரவாயில்லை. மாணவர்கள், இளைய தலைமுறையினர், எதிர்காலத்தை உருவாக்கக் கூடிய அறிவியற் தரப்பினர் அப்படி வாழாதிருக்க முடியுமா? மாணவர்கள்தான் பெரும்போராட்டங்களை நடத்தியிருக்கிறார்கள். அவர்களே புதிய வழிகளைக் காணும் திறனுடையோர். என்பதால் அவர்கள் போராட்டக்களத்தில் முன்னணியினராக எப்போதும் இருக்கின்றனர். உலகெங்கும் இப்படித்தான் நடந்திருக்கிறது. பாதிப்புகளிலிருந்து மீட்டு, அடுத்த கட்டத்தை நோக்கி அந்த மக்களை வழிநடத்துவதில் மாணவர்களே முன்னின்றனர், முன்னிற்கின்றனர். சமகாலத்தில் களத்தில் நிற்கும் அரசியற் கட்சிகளின் வினைத்திறனற்ற தன்மைகளையும் தலைமைகளின் ஆற்றற்குறைபாட்டையும் கண்டு அவற்றைச் சீராக்க வேண்டிய பொறுப்பும் மாணவர்களுக்கே உண்டு. அதற்குக் குறித்த தலைமைகளும் கட்சிகளும் செவி கொடுக்கவில்லை என்றால், அவற்றை நிராகரிப்புச் செய்ய வேண்டியது மாணவர்களுக்கு – மாணவர் அமைப்புகளுக்குரிய பணியாகும் – பொறுப்பாகும். செவி கொடுத்தால், அவற்றைத் தம்முடன் இணைத்து வேலை செய்ய முடியும். முடியாதென்று அடம்பிடித்தால் அதை – அவற்றை சமூக விலக்கம் செய்ய வேணும். 2009 க்குப் பிறகு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு தன்னுடைய வரலாற்றுக் கடமைகளிலிருந்து தவறியது. அது சறுக்கிச் சறுக்கி இன்றைய சிதறிய நிலைக்கு வந்திருக்கிறது. இறுதியில் அணிகள், குழுக்கள் எனச் சிதறிய நண்டுக்குஞ்சுகள் போலாகி விட்டது. ஆனால், இந்தப் பதினைந்து ஆண்டு காலத்திலும் மாணவர் அமைப்பு என்ன சொன்னது? உலக அரங்கிலும் உள்நாட்டிலும் தமிழ் மக்களின் ஒற்றுமையைக் காட்ட வேண்டும். ஒன்றுபட்டு நின்று தமிழ்ப்பலத்தை உணர்த்த வேண்டும் என்றுதானே! அதற்காக மக்களெல்லாம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு வாக்களிக்க வேண்டும் என அல்லவா! அப்படி ஒற்றுமைக்காக மக்களைத் திரளச் செய்த மாணவர் அமைப்பு, கூட்டமைப்பை உடையாமல், சிதறாமல் பாதுகாத்ததா? உடைந்தும் பிரிந்தும் சிதறிச் சென்ற கட்சிகளையும் தலைமைகளையும் அழைத்துப் பேசி, முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு முயற்சித்ததா? மக்கள் நலனைப் புறந்தள்ளிவிட்டு, தமது நலனையே முதன்மைப்படுத்திய கட்சிகளைக் கண்டித்ததா? அவற்றை ஒதுக்கியதா? அவற்றை மக்களிடம் இனங்காட்டியதா? எதுவும் செய்யப்படவில்லையே! அப்படியென்றால், மாணவர் ஒன்றியத்திற்கு என்ன தகுதி இருக்கிறது, இன்னும் அரசியல் தலையீடுகளைச் செய்வதற்கு? தேர்தல் குறித்துப் பேசுவதற்கு? மக்களுக்கு ஆணையிடுவதற்கு? முதலில் சிதறிக் கிடக்கும் தமிழ் அரசியல் கட்சிகளை ஒருங்கிணைப்பதற்கு முயற்சித்திருக்க வேண்டும். அதற்குச் சம்மதிக்காத கட்சிகளையும் தலைவர்களையும் இனங்காட்டி மக்களிடமிருந்து விலக்க வேண்டும். அதை இப்போதே செய்யலாம். செய்ய வேண்டும். அதுவும் ஒரு மக்கள் பணி, வரலாற்றுப் பணிதான். இந்தத் தேர்தலின்போதே அரசியற் கட்சிகளை அழைத்துப் பேசி அவற்றுக்கிடையில் புரிந்துணர்வை ஏற்படுத்தலாம். அந்தப் புரிந்துணர்வின் அடிப்படையில் மக்கள் நலனை முன்னிறுத்தி ஒரு இணக்கத்தை எட்ட முடியும். அந்த இணக்கத்தின்படி பிராந்திய ரீதியாக எந்தத் தரப்பை முன்னிலைப்படுத்துவது? யாருக்கு வாய்ப்பளிப்பது? எனத் தீர்மானிக்க முடியும். அப்படிச் செய்தாலாவது பரவாயில்லை. அதையெல்லாம் விட்டு விட்டுப் பொத்தாம் பொதுவாக, தமிழர்களெல்லாம் தமிழ்த் தரப்புகளுக்கே வாக்களிக்க வேண்டும். சிங்களக் கட்சிகளையோ தென்பகுதித் தரப்புகளையோ ஆதரிக்கக் கூடாது என்று சொல்வது தவறு. இன்றைய நிலையில் தமிழ்க் கட்சிகளை விடவும் தென்பகுதித் தரப்புகள் பரவாயில்லை என்ற நிலைக்கு வந்துள்ளன. அவை இனவாதத்தைச் சொல்வதிலிருந்து விலகியுள்ளன. ஒப்பீட்டளவில் மாற்றத்தை நோக்கிப் பயணிக்க ஆர்வமாக உள்ளன. பல சமூகத்தினருக்குமான இடத்தை அளித்து, பல்லினத் தன்மையைப் பேண முற்படுகின்றன. ஆனால், தமிழ்க்கட்சிகள் பிற இனங்களை விலக்குவதும் பின சமூகங்களிலிருந்து விலகியிருப்பதும் மட்டுமல்ல, தமக்குள்ளும் பிரிவுகளையும் பிளவுகளையுமே கொண்டுள்ளன. மிகப் பின்தங்கிய சிந்தனைப் போக்கைக் கொண்டுள்ளன. இது விடுதலைக்காகப் போராடும் இனத்தின் அரசியல் விடுதலைக்கும் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கும் பொருத்தமா? நியாயமா? சரியாக இருக்குமா? நிச்சயமாகப் பொருந்தாது. உண்மையில் இந்த மாணவர் அமைப்புகள் தமிழ்த்தேசியவாதக் கட்சிகளையும் அணிகளையும் குழுக்களையும் இந்தத் தேர்தலின்போது ஒருங்கிணைத்திருக்க வேண்டும். அந்தக்கடப்பாடு, கடந்த காலத்தில் கூட்டமைப்புக்கு (தமிழ்த்தேசியத்துக்கு) ஆதரவளித்ததன் மூலம் மாணவர் அமைப்பினருக்குண்டு. அதைச் சொல்லி அணிகளையும் கட்சிகளையும் வற்புறுத்தியிருக்க வேண்டும். இப்பொழுது கூட அதைச் செய்யலாம். அது முடியவில்லை என்றால், மக்கள் பணியைச் சரியாகச் செய்யக் கூடிய, மக்களோடுள்ள, மக்கள் மீது மெய்யான கரிசனையைக் கொண்ட சக்திகளை இனங்கண்டு ஆதரிக்க வேண்டும். அந்த ஆதரவு பரிபூரணமாக – மக்கள் நலனின் அடிப்படையில் இருக்க வேண்டும். இதற்கான பொறுப்புக் கூறலைச் செய்ய வைப்பது அவசியமாகும். ஏனென்றால், இதே காலப்பகுதியில் அல்லது இதற்கு முன்பிருந்து தென்பகுதிப் பல்கலைக்கழகங்களின் (சிங்கள) மாணவர்கள் மேற்கொள்கின்ற அரசியற் செய்பாடுகள் முழு இலங்கைத் தீவையும் மறுமலர்ச்சிக்குள்ளாகும் வகையில் முன்னெடுக்கப்படுகின்றன. அதற்கு எங்களுடைய மாணவர்கள் தயாராக வேண்டும். அல்லது மாற்றுப் பண்பாட்டின் அடிப்படையில் மாற்றுச் சக்திகளைக் கட்டியெழுப்ப வேண்டும். இதொன்றும் புதியதல்ல. செய்ய முடியாததும் அல்ல. முக்கியமாக, வரலாற்றுக் கடமையைச் செய்யும்போது ஏற்படும் பொறுப்பை ஏற்று மன்னிப்புக் கேட்பது மாண்பு. அதொரு வளர்ச்சியான செயற்பாடாகும். கடந்த சில நாட்களின் முன், ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்திச் செயற்பட்ட நிலாந்தன் (பொதுச்சபைப் பிரதிநிதி) பகிரங்க வெளியில் மன்னிப்புக் கேட்டிருக்கிறார். இதொரு முக்கியமான முன்னுதாரணச் செயற்பாடாகும். அறிவென்பது, துணிவு. மன்னிப்புக் கேட்பது மாண்பிலும் மாண்பு. தாம் பொதுவெளியில் முன்வைத்த கருத்துகள் செயல் வடிவம் பெறுவதற்கான சூழல் கனிய முன் சில முதிரா நடவடிக்கைகள் குறித்து அவர் தெளிவாகப் பேசியுள்ளார். இத்தகைய தகுதி யாரிடம் உண்டு? மாணவர் அமைப்புகள் இதை மனதிற் கொள்ள வேண்டும். யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் 1970 களில் கிழக்கிலே ஏற்பட்ட சூறாவளிச் சேதங்களை மீள் நிலைப்படுத்தியதும் 1980 களில் தேசிய விடுதலைப்போராட்டத்தில் பங்களித்ததும் நினைவில் எழுகின்றன. https://arangamnews.com/?p=11378
-
அயோத்தி ராமர் கோவிலின் முதல் தீபாவளி; மோடி வாழ்த்து
அயோத்தி ராமர் கோவிலின் முதல் தீபாவளி; மோடி வாழ்த்து தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இந்திய பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு வாழ்த்தை தெரிவித்துள்ளார். 500 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த வருட தீபாவளி ராமருக்கு மிகவும் சிறப்பு வாய்ந்த தீபாவளியாக அமையவுள்ளது என தனது மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “தந்திராஸ் பண்டிகை கொண்டாடும் அனைத்து மக்களுக்கும் எனது மனம் கனிந்த வாழ்த்துக்கள். இத் தீபாவளி மிகவும் சிறப்பானது. சுமார் 500 வருடங்களுக்குப் பின்னர் கடவுள் ஸ்ரீ ராமர் அயோத்தியில் வீற்றிருக்கிறார். முதல் முறையாக அவர் இந்த தீபாவளி பண்டிகையை கொண்டாட உள்ளார். எனவே, இத் தீபாவளி பண்டிகை நம் அனைவருக்கும் பிரம்மாண்டமாகவும் சிறப்பானதாகவும் இருக்கும். இதனைக் காணும் நாம் அனைவரும் மிகவும் அதிர்ஷ்டசாலிகள்” என தெரிவித்துள்ளார். அயோத்தியில் ராமர் கோயில் நிர்மாணிப்பது தொடர்பில் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்தது. இப் பிரச்சினைக்கு கடந்த 2019 ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதற்கு பதில் அயோத்தியில் மிகப் பெரிய மசூதி கட்டுவதற்கு இடம் ஒதுக்குமாறு உச்ச நீதிமன்றம் உத்தரப் பிரதேச அரசுக்கு உத்தரவிட்டது. இந்த வருட ஜனவரியில் ராமர் கோயில் திறக்கப்பட்டது. அதன்படி, அயோத்தி ராமர் கோயிலுக்கு இதுவே முதல் தீபாவளி. https://akkinikkunchu.com/?p=297333
-
ஈ.பி.டி.பியின் கொள்கை வழிமுறையை ஏற்று தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும்
ஈ.பி.டி.பியின் கொள்கை வழிமுறையை ஏற்று தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் ஈ.பி.டி.பி கட்சியின் கொள்கை வழிமுறையை ஏற்று அதனுடன் இணைந்து பயணிக்க தமிழ் மக்கள் அணிதிரள வேண்டும் என அக் கட்சியின் செயலாளர் நாயகமும் முன்னாள் கடற்றொழில் அமைச்சருமான டக்ளஸ் தேவானந்தா வேண்டுகோள் விடுத்துள்ளார். வேலணை பிரதேசத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் விஜயம் மேற்கொண்ட ஈழ மக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் ஈ.பி.டி.பியின் வீணை சின்னத்தை வலுப்படுத்தும் முகமாக பல்வேறு பிரசார கூட்டங்களில் பங்கெடுத்திருந்தார். இதன்போது கருத்து தெரிவித்த டக்ளஸ் தேவானந்தா, மாற்றம் என்பது ஒவ்வொருவரிடமிருந்தும் நம்பிக்கையுடன் உருவாக்கப்பட வேண்டும். அதுவே சமூக மாற்றத்திற்கும் தமிழ் மக்களின் அரசியல் மாற்றத்திற்கும் வழி வகுக்கும் . அந்த நம்பிக்கையுடன் கூடிய அரசியல் மாற்றம் ஈ.பிடி.பியை பலப்படுத்துவதாக இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலினூடாக சாத்தியமாகும் என்ற நம்பிக்கை தனக்குள்ளது. மேலும் சுமார் 30 வருடங்களாக என்னை நாடாளுமன்றம் அனுப்பிவரும் இம்மாவட்ட மக்கள் கடந்த தேர்தலிலும் என்னை வெற்றிபெறச் செய்தார்கள். இது ஈ.பிடி.பி கட்சிக்கு இதுவரை தமிழ் மக்கள் வழங்கிய அரசியல் அதிகாரங்களைக் கொண்டு முன்னெடுத்துவந்த சேவைகளுக்கு போதுமானதாக இருக்கவில்லை. ஆனாலும் மக்கள் எமக்கு வழங்கிய அந்த சிறிய அதிகாரத்தை கொண்டு முடியுமானவரை பல்வேறு சேவைகளை செய்து காட்டியிருக்கின்றோம். அத்துடன் எமது கட்சி மத்தியில் கூட்டாட்சி மாநிலத்தில் சுயாட்சி என்ற கொள்கையினூடான தேசிய நல்லிணக்கத்தை வலுப்படுத்தி அதனூடாக தனது பொறிமுறையை நகர்த்தி வெற்றி கண்டுள்ளது. இதேவேளை போலித் தேசியம் பேசி தமிழ் மக்களின் வாக்குகளை அபகரித்து அதிகாரங்களை பெற்றவர்கள் தத்தமது வாழ்வியலையும் சுகபோகங்களையும் மெருகூட்டிக்கொண்டார்களே தவிர வாழும் மக்களுக்கு எதனையும் சாதித்துக் கொடுத்ததாக தெரியவில்லை. இதனால் தமிழ் மக்களும் சுயலாப போலித் தேசிய அரசியலை தூக்கி எறிந்துவிட்டு ஜதார்த பூர்வமான அரசியல் மாற்றத்தை ஏற்படுத்த தயாராகிவிட்டனர். அதேநேரம் அரசியலில் குறிப்பாக சமூகத்தில் பாரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாக உறுதியளித்த தரப்பினரே இன்று எமது நாட்டின் ஆட்சிப்பீடத்தில் உள்ளனர். இதேநேரத்தில் மக்களுக்கும் நாட்டின் அரசியல் உள்ளிட்ட அனைத்து விடயங்களில் அக்கறை இருப்பது அவசியம். அதனால்தான் அரசியல் ரீதியாக செயற்படவும், சிந்திக்கவும் அதனூடாக போலிகளை அகற்றவும் மக்கள் முன்வர வேண்டும் என நான் பல காலமாக கூறிவருகின்றேன். அந்த மாற்றம் இப்போது தமிழ் மக்களிடையே ஏற்பட்டுள்ளதை பார்க்க முடிகின்றது. அதுமட்டுமல்லாது அந்த மாற்றத்தை அக்கறையும் ஆற்றலும் உள்ளவர்களது கரங்களுக்கு வழங்குவதற்கும் அவர்கள் விரும்புவதை அவதானிக்க முடிகின்றது. குறிப்பாக உண்மையான மாற்றத்தைத் தேடும் சுறுசுறுப்பான நடவடிக்கை என்பதே தமிழ் அரசியல் பரப்பில் தற்போதைய அவசிய தேவையாக உள்ளது. அது இந்த தேர்தலில் மிக அவசியமாக உள்ளது. இதேநேரம் மக்கள் விரும்பும் இந்த அக்கறை, ஆற்றல், சிறந்த வழிகாட்டல் ஆகியவற்றை கொண்டுள்ள சக்தியாக எமது ஈ.பி.டி.பி கட்சியே இன்று தமிழர் அரசியல் பரப்பில் இருக்கின்றது. அதனால் எமது கட்சியின் கொள்கை வழிமுறையை ஏற்று அதனுடன் இணைந்து பயணிக்க தமிழ் மக்கள் அணிதிள வேண்டியது அவசியமாகும். அந்த அணிதிரள்வு இம்முறை நடைபெறவுள்ள நாடாளுமன்ற தேர்தலில் பிரதிபலிக்கும் என்ற நம்பிக்கை தனக்கு உள்ளதெனவும் அவர் மேலும் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=297252
-
பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடரும் அநுர அரசாங்கம்: அம்பிகா சற்குணநாதன் கேள்வி
பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடரும் அநுர அரசாங்கம்: அம்பிகா சற்குணநாதன் கேள்வி October 30, 2024 பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச மனித உரிமை தராதரங்களை பின்பற்றியதாக காணப்படவில்லை என ஐக்கிய நாடுகள்,இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உட்பட பலவற்றின் ஆய்வுகள் தெரிவித்துள்ளதை அனுரகுமாரதிசநாயக்க மறக்க முடியாது என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் தெரிவித்துள்ளார் மனித உரிமைகள் விடயத்தில் குறைபாடுள்ள சட்டத்தை தேசிய மக்கள் சக்தி தக்கவைக்கவிரும்புகின்றது என அந்த கட்சியால் தெரிவிக்க முடியுமா? என அவர் கேள்வி எழுப்பியுள்ளார் சமூக ஊடக பதிவில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது. பயங்கரவாத தடைச்சட்டத்தில் பிரச்சினையில்லை,மாறாக அது தவறாக பயன்படுத்தப்படுவதே பிரச்சினை என தேசிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது – பயங்கரவாத தடைச்சட்டத்தை தொடர்ந்து தக்கவைப்பதற்கான காரணமாக தேசிய மக்கள் சக்தி இதனை தெரிவிக்கின்றது. பயங்கரவாததடைச்சட்டம் பத்திரிகையாளர்கள் சிவில் சமூகத்தினருக்கு எதிராக பயன்படுத்தப்பட்டதே பிரச்சினைக்குரிய விடயம் என தேசிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளதுடன் எதிர்காலத்தில் அது இடம்பெற அனுமதிக்கமாட்டோம் என குறிப்பிட்டுள்ளது. பயங்கரவாத தடைச்சட்டம் சர்வதேச மனித உரிமை தராதரங்களை பின்பற்றியதாக காணப்படவில்லை என ஐக்கிய நாடுகள் இலங்கை மனித உரிமை ஆணைக்குழு உட்பட பலவற்றின் ஆய்வுகள் தெரிவித்துள்ளதை அனுரகுமாரதிசநாயக்க நீங்கள் மறக்க முடியாது. இலங்கை இந்த சர்வதேசசட்டங்கள் உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளது.இதன் காரணமாக அதனை கடைப்பிடிக்கவேண்டிய கடப்பாடு உள்ளது. இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் சிறைச்சாலை ஆய்வு உட்பட பல ஆய்வுகளில் கிடைத்த ஆதாரங்கள் பயங்கரவாத தடைச்சட்டம் தமிழர்கள் முஸ்லீம்களிற்கு எதிராக பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் இவர்கள் பத்திரிகையாளர்களே அல்லது சிவில் சமூகத்தினரோஇல்லை என்பதையும் வெளிப்படுத்தியுள்ளது. ஆகவே இது பழிவாங்குவது குறித்தது இல்லை மாறாக ஆனால் ஆழமாக வேரூன்றிய இனமதரீதியான பாகுபாடுகளை அடிப்படையாக கொண்டது. பயங்கரவாததடைச்சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுப்போம் என அரசாங்கம் தெரிவிக்கின்ற அதேவேளை பொலிஸார் உரிய நடைமுறைகளை புறக்கணித்தே அதிகளவில் செயற்படுகின்றனர் என்பது வெளிப்படையாக தெரியும் விடயம். பயங்கரவாத தடைச்சட்டம் மூலம் பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ள பரந்துபட்ட அதிகாரங்கள் துஸ்பிரயோகங்களையும் தண்;டனையின் பிடியிலிருந்து விலக்களித்தலையும் அதிகரிக்கின்றன தீவிரப்படுத்துகின்றன. மனித உரிமை மீறல்களை அதிகரிக்க கூடிய ஏனையபல ஏற்பாடுகள் பயங்கரவாத தடைச்சட்டத்தில் காணப்படுகின்றன. அடிப்படை உரிய செயல்முறைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதால் சட்டமே ஒரு பிரச்சினையாக காணப்படுகின்றது, மனித உரிமைகள் விடயத்தில் குறைபாடுள்ள சட்டத்தை தேசிய மக்கள் சக்தி தக்கவைக்கவிரும்புகின்றது என அந்த கட்சியால் தெரிவிக்க முடியுமா? https://www.ilakku.org/prohibition-of-terrorism-act-question-by-ambika-charkunanathan/
-
ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியின் வேட்பாளர் சசிகலா ரவிராஜின் வீட்டின் மீது தாக்குதல்!
என் வீட்டின் மீது தாக்குதல் நடத்தியோர் மீது பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என் வீட்டின் மீது தாக்குதல் நடத்தி என்னுடைய வீட்டுக்கு பொறிக்கப்பட்டிருந்த என்னுடைய கணவரின் பெயர் மீது மை பூசி அதனை அழித்து அநியாயம் செய்தவர்கள் தொடர்பில் பொலிஸ் நிலையத்தில் முறையிட்டும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என ‘சங்கு’ சின்னத்தில் போட்டியிடும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் யாழ்.தேர்தல் மாவட்ட வேட்பாளர் சசிகலா ரவிராஜ் தெரிவித்தார். திருநெல்வேலி மற்றும் மருதனார் மடம் பகுதிகளில் பிரசார நடவடிக்கைகளை முன்னெடுத்தபோது ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். “கடந்த 3 நாட்களுக்கு முன்னர் தமிழரசுக் கட்சி வேட்பாளரின் ஆதரவாளர் என்று கருதப்படும் பெண் ஒருவரால் என்னுடைய வீட்டின் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் வீட்டின் கண்ணாடிகள் நொருங்கின. அதேவேளை, வீட்டு வாசல் தூணில் என்னுடைய கணவர் மாமனிதர் நடராஜா ரவிராஜின் பெயர் பொறிக்கப்பட்டிருந்தது. அதன் மீது மை பூசி அழிக்கப்பட்டது. அதேவேளை,எமது மதில் சுவர்களில் தமிழரசுக் கட்சி வேட்பாளர் ஒருவரின் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன. இந்தச் சம்பவம் தொடர்பில் பொலிஸாரிடம் முறையிட்ட போதிலும் இதுவரையில் எந்தவித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. என்னுடைய கணவர் ஜனநாயக ரீதியில் தேர்தலை எதிர்கொண்டு நாடாளுமன்ற உறுப்பினராகச் செயற்பட்டுக் கொண்டிருந்த போதே தென்னிலங்கையில் வைத்துச் சுட்டுக் கொல்லப்பட்டார். இன்று வரை அவரை கொலை செய்தவர்களையோ அதற்கு காரணமானவர்களையோ நீதியின் முன் நிறுத்தவில்லை-தண்டிக்கவில்லை. இந்த நாட்டில் அநீதிகளுக்கு முடிவில்லையா?” என்று அவர் கேள்வி எழுப்பினார். https://thinakkural.lk/article/311328
-
E-8 விசா முறையின் கீழ் பணம் செலுத்த வேண்டாம்; இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு
E-8 விசா முறையின் கீழ் பணம் செலுத்த வேண்டாம்; இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டிருக்கும் அறிவிப்பு E-8 விசா ஒப்பந்தம் முன்னாள் அமைச்சரினால் சட்டவிரோதமான முறையில் கைச்சாத்திடப்பட்டுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி, இந்த விசா முறையின் கீழ் இலங்கையில் உள்ள எந்தவொரு தனியார் நிறுவனமும் கொரியாவுக்கு தொழிலாளர்களை அனுப்பவோ அல்லது பணம் வசூலிக்கவோ அனுமதிக்கப்படவில்லை என அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நாட்டின் முன்னாள் அமைச்சர் ஒருவர் தனது தனிப்பட்ட விருப்பத்திற்கிணங்க அந்த நாட்டிற்குச்சென்று மாகாண ஆளுநர் ஒருவருடன் ஒப்பந்தம் செய்துகொண்டதாகவும், அதற்கு அமைச்சரவையில் அங்கீகாரம் கிடைக்கவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறான ஒரு தனிப்பட்ட ஒப்பந்தத்திற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் எந்தவொரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளார். அதன்படி, விவசாயம் மற்றும் மீன்பிடி வேலைகளுக்கு E-8 விசா பிரிவின் கீழ் தொழிலாளர்கள் பரிந்துரைக்கப்படுவதில்லை. இந்த வேலைத்திட்டத்தை இலங்கை அரசாங்கம் நடைமுறைப்படுத்துவதில்லை என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வலியுறுத்தியுள்ளது. எனவு வேலை தேடுபவர்கள் E-8 விசா முறையின் கீழ் பணம் செலுத்த வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுவதாக வேலைவாய்ப்பு பணியகம் கேட்டுக்கொண்டுள்ளது. https://thinakkural.lk/article/311333
-
இலங்கை – இந்தியா மீனவர் பிரச்சினைக்கு எட்டப்பட்ட முடிவுகள்!
இலங்கை – இந்தியா மீனவர் பிரச்சினைக்கு எட்டப்பட்ட முடிவுகள்! இந்திய - இலங்கை கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு மனிதாபிமான முறையில் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. கடற்றொழில் தொடர்பான இந்தியா - இலங்கை கூட்டு செயற்குழுவின் 6ஆவது கூட்டம் நேற்றைய தினம் கொழும்பில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் இந்திய அரசின் இந்திய மீன்வளத் துறையின் செயலர் அபிலக்சி லிகி தலைமையிலான இந்தியக் குழுவும், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் பால்வள அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகளும் வெளியுறவு அமைச்சகம், தமிழ்நாடு அரசு கடற்படை, கடலோர பொலிஸார், மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரக அதிகாரிகளும் . இலங்கையின் கடற்றொழில் அமைச்சின் செயலாளர் மற்றும் இலங்கை வெளிவிவகார அமைச்சு, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம், கடற்படை, கரையோரக் காவல்படை மற்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் சிரேஸ்ட அதிகாரிகளும் இதில் கலந்து கொண்டுள்ளனர். இதன்போது, கடற்றொழிலாளர் மற்றும் கடற்றொழில் துறை தொடர்பான அனைத்து பிரச்சினைகள் குறித்தும், விரிவான மீளாய்வை மேற்கொண்டதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. மேலும் இலங்கைக் காவலில் உள்ள இந்திய கடற்றொழிலாளர்களும் அவர்களது படகுகளையும் விரைவில் விடுவிக்குமாறு இலங்கை அரசை இந்தியத் தரப்பு இந்த சந்திப்பின்போது வலியுறுத்தியுள்ளது.[ஒ] https://newuthayan.com/article/இலங்கை_–_இந்தியா_மீனவர்_பிரச்சினைக்கு_எட்டப்பட்ட_முடிவுகள்!
-
பொருத்தமான அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியாக இளைஞர்கள் மாற வேண்டும் - சந்திரகுமார்
பொருத்தமான அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியாக இளைஞர்கள் மாற வேண்டும் - சந்திரகுமார் நாட்டுக்கும், மக்களுக்குமான பொருத்தமான அரசியலை தீர்மானிக்கின்ற சக்தியான இளைஞர்கள் மாற வேண்டும் என ஐக்கிய மக்கள் சக்தியின் யாழ். கிளிநொச்சி தேர்தல் மாவட்டத்தில் முதன்மை வேட்பாளராக போட்டியிடுகின்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் மு. சந்திரகுமார் தெரிவித்துள்ளார். கிளிநொச்சி திருவையாற்றில் இடம்பெற்ற இளைஞர்களுடான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்; இந்த நாடாளுமன்ற தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தின் இளைஞர்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம் மகிழ்ச்சியளிக்கிறது. புதிய அரசியல் மாற்றத்தை நோக்கி அவர்கள் சிந்திக்கவும், செயற்படவும் தொடங்கியிருகின்றார்கள். கடந்த 15 அவர்கள் பயணித்த அரசியல் பாதையில் இருந்து விலகி பொருத்தமான அரசியல் வழியை பின்பற்ற தொடங்கியுள்ளனர். கடந்த காலங்களில் இந்த இளைஞர்கள் தாங்கள் நம்பி பயணித்த அரசியல் தலைமைகள் அவர்களை நட்டாற்றில் விட்டது போல விட்டுச் சென்றுள்னர். இளைஞர்கள் எதிர்பார்த்த எதுவும் நிறைவேற்றப்படவில்லை.அவர்களை உசுப்பேற்றி, வாக்குகளை அபகரித்து பதவிகளுக்கு வந்தவர்களால் அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். அதன் காரணமாக ஏற்பட்ட கோபமும் விரக்தியும் தான் மாவட்டத்தின் இளைஞர்கள் எங்களின் அரசியல் வழியை ஏற்றுக்கொண்டு பயணிக்க முன்வந்துள்ளனர். கிளிநொச்சி மாவட்டத்தில் மீள்குடியேற்றத்தின் பின்னர் ஐந்து வருடங்கள் அதிகாரத்தில் இருந்த காலத்தில் என்னால் மேற்கொள்ளப்பட்ட பணிகளின் நிமிர்த்தமே இளைஞர்கள் மாற்றத்தை நோக்கி செயற்பட காரணமாக அமைந்துள்ளதனை அவர்களின் கருத்துக்களில் இருந்து அறிந்துகொண்டேன். ஆகவேதான் நான் இம்முறை அதிகாரத்திற்கு வந்தவுடன் இளம் சமூகத்தின் எதிர்பார்ப்புக்களை நிச்சயம் நிறைவேற்றுவேன். இது வெறும் வார்த்தைகளாலும், அறிக்கைகளாலும், உணர்ச்சி பேச்சுக்களாலும் அரசியல் செய்பவன் நானல்ல என்பதனை இளைஞர்கள் விளங்கிக்கொண்டுள்ளனர். எனவே தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளையும் அவர்களுக்கான அபிவிருத்திகளையும் மேற்கொள்ள உழைப்பேன் என்பதனையும் நான் உத்தரவாதமாக கூறுகின்றேன் - என்றார். (ச) https://newuthayan.com/article/பொருத்தமான_அரசியலை_தீர்மானிக்கின்ற_சக்தியாக_இளைஞர்கள்_மாற_வேண்டும்_-_சந்திரகுமார்