Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிருபன்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by கிருபன்

  1. ஸ்கார்பரோ வாழ் தமிழர் மீது தாக்குதல்; கனடாவிலிருந்து இலங்கை வரை இயக்கப்பட்ட சதி! கனடா – ஸ்கார்பரோ ஐயப்பன் ஆலய குருசாமி , யாழ்ப்பாணம் அனலைதீவில் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவமானது கனடாவிலிருந்து இயக்கப்பட்ட சதி என ‘Toronto Star பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. ஸ்கார்பரோ ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தின் முன்னாள் தலைவரே இந்தத் தாக்குதலுக்கு மூளையாகச் செயல்பட்டவர் என ‘Toronto Star’ கூறியுள்ளது. கனடா ஐயப்பன் ஆலய குருசாமி இலங்கையில் வைத்து அடித்துக் கொல்லப்படும் நிலைக்குத் தள்ளப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் கனடாவைச் சேர்ந்த முக்கிய நபர் ஒருவருக்குத் தொடர்பிருப்பதாக இலங்கை காவல்துறை திடுக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளதாக ‘Toronto Star’ குறிப்பிட்டுள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டில் ஸ்கார்பரோ ஸ்ரீ ஐயப்பன் ஆலயத்தின் குருசாமி, சொந்த ஊரான யாழ்ப்பாணம் அனலைதீவுக்கு சென்றிருந்த போது அங்கே ஒரு கும்பலால் கடுமையாகத் தாக்கப்பட்டார். இந்தத் தாக்குதலில் அவர் படுகாயமடைந்து உயிருக்குப் போராடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். அவர் கிட்டத்தட்ட அடித்துக் கொல்லப்படும் தருவாயில் இருந்ததாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் விசாரணையில் வெளியான தகவல்கள் இந்தக் கொலை முயற்சி வழக்கு தொடர்பாக இலங்கை காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வந்தனர். தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஏற்கெனவே நான்கு பேர் இலங்கையில் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் தற்போது ஐந்தாவது மற்றும் முக்கிய சந்தேக நபராக கனடாவில் வசிக்கும் நபர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக ‘Toronto Star’ குறிப்பிட்டுள்ளது. ஆலய நிர்வாகம் மற்றும் அதிகாரப் போட்டி தொடர்பான விரோதமே இந்தத் தாக்குதலுக்குக் காரணம் எனச் சந்தேகிக்கப்படுகிறது. இந்நிலையில் கனடாவில் ஆலய நிர்வாகத்தில் ஏற்பட்ட பிணக்குகள் கடல் கடந்து இலங்கையில் வன்முறையாக மாறியிருப்பது புலம்பெயர் தமிழ் சமூகத்தினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. https://akkinikkunchu.com/?p=355426
  2. மட்டக்களப்பிற்கான உள்நாட்டு வானூர்தி சேவையை மீண்டும் ஆரம்பம்.! ஜனவரி 09, 2026 இரத்மலானையில் இருந்து மட்டக்களப்பிற்கான உள்நாட்டு வானூர்தி சேவையை மீண்டும் ஆரம்பிப்பதற்கு, ஜனாதிபதி இணக்கம் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு மற்றும் நிதி அமைச்சுகளின் ஆலோசனைக் கூட்டத்தின் போது, ஜனாதிபதி இந்த இணக்கத்தை வெளியிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். இதேவேளை, பாலையடிவட்டை கிராமத்திலுள்ள இராணுவ முகாமை அகற்ற வேண்டும் என்ற மக்களின் நீண்டநாள் கோரிக்கைக்கு அமைய, 12 பேர்ச் காணியை விடுவிக்கவும் இதன்போது அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். எனினும், இது போதுமானதல்ல என சுட்டிக்காட்டியதையடுத்து, முழு காணியையும் விடுவிப்பதற்கான ஆய்வினை மேற்கொள்ளுமாறு, ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாகவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார். அத்துடன் மட்டக்களப்பு வானூர்தி நிலைய வீதியை மண்முனை வடக்கு பிரதேச செயலகம் மற்றும் மாநகர சபைக்கு விடுவிப்பதற்கான அனுமதியை வழங்கும் அறிவித்தலை, மட்டக்களப்பு வான் படையினருக்கு வழங்குமாறும் ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார். https://www.battinatham.com/2026/01/blog-post_09.html
  3. லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு 17 ஆண்டுகள்; நீதிக்கான போராட்டம் தொடர்கிறது 09 Jan, 2026 | 05:05 AM ( செ.சுபதர்ஷனி) 'சண்டே லீடர்' பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், சிரேஷ்ட ஊடகவியலாளருமான லசந்த விக்ரமதுங்க படுகொலை செய்யப்பட்டு நேற்று வியாழக்கிழமையுடன் (ஜனவரி 8, 2026) 17 ஆண்டுகள் பூர்த்தியடைந்துள்ள நிலையில், அமரர் லசந்த விக்ரமதுங்கவுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வு வியாழக்கிழமை (8) பொரளை பொது மயானத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது. கடந்த 2009 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி அத்திட்டிய பகுதியில் வைத்து லசந்த விக்ரமதுங்க கொடூரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார். ஊழல்கள் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிராகத் துணிச்சலுடன் குரல் கொடுத்த அவரது இழப்பு, இலங்கையின் ஊடக சுதந்திரத்திற்கு விழுந்த பெரும் அடியாகக் கருதப்படுகிறது. 17 ஆண்டுகள் கடந்தும், இந்தப் படுகொலையின் பின்னணியில் உள்ள உண்மையான குற்றவாளிகள் இதுவரை சட்டத்தின் முன் நிறுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. நேற்று நடைபெற்ற நினைவேந்தல் நிகழ்வில் அன்நாரது குடும்பத்தினர், சிரேஷ்ட ஊடகவியலாளர்கள் மற்றும் சிவில் சமூக ஆர்வலர்களும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர். இதன்போது கருத்துத் தெரிவித்தவர்கள், கடந்த காலங்களில் ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் நீதியை நிலைநாட்டுவதாக உறுதியளித்த போதிலும், விசாரணைகள் மந்தகதியிலேயே உள்ளதாகக் கவலை வெளியிட்டனர். லசந்த விக்ரமதுங்க தொழில்முறை சட்டத்தரணியாவதுடன், ஊடகத்துறையில் நுழைவதற்கு முன்னர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தீவிர அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டவராவார். முன்னாள் பிரதமர் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராகவும் அவர் பணியாற்றியுள்ளார். பின்னரே முழுநேர ஊடகவியலாளராகத் தன்னை மாற்றிக்கொண்டு, 1994 இல் லால் விக்ரமதுங்கவுடன் இணைந்து 'சண்டே லீடர்' பத்திரிகையைத் தொடங்கினார். அத்தோடு லசந்த விக்ரமதுங்க மாத்திரமன்றி இலங்கையில் பல ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ள போதும், அவற்றில் ஒரு வழக்குக் கூட முழுமையாக விசாரணை செய்யப்பட்டு குற்றவாளிகளுக்குத் தண்டனை வழங்கப்படவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும். அவர் படுகொலை செய்யப்பட்ட பின்னர், யுனெஸ்கோ அவருக்கு 'உலக ஊடக சுதந்திர விருது' வழங்கி கௌரவித்தது. சர்வதேச ஊடக நிறுவனம் (IPI) அவரை உலகின் 50 துணிச்சலான ஊடகவியலாளர்களில் ஒருவராக அறிவித்தது. இதேவேளை, லசந்தவின் துணிச்சலான எழுத்துக்களும், அவர் எழுதிய "And Then They Came For Me" எனும் தலையங்கமும் இன்றும் உலகளவில் ஊடகப் போராட்டத்தின் அடையாளமாகப் போற்றப்படுகின்றன. கடந்த வாரம் கிளிநொச்சியில் படுகொலை செய்யப்பட்ட எழுத்தாளர்களை நினைவுகூரும் அருங்காட்சியகம் ஒன்றில் லசந்த விக்ரமதுங்க மற்றும் பிரகீத் எக்னெலிகொட ஆகியோரின் உருவச்சிலைகள் திரைநீக்கம் செய்யப்பட்டன. அரசியல்வாதிகளால் செய்ய முடியாதவாறு, வடக்கு மற்றும் தெற்கு மக்களை இவ்வாறான ஊடகப் போராளிகளின் தியாகம் ஒன்றிணைத்துள்ளமையை இது சுட்டிக்காட்டுகிறது. பல அரசியல் மாற்றங்கள் நிகழ்ந்தும், லசந்தவின் குடும்பத்தினர் இன்றும் சர்வதேச ரீதியில் நீதிக்காகப் போராடி வருகின்றனர். எதிர்வரும் காலத்திலாவது இந்தப் படுகொலைக்கான உண்மையான சூத்திரதாரிகள் அடையாளம் காணப்பட்டு, நீதி நிலைநாட்டப்படும் என ஊடக அமைப்புகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/235566
  4. முள்ளிக்குளம் மக்களின் காணிகளை விடுவிக்க கடற்படை இணக்கம் – ஜனாதிபதி அறிவிப்பு 09 Jan, 2026 | 12:33 AM ( எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்) முள்ளிக்குளத்தில் கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு கடற்படை இணக்கம் தெரிவித்துள்ளதுடன், எதிர்வரும் 15ஆம் திகதி மன்னாருக்கு வருகை தரும்போது குறித்த முள்ளிக்குளம் காணிவிடுவிப்பு தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க குறிப்பிட்டுள்ளார். கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள மன்னார் - சிலாவத்துறை பிரதேசசெயலாளர்பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமத்தினை விடுவிப்புச்செய்வதுடன், தமது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியமர்வதற்கு காத்திருக்கும் முள்ளிக்குளம் கிராமமக்களை மீள்குடியமர்த்துவதற்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வன்னிமாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் வலியுறுத்திய நிலையில் இ முள்ளிக்குளத்தில் கடற்படையின் ஆக்கிரமிப்பிலுள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு கடற்படை இணக்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு எதிர்வரும் 15ஆம் திகதி தாம் மன்னாருக்கு வருகைதரும்போது குறித்த முள்ளிக்குளம் காணிவிடுவிப்பு தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதியினாலும் பதில் வழங்கப்பட்டுள்ளது. பாராளுமன்றக்கட்டடத் தொகுதியில் புதன்கிழமை (8) ஜனாதிபதியும் பாதுகாப்பு அமைச்சருமான அனுரகுமார திசாநாயக்கவின் தலைமையில் பாதுகாப்பு அமைச்சின் அமைச்சுசார் ஆலோசனைக்குழுக்கூட்டம் இடம்பெற்றது. இக்கூட்டத்திலேயே இவ்விடயம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், மன்னார் - சிலாவத்துறை பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட முள்ளிக்குளம் கிராமம் மீள்குடியமர்த்தப்படவேண்டுமென ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார். அத்தோடு முள்ளிக்குளம் மக்களின் நிலமைகள் தொடர்பிலும் முள்ளிக்குளம் கிராமத்தில் வாழ்ந்த 400வரையான குடும்பங்கள் கடந்ந 1990ஆம் ஆண்டு தமது சொந்த இடங்களிலிருந்து இடம்பெயர்ந்தனர். அதன்பின்னர் கடந்த 2002ஆம் ஆண்டு 300வரையான குடும்பங்கள் மீண்டும் தமது சொந்த இடங்களில் மீளக்குடியேறியதுடன், அதில் 150வரையான குடும்பங்களுக்கு வீடுகளும் அமைத்துக்கொடுக்கப்பட்டிருந்தன என்பதையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளார். இதேவேளை அசாதாரண சூழ்நிலை காரணமாக மீண்டும் கடந்த 2007ஆம் ஆண்டு முள்ளிக்குளம்கிராம மக்கள் மீளவும் தமது பூர்வீக வாழ்விடத்திலிருந்து இடம்பெயர்ந்தபோதிலும் இதுவரை அந்த மக்கள் மீளக்குடியமர்த்தப்படவில்லை என்பதையும் ஜனாதிபதியின் கவனத்திற்கு எம்.பி துரைசாரா கொண்டுவந்துள்ளார். இத்தகைய சூழலில் முள்ளிக்குளம் கிராமமக்கள் அயற் கிராமங்களான காயாக்குழி மற்றும் மலைக்காடு ஆகிய கிராமங்களில் பலத்த சிரமங்களுடன் வாழ்ந்து வருகின்றார்கள் என்பதையும், கடந்த 2002ஆம் ஆண்டு மீள்குடியேற்றத்தின்போது முள்ளிக்குளத்தில் அந்த மக்களுக்கு அமைத்துக்கொடுக்கப்பட்ட வீடுகளில் தற்போது கடற்படையினரது குடும்பங்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் என்பதையும் குறித்த கூட்டத்தில் ஜனாதிபதியிடம் சுட்டிக்காட்டியுள்ளார். இந்நிலையில் முள்ளிக்குளத்தில் இயங்கிவரும் பாடசாலைக்கும் அங்குள்ள பரலோக மாதா தேவாலயத்திற்கும் மலைக்காடு,காயாக்குழி கிராமங்களில் தங்கியுள்ள முள்ளிக்குளம் கிராமத்தை பூர்வீகமாகக் கொண்ட மக்களும், மாணவர்களும் சென்று வருகின்றார்கள் என்பதையும் ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். இருப்பினும் முள்ளிக்குளம் கிராமத்தில் கடற்படையினரது ஆக்கிரமிப்பிலுள்ள குடியிருப்புக்காணிகள், தோட்டக்காணிகள்,வயற்காணிகள்,குளங்கள், கடற்றொழிலுக்காக மீனவர்களால் பயன்படுத்தப்படும் இறங்குதுறைகள் என எவையும் இதுவரை விடுவிக்கப்படவில்லை என்பதையும் இதன்போது ஜனாதிபதியிடம் தெரிவித்துள்ளார். எனவே தமது பூர்வீக வாழ்விடங்களில் மீள்குடியேறுவதற்காக எதிர்பார்த்துக் காத்திருக்கும் முள்ளிக்குளம் கிராம மக்களை உடனடியாக மீளக் குடியமர்த்துவதற்கு நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் வலியுறுத்தியுள்ளார். இந்நிலையில் அக்கூட்டத்தில் கலந்துகொண்டிருந்த கடற்படை அதிகாரி, முள்ளிக்குளத்தில் ஒருபகுதிக் காணி மக்களுடைய காணிகள் என தம்மால் அறியமுடிவதாகத் தெரிவித்ததுடன், அந்த மக்களுடைய காணிகளை விடுவிக்கக்கூடிய நிலையிருப்பதாகவும் தெரிவித்தார். கூடிய விரைவில் முள்ளிக்குளத்தில் கடற்படையினரின் கையகப்படுத்தலில் உள்ள மக்களின் காணிகளை விடுவிப்பதுதொடர்பான முடிவுகள் தம்மால் அறிவிக்கப்படுமெனவும் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை எதிர்வரும் 15ஆம் திகதி தாம் மன்னாருக்கு வருகைதரவுள்ளதாகத் தெரிவித்த ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க, அவ்வாறு மன்னாருக்கு வருகை தரும்போது முள்ளிக்குளம் காணிவிடுவிப்புத் தொடர்பிலும் கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/235562
  5. தரம் 6 மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் இடம்பெற்ற தவறு குறித்து மல்வத்து, அஸ்கிரிய பீடங்களுக்கு விளக்கமளித்த பிரதமர்! 09 Jan, 2026 | 08:43 AM (எம்.மனோசித்ரா) கல்வி மறுசீரமைப்பின் கீழ் தரம் 6 மாணவர்களுக்கான பாடத்திட்டத்தில் பொறுத்தமற்ற இணையதள முகவரியொன்று உள்ளடக்கப்பட்டமை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.இந்நிலையில் கல்வி அமைச்சரான பிரதமர் ஹரிணி அமரசூரிய இது குறித்து நேற்று வியாழக்கிழமை (8) அஸ்கிரிய மற்றும் மல்வத்து பீடங்களின் மகாநாயக்க தேரர்களை சந்தித்து விளக்கமளித்துள்ளார். 'எதிர்காலத்தில், பாடசாலைப் பாடப்புத்தகங்களை அச்சிடும் பொறுப்பு கல்வி வெளியீட்டுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும். குறைபாடுகள் அடையாளம் காணப்பட்ட அந்த மாதிரிப் பாடப்புத்தகங்கள் எந்தவொரு மாணவருக்கும் விநியோகிக்கப்படவில்லை என்பதுடன், உள்வாரி விசாரணைகள் நிறைவடையும் வரை அச்சிடப்பட்ட அனைத்து பிரதிகளும் சீல் வைக்கப்பட்டுள்ளன.' என்று கல்வி அமைச்சர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார். அஸ்கிரிய பீடத்தின் தரப்பின் மகாநாயக்க தேரர் வரக்காகொட ஸ்ரீ ஞானரதன தேரர் மற்றும் மல்வத்து பீடத்தின் மகாநாயக்க தேரர் திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கல தேரர் ஆகியோருக்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய தரம் 6 ஆங்கில மாதிரிப் பாடப்புத்தகத்தின் முதலாம் அச்சுப்பதிப்பில் ஏற்பட்ட சிக்கல்கள் குறித்து விளக்கமளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/235570
  6. உலகளாவிய ரீதியில் கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் வருடாந்தம் 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பு 09 Jan, 2026 | 09:00 AM (செ.சுபதர்ஷனி) உலகளாவிய ரீதியில் வருடாந்தம் சுமார் 6 இலட்சம் புதிய கர்ப்பப்பை வாய் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. எனச் சுகாதார அமைச்சின் தொற்றுநோய் ஆய்வுப் பிரிவின் சமூக வைத்திய நிபுணர் சச்சிமாலி விக்ரமசிங்க தெரிவித்தார். கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தொடர்பாகப் புதன்கிழமை (7) சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வைத்தியர் தொடர்ந்து தெரிவிக்கையில்: கர்ப்பப்பை வாய் புற்றுநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை பெறும் பட்சத்தில் நோய் நிலைமையை முழுமையாகக் குணப்படுத்த முடியும். அதற்கான சிகிச்சை முறைகளும் பாரிய அளவில் வளர்ச்சியடைந்துள்ளன. எனினும் அது பற்றிய போதியளவான புரிந்துணர்வு இன்மையால் நாட்டில் வருடாந்தம் பல உயிரிழப்புகள் ஏற்படுவது கவலைக்குரிய விடயமாக உள்ளது. நோய் தொடர்பாகப் பொதுமக்களுக்குத் தெளிவூட்டுவதற்காக ஜனவரி மாதம் 'கர்ப்பப்பை வாய் புற்றுநோய் விழிப்புணர்வு' மாதமாக உலக சுகாதார ஸ்தாபனத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் உலகளாவிய ரீதியில் வருடாந்தம் சுமார் 6 இலட்சம் புதிய கர்ப்பப்பை வாய் புற்றுநோயாளர்கள் அடையாளம் காணப்படுவதுடன், 3 இலட்சத்து 40 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகத் தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன. பெண்களிடையே அதிகமாக ஏற்படக்கூடிய புற்றுநோய்களில் மார்பகப் புற்றுநோய் முதலாவதாகவும், கர்ப்பப்பை வாய் புற்றுநோய் மூன்றாவதாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. அதேநேரம் இலங்கையில் 2022 ஆம் ஆண்டு தரவுகளுக்கமைய 226 நோயாளர்கள் புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளதுடன், 2021 ஆம் ஆண்டு 179 உயிரிழப்புகளும் சம்பவித்துள்ளன. இலங்கையில் பாதிக்கும் புற்றுநோய் பட்டியலில் இது ஐந்தாவது இடத்தில் உள்ளது. ' ஹியூமன் பாப்பிலோமா வைரஸ் தொற்று காரணமாகக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் ஏற்படுகிறது. பாதுகாப்பற்ற பால் உறவுகள் மூலம் இந்த வைரஸ் பரவுகிறது. இந்நிலையில் இதனைக் கட்டுப்படுத்துவதற்காக தேசிய நோய் கட்டுப்பாட்டுத் திட்டத்தின் கீழ் 10 தொடக்கம் 12 வயதுக்குட்பட்ட பாடசாலை மாணவிகளுக்குக் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான தடுப்பூசி வழங்கப்படுகிறது. மேலும் 35 தொடக்கம் 45 வயதுக்கு இடைப்பட்ட பெண்கள் கட்டாயம் கர்ப்பப்பை வாய் புற்றுநோய்க்கான பரிசோதனைகளை மேற்கொள்வது அவசியம். மாதவிடாய் சுழற்சி காலப்பகுதிகளுக்கு இடையில் ஏற்படும் அசாதாரணமான இரத்தப்போக்கு அல்லது துர்நாற்றத்துடன் திரவம் வெளியேறுமாயின், உடனடியாகத் தகுதிவாய்ந்த வைத்தியரை அணுகிப் பரிசோதனை செய்துகொள்வது அவசியம்" என்றார். https://www.virakesari.lk/article/235573
  7. இந்தியவுக்கான தரைவழிப் பாதை - அரசாங்கத்தின் நிலைப்பாடு என்ன? 09 January 2026 இலங்கைக்கும் இந்தியாவுக்கு இடையிலான தரைவழி பாதைத் தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் பதிலுக்காக தாம் காத்திருப்பதாக இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார். இரண்டு நாடுகளுக்கும் இடையிலான தரைவழி போக்குவரத்து தொடர்பிலான யோசனையை, இலங்கை அரசாங்கமே முன்வைத்தது. அதனை முன்னெடுத்துச் செல்ல, இந்தியா தயாராக இருக்கிறது. எனினும், இலங்கை அரசாங்கம் அது தொடர்பில் எவ்வித முன்னெடுப்புகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார். அதேபோன்று, இலங்கை - இந்திய சுதந்திர வர்த்தக உடன்படிக்கையான எட்கா தொடர்பிலும் இலங்கையின் பதிலை இந்தியா எதிர்பார்த்திருப்பாக அவர் குறிப்பிட்டுள்ளார். இதேவேளை, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான எரிபொருள் விநியோக கட்டமைப்புத் தொடர்பில் நிதியளிப்பு தொடர்பான ஆலோசனைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருவதாக இந்திய உயர்ஸ்தானிகர் தெரிவித்துள்ளார். அதேபோன்று, இந்திய வீடமைப்பு திட்டத்தின் கீழ் பெருந்தோட்ட பகுதிகளில் முன்னெடுக்கப்படும் 10 ஆயிரம் வீட்டுத்திட்டத்தில் 3300 வீடுகளின் நிர்மாணப் பணிகள் ஏற்கனவே முன்னெடுக்கப்பட்டுள்ளன. எனினும், எஞ்சிய 6700 வீடுகளை டிட்வா பாதிக்கப்பட்ட அல்லது, எதிர்காலத்தில் அனர்த்தங்களினால் பாதிக்கப்படவுள்ள மக்களுக்கு வழங்குவதற்கு எதிர்பார்த்துள்ளதாக இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது. https://hirunews.lk/tm/439766/land-route-to-india-what-is-the-governments-position
  8. ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம் 09 January 2026 ஈரானின் பொருளாதார நெருக்கடி மற்றும் ஆட்சிக்கு எதிரான பொதுமக்களின் போராட்டங்கள் தீவிரமடைந்து வருவதால், நாட்டில் இணைய சேவை மற்றும் தொலைபேசி இணைப்புகளை முற்றிலுமாக நிறுத்தி வைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இன்று (09) காலை நிலவரப்படி, தலைநகர் தெஹ்ரான் உட்பட பல முக்கிய நகரங்களில் இரவு நேர போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன, அவற்றை கட்டுப்படுத்துவதற்காக அரசாங்கம் இந்த நடவடிக்கைகளை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. உள்ளூர் நேரப்படி இரவு 8:00 மணியளவில் போராட்டங்கள் தொடங்கியதிலிருந்து ஈரானில் இணைய சேவைகள் கடுமையாகக் குறைந்துள்ளதாக உலகளாவிய இணைய நடவடிக்கைகளைக் கண்காணிக்கும் நெட்ப்ளொக்ஸ் (NetBlocks) உறுதிப்படுத்தியுள்ளது. நாடுகடத்தப்பட்ட ஈரானிய பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி(Reza Pahlavi) விடுத்த போராட்ட அழைப்பைத் தொடர்ந்து மக்கள் வீதிகளில் இறங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. டுபாய், சிட்னி போன்ற வெளிநாட்டு நகரங்களில் உள்ள ஈரானியர்கள் தங்கள் உறவினர்களைத் தொடர்பு கொள்ள முடியவில்லை என்றும், வாட்ஸ்அப்(WhatsApp) , ஃபேஸ்டைம்(FaceTime) போன்ற சேவைகளும் முடங்கியுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://hirunews.lk/tm/439792/intensifying-protests-in-iran-internet-services-suspended
  9. டித்வா - நிவாரணம் வழங்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம் ‘Rebuilding Sri Lanka’ வேலைத் திட்டத்தின் கீழ், டித்வா புயலினால் முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்குப் பதிலாக புதிய வீடுகளை நிர்மாணித்தல் மற்றும் 50 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கும் ஆரம்ப நிகழ்வு சற்றுமுன்னர் (09) ஆரம்பமாகியுள்ளது. அநுராதபுரம் மற்றும் குருநாகல் மாவட்டங்களில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையில் இந்த நிகழ்வு இன்று நடைபெறுகிறது. அதன்படி, அநுராதபுரம் மாவட்டத்தில் கல்னேவ, ஹந்துன்கம, ராஜாங்கனை சிறிமாபுர மற்றும் குருநாகல் மாவட்டத்தில் நிகவெரட்டிய, விதிகுலிய சந்தி மற்றும் ரிதிகம, தொடம்கஸ்லந்த ஆகிய பிரதேசங்களில் அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக புதிய வீடுகளை நிர்மாணிக்கும் பணியின் ஆரம்ப நிகழ்வு நடைபெறும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் வேலைத்திட்டத்தின் கீழ் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. https://adaderanatamil.lk/news/cmk6dos5z03pko29nn2gexzt5
  10. முல்லைத்தீவு சிறுமியின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சர் பதில் முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்த 12 வயது சிறுமியான குகநேசன் டினோஜாவின் மரணம் தொடர்பில் சுகாதார அமைச்சு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். பாராளுமன்றின் இன்றைய (9) அமர்வில் கலந்து கொண்டு, குறித்த சிறுமியின் மரணம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் வழங்கிய சுகாதார அமைச்சர், கடந்த மாதம் ஒவ்வாமை காரணமாக சிறுமி முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், டிசம்பர் 21 ஆம் திகதி மரணித்தமை தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக குறிப்பிட்டார். அதேநேரம் சிறுமியின் மரணம் தொடர்பில் தமக்கு கவலையளிப்பதாக தெரிவித்தார். தற்போது வைத்தியசாலை மற்றும் மாகாண மட்டத்தில் தனித்தனியாக முன்னெடுக்கப்பட்ட ஆரம்ப கட்ட விசாரணைகளின் அறிக்கைகள் சுகாதார அமைச்சுக்கு கிடைக்கப்பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். அந்த அறிக்கைகளின் பிரகாரம் மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன. வைத்தியசாலையின் பணிக்குழாமினரின் அசமந்த போக்கினாலேயா இந்த மரணம் இடம்பெற்றுள்ளது? என்பது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்தார். எனவே அந்த விசாரணைகளுக்கு பாதிப்பாக அமையாத விடயங்களை எதிர்வரும் நாட்களில் வௌிப்படுத்துவதாகவும் சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ குறிப்பிட்டார். https://adaderanatamil.lk/news/cmk6i602n03pqo29nyrs6tzmb
  11. கூகிள் ஷீற்றைப் பாவிப்பவர்கள் கணிப்புக்களை இந்தத் திரியில் பிரதிசெய்யவேண்டும். இல்லாவிட்டால் போட்டியில் இணைத்துக்கொள்ள இயலாது.. இன்று கூகிள் ஷீற்றைப் பாவித்தவர் (யாரென்று என்னால் அறியமுடியாது) பதில்களை இங்கே பதிவிடவும். நன்றி இதுவரை 11 அணிகள் தமது வீரர்களின் பட்டியலைத் தந்துள்ளன. மிகுதி ஒன்பது அணிகளும் பட்டியலை வெளியிட்ட பின்னர், முழுமையான பட்டியலைத் தருகின்றேன். Afghanistan Squad 31-Dec-2025 Australia Squad 01-Jan-2026 Bangladesh Squad 04-Jan-2026 England Squad 30-Dec-2025 India Squad 20-Dec-2025 Namibia Squad 03-Jan-2026 Nepal Squad 06-Jan-2026 New Zealand Squad 07-Jan-2026 Oman Squad 30-Dec-2025 South Africa Squad 02-Jan-2026 Zimbabwe Squad 02-Jan-2026
  12. ஐக்கிய நாடுகள் சபையின் 31 அமைப்புகளில் இருந்து வெளியேறுகிறது அமெரிக்கா : ட்ரம்ப்பின் அதிரடி உத்தரவு 08 January 2026 அமெரிக்காவின் தேசிய நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாகக் கூறி, ஐக்கிய நாடுகள் சபையின் முக்கிய பிரிவுகள் உட்பட 66 சர்வதேச அமைப்புகளிலிருந்து அமெரிக்கா உடனடியாக வெளியேறுவதாக, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். ட்ரம்பினால் வெளியிடப்பட்ட உத்தியோகபூர்வ அறிவிப்பின்படி, அமெரிக்கா பின்வரும் அமைப்புகளில் இருந்து விலகுகிறது. 1. ஐநா சார்ந்த அமைப்புகள்: ஐக்கிய நாடுகள் பெண்கள் அமைப்பு (UN Women), ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் (UNFPA) உள்ளிட்ட 31 ஐ.நா அமைப்புகள். 2. ஏனைய சர்வதேச அமைப்புகள்: சர்வதேச சூரியசக்தி கூட்டணி (International Solar Alliance), கொழும்புத் திட்டம் (Colombo Plan) உள்ளிட்ட 35 ஐ.நா அல்லாத அமைப்புகள். அமெரிக்க வரி செலுத்துவோரின் பணம் வீணடிக்கப்படுவதாகவும், இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் "அமெரிக்கா முதலில்" (America First) என்ற கொள்கைக்கும் தேசிய நலனுக்கும் முரணாக இருப்பதாகவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார். குறிப்பாக, சர்வதேச நிதியுதவிகள் அமெரிக்காவின் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக அமைவதை அனுமதிக்க முடியாது என அவர் வலியுறுத்தியுள்ளார். இந்த முடிவினால் சர்வதேச அளவில் சுகாதாரம், கல்வி, மற்றும் சுற்றுச்சூழல் சார்ந்த திட்டங்களுக்கு அமெரிக்கா வழங்கி வந்த பெருமளவிலான நிதியுதவி நிறுத்தப்படும் சூழல் உருவாகியுள்ளது. குறிப்பாக, இலங்கையைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் கொழும்புத் திட்டம் (Colombo Plan) போன்ற அமைப்புகளில் அமெரிக்காவின் விலகல் ஆசிய பிராந்தியத்தில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. The White HouseWithdrawing the United States from International Organiza...MEMORANDUM FOR THE HEADS OF EXECUTIVE DEPARTMENTS AND AGENCIES By the authority vested in me as President by the Constitution and the laws of the Unitedhttps://hirunews.lk/tm/439619/us-withdraws-from-31-united-nations-organizations-trumps-executive-order
  13. A/L மாணவர்களுக்கான முக்கிய அறிவிப்பு செய்திகள் அனர்த்தம் காரணமாக இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையின் மீதமுள்ள பாடங்களுக்கான பரீட்சைகள், எதிர்வரும் 12 ஆம் திகதி முதல் மீண்டும் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இப்பரீட்சைகள் ஜனவரி மாதம் 20 ஆம் திகதி வரை நடைபெறும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி லியனகே தெரிவித்தார். நாடு முழுவதும் 2,086 பரீட்சை மத்திய நிலையங்களில் பரீட்சைகள் நடைபெறவுள்ள நிலையில், பரீட்சை பணிகளை ஒருங்கிணைக்க 325 ஒருங்கிணைப்பு மத்திய நிலையங்கள் செயற்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, 32 பிராந்திய சேகரிப்பு மத்திய நிலையங்கள் செயற்படுவதாக பரீட்சைத் திணைக்களம் தெரிவித்தது. https://adaderanatamil.lk/news/cmk51j25903oeo29n1u0yaaca
  14. காயங்களுடன் நியூயார்க் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட மதுரோவின் மனைவி சிலியா புளோரஸ்! adminJanuary 7, 2026 வெனிசுலாவின் முன்னாள் அதிபர் நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி சிலியா புளோரஸ் ஆகியோர் அமெரிக்க சிறப்புப் படையினரால் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அவர்கள் நியூயார்க் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இந்த நிகழ்வு உலக நாடுகளிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிலியாவின் வழக்கறிஞர் மார்க் டோனெல்லி (Mark Donnelly), கைது நடவடிக்கையின் போது (Abduction) தனது கட்சிக்காரருக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதாகத் தெரிவித்தார். குறிப்பாக, அவரது விலா எலும்பு (Rib) முறிந்திருக்கலாம் அல்லது பலத்த சேதமடைந்திருக்கலாம் என அவர் சந்தேகம் எழுப்பியுள்ளார். அவருக்கு உடனடியாக எக்ஸ்ரே (X-ray) மற்றும் முழுமையான மருத்துவப் பரிசோதனைகள் வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மதுரோ மற்றும் சிலியா மீது போதைப்பொருள் கடத்தல் மற்றும் ஆயுதக் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. இருப்பினும், தாங்கள் நிரபராதிகள் என இருவரும் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளனர். மதுரோ தன்னை ஒரு “போர்க்கைதி” (Prisoner of War) என்று அறிவித்துள்ள நிலையில், இந்த விவகாரம் சர்வதேச அரசியலில் புதிய விவாதங்களை கிளப்பியுள்ளது. அடுத்தக்கட்ட விசாரணை மார்ச் 17-ம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2026/225910/
  15. கவனிப்பாரற்றிருந்த நிலாவரை கிணறு துப்புரவு adminJanuary 8, 2026 யாழ்ப்பாணம் நிலாவரை ஆழமற்ற கிணற்றுப் பகுதி அண்மைய நாட்களில் சமூக வலைத்தளங்களில் கடுமையான விமர்சனத்திற்கு உள்ளானதைத் தொடர்ந்து, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையினால் துப்புரவு செய்யப்பட்டுள்ளது. தொன்மை வாய்ந்த நிலாவரை கிணற்றுப் பிரதேசம் கழிவுகளாலும் பற்றைகளாலும் சூழப்பட்டிருந்த நிலையில், நேற்று புதன்கிழமை (ஜனவரி 7, 2026) விசேட தூய்மிப்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டன. நிலாவரை பகுதி மிகவும் தூய்மையற்றதாகக் காணப்படுவதாக ஊடகங்கள் மற்றும் சமூக வலைத்தளங்களில் வெளியான செய்திகளைத் தொடர்ந்து, பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தலைமையில் துப்புரவுப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன. உடைந்திருந்த பார்வையாளர் இருக்கைகள் மற்றும் நுழைவாயில் கதவுகள் திருத்தப்பட்டு வர்ணம் தீட்டப்பட்டன. பொலித்தீன் பாவனைக்குத் தடை விதிக்கப்பட்டு, சுத்தத்தைப் பேணுவதற்கான அறிவுறுத்தல் பலகைகளும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. நீண்டகாலமாக பிரதேச சபையின் பராமரிப்பில் இருந்த இப்பகுதியில், 2021-2023 காலப்பகுதியில் தொல்லியல் திணைக்களம் விகாரை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனைத் தடுத்த தவிசாளர் நிரோஷ் மீது நீதிமன்றில் வழக்குகளும் தாக்கல் செய்யப்பட்டன. தொல்லியல் திணைக்களத்தின் தலையீடுகள் மற்றும் கட்டண அறவீட்டுத் தடைகள் காரணமாக, கடந்த காலங்களில் சபையினால் இப்பகுதியைச் சீராகப் பராமரிக்க முடியாத சூழல் நிலவியமை குறிப்பிடத்தக்கது. தற்போது இப்பகுதி மக்கள் முகம் சுளிக்காத வகையில் சுத்தப்படுத்தப்பட்டுள்ளதுடன், தமிழ் மக்களின் தொன்மையைப் பறைசாற்றும் வகையில் மீண்டும் ஒரு சுற்றுலாத் தளமாகப் பேணப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://globaltamilnews.net/2026/225914/
  16. வாகரையில் பெருமளவான ஆயுதங்கள் மீட்பு புதன், 07 ஜனவரி 2026 05:25 AM மட்டக்களப்பு வாகரை, சம்பு களப்பு வயல் பிரதேசத்தில் புதைக்கப்பட்டிருந்த பெருமளவிலான வெடிபொருட்களை வாகரை விசேட அதிரடிப்படையினர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை மீட்டுள்ளனர். இதன் போது, 38 ஆர் பிஜி குண்டுகள், 38 சார்ஜர்கள் மற்றும் ஐந்து கைக்குண்டுகளும் மீட்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் விவசாயச்செய்கையில் ஈடுபட்டிருந்த நபரொருவர், வயலைச்சுற்றி எல்லை வேலி அமைப்பதற்காகக் குழி தோண்டிய போது மர்மப்பொருட்கள் தென்படுவதைக்கண்டு வாகரை விசேட அதிரடிப்படையினருக்குத் தகவல் வழங்கியுள்ளார். அதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்குச்சென்ற அதிரடிப்படையினர் விசாரணைகளை மேற்கொண்டதுடன், அங்கு வெடிபொருட்கள் இருப்பதை உறுதிப்படுத்தினர். பின்னர் வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதியைப்பெற்று, பலத்த மழைக்கு மத்தியிலும் மீட்பு நடவடிக்கைகளை முன்னெடுத்தனர். குறித்த வெடிபொருட்கள் பொலித்தீன் பைகளில் சுற்றப்பட்டு மிகவும் நுட்பமான முறையில் ஆழமான குழியில் புதைக்கப்பட்டிருந்தன. கடந்த யுத்த காலத்தில் இப்பகுதியில் தமிழீழ விடுதலைப்புலிகளின் மருத்துவ முகாம் அமைந்திருந்ததாகவும், அவர்களாலேயே இவை புதைக்கப்பட்டிருக்கலாம் எனவும் படையினர் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். https://jaffnazone.com/news/54028
  17. ஹரிணிக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை - எதிர்க்கட்சி கைச்சாத்து ! By SRI January 7, 2026 கல்வி அமைச்சர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, திலித் ஜயவீர உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கையெழுத்திட்டுள்ளனர். இன்று (07) பாராளுமன்றத்தில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வைத்து அவர்கள் இப்பிரேரணையில் கையெழுத்திட்டனர். தற்போதைய அரசாங்கத்தின் கல்விச் சீர்திருத்தங்களில் சிறுவர்களின் மனநிலைக்குப் பொருத்தமற்ற விடயங்கள் காணப்படுவதாகவும், பாட விடயங்களில் பல பிழைகள் இருப்பதாகவும், இது குறித்து முறையாக நடவடிக்கை எடுக்கத் தவறியமைக்காகவும் கல்வி அமைச்சருக்கு எதிராக இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரப்பட்டுள்ளது. இந் நம்பிக்கையில்லாப் பிரேரணையில் முதலாவதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கையெழுத்திட்டார். https://www.battinews.com/2026/01/blog-post_953.html
  18. இந்திய இராணுவத் தளபதி இலங்கை வருகை இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி இலங்கைக்கு வருகை தந்துள்ளார். இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு நேற்று (06) இரவு நாட்டை வந்தடைந்த அவர், இலங்கை இராணுவத் தளபதி, பாதுகாப்புப் பிரதி அமைச்சர், பாதுகாப்புச் செயலாளர் உள்ளிட்ட பல சிரேஷ்ட இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளார். இச்சந்திப்புகளின் போது பயிற்சி ஒத்துழைப்பு, பிராந்திய பாதுகாப்பு மற்றும் இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து விரிவாகக் கலந்துரையாடப்படவுள்ளது. மேலும் தனது விஜயத்தின் போது, இந்திய இராணுவத் தளபதி பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர்கள் கல்லூரியின் அதிகாரிகளைச் சந்திக்கவுள்ளதோடு, புத்தல இராணுவ யுத்தக் கல்லூரியின் அதிகாரிகள் மற்றும் பயிலுநர்களையும் சந்திக்கவுள்ளார். அத்துடன், கொழும்பில் அமைந்துள்ள இந்திய அமைதி காக்கும் படை நினைவிடத்திற்குச் சென்று அஞ்சலி செலுத்தவும் அவர் திட்டமிட்டுள்ளார். https://adaderanatamil.lk/news/cmk3n265403mxo29nqx4v2a5d
  19. எம்.பி. அர்ச்சுனாவுக்கு நீதிமன்ற பிறப்பித்துள்ள உத்தரவு! யாழ் போதனா வைத்தியசாலை பணிப்பாளர் தொடர்பில் பொது வெளியில் அவதூறு வார்த்தைப் பிரயோகங்களை மேற்கொள்வதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் அர்சுனா இராமநாதனுக்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை உத்தரவை பிறப்பித்துள்ளது. யாழ் போதனா வைத்தியசாலையில் பணிப்பாளரின் அனுமதியின்றி அவரது அலுவலகத்திற்கு வந்த நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தனக்கு அவதூறு ஏற்படும் வகையில் வார்த்தை பிரயோகங்களை மேற்கொண்டமை மற்றும் தனது கடமைக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பிலும் யாழ்ப்பாண நீதிமன்றத்தில் வைத்திய சாலைப் பணிப்பாளரால் ஏற்கனவே வழக்கு தொடரப்பட்டது. குறித்த வழக்கு இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தபோது வழக்காளி சார்பில் சட்டத்தரணி கலாநிதி குமார வடிவேல் குருபரனும் எதிராளி சார்பில் சட்டத்தரணி கௌசல்யாவும் ஆயிராகினர். இருதரப்பினரும் ஏற்றுக்கொண்ட இணக்கப்பட்டின் அடிப்படையில் வழக்கு முடிவுறும் வரை யாழ் போதனா வைத்தியசாலைப் பணிப்பாளரை பொது வெளியில் அவதூறு ஏற்படுத்தும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா செயற்படுவதற்கு யாழ்ப்பாண நீதவான் நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது. https://www.samakalam.com/எம்-பி-அர்ச்சுனாவுக்கு-ந/
  20. வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கான நிலம், பாதையை விடுவிக்குமாறு ஆளுனருக்கு கடிதம்! வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கான நிலம் மற்றும் பாதையை விடுவித்து தருமாறு வடக்கு மாகாண ஆளுனர் நா.வேதநாயனுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வரலாற்று தொண்மைமிக்க வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் வழிபாட்டு செயற்பாடுகளுக்காக ஆலயம் அமைந்துள்ள பகுதியின் ஒரு ஏக்கர் காணியினை ஆலயத்திற்கு விடுவித்து தருமாறு ஆலய அறங்காவலர் சபையினர் தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார். அத்துடன் ஆலயத்திற்கு செல்லும் பாதையினை வவுனியா வடக்கு பிரதேசசபைக்கு விடுவித்து தரும் பட்சத்தில் குறித்த பாதையினை தம்மால் புனரமைக்க முடியுமென வவுனியா வடக்கு பிரதேசசபையினரும் தெரிவித்துள்ளனர். எனவேஇவ்விடயத்தில் நேரடியாக தலையீடு செய்து, வரலாற்று தொண்மைமிக்க ஆலயத்திற்கான காணி மற்றும் பாதையினை மிகவிரைவாக விடுவித்துத் தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். https://akkinikkunchu.com/?p=355085
  21. 10 மில்லியன் ரூபா மோசடி - மட்டக்களப்பை சேர்ந்த இளைஞனும் யுவதியும் கைது By Batticaloa சமூக ஊடகங்களில் ‘டயலொக் மெகா வாசனா’ என்ற போலி அதிஸ்டலாப சீட்டு மூலம் பொதுமக்களை ஏமாற்றி 10 மில்லியன் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) வடக்குப் பிரிவின் அதிகாரிகளால் ஆணொருவரும் பெண்ணொருவரும் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர். 29 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் பொலிஸார் தெரிவித்துன்னளர். சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர் https://www.battinews.com/2026/01/10_6.html
  22. மாகாணசபைத் தேர்தல் தொடர்பான நகர்வுகள் : நாடாளுமன்ற சபை அமர்வு இன்று ஆரம்பம் 06 January 2026 2026 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று(06) நடைபெறவுள்ளது. அதன்படி, இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வு இன்று முதல் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 9.30 மணிக்கு நாடாளுமன்ற சபை அமர்வு ஆரம்பிக்கப்படவுள்ளது. அதனையடுத்து, முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை கடற்றொழில் சார்ந்த விடயங்களும், கடற்றொழிலாளர் ஓய்வூதிய சமூகப் பாதுகாப்பு குறித்த விடயங்களும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. அத்துடன், மாகாண சபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்வதற்கான குழுவை நியமிப்பதற்கான பிரேரணையும் சபையில் சமர்பிக்கப்படவுள்ளது. அந்தக் குழு மாகாண சபை தேர்தல் தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://hirunews.lk/tm/439271/progress-regarding-the-provincial-council-elections-parliamentary-session-begins-today
  23. சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல் 06 January 2026 காங்கிரஸின் மூத்த தலைவரும், அக்கட்சியின் முன்னாள் தலைவருமான சோனியா காந்தி, திடீர் உடல் நலக்குறைவு காரணமாக டெல்லியில் உள்ள கங்கா ராம் மருத்துவமனையில் இன்று (06) அனுமதிக்கப்பட்டார். இன்று காலை சோனியா காந்தி வழக்கமான மருத்துவப் பரிசோதனைகளுக்காகவே கங்கா ராம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். எனினும், அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், அவரது தற்போதைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டு மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெறுமாறு அறிவுறுத்தினர். இதனைத் தொடர்ந்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது தீவிர மருத்துவக் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளார். மேலும், "அவருக்குத் தேவையான மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், தற்சமயம் அவர் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் இருக்கிறார்" எனவும் சோனியா காந்தியின் உடல்நிலை குறித்து மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அத்துடன், "அவரது உடல்நிலையில் பெரிய அளவிலான பாதிப்புகள் ஏதுமில்லை. சிகிச்சைக்குப் பின் அவர் விரைவில் நலமுடன் மருத்துவமனையிலிருந்து வெளியேறுவார்" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://hirunews.lk/tm/439321/sonia-gandhi-admitted-to-hospital-reportedly-under-intensive-care
  24. “500 பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை” இலங்கை பொலிஸ் துறையில் ஊழல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்காக எடுத்துவரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, நூற்றுக்கணக்கான அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் ஜெனரல் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார். அதன்படி, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தவறு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிகாரிகளில் பலர் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார். பஹலகம பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பொலிஸ்மா அதிபர் ஜெனரல் பிரியந்த வீரசூரியஇந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். மேலும் அவர் கூறியுள்ளதாவது, நேர்மையை நிலைநிறுத்தவும், தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதைத் தவிர்க்கவும் அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார், பொலிஸ் துறைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் ஏனைய பொது ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை விட மிக அதிகம், அத்துடன், அவை பொது நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். இந்த அதிகாரங்களை நீங்கள் தவறாகப் பயன்படுத்தினால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுவதுடன், படைக்குள் ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தை பெறவேண்டும் மேலும், பொலிஸ் துறையில் தற்போது 31,000 அதிகாரிகள் பற்றாக்குறை இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை மூன்று ஆண்டுகளுக்குள் 40,000 ஆக உயரும் என்றும் கூறினார். இதை நிவர்த்தி செய்ய, இந்த ஆண்டு 10,000 புதிய அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். https://www.tamilmirror.lk/செய்திகள்/500-பொலிஸ்-அதிகாரிகள்-மீது-ஒழுக்காற்று-நடவடிக்கை/175-370632
  25. முல்லைத்தீவு சிறுமி மரணம் - நிபுணர் குழுவின் அதிரடி அறிக்கை வெளியானது 05 January 2026 முல்லைத்தீவு சிலாவத்தை பகுதியில் 12 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் தொடர்பில் ஆரம்பக்கட்ட புலனாய்வு விசாரணையை நடத்திய நிபுணர்கள் குழுவின் இடைக்கால அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. 03 அம்ச பரிந்துரைகளுடன் குறித்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் சமன் பத்திரன எமது செய்தி சேவைக்குத் தெரிவித்தார். அதன்படி, சம்பவத்தின் போது, மருத்துவமனை அறிக்கையில் குளறுபடிகள் ஏற்பட்டிருக்கலாம் என கருதும் பட்சத்தில் அது தொடர்பில் காவல்துறையில் முறைப்பாடு செய்யுமாறு நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. அத்துடன், அவசர சிகிச்சைப் பிரிவில் குறித்த நேரத்தில் கடமையில் இருந்த தாதி உத்தியோகத்தரை, சாதாரண நோயாளர் விடுதிக்கு மாற்றுமாறும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. சம்பவம் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள மருத்துவரை, தனியாக செயற்பட விடாது, மற்றுமொருவரின் கண்காணிப்பின் கீழ் செயற்படுவதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் நிபுணர்கள் குழு பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரைகளை உடனடியாக நடைமுறைப்படுத்துமாறு முல்லைத்தீவு மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்தநிலையில், சம்பவம் தொடர்பான முழுமையான விசாரணை அறிக்கை எதிர்வரும் ஒருவார காலத்திற்குள் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்ப்பதாக, வடக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் எமது செய்தி சேவைக்குக் குறிப்பிட்டார். முழுமையான அறிக்கை கிடைத்ததன் பின்னரே முறைமைசார் விசாரணைக்கான பணிப்புரைகளை விடுவிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக கடந்த மாதம் 21 ஆம் திகதி உணவு ஒவ்வாமை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 12 வயது சிறுமி உயிரிழந்தார். சிறுமிக்கு உரிய முறையில் மருத்துவம் வழங்கப்படவில்லை என உறவினர்கள் குற்றஞ்சாட்டினர். இந்தநிலையில், சம்பவம் தொடர்பான விசாரணைக்காக, மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளரினால் நிபுணர்கள் குழுவொன்று நியமிக்கப்பட்டு, விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://hirunews.lk/tm/439109/mullaitivu-girls-death-expert-committees-action-report-released

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.