Everything posted by கிருபன்
-
தமிழ்நாட்டிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் - எப்படி நடைபெறும்?
தமிழக வாக்காளர்களாகும் ‘பிற மாநிலத்தவர்’? SIR வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் என்ன? ஏன் எதிர்ப்பு? 28 Oct 2025, 8:01 AM தமிழ்நாடு உள்ளிட்ட 12 மாநிலங்களில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் SIR- Special Intensive Revision மேற்கொள்ளப்பட இருக்கிறது. இதற்கான பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தொடங்கிவிட்டது. அதேநேரத்தில் தமிழகத்தில் உள்ளூர் வாக்காளர்கள் பெருமளவு நீக்கப்படாமல் இருக்க வேண்டும் என்பதில் அரசியல் கட்சிகளும் களத்தில் இறங்கி இருக்கின்றன. தேர்தல் ஆணையம், ஆளும் திமுக அரசு அடுத்தடுத்து அனைத்து கட்சிகளின் கூட்டத்தையும் கூட்டி உள்ளன. வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ஏன்? வாக்காளர் பட்டியலில் இந்திய குடிமக்கள் மட்டுமே இடம் பெறுதல் அவசியம் என்பது முதன்மை நோக்கம் ஒரே நபருக்கு பல மாநிலங்களில் வாக்குரிமை இருந்தால் நீக்கவும் இறந்தவர் பெயர் நீக்கவும் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் வாக்காளர்களாக இருந்தால் கண்டறிந்து நீக்கவும் இந்த தீவிர திருத்தம் மேற்கொள்ளப்படுகிறது. எப்படி மேற்கொள்ளப்படுகிறது? பூத்துகள் நிலையில் வீடுகளுக்கு செல்லும் அதிகாரிகள் விண்ணப்ப படிவங்களை கொடுத்துஅதில் கேட்கப்பட்ட விவரங்களை நிரப்பி வாங்கிக் கொள்வர். ஏற்கனவே வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றிருப்பவர்கள் படிவங்களை பூர்த்தி செய்தால் போதுமானது; ஆவணங்கள் தர தேவை இல்லை. வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதவர்கள், தேர்தல் அதிகாரிகள் கேட்கும் ஆவணங்களை கொடுக்க வேண்டும் பொதுவான பான் கார்டு, ரேஷன் கார்டு, 100 நாள் வேலைத் திட்ட கார்டு போன்றவற்றை ஆவணமாக அதிகாரிகள் ஏற்கமாட்டார்கள். அதற்கு பதிலாக ஆதார் அட்டை/ பிறப்புச் சான்றிதழ்/ கல்விச் சான்றிதழ்/ பாஸ்போர்ட்/ இருப்பிடச் சான்றிதழ் போன்ற ஆவணங்களை கொடுக்க வேண்டும் ஆதார் அட்டையை ஆவணமாக சேர்க்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதால் சேர்க்கப்பட்டது. முந்தைய வாக்காளர் பட்டியல் திருத்தம், அடையாள அட்டைகளை வைத்து மேற்கொள்ளப்பட்டது; தீவிர திருத்தம் என்பது குடியுரிமை சட்டத்தின் கீழ் சான்றிதழ்களை வைத்து மேற்கொள்ளப்படுகிறது இப்படி பெறப்படும் ஆவணங்கள் அடிப்படையில் வாக்காளர் பட்டியல் திருத்தி அமைக்கப்படும் அந்த பட்டியலில் திருத்தங்கள் இருப்பின் அதை சரி செய்து கொள்ள வாக்காளர்களுக்கு வாய்ப்பு தரப்படும்; இதனையடுத்து இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். தேர்தல் ஆணையம் கேட்கும் ஆவணங்கள் மத்திய, மாநில அரசுகள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட அடையாள அட்டை மத்திய அரசு, உள்ளாட்சி அமைப்புகள், வங்கிகள், அஞ்சல் நிலையங்கள், எல்ஐசி, பொதுத்துறை நிறுவனங்கள் வழங்கிய அடையாள அட்டைகள் பிறப்புச் சான்றிதழ் பாஸ்போர்ட் கல்விச் சான்றிதழ் நிரந்தர குடியுரிமை சான்றிதழ் வன உரிமை சான்றிதழ் ஓபிசி/ எஸ்சி/எஸ்டி அல்லது எந்த ஒரு ஜாதி சான்றிதழ் தேசிய குடியுரிமை ஆவணம் மாநில, உள்ளூராட்சி அமைப்புகளின் குடும்ப ஆவணங்கள் அரசால் நிலம் ஒதுக்கப்பட்டிருந்தால் அது தொடர்பான ஆவணம் ஆதார் அட்டை; இது அடையாளத்தை உறுதி செய்யக் கூடிய ஆவணம் மட்டும். ஆனால் ஒருநபரின் பிறப்பு மற்றும் குடியுரிமைக்கான ஆவணமாக ஆதார் ஏற்கப்படமாட்டாது. தமிழகத்தில் எப்போது தொடங்கும்? தமிழகத்தில் நவம்பர் 4-ந் தேதி முதல் வீடு வீடாக சென்று வாக்காளர் சரிபார்ப்பு பணி தொடங்கும் வாக்காளர் விவரங்கள் சரிபார்ப்பு டிசம்பர் 4-ந் தேதி வரை நடைபெறும் டிசம்பர் 9-ந் தேதி புதிய வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். பொதுமக்களிடம் இருந்து ஆட்சேபனைகள், திருத்தங்கள் டிசம்பர் 9 முதல் ஜனவரி 8 (2026) வரை பெறப்படும். வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு ஜனவரி 31 வரை மேற்கொள்ளப்படும் இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 7-ந் தேதி வெளியாகும். பீகாரில் ஏன் சர்ச்சை ஏற்பட்டது? தேர்தல் ஆணையம் கேட்டிருந்த ஆவணங்களை பலரால் தர இயலவில்லை ஆதார் அட்டையை கூட பலரும் தரவில்லை இதனால் பீகார் வாக்காளர் பட்டியல் திருத்தத்தின் போது 65 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டது சர்ச்சையானது. பிற மாநிலங்களில் வாக்காளர்களாகி இருந்தவர்களும் நீக்கப்பட்டனர். தமிழகத்தில் ஏன் அச்சம்? உரிய ஆவணங்கள் இல்லாமல் போனால் தமிழ்நாட்டின் ‘உள்ளூர்’ வாக்காளர்கள் கணிசமாக நீக்கப்படும் அபாயம் உள்ளது. அதே நேரத்தில், பிற மாநிலத்தவர்- அங்கு வாக்காளர் பட்டியலில் இடம் பெறாதோர், உரிய அடையாள அட்டை/ ஆவணங்கள் கொடுத்தால் தமிழக வாக்காளராக முடியும் இப்படி வெளிமாநிலத்தவர் லட்சக்கணக்கில் தமிழ்நாட்டு வாக்காளர்களாகும் போது தேர்தல் முடிவுகளில் மிகப் பெரும் தாக்கம் ஏற்படும் என்பது அரசியல் கட்சிகளின் கவலை. https://minnambalam.com/outsiders-becoming-tamil-nadu-voters-what-is-the-special-intensive-revision-sir-of-the-electoral-roll-and-why-the-opposition/#google_vignette
-
தவெகவில் புதிய நிர்வாகக் குழு அறிவித்த கையுடன் விஜய் அதிரடி உத்தரவு!
தவெகவில் புதிய நிர்வாகக் குழு அறிவித்த கையுடன் விஜய் அதிரடி உத்தரவு! 28 Oct 2025, 8:18 PM தவெக பணிகளை ஒருங்கிணைக்க 28 பேர் கொண்ட புதிய நிர்வாகக்குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், பனையூரில் நாளை (அக்டோபர் 28) நிர்வாக குழு கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கரூர் துயர சம்பவத்தைத் தொடர்ந்து தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் நடவடிக்கைகள் கடந்த ஒரு மாதமாக முற்றிலும் முடங்கின. இதனால் தவெக தொண்டர்கள் மட்டுமின்றி தவெக நிர்வாகிகளும் சரியான வழிகாட்டுதல்கள் இன்றி குழம்பி இருந்தனர். இந்த நிலையில் நேற்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னை மாமல்லபுரம் வரவழைத்து சந்தித்த தவெக தலைவர் விஜய், அவர்களுக்கு ஆறுதல் அளித்ததோடு, அனைத்துவிதமான உதவிகளையும் செய்ய தயாராக உள்ளதாகவும் வாக்குறுதி அளித்தார். இதனையடுத்து தனது கட்சிப் பணிகளை தீவிரப்படுத்தியுள்ளார் விஜய். அதன்படி கட்சியின் அன்றாட செயல்பாடுகள், பணிகள் ஆகியவற்றை ஒருங்கிணைக்க 28 பேர் அடங்கிய புதிய நிர்வாகிகள் குழுவை இன்று நியமித்து உத்தரவிட்டார். பொதுச் செயலாளர் ஆனந்த், தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா முதல் கழக உறுப்பினர் மரிய வில்சன் என 28 பேர் அதில் இடம்பெற்றுள்ளனர். தமது வழிகாட்டுதல் படி இயங்கும் இந்த புதிய குழுவுக்கு கட்சியினர் அனைவரும் ஒத்துழைய்பு வழங்க வேண்டும் என்றும் விஜய் கேட்டுக் கொண்டுள்ளார். அதன் தொடர்ச்சியாக கட்சியின் பொதுச்செயலாளரான ஆனந்த் முக்கிய அறிவிப்பை தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில், “தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக் குழுக் கூட்டம், நாளை காலை 10.00 மணிக்கு, பனையூர் தலைமை நிலையச் செயலகத்தில் நடைபெற உள்ளது. கழகத் தலைவர் அவர்களின் ஒப்புதலோடு நடைபெறும் இந்தக் கூட்டத்தில், நிர்வாகக் குழு உறுப்பினர்கள் அனைவரும் கலந்துகொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என அதில் தெரிவித்துள்ளார். https://minnambalam.com/tvk-management-meeting-will-be-held-in-panaiyur/
-
யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் சிரமதானப் பணிகள்!
யாழ்.கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லப் பகுதியில் சிரமதானப் பணிகள்! October 28, 2025 கோப்பாய் மாவீர்ர் துயிலுமில்லத்தில் சிறீலங்கா இனவழிப்பு இராணுவம் தொடர்ந்து நிலைகொண்டுள்ளநிலையில் தமிழீழத் தேசிய மாவீரர் நாள் 2025 நினைவேந்தலுக்காக தனியார் காணியில் துப்புரவுப் பணிகள் இடம்பெற்று வருகின்றது. https://www.errimalai.com/?p=105889
-
தமிழ் அமைச்சர்களால் வடக்கு மீனவர் சமூகம் பிளவுண்டுள்ளது; வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம்
தமிழ் அமைச்சர்களால் வடக்கு மீனவர் சமூகம் பிளவுண்டுள்ளது; வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாசம் இந்திய இழுவைப்படகுகளின் அத்துமீறிய சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கை மற்றும் உள்ளூரில் தடைசெய்யப்பட்ட தொழில்களினால் எமது கடல் வளம் பாதிக்கப்படுவதுடன் எமது வாழ்வாதாரம் கேள்விக்குறியாக்கப்பட்டு வருவதாக வடமராட்சி வடக்கு கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கங்களின் சமாச தலைவர் தம்பிராசா சந்திரதாஸ் தெரிவித்தார். பருத்தித்துறை விநாயக முதலியார் வீதியில் உள்ள யாழ். வடமராட்சி ஊடக இல்லத்தில் அவர் நடத்திய ஊடக சந்திப்பின் போது வடக்கு மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள், சமகால நிலைமைகள் தொடர்பில் கருத்து தெரிவிக்கையில் இவ்வாறு தெரிவித்தார். இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில், வடமராட்சி கிழக்கு பிரதேசத்தில் அதிகளவில் சுருக்குவலை, கணவாய் குழைகளை கடலில் போடுவது உள்ளிட்ட தடைசெய்யப்பட்ட தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர். அதனால் வடமராட்சி வடக்கு கடற்பரப்பை நம்பி இருக்கும் மீனவர்களது வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகிறது. தான் தான் வாழ்ந்தால் போதும் என்ற குறுகிய மனப்பான்மையுடன் எம்மவர்கள் நடப்பதன் காரணமாகவே தடைசெய்யப்பட்ட தொழில்களுக்கு உடந்தையாக செயற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வாறான நிலையில் எதிர்கால சந்ததிக்கு எமது கடல் வளத்தை பாதுகாக்கும் அக்கறை இல்லாது போய்விட்டது. இது விடயத்தில் ஆட்சிகள் மாறினாலும் அதிகாரிகளது மெத்தனப்போக்கு மாற்றமின்றியே தொடர்ந்து வருகின்றது. கடற்றொழில் அமைச்சராக தமிழர்கள் வந்தபின்னரே வடக்கு மீனவர் சமூகம் பிளவுண்டுபோயுள்ளது. தமிழ் அமைச்சர்களாக முன்னர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் தற்போது சந்திரசேர் தரப்புகளின் அரசியல் ஆதிக்கம் சங்கங்கள் சமாசங்களுக்குள் ஊடுருவியதன் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது. அவர்கள் சார்ந்த அரசியல் ஆதாயங்களுக்காக மீனவர் சமுதாயத்தை பயன்படுத்தி வருகின்றனர். சங்களில் பொறுப்புகளில் உள்ள பலர் மீனவ சமூதாயத்தின் நலன்களை கைவிட்டு சுயநல காரணங்களுக்காக இவ்வாறான தரப்புகளின் கட்டுப்பாட்டில் இயங்கி வருகின்றனர். இதனால் சங்களை சமாசத்தினால் கட்டுப்படுத்தவோ வழிநடத்தவோ முடியாதுள்ளது. தொடர்ச்சியாக கடற்றொழில் வருவாயேதும் இன்றி ஏமாற்றமாகி வருவதன் காரணமாக எமது இளைஞர் சமூகம் வெளிநாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றமை எதிர்காலம் குறித்த அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இதே நிலை நீடித்தால் இன்னும் சில ஆண்டுகளில் எமது கடலிலே மீன்கள் காணாமல் போகும் நிலை ஏற்படும். தமிழ்நாட்டில் தேர்தல் அரசியலுக்காக கச்சத்தீவு விவகாரம் அங்குள்ள அரசியல் கட்சிகளால் கையாளப்பட்டு வருகிறது. ஏதாவது தேர்தல் வந்தால் தமது அரசியல் நலன்களுக்காக அதனை பேசுவார்கள். மீனவர் பிரச்சினை அரசியலாக்கப்படுவதன் காரணமாகதான் தீர்வு காண்பதில் தொடர்ந்தும் இழுபறி நிலை ஏற்பட்டுள்ளது. எங்களது கடலுக்குள் வராதீர்கள் என நாங்கள் வலியுறுத்துவது எவ்வாறு தவறாகும். ஆனால் அவ்வாறு நாங்கள் கூறுவது திட்டமிட்டு திசைதிருப்பப்பட்டு வருகிறது. 1983 க்கு முன்னர் இந்திய மீனவர்கள் எமது கடலுக்குள் வந்ததில்லை. கடல்வலய தடைச்சட்டம் காரணமாகவே இந்திய மீனவர்கள் வந்து எமது கடல் வளத்தை சுரண்டிச்சென்றனர். கைது செய்யப்படும் இந்திய மீனவர்கள் மீது இறுக்கமான சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதில்லை. அதன் காரணமாகவே மீண்டும் மீண்டும் சட்டவிரோதமாக எல்லை தாண்டி வருகின்றனர். அதனை முற்றுமுழுதாக தடுத்த நிறுத்த அரசாங்கம் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். மீனவர் சமூகத்தின் பிரச்சினைகளுக்காக நேர்மையாக குரல்கொடுத்து செயற்படுவதற்கு எமது பிரதிநிதிகளும் தயாராக இல்லை. தத்தமது அரசியல் தேவைகளுக்காக மீனவர் பிரச்சினையில் தலையிடுவதோடு சரி. நிலையான தீர்வுக்காக ஒருவரும் துணைநிற்பதும் இல்லை, குரல்கொடுப்பதும் இல்லை. எமது பிரதிநிதிகளே இவ்வாறு இருப்பதன் காரணமாகவே அரசாங்கத்தில் உள்ளவர்களும் வடக்கு மீனவர் பிரச்சினையில் மாற்றான் தாய் மனப்பான்மையுடன் செயற்பட்டுவருதற்கு காரணமாக அமைகிறது. சங்களை சமாசத்தினால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு அரசியல் தலையீடு அதிகரித்துள்ளது. இதுதான் இன்று வடக்கு மீனவர்களாகிய எமது நிலை. எம்மிடையே உள்ள ஒற்றுமையீனமே இதற்கு காரணம். உடனடியாக மீனவர் சமுதாயம் விழிப்படைந்து ஒன்றுபட்டு தீவிரமாக போராட முன்வர வேண்டும். இல்லாவிடில் கடல் வளம் அழிக்கப்பட்டு எமது வாழ்வாதாரமும் இல்லாமல் போகும் என அவர் கூறினார். https://akkinikkunchu.com/?p=346534
-
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை இன்று!
ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான வழக்கு மீதான விசாரணை இன்று! 29 Oct, 2025 | 11:42 AM முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பொதுச் சொத்துக்கள் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றில் இன்று புதன்கிழமை (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்த வழக்கு தொடர்பில் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் திகதி சமூகமளித்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, கைது செய்யப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/228949
-
மீண்டும் வெடித்த போர்: இஸ்ரேல் தாக்குதலில் 33 பாலஸ்தீனியர்கள் பலி
மீண்டும் வெடித்த போர்: இஸ்ரேல் தாக்குதலில் 33 பாலஸ்தீனியர்கள் பலி 29 October 2025 அமெரிக்காவின் மத்தியஸ்தத்தில் ஏற்பட்ட போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறியதாகக் கூறி இஸ்ரேல் நடத்திய தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்களில் காசாவில் குறைந்தது 33 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவத்தினரை ஹமாஸ் தாக்கியதாகவும், உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களைத் திருப்பி அளிப்பதற்கான ஒப்பந்த விதிகளை ஹமாஸ் மீறியதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து, இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, "சக்திவாய்ந்த தாக்குதல்களை" நடத்த உத்தரவிட்டதால், காசா நகரம், கான் யூனிஸ் உள்ளிட்ட பல பகுதிகளில் வீடுகள், பாடசாலைகள் மற்றும் குடியிருப்புகள் இலக்கு வைக்கப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த தாக்குதல்களை ஹமாஸ் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன், இஸ்ரேலிய படையினர் தாக்கப்பட்டமைக்கு தங்களுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்றும், போர் நிறுத்தத்துக்கு தாங்கள் கட்டுப்படுவதாகவும் தெரிவித்துள்ளது. சிவில் பாதுகாப்பு நிறுவனத்தின் கூற்றுப்படி, தொடர்ச்சியான குண்டுவீச்சு மற்றும் உபகரணப் பற்றாக்குறையால் மீட்புப் பணிகள் மிகவும் சிரமமாக உள்ளதாகவும், சப்ரா மற்றும் கான் யூனிஸ் போன்ற பகுதிகளில் நடத்தப்பட்ட தாக்குதல்களில் சிறுவர்கள் மற்றும் பெண்கள் உட்பட பலர் கொல்லப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிருடன் உள்ள பணயக்கைதிகளைத் திருப்பி அளிக்கும் முதல் கட்ட ஒப்பந்தம் நிறைவடைந்த நிலையில், உயிரிழந்த பணயக்கைதிகளின் உடல்களைத் திருப்பி அளிப்பதில் ஹமாஸ் விதிமுறைகளை மீறியதாக இஸ்ரேல் குற்றம் சாட்டியுள்ளது. இதனால் பணயக்கைதிகள் விவகாரத்தில் பதற்றம் நீடிக்கிறது. https://hirunews.lk/tm/427873/war-breaks-out-again-33-palestinians-killed-in-israeli-attack
-
இஷாராவுக்கு உதவிய பெண் சட்டத்தரணியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி!
இஷாராவுக்கு உதவிய பெண் சட்டத்தரணியை தடுத்து வைத்து விசாரிக்க அனுமதி! கணேமுல்ல சஞ்சீவ படுகொலைச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணியை 72 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அனுமதி கிடைத்துள்ளது. குறித்த கொலைச் சம்பவம் தொடர்பாக குறித்த பெண் சட்டத்தரணி நேற்றைய தினம் 28 ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டார். கணேமுல்ல சஞ்சீவவை படுகொலை செய்வதற்காக வந்த இஷார செவ்வந்திக்கு, கைத்துப்பாக்கியை மறைத்து எடுத்து வருவதற்காக 'தண்டனைச் சட்டக்கோவை' நூலின் பிரதியொன்றை இந்தச் சட்டத்தரணியே வழங்கியுள்ளார் எனக் குறிப்பிடப்படுகின்றது. இந்தச் சட்டத்தரணி நேற்று இரவு கடவத்தை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த பெப்ரவரி 19 ஆம் திகதி, வழக்கு விசாரணையொன்றிற்காக சிறைச்சாலை அதிகாரிகளால் புதுக்கடை நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட கணேமுல்ல சஞ்சீவ, அந்த நீதிமன்ற வளாகத்திற்குள்ளேயே சுட்டுக் கொல்லப்பட்டார். சம்பவத்தின் துப்பாக்கிதாரி அன்றைய தினமே பாதுகாப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட போதிலும், துப்பாக்கியை நீதிமன்ற வளாகத்திற்குள் கொண்டு வந்த இஷார செவ்வந்தி என்பவரைக் கைது செய்வதற்கு பாதுகாப்புப் பிரிவினர் கடும் பிரயத்தனம் மேற்கொண்டனர். அவர் கடந்த 14ஆம் திகதி நேபாளத்தில் தங்கியிருந்தபோது கைது செய்யப்பட்டார். இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பில் இஷார செவ்வந்தி தப்பிச் செல்வதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்த பலரும் தற்போது கைது செய்யப்பட்டுள்ளனர். https://newuthayan.com/article/இஷாராவுக்கு_உதவிய__பெண்_சட்டத்தரணியை__விசாரிக்க__CIDக்கு_அனுமதி!
-
யாழில் டெங்கு அபாயம் அதியுச்ச நிலை!
யாழில் டெங்கு அபாயம் அதியுச்ச நிலை! நாட்டின் டெங்குத் தொற்றின் அபாயம் அதிகளவில் உள்ள பகுதிகளில், யாழ்ப்பாணம் மாவட்டமும் ஒன்றாகக் காணப்படுகின்றது என்று தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. இது தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: இந்த வருடத்தின் ஜனவரி மாதம் தொடக்கம் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் 41 ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெங்குத்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களில் 22 பேர் சிகிச்சையின் போது உயிரிழந்துள்ளனர். தற்போது 11 மாவட்டங்கள் டெங்கு அபாயம் அதிகம் உள்ள பகுதிகளாகக் காணப்படுகின்றன. இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, யாழ்ப்பாணம், இரத்தினபுரி, கண்டி, மட்டக்களப்பு, குருநாகல், கேகாலை ஆகிய மாவட்டங்கள் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. பருவகால மழைவீழ்ச்சியைத் தொடர்ந்து 22 மாவட்டகளில் நுளம்பு பரவல் தீவிரமடைந்துள்ளது. எனவே, பொதுமக்கள் மிகவும் அவதானமாகச் செயற்பட வேண்டியது அவசியம் என்றுள்ளது. https://newuthayan.com/article/யாழில்_டெங்கு_அபாயம்_அதியுச்ச_நிலை!#google_vignette
-
வன்னிப் பிரதேச கால்நடை மருத்துவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாகன வசதிகள்!
வன்னிப் பிரதேச கால்நடை மருத்துவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாகன வசதிகள்! adminOctober 29, 2025 வன்னிப் பிரதேச கால்நடை மருத்துவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாகன வசதிகள் செய்து வழங்குவதற்கும் ஆளணிகளை வருடாந்த இடமாற்றத்தில் நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண கால்நடை மருத்துவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் மற்றும் அபிவிருத்தி முன்மொழிவுகள் தொடர்பான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில், நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அதன் போதே ஆளுநர் அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , வடக்கு மாகாணத்தைப் பொறுத்தவரையில் விவசாயம், மீன்பிடி ஆகியனவற்றுக்கு அடுத்த நிலையில் கால்நடை வளர்ப்பு உள்ளது. கால்நடைகளை நம்பித்தான் பல குடும்பங்களின் வாழ்வாதாரமும் உள்ளது. அந்தக் குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தில் மாற்றத்தை ஏற்படுத்தவேண்டும். செய்தவற்றையே திரும்பத் திரும்பச் செய்து கொண்டிருக்காமல் புத்தாக்கமாக சிந்தித்து அடுத்த ஆண்டு செயற்படவேண்டும். வன்னி போன்ற பிரதேசங்களில் மக்கள் தங்கள் கால்நடைகளுடன் அலைந்து திரிந்து சிகிச்சையளிப்பதில் சிரமங்கள் உள்ளன. கால்நடை மருத்துவர்கள் அர்ப்பணிப்புடன் செயலாற்றவேண்டும், என ஆளுநர் தெரிவித்தார். இதன் பின்னர் கால்நடை மருத்துவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பான கலந்துரையாடப்பட்டது. ஆளணிப் பற்றாக்குறை மற்றும் வாகனப் பிரச்சினை என்பன முன்வைக்கப்பட்டது. அத்துடன் கால்நடைகளுக்கான மருந்து வழங்கலுக்கு மாகாண ரீதியிலான பொறிமுறையை உருவாக்குமாறும் கோரிக்கை முன்வைக்கப்பட்டது. வன்னிப் பிரதேச கால்நடை மருத்துவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வாகன வசதிகள் செய்து வழங்குவதற்கும் ஆளணிகளை வருடாந்த இடமாற்றத்தில் நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் குறிப்பிட்டார். அதேபோன்று கால்நடைகளுக்கான மருந்து வழங்கலுக்கு, கால்நடை மருத்துவர்களையும் பொறிமுறையை முன்மொழியுமாறு ஆளுநர் கேட்டுக்கொண்டார். https://globaltamilnews.net/2025/222057/
-
‘பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை’ சூரனை வரவேற்ற இலங்கை இராணுவம்
‘பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை’ சூரனை வரவேற்ற இலங்கை இராணுவம் October 28, 2025 1:50 pm தற்போது பிரான்சில் வசிக்கும் இனோஷன் சூரன், ஐரோப்பாவிலிருந்து ஆசியா வரை 10,000 கிலோமீட்டர் தூரத்தை ” பிரான்சில் இருந்து யாழ்ப்பாணம் வரை” என்ற அவரது விசேட சைக்கிள் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தார். 2025 செப்டம்பர் 01 ஆம் திகதி பிரான்சிலிருந்து தனது பயணத்தைத் தொடங்கிய சூரன், கடுமையான சவால்களுக்கு மத்தியில் ஜேர்மனி, துருக்கி, இந்தியா உள்ளிட்ட 13 நாடுகள் வழியாகப் பயணம் செய்து கடந்த வியாழக்கிழமை (23) யாழ்ப்பாணத்தை வந்தடைந்தார். அவரது முயற்சியினை பாராட்டும் வகையில் யாழ்ப்பாணத்தில் ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டதுடன், இலங்கை இராணுவத்தினரால் அதில் அவர் வரவேற்கப்பட்டார். பிரான்ஸ், ஜேர்மனி, ஆஸ்திரியா, ஸ்லோவாக்கியா, ஹங்கேரி, சேர்பியா, பல்கேரியா, துருக்கி, ஜோர்ஜியா, கசகஸ்தான், உஸ்பெகிஸ்தான், ஆப்கானிஸ்தான், இந்தியா ஊடாக இவர் பயணம் செய்து யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார். இந்தப் பயணத்தின் நோக்கம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், யாழ்ப்பாணத்தின் விசேட கலாசார முக்கியத்துவம், மரபுகளை உலகிற்கு வெளிப்படுத்துவதும், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு யாழ்ப்பாணத்தை ஒரு அழகான இடமாக ஊக்குவிப்பதும், நல்லிணக்கத்தை வளர்ப்பதும், சர்வதேச சமூகங்களுடனான சமூக மற்றும் கலாசார உறவுகளை வலுப்படுத்துவதும் தனது நோக்கம் என்று வலியுறுத்தினார். இதேவேளை, உலகளாவிய பயணம் தொடர்பான லொன்லி பிளானட் (Lonely Planet) சஞ்சிகையானது, 2026 ஆம் ஆண்டிற்கான உலகளாவிய ரீதியில் பார்வையிட சிறந்த 25 இடங்களில் ஒன்றாக யாழ்ப்பாணத்தை பெயரிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும். https://oruvan.com/sri-lankan-army-welcomes-sooran-from-france-to-jaffna/
-
கரூர் சம்பவம் – கண்ணீர்மல்க மன்னிப்பு கோரினார் விஜய்
கரூர் சம்பவம் – கண்ணீர்மல்க மன்னிப்பு கோரினார் விஜய் கரூர் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் அருகே உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் சந்தித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ஆறுதல் கூறினார். கூட்ட நெரிசல் சம்பவத்துக்காகவும், கரூருக்கு நேரில் வந்து ஆறுதல் கூற இயலாததற்காகவும் அவர்களிடம் விஜய் மன்னிப்பு கோரிஉள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாகவும் கூறியுள்ளார். கரூரில் கடந்த செப்-27ம் திகதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சாரக் கூட்டத்தில், நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். ஏராளமானோர் படுகாயமடைந்தனர். இதுதொடர்பாக உச்ச நீதிமன்ற உத்தரவின்பேரில் சிபிஐ விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில், கரூர் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை மாமல்லபுரம் பகுதியில் உள்ள தனியார் நட்சத்திர விடுதியில் விஜய் சந்தித்து ஆறுதல் கூறும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. இதற்காக, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் நேற்று முன்தினம் 2 பேருந்துகள் மூலம் அழைத்து வரப்பட்டு விடுதியில் தங்க வைக்கப்பட்டனர். உயிரிழந்தவரின் குடும்பத்தைச் சேர்ந்த 5 நபர்களுக்கு மட்டுமே அனுமதிவழங்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில், நேற்று காலை விஜய் விடுதிக்கு வந்து, உயிரிழந்த 37 குடும்பத்தில் இருந்து 235 பேரை சந்தித்து ஆறுதல் கூறினார். இதில் உயிரிழந்த அஜிதா என்ற கல்லூரி மாணவியின் குடும்பத்தில் இருந்து மட்டும் யாரும் வரவில்லை. ஒவ்வொரு குடும்பத்தினரையும் தனித்தனியாக சந்தித்து சுமார் 5 நிமிடம் பேசி ஆறுதல் கூறியதாக கூறப்படுகிறது. கூட்ட நெரிசல் சம்பவத்துக்காகவும், கரூருக்கு நேரில் வந்து ஆறுதல் கூற இயலாததற்காகவும் அனைவரிடமும் விஜய் கண்ணீர்மல்க மன்னிப்பு கோரி உள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தன்னால் முடிந்த அனைத்து உதவிகளையும் செய்யத் தயாராக இருப்பதாக விஜய் கூறியதாகவும் தெரிகிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் வரையிலான மருத்துவக் காப்பீடு தவெக சார்பில் வழங்கப்படும் என்றும் விஜய் உறுதி அளித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில், ஆதவ் அர்ஜூனா உட்பட பல்வேறு நிர்வாகிகள் கலந்துகொண்டனர். நிகழ்ச்சி நிறைவடைந்ததும் அனைவரும் மீண்டும் இரண்டு பேருந்துகள் மூலம் கரூர் பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். நிகழ்ச்சியின்போது, விடுதி வளாகத்தில் பாதுகாப்புக்காக ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன. https://akkinikkunchu.com/?p=346422
-
மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன் - டொனால்ட் ட்ரம்ப்
மூன்றாவது முறையாகவும் ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன் - டொனால்ட் ட்ரம்ப் 28 Oct, 2025 | 10:27 AM அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எதிர்வரும் 2028 ஆம் ஆண்டு மூன்றாவது முறையாக ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார். வெள்ளை மாளிகையின் முன்னாள் மூலோபாயவாதி ஸ்டீவ் பானனின் அரசியலமைப்பிற்கு முரணாக மூன்றாவது முறையாக போட்டியிட வேண்டும் என்ற சமீபத்திய பரிந்துரை தொடர்பில் ஏர் போர்ஸ் ஒன் விமானத்தில் பயணித்துக் கொண்டிருந்தபோது ஊடகங்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “அதைச் செய்ய நான் மிகவும் விரும்புகிறேன். என்னுடைய ஆதரவாளர்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத அளவுக்கு சிறப்பாக உள்ளன” என தெரிவித்தார். எனினும், மீண்டும் போட்டியிடுவது பற்றி "உண்மையில் யோசிக்கவில்லை" எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/228866
-
யாழ். செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரி போராட்டம்
யாழ். செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரி போராட்டம் 28 Oct, 2025 | 01:02 PM செம்மணிப் புதைகுழிக்கு நீதிகோரி, யாழ்ப்பாணம் செம்மணி வளைவுக்கு அருகில் செவ்வாய்க்கிழமை (28) போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இலங்கை மெதடிஸ்த திருச்சபை மற்றும் நீதிக்கும் சமாதானத்துக்குமான பணிக்குழு ஆகியவை இணைந்து முன்னெடுத்த போராட்டத்தில் மத தலைவர்கள் , பாதிக்கப்பட்ட மக்கள் கலந்து கொண்டு செம்மணி புதைகுழிக்கு நீதி கோரி போராட்டத்தில் ஈடுபட்டனர். https://www.virakesari.lk/article/228885
-
முல்லைத்தீவு ஆழிவனம் இயற்கை சுற்றுலாத்தலத்தை மேம்படுத்த ரவிகரன் கள விஜயம்
முல்லைத்தீவு ஆழிவனம் இயற்கை சுற்றுலாத்தலத்தை மேம்படுத்த ரவிகரன் கள விஜயம் 28 Oct, 2025 | 01:23 PM முல்லைத்தீவு - முள்ளிவாய்க்கால் பகுதியில் அமைந்துள்ள ஆழிவனம் இயற்கை சுற்றுலாத்தளத்துக்கு நேற்று (27) வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் நேரடியாகச் சென்று, அப்பகுதியை பார்வையிட்டார். நேரடி கள விஜயம் செய்த ரவிகரன், ஆழிவனம் சுற்றுலாத்தளத்தின் மேம்பாடு தொடர்பிலும் அவ்வேளை அரச அதிகாரிகளுடன் கலந்துரையாடினார். இந்த கள விஜயத்தில் கரைதுறைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் இராஜயோகினி ஜெயக்குமாரும் இணைந்துகொண்டிருந்தார். https://www.virakesari.lk/article/228887
-
ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி?
ஹிஸ்புல்லாஹ் தங்க மோசடியில் பாதிக்கப்பட்டதாக வந்த செய்தி: ஊடகப் பிரிவு மறுப்பு 27 October 2025 தங்க வியாபாரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் ஏமாற்றப்பட்டதாக கானா ஊடகங்களில் வெளிவந்ததாகக் கூறப்பட்டு, பல ஊடகங்களில் வெளியான செய்தியை அவரது ஊடகப் பிரிவு முற்றிலும் மறுத்துள்ளது. அந்தச் செய்தியில் எவ்விதமான உண்மைத்தன்மையும் இல்லை என்றும் நாடாளுமன்ற உறுப்பினரின் ஊடகப்பிரிவு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது. ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில், உண்மைச் சம்பவம் குறித்து பின்வருமாறு விளக்கப்பட்டுள்ளது: கலாநிதி எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ் வியாபார நோக்கத்திற்காக சவூதி அரேபியாவைச் சேர்ந்த நண்பர்களுடன் கானா நாட்டிற்குச் சென்றிருந்தார். அங்கே சிலர் மோசடி செய்ய முயன்றதை அறிந்த அவர், உடனடியாக இது குறித்து காவல்துறையில் முறைப்பாடு செய்தார். அதனைத் தொடர்ந்து, ஏமாற்ற முயன்ற 11 பேரையும் காவல்துறையினர் கைது செய்தனர். இந்தச் சம்பவம் தவிர, கலாநிதி ஹிஸ்புல்லாவுக்கும் இந்த மோசடி விவகாரத்திற்கும் வேறு எந்த தொடர்பும் இல்லை என்றும் ஊடகப் பிரிவு வலியுறுத்தியுள்ளது. https://hirunews.lk/tm/427651/media-unit-denies-reports-that-hezbollah-was-a-victim-of-a-gold-scam
-
முளையில் கிள்ளாததை வெட்டிவிடுதல் - லக்ஸ்மன்
முளையில் கிள்ளாததை வெட்டிவிடுதல் - லக்ஸ்மன் முளையிலேயே கிள்ளப்படாத விடயங்களான இனத்துவேசம், பேரினவாதம், பாரபட்சம், அடக்குமுறைகள், ஆதிக்கத்தன்மை போன்றவற்றினை நன்றாக வளர்ந்துவிட்ட பின்னர் சரிசெய்து விடலாம் என்று எண்ணங்கொள்வது சாத்தியத்துக்குட்படுத்த முடியாதது என்பதே யதார்த்தம். இந்த யதார்த்தத்தைக் கடந்து செல்ல நினைப்பது குதிரைக் கொம்பானது. இதனையே மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் செய்ய நினைக்கிறது. காலம் கடந்த பின்னர் அதனையும் பூசி மெழுக நினைப்பதல்ல, முனைவது, நல்லிணக்கத்தை ஏற்படுத்த முயல்வது எந்த அடிப்படையில் நாட்டில் இலங்கையர் என்ற உணர்வை ஏற்படுத்தும் என்பதுதான் இந்த இடத்திலுள்ள கேள்வி. மக்கள் விடுதலை முன்னணியினர் இவ்வாறான கொள்கையை தேர்தல் காலத்திலோ அதற்கு முன்னரோ வெளிப்படையாக முன்வைத்திருக்கவில்லை. கொள்கையை வெளிப்படுத்தாமல், முன்வைக்காமல் தேர்தல் முடிந்து ஆட்சிக்கு வந்தபின்னர் வெளிப்படுத்துவது இவர்களுடைய இதய சுத்தியை அல்லது உள் மனச்செயற்பாட்டை சந்தேகத்துக்கே உட்படுத்துகிறது எனலாம். பாராளுமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, இலங்கை தொடர்பான வெளிப்புற முயற்சிகள் தற்போதைய தேசிய செயற்பாடுகளுக்கு எதிரான நடவடிக்கையாக அமையும் என்பதுடன், சமூகங்களை தேவையில்லாமல் துருவப்படுத்தும் தலையீடு தொடர்பாக மனித உரிமைகள் பேரவையின் அறிக்கையில் உள்ள முடிவுகள் மற்றும் பரிந்துரைகளுடன் அரசாங்கம் உடன்படவில்லை என்று தெரிவித்திருக்கிறார். இது ஒரு வெறும் கருத்து என்ற கணக்கில் விட்டுவிடக்கூடிய கருத்தல்ல. அதே நேரத்தில் வெறுமனே இலங்கையில் மனித உரிமை மீறல்கள் மாத்திரமே நடைபெற்றிருக்கின்றன. அவற்றினை விசாரித்துவிட்டால் நாட்டிலுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைத்துவிடும் போன்றதான கருத்துநிலையில் பிரதமருடைய உரை அமைந்திருந்தது. திட்டமிட்டவகையிலான குடியேற்றங்கள், பௌத்த மயமாக்கல் செயற்றிட்டங்கள், கல்வியில் தரப்படுத்தல், விகிதாசார முறைப்படுத்தல் என கட்டமைக்கப்பட்ட வகையில் முன்னெடுக்கப்பட்ட செயற்பாடுகள் இலங்கையில் நடைபெற்றன. இப்போதும் இச் செயற்பாடுகள் முற்றுமுழுதாக நிறுத்தப்பட்டுவிட்டன என்று உறுதியாக கூறமுடியாத நிலைமையே தொடர்கிறது. ஆயுத யுத்தம் தொடங்கப்பட்டது முதல் வெவ்வேறு வழிமுறைகள் மூலம் இவ்வாறான செயற்றிட்டங்கள் நகர்த்தப்பட்டிருக்கின்றன. யுத்த ஓய்வுக்குப் பின்னரும் வேறு பல வடிவங்களாக நடைபெற்றன. அந்த வகையில்தான் இப்போதும் இலங்கையின் அரசாங்கத்தில் நம்பிக்கையற்ற தமிழர்கள் சர்வதேச பிரசன்னம், சர்வதேச போர்க்குற்ற விசாரணை, சர்வதேச நீதி வழங்கலைக் கோருகின்றனர். இதனை தவறென்றோ, பிழையென்றோ யாரும் கூறுவார்களானால் அவர்கள் கடந்தகால அனுபவத்தில் இதுவரை எதனையும் கற்றுக்கொள்ளவில்லை என்ற முடிவுக்கே வரமுடியும். அதனால்தான், பௌத்த மயமாக்கல் நிறுத்தப்படவேண்டும் என்ற அடிப்படையில் பௌத்த மயமாக்கல் எதிர்ப்பைத் தமிழ்த் தரப்பு கையில் வைத்திருக்கிறது. அதே போன்றுதான் இலங்கையின் பேரினவாதத் தரப்பில் நம்பிக்கையற்றுப் போனமையினாலேயே இனப்பிரச்சினைக்கான தீர்வைப் பெற்றுக் கொள்வதற்கு சர்வதேசத்தின் பிரசன்னத்தையும் சர்வதேச நடைமுறைகளைகளையும் கோருகின்றனர். இதனைக் கைவிடுமாறு கோருவது எந்தவிதத்திலும் நியாயமாகாது என்பதும் நிலைப்பாடு. அத்துடன் அதற்கான உரிமையும் யாருக்குமில்லை என்பது தமிழர்களின் நிலைப்பாடு. காலம் கடத்தல்களையே ஒவ்வோர் அரசாங்கமும் கைக்கொள்வதற்குக் காரணம் எதிர்கால சந்ததியினை இலக்காகக் கொண்டது என்பது வெளிப்படையானதாக இருக்கின்ற நிலையில், யதார்த்தத்தை மறந்து தமிழர்கள் தங்களது நிலைப்பாடுகளைக் கைவிட்டு யதார்த்த அரசியலைப் பேச வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் ஜே.வி.பி. இருப்பது கவலைக்குரியது. அதற்காக அவர்கள் முன்வைப்பது புதிய அரசியல் யாப்பாக இருக்கிறது. இருந்தாலும் அது தமிழ் மக்களுக்கு சமத்துவமான நடைமுறையை ஏற்படுத்துவது எந்த அடிப்படையைக் கொண்டிருக்காது என்பது வெளியே வராத ஒன்றாக இருந்து வருகிறது. புதிய அரசியல் யாப்பின் ஊடாக இனப்பிரச்சினைத் தீர்வு உள்ளிட்ட அனைத்துப் பிரச்சினைகளுக்கும் உரிய தீர்வை காணமுடியும் என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருக்கின்ற ஜே.வி.பி.யினர் இது தொடர்பில் கலந்துரையாடல்களை முன்னெடுத்து வருவதாக தகவல்கள் கசிந்து வருகின்றன. இந்தக் கலந்துரையாடல்களின் தீர்மானமானது எந்தவகையிலும் தமிழர்கள் எதிர்பார்க்கின்ற விடயங்களைத் தொட்டுவிடவில்லை என்பதே உண்மை. கடந்த ஒரு வருட கால ஆட்சியில் இதுவரையில் எட்டிவிட்ட விடயங்கள் என்று முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை அகற்றியது, போதைப்பொருள் மீட்புகள், அது தொடர்பான கைதுகளை மாத்திரமே பட்டியலிட முடியும். ஆனால், நாட்டில் புரையோடிப் போயிருக்கின்ற இனப்பிரச்சினைக்கான தீர்வொன்றே நாட்டின் முன்னேற்றத்துக்குரியதாக அமையும் என்பது மறக்கப்பட்டதாக இருந்து வருகிறது. நாட்டின் எதிர்காலத்துக்காக கொண்டுவரப்பட வேண்டிய முன்னேற்றங்கள் எதிர்காலத்தில் நகர்த்தப்படவுள்ள அரசியல் வியூகங்களில் தங்கிருக்கிறது என்பதனை இதுவரையில் உணர்ந்து கொள்ளாத ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தலைமையிலான தேசிய சபை புதிய அரசியல் யாப்பு என்பதற்குள் மாத்திரம் நின்றுகொண்டிருக்கிறது. அதில், தீர்வின்றி நீண்டுகொண்டிருக்கின்ற வடக்கு கிழக்குத் தமிழர்களின் அரசியல் பிரச்சினைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சகல இன, மத மக்களையும் பொதுமைப்படுத்தும் வகையிலேயே நகர்வுகள் காணப்படுகின்றன. ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் உருவாக்கப்படவுள்ள புதிய அரசியல் யாப்பில், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிப்பதும் அடங்கியிருக்கிறது. இருந்தாலும் இப்போதிருக்கின்ற ஜனாதிபதி அதிகாரத்தை மாற்றுவதற்கு ஜே.வி.பி. விரும்புமா என்பதைப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். ஆனால், 2029 ஆம்ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்படுமா? என்பது புரியா புதிரே. இலங்கை சுதந்திரமடைந்தது முதலே தொடர்ந்து கொண்டிருக்கின்ற இலங்கையின் இனப்பிரச்சினையைத் தீர்த்துவிடுவதில் அக்கறையற்றிருந்த இலங்கையின் அரசாங்கங்கள் தங்களது ஆட்சிகளை நகர்த்துவதிலேயே அக்கறை கொண்டிருந்தனர். சிறுபான்மையினரான தமிழ் மக்களின் உரிமைக்கான கோரிக்கையை மலினப்படுத்தும் செயற்திட்டங்களே திட்டமிடப்பட்டவகையில் நடைமுறைப்படுத்தப்பட்டன. இதனை மறுப்பவர்களும் மறந்தவர்களும் இலங்கையர்கள் என்று மக்களை ஒருநிலைப்படுத்துவதைப்பற்றி சிந்திப்பது வேடிக்கையானது. இலங்கையில், 1833இல் கோல்புறுக் - கமரன், 1929இல் மனிங், 1924இல் மனிங் - டெவன்சியர், 1931இல் டொனமுர், 1947இல் சோல்பரி என அரசியலமைப்புகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன. 1948இல் பிரித்தானியரால் சுதந்திரம் வழங்கப்பட்ட பின்னரும் டொமினியன் அந்தஸ்திலேயே நாடு இருந்துவந்தது. பின்னர் 1972இல் குடியரசாக மாறியது. 1978இல் இலங்கை ஜனநாயக சோசலிச குடியரசு அரசியல் யாப்பு உருவாக்கப்பட்டது. 22 திருத்தங்களைக் கண்ட இலங்கையின் அரசியலமைப்பு கண்டிருக்கின்ற திருத்தங்கள் யாவும் அரசாங்கங்களின் தேவைகளுக்கும், நோக்கங்களுக்குமாகவே மேற்கொள்ளப்பட்டிருந்தன. 2015ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்டபோது புதிய அரசியலமைப்பை உருவாக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டிருந்தது. வேலைகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தாலும், ஜனாதிபதியாக இருந்த மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாட்டினால் அது இடைநடுவில் கைவிடப்பட்டிருந்தது. அதற்கு பேரினவாதத் தரப்பினருடைய செயற்பாடே காரணமாக இருந்தது. ஆட்சியிலிருக்கின்ற தேசிய மக்கள் அரசாங்கம் அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்வதனை விடுத்து புதிய அரசியலமைப்பையே உருவாக்கவுள்ளதாக அறிவித்திருக்கிறது. இலங்கையின் அரசியலமைப்பானது மக்களது நலனைக் கருத்தில் கொண்டா? அரசியல் நலனை நோக்காகக் கொண்டா? மேற்கொள்ளப்படப்போகிறது என்பது முக்கியமாக கவனத்திலெடுக்கப்பட வேண்டும். குடியரசு அரசியல் யாப்பானது நாட்டில் ஆட்சி நடத்துபவர்களுக்கும் நாட்டு மக்களுக்குமான வழிகாட்டியாகும். ஆனால், அந்த வழிகாட்டியை தாங்கள் நினைத்த வேளைகளிலெல்லாம் ஆட்சியாளர்கள் தமக்கேற்றால் போன்று, தமது அரசியல் தேவைகளுக்காக மாற்றியமைப்புதுதான் இலங்கையில் நடைபெற்று வந்திருக்கிறது. அரசியலமைப்பையே தமக்Nகுற்றாற்போல மாற்றியமைக்கின்ற, நடைமுறைப்படுத்துகின்ற அரசாங்கங்களையுடைய நாட்டில் புரையோடிப்போயிருக்கின்ற இனப்பிரச்சினைக்கும், யுத்தத்தில் நடைபெற்ற குற்றங்களுக்கும், நியாயமான நடைமுறைகள் கைக்கொள்ளப்படுமா என்பது சந்தேகமானதே. அந்தவகையில்தான் முளையிலேயே கிள்ளப்படாததற்காக மரத்தை வெட்டுவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைப்பாட்டைக் கைக் கொள்வது சிறப்பானதாக இருக்கும் என்ற முடிவு கிடைக்கும். உள்ளகப் பொறிமுறையை கொண்டுவருதல் என்கிற நிலைமை அரசியலமைப்புக்கு வெளியே பயங்கரவாதத் தடைச்சட்டம் இருப்பது போன்று இல்லாத நிலைமையை, ஏம்மாற்றங்களை தமிழர்களுக்குத் தராது என்று நம்புவோம். ஏமாற்றங்களையே கடந்து வந்திரக்கின்ற தமிழர்களிடம் கொண்ட கொள்கையை கைவிடும்படி கூறும் ஜே.வி.பி. நாட்டின் கடந்தகால அனுபவங்களுக்குள் சென்றுவருதலே கட்டாயமாகும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/முளையில்-கிள்ளாததை-வெட்டிவிடுதல்/91-366933
-
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இணைய வழிச் செயலிமூலம் இனி அபராதம் செலுத்தலாம்
யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இணைய வழிச் செயலிமூலம் இனி அபராதம் செலுத்தலாம் யாழ்ப்பாணத்தில் இணையவழி செயலி மூலம்(GovPay) போக்குவரத்து அபராதம் செலுத்தும்முறை நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. யாழ்ப்பாணம் தலைமைப் பொலிஸ் நிலையத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்றது. பொலிஸ் நிலையங்கள் அல்லது தபால் நிலையங்களுக்குச் செல்ல வேண்டிய அவசியமின்றி, போக்குவரத்து அபராதங்களை எளிதாகவும், விரைவாகவும், பாதுகாப்பாகவும் இணைய வழியில் செலுத்த அனுமதிப்பதன் மூலம் பொதுமக்களுக்கு அதிக வசதியை வழங்குவதே இந்த முயற்சியின் நோக்கமாகும் என பொலிஸார் தெரிவித்தனர். குறித்த நிகழ்வில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்தனபால, யாழ்ப்பாண மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் மாரப்பண, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர்கள், பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரிகள், போக்குவரத்துப் பொலிஸார் உட்படப் பலரும் கலந்துகொண்டனர். https://newuthayan.com/article/யாழ்ப்பாணம்_மாவட்டத்தில்_இணைய_வழிச்_செயலிமூலம்_இனி_அபராதம்_செலுத்தலாம்
-
வடக்குத் திணைக்களங்களில் நேரமுகாமைத்துவம் அவசியம்; ஆளுநர் வலியுறுத்து!
வடக்குத் திணைக்களங்களில் நேரமுகாமைத்துவம் அவசியம்; ஆளுநர் வலியுறுத்து! வடக்கு மாகாணசபைக்கு உட்பட்ட திணைக்களங்கள் அனைத்திலும், நேர முகாமைத்துவம் பின்பற்றப்படவேண்டும். திணைக்களத்தலைவர்கள் முன்னுதாரணமாகச் செயற்படவேண்டும். அத்துடன் சிறப்பாகச் செயற்படும் பணியாளர்களை ஊக்குவிக்கும்வகையில் அவர்களுக்கான கெளரவிப்புகளை வழங்குவதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், திணைக்களங்களின் தலைவர்களுடனான கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் கடந்தவாரம் இடம்பெற்றது .அதில் கருத்துத் தெரிவித்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது- 5 ஆண்டுகளுக்கு மேலாக ஒரு திணைக்களத்தில் பணியாற்றும் பணியாளர்களை இடமாற்றம் செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கவேண்டும். தகுதியில்லாத திணைக்களத் தலைவர்கள் அல்லது பணியாளர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கான இடமாற்றங்கள் அல்லது நடவடிக்கைகள் தயவுதாட்சண்யமின்றி எடுக்கவேண்டும். தனியே யாழ்ப்பாண மாவட்டம் மாத்திரம் வடக்கு மாகாணம் அல்ல. ஆளணிகள் முழுவதையும் யாழ்ப்பாணத்தில் வைத்திருக்கமுடியாது. ஏனைய 4 மாவட்டங்களுக்கும் யாழ். மாவட்டத்திலிருந்தே ஆளணிகளைப் பங்கீடு செய்யவேண்டியுள்ளது. அந்தப் பங்கீட்டை உரியவாறு முன்னெடுக்க வேண்டும். மாவட்டங்கள், பிரதேசங்களுக்கு என்று நிதிகளைப் பங்கீடு செய்யா மல் எந்தப் பிரதேசங்களுக்குத் தேவைகள் அதிகமோ அங்கு கூடியளவு நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். அதற்கு ஏற்றவாறே திட்டங்களும் தயாரிக்கப்படவேண்டும். கடல் கடந்த தீவுகளில் கற்பிக்கும் ஆசிரியர்கள், அதிபர்களுக்கு ஆபத்துக் கொடுப்பனவை, பொது நிர்வாக உள்நாட்டலுவல்கள் அமைச்சின் சுற்றறிக்கையை அடிப்படையாகக்கொண்டு வழங்குவதற்கான நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்றார். https://newuthayan.com/article/வடக்குத்_திணைக்களங்களில்_நேரமுகாமைத்துவம்_அவசியம்;_ஆளுநர்_வலியுறுத்து!
-
யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
கவிஞர் வைரமுத்துவின் கரங்களில் ஈழத்தமிழர்களின் 'துருவேறும் கைவிலங்கு' ! தென்னிலங்கையின் அடிமைச் சிறையில் 16 ஆண்டு காலங்களாக தடுத்து வைக்கப்பட்டு ஆயுள் தண்டனை அனுபவித்து வந்த ஈழத்தமிழ் அரசியல் கைதி 'விவேகானந்தனூர் சதீஸ்' நெருக்கடிமிகு சிறைக்குள் இருந்து எழுதிய, 'துருவேறும் கைவிலங்கு' எனும் மெய்யாலானா நூல், 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பின் ஒருங்கிணைப்பாளர், மு.கோமகனால் பிரபல தென்னிந்திய கலைஞரான 'கவிஞர் வைரமுத்துவிடம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது. 20 முதல் 30 ஆண்டுகளுக்கும் மேலாக இன்னும் பல தமிழ் அரசியல் கைதிகள் சிறை வைக்கப்பட்டிருக்கின்ற நிலையில், தென்னிலங்கையின் உயர்ந்த சுற்றுமதிற் சுவர்களுக்குள் துயரனுபவித்து வருகின்ற எமது உறவுகளின் வெளித்தெரியாத பல உண்மைகளின் மெய்ச் சாட்சியமாகப் பார்க்கப்படுகின்ற 'துருவேறும் கைவிலங்கு' எனும் இந்த ஆவண நூல், அனைத்துத் தரப்புகளினதும் கூர்ந்தவதானிப்புக்கு உட்படுத்தவேண்டியது கால அவசியமாகிறது. அந்த வகையில், "நீண்ட நெடும் போருக்கு பின்னரும் கூட, எமது தமிழினம் விடுதலைக்காக ஏங்குகின்ற வலிசுமந்த வாழ்வை அனுபவித்து வருகின்றது" என்கின்ற கனதிமிகு செய்தியினை, "ஈழத் தமிழினத்தின் விடுதலைப் பயணத்தில் பக்கத்து இருக்கைப் பங்காளியாக உறவுபூண்டு வருகின்ற தென்னிந்திய தேசத்திற்கு உரத்துச் சொல்ல வேண்டும்" என்பதற்காக ஈழத்தமிழ் திரைப்படத் தொடக்க விழா நிகழ்வுக்கு வருகை தந்திருந்த கவிஞர் வைரமுத்து அவர்களை, நேரில் சந்தித்த 'குரலற்றவர்களின் குரல்' அமைப்பு, இந்த நூலினை அவரிடம் கையளித்துள்ளது. நூலை கையேற்ற கவிஞர், "இந்த நூலின் தலைப்பே கைதிகளின் அவலக் கதியை பறைசாற்றுகின்றது" என ஆதங்கமடைந்ததுடன், கைதிகளின் நிலை பற்றியும் கேட்டறிந்துள்ளார். https://newuthayan.com/article/கவிஞர்_வைரமுத்துவின்_கரங்களில்__ஈழத்தமிழர்களின்_'துருவேறும்_கைவிலங்கு'_!
-
ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி?
ஹிஸ்புல்லாவிடம் இருந்து 2 மில்லியன் அமெரிக்க டொலர் மோசடி? பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் ஹிஸ்புல்லாவிடம் 2 மில்லியன் அமெரிக்க டொலரை மோசடி செய்த குற்றச்சாட்டில் 11 கானா நாட்டவர்கள் கைதாகி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. தங்கம் விற்பனை என்ற போர்வையில் பணம் மோசடி செய்ததாக கானா தேசிய பாதுகாப்பு கவுன்சிலுக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகின்றது. 2023 ஆம் ஆண்டில் பாராளுமன்ற உறுப்பினர் மொஹமட் ஹிஸ்புல்லாவுக்கு தங்கம் வழங்குவதாகக் கூறி குறித்த சந்தேக நபர்கள் 2 மில்லியன் அமெரிக்க டொலரை பெற்றுள்ளதாக தெரிய வந்துள்ளது. குறித்த பணத்தைப் பெற்ற பின்னர், சந்தேக நபர்கள் பாராளுமன்ற உறுப்பினருடனான அனைத்து தொடர்புகளையும் துண்டித்துக் கொண்டதாக அந்நாட்டு ஊடகங்கள் குறிப்பிடுகின்றன. பின்னர், பாராளுமன்ற உறுப்பினர் ஹிஸ்புல்லாவுக்கு 50 கிலோகிராம் தங்கத்தை விற்பனை செய்ய சந்தேகநபர்கள் இணங்கியதாகவும் அதன் சட்டப்பூர்வமான தன்மையைக் கொடுக்க புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றும் கையெழுத்திடப்பட்டிருந்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், கானா தேசிய பாதுகாப்பு கவுன்சில் கடந்த ஒக்டோபர் 16ஆம் திகதி சந்தேக நபர்களை கைது செய்தது. அவர்கள் கைது செய்யப்பட்டபோது தங்கமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் இரண்டு மஞ்சள் உலோகங்களும் கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பான வழக்கு எதிர்வரும் நவம்பர் 20ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு வரவுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.samakalam.com/ஹிஸ்புல்லாவிடம்-இருந்து/
-
ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்” நடைபெறும் குறும்படப் போட்டி!
ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்” நடைபெறும் குறும்படப் போட்டி! adminOctober 28, 2025 தேர்தல் ஆணைக்குழுவின் ஏற்பாட்டில்.”ஒரு வாக்கின் சக்தியின் கதைகள்” நடைபெறும் குறும்படப் போட்டி – 2025 தொடர்பாக யாழ்ப்பாண மாவட்ட பாடசாலை மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நேற்றைய தினம் திங்கட்கிழமை இடம்பெற்றது. யாழ்ப்பாண மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் மாவட்ட பிரதித் தேர்தல் ஆணையாளர் இ.சசீலன் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்ச்சியில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊடகக் கற்கைகள் துறையினரின் பங்கேற்புடன் விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது. குறும்படத்திற்கு கதை எழுதுவது எப்படி, புகைப்பட கருவி நுட்பங்கள் மற்றும் காணொளி செம்மையாக்கம், கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி குறும்படத்தை எப்படி உருவாக்குவது, செயற்கை நுண்ணறிவு (AI) பயன்படுத்தி குறும்படங்களை எவ்வாறு தயாரிப்பது உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் மாணவர்களுக்கு பயிற்சியளிக்கப்பட்டது. இதன்போது யாழ் மாவட்ட பாடசாலைகளில் ஊடக கற்கைகள், நாடகம் அரங்கியல் கற்கை மாணவர்கள், ஆசிரியர்கள் என பலரும் கலந்துகொண்டனர். ஜனநாயக விழுமியங்களை மேம்படுத்துவதையும், ஆக்கப்பூர்வமான வெளிப்பாடு மூலம் தேர்தல் செயல்பாட்டில் இளைஞர்களின் பங்கேற்பை ஊக்குவிப்பதையும் நோக்கமாகக் கொண்டு, இலங்கைத் தேர்தல் ஆணையம் “ஒரு வாக்கின் சக்தியின் பௌரா கதைகள்” எனும் குறும்படப் போட்டியை இந்த ஆண்டு ஏற்பாடு செய்துள்ளது. திறந்த பிரிவு மற்றும் பாடசாலை மாணவர்களுக்கான பிரிவு என இக்குறும்பட போட்டியானது இரண்டு பிரிவுகளாக நடைபெற உள்ளது. இதற்கான தயாரிப்புக்களை சமர்ப்பிக்க வேண்டிய இறுதி திகதி நவம்பர் 14 ஆகும். தேர்தல் ஆணைக்குழுவின் இணையத்தளம் ஊடாக மேலதிக விபரங்களை அறிய முடியும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர் https://globaltamilnews.net/2025/222037/
-
வடக்குக்கான புகையிரத சேவை ஒரு வார காலத்திற்கு 4 மணி நேரம் தடைப்படும்!
வடக்குக்கான புகையிரத சேவை ஒரு வார காலத்திற்கு 4 மணி நேரம் தடைப்படும்! adminOctober 28, 2025 வடமாகாண ரயில் போக்குவரத்து நாளை மறுதினம் வியாழக்கிழமை தொடக்கம் ஒரு வாரத்துக்கு பகுதியளவில் தடைப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வடமாகாண ரயில் தண்டவாளங்களை சீர்செய்யும் நடவடிக்கையும், வடக்கின் ரயில் மார்க்கத்தைத் தரமுயர்த்தும் செயற்பாடுகளும் ஒரு வாரத்துக்கு முன்னெடுக்கப்படவுள்ளன. இந்தக் காலப்பகுதியில் காலை 10.15 மணி தொடக்கம் பிற்பகல் 2 மணிவரை பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன . இதையடுத்தே ரயில் சேவைகள் பகுதியளவில் இடைநிறுத்தப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. https://globaltamilnews.net/2025/222041/
-
எல்லை நிர்ணயத்தை காரணம் காட்டி மாகாண சபைத்தேர்தலை இழுத்தடிக்கக் கூடாது; சுரேஸ் வலியுறுத்து
எல்லை நிர்ணயத்தை காரணம் காட்டி மாகாண சபைத்தேர்தலை இழுத்தடிக்கக் கூடாது; சுரேஸ் வலியுறுத்து மாகாணத்தின் அதிகாரங்கள் பயன்படுத்தபடப் வேண்டும் என்றால் மாகாண சபைத் தேர்தல் நடாத்தப்பட வேண்டும். எல்லை நிர்ணய விடயத்தினைக் காண்பித்து இழுத்தடிப்பு செய்யக்கூடாதென ஐனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் ஊடகபேச்சாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமசந்திரன் தெரிவித்தார். மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் அரச தரப்பால் மாறுபட்ட கருத்துகள் தெரிவிக்கப்பட்டுவருவது தொடர்பில் வினவியபோதே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், மாகாண சபைத்தேர்தல் தொடர்பாக அரசாங்கம் மாறுபட்ட கருத்துக்களை கூறிவருகின்றது. மாகாணசபைத்தேர்தல் அடுத்தவருடம் வைக்கவுள்ளதாக ஒருபக்கம் கூறுகிறது. மறுபக்கத்தில் எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கை இறுதியாக்கப்பட்டு புதிய முறையில் தேர்தல் நடத்தப்படவுள்ளதாக கூறுகின்றது. பாராளுமன்றில் எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டபோது தற்போதைய ஆட்சியாளர்களும் சேர்ந்து தான் அன்று எதிர்த்தார்கள். தற்போது தேர்தலை வைப்பதாயின் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் முன்வைத்துள்ள தனிநபர் பிரேரணையை நிறைவேற்றுவதன் ஊடாக பழைய முறையில் தேர்தலை நடத்தலாம். ஆனால் ஆட்சியில் உள்ள அரசாங்கம் அதனை நிறைவேற்றுவதற்கு தயாராக இல்லை. அடுத்த வருடம் தேர்தலை வைப்பதாக இருந்தால், பழைய முறையில் தேர்தலை நடத்துவதற்கான பாராளுமன்ற அனுமதி தேவையாக உள்ளது. அவ்வாறு இல்லாமல் எல்லைகளை மீள்நிர்ணயம் செய்யவேண்டுமென்றால் அதற்கு பல வருடங்களாகும். ஆகவே தேர்தலுக்கு உடனடியான சத்தியமில்லை. அந்த வகையில் அரசாங்கம் உண்மையாக என்ன செய்ய போகிறது என்பதை கூறவேண்டும். கடந்த காலத்தில் எல்லைகளை நிர்ணயம் செய்யவதற்கு முற்பட்டபோதுதான் தென் பகுதியில் முஸ்லிம் பிரதிநிதித்துவம் இல்லாது போகிறது, மலையகத்தில் தமிழர் பிரதிநிதித்துவம் இல்லாது போகிறது என்ற பிரச்சினை தோற்றம்பெற்றது. ஆகவே எல்லைகளை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு காலஅவகாசம் வேண்டும். அதற்கு ஒருவருடம் போதாது. எனவே அரசாங்கம் உண்மையாகவே தேர்தலை வைக்கப்போகின்றார்களா என்பது பெரும் கேள்வியாகவுள்ளது. ஐனாதிபதி அநுர மாகாண சபைகளுக்கான தேர்தல் தொடர்பில் எந்தக் கருத்துக்களையும் தெரிவிக்கவில்லை. அவர் மௌனமாக இருக்கிறார். அமைச்சர்கள் தான் மாறிமாறி பலவிதமாக கருத்துகளை கூறிவருகிறார்கள். ஆனால் பொதுமக்களும், எதிர்க்கட்சியினரும் அடுத்தவருடம் தேர்தல் நடைபெறுமென எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அடுத்தவருடம் என்றால் எந்த மாதத்தில் தேர்தல் நடைபெறும் என்பதே கேள்வியகவுள்ளது. ஆகவே அரசாங்கம் தேர்தல் சட்ட திருத்தத்தை கொண்டு வந்தால் தான் தேர்தல்கள் ஆணையாளர் எப்போது தேர்தல் நடத்தப்படும் என்பதை தெளிவாக அறிவிப்பார். தற்போது, இப்போது மாகாணங்கள் ஆளுநர்களின் கைகளில் உள்ளன. ஆளுநர்கள் ஐனாதிபதி, அரசாங்கம் சொல்வதை செய்து கொண்டு இருக்கிறார்கள் அவர்கள் அதனைத்தான் செய்ய முடியும் இதனை விட வேறு எதனையும் செய்ய முடியாது. எனவே மாகாண சபையில் மக்கள் ஆட்சி தேவை என்பதை தமிழ் மக்கள் கிளர்தேழுந்து அரசாங்கத்திற்கு அழத்தமாக கூறவேண்டும். அவ்வாறான முயற்சி செய்யாவிட்டால் அரசு மாகாண சபை தேவையில்லை என்பதை கூற முன்வந்துவிடும். கிடைத்த அதிகாரம் மக்களால் பயன்படுத்தப்பட வேண்டும் எனவே தேர்தல் நடாத்தப்படவேண்டும். அரசாங்கத்தின் நடவடிக்கைகளை பார்த்தால் தேர்தலை வைக்காது இழுதடிக்கின்ற செயற்பாட்டை செய்து வருகின்ற என்றார். https://akkinikkunchu.com/?p=346283
-
யாழுக்கு வருகை தந்தார் கவிஞர் வைரமுத்து
யாழ்ப்பாணத்தில் நிற்கிறேன்; புலம்பெயர்ந்த உலகத் தமிழர்களோடு உரையாட விழைகிறேன் - யாழில் இருந்து வைரமுத்து திங்கள், 27 அக்டோபர் 2025 04:27 AM விதைகளும் தியாகங்களும் என்றைக்கும் வீணாவதில்லை; ஒருநாள் முளைத்தே தீரும் என கவிப்பேரசு வைரமுத்து யாழ்ப்பாணத்தில் கவிதை வடித்துள்ளார். யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற , மில்லர் திரைப்பட ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்டமை தொடர்பில் தனது முகநூலில் கவிதை ஒன்றினை பதிவு செய்துள்ளார். அதிலையே அவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த கவிதையாவது, "யாழ்ப்பாணத்தில் நிற்கிறேன்; புலம்பெயர்ந்த உலகத் தமிழர்களோடு உரையாட விழைகிறேன் நீங்கள் விளையாடிய வீதிகள் நலம்; குடைபிடிக்கும் வேப்ப மரங்கள் நலம் சாவகச் சேரி சௌக்கியம்; நீங்கள் சௌக்கியமா? பருத்தித்துறை சௌக்கியம்; உங்கள் பாச உறவுகள் சௌக்கியமா? முகமாலை நலம்; உங்கள் முன்னோடிகள் நலமா? புத்தூர் சௌக்கியம்; உங்கள் பிள்ளைகள் சௌக்கியமா? உங்கள் தலைமுறை வரைக்கும் தமிழ் ஈழத்தின்மீது உங்களுக்கு தாகம் இருக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் அதேதாகம் வேண்டுமாயின் அவர்களையும் தமிழ்படிக்கச் செய்யுங்கள் மண்ணும் மொழியும் கண்ணும் உயிரும் என்று கற்றுக்கொடுங்கள் விதைகளும் தியாகங்களும் என்றைக்கும் வீணாவதில்லை; ஒருநாள் முளைத்தே தீரும்" என்று பேசினேன் கண்ணீர் ததும்பக் கரவொலி செய்தார்கள் என முகநூலில் பதிவு செய்துள்ளார். https://jaffnazone.com/news/51645
-
ஈழப்போர் காலத்தில் மறக்கமுடியாத அக்டோபர் மாதம்..! : பா. அரியநேத்திரன்
ஈழப்போர் காலத்தில் மறக்கமுடியாத அக்டோபர் மாதம்..! : பா. அரியநேத்திரன் October 27, 2025 ஈழவிடுதலைப்போராட்ட காலத்தில் அக்டோ பர் மாதம் யாழில் வெவ்வேறு ஆண்டுகளில் மூன்று சம்பவங்கள் என்றுமே மறக்கமுடியாத வரலாற்றில் இடம்பெற்றுள்ளன. 1. 1987 அக்டோபர் 21ல், யாழ்போதனாவைத் தியசாலை நோயாளர்கள்மீது இந்திய கொலைப்படை நடத்திய படுகொலைத் தாக் குதலில் 70 பேர் படுகொலை செய்யப்பட்ட சம்பவம். 2. 1990 அக்டோபர் 30ல் விடுதலைப் புலிக ளால் யாழ் முஸ்லீம்மக்களை வெளியேறு மாறு கூறியதால் வெளியேற்றப்பட்ட சம்ப வம். 3. 1995 அக்டோபர் 30ல் இராணுவத்திற்கும் விடுதலைப்புலிகளுக்கும் ஏற்பட்ட ஆயுத மோதலால் ஐந்து இலட்சம் மக்கள் யாழ் குடாநாட்டை விட்டு வெளியேறிய மறக்க முடியாத சம்பவம். இந்த மூன்று சம்பவங்களும் அக்டோபர் மாதத்தில் இடம்பெற்றவை. யாழ்ப்பாண நகரம் 1980, தொடக்கம் 1995 வரை 15, ஆண்டுகளாக தமிழீழ விடுதலைப் புலிகளின் முதன்மையான கோட்டையாக இரு ந்து வந்தது. ஜனாதிபதி ஜே ஆர் ஜெயவர்தன ஆட்சிக்காலத்தில் 1987 யூலை29, இலங்கை ஒப் பந்தம், 1987ஆகஷ்ட் 04ல் தலைவர் பிரபாகரனின் சுதுமலை பிரகடனம் எல்லாம் இடம்பெற்றது. 1987 அக்டோபர் 10ல் இந்தியப்படைகளுக்கும் விடுதலைப்புலிகளுக்கும் போர் ஆரம்பித்த பின்னர் சரியாக 11, தினங்களால் 1987 அக்டோபர் 21ல் யாழ் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த பொதுமக்கள் மீது இந்திய இராணுவம் மேற்கொண்ட மிலேச்சத்தன மான படுகொலையால் 70 தமிழர்கள் கொன்றழி க்கப்பட்டு 2025-10-21ம் திகதியுடன் 38 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. 1990, செப்டம்பரில் ஜனாதிபதி பிரேமதாஸ ஆட்சிக்காலத்தில் கிழக்கு மாகாணம் அம் பாறை மாவட்டம் திருக்கோயில் தொடங்கி மட்டக் களப்பு மாவட்டம் கதிரவெளிவரையும் முஸ்லீம் ஊர்காவல்படையினர் இலங்கை இராணு வத்துடன் இணைந்து பல தமிழ் கிராமங்களில் இனப்படுகொலைகளை மேற்கொண்டனர் அத னால் முஸ்லீம் கிராமங்களான காத்தான்குடி, ஏறா வூர் பகுதிகளிலும் முஸ்லீம்மக்கள் கொல்லப்பட்டனர். இவ்வாறான சம்பவம் யாழ்ப்பாணம் முஸ்லீம்மக்களுக்கு ஏற்படக்கூடாது என்ற ஒரே காரணத்தால் விடுதலைப்புலிகள் 1990, அக்டோபர், 30ல் யாழ்ப்பாண முஸ்லீம்மக்கள் பாதுகாப்பாக ஒரே நாளில் வெளியேறிய சம்பவம் வருகின்ற 2025-10-30 ம் திகதியுடன் 35ஆவது ஆண்டுகள் நிறைவு பெறுகின்றது. 1995 ஜனாதிபதி சந்திரிகா ஆட்சிக்காலத்தில் அக்டோபர் 17 இல், இலங்கை இராணுவத்தி னர் 10,000 பேர் யாழ்ப்பாண நகரத்திற்கு 25 மைல் தொலைவில் போரை தொடரத் துவங்கினர். அது தொடர்ந்ததமையால் யாழ் குடா நாட்டில் இருந்து ஐந்து இலட்சம் தமிழ் மக்கள் 1995, அக்டோபர் 30ல் இடம்பெயர்ந்தனர். அது இடம்பெற்று 2025, அக்டோபர் 30ல் 30ம் ஆண்டு நினைவாகும்.இந்தத் தாக்குதல் 1995, திசம்பர் 05, வரை நீடித்தது. இந்த 50 நாள் போரில் 300 வரையிலான இலங்கை இராணுவ வீரர்களும், 550இற்கும் மேற்பட்ட விடுதலைப் புலிகளும் கொல்லப்பட்டதாக அப் போது கூறப்பட்டது. இறுதியில் இராணுவம் புலிகளிடமிருந்து நகரத்தையும் குடாநாட்டையும் கைப்பற்றியது. இதனால் விடுதலைப்புலிகள் வன்னியில் சென்று தமது படைத்தளத்தை முழு மையாக பலப்படுத்தினர். 1995 அக்டோபரில் யுத்த முனையில் இராணுவத்தினரின் கைகள் ஓங்கியிருப்பது பலருக்கும் தெரிந்திருந்தாலும் விடுதலைப்புலிக ளின் இராணுவ நகர்வுகள் பற்றி யாருக்கும் எதிர்வு கூற முடியாத நிலையில் எந்த ஒரு யாழ்ப்பாண குடிமகனும் தானும் உறவும் ஒட்டுமொத்தமாய் இந்த நிலத்தை விட்டுப் பிரிவோம் என்று அப் போது நினைத்திருக்க வில்லை. இலங்கைப் படையினரின் ‘ஒப்பரேசன் ரிவிரச’ இராணுவ நடவடிக்கை காரணமாக இடம்பெற்றது. இச்சண்டையைத் தொடர்ந்து, விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை இராணு வத்திற்கும் இடையே மோதல்கள் ஏற்பட்டன. இதன் விளைவாக, வலிகாமம் பகுதி முழுமை யாகப் படையினரின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து, யாழ்ப்பாணத்தின் மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்தனர். யாழ்ப்பாணத்தின் வலிகாமம் பகுதி முழு வதும் படையினரால் கைப்பற்றப்பட்டு, மக்கள் பெருமளவில் இடம்பெயர்ந்தனர். யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றும் நோக் கோடு 1995 அக்டோபர் 17ம் திகதி இலங்கை இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட ஒப்ப ரேசன் ரிவிரச, சூரியக்கதிர் என்னும் இராணுவ நடவடிக்கையை அடுத்து இலங்கை இராணுவத் திற்கும் விடுதலைப் புலிகளுக்கும் இடையில் ஏற்பட்ட மோதலையடுத்தே இந்த இடப்பெயர்வு இடம்பெற்றது. அந்த இராணுவ நடவடிக்கை கந்தசஷ்டி விரத காலம் ஆலயங்களில் எல்லாம் விசேட பூசை வழிபாடுகள் நடந்த வேளையில் பலாலி இராணுவ முகாமிலிருந்து யாழ்ப்பாணத்தினை கைப்பற்ற இராணுவத்தினர் தாக்குதலை நடாத்தி வருவதும், அன்றைக்கு சில நாட்கள் முன்பாக அந்த நடவடிக்கையை முறியடிக்க புலிகள் மேற்கொண்ட நடவடிக்கை வெற்றியைத் தராமல் போனதும் அப்போது பேசும் பொருளாக வடக்கு கிழக்கு முழுவதும் ஆச்சரியத்தை தந்திருந்தது. யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றி பாரிய இன அழிப்பு நடவடிக்கையை இராணுவம் மேற்கொள்ள இருக்கின்றதனால் உடனடியாக பாதுகாப்பான பிரதேசங்களான தென்மராட்சி வடமராட்சி வன்னிப் பகுதிகளுக்கு மக்களை இடம்பெயருமாறு விடுதலைப்புலிகள் ஒலிபெரு க்கி மூலமாக அறிவிப்பு விடுத்தனர். யாழ்ப்பாண குடாநாட்டில் அப்போதிருந்த அண்ணளவான மக்கள் தொகை 5 லட்சம். யாழ் குடாநாட்டினை வடபகுதியின் மற்றைய பிரதேசங்களுடன் இணைத்திருந்த வெறும் இரண்டு வீதிகளினூடாக 5 லட்சம் மக்கள் ஓர் இரவு விடிவதற்குள் கடந்து செல்ல வேண்டும் என்பதனை கற்பனை செய்தும் பார்க்க முடியாது. ஆனால் மக்களுக்கு அதற்கெல்லாம் நேரமிருக்க வில்லை. மூட்டை முடிச்சுக்களை கட்டி எல் லோரும் வீதிகளில் இறங்க இறுகிப்போனது வீதி. அந்த இடப்பெயர்வு முடிந்து அடுத்த இரண்டு மாதங்கள் வரை யாழ்ப்பாணம் புலிக ளின் கைகளில் தான் மீண்டும் இருந்தது. இடப் பெயர்வின் பின்னர் ஒரு பத்து பதினைந்து நாட்கள் வரை இடம் பெயர்ந்தவர்கள் மீண்டும் யாழ்ப்பாணம் சென்று பொருட்கள் எடுத்துவர அனுமதிக்கப்பட்டிருந்தார்கள் விடுதலைப்புலிகள். மீண்டு இராணுவம் யாழில் விடுதலைப் புலிகளுடன் ஆங்காங்கே மோதல் சம்பவங்களில் ஈடுபட்டதால் விடுதலைப்புலிகள் யாழ் குடா நாட்டில் இருந்த படைமுகாங்களை வன்னிக்கு நகர்த்தினர். இலங்கை இராணுவம் யாழ்ப்பாணத் துக்கான யுத்தம் ஈழப்போரை முடிவுக்குக் கொண்டுவந்துள்ளதாகவும், புலிகளால் மீண்டும் ஒருபோதும் அரசாங்கத்திற்கு எதிராக பாரிய யுத்தங்களை மேற்கொள்ள முடியாது எனவும் இராணுவம் அறிவித்தது. கிளர்ச்சி முடிவுக்கு வந்த தாக மக்களாலும்நம்பப்பட்டது. 1995 திசம்பர் 23ல், மட்டக்களப்பு மாவட் டத்தில் இராணுவப் பிரிவு ஒன்றின் மீது விடு தலைப் புலிகள் தாக்குதல் நடத்தியதில் 33 படையினர் கொல்லப்பட்ட போது போர் முடிவு க்கு வரவில்லை என்பது உறுதியானது. அடுத்த ஏழு மாதங்களில் புலிகள் இயக்கத்தை மறுசீரமைத்து மீண்டும் ஒருங்கிணைத்தனர். யாழ்குடா நாட்டில் இருந்து வன்னி காட்டுக் குள் தமது படைகளை மீளவும் மறுசீரமைத்த விடுதலைப்புலிகள் தாம் யாழ் குடா நாட்டில் கற்றுக்கொண்ட பாடத்தை மீள் பரிசீலனை செய்து 1996 ஜனவரி 22ல் இலங்கை வான் படையினரின் M.J:17 உலங்குவானூர்தி பருத்தித்துறைக் கடலில் 39, படையினருடன் வீழ்ந்தசம்பவம், 1996, யூலை18ல், முல்லைத்தீவில் உள்ள படைத்தளத்தின் மீது ஓயாத அலைகள் நடவடிக்கை என்ற பெயரில் தாக்குதலைத் தொடங்கினர். இந்த தாக்குதலில் 1,200க்கும் மேற்பட்ட இராணுவ வீரர்கள் கொல் லப்பட்டதுடன் இராணுவ தளமும் அழிக்கப்பட் டது. 2000, மார்ச், 26ல் ஆனையிறவு இராணுவ முகாம் கைப்பற்றியது, இவ்வாறு இன்னும் பல வெற்றிகரமான தாக்குதல்கள் இடம்பெற்றன. ஒரு கரந்தடி தாக்குதல் அணியாக தோற்றம் பெற்ற விடுதலைப்புலிகள் மரபுப்படையணியாக வளர்ச்சிபெற்று 2009 மே 18, வரையும் போராடி மௌனித்தனர். இலங்கை இராணுவத்தால் அவர் களை தோற்கடிக்காதபோதுதான் உலகநாடுகள் 32க்கு மேல் இலங்கைக்கு உதவியதன் நிமிர்த்தம் இறுதியில் முள்ளிவாய்க்காலில் போர் மௌனித் தது என்பதே வரலாறு. ஈழப்போர் வரலாற்றில் 1987, 1990, 1995, ஆகிய மூன்று வருடமும் அக்டோபர் மாதமும் மறக்க முடியாத மாதமாகும்.. https://www.ilakku.org/ஈழப்போர்-காலத்தில்-மறக்க/