Everything posted by கிருபன்
-
கிருபன்
- IMG_4134.jpeg
- IMG_4135.jpeg
- IMG_4132.jpeg
- IMG_4133.jpeg
- IMG_4131.jpeg
-
இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம்
இலங்கையின் சனத்தொகை 21 மில்லியனாக பதிவானது!! ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதம் October 31, 2025 8:38 am இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளதாக தொகை மதிப்பு மற்றும் புள்ளிவிபர திணைக்களம் தெரிவித்துள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை மதிப்பீட்டுக்கமைய இலங்கையின் மொத்த சனத்தொகை 21.7 மில்லியனாக பதிவாகியுள்ளது. இந்நிலையில், இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஆண்களின் எண்ணிக்கை 48.3 வீதமாகவும்,பெண்களின் எண்ணிக்கை 51.7 வீதமாகவும் பதிவாகியுள்ளது. மேலும், 2012ஆம் ஆண்டு முதல் 2024ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் இலங்கையின் சனத்தொகையானது, ஆண்டுதோறும் சராசரியாக 0.5 சதவீதத்தால் அதிகரித்துள்ளதாக அந்த திணைக்களம் தெரிவித்துள்ளது. சனத்தொகை அதிகரிப்பு வீதம் 12 வருட காலப்பகுதியை உள்ளடக்கியதாக அமையப்பெற்றுள்ளது. ஆண்டுக்கு 0.5% என்ற இந்த மிதமான அதிகரிப்பு வீதம், நாட்டின் பிறப்பு வீதம், இறப்பு வீதம் மற்றும் நிகர குடியேற்ற வீதம் ஆகிய காரணிகளின் ஒருங்கிணைந்த விளைவை சுட்டிக்காட்டுகிறது. 2024 குடிசன,வீட்டுவசதிகள் தொகைமதிப்பின் போது இலங்கையின் சனத்தொகை 21,781,800 ஆக பதிவாகியுள்ளது. இதேவேளை, நாடுபூராகவும் உள்ள மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளமையை காணமுடிகிறது. 2012 ஆம் ஆண்டு 839,504 ஆக காணப்பட்ட மலையகத் தமிழர்கள் 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 600,360 ஆக காணப்படுகின்றனர். இதற்கமைய, சுமார் 239,144 க்கும் மேற்பட்ட சனத்தொகை வித்தியாசம் காணப்படுகிறது. மலையகத் தமிழர் சனத்தொகை சதவீதம் 2012 ஆம் ஆண்டில் 4.1 சதவீதமாக இருந்ததுடன் 2024 ஆம் ஆண்டின் போது 1.3 சதவீதம் குறைந்து 2.8 சதவீதமாக பதிவாகியுள்ளது. இதேவேளை, இலங்கைத் தமிழர்களின் எண்ணிக்கை சிறியளவில் அதிகரித்துள்ளதோடு, தமிழ் பேசும் முஸ்லிம் மககளின் எண்ணிக்கையிலும் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. 2012 ஆம் ஆண்டு 2,269,266 ஆக காணப்பட்ட இலங்கைத் தமிழர்கள் 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 2,681,627ஆக காணப்படுகின்றனர். மேலும் 2012 ஆம் ஆண்டு 1,892,638 ஆக காணப்பட்ட இலங்கை முஸ்லிம்கள் 2024 ஆம் ஆண்டு கணக்கெடுப்பில் 2,283,246 ஆக காணப்படுகின்றனர். https://oruvan.com/sri-lankas-population-reaches-21-million-males-make-up-48-3/
-
சீனாவுக்கான இறக்குமதி வரியை 10 வீதத்தால் குறைத்த அமெரிக்கா
சீனாவுக்கான இறக்குமதி வரியை 10 வீதத்தால் குறைத்த அமெரிக்கா October 31, 2025 11:09 am தென் கொரியாவின் புசான் நகரில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்புக்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்க்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, சீன பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாக வொஷிங்டன் குறைத்துள்ளது. ஆசிய – பசுபிக் பொருளாதார உச்சி மாநாடு புசான் நகரில் நடைபெற்றது. இம்மாநாட்டின் இடையில், டொனால்ட் ட்ரம்ப்பும் சீ ஜின்பிங்கும் சந்தித்து இருதரப்பு பேச்சவார்த்தை நடத்தினர். சுமார் ஒரு மணி நேரம் 40 நிமிடங்கள் நீடித்த இச்சந்திப்புக்குப் பிறகு செய்தியாளர்கள் மத்தியில் உரையாற்றிய ட்ரம்ப், எங்களுக்கிடையிலான பேச்சுவார்த்தை மிகப் பெரிய வெற்றியாக அமைந்தது என்றதோடு, ஃபெண்டானில் (வலிகளைக் குறைக்கப் பயன்படுத்தப்படும் ஒரு வகை மருந்து) உற்பத்தியைத் குறைக்க சீ ஜின்பிங் ஒப்புக்கொண்டதாகவும் கூறினார்.”ஃபெண்டானில் நிலைமையை கவனித்துக் கொள்வதாக சீனா உறுதி அளித்திருக்கிறது. அவர்கள் உண்மையிலேயே வலுவான நடவடிக்கைகளை எடுக்கிறார்கள் என நான் நம்புகிறேன். எனவே, சீனப் பொருட்களுக்கான இறக்குமதி வரியை 57 சதவீதத்தில் இருந்து 47 சதவீதமாகக் குறைத்துள்ளேன். இனி, சீன பொருட்களுக்கான ஒட்டுமொத்த இறக்குமதி வரி 47 சதவீதமாக இருக்கும். எங்களுக்குள் ஒரு ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது. இது ஓராண்டுக்கான ஒப்பந்தம். எனினும், இந்த ஒப்பந்தம் தொடரும் என நம்புகிறேன். ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்பாக நாங்கள் மீண்டும் சந்தித்து இது குறித்து கலந்துரையாடுவோம்.நான் எதிர்வரும் ஏப்ரல் மாதம் சீனாவுக்குச் செல்வேன். அதன் பிறகு சீன அதிபர் சீ ஜின்பிங் அமெரிக்கா வருவார். சீனா உடனான அரிய புவி கனிய மணல்கள் குறித்த பிரச்சினையும் தீர்க்கப்பட்டுள்ளது. அது உலகத்துக்கானது. தாய்வான் குறித்து நாங்கள் விவாதிக்கவில்லை. உக்ரைன் குறித்து நாங்கள் அதிகம் விவாதித்தோம். இதில், ஏதாவது முடிவு எட்டப்படுமா என்பது குறித்து நாங்கள் இணைந்து செயல்படப் போகிறோம். சீ ஜின்பிங் எங்களுக்கு உதவப் போகிறார் என்றும் குறிப்பிட்டுள்ளார். https://oruvan.com/us-reduces-import-tariffs-on-china-by-10-percent/
-
பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்!
பெலாரஸ்-லாட்வியா எல்லையில் சடலமாக மீட்கப்பட்ட இலங்கையர்! October 31, 2025 8:49 am சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு சென்ற இலங்கையர் ஒருவர் லாட்விய எல்லைக்கு அருகில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்தவர் 34 வயதுடையவர் என அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். ஒக்டோபர் 27–28ஆம் திகதி இரவு சட்டவிரோதமாக நாட்டிற்குள் நுழைய முற்பட்ட இருவரை எல்லைக் காவலர்கள் அடையாளம் கண்டுள்ளனர். அவர்களில் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த இருவரும் இலங்கை குடிமக்கள் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. லாட்விய எல்லைக் காவலர்கள் மற்றையவரை தடுத்து வைத்து பெலாரஷ்யப் பகுதிக்குத் திருப்பி அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தடயவியல் பரிசோதனைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும், மேலதிக விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, உயிரிழந்தவர் கிளிநொச்சி உருத்திரபுரத்தைச்சேர்ந்த சமுர்த்தி உத்தியோகத்தர் ஒருவர் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இவர், ஆட்கடத்தல் காரர்கள் மூலம் சட்டவிரோதமாக வெளிநாடு சென்றிருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. https://oruvan.com/sri-lankan-found-dead-on-belarus-latvia-border/
-
அமெரிக்க அணு ஆயுதங்களை ‘உடனடியாக’ சோதனை செய்ய டிரம்ப் உத்தரவு
அமெரிக்க அணு ஆயுதங்களை ‘உடனடியாக’ சோதனை செய்ய டிரம்ப் உத்தரவு October 31, 2025 அமெரிக்க அணு ஆயுதங்களை உடனடியாக சோதனை செய்து பார்க்குமாறு அமெரிக்க போர் துறைக்கு அதிபர் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். சீன அதிபர் ஷி ஜின்பிங் உடனான சந்திப்புக்கு முன்பாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்த உத்தரவை தனது சமூக ஊடகமான ட்ரூத் சோஷியல் பதிவில் தெரிவித்துள்ளார். “பிற நாடுகளின் சோதனை திட்டங்களால் நான் அமெரிக்காவின் அணு ஆயுதங்களை அதே அளவில் சோதனை செய்ய உத்தரவிட்டுள்ளேன்” என்று பதிவிட்டுள்ளார். உலகில் எந்த நாட்டை விடவும் அமெரிக்காவில் அதிக அணு ஆயுதங்கள் இருப்பதாக டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்யா இரண்டாவது இடத்திலும், அதை விட மிக குறைவாக ஆயுதங்களை கொண்டு சீனா மூன்றாவது இடத்திலும் உள்ளது. ஆனால், “ஐந்து ஆண்டுகளில் நாம் சமமாக இருப்போம்” என்று டிரம்ப் கூறியுள்ளார். அணு ஆயுதங்கள் அபாரமான அழிக்கும் சக்தியை கொண்டுள்ளன என்று அங்கீகரிக்கும் டிரம்ப், ஆயுதங்களை மேம்படுத்துவதை தவிர தனக்கு “வேறு வழியில்லை” என்றும் கூறியுள்ளார். https://www.ilakku.org/trump-orders-immediate-testing-of-us-nuclear-weapons/
-
கட்சிக்குள் இருந்தே முதலமைச்சர் வேட்பாளர்: தமிழரசுக் கட்சி திட்டவட்டம்…
கட்சிக்குள் இருந்தே முதலமைச்சர் வேட்பாளர்: தமிழரசுக் கட்சி திட்டவட்டம்… October 31, 2025 ”மாகாண சபைத் தேர்தலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியோடு தொடர்புடைய – கட்சிக்குப் பங்களிப்புச் செய்த பொருத்தமான யாவராவது ஒருவரைத்தான் எமது சார்பிலான முதலமைச்சர் வேட்பாளராகக் களமிறக்குவோம். எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளியில் இருந்து யாரையும் இறக்குமதி செய்ய மாட்டோம் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் வட மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் தெரிவித்தார். யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பொன்றின்போதே அவர் இவ்வாறு கூறினார். ” மாகாண சபைத் தேர்தல் தாமதிப்பது வருந்தத்தக்கது எனவும், மாகாண சபைத் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் நாம் கோரியிருக்கின்றோம் எனவும் கூறினார். மாகாண சபைத் தேர்தல் விரைந்து நடக்க வேண்டும் என்பது எங்களது எதிர்பார்ப்பு. இதில் முதலமைச்சர் வேட்பாளரைப் பொறுத்த வரையில் எங்களது கட்சியின் தெளிவான நிலைப்பாடு, கட்சிக்குள்ளே இருந்துதான் நாங்கள் ஒருவரை முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செய்வோம். எந்தச் சந்தர்ப்பத்திலும் வெளியில் இருந்து யாரையும் இறக்குமதி செய்ய மாட்டோம். எனினும், எங்களுடைய கட்சியில் அங்கத்தவராக இருப்பவர்தான் கட்சி என்றும் எடுக்க மாட்டோம். யாழ்ப்பாணத்திலோ – வடக்கு மாகாணத்திலோ எங்களோடு இணங்கிச் செயற்பட்டுக் கட்சியோடு இருந்தவர்கள், கட்சிக்காக வேலை செய்தவர்கள், உழைத்தவர்கள் என அவர்களில் ஒருவரைத்தான் நாங்கள் முதலமைச்சர் வேட்பாளராகத் தெரிவு செய்வோம்.” – எனவும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும் வடக்கு மாகாண அவைத் தலைவருமான சி.வி.கே. சிவஞானம் மேலும் குறிப்பிட்டார். https://www.ilakku.org/chief-ministerial-candidate-from-within-the-party-tamil-nadu-partys-manifesto/
-
சூடானில் மருத்துவமனை மீது தாக்குதல் – 460 பேர் உயிரிழப்பு…
சூடானில் மருத்துவமனை மீது தாக்குதல் – 460 பேர் உயிரிழப்பு… October 31, 2025 சூடானில் மகப்பேற்று மருத்துவமனை ஒன்றில் சுமார் 460 பேரை அந்நாட்டு துணை இராணுவப் படை கொன்று குவித்ததாக உலக சுகாதார அமைப்பின் இயக்குனர் ஜெனரல் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸஸ் தெரிவித்துள்ளார். கடந்த ஏப்ரல் 2023 முதல் சூடான் இராணுவத்திற்கும் துணை இராணுவ படையினருக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்துவருகிறது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை, தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள மேற்கு டார்பர் பகுதியில் எல்-பாஷர் நகர மகப்பேற்று மருத்துவமனைக்குள் இருந்த நோயாளிகள் அவர்களின் உறவினர்கள் உட்பட அனைவரையும் துணை இராணுவப் படையினர் கொடுரமாகக் கொன்றனர் என உள்ளுர் மக்கள் தெரிவித்தனர். நூற்றுக்கணக்கானோர் கொடூரமாகக் கொல்லப்பட்டகாக வந்த அறிக்கைகள் அதிர்ச்சியை அளிப்பதாக டெட்ரோஸ் கூறியுள்ளார். https://www.ilakku.org/சூடானில்-மருத்துவமனை-மீத/
-
மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவிலுக்கு பிணை!
மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவிலுக்கு பிணை! 31 Oct, 2025 | 11:38 AM முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி நெவில் வன்னியாராச்சியை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை (31) காலை உத்தரவிட்டுள்ளது. விளக்கமறியலில் வைக்கப்பட்ட நெவில் வன்னியாராச்சி கொழும்பு நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி, நெவில் வன்னியாராச்சியை 50 ஆயிரம் ரூபா பெறுமதியான ரொக்கு பிணை மற்றும் 10 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீர பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன் இந்த வழக்கு ஜனவரி 16 ஆம் திகதி மீண்டும் அழைக்கப்படும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார். நெவில் வன்னியாராச்சி சட்டவிரோத சொத்து சேர்ப்பு தொடர்பான விசாரணை தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஒக்டோபர் 02 ஆம் திகதி முன்னிலையாகிய போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் கீழ் தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/229119
-
இந்தியா - இலங்கை மின்கட்டமைப்பு இணைப்பு : மெய்நிகர் கூட்டத்தில் முக்கியப் பேச்சுவார்த்தை
இந்தியா - இலங்கை மின்கட்டமைப்பு இணைப்பு : மெய்நிகர் கூட்டத்தில் முக்கியப் பேச்சுவார்த்தை 31 Oct, 2025 | 11:01 AM (இணையத்தள செய்திப் பிரிவு) இந்தியா மற்றும் இலங்கைக்கு இடையேயான மின்கட்டமைப்பு இணைப்புத் திட்டத்தை (Power Grid Interconnection) செயல்படுத்துவது தொடர்பான நடைமுறைகளை விவாதிப்பதற்காக, 2025 ஒக்டோபர் 30 ஆம் திகதியன்று ஒரு மெய்நிகர் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில், இந்தியக் குழுவிற்கு இந்திய அரசின் மின்சாரத் துறைச் செயலாளர் ஸ்ரீ பங்கஜ் அகர்வால் தலைமை தாங்கினார். இலங்கைக் குழுவிற்கு இலங்கை அரசின் எரிசக்தி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கே.டி.எம். உதயங்க ஹேமபால தலைமை தாங்கினார். இருதரப்பு அதிகாரிகளும் மின்கட்டமைப்பு இணைப்புத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவது தொடர்பான அம்சங்கள் குறித்து ஆலோசித்தனர். 2025 ஜூன் 16 அன்று டெல்லியில் நடைபெற்ற கூட்டத்தின் போது, இருதரப்பினரும் இந்தியா-இலங்கை மின்கட்டமைப்பு இணைப்பிற்கான தொழில்நுட்ப அளவுருக்களை (Technical Parameters) உறுதிப்படுத்தியிருந்தனர். இந்த மின் பரிமாற்ற இணைப்பு இலங்கைக்குப் பல முக்கியமான நன்மைகளை வழங்கும், மின்சாரத் தட்டுப்பாடு ஏற்படும் காலங்களில் இலங்கையால் இந்தியாவில் இருந்து மின்சாரத்தை இறக்குமதி செய்ய முடியும். உபரியாக இருக்கும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை (Renewable Energy) ஏற்றுமதி செய்வதன் மூலம் இலங்கை அந்நியச் செலாவணியை ஈட்ட முடியும். ஏற்றுமதிகள் மற்றும் எரிசக்தி ஆதாரங்களைப் பல்வகைப்படுத்தவும், மின்கட்டமைப்பின் நிலைத்தன்மையை (Grid Stability) மேம்படுத்தவும், பிராந்திய மின் சந்தையில் ஒருங்கிணைக்கவும் புதிய வாய்ப்புகளை இந்தத் திட்டம் உருவாக்கும். இந்த முக்கியத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவது குறித்து இருதரப்பும் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/229112#google_vignette
-
தெற்காசியாவின் அதிக செலவுமிக்க நாடாக இலங்கை தேர்வு - எத்தனையாவது இடம் தெரியுமா?
தெற்காசியாவின் அதிக செலவுமிக்க நாடாக இலங்கை தேர்வு - எத்தனையாவது இடம் தெரியுமா? 31 October 2025 தெற்காசிய நாடுகளின் பிராந்திய கூட்டமைப்பின் இரண்டாவது மிக செலவுமிக்க நாடாக இலங்கை வகைப்படுத்தப்பட்டுள்ளது. இதன்படி, தனி ஒரு நபரின் வாழ்க்கைச் செலவு வாடகையைத் தவிர்த்து 506 டொலர் அல்லது 153,899 ரூபாய் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இது பயனர் உருவாக்கிய வாழ்க்கைச் செலவு புள்ளி விபர வலைத்தளமான Numbeo இன் தரவுகளை மையப்படுத்தித் தெரிவிக்கப்பட்டுள்ளது. சார்க் நாடுகளில், மாலைதீவு ஒரு நபருக்கு மாதம் 840.4 அமெரிக்க டொலர் செலவுடன் மிகவும் விலையுயர்ந்த நாடாகக் கருதப்படுகிறது. Numbeo இணையதளத்தின்படி, கொழும்பு நகரில் நான்கு பேர் கொண்ட ஒரு குடும்பத்துக்கு, வாடகை நீங்கலாக, சௌகரியமாக வாழ மாதாந்தம் ரூபா 570,997 செலவாவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இந்தச் செலவில் குழந்தைப் பராமரிப்பு, மளிகைப் பொருட்கள், பொழுதுபோக்கு, உணவகச் செலவுகள், பாடசாலைக் கட்டணம், வீட்டுச் செலவுகள் மற்றும் வாகனச் செலவுகள் போன்றவை அடங்கும். அதிக வரிகள் மற்றும் விலையேற்றம் காரணமாக மக்கள் சுமையுடன் உள்ள நிலையில், மத்திய வங்கியின் 'வருடாந்த பொருளாதார ஆய்வு 2024' சில முக்கிய விடயங்களைக் குறிப்பிடுகிறது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டியின் அடிப்படையில், சராசரி மாதாந்த குடும்ப நுகர்வுச் செலவு 2023 இல் ரூபா 103,383 ஆக இருந்தது, 2024 இல் 1.6 வீதமாக அதிகரித்து ரூபா 105,063 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், 2022 இல் (2021 உடன் ஒப்பிடுகையில்) பதிவான 74.9 வீத அதிகரிப்பு மற்றும் 2023 இல் (2022 உடன் ஒப்பிடுகையில்) பதிவான 16.5 வீத அதிகரிப்புடன் ஒப்பிடுகையில், இது குறிப்பிடத்தக்க அளவு குறைந்துள்ளதைக் காட்டுகிறது. இத்தகைய சூழ்நிலைகளில், குடும்பங்கள் தங்கள் செலவுகளைச் சமாளிப்பதற்கு எதிர்மறையான சமாளிப்பு வழிகளை நாட வேண்டியுள்ளது. மத்திய வங்கியின் 2024 செப்டம்பர் 18 முதல் 2025 செப்டம்பர் 18 வரையிலான தரவுகளின்படி, பொதுவாகப் பயன்படுத்தப்படும் ஒன்பது மரக்கறிகளின் ஒரு கிலோகிராம் சராசரி விலை ரூபா 225 இலிருந்து ரூபா 321.10 ஆக அதிகரித்துள்ளது, இது ஒட்டுமொத்தமாக 42.7 வீத உயர்வாகும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/428276/sri-lanka-named-south-asias-most-expensive-country-do-you-know-how-many-places
-
யாழில். காவற்துறையினரின் விசேட நடவடிக்கை - மூன்று நாளில் 08 பேர் கைது!
யாழில். காவற்துறையினரின் விசேட நடவடிக்கை - மூன்று நாளில் 08 பேர் கைது! adminOctober 31, 2025 யாழ்ப்பாணத்தில் கடந்த மூன்று தினங்களில் 08 பேர் போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். யாழ்ப்பாண காவற்துறை போதை தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டு வரும் விசேட நடவடிக்கையின் போது கடந்த மூன்று தினங்களிலும் , ஐஸ் போதைப்பொருள் , ஹெரோயின் , கஞ்சா கலந்த மாவா , போதை மாத்திரைகள் உள்ளிட்டவற்றுடன் , 08 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டுள்ள 08 பேரும் 25 வயதுக்கு உட்பட்டவர்கள் என்றும் , அவர்களை மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்திய நிலையில் அவர்கள் விளக்கமறியலில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர். https://globaltamilnews.net/2025/222106/
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
எனக்கும் மூன்று புள்ளிகள் கிட்டுமாக்கும்🥳😆
-
அன்று பிரபாகரன் எடுத்த தவறான முடிவால் இன்றுவரை பிரிந்து வாழும் யாழ் முஸ்லிம்கள்
யாழ் முஸ்லிம் மக்கள் வெளியேற்றம் இன்று 35, வது ஆண்டு நினைவு..! Vhg அக்டோபர் 30, 2025 யாழ்ப்பாண முஸ்லிம்மக்களை தமிழீழ விடுதலைப்புலிகள் 1990, அக்டோபர்,30, ல் பாதுகாப்பாக வெளியேற்றியது தொடர்பான 35, வது ஆண்டு நினைவு நிகழ்வுகள், கூட்டங்கள், கருத்தரங்குகள், கண் காட்சிகள் என்றுமில்லாதவகையில் 2025, அக்டோபர் மாதம் வடமாகாணத்தில் இடம்பெறுவதை காணலாம். நல்ல விடயம் கட்டாயம் அந்த நினைவுகளும் மீட்டுப்பார்க்க வேண்டியது. ஆனால் இவ்வாறான துன்பியல் சம்பவம் ஏன் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றது.? அதற்கான காரணம் ஏன் விடுதலைப்புலிகளுக்கு ஏற்பட்டது? இந்த உண்மைகளையும் ஏற்பாட்டாளர்கள் காட்சிப்படுத்த வேண்டும் அந்த வரலாறுகளையும் இவ்வாறான நினைவுரைகளை ஆற்றும் அறிஞர்கள் கூறவேண்டும். அந்த காரணத்தை மறைத்து வெளியேற்றியது தவறு. இனசுத்திகரிப்பு, என வரைவிலக்கணம் வழங்குவது பக்கசார்பான உரைகளாகவே அமையும் ஈழவிடுதலை போராட்டம் 1977, க்கு பின்னர் இளைஞர் அமைப்புகள் 36, தோற்றம் பெற்றபோது தனியே தமிழ் இளைஞர்கள் மட்டும் ஆயுதம் ஏந்தவில்லை தமிழ்+ முஸ்லிம் இளைஞர்கள் சமய, இன, சாதி வேறுபாடுகள் இன்றி போராட்டத்தில் இணைந்தனர். இறுதிவரை போராடிய விடுதலைப்புலிகளில் 46, முஸ்லிம் மாவீரர்கள் போராடி உயிர் நீத்த வரலாறு உண்டு. தமிழ் போராளிகளுக்கு முஸ்லிம்பெயர்களும், முஸ்லிம் போராளிகளுக்கு தமிழ் பெயர்களும் இயக்க பெயர்களாக பரஸ்பரம் மாறி மாறி சூட்டிய வரலாறுகளும் உண்டு. இந்த ஒற்றுமையான விடுதலைப்பயணம் தொடர்ந்தபோதுதான் 1990, ல் அப்போதைய ஜனாதிபதி ஆர் .பிரமதாசா பதவி ஏற்ற பின்னர் தமிழ் முஸ்லிம்மக்களை பிரித்தாழும் தந்திரோபாயம் காரணமாக தனியாக முஸ்லில் ஊர்காவல்படையை நிறுவி விடுதலைப்புலிகளுக்கு எதிராக இராணுவத்துடன் இணைந்து செயல்பட வைத்தார். இதனால் விடுதலைப்புலிகளில் முஸ்லிம் இளைஞர்களை பிரித்தும், தமிழ் முஸ்லிம் உறவில் விரிசலையும் ஏற்படுத்த சதிசெய்தமையால் அம்பாறை மாவட்டம் திருக்கோயில் தொடங்கி மட்டக்களப்பு மாவட்டம் கதிரவெளி வரையும் 1990, செப்டம்பர் மாதம் பல தமிழ் கிராமங்கள் சுற்றிவளைத்து தமிழர்கள் கொலைசெய்யப்பட்டனர். அம்பாறை மாவட்டத்தில் உடும்பன்குளம், திராய்கேணி, வீரமுனை, மல்லிகைத்தீவு, மட்டக்களப்பு மாவட்டத்தில் சத்துருக்கொண்டான், புதுக்குடியிருப்பு, வந்தாறுமூலை பல்கலைக்கழகம், சித்தாண்டி, என படுகொலை பட்டியல் நீண்டது அத்தனை படுகொலைகளுக்கும் முஸ்லிம் ஊர்காவல் படையினரும் துணைபோனார்கள். இதனால் ஏற்பட்ட தமிழ் முஸ்லிம் பிழவு காத்தான்குடி, ஏறாவூர் பள்ளிவாசல்களில் முஸ்லிம் மக்கள் படுகொலைக்கு காரணமானது. அவ்வாறான படுகொலைகள் யாழ்ப்பாணத்தில் இடம்பெறாமல் தடுக்கவும், முஸ்லிம்மக்களை பாதுகாக்கவும் யாழ் முஸ்லிம் மக்கள் பாதுகாப்பாக வெளியேறுமாறு விடுதலைப்புலிகள் கூறி அவர்களை அனுப்பினர். இந்த துன்பியல் நிகழ்வு தொடர்பாக 2004 ஏப்ரல் கிளிநொச்சியில் விடுதலை புலிகளை சந்தித்த முஸ்லிம் அரசியல் பிரமுகர்களிடம் பகிரங்கமாக இது ஒரு துன்பியல் சம்பவம் என்பதை வலியுறுத்தினர். எனவே யாழ் முஸ்லிம் மக்களின் வெளியேற்றம் தனியே வடமாகாணத்துடன் மட்டும் சம்மந்தப்பட்ட விடயம் இல்லை அது கிழக்கு மாகாணத்துடன் சம்மந்தப்பட்ட விடயம் என்பதை அனைவரும் புரிவது நல்லது. -பா.அரியநேத்திரன்- https://www.battinatham.com/2025/10/35.html
-
பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் !
பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் ! By SRI October 30, 2025 பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் (WINE) தொடர்பாக கண்டுபிடிப்பாளர் விக்டர் வடமாகாண ஆளுநருக்கு தெரியப்படுத்தி , இதன் ஊடாக ஏற்றுமதி பொருளாதாரத்தில் எவ்வாறான மாற்றத்தை உருவாக்கலாம் என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்தினார். வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகனுக்கும், TAATAS நிறுவனத்தின் முகாமைத்துவ பணிப்பாளர்கள் மற்றும் கண்டுபிடிப்பாளர் விக்டர் ஆகியோருக்கும் இடையிலான கலந்துரையாடலொன்று ஆளுநர் செயலகத்தில் நேற்று (29) நடைபெற்றது. இக்கலந்துரையாடலில் பனம்பழத்தில் இருந்து புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட வைன் (WINE) தொடர்பாக ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. தாராளமாக மூலப்பொருளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளமை மற்றும் உற்பத்திச் செலவு மிகக்குறைவாக உள்ளமை ஆகியன காரணமாக உலக சந்தையில் இதற்கான கேள்வி அதிகம் உள்ளமையையும் ஆளுநருக்கு குறிப்பிட்ட கண்டுபிடிப்பாளர் விக்டர், இதன் ஊடாக ஏற்றுமதி பொருளாதாரத்தில் எவ்வாறான மாற்றத்தை உருவாக்கலாம் என்பது தொடர்பிலும் தெளிவுபடுத்தினார். பல மில்லியன் ரூபாக்களை ஈட்டக்கூடிய வாய்ப்புக்களிருந்தும் அதனை உரியமுறையில் பயன்படுத்த தவறியுள்ளமையையும் சுட்டிக்காட்டினார். தமது தொழிற்முயற்சியின் விரிவாக்கம் மற்றும் எதிர்காலத்திட்டங்களின் ஊடாக உருவாக்கப்படவுள்ள தொழில்வாய்ப்புக்கள் தொடர்பிலும் சுற்றுச்சூழல் நேயமான இந்த உற்பத்திச் செயற்பாட்டின் அவசியம் தொடர்பாகவும் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது. இவ்வாறான முயற்சிகள் காலத்தின் தேவையறிந்த செயற்பாடு என வரவேற்ற ஆளுநர், மாகாண சபையூடான ஒத்துழைப்புக்கள் வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டார். https://www.battinews.com/2025/10/blog-post_800.html
-
சமூக ஸ்திரத்தன்மைக்கு போதைப்பொருள் ஒழிப்பு அவசியம்: ஜனாதிபதி
சமூக ஸ்திரத்தன்மைக்கு போதைப்பொருள் ஒழிப்பு அவசியம்: ஜனாதிபதி சமூக ஸ்திரத்தன்மைக்காக போதைப்பொருள் அச்சுறுத்தலைத் தோற்கடிக்க வேண்டும் என்றும், அதற்காகத் தானும் அரசாங்கமும் எடுத்துள்ள நடவடிக்கைகள் நிச்சயமாக வெற்றி பெறும் என்றும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். விஷ போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான அரசாங்கத்தின் புதிய திட்டமான ‘நாடே ஒன்றுபட்டு’ தேசிய நடவடிக்கையின் ஆரம்ப நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார். போதைப்பொருள் நாட்டைச் சூழ்ந்துள்ள ஒரு மாயாஜாலப் பேரழிவு என்றும், அதைத் தோற்கடிக்கத் தாம் நடவடிக்கை எடுப்பதாகவும், குழந்தைகள், பொதுச் சமூகம் மற்றும் ஒரு தேசம் என்ற வகையில் முழு நாடும் இந்தப் பேரழிவின் இரையாகி வருவதாகவும் ஜனாதிபதி கூறினார். இளம் தலைமுறையினர் போதைப்பொருள் அச்சுறுத்தலின் மிகப்பெரிய இரையாகிவிட்டனர் என்றும், இந்த மாயாஜாலச் சூறாவளி கிராமங்கள் மற்றும் நகரங்களில் இப்போது பரவி வருவதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். "ஒரு குழந்தை பிறக்கும்போது, தாய்க்கும் தந்தைக்கும் பெரிய எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், தங்கள் கண் முன்னே தங்கள் குழந்தை அழிந்து போவதைப் பார்க்கிறார்கள். தாய் மிகுந்த வேதனைக்குள்ளாகி, சமூகத்தால் ஒதுக்கி வைக்கப்படுகிறார். நாம் 800 - 900 கிலோ போதைப்பொருளைப் பறிமுதல் செய்கிறோம். நாம் வந்த அனைத்தையும் கைப்பற்றவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். அனைத்தையும் கைப்பற்றினால், அது இங்கே வராது. இதனால், அவர்கள் அறிந்திருக்கிறார்கள், கைப்பற்றப்பட்ட அளவு வந்த அளவில் ஒரு சிறு பகுதிதான் என்று. ஆனால், கைது செய்யப்பட்ட அளவைப் பார்த்தால், விநியோகிக்கப்படும் அளவு எவ்வளவு பெரியது என்பதை நாம் புரிந்து கொள்ளலாம். 800 கிலோ போதைப்பொருள் ரூபா 1,500 கோடிக்கு விற்கப்படுகிறது. இதனால், இந்த வர்த்தகத்தின் மூலம் பெரிய அளவில் பணம் குவிக்கப்பட்டுள்ளது. இது ஒரே நேரத்தில் பெரும் கறுப்புச் சாம்ராஜ்யங்களை உருவாக்கும் கடத்தலாக மாறியுள்ளது. அவர்களுக்குள் இந்தச் சந்தையைப் பங்கிட்டுக் கொள்ள மோதல்கள் உருவாகியுள்ளன. அண்மைக் காலத்தில் நடந்த துப்பாக்கிச் சூடுகள் அனைத்தும் குழுக்களுக்கு இடையே நடந்த சம்பவங்கள். ஆங்காங்கே துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன. இவை அனைத்தும் போதைப்பொருளுடன் தொடர்புடையவை. எப்படி இவ்வளவு துப்பாக்கிகள், வெடிமருந்துகள், பாதுகாப்பு வசதிகள் உருவாகின? ஒரு நாட்டின் பாதுகாப்பிற்காக அமைக்கப்பட்ட அரச கட்டமைப்பு உள்ளது. ஆனால், உண்மையில் நடந்தது என்னவென்றால், அவர்களின் நிதி பலத்தால் அரச கட்டமைப்பு ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. அதனால், இனியும் இந்த நிலையை மறைத்துக்கொண்டு எதிர்கொள்ள முடியாது. அவர்கள் கையில் துப்பாக்கிகள் உலவுகின்றன. அவர்கள் துப்பாக்கி தயாரிப்பாளர்கள் அல்ல. உரிமம் பெற்ற ஆயுதங்களைப் பெற அதிகாரம் இருப்பது அரசுக்குத்தான். அரசுக்கு சொந்தமான துப்பாக்கிகள் அவர்கள் கைக்கு எப்படிச் சென்றன? சில இராணுவ முகாம்களில் இருந்து 73 T56 துப்பாக்கிகள் அவர்கள் கைக்குச் சென்றதாகத் தற்போது தகவல் வந்துள்ளது. அதில் 35 கைது செய்யப்பட்டுள்ளது. 38 அவர்கள் கைகளில் உள்ளன. அவை அரசுக்கு சொந்தமான ஆயுதங்கள். அதேபோல், அதற்கான குண்டுகளையும் நாங்கள் கைப்பற்றினோம். இராணுவத்தின் முக்கிய கேர்னல் ஒருவர் குண்டுகளை வழங்கியுள்ளார். அதற்குப் பதிலாக வங்கியில் பணம் வந்துள்ளது. அரசுக்கு சொந்தமான துப்பாக்கியை ஒரு பொலிஸ் அதிகாரி விற்றுவிட்டுத் தப்பிச் செல்கிறார். துப்பாக்கிகள் விற்கப்படுகின்றன. ஏன் ஆயுதக் குழுக்களின் பணபலம் நமது அரச கட்டமைப்பை விழுங்க முடிந்தது?" பொலிஸ், இராணுவம் இந்த போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கப் பெரும் பங்காற்றினாலும், ஒரு சிலரின் நடவடிக்கைகள் காரணமாக கறுப்பு அரசாங்கம் ஒன்று உருவாகி வருவதாக ஜனாதிபதி தெரிவித்தார். குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களத்தின் சில அதிகாரிகள் பாதாள உலகத் தலைவர்களுக்குப் கடவுச்சீட்டுக்களைத் தயாரித்துக் கொடுத்துள்ளதாகவும், இத்தகைய நடவடிக்கைகள் காரணமாக அரசாங்கம் அழிந்து போயுள்ளதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார். அதிகாரபூர்வமான அரச பொறிமுறையைப் போல பலம் வாய்ந்ததாக இல்லாவிட்டாலும், அதற்கு இணையான ஒரு அரச பொறிமுறையை பாதாள உலகம் உருவாக்கியுள்ளது என்று கூறிய ஜனாதிபதி, கறுப்புப் பொறிமுறையை அழிக்க வேண்டும் என்றும் கூறினார். "இந்த நாட்டில் இரண்டு அரசாங்கங்கள் இருக்க முடியாது. மக்களின் ஜனநாயக பலத்தால் நிறுவப்பட்ட அரசாங்கம் மட்டுமே இருக்க முடியும். கறுப்பு அரசாங்கம் அழிக்கப்படும். இது இத்துடன் நிற்காது. இது எங்கு வளர்ந்து வருகிறது? இப்போது அரசியல் கட்சிகளுக்குள் வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர்கள் வருகிறார்கள். தலைவர்கள் வருகிறார்கள். தனிப் பட்டியல்களைத் தயாரித்துத் தேர்தல்களில் போட்டியிட்டு அது ஒரு அரசியல் பொறிமுறையாக மாறியுள்ளது. ஒரு காலத்தில் இது அரசியலின் பாதுகாப்பாக இருந்தது. இப்போது அது அரசியல் ஆதிக்கம். ஒரு அரசாங்கத்தை அமைக்கும் அளவிற்கு விதைகள் பரவியுள்ளன. இது நீண்ட காலமாக அரசியல் ஆசீர்வாதத்தின் கீழ் நடந்து வருகிறது." இந்தச் செயல்களில் அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் தலையீடு செய்துள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கத் தாம் உறுதியாகத் தீர்மானித்துள்ளதாகவும், அது நிச்சயம் நிறைவேற்றப்படும் என்ற கருத்து சமூகத்தில் உருவாகியுள்ளது என்றும் கூறினார். பொலிஸின் சில அதிகாரிகள் இதில் ஈடுபட்டிருந்தாலும், தற்போதைய பொலிஸ்மா அதிபர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் போதைப்பொருள் ஒழிப்புக்காகக் கடும் முயற்சி எடுப்பதாகக் கூறிய ஜனாதிபதி, பொலிஸ் வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலானவர்கள் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்ட காலம் இதுவே என்றும் தெரிவித்தார். அரச கட்டமைப்பிற்குள் இந்தச் செயல்களில் ஈடுபடுபவர்கள் இருந்தால், உடனடியாக விலக வேண்டும் என்று கூறிய ஜனாதிபதி, யாரும் மறைந்து கொள்ள முடியாது என்றும் குறிப்பிட்டார். போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான இளைஞர்கள் மற்றும் பாடசாலை மாணவர்களைக் காப்பாற்ற, விளையாட்டு, இசை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்ட ஒரு கலாச்சாரம் தேவை என்றும், அதற்கான திட்டம் எதிர்காலத்தில் உருவாக்கப்படும் என்றும் கூறிய ஜனாதிபதி, போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்களை மறுவாழ்வுக்கு உட்படுத்துவது நமது பொறுப்பு என்றும் கூறினார். ஏற்கனவே தன்னார்வ மறுவாழ்வு மையங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும், போதைப்பொருள் பாவனைக்கு அடிமையான குழந்தைகளை அந்த இடங்களுக்குக் கொண்டு வந்து ஒப்படைக்குமாறு பெற்றோர்களிடம் கோரிக்கை விடுத்தார். இதற்காக வரவுசெலவுத் திட்டத்தில் பெரும் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் சுங்கம், குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம், மோட்டார் போக்குவரத்துத் திணைக்களம், இராணுவம், புலனாய்வுப் பிரிவுகள் மற்றும் பொலிஸ் ஆகிய அனைத்தும் இணைந்த ஒரு தேசிய செயல்பாட்டு மையம் அமைக்கப்படும் என்றும், அதன் மூலம் போதைப்பொருள் கடத்தலுடன் தொடர்புடைய யாரும் வெளிநாடுகளுக்குச் செல்லவோ அல்லது மறைந்து தப்பிச் செல்லவோ இடம் இருக்காது என்றும் கூறினார். "இது அவர்களுக்குச் சொந்தமான நாடு அல்ல என்பதை நினைவில் கொள்ளுங்கள்..." என்று கூறிய ஜனாதிபதி, மதத் தலைவர்களை ஒன்றிணைத்து பல திட்டங்களைச் செயல்படுத்த இருப்பதாகவும், அதற்கு மதத் தலைவர்களின் ஆலோசனையை எதிர்பார்ப்பதாகவும் கூறினார். இந்த அபாயம் குறித்துச் சமூகத்திற்குச் செய்தி தெரிவிக்கும் பொறுப்பு ஊடகங்களுக்கு உள்ளது என்றும், பொறுப்பான ஊடகவியலில் ஈடுபட வேண்டும் என்றும் வலியுறுத்திய ஜனாதிபதி, போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து நாட்டை விடுவிக்கும் இந்தப் பணிக்கு அனைத்து ஊடக நிறுவனங்களும் ஆதரவு தெரிவிக்க ஒப்புக்கொண்டுள்ளதாகக் கூறினார். ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுக்கு அரசியல்வாதிகளிடமிருந்து ஆரோபிக்கப்பட்ட அதிகாரம் கிடைத்துள்ளது என்றும், இதன் காரணமாக விசாரணைகள் முடங்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். "நமது நாட்டில் தீர்க்கப்படாத ஒவ்வொரு குற்றத்திற்குப் பின்னாலும் அரசியல் பாதுகாப்பு உள்ளது. அது பொலிஸின் திறமையின்மை அல்ல. நான் ஒன்றைச் சொல்கிறேன். அவர்களின் முதல் அதிகாரம், அரசியல் அதிகாரம், இப்போது முடிவுக்கு வந்துவிட்டது. பொலிஸ் செய்யும் பணியைப் பற்றி மிகவும் திருப்தி அடைகிறேன். சிலர் பயப்படுகிறார்கள். இன்றும் சில குற்றங்கள் சிறைச்சாலைகளில் இருந்தே இயக்கப்படுகின்றன மேலும் அவர்கள் அதனை நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அண்மையில் நடந்த வெலிகம சம்பவம். சிலர் பயத்தில் இருக்கிறார்கள். சிலர் பணத்திற்காக சிக்கியுள்ளனர். இன்று இலங்கை பொலிஸ் அந்த ஆபத்தை ஏற்று, இந்த நடவடிக்கையைத் தொடங்க கடமைப்பட்டுள்ளது. பொலிஸ் குற்றவாளியின் எதிரியாக மாறுகிறது. மேலும், எதிர்காலத்தில் விமர்சனத்திற்கு உள்ளாகப் போகும் சில பொலிஸ் அதிகாரிகள் இருக்கிறார்கள்." போதைப்பொருள் ஒழிப்புக்குக் கீழ் மட்டத்தில் இருந்து மேல் மட்டம் வரை பரவிய மக்கள் குரல் தேவை என்றும், அதற்காக ஒரு மக்கள் இயக்கத்தை உருவாக்குவதாகவும் கூறிய ஜனாதிபதி, இந்த அச்சுறுத்தலுக்கு எதிரான மிகவும் சக்திவாய்ந்த குரல் மற்றும் பாதுகாவலன் அதுவே என்றும் கூறினார். "நாம் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன், நாடே ஒன்றுபட்டு. இந்த அச்சுறுத்தலுக்கு எதிராக, தனிப்பட்ட ஒருவருக்கு எவ்வளவு நம்பிக்கை இருந்தாலும், தனியாக முடியாது. அரசாங்கத்தால் மட்டும் முடியாது. பொலிஸால் மட்டும் முடியாது. அரச கட்டமைப்பால் மட்டும் முடியாது. அனைவரும் ஒன்றிணைய வேண்டும். இதுதான் சந்தர்ப்பம். இறுதியாக, போதைக்கு அடிமையானவர்களுக்கும், விற்பவர்களுக்கும், உடனடியாக விலகுங்கள். அதற்கு எதிரான சக்திவாய்ந்த இயக்கம் கட்டமைக்கப்பட்டு வருகிறது. நிச்சயமாக இந்த மாயாஜால சூறாவளியை அழிப்போம். இந்த மாயாஜால சூறாவளியில் இருந்து நமது குழந்தைகளையும், சமூகத்தையும் விடுவிப்போம். இந்த மாயாஜால சூறாவளியில் இருந்து தேசத்தைக் காப்பாற்றுவோம். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைவோம்." https://adaderanatamil.lk/news/cmhd2egbk01auqplp01fasoid
-
இலங்கையின் பொருளாதாரத்தில் அடுத்தாண்டு 3.1 வீத வளர்ச்சி!
இலங்கையின் பொருளாதாரத்தில் அடுத்தாண்டு 3.1 வீத வளர்ச்சி! அடுத்த ஆண்டு இலங்கையின் பொருளாதாரம் 3.1 வீதம்வரை வளர்ச்சியடைய முடியும் என்று சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. ஊடக சந்திப்பொன்றில் கலந்து கொண்ட, சர்வதேச நாணய நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் தோமஸ் ஹெல்ப்லின் இந்தத் தகவலைத் தெரிவித்துள்ளார். சர்வதேச நாணய நிதியத்தின் ஊடாக இலங்கை அரசாங்கம் சீர்திருத்த வேலைத்திட்டமொன்றை ஆரம்பித்த பின்னணியில், பொருளாதார வளர்ச்சியில் வலுவான மீட்சி ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வளர்ச்சி 5 வீதமாகக் காணப்பட்ட அதேவேளை, இந்த ஆண்டின் முதல் பாதியில் வளர்ச்சி 4.8 வீதமாக இருந்தது. தற்போது அந்த வலுவான மீட்சியிலிருந்து ஒரு குறிப்பிட்ட அளவு சாதாரண நிலைக்குத் திரும்புதல் மாத்திரமே நிகழ்ந்துள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://newuthayan.com/article/இலங்கையின்_பொருளாதாரத்தில்_அடுத்தாண்டு_3.1_வீத_வளர்ச்சி!
-
உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் சிறீதரன் எம்.பி கலந்துரையாடல்!
உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் சிறீதரன் எம்.பி கலந்துரையாடல்! இலங்கைத் தமிழரசுக் கட்சியின்நாடாளுமன்றக் குழுத் தலைவரும், யாழ். தேர்தல் மாவட்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களை நேற்றைய தினம் நாடாளுமன்ற உறுப்பினரின் யாழ்ப்பாண மாவட்ட அலுவலகத்தில் மாலை சந்தித்து கலந்துரையாடினார், நாடாளுமன்றில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள 2026ஆம் ஆண்டுக்கான வரவு- செலவுத் திட்டத்திற்கான பிரேரணைகள், விவாதங்களின் போது உள்ளூராட்சி மன்றங்களின் செயற்பாடுகள், விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டது. தவிசாளர்களினால் ஆரோக்கியமான கருத்துக்களை தெரிவித்ததுடன் ஒவ்வொரு விடயங்களையும் தனித்தனியாக ஆராய்ந்து உரிய விடயங்களை கேட்டறிந்து கொண்டதுடன் எதிர்கால நடவடிக்கைக்கான விடயங்கள் தொடர்பாகவும் ஒவ்வொரு பிரதேச சபைகளின் தலைவர்களிடமிருந்தும் விபரங்களை பெற்றுக்கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் மிகவும் பயனுள்ளதாகவும், ஆரோக்கியமான கலந்துரையாடல்களாகவும் அமைந்துள்ளது எனக் குறிப்பிட்டார். எதிர்காலத்தில் இவ்வாறான சந்திப்புக்கள், கலந்துரையாடல்களை மேற்கொண்டு உள்ளூராட்சி மன்ற செயற்பாடுகளையும் எமது செயற்பாடுகளையும் வெற்றிகரமாக முன்னெடுக்க உதவியாக இது அமையும், என சிறீதரன் எம்.பி தெரிவித்தார். https://newuthayan.com/article/உள்ளூராட்சி_மன்றங்களின்%C2%A0_தலைவர்களுடன்_சிறீதரன்_எம்.பி_கலந்துரையாடல்!%C2%A0
-
வல்வெட்டித்துறையில் குண்டு மீட்கப்பட்ட சம்பவம் – இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் கைது
வல்வெட்டித்துறையில் குண்டு மீட்கப்பட்ட சம்பவம் – இந்தியாவிலிருந்து நாடுகடத்தப்பட்டவர்கள் கைது adminOctober 29, 2025 யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை பகுதியில் விடுதலைப்புலிகளின் வெடிகுண்டு என சந்தேகிக்கப்படும் குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் தேடப்பட்டு வந்த மூன்று சந்தேகநபர்களையும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர் வல்வெட்டித்துறை பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் , வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. அது தொடர்பில் வல்வெட்டித்துறை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில் ,குறித்த வெடிகுண்டினை மறைத்து வைத்திருந்த குற்றச்சாட்டில் மூவரை கைது செய்தவற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். அந்நிலையில் சந்தேகநபர்கள் மூவரும் , கடல் வழியாக இந்தியாவுக்கு தப்பி சென்ற நிலையில் , கடந்த 15 நாட்களுக்கு முன்னர் , இந்தியாவில் தங்கி நிற்பதற்கான ஆவணங்கள் , விசா என்பவை இல்லாத நிலையில் ,இந்திய காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை விசாரணைகளின் பின்னர் நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை இந்தியாவில் இருந்து இலங்கைக்கு நாடு கடத்தினர். அந்நிலையில் குறித்த மூவரும் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வந்திறங்கிய வேளை மூவரையும் விமான நிலையத்தில் வைத்து பயங்கரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர்களை தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2025/222073/
-
யாழ்கள மகளிர் உலக கிண்ணப் போட்டி 2025
அடடா. தென்னாபிரிக்கா இப்படி விளாசும் என்று எதிர்பார்க்கவில்லை! இங்கிலாந்து மகளிருக்கு பெரிய மூக்குடைபாடுதான்👃 நமக்கு புள்ளி ஏற வாய்ப்பில்லை☹️
-
மகாவம்சம் : தமிழ் மொழிபெயர்ப்புப் பிரதிகளின் வரலாறு | என்.சரவணன்
மகாவம்சம் : தமிழ் மொழிபெயர்ப்புப் பிரதிகளின் வரலாறு | என்.சரவணன் ஐந்தாம் நூற்றாண்டில் வெளிவந்த முதலாவது மகாவம்சம் கி.மு 483 தொடக்கம் கி.பி 362 வரையான சுமார் 845 ஆண்டுகால இலங்கையின் சரித்திரத்தைக் கூறுகிறது. இவ்வாறு உலகிலேயே தொடர்ச்சியாக தன் வரலாற்றை எழுதிவரும் நாடாக இலங்கை திகழ்கிறது. பாளி மொழியில் மகாவம்சம் முதலில் எழுதப்பட்டது. உலகிலேயே தொடர்ச்சியாக சுமார் 2600 ஆண்டுகால சரித்திரத்தை எழுதிவருகிற ஒரே நாடாக இலங்கை திகழ்கிறது. அதன் மீதான விமர்சனங்கள், சரிபிழைகளுக்கு அப்பால் அது வரலாற்று மூலதாரங்களுக்கு துணை செய்திருக்கிறது என்பது உண்மை. அதன் பின்னர் 19ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தான் அப்படி ஒரு வரலாற்று புனித நூல் இருப்பதை உலகின் கவனத்துக்கு கொண்டுவந்தார்கள் ஆங்கிலேய அறிஞர்கள். அதிலிருந்து பலர் பாளி மொழியிலிருந்து மொழிபெயர்ப்பு செய்ய முயற்சித்து இருக்கிறார்கள். முதன் முதலில் 1837 ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் வெளிவந்தபோதும் அதன் பின்னர் அதில் உள்ள குறைகளின் காரணமாக இன்னும் சிலரால் வெவ்வேறு காலங்களில் அதன் மொழிபெயர்ப்பு வெளிவந்துள்ளது. இறுதியில் 1908 ஆம் ஆண்டு வில்ஹெம் கைகர் மொழிபெயர்த்த ஜேர்மன் மொழிபெயர்ப்பு பின்னர் ஆங்கிலத்துக்கு மொழிபெயர்க்கப்பட்டு 1912 ஆம் ஆண்டு வெளிவந்தது. இந்த மொழிபெயர்ப்பே இன்றுவரை அனைவராலும் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதியாக உலகெங்கிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதுவே இலங்கை அரசால் அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்ட பிரதியும் கூட. 1877 ஆம் ஆண்டு தான் முதன்முதலில் சிங்களத்தில் வெளிவந்தது. 1872 இல் புதிய தேசாதிபதியாக நியமனமான கிரகெரி டர்னரின் மகாவம்சப் பிரதியைப் பார்த்து வியந்ததுடன் அதனை சிங்கள மொழியில் மொழிபெயர்க்கும் பணியை 1874 இல் ஹிக்கடுவே ஸ்ரீ சுமங்கள தேரரிடமும், பட்டுவந்துடாவே ஸ்ரீ தேவ ரக்சித்த பண்டிதரிடமும் ஒப்படைத்தார். ஆனால் டேர்னரின் பிரதி எவ்வாறு பொதுவில் எற்றுக்கொள்ளப்படவில்லையோ அதுபோலவே அதை ஆதாரமாகக் கொண்ட இவர்களின் பிரதியும் பொதுவில் சிங்கள வரலாற்று அறிஞர்களால் மூலாதாரமாகப் பயன்படுத்தப்படுவதில்லை. ஆனால் மிகச் சமீபத்தில் எனது தேடல்களில் போது புதுத் தகவல் ஒன்றை சமீபத்தில் கொண்டுபிடிக்க முடிந்தது. அதாவது முதன்முதலில் மகாவம்சம் மொழிபெயர்க்கப்பட்டது இலங்கையிலோ இலங்கை மொழியிலோ இல்லை. தாய்லாந்தில் சியாமிஸ் மொழியிலேயே மொழிபெயர்க்கபட்டிருக்கிறது என்கிற தகவல் தான் அது. அதை தனியான கட்டுரையாக பின்னர் தருகிறேன். இந்த வரிசையில் தமிழில் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் என்ன என்பது தான் இக்கட்டுரையின் அடிபட்டை நோக்கம். மகாவம்சத்தின் முதலாவது தொகுதியைத் தவிர வேறெந்தத் தொகுதியும் தமிழில் மிகச் சமீபகாலம் வரை வெளிக்கொணரப்பட்டதில்லை. அந்த முதலாவது தொகுதியை மாத்திரம் ஐந்து வெவ்வேறு நபர்களால் கொணரப்பட்டிருக்கிற போதும் அவை எதுவும் முழுமையானவை அல்ல. அவையும் கூட உள்ளதை உள்ளபடி மொழிபெயர்க்கப்பட்ட பிரதிகள் அல்ல. சுருக்கிய பொழிப்புரையாகவோ, அல்லது சொந்த விளக்கவுரையாகவோ, புதினக் கதைகளாகவோ அமைந்துள்ளவை. தமிழில் வெளியான எந்த மகாவம்ச வெளியீடுகளும் மூல நூலுக்கு நியாயம் செய்ததில்லை. அவரவர் அவரவருக்கு புரிந்த விளக்கவுரைகளையே வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை உறுதியாகக் கூறலாம். அவ்வாறு இதுவரை தமிழில் வெளிவந்த நூல்களை இனி பார்க்கலாம். மகாவம்சம் – சங்கரன் – 1962 இன்று நம்மிடையே தமிழில் காணக்கிடைக்கிற முதல் பிரதி 1962 ஆம் ஆண்டு “மகாவம்சம்” இலங்கைத் தீவின் புராதன வரலாறு என்கிற தலைப்பில் சங்கரன் வெளிக்கொணர்ந்த நூல் பிரதியே. சென்னையில், மல்லிகை வெளியீடாக 410 பக்கங்களில் இது வெளிவந்திருக்கிறது. இப்பிரதியில் மகாவம்சத்தின் மொத்த விபரங்களும் வெளியாகவில்லை. ஆனால் சுருக்கிய விபரங்கள் இதில் அந்தந்த தன இலக்கங்களின் பிரகாரம் வெளியாகியுள்ளதைக் காணலாம். தனக்கு பாளி மொழி தெரியாது என்றும், இலங்கை சர்க்காரால் அதிகாரபூர்வ நூலாக வெளியிடப்பட்ட வில்ஹெம் கைகர் மொழிபெயர்த்த ஆங்கிலப் பிரதியிலிருந்தே தமிழ்படுத்தியுள்ளேன் என்று சங்கரன் தனது முன்னுரையில் குறிப்பிடுகிறார். ஈழத்தின் கதை – கே.வி.எஸ்.வாஸ் – 1959 1956 ஆம் ஆண்டு இலங்கையில் சிங்கள பௌத்தம் மீழெழுச்சி கொண்ட காலத்தில் மீண்டும் மகாவம்சக் கதையாடல் களத்துக்கு வந்த காலம். அதே காலத்தில் தமிழகத்தில் இருந்து ஆனந்தவிகடனில் கே.எஸ்.வாஸ். ஈழத்தின் கதை என்கிற தலைப்பில் தொடராக ஒரு புதினத்தை எழுதிவந்தார். மகாவம்சம், ராஜாவலிய போன்றவற்றை அடிப்படியாகக் கொண்டு அது எழுதப்பட்டதாக அதில் கூறப்பட்ட போதும் அது மகாவம்ச சாரத்தை அடியொற்றி ஜனரஞ்சகப்படுத்தி எழுதப்பட்ட புதினக்கதை என்று கூறிவிடலாம். 1959இல் இது 260 பக்கங்களில் நவலட்சுமி புத்தகசாலையின் வெளியீடாக வெளிவந்தது. முதலாவது அத்தியாயத்தின் தலைப்பே “சிங்கன் பிறந்தான்” என்று தொடங்கும். அதேவேளை கல்கி கிர்ஷ்ணமூர்த்தி எழுதிய அணிந்துரையின் அடியில் அது 1950 இல் எழுதப்பட்டதாக காணபடுகிறது. இந்நூல் அதன் பின்னர் பல்வேறு பதிப்புகளைக் கொண்டிருக்கிறது. மகாவம்சம் தரும் இலங்கைச் சரித்திரம் – கலாநிதி க.குணராசா – 2003 செங்கை ஆழியான் என்கிற பெயரில் ஏராளமான நூல்களை எழுதிய எழுத்தாளர் க.குணராசா அவரது சொந்த பதிப்பகமான கமலா பதிப்பகத்தின் மூலம் 2003 ஆம் ஆண்டு வெளிக்கொணர்ந்த 150 பக்கங்களைக் கொண்ட நூல் இது. அந்த நூல் மகாவம்சத்தின் உள்ளடக்கங்களை சுருக்கமாக தன்நுணர்தலின் அடிப்படையில் சுவாரசியமாக தர முயற்சிக்கப்பட்ட நூல் எனலாம். புனைகதைத் துறையிலும் அவருக்கிருந்த அனுபவத்தாலும் ஆளுமையாலும் மகாவம்சத்தையும் சுருங்க சுவாரசியமாக தர முற்பட்டிருக்கிறார். அந்நூலின் ஆரம்பத்திலேயே அவர் தந்திருக்கிற உசாத்துணை நூல்களின் பட்டியலைப் பார்க்கும்போது அது மகாவம்சத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்ட நூல் இல்லை என்பது இன்னும் ஊர்ஜிதமாகும். பதிப்புரையிலேயே ஒப்புக்கொண்டதுபோல போல அது “இலங்கை சரித்திரம் குறித்து சுருக்கமாகவும், விளக்கமாகவும் கூறும் நூல்”. இதைவிட அவர் மகாவம்சத்தின் இரண்டாம் தொகுதியான சூளவம்சத்தையும் தமிழில் தந்திருக்கிறார். அவரின் “சூளவம்சம்” 2008 ஆம் ஆண்டு வெளியானது கைகர் (Geiger) ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்த “சூளவம்சம்” இரு தொகுதிகளைக் கொண்டது. ஆங்கில சிறிய எழுத்துக்களில் மொத்தம் 730 பக்கங்களுக்கும் மேற்பட்டது அது. ஆனால் செங்கை ஆழியானின் சுருக்கப்பட்ட தமிழ் பிரதி, பெரிய எழுத்துக்களில் 170 பக்கங்களுக்குள் மாத்திரம் உள்ளடங்கிவிட்டது. கி.பி 362 இலிருந்து 1815 வரையான காலப்பகுதியை பதிவு செய்கிறது. குணராசா இதையும் தன்முனைப்பில் மிகச் சுருக்கிய அறிமுகத்தையே செய்திருக்கிறார். ஆனாலும் இது மட்டுமே தமிழ் மொழியில் எஞ்சியிருக்கிறது. சிங்களத்தில் சூளவம்சத்தின் பல விளக்கவுரைகளைக் காண முடிகிறது. வெவ்வேறு மொழிபெயர்ப்புப் பிரதிகள் கூட புத்தகச் சந்தையில் கிடைக்கின்றன. சூளவம்சம் என்கிற பேரை அதை முதன் முதலில் தொகுத்த கைகர் வைத்த பெயரேயோழிய அப்படியொன்று இருந்ததில்லை. மகாவம்சத்தை அவர் தொகுத்து முடித்த பின்னர், எஞ்சிய காலத்தை பின் வந்த காலப்பகுதியில் பல்வேறு பௌத்த பிக்குமார்களால் எழுதிமுடிக்கப்பட்ட ஓலைச்சுவடிகளைத் தொகுத்து ஒன்றாக்கிய பொது அவர் வைத்த பெயரே சூளவம்சம். இந்தப் பிரதியை தவிர மகாவம்சத்தின் இரண்டாம் தொகுதியானது வேறெவரும் வெளிக்கொணர்ந்ததில்லை. மகாவம்சம் – உதயணன் – 200? உதயணன் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு ஜனரஞ்சக வரலாற்று புனைகதை எழுத்தாளர் எனலாம். அவ்வாறு ஏராளமான ஏராளமான அவர் எழுதியிருக்கிறார். மகாவம்சத்தில் உள்ள கதைகளையும் அவர் தன்னார்வத்தில் சுவைபட புதினக் கதையாக எழுதிருக்கிறார். அதுவும் இரண்டு தொகுதிகளாக கிடைக்கின்றன. முதலாவது தொகுதி 438 பக்கங்களிளும் இரண்டாவது தொகுதி 402 பக்கங்களிலும் சேர்த்து மொத்தம் 90 அத்தியாயங்களாக வெளியிட்டிருக்கிற போதும் மூல மகாவம்சத்தின் அத்தியாயங்களுக்கும் இதற்கும் எந்த ஒற்றுமையும் கிடையாது. அவர் மூல மகாவம்சத்தின் உள்ளடக்கத்தையும் முழுமையாக புரிந்துகொண்டவராகத் தெரியவில்லை. உதாரணத்துக்கு அந்நூலின் முன்னுரையில் “வட பாரதத்தினனான விஜயன் தமிழ் மன்னனான பாண்டியன் மகளை மணந்து வம்சத்தை துவக்குகிறான். இவ்வாறு வட இந்திய மண்ணுக்கும் தென்னிந்திய மன்னனுக்கும் மணவினை ஏற்பட்டு அதில் உருவாகிய வாரிசுகளே சிங்களவர்” என்கிறார். ஆனால் மகாவம்சத்தின்படி விஜயன் மணமுடித்த பாண்டிய இளவரசிக்கு எந்த வாரிசுகளும் பிறக்கவில்லை என்கிறது. இப்படியான அடிப்படையான தகவல்களில் அவர் தவறிழைத்திருக்கிறார் என்பதை அவரின் முன்னுரை விளக்கத்தில் இருந்து நம்மால் அறிந்துகொள்ள முடியும். இதைத்தவிர அவர் மகாவம்சத்தின் கதைகளில் இருந்து துட்டகைமுனுவின் தாயாரை கதாநாயகியாகக் கொண்டு “விகாரமகாதேவி” என்கிற 1028 பக்கங்களைக் கொண்ட ஒரு நாவலையும் 2015ஆம் ஆண்டு வெளியிட்டிருக்கிறார். மேலும் அவர் “சிங்களத்துப் புயல்” எனும் 200 பக்க நாவலொன்றையும் 2012 இல் வெளியிட்டிருக்கிறார். வரலாற்றில் ஒரு தடவை இலங்கை அரசனின் படையெடுப்பில் பாண்டிய நாடு கைப்பற்றப்பட்டதாக பதிவுண்டு. 1166 ஆம் ஆண்டு நிகழ்ந்த இந்த நிகழ்வோடு ஒட்டிய தகவல்களைக் கொண்டு அவர் ஒரு புனைகதையை ஆக்கியிருக்கிறார். இக்காலப்பகுதியானது மகாவம்சத்தின் இரண்டாம் தொகுதியான சூலவம்சமே பதிவு செய்திருக்கிறது. அதேவேளை தனது முன்னுரையில் பேராசிரியர்கள் நீலகண்ட சாஸ்திரிகள், சதாசிவ பண்டாரத்தார் ஆகியோரின் நூல்களில் இருந்த தகவல்கள் இந்நூலுக்குப் பயன்பட்டதாக குறிப்பிடுகிறார் அவர். மகாவம்சம் – ஆர்.பி.சாரதி – 2007 ஆர்.பி.சாரதி பல நூல்களை மொழிபெயர்த்தவர். கொடோவே பலரின் வாழ்க்கை சரிதங்களையும் சிறுகதைத் தொகுதிகளையும் எழுதி வெளியிட்ட ஒரு எழுத்தாளர். அவர் 2007 ஆம் ஆண்டு கிழக்கு பதிப்பகத்தின் மூலம் வெளியிட்ட நூலே இந்த “மகாவம்சம்”. ஆனால் இந்த நூலும் மகாவம்சத்தை சுருக்கமாக 238 பக்கங்களில் விளக்கமுயன்ற ஒரு சாராம்ச நூலே. மூல நூலின் அதே 37 அத்தியாயங்களைக் கொண்டிருந்தாலும் இந்த சாராம்ச சுருக்க நூலில் செய்யுள் இலக்கங்கள் எதுவுமின்றி நிறைவடைந்துவிடுகின்றன. மகாவம்சம் : ஸ்ரீலங்கா வரலாறு – சாந்திபிரியா – 2008 இந்த நூலை எழுதியவரின் உண்மைப் பெயர் ஜெயராமன். ஒரு ஓய்வு பெற்ற அரச ஊழியர். பவந்த பெரேரா என்கிற ஒரு சிங்கள நண்பரின் வேண்டுகோளை ஏற்று அவர் இந்த நூலை எழுதி முடித்ததாக அந்நூலில் குறிப்பிடுகிறார். மூல மகாவ்மசத்தின் அதே 37 தொகுதிகளைக் கொண்ட 344 பக்க நூலாக இது காணப்படுகிறது. நூல் வடிவில் அமைந்திருந்தாலும் ஒரு மின்னூல் (ebk) வடிவித்திலேயே இது கிடைத்திருக்கிறது. அச்சில் பதிக்கப்பட்டதற்கான சான்றுகளைக் காணவில்லை. எவ்வாறாயினும் இதுவும் ஏனையவற்றைப் போல மிக சாரம்சப்படுத்தப்பட்ட ஒரு பிரதியாகவே காணப்படுகிறது. அதுமட்டுமன்றி அதன் மொழிபெயர்ப்பைப் பார்க்கும் போது இயந்திர மொழிபெயர்ப்பின் வாடை தெரிகிறது. பல சிங்கள கலைச்சொற்களை கூகிள் மொழிபெயர்ப்புகளின் போது தருகிற பிழைகளை அப்படியே காணமுடிகிறது. விகாராக்கள், தடுசேனா (Dhatusena), தூபவம்சா (Thupavamsa), ததுவம்சா, (Dhatuvamsa), வில்ஹம் கீஜர் (Wilheml Geiger), யக்கா இனத்தினர் போன்ற சொற்களை உதாரணத்துக்குக் குர்பஈடலாம். மகாவம்சம்- சிங்களர் கதை – எஸ்.பொ, 2009 ஆக தமிழில் இதுவரை முழுமையான எந்த மகாவம்சத் தொகுதியும் வெளிவந்ததில்லை என்பதே உண்மை. சிங்கள ஆங்கிலப் பிரதிகளை ஒப்பிட்டுப் பார்த்தவர்கள் எவருக்கும் புரியும். அந்த ஐந்து தமிழ் பிரதிகளில் ஓரளவு தேறிய பிரதி என்றால் அது எஸ்.பொ. அவர்களின் “சிங்களர் கதை” என்கிற பிரதி எனலாம். அதில் உள்ள சாதகமான அம்சம் என்னவென்றால் குறைந்தபட்சம் மகாவம்ச மூலப்பிரதியிலுள்ள செய்யுள்களின் அதே இலக்கத்தொடர்களுடன் அது ஒழுங்கமைக்கப்பட்டிருப்பதே. அதேவேளை அவரின் சொந்த அரசியல் நம்பிக்கைகளை அதில் புகுத்தியிருப்பது அதன் பாதகங்களில் ஒன்று. அதன்படி மகாவம்சத்தின் மீது வினையாற்றுபவர்கள் ஈற்றில் எஸ்.பொவுக்குத் தான் வினையாற்ற நேரிடும். மூல மகாவம்சத்தின் மீது வினையாற்றுவதற்கான வாய்ப்பு அற்றுப் போய் விடுகிறது. மேலும் மூல மகாவம்ச பிரதியுடன் பார்த்தால் இதுவும் சாரம்சப்படுத்தப்பட்ட பிரதியே. இதுவரை எந்தப் பிரதியும் பாளி, சிங்களம், ஆங்கிலம் என எந்த மொழியிலிருந்தும் தமிழ் மொழிக்கு முழுமையான உள்ளடக்கத்தை வெளிக்கொணர்ந்ததில்லை. மேற்படி பிரதிகளும் கூட கைகரின் ஆங்கில நூலை ஆதாரமாகக் கொண்டவை. ஈற்றில் தமிழில் வெளியான எந்த மகாவம்ச வெளியீடுகளும் மூல நூலுக்கு நியாயம் செய்ததில்லை. அவரவர் அவரவருக்கு புரிந்த விளக்கவுரைகளையே வெளியிட்டிருக்கிறார்கள் என்பதை உறுதியாகக் கூறலாம். ஆக தமிழில் இதுவரை முழுமையான எந்த மகாவம்சத் தொகுதியும் வெளிவந்ததில்லை என்பதே உண்மை. இதைவிட தமிழில் வெளிவந்த மகாவம்சத்தோடு தொடர்புடைய சில நூல்களையும் இங்கே குறிப்பிட முடியும். “சிங்கள வரலாற்று நூல்களின் நம்பகத் தன்மை”, வில்ஹெம் கைகரின் மகாவம்சத்தின் முன்னுரை விரிவான ஒன்று. அதன் முக்கியத்துவத்தை உணர்ந்த மறவன்புலவு சச்சிதானந்தன் அதனை மொழிபெயர்த்து 2002இல் வெளியிட்டார். “எல்லாளன் சமாதியும் வரலாற்று மோசடியும்” என்கிற நூலை கலாநிதி ஜேம்ஸ் டீ இரத்தினம் ஆற்றிய உரையொன்றை எ.ஜே.கனகரட்னா தமிழில் மொழிபெயர்த்து 1981 இல் ஒரு நூலை வெளிக்கொணர்ந்தார். மகாவம்சத்தில் கூறப்படுகிற எல்லாளனின் சமாதியை துட்டகைமுனுவின் சமாதியாக மாற்றுகிற மோசடியை எதிர்த்து ஆதாரங்களுடன் தர்க்கிக்கிற முக்கிய நூல். “கமுனுவின் காதலி” என்கிற ஒரு நாவலை மு கனகராசன் எழுதி 1970 இல் வெளியிட்டார். மகாவம்சத்தில் துட்டகைமுனு பிரதான கதாநாயகன். பிரதான வில்லனாக எல்லாளனை சித்திரித்திருப்பார்கள். வயதான எல்லாளனுடன் போர்புரிந்து துட்டகைமுனு வென்றாதாக அது கூறுகிறது. அந்த எல்லாளனின் மகளை துட்டகைமுனு காதலித்ததாக ஒரு வாய்மொழி வரலாறு உண்டு. அதையே கனகராசன் ஒரு நாடகமாக எழுதி அதை நூலாக வெளிக்கொணர்ந்திருக்கிறார். மகாவம்சத்தின் முதல் இரு தொகுதிகளைத் தவிர அடுத்த மூன்று பாகங்கள் எதுவுமே தமிழில் இதுவரை வெளிவந்ததில்லை. என்.சரவணனின் - 6வது தொகுதி முதற்தடவை உள்ளதை உள்ளபடி அப்படியே மொழிபெயர்க்கப்பட்டது என்.சரவணனால் மொழிபெயர்க்கப்பட்ட 6வது “மகாவம்சம்” தொகுதியாகும். 1978-2010 காலப்பகுதியைக் கொண்டிருக்கிற இந்த மொழிபெயர்ப்பானது மகாவம்ச வரலாற்றில் உள்ளது உள்ளபடி எந்தவித மேலதிக உட்புகுத்துகையின்றி அப்படியே கொண்டுவரப்பட்ட முதல் மகாவம்சப் பிரதி எனலாம். அதுபோல வரலாற்றில் மூலமொழியில் எழுதப்பட்ட பிரதியிலிருந்து தமிழுக்கு கொண்டுவரப்பட்ட முதல் தொகுதியும் இதுவேயாகும். கலாசார திணைக்களத்தின் கீழ் இயங்கும் மகாவம்சக் குழுவினால் 2012 ஆம் ஆண்டு இறுதி பாகங்களாக வெளியிடப்பட்ட இந்த நூலின் மொழிபெயர்ப்பு தமிழன் பத்திரிகையில் தொடராக கடந்த ஆண்டு வெளியானது. பின்னர் குமரன் பதிப்பகம் சென்ற ஆண்டு மொத்தம் 700 பக்கங்களில் பெரிய நூலாக வெளியிட்டது. இதற்கு முன்னர் தமிழில் கொணரப்பட்ட மேற்படி மகாவம்சத்தின் முதலாவது தொகுதியின் மொழிபெயர்ப்புகள் ஆங்கில மொழியிலான வில்ஹெம் கைகரின் நூலை அடிப்படையாகக் கொண்டவை என்பதையும் இங்கே குறிப்பிட வேண்டும். சிங்களத்தையும் தமிழையும் அரச மொழியாக அரசியலமைப்பு ரீதியில் அதிகாரபூர்வமாகக் கொண்ட அரசு; இலங்கையின் வரலாற்று நூலை தமிழில் இதுவரை வெளியிட்டதில்லை என்பதை கவனிக்குக. தற்போது கலாசார திணைக்களம் தொடங்கியிருக்கும் மொழிபெயர்ப்பு முயற்சியும் முதலாவது தொகுதியைத் தான் செய்யத் தொடங்கியிருக்கிறது. அது முடியவே இன்னும் சில ஆண்டுகள் எடுக்கலாம். அதன் பின்னர் அடுத்து ஐந்து தொகுதிகளும் எமது வாழ்நாளுக்குள் வெளிவருமோ என்னவோ. மேற்படி தமிழ் மொழிபெயர்ப்பு நூல்கள் ஒவ்வொன்றும் விரிவாக ஒப்பிட்டு ஆராயப்படவேண்டியவை. இங்கே அதற்கான அறிமுகத்தை மட்டுமே செய்திருக்கிறேன். நன்றி - தினகரன் - சாளரம் - 12.10.2025 https://www.namathumalayagam.com/2025/10/TamilMahawamsa.html