Everything posted by கிருபன்
-
இலங்கைத் தமிழருக்கு லண்டனில் £67,000 கள் அபராதம்
லண்டனில் இலங்கை தமிழர் ஒருவருக்கு பல லட்சம் பவுண்ட்ஸ் அபராதம் Nishanthan SubramaniyamJanuary 3, 2026 3:37 pm 0 பிரித்தானியாவில் தமிழ் இளைஞனை துன்புறுத்திய இலங்கைத் தமிழர் ஒருவருக்கு எதிராக 67,000 பவுண்ட் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. லண்டனில் கே.எப்.சி கிளை ஒன்றில் பணியாற்றிய தமிழக இளைஞனுக்கு, அங்கு முகாமையாளராக செயற்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவரால் இனவெறி பாகுபாடு காண்பித்தாக நீதிமன்றம் கண்டறிந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு எதிராக அபாரம் விதிக்கப்பட்டுள்ளது. உணவகத்தில் தனது முகாமையாளாரக இருந்த இலங்கைத் தமிழர் ஒருவர், தன்னை “அடிமை” என்று அழைத்ததாகவும், “இந்தியர்கள் மோசடி செய்பவர்கள்” எனக் கூறி இன ரீதியாக இழிவுபடுத்தியதாகவும் அவர் நீதிமன்றத்தில் முறையிட்டார். இந்தியர் என்பதால் விடுமுறை மறுக்கப்பட்டுள்ளது. அதே சமயம், அவரது முகாமையாளர் இலங்கையை சேர்ந்த ஊழியர்களின் விடுமுறை கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளித்துள்ளார். அத்துடன் பணியிடத்தில் “அடிமை” என்றும் இன்னும் சில தரக்குறைவான சொற்களாலும் அழைத்தது இனவெறி பாகுபாட்டின் கீழ் வரும் என நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் , அளவுக்கு அதிகமான நேரங்கள் வேலை செய்யுமாறு முகாமையாளர் வற்புறுத்தியுள்ளார். இதனால் ஏற்பட்ட மன உளைச்சலில் தனது விலகல் கடிதத்தை பாதிக்கப்பட்டவர் வழங்கினார். அதன்பின்னர் முகாமையாளர் அவரைத் தொலைபேசியில் அழைத்து மிரட்டியதோடு, மிகவும் தரக்குறைவாகப் பேசியுள்ளார். அவர் முறையாக விலகல் கடிதம் கொடுத்தும், சட்டப்படி வழங்க வேண்டிய ஒரு வார கால முன்னறிவிப்பு காலத்தை வழங்காமல் அவர் உடனடியாகப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.இது சட்டப்படி தவறு என நீதிபதி தெரிவித்தார். நீதிமன்றம் இழப்பீட்டுத் தொகையாக 62,690 பவுண்ட்ஸ்களும், விடுமுறை ஊதியம் மற்றும் பிற நிலுவைத் தொகைகளுடன் சேர்த்து மொத்தம் சுமார் 66,800 பவுண்ட்ஸ்களை வழங்க உத்தரவிட்டது. மேலும், அடுத்த ஆறு மாதங்களுக்குள் அந்த நிறுவனம் தனது முகாமையாளர்கள் மற்றும் ஊழியர்களுக்குப் பணியிடத்தில் பாகுபாடு காட்டுவதைத் தவிர்ப்பது மற்றும் குறைகளை முறையாகக் கையாளுவது குறித்து சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. https://oruvan.com/sri-lankan-tamil-fined-several-hundred-thousand-pounds-in-london/#more
-
வெனிசுலாவில் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ்
“மதுரோவை உடனே விடுவி”: அமெரிக்காவுக்குப் புதிய இடைக்கால ஜனாதிபதி எச்சரிக்கை வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ அமெரிக்கப் படைகளால் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டுள்ள நிலையில், அந்நாட்டின் இடைக்கால ஜனாதிபதியாகத் தற்போதைய உப ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸை (Delcy Rodríguez) நியமித்து வெனிசுலா உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வெனிசுலா மீது நேற்று திடீர் தாக்குதலை மேற்கொண்ட அமெரிக்கா, ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவியைச் சிறைப்பிடித்து அமெரிக்காவிற்கு நாடு கடத்தியுள்ளது. இதனையடுத்து, வெனிசுலாவின் எண்ணெய் வளங்களை இனி அமெரிக்க நிறுவனங்களே நிர்வகிக்கும் எனவும், தமக்குச் சாதகமான அரசாங்கம் அமையும் வரை அமெரிக்க இராணுவம் அங்கு நிலைகொண்டிருக்கும் எனவும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார். இந்தச் சம்பவத்தையடுத்து வெனிசுலாவில் அவசரகால நிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதேவேளை, ஜனாதிபதி டிரம்பின் இந்த நடவடிக்கை சர்வதேச சட்டங்களை மீறும் செயல் என சீனா, ரஷ்யா, பிரேசில், கியூபா மற்றும் ஐக்கிய நாடுகள் சபை என்பன கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இந்நிலையில், வெனிசுலா உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் இடைக்கால ஜனாதிபதியாக நியமிக்கப்பட்டுள்ள டெல்சி ரோட்ரிக்ஸ், அந்நாட்டு அரச தொலைக்காட்சியில் தோன்றி நாட்டு மக்களுக்கு விசேட உரையொன்றை ஆற்றினார். அங்கு அவர் தெரிவிக்கையில், “வெனிசுலாவின் ஒரே ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோ மட்டுமே. அவரை அமெரிக்கா உடனடியாகவும் நிபந்தனையின்றியும் விடுதலை செய்ய வேண்டும். எமது நாட்டு மக்களைப் பாதுகாக்க அனைத்துப் பாதுகாப்புப் படைகளையும் நாம் தயார் நிலையில் வைத்துள்ளோம்,” எனத் தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=354860
-
பிள்ளையான், டக்ளஸ் கைது: பொதுஜன பெரமுன விமர்சனம்
பிள்ளையான், டக்ளஸ் கைது: பொதுஜன பெரமுன விமர்சனம் January 3, 2026 விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் விருப்பத்துக்காக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது. ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்துரைத்த அதன் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்தார். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டில் இன நல்லிணக்கத்தை உறுதிப்படுத்திய தலைவர்கள் மீது போலியான குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு அவர்கள் மறக்கடிக்கப்பட்டுள்ளார்கள். விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் புலம்பெயர் தமிழ் அமைப்புக்களின் விருப்பத்துக்காக கைது செய்யப்பட்டு சிறைப்படுத்தப்பட்டுள்ளார்கள். நல்லதை செய்யாமல் இந்த ஆண்டு எவ்வாறு நல்லதாக அமையும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய இரண்டு தமிழர்களை இவ்வாறு கைது செய்து சிங்கள இனம் நன்றி மறந்துள்ளது என்றே குறிப்பிட வேண்டும் என்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவசம் தெரிவித்துள்ளார். www.ilakku.orgபிள்ளையான், டக்ளஸ் கைது: பொதுஜன பெரமுன விமர்சனம் | Januar...விடுதலை புலிகள் அமைப்புக்கு எதிராக செயற்பட்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வருவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய பிள்ளையான், டக்ளஸ் தேவானந்தா ஆகியோர் புலம்பெயர் தமிழ்
-
சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் பதவி நீக்கம்!
சம்மாந்துறை நீதிமன்ற நீதவான் பதவி நீக்கம்! Vhg ஜனவரி 04, 2026 அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை நீதிமன்ற நீதவானாகக் கடமையாற்றி வந்த ஜே.பி.ஏ. ரஞ்சித்குமார், நீதிச் சேவை ஆணைக்குழுவினால் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். இதேவேளை, சம்மாந்துறை நீதிமன்றத்தின் புதிய நீதவானாக நூர்தீன் மொஹம்மட் சர்ஜூன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் நாளை (05.01.2026) ஆம் திகதி தனது கடமைகளைப் பொறுப்பேற்கவுள்ளார். பதவி நீக்கம் செய்யப்பட்ட நீதவான் , கடந்த காலங்களில் மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி நீதிமன்ற நீதவானாக கடமையாற்றிய காலத்தில் நீதவான் நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியிருந்தது. சம்பவம் தொடர்பில்.... கடந்த நவம்பர் மாதம் வெள்ளிக்கிழமை (21.11.2025) ஆம் திகதி மட்டக்களப்பு மாவட்டம் களுவாஞ்சிக்குடி நீதிவான் நீதிமன்றத்தில் வழக்கு சான்றுப் பொருள் வைக்கும் அறையில் இருந்து 1 கோடியே 30 இலட்சம் ரூபா பெறுமதியான 350 கிராம் தங்க நகைகள் காணமல் போன சம்பவம் தொடர்பில் களுவாஞ்சிகுடி நீதவான் நீதிமன்ற பதில் பதிவாளர் களுவாஞ்சிகுடி பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். முறைப்பாட்டிற்கமைய களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற பதில் பதிவாளர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டு தொடர்ந்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். மேலும் நீதிமன்ற களஞ்சியசாலை பொருட்கள் மோசடி செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைகளை தொடர்ந்து நீதிச்சேவை ஆணைக்குழு சம்மாந்துறை நீதிமன்ற நீதவானாக செயற்பட்டு வந்த ஜே.பீ ஏ.ரஞ்சித்குமாரை (02.01.2026) ஆந் திகதியன்று பதவி நீக்கம் செய்துள்ளது. https://www.battinatham.com/2026/01/blog-post_330.html
-
கன்னியா வெந்நீரூற்று பிள்ளையார் ஆலயம் இருந்த பகுதியில் தொல்லியல் திணைக்களத்தினால் அகழ்வுப்பணிகளை நடத்த ஏற்பாடு
கன்னியா பிள்ளையார் ஆலய காணி விவகாரம் - சுமந்திரன் ,குகதாசன் களத்தில்! Vhg ஜனவரி 04, 2026 திருகோணமலை கன்னியாவில் நீண்டகாலமாக பிள்ளையார் ஆலயம் அமைந்திருந்த காணியை, தொல்பொருள் திணைக்களம் அண்மையில் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளது. இப்பகுதியில் அகழ்வுப் பணிகள் என்ற பெயரில் முன்னெடுக்கப்படும் காணி அபகரிப்பு தொடர்பில் ஆராய இன்று (04.01.2026)ஆம் திகதி நேரடி விஜயம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சண்முகம் குகதாசன் அவர்களின் அழைப்பின் பேரில், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம். ஏ. சுமந்திரன் அவர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து நிலைமைகளை நேரில் ஆய்வு செய்தார். முக்கிய அம்சங்கள்... ஆலய காணி கையகப்படுத்தப்பட்ட விதம் குறித்து கேட்டறியப்பட்டது. மக்களின் வழிபாட்டு உரிமை பறிக்கப்படுவது குறித்து விரிவாக ஆராயப்பட்டது. இந்த விவகாரத்தை உடனடியாக நீதிமன்றத்திற்கு கொண்டு சென்று, சட்ட ரீதியான போராட்டத்தை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. https://www.battinatham.com/2026/01/blog-post_933.html
-
நோர்வே நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார்
நோர்வே நாட்டுக்கு விஜயம் மேற்கொண்டிருக்கும் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் 04 Jan, 2026 | 02:50 PM பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகள் குழுவினர் இவ்வாரம் முழுவதும் அங்கு பல்வேறு சந்திப்புக்களில் ஈடுபடவுள்ளனர். மேற்படி விஜயத்தில் பங்கேற்றுள்ள தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கட்சியின் பொதுச்செயலாளர் செல்வராஜா கஜேந்திரன், உத்தியோகபூர்வப் பேச்சாளர் சட்டத்தரணி சுகாஷ், கொள்கை பரப்புச்செயலாளர் ந.காண்டீபன் உள்ளிட்ட குழுவினர், தமிழர்களுக்கு எதிரான கட்டமைப்புசார் தொடர் இனவழிப்பைத் தடுப்பதற்கு தாயகமும் புலம்பெயர் தேசமும் ஒன்றிணைந்து செயற்படவேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி பல்வேறு சந்திப்புக்களில் கலந்துகொள்ளவுள்ளனர். அதன்படி இன்றைய தினம் (4) மாலை ஒஸ்லோவில் புலம்பெயர் தமிழர்களுடனான சிநேகபூர்வ சந்திப்பொன்றில் பங்கேற்கவுள்ள இக்குழுவினர், மேற்குறிப்பிட்ட விடயம் தொடர்பில் விரிவாகக் கலந்துரையாடவுள்ளனர். இச்சந்திப்பின்போது இலங்கை அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பு உருவாக்க முயற்சிகள் மற்றும் தமிழர்களுக்கான சமஷ்டி அடிப்படையிலான அரசியல் தீர்வு உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும்ஆராயப்படவுள்ளது. https://www.virakesari.lk/article/235184#google_vignette
-
அரசியல் கூட்டு என்பதால் ஆயுள்காலம் குறைவாகவே இருக்கும்
அரசியல் கூட்டு என்பதால் ஆயுள்காலம் குறைவாகவே இருக்கும் முருகானந்தம் தவம் இலங்கையின் அரசியலில் தமிழ்த் தேசிய கட்சிகளின் தாய்க் கட்சி என்று கூறிக்கொண்டிருக்கும் இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் 5 பங்காளிக் கட்சிகளின் கூட்டாக அடிக்கடி கட்சி மாறிக் கூட்டணி அமைத்துக் கொண்டிருக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் மீள் இணைவு இடம்பெற்றுள்ள நிலையில் அண்மையில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கரையும் இக்கூட்டு சந்தித்தது. பதில் தலைவராக .சி.வி.கே.சிவஞானத்தையும் பதில் பொது செயலாளராக எம்.ஏ.சுமந்திரனையும் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் கூட்டு அமைத்துள்ள ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியில் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன், தமிழ் மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் (புளொட்) தர்மலிங்கம் சித்தார்த்தன், தமிழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவர் செல்வம் அடைக்கலநாதன், ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சிவானந்தன் நவநீதராஜா, சமத்துவக் கட்சியின் தலைவர் முருகேசு சந்திரகுமார் ஆகியோர் பங்காளிக் கட்சித் தலைவர்களாகவுள்ளனர். ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய அமைப்பாக இயங்கி வருகிறது. தனியான யாப்பையும் சின்னத்தையும் கொண்டிருக்கும் அந்தக் கூட்டணி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் இருக்கிறது. அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் ஏற்கெனவே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையில், அந்தக் கூட்டணி செயற்பட்டு வருகிறது. ஆனால், அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் மாகாண சபைகள் முறைமை பாதுகாக்கப்பட வேண்டும் என்று ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கொண்டிருக்கும் நிலைப்பாடு காரணமாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் முரண்பட வேண்டியேற்பட்டது. நடைபெற்று முடிந்த மூன்று தேர்தல்களான ஜனாதிபதித் தேர்தல், பாராளுமன்றத் தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களில் வடக்கு , கிழக்கிலிருந்த தமிழ் கட்சிகள் பெரும்பாலும் தனித்தனியாகவே செயற்பட்டிருந்தன. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரைக் களமிறக்கியபோது, அதற்கு எதிராக தமிழரசுக் கட்சி பகிரங்கமாகவே செயற்பட்டபோது, தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்து முன்னிலையில் நின்று செயற்பட்டது ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி. இவர்கள் பாராளுமன்றத் தேர்தலிலும் அதே கூட்டைப் பயன்படுத்தி பின்னர், உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலிலும் அதையே தொடர்ந்தனர். பாராளுமன்றத் தேர்தலில் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணி தனித்துக் களமிறங்கியபோதும், ஒரு பாராளுமன்ற ஆசனத்தை மட்டுமே பெற முடிந்தது .உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தல்களின் பின்னர் ஆட்சியமைக்கும் விடயத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பக்கம் நிற்காது கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி பக்கம் இது சாய்ந்திருந்தது. இருந்தபோதும், சபைகளின் அதிகாரங்களைப் பெற்றுக் கொள்வதற்கான அரசியல் கூட்டாக மாத்திரம் அது அமைந்தது. அதற்கும் அப்பால் சென்று அரசியல் கூட்டணியாகத் தொடரவில்லை. இவ்வாறாக கொள்கை, இலக்கு எதுவுமின்றி, “தறி கெட்ட மாடு போல்” சகல கட்சிகளுடனும் 'கூட்டு' என ஒட்டிக்கொண்டு திரிந்த ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணியைத்தான் தற்போது இலங்கை தமிழரசுக் கட்சி தன்னுடன் இணைத்துக் கொண்டு ஏதோ பெரிதாகச் சாதித்து விட்டது போல் கதை விட்டுக் கொண்டிருக்கின்றது. அத்துடன், கடந்த செவ்வாய்க்கிழமை இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர, இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜா ஆகியோருடனான சந்திப்பிலும் இக்கூட்டுப் பங்கு பற்றியது. இலங்கைத் தமிழரசுக் கட்சிக்கும் ஜனநாயகத் தமிழ்த் தேசியக் கூட்டணிக்கும் இடையில் நடைபெற்ற மீள் இணைவுக்கான சந்திப்பில் முக்கியமாக இரண்டு பிரதான விடயங்கள் பற்றியே அதிகம் பேசப்பட்டுள்ளது. முதலாவது, மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படாமல் பிற்போடப்படும் சூழ்நிலையில், அத்தேர்தலை விரைவாக நடத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதாகும். இரண்டாவது தமிழ் மக்களுக்கான நீதியான - நியாயமான அரசியல் தீர்வு சம்பந்தமாக ஒருமித்த நிலைப்பாட்டை வெளிக்கொணர்ந்து தொடர்ச்சியான சந்திப்புக்களை நடத்துவது என்பதாகவே இருந்தது . இரண்டு விடயங்களுடனேயே தமது சந்திப்பு மட்டுப்படுத்தப்பட்டதாக இரு தரப்பிலும் கூறப்பட்டாலும் அரசியல் தீர்வு விடயத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் காலத்தில் தயாரித்த முன்மொழிவின் அடிப்படையில், கலந்துரையாடல்களைத் தொடர்ந்தும் முன்னெடுக்க இங்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இதுபற்றிய கலந்துரையாடல்களை மாதாந்தம் நடத்துவதற்கும் பல தரப்பினருடன் விரிவான கருத்துப் பரிமாற்றங்களை முன்னெடுப்பதற்கும் எதிர்பார்க்கப்படுவதாக உள்ளகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. வடக்கு, கிழக்கு தமிழ் அரசியல் கட்சிகளைப் பொறுத்த வரையில் கடந்த மூன்று நான்கு தேர்தல்கள் அவர்களுக்குப் பல பாடங்களைப் புகட்டியுள்ளது. ஜனாதிபதித் தேர்தலில் நாட்டின் பல பகுதிகளில் வீசிய அனுர அலை வடக்கு, கிழக்கிலும் தாக்கம் செலுத்தியிருந்தது. எவரும் எதிர்பாராத விதமாகப் பாராளுமன்றத் தேர்தலில் அனுர தலைமையிலான தேசிய மக்கள் சக்திக்கு அதிகமான ஆசனங்கள் கிடைத்தன. தமக்கிடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகள் மற்றும் குறுகிய அரசியல் இலாபங்கள் காரணமாகப் பிரிந்து நின்ற தமிழ் கட்சிகளின் வாக்கு வங்கிகளில் சரிவு ஏற்பட்டது. வடக்கு, கிழக்கில் பல உள்ளூராட்சி சபைகளைத் தமிழ்த் தேசிய கட்சிகளினால் கைப்பற்ற முடிந்தாலும் ஒப்பீட்டளவில் தேசிய மக்கள் சக்திய கணிசமான வாக்குகளைத் தனதாக்கிக் கொண்டது. இவ்வாறான பின்னணியில் நடைபெறக்கூடிய மாகாண சபைத் தேர்தலில் தொடர்ந்தும் தமிழ் கட்சிகள் பிரிந்து நின்றால் தேசிய மக்கள் சக்தி ஏனைய அரசியல் தரப்புக்களுடன் இணைந்து தமிழர் தாயகமான, தமிழ்த் தேசிய கட்சிகளின் அரசியல் உயிர் மூச்சான வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆட்சியமைத்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.இவ்வாறான பின்னணியிலேயே பொதுக் காரணிகளை முன்வைத்து ஒன்றிணைந்து செயற்படுவதற்கான முஸ்தீபுகளைத் தமிழ்த் தேசிய கட்சிகள் எடுத்திருப்பதாகத் தெரிகிறது. இவ்வாறான நிலையில், இலங்கையின் அண்மைய அரசியல் வரலாற்றில் வடக்கிலுள்ள மக்களின் கணிசமான ஆதரவைப் பெற்ற ஜனாதிபதியாக அனுரகுமார திசாநாயக்க விளங்குவது தமிழ்த் தேசியக் கட்சிகள் பலவற்றுக்குச் சவாலாக உள்ளது. எனவே, வடக்கு, கிழக்கில் தமிழ்த் தேசியத்திற்குத் தொடர்ந்தும் சவாலாக இருக்கும் தேசிய மக்கள் சக்தியை எதிர்கொள்ள வேண்டுமானால் தமக்கிடையில் மாறுபட்ட கருத்துக்களைக் கொண்டிருந்தாலும் அனைவரும் ஒன்றாக இணைய வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குத் தமிழரசுக் கட்சியும் ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியும் வந்துள்ளமை வரவேற்கத்தக்கதே. ஆனால், இக்கூட்டு எந்தளவு காலத்துக்கு நீடிக்கும் என்பதுதான் இங்குள்ள கேள்வி. உள்ளளூராட்சி சபைகளுக்கான தேர்தலுக்கு முன்னர் தமிழரசுக் கட்சிக்கும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கும் இடையில் சந்திப்பு நடைபெற்றிருந்தபோதும், அது தொடர்ச்சியாக முன்கொண்டு செல்லப்பட்டிருக்கவில்லை. தமிழ்த் தேசிய அரசியல் என்றால், அது தாமே என்றதொரு தோற்றப்பாட்டை முன்வைக்கும் அரசியலையே தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்னெடுத்து வருகின்றது. வடக்கில் இடம்பெற்ற சம்பவங்கள் மற்றும் சமஷ்டியை வலியுறுத்தி தமிழகத் தலைவர்களுடன் நடத்திய சந்திப்புக்கள் மூலம் இது தெளிவாகியுள்ளது. எனவே, தமிழரசுக் கட்சி-ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி கூட்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஒரு போதும் இணையப் போவதில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதில் தமிழரசு கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் ஆர்வமும் அதற்கு ஏற்ப, ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தமிழரசுக் கட்சியுடன் மீண்டும் இணைந்திருப்பதும் வரவேற்கப்பட வேண்டியவை. ஏனெனில், தமிழ்க் கட்சிகள் பல்வேறு அணிகளாகச் சிதறியிருப்பதால் தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதற்கான அணுகுமுறைகளைப் பொறுத்தவரை ஒருமித்த நிலைப்பாடுகளை எடுக்க முடியாமல் இருக்கிறது என்று தமிழ் மக்கள் நீண்ட நாட்களாகவே கவலையடைந்திருக்கிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலிலும் வடக்கிலும் கிழக்கிலும் தேசிய மக்கள் சக்திக்கு அவர்கள் பெருமளவில் வாக்களித்ததற்கான காரணங்களில் இது முக்கியமானது.. இவ்வாறான நிலையில், 2001ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ற அரசியல் கூட்டணியின் பங்காளிக் கட்சிகள் 2022ஆம் ஆண்டு பிளவடைந்து வெளியேறிப் பல அரசியல் பாடங்களைக் கற்றுக் கொண்ட பின்னர் மீண்டும் தற்போது தாய்க் கட்சியான தமிழரசுக் கட்சியுடன் இணைந்துள்ளமை என்பது தமிழ்த் தேசிய அரசியலில் முக்கிய நிகழ்வாகக் கருதப்பட்டாலும், இது மாகாண சபைகளுக்கான தேர்தலுக்கான மீள் இணைவாக, அரசியல் ஆதாயத்திற்கான கூட்டாக இருப்பதால் இதன் ஆயுள்காலம் குறைவாகவே இருக்கும். https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரசியல்-கூட்டு-என்பதால்-ஆயுள்காலம்-குறைவாகவே-இருக்கும்/91-370514
-
வெனிசுலாவில் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ்
வெனிசுலாவில் இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரோட்ரிக்ஸ் வெனிசுலா நாட்டின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோ அமெரிக்கா நாட்டால் சிறை பிடிக்கப்பட்டுள்ளார். வெனிசுலாவை நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்துள்ளார். வெனிசுலாவில் அமெரிக்கா நடத்திய வான்வழி தாக்குதலில் 40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பரபரப்பான நிலையில், வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப் பொருட்கள் கடத்தப்படுவதாகவும், இதற்கு அந்த நாட்டின் ஜனாதிபதி நிகோலஸ் மதுரோவுக்கு தொடர்பு இருப்பதாகவும் சொல்லி அமெரிக்கா அவரை சிறைபிடித்துள்ளது. அவர் சிறைபிடிக்கப்பட்ட புகைப்படத்தை வெளியிட்டு, இனிமேல் வெனிசுலாவை நாங்கள் தான் நிர்வாகம் செய்வோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார். வெனிசுலாவில் வான்வழி தாக்குதல் நடத்தி நிகோலஸ் மற்றும் அவரின் மனைவியை அமெரிக்கா சிறை பிடித்துள்ளது. இது அந்த நாட்டில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. வெனிசுலா மீது வெற்றிகரமாக தாக்குதல் நடத்தப்பட்டது. நிகோலஸ் மதுரோ நாடு கடத்தப்பட்டுள்ளார். அமெரிக்க சட்ட அமலாக்கத்துறையுடன் இணைந்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று டிரம்ப் கூறியிருந்தார். இந்த தாக்குதலில் வெனிசுலா மக்கள், ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. தொடர்ந்து மதுரோ மற்றும் அவரின் மனைவி ஆகியோர் நியூயார்க் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் வெனிசுலா நாட்டின் இடைக்கால அதிபராக டெல்சி ரோட்ரிக்ஸ் நியமிக்கப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவை அந்த நாட்டின் அரசு உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ளது. வெனிசுலா நாட்டின் துணை அதிபராக இருந்து வரும் டெல்சி ரோட்ரிக்ஸ், அந்த நாட்டின் எண்ணெய் வளம், பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளை கண்காணித்து வருகிறார். https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/வெனிசுலாவில்-இடைக்கால-ஜனாதிபதி-டெல்சி-ரோட்ரிக்ஸ்/50-370499
-
நிக்கோலஸ் மதுரோவை கைது செய்தமைக்கு ஜே.வி.பி கண்டனம்
நிக்கோலஸ் மதுரோவை கைது செய்தமைக்கு ஜே.வி.பி கண்டனம் அமெரிக்கா இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வெனிசுலாவில் மக்கள் வாக்களிப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கடத்தி சென்றமை அமெரிக்க இராணுவத் தலையீட்டினை கடுமையாகக் கண்டித்துள்ளதுடன் வோஷிங்டன் நாட்டின் இறையாண்மையை மீறுவதாக ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தலைமையிலான ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி), கண்டிப்பதாக அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் எதிர்காலத்தையும் தலைமையையும் தீர்மானிக்கும் அதிகாரம் அதன் மக்களிடம் மட்டுமே உள்ளது என்றும், எந்தவொரு வெளி சக்திக்கும் ஒரு இறையாண்மை மற்றும் சுதந்திரமான அரசின் உள் விவகாரங்களில் தலையிட உரிமை இல்லை என்றும் வலியுறுத்தியது. ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் நாடுகளின் சுதந்திரம் மற்றும் இறையாண்மை ஆகியவை உலகளவில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள் என்றும், எந்தவொரு சாக்குப்போக்கின் கீழும் இராணுவத் தலையீடுகள் அல்லது படையெடுப்புகள் நவீன உலகில் ஏற்றுக்கொள்ள முடியாதவை அந்த வகையில், வெனிசுலாவிற்கு எதிரான அமெரிக்காவின் பலவந்தமான இராணுவ ஆக்கிரமிப்பை சர்வதேச சமூகம் அங்கீகரிக்காது என்று நாங்கள் நம்புகிறோம். அதன்படி, வெனிசுலாவின் இறையாண்மை மற்றும் சுதந்திரத்திற்காக நிற்கிறோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நிக்கோலஸ் மதுரோவை கைது செய்தமைக்கு ஜே.வி.பி கண்டனம்அமெரிக்கா இராணுவ நடவடிக்கை மேற்கொண்டு வெனிசுலாவில் மக்கள் வாக்களிப்பால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் கடத்தி சென்றமை அமெரிக்க இராணுவத் தலையீட்டினை கடுமையாகக் கண்டித
-
சிறீதரனை பதவிவிலகுமாறு பணிப்புரை! எடுக்கப்பட்ட அதிரடி தீர்மானம்
வட்ஸப்பில் வந்தது… சிவஞானம் சிறீதரனை அரசியலிலிருந்து அகற்றும் உள்வீட்டு அரசியலின் ஒரு அங்கமாக அரசியலமைப்பு பேரவையில் இருந்து ராஜினாமா செய்ய பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் அரசியல் குழு கூட்டத்தில் அத்தகைய தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சமகாலத்தில் சிவஞானம் சிறீதரன் மீது தென்னிலங்கையில் சிலரால் குற்றச்சாட்டுகள் மற்றும் நிரூபிக்கப்படாத வதந்திகள் தொடர்ந்து பரப்பப்பட்டே வருகின்றது. இலங்கை தமிழரசுகட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனிற்கு தொடர்ச்சியான அழுத்தங்களை பிரயோகிப்பதன் மூலம் கட்சியிலிருந்து வெளியேற்ற அல்லது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்ய வைக்கும் சதிகள் உள்ளிருந்து உச்சமடைந்துள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் யாழ்.தேர்தல் மாவட்டத்திலிருந்து சிவஞானம் சிறீதரன் மட்டுமே வெற்றியடைந்திருந்தார். இந்நிலையில் ஏனையோரது தேர்தல் வெற்றி பற்றி அவர் அக்கறை கொள்ளவில்லையென்ற குற்றச்சாட்டு;க்கள் எம்.ஏ.சுமந்திரன் தரப்பினால் முன்வைக்கப்பட்டுவருகின்றது. இந்நிலையில் தொடர்ச்சியாக தென்னிலங்கை அரசியல் சக்திகளது ஆதரவுடன் உள்வீட்டு மேற்பார்வையில் அவர் மீது சேறடிப்புக்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதாக சிவஞானம் சிறீதரன் ஆதரவு தரப்புக்களால் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டேவருகின்றது. ஏற்கனவே கிளிநொச்சியில் மதுபானச்சாலைகளிற்கான அனுமதிப்பத்திர விவகாரம் மற்றும் கணக்காய்வாளர் நாயகத்தின் நியமனம் தொடர்பில் ஆதரவளித்ததான குற்றச்சாட்டுக்களை அத்தகைய தரப்புக்கள் பரப்பியே வருகின்றன.தற்போது இறுதியாக முன்னாள் யாழ்.மாவட்ட இராணுவத்தளபதியாக நல்லாட்சி காலத்தில் பணியிலிருந்த தர்சன ஹெட்டியராட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்காமை சர்ச்சையாகியுள்ளது. எனினும் அவற்றினை நிரூபிக்க பகிரங்க சவாலை சிவஞானம் சிறீதரன் முன்வைத்துவருகின்ற போதும் அத்தரப்புக்கள் மௌனம் காத்தேவருகின்றன. இந்நிலையில் தற்போது கிளிநொச்சியின் பூநகரி முட்கொம்பன் பகுதியில் இலங்கை அரசினால் அனுமதிக்கப்பட்ட சோலார் மின் உற்பத்தி நிலையத்திற்கான அனுமதிக்காக சிவஞானம் சிறீதரன் தரகுப்பணம் பெற்றதாக கதைகள் வேகமாக கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளது. வுனவளத்திணைக்களத்தின் கீழுள்ள அரச காணிகளினை சோலார் மின் உற்பத்தி நிலையத்திற்கு ஒதுக்குவதென்பது மொட்டைத்தலைக்கும் முழங்காலிற்கும் முடிச்சு போடுவதாகவே உள்ளதென்கின்றன உள்வீட்டு தரப்புக்கள். சண்பவர் எனும் தனியார் நிறுவனம் இலங்கை புதுப்பிக்க சக்தி அமைச்சின் அனுமதியுடன் முன்னைய ரணில் அரசிடம் சோலார் மின் உற்பத்தி நிலையத்திற்கான அனுமதியை பெற்றிருந்தது.எனினும் ஆட்சி மாற்றம் மற்றம் மின் அலகொன்றை கொள்வனவு செய்வது தொடர்பிலான பிணக்கினால் சண்பவர் நிறுவன முதலீட்டாளர்கள் வெளியேறியிருந்தனர். இந்நிலையில் புதிய முதலீட்டாளர்கள் சகிதம் மீண்டும் புதுப்பிக்க தக்க சக்தி அமைச்சின் ஊடாக அரசின் அனுமதியை சோலார் மின் உற்பத்தி நிலையத்திற்கென பெற்றுள்ளது. இந்நிலையில் அவற்றின் எந்நடவடிக்கையுடனும் தொடர்புபடாத சிவஞானம் சிறீதரன் மற்றும் அவர் மகன் மீது சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவரால் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டிருந்தது.அத்தகைய குற்றச்சாட்டுக்கள் வைக்கப்படுவதன் பின்னணியில் முன்னாள் மற்றும் இந்நாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவரது பெயர்கள் அரசியல் வட்டாரங்களிடையே பேசுபொருளாகியுள்ளது. எனினும் முன்னதாக இக்குற்றச்சாட்டுக்கள் எழுந்த போதே "ஆதாரங்கள் இருந்தால் பகிரங்கமாக அல்லது நீதிமன்றத்தில் நிரூபிக்குமாறு" சிறீதரன் தரப்பு சவால் விடுத்திருந்தது.அதேபோன்று சிறீதரனின் மகனும் சவால் விடுத்திருந்தார். அதேவேளை தற்பேர்து இலஞ்ச ஊழல்களை ஆய்வு செய்வதற்கான குழுவில் முறைப்பாட்டளித்துள்ள சஞ்சய மஹவத்த கடந்த காலங்களில் உயர் காவல்துறை அதிகாரிகள் மீது ஆதாரமற்ற குற்றச்சாட்டுக்களை சுமத்தி கைதானவர் என்பதும் தற்போதும் 500 மில்லியன் ரூபா நட்டஈடு கோரிய வழக்கு ஒன்றை எதிர்கொண்டு வருபவர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது. அவர் அத்தகைய குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன் பின்னணியிலும் உள்வீட்டு சதிகள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் நிலையில் அரசியலமைப்பு பேரவையில் இருந்து ராஜினாமா செய்ய பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
-
🏥 யாழில் கனடா வாசி நிமோனியாவால் உயிாிழப்பு
🏥 யாழில் கனடா வாசி நிமோனியாவால் உயிாிழப்பு adminJanuary 4, 2026 கனடாவிலிருந்து விடுமுறைக்காகத் தனது சொந்த ஊரான யாழ்ப்பாணத்திற்கு வந்திருந்த குடும்பத்தலைவர் ஒருவர், திடீர் உடல்நலக்குறைவால் உயிரிழந்த சம்பவம் வட்டுக்கோட்டைப் பகுதியில் இடம்பெற்றுள்ளது. யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பகுதியைச் சேர்ந்த பரமநாயகம் திவாகர் (42 வயது) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார். கனடாவில் வசித்து வந்த இவர், புத்தாண்டு மற்றும் விடுமுறையைக் கழிப்பதற்காக அண்மையில் யாழ்ப்பாணம் வந்து தனது உறவினர்களுடன் தங்கியிருந்துள்ளார். கடந்த டிசம்பர் 31-ஆம் திகதி இவருக்குக் கடுமையான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர் உடனடியாக தெல்லிப்பளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த போதிலும், சிகிச்சை பலனின்றி நேற்று (ஜனவரி 3, சனிக்கிழமை) அவர் உயிரிழந்துள்ளார். இவரது மரணத்திற்குத் தீவிரமான நிமோனியா (Pneumonia) காய்ச்சலே காரணம் என வைத்தியர்களின் பிரேத பரிசோதனை அறிக்கையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் நிலவும் சீரற்ற காலநிலை மற்றும் வைரஸ் காய்ச்சல் பரவல் காரணமாக, வெளிநாடுகளிலிருந்து வருபவர்கள் மற்றும் நோய் எதிர்ப்புச் சக்தி குறைந்தவர்கள் கூடுதல் அவதானத்துடன் இருக்குமாறு சுகாதாரத் துறையினர் அறிவுறுத்தி வருகின்றனர். சளி, இருமல் மற்றும் மூச்சுத் திணறல் இருந்தால் காலந்தாழ்த்தாமல் மருத்துவ ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும். https://globaltamilnews.net/2026/225613/
-
இலங்கைத் தமிழருக்கு லண்டனில் £67,000 கள் அபராதம்
இலங்கைத் தமிழருக்கு லண்டனில் £67,000 கள் அபராதம் adminJanuary 3, 2026 பிரித்தானியாவில் தமிழக இளைஞன் ஒருவரை வேலைத்தலத்தில் மிக மோசமான முறையில் துன்புறுத்தியமை மற்றும் உழைப்புச் சுரண்டலில் ஈடுபட்டமைக்காக, லண்டனைச் சேர்ந்த இலங்கைத் தமிழா் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 67,000 பவுண்டுகள் (சுமார் 2.5 கோடி இலங்கை ரூபாய்) அபராதம் மற்றும் நஷ்டஈடு விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்தத் தீர்ப்பு பிரித்தானிய வாழ் தமிழ் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. லண்டனில் உள்ள ஒரு வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய இளம் தமிழ் இளைஞர் ஒருவரை, அந்த நிலையத்தின் உரிமையாளரான இலங்கைத் தமிழர் மிக மோசமாக நடத்தியுள்ளார். அந்த இளைஞருக்கு உரிய குறைந்தபட்ச ஊதியம் (Minimum Wage) வழங்கப்படாமல், மிகக் குறைந்த ஊதியத்தில் நீண்ட நேரம் வேலை வாங்கப்பட்டுள்ளது. மேலும் வேலைத்தலத்தில் உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் அந்த இளைஞரை உரிமையாளர் துன்புறுத்தியமை , போதிய விடுமுறை மற்றும் ஓய்வு வழங்கப்படாமல் அடிமைத் தனமான முறையில் வேலை வாங்கியமை போன்றன நீதிமன்றத்தில் நிரூபிக்கப்பட்டுள்ளது. வழக்கை விசாரித்த பிரித்தானிய நீதிமன்றம், பாதிக்கப்பட்ட இளைஞருக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை ஊதியம், மன உளைச்சலுக்கான நஷ்டஈடு மற்றும் அபராதமாக மொத்தம் 67,000 பவுண்டுகளை வழங்குமாறு உத்தரவிட்டது. பிரித்தானியா போன்ற நாடுகளில் புலம்பெயர் சமூகத்தினர் தங்களுக்குள் நடத்தும் இத்தகைய சுரண்டல்களுக்கு எதிராக அந்நாட்டுச் சட்டம் மிகக் கடுமையானது என்பதை இந்தத் தீர்ப்பு உணர்த்தியுள்ளது. தஞ்சம் கோரியவர்கள் அல்லது குறுகிய கால விசாவில் இருப்பவர்களைப் பயமுறுத்தி வேலை வாங்குவது பாரிய குற்றமாகக் கருதப்படுகிறது. இத்தகைய பாதிப்புகளுக்கு உள்ளாகும் தமிழர்கள் தயக்கமின்றி தொழிற்சங்கங்கள் அல்லது சட்டத்தரணிகளின் உதவியை நாட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். https://globaltamilnews.net/2026/225587/
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
@ஈழப்பிரியன் ஐயா, ஆறு கேள்விகளுக்கு (எல்லாம் குழுவில் இறுதியாக வரும் அணியைக் கணிப்பது) பதில் தரவில்லை. புள்ளிகள் குருட்டு இலக்கில் கிடைக்கவேண்டும் என்றால் பதில்களைத் தாருங்கள் 😄
-
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது! 03 Jan, 2026 | 03:36 PM வெனிசுலா நாட்டின் தலைநகரான கராகஸில் இன்று சனிக்கிழமை (3) அதிகாலை பல இடங்களில் சக்திவாய்ந்த வெடிப்பு சம்பவங்கள் இடம்பெற்றதையடுத்து வெனிசுலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இது குறித்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தனது Xதளத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவில் குறிப்பிடப்படுவதாகவது, வெனிசுலா நாட்டிற்கும் அதன் ஜனாதிபதி மதுரோவிற்கும் எதிராக அமெரிக்கா பெரிய அளவிலான தாக்குதலை வெற்றிகரமாக நடத்தியது. வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இந்த நடவடிக்கை அமெரிக்க சட்ட அமலாக்கத்துடன் இணைந்து செய்யப்பட்டது. இன்று காலை 11 மணிக்கு மார் ஏ லாகோவில் செய்தி மாநாடு நடைபெறும் என பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/235120
-
வெனிசுலா தலைநகரில் வெடிப்புச் சம்பவங்கள்
வெனிசுலா தலைநகரில் வெடிப்புச் சம்பவங்கள் செய்திகள் வெனிசுலாவின் தலைநகரான கெரகஸில் அந்நாட்டு நேரப்படி இன்று (3) அதிகாலை பல வெடிப்புச் சம்பவங்கள் இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாகப் பாரிய சத்தத்துடன் அப்பகுதி புகை மண்டலத்தால் சூழப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது. இந்த வெடிப்புச் சம்பவங்களுடன் நகரின் பல பகுதிகளுக்கான மின்சார விநியோகம் தடைப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. முதலாவது வெடிப்புச் சம்பவம் அந்நாட்டு நேரப்படி அதிகாலை 1.50 மணியளவில் இடம்பெற்றுள்ளது. https://adaderanatamil.lk/news/cmjxzfirb03gzo29ndt385qql
-
டக்ளஸ் மீது பாயும் புதிய வழக்குகள்?
டக்ளஸ் மீது பாயும் புதிய வழக்குகள்? கைது செய்யப்பட்டு சிறையில் வைக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்ந்தும் சிறையில் வைத்திருப்பதற்காக புதிய வழக்குகளை தாக்கல் செய்ய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. முன்னதாக சுயபாதுகாப்பிற்காக கையளிக்கப்பட்ட துப்பாக்கிகளை பாதாள உலகக் கும்பலுக்கு விற்பனை செய்ததாக டக்ளஸ் தேவானந்தா கைது செய்யப்பட்டு, எதிர்வரும் 9ம் திகதி வரை சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். ஆனால் அவர் முன்னதாக பிணையில் விடுவிக்கப்பட வேண்டுமென அரசு உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் கைவிரிக்கப்பட்டது என்றும் கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், முன்னாள் அமைச்சர் தொடர்பான கடந்த கால மோசடிகள் மற்றும் காணி ஒதுக்கீடுகளைச் சுட்டிக்காட்டும் புதிய வழக்குகள் தாக்கல் செய்யப்படுகின்றன. குறிப்பாக யாழ்ப்பாணத்தின் தீவகப்பகுதிகளிலும் கிளிநொச்சியின் பூநகரியிலும் கடலட்டை பண்ணைகளுக்கு அரச நிலங்கள் வாடகை செலுத்தப்படாமல் ஓதுக்கீடு செய்யப்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இவை சுமார் நாலாயிரம் ஏக்கர் நிலங்களாகவும், முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர்களுக்கு வழங்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது. மேலும், முறையற்ற அரச காணிகள் மற்றும் மாதாந்தம் நூறு மில்லியன் வரையிலான நிதி துஸ்பிரயோகம் ஆகியவற்றுக்கான குற்றச்சாட்டுகள் காணித்திணைக்கள அதிகாரிகளுக்கு எதிராக எழுந்துள்ளன. இதனால் முன்னாள் வடமாகாண காணி ஆணையாளர் மற்றும் தற்போதைய வடமாகாண சபை அமைச்சின் செயலாளர் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அரசு தரப்பின் தகவலின்படி, கடலட்டை பண்ணைகளின் நிலங்களை பிரதேச செயலகங்கள் வழியாக ஒதுக்குதல் செய்யாமல், முன்னாள் அமைச்சர் தன்னிச்சையாக தனது ஆதரவாளர்களுக்கு வழங்கியதாகவும், இந்நிலையில் அதற்கு தொடர்புடைய அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இதுவரை தென்னிலங்கையில் கைதான முன்னாள் அரசியல்வாதிகள் மீது நடவடிக்கை எடுத்த அனுபவத்தின் அடிப்படையில், தற்போது அரசு டக்ளஸ் தேவானந்தாவையும் அவரது விசுவாச அதிகாரிகளையும் சட்டப்படி விசாரணைக்கு உட்படுத்தும் முயற்சியில் உள்ளது. https://www.samakalam.com/டக்ளஸ்-மீது-பாயும்-புதிய/
-
தீவகத்தில் சட்டவிரோத செயலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இளைஞன் மீது தாக்குதல்!
தீவகத்தில் சட்டவிரோத செயலுக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இளைஞன் மீது தாக்குதல்! adminJanuary 3, 2026 தீவக பகுதியில் மாடுகளை களவாடி , சட்டவிரோதமான முறையில் இறைச்சியாக்கி விற்பனை செய்து வரும் கும்பல் ஒன்றினால் , மாடுகளை திருடும் கும்பலுக்கு எதிராக செயற்பட்டு வந்த இளைஞன் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளனர். தாக்குதலில் படுகாயமடைந்த இளைஞன் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். நாரந்தனை பகுதியை சேர்ந்த இளைஞன் ஒருவர் , தீவகம் பகுதியில் இடம்பெற்று வரும் சட்டவிரோத செயல்கள் , மற்றும் மாடுகள் களவாட்டப்பட்டு , இறைச்சியாக்கப்படும் சம்பவங்களுக்கு எதிராக செயற்பட்டு வந்துள்ளார். குறித்த இளைஞன் உள்ளிட்ட சிலர் , கடந்த சில தினங்களுக்கு முன்னர் மாடுகளை களவாடி இறைச்சியாக்க முற்பட்ட கும்பல் ஒன்றினை மடக்கி பிடித்து , அவர்களை கடுமையாக எச்சரித்து விடுவித்துள்ளனர். இந்நிலையில் புத்தாண்டு தினமான நேற்று முன்தினம் குறித்த இளைஞன் கடையொன்றுக்கு சென்ற சமயம் , மாடுகளை களவாடும் கும்பலை சேர்ந்தவர்கள் என அடையாளப்படுத்தப்படும் நபர்கள் மது போதையில் இளைஞன் மீது மூர்க்கத்தனமாக தாக்குதல் மேற்கொண்டு விட்டு தப்பி சென்றுள்ளனர். தாக்குலுக்கு இலக்கான இளைஞனை அங்கிருந்தவர்கள் மீட்டு , ஊர்காவற்துறை வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில், அங்கிருந்து மேலதிக சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை காவற்துறையினரர் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர். https://globaltamilnews.net/2026/225550/
-
யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக் களத்தில்: தையிட்டியில் பதற்றம்!
யாழ். பல்கலைக்கழக மாணவர்களும் போராட்டக் களத்தில்: தையிட்டியில் பதற்றம்! adminJanuary 3, 2026 தையிட்டி திஸ்ஸ விகாரைக்கு முன்பாக, தங்களது பூர்வீகக் காணிகளை விடுவிக்கக் கோரி காணி உரிமையாளர்கள் முன்னெடுத்து வரும் போராட்டத்திற்கு ஆதரவாக, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் இன்று கைகோர்த்துள்ளனர். தையிட்டியில் சட்டவிரோதமாக தனியார் காணிகளில் அமைக்கப்பட்டுள்ள விகாரையில், இன்றைய பௌர்ணமி தினத்தை முன்னிட்டு சிகிரியாவிலிருந்து கொண்டுவரப்பட்ட புதிய புத்தர் சிலை ஒன்றை நிறுவுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதாகத் தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து, காணி உரிமையாளர்களுடன் இணைந்து மாணவர்களும் போராட்டத்தில் குதித்ததால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கில், பேருந்துகளில் பெருமளவிலான காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டு குவிக்கப்பட்டுள்ளனர். சிகிரியாவிலிருந்து புத்தர் சிலையுடன் வருகை தந்த பௌத்த பிக்கு தலைமையிலான குழுவினரை, காங்கேசன்துறை காவல்துறையினர் இடைமறித்து காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். அங்கு அவர்களிடம் வாக்குமூலங்கள் பெறப்பட்ட பின்னர், தையிட்டி விகாரைக்குச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டு, அவர்கள் மீண்டும் பேருந்து மூலம் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். தமது நில உரிமையை மீட்டெடுக்கும் வரை பின்வாங்கப் போவதில்லை என போராட்டக்காரர்கள் உறுதியுடன் உள்ளனர். https://globaltamilnews.net/2026/225560/
-
விடுதலைப் புலிகள் மருத்துவ அணியின் சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்!
சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்! 1 Jan 2026, 8:53 PM மூன்றாம் உலகப் போர் எப்போது வரும் எப்போது வரும் என்று இன்னும் முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டு இருக்கிறோம். உண்மையில் மூன்றாம் உலகப் போர் வந்து நடந்து முடிந்து பதினாறு வருடம் ஆகி விட்டது. அந்தப் போரில்தான் ஈழம் அழிக்கப்பட்டது. தமிழினத்துக்கு எதிராக திராவிடம், தேசியம், கம்யூனிசம் எல்லாம் கரம் கோர்த்தன. அண்டை மாநில அரசியல்கள் வஞ்சகம் செய்தன. வட இந்தியா தமிழனை விட சிங்களனே தனக்கு சொந்தம் என்று, இறையாண்மை இல்லாத குறையாண்மையோடு செயல்பட்டது. இந்தியாவும் பாகிஸ்தானும், இந்தியாவும் சீனாவும் எதிரி நாடுகள். ஆனால் ஈழத்தை அழிக்கும் விஷயத்தில் இவை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று ‘தொடுப்பு’ நாடுகளாக மாறி ஈழத்தை அழித்தன. ஐ நா சபையிலும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத் துறை செயலர் பதவிகளிலும் , இலங்கை ராணுவ ஆலோசனை பதவிகளிலும் மலையாளிகள் உட்கார்ந்து , ஒரு பக்கம் தமிழ் நாட்டில் மாய்மாலம் செய்து பிழைத்துக் கொண்டே . தமிழினத்துக்கு எதிராக அவிழ்த்துப் போட்டார்கள். ஏகாதிபத்தியத்துக்கு எதிராக எப்போதும் இருப்போம் என்று வரலாற்றுப் புத்தகங்களை வழித்து நக்கிக் கொண்டிருக்கும் கியூபா, இலங்கைக்கு உதவி செய்ததன் மூலம் நியாயம் துறந்து அம்மணமாக நின்றது . பிரபாகரன் முன்பு பிச்சைக்காரன் ஆனான் பிடல் காஸ்ட்ரோ. இத்தனை ஈன தேசங்கள், ஈனப் பிறவிகள் தமிழினத்தின் மானத்தோடு விளையாடிய அதுதான் மூன்றாம் உலகப்போர். இனி ஒரு போர் வந்தால் அது நான்காம் உலகப் போர். உலகமே எதிர்த்து நின்றாலும் அஞ்சாமல் மானத்தோடு மனசாட்சியோடு போர் அறத்தோடு களமாடி தோற்றாலும், வரலாற்றில் வென்று, அந்த அநியாயத்துக்கு துணை போன தேசங்கள் ஒவ்வொன்றும் தனக்கு முகத்தில் தாங்களே காறி உமிழ்ந்து கொள்ளும் நிலைமையை உருவாக்கி வரலாற்றில் நிலைத்தது விடுதலைப் புலிகள் அமைப்பு. குறைகளே இல்லாத அமைப்பு அல்ல அது. ஆனால் அதை விட சிறப்பான ஓர் இனப் போராளிகள் குழுவை இந்த உலகம் கண்டதில்லை. இனி காணப் போவதும் இல்லை. தனது படையில் இருந்த கடைசி வீரனின் உயிரும் தனது மனைவி மகன்களின் உயிரும் ஒன்று என்று எண்ணிய ஒரு போராளி (வஞ்சகர்கள் பார்வையில் தீவிரவாதி; பயங்கரவாதி) இந்த உலகத்தில் இருந்தான் என்ற உண்மையை, இனி நீங்கள் கற்பனையில் சொன்னாலும் இந்த உலகம் நம்பாது. லாஜிக்கா இல்லையே என்று சொல்லி விட்டு நகர்ந்து விடும். ஒரு நாடே ஓர் பெரும்பான்மை இனமே, சுற்றி வளைத்து நிராயுதபாணிகளை ஆயுதத்தால் கொன்று பெண்களை எல்லாம் சீரழித்து அழிக்கும் வன்முறையில் வெறியாட்டம் ஆடிய நிலையில், அண்டை நாடுகள் எல்லாம் வக்கிரத்தோடு வேடிக்கை பார்த்த சூழலில், புலிகள் படையில் காயம்பட்ட போராளிகளை மீட்டு, எந்த வசதிகளும் இல்லாத நிலையில், தரையில் தோண்டப்பட்டு உருவாக்கப்பட்ட – பங்கர்கள் எனும் – அடிப்படை வசதிகள் கூட இல்லாத, சிறிய, மண் சுரங்க அறைகளில், உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடும் அந்த போராளிகளை மீட்க, உயிரைப் பணயம் வைத்து, பசி பட்டினி கிடந்து, குடும்பத்தை இழந்து வாழ்வை இழந்து, போராளிகளைக் காப்பாற்றிய, விடுதலைப் புலிகள் மருத்துவ அணியின் பணி எப்படிப்பட்டது என்பதை சொல்லும் படம் இது. ஆம். விடுதலைப் புலிகள் அமைப்பின் மருத்துவ அணியின் பெயர் சல்லியர்கள். சிங்கள மிருகங்களால் அம்மா, அப்பா, உறவுகள், காதல், பாசம் வீடு, வாசல், சொத்து சுகம் இழந்து, எங்கெங்கோ போய் ஒரு வழியாக மருத்துவம் படித்து… அயல்நாட்டுக்கு போய் மருத்துவம் பார்த்தால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்ற சூழலில் அதை விட்டு விட்டு… தாய் மண்ணை மீட்கும் போராளிகளைக் காப்பற்ற ஈழம் வந்து…. ஒவ்வொரு நொடியும் மரணத்தை எதிர்பார்த்து வாழ்ந்து… தங்கள் மேல் அதிக ஆத்திரத்தோடு குறி வைக்கும் சிங்களப் படையினரை சமாளித்து, பணியாற்றிய மாவீர மருத்துவர்கள் இந்த சல்லியர்கள். எத்தனை சிலுவைகளைப் போட்டாலும் இந்த சல்லியர்கள் சுமந்த சிலுவைகளை செஞ்சிலுவைச் சங்கம் கூட சுமந்தது இல்லை. எனினும் ஒருவன் அடிபட்டு உயிருக்கு ஆபத்து என்று வந்தால் அவன் யாராக இருந்தாலும் ஒரு மருத்துவர் என்ன செய்ய வேண்டும்? அதில் இந்த சல்லியர்கள் எவ்வளவு தெய்வத்தன்மையோடு இருந்தார்கள்… அதன் விளைவு என்ன? என்பதே இந்தப் படம். இன உணர்வு இல்லாவிட்டாலும் கூட, மனசாட்சி உள்ள, சாப்பாட்டில் கிரிஸ்டல் சேர்த்துக் கொள்கிற எல்லோரும் கூட, இந்த படத்தைப் பார்த்தால் நெகிழ்ந்து போவார்கள். அப்படி ஒரு கதை. அப்படி ஒரு களம். ஓர் இயக்குனராக மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார் கிட்டு. தன்னை மேதகு முதல் பாகத்திலேயே நிரூபித்தவர் அவர். கதை நிகழும் பின்புலம், லொகேஷன்கள், ஷாட்கள், ஃபிரேம்கள், படத்துக்கு அவர் கொடுத்து இருக்கும் டோன் எல்லாம் அபாரம். நடிக நடிகையர் தேர்வு, அவர்களுக்கான கெட்டப் எல்லாம் அபாரம். சின்னச் சின்ன நடிகையர்களைக் கூட பொருத்தமாக தேர்ந்தெடுத்து சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். ஒரு போராளியின் உயிரைக் காப்பாற்ற, ஒரு சல்லியர் மருத்துவர் ரத்தம் கொடுத்து விட்டு பட்டினியோடு அந்தப் போராளிக்கு, அறுவை சிகிச்சை செய்யும் பணியில், அந்த குண்டுக் காயம் பட்ட இடத்தைச் சுற்றி அந்த மருத்துவர் ஆட்காட்டி விரலால் அழுத்திச் சுழற்ற, அதே நேரம் சிங்கள ராணுவ முகாம் அதிகாரி ஒருவர், தான் சுகமாக அருந்தும் கோப்பைக்குள் விரலை விட்டு ஆள்காட்டி விரலால் சுழற்றும் காட்சியை, டிரான்சிஷன் செய்து ஒப்புமைப்படுத்திக் காட்டும் இடம், இயக்குனருக்கு மகுடம். ரிக்ஷாக்காரன் படத்தில் ”அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்…” பாட்டில் எம் ஜி ஆர் பாதிக்கப்பட்ட குழந்தையின் புன் சிரிப்பை ரசித்துக் கொண்டிருக்க, அயோக்கியக் கூட்டம் ஆடிப் பாடிக் குடித்துக் கொண்டு ஆபாச நடனம் பார்த்துக் கொண்டு ஆணவச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கும். அதற்கு இணையான காட்சி, சல்லியர்கள் படத்தில் வரும் இந்தக் காட்சி. சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு ஒரு படிம ஓவியம் போல படத்துக்கு உயிர் கூட்டுகிறது. கென் மற்றும் ஈஸ்வரின் இசை, இளங்கோவனின் படத் தொகுப்பு இரண்டும் நேர்த்தியான பங்களிப்பை செய்துள்ளன. முஜிபுர் ரஹ்மானின் கலை இயக்கம், பூங்குயில் கிட்டுவின் ஆடை வடிவமைப்பு இரண்டுக்கும் நூற்றுக்கு நூறு மார்க். சிகையலங்காரமும் சிறப்பு. சற்றே துருத்திக் கொண்டு தெரிந்தாலும் அப்துலின் மேக்கப்பும் பல இடங்களில் அசத்துகிறது. நாயகியாக பெண் மருத்துவராக நடித்திருக்கும் சத்யா தேவியிடம் எல்லோரும் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும்.கேட்காமல் விட்டு விடாதீர்கள். “உண்மையை சொல்லுங்கள். நீங்கள் விடுதலைப் புலிகள் படையில் எத்தனை நாள் பயிற்சி எடுத்தீர்கள். எத்தனை நாள் சல்லியர்கள் அமைப்பில் பணியாற்றினீர்கள். இல்லவே இல்லை என்று எல்லாம் பொய் சொல்லக் கூடாது” அப்படி ஒரு அட்டகாசமான நடிப்பு.. இல்லை இல்லை.. இருத்தல்.. இல்லை இல்லை அதுவாகவே ஆதல். அற்புதம் சத்ய தேவி. வாழ்க. வளர்க, சக மருத்துவராக வரும் மகேந்திரனும் அப்படியே சிறப்பாக நடித்துள்ளார். படமாக்கல் அளவுக்கு திரைக்கதை பலமாக இல்லை. சல்லியர்கள் வாழ்வு, இலங்கை ராணுவத்தின் கொடுமைகள், போராளிகளின் தனிப்பட்ட வாழ்வு இழப்புகள் இவற்றில் எதற்கு முதன்மை முக்கியத்துவம் கொடுத்து, எதை எந்த அளவில் சொல்வது என்பதில் தெளிவின்மை காரணமாக, ஒன்றை இடித்துக் கொண்டு வந்து இன்னொரு விஷயம் நிற்கிறது. அதேபோல இந்தப் படத்தில் முக்கியமாக வலியுறுத்தப்படும் விஷயம் சிங்கள ராணுவத்தில் யாருக்கு நடக்கிறது என்ற விஷயத்தைக் கூட இன்னும் தீவிரமாக யோசித்து இருக்கலாம். அப்படி சொன்னால் அதில் தவறும் இருக்காது. சிங்கள அரசியல் தலைவர் ஒருவரின் மகன் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க யாழ்ப்பாணம் வருகிறான். ”சுட்டு விடுவோமா?” என்று கேட்கப்பட்ட போது,” நல்ல விசயத்துக்கு வருகிறான். இப்போது சுட்டால், நாம் விளையாட்டுக்கு எதிரான இயக்கம் என்று ஆகிவிடும். வேண்டாம் “என்றார் பிரபாகரன். ஆனால் அவன்தான் பிரபாகரன் இறந்த பிறகு யாழ்ப்பாணம் முழுக்க சாராயக் கடைகளைத் திறந்து போதை ஆற்றை ஓட விட்டான். எனவே அந்த சிங்கள கதாபாத்திரம் எது என்பதில் இன்னும் இறங்கி அடித்திருக்கலாம். அதே போல ரத்தம் சேகரிக்கப்பட்டு இருக்கும் பைகளை, சிங்கள ராணுவ அதிகாரி காலால் மிதித்து உடைப்பதை பெண் மருத்துவர் நேரில் பார்க்கவில்லை. ஆனால் அவர் யோசிக்கும் போது,அந்தக் காட்சி அவருக்கு விஷுவலாக வருகிறது. அது பொருத்தமாக இல்லையே. ‘இல்லை இல்லை.. நடந்த விஷயத்தை அவர் இமாஜினேஷன் செய்கிறார்..’ என்று ஒரு வாதத்துக்கு எடுத்துக் கொண்டால் கூட, நடந்த சம்பவத்தில் மருத்துவர் இமாஜின் செய்து பார்க்க, அம்மா அப்பா கொல்லப்படுவது முதல் இதை விட முக்கிய சம்பவங்கள் அந்தக் காட்சியிலேயே இருக்கு, எனவே அப்போதும் பொருத்தமாக இல்லை. இப்படி சில குறைகள் இருந்தாலும், எடுத்துக் கொண்ட கதை, சூழல், படமாக்கல், நடிப்பு, கருத்தியல், போன்ற வகைகளில் உயர்ந்து நிற்கிறது படம். ஒவ்வொருவரும் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம் சல்லியர்கள்.. கண்ணீரும் ரத்தமும்.. மகுடம் சூடும் கலைஞர்கள் சத்ய தேவி, கிட்டு. https://minnambalam.com/salliyargal-tamil-film-review-2026/
-
இந்த வளமும் எனதே, மண்ணும் எனதே! - வெனிசுவேலாவை சூழும் போர் மேகம்
இந்த வளமும் எனதே, மண்ணும் எனதே! sudumanal வெனிசுவேலாவை சூழும் போர் மேகம் Thanks for image: deutschlandfunk. de இன்றைய இன்னொரு போர்ச் சூழல் கரீபியன் கடலில் தகிக்கத் தொடங்கி சில வாரங்களாகின்றன. வெனிசுவேலா மீது அமெரிக்கா சிலுப்பிக் காட்டுகிற போர் அரசியல்தான் அது. ட்றம்ப் இன் முதல் ஆட்சிக் காலகட்டத்தில் (2017-2021) வெனிசுவேலா மீதான ட்றம்பின் கழுகுப் பார்வை விழுந்தது. வெனிசுவேலாவுக்கு எதிரான பாரிய பொருளாதாரத் தடைகள் 2017 இல் அறிவிக்கப்பட்டன. வெனிசுவேலா பொருளாதார நெருக்கடிக்குள் உள்ளாகியது. மீண்டும் ஏழ்மை பெரும் பகுதி மக்களை படிப்படியாக அழுத்தத் தொடங்கியது. அது பைடன் காலத்திலும் தொடர்ந்தது. இப்போ ட்றம்ப் இன் இரண்டாவது ஆட்சிக் காலம் ‘மீண்டும் தொடங்கும் மிடுக்கு’ என்பதுபோல், இன்றைய நெருக்கடி தோன்றியிருக்கிறது. ட்றம்ப் இன் இறுதி இலக்கு வெனிசுவேலாவின் எண்ணெய் வளத்தை மீண்டும் கைப்பற்றி கொள்ளை அடிப்பதுதான். உலகத்திலேயே அதிக எண்ணெய் வளம் கொண்ட நாடாக வெனிசுவேலா இருக்கிறது. 1900 களில் இருந்து கால்பதித்த சர்வதேச எண்ணெய்க் கம்பனிகள் காசு பார்க்கத் தொடங்கியிருந்தன. 1972 இல் அன்றைய வெனிசுவேலாவின் ஜனாதிபதியாக இருந்த Carlos Andres Perez அவர்கள் பெற்றோலிய உற்பத்தியை தேசியமயமாக்கம் செய்தார். அப்போது எண்ணெய் உற்பத்தியை தமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த மேற்குலக நாடுகளில் பிரித்தானியா-டச்சு பல்தேசியக் கம்பனியான SHELL உம், அமெரிக்காவின் Texaco, Exxon, Chevron போன்ற பரகாசுரக் கம்பனிகளும் குறிப்பிடத்தக்கவைகள் ஆகும். வேறும் பல கம்பனிகள் அங்கு செயற்பட்டுக் கொண்டிருந்தன. சமாதான முறையில் பேசித் தீர்க்கப்பட்டு, தேசியமயமாக்கம் கம்பனிகளின் ஒப்புதலுடன் நடந்தேறியது. 1.3 பில்லியன் நட்ட ஈடாகவும் வழங்கப்பட்டது. என்றபோதும் சில கம்பனிகள் தாம் எதிர்பார்த்த நட்ட ஈடு கிடைக்கவில்லை என்ற திருப்தியின்மையுடன் இருந்தன. இந்த தேசிய மயமாக்கலின்போது PDVSA என்ற அரச எண்ணெய்க் கம்பனியை வெனிசுவேலா அரசு உருவாக்கியது. இது எண்ணெய் உற்பத்தி, சுத்திகரிப்பு, எண்ணெய் வளக் கண்டுபிடிப்புகள், ஏற்றுமதி என எல்லாவற்றுடனும் தொடர்புபட்டிருந்தது. 1998 இல் வெனிசுவேலாவில் சாவோஸ் (Hugo Chavez) ஆட்சிக்கு வந்தார். கியூபாவாலும் சோசலிசத்தாலும் ஈர்க்கப்பட்ட அவர் வெனிசுவேலாவை சோசலிசக் கூறுகளுடன் மாற்றியமைத்தார். 2007 இல் அவர் எல்லா எண்ணெய்க் கம்பனிகளின் மீதான PDVSA இன் கட்டுப்பாட்டை 60 வீதமாக அதிகப்படுத்தினார். Chevron (USA),Total (France), Statoil (Norway), BP (UK) கம்பனிகள் அதை ஏற்றுக் கொண்டு தொடர்ந்து இயங்கின. உடன்பாடின்மை கொண்ட அமெரிக்காவின் Exxon, Conoco Phillips கம்பனிகள் வெனிசுவேலாவை விட்டு வெளியேறின. சாவேஸ் எல்லா கம்பனிகளினதும் சொத்துகளையும் கட்டுமானங்களையும் அரச உடைமை ஆக்கினார். 2005 இலிருந்து வெனிசுவேலாவின் சில தனிநபர்கள் மீதான ஆரம்பநிலை பொருளாதாரக் கட்டுப்பாடுகளை அமெரிக்கா விதிக்கத் தொடங்கியது. சாவேஸை ஆட்சியிலிருந்து கவிழ்க்க சிஐஏ செய்த சதிகள் வெற்றிபெறவில்லை. 2000 ஆண்டுகளில் ஒரு நாளைக்கு மூன்று மில்லியன் பீப்பாக்களை வெனிசுவேலா உற்பத்தி செய்தது. எண்ணெய் ஏற்றுமதியால் வந்த பணத்தை சமூக நலத் திட்டங்களுக்கு சாவேஸ் செலவிட்டார். அதன்மூலம் மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தினார். 2013 மார்ச் இல் தனது மரணம் நிகழும்வரையான ஆட்சிக்காலத்துள் 70 வீதமாக இருந்த ஏழ்மையை வெறும் ஏழு வீதமாக குறைத்தார். ஒன்பது மில்லியன் குடும்பங்களுக்கு வீடுகள் சொந்தமாகக் கிடைத்தன. அப்போது சாவேஸின் வலது கரமாக இருந்தவர்தான் -ஒரு பஸ் சாரதியான- நிக்கொலாஸ் மடுரோ. 2013 இல் மடுரோ தேர்தலில் வெற்றிபெற்று ஜனாதிபதி ஆனார். மடுரோவின் ஆட்சிக் காலத்தில் அமெரிக்காவின் பொருளாதாரத் தடையாலும் பெரும் எண்ணெய்க் கம்பனிகளின் வெளியேற்றத்தாலும் எண்ணெய் உற்பத்தி வீழ்ச்சி காணத் தொடங்கியிருந்தது. மடுரோவின் ஆட்சித் திறமையின்மையும் காரணம் என சொல்லப்படுகிறது. 2000 களில் நாளொன்றுக்கு 3 மில்லியன் பரல்களாக இருந்த எண்ணெய் உற்பத்தி 2024 இல் எட்டு இலட்சத்துக்கு குறைவாக வீழ்ச்சி கண்டது. 2017 இல் முதல் கட்டமாக ஆட்சிக்கு வந்த ட்றம்ப் தமது எண்ணெய் கம்பனிகளுக்கும் அமெரிக்காவுக்கும் வெனிசுவேலா அநீதி இழைத்துவிட்டதாக சொல்லி, வெனிசுவேலா மீதான பொருளாதாரத் தடையை பாரிய அளவில் செயற்படுத்தினார். அது வெனிசுவேலாவினை மோசமாகப் பாதித்தது. எண்ணெய் ஏற்றுமதி மேலும் வீழ்ச்சி கண்டது. ஏழ்மை மீண்டும் அதிகரித்தது. பெருமளவான அகதிகள் அல்லது குடியேற்றவாசிகள் வெனிசுவேலாவிலிருந்து அமெரிக்காவுக்குள் வரத் தொடங்கினர். ட்றம் 2021 இல் போனார். பைடன் வந்தார். ட்றம்ப் 2025 இல் மீண்டும் வந்தார். வெனிசுவேலாவின் நிலைமை அப்படியே தொடர்ந்தது. வெனிசுவேலாவிலிருந்து பெருந்தொகையானவர்கள் அமெரிக்காவுக்குள் வருகிறார்கள். அவர்கள் கிரிமினல்கள், சிறைக் கைதிகள், போதைப்பொருள் கடத்தல்காரர்கள், மனநலம் குன்றியவர்கள் என்றார். அதைத் தடுக்க வேண்டும் என கரீபியன் கடலில் முதலாவது கடற்படைக் கப்பலை விட்டார். பிறகு சுருதியை மாற்றி வெனிசுவேலாவிலிருந்து பெருந்தொகை போதைப் பொருள் அமெரிக்காவுக்குள் கடத்தப்படுகிறது, வெனிசுவேலா அரசு இலட்சக்கணக்கான அமெரிக்கர்களின் மரணத்துக்கு காரணமாக இருக்கிறது, அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என விமானம் தாங்கிக் கப்பலையும் அதில் 15000 இராணுவத்தனரையும் ஏற்றினார். 40 க்கு மேற்பட்ட சிறு படகுகளும் அதில் பயணித்த சுமார் 80 க்கு மேற்பட்டவர்களும் கரீபியன் கடலில் அடுத்தடுத்து குண்டுவீசி தாக்கப்பட்டு கொல்லப்பட்டனர். அந்தப் படகில் இருந்தது என்ன, போதைப்பொருள்தானா என்ற எந்த ஆதாரமும் காட்டப்படவில்லை. படகுகளை மறித்து சோதனை செய்யவுமில்லை. அதிலிருந்தவர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரிக்கப்படவுமில்லை. குண்டுகள் அவர்களை படகோடு எரியூட்டின. அதெல்லாம் மீன்பிடிப் படகுகள் என வெனிசுவேலா சொல்கிறது. எந்த ஆதாரமும் ட்றம்புக்கு தேவைப்படவில்லை. ஏனெனில் அவரது கரிசனையில் குடிபெயர்வாளர்களுமில்லை. போதைப் பொருளுமில்லை. ஒபாமாவுடன் நெருங்கிய தொடர்பில் இருந்த கொண்டுராஸ் இன் முன்னாள் ஜனாதிபதி Juan Orlando 2019 இல் நியுயோர்க் நீதிமன்றத்தால் ஆயுட்கால சிறைத் தண்டனைத் தீர்ப்பு வழங்கப்பட்டவர். 400 தொன் போதைப் பொருளை அமெரிக்காவுக்குள் கடத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டிருந்தது. 2022 இல் அவர் (பதவிக் காலம் முடிந்தபின்) அமெரிக்காவால் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அவருக்கு பொதுமன்னிப்பு வழங்குவது குறித்து இப்போ ட்றம்ப் ஆலோசித்து வருகிறார். போதைப்பொருளுக்கு எதிராக போராடும் மக்கள் தலைவர் ட்றம்பின் அழகு இதுதான். ஆக வெனிசுவேலாவுக்கு எதிரான சண்டித்தனத்துக்கு போதைப்பொருள் குற்றச்சாட்டை வைக்கும் அவரது சமூகப் பொறுப்பு புல்லரிக்காமல் என்ன செய்யும். இப்போ நேரடியாகவே விசயத்துக்கு வந்திருக்கிறார். “வெனிசுவேலாவின் எண்ணெய் வளமும் எனதே. இயற்கை வளமும் எனதே. அந்த நிலமும் எனதே” என வரவேண்டிய இடத்துக்கு வந்துவிட்டார். “அமெரிக்க எண்ணெய் கம்பனிகளை சட்டத்துக்கு புறம்பான வழியில் நாட்டிலிருந்து ‘கம்யூனிஸ்ட்’ சாவேஸ் இன் அரசாங்கம் வெளியேற்றி கொள்ளையடித்தது. அமெரிக்காவை ஏமாற்றியுள்ளது” என குமுறுகிறார். ஆக அவரது இலக்கு அந்த வளத்தை களவெடுப்பதுதான். இதை சாதிக்க அவர் முதலாவதாக தேர்ந்தெடுத்திருக்கிற வழி ஆட்சிமாற்றத்தை ஒரு சதிப்புரட்சியின் மூலம் அடைவது. ஏற்கனவே இந்த வழியை சாவேஸ் அரசாங்கத்துக்கு எதிராக பல முறை செய்து தோற்றது சிஐஏ. பிறகு 2018 இல் இராணுவ அணிவகுப்பு நடந்துகொண்டிருந்த நிகழ்வில் வைத்து இப்போதைய ஜனாதிபதி மடுரோவை ட்றோண் தாக்குதல் மூலம் கொல்ல முயற்சிசெய்து தோற்றது. இப்போ மீண்டும் இன்னொரு முயற்சியில் இறங்கியிருக்கிறது. சிஐஏ வெனிசுவேலாவுக்குள் சென்று சதியில் இறங்க, அதற்காகச் செயற்பட அனுமதியளித்து ஏற்கனவே ட்றம்ப் கையொப்பமிட்டிருந்தார். இந்த ஆண்டின் சமாதானத்துக்கான நோபல் பரிசை பெற்ற மரியா கொரீனாவை ஆட்சிக்கு கொண்டுவர சிஐஏ நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறது. இவர் அமெரிகக் கம்பனிகளுக்கு வாயிலைத் திறந்து தடங்கலற்ற களவை செய்ய அனுமதிக்க தயாராக இருப்பவர். அத்தோடு அவர் சியோனிச இஸ்ரேலிய அரசின் ஆதரவாளர். ஆனால் மடுரோ பலஸ்தீனத்தை அங்கீகரித்ததோடு, இஸ்ரேலை கடுமையாக விமர்சித்து வருபவரும் ஆவார். அதனால் நெத்தன்யாகு உட்பட சியோனிஸ்டுகள் மடுரோவை வீழ்த்தி மரியா கொரீனாவை ஆட்சியிலமர்த்துவதை ஊக்குவிக்கின்றனர். மடுரோ நாட்டைவிட்டு வெளியேறி ரசியாவுக்கு குடும்பத்துடன் செல்ல நவம்பர் 30 வரை காலக்கெடு விதித்தார் ட்றம்ப். மடுரோ மறுத்துவிட்டார். இப்போ காலக்கெடு முடிந்துவிட்டது. தனது அடிவருடி ஆட்சியை அங்கு நிறுவி மீண்டும் வெனிசுவேலாவின் முழு எண்ணெய் வளத்தையும் கொள்ளை அடிப்பது இலகுவான வழிமுறை என அவர் நம்புகிறார். ஆட்சிமாற்றத்துக்கான நியாயமாக ஒரு கதையாடலை அவர் உருவாக்குகிறார். “மடுரோ ஒரு சர்வாதிகாரி, அமெரிக்காவுக்குள் குடியேற்றவாசிகள் மூலம் பயங்கரவாதத்தை கடத்துகிறார். தூளைக் கடத்துகிறார். வெனிசுவேலாவில் ஜனநாயகம் இல்லை. வெனிசுவேலாவில் மக்கள் பட்டினியில் வாடுகிறார்கள். அவருக்கு மக்கள் ஆதரவு கிடையாது” என்று அவரது பட்டியல் நீள்கிறது. மடுரோவின் ஆட்சியை பெரும்பான்மையான மக்கள் விரும்பவில்லை என்று என்று புலம்பெயர்ந்த வெனிசுவேலாவின் ஊடகவியலாளர்கள் சொல்கிறார்கள். ஊடக சுதந்திரம் என்பதும் நசுக்கப்பட்டிருந்ததாக அவர்கள் சொல்கிறார்கள். ஆனால் இப்போது அமெரிக்க ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் மடுரோ ஆட்சியின் கீழ் அந்த மக்களை ஒருங்கிணைத்து வருவதாக சொல்லப்படுகிறது. அவர்கள் வீதிக்கு வந்து குரல் எழுப்பத் தொடங்கியிருக்கிறார்கள். எங்கள் பிரச்சினையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம், அமெரிக்கா ஒரு ஆணியும் பிடுங்கத் தேவையில்லை என்ற தொனியில் ஊர்வலத்தில் பங்குபற்றியவர்கள் ஊடகங்களுக்கு சொல்கிறார்கள். ட்றம்ப் இன் இரண்டாவது வழிமுறையானது, ஆட்சி மாற்றம் சாத்தியப்படாத பட்சத்தில், இராணுவ நடவடிக்கை மூலம் அந்த எண்ணெய் வளப் பிரதேசத்தைக் நிரந்தரமாகக் கைப்பற்றும் நோக்கமாகவும் இருக்கலாம். இதன்மூலம் எண்ணெய் வளத்தை கொள்ளை அடிக்க முடியும். இது நடந்தால், வெனிசுவேலா அமெரிக்கத் தாக்குதலால் சின்னாபின்னமாக போக இடமுண்டு. பெரும் பேரழிவுகளும் கொலைகளும் நடந்தேறும். எவளவுதான் தேசியவெறியை வெனிசுவேலாவின் மடுரோ ஆயுதமாக எடுத்தாலும் பெரும் படைபலமும் தொழில்நுட்ப வளர்ச்சியும் கொண்ட அமெரிக்க ஏகாதிபத்தியத்துக்கு எதிராக தாக்குப்பிடிக்க முடியாது. அதேநேரம் சில ஆய்வாளர்கள் “அப்படியொரு யுத்தம் நடந்தால் அது இலகுவில் முடிவடைந்துவிடப் போவதில்லை. வெனிசுவேலா ஒரு வியட்நாமாக, ஆப்கானிஸ்தானாக, நிக்கரகுவாவாக மாறும். மீண்டும் 10, 20 வருடங்கள் அமெரிக்கா களமாடவேண்டிய நிலை உருவாகலாம்” என்கின்றனர். வரலாற்று ரீதியாக அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் மீது வெறுப்புக் கொண்டிருக்கும் தென் அமெரிக்க நாடுகளில் மக்கள் ஏற்கனவே இதற்கெதிராக குரலெழுப்பத் தொடங்கியுள்ளனர். பிரேசில், கொலம்பியா, உருகுவே, மத்திய அமெரிக்கா, மெக்சிக்கோ நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவின் அணுகுமுறை பேரழிவை ஏற்படுத்தக் கூடியது என எச்சரித்துள்ளனர். வெனிசுவேலாவின் இறைமை மீதான தாக்குதலாக இது இருக்கிறது என கண்டிக்கின்றனர். தென் அமெரிக்கா ஸ்திரத்தன்மையற்றதாக மாற இடமுண்டு என்ற அச்சம் புறக்கணிக்க முடியாதது. இதற்குள் இயங்குகிற பூகோள அரசியல்தான் பிரமாண்டமானது. வெனிசுவேலாவின் எண்ணெயில் பெருமளவை சீனா இறக்குமதி செய்கிறது. அதுமட்டுமல்ல 500 க்கு மேற்பட்ட எண்ணைக் கிணறுகளை சீனா நவீனமயப்படுத்தியுள்ளன. சீனாவின் மேற்பார்வையின் கீழும் அவை உள்ளன. ஏற்கனவே கடந்த ஏப்ரலிலிருந்து ட்றம்ப் உருவாக்கிவிட்டிருக்கும் உலக பொருளாதாரப் போர் ஒன்று நிகழ்ந்து கொண்டிருக்கிறது. அதில் மோதிக்கொண்டிருக்கும் இரு பெரும் வல்லரசுகள் அமெரிக்காவும் சீனாவும் ஆகும். வெனிசுவேலா எண்ணெய் வளத்தை ஆக்கிரமிப்பதன் மூலம் சீனாவிற்கான வெனிசுவேலாவின் எண்ணெய் ஏற்றுமதி இல்லாமல் போகும். அது சீனாவுக்கு பாதகமான பொருளாதார விளைவை ஏற்படுத்தும். அத்தோடு கரீபியன் கடலில் சீனாவின் தலையீட்டை அல்லது நடமாட்டத்தை கட்டுப்படுத்த முடியும். இந்தியாவும் வெனிசுவேலாவிடமிருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இன்னொரு முக்கியமான பிரிக்ஸ் நாடு ஆகும். பெற்றோலியப் பொருட்களை வாங்குகிற, விற்கிற நாடுகள் அதற்கான பணப்பரிவர்த்தனையை டொலரில் மேற்கொள்ள வேண்டும் என்பதை 1973 இல் அமெரிக்கா நிறுவியதன் மூலம் இலாபமீட்டி வருவதோடு, உலக பொருளாதாரத்தை தனது ஆதிக்கத்தின் கீழ் வைத்திருக்கவும் டொலர்மயமாக்கல் தன்பங்குக்கு வழிசமைத்திருந்தது. அதை “பெற்றோ டொலர்” முறைமை என அழைப்பர். இந்த முறைமைக்கு சவாலாக இப்போ பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகள் எடுத்திருக்கிற எதிர்பாராத நகர்வு அமெரிக்காவை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. ரசியா, சீனா, இந்தியா, ஈரான் மட்டுமல்ல, சவூதி உட்பட பல மத்திய கிழக்கு நாடுகள் டொலரை விட்டு அந்தந்த நாடுகளின் பணப் பரிவர்த்தனையில் ஈடுபத் தொடங்கிவிட்டன. இது அமெரிக்காவுக்குக் கிடைத்த பெரும் அடி. அத்தோடு அமெரிக்காவின் எடுபிடியாக இருந்த இரண்டாவது பெரிய எண்ணெய் வளத்தைக் கொண்ட நாடான சவுதி அரேபியா பிரிக்ஸ் இல் இணைந்தும் விட்டது. ஜி7 (G7) இன் பொருளாதாரத்தை பிரிக்ஸ் சரிவு நோக்கி தள்ளியுள்ளதால் பிரிக்ஸ் நாடுகளை வரிப் போரால் மிரட்டியும் வருகிறார் ட்றம்ப். வெனிசுவேலாவும் ப்ரிக்ஸ் இல் இணைய விருப்பம் தெரிவித்திருந்தது. அமெரிக்காவில் கிடைக்கும் எண்ணெய் வளம் மிகப் பெரியதல்ல. அமெரிக்காவுக்கு ஆதாரமாக இருந்த கனடிய எண்ணெய் வளமும் இந்த வரிப் போரில் ஏற்பட்ட முரண்பாட்டால் சிக்கலுக்கு உள்ளாகியிருக்கிறது. ஆக அமெரிக்காவுக்கு நிரந்தரமான எண்ணெய்வள நாடு என்று எதுவும் இப்போது இல்லை. அந்த இடைவெளியை வெனிசுவேலா எண்ணெய் வளப் பிரதேசத்தை கைப்பற்றி வைத்திருப்பதன் மூலம் நிரப்ப ட்றம்ப் முயற்சிக்கிறார் என இன்னொரு கோணத்திலும் நோக்க முடியும். வெனிசுவேலாவின் இன்னொரு பாதுகாப்பு அரணான நாடாக ரசியாவை பலரும் சொல்கின்றனர். வெனிசுவேலாவுடனான இந்த நெருக்கடி தோன்றப் போவதான சமிக்ஞைகள் தெரிந்ததும் ரசியா வெனிசுவேலாவுக்கு இன்னும் மேலதிகமாக உயர் தொழில்நுட்ப ஆயுதங்களை வழங்கியுள்ளது. சரியாகச் சொன்னால் வியாபாரம் செய்தது என்பதே பொருத்தமானது. இந்தப் போரில் வெனிசுவேலாவுக்கு ஆதரவாக நேரடியாக களத்தில் ரசியாவோ, சீனாவோ வந்திறங்கும் என யாரும் எதிர்பார்த்தால், அது ஒரு ஜனரஞ்சக நினைப்பு மட்டுமே. அது யதார்த்தமேயில்லை. வல்லரசுகள் இலகுவில் தமக்குள் நேரடியாக மோதிக் கொள்வதில்லை. அது இன்னொரு நாட்டை மைதானமாக வைத்துத்தான் போர்களை நடத்துகின்றன. எனவே வெனிசுவேலா மீது அமெரிக்கா தாக்குதல் தொடுத்தால், சீனாவோ ரசியாவோ நேரடியாக துணைக்கு இறங்கப் போவதில்லை. அப்படி இறங்கும் என நினைக்கும் அரசியல் ஜனரஞ்சகமானது, அது அடுத்த உலகயுத்தத்தையும் சேர்த்தே கொண்டுவரும் என்ற யதார்த்தத்தை மறுக்க வக்கற்றதாக இருக்கும். இது அதிகாரத்துக்கான போட்டி என்ற புரிதலில் கவனம் கொள்ளப்பட வேண்டிய அம்சங்கள் ஆகும். வெனிசுவேலா மீது அமெரிக்கா போர் தொடுத்து நில ஆக்கிரமிப்பு செய்தால், அதன்பின் அது வல்லரசுகளின் இன்னொரு களமாக சிக்கிச் சீரழியும். பூகோள அரசியலில் இன்னொரு பரிமாணமும் உள்ளது. இதுபற்றி அமெரிக்க அரசியல் விஞ்ஞானியான ஜெப்ரி ஸக்ஸ் அவர்கள் பேசியிருக்கிறார். கடந்த வருட மார்ச் மாதம் ரசியாவும் கியூபாவும் ஒரு பாதுகாப்பு ஒப்பந்தத்தத்தை செய்தன. இந்த வருடம் யூன் மாதம் -அணுவாயுதத்தை ஏவக்கூடிய ஏவுகணைகளைத் தாங்கிச் செல்லும்- ரசிய நீர்மூழ்கிக் கப்பல் கருங்கடலில் புளோரிடாவிலிருந்து 90 கடல் மைல் தூரத்தில் உள்ள கியூப கடற் பரப்பினுள் வந்து நின்றது. இது ஒரு சமாந்தரமான நடவடிக்கை என ரசியா இதற்கு விளக்கம் கொடுத்தது. அதாவது உக்ரைனுக்கு அமெரிக்கா நீண்ட தூர ஏவுகணையை கொடுக்க எடுத்த முடிவுக்கு சமாந்தரமான எதிர் நடவடிக்கை என்பதே அதன் பொருளாகும். இன்னொரு வகையில் சொல்வதானால் “நீ எனது எல்லை அருகில் உக்ரைனுக்குள் ஏவுகணையை நிறுத்தினால், நானும் உனது எல்லை அருகில் நீர்மூழ்கிக் கப்பலை நிறுத்துவேன்” என்றும் எடுத்துக் கொள்ளலாம். 1962 இல் துருக்கியில் அமெரிக்கா நிறுத்திய ஏவுகணைக்கு எதிர்வினையாக சோவியத் யூனியன் கியூபாவில் தனது ஏவுகணையை நிறுத்த கப்பலில் வந்திருந்ததும், அது ஓர் அணுவாயுதப் போராக வெடிக்குமோ என உலகை அச்சுறுத்தியதுமான வரலாறு உண்டு. இந்த வருடம் கரீபியன் கடலில் ரசிய நீர்மூழ்கிக் கப்பல் பின் அரங்க நிகழ்வுகள் நடந்து சில மாதங்களின் பின்னர், கரீபியன் கடலில் பெரும் எடுப்பிலான இராணுவ பிரசன்னத்தை அமெரிக்கா செய்துள்ளது. வெனிசுவேலாவுடன் ரசியா மட்டுமல்ல சீனாவும் நெருங்கிய உறவு வைத்திருக்கிறது. அமெரிக்காவின் படையெடுப்புக் கண்காட்சி இரண்டு நாட்டுக்கும் “எங்களது அதிகார பரப்புக்குள்ளிருந்து வெளியே நில்லுங்கள்” என்ற செய்தியை சொல்லியிருப்பதாகவும் எடுத்துக் கொள்ள முடியும். கருங்கடலில் நீர்மூழ்கிக் கப்பலுடன் நடமாடுகிற ரசியாவுக்கும், வியாபார வழித் தடத்தில் அமளியாக இயங்குகிற சீனாவுக்கும் மறைமுகமான ஓர் இராணுவ ரீதியிலான எச்சரிக்கையாகவும் வெனிசுவேலாவின் கடற்பரப்பில் சூழ்ந்து நடத்தப்படும் அமெரிக்கப் படைக் கண்காட்சி இருக்கிறது. இராஜதந்திர ரீதியில் உக்ரைனை நேட்டோவில் அங்கம் வகிக்க முடியாதவாறும், ரசியா கைப்பற்றிய டொன்பாஸ் மற்றும் கிரைமியா பகுதிகளை ரசியாவுக்கு உக்ரைன் வழங்க நிர்ப்பந்தித்தும் ட்றம்ப் தனது ஆட்டத்தை ஆடுகிறார். நேட்டோவில் உக்ரைன் அங்கம் வகிக்க முடியாது என்பது நேட்டோ ரசிய எல்லை வரை வராது என்ற உத்தரவாதத்தை ரசியாவுக்குக் கொடுப்பதாகிறது. ஆகவே “அதுபோலவே நீ எனது கரீபியன் கடல் எல்லைவரை வராமல் இரு” என்ற செய்தியை இதற்குள்ளால் வாசிக்க முடியும். இது ஓர் எழுதப்படாத டீல் ஆக அவரவர் நலன் அடிப்படையில் அமெரிக்காவுக்கும் ரசியாவுக்கும் இடையில் அமைந்து விடுகிறது. இதேபோலவே உக்ரைன் நிலப் பரப்பை ரசியாவுக்கு விட்டுக் கொடுக்கச் செய்வதன் மூலம் வெனிசுவேலாவின் எண்ணை வளப் பிரதேசத்தை நிரந்தரமாக தன்னுடன் வைத்திருக்க அமெரிக்கா ஒரு ‘லைசன்ஸ்’ இனை பெற்றுக் கொள்கிறது. ரசியாவைப் பொறுத்தவரை, டொன்பாஸை தமதாக்குகிற இலக்கை முதன்மையில் வைத்திருக்கவே செய்யும். அதனால் வெனிசுவேலா மீது அமெரிக்கா போர் தொடுத்தால், ரசியா தலையிடாமல் இருப்பதற்கான இன்னொரு காரணம் இராஜதந்திர ரீதியில் உருவாக்கப்படுகிறது. இதை சூட்சுமமாக அணுகும் ட்றம்ப் வெனிசுவேலா தமது எண்ணெய் கம்பனிகளுக்கு அநீதி இழைத்தது என்ற தொனியை இப்போ உருமாற்றி, “அது எங்களது எண்ணெய்” என்று சொன்னதை விரிவுபடுத்தி, “எங்களது எண்ணெய். எங்களது வளம். எங்களது நிலம்” என்று நிலத்தையும் சேர்த்து பேசத் தொடங்கியிருக்கிறார். இது ஒரு அப்பட்டமான காலனிய மனக்கட்டமைப்பு என்பதை மடுரோ உரத்துச் சொல்கிறார். அமெரிக்காவின் இந்த படையெடுப்பு குறித்தும் மனித உரிமை மீறல் குறித்தும் அமெரிக்காவின் பிரபல பத்திரிகைகளும் ஊடகங்களும் கள்ள மவுனம் சாதிக்கின்றன. ஐரோப்பாவும் கள்ள மவுனம் சாதிக்கிறது. வெனிசுவேலா மீதான இந்த அச்சுறுத்தல் அல்லது சாத்தியமாகக் கூடிய ஆக்கிரமிப்பு யுத்தம் குறித்து ஐநா சபையும் இதுவரை எதுவும் செய்யவில்லை. மடுரோ ஐநா செயலாளருடன் பேசியபின்னரே பாதுகாப்புச் சபையை கூட்ட ஐநா செயலர் முடிவெடுத்திருக்கிறார். அமெரிக்காவிடம் வீட்டோ அதிகாரம் இருக்கும்போது இந்த கூட்டம் ஒரு ஒப்புக்கு நடந்தேறுவதாகவே அமையும். அமெரிக்க மக்களும்கூட இதுவரை வீதிக்கு வந்து இந்த காலனிய மனக்கட்டமைப்புக்கு எதிராக போராடவில்லை. வெனிசுவேலாவின் எண்ணை வளத்தை திருடுவதன் மூலம் இன்றைய பொருளாதார நெருக்கடிக்குள் தள்ளாடும் தமது வாழ்க்கைச் செலவை ஈடுகட்ட மட்டுமல்ல, தமது சலுகைபெற்ற வாழ்வை இழந்துவிடத் தயாராக இல்லாத காலனிய கருத்தியல் சிந்தனை முறையின் கைதிகளா அமெரிக்க மக்கள் என எண்ணத் தோன்றுகிறது. கரீபியன் கடல் போர்க் கோலம் பூண்டது போன்று அமளியாக மாறியிருக்கிறது. உலகின் மிகப் பெரிய விமானம் தாங்கி போர்க்கப்பல் வெனிசுவேலாவை அண்டிய கடற்பரப்பில் நிற்கிறது. வெனிசுவேலாவை கடல்வழியாக முற்றுகையிட்டு பல போர்க்க கப்பல்கள் நிற்கின்றன. இதுவரை 16000 இராணுவத்தினர் காவல்நாய்களாகவும், ட்றம்ப் ஏவினால் கடித்துக் குதற தயாராக இருப்பவர்களாகவும் கடற்பரப்பில் காற்று வாங்கிக் கொண்டிருக்கின்றனர். எண்ணெய் பீப்பாக்களை தாங்கியபடி வெனிசுவேலாவுக்குள் வரவும் வெனிசுவேலாவிலிருந்து வெளியே போகவும் எந்த கப்பலுக்கும் அனுமதியில்லை. அதை செயலில் எச்சரிக்கும் விதமாக 1.9 மில்லியன் எண்ணெய்ப் பீப்பாக்களுடன் கருங்கடலில் காணப்பட்ட ‘நிழல் கப்பலை’ டிசம்பர் 10ம் தேதி அமெரிக்கா தடாலடியாக கைப்பற்றியது. அதிலிருந்த எண்ணெய் முழுவதையும் திருடியுமுள்ளது. கப்பலை தடுத்தும் வைத்துள்ளது. அதற்குப் பிறகு மேலும் இரண்டு கப்பல்களை கைப்பற்றியுள்ளது. ஆனால் வெனிசுவேலாவில் இப்போதும் இயங்கிக் கொண்டிருக்கும் அமெரிக்கக் கம்பனியான செவ்ரோன் 500’000 பீப்பாக்களுடன் அமெரிக்கா போய்க்கொண்டிருந்த காணொளி வெளியாகியிருந்தது. உலக சமாதான நாயகனாக படம் காட்டி நோபல் பரிசுக்கு அலையும் ட்றம்ப், அதற்கு முரண்நிலையாக செயற்பட்டு இந்தப் போரை நடத்துவாரா, அல்லது அழுத்தச் செயற்பாடாக தனது இராணுவ மிரட்டலை செய்து வெனிசுவேலாவில் தனது எடுபிடி ஆட்சியொன்றை நிறுவி, எண்ணை வளத்தை கொள்ளையடிக்கப் போகிறாரா என்பது விரைவில் தெரிய வந்துவிடும். அப்படியொன்று நடந்தால் வெனிசுவேலாவின் ஜனாதிபதி மடுரோவையும் குடும்பத்தையும் (சிரியாவிலிருந்து அசாத் இனை ரசியாவுக்குள் கொணர்ந்ததுபோல) ரசியாவுக்கு அழைத்துவர புட்டினுக்கு ட்றம் அனுமதியளிப்பார் என்பது மட்டும் உறுதி. மடுரோ வெனிசுவேலாவை விட்டு வெளியேற வேண்டி வந்தால், தனது நாடு அவரை வரவேற்கும் என (ரசியாவின் செல்லப்பிள்ளையான) பெலாருஸ் அதிபர் அலெக்ஸண்டர் லூக்காசெங்கோ கூறியிருப்பதை வெறும் கூற்றாக மட்டும் எடுப்பதா, அதோடு சேர்த்து ஓர் எதிர்கால அரசியல் நிகழ்வின் சாத்தியப்பாட்டை முன்னறிவிப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாமா?. https://sudumanal.com/2026/01/01/இந்த-வளமும்-எனதே-மண்ணும்/
-
2025: உலக நிலவரம் எப்படி இருந்தது?
2025: உலக நிலவரம் எப்படி இருந்தது? ஜனவரி 1, 2026 –பயஸ் ஃபோஸன் (Pius Fozan) எந்தத் தீர்வும் எட்டப்படாமலேயே இந்த ஆண்டு (2025) முடிவுக்கு வருகிறது. உலகம் எதையெல்லாம் சகித்துக்கொள்ளத் துணிந்துவிட்டது என்பதற்கான நீண்ட பட்டியல்தான் இங்கே எஞ்சி நிற்கிறது. அந்தப் பட்டியலின் முக்கிய அம்சங்கள்: காஸாவில் இஸ்ரேலியப் படைகளால் 18,457க்கும் மேற்பட்ட குழந்தைகள் கொல்லப்பட்டனர். இரண்டரை ஆண்டுகளைக் கடந்தும் உள்நாட்டுப் போர் சூடானைச் சிதைத்து வருகிறது. உலகில் வெறும் 6.6% மக்கள் மட்டுமே முழுமையான ஜனநாயகச் சூழலில் வாழ்கிறார்கள். ஒட்டுமொத்த மனித குலத்தில் வெறும் 0.001% பேர் (சுமார் 60,000 பேர்) உலக மக்கள் தொகையின் சரிபாதிப் பேர் வைத்துள்ள செல்வத்தைப் போல மூன்று மடங்கு செல்வத்தைத் தங்கள் பிடியில் வைத்திருக்கிறார்கள். உக்ரைனில் ரஷ்யா தொடுத்த போர் நான்காவது ஆண்டிற்குள் நுழைகிறது. சில நெருக்கடிகளுக்கு இங்கே கேள்வி எழுப்பப்படுகிறது. ஆனால் சூடான், ஹைட்டி, கொங்கோ போன்ற நாடுகளின் துயரங்களோ கவனிக்க ஆளின்றி அனாதையாக இருக்கின்றன. சூடான் உலகக் கவனத்திலிருந்து ஏன் நழுவியது என்பது சரியாகத் தெரியவில்லை. ஒருவேளை நம் ஸ்மார்ட்போன் திரையில் ஓடும் ‘ஸ்க்ரோலிங்’ வேகத்தில், மக்களின் வலிகள் ஏதோ ஒரு புதுமையான செய்தியுடன் போட்டி போட முடியாமல் தோற்றுப்போகின்றனவா? அல்லது ஆபிரிக்காவில் போர் நடப்பது வழக்கம்தான், அது அந்த மண்ணுக்கே உரியது என நாம் பழகிப்போன ‘இனவாத’ முன்முடிவுகள் காரணமா? அல்லது எது ‘அவசரம்’ என்பதை அதிகாரவர்க்கம் தீர்மானிக்கிறதா? சூடான் ஏன் தலைப்புச் செய்திகளில் இடம் பெறவில்லை என்பது மட்டுமல்ல; சூடானைப் பற்றிப் பேசாததால் கிடைக்கும் அமைதியால் பலன் அடைவது யார் என்பதுதான் கேள்வி. சூடானைப் பொறுத்தவரை, அந்த அமைதிக்கான விலையைத் ‘தங்கம்’ மூலம் அளவிடலாம். இந்த மோதலில் தங்கத்தைத் தோண்டி எடுக்கும் ஆசையில் இருக்கும் ஐக்கிய அரபு இராச்சியம், அங்கிருக்கும் கிளர்ச்சிப் படைகளுக்கு (RSF) ஆயுதங்களை வழங்கியதை ஐக்கிய நாடுகள் சபையே ஆவணப்படுத்தியுள்ளது. தாறுமாறாகிப்போன சர்வதேச ஒழுங்குமுறை வெறும் சம்பிரதாயச் சடங்காக மாறியிருந்த சர்வதேச ஒழுங்குமுறை, 2025 இல் இன்னும் மோசமாக உடைந்துபோனது. அமெரிக்கா தன் இஷ்டத்திற்கு அதிகாரத்தைச் செலுத்தியது; தான் உருவாக்கிய உலகளாவிய விதிமுறைகளைத் தனது தேவைக்கேற்ப வளைத்துக்கொண்டது. இஸ்ரேல் மீதான விசாரணையைத் தொடர்ந்ததற்காகச் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் (ICC) மீதே அமெரிக்கா தடைகளை விதித்தது. காஸாவில் நடக்கும் மனித உரிமை மீறல்களைப் புலனாய்வு செய்த ஐக்கிய நாடுகளின் சிறப்பு அதிகாரி ஃபிரான்செஸ்கா அல்பனீஸுக்கும் முட்டுக்கட்டை போடப்பட்டது. வெறுப்புப் பேச்சுகளைக் கேள்வி கேட்டதற்காகவும், அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்களைப் பொறுப்புக்கூற வைத்ததற்காகவும் ஐரோப்பியச் சமூகத் தலைவர்கள் தண்டிக்கப்பட்டனர். அமெரிக்காவிற்குள் புலம்பெயர்ந்த மக்கள் நீதிமன்றங்களிலும் தெருக்களிலும் வேட்டையாடப்பட்டனர். அவர்கள் சங்கிலியால் பிணைக்கப்பட்டும், தாக்கப்பட்டும், கேள்விக்குரிய சூழலில் நாடுகடத்தப்பட்டும் வருகின்றனர். இங்கே தர்க்கமும் தண்டனை கொடுப்பவரும் ஒருவர்தான்; ஆனால் கூச்சல் மட்டும் சில இடங்களுக்குச் சாதகமாகத் தேர்ந்தெடுக்கப்படுகிறது. ஐரோப்பியத் தலைவர்கள், தங்கள் ஆள் ஒருவருக்கு அமெரிக்கா தடை விதித்தபோது கதறினார்கள். ஆனால், தாங்களே உருவாக்கிய சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு (ICC) இஸ்ரேலைத் தண்டித்ததற்காகத் தடை விதிக்கப்பட்டபோது மௌனம் காத்தனர். இவர்களைப் பொறுத்தவரை நீதி என்பது அவர்கள் விருப்பத்திற்குத் தேர்ந்தெடுத்துக்கொள்ளக்கூடிய ஒன்று (Optional). பொறுப்புக்கூறல் என்பது நிபந்தனை. யாருக்கு வலி ஏற்படுகிறது, யாரால் வலி ஏற்படுகிறது என்பதைப் பொறுத்தே இது மாறுகிறது. சர்வதேச ஒழுங்கும் சட்டத்தின் ஆட்சியும் இங்கே ஒருபோதும் சமமாகப் பயன்படுத்தப்பட்டதில்லை. 2025 இல் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒன்றும் புதிதாக எதையும் உடைத்துவிடவில்லை; இந்தத் தறிகெட்ட அமைப்பு இப்படித்தான் வடிவமைக்கப்பட்டிருக்கிறது என்பதை அவர் அப்பட்டமாகக் காட்டியிருக்கிறார். இந்த அமைப்பு நடுநிலையானது அல்ல; இது அதிகாரத்திற்குச் சேவை செய்யவே உருவாக்கப்பட்டது. அதன் போலித்தனத்தை இனி யாராலும் மறைக்க முடியாது. பலவீனமாகிவரும் ஜனநாயகம் ஜனநாயகமும் சுதந்திரமும் தொடர்ந்து பின்னோக்கிச் சென்றுகொண்டிருக்கின்றன. பத்தில் ஒருவருக்குக்கூட இப்போது முழுமையான ஜனநாயகம் கிடைப்பதில்லை. உலக மக்கள்தொகையில் சுமார் 72% பேர் சர்வாதிகார அமைப்புகளின் கீழ் வாழ்கிறார்கள். இது 1970களுக்குப் பிறகு பதிவான மிக உயர்ந்த அளவாகும். மக்கள் பங்களிப்பு சுருங்கிவிட்டது, நிறுவனங்கள் மீதான நம்பிக்கை தளர்ந்துவிட்டது. தொழில்நுட்ப ஜாம்பவான் சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம் உலகின் முதல் ‘ட்ரில்லினியர்’ (Trillionaire) ஆகும் நிலையை நெருங்கிவிட்டார். இந்த ஓராண்டுக் காலத்தில் அவரது சொத்து மதிப்பு கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது. ஊடகம், பாதுகாப்புத் துறை, செயற்கைக்கோள் கட்டமைப்பு என அவரது ஆதிக்கம், தனிநபர் மூலதனத்திற்கும் பொது அதிகாரத்திற்கும் இடையிலான எல்லையை மங்கச் செய்துவிட்டது. அறிஞர்கள் இதை ஒருவகை ‘தனியார் ஆட்சி’ (Private Governance) என்றே விவரிக்கிறார்கள். அவரது பணமும் தளங்களும் உலகெங்கிலும் ஒரு புதிய நவீன சர்வாதிகாரத்தை வடிவமைத்துச் சீரமைக்கின்றன. இந்தச் சீர்குலைந்த பொருளாதார அமைப்பால் பலன் அடைந்தவர் எலான் மஸ்க் மட்டும் அல்ல. உலக சமத்துவமின்மை அறிக்கை 2026இன்படி, முதல் 10% வருமானத்தை ஈட்டுபவர்கள் மீதமுள்ள 90% பேர் பெறும் மொத்த வருமானத்தைவிட அதிகமாகப் பெறுகிறார்கள். உலகச் செல்வத்தில் 75%-ஐ அந்த முதல் 10% பணக்காரர்கள் வைத்திருக்கிறார்கள்; அடித்தட்டு மக்களுக்கோ வெறும் 2% மட்டுமே மிஞ்சுகிறது. அதே சமயம், உலகளாவிய தொழிலாளர்களின் ஊதியமோ தேக்கமடைந்து அல்லது சரிந்துவருகிறது. வரலாற்று ரீதியாகப் பார்த்தால், இந்த அளவிலான சமத்துவமின்மை மிகவும் அசாதாரணமானது. உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவிலும் இந்த அழுத்தம் அப்பட்டமாகத் தெரிந்தது. இந்தியாவின் முதல் 1% பணக்காரர்கள் நாட்டின் 40% செல்வத்தைக் கொண்டுள்ளனர். இது இந்தியாவை உலகின் மிக மோசமான சமத்துவமின்மை கொண்ட சமூகங்களில் ஒன்றாக மாற்றியுள்ளது. இது இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சி இருந்த காலத்தைவிடவும் மோசமானது. ஒரு துளி நம்பிக்கை எஞ்சியிருக்கிறது… நேபாளம், வங்கதேசம் முதல் பல்கேரியா, ஜோர்ஜியா, மடகாஸ்கர்வரை போராட்டங்கள், மாணவர் இயக்கங்கள் மூலம் இளைஞர்கள் அரசியலின் தற்போதைய நிலையைத் தகர்த்துவருகின்றனர். அரசாங்கங்கள் கவிழ்ந்தன, புதிய அரசியல் கட்டமைப்புகள் வடிவம் பெறுகின்றன. ஜோர்ஜியா இந்த மாற்றத்தின் அடையாளமாக மாறியது; இளைஞர்கள் அடக்குமுறையை மீறி வீதிகளில் உறுதியாக நிற்கிறார்கள். அமெரிக்காவில், ஜோஹ்ரான் மம்தானி போன்ற சோஷலிசவாதிகள், காஸா விவகாரம், சமூக நீதி ஆகியவற்றுக்கான தங்கள் உறுதியான ஆதரவை மாற்றிக்கொள்ளாமலேயே தேர்தலில் வெற்றி பெற முடியும் எனக் காட்டினார்கள். இன்றைக்கும் கொள்கை அரசியலுக்கு இடமுண்டு என்பதற்கான சான்று இது. நியூயார்க் மேயர் தேர்தலில் வென்றபோது ஜோஹ்ரான் மம்தானி தன் மொழியையோ அல்லது வாக்குறுதிகளையோ ஒருபோதும் நீர்த்துப்போகச் செய்யவில்லை. 2025 இல் பெண்களின் உறுதியும் வெளிப்பட்டது. ஐரோப்பாவில் பெண்கள் ஒன்றுதிரண்டு பாதுகாப்பான கருக்கலைப்பு என்பது புவியியல் சார்ந்த விஷயம் அல்ல, அது தனிநபர் உரிமை என்பதை ஐரோப்பிய நாடாளுமன்றம் அங்கீகரிக்கச் செய்தனர். இது விவாதத்தின் போக்கை அறநெறியிலிருந்து ‘உரிமை’ நோக்கி மாற்றியது. ஆற்றல் துறையிலும் மாற்றம் நிகழ்ந்தது. முதல் முறையாக நிலக்கரி மின்நிலையங்களை விடவும் காற்று, சூரிய ஒளி ஆகியவை மூலம் அதிக மின்சாரம் இந்த ஆண்டு தயாரிக்கப்பட்டது. இது உலக மின்சார அமைப்பில் ஒரு பெரும் திருப்புமுனை. நெறிமுறைகள் எவ்வளவு எளிதாகச் சிதைக்கப்படும் என்பதை இந்த ஆண்டு காட்டியது. அதே சமயம், மக்கள் திரண்டு அழுத்தம் கொடுத்தால் அதிகாரம் எப்படிப் பணியும் என்பதையும் காட்டியிருக்கிறது. இந்த அழுத்தங்கள் எந்த அளவுக்கு ஒரு நிலையான கட்டமைப்பாக மாறப்போகின்றன என்பதைப் பொறுத்தே வருங்காலம் அமையும். மூலம்: 2025: A year without alibis https://chakkaram.com/2026/01/01/2025-உலக-நிலவரம்-எப்படி-இருந்/
-
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதியில் உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் - குழந்தை உட்பட 24 பேர் பலி
ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைன் பகுதியில் உக்ரேனிய ட்ரோன் தாக்குதல் - குழந்தை உட்பட 24 பேர் பலி 02 Jan, 2026 | 12:56 PM ரஷ்யாவால் ஆக்கிரமிக்கப்பட்ட உக்ரைனின் தெற்கு கெர்சன் பிராந்தியத்தில் வியாழக்கிழமை (1) புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தபோது ஹோட்டல் ஒன்றை நோக்கி உக்ரைன் படையினர் நடத்திய ட்ரோன் தாக்குதலில் 24 பேர் கொல்லப்பட்டதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடலோர கிராமமான கோர்லியில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் நடைபெற்ற இடத்தில் 3 உக்ரைன் நாட்டு ட்ரோன்கள் தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த தாக்குதலில் ஒரு குழந்தை உட்பட 24 பேர் உயிரிழந்ததாக ரஷ்யா தெரிவித்துள்ளது. “இது பொதுமக்களுக்கு எதிராக வேண்டுமென்றே உக்ரைன் நடத்திய பயங்கரவாதத் தாக்குதல்” ரஷ்ய பிராந்திய ஆளுநரான விளாடிமிர் சால்டோ, ரஷ்ய வெளியுறவு அமைச்சு மற்றும் அந்நாட்டு மூத்த அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். https://www.virakesari.lk/article/235023
-
இலங்கை கடற்பரப்பில் மேலும் 11 இந்திய மீனவர்கள் கைது
இலங்கை கடற்பரப்பில் மேலும் 11 இந்திய மீனவர்கள் கைது இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் – காரைநகர் கடற்பகுதியில் 11 இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கடற்படையினர் நேற்றிரவு (1) முன்னெடுத்த சோதனையின் போது, குறித்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை பேச்சாளர் கொமாண்டர் புத்திக சம்பத் தெரிவித்தார். இதன்போது சந்தேகநபர்கள் பயணித்த படகு ஒன்றும் மீன்படி உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கைதான இந்திய மீனவர்கள் காங்கேசன்துறை கடற்படை முகாமுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ள நிலையில், அவர்களை கடற்றொழில் மற்றும் நீரியல்வள திணைக்களத்தில் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. https://www.samakalam.com/இலங்கை-கடற்பரப்பில்-மேலு/
-
ஆறாம் தர ஆங்கில பாடக் கையேட்டில் ஓரினச்சேர்க்கை உள்ளடக்கம்: ஆசிரியர் சங்கம் கடும் கண்டனம்
தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் திடீர் பதவி விலகல் தேசிய கல்வி நிறுவகத்தின் பணிப்பாளர் நாயகம் பேராசிரியர் மஞ்சுளா விதானபத்திரன தற்காலிகமாக அந்த பதவியில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளார். சர்ச்சைக்குரிய தரம் 6 ஆங்கில பாடத் தொகுதி (module) தொடர்பான விசாரணை நிறைவடையும் வரை அவர் தமது பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக கூறப்படுகின்றது. புதிய கல்வி சீர்திருத்தத்திற்கு அமைய தயாரிக்கப்பட்டு பாடசாலைகளுக்காக விநியோகிக்கப்பட்ட 6 ஆம் தரத்திற்கான பாடத் தொகுதியில் பொருத்தமற்ற இணையத்தளம் ஒன்றின் பெயர் ஒன்று உள்ளடக்கப்பட்டுள்ளமையினால் பாரிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. அதனை கல்வி அமைச்சும் உறுதிப்படுத்தியுள்ளதுடன், இது தொடர்பில் விசாரணையினை நடத்துமாறு கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ குற்றப்புலனாய்வவு திணைக்களத்தில் முறைப்பாடு ஒன்றையும் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.samakalam.com/தேசிய-கல்வி-நிறுவகத்தின்/
-
தையிட்டி விவகாரம் – சிங்கள ஊடகங்களில் விளம்பரம் செய்ய தீர்மானம்!
தையிட்டி விவகாரம் – சிங்கள ஊடகங்களில் விளம்பரம் செய்ய தீர்மானம்! adminJanuary 2, 2026 தையிட்டி திஸ்ஸ ரஜமகா விகாரை தொடர்பாக தென்னிலங்கையில் தவறான தகவல்கள் பரப்ப படுவதனால், சிங்கள மக்களுக்கு உண்மை நிலையை வெளிப்படுத்த சிங்கள மொழியில் தென்னிலங்கை ஊடகங்களில் விளம்பரங்களை பிரசுரிக்க வலிகாமம் வடக்கு பிரதேச சபை தீர்மானித்துள்ளது. வலிகாமம் வடக்கு பிரதேச சபையின் விசேட அமர்வு தவிசாளர் சோமசுந்தரம் சுகிர்தன் தலைமையில் நடைபெற்ற போதே குறித்த விடயம் முன்வைக்கப்பட்டது. தையிட்டி விகாரை காணி வரைபடங்களை சிங்கள ஊடகங்களில் தெளிவாக பிரசுரித்து விளம்பரங்களை போட சபையில் ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டது. https://globaltamilnews.net/2026/225479/