Everything posted by கிருபன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பபுவா நியூகினி அணி 8 விக்கெட்டுக்களை இழந்து 136 ஓட்டங்களை மாத்திரமே எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி 19 ஓவர்களில்தான் குறைந்த வெற்றி இலக்காகிய 137 ஓட்டங்களை 5 விக்கெட்டுக்களை இழந்து அடையமுடிந்தது. முடிவு: மேற்கிந்தியத் தீவுகள் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் என எல்லோருமே கணித்தமையால் அனைவருக்கும் தலா இரு புள்ளிகள் கிடைக்கின்றன. முதல் இரு போட்டிகளின் முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளார்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 ஈழப்பிரியன் 4 2 வீரப் பையன்26 4 3 நிலாமதி 4 4 குமாரசாமி 4 5 தியா 4 6 தமிழ் சிறி 4 7 நுணாவிலான் 4 8 பிரபா USA 4 9 வாதவூரான் 4 10 ஏராளன் 4 11 கிருபன் 4 12 ரசோதரன் 4 13 அஹஸ்தியன் 4 14 கந்தப்பு 4 15 எப்போதும் தமிழன் 4 16 நந்தன் 4 17 நீர்வேலியான் 4 18 கல்யாணி 4 19 கோஷான் சே 4 20 சுவி 2 21 புலவர் 2 22 P.S.பிரபா 2 23 வாத்தியார் 2
-
பொதுச்சுடர் - தெய்வீகன்
பொதுச்சுடர் - தெய்வீகன் விமானம் தரைதட்டியபோது உயிர்நாடியில் அலாரம் சொட்டியது. காலம் என்னை புதியதோர் நிலத்தில் பிரசவித்தது. விமான நிலையங்களில் ஒருவன் கழுத்தில் இரண்டு தலைகளோடு வந்திறங்கினால்கூட புதினமில்லை. கடவுச்சீட்டிற்குள் இரண்டு தலைகளிருந்தால்தான் அதகளப்படுவார்கள். இங்கு எல்லோருமே கடவுச்சீட்டுகள்தான். தடித்த இரண்டு அட்டைகளாலான அந்த சிறிய புத்தகத்துக்குத்தான் மரியாதை. இலங்கையிலிருந்து ஏறும்போதும் சரி, மலேசியாவில் மாறும்போதும் சரி, இப்போதும்கூட மானிடத்தின் இந்த அட்டை வாழ்வு எவ்வளவு அஜீரணமானது என்பதை எண்ணியபடியே நடந்தேன். எனக்கு முன்னும் பின்னுமாக தடித்த கடவுச்சீட்டுக்கள் வேகமாக ஓடியபடியிருந்தன. என்னை முந்திக்கொண்டும் இடித்துத் தள்ளிக்கொண்டும் சில கடவுச்சீட்டுக்கள் பறந்தன. அவர்களது கைகளிலுள்ள தள்ளுவண்டிகள் குட்டி விமானங்கள் போல சிலிக்கான் தரையில் வழுக்கியபடி சென்றன. நான் பரபரக்கவில்லை. பத்தோடு பதினொன்றாக முட்டிமோதிக்கொள்ளவும் விரும்பவில்லை. எல்லா திசைகளிலும் பார்த்துவிட்டு, என்னைப்போல அவசரப்படாத அப்பாவிகள் நின்று கொண்டிருந்த வரிசையில் ஒருவனாக போய் சேர்ந்து கொண்டேன். எனது தோளில் ஒற்றைப்பை. தள்ளி வந்த வண்டிலில் ஒரே ஒரு உடுப்புப்பெட்டி. அவ்வளவுதான். அதிக சோதனைகள் இல்லை. நாய்கூட என்னை கணக்கெடுக்கவில்லை. வெளியில் வந்து “மெல்பேர்ன் வரவேற்கிறது” என்ற மின்மினிப்பலகையை பார்ப்பதற்கு முன்னரே, தயானி பெருங்கூட்டத்துக்குள் நின்று என் பெயர் சொல்லிக் கூவினாள். அவளைப்பார்த்தபடி வேகமாக நடக்கத் தொடங்கியதில் முன்னே சென்று கொண்டிருந்தவரின் கால்களில் வண்டியால் இடித்துவிட்டேன். ஆஸ்திரேலிய மண்ணில் எனது முதலாவது வன்முறைச்சம்பவம் இனிதே நடந்தேறியது. உடனடியாவே மன்னிப்பைக்கேட்டு சிரித்து சமன் செய்தேன். தயானி கையில் பூங்கொத்தோடு சிரித்தபடி ஓடிவந்து அணைத்துக் கொண்டாள். திருமணமான பதினொரு மாதங்களில் ஒரு சுற்று பெருந்திருந்தாள். அணைத்து முடியும்வரைக்கும் தயானியின் அப்பா வைத்தீஸ்வரன் சிரித்தபடி காத்திருந்தார். இன்னும் நால்வரும்கூட அவருடன் சிரித்துக்கொண்டே நின்றார்கள். அவர்கள் ஒவ்வொருவருக்கும் சிரம் தாழ்த்தி, கைகொடுத்து “ஹலோ” சொன்ன பிறகு, தயானி அவர்களை அறிமுகம் செய்து வைத்தாள். அனைவரும் அவளது நெருங்கிய உறவினர்கள் என்பதுதான் பெருமகிழ்வின் சாராம்சம். வைத்தீஸ்வரன் தனது அகன்ற அதிகாரம் நிறைந்த தொப்பையோடு கார் தரிப்பிடத்தை நோக்கி முன்னே நடந்தார். எல்லோரும் அவரைத் தொடர்ந்தோம். தயானி என் கைகளை விடவில்லை. எனது ஒற்றைப்பையையும் உடுப்புப்பெட்டியையும் தூக்கிக்கொண்டும் தள்ளிக்கொண்டும் அவளது உறவினர்கள் பின்னால் வந்து கொண்டிருந்தார்கள். அது எனக்கு சற்று சிரமமாக இருந்தது. ஆனால், தயானி என்னை தகப்பனுக்கு பின்னால் இழுத்துச் சென்று கொண்டிருந்ததால் திரும்பிப் பார்க்கவும் முடியவில்லை. அவளது உடல் முழுவதும் பிரகாசித்திருந்த குதூகலம் விரல்களில் சுடர் விட்டபடியிருந்தது. புத்தம் புதிய டொயாட்டா “க்ளுகர்” வாளிப்பான அதிவேக நெடுஞ்சாலையில் சத்தமின்றி பறந்து கொண்டிருந்தது. மெல்பேர்ன் ‘டலமறீன்’ விமான நிலையத்தில் வெளிநாட்டு விமானங்கள் வந்திறங்கும் பகல் நேரப்பொழுதென்ற காரணத்தினால், விடுமுறை நாளென்ற போதும் சீரான போக்குவரத்து வீதியில் தெரிந்தது. எனது பெட்டியை தள்ளிக்கொண்டு வந்த தயானியின் உறவினர் இப்போது வண்டியை ஓட்டிக்கொண்டிருந்தார். தயானியின் அப்பா அருகிலிருந்தார். மீதி மூவரும் எங்களுக்கு முன்பாக இருந்தார்கள். நானும் தயானியும் வாகனத்தின் ஆகப்பின்னாலிருந்த இருக்கையில் சொகுசாக சரிந்திருந்தோம். வாகனத்தின் நடுவிலிருந்த சிறிய கண்ணாடியில் கட்டித் தொங்கவிடப்பட்ட மஞ்சள்நிற பிள்ளையார் எல்லோரையும் பார்த்தபடியிருந்தார். அவருக்கு கீழிருந்த தொடுதிரை வானொலிக்கு சற்று மேலாக காணப்பட்ட பகுதி திருநீறு – சந்தனம் – குங்குமம் அனைத்தும் குழைத்து பூசி மெழுகப்பட்டிருந்தது. அப்போது, பிள்ளையார் உட்பட அனைவரும் அடைகாத்துக் கொண்டிருந்த அமைதியை கிழித்தபடி உரையாடல் தொடங்கியது. “செக்கிங் ஒண்டும் இல்லைத்தானே” – இது வைத்தீஸ்வரன். “பாஸ்போட்டை பாத்திட்டு ஏதாவது முறைச்சவனோ” – இது இன்னொரு உறவினர். “நீர் அவங்கள பாத்து முறைச்சனீரோ” – இது எனது பையை தூக்கிக்கொண்டு வந்தவர். “ஹி ஹி ஹி” – இது அவரோடு வந்த இன்னொரு உறவினர். “பகல் நேரம், அவ்வளவு சிக்கல் இருந்திருக்காது” – அப்படித்தானே என்று ஆசனத்துக்கு மேல் விளிம்பினால் தலையை எறிந்து அடுத்த கேள்வியையும் கேட்டுமுடித்தனர். நான் தயானியை பார்த்தேன். அவள் விரல்களால் மெல்லிதாக சொறிந்தாள். “சீ..…ஓம்…” – என்றபடி இரண்டும் குழைந்த பதிலோடு உதடுகளையும் ஈரப்படுத்திக் கொண்டேன். கடைசியாக கேள்விகேட்டவர் முன்னுக்கு திரும்பும்வரைக்கும் நான் அவரைப் பார்த்து சிரித்தது, அவருக்கு திருப்தியாக இருந்திருக்கவேணும். முகத்தில் நல்ல புளுகம் தெரிந்தது. “இவன் றோயிண்ட மருமகன் வரேக்க, அவனை அரை மணித்தியாலம் மறிச்சு விசாரிச்சவங்களாம் என்ன” “யார் ஜெனீட்டாண்ட மருகன்….?” “பின்ன….” “அந்தப்பெடியனும் இயக்கமோ அண்ணே?” “டேய், அவனும் கடைசிநேரத்தோடதானே வெளியில வந்தவன்” “என்ன சொல்லுறியள்….?” “பின்ன….” நான் நினைத்தது போலவே கதை சுழன்றடித்து மீண்டும் என்னிடம் வந்தது. “உமக்கு தெரியுமே, ரெஜியெண்டு…. இயக்கப்பெயர் என்னெண்டு தெரியேல்ல… நல்ல வளர்த்தி… சிவலை….” முதல் பின்னுக்கு திரும்பிய அவரேதான் இப்போதும். கேள்வி முடியும்முதலே நான், “தெரியவில்லை” – என்று உதட்டை பிதுக்கியது அவருக்கு சுத்தமாக திருப்தியில்லை. முகத்தில் வாட்டம் தெரிந்தது. வைத்தீஸ்வரன் இயன்றளவு இந்தக்கதைகளில் ஈடுபடாமல் தெருவைப் பார்த்தபடியிருந்தார். நெடுஞ்சாலை முடிந்து சிறுவீதி வழியாக வாகனம் வேகத்தை குறைத்து ஓடியபடியிருந்தது. ஒளிமரங்களுக்கு அடியில் அவ்வப்போது வரிசையில் நின்றது. அருகில் போகும் வாகனங்களில் பார்வையை படரவிட்டேன். உள்ளே அடர்ந்திருந்த அழுத்ததிற்கு வெளிக்காட்சிகள் வசதியாக இருந்தது. எவ்வளவுதூரம் கடந்து போனாலும் ஆச்சரியங்களை ஒளித்து வைத்திருக்கும் பெருந்தெருக்கள், பெய்த மழை போதுமென்று ஓங்கிநிற்கும் நெடுமரங்கள், கத்தரித்துவிட்டதுபோல் தார்சாலை ஓரங்கள், பிள்ளையார் எறும்புகள்போல வரிசையிலோடும் கறுப்பு கார்கள். எதைப் பார்த்தாலும் அழகாகவே தெரிந்தது. அப்போது, அருகில் வந்து நின்ற வாகனத்தின் முன் இருக்கையில் சடைத்த நாயொன்று வெளியில் தலையை நீட்டி என்னைப் பார்த்தது. அதன் தொங்கிய சிவப்பு நாக்கு ஆடியபடியிருந்தது. பளபளக்கும் வெள்ளைமுடி வெயிலில் மினுங்கியது. கண்களில் தவழ்ந்த சுதந்திரமும் தனது எஜமானிற்கு அருகிலிருந்து வருகின்ற குதூகலமும் தன் வாழ்வில் பெற்றுக்கொண்ட பெரும்பேறும்போல அதன் கண்களில் ஒளிர்ந்தது. என்னை புதியதொரு நிலம் தாங்கி ஓடிக்கொண்டிருந்தது. ஆறு அறைகளுடன் சடைத்திருந்த மாடி வீடு, நான் பறந்துவந்த விமானமே தரித்து நிற்பதுபோல உணர்வை தந்தது. போய் இறங்கியவுடன் வாசலில் இருந்தே பயங்கர வரவேற்பு. என்னை பார்ப்பதற்கு யார் யாரோவெல்லாம் வந்திருந்தார்கள். உள்ளே சென்றவுடன் கை தந்தார்கள். “களைத்திருப்பீர் என்ன” – என்று கேட்டபடி கட்டியணைத்தார்கள். “அம்மா, அவரைக்கூட்டிக்கொண்டு போவன், குளிச்சிட்டு சாப்பிடுவம்” – என்று தயானியின் தயார் சொல்வதற்கும் அங்கிருந்தவர்கள் அதற்கு ஆமோதிப்பதற்கும் போயிறங்கி கிட்டத்தட்ட இரண்டு மணிநேரமாகியிருந்தது. அன்று மாலையே இன்னும் பலர் வரிசைகட்டி வரத்தொடங்கினார்கள். “இப்பதான் வந்தவர்” – என்று தொப்பையை வருடிக்கொண்டு வாசலில் இருந்து ஒவ்வொருத்தவராக அழைத்துவந்த வைத்தீஸ்வரன், பெருமையோடு என்னை அறிமுகம் செய்துவைத்தார். நேரம் போகப்போக ஒரு கட்டத்தில், எனக்கு எல்லோர் முகங்களும் ஒரே மாதிரியாகவே தெரிந்தன. முதலில் வந்தவர்களே திரும்ப வருவதுபோலவுமிருந்தது. கிட்டத்தட்ட இரவு ஏழு மணிக்கு வந்த வைத்தீஸ்வரனின் சகவயது சொல்லக்கூடிய வயதானவர்தான் அந்தக்கேள்வியை கேட்டார். “அப்ப, நீங்கள் இம்ரான் பாண்டியன் படையணியோ….” – என்று இழுத்தார். அதுவரைக்குமானவர்களின் வருகையும் எனக்கான அறிமுகங்களும் அணைப்புக்களும் எனக்குள் குமிழ்களாக எழுப்பியபடியிருந்த மொத்த சந்தேகத்துக்கும் விடைபோல அந்த கேள்வி அவர் வாயால் வந்து விழுந்தது. கேள்வியோடு என்மீது எய்த அவரது பார்வை எனது கண்களிலேயே குந்தியிருந்தது. போர் நினைவுச்சின்னம் போல உணர்வற்றுக்கிடந்த என்மீது, அவர் மிகுந்த உணர்ச்சியோடு பதிலைத் தேடியபடியிருந்தார். அந்தக்கேள்வியும் அந்தப்பார்வையும் எவ்வளவு ஏமாற்றத்தை – இயலாமையை – தோல்வியை – எரிச்சலை – ஆத்திரத்தை என்னுள் ஏற்படுத்தும் என்பதில் அவருக்கு எந்தக்கரிசனையும் தெரியவில்லை. எனக்குள் நெடுநாள் காயமொன்றின் காய்ந்த விளிம்புகள் திடீரென்று வெடித்தது போலிருந்தது. “இல்லை, நான் வேற…” – என்று உதடுகள் தானாக ஏதோ ஒரு பதிலை பிதுக்கி விழுத்தியது. இரவுணவு ஆயத்தமானது. அதற்குப் பிறகும் கூட்டம் கலைய இரண்டு மணிநேரமானது. தூக்கம் விழிகளை சரித்து விழுத்தியபடியிருந்தது. மெல்பேர்னில் விமானம் வந்து தரை தட்டும்போதிருந்த வெறுமை அகன்று, மீண்டும் பாரத்தை உணர்வுபோல மனது கனத்தது. வந்துபோனவர் கேட்ட கேள்வி நெஞ்சை துளையிடுவதுபோல அந்தரமாயிருந்தது. ஆனால், களைப்பு அதைவிட அதிகமாயிருந்தது. படுக்கையில் சாய்ந்ததுதான் தெரியும். நிறைதுயிலில் உறைந்துவிட்டேன். என் மீது பெரும் பாரமொன்று சரிந்ததுபோல உணர்ந்தேன். கண்களை மெல்லத் திறந்தபோது நிச்சயமாக அது கனவில்லை எனத்தெரிந்தது. தனது பருத்த மார்பினை என்மீது வைத்தபடி தயானி, என்னை முத்தமிட்டபடியிருந்தாள். காலை வெளிச்சம் ஒரளவுக்கு அறையினுள்ளேயும் படரத் தொடங்கியிருந்தது. பறவையொலிகள் வெளியே கேட்டன. பிசுபிசுத்த உதடுகளால் கழுத்தில் முத்தமிட்டு உரசியபடி முகத்தை வந்தடைந்தாள். சிக்கெடுக்காத அவள் கேசம் முகத்தில் விழ, அதனை ஆவேசமாக பின்னுக்கு உதறித்தள்ளினாள். அவளோடு கூடுவது இது புதிதில்ல. அவள் வேகமானவள். அது நான் அறியாததும் அல்ல. ஆனால், இப்படிக்கூடுவதுதான் நவீனமாயிருந்தது. இரவுக்கு மாத்திரமான உறவென்று நான் எப்போதும் எண்ணியிருந்ததை இந்த காலைக்கானதாக தயானி வேகமாக வரைந்தபடியிருந்தாள். இதற்காக அவள் காத்திருந்திருக்கிறாள். காலம் அவள் முதுகிலிருந்து அழுத்தி தள்ளியது, அவள் என்னை மெல்ல மெல்ல விழுங்குவதில் தீவிரமாயிருந்தாள். விமானநிலையத்தில் கண்டதிலும் பார்க்க இப்போது இன்னும் பருத்திருந்தாள். அல்லது நான் சிறுத்திருந்தேன். முத்தமிட்டபடி என்னைச்சரித்து மேலே கொண்டுவந்தாள். அது அவளுக்கு இலகுவாக இருந்தது. நான் திமிறுவது போலிருந்ததை அவள் உணர்ந்திருக்க வேண்டும். அதை ரசித்தாள். அவளது கடைவாய் நீரினால் என் முகம் நனைந்திருந்தது. அவளது வாய் நாற்றம் தொடர்ந்து முகத்திலறைந்தபடியிருந்தது. அவளுக்கு நான் உரிமையானவன்தான். ஆனால், இந்தப்புதுநிலத்தின் முதல்காலை எனக்கு இப்படி விடிந்திருக்க வேண்டியதில்லை. ஆனாலும் எனக்கு வேறு தெரிவிருக்கவில்லை. இரண்டு வாரங்களாக என்னை பார்ப்பதற்காக தொடர்ந்தும் பலர் வந்துபோனார்கள். வைத்தீஸ்வரனின் மாப்பிள்ளை வந்துவிட்டார் என்ற தகவல் கிட்டத்தட்ட மெல்பேர்ன் முழுவதும் பரவியிருந்தது. அன்று தயானி வேலைக்குப் போவதற்கு முன்னர், நான் புதிதாக வேலையொன்றில் சேருவதற்கான உதவியை, தனது நண்பியின் கணவரிடம் கேட்டிருந்ததாக சொல்லியிருந்தாள். அவரது அலுவலகத்தில் என்னை காலையிலேயே கொண்டுபோய் இறக்கிவிட்டுப் போயிருந்தாள். நான் மெல்பேர்னுக்கு வந்திறங்கிய நாளிலேயே என்னைப்பற்றி கேள்வியுற்றிருந்த அவர், நான் போய் இறங்கியதும் இருகரங்களினால் தழுவி உள்ளே அழைத்துச் சென்றார். அவர் சேர்ட்டிலிருந்து வந்த வாசத்தை இதுவரை நுகர்ந்ததே இல்லை. ஓடிக்கலோனைவிடவும் நன்றாக இருந்தது. கேள்விகளை ஒவ்வொன்றாக அவிழ்க்கத் தொடங்கினார். இறுதிச்சமர் நடைபெற்றுக் கொண்டிருந்த நாட்களில் வன்னியிலிருந்த தனக்கு தெரிந்த முக்கிய புலி உறுப்பினர்களை தொடர்புகொண்ட போது, தொலைபேசியில் தனக்கு கேட்ட போர் சத்தங்களை பெரிதாக ஒலியெழுப்பி செய்துகாட்டினார். அவை எனக்கு எப்படி கேட்டது என்று கேட்டார். இப்படி பல சந்தேகங்கள் அவருக்கிருந்தன. புலிகளின் பெருந்தளபதிகள் எங்கெங்கெல்லாம் முன்னணி போர் அரண்களை அமைத்திருந்தார்கள் என்று ஒரு ஒற்றையை எடுத்து அதில் ஆள்கூறுகள் குறித்து விளங்கப்படுத்தினார். “எல்லாம் இந்தியாவிண்ட வேலை” – என்று அலுத்துக்கொண்டு ஒற்றையில் ஊன்றிக் குத்தினார். கதையினால் கவலையடைந்துபோன அவரது விரல்களுக்கு இடையிலிருந்த பேனா மெதுவாக சரிந்து ஒற்றையில் விழுந்தது. வெளியில் திடீரென்று மழையொன்று இறங்கியதும் மெல்பேர்ன் வானிலை பற்றிய சிறு விளக்கம் தந்தார். அதில் அவருக்கு எந்த சந்தேகங்களும் இருக்கவில்லை. அலுவலகத்திற்குள் வெப்பநிலையை சற்று அதிகரித்துவிட்டார். பின்னர், தேனீரை வரவழைத்து தந்தார். “பல காலமாக எல்லோரையும் கேட்டுக்கேட்டு அலுத்துப்போன ஒன்றுதான். வேலை கேட்டு வந்த இடத்தில் கேட்கிறன் என்று மனச்சஞ்சலப்படாதேயுங்கோ. பழசுகளை மறக்கிறது கஸ்டம். அதுவும் பல காலமாக ஒரே இடத்தில இருந்தனியள் எண்டளவில, உங்கட பிரச்சினையளை இஞ்ச இருந்துகொண்டு நாங்கள் புரிஞ்சுகொள்ளயில்ல எண்டு நினைக்காதேங்கோ. அங்க இருக்கிற சனத்தைவிட எங்களுக்கு நல்லாவே தெரியும் ….” – என்று இழுந்துவந்து – “அவர் உயிரோடு இருக்கிறாரோ” – என்றார். அப்போது அவரது தலைமாத்திரம் கழுத்தைவிட்டு மேசையின் அரைவாசிக்கு எனை நோக்கி வந்திருந்தது. அந்தக் கேள்வியை தான் இரகசியமாகத்தான் கேட்பதாகவும் நான் சொல்லப்போகும் பதிலைக்கூட தான் இரகசியமாகவே பேணப்போவதாகவும் தனது மொத்த சரீரத்தாலும் உத்தரவாதம் தந்தார். அப்போது மழை மெதுமெதுவாக குறைந்து வெளித்தாழ்வாரத்தினால் நீர் வடிந்து கொண்டிருந்தது. ஆனால், வெளியில் வானம் கறுத்தே கிடந்தது. தீடீரென்று சிறு மின்னல் கீலமொன்று பாளமாக வெளியில் தெரிந்து மறைந்தது. அவருடனான சந்திப்பை முடித்துக்கொண்டு வெளியே வந்தபோது, “ஊபர்” வாடகைக்கார் ஒன்றை பிடித்து ஏற்றிவிட்டார். போய் வருவதாக நான் தலையசைத்தபோது, அவரது கையசைப்பு மிகவும் தளர்ந்திருந்தது. நேரம் மதியம் தாண்டியிருந்து. பாடசாலை முடிவடைந்த நேர போக்குவரத்து நெரிசலால் பெரும்பாலான வீதிகளில் அமைதியான பயணங்களே சாத்தியமாகவிருந்தன. வாகனங்கள் ஊர்ந்தபடியிருந்தன. புதுநிலத்தின் முதல் மழைக்காலத்தை ஆச்சரியத்தோடு ரசிக்கத் தொடங்கினேன். கார் கண்ணாடிகளில் விழுந்து உடையும் மழைத்துளிகளும் நான் முன்பு பார்த்த அழகிய மரங்களின் நீராடலும் என் விழிகளில் புதிய ரேகைகளை வரைந்தன. பாடசாலை சிறுவர்களும் சிறுமிகளும் சிரித்தபடி ஓடிச்சென்று பெற்றோரின் வாகனத்தில் ஏறுவதும் சிலர் தமக்கிடையில் வம்பிழுத்து போலியாக அடித்துக்கொள்வதும் கொஞ்சிக் கொள்வதுமாக வசதியான குறும்புகளோடு வீதியோரங்களில் நின்று கும்மியடிப்பதும் மழையைவிட பரவசத்தை தந்தன. அவர்களது கண்கள் மிகவும் அழகானவை. வண்ணங்கள் நிறைந்த மாபிள்கள்போல அவற்றின் வசீகரம் நான் இதுவரை அறியாத ஒளியால் மிளிர்ந்தன. அந்தக்கண்களுக்கு சிரிக்க தெரிந்திருந்தன. அவர்களது உதடுகள் சிரிக்காத நேரத்திலும் அவர்களது கண்கள் சிரித்தபடியிருந்தன. வெளியில் கண்ட காட்சிகளால் எனக்குள் ஆச்சரியங்கள் பல சுடர்களாய் துள்ளித்துள்ளி எரிந்தன. இறங்கி நின்று நனைந்துவிடலாம் போலிருந்தது. அன்றிரவு என்னையும் தயானியையும் வைத்தீஸ்வரனின் நண்பவர் ஒருவர் விருந்துக்கு அழைத்திருந்தார். வைத்தீஸ்வரனும் மனைவியும் கூடவே வந்திருந்தார்கள். புதிதாக திருமணமானவர்களுக்கான விருந்தென்பதால் எங்களது குடும்பத்துக்கு மாத்திரம் மிக எளிமையாக ஒழுங்கு செய்யப்பட்டிருக்கும் என்றெண்ணினேன். விருந்துக்கு எந்த சேர்ட் போடவேண்டும் என்பதைத்தவிர தயானி எதையும் சொல்லவில்லை. ஆனால், அங்கு போய் இறங்கியபோது ஐந்தாறு குடும்பங்களை சேர்ந்த இருபது முப்பது பேர் வீடுமுழுவதும் விழாக்கோலம் பூண்டிருந்தனர். படலைக்கு வெளியே ஏராளம் கார்கள். உள்ளே பலவர்ண பூங்கொடிகள். அவற்றின் மீது ஒளிச்செடிகள். வீட்டுக்குள் காலடி எடுத்துவைப்பதற்கு முன்னர் – “சிலிப்பரை வெளியில கழட்டவா” – என்று தயானியை பார்த்து மெதுவாகத்தான் கேட்டேன். அதிர்ந்து போனாள். “அதை ‘தொங்க்ஸ்’ எண்டு சொல்லிப் பழகுங்கோ…” – என்று என்னை அருகில் இழுத்து செவியினுள் அழுத்திச் சொன்னாள். பிறகு, தனது ஷல்வாரை சரிபார்த்துக்கொண்டு உள்ளே நடந்தாள். “தொங்ஸ்…தொங்ஸ்…தொங்ஸ்….” – என்று மனப்பாடம் செய்துகொண்டு உள்ளே நுழைந்த என்னை வழக்கம்போல தனது நண்பர்களிடம் அறிமுகம் செய்யத் தொடங்கினார் வைத்தீஸ்வரன். எல்லோரும் என்னை நேரடியாக பார்த்து உரையாடக்கூடிய ஒரு கதிரையில் அமரச்சொன்னார். எனக்கு அருகிலிருந்த மேசையில் பலவகையான போத்தல்கள். அவற்றுக்கு அருகில் பொரித்த – வறுத்த இறைச்சித்துண்டுகள் கறிவேப்பிலைகளுக்குள் விரவிக்கிடந்தன. அவற்றை அவர்கள் கொறித்துக்கொள்ளாத இடைவெளியில், யாராவது ஒருவரிடம் எனக்கான கேள்வி தயாராக இருந்தது. கேள்விகளுக்கு இப்போது நான் பழக்கப்பட்டிருந்தேன். எதை முதலில் கேட்பார்கள், அதைத்தொடர்ந்து எந்தக்கேள்வி முளைக்கும். அது எதில் வந்து முடியும் என்பவற்றையெல்லாம் முழுமையாகத் தெரிந்திருந்தேன். அப்போது அங்கே வந்த தயானி “ஒருக்கா வாறீங்களா” – என்றாள். அந்த அழைப்பு எனக்கு பெரும் விடுதலைக்கான ஒலியாக கேட்டது. பாய்ந்து எழுந்து அவள் பின்னால் ஓடினேன். வீட்டின் நடுவில் அகலமான மரவேலைப்பாடுகளுடைய கதிரைகளில் ஒருதொகை பெண்கள் வட்டமாக புதைந்திருந்தார்கள். அவர்கள் அனைவரும் வெளியிலிருப்பவர்களின் துணையினர் என்பதை ஓரளவுக்கு ஊகிக்கக்கூடியதாயிருந்தது. ஒவ்வொருவரது கையிலும் ஏதோ ஒரு நொறுக்குத்தீனியிருந்தது. “வாரும் வாரும்…வெல்கம் டு மெல்பேர்ன்” – என்று ஒரு பெண்மணி உதட்டுச்சாயம் வெடிக்க சிரித்தபடி அழைத்தார். “உமக்கு வயிற்றிலையா காயம் பட்டது. தயானி சொன்னா, காட்டும் பாப்பம்” – என்று இன்னொரு பெண்மணி சொல்லவும், அவர் கேட்டு முடிப்பதற்குள், தயானி எனது சேர்ட்டை முக்கால்வாசியை கழற்றிக் கொண்டிருந்தாள். மின்னல் ஊர்ந்ததுபோல எனக்கு உடம்பு ஒருகணம் உதறியது. நான் இப்போது என்ன செய்வது, தயானி ஏற்கனவே களையத்தொடங்கிய சேர்ட்டை எப்படித் தடுப்பது? தடுக்கலாமா? காதுகள் சூடாகின. உதடுகள் இறுகிவிட்டன. எச்சிலை விழுங்க முயற்சித்தபோது அது தொண்டைக்குழியினில் இறங்கவில்லை. தயானி முழுதாகவே சேர்ட்டைக் கழற்றி கைகளில் வைத்துக்கொண்டு, எனது இடப்பக்க வயிற்றிலிருக்கும் நீண்ட காயத்தை கேள்விகேட்ட பெண்ணுக்கு காண்பித்துக் கொண்டிருந்தாள். அத்தனை பெண்களும் தங்கள் கழுத்துகளை என் வயிற்றை நோக்கி நீட்டி உற்றுப் பார்த்தார்கள். சிறுவர் – சிறுமிகளும்கூட அங்கே ஓடிவந்தனர். தங்கள் மாபிள் கண்கள் விரிய ஆச்சரியத்தோடு பார்த்தார்கள். போதையிலிருந்த வைத்தீஸ்வரனின் நண்பர்களும் வாய்ப்பை தவறவிட விரும்பவில்லை, கோப்பைகளுடன் அங்கு விரைந்து வந்தார்கள். நானும் என் காயமும் நட்டவடுவில் எந்த உணர்ச்சியுமின்றி நின்று கொண்டிருந்தோம். அந்தக்காயம் ஏன் எனக்கு மரணத்தை தரவில்லை என்ற கோபம் முதன்முதலாக நெஞ்சில் வெடித்துப் பாய்ந்தது. எப்போது எனது சேர்ட்டை நான் மீண்டும் அணிவது என்றுகூட எனக்கு தெரியவில்லை. என்னை தயானி திரும்பிப் பார்க்கவே இல்லை. நான் அந்த இடத்தில் அரைநிர்வாணமாக நிற்பதற்கு தகுதியானவன் என்ற பரிபூரண நம்பிக்கையோடு, தாயின் தோழிகளுக்கு காய விளக்கம் கொடுப்பதில் ஆர்வத்தோடிருந்தாள். காட்சிநேரம் நிறைவடைந்த பிறகு, சேர்ட்டை திருப்பித் தந்தாள். அந்தக்காயம் வெடித்து இரத்த அருவியாக கீழ் விழுந்து, சகதிக்குள் நின்று கொண்டிருப்பது போலிருந்தது எனக்கு. அது என் காயம் மாத்திரமல்ல. ஒரு தேசத்தின் காயம். வலியடங்கியபோதும் நரம்பின் முனைகள் அனைத்திலும் கூடுபற்றாத விளக்குப்போல சுவாலையைக் கொளுத்தி வைத்திருக்கும் காயம். சொல்லப்போனால், இப்போது அது ஒரு அவமானத்தின் தடயம். அந்த துயரத்தின் சாட்சியத்தை என்னையே நான் நிர்வாணமாக்கி நின்று காண்பித்தேன் என்பதை என்னால் நம்பமுடியவில்லை. யாரிடமும் பகிரமுடியாத பெருவனத்தீயின் வெக்கை என்னுள் படர்ந்து படர்ந்து புகைந்தது. அழுது விடலாமா என்று நினைத்தேன். ஆனால், அந்த வீதியோர குழந்தைகளின் சிரிப்பு அப்போது நினைவில் புரையேறியது. அந்த வாழ்வுக்கும் இந்த நிலம் இடம்கொடுக்கும் என்ற நம்பிக்கை, நெஞ்சில் சிறு பிடிப்பைத் தந்தது. அன்றிரவு தூக்கம் வரவில்லை. இரண்டு காரணங்கள். ஒன்று தயானியின் குறட்டை. இரண்டாவது விருந்தில் நானடைந்த நிர்வாணம். தயானியுடன் சிலதை மனம்விட்டுப் பேசவேண்டும். அவளுடன்தான் பேசவேண்டும். ஆனால், பேசலாமா? எப்போது பேசுவது? அப்படிப் பேசக்கூடியவனாக என்னை அவளும், அவளை நானும் உணர்கிறோமா? குறட்டை ஆரோகணித்துக்கொண்டு போனது. பேசிச்செய்கின்ற திருமணத்தில் மாப்பிள்ளைக்கான உரிமைகள் என்ன என்று எந்த தரகரும் பட்டியலிடுவதில்லை. பேசிச்செய்கின்ற வெளிநாட்டு திருமணத்தில் எதை எதையெல்லாம் எப்போது எதிர்பார்க்கலாம் என்றுகூட யாரும் முன்கூட்டியே சொல்லிக் கொடுப்பதில்லை. பேசிச் செய்கின்ற ஒரு முன்னாள் போராளியின் திருமணத்தில் எதைத்தான் உரிமையாக நினைப்பது என்றும் எந்த தரகரும் சொல்லித் தருவதில்லை. இவ்வளவும் ஏன், பேசிச் செய்கின்ற திருமணத்தில் குறட்டையைக்கூட ஒரு பொருட்டாக யாரும் மதிப்பதில்லை. இந்த வீட்டில் நான் இன்னமும் வைத்தீஸ்வரனின் மருமகனாகவும் தயானி அவர்களது மகளாகவும்தான் இருந்து கொண்டிருக்கிறோமே தவிர, நான் என்றொருவன் எங்கே வசிக்கிறேன் என்பது வரவர எனக்கே சந்தேகம் பூசத்தொடங்கிவிட்டது. தயானிக்கு என் மீது அன்பில்லை என்றில்லை. ஆனால், அது ஒரு கணவன் மீதான அன்பாக இன்னும் கனியவில்லை. தனது பெற்றொரின் மருமகனுக்கு கொடுக்கும் மதிப்பாக மாத்திரமே என்னில் படர்ந்திருக்கிறது. கட்டில் மாத்திரம் அவளுக்குள் திடீர் விபத்துக்கள் போல என்னை கணவனாக காட்டிக்கொடுத்து விடுகிறது. வந்தும் வராததுமாக எதிர்பார்ப்புக்களையும் குழப்பங்களையும் நான் அதிகம் மனதில் அடுக்கிக்கொள்வதாக எனக்கு பட்டது. டொய்லெட்டுக்கு போய்வந்து தூங்கிவிடலாம் போலிருந்தது. “அது டொய்லெட் இல்லை, வோஷ்ரூம்” – என்று தயானி இரண்டு நாட்களுக்கு முன்னர் அழுத்தி ச்சொன்னது ‘சுளீர்’ என்று நினைவில் வந்து விழுந்தது. “வோஷ் ரூம்…வோஷ் ரூம்….வோஷ் ரூம்…..” – என்று மனதுக்குள் சொல்லியபடி புரண்டு படுத்து நித்திரையாகிவிட்டேன். வெளியே எட்டிப் பார்த்தேன். மண்டபத்திற்கு வெளியே நீண்ட வரிசையில் ஆட்கள் நின்று கொண்டிருக்கிறார்கள். உள்ளே தனித்தனி கண்ணாடிப் பெட்டிகளுக்குள் இருபது முப்பதுபேர் நாங்கள் நின்று கொண்டிருந்தோம். பெட்டிகளுக்குள் நிற்பவர்கள் எல்லோரும் என்னைப் போலவே உள்ளாடைகள் மாத்திரம் அணிந்திருக்கிறார்கள். வரிசையில் மண்டபத்திற்குள் வருகின்றவர்கள் ஒவ்வொரு பெட்டிக்கு முன்பாகவும் நின்று எங்களை உற்றுப் பார்க்கிறார்கள். மண்டபத்துக்குள் வருபவர்களுக்கான வரிசையை, எனக்கு வேலை தருவதற்கென்று அழைத்துப் பேசியவர்தான் ஒழுங்கு செய்து கொண்டிருக்கிறார். எங்களை பார்ப்பவர்கள் தங்களுக்குள் ஏதோ பேசுகிறார்கள். எனக்கு அருகிலிருந்த பெட்டியில் நின்று கொண்டிருந்த பெண்போராளிக்கு முன்பாக வரிசை நகராமல் நின்றுவிடுகிறது. அவளது வலது தொடையில் கிழிந்திருக்கும் நீண்ட காயத்தழும்பை வரிசையில் வந்தவர்கள் எல்லோரும் புருவத்தைச் சுருக்கிப் பார்க்கிறார்கள். குனிந்து கொள்ள இயலாத இறுக்கமான அந்தக் கண்ணாடிப்பெட்டிக்குள் அவள் தன் உடலை மறைத்துக்கொள்ள முடியாமல் ஒரு புழுபோல நெளிகிறாள். அப்போது குரல்வளை அறுக்கப்பட்ட பலமான மிருகமொன்றின் கடைசியொலிபோல பெருஞ்சத்தமொன்று மண்டபத்தின் எல்லா சுவர்களிலும் மோதித் தெறிக்கிறது. வரிசையில் நகர்ந்து கொண்டிருந்தவர்கள் அனைவரும் ஒருகணம் அச்சத்தில் உடல் அதிர்கிறார்கள். எனக்கு மிகத்தொலைவிலுள்ள பெட்டியில் நின்று கொண்டிருந்தவன் கண்ணாடியில் தனது தலையினால் அடித்து அடித்து குழறுகிறான். அவன் எழுப்பிய சத்தத்தினால் கண்ணாடிப்பெட்டியில் உட்பக்கமாக புகார் படர்ந்திருக்கிறது. அவன் தன் உள்ளாடையுடன் சிறுநீர் கழித்துவிட்டிருந்தான். ஆட்கள் அதிகம் உள்ளே வந்து கொண்டிருப்பதால் பெட்டியை இப்போதைக்கு திறக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். அவனது சத்தம் தொடர்ந்து மண்டபத்தை நிறைத்து அதிர்ந்து கொண்டிருக்கிறது. வரிசையில் நின்றவர்கள் அனைவரும் அவனை தங்கள் தொலைபேசியினால் படம் பிடிக்கிறார்கள். அப்போது நான் பலம் திரட்டி இடித்த எனது கண்ணாடிப்பெட்டி என்னோடு சேர்ந்து நிலத்தில் சரிந்து தெறிக்கிறது. குழறித் துடித்தவனின் கண்ணாடிப்பெட்டியை நோக்கி நான் ஓடுகிறேன். வரிசையில் நின்றவர்கள் அனைவரும் சிதறியோடுகிறார்கள். நெற்றி வெடித்து வழிந்த இரத்த வாசம் எனக்குள் பரவி தலை சுற்றுகிறது. வாந்தியெடுப்பதற்கு துள்ளியெழுகிறேன். வேகமாக மூச்சு வாங்கியபடியிருந்தது. உடல் வியர்த்திருந்தது. தயானியின் குறட்டையொலி சீராகக் கேட்டுக் கொண்டிருந்தது. டொய்லெட்டுக்கு போய்வந்து படுத்தேன். காலையில் தயானி வழக்கம்போல வேலைக்கு சென்றிருந்தாள். வைத்தீஸ்வரனும் மனைவியும் வேறேதோ வேலைக்காக வெளியில் போயிருந்தார்கள். இறால் போட்ட முருங்கைக்காய் குழம்பும் கத்தரிக்காய் பால்கறியும் குசினிலியிருப்பதாக தயானியின் அம்மா சொல்லிவிட்டுப் போயிருந்தார். முதல்நாள் கனவு காலையில் ஞாபகம் வரவில்லை. ஆனால், மனம் ஏதோவொரு பாரத்தை உணர்ந்தபடியிருந்தது. எல்லோரும் வெளியில் சென்றபிறகு நினைவிலிருந்து மேலெழுந்துவந்த இரவின் துண்டங்கள், கரிய மகரந்தங்களாக கண்முன்னால் கனவை வரைந்து காட்டியது. மனசுக்கு வெளிச்சம் தேவைப்படுவது போலிருந்தது. வீட்டுப் பூந்தோட்டத்திற்குள் நடக்கப் போனேன். சிவப்பு மஞ்சள் நிற மணிப்பூக்கள் நிறைந்த சாடிகள் வரிசையாக வைக்கப்பட்டு, பாத்தி வெட்டிப்பிரித்த தோட்டத்தின் விளிம்புகள் நேர்த்தியாக கட்டப்பட்டிருந்தன. அரிந்து வெட்டப்பட்ட புற்கள் அழகாக பதிக்கப்பட்டு, நடுவில் பெண்ணொருத்தி சரிந்த பானையை இடுப்பில் இருத்தியபடி சிறப்பான சிற்பமாக நின்று கொண்டிருந்தாள். அந்தப் பானைக்குள் நுழைத்துவிடப்பட்டிருந்த குழாயினால் நீர் பாய்ந்து, சிற்பத்துக்கு கீழிருந்த வட்டத்தொட்டிக்குள் விழுந்து கொண்டிருந்துது. பார்த்த இடங்களில் எல்லாம் பெயர் தெரியாத வண்ண வண்ண பூக்கள் காற்றுக்கு குனிந்து நிமிர்ந்தபடியிருந்தன. ‘மணிப்பிளாண்ட்’ போல பசுமையான மரங்கள் வீட்டிற்கு பக்கத்து வேலியோரமாக வரிசையாக வளர்ந்திருந்தன. அதனைத் தொடர்ந்து வீட்டின் பின்புறம் வரைக்கும் சென்றபோதுதான், அடிவளவில் சடைத்திருந்த கற்பூரவள்ளி கண்களில் பட்டது. அருகில் போவதற்கு முன்னரே அந்த வாசம் நினைவிலே ஓங்கி அறைந்தது. இரண்டு இலைகளை உடைத்தேன். அதே வாசம்! காடுகளில் கண்டால் பாய்ந்து சென்று முறித்து கைகளில் பிழிந்து தேய்த்துக்கொள்ளும் அதே வாசம்! முகத்தை அருகில் கொண்டு செல்வதற்கு முன்னரே, வாசம் இதயம்வரை சென்று உடலெங்கும் பரவியது. எனது நேசத்துக்குரியவற்றையும் இந்த மண் தன்மீது எங்கேயோ ஒளித்து வைத்துக்கொண்டுதானிருக்கிறது என்பதை எண்ணியபோது மனதில் ஒரு நிறைவு பிரவாகித்தது. அடுத்தநாள் பத்து பத்தரை மணி முதல் வீடு ஒரே சத்தமாக இருந்தது. எங்களது அறையில் கொம்ப்யூட்டரில் நான் ட்ரைவிங் சோதனைக்காக படித்துக் கொண்டிருந்தேன். நடைபெறவிருந்த மாவீரர் தின நிகழ்வுகளில் வருடா வருடம் பொதுச்சுடரேற்றும் பொறுப்பிலிருந்து வைத்தீஸ்வரன் விலக்கப்பட்டிருப்பதாக தொலைபேசியில் தகவல் வந்திருந்தது. முன்னறையில் சேகுவரா படத்துக்கு கீழிருந்த தொலைபேசி ஒலித்தபடியேயிருந்தது. வைத்தீஸ்வரன் தனது அறைக்குள் போவதும் வருவதுமாக அலைகழிந்தபடியிருந்தார். ஆஸ்திரேலிய தமிழ் தேசியக்கழகங்களின் சம்மேளன பொறுப்பாளர் இராவணனோடு தொடர்ச்சியாக தொடர்பெடுத்து கேட்டதில், விடுதலைப்புலிகளின் தலைவர் இறுதிப்போரில் இறந்துவிட்டதாக நான் சொன்ன தகவல், மாவீரர் நாள் நிகழ்வு ஏற்பாட்டுக்குழுவின் காதுகளுக்கு பெருஞ்சாட்சியமாக சென்றடைந்ததுதான் வைத்தீஸ்வரனை சடங்கிலிருந்து நீக்கியதற்கு காரணமாக கூறப்பட்டது. விட்டு விட்டுக் கேட்ட தகவல்கள் அனைத்தையும் தொகுத்துக் கொண்டதில் சிக்கலின் முழுவடிவம் எனக்கு புரிந்து விட்டது. தயானியை வேலையிலிருந்து வேளைக்கு வரும்படி வைத்தீஸ்வரன் அழைத்திருந்தார். சாப்பிடாமலேயே வயிற்றைத் தடவியபடி முன்னறையில் காத்திருந்தார். தயானியின் கார் சத்தம் கேட்டவுடன் ஓடிச்சென்று கதவை திறந்தார். வாசலில் மகளோடு பேசிய இரகசியம் மேல்வீட்டிலிருந்த எனக்கு அவரது குரலின் வழக்கமான ஏற்ற இறக்கங்களோடு நன்றாகவே கேட்டது. தயானி அழைப்பதற்கு முதலே நான் கீழே சென்றேன். விருந்தினர்கள் வந்தால் வரவேற்று இருத்துகின்ற படகுபோன்ற கதிரையின் நுனியில் இருந்துகொண்டு என்னையும் தயானியையும் எதிரே அமரும்படி சைகை செய்தார் வைத்தீஸ்வரன். தண்ணீர் கொண்டுவருமாறு மனுசிக்கு உத்தரவிட்ட பின்னர் இப்படி தொடங்கினார். “தம்பி, நாங்கள் இந்த நாட்டில மரியாதையோடு வாழுற குடும்பம். எங்கட குடும்பத்துக்கென்று ஒரு பெயர்…. கௌரவம்…. இருக்கு. போராட்டமும் சொந்த மக்களிண்ட வாழ்க்கையும் எங்கட இரத்தத்தில் கலந்தது. தயானி சொன்னவவோ தெரியேல்ல. தயானியிண்ட அம்மாண்ட மச்சான் நாட்டுப்பற்றாளராக வீரமரணமானவர். இப்படி போராட்டத்துக்காக நாங்கள் இழந்தது கொஞ்ச நஞ்சமில்ல. “போராட்டத்தைப்பற்றி ஒரு சொல்லு கொச்சையா கதைக்கத் தெரியாத குடும்பம் இது தம்பி” தயானியையையும் தண்ணியோடு வந்த மனுசியையும் ஒருதடவை திரும்பி பார்த்துவிட்டு தொடர்ந்தார் – “அதுக்காக நீங்கள் செய்த தியாகத்தையும் பட்ட துன்பத்தையும் நான் குறைச்சு சொல்லயில்ல. நீங்கள் அண்டைக்கு வேலை கேட்கப்போன இடத்தில, கதைச்ச தேவையில்லாத விசயம், ஏதேதோ மாதிரி கதைபட்டு, இப்ப அது என்ர மடியில வந்து கை வச்சிருக்குது.” “தயானி நிக்கட்டும், நீங்கள் மாத்திரம் என்னோட வந்து ஒருக்கா நான் சொல்லுறவரிட்ட மன்னிப்பு கேட்டுவிடுங்கோ. மிச்சத்த நான் பாத்துக்கொள்ளுறன்” மனுசி நீட்டிய தண்ணியை அண்ணாந்து தொண்டையில் ஊற்றினார். ஓரிரு துளிகள் வாயினால் வழிந்து வண்டிவரைக்கும் வளைந்தோடியது. தயானி என்னைப் பார்த்தாள். முதல்நாள் அவள் வெட்டச்சொன்ன விரல் நகங்களை வருடியபடி அவளை பார்த்தேன். நான் நகம் வெட்டியதற்கு குறைந்தபட்ச அங்கீகாரமாவது அவளது கண்களில் தெரியும் என்று தேடினேன். பிரம்பு போலிருந்தது அவள் பார்வை. ஒரு உலேகப்பறவை போல எனதுடல் அசையாமலிருந்தது. ஒரு கடவுச்சீட்டும் திருமணமும் எனக்குள் பரிபாலித்த வாழ்வு உள்ளே சுவாசிப்பது எனக்கு மாத்திரம் கேட்டது. போர்நிலத்தில் ஓய்வெடுக்கும் துப்பாக்கியின் மீது அமர்ந்து இறகுலர்த்தி தங்களை அழகு பார்த்த பறவைகள் இவர்கள். தூரத்தில் வேட்டொலி கேட்டாலே பறந்துவிடும் சாவின் பயம் நிறைந்த சம்பிரதாயக்குருவிகள். இன்று இவர்கள் ஓய்வெடுப்பதற்கு துப்பாக்கிகள் இல்லை. துப்பாக்கிகளைச் சுமந்தவர்களின் மீதமர்ந்து குரல் எழுப்பி குதூகலிக்கிறார்கள். அது துப்பாக்கிச் சத்தமாகவே எதிலொலிக்கும் என்று தங்கள் குரல்வளைகளில் ஒப்பனையிட்டுப் பார்க்கிறார்கள். நிலமெங்கும் கந்தக விதைகளைத் தூவிய போரின் ஒப்பாரியைவிட இவர்களின் சிரிப்பொலிகள் பதற வைக்கிறது. ‘டொயாட்டா க்ளுகர்’ மெதுவாக சென்று கொண்டிருந்தது. நான் வைத்தீஸ்வரனின் பக்கத்திலிருந்தேன். காருக்குள்ளேயும் தொடர்ந்து தொலைபேசி அழைப்புக்கள் அவருக்கு வந்து கொண்டிருந்தன. “நான் அவரோட வந்து கொண்டிருக்கிறன் தம்பி, வாறன்…வாறன்…இன்னும் அரைமணித்தியாலத்தில நான் அங்க நிப்பன்” – என்று தனியான ஒரு அழைப்புக்கு அதிக பணிவோடு பதிலளித்தார். பாடசாலை முடிந்தநேரம். வழக்கம்போல போக்குவரத்து நெரிசலாக இருந்தது. வெளியில் பார்த்தேன். பல நூற்றுக்கணக்கான சிறுவர்கள் சிறுமியர்கள் வரிசையில் நின்று என்னைப் பார்த்து கையசைத்தார்கள். புன்னகைத்தார்கள். மாபிள் கண்கள் சுருங்கத் சிரித்தார்கள். முற்றும் https://www.theivigan.co/post/10011
-
டி20 உலகக் கோப்பைச் செய்திகள்
T20 WorldCup : சொந்த மண்ணில் அமெரிக்கா சாதனை வெற்றி! Jun 02, 2024 10:40AM IST டி20 உலகக்கோப்பையின் முதல் போட்டியில் கனடா அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் அமெரிக்கா அணி வீழ்த்தி சாதனை படைத்துள்ளது. ஐசிசி 9வது டி20 உலகக்கோப்பை தொடர் இன்று (ஜூன் 2) தேதி தொடங்கி வருகிற ஜூன்-29ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடரின் முதல் போட்டியாக ஏ-பிரிவில் இடம்பெற்றுள்ள அணிகளான கனடா அணியும், போட்டியை நடத்தும் அமெரிக்கா அணியும் மோதின. அமெரிக்காவில் உள்ள டல்லாஸ் கிராண்ட் ப்ரேரி மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 6 மணிக்கு போட்டி தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற அமெரிக்கா அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய கனடா அணி அதிரடியாக விளையாடி, 5 விக்கெட் இழப்புக்கு 194 ரன்கள் குவித்தது. அந்த அணியில் அதிகபட்சமாக தொடக்க வீரர் நவ்நீத் தலிவால் 61 ரன்கள் குவித்தார். மற்றொரு வீரர் நிக்கோலஸ் கிர்டோன் 51 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். அமெரிக்கா அணியில் அலிகான், ஹர்மீத் சிங் மற்றும் ஆண்டர்சன் ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளை எடுத்தனர். தொடர்ந்து 195 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது அமெரிக்கா அணி. தொடக்க வீரர்கள் ஸ்டீவன் டெய்லர்(0) மற்றும் மோனங்க் பட்டேல்(16) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். எனினும் அடுத்த இணைந்த ஆண்ட்ரிஸ் கௌஸ் மற்றும் ஆரோன் ஜோன்ஸ் ஜோடி ஆக்ரோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். இருவரும் அரைசதம் அடித்த நிலையில், அதிரடியாக விளையாடி வந்த ஆண்ட்ரிஸ் கௌஸ் 65 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். மறுபக்கம் கனடா பவுலர்களை துவம்சம் செய்த ஆரோன் ஜோன்ஸ் சிக்சர் அடித்து அமெரிக்க அணியை வெற்றி பெற செய்தார். இதன்மூலம் அமெரிக்கா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கடைசி வரை ஆட்டமிழக்காமல் 40 பந்துகளில் 94 ரன்கள் ஆரோன் ஜோன்ஸ் ஆட்டநாயகன் விருதை பெற்றார். இந்த வெற்றியின் மூலம் டி20 உலகக்கோப்பை தொடரில் பங்கேற்ற தனது முதல் போட்டியிலேயே அமெரிக்கா அணி வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. https://minnambalam.com/sports/t20-worldcup-americas-record-win-at-home/
-
க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானது!
வர்த்தக பிரிவில் முதலிடம் யாழ்.இந்து மகளிர் மாணவி (மாதவன்) 2023 க.பொ.த உயர்தரப் பரீட்சையில் யாழ்ப்பாணம் இந்து மகளிர் கல்லூரியின் மாணவியான கீர்த்திகா பத்மலோஜன் வர்த்தக பிரிவில் பரீட்சைக்கு தோற்றி, 3ஏ சித்திகளை பெற்று மாவட்ட ரீதியாக முதலிடத்தையும், அகில இலங்கை ரீதியாக 44வது இடத்தையும் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவி கருத்து தெரிவிக்கையில், எனது பாடசாலையிலும், தனியார் கல்வி நிலையங்களிலும் சிறப்பான கல்வி புகட்டப்பட்டது நானும் வீட்டில் சிறப்பாக கல்வி கற்றேன். ஆகையால் எனது இலக்கினை அடைய முடிந்தது. மேலும், எனது இந்த வெற்றிக்கு ஊக்கமளித்த அம்மா, அப்பா, பாடசாலை சமூகத்தினர், தனியார் கல்வி நிலையத்தினர், நண்பர்கள் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். எதிர்காலத்தில் ஒரு சிறந்த சட்டத்தரணியாகி, வறுமைப்பட்ட எங்கள் மக்களுக்கு என்னால் இயன்ற சட்ட உதவிகளை வழங்குவேன் என்றார். இந்த வெற்றி குறித்து மாணவியின் தந்தை கருத்து தெரிவிக்கையில், தங்களது மகள் வணிகத்துறையில் கல்வி கற்பதற்கு விரும்பினார். அவரது விருப்பத்துக்கு ஏற்ப நாங்களும் ஒத்துழைத்தோம். ஆகையால் அவர் சாதனை புரிந்துள்ளார். ஏனைய பெற்றோர்களும், உங்களது பிள்ளைகள் எந்த துறைக்குள் சாதிக்க விரும்புகின்றதோ அந்தத் துறைக்குள் அவர்களை செல்ல விடுங்கள். அவர்களுக்கு உறுதுணையாக இருங்கள். அப்படி இருந்தால் அவர்களும் நிச்சயம் வெற்றி பெறுவார்கள் என்றார்.(க) https://newuthayan.com/article/மாவட்ட_ரீதியாக_முதலிடம்_யாழ்.இந்து_மகளிர்_மாணவி
-
நான் பொது வேட்பாளருக்கு மாறானவன் - சி, வி கே சிவஞானம்
நான் பொது வேட்பாளருக்கு மாறானவன் adminJune 1, 2024 மக்களை உசுப்பேத்தி எதுவும் செய்யலாம் என யாராவது நினைத்தால் , அது நடக்காது. மக்கள் தங்களுக்கு எது சரி என்பதை அவர்களே தீர்மானிப்பார்கள். சரியென்றால் ஏற்றுக் கொள்வார்கள் இல்லையென்றால் விலக்கி வைப்பார்கள் என வடமாகாண சபை அவைத்தலைவர் சி, வி கே சிவஞானம் தெரிவித்துள்ளார். நான் பொது வேட்பாளருக்கு மாறானவன். பொது வேட்பாளர் தேவையற்றது என அரசியல்வாதிகளுக்குள்ளேயே முதன் முதலில் எங்கட தரப்பில் இருந்து சொன்னவனும் நான் தான். அதாவது பொது வேட்பாளர் சாத்தியமில்லை என்றும் அதற்கான காரணங்களையும் நான் கூறியிருக்கிறேன். இப்பவும் சொல்கிறேன் பொது வேட்பாளர் யார் என்ற தெரிவிலேயே இந்த விடயம் முதலில் முடங்கும். கடந்த தேர்தலில் தேசியத்திற்கு விழுந்த வாக்கை எடுத்துப் பார்த்தால் அது புரியும். இப்ப மேலும் நாங்கள் பிளவுபட்டு இருக்கிற போது என்ன நடக்கும் என்பதையும் சிந்தித்து பார்க்க வேண்டியது அவசியம். ஆனால் ரணில் விக்கிரமசிங்கவை ஐனாதிபதியாக்குவதற்குத் தான் இவர்கள் பொது வேட்பாளரை முன்வைத்தார்கள் என்ற அந்தக் கருத்தில் நான் உடன்படவில்லை. பொது வேட்பாளர் தொடர்பில், தமிழரசுக் கட்சியை பொறுத்தவரையில் கட்சி ரீதியாக இதுவரையில் எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. ஆனாலும் கட்சி உறுப்பினர்கள் தனி தனிய இது பற்றி பேசி வருகிறார்கள். இந்த விடயம் தொடர்பில் சில தினங்களிற்கு முன்னர் இடம்பெற்ற கட்சியின் மத்திய செயற்குழுவில் நாங்கள் பேசியிருந்தோம். கட்சி முடிவெடுக்காமல் இருக்கிற போது கட்சி என்று சொல்லி சில சில பேர் தனித் தனியாகவும் பேசியிருக்கலாம். அப்படி பேசி இருப்பதாகத் தான் செய்திகளும் வருகிறது. எனினும் கட்சி முடிவெடுக்காமல் இருக்கிற போது அதற்கான நேரம் வரும் போது பார்த்துக் கொள்வோம். மேலும் இந்த விடயத்தில் தமிழரசுக் கட்சியை பணிய வைக்கலாம் என்று ஒருவர் சொல்லியிருக்கிறார். இவரை போல எத்தனையோ பேரை நாங்கள் கண்டிருக்கிறோம். ஒரு பாரம்பரிய கட்சிகயை பற்றி அப்படியெல்லாம் பேசுவதா? அதுமட்டுமல்ல யாழ்ப்பாண மக்களை உசுப்பேற்றி பணிய வைப்பதாகவும் கூறியிருக்கிறார். அப்படி உசுப்பேற்றி யாழ்ப்பாண மக்களை பணிய வைக்க முடியுமா? ஏதோ கதைக்க வேண்டும் என்பதற்க்காக எங்கள் கட்சியை பற்றி எதையாவது கதைத்துவிட்டு செல்வதா? மக்களை உசுப்பேத்தி எதுவும் செய்யலாம் என யாராவது நினைத்தால் அது நடக்காது என மேலும் தெரிவித்தார். https://globaltamilnews.net/2024/203678/
-
நடுத்தர வயதினரின் அரசியல்? - நிலாந்தன்
நடுத்தர வயதினரின் அரசியல்? - நிலாந்தன் அண்மையில் மருத்துவ நிபுணரான ஒரு நண்பர் கேட்டார்“என்னுடைய பிள்ளை தான் ஏன் வெளிநாடு போகக்கூடாது என்று கேட்டால், அந்தப் பிள்ளைக்கு நீ ஏன் நாட்டிலேயே இருக்க வேண்டும் என்று நான் கூறுவதற்கு பொருத்தமான காரணம் ஏதும் உண்டா?” என்று. இந்தக் கேள்வி யாழ்ப்பாணத்தின் படித்த நடுத்தரவர்க்கப் பெற்றோர் பலர் மத்தியில் உண்டு. இக்கேள்விக்குப் பொருத்தமான விடை எத்தனை தமிழ் அரசியல்வாதிகளிடம் உண்டு? பொருளாதார நெருக்கடியின் விளைவாக ஒரு புலப்பெயர்ச்சி அலை ஓடிக்கொண்டிருக்கிறது. சிங்கள மக்கள் மத்தியிலும் தமிழ் மக்கள் மத்தியிலும் ஆயிரக்கணக்கானவர்கள் புலம்பெயர்ந்து கொண்டிருக்கிறார்கள். அண்மையில் மே 18ஐ முன்னிட்டு “தமிழ் மிரர்” பத்திரிகையின் கார்ட்டூனிஸ்ட் அற்புதமான ஒரு கார்ட்டூனை வரைந்திருந்தார். அதில் 2009 மே 18ஆம் திகதியன்று மகிந்த கட்டுநாயக்காவில் வந்திறங்கும் காட்சி ஒரு பெட்டிக்குள் வரையப்பட்டிருக்கிறது. மகிந்த விமான நிலையத்தில் இறங்கியதும் குனிந்து தரையைத் தொட்டு வணங்குகிறார். ஆனால் இப்பொழுது 15ஆண்டுகளின் பின், சிங்கள மக்கள் மத்தியில் இருந்து புலம்பெயர்வோர் உலகின் வெவ்வேறு நாடுகளின் தலைநகரங்களில் உள்ள விமான நிலையங்களில் தரையிறங்கி அந்தந்த விமான நிலையங்களில் நிலத்தைத் தொட்டு முத்தமிடும் காட்சி மற்றொரு பெட்டிக்குள் வரையப்பட்டுள்ளது. அதுதான் உண்மை. யுத்தத்தில் வென்றெடுத்த நாட்டைவிட்டு அதன் மக்களே வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். போர்க்காலத்தில் வெளியேறியது வேறு; பொருளாதார நெருக்கடி காரணமாக வெளியேறுவது வேறு. பொருளாதார நெருக்கடிக்குள், தாய் நாட்டிலேயே நின்று, கடுமையாக உழைத்து தன்னையும் தனது தேசத்தையும் நிமிர்த்த வேண்டும் என்று ஓர் இளைய தலைமுறை ஏன் சிந்திக்கவில்லை? குறிப்பாக, தமிழ் மக்கள் மத்தியில் இம்முறை வெளியேறிக் கொண்டிருப்பது இளையோர் மட்டுமல்ல. அதிக தொகையில் படித்தவர்கள், பட்டதாரிகள், முகாமையாளர்கள், தொழில் முனைவோர், மருத்துவர்கள், தாதிதியர்கள், பொறியியலாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள்… என்று பல்வேறு வகைப்பட்ட துறைசார்ந்த நிபுணத்துவமுடையவர்கள் நாட்டைவிட்டு வெளியேறிக் கொண்டிருக்கிறார்கள். இதுவரை கிடைத்த உத்தியோகப்பற்றற்ற புள்ளி விவரங்களின்படி, கனடாவுக்கும் லண்டனுக்கும் புலம் பெயர்ந்தவர்களின் எண்ணிக்கை பல்லாயிரம் என்று கணக்கிடப்படுகிறது. இது தவிர வழமையாக குடும்பங்களின் மீளிணைவு என்ற அடிப்படையில் மணமக்கள் போய்க் கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு வெளியேறும் பெரும்பாலானவர்கள் தேர்தலில் வாக்களிக்கும் வயதுக்கு வந்தவர்கள். அதாவது ஒரு நாடாளுமன்ற உறுப்பினரைத் தெரிவுசெய்யத் தேவையான வாக்காளர்கள் ஏற்கனவே வெளியேறி விட்டார்கள் என்று கூறலாமா? “இந்த மண் எங்களின் சொந்த மண்” என்று பாடி, தமிழ்த் தேசிய அரசியலை முன்னெடுத்த ஒரு மக்கள் கூட்டத்தின் மத்தியில் இருந்து அந்த மண்ணை விட்டுப்போனால் போதும் என்று கருதும் ஒரு மனோநிலை, ஏன் மேலெழுகின்றது? ஏனென்றால், தமிழ் மக்கள் மத்தியில் நம்பிக்கையூட்டும் தலைமைகள் இல்லை. நம்பிக்கையூட்டும் முன்னுதாரணங்கள் குறைந்துவிட்டன. ஒருவர் மற்றவரை நம்பாத; ஒருவர் மற்றவரை சந்தேகிக்கின்ற; தான் ஒன்றும் செய்யாமல் இருந்து கொண்டு மற்றவரைக் குறைகூறுகின்ற; முன்னுக்குப் போகும் ஒருவரை யாரோ பின்னுக்கிருந்து இயக்குகிறார்கள் என்று சந்தேகிக்கின்ற; அவநம்பிக்கை மிகுந்த ஒரு மக்கள் கூட்டமாக தமிழ்மக்கள் மாறி வருகிறார்களா? இந்த மண்ணிலேயே நின்றுபிடிப்போம், தமிழ்த் தேசத்தைக் கட்டியெழுப்புவோம் என்று நம்பிக்கையூட்டக்கூடிய தலைவர்கள் எத்தனை பேர் உண்டு? ஒரு காலம் அரசியல் என்பது தியாகங்கள் செய்வது; அர்ப்பணிப்புகள் செய்வது; உயிரைக் கொடுத்துப் போராடுவது என்று இருந்த ஒரு சமூகத்தில், இப்பொழுது அரசியல் என்பது பெட்டி கைமாறுவது; யாரோடாவது “டீலுக்குப்” போவது; மதுச் சாலைகளுக்கான அனுமதிகளுக்கு விலை போவது… என்று மாறிவிட்டதா? தமிழ்மக்கள் யாருக்கு வாக்களிக்கிறார்களோ, அவர்களையே சந்தேகிக்கிறார்கள். அவர்களையே திட்டுகிறார்கள். கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் விக்னேஸ்வரனைச் சந்தித்தபோது, ஜனாதிபதி கூறிய ஒரு விடயத்தை இங்கு சுட்டிக்காட்ட வேண்டும். தமிழ்மக்கள் மத்தியில் 40 வயதுக்கு மேற்பட்டவர்கள்தான் அரசியல் பேசுகிறார்கள். இளவயதினர் பொருளாதார விவகாரங்களில்தான் நாட்டமாக இருக்கிறார்கள் என்று அவர் கூறியிருக்கிறார். அது சரியா பிழையா என்பது தனியாகப் பார்க்கப்பட வேண்டும். ஆனால் தமிழ் அரசியல் சமூகத்தைக் குறித்த அவருடைய பார்வை அது. ஒரு காலம் தமிழ் இளையோர் தமது உயிர்களைத் துச்சமாக மதித்து அரசியலை முன்னெடுத்தார்கள். முழு உலகத்துக்கும் அபூர்வமான அனுபவமாக அந்தப் போராட்டம் அமைந்திருந்தது. அவ்வாறு மகத்தான தியாகங்களைச் செய்த ஒரு மக்கள் கூட்டம், மகத்தான பெருஞ்செயல்களைச் செய்த ஒரு மக்கள் கூட்டம், சித்தர்களையும் சான்றோர்களையும் மேதைகளையும் நிபுணர்களையும் மகத்தான படைப்பாளிகளையும் உற்பத்தி செய்த ஒரு சமூகம், இன்று அவிழ்த்து விட்ட பாக்கு மூட்டை போல சிதறிக் கொண்டு போகின்றதா? வடக்காய் கிழக்காய்; சாதியாய் சமயமாய்; கட்சிகளாய் குழுக்களாய்; ஊர்ச் சங்கங்களுக்குள் எதிர் குழுக்களாய்; ஆலய பரிபாலன சபைகளுக்குள் எதிரெதிர் குழுக்களாய்; கட்சிகளுக்குள் அணிகளாய்ப் பிரிந்து நிற்கிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில், இறந்தவர்களை உயிர்ப்பிக்கும் அரசியலிலும் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் அரசியலிலும் தமிழ் மக்கள் இரண்டாகி நிற்கிறார்கள். தமிழ்மக்கள் அதிகளவு தாங்களே தங்களுக்குள் மோதிக் கொண்டிருக்கிறார்கள். மூத்த பெரிய கட்சி நீதிமன்றத்தில் நிற்கிறது. கோவில்களின் ஆலய பரிபாலன சபைகளும் நீதிமன்றத்தில் நிற்கின்றன. இவ்வாறு சிதறுண்டு சிறுமைப்பட்டுப் போயிருக்கும் ஒரு மக்கள் கூட்டத்தைப் பார்த்து உங்களுடைய இளைய தலைமுறைக்கு அரசியலில் நாட்டம் குறைந்து விட்டது என்ற பொருள்பட ரணில் கூற வருகிறாரா? அவர் கூறிய மற்றொரு விடயம், தமிழ் பொது வேட்பாளருக்காக தமிழ் கட்சிகள் ஒன்றிணையப் போவதில்லை என்பது. தமிழ்ப் பொது வேட்பாளரின் விடயத்தில் குடிமக்கள் சமூகங்களுக்கு இடையே காணப்படும் அளவுக்கு ஐக்கியம் கட்சிகளுக்கு இடையே இல்லை என்பது உண்மைதான். தங்களுக்கு இடையே ஐக்கியப்பட முடியாத கட்சிகள் எப்படி மக்களை ஒரு தேசமாகத் திரட்ட முடியும்? கடந்த 15 ஆண்டுகால கட்சி அரசியலானது ஐக்கியத்தை கட்டியெழுப்பத் தவறிவிட்டது. குடிமக்கள் சமூகங்களின் தலையீட்டால்தான் ஓரளவுக்கு குறுகிய கால விவகார மைய ஐக்கியங்கள் சாத்தியமாகின. இப்பொழுதும் குடிமக்கள் சமூகங்கள்தான் கட்சிகளோடு இணைந்து ஒரு பொதுத் தமிழ் நிலைப்பாட்டை உருவாக்கி,அந்த அடிப்படையில் ஒரு பொதுக்கட்டமைப்பை உருவாக்கி, அதற்கூடாக பொது வேட்பாளரை முன்னிறுத்த முயற்சிக்கின்றன. தமிழ்ப் பொது வேட்பாளர் எனப்படுகின்றவர்,கட்சி கடந்த ஒருவர். சாதி சமயம் கடந்த ஒருவர். பிரதேச வேறுபாடுகளைக் கடந்த ஒருவர். தமிழ்மக்கள் மத்தியில் காணப்படும் எல்லா வேறுபாடுகளையும் ஏற்றத்தாழ்வுகளையும் கடந்து அவர் தமிழ் ஐக்கியத்தின் குறியீடாக நிற்பார் என்று குடிமக்கள் சமூகங்கள் கூறுகின்றன. தமிழ்ப்பொது வேட்பாளருக்காகத் திரட்டப்படும் வாக்குகள் ஒரு தேசத்துக்கானவை. ஒரு தனி நபருக்கானவை அல்ல. அங்கு ஒரு தனிநபர் வேட்பாளராக நிறுத்தப்படுவார். ஆனால் அவர் எந்த ஒரு கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்த மாட்டார். எந்த ஒரு சமயத்தையோ அல்லது சாதியையோ அல்லது பிராந்தியத்தையோ அவர் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது. தமிழ் மக்களை இப்பொழுது பிரித்து வைத்திருக்கும் எதனையும் அவர் பிரதிநிதித்துவப்படுத்தக் கூடாது. அவர் தமிழ்த் தேசிய ஐக்கியத்தின் குறியீடாக நிற்க வேண்டும். அவர் ஒரு பிரமுகராகக்கூட இருக்கவேண்டும் என்று இல்லை. அவர் தமிழ் மக்களின் ஐக்கியத்தைப் பிரதிபலிப்பார். அல்லது தமிழ் மக்களின் பொது நிலைப்பாட்டைப் பிரதிபலிக்கும் ஓர் அடையாளம். அவ்வளவுதான். அவ்வாறு தேர்தலில் போட்டியிடும் தமிழ் வேட்பாளர் அந்தத் தேர்தல்மூலம் தனக்குக் கிடைக்கும் பிரபல்யத்தையும் பலத்தையும் எதிர்காலத்தில் கட்சித் தேவைகளுக்காகப் பயன்படுத்தக் கூடாது என்ற ஒர் உடன்படிக்கை அவரோடு எழுதப்பட வேண்டும் என்று சிவில் சமூகங்கள் எதிர்பார்க்கின்றன. எனவே ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்தப்படக்கூடிய ஒரு தமிழ்ப்பொது வேட்பாளர் எனப்படுகின்றவர், தனக்காக வாக்குக் கேட்கப் போவதில்லை. ஒரு கட்சிக்காக வாக்குக் கேட்கப்போகவில்லை. தமிழ் ஐக்கியத்திற்காகத்தான் வாக்குக் கேட்பார். தமிழ்ப் பொது நிலைப்பாட்டுக்காகத்தான் வாக்குக் கேட்பார். தமிழ் மக்கள் ஒரு தேசமாக திரண்டுவிட்டார்கள் என்பதனை நிரூபிப்பதற்காக வாக்களிப்பது. அதாவது தமிழ் மக்கள் தங்களுக்குத் தாங்களே வாக்களிப்பது. கடந்த 15 ஆண்டுகால தமிழ் வாக்களிப்புப் பாரம்பரியம் எனப்படுவது அரசியல்வாதிகள் தங்களுக்காக வாக்கச்சேர்க்கும் ஒரு பாரம்பரியம்தான். ஒவ்வொரு வேட்பாளரும் தனக்கென்று காசு செலவழித்து தனக்கென்று விசுவாசிகளை உருவாக்கி தனக்காக வாக்கு சேகரிக்கும் ஒரு கட்சி அரசியல் பாரம்பரியம். அதிலும் விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தின்கீழ் ஒரு கட்சிக்குள்ளேயே ஒரு வேட்பாளர் சக வேட்பாளரை போட்டியாளராகப் பார்ப்பார். ஆனால் பொது வேட்பாளர் என்று வரும்பொழுது அங்கே ஒவ்வொரு அரசியல்வாதியும் தனக்காகவோ தனது கட்சிக்காகவோ வாக்குச்சேர்க்கப் போவதில்லை. அவர்கள் தேசத்துக்காக வாக்குச்சேர்க்க வேண்டியிருக்கும். தேசத்துக்காக தமது சொந்தக் காசை செலவழிக்க வேண்டியிருக்கும். தேசத்துக்காக தமது உழைப்பை முதலீடு செய்ய வேண்டியிருக்கும். தேசத்துக்காக அர்ப்பணித்து உழைக்க வேண்டியிருக்கும். அதாவது தேசத்துக்காக வாக்கு சேர்ப்பது. இது கடந்த 15ஆண்டுகளாகக் அருகி வரும் ஒரு போக்கு. இதைப் பலப்படுத்தினால் தமிழ் மிதவாத அரசியலில் நேர்மையானவர்கள், கண்ணியமானவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அது தமிழரசியலை ஒரு புதிய தடத்தில் ஏற்றும். அதற்கான தொடக்கம்தான் தமிழ்ப்பொது வேட்பாளரை முன்னிறுத்தும் நோக்கத்தோடு கட்சிகளும் குடிமக்கள் சமூகங்களும் இணைந்த ஒரு பொதுக் கட்டமைப்பை உருவாக்குவது. கட்சிகள் அதற்குத் தயாராக இருந்தால், குடிமக்கள் சமூகங்களின் வேலை இலகுவாகிவிடும். இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு கட்சிக்குள் நடந்த தேர்தலின் பின் விளைவுகள் தமிழ்மக்கள் சிறுமைப்பட்டு விட்டார்கள் என்பதை நிரூபித்தது. அப்படிதான், இந்த ஆண்டின் இறுதியில் நடக்கக்கூடிய ஒரு தேர்தல் தமிழ் மக்கள் சிதறிப் பலங்குன்றிப் போயிருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கக் கூடாது. அது தமிழ்மக்கள் ஒரு தேசமாகத் திரண்டுவிட்டார்கள் என்பதை நிரூபிக்க வேண்டும். அதற்குத் தமிழ்ப் வேட்பாளரைத்தவிர வேறு தெரிவு உண்டா? https://www.nillanthan.com/6774/
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
முதலாவது போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய கனடா அணி 5 விக்கெட்டுக்களை இழந்து 194 ஓட்டங்களை எடுத்திருந்தது. பதிலுக்குத் துடுப்பாடிய ஐக்கிய அமெரிக்கா அணி ஆரொன் ஜோன்ஸின் அதிரடி ஆட்டத்துடன் 17.4 ஓவர்களிலேயே 3 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 197 ஓட்டங்களை எடுத்து வெற்றி இலக்கை அடைந்தது. முடிவு: ஐக்கிய அமெரிக்கா 7 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது ஐக்கிய அமெரிக்கா அணி வெல்லும் எனக் கணித்த 19 பேருக்கு தலா இரு புள்ளிகள் கிடைக்கும். மற்றைய நால்வருக்கும் புள்ளிகள் இல்லை!
-
ஒரு மூடன் கதை சொன்னால்; கோத்தாவின் ‘சதி’ - ஆதிரன்
ஒரு மூடன் கதை சொன்னால்; கோத்தாவின் ‘சதி’ - ஆதிரன் மார்ச் மாதம் ஆறாம் திகதி புதன்கிழமை முன்னாள் இலங்கை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சே தனது எக்ஸ் தளத்தில் பின்வருமாறு பதிவிட்டிருந்தார். ‘‘நாளை வியாழன் 07 மார்ச் 2024 முதல் ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வெளியேற்றுவதற்கான சதி என்ற எனது புத்தகம் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் முன்னணிப் புத்தகக் கடைகளில் கிடைக்கும். இது சர்வதேச ரீதியில் அனுசரணை வழங்கப்பட்ட ஆட்சிமாற்ற நடவடிக்கையின் ஒரு நேரடி அனுபவம்’’ நூல் வெளியீட்டு விழாவென எந்தக் கொண்டாட்டமுமில்லை. ‘கோத்தா இப்போது ஜனாதிபதியாயிருந்தால் இந்தப் புத்தக வௌியீட்டு விழாவை வெகுவிமரிசையாகக் கோலாகலமாக ஒரு பெருந்திருவிழாவாகக் கொண்டாடிக் கழித்திருப்பார்’ என ஒரு நண்பர் எனக்குச் சொன்னார். ‘‘கோத்தா இப்போது ஜனாதிபதியாயிருந்தால் இந்தப் புத்தகத்தையே எழுதியிருக்கமாட்டார்’’ என நான் சொன்னேன். கோத்தாவின் ‘சதி’ அவர் பதிவிட்டிருந்தபடியே மார்ச் 7 காலையிலிருந்து இலங்கையின் புத்தக விற்பனை நிலையங்களில் கொள்வனவு செய்யக்கூடியதாக இருந்தது. ஆங்கிலப் பதிவு 180 பக்கங்களில் 1800 ரூபாய்க்கு (இலங்கை விலை) விற்பனை செய்யப்பட்டது. ‘ஜனாதிபதி பதவியிலிருந்து என்னை வௌியேற்றுவதற்கான ’சதி’ எனத் தலைப்பிடப்பட்டிருந்ததுடன் ‘சதி’ என்பது (The Conspiracy) பெரிய எழுத்துகளில் அச்சிடப்பட்டிருந்தது. கோத்தாவின் முகத்தரிசனத்துடன் ‘சர்வதேச ஆதரவுடன் ஆட்சி மாற்றம் எவ்விதம் ஜனநாயகத்தைக் கேலிக்கூத்தாக்கியது’ எனும் நீண்ட வாசகமும் அட்டையில் இடம்பெற்றிருந்தன. கோத்தாவின் சதியானது 15 அத்தியாயங்களைக் கொண்டிருக்கிறது. அறிமுகம், 2. வௌித்தரப்புகளின் தப்பெண்ணங்கள், 3. 2019 இல் பொருளாதாரம் 4. உலகளாவிய கொவிட் – 19 தொற்றுநோய் 5. பொருளாதார வீழ்ச்சியைச் சமாளித்தல் 6. முதலில் வாழ்வது – தடுப்பூசி இயக்கம் 7. அரசியல் மூன்றில் இரண்டு பங்கு பெரும்பான்மை 8. கைவிடப்பட்ட அந்நிய நேரடி முதலீடு மற்றும் இயற்கை விவசாய முயற்சிகள் 9. பற்றாக்குறை வரிசை மற்றும் கும்பல் வன்முறை 10. ஐந்தாவது கட்டுரையாளர்களால் ஸ்திரமின்மை 11. கடினமான பொருளாதாரக் கொள்கை 12. தவறான கட்டுமானங்கள் 13. அரசியல் ஆட்சி மாற்றம் 14. சட்டம், ஒழுங்கு மற்றும் குற்றம் சீர்குலைவு, 15. பின்குறிப்பு இலங்கையின் நிறைவேற்றதிகாரம் கொண்ட ஆறாவது ஜனாதிபதியாக 69 24 255 வாக்குகள் (52.25) பெற்று 16 நவம்பர் 2019 அன்று கோத்தாபய ராஜபக்ச தெரிவானார். முன்னாள் இராணுவ அதிகாரியும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளருமான கோத்தாபய ராஜபக்சே தனக்கு முன்னர் பதவி வகித்திருந்த ஜனாதிபதிகளைப் போலன்றி ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க அநுராதபுரத்தின் ருவான்வெலிசாய விகாரையில் ஜனாதிபதியாகப் பதவியேற்றிருந்தார். சிங்கள மன்னனாகக் குறிப்பிடப்படும் துட்டகைமுனுவினால் தோற்கடிக்கப்பட்ட தமிழ் மன்னனாகக் குறிப்பிடப்படும் எல்லாளனின் சமாதியும் இங்கே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் பதவியேற்பு நிகழ்ந்து இரண்டரை வருடங்களும் இரண்டு மாதங்களும் கடந்திருந்த நிலையில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சே இலங்கையிலிருந்து தப்பித்து விமானப்படை விமானத்தில் ஏறி 13 ஜூலை 2022 அன்று மாலைதீவில் இறங்கினார். பின்னர் அங்கிருந்து புறப்பட்டு சிங்கப்பூரில் இறங்கி 14 ஜூலை 2022 அன்று அங்கிருந்து தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்துவிட்டதாக இலங்கை நாடாளுமன்றச் சபாநாயகருக்கு மின்னஞ்சல் அனுப்பினார். இதுதான் கோத்தா ‘சதி’ யெனக் குறிப்பிடுவதன் முன்கதைச் சுருக்கமாகும். இந்தச் ‘சதி’ வௌியீடு குறித்த மிகக் குறிய கால அறிவிப்பு மற்றும் வௌியீட்டுக்கெனப் பிரத்தியேகமான விளம்பரப்படுத்தல் இல்லாதிருந்த நிலையிலும் அமோகமாக விற்பனையாகியுள்ளது. மிகப் பெரும்பாலான புத்தகக் கடைகளில் ‘சதி’ விற்றுத்தீர்ந்துவிட்டது. அடுத்த சதியின் பிரதிகள் வாரஇறுதிக்குள் விற்பனைக்கு வந்து புத்தக அலுமாரிகளை நிரப்பும் என்றெதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்தச் சதியை ‘நெட்பிளிக்ஸ்’ ஒரு திரைப்படமாக எடுக்க அதிக வாய்ப்புள்ளதாகவும் திரைக்கதை தயாராகிவிட்டதாகவும் கூறப்படுகிறது. மெய்யாகவே சிறுபிள்ளைத்தனமாகப் புனையப்பட்டிருக்கும் இந்த மிகச் சாதாரணமான புத்தகத்திலிருந்து ஒரு திரைப்படத்தை எடுத்து அதை ஒரு பிளாக்பூஸ்டர் ஆக்க வேண்டுமென்றால் லோகேஷ் கனகராஜாலும் முடியுமோ தெரியவில்லை. கோத்தாவாக அவரே நடிக்கலாம். அவர் நடிப்பதற்கு வெட்கப்பட்டு மறுத்தால் தமிழகக் கவர்னர் ஆர்.என்.ரவியைக் கேட்டுப் பார்க்கலாம். அவர் வாய்மொழியாலும் உடல் மொழியாலும் கோத்தாவுக்கு எல்லாவிதத்திலும் மிகப் பொருத்தமாகவேயிருப்பார். கோத்தாவின் சதியைப் பற்றிய சுருக்கம் என்னவென்றால் சதி மற்றும் கும்பல் வன்முறை மூலமாக ஆர்வங்கொண்டிருந்த வளித்தரப்புகளின் ஆதரவு, அனுசரணை மற்றும் இலங்கைச் சமூகத்தின் குறிப்பிட்ட பிரிவினரின் பங்கேற்புடன் ஜனநாயக அடிப்படையில் மக்களால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபயை வௌியேற்றிய கதையாகும். கோத்தாவின் முன்னாள் தீவிரவிசுவாசியும் சகபாடியுமான விமல்வீரவன்ஸ‘ மறைக்கப்பட்ட ஒன்பதுகதைகள்’ எனும் தலைப்பில் இதற்கு முன்னோடியாக ஒரு புத்தகத்தை வெளியிட்டிருந்தார். 2022 காலப்பகுதியில் கோத்தாவின் ஆட்சியைக் கவிழ்த்த ‘அரகலயப் போராட்டம் வெளிநாட்டுச் சக்திகளின் ஆதரவோடு முன்னெடுக்கப்பட்டதாகவும் அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இந்த ஆட்சிமாற்றத்துக்குத் திட்டமிட்டவர் எனவும் விமல் வீரவன்ஸ மேற்படி தனது நூலில் குற்றஞ்சாட்டியிருந்தார். அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் இந்தக் குற்றச்சாட்டை உடனடியாகவே மறுத்திருந்தார். இந்தநிலையில் விமல் வீரவன்ஸவின் புத்தகத்தில் சுமத்தப்பட்டிருந்த இதுபோன்ற குற்றச்சாட்டுகளை மேலும் விரிவாகத் தெளிவுபடுத்தி முன்வைக்குமொன்றாகக் கோத்தாவின் சதி இருக்குமென எதிர்பார்க்கப்பட்டிருந்தது. ஆனால் அந்த எதிர்பார்ப்புக்கு மாறாக கோத்தாவின் சதியானது ஒரு சாதாரண மறுபரிசீலனையாகவிருந்தது. சதியை வலுப்படுத்துவதற்கான வெளிப்படையானதும் உறுதியானதுமான ஆதாரமொன்றையும் முன்வைக்கவில்லை. அமெரிக்காவைவோ அல்லது வேறு எந்தவொரு நாட்டையுமோ நேரடியாகச் சுட்டிக்காட்டவில்லை. அமெரிக்கா முன்னெடுத்திருந்ததாகக் கருதப்படும் சர்வதேசச் சதித்திட்டம் பற்றிய பரபரப்பு புத்தகத்தின் எந்தவொரு பக்கத்திலும் துலங்கவில்லை. உண்மையில் இந்த விடயத்தில் கோத்தாவைக் காட்டிலும் விமல் வீரவனஸ சிறப்பாகவும் வௌிப்படையாகவும் சதியை வலுப்படுத்தியுள்ளார் எனக் குறிப்பிடலாம். எனினும் கோத்தாவின் சதி சுவாரசியமான சங்கதிகள் நிறைந்திருக்கும் ஒரு புத்தகம்தான். இலங்கை அரசியலின் முக்கியமான ஆய்வாளரெனக் கருதப்படும் டி.பி.டி.எஸ்.ஜெயராஜ் இந்தப் புத்தகத்தைப் பற்றிக் குறிப்பிடும்போது ‘பாம்புக்கு வலி ஏற்படாமலும் குச்சிமுறியாமலும் பாம்பை அடிப்பது என்று ஒரு தமிழ்ப் பழமொழி உண்டு. கோத்தாவின் புத்தகம் அத்தகையதொரு நடவடிக்கை’ எனக் கூறுகிறார். அநியாயமான ஆட்சி மாற்றத்தில் விளைந்ததாகக் கூறப்படும் சர்வதேச்ச் சதியைப் பற்றி ஒரு புத்தகத்தில் வழமையாக எதிர்பார்க்கப்படும் கனதியைக் கோத்தாவின் சதி கொண்டிருக்கவில்லை. பொதுவாகவே இத்தகையதொரு சதியால் பாதிப்புக்குள்ளான ஒரு நிரபராதி அநீதியைக் கண்டு கொதிப்படைவார். கோத்தா அத்தகைய ஒருவரல்லர் அதனால் அவர் எழுதிய சதி வடிகட்டிய முட்டாள்தனத்தின் வெளிப்பாடாகவேயுள்ளது. கோத்தா சிறிலங்காவின் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக்கொண்ட 2019 நவம்பர் தொடங்கி பதவியிலிருந்து விலகிய 2022 ஜூலை வரைக்குமான அவரது ஆளுகைக் காலத்தில் மோசமானதும் ஊழல் நிறைந்ததுமான நிர்வகிப்பினையே செய்திருந்தார். அவர் பெருந்திமிர்பிடித்தவராகவும் அரசியல் விவகாரங்களைக் கையாள்வதில் திறனற்றவராகவுமே இருந்திருக்கிறார். எனினும் தனது குறைபாடுகளையோ வடிகட்டிய முட்டாள்தனத்தையோ உணர்ந்து ஒப்புக்கொள்ளாமல் இந்தச் சதி என்ற கோட்பாட்டை முன்வைத்து அதன்பின்னால் மறைந்து நின்று சுயபச்சாதாபத்தில் மூழ்கிவிட எத்தனிக்கிறார். கோத்தா தனது பதவி விலகலுக்கு மற்றவர்களைக் குற்றஞ்சாட்டினாலும் ஒரு கத்தியை வெளிப்படையாகவே கத்தி என எடுத்துக் காட்ட விரும்பாதவராகவோ அல்லது இயலாதவராகவோ இருக்கிறார். அவர் தன்னை வீழ்த்தியதாகத் தனக்கெதிராகப் பெரும் சதித்திட்டம் தீட்டியதாக எந்தவொரு மேற்கத்திய அல்லது கிழக்கத்திய நாட்டையோ வெளிப்படையாகக் குறிப்பிடவில்லை. அவர் தனது குடும்ப உறுப்பினர்களையோ கட்சி சகாக்களையோ குறைகூறவில்லை. பாதுகாப்புத் துறை அல்லது ஆயுதப்படைகளின் முக்கியமான அதிகாரிகளை விமர்சிக்கவுமில்லை. ஆனால் அவர்கள் அனைவரைப் பற்றியும் டி.பி.எஸ்.ஜெயராஜ் சொன்னதைப்போல பாம்புக்கு வலிக்காமலும் குச்சி முறியாமலும் பாம்பை அடிக்க எத்தனிப்பதுபோல் குறிப்பிடவே செய்கிறார். புலம்பெயர்ந்த புலிகளுக்கு எதிராகக் குற்றச்சாட்டுகளை முன்வைக்கும்போதுதான் கோத்தா கடுஞ்சினமுற்றுக் கடுமையாகத் தாக்குதல் நிகழ்த்துகிறார். ஆனால் அதுவும்கூட ஓர் அர்த்தமற்ற தாக்குதல்தான். புலம்பெயர்ந்த தமிழர் என வரும்போது அவர்களிலும் ஒரு தீவிரமான தீவிரவாதப் பிரிவினர் இயங்கி வருகின்றனர். அவர்கள் நிச்சயமாக இலங்கை சீரழிந்து சிதறிச் சின்னாபின்னமாக வேண்டுமென்பதில் பெருவிருப்புடையவர்கள். அவர்கள் என்றைக்குமே கோத்தா சிறிலங்காவின் ஜனாதிபதியாகத் தொடர்ந்திருப்பதையே பெரிதும் விரும்புவார்கள். ஏனெனில் அவர் ஜனாதிபதியாக இருந்தால்தான் அவரது மோசமான திறனற்ற நிர்வாகத்தின் கீழ் இலங்கை வேகமாகப் பொருளாதார வீழ்ச்சி அடையும், ஊழல் பெருகும். சிறுபான்மையினங்கள் மேலும் பிரிக்கப்படும். மெய்யாகவே அப்புலம்பெயர் தீவிரவாத வகுப்பினர் இலங்கையின் பொருளாதாரத்தை வீழ்ச்சியடையவிடாமல் இக்கட்டான நேரத்தில் ஜனாதிபதியாகப் பதவியேற்றுக் கொண்டு நாட்டை மீட்சிக்கான பாதையில் இட்டுச் செல்வதற்காக ரணில் விக்கிரமசிங்கே மீதுதான் கோபம் கொண்டிருக்கின்றனர். மனைவி அனோமாவுடன் அமெரிக்காவுக்குச் சென்று தனது மகன், மருமகள், பேரக்குழந்தை ஏனைய உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் இருக்க வேண்டுமெனக் கோத்தா விரும்புகிறார். எனவே அவர் சதி என்ற இந்தப் புத்தகத்தில் குற்றச்சாட்டுகளை அடுக்கி வாஷிங்டனைப் பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. இப்போது தீவிர அரசியலுக்கு வரவேண்டும் என்ற கனவில் மிதந்து கொண்டிருக்கும் கோத்தா இதற்காகத் தனது ராஜபக்சே வம்சத்தையும் கட்சியையும் பௌத்த மதகுருமார்களையும் ஆயுதப் படைகளையும் குற்றஞ்சுமத்தி அந்நியப்படுத்திவிட முடியாத சங்கடத்துடனேயே இந்தச் சதியை எழுதியிருக்கிறார். 2022 ஆரம்பித்தபோது இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடிக்குள்ளானது. உணவு, எரிபொருள் இரண்டுக்குமே கடும் பற்றாக்குறை நிலவியது. எரிபொருள் நிரப்பும் நிலையங்கள் மற்றும் எரிவாயுக் கொள்கலன்கள் விற்பனை நிலையங்களின் முன்பாக வரிசையில் நிற்கும் நிலை தன்னியல்பாகவே உருவானது. இந்த வரிசை பல கிலோ மீட்டருக்கு நீண்டிருந்ததென்பது மட்டுமல்லாமல் இரவு பகலாகத் தொடர்ந்தது. இதன் விளைவாக அரகலய என்ற பெயரில் ஜனாதிபதி கோத்தாவுக்கெதிராக மாபெரும் மக்கள் எதிர்ப்பு இயக்கம் ‘வீட்டுக்குச் செல் கோத்தா’ என்ற கோஷத்துடன் (Go home koththa) உருவெடுத்தது. இந்த அரகலய இயக்கம் ‘மிரிஹான’விலுள்ள கோத்தாவின் வீட்டைச் சுற்றிவளைத்து முற்றுகையிட்டபோது பாதுகாப்புச் செயலாளர் கமால் குணரத்னவும் முப்படைத் தளபதி சவேந்திரசில்வாவும் ஒரு திருமண வைபவத்தில் கலந்துகொண்டிருந்த நிலையில் அவர்களுக்கு இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டபோது அவர்களிருவருமே உரிய நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டதாகவும் இதுவொரு திட்டமிட்ட செயல் எனவும் கோத்தா இந்தப் புத்தகத்தில் குறிப்பிட முனைகிறார். மேலும் இந்தத் தகவல் உளவுத்துறைத் தலைவர் சுரேஷ் சலேக்குத் தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் உடனடியாகக் கோத்தாவின் ‘மிரிஹான’ வீட்டுக்கு வந்து பார்த்தபோது அரகலய இயக்கத்தினர் சில நூறுபேர் வரை மட்டுமேயிருந்தனர். அதை உளவுப் பிரிவுத் தலைவர் திருமண வைபவத்தில் கலந்துகொண்டிருந்த அவ்விரு அதிகாரிகளுக்கும் வீடியோ கால் மூலம் காட்டியிருந்த நிலையிலும் அவர்கள் அதற்கும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என இந்தப் புத்தகத்தில் குற்றஞ்சுமத்த வந்த கோத்தா முடிவில் அவ்விரு அதிகாரிகளுக்குமிடையில் நல்லுறவில்லாமலிருந்ததும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்காததற்கு ஒரு காரணம் எனப் பூசிமெழுகி அவர்களையும் தனது குற்றச்சாட்டுகளிலிருந்து மென்மைப்படுத்திப் பாதுகாக்கவும் முயன்றிருக்கிறார். இப்புத்தகத்தில் தன்னை ஜனாதிபதி பதவியிலிருந்து விலக்குவதற்குச் சதி செய்தவர்களைப் பற்றிச் சொல்ல வந்த கோத்தா அந்த விடயத்தையே (கருவையே) பேசாமல் தவிர்த்து மாறாக அதற்கெல்லாம் நியாயங் கற்பிக்கவே முனைந்திருக்கிறார். கோத்தா இதுவரையில் தனக்கெதிராக முன்வைக்கப்பட்டு வரும் உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத் தாக்குதல் (ஈஸ்டர் தாக்குதல்), சீனி மற்றும் எண்ணெய் மோசடி, அசேதன உரத்தின் இறக்குமதியைத் தடை செய்து விவசாயிகளை நெருக்கடிக்குள்ளாக்கியது போன்ற குற்றச்சாட்டுகளை இப்புத்தகத்தில் குறிப்பிடவேயில்லை. கொரோனா இலங்கையில் உச்சமடைந்திருந்த காலத்தில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி மரணமுற்ற முஸ்லிம் மக்களின் உடல்களை எரித்த விடயம் நாடளாவிய ரீதியில் மட்டுமன்றி உலகளாவிய ரீதியிலும் கடுங்கண்டனத்துக்குள்ளாகியிருந்தது. அவ்விடயத்தைப் பற்றிக் கோத்தா இப்புத்தகத்தில் குறிப்பிடும்போது கொரோனா இறப்புகளின்போது முஸ்லிம் உடல்களை எரித்த விடயத்தில் எனக்கு எந்தப் பங்கும் கிடையாது. அதற்கு மருத்துவர்கள் வழங்கிய ஆலோசனைதான் காரணமாக இருந்தது. தனிப்பட்ட ரீதியில் நான் கொரோனாத் தொற்றால் மரணமான முஸ்லிம் உடல்களை எரிப்பதை விரும்பவில்லை. இந்த விடயத்தில் குறிப்பாகப் பேராசிரியர் மித்திகா விதானகே வழங்கியிருந்த ஆலோசனைப்படிதான் அவ்வுடல்கள் எரிக்கப்பட்டன’ எனக் கூறியிருக்கிறார். இவ்விடயத்திலும் கோத்தா தன்னை விடுவித்துக்கொள்ள முனைகிறார். (பேராசிரியர் மித்திகா இப்போது அவுஸ்திரேலியாவில் போய் குடியேறிவிட்டார்)கோத்தா தனது ஆட்சிக்காலத்தில் மிகச் சிறப்பாக நடந்ததொரு நிகழ்வாக கொவிட் தொற்று உச்சமடைந்திருந்தபோது அதற்கான தடுப்பு நடவடிக்கைகளில் சிறப்பாகச் செயலாற்றியிருந்ததைப் பற்றி இப்புத்தகத்தில் முக்கியத்துவமளித்து தன்னை ஒரு கதாநாயகனாகக் காட்டிக்கொள்ளும் அதேவேளை கொவிட் தடுப்புத் தொடர்பில் ஜனாதிபதி செயற்பாட்டு மையத்தின் தலைவராக இருந்து அதற்காகக் கடுமையாக உழைத்துச் சிறப்பாகச் செயலாற்றியிருந்த படைத்தளபதி சவேந்திர சில்வாவைப் பற்றி ஒரு வார்த்தையேனும் குறிப்பிடவில்லை. கொவிட் தொற்று உச்சமடைந்திருந்த காலத்தில் சவேந்திர சில்வாவின் சிறப்பான செயலாற்றுகை குறித்து ஊடகங்கள் அப்போது முக்கியத்துவப்படுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. இந்தப் புத்தகத்தைக் கோத்தா எழுதி வௌியிட்டிருப்பதன் பிரதான நோக்கமே தனது ஆட்சிக்காலத்தில் நேர்ந்த அனைத்துத் தவறுகளுக்கும் தன்னால் பொறுப்புக் கூறமுடியாது. அதற்குப் பொறுப்புக்கூற வேண்டியவனும் நானல்ல என்பதையும் அதற்குப் பல்வேறு நியாயங்களையும் முன்வைத்துத் தவறுகளை மற்றவர்கள் தலையில் சுமத்தித் தன்னையொரு புனிதராக முன்னிலைப்படுத்திக் கொள்வதேயாகும். ஒரு வகையில் தனக்குக்கீழ் பணியாற்றிய அதிகாரிகளை செயற்றிறனற்றவர்கள், அந்தந்தப் பணிகளுக்குப் பொருத்தமற்றவர்கள் எனச் சொல்ல வருகிறார். அந்த அதிகாரிகளைத் தெரிவு செய்து பணிக்கமர்த்தியவர் அவர்தானே. செயற்றிறனற்ற பொருத்தமற்ற அதிகாரிகளைத் தெரிவு செய்து பணிக்கமர்த்தியவர் என்ற அடிப்படையில் கோத்தாதானே அவ்விதம் நேர்ந்த தவறுகளுக்கு தார்மீக ரீதியாகப் பொறுப்புக்கூறியாக வேண்டும். இந்தத் தப்பித்தலானது கோத்தாவின் ஆளுமை மற்றும் முகாமைத்துவ வழிநடத்தல் தவறானது என்பதையே மறைமுகமாக எடுத்துக்காட்டுகிறது. இதிலிருந்தே கோத்தா தன்னை நாட்டை வழிநடத்தப் பொருத்தமற்றவரென இப்புத்தகத்தில் அடையாளங்காட்டுகிறார். இலங்கையிலுள்ள ரஷ்யத் தூதுவர் ‘தனக்கெதிரான சர்வதேசச் சதி’ என்று புத்தகம் எழுதிய உங்கள் சகோதரன் கோத்தா அந்தச் சதிகாரர்கள் பற்றி ஏன் புத்தகத்தில் நேரடியாகச் சொல்லாது மறைத்திருக்கிறார். அது ஏன்?’ என கோத்தாவின் செய்தித் தொடர்பாளர் உதயங்க வீரதுங்கவிடம் கேட்டிருக்கிறார். ரஷ்யத் தூதுவரின் இந்தக் கேள்வியை உதயங்க வீரதுங்க கோத்தாவிடம் கேட்டபோது அவர் ‘நான் ஒரு முன்னாள் ஜனாதிபதி. இந்த நிலையில் நான் எப்படி அவர்களின் பெயர்களை புத்தகத்தில் குறிப்பிடமுடியும்’’ என உதயங்கவிடம் கேட்டிருக்கிறார். இதிலிருந்து கோத்தா அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகள் மீது இன்னும் அச்சத்துடன்தானிருக்கிறார் என்பது புலனாகிறது. இந்த நிலையில் ‘கோத்தா இந்தச் சதியை எழுதி வெளியிட்டிருக்க வேண்டியதில்லை. இதைத் தவிர்த்திருந்தால் அவருக்கு அது ஆரோக்கியமாக இருந்திருக்கும்’ எனச் சொல்கின்ற அவரது உறவினர்களே இதற்காக அவரை இப்போது மறைமுகமாக விமர்சித்தும் வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் கடந்த வாரம் டெய்லி மிரர் நாளிதழ் கோத்தாவின் சகோதரர் பஸில் ராஜபக்சவை நேர்காணல் செய்தபோது ‘உங்கள் மூத்த சகோதரரான முன்னாள் ஜனாதிபதி கோத்தாபய’ ராஜபக்சே எழுதிய புத்தகத்தை நீங்கள் படிக்கவில்லை என்று கூறினீர்கள். நீங்கள் அதிகம் படிக்கும் அரசியல்வாதி என்பது எமக்குத் தெரியும். இந்தப் புத்தகத்தை நீங்கள் ஏன் படிக்கவில்லை?’’ என்ற கேள்விக்கு பஸில் ராஜபக்சே, ‘‘புத்தகம் எனக்குக் கிடைக்கவில்லை. அதைப் படிக்கவில்லையென நான் கவலைப்படவுமில்லை. அவரது புத்தகத்தை இப்போது நான் படிக்க வேண்டிய அவசியமுமில்லை. ஏனெனில் உள்ளடக்கம் , பத்திரிகையாளர்கள் மூலம் எனக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது’’ எனப் பதிலளித்திருந்தார். https://uyirmmai.com/article/uyirmmai-magazine-may-2024-aathiran-article-07/
-
ஏ.ஆர்.ரஹ்மான் இப்படித்தான் தம் இசையை உருவாக்குகிறார்: இசையமைப்பாளர் தாஜ் நூர்
ஏ.ஆர்.ரஹ்மான் இப்படித்தான் தம் இசையை உருவாக்குகிறார்: இசையமைப்பாளர் தாஜ் நூர் மே 2024 - Uyirmmai Media · சமூகம் 2009ஆம் ஆண்டு ஹாலிவுட்டில் வெளியான ’ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்துக்கு ஏ.ஆர் ரஹ்மான் அவர்கள் இசையமைத்திருந்தார். ஏஆர் ரஹ்மானுக்கு ஆஸ்கர் விருது பெற்றுத்தந்த ‘ஜெய்ஹோ’ பாடலை அவர் கம்போஸ் செய்யவில்லை என்று இயக்குநர் ராம்கோபால் வர்மா சொல்வது, எதன் அடிப்படையில் சொல்கிறார் என்பது புரியவில்லை. பாடகர் சுக்விந்தர் சிங் அப்போது ஒரு பாடகர் மட்டும்தான். அந்தப் படத்தினுடைய கதையின் சூழல் என்ன என்பது எதுவுமே அவருக்குத் தெரியாது. படத்தினுடைய இயக்குநருக்கும் இசையமைப்பாளருக்கும் உண்டான ஒரு கருத்துப் பரிமாற்றம் அது. அப்படி இருக்கும்போது அந்த மெட்டைப் பாடகர் சுக்விந்தர் சிங் போட வாய்ப்பே இல்லை. ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படத்தில் இடம்பெற்ற ‘ஜெய்கோ’ பாடலுக்கு ஏ. ஆர். ரகுமான்தான் மெட்டு அமைத்தார் என்பது எனக்கு நன்றாகத் தெரியும். பாடகர் சுக்விந்தர் சிங் ஏ.ஆர் ரஹ்மானின் இசை கூடத்திற்கு வாய்ப்புத் தேடி வந்தவர். அதன் பின்பு சென்னையில் அவர் தங்கியிருந்து ட்ராக் பாடுவதை வழக்கமாக்கிக்கொண்டார். அந்த நேரங்களில் நானும் அவரும் நல்ல நண்பர்கள். என் இருசக்கரவண்டியில் சென்னையில் சில இடங்களுக்குச் செல்வது வழக்கம். இச்சூழலில் ’சைய்யச் சைய்ய’ பாடலைப் பாட இவருடைய குரல் பொருத்தமாக இருக்கும் என்று ஏ.ஆர் ரஹ்மானும் இயக்குநர் மணிரத்னமும் முடிவெடுத்தார்கள். அவரே தமிழில் பாடினால் சிறப்பாக இருக்கும் என்று முடிவு செய்த பிறகு அவருக்குத் தமிழ் சரியாக உச்சரிக்க வரவில்லை. அந்த நேரத்தில் பாடகர் பாலக்காடு ராமுடன் இணைந்து இவரைப் பாட வைத்து, உச்சரிப்பில் ஏற்படக் கூடிய சில தவறுகளைச் சரி செய்து இவர்கள் இருவரையும் பாட வைத்து அந்தப் பாடல் வெளியானது. பாடகர் சுக்விந்தர் சிங் பஞ்சாபி என்பதால் கிட்டத்தட்ட அந்தப் பாடலை நாங்கள் முழுமையாகப் பதிவு செய்வதற்கு ஒரு மாத காலத்திற்கு மேல் ஆனது. கொஞ்சம் கொஞ்சமாக மெருகேற்றி மெருகேற்றி அவரைப் பாட வைத்தோம். பாடகர் சுக்வித்தர் சிங் இங்கு ஏ. ஆர். ரகுமான் அவர்களுடைய இசைக் கூடத்தில்தான் தன்னை ஒரு இசைக்கலைஞனாக வளர்த்துக்கொண்டார். பாடகர் சுக்விந்தர் சிங் ஒரு மிகப்பெரிய பாடகராக வளர்ந்த விதம் இதுதான். இசையமைப்பாளர் ஏ. ஆர். ரஹ்மான் அவர்களோடு நான் கிட்டத்தட்ட 14 ஆண்டுகளுக்கு மேல் பணி செய்துள்ளேன். அந்த அடிப்படையில் எனக்கும் அவருக்குமான உரையாடல்கள், நான் அவரிடம் பெற்ற இசை அனுபவங்கள், அவர் இசையமைக்கும் விதம், அவர் இயக்குநர்கள், பாடலாசிரியர்கள் மற்றும் பாடகர்களோடு அணுகும்முறைகள் இது சார்ந்து சில பதிவுகளை உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். இதுநாள்வரை இல்லாமல், சமீபகாலமாக ஏ.ஆர். ரஹ்மான் பற்றிச் சில உண்மையற்ற கருத்துகள் சமூகத்தளங்களிலும், மக்களிடத்திலும், ஊடகங்களிலும் பரவி வருவதைப் பாக்கும்போது வருத்தமாக இருக்கிறது. உண்மையற்ற விமர்சனங்களுக்கு அவர் பொருத்தமானவர் இல்லை. ஏனென்றால் அவர் இசைத்துறையில் பல புதுமைகளைச் செய்தவர். அதனை அவருடன் பணியாற்றும் பொழுது உணர்ந்துள்ளேன். அதுமட்டுமின்றி உலக அளவில் இருக்கக்கூடிய இசைக் கருவிகள், புதுவிதமான ஒலி அமைப்புகள் மற்றும் ஓசைகளைத் தமிழ்த் திரைப்படங்களிலும், இந்தியத் திரைப்படங்களிலும் அறிமுகப்படுத்தினார். இசைத் துறையில் இருக்கக்கூடிய தொழில் நுட்பங்களையும் இசை மென்பொருள்களையும் பயன்படுத்தி ஒரு நவீன இசை வடிவத்தை மக்களுக்கு அறிமுகப்படுத்தி, மக்களுக்குப் புதிய இசையனுபவத்தைக் கொடுத்தார். இசைமென்பொருள் தயாரிக்கக் கூடிய நிறுவனமான Vienna instruments என்ற நிறுவனம் ஏ. ஆர். ரகுமான் அவர்களிடம் ஆலோசனைகள் கேட்டு ஒரு சில மென்பொருள்களை உருவாக்கினார்கள். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பாக Performance tool என்னும் மென்பொருள் இவருடைய கருத்திற்காகக் காத்திருந்தது. Performance tool மென்பொருள் என்னவென்றால், கணினி இசையை வரையறை செய்யப்பட்ட தொகுப்பு. இந்த மென்பொருளின் சிறப்பு என்னவென்றால் மனிதனுடைய மூளையில் எழக்கூடிய கற்பனையினை உணர்ந்து அந்தக் கற்பனையை இந்த இசை மென்பொருள் கணித்து அதற்கேற்ற மாதிரியாகத் தன்னை மாற்றி இசைக் கலைஞனின் மூளையில் ஏற்படும் கற்பனைக்கு ஈடு கொடுக்கக்கூடிய ஒரு மென்பொருள். ஓர் இசையமைப்பாளர் இசை குறியீடுகளை எப்படி இசை வடிவமாக உருவாக்க வேண்டும் என்று நினைக்கிறார் என்பதினை இந்த இசை மென்பொருள் உள்வாங்கித் தரக்கூடிய அளவிற்கு மேன்மைப்படுத்தப்பட்ட மென்பொருள். இதில் ஏ.ஆர். ரகுமான் அவர்களுடைய ஆலோசனை மற்றும் கருத்து என்னவென்று கேட்க அந்த மென்பொருள் நிறுவனம் காத்திருந்தது. மிகக் குறிப்பாக அயல்நாடுகளில் இருக்கக்கூடிய இயக்குநர்கள், இசைக் கலைஞர்கள் மற்றும் பாடகர்கள் இவருடன் இணைந்து பணிபுரியக் காத்திருந்தார்கள். இதற்கெல்லாம் காரணம் அவருடைய வித்தியாசமான கற்பனை, அயராத உழைப்பு, அவர் இசையை அணுகுகியமுறை, அவர் இசையைப் புரிந்து வைத்திருக்கக்கூடிய தன்மை இவையெல்லாம்தான் காரணம் என்று எண்ணுகிறேன். கணினி இசை வளர்ச்சி அடைந்துகொண்டிருந்த காலகட்டத்தில்தான் நான் அவருடன் பணி செய்யத் தொடங்குகிறேன். என்னை மென்பொருள் ஒலிநுட்பத்தைக் கற்றுக்கொள்ளச் செய்தார். அவரே கற்பித்தது மட்டுமின்றி மற்ற இசையமைப்பாளர்களிடம் கணினி இசையையும் மென்பொருள் தொடர்பான தகவல்களையும், அவை சம்பந்தமான சந்தேகங்களைத் தீர்க்க, கற்றுத் தர என்னை அனுமதித்தார் (அவரிடம் நான் சம்பளம் வாங்குபவனாக இருந்தும்) அதன் வாயிலாக எனக்கு மற்ற இசையமைப்பாளர்களுடன் நல்ல நட்பு ஏற்பட்டது. இச்செயல் அவரின் பெருந்தன்மைக்கு ஒரு சான்று. ஏ.ஆர். ரகுமான் அவர்கள் அறம் சார்ந்த மனிதர் என்பது பொதுவாக அனைவரும் அறிந்ததே. மேடைகளில் அவர் உரையாற்றும் பொழுது மிக எளிமையாகவும் பண்புடனும் நடந்து கொள்வதை நாம் பார்த்திருக்கிறோம் குறிப்பாக மேடைகளிலும் “எல்லாப் புகழும் இறைவனுக்கே” என்று தன்னடக்கத்துடன் சொல்லக்கூடிய ஆகச் சிறந்த பண்பாளர். அவர் தேர்ந்தெடுத்த மார்கத்தில் 100 சதவிகிதம் அதன் வழிமுறைகளைச் சரியாக கடைப்பிடிக்கக் கூடிய மாண்பினைக் கொண்டவர். இவ்வாறான சிறந்த பண்புகளை உடைய ஒரு மனிதரைப் பற்றி, உண்மைக்கு புறம்பான தகவல்களுக்குக் காலம் பதில் கூறட்டும் ஏ. ஆர். ரஹ்மான் சமகால சமூக நிகழ்வுகள், பிரச்சனைகள், இளைய தலைமுறைகள் எப்படி இந்த நவீன உலகத்திற்கு ஏற்ப தங்களது எதிர்காலத்தை வடிவமைத்துக் கொள்ள வேண்டும் என்பது போன்ற கருத்துகளை விழிப்பற்ற சிலர் விழிப்படையும் வகையில் இலை மறை காயாகப் பதிவிட்டு வந்தார். தற்பொழுது சற்று வெளிப்படையாகப் பல நேர்காணங்களில் பதிவு செய்வதுதான் இச்சர்ச்சைக்குக் காரணமாக இருக்கும் என்று நினைக்கிறேன். இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ‘ரங்கீலா’, ’Daud ‘ஆகிய இரண்டு படங்களுக்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரங்கீலா படம் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்றது. அந்தப் படத்தின் வெற்றிக்கான மிக முக்கியமான காரணம் என்னவென்றால் ஏ.ஆர். ரஹ்மானின் பாடலும், பின்னணி இசையும். இதனை யாராலும் மறுக்க முடியாது. அந்தப் படத்தைத் திரும்பவும் ஒருமுறை பார்த்தீர்கள் என்றால் புரியும் ‘ரங்கீலா’ படத்தில் இடம்பெற்ற பின்னணி இசை, பாடல்கள் அவை வெளிவந்த காலத்திலேயே இந்தித் திரையுலகில் பெரும் பேசுபொருளாக இருந்தன. காரணம் அந்த இசையினுடைய தரம். அனைவரையும் வியப்புடனும் பிரம்மிப்புடனும் ஆச்சரியத்துடனும் இரசிக்க வைத்தது. இன்னும் சொல்லப்போனால் நான் ஒருமுறை மும்பையில் காரில் பயணிக்கும்பொழுது என்னிடம் கார் ஓட்டுநர் இயல்பாக ’’நீங்கள் யார் எங்கிருந்து வருகிறீர்கள்?’’ என்று என்னிடம் கேட்டார். “சென்னையில் இருந்து வருகிறேன். ஏ. ஆர். ரஹ்மானிடம் உதவியாளராகப் பணியாற்றுகிறேன்’’ என்றேன். உடனே ஆச்சரியத்துடன் என்னை ஒரு கணம் திரும்பிப் பார்த்து வியந்தார். அந்த வியப்புடனே என்னிடம் கேட்டார். “ஏ.ஆர். ரகுமான் சார் எப்படி இருப்பார், எங்கு இருக்கிறார், அவரைப் பார்க்க முடியுமா?” என்றெல்லாம் உற்சாகத்துடன் கேட்டார். “ரஹ்மான் சாரோடு இருக்கும் ஒருத்தர் என் வண்டியில் வர்றாருங்கிறது எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு’’ என்றார் உணர்ச்சி மேலிட. ரங்கீலா படம் வந்த புதிதில் எல்லாரும் என்னிடம் சொன்ன தகவலை அந்த ஓட்டுநரும் என்னிடம் சொன்னார். “இவ்வளவு நாளா நாங்கள் சினிமா பார்த்தி ருக்கிறோம், பாடல்கள் கேட்டு ரசித்திருக்கிறோம், ஆனால் இந்தப் படத்தில் பாடல்கள், பின்னணி இசை, திடீரென்று ஓர் ஆச்சரியத்தை, ஒரு வியப்பை, புதுவித இசையை அனுபவிக்க வைத்தது. அது மட்டும் இல்லாமல் அந்தத் திரையரங்கில் இருக்கக்கூடிய எல்லா ஒலிபெருக்கிகளும் (ஸ்பீக்கரும்) வேலை செஞ்சது மாதிரி இருந்தது. இங்க இருந்து ஒலி வருது, அந்தப் பக்கம் இருந்து ஒரு சத்தம் வருது, அந்தச்சத்தம் அப்படியே இந்தப் பக்கம் மாறுது. தியேட்டரில் இதுநாள் வரையிலும் இப்படியான ஒரு இசையை நாங்கள் உணர்ந்ததே இல்லை. இந்த ரங்கீலா படத்துடைய இசைதான் புதுவித உணர்வை ஊட்டியது. நான் ஒரு நான்கு ஐந்து முறைக்கு மேல் அந்தப் படத்தைப் போய் பார்த்தேன். என் நண்பர்களை அழைத்துசென்று போய்ப் பார்த்தேன், என் குடும்பத்தில் உள்ளவர்களை அழைத்துச் சென்று போய்ப் பார்த்தேன். அதை ஒரு உணர்வுபூர்வமா அனுபவித்து நான் வியந்து பார்த்த ஒரு படம். ’’ என்று சொல்லி அந்த ஓட்டுநர் என்னை மெய் சிலிர்க்க வைத்தார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த முதல் படமே மாபெரும் வெற்றி பெற்ற படம். அதற்குக் காரணம் அவருடைய இசைதான். மக்கள் தொடர்ச்சியாகக் கேட்டுக்கொண்டிருந்த இசை வடிவத்தில் இருந்து சில மாற்றங்கள் செய்து அவருக்கென்று ஒரு தனித்த பானியை உருவாக்கிப் புது இசை வடிவத்தை உருவாக்கிக் கொடுத்ததுதான் காரணம். அதைத்தொடர்ந்து தமிழ் திரையுலக இரசிகர்கள் மட்டும் இல்லாமல் இந்திய மற்றும் உலகளாவிய ரசிகர்களையும் கவர்ந்து, ஆஸ்கார் விருது பெறக்கூடிய அளவிற்கு தன்னை உயர்த்தி ஆஸ்கார் விருதும் பெற்றார். குறிப்பாக ‘ஸ்லம்டாக் மில்லியனர்’ படம் மட்டும்தான் ஆஸ்கார் விருதுக்கு தேர்வாகி விருது பெற்றது என சிலர் நினைக்கக்கூடும். அவர் இசையமைத்த பல படங்கள் ஆஸ்கர் விருது பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.‘கோல்டன் குளோபல் அவார்டு’ போன்ற விருதுகள் கிடைத்திருக்கின்றன. வெளி நாட்டில் இருக்கக்கூடிய திரைத்துறை சார்ந்தவர்களும், மக்களும் அவருடைய இசையின் தரத்தை புரிந்து இருந்தனர். அது மட்டுமின்றி இவர் இசையமைத்த படம் எப்போது வெளியாகும் என்ற ஆவலுடன் காத்திருந்திருக்கிறார்கள். உலக அளவில் இருக்கக்கூடிய இசைக் கலைஞர்களும் இவருடைய இசை பற்றி மிக உயர்வான மதிப்பீடுகளை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் . பாம்பே ட்ரீம்ஸ் என்கின்ற மிகப்பெரிய நாடகம் ஒரு “லைவ் டிராமா” Andrew Lloyd Webber மூலமாக ஏ. ஆர். ரஹ்மானுக்கு சர்வதேச அளவிலான இசையமைக்கின்ற வாய்ப்பு கிடைத்தது. ஏ. ஆர். ரகுமான் அவர்கள் தான் இந்தியாவிலேயே முதல் முதல்லில் சர்வதேச அளவில் இசையமைக்க கூடிய வாய்ப்பைப் பெற்ற ஒருவர் என்று எண்ணுகிறேன். அந்தச் சமயத்தில்தான் ராம் கோபால் வர்மா அவர்கள் சொல்லக்கூடிய நிகழ்வுகள் நடந்தன. மும்பையில் ஏ.ஆர் ரகுமான் அவர்களுடைய இசைப் பதிவு மிகப் பரபரப்பாக நிகழ்ந்துகொண்டிருந்த காலம் அது. இயக்குநர் சுபாஷ் காய் மும்பையில் ஒரு மிகப்பெரிய இயக்குநர், சுபாஷ்காய், ஏ.ஆர். ரஹ்மான் ஆகியோரோடு நானும் காரில் செல்லும்போது சுபாஷ்காயைப் பார்த்தவுடன் சாலைப் போக்குவரத்து காவலர்கள், சாலையின் போக்குவரத்து நெரிசலைச் சரி செய்து மரியாதை உடன் வழியனுப்பி வைப்பதினை நேரில் பார்த்து இருக்கிறேன். இயக்குநர் சுபாஷ் காய் சிறந்த பண்பாளர், நாங்கள் போய்த் தங்கும்போது எங்களைச் சிறப்பாகக் கவனிப்பார். நாங்கள் இரண்டு மூன்று நாள் தங்கி அங்கே பாடல்பதிவுகள் செய்வோம், அப்படிப்பட்ட ஒரு பிரம்மாண்ட இயக்குநர் சென்னைக்கு வந்து ஏ.ஆர். ரஹ்மானின் ஒலிப்பதிவுக்கூடத்திற்கு வந்து காத்திருந்திருக்கிறார். பெரும்பான்மையாக இசைப்பதிவு இரவில்தான் நடைபெறும். ஒருமுறை மேல் தளத்தில் இருக்கும் இசைச் கூடத்தில் இசைப் பணி நடந்துகொண்டு இருந்தது. அப்பொழுது மணி சுமார் அதிகாலை மூன்று மணி இருக்கும். அப்போது இயக்குநர் சுபாஷ் காய் ரொம்பசோர்வாகிக் கீழே இருக்கும் இசைச் கூடத்தில் திவான் ஒன்றில் படுத்துவிட்டார். இதை நாங்கள் கவனிக்கவில்லை,. மும்பையில் இருந்து வந்த ஒரு பத்திரிக்கையாளர் இவ்வளவு பெரிய இயக்குநரை ஏ.ஆர். ரஹ்மான் இசைச் கூடத்தில் படுக்கவைத்துவிட்டார்’ என இச்செய்தியை மும்பை பத்திரிக்கையில் பெரிதாக்கிவிட்டார். இயக்குநர் சுபாஷ் காய் இதனை பெரிதாகப் பொருட்படுத்தாமல் இயல்பாக எடுத்துக் கொண்டார். காரணம் வழக்கத்திற்கு மாறாக இரவில் பாடல் பதிவு நடைபெறுவதால் சில சமயங்களில் அசௌகரியம் ஏற்படும், இறுதியில் பாடல் நல்ல தரத்துடன் கையில் கிடைக்கும் என்கின்ற நம்பிக்கையில் இயக்குநர்கள் இதனைப் பெரிதாகப் பொருட்படுத்த மாட்டார்கள். ஒரே நாளில் சென்னையில் இருந்து மும்பைக்கு இரண்டு முறைக்கு மேல் பயணம் செய்ததை இன்று வரை மறக்க முடியாது அவ்வளவு பிஸியாக வேலையை நடந்து கொண்டிருந்ததை எண்ணிப் பார்க்கும்போது பிரமிப்பாக உள்ளது ’முதல்வன்’ படத்தோட படப்பிடிப்பு தென்காசியில் நடந்தது, காலையில் தொழுகையை முடித்துவிட்டு, அங்கு “சைவ வெள்ளாளர்” குடிசை போட்ட சிறு ஹோட்டல் இருந்தது அந்தக் கடையில் நானும் ரஹ்மான் சாரும்,சாமித் துரையும் சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு பையன் தூக்குச் சட்டியில் தேநீர் வாங்குவதற்காக அங்கு வந்தான். ஏ.ஆர். ரஹ்மானை பார்த்துவிட்டான். உணவு முடித்து நாங்கள் எழுந்தோம். அந்தக் கடைக்காரருக்கு ஏ.ஆர். ரஹ்மானைத் தெரியவில்லை “தம்பி சாப்பிட்ட இலையை எடுத்து குப்பையில் போடுங்கள்’’ என்றார். எதார்த்தமாக வாடிக்கையாளர்களிடம் சொல்வதுபோல் சொன்னதும் நாங்கள் இலையை எடுத்துக் குப்பையில் போட்டுவிட்டு கை கழுவிட்டு கடைக்கு வெளியே வந்து பார்த்தால் அந்தப் பையன் ஊரையே கூட்டிக்கொண்டு வந்து கடை வாசலில் நிற்க வைத்திருந்தான். ரகுமான் சார் எந்த இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொண்டவர் அல்ல. நாங்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சென்னை சிட்டி சென்டர் எதிரில் உள்ள தஸ்தகீர்ஷாப் தர்காவிற்கு ஜும்மா தொழுகைக்காகப் போவது வழக்கமாக இருந்தது. சீக்கிரம் போய்விட்டால் அந்த மசூதிக்குள் இருந்து தொழுகைக்கான இடம் கிடைக்கும், ஒரு சில நேரம் தாமதமாக போனால் வெளிப்புறம் ஒரு ஓரமாக இடம் கிடைத்து தொழுகை செய்கின்ற நிலை ஏற்பட்டது அந்த நேரத்தில் இரண்டு சிறுவர்கள் எங்கள் இருவரையும் பார்த்து அவர்களுக்குள் பேசிச் சிரித்துக் கொண்டார்கள். அதில் ஒரு சிறுவன் என்னிடம் வந்து “அண்ணே இவரைப் போய் ஏ. ஆர்.ரஹ்மான்னு சொல்றாணே.” அப்படின்னு சொல்லிவிட்டு அந்தச் சிறுவன் சிரித்தான். இதனை ஏ.ஆர். ரஹ்மானும் கவனித்துக் கீழே குனிந்துகொண்டார். இப்படி மிக எளிமையான வாழ்க்கையைக் கொண்டவர்தான் ஏ.ஆர்.ரகுமான். திரைத்துறையில் முதலில் ஓர் இயக்குநர் ஓர் இசையமைப்பாளரிடம் வந்து கதை மற்றும் பாடலுக்கான சூழலைச் சொல்வார். அந்தச் சூழலுக்கு ஏற்ப பாடல் இந்த மாதிரியாக வேண்டும் , அந்த மாதிரி இருக்க வேண்டும் என்று இருவரும் கலந்துரையாடிக் கொள்வார்கள். சில நேரங்களில் முன்பு வெளியான பாடல்களை எடுத்துக்காட்டி இந்த மாதிரியாக வேண்டுமென்று கூறுவது வழக்கம். அதனை இசையமைப்பாளர் உள்வாங்கித் தன்னுடைய கற்பனையை இசையின் வடிவத்தில் மெட்டாக வடிவமைத்து அதனை இயக்குநரிடம் வாசித்து அல்லது பாடிக் காண்பிப்பார். அந்த மெட்டு அந்த இயக்குநருக்குப் பிடிக்கும் பட்சத்தில் பாடல் ஆசிரியரிடம் கொடுத்து அந்த மெட்டுக்கு ஏற்பகதைச் சூழலுக்குத் தகுந்தவாறு பாடலை எழுதி வாங்கிப் பாடகர்களை வைத்துப் பாடி பாடல் பதிவு செய்வார்கள். இந்த முறை பொதுவாக எல்லா மொழிகளிலும் நடக்கக்கூடிய ஒன்றுதான். ஒரு மெட்டு நன்றாக இருக்கிறது என்று முடிவு செய்த பிறகுதான் அந்த இசையமைப்பாளர் தன் கற்பனைக் கருவில் இருந்து உருவான அந்த இசைக்கு ஒரு வடிவத்தை அளித்து அதிலிருந்து இசைக் கலைஞர்களிடம் அதைக் கொடுத்து இந்தப் பாடலுக்கு இந்த மாதிரியான இசைக்கருவிகளின் ஒலியைச் சேர்க்கலாம் என்றும், ஒரு பாடகரிடம் அளித்து ’’இதை நீங்கள் இப்படிப் பாடுங்கள், இந்த இடத்தில் ஒரு கமகம் கொடுங்கள், இந்த இடத்தில் ஒரு ‘ப்ரிக்கா’ கொடுங்கள், இந்த இடத்தில் பாடல் ஹை பீச் போகவேண்டும், இங்க கொஞ்சம் ‘லோ பிச்’ வரவேண்டும்’ என்றெல்லாம் அந்த இசையமைப்பாளர்தான் சொல்வார். பாட வரும் பாடகர்களும் வாசிக்க வரும் இசைக் கலைஞர்களும் அவர்களுடைய சில சிந்தனைகளை இசையமைப்பாளரிடம் தெரிவிப்பார்கள் அப்பொழுது அந்தக் கற்பனை அந்தப் பாடலுக்கு மெருகேட்டக்கூடிய வகையில் இருந்தால் சில நேரத்தில் அதைப் பயன்படுத்துவார். இப்படி ஒரு பாடலுக்கான எல்லாச் சிந்தனைகளும் இசையமைப்பாளரின் எண்ணத்தில்தான் உருவாகும். ஒரு பாடலை உருவாக்கும்போது ஏ.ஆர். ரஹ்மான் ‘ரிதம் (Drums) சவுண்ட்’ எப்படி இருக்க வேண்டும் ‘இன்ஸ்ட்ருமென்ட் சவுண்ட்’ எப்படி இருக்க வேண்டும், ஒவ்வொரு கருவிகளின் ஒலி அளவு எவ்வளவு இருக்க வேண்டும் என்பதை மிகத் துல்லியமாகக் கணிப்பார். ஒரு பாடலை மிக வித்தியாசமாக காண்பிப்பது அதன் ‘ரிதம்’ பகுதிதான். இதை .ஏ ஆர். ரஹ்மானே ப்ரோக்ராம் செய்வார். அதற்குப் பிறகு ‘லைவ் சவுண்ட்’, ‘அடிஷனல் ப்ரோக்ராமிங்’ இது எல்லாம் கை தேர்ந்த இசை வல்லுநர்களால் மெருகேற்றப்படும், அதற்கான சம்பளமாகப் பெருந்தொகை அவர்களுக்கு அளிக்கப்படும். ஏ.ஆர். ரஹ்மான் ‘கோரஸ்’ எடுக்கிற விதமே ஒரு வித்தியாசமாக, புது அனுபவமாக இருக்கும். ‘கோரஸ் பார்ட்ஸ்’ செய்வதற்கு மிகவும் அனுபவம் வாய்ந்த இசை வல்லுநர்கள்மும்பையில் இருந்து வந்து ‘வாய்ஸ் லேயர்’ செய்வார்கள். ‘பைனல் அவுட்புட்’ கேட்கும் பொழுது மிகவும் வித்தியாசமாக புதுமையாக இருக்கும். ஒரு பாடலின் வெற்றிக்கு இன்னொரு முக்கியமான நபர் யார் என்றால் அதன் பாடல் ஆசிரியர், இசையமைப்பாளர் கொடுக்கின்ற மெட்டை உள்வாங்கி இயக்குநர் சொல்கின்ற சூழலை உள்வாங்கி அதற்கு ஏற்ப வார்த்தைகளை எழுதித் தருகிற ஆற்றல் பெற்றவர்கள் பாடல் ஆசிரியர்கள். ஒரு பாடலின் ராயல்டி என்பது ஐ. பி. ஆர். எஸ். நிறுவனம் மூலமாக இசையமைப்பாளருக்கும் பாடல்ஆசிரியருக்கும் அதன் ராயல்டி வழங்கப்பட்டு வருகிறது. பாடகர்களுக்கு கூட காப்புரிமைத் தொகை கிடையாது. காரணம் பாடலை உருவாக்கியவர்கள் இசையமைப்பாளரும் பாடலாசிரியர் மட்டுமே என்ற அடிப்படையில் பாடகர்களுக்கு இந்த ராயல்டி இல்லை என்பது வருத்தமான விஷயமே. ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களுடைய பாடல் இசையமைப்பு (Composing) பற்றி முதல்முறையாகப் பகிர்கிறேன் அவர் இசையமைத்து வெற்றி பெற்ற ’சூப்பர் டூப்பர் ஹிட்ஸ்’ பாடல்கள் பல சென்னை ‘ஈ சி ஆர் நெமிலியில் உள்ள ஏ ஆர். ரஹ்மான் அவர் வீட்டில் கம்போஸ் செய்யப்பட்டவை.. முதலில் குமார் என்ற உதவியாளர் மகாபலிபுரம் சென்று மீன் மற்றும் கறி வாங்கி எங்கள் அனைவருக்கும் சமைத்து வைத்திருப்பார். சாமிதுரை அதன் பின்பு கிளம்புவார். அவர் இசையமைக்க தேவையான இசைக் கருவிகள் மற்றும் கணினி போன்றவற்றையெல்லாம் எடுத்துச் சென்று அங்கு ஒரு கம்போசிங்கிற்குத் தேவையான இசைக்கூடமாக எல்லாப் பொருட்களையும் ஆயத்தப்படுத்துவார். அதன் பிறகு ஏ. ஆர். ரகுமான் அவர்களும் சிவக்குமார், நோயல் ஜேம்ஸ் மற்றும் நானும் செல்வோம். இயக்குநர் சொன்ன சூழலுக்கு ஏற்ப நான்கு நிமிடப் பாடலுக்குக் கிட்டத்தட்ட 20 நிமிடம் முதல் 30 நிமிடம் வரை இருக்கும் ட்யூனைக் கம்போஸ் செய்து ஸ்டூடியோவிற்கு வந்தவுடன் அதை எடிட் செய்து, இந்த நீளமான டியூனில் எது பல்லவி, எது சரணம் என்று முடிவு எடுத்து, இயக்குநர்களிடம் காண்பிப்போம். இப்படிக் கம்போஸ் செய்யும் முறை நான் அவரிடம் இருந்த போது நடைபெற்றது. இதில் சில சுவாரசியமான நிகழ்வுகள் உண்டு. அதாவது Track 1 மணிரத்னம் சாருக்கு, Track 3 சங்கர் சாருக்கு, Track 6 கதிர்சாருக்கு என்று ஏ.ஆர் ரஹ்மான் ஒரு துண்டுச் சீட்டில் எழுதிக் கொடுத்துவிடுவார். அதை நாங்கள் சரியாக அந்த இயக்குநரிடம் ஒரு ஹெட் போனில் Play செய்து காண்பிப்போம் உதாரணத்திற்கு இயக்குநர் பிரவீன் காந்திக்கு Track 5 போட்டுக் காட்டுவோம், அவர் அந்த மெட்டைக் கேட்டுக்கொண்டே இருப்பார். அப்படியே அவர்கள் அடுத்த மெட்டையும் சேர்த்துக் கேட்க ஆரம்பித்து விடுவார். எட்டாவது மெட்டைக் கேட்டுவிட்டு ‘இது யாருக்குப் போட்டு இருக்காங்க?’ என்று எங்களிடம் கேட்பார். அது வேறு ஒரு இயக்குநருக்குப் போட்ட மெட்டாக இருக்கும். ‘ரொம்ப நல்லா இருக்கு இதை எனக்குக் கொடுங்க ரகுமான் ’ என்ற மாதிரி கேட்கக்கூடிய அந்த அனுபவங்களும் உண்டு. அந்த மெட்டு முடிவானதும் பிறகு பாடலாசிரியரிடம் போகும். பாடலாசிரியர் பாடல் வரிகள் கொடுத்தவுடன் பாடகருடன் பாடல் பதிவாகும். இந்த மாதிரியான அனுபவங்களை எல்லாம் நான் ஏ,ஆர் ரஹ்மானிடமிருந்து பெற்றதின் அடிப்படையில்தான் ‘வம்சம்’ என்கின்ற படத்துக்கு இசையமைத்தேன். இயக்குநர் பாண்டியராஜ் அவர்கள் அந்த கிராமத்துக்கே என்ன அழைத்துச் சென்று அங்கு இருக்கக்கூடிய இசைக்கருவிகள், அங்கு உள்ள கலாச்சார முறைகள், அங்கு உள்ள மக்களின் வாழ்வியல் முறைகளை அறியும் வாய்ப்பை ஏற்படுத்தித் தந்தார். நான் அங்கேயே தங்கி அந்த கிராமத்து மக்கள் பயன்படுத்தக்கூடிய இசைக் கருவிகளில் இருக்கக்கூடிய இசையைப் பதிவு செய்து எடுத்து வந்து இசையமைத்தேன். ‘வம்சம்’ படத்தில் இடம் பெற்ற அனைத்துப் பாடல்களும் எனக்கு நல்ல வரவேற்பை ஏற்படுத்தித் தந்தன. அதற்குக் காரணம் ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களிடம் இருந்து நான் கற்றுக்கொண்ட பாடங்கள்தான். அவையே இந்த அளவிற்கு ஒரு இசையமைப்பாளராக என்னைமாற்றி உங்கள் முன் கொண்டு வரச் செய்தன. ஆர்.பாலகிருஷ்ணன் IAS அவர்களின் “நாட்டுக்கு குரல்” என்ற Album கிராமிய பாணியில் “திருக்குறளுக்கு” இசையமைத்த அனுபவமும், ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கைக்காக கவிஞர் பழநி பாரதியின் வரிகளில் Official Song கிற்கு இசையமைத்ததும் சமூகம், இலக்கியம் சார்ந்த நிகழ்வுகளில் அதற்கான என் உணர்வை இசை வடிவமாக பதிவு செய்ததும், பெரிய நிறுவனங்களின் 200க்கும் மேற்பட்ட AD ஜிங்கிள்ஸ் இசை அமைத்தது, “தி ஹிந்து தமிழ்” பத்திரிக்கையில் “தரணி ஆளும் கணினி இசை” என்ற நெடுந்தொடரை எழுதி அதை நூல்ஆகவெளியிட்டதும் மட்டுமல்லாமல், கிட்டத்தட்ட 20 படங்களுக்கு மேல் இசையமைத்து உள்ளேன் அதில் குறிப்பாக வம்சம், ஸ்ட்ராபெரி, கதம் கதம், இது கதை அல்ல நிஜம், எத்தன், வட்டகரா, ஞானக்கிறுக்கன் போன்ற படங்கள் இசையமைப்பாளராக நல்ல பெயரைக் கொடுத்தன. சில படங்கள் வெற்றி அடையவில்லை, வெளிவர இருக்கும் பயாஸ்கோப், TheBed,போன்ற படங்களை எதிர்பார்த்து இருக்கின்றேன் மேலும் புதிய வித்தியாசமான கதைக்களம் இருந்தால் இசையமைக்கக் காத்திருக்கின்றேன். எப்போதும் என் இசைக்கலையில் நிறைந்திருந்து வழிநடத்தும் ஆசிரியராக எனக்கு ஏ.ஆர்.ரஹ்மான் அவர்களே இருக்கிறார். அவர் மீது அவதூறு செய்பவர்கள் ஒரு மேதையின் ஒளியைக் காண இயலாத இருட்டில் நின்றுகொண்டிருக்கிறார்கள். துவேஷத்தால் மகத்தான கலைஞர்களை ஒருபோதும் அழிக்க இயலாது. https://uyirmmai.com/article/uyirmmai-magazine-may-2024-taj-noor-aticle-01/
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
உலகக்கிண்ணப் போட்டிகள் அமெரிக்க நேரப்படி 01 ஜூன் 19:30 க்கு ஆரம்பிக்கவுள்ளன. இன்று சனி (01 ஜூன்) ஒரு போட்டியும் நாளை ஞாயிறு இன்னொரு போட்டியும் நடைபெறவுள்ளன. கீழே உள்ளவை பிரித்தானிய நேரப்படி உள்ளன! யாழ் கள போட்டியாளர்களின் கணிப்புகள் கீழே: 1) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 2: 1:30 AM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் கனடா USA எதிர் CAN 19 பேர் ஐக்கிய அமெரிக்கா அணி வெல்வதாகவும் 04 பேர் கனடா அணி வெல்வதாகவும் கணித்துள்ளனர். ஐக்கிய அமெரிக்கா ஈழப்பிரியன் வீரப் பையன்26 நிலாமதி குமாரசாமி தியா தமிழ் சிறி நுணாவிலான் பிரபா USA வாதவூரான் ஏராளன் கிருபன் ரசோதரன் அஹஸ்தியன் கந்தப்பு எப்போதும் தமிழன் நந்தன் நீர்வேலியான் கல்யாணி கோஷான் சே கனடா சுவி புலவர் P.S.பிரபா வாத்தியார் முதலாவது போட்டியில் யார் புள்ளிகள் எடுப்பார்கள்? 2) முதல் சுற்று குழு C : ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பபுவா நியூகினி WI எதிர் PNG எல்லோருமே மேற்கிந்தியத் தீவுகள் அணி வெல்லும் எனக் கணித்துள்ளனர்! எல்லோருக்கும் புள்ளிகள் கிடைக்குமா அல்லது முட்டையா!
-
திருக்கோணேச்சர புனிதத்தையும் அபிவிருத்தியையும் பேணுவதில் கிழக்கு மாகாண ஆளுநர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் - ஆறுதிருமுருகன் கோரிக்கை
திருக்கோணேச்சர புனிதத்தையும் அபிவிருத்தியையும் பேணுவதில் கிழக்கு மாகாண ஆளுநர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் திருக்கோணேச்சர புனிதத்தையும் அபிவிருத்தியையும் பேணுவதில் கிழக்கு மாகாண ஆளுநர் உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அகில இலங்கை இந்து மாமன்ற உப தலைவர் கலாநிதி ஆறுதிருமுருகன் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார். கிழக்கு மாகாண ஆளுநருக்கு எழுதியுள்ள கடித்த்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது திருக்கோணேச்சர புனிதத்தையும் அபிவிருத்தியையும் பேணுவதில் கிழக்கு மாகாண ஆளுநர் உடன் அக்கறை எடுத்தல் வேண்டும் . சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த சைவத் தமிழர்களின் தலையாய கோவிலாகிய திருக்கோணேச்சரத்தை பாதுகாப்பதில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் உடனடி நடவடிக்கை எடுத்தல் வேண்டும். திருக்கோணேச்சரத்துக்கு செல்லும் பாதையில் இரு மருங்கிலும் அமைக்கப்பட்டுள்ள பெட்டிக் கடைகளை அவ்விடத்தில் இருந்து நீக்கி அவர்களுக்கு மாற்று ஒழுங்கு செய்யவும். கோணேச்சரத்துக்கு செல்லும் பக்தர்களின் புனித வழிபாட்டுக்கு உரிய சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். திருக்கோணேச்சர இடையூறுகளைச் திருப்பணிக்கு தொல்லியல் திணைக்களம் பல்வேறு செய்து வந்துள்ளது. இவ்விடையூறுகளை நிறுத்தி திருக்கோணேச்சரத்தின் பாரிய திருப்பணிகளை முன்னெடுப்பதற்கு ஏற்பாடு செய்து உதவுங்கள். திருக்கோணேச்சர புனித தீர்த்தமாகிய பாபநாசம் தீர்த்தக்கரையை புனருத்தாரணம் செய்து பொதுமக்கள் அவ்விடத்தில் தமது கடமைகளைச் செய்வதற்கு ஏற்பாடு செய்யுங்கள். திருக்கேதீச்சர ஆலயத்தை இந்திய அரசு கருங்கற் கோயிலாக புனர்நிர்மாணம் செய்தது போல் திருக்கோணேச்சரத்தையும் அழகாக நிர்மானிப்பதற்கு இந்திய அரசிடம் வேண்டுதல் விடுவிக்கப்பட்டது. அவர்கள் அக்கறையாக இருப்பதாக தகவல்கள் திரட்டினார்கள் ஆனால் இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேற்படி விடயங்கள் தொடர்பாக மதிப்பார்ந்த ஆளுநர் துரித நடவடிக்கை எடுத்து உதவுமாறு நன்றியோடு வேண்டுகிறோம் என்றுள்ளது. https://akkinikkunchu.com/?p=278472
-
இறுதி கட்டத் தேர்தலில் வெல்லப் போவது யார்?
இறுதி கட்டத் தேர்தலில் வெல்லப் போவது யார்? vivekanandhanMay 31, 2024 19:42PM நாடாளுமன்றத் தேர்தலின் இறுதி கட்டத்தில் இந்தியா நிற்கிறது. 57 தொகுதிகளில் ஏழாம் மற்றும் இறுதி கட்டத் தேர்தல் நாளை (ஜூன் 1) நடைபெற உள்ள நிலையில், பிரதமர் மோடி கன்னியாகுமரிக்கு வந்து தியானம் செய்து கொண்டிருக்கிறார். தேர்தல் பிரச்சாரம் நிறைவுற்று தேர்தல் விதிமுறைகள் நடைமுறையில் இருக்கும் காலக்கட்டத்தில் அவர் செய்து கொண்டிருப்பது மறைமுகமான தேர்தல் பிரச்சாரம் என்ற விமர்சனத்தை எதிர்கட்சிகள் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஏழாம் கட்டத் தேர்தலைப் பொறுத்தவரை பஞ்சாப், ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய இரண்டு மாநிலங்களில் அனைத்து தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது. எனவே பஞ்சாபில் மொத்தமுள்ள 13 தொகுதிகளிலும், ஹிமாச்சலப் பிரதேசத்தில் மொத்தமுள்ள 4 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது. சண்டிகர் ஒரே தொகுதியாக இருப்பதால் அங்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. மற்ற மாநிலங்களில் ஏற்கனவே நடந்து முடிந்த தொகுதிகள் போக மீதமுள்ள தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. ஜார்க்கண்ட் மாநிலத்தில் 3 தொகுதிகளிலும், ஒடிசா மாநிலத்தில் 6 தொகுதிகளிலும், உத்திரப் பிரதேசத்தில் 13 தொகுதிகளிலும், பீகாரில் 8 தொகுதிகளிலும், மேற்கு வங்கத்தில் 9 தொகுதிகளிலும் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் ஆறு கட்டத் தேர்தல்களின் முடிவுகளிலேயே 278 தொகுதிகளை வென்று ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையைப் பெற்றுவிட்டது பாஜக. ஆனால் இந்த முறை அப்படி நடப்பதற்கு வாய்ப்பு இல்லை என்கிறார்கள் 2024 தேர்தல் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டவர்கள். எனவே ஏழாம் கட்டத் தேர்தல்தான் இந்தியாவை ஆளப் போவது யார் என்பதை முடிவு செய்யப் போகிறது என்பதே அவர்களின் கருத்தாக இருக்கிறது. ஏழாவது கட்டத் தேர்தல் நடைபெறுகிற தொகுதிகளின் முடிவுகள் கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவிற்கு சாதகமில்லாத முடிவுகளைத் தந்ததாகப் பார்க்கப்படுகிறது. இந்த 57 தொகுதிகளைப் பொறுத்தவரை, கடந்த 2019 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் இணைந்து 30 தொகுதிகளைக் கைப்பற்றின. பாஜக தனியாக 25 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றியது. இந்தியா கூட்டணியில் இருக்கிற கட்சிகள் 21 தொகுதிகளைக் கைப்பற்றின. ஒடிசாவில் பிஜூ ஜனதா தளம் கட்சி 4 தொகுதிகளையும், பகுஜன் சமாஜ் கட்சி உத்திரப் பிரதேசத்தில் 2 தொகுதிகளையும் கைப்பற்றியது. பஞ்சாப் பஞ்சாப் மாநிலத்தைப் பொறுத்தவரை ஆம் ஆத்மி கட்சி மற்றும் காங்கிரஸ் கட்சி இரண்டு கட்சிகளும் தனித்தனியாக போட்டியிடுகின்றன. அங்கு போட்டியே ஆம் ஆத்மிக்கும் காங்கிரசுக்கும் இடையில் தான். கடந்த முறை பாஜக கூட்டணியில் இருந்த சிரோமணி அகாலி தளம் இந்த முறை பாஜக கூட்டணியிலிருந்து விலகி விட்டதால் பாஜகவால் பஞ்சாபில் ஒரு தொகுதி கூட வெல்ல முடியாது என்பதே பஞ்சாப் அரசியல் வட்டாரங்கள் சொல்லும் செய்தியாக இருக்கிறது. எனவே 57 தொகுதிகளில் பஞ்சாபைச் சேர்ந்த 13 தொகுதிகளை மொத்தமாக பாஜக இழக்கும் வாய்ப்புகளே அதிகம். மீதமுள்ள 44 தொகுதிகளைத் தான் பாஜக நம்பியுள்ளது. உத்திரப் பிரதேசம் கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் 13 தொகுதிகளுக்கான தேர்தல் நடைபெறுகிறது. குறிப்பாக பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியிலும் தேர்தல் நடைபெறுகிறது. உத்திரப் பிரதேசத்தில் பாஜக வலுவாக இருப்பதாகக் கருதப்பட்டாலும் இந்த முறை சமாஜ்வாதி மற்றும் காங்கிரஸ் கூட்டணி பாஜகவிற்கு கடும் போட்டியைக் கொடுப்பதாகப் பார்க்கப்படுகிறது. ஆனால் பாஜகவின் கூட்டணிக் கட்சிகளாக இருக்கக் கூடிய சிறிய கட்சிகளான அப்னா தள், நிஷாத் கட்சி, SBSP ஆகிய கட்சிகளும் கிழக்கு உத்திரப் பிரதேசத்தில் குறிப்பிடத்தக்க வலுவினைக் கொண்டிருக்கின்றன. இது இந்தியா கூட்டணிக்கு சில பின்னடைவுகளை உருவாக்கும். சமாஜ்வாதி கட்சி தனது வழக்கமான அடையாளமான யாதவ்-முஸ்லீம் கட்சி என்ற அடையாளத்தை போக்கும் வண்ணம், சோசியல் இஞ்சினியரிங் முறையில் யாதவ் தவிர்த்த மற்ற ஓ.பி.சி பிரிவைச் சேர்ந்தவர்களுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கியுள்ளது. இது ஓரளவுக்கு கிரவுண்டில் வொர்க் அவுட் ஆகும் என்று பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக ஒரு சில தொகுதிகளில் பாஜகவை வீழ்த்தினாலும் அது இந்தியா கூட்டணிக்கு முக்கியமானதாகவே பார்க்கப்படுகிறது. பீகார் பீகாரில் 8 தொகுதிகளில் தேர்தல் நடைபெறுகிறது. கடந்த முறை இந்த 8 தொகுதிகளையுமே பாஜகவே வென்றது. ஆனால் அதற்குப் பிறகு 2020 ஆம் ஆண்டு பீகாரில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இந்த 8 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கு உட்பட்ட சட்டமன்றத் தொகுதிகளின் வெற்றிகளின் அடிப்படையில் பார்த்தால், 6 நாடாளுமன்றத் தொகுதிகளில் ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட இந்தியா கூட்டணியின் கட்சிகளே அதிகமான வெற்றிகளைப் பெற்றிருக்கின்றன. மேலும் இந்த முறை தேஜஸ்வி யாதவின் பிரச்சாரம் பீகாரில் பெரிய அளவுக்கு எடுபட்டிருப்பதாக சொல்லப்படுவதால், இந்தியா கூட்டணி இந்த தொகுதிகளில் ஓரளவுக்கு வெற்றிகளைப் பெற முடியும் என்று எதிர்பார்த்திருக்கிறது. மேற்கு வங்கம் மேற்கு வங்கத்தில் தென்கிழக்குப் பகுதியில் 9 தொகுதிகளுக்கு நடைபெறும் தேர்தலில் கடந்த முறை அனைத்து தொகுதிகளையும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியே கைப்பற்றியது. திரிணாமுல் காங்கிரஸ் வலுவாக உள்ள பகுதிகளில் விரிசலை ஏற்படுத்த பல ரோடு ஷோக்களை நடத்தியிருக்கிறார் மோடி. ஏழாவது கட்டத் தேர்தலில் மற்ற மாநிலங்களில் பாஜக இழக்கும் தொகுதிகளின் எண்ணிக்கையை ஈடுகட்ட மேற்கு வங்கத்தைத்தான் குறிவைத்திருக்கிறது பாஜக. ஒடிசா ஒடிசாவில் தேர்தல் நடைபெறும் ஆறு தொகுதிகளில் 4 தொகுதிகளை பிஜூ ஜனதா தளம் கட்சியும், 2 தொகுதிகளை பாஜகவும் கைப்பற்றியது. இந்த முறை ஒடிசாவிற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பாஜக பிரச்சாரம் செய்திருப்பதால், அங்கும் தனது கணக்கை அதிகப்படுத்த முடியும் என்று பாஜக நினைக்கிறது. ஏழாவது கட்டத் தேர்தலில் பெரிய இழப்புகளை பாஜக சந்திக்கும் பட்சத்தில் மீண்டும் மோடி என்ற பாஜக கூட்டணியின் கனவு பறிபோக வாய்ப்பு இருப்பதாக அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கிறார்கள். இதனால் எப்படியாவது கடந்த முறை பெற்ற எண்ணிக்கையை மீட்டு விட வேண்டும் என்று பாஜக வேலை செய்திருக்கிறது. 2024 தேர்தலில் யார் ஆட்சி அமைக்கப் போகிறார்கள் என்பதையே ஏழாம் கட்டத் தேர்தல்தான் முடிவு செய்யப்போகிறது என்பதால் நாடு முழுதும் அரசியல் விமர்சகர்களால் உற்றுக் கவனிக்கப்படும் ஒன்றாக மாறியுள்ளது. https://minnambalam.com/political-news/who-is-going-to-win-the-final-round-of-elections/
-
தமிழரசு கட்சி விவகாரம் வழக்கு ஒத்திவைப்பு
தமிழரசு கட்சி விவகாரம் வழக்கு ஒத்திவைப்பு எஸ்.கீதபொன்கலன் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய நிர்வாகிகள் தெரிவிற்கு எதிராக,திருகோணமலை மாவட்ட நீதிமன்றம் ஏற்கனவே விதித்திருந்த கட்டாணை உத்தரவு, மீண்டும் ஜூலை19 ந் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. வழக்கு மே 31ஆம் திகதி மீண்டும் மன்றில் எடுத்துக்கொள்ளப்பட்ட வழக்கில்,எதிராளிகள் மற்றும் வழக்காளி ஆகியோருக்கிடையில் வழக்கை,சமரசமாக இருதரப்பு உடன்பாட்டுடன் முடிவுக்கு கொண்டுவர இணக்கம் காணப்பட்ட போதும்,அனைத்து எதிராளிகள் மற்றும் வழக்காளியின் உடன்பாட்டிற்கான,எழுத்து பூர்வ சமர்ப்பணங்களை மன்றிற்கு முன் வைப்பதற்கு கால அவகாசம் இரு தரப்பாலும் கோரப்பட்டது. இந்நிலையில் வழக்கு ஜூலை19 ந் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. https://www.tamilmirror.lk/திருகோணமலை/தமிழரசு-கட்சி-விவகாரம்-வழக்கு-ஒத்திவைப்பு/75-338228
-
A/L பெறுபேறுகள் இடைநிறுத்தியமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு
A/L பெறுபேறுகள் இடைநிறுத்தியமை இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு திருகோணமலை - சாஹிரா கல்லூரி மாணவிகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தம் இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு என ஐக்கிய மக்கள் சக்தியின் திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்துள்ளார். ஊடகங்களுக்கு அவர் நேற்று (31) வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், “பரீட்சை மண்டபத்தில் தமது காதுகளை மூடி பரீட்சை எழுதினார்கள் என்ற குற்றச் சாட்டின் பேரிலேயே இந்த இடைநிறுத்தம் இடம்பெற்றுள்ளது. காதுகளை மூடி பரீட்சை எழுதியமை பரீட்சை மண்டபத்தில் கவனித்திருக்க வேண்டிய விடயம். அது ஏனைய பரீட்சார்த்திகளை பாதிக்கின்ற விடயமும் அல்ல. இந்த விடயங்களை சகல தரப்பினருக்கும் தெளிவு படுத்திய பின்னரும் பெறுபேறு இடைநிறுத்தப்பட்டுள்ளமை பாரிய சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. சாஹிரா கல்லூரியின் வளர்ச்சியை சகிக்க முடியாதவர்களின் இனப் பாகுபாட்டின் வெளிப்பாடு இதுவென்பது மிகத் தெளிவாகத் தெரிகின்றது. பரீட்சை மண்டபத்தில் தீர்க்கப் பட்டிருக்க வேண்டிய இந்த விடயத்தை பெறுபேற்றை இடைநிறுத்தும் அளவுக்கு கொண்டு சென்ற பரீட்சை மேற்பார்வையாளரின் மனநிலையை இதன் மூலம் புரிந்து கொள்ள முடிகின்றது. ஒரேமொழியை பேசும் நாம் இப்படி பிள்ளைகளின் உரிமைகளில் கைவைப்பது ஆரோக்கியமானதல்ல. பிள்ளைகளினதும் பெற் றோரினதும் இன்றைய சோகமான மனநிலையை சம்பந்தப் பட்டவர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இது குறித்து இன்று பரீட்சை ஆணையாளருடன் தொடர்பு கொண்டு பேசியுள்ளேன் இந்த விடயத்தில் சகல முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளும் ஒன்று பட வேண்டும். இது ஒரு சமூகப் பிரச்சினை. கிழக்கு மாகாண முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் மற்றொரு வடிவம் இது” என்றார். R https://www.tamilmirror.lk/திருகோணமலை/A-L-பெறுபேறுகள்-இடைநிறுத்தியமை-இனப்-பாகுபாட்டின்-வெளிப்பாடு/75-338227
-
தர்மபுரம் பிரதேச மருத்துவமனையை தரமுயர்த்த நடவடிக்கை
தர்மபுரம் பிரதேச மருத்துவமனையை தரமுயர்த்த நடவடிக்கை (யோகி) கண்டாவளை விசுவடு பிரதேசத்தைச்சேர்ந்த பெருமளவு மக்கள் பயன்படுத்தும் தர்மபுரம் பிரதேச மருத்துவமனையை தரமுயர்த்தி தருமாறு மருத்துவமனையின் நலன்புரிச்சங்கம் மற்றும் பொது அமைப்புக்களின் கோரிக்கைக்கு அமைய கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அந்த மருத்துவமனைக்கு சென்று மருத்துவமனையின் நிலைமையை நேரில் பார்த்து கலந்துரையாடிருந்தார். C தரமாக விளங்கும் மருத்துவமனையை B தரத்து மாற்றி வளங்களை ஏற்படுத்தி தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதன் போது தெரிவிக்கையில், தருமபுர மருத்துவமனையில் இனிவரும் காலங்களில் குருதி பரிசோதனைகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், பாதுகாப்பு கடமைகளுக்காகவும் திடீர் விபத்துக்கள் திடீர் மரணங்கள் என்பனவத்தை உடனடி தீர்வு காண்பதற்காக மருத்துவமனை பொலிஸ் பிரிவு ஒன்றை அமைப்பதற்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட உள்ளதாகவும், தற்பொழுது மருத்துவமனையில் சமயல் பகுதியில் உரிய நேரத்தில் நோயாளர்களுக்கு உணவு வழங்கவேண்டும் என்பதற்காக சமையலாளி ஒருவரை வைக்குமாறு அதற்கான சம்பள பணத்தினை தமது சொந்தபணத்தில் வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்பவுள்ளதாகவும், C தரத்தில் உள்ளதை B தரத்துக்கு தரமுயரத்தி மக்கள் இலகுவான முறையில் சிகிச்சைகளை பெறக்கூடிய வசதிகள் அமைத்து தருவதற்கு தாம் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் இதன் போது தெரிவித்தார்.(க) https://newuthayan.com/article/தர்மபுரம்_பிரதேச_மருத்துவமனையை_தரமுயர்த்த_நடவடிக்கை
-
க.பொ.த உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் வெளியானது!
உ.த. பரீட்சையில் சாதித்த மீன் வியாபாரியின் மகள்! (மாதவன்) க.பொ.த உயர்தரப் பரீட்சையில் கலைப்பிரிவில் வஜினா பாலகிருஷ்ணன் யாழ். மாவட்ட ரீதியில் முதலாமிடத்தையும், நாடளாவிய ரீதியில் 32 இடத்தையும் பெற்றுள்ளார். க.பொ.த. உயர்தரம் (2023) பரீட்சைப் பெறுபேறுகள் இன்று மாலை வெளியாகியிருந்தன. இந்த நிலையில் யாழ். மாவட்டத்தில் முதலிடம் பெற்ற மாணவி மேலும் தெரிவித்ததாவது, எனது தந்தை ஒரு மீன் வியாபாரி. பண்டத்தரிப்பு பெண்கள் உயர்தரப் பாடசாலையில் கல்வி கற்று, 2023ஆம் ஆண்டு க.பொ.த. உயர்தரப் பரீட்சைக்கு நான் கலைப்பிரிவில் தோற்றினேன். கலைப்பிரிவில் தமிழ், நாடகவியல் மற்றும் புவியியல் ஆகிய பாடங்களுக்கு 3 ஏ சித்திகளை பெற்றேன். நான் சாந்தை கிராமத்தில் வசிக்கிறேன். எமது கிராமம் ஒரு பின்தங்கிய கிராமம். எமது கிராமத்தில் இருந்து யாழ்ப்பாண ரீதியில் சாதிக்க வேண்டும் என்பதே எனது கனவு. அதனை நிறைவேற்றியுள்ளேன். அன்றன்று கற்கின்ற விடயங்களை அன்றே வீட்டில் சென்று படிப்பதனால் கஷ்டம் இல்லாமல் இலகுவாக படிக்க முடியும். ஆசிரியர்கள் கற்பிக்கும்போது கவனத்தை சிதறவிடாமல் கற்க வேண்டும். தமிழ் பாட விரிவுரையாளராக வர வேண்டும் என்பது தான் எனது கனவு. என்னை இந்த நிலைக்கு உருவாக்கிய பெற்றோர், அதிபர், ஆசிரியர்கள் மற்றும் நண்பர்கள் அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார். மாணவியின் வெற்றியை கொண்டாடுவதற்கு அந்த ஊர் மக்கள் அனைவரும் அவரது வீட்டில் குழுமியிருந்தமை நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.(ப) https://newuthayan.com/article/யாழ்ப்பாணத்தில்_கலைத்துறையில்_சாதித்த_மீன்_வியாபாரியின் மகள்!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
பிந்திவந்த @goshan_che போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார்😀 வெற்றிக் கனியைத் தட்டிச் செல்ல வாழ்த்துக்கள்! யாழ்கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி 2024 இல் பங்குபெற்றும் போட்டியாளர்கள்: 1 ஈழப்பிரியன் 2 வீரப் பையன்26 3 சுவி 4 நிலாமதி 5 குமாரசாமி 6 தியா 7 தமிழ் சிறி 8 புலவர் 9 P.S.பிரபா 10 நுணாவிலான் 11 பிரபா USA 12 வாதவூரான் 13 ஏராளன் 14 கிருபன் 15 ரசோதரன் 16 அஹஸ்தியன் 17 கந்தப்பு 18 வாத்தியார் 19 எப்போதும் தமிழன் 20 நந்தன் 21 நீர்வேலியான் 22 கல்யாணி 23 கோஷான் சே
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் 2024 போட்டியில் பங்குபற்றுவதற்கான காலக்கெடு முடிந்துவிட்டது! இம்முறை பங்குபெற்றும் போட்டியாளர்கள்: 1 ஈழப்பிரியன் 2 வீரப் பையன்26 3 சுவி 4 நிலாமதி 5 குமாரசாமி 6 தியா 7 தமிழ் சிறி 8 புலவர் 9 P.S.பிரபா 10 நுணாவிலான் 11 பிரபா USA 12 வாதவூரான் 13 ஏராளன் 14 கிருபன் 15 ரசோதரன் 16 அஹஸ்தியன் 17 கந்தப்பு 18 வாத்தியார் 19 எப்போதும் தமிழன் 20 நந்தன் 21 நீர்வேலியான் 22 கல்யாணி எல்லோருக்கும் வெற்றிக் கனியைத் தட்ட வாழ்த்துக்கள்! @கறுப்பி பங்குபற்றவில்லை என்பதில் சின்ன வருத்தம்🙁
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போட்டியில் கலந்துகொண்ட @kalyani வெற்றிபெற வாழ்த்துக்கள்.. இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்.. 1 ஈழப்பிரியன் 2 வீரப் பையன்26 3 சுவி 4 நிலாமதி 5 குமாரசாமி 6 தியா 7 தமிழ் சிறி 8 புலவர் 9 P.S.பிரபா 10 நுணாவிலான் 11 பிரபா USA 12 வாதவூரான் 13 ஏராளன் 14 கிருபன் 15 ரசோதரன் 16 அஹஸ்தியன் 17 கந்தப்பு 18 வாத்தியார் 19 எப்போதும் தமிழன் 20 நந்தன் 21 நீர்வேலியான் 22 கல்யாணி நான் எவ்வளவோ ஆராய்ச்சி செய்து பதில்களைப் போடுவேன்! ஆனால் வென்றது கிடையாது.. கிரிக்கெட்டில் ஆதியும் அந்தமும் அறிந்த @Eppothum Thamizhan, @வீரப் பையன்26 வெல்லுவதும் அரிது! இதில் அவமானப்பட ஒன்றுமில்லை.. வெற்றி என்பது நாணயத்தை சுழட்டுவது போன்றதுதான்... 😀 எனது தெரிவுகளின்படி இந்தியாவும் பாகிஸ்தானும் நன்றாகச் செய்தால் எனக்கே வெற்றி!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போட்டியில் வெல்லுவதற்கு கிரிக்கெட் பற்றிய எந்த அறிவும் தேவை இல்லை என்றுதான் இதுவரை நடந்த போட்டிகள் காட்டுகின்றன!🤪
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போட்டியில் கலந்துகொண்ட @நந்தன், @நீர்வேலியான் வெற்றிபெற வாழ்த்துக்கள்! 21 பேர் இதுவரை கலந்துகொண்டுள்ளனர்! இன்னும் மூன்று மணி நேரமே உள்ளது. எவராவது கலந்துகொள்ள விரும்பினால் தாமதிக்காமல் போட்டியில் குதிக்கலாம்! 1 ஈழப்பிரியன் 2 வீரப் பையன்26 3 சுவி 4 நிலாமதி 5 குமாரசாமி 6 தியா 7 தமிழ் சிறி 8 புலவர் 9 P.S.பிரபா 10 நுணாவிலான் 11 பிரபா USA 12 வாதவூரான் 13 ஏராளன் 14 கிருபன் 15 ரசோதரன் 16 அஹஸ்தியன் 17 கந்தப்பு 18 வாத்தியார் 19 எப்போதும் தமிழன் 20 நந்தன் 21 நீர்வேலியான்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போட்டியில் கலந்துகொண்ட @Eppothum Thamizhan வெற்றிபெற வாழ்த்துக்கள். @நந்தன், கூகிள் சீற்றை பிரதிசெய்து முயற்சி செய்யுங்கள். இன்னும் 5 மணி நேரம் உள்ளது! இதுவரை போட்டியில் பங்குபற்றியவர்கள்: 1 ஈழப்பிரியன் 2 வீரப் பையன்26 3 சுவி 4 நிலாமதி 5 குமாரசாமி 6 தியா 7 தமிழ் சிறி 8 புலவர் 9 P.S.பிரபா 10 நுணாவிலான் 11 பிரபா USA 12 வாதவூரான் 13 ஏராளன் 14 கிருபன் 15 ரசோதரன் 16 அஹஸ்தியன் 17 கந்தப்பு 18 வாத்தியார் 19 எப்போதும் தமிழன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@நந்தன், இணைப்பு போதாது. இணைப்பில் உள்ள ஷீற் முழுமையாக நிரப்பப்படவில்லை. பிறரால் மாற்றப்படவும் கூடும். எனவே, பதில்களை முழுமையாக நிரப்பி ஒட்டவேண்டும்.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போட்டியில் கலந்துகொண்ட @Ahasthiyan, @கந்தப்பு, @வாத்தியார் அண்ணா வெற்றிபெற வாழ்த்துக்கள். இதுவரை போட்டியில் கலந்துகொண்டோர்.. 1 ஈழப்பிரியன் 2 வீரப் பையன்26 3 சுவி 4 நிலாமதி 5 குமாரசாமி 6 தியா 7 தமிழ் சிறி 8 புலவர் 9 P.S.பிரபா 10 நுணாவிலான் 11 பிரபா USA 12 வாதவூரான் 13 ஏராளன் 14 கிருபன் 15 ரசோதரன் 16 அஹஸ்தியன் 17 கந்தப்பு 18 வாத்தியார் இன்னும் 10 மணித்தியாலங்களே உள்ளது. போட்டியில் கலந்துகொள்ள விரும்புவோர் தாமதியாது பதில்களைத் தாருங்கள்.. போட்டி முடிவு திகதி வெள்ளி 31 மே 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024 கூகிள் ஷீற்றைப் பயன்படுத்தி பதில்களைப் பதிந்தால் தரவேற்ற உதவியாக இருக்கும். https://docs.google.com/spreadsheets/d/1lHvsIOJ4JmDZJ3zcOty944J-wzK0Opz-2n0AAQ5lmRs/edit?usp=sharing
-
பிரஜ்வல் ரேவண்ணா மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் கர்நாடக அரசியலில் என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?
3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள்… நாடு திரும்பிய பிரஜ்வல்: நள்ளிரவில் கைது! indhuMay 31, 2024 11:40AM பாலியல் வன்கொடுமை வழக்கில் தேடப்பட்டு வந்த பிரஜ்வல் ரேவண்ணா நள்ளிரவு பெங்களூரு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பாலியல் வன்கொடுமை வழக்கில் பிரஜ்வல் ரேவண்ணா முன்னாள் பிரதமர் தேவகவுடாவின் பேரனும், கர்நாடகா மாநிலத்தின் ஹாசன் நாடாளுமன்றத் தொகுதியின் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா மீண்டும் அதே தொகுதியில் தேர்தலில் போட்டியிட்டார். கர்நாடகா மாநிலத்தில் ஏப்ரல் 26ஆம் தேதி நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது. அப்போது பிரஜ்வல் ரேவண்ணா பல பெண்களுடன் இருக்கும் சுமார் 3 ஆயிரம் ஆபாச வீடியோக்கள் வெளியாகி கர்நாடகாவில் புயலை கிளப்பியது. வீட்டில் பணிபுரியும் பணிப்பெண், முன்னாள் பஞ்சாயத்து உறுப்பினர் உட்பட 4 பெண்கள் அளித்த புகாரின் அடிப்படையில் பிரஜ்வல் மீது பாலியல் வன்கொடுமை வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதற்கிடையில், ஏப்ரல் 26ஆம் தேதி இரவு பிரஜ்வல் ரேவண்ணா ஜெர்மனிக்கு தப்பியோடியதாக தகவல் வெளியானது. தொடர்ந்து, இந்த வழக்கு சிறப்பு புலனாய்வு காவல் பிரிவுக்கு மாற்றப்பட்டது. 2 முறை லுக் அவுட் நோட்டீஸ் அனுப்பப்பட்டும் அவர் ஆஜராகததால், ஒரு முறை புளூ கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. மேலும், அவரது பாஸ்போர்ட்டை முடக்குமாறு வெளியுறவுத்துறைக்கு கடிதம் அனுப்பப்பட்டது. இதனிடையே, பிரஜ்வல் உடனே நாடு திரும்பவேண்டும் என கர்நாடக முன்னாள் முதலமைச்சர் குமாரசாமி எச்சரிக்கை விடுத்தார். தேவகவுடாவும், ‘பிரஜ்வல் உடனே நாடு திரும்ப வேண்டும், என் பொறுமையை மேலும் சோதிக்க வேண்டாம்’ என்றும் எச்சரிக்கை விடுத்திருந்தார். இதைத்தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணா வீடியோ ஒன்றை அண்மையில் வெளியிட்டிருந்தார். அதில், “மே 31ஆம் தேதி காலை 10 மணிக்கு சிறப்பு புலனாய்வு பிரிவு காவல்துறையினர் முன்னிலையில் நேரில் ஆஜராகிறேன். இந்த வழக்கை சட்டப்படி எதிர்கொள்வேன்” என்று தெரிவித்திருந்தார். முன்னதாக, ஜாமீன் கோரி பிரஜ்வல் ரேவண்ணா பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று (மே 31) நடைபெறுகிறது. விமான நிலையத்தில் பிரஜ்வல் கைது இந்நிலையில் ஜெர்மனியின் முனிச் நகரில் இருந்து பெங்களூரு திரும்புவதற்கான விமான டிக்கெட்டை பிரஜ்வல் ரேவண்ணா முன்பதிவு செய்திருப்பதாக தகவல் வெளியானது. இதனைத் தொடர்ந்து நேற்று (மே 30) முனிச் நகரில் இருந்து புறப்பட்ட பிரஜ்வல் இன்று (மே 31) நள்ளிரவு 12.39 மணிக்கு பெங்களூரு திரும்பினார். அங்கு விமான நிலைய தொழில் பாதுகாப்பு காவல்துறையினர் பிரஜ்வல் ரேவண்ணாவை கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கை விசாரிக்கும் கர்நாடக சிறப்பு புலனாய்வுக் குழு போலீசாரிடம் பிரஜ்வல் ஒப்படைக்கப்பட்டார். பிரஜ்வல் ரேவண்ணாவின் கைது குறித்து சிறப்பு புலனாய்வு விசாரணைக் குழு காவல்துறை தரப்பில், “பிரஜ்வல் முதலில் நீதிபதி முன் ஆஜர்படுத்தப்படுவார். நீதிமன்றம் மூலமாக அதிகாரப்பூர்வ போலீஸ் காவலில் பிரஜ்வல் வைக்கப்பட்ட பிறகு, முறையான விசாரணையை தொடங்கும். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படுவதற்கு முன்பாக அவருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பிரஜ்வல் ரேவண்ணாவின் கைது குறித்து பேசிய கர்நாடக உள்துறை அமைச்சர் பரமேஸ்வரா, “சிறப்பு புலனாய்வு பிரிவு பிரஜ்வலை கைது செய்துள்ளது. அவர்கள் நீதிமன்ற அனுமதிக்கு பிறகு பிரஜ்வலிடம் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பார்கள். இந்த பாலியல் வழக்கில் யாரேனும் சாட்சியளிப்பதாக இருந்தால் தாராளமாக முன்வரலாம். சாட்சியம் அளிக்க வருபவர்களுக்கு தேவையான அனைத்து பாதுகாப்பும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்” எனத் தெரிவித்துள்ளார். https://minnambalam.com/political-news/returned-prajwal-arrested-at-the-airport-what-happened-next/