Everything posted by கிருபன்
-
காசா எகிப்திய எல்லையில் முக்கிய பகுதியை கைப்பற்றியது இஸ்ரேல் - காசாவின் முழு நிலப்பரப்பும் இஸ்ரேலின் பிடியில்
காசாவின் எகிப்துடனான முழு எல்லையையும் கைப்பற்றியது இஸ்ரேல்: தாக்குதல்கள் உக்கிரம் maheshMay 31, 2024 May 31, 2024 9:15 am 0 comment காசாவின் எகிப்துடனான மூலோபாயம் மிக்க இடைவழி நிலப்பகுதி ஒன்றை கைப்பற்றியதாக அறிவித்திருக்கும் இஸ்ரேல் நேற்று (30) தூர தெற்கு நகரான ரபா மீது கடுமையான பீரங்கி தாக்குதல் மற்றும் துப்பாக்கிச் சூடுகளை நடத்தியதாக அங்குள்ள குடியிருப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச எதிர்ப்புக்கு மத்தியிலும் காசாவில் பலஸ்தீனர்களின் கடைசி அடைக்கலமான ரபா மீது இஸ்ரேல் இராணுவம் இந்த மாத ஆரம்பத்தில் படையெடுப்பை தொடங்கியது. கடந்த ஒரு சில நாட்களாக எகிப்து எல்லையை ஒட்டிய அந்த நகர் மீது இஸ்ரேலின் தாக்குதல்கள் தீவிரம் அடைந்திருப்பதோடு அங்கு அடைக்கலம் பெற்றிருக்கும் பலரும் கொல்லப்பட்டுள்ளனர். இந்நிலையில் எகிப்து–காசா எல்லையை ஒட்டிய 14 கிலோமீற்றர் நீளமான பிலடெல்பி இடைவழி நிலத்தை கைப்பற்றியதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. குறுகலான எல்லை பகுதியின் ‘செயல்பாட்டு கட்டுப்பாட்டை’ இஸ்ரேல் கைப்பற்றியதாக இஸ்ரேலிய இராணுவப் பேச்சாளர் ரியர் அட்மிரல் டேனியல் ஹகாரி குறிப்பிட்டுள்ளார். இங்கு சுமார் 20 சுரங்கப்பாதைகளையும் கண்டுபிடித்ததாக அவர் தெரிவித்துள்ளார். ‘பிலடெல்பி இடைவழி நிலப்பகுதி ஹமாஸுக்கான ஒட்சிசனாக செயற்படுகிறது. இது காசாவுக்கான ஆயுதங்களை கடத்தும் இடமாகவும் தொடர்ந்து செயற்பட்டு வருகிறது’ என்று ஹகாரி குறிப்பிட்டுள்ளார். எனினும் இங்கு கடத்தல் சுரங்கப்பாதைகள் இயங்குவதை எகிப்து மறுத்துள்ளது. ‘பலஸ்தீன நகரமான ரபா மீதான நடவடிக்கையைத் தொடர்வதையும், அரசியல் நோக்கங்களுக்காக போரை நீடிப்பதையும் நியாயப்படுத்த இஸ்ரேல் இந்தக் குற்றச்சாட்டுகளைப் பயன்படுத்துகிறது’ என்று எகிப்தின் உயர்மட்ட அதிகாரி ஒருவர் அந்நாட்டு அரசுடன் தொடர்புபட்ட அல் கஹேர் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார். இந்த பிலடெல்பி இடைவெழி நிலத்தை இஸ்ரேல் கைப்பற்றுவது இஸ்ரேல் மற்றும் எகிப்துக்கு இடையே 1979 இல் செய்துகொள்ளப்பட்ட அமைதி உடன்படிக்கையை மீறுவதாக இருக்கக் கூடும் என்றும் எகிப்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். எனினும் இஸ்ரேலின் இந்த அறிவிப்பு குறித்து எகிப்து இதுவரை உத்தியோகபூர்வ பதில் எதனையும் வெளியிடவில்லை. பீஜிங் சென்றிருக்கும் எகிப்து ஜனாதிபதி அப்தல் பத்தா அல் சிசி, முற்றுகை காசாவுக்கான மனிதாபிமான உதவிகளை அதிகரிக்க வலியுறுத்தியதோடு, பலஸ்தீனர்கள் தமது சொந்த மண்ணில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படும் எந்த ஒரு முயற்சியையும் எதிர்ப்பதாக, எகிப்தின் நீண்ட கால கொள்கையை மீண்டும் ஒருமுறை வலியுறுத்தினார். காசாவில் தெற்கு முனையில் உள்ள எகிப்துடனான எல்லை, இஸ்ரேலின் நேரடி கட்டுப்பாடு இல்லாத காசாவின் ஒரே நில எல்லையாகவே இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது. ஐ.நா. தீர்மானம் மத்திய மற்றும் மேற்கு ரபாவில் மோதல் இடம்பெற்று வருவதாக பார்த்தவர்களை மேற்கோள் காட்டி ஏ.எப்.பி. செய்தி வெளியிட்டுள்ளது. கடந்த மே 7 ஆம் திகதி ரபா மீதான படையெடுப்பை ஆரம்பித்த இஸ்ரேல் ஆரம்பத்தில் எகிப்துடனான ரபா எல்லைக் கடவையை கைப்பற்றியதோடு அந்த நகரின் கிழக்கு பகுதியில் உள்ள கட்டடங்களை அழித்து வருவதாக பார்த்தவர்கள் குறிப்பிட்டுள்ளனர். கடந்த புதனன்று ராபவுக்கு டாங்கிகளை அனுப்பி சுற்றிவளைப்புகளை நடத்திய இஸ்ரேல், கடந்த செவ்வாயன்று அந்த நகரின் மையப் பகுதிக்கு முதல் முறை முன்னேறி இருந்தது. ரபா மீதான தாக்குதலை உடன் நிறுத்துவதற்கு இஸ்ரேலுக்கு சர்வதேச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையிலேயே இஸ்ரேல் அங்கு படையெடுப்பை தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இதனால் ரபாவில் அடைக்கலம் பெற்றுள்ள பலஸ்தீனர்கள் தமது உடைமைகளை சுமந்தபடி மீண்டும் ஒருமுறை வெளியேறி வருகின்றனர். ரபா தாக்குதலுக்கு முன் அங்கு 1.4 மில்லியன் மக்கள் இருந்த நிலையில் அது தொடக்கம் ஒரு மில்லியன் பேர் வரை வெளியேறி இருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனம் தெரிவித்துள்ளது. ரபா மீது இஸ்ரேல் தாக்குதலை ஆரம்பித்தது தொடக்கம் முற்றுகையில் உள்ள காசாவுக்கான மனிதாபிமான உதவிகள் மூன்றில் இரண்டு பங்கு குறைந்திருப்பதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. ‘காசாவுக்குள் நுழையும் உணவு மற்றும் ஏனைய உதவிகளின் அளவு, ஏற்கனவே உயர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்ய போதுமானதாக இல்லை, மே 7 முதல் அது மேலும் சுருங்கிவிட்டது’ என்று ஐ.நாவின் மனிதாபிமான அலுவலகம் குறிப்பிட்டுள்ளது. ‘ரபா எல்லைக்கடவை மூடப்பட்டு, கெரெம் ஷலோம் எல்லைக் கடவையில் இருந்து பாதுகாப்பாக மற்றும் தொடர்ச்சியாக பொருட்களை எடுத்துச் செல்ல முடியாத நிலை மற்றும் ஏனைய வாயில்களில் மட்டுப்படுத்தப்பட்ட விநியோகங்களே இடம்பெறுவதன் காரணமாக உதவி விநியோகங்கள் குறைந்துள்ளன’ என்றும் அது சுட்டிக்காட்டியது. ரபாவுக்கு அருகில் அம்புலன்ஸ் வண்டி ஒன்றின் மீது இஸ்ரேல் நடத்திய நேரடித் தாக்குதலில் தமது இரு துணை மருத்துவர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன செம்பிறை சங்கம் தெரிவித்துள்ளது. காசா நகரின் தெற்கு பகுதியான செய்தூனில் பீரங்கி குண்டுகள் மற்றும் துப்பாக்கிச் சூடு இடம்பெற்று வருவதோடு கரும்புகை எழுந்து வருவதாக அங்குள்ள ஏ.எப்.பி. செய்தியாளர் தெரிவித்துள்ளார். வடக்கு காசாவின் மத்திய பகுதியில் கடந்த 16 நாட்களாக முன்னேறி வரும் இஸ்ரேலிய படை தற்போது ஜபலியா அகதி முகாம், ஷெய்க் சயித் மற்றும் பெயித் லஹியா பகுதிகளை கட்டுப்படுத்தி இருப்பதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. காசா நகரின் டால் அல் ஹவா பகுதியில் இஸ்ரேலின் ஸ்னைப்பர் துப்பாக்கிதாரிகள் நேற்று மூவரை சுட்டுக் கொன்றதாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா தெரிவித்துள்ளது. பல்கலைக்கழகத்திற்கு அருகில் உள்ள வீதியிலேயே இவர்கள் சுடப்பட்டிருப்பதாக அந்த செய்தி குறிப்பிடுகிறது. மத்திய காசாவின் நுசைரத் அகதி முகாமில் சகூத் குடும்பத்திற்கு சொந்தமான வீடு ஒன்றின் மீது நடத்தப்பட்ட வான் தாக்குதலில் நால்வர் கொல்லப்பட்டு மேலும் 15 பேர் காயமடைந்ததாக வபா கூறியது. கடந்த எட்டு மாதங்களாக நீடித்துவரும் இஸ்ரேலின் இடைவிடாத தாக்குதல்களில் காசாவில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை தற்போது 36 ஆயிரத்தை தாண்டியுள்ளது. இந்நிலையில் ‘அனைத்துத் தரப்புகளும் மதிக்கக்கூடிய போர் நிறுத்தம் மற்றும் அனைத்து பணயக்கைதிகளும் விடுவிக்கக் கோரும் ஐ.நா நகல் தீர்மானம் ஒன்றை அல்ஜீரியா கொண்டுவந்தபோதும், அது பாதுகாப்புச் சபையில் வாக்கெடுப்புக்கு செல்வதில் உறுதியற்ற நிலை நீடித்து வருகிறது. கடந்த புதனன்று பலஸ்தீன ஜனாதிபதி மஹ்மூத் அப்பாஸுடன் தொலைபேசியில் பேசிய பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன், ரபா தொடர்பில் வலுவான அறிக்கை ஒன்றை வெளியிடுவதற்கு பிரான்ஸ், அல்ஜீரியாவுடன் இணைந்து பணியாற்ற தீர்மானித்திருப்பதாக தெரிவித்துள்ளார். போர் நிறுத்தப் பேச்சுவார்த்தைகள் எந்த முன்னேற்றமும் இன்றி முடங்கி இருப்பதோடு, ரபா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் முடியாதவரை பேச்சுவார்த்தைகள் அர்த்தமற்றது என்று ஹமாஸ் அமைப்பு குறிப்பிட்டுள்ளது. https://www.thinakaran.lk/2024/05/31/world/63506/காசாவின்-எகிப்துடனான-முழ/
-
டொனால்ட் டிரம்ப் அனைத்து 34 குற்றச் சாட்டுகளிலும் குற்றவாளி.
அமெரிக்க முன்னாள் அதிபர் ட்ரம்ப் குற்றவாளி என நீதிமன்றம் தீர்ப்பு - ஜூலை 11ஆம் திகதி தண்டனை விவரங்கள் வெளியிடப்படும் PrashahiniMay 31, 2024 அமெரிக்க நாட்டின் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப், கடந்த 2016 தேர்தல் நிதியை முறைகேடாக கையாண்ட வழக்கில் குற்றவாளி என 12 ஜூரிகள் அடங்கிய குழு அறிவித்துள்ளது. சுமார் இரண்டு நாட்கள் நடந்த தீவிர ஆலோசனைக்கு பிறகு நியூயார்க் ஜூரிகள் இதனை அறிவித்தனர். 77 வயதான ட்ரம்ப், கடந்த 2017 முதல் 2021 வரையில் அமெரிக்க நாட்டு அதிபராக இயங்கியவர். அவர் அந்த நாட்டின் 45ஆவது அதிபராக அறியப்பட்டார். குடியரசு கட்சி சார்பில் தற்போது மீண்டும் அதிபர் வேட்பாளராக களம் கண்டுள்ளார். இந்த நிலையில்தான் அவர் குற்றவாளி என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் நீதிபதி ஜுவான் மெர்ச்சன், வரும் ஜூலை 11ஆம் திகதி தண்டனை விவரங்களை அறிவிக்க உள்ளார். குற்ற வழக்கில் அமெரிக்க அதிபரோ அல்லது முன்னாள் அதிபரோ விசாரிக்கப்படுவது மற்றும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்படுவது அமெரிக்க அரசியல் வரலாற்றில் இதுவே முதன்முறை என்பது குறிப்பிடத்தக்கது. என்ன வழக்கு? – முன்னாள் அதிபர் ட்ரம்ப், தன்னுடனான பாலியல் தொடர்பை மறைக்க ஆபாச நடிகை ஸ்டோமி டேனியல்ஸுக்கு சுமார் 1.3 இலட்சம் டொலர்களை 2016ஆம் ஆண்டுக்கான தேர்தல் பிரச்சார நிதியில் இருந்து கொடுத்ததாக சொல்லப்பட்டது. இதையடுத்து இந்த குற்றச்சாட்டை மறைக்கும் விதமாக 11 இன்வாய்ஸ், 11 காசோலை மற்றும் 12 வவுச்சர் உள்ளிட்ட ஆவணங்களை போலியாக ட்ரம்ப் தரப்பில் தாக்கல் செய்யப்பட்டதாகவும் சொல்லப்பட்டது. அந்த 34 ஆவணங்களும் போலி என்பதை தான் தற்போது ஜூரிகள் கண்டறிந்துள்ளனர். அதையடுத்து அவர் குற்றவாளி என்றும் அறிவித்தனர். அமெரிக்க முன்னாள் அதிபர் ஒருவர் முறைகேட்டு வழக்கில் குற்றவாளி என அறிவிக்கப்படுவது இதுவே முதல் முறை. வரும் நவம்பர் மாதம் அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நடைபெற உள்ளது. இந்த ரேஸில் குடியரசு கட்சி சார்பில் ட்ரம்ப் மற்றும் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடனும் உள்ளனர். இந்நிலையில், இந்த வழக்கு விவகாரம் ட்ரம்புக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. இருந்தாலும் ட்ரம்ப் தேர்தலில் போட்டியிட தடை ஏதும் இருக்காது என தகவல். ட்ரம்ப் கருத்து: “இது எனக்கு அவமானம் ஏற்படுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட விசாரணை. இதை மேற்கொண்ட நீதிபதி ஊழல்வாதி. நமது தேசமே இந்த மாதிரியான மோசடியை இப்போது எதிர்கொண்டு வருகிறது. எதிர்க்கட்சியினரை பழிக்கும் வகையில் பைடன் நிர்வாகம் இதை செய்து வருகிறது. நமது அரசியல் சாசனத்துக்காக நாம் போராட வேண்டி உள்ளது” என ட்ரம்ப் மிகவும் ஆக்ரோஷமாக தெரிவித்தார். அதிபர் பைடன் தரப்பு: “யாரும் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் இல்லை” என அதிபர் ஜோ பைடனின் செய்தித் தொடர்பாளர் ட்ரம்ப் வழக்கு குறித்து கருத்து தெரிவித்திருந்தார். தனது ஆட்சி காலத்தில் பல்வேறு சர்ச்சைகளுக்கு அதிபர் ட்ரம்ப் ஆளாகியிருந்தார். அதன் பின்பு அவரை அந்த சர்ச்சைகள் சூழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. தேர்தலில் போட்டியிட முடியுமா? அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதற்கு குறைந்தபட்ச தகுதிகளையே அமெரிக்க அரசியலமைப்பு வரையறுத்துள்ளது. போட்டியிடுபவர் அமெரிக்க குடிமகனாகவும் குறைந்தபட்சம் 35 வயதுடையவராகவும் 14 ஆண்டுகள் அமெரிக்காவில் வசித்தவராகவும் இருக்க வேண்டும். குற்ற பின்னணி உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிடுவதை தடுக்க எந்த சட்டமும் இல்லை. சிறையில் உள்ள நபர்களும் தேர்தலில் போட்டியிட முடியும். https://www.thinakaran.lk/2024/05/31/breaking-news/63527/அமெரிக்க-முன்னாள்-அதிபர்/
-
தமிழ்த்தேசிய வட்டகையில் நிராகரிக்க முடியாத ஒரு சக்தியாக சுமந்திரன்!
தமிழ்த்தேசிய வட்டகையில் நிராகரிக்க முடியாத ஒரு சக்தியாக சுமந்திரன்! May 30, 2024 — கருணாகரன் — தமிழ்த்தேசிய அரசியலில் எல்லா முடிவையும் எடுக்கும் ஆளாக இப்போது சுமந்திரன் வளர்ச்சியடைந்துள்ளாரா? அல்லது தமிழ்ச் சூழலில் அப்படியொரு நிலை உருவாகியுள்ளதா? அல்லது அப்படிக் கருதப்படுகிறதா? ஏனென்றால், தமிழ்ப் பொதுவேட்பாளரை நிறுத்துவதற்கான தீர்மானத்தை வெற்றியடைய வைப்பதற்கும் சுமந்திரன் தேவைப்படுகிறார். தமிழரசுக் கட்சியின் தலைவிதியைத் தீர்மானிப்பதற்கும் சுமந்திரனே தேவையாக இருக்கிறார். ஜனாதிபதித் தேர்தல் உட்பட அனைத்துத் தேர்தல்களையும் கையாள்வது, பதவியில் இருக்கும் ஆட்சியாளர்களோடு தொடர்புகளைப் பேணுவது, அவர்களைக் கையாள்வது, வெளிநாட்டுப் பிரதிநிதிகளோடு பேசுவது, முஸ்லிம்கள், மலையக மக்கள் என ஏனைய சமூகத்தினரோடு அரசியல் உறவைக் கொண்டிருப்பது எனச் சகலவற்றிலும் சுமந்திரனின் அடையாளமும் முன்னணிப்பாத்திரமுமே உள்ளது. இதை மேலும் விரிவாகப் பார்க்கலாம். சிலருடைய ஆர்வக்கோளாறினால் விளையாட்டாகத் தொடங்கப்பட்ட “தமிழ்ப்பொது வேட்பாளர்” விடயம் இப்பொழுது விடவும் முடியாது – தொடவும் முடியாத என்ற நிலைக்குள்ளாகியுள்ளது. இருந்தாலும் எப்படியாவது இதை வெற்றியடைய வைக்க வேண்டும் எனச் சிலர் தலையைக் கொடுத்து இரவு பகலாக வேலைசெய்கிறார்கள். இதனால் இந்த “விடாமுயற்சி விக்கிரமாதித்தியன்”களான “சிவில் சமூகப் பிரமுகர்கள்” கூடச் சில நாட்களுக்கு முன்பு சுமந்திரனைச் சந்திக்க வேண்டியதாயிற்று. உண்மையில் சுமந்திரனுடன் சந்திப்பைச் செய்வதற்கு இவர்களில் எவருக்கும் உடன்பாடில்லை. ஆனாலும் அதைவிட்டால் வேறு வழியில்லை என்ற நிலையிலேயே இந்தச் சந்திப்பு நடந்துள்ளது. இதற்கான தூண்டலைச் செய்தவர் வடமாகாணசபையின் முன்னாள் அமைச்சர்களில் ஒருவர். அதைச் சிவில் பிரமுகர்களால் தவிர்க்க முடியாமல்போய் விட்டது. “சுமந்திரனைச் சமாதானப்படுத்தி (Convince பண்ணி)னால்தான் தமிழரசுக் கட்சி, பொதுவேட்பாளர் என்ற நிலைப்பாட்டுக்கு ஆதரவளிக்கும். தமிழரசுக் கட்சி ஆதரவளித்தால்தான், ஏனைய கட்சிகளெல்லாம் இதை ஆதரிக்கும். இதைத் தவிர்த்து விக்கினேஸ்வரனோ சுரேஸ் பிரேமச்சந்திரனோ சிவில் பிரதிநிதிகளோ இந்த விடயத்தில் தனியே எதையும் செய்ய முடியாது என்றாகி விட்டது. ஆகவே நீங்கள் தலையைப் பிடிக்க வேணும். தலையைப் பிடித்தால்தான் வால்களெல்லாம் கட்டுப்பாட்டுக்கு வரும்” என்று சொல்லியிருக்கிறார் அந்த முன்னாள் அமைச்சர். எனவே உலகமெல்லாம் சுற்றி வருவதை விடவும் சுமந்திரனைப் பிடித்தால் போதும் என்ற கட்டத்தில் இந்தச் சந்திப்பு நடந்தது. சந்திப்பின்போது “பொதுவேட்பாளரை ஏன் நிறுத்த வேண்டும்? அதற்கான அவசரமென்ன?” என்றொரு சாதாரண கேள்வியைத் தூக்கிப்போட்டிருக்கிறார் சுமந்திரன். சென்றவர்கள் கொஞ்சம் ஆடிப்போய் விட்டார்கள். இருந்தாலும் “இந்தத் தேர்தலில் போட்டியிடும் முன்னிலை வேட்பாளர்கள் எல்லோரும் சிங்களவர்கள். இவர்களில் எவரும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளுக்குத் தீர்வைத் தரக்கூடியவர்களில்லை. அதைப்பற்றிப் பேசவே தயங்குகிறார்கள். ஆகவே, அவர்களுக்கு வாக்களிப்பதை விட, இந்தத் தேர்தலை ஒரு வாய்ப்பாகப் பயன்படுத்தி, சிதறுண்டிருக்கும் தமிழ்த் தரப்பையெல்லாம் ஒன்றாகக் கொண்டு வரலாம். தமிழ் மக்களுடைய நிலைப்பாட்டை தென்னிலங்கைக்கும் சர்வதேச சமூகத்துக்கும் தெரியப்படுத்த முடியும். இது இன்றைய சூழலில் அவசியமானது….” என்று சொன்னார்கள். இதற்குப் பதிலளித்த சுமந்திரன், “தேர்தல் இன்னும் அறிவிக்கப்படவில்லை. யார் யாரெல்லாம் போட்டியிடுவார்கள் என்று கூட இன்னும் உறுதியாகவில்லை. போட்டியிடும் தரப்பிலிருந்து தேர்தல் விஞ்ஞாபனங்களும் வரவில்லை. அதற்குள் எதற்கு இந்த அவசரமெல்லாம்? இப்போதுள்ள சூழலில் எல்லோரையும் நாம் சமநிலையில் வைத்தே பார்க்கிறோம். இறுதி தீர்மானத்தை எடுப்பதற்கு முன்பு இதைப்பற்றி மக்களுடன் கலந்தாலோசிப்பதற்குத் திட்டமிட்டிருக்கிறோம்” என்று சொல்லியிருக்கிறார். சிவில் சமூகப் பிரதிநிதிகளால் சுமந்திரனை எந்த நிலையிலும் வழிக்குக் கொண்டுவர முடியவில்லை. இறுதியில் “இதைப்பற்றி நாம் தொடர்ந்து விவாதிப்போம். அதற்குரிய ஏற்பாட்டைச் செய்கிறேன்” என்று சுமந்திரனே தொடர்ந்து கொண்டிருந்த தடுமாற்றத்துக்கு ஒரு முடிவைச் சொல்லி அனுப்பிவைத்தார். சுமந்திரன் சொன்னதைப்போல அடுத்துவரும் ஜூன் 09 ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் தமிழ்ப்பொதுவேட்பாளர் பற்றிய பொதுவிவாதம் நடைபெறவுள்ளது. இந்த அறிவிப்பையும் சுமந்திரனே விடுத்துள்ளார். இதற்கிடையில் தமக்குச் சாதகமானவகையில் சிவில் அணியினர் வணிகர் கழகம், கூட்டுறவுச் சபை என ஓடியோடி பல்வேறு தரப்பினர்களையும் சந்திந்து ஆதரவு கோரிவருகின்றனர். இப்படியான உசாரோடு மக்களுக்கான வேலையைக் களத்திலிறங்கிச் செய்திருந்தால், தமிழ்ச்சமூகம் இன்று கொஞ்சமாவது முன்னேற்றத்தைக் கண்டிருக்கும். பல பிரச்சினைகளுக்குத் தீர்வையும் எட்டியிருக்கலாம். நாட்டை விட்டு வெளியேறுவோரின் தொகையும் கணிசமாகக் குறைந்திருக்கும். இவர்களுடைய சொல்லுக்கும் பெறுமதி கிடைத்திருக்கும். இப்படி ஆட்பிடிப்பதற்கு் ஆதரவு சேர்ப்பதற்குமாக அலைந்து திரிய வேண்டி வந்திருக்காது. பொதுவேட்பாளரைப்பற்றிய பொதுவிவாதத்தின்போது இவ்வாறான விசயங்கள் எல்லாம் பேசப்படவும் கூடும். எனவே ஒரு விடயம் மிகத் தெளிவாகியுள்ளது. தமிழ்த்தேசியப் பரப்பில், தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியைத் தவிர்த்தால், சுமந்திரன்தான் எதையும் தீர்மானிப்பவராக இருக்கிறார் என. சுமந்திரனை மீறித் தமிழரசுக் கட்சியினாலும் எந்த முடிவுக்கும் செல்ல முடியாது. அதனுடைய புதிய தலைவர் தெரிவு உட்பட கட்சியின் அத்தனை நடவடிக்கைகளும் இன்று சுமந்திரனில்தான் தங்கியுள்ளன. இது சற்று மிகைப்படுத்தப்பட்ட கூற்று எனச் சுமந்திரனே இதனை மறுக்கலாம். ஆனால், உண்மை என்னவென்று எல்லோருக்கும் தெரியும். என்பதால்தான் சுமந்திரனிடம் பொதுவேட்பாளருக்கான அணி பகிரங்கமாகச் சரணடைந்திருக்கிறது. ஆனால், சுமந்திரனோ பொதுவேட்பாளர் என்ற நிலைப்பாட்டுக்கு எதிரானவர். அதை அவர் பகிரங்கமாகவே சொல்லியும் வருகிறார். இதனால் உண்டாகக் கூடிய அரசியல் சாதக – பாதக அம்சங்களையும் சுமந்திரன் அறிவார். இருந்தாலும் ஜனநாயக அடிப்படையில் இதைப்பற்றிய விவாதமொன்றுக்கு அவர் முன் வந்திருப்பது பாராட்டுக்குரியது. இதுதான் சுமந்திரனின் இயல்பும் சிறப்புமாகும். பொதுச் சூழல் என்னவாக உள்ளது? பொது அபிப்பிராயம் எப்படி இருக்கிறது என்றெல்லாம் பார்த்து, அதற்கேற்ற மாதிரிக் கதைக்காமல் (விழுந்த பக்கத்துக்குக் குறியைச் சுடாமல்) எது சரியாக இருக்கிறதோ, தான் எதைச் சரியென நம்புகிறாரோ அதைத் துணிந்துரைப்பதே சுமந்திரனின் வழமை. இதனால்தான் அவர் யாழ்ப்பாணத்தில் நடந்த ஊடகவியலாளர் சந்திப்பொன்றில், “யாரும் என்னைத் துரோகி என்று சொல்வார்கள் என்பதற்காக என்னுடைய கருத்தைச் சொல்லாமல் விட மாட்டேன். என்னுடைய நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ள மாட்டேன்” என்று சொன்னதுமாகும். அரசியலில் எப்போதும் சரியான பார்வையும் அதை முன்னெடுக்கக்கூடிய துணிவும் அவசியமானவை. இவையிரண்டும் இல்லையென்றால், எத்தகைய மகத்தான கருத்தும் (கொள்கையும்) பயனற்றதாகி – பெறுமதியற்றதாகி – விடும். யாரும் மிகச் சிறந்த அறிவாளிகளாக இருக்கலாம். ஆனால், அந்த அறிவைச் செயலாக்கக் கூடிய ஆற்றலும் ஆளுமையும் வேண்டும். கூடவே சமகாலத்தன்மை மிக அவசியமானது. சுமந்திரன் சமகாலத்தன்மைக்கு நெருக்கமானவர். அவர் முன்னெடுக்க முயற்சிப்பது, சமகால அரசியல் (Contemporary Politics). இதற்குக் காரணம், அவர் ஒரு நவீனத்துவவாதி (Modernist) யாக இருப்பதாகும். அவருடைய அரசியற் தன்மை, ஏறக்குறைய நவீனத்தன்மைக்குரியது (Modern politics). எவரோடும் உரையாடக் கூடியது. இது முக்கியமான ஒன்று. நம்மிடம் எவ்வளவு சரிகள், நியாயங்கள் இருக்கிறது என்பது முக்கியமல்ல, எதிரே உள்ளவர்கள் அதை எப்படிப் பார்க்கிறார்கள்? எந்தளவுக்கு ஏற்றுக் கொள்கிறார்கள்? என்பதே முக்கியமானது. ஒரு கவிதையில் உள்ளதைப்போல, “என்னுடைய சொற்களுக்கு எதிராளியின் மனதில் இன்னோர் அர்த்தம் உள்ளது” என்பதை ஆழ்ந்து புரிந்து கொள்வது அவசியமானது. இந்தப் புரிதலின்மையினால்தான் தமிழ்ச் சமூகத்தின் மாபெரும் தியாகங்களும் பேரிழப்புகளும் பயனற்றவை என்ற நிலைக்கு வந்தது. சமகாலத்தன்மையைக் கொண்ட எவரும் நவீனத்துவவாதிகளாகவே இருப்பர். அதைப்போல நவீனத்துவவாதிகள் சமகாலத்தன்மையோடு, எதிர்காலத்தைக்குறித்துத் தீர்க்கமாகச் சிந்திப்போராகவும் இருப்பர். இதை நாம் அரசியலில் மட்டுமல்ல, நடை, உடை, பாவனை உள்ளிட்ட அனைத்திலும் அவதானிக்க முடியும். இவர்களோடு சமூகத்துக்கு எப்போதும் ஒரு ஒவ்வாமை – முரண் – இருக்கும். சமநிலையில் சமூகத்தோடும் இவர்களுக்கு மறைமுகமாக ஒவ்வாமை – முரண் -காணப்படும். ஆனால், இவர்களுக்குப் பின்னால்தான் சமூகம் தன்னை மெல்ல மெல்ல ஒழுங்கமைத்துச் செல்வது. மாற்றம் இவ்வாறானவர்களாலேயே நிகழ்வது. இதனால் இவர்களே வரலாற்றில் முன்னோடிகளாகக் கருதப்படுகிறார்கள். முன்னோடிகளின் காலில் முள் குத்தியே தீரும். அவர்கள் நடப்பது புதிய பாதை அல்லவா! இதற்கு மாறாக ஒருசாரார் உள்ளனர். தங்களுடைய கைகளில் அப்பிள் (Apple Mobile phone) கைபேசியை வைத்திருப்பார்கள். நவநாகரீகமாக உடுத்திக் கொள்வார்கள். பிள்ளைகளைப் புதிய – நவீன துறைகளில் படிப்பிப்பார்கள். நவீனமாக வீட்டைக் கட்டுவார்கள், புதிய Model வாகனங்களை, புத்தம் புதிய பொருட்களையெல்லாம் வாங்கிக் கொள்வார்கள். ஆனால், அவர்களுடைய சிந்தனையும் நடைமுறையும் கடந்த காலத்துள் – இறந்த காலத்துள் – புதையுண்டிருக்கும். அவர்கள் அடிப்படையில் இறந்தகால மனிதர்களே (Dead people). ஆனால், சுமந்திரனுக்கு எப்போதும் இந்தத் தருணம் (This is the occasion) முக்கியமானது. அதையும் விட முக்கியமானது எதிர்காலமாகும். அதைப்பற்றியே அவர் சிந்திக்கிறார். அவருடைய நேர்காணல்கள், உரைகள், அணுகுமுறைகள், நவடிக்கைகளில் இதை அவதானிக்க முடியும். ஒப்பீட்டளவில் அவர் கூடியபட்சமான ஜனநாயகவாதி. இதனால்தான் அவர் முஸ்லிம்களோடும் நெருக்கமாக – அவர்கள் நெருங்கக் கூடிய ஒருவராக இருக்கிறார். தமிழ்த்தேசியப் பரப்பில் சுமந்திரன் அளவுக்கு முஸ்லிம்களோடு நெருக்கமான தலைவர்கள் குறைவு. இன்னொருவர் திரு. சம்மந்தன். இதைப்போல சிங்களப்பரப்பிலும் மலையக மக்களோடும் சுமந்திரனுக்கு ஊடாட்ட உறவுண்டு. நாடாவிய பிரச்சினைகளில் அவர் காட்டுகின்ற ஆர்வமும் அவற்றில் சுமந்திரன் நிகழ்த்துகின்ற இடையீடுகள், தலையீடுகளும் அவருக்கான பரந்த அறிமுகத்தையும் முக்கியத்துவத்தையும் அதிகரித்திருக்கின்றன. (இருந்தாலும் பல சந்தர்ப்பங்களில் சுமந்திரனும் சம்மந்தனும் தனிப்பட நடந்து கொள்ளும் விதம் ஒரு அரசியற் தலைவர்களுக்குரியதாக இருப்பதில்லை. குறிப்பாக பலரையும் இணைத்துப் பயணிக்கும் பொறுமையும் நிதானமும் இருவரிடத்திலும் குறைந்தே உள்ளது. இது பெருங்குறைபாடாகும்). சுமந்திரனுடைய தமிழரசுக் கட்சியோ கடந்தகாலம் – சமகாலம் என இரண்டிலும் அல்லாடிக் கொண்டிருப்பது. இந்த இழுபறியும் மோதலுமே சிறிதரன் – சுமந்திரன் அணி மோதல்கூட. சிறிதரன் கடந்த காலத்தின் அடைக்கோழியாகவும் சுமந்திரன் புதிய காலத்துக்கான குஞ்சுப் பறவையாகவும் உள்ளார். ஆயினும் இதுதான் அவருக்கு உள்ளுரில் எதிர்ப்பையும் வெளியே கவர்ச்சியையும் கொடுக்கிறது. தமிழ்த்தேசிய அரசியற்பரப்பிலுள்ள பலரும் அறிந்தோ அறியாமலோ கடந்தகாலத்தில் உறைந்தவர்களாகவே (Nostalgist) உள்ளனர். அவர்களுக்கு அதொரு சுவையான இன்பம். அதொரு பொற்காலம். தங்க நினைவு. அவர்களுடைய அரசியலும்தான் அப்படியிருக்கும். ஆனால் சொந்த வாழ்க்கையோ சமகாலத்தோடு – Apple Mobile phone னோடு மிகத் தீவிரமாகப் பிணைந்திருக்கும். இந்த முரணைப் பற்றி அவர்கள் மனந்திறந்து ஒரு நிமிடம் யோசித்தால் போதும், நல் மாற்றங்கள் நிகழும். மிகச் சிலரே இதைக் கடந்தவர்கள். புதிய சகாப்தம் (Moving into a new era) ஒன்றுக்குச் செல்ல வேண்டுமானால், இறந்தகாலத்திலிருந்து மீண்டெழ (Resurgence from dead-end politics) வேண்டும். அரசியல் அர்த்தத்தில் சொல்வதானால், கடந்தகாலப் படிப்பினைகளிலிருந்து பெற்றுக் கொண்ட அறிவைக் கொண்டு நிகழ்காலத்தைக் கட்டியெழுப்ப வேண்டும். அதிலிருந்து எதிர்காலத்தை மேம்படுத்த முடியும். அதற்கு இந்தத் தருணத்தை – இந்தச் சந்தர்ப்பத்தை – இந்தக் காலத்தைச் சரியாக, உரிய முறையில் விளங்கிச் செயற்பட வேண்டும். அதாவது தன்னுடைய காலமாக உணர்தல் – Perception in his own time. அப்படிச் சிந்தித்தால்தான் கிடைத்த வாய்ப்பைத் தன்னுடையதாக (Taking his chance) மாற்றிக் கொள்ள முடியும். ஏறக்குறைய சுமந்திரன் அப்படிச் சிந்திக்கிறார் என்றே தெரிகிறது. என்பதால்தான் தன்னால் இந்தக் காலத்தை மாற்ற முடியும் என அவரால் நம்ப முடிகிறது. ஆனால், அதற்கு நிறைய வேலை செய்ய வேண்டும். அதைத் தனியே செய்ய முடியாது. அதற்கான ஆளணி, கட்டமைப்புகள், செயற்றிட்டங்கள், மக்கள் இணைப்புகள், அர்ப்பணிப்பான உழைப்பு எனப் பலவும் தேவை. அதற்கான பயிற்சியை – முயற்சியை அவர் எடுக்க வேண்டும். முக்கியமாக மக்களுடனான உறவையும் அரசியற் பரப்பில் யதார்த்தமாகச் சிந்திக்கக் கூடிய தரப்புகளின் இணைவையும் சாத்தியப்படுத்த வேண்டும். இதுவரையில் சுமந்திரன் போட்டதெல்லாம் சிறு புள்ளியே. இனி அதை வளர்த்து ஒரு வடிவமாக்க வேண்டுமானால் அதற்கான வேலைகள் அவசியமாகும். எந்தச் சிறு வாய்ப்பையும் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்தும் ஆற்றல் அவரிடம் உண்டு என்பதால், வாய்ப்புகளை உருவாக்கும் ஆற்றலையும் அவரால் வளர்த்துக் கொள்ள முடியும் என நம்புகிறேன். இதற்கு அவர் மக்களிடம் பல படிகள் இறங்கி வர வேண்டும். இல்லையென்றால் வரலாற்றின் தெரிவு இன்னொன்றாகி விடும். https://arangamnews.com/?p=10820
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போட்டியில் கலந்துகொண்ட @ரசோதரன் வெற்றிபெற வாழ்த்துக்கள்! இதுவரை போட்டியில் கலந்துகொண்டோர்.. 1 ஈழப்பிரியன் 2 வீரப் பையன்26 3 சுவி 4 நிலாமதி 5 குமாரசாமி 6 தியா 7 தமிழ் சிறி 8 புலவர் 9 P.S.பிரபா 10 நுணாவிலான் 11 பிரபா USA 12 வாதவூரான் 13 ஏராளன் 14 கிருபன் 15 ரசோதரன்
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இதுவரை போட்டியில் கலந்துகொண்டவர்கள்: 1 ஈழப்பிரியன் 2 வீரப் பையன்26 3 சுவி 4 நிலாமதி 5 குமாரசாமி 6 தியா 7 தமிழ் சிறி 8 புலவர் 9 P.S.பிரபா 10 நுணாவிலான் 11 பிரபா USA 12 வாதவூரான் 13 ஏராளன் 14 கிருபன்
-
ஈ.பி.டி.பி. எம்.பி. விகாரைக்கு நிதி ஒதுக்கீடு
இது குற்றச்சாட்டு இல்லை. சமூகவலை உலகமாக மாறியுள்ள இந்தக் காலத்தில் எல்லோரும் கேளிக்கைகளையே விரும்புகின்றனர். எதையும் கொண்டாடவே விரும்புகின்றனர். அண்மையில் முகநூலில் ஒரு கோவில் திருவிழாவின்போது குத்தாட்டப் பாடலுக்கு பெரும்தொகையான இளைஞர்கள் ஆடிக்கொண்டிருந்தனர். புலம்பெயர் நாடுகளில் நடனவிடுதிகள், அல்லது திறந்தவெளி இசைநிகழ்வுகளில் ஆடுவதுபோன்றே அவர்களும் ஆடுகின்றனர். அதுதான் நடப்பு நிலை.. அதனால்தான் பெரும்பாலோனார் முள்ளிவாய்க்கால் நிகழ்வுகளுக்குப் போவதைவிட, இந்திரவிழாவுக்கும், வெசாக் விழாக்களுக்கும் போகின்றனர். எங்கள் தலைமுறையினருக்கு தேசிய உணர்வை பாடசாலைகளில், தனியார் கல்விக்கூடங்களில் இருந்தே ஊட்டினர். அங்கு போராடப் போங்கள் என்று யாரும் நேரடியாகச் சொன்னதில்லை. ஆனால் போராட்ட சிந்தனைக்கு விதையை ஊன்றினார்கள். எனக்குக் கல்விகற்பித்த ஆசிரியர்களில் பலர் பகுத்தறிவோடு, இனவுணர்வையும், தமிழரின் பெருமிதங்களையும், அடக்குமுறைக்கு எதிரான போராட்டங்களின் வரலாறுகளையும் சொல்லித் தந்தனர். ஒரு சில ஆசிரியர்களின் பிள்ளைகள் ஆயுதப் போராட்டத்தில் இணைந்தும் இருந்தனர், உயிர்களைத் துறந்தும் இருந்தனர். இப்போது ஒழுக்கத்தையும், ஆளுமையையும் கற்பிக்க இராணுவத்தைக் கூப்பிடும் நிலை! இப்படியான மாற்றங்கள் உள்ள சமூகத்தில் தேசிய உணர்வு காணாமல் போவதில் வியப்பில்லை.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போட்டியில் நானும் குதித்துள்ளேன். 😀 # Question Team1 Team 2 Prediction முதல் சுற்றுப் போட்டி கேள்விகள் 1) முதல் 40) வரை. 1) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 2: 1:30 AM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் கனடா USA CAN USA 2) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 2: 3:30 PM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் பபுவா நியூகினி WI PNG WI 3) முதல் சுற்று குழு B: திங்கள் ஜூன் 3: 1:30 AM, பார்படோஸ், நமீபியா எதிர் ஓமான் NAM OMA NAM 4) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 3: 3:30 PM, நியூயோர்க், சிறிலங்கா எதிர் தென்னாபிரிக்கா SL SA SA 5) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 4: 1:30 AM, கயானா, ஆப்கானிஸ்தான் எதிர் உகண்டா AFG UGA AFG 6) முதல் சுற்று குழு B: செவ்வாய் ஜூன் 4: 3:30 PM, பார்படோஸ், இங்கிலாந்து எதிர் ஸ்கொட்லாந்து ENG SCOT ENG 7) முதல் சுற்று குழு D :செவ்வாய் ஜூன் 4: 4:30 PM, டாலஸ், நெதர்லாந்து எதிர் நேபாளம் NED NEP NEP 😎 முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 5: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் அயர்லாந்து IND IRL IND 9) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 6: 12:30 AM, கயானா, பபுவா நியூகினி எதிர் உகண்டா PNG UGA PNG 10) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 1:30 AM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் ஓமான் AUS OMA AUS 11) முதல் சுற்று குழு A: வியாழன் ஜூன் 6: 4:30 PM, டாலஸ், ஐக்கிய அமெரிக்கா எதிர் பாகிஸ்தான் USA PAK PAK 12) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 6: 8:00 PM, பார்படோஸ், நமீபியா எதிர் ஸ்கொட்லாந்து NAM SCOT SCOT 13) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 7: 3:30 PM, நியூயோர்க், கனடா எதிர் அயர்லாந்து CAN IRL IRL 14) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 8: 12:30 AM, கயானா, நியூஸிலாந்து எதிர் ஆப்கானிஸ்தான் NZ AFG NZ 15) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 1:30 AM, டாலஸ், சிறிலங்கா எதிர் பங்களாதேஷ் SL BAN BAN 16) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 8: 3:30 PM, நியூயோர்க், நெதர்லாந்து எதிர் தென்னாபிரிக்கா NED SA SA 17) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 8: 6:00 PM, பார்படோஸ், அவுஸ்திரேலியா எதிர் இங்கிலாந்து AUS ENG ENG 18) முதல் சுற்று குழு C :ஞாயிறு ஜூன் 9: 1:30 AM, கயானா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் உகண்டா WI UGA WI 19) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 9: 3:30 PM, நியூயோர்க், இந்தியா எதிர் பாகிஸ்தான் IND PAK IND 20) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 9: 6:00 PM, அன்ரிகுவா, ஓமான் எதிர் ஸ்கொட்லாந்து OMA SCOT SCOT 21) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 10: 3:30 PM, நியூயோர்க், தென்னாபிரிக்கா எதிர் பங்களாதேஷ் SA BAN SA 22) முதல் சுற்று குழு A: செவ்வாய் ஜூன் 11: 3:30 PM, நியூயோர்க், பாகிஸ்தான் எதிர் கனடா PAK CAN PAK 23) முதல் சுற்று குழு D :புதன் ஜூன் 12: 12:30 AM, புளோரிடா, சிறிலங்கா எதிர் நேபாளம் SL NEP SL 24) முதல் சுற்று குழு B: புதன் ஜூன் 12: 1:30 AM, அன்ரிகுவா, அவுஸ்திரேலியா எதிர் நமீபியா AUS NAM AUS 25) முதல் சுற்று குழு A: புதன் ஜூன் 12: 3:30 PM, நியூயோர்க், ஐக்கிய அமெரிக்கா எதிர் இந்தியா USA IND IND 26) முதல் சுற்று குழு C :வியாழன் ஜூன் 13: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் நியூஸிலாந்து WI NZ WI 27) முதல் சுற்று குழு D :வியாழன் ஜூன் 13: 3:30 PM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நெதர்லாந்து BAN NED BAN 28) முதல் சுற்று குழு B: வியாழன் ஜூன் 13: 8:00 PM, அன்ரிகுவா, இங்கிலாந்து எதிர் ஓமான் ENG OMA ENG 29) முதல் சுற்று குழு C :வெள்ளி ஜூன் 14: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, ஆப்கானிஸ்தான் எதிர் பபுவா நியூகினி AFG PNG AFG 30) முதல் சுற்று குழு A: வெள்ளி ஜூன் 14: 3:30 PM, புளோரிடா, ஐக்கிய அமெரிக்கா எதிர் அயர்லாந்து USA IRL IRL 31) முதல் சுற்று குழு D :சனி ஜூன் 15: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், தென்னாபிரிக்கா எதிர் நேபாளம் SA NEP SA 32) முதல் சுற்று குழு C :சனி ஜூன் 15: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் உகண்டா NZ UGA NZ 33) முதல் சுற்று குழு A: சனி ஜூன் 15: 3:30 PM, புளோரிடா, இந்தியா எதிர் கனடா IND CAN IND 34) முதல் சுற்று குழு B: சனி ஜூன் 15: 6:00 PM, அன்ரிகுவா, நமீபியா எதிர் இங்கிலாந்து NAM ENG ENG 35) முதல் சுற்று குழு B: ஞாயிறு ஜூன் 16: 1:30 AM, செயின்ற் லூஷியா, அவுஸ்திரேலியா எதிர் ஸ்கொட்லாந்து AUS SCOT AUS 36) முதல் சுற்று குழு A: ஞாயிறு ஜூன் 16: 3:30 PM, புளோரிடா, பாகிஸ்தான் எதிர் அயர்லாந்து PAK IRL PAK 37) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 12:30 AM, செயின்ற் வின்சென்ற், பங்களாதேஷ் எதிர் நேபாளம் BAN NEP BAN 38) முதல் சுற்று குழு D :திங்கள் ஜூன் 17: 1:30 AM, செயின்ற் லூஷியா, சிறிலங்கா எதிர் நெதர்லாந்து SL NED SL 39) முதல் சுற்று குழு C :திங்கள் ஜூன் 17: 3:30 PM, ட்ற்னிடாட் & ரொபேகோ, நியூஸிலாந்து எதிர் பபுவா நியூகினி NZ PNG NZ 40) முதல் சுற்று குழு C :செவ்வாய் ஜூன் 18: 1:30 AM, செயின்ற் லூஷியா, மேற்கிந்தியத் தீவுகள் எதிர் ஆப்கானிஸ்தான் WI AFG WI முதல் சுற்று குழு A: 41) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND PAK Select PAK PAK CAN Select CAN IRL Select IRL USA Select USA 42) முதல் சுற்று குழு A போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 41) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #A1 - ? (2 புள்ளிகள்) IND #A2 - ? (1 புள்ளிகள்) PAK 43) முதல் சுற்று குழு A போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! CAN முதல் சுற்று குழு B: 44) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) ENG Select ENG ENG AUS Select AUS AUS NAM Select NAM SCOT Select SCOT OMA Select OMA 45) முதல் சுற்று குழு B போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 16) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #B1 - ? (2 புள்ளிகள்) ENG #B2 - ? (1 புள்ளிகள்) AUS 46) முதல் சுற்று குழு B போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! OMA முதல் சுற்று குழு C : 47) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) NZ Select NZ NZ WI Select WI WI AFG Select AFG PNG Select PNG UGA Select UGA 48) முதல் சுற்று குழு C போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 47) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #C1 - ? (2 புள்ளிகள்) WI #C2 - ? (1 புள்ளிகள்) NZ 49) முதல் சுற்று குழு C போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! UGA முதல் சுற்று குழு D : 50) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) SA Select SA SA SL Select SL BAN Select BAN BAN NED Select NED NEP Select NEP 51) முதல் சுற்று குழு D போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 50) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 3 புள்ளிகள் கிடைக்கலாம்) #D1 - ? (2 புள்ளிகள்) SA #D2 - ? (1 புள்ளிகள்) BAN 52) முதல் சுற்று குழு D போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NED சுப்பர் 8 சுற்றுப் போட்டி கேள்விகள் 53) முதல் 64) வரை. 53) சுப்பர் 8: குழு 2: புதன் ஜூன் 19: 3:30 PM, அன்ரிகுவா, A2 எதிர் D1 PAK SA PAK 54) சுப்பர் 8: குழு 2: வியாழன் ஜூன் 20: 1:30 AM, செயின்ற் லூஷியா, B1 எதிர் C2 ENG NZ ENG 55) சுப்பர் 8: குழு 1: வியாழன் ஜூன் 20: 3:30 PM, பார்படோஸ், C1 எதிர் A1 WI IND IND 56) சுப்பர் 8: குழு 1: வெள்ளி ஜூன் 21: 1:30 AM, அன்ரிகுவா, B2 எதிர் D2 AUS BAN AUS 57) சுப்பர் 8: குழு 2: வெள்ளி ஜூன் 21: 3:30 PM, செயின்ற் லூஷியா, B1 எதிர் D1 ENG SA ENG 58) சுப்பர் 8: குழு 2: சனி ஜூன் 22: 1:30 AM, பார்படோஸ், A2 எதிர் C2 PAK NZ PAK 59) சுப்பர் 8: குழு 1: சனி ஜூன் 22: 3:30 PM, அன்ரிகுவா, A1 எதிர் D2 IND BAN IND 60) சுப்பர் 8: குழு 1: ஞாயிறு ஜூன் 23: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் B2 WI AUS AUS 61) சுப்பர் 8: குழு 2: ஞாயிறு ஜூன் 23: 3:30 PM, பார்படோஸ், A2 எதிர் B1 PAK ENG ENG 62) சுப்பர் 8: குழு 2: திங்கள் ஜூன் 24: 1:30 AM, அன்ரிகுவா, C2 எதிர் D1 NZ SA SA 63) சுப்பர் 8: குழு 1: திங்கள் ஜூன் 24: 3:30 PM, செயின்ற் லூஷியா, B2 எதிர் A1 AUS IND AUS 64) சுப்பர் 8: குழு 1: செவ்வாய் ஜூன் 25: 1:30 AM, செயின்ற் வின்சென்ற், C1 எதிர் D2 WI BAN WI சுப்பர் 8 குழு 1: 65) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) IND Select IND IND AUS Select AUS AUS WI Select WI BAN Select BAN 66) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 65) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 1A - ? (3 புள்ளிகள்) AUS #அணி 1B - ? (2 புள்ளிகள்) IND 67) சுப்பர் 8 சுற்று குழு 1 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! BAN சுப்பர் 8 குழு 2: 68) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகள் எவை? சரியான பதில் ஒவ்வொன்றுக்கும் தலா 2 புள்ளிகள் வீதம் வழங்கப்படும் (அதிகபட்சம் 4 புள்ளிகள் கிடைக்கலாம்) PAK Select PAK PAK ENG Select ENG ENG NZ Select NZ SA Select SA 69) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் முன்னணியில் வரும் இரண்டு அணிகளையும் சரியான வரிசையில் பட்டியல் இடுக. கேள்வி 68) க்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட அணிகள் மாத்திரமே ஏற்றுக்கொள்ளப்படும். (அதிக பட்சம் 5 புள்ளிகள் கிடைக்கலாம்) #அணி 2A - ? (2 புள்ளிகள்) ENG #அணி 2B - ? (1 புள்ளிகள்) PAK 70) சுப்பர் 8 சுற்று குழு 2 போட்டிகளில் இறுதியாக வரும் அணி எது? சரியான பதிலுக்கு 1 புள்ளி வழங்கப்படும்! NZ அரையிறுதிப் போட்டிகள்: அரைரையிறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 66)க்கும் 69) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றினையே பின்வரும் கேள்விகளுக்கு பதிலளிக்கப் பாவிக்கவேண்டும். 71) முதலாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 1: வியாழன் ஜூன் 27: 1:30 AM, ட்ற்னிடாட் & ரொபேகோ, அணி 1A (குழு 1 முதல் இடம்) எதிர் அணி 2B (குழு 2 இரண்டாவது இடம்) AUS 72) இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (3 புள்ளிகள்) அரையிறுதி 2: வியாழன் ஜூன் 27: 3:30 PM, கயானா, அணி 2A (குழு 2 முதல் இடம்) எதிர் அணி 1B (குழு 1 இரண்டாவது இடம்) IND இறுதிப் போட்டி: இறுதிப் போட்டிக்குரிய அணிகள் கேள்விகள் 71)க்கும் 72) க்கும் கொடுக்கப்பட்ட விடைகளில் உள்ளன. இவற்றில் ஒன்றையே பதிலாகத் தரவேண்டும். 73) உலகக்கிண்ணப் போட்டியில் வெற்றி பெறும் அணி எது? (5 புள்ளிகள்) சனி ஜூன் 29: 3:30 PM, பார்படோஸ் அரையிறுதி 1 இல் வெற்றி பெறும் அணி எதிர் அரையிறுதி 2 இல் வெற்றி பெறும் அணி IND உலகக் கிண்ண சாதனை படைக்கும் அணிகள்/வீரர்கள்: 74) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) ENG 75) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (3 புள்ளிகள்) CAN 76) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Mohammad Rizwan 77) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 76 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) IND 78) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Adam Zampa 79) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 78 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) ENG 80) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள் ) Babar Azam 81) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 80 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 82) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Shaheen Afridi 83) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 82 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS 84) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு 4 புள்ளிகள்) Virat Kohli 85) இந்த தொடரில் சிறந்த ஆட்டக்காரர் (Player of the Tournament) எந்த அணியை சேர்ந்தவர்? (3 புள்ளிகள், கேள்வி 84 க்கு கொடுக்கப்பட்ட வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) AUS
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
Typo ஐ சுட்டிக் காட்டியமைக்கு நன்றி @ஏராளன். கூகிள் ஷீற்றில் திருத்தியுள்ளேன். போட்டியில் வெற்றிபெற வாழ்த்துக்கள். இறுதியாக வரும் அணிகளுக்கான பதில்களைத் தரவில்லை @ஏராளன். கேள்விகள் 43), 46), 49), 52), 67), 70) மீண்டும் பாருங்கள்!
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கடினமான சூழ்நிலையிலும் யாழ்களப் போட்டியில் கலந்துகொண்ட @வாதவூரான் வெற்றிபெற வாழ்த்துக்கள்.
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட் போட்டி 2024 இறுதி நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கல்யாணி 74 2 நுணாவிலான் 74 3 கந்தப்பு 58 4 நிலாமதி 56 5 கிருபன் 56 6 சுவி 54 7 முதல்வன் 48 8 அஹஸ்தியன் 48 9 வாதவூரான் 48 10 புலவர் 46 11 வீரப் பையன்26 44 12 ஏராளன் 44 13 ஈழப்பிரியன் 42 14 எப்போதும் தமிழன் 42 15 நீர்வேலியான் 42 16 கறுப்பி 40 17 கோஷான் சே 26 தொடர்ந்தும் பல கேள்விகளில் முன்னணியில் நின்று வெற்றி பெற்ற @kalyani க்கு வாழ்த்துக்கள்! தொடர்ந்தும் இரண்டாவது நிலையில் நிற்கும் @nunavilan க்கும் வாழ்த்துக்கள்! இறுதிக் கேள்விகளில் பதில்களைச் சரியாகக் கணித்து மூன்றாவது இடத்திற்கு முன்னேறிய @கந்தப்பு க்கும் வாழ்த்துக்கள். போட்டியில் பங்குபற்றி இறுதிப் படியில் நிற்கும் @goshan_che அடுத்த தடவை மேலெழும்ப வாழ்த்துக்கள்! போட்டியில் கலந்துகொண்டவர்களுக்கும், உற்சாகமாக பலரைப் பங்குபற்ற அயராது உழைத்த @வீரப் பையன்26க்கும் @ஈழப்பிரியன் ஐயாவுக்கும் நன்றி பல.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
@kalyani, @கந்தப்பு, @முதல்வன், @Ahasthiyan, @நீர்வேலியான், @Eppothum Thamizhan, @கறுப்பி, @goshan_che, @சுவைப்பிரியன், @ரசோதரன் இன்னும் ஒருநாள்தான் உள்ளது. கலந்துகொண்டால் சிறப்பு! போட்டி முடிவு திகதி வெள்ளி 31 மே 2024 பிரித்தானிய நேரம் இரவு 10 மணி. யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024 கூகிள் ஷீற்றைப் பயன்படுத்தி பதில்களைப் பதிந்தால் தரவேற்ற உதவியாக இருக்கும். https://docs.google.com/spreadsheets/d/1lHvsIOJ4JmDZJ3zcOty944J-wzK0Opz-2n0AAQ5lmRs/edit?usp=sharing
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இறுதியாகவுள்ள கேள்விகள் 14) இலிருந்து 20) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன. ---------------------------------------------------------- 14) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள் ) Marcus Stoinis LSG 124* ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை! போட்டியாளர் பதில் வீரப் பையன்26 Yashasvi Jaiswal முதல்வன் Virat Kohli சுவி Shubman Gill ஏராளன் Virat Kohli நிலாமதி Virat Kohli அஹஸ்தியன் Jos Buttler ஈழப்பிரியன் Virat Kohli கல்யாணி Riyan Parag கந்தப்பு Virat Kohli கறுப்பி Virat Kohli எப்போதும் தமிழன் Virat Kohli வாதவூரான் Virat Kohli கிருபன் Virat Kohli நீர்வேலியான் Jos Buttler கோஷான் சே Virat Kohli நுணாவிலான் Virat Kohli புலவர் Virat Kohli 15) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 14 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) MP Stoinis LSG 124* ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை! போட்டியாளர் பதில் வீரப் பையன்26 RR முதல்வன் SRH சுவி GT ஏராளன் RCB நிலாமதி KKR அஹஸ்தியன் RR ஈழப்பிரியன் RCB கல்யாணி RR கந்தப்பு RCB கறுப்பி GT எப்போதும் தமிழன் SRH வாதவூரான் SRH கிருபன் RCB நீர்வேலியான் RCB கோஷான் சே RCB நுணாவிலான் RCB புலவர் RR 16) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sandeep Sharma RR Ov:4.0 R:18 W:5 E:4.50 ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை! போட்டியாளர் பதில் வீரப் பையன்26 Mustafizur Rahman முதல்வன் Jasprit Bumrah சுவி Ravichandran Ashwin ஏராளன் Jasprit Bumrah நிலாமதி Jasprit Bumrah அஹஸ்தியன் Jasprit Bumrah ஈழப்பிரியன் Jasprit Bumrah கல்யாணி Jasprit Bumrah கந்தப்பு Jasprit Bumrah கறுப்பி Jasprit Bumrah எப்போதும் தமிழன் Jasprit Bumrah வாதவூரான் Jasprit Bumrah கிருபன் Jasprit Bumrah நீர்வேலியான் Jasprit Bumrah கோஷான் சே Jasprit Bumrah நுணாவிலான் Jasprit Bumrah புலவர் Matheesha Pathirana 17) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக விக்கெட் எடுக்கும் பந்து வீச்சாளர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 16 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Sandeep Sharma RR Ov:4.0 R:18 W:5 E:4.50 போட்டியாளர் பதில் வீரப் பையன்26 CSK முதல்வன் MI சுவி KKR ஏராளன் MI நிலாமதி MI அஹஸ்தியன் MI ஈழப்பிரியன் MI கல்யாணி MI கந்தப்பு MI கறுப்பி MI எப்போதும் தமிழன் MI வாதவூரான் MI கிருபன் MI நீர்வேலியான் RR கோஷான் சே MI நுணாவிலான் MI புலவர் CSK 11) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the Series/Most Valuable Player) யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Sunil Narine KKR போட்டியாளர் பதில் வீரப் பையன்26 Shivam Dube முதல்வன் Virat Kohli சுவி Rohit Sharma ஏராளன் Jos Buttler நிலாமதி Jos Buttler அஹஸ்தியன் Riyan Parag ஈழப்பிரியன் Jos Buttler கல்யாணி Sunil Narine கந்தப்பு Sunil Narine கறுப்பி Shubman Gill எப்போதும் தமிழன் Jos Buttler வாதவூரான் Virat Kohli கிருபன் Sanju Samson நீர்வேலியான் Sanju Samson கோஷான் சே Virat Kohli நுணாவிலான் Sunil Narine புலவர் Virat Kohli 19) இந்த தொடரில் சிறந்த் ஆட்டக்காரர் (Player of the season) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 18 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) போட்டியாளர் பதில் வீரப் பையன்26 CSK முதல்வன் RR சுவி RR ஏராளன் RR நிலாமதி RR அஹஸ்தியன் RR ஈழப்பிரியன் RR கல்யாணி KKR கந்தப்பு KKR கறுப்பி GT எப்போதும் தமிழன் CSK வாதவூரான் CSK கிருபன் RR நீர்வேலியான் RR கோஷான் சே CSK நுணாவிலான் KKR புலவர் RR 20) இந்த தொடரில் Fair Play Award யை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) Sunrisers Hyderabad (SRH) போட்டியாளர் பதில் வீரப் பையன்26 CSK முதல்வன் SRH சுவி CSK ஏராளன் CSK நிலாமதி SRH அஹஸ்தியன் SRH ஈழப்பிரியன் SRH கல்யாணி SRH கந்தப்பு SRH கறுப்பி SRH எப்போதும் தமிழன் SRH வாதவூரான் SRH கிருபன் SRH நீர்வேலியான் CSK கோஷான் சே DC நுணாவிலான் SRH புலவர் CSK
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
நன்றி. பத்துப் பேருக்கு மேல் பங்குபற்றியுள்ளதால் போட்டி கட்டாயம் நடக்கும் 😀
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
கேள்விகள் 08) இலிருந்து 13) வரைக்கான கணிப்புக்களும், சரியான பதில்களும் கீழே தரப்பட்டுள்ளன. ---------------------------------------------------------- 08) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் அதிக ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) SRH 287/3 போட்டியாளர் பதில் வீரப் பையன்26 SRH முதல்வன் SRH சுவி SRH ஏராளன் SRH நிலாமதி SRH அஹஸ்தியன் SRH ஈழப்பிரியன் SRH கல்யாணி SRH கந்தப்பு SRH கறுப்பி SRH எப்போதும் தமிழன் SRH வாதவூரான் SRH கிருபன் SRH நீர்வேலியான் SRH கோஷான் சே CSK நுணாவிலான் SRH புலவர் CSK 09) இந்த தொடரில் ஏதாவது ஒரு போட்டியில் குறைந்த ஓட்டங்களை பெறும் அணி எது? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி) GT 89 - All out (17.3 Ov) போட்டியாளர் பதில் வீரப் பையன்26 PBKS முதல்வன் RCB சுவி LSG ஏராளன் MI நிலாமதி LSG அஹஸ்தியன் GT ஈழப்பிரியன் GT கல்யாணி GT கந்தப்பு GT கறுப்பி RR எப்போதும் தமிழன் GT வாதவூரான் RCB கிருபன் GT நீர்வேலியான் GT கோஷான் சே RCB நுணாவிலான் GT புலவர் GT 10) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் (Orange cap) பெறும் வீரர் யார்? ( சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Virat Kohli RCB - 741 Runs போட்டியாளர் பதில் வீரப் பையன்26 Virat Kohli முதல்வன் Virat Kohli சுவி Virat Kohli ஏராளன் Virat Kohli நிலாமதி Virat Kohli அஹஸ்தியன் Riyan Parag ஈழப்பிரியன் Jos Buttler கல்யாணி Riyan Parag கந்தப்பு Riyan Parag கறுப்பி Jos Buttler எப்போதும் தமிழன் Jos Buttler வாதவூரான் Virat Kohli கிருபன் Sanju Samson நீர்வேலியான் Riyan Parag கோஷான் சே Riyan Parag நுணாவிலான் Riyan Parag புலவர் Virat Kohli 11) இந்த தொடரில் அதிக ஒட்டங்கள் பெறுபவர் (Orange cap) எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 10 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) Virat Kohli RCB - 741 Runs போட்டியாளர் பதில் வீரப் பையன்26 RCB முதல்வன் RCB சுவி RCB ஏராளன் RCB நிலாமதி RCB அஹஸ்தியன் RR ஈழப்பிரியன் RCB கல்யாணி RR கந்தப்பு RR கறுப்பி RCB எப்போதும் தமிழன் RR வாதவூரான் RCB கிருபன் RCB நீர்வேலியான் KKR கோஷான் சே RR நுணாவிலான் RR புலவர் RR 12) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறும் வீரர் யார்? (சரியான பெயரைக் குறிப்பிடுபவருக்கு +4 புள்ளிகள், தவறான பெயருக்கு -2 புள்ளிகள்) Harshal Patel PBKS - 24 Wickets ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை! போட்டியாளர் பதில் வீரப் பையன்26 Mustafizur Rahman முதல்வன் Yuzvendra Chahal சுவி Yuzvendra Chahal ஏராளன் Yuzvendra Chahal நிலாமதி Yuzvendra Chahal அஹஸ்தியன் Yuzvendra Chahal ஈழப்பிரியன் Yuzvendra Chahal கல்யாணி Jasprit Bumrah கந்தப்பு Yuzvendra Chahal கறுப்பி Yuzvendra Chahal எப்போதும் தமிழன் Yuzvendra Chahal வாதவூரான் Yuzvendra Chahal கிருபன் Yuzvendra Chahal நீர்வேலியான் Yuzvendra Chahal கோஷான் சே Mustafizur Rahman நுணாவிலான் Jasprit Bumrah புலவர் Jasprit Bumrah 13) இந்த தொடரில் அதிக விக்கற்றுகள் (Purple cap) பெறுபவர் எந்த அணியை சேர்ந்தவர்? (சரியான பதில்: +3 புள்ளிகள், தவறான பதில்: -1 புள்ளி, கேள்வி 12 க்கான வீரர் இந்தப் பதிலுக்கான அணியில் இருக்கவேண்டிய அவசியமில்லை! ) ஒருவரும் சரியாகக் கணிக்கவில்லை! போட்டியாளர் பதில் வீரப் பையன்26 CSK முதல்வன் RR சுவி RR ஏராளன் RCB நிலாமதி RR அஹஸ்தியன் RR ஈழப்பிரியன் CSK கல்யாணி MI கந்தப்பு RR கறுப்பி CSK எப்போதும் தமிழன் RR வாதவூரான் RR கிருபன் MI நீர்வேலியான் CSK கோஷான் சே CSK நுணாவிலான் MI புலவர் MI கேள்விகள் 08) இலிருந்து 13) வரைக்கான பதில்களின் பின்னர் யாழ் கள போட்டியாளர்களின் நிலை: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கல்யாணி 70 2 நுணாவிலான் 70 3 சுவி 64 4 நிலாமதி 62 5 கிருபன் 62 6 புலவர் 56 7 வீரப் பையன்26 54 8 முதல்வன் 54 9 ஏராளன் 54 10 அஹஸ்தியன் 54 11 கந்தப்பு 54 12 வாதவூரான் 54 13 ஈழப்பிரியன் 48 14 எப்போதும் தமிழன் 48 15 நீர்வேலியான் 48 16 கறுப்பி 46 17 கோஷான் சே 36
-
யாழ் கள ஐபிஎல் T20 கிரிக்கெட்போட்டி - 2024
இறுதிப் போட்டி முடிவின் பின்னர் யாழ்களப் போட்டியாளர்களின் நிலைகள்: நிலை போட்டியாளர் புள்ளிகள் 1 கல்யாணி 70 2 நுணாவிலான் 70 3 சுவி 58 4 கிருபன் 58 5 நிலாமதி 56 6 அஹஸ்தியன் 54 7 கந்தப்பு 54 8 புலவர் 54 9 வீரப் பையன்26 48 10 முதல்வன் 48 11 ஏராளன் 48 12 எப்போதும் தமிழன் 48 13 வாதவூரான் 48 14 நீர்வேலியான் 48 15 கறுப்பி 46 16 ஈழப்பிரியன் 44 17 கோஷான் சே 44
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போட்டியில் கலந்துகொண்ட நுணாவிலானும் பிரபா USA உம் வெற்றிபெற வாழ்த்துக்கள்.. நாளைதான் கலந்துகொள்ள இறுதிநாள். எனவே கலந்துகொள்ள விரும்புவோர் விரைந்து பதில்களைப் பதியுங்கள்..
-
ஈ.பி.டி.பி. எம்.பி. விகாரைக்கு நிதி ஒதுக்கீடு
நான் இலங்கையன் என்று ஒருபோதும் சொல்லுவதில்லை. பிறந்தது இலங்கை என்றாலும் இலங்கையன்/ஶ்ரீலங்கன் எனும் அடையாளத்தில் உள்ள வெறுப்பு இன்னும் குறையவில்லை. ஆனால் மடச்சாம்பிராணிகளாக இருக்கும் தமிழ் அரசியல்வாதிகளால் தமிழ் மக்களை ஒரு இனமாக திரட்டமுடியாமல் இருப்பதைத்தான் கடந்த 15 வருட வரலாறு சொல்கின்றது. வளர்ந்து வரும் இளைஞர்கள் தேசிய உணர்வுகளை அடையாளநாட்களில் மட்டும் காட்டுவார்கள். மற்றும்படி கேளிக்கை மனநிலையில்தான் உள்ளனர். அது அவர்களின் தவறும் இல்லை.
-
ஈ.பி.டி.பி. எம்.பி. விகாரைக்கு நிதி ஒதுக்கீடு
கிளிநொச்சி யாழ்ப்பாண தேர்தல் மாவட்டத்தில் உள்ளது. வன்னியில் வாக்களிப்பின்போது தேசியக் கட்சிகள் பிளவுபட்டு தேர்தலில் நின்றதால்தான் ஈபிடிபிக்கு ஒரு ஆசனம் கிடைத்தது! அடுத்தமுறை இரண்டு கிடைக்கலாம்!
-
நம்பிக்கையை இழந்து செல்லும் தமிழ்ச்சமூகம்
பொதுவேட்பாளர் என்ற ‘மாயமான்’ May 30, 2024 — கருணாகரன் — (03) “தமிழ் மக்கள் தேசமாகத் திரள வேண்டும்” என்பதை மந்திர உச்சாடனம் போல, ஒரு சாரார் தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டிருக்கின்றனர். தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி தொடக்கம் “தமிழ்ப் பொது வேட்பாளர்(?)”என்ற எண்ணக் கருவை வலியுறுத்துவோர் வரையில் இதில் உள்ளடக்கம். அப்படித் தேசமாகத் தமிழ் மக்கள் திரண்டால் அதற்கு அடுத்த கட்டமாக என்ன செய்வது என்று இவர்களுக்குத் தெரியாது. அதைப்பற்றி அவர்கள் எங்கேயும் எதுவும் சொன்னதில்லை. (சொல்லப்போவதுமில்லை. ஏனென்றால் அதைப்பற்றி இவர்களுக்கு எதுவுமே தெரியாது). அதைச் சொல்ல வேண்டுமானால், அதற்குரிய செயலுக்குச் செல்ல வேண்டும். அதொரு போராட்டம். அதைப்பற்றி முறையாகத் திட்டமிட வேண்டும். அதொரு பெரும்பணியாகும். அதற்கான அர்ப்பணிப்பையும் உழைப்பையும் கொடுக்க வேண்டியதாகும். இப்போதுள்ளதைப்போல தேர்தற் கூட்டுக்காக (பதவிகளுக்காக) மட்டும் கட்சிகள் கூடிப் பேசுவதோ, அதே தேர்தல் விடயங்களுக்காக உடைந்து உடைந்து பிரிந்து செல்வதோ அல்ல. அதைப்போல “சிவில் சமூகப் பிரதிநிதிகள்”, “பல்கலைக்கழக சமூகத்தினர்” என்ற போர்வையில் அரசியற் கட்சிகளையும் அவற்றின் தலைவர்களையும் சந்தித்துப் பேசுவதாலோ, அவர்களுடைய மேடைகளைப் பகிர்வதாலோ எந்தப் புத்தாக்கமும் நிகழ்ந்துவிடாது. அல்லது புலம்பெயர் ஊட்டங்களுக்காகவும் சில தொண்டு அமைப்புகளின் நிகழ்ச்சி நிரலுக்காகவும் ஓடித்திரிவதாலும் தமிழரின் அரசியலில் முன்னேற்றத்தைக் காண முடியாது. இந்தத் தரப்புகளோடு மல்லுக் கட்டுவதை விட மக்களிடம் சென்று வேலை செய்தால், அது அந்த மக்களுக்கான ஆறுதலாகக் கூட இருக்கும். யுத்தம் முடிந்த கையோடு பாதிக்கப்பட்ட பிரதேசங்களில், பாதிக்கப்பட்ட மக்களோடு உளஆற்றுகைப் பணியில் ஈடுபட்டுவரும் மருத்துவர்களோடு வேலை செய்கின்ற அனுபவத்தில் சொல்கிறேன், லட்சக்கணக்கான மக்கள் உள நெருக்கடி, பொருளாதார நெருக்கடி, சமூக நெருக்கடி, அரசியல் நெருக்கடி எனப் பல பிரச்சினைகளிலிருந்து மீள முடியாமல் தத்தளிக்கின்றனர். சொந்த மக்கள் (உடன்பிறந்தவர்களைப் போன்றவர்கள்) இப்படி நெருக்கடியில் தவிக்கும்போது எப்படி உங்களால் இந்த மக்களிடம் இறங்கி வர முடியாமல், தலைவர்களையும் பிரமுகர்களையும் மதபீடங்களையும் மட்டும் சுற்ற முடிகிறது? எப்படி பிறருடைய நிகழ்ச்சி நிரலில் இயங்கக் கூடியதாக உள்ளது? உண்மையான மக்கள் நேயம் (மனித நேயம்) என்பது என்ன? “தேசமாகச் சிந்தித்தல் என்று சொல்கிறீர்களே!” அது இந்த மக்களை அடிப்படையாகக் கொண்டதுதானே! அதாவது, தேசம் என்பது பிரதானமாக மக்களை உள்ளடக்கியதுதானே! அந்த மக்களின் உளநிலையை அறிந்த மருத்துவர்களிடமும் மெய்யான சமூகச் செயற்பாட்டாளர்களிடத்திலும் உரையாடி அறிந்து பாருங்கள், உண்மை என்னவென்று தெரியும். யதார்த்த நிலை என்னவென்று புரியும். அதை அப்படியே ஒரு வர்ணமாகத் தீட்டிப் பாருங்கள். தேசம் இருண்டுபோயிருக்கும். அந்தளவுக்குத் துயரும் அவலமும் நிரம்பிய பரப்பு அது. எளியதொரு (வலிய) உண்மை. வடக்குக் கிழக்கில் சாப்பிடாமல் பாடசாலைக்குச் செல்கின்ற மாணவர்களின் எண்ணிக்கையை அறிந்து பாருங்கள். உங்களுடைய பிள்ளை ஒரு வேளையாவது உண்ணாமல் பாடசாலைக்குச் சென்றதா? என்பதையும் ஒரு தடவை உங்கள் இதயத்தில் கை வைத்துச் சொல்லுங்கள். இப்படிப் பல விடயங்கள் உண்டு. இதையெல்லாம் ஒரு போதுமே இவர்கள் சிந்திக்கப்போவதில்லை. ஆனாலும் தேசமாகத் திரண்டால், அடுத்த கட்டம் என்ன என்ற கேள்வியை இந்தக் கட்டுரையிலும் எழுப்புவோம். இனியாவது பதில் சொல்கிறார்களா என்று பார்ப்போம். தவிர, தமிழ் மக்கள் தேசமாக – ஒன்றாகத் திரள்வதொன்றும் புதிய விசயமேயல்ல. கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாகத் தமிழ் மக்கள் அப்படித் தேசமாகத் திரண்டே உள்ளனர். தமிழரசுக் கட்சியை, பிறகு தமிழர் விடுதலைக் கூட்டணியை, பிறகு இயக்கங்களை, பிறகு விடுதலைப்புலிகளை, கூடவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை, அது உடைந்து சிதறிய பிறகும் தமிழ்த்தேசியக் கட்சிகளை எல்லாம் தமிழ் மக்கள் ஆதரித்து நிற்பது தேசமாகத் திரண்ட (அந்த உணர்வின்) அடிப்படையில்தானே!. ஏன், 2010, 2015, 2020 ஆகிய ஆண்டுகளில் நடந்த ஜனாதிபதித் தேர்தல்களில் வடக்குக் கிழக்குத் தமிழ் மக்களின் வாக்களிப்பு வீதத்தையும் வாக்களித்த முறையையும் ஒரு தடவை படமாக வரைந்து பாருங்கள். தமிழீழ வரைபடம் அப்படியே தெரியும். அது தமிழ்த் தேசியக் கட்சிகளின் வேண்டுகோளுக்கு அமைய – தேசமாகத் திரண்டு வாக்களித்ததால்தானே வந்தது. இந்த 60 ஆண்டுகளிலும் ஏற்படுத்தப்பட்ட மிகப் பெரிய நெருக்கடிகள், சவால்கள், உயிர் அச்சுறுத்தல்கள், இழப்புகள், அலைச்சல்களின் மத்தியிலும் தங்கள் விடுதலை வேட்கையையும் அரசியல் உணர்வையும் தமிழ் மக்கள் விட்டு விடவில்லை. (இதைப் புரிந்து கொள்ளக் கூடிய அறிவுக் கண்ணை இன்று சிலர் இழந்து விட்டனர் போலும்). இவ்வாறு அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகத் தேசமாகத் திரண்டு நிற்கும் மக்களுக்கு கிடைத்தது என்ன? தமிழ்த்தலைமைகள் பெற்றுக் கொடுத்தது என்ன? இந்தக் கேள்வியை இந்தக் கட்டுரையாளரும் தனக்குள் பொறுப்பெடுத்துக் கொள்கிறார். இப்படித் திரண்டு நிற்கும் தமிழ் மக்களுடைய சமூக, அரசியல், பொருளாதார விடுதலையையும் மேம்பாட்டையும் (தேவைகளையும்) நிறைவேற்ற முடியாத போதுதான், மக்கள் இந்த அரசியலை விட்டு (தமிழ்த்தேசியத் தரப்பை விட்டு) விலகிச் செல்ல முற்படுகிறார்கள். இது ஆபத்தான ஒரு நிலையே. ஆனால், இதைப் புரிந்து கொண்டு மாற்றங்களை நிகழ்த்தாத வரையில் மக்கள் மாறிச் செல்வதைக் கட்டுப்படுத்த முடியாது. தங்களை வைத்து அல்லது தங்களை ஏமாற்றி இந்தத் தலைமைகளும் அவர்களுக்குத் தொண்டு செய்வோரும் அரசியற் பிழைப்பு நடத்துகின்றனர் என்ற எண்ணம் அவர்களுக்கு ஏற்படுகிறது. அது இவர்களின் மீது சலிப்பையும் ஏமாற்றத்தையும் அளிக்கிறது. கோபத்தை உண்டாக்குகிறது. இதைச் சமாளித்துக் கொள்வதற்கு இன்னொரு பெரிய புரட்டைச் செய்ய முற்படுகின்றன தமிழ்த் தலைமைகள். நடக்கவே நடக்காத இன்னொரு பெரிய புலுடாவை விடுகின்றன. ஆம், தமிழ் தலைமைகளும் அவர்களுக்குக் காவடி தூக்குகின்ற தமிழ் ஊடகர்களும் இப்படியான தோல்விச் சூழலில்தான் மக்களைத் திசை திருப்பும் புதிய தந்திரோபாயங்களைச் செய்கிறார்கள். இதற்கு ஒரு எளிய உதாரணத்தையும் வரலாற்று உண்மையையும் கூறலாம். 1970 களில் தமிழரசுக் கட்சியின் “வாய்ச் சவடால்” அரசியலுக்கு பெரிய தொய்வு ஏற்பட்டது. அதுவரையிலும் வீராவேசப் பேச்சுகளையும் பெரும் பிரகடனங்களையும் (பார்க்க – அன்றைய சுதந்திரன் பத்திரிகையை) செய்து வந்த தமிழரசுக் கட்சியினால் அடுத்த கட்டப் போராட்டத்தை முன்னெடுக்க முடியாமல் போனது. (இப்போது தமிழ்த் தேசிய அரசியற் தரப்புகளின் மீது ஏற்பட்டிருப்பதைப் போன்ற நிலை அது. தமிழரசுக் கட்சிக்கான மதிப்பு என்பது அது 1950, 60 களில் நடத்திய மக்கள் போராட்டங்களினாலும் மலையக மக்களுக்கான உரிமையைப் பற்றிப் பேசியதாலும் உருவானதுதான். பின்னாளில் அது அவ்வாறெல்லாம் செயற்படாமல் பிரமுகர் அரசியலுக்குள் தேங்கி விட்டது). இதனால் அதன் மீது மக்களுக்குச் சலிப்பும் நம்பிக்கையீனமும் ஏற்பட்டது. தமிழரசுக் கட்சியை விட்டு சிறிலங்கா சுதந்திரக் கட்சியோடும் கொம்யூனிஸ்ற் பாட்டியோடும் ஐக்கிய தேசியக் கட்சியோடும் மக்கள் சாயத் தொடங்கினர். அது அரசியல் ரீதியான தீர்வை எட்டமுடியாதென்று தெரிந்தாலும் தமது ஏனைய பிரச்சினைகள், தேவைகளாவது தீர்க்கப்படும் என்ற நிலையில் உருவாகியது. மக்களுக்கு இது தவிர்க்க முடியாததாக இருந்தது. இதைத் திசைமாற்றுவதற்கே தமிழர் விடுதலைக் கூட்டணியின் உருவாக்கமும் வட்டுக்கோட்டைத் தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டது. கூடவே தமது அரசியலுக்கு எதிராகச் சிந்திப்போரைத் துரோகிகளாகக் கட்டமைக்கவும் கூட்டணியினர் முற்பட்டனர். தமிழ் விடுதலைக் கூட்டணியை அப்பொழுது அதொரு புதிய உள்ளடக்கமாக – மாற்று ஏற்பாடாகத் தமிழரின் அரசியலில் நோக்கப்பட்டது. அதுவரையிலும் எதிரெதிராக நின்ற இலங்கைத் தமிழரசுக் கட்சியும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசும் இணைந்து தமிழர் விடுதலைக் கூட்டணியாக உருவாகியது இந்தப் புதிய பார்வையைக் கொடுத்தது. ஆனால், அடுத்து வந்த ஐந்து ஆண்டுகளில் அதனுடைய வரட்சியை – பிம்ப உடைவை – மக்கள் இனங்கண்டனர். தமிழர் விடுதலைக் கூட்டணியின் அத்தனை பேச்சுகளும் பொய்த்துப் போயின. அரசியல் உள்ளடக்கமற்ற, செயலற்ற, பாராளுமன்றக் கதிரைகளையும் பதவிச் சுகங்களையும் அடிப்படையாகக் கொண்ட அரசியற் போக்கின் தோல்வியாக அது அமைந்தது. இதுதான் 2009 க்குப்பிறகு தமிழ் அரசியல் அரங்கிலும் நிகழத் தொடங்கி, இப்பொழுது உச்சக்கட்டத்துக்கு வந்துள்ளது. 2009 க்குப் பிறகான – போருக்குப் பிந்திய காலத்தைச் சரியாகக் கையாளத் தெரியாமல், தவறியதன் விளைவே இதுவாகும். 2009 க்குப் பிறகான காலம் முற்றிலும் வேறு. அது தமிழ் மக்களுடைய வாழ்க்கையில் மிகமிகக் கடினமானதாகும். நினைத்துப் பார்க்கவே முடியாத பேரவலப் பரப்பு அது. போரின் தோல்வியை முழுதாகவே தலையிற் சுமந்து கொண்டிருந்த காலம் அது. இழப்பின் துயரமும் அடுத்து என்ன செய்வதென்று தெரியாத நிலையும், வாழ்வை மீளக் கட்டியெழுப்பப்படுகின்ற பெரும்பாடுகளும் மக்களை அழுத்திக் கொண்டிருந்தன. இதை விட பல்லாயிரக்கணக்கான போராளிகள் சிறையில் இருந்தனர். சிறையிலிருந்து (தடுப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டு வந்தவர்களுக்கும் அடுத்து என்ன என்ற கேள்வியே முன்னின்றது. அவர்களைக் கண்காணிக்கும் படைத்துறையும் புலனாய்வாளர்களும். மறுபக்கத்தில் காணாமலாக்கப்பட்டோர் விவகாரம் தீராத்துக்கமாக நின்றது. மாற்றுத் திறனாளிகள் என்ன செய்வதென்று தெரியாதிருந்தனர். (இன்னும் அப்படித்தான் உள்ளனர்). போதாக்குறைக்கு ஊர்கள் எல்லாம் இராணுவமயமாகியிருந்தது. இந்தச் சூழலில் அடுத்த கட்ட அரசியல் எத்தகைய வடிவத்தை எடுப்பது, எவ்வாறான முன்னெடுப்பைச் செய்வது என்று தெரியாத தேக்கத்துக்குள்ளாகியிருந்தது. அதைப்பற்றிய ஆய்வுகளோ உரையாடல்களோ எதுவும் செய்யப்படவே இல்லை. இவ்வாறான உலக அனுபவங்கள் உள்வாங்கப்படவும் இல்லை. மேலும் மக்களுடைய இந்தப் பிரச்சினைகளுக்கு தமிழ்த்தரப்பின் உருப்படியான எந்த வேலைத்திட்டங்களும் களப்பணிகளும் ஆற்றப்படவே இல்லை. இந்தப் பதினைந்து ஆண்டுகளில் எந்தக் கட்சியாவது ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் ஏதாவது திட்டங்களை உருவாக்கியதா? பணிகளைச் செய்ததா? இந்தக் கேள்விகளும் இங்கே பேசப்படும் விடயங்களும் யாரையும் குறை சொல்லுவதற்காகவோ குற்றம்சாட்டி நிராகரிப்பதற்காகவோ சொல்லப்படவில்லை. இவற்றைக் குறித்து இப்போதாவது சிந்திக்க வேண்டும் என்ற அடிப்படையில்தான் நேச விமர்சனமாக – ஒரு திறந்த உரையாடலுக்கான முன்வைப்பாக இங்கே சுட்டப்படுகிறது. எவரையும் நிராகரிப்புச் செய்வதன் மூலம் நம்மை – மக்களையே பலவீனப்படுத்த முடியும். மக்களைப் பலப்படுத்துவதாக இருந்தால் அனைத்துத் தரப்பும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டும். கவனிக்கவும் செயற்பட வேண்டும் என்பதை. இந்த நிலைமையைக் குறித்துச் சீரியஸாகக் கவனமெடுக்கப்பட வேண்டும் என்று ஒரு தரப்பினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தனர். ஆனால், அந்தச் சுட்டுதல் – கவனப்படுத்தல் – புறக்கணித்து ஒதுக்கப்பட்டது. அவர்கள் வேறு எதிராளர்களாகவே நோக்கப்பட்டனர். இப்போது கூட இவ்வாறான போக்கே தொடர்கிறது. இது எவ்வளவு பெரிய அவலம்? பதிலாக அத்தனை சுமைகள், தேவைகள், அவலங்களின் மத்தியிலும் மக்கள் அரசின் மீது கடுமையான கோபத்தையும் அதிருப்தியையும் கொண்டிருந்தனர். இதை (அரசின் மீதான எதிர்ப்புணர்வை) பயன்படுத்தி, அரசியல் அறுவடையைச் செய்தது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. (அப்பொழுது அனைத்துத் தமிழ்த்தேசிய லேபிலாளர்களும் ஒன்றாகவே இருந்தனர்). மக்கள் வழங்கிய பேராதரவையோ, மக்களின் அவல நிலையையோ அவர்களுடைய பிரச்சினைகளையோ புரிந்து கொண்டு, மக்களுக்கான அரசியலைச் செய்வதற்கு கூட்டமைப்பும் அதனோடு இசைந்து நின்ற தரப்புகளும் முன்வரவில்லை. முக்கியமாகக் காலகாலமாகத் தமிழ்த் தலைமைகளின் அரசியல் விருப்புகளுக்கெல்லாம் தம்முடைய வாழ்க்கையையும் உயிரையும் உடல் உறுப்புகளையும் கொடுத்த மக்களுக்காக இவர்கள் தம்மை அர்ப்பணித்துப் பணி செய்யவேல்லை. அவர்களுடைய பேரிடர் காலமாகிய அந்தக் காலச் சந்தர்ப்பத்தில் பாதிக்கப்பட்ட மக்களோடு ஒன்று கலந்து நிற்பதற்குப் பதிலாக, அரசு எதையும் செய்ய மறுதலிக்கிறது – தடுக்கிறது என்று சாட்டுப் போக்குகளைச் சொல்லித் தப்பித்துக் கொண்டனர். அரசு தடுத்தால், அதை எதிர்த்துப் போராடியிருக்க வேண்டும். அந்த நெருக்கடியை உடைத்தெறிந்திருக்க வேண்டும். அதுதானே போராட்ட அரசியல் – விடுதலைக்கான அரசியல்! பதிலாகப் “பிரமுகர் அரசியல்” விளையாட்டில்தான் இவை ஈடுபட்டன. இதில் விடுதலை இயக்கங்களில் இருந்து வந்தவர்களும் (செயற்பாட்டு அரசியலில் உள்ளவர்களும்) பெருந் தவறை இழைத்தனர். பங்கேற்பு அரசியல் (Participation politics), பங்களிப்பு அரசியல் (Contribution politics) அர்ப்பணிப்பு அரசியல் (Commitment politics) என்பதையெல்லாம் கைவிட்டு, பிரகடன அரசியலுக்கு (Declaratory politics)த் தாவிச் சென்றனர். பிரமுகர் அரசியல் – அதாவது பிரகடன அரசியல் (Declaratory politics) தானே வசதி! ஆனால், அதொரு அபாயமான சுருக்குக் கயிறு என்பதை இவர்கள் புரிந்து கொள்ளத் தவறினர். அந்தச் சுருக்குக் கயிறு இப்பொழுது இவர்களுடைய கழுத்தில் விழுந்துள்ளது. இதிலிருந்து தப்பித்துக் கொள்ளவும் இந்த நிலையைத் திசை திருப்பவுமே “பொதுவேட்பாளர்” என்ற “அதிசயக் கிளியை” இப்பொழுது “அலாவுதீனின் அற்புத விளக்காக”க் காட்ட முற்படுகின்றனர். இதற்குத்தான் ஐக்கியம், ஒருங்கிணைவு, தேசமாகத் திரள்வோம், சர்வதேசத்துக்கு எம்மை நிரூபிப்போம் என்ற “சவாடல்கள்” எல்லாம். “இதனுடைய அரசியற் பெறுமானம், அடுத்த கட்ட அரசியல் என்ன என்று கேட்டால், “இதொரு பரீட்சார்த்த முயற்சி. வெற்றி தோல்வி எல்லாம் சாதாரணம், இதை விட சிங்கள வேட்பாளருக்கு வாக்களித்து என்ன பயனைக் காண்பீர்கள்? எந்த அடிப்படையில் – எந்த நம்பிக்கையில் அவர்களுக்கு வாக்களிப்பது?… ” என்றெல்லாம் வினோதமாகக் கேட்கிறார்கள். பழகிய, பழைய அரசியற் சிந்தனையில் இப்படித்தான் கேள்விகள் எழும். போருக்கு முந்திய – போர்க்கால அரசியல் மனநிலையைக் கொண்டிருந்தால் இப்படித்தான் கேட்கவும் தோன்றும். இது போருக்குப் பிந்திய – புத்தாக்க அரசியலுக்கான – நிலைமாறு காலகட்ட அரசியற் சிந்தனையில் நாம் புதிய தந்திரோபயங்களைக் குறித்துச் சிந்தித்தால், இந்தக் கேள்விகள் முட்டாள்தனமானவை என்றே விளங்கும். அதற்குச் செல்லாதவரையில் பழைய குப்பைக்குள் பொன்முட்டையைத் தேடுவதாகத்தானிருக்கும். “இன்னும் எத்தனை காலம்தான் ஏமாறுவார், ஏமாற்றுவார்…? என்ற பாடல்தான் இந்த வரிகளை எழுதும்போது நினைவில் வருகிறது. ஏனென்றால், ஒரு பக்கம் தீவிரவாதப்படுத்தப்பட்டுள்ள இனவாத அரசின் தீராத ஒடுக்குமுறை. மறுபக்கம் நம்முடைய தலைமைகளே நம்மைப் பலியிடும் அவலம். இரண்டு அபாய நெருக்குவாரங்களின் மத்தியில்தான் தமிழ் மக்களுடைய விடுதலை அரசியலை முன்னெடுக்க வேண்டியுள்ளது. சிந்திப்போம். (அடுத்த கட்டுரையில் இனவாத அரசின், பேரினவாத ஒடுக்குமுறையின் புதிய வடிவத்தையும் அதை எதிர்கொள்ளும் விதத்தைப் பற்றியும் பார்ப்போம்) https://arangamnews.com/?p=10816
-
ஈ.பி.டி.பி. எம்.பி. விகாரைக்கு நிதி ஒதுக்கீடு
ஈ.பி.டி.பி. எம்.பி. விகாரைக்கு நிதி ஒதுக்கீடு (ஆதவன்) வவுனியாவின் எல்லையில் உருவாக்கப்பட்ட சிங்களக் குடியேற்றக் கிராமங்களில் ஒன்றான நந்திமித்திரகம கிராமத்தில் விகாரை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபன் நிதி ஒதுக்கியுள்ளார். அங்குள்ள விகாரையின் அபிவிருத்திப் பணிகளுக்காக 10 இலட்சம் நிதியை நாடாளுமன்ற உறுப்பினர் ஒதுக்கியுள்ளதுடன், அங்கு புதிதாக அமைக்கப்படவுள்ள கட்டடம் ஒன்றுக்கான அடிக்கலையும் நட்டுள்ளார். அதேவேளை, கம்பிலிவெவ சிங்களக் குடியேற்றக் கிராமத்துக்கும் பல்வேறு அபிவிருத்திப் பணிகளுக்காக 19 இலட் சம் ரூபா நாடாளுமன்ற உறுப்பினர் கு.திலீபனால் அண்மையில் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்படுகின்றது.(ச) https://newuthayan.com/article/ஈ.பி.டி.பி._எம்.பி._சிங்களவரின்_விகாரைக்கு_நிதி_ஒதுக்கீடு
-
ரணிலின் முகவரே சுமந்திரன் எம்.பி.! - கஜேந்திரன் எம்.பி. கடும் தாக்கு
ரணிலின் முகவரே சுமந்திரன் எம்.பி.! கஜேந்திரன் எம்.பி. கடும் தாக்கு (ஆதவன்) நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தமிழ்த் தேசியத்தின் தேசவிரோதி. விடுதலைப் புலிகளை அடியோடு அழிக்க முயன்ற ரணிலின் முகவர். பொது வேட்பாளர் கருத்துப் பரிமாற்றம் ஒரு கண்துடைப்பு நாடகம். - இவ்வாறு தெரிவித்துள்ளார் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன். யாழ்ப்பாணத்தில் நேற்று நடத்திய ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்ததாவது:- சுமந்திரன் அரசாங்கத்தைப் பாதுகாத்துச் செயற்படுபவர். இந்திய, மேற்குலக நாடுகளின் நலன்களின் அடிப்படையில் அந்தத் தரப்புகளுக்காகச் செயற்படும் இலங்கை அரசாங்கத்தின் முகவர். இப்போதும் அவர் அதையே செய்கின்றார். ஓர் அணியில் இருந்து கொண்டு பிரிந்து இருப்பதைப் போன்ற பல்வேறு அணுகு முறைகளைக் கையாள்கின்றார். பன்னாட்டு சரீதியில் விடுதலைப் புலிகள் அமைப்பின் செயற்பாட்டாளர்களைக் கைது செய்து, எதிராகப் பல நடவடிக்கைகளை முன்னெடுத்தவர் ரணில். அதனாலேயே அந்த நேரத்தில் தேர்தலைப் புறக்கணிக்கத் தீர்மானிக்கப்பட்டது. ரணில் விக்கிரமசிங்கவின் உண்மை முகத்தை மறைக்கவே விடுதலைப் புலிகள் தமிழ் மக்களை வாக்களிக்காமல் தடுத்தனர் என்று தேசவிரோதிகளான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும். எம்.ஏ.சுமந்திரனும் பொய்ப் பரப்புரை செய்கின்றனர். தமிழ் மக்கள், விடுதலைப் புலிகளை ஏற்றுக்கொண்டிருக்காவிட்டால் முள்ளிவாய்க்கால் மண் வரை சென்றிருக்க மாட்டார்கள் - என்றார். (ச) https://newuthayan.com/article/ரணிலின்_முகவரே_சுமந்திரன்_எம்.பி.!`
-
சாமி சிறீ பாஞ்
பாஞ்ச் ஐயாவை மீண்டும் யாழில் காண்பது சந்தோஷம்😀
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
போட்டியில் கலந்துகொண்ட P.S. பிரபா வெற்றிபெற வாழ்த்துக்கள்! ஐபில் போட்டியில் 17 கலந்துகொண்டனர். இங்கு பலரைக் காணவில்லை! இன்னும் 2 நாட்கள்தான் உள்ளன!
-
ஏ.ஆர்.ரகுமானின் சர்வதேச இசைக் கல்லூரி!
ஏ.ஆர்.ரகுமானின் சர்வதேச இசைக் கல்லூரி! -சாவித்திரி கண்ணன் சர்வதேச அளவில் இசைக் கொடியை பறக்கவிட்டு, ‘உலக இசை நாயகனாக’ வலம் வருகிறார் ஏ.ஆர்.ரகுமான். சமூக புறக்கணிப்புகளை சகித்து மேலெழுந்து வந்தாலும், அவர் ஒருபோதும் சனாதனிகளின் அங்கீகாரத்திற்கு ஏங்கியதில்லை. மாறாக, எளிய பின்புலமுள்ள மாணவர்களுக்கு சர்வதேச தரத்தில் இசை கற்பிக்கிறார்; தமிழ்நாடு உலகத்திற்கு தந்த இசைக் கொடையே ஏ.ஆர்.ரகுமான்! அவரது தந்தை சேகர் அளப்பரிய திறமைகள் இருந்தும் – பல இசை அமைப்பாளர்களின் வெற்றிக்கு பின்னணியில் இருந்தவர் என்ற வகையில் – ஜொலிக்க முடியாமல் போனவர். தந்தை தொட நினைத்த உச்சத்தை எல்லாம் இந்த தனயன் அனாயசியமாக தொட்டுவிட்டார். ஒன்பது வயதில் தந்தையை இழந்த ரகுமான் தன் குடும்பத்தின் பொருளாதார நெருக்கடியால் பள்ளிப் படிப்பை கைவிட நேர்ந்தது. தந்தை வைத்திருந்த இசைக் கருவிகளை வாடகைக்கு விட்ட வகையிலும், எம்.எஸ்.விஸ்வநாதன், இளையராஜா, விஜயபாஸ்கர், ஹம்சலேகா..என அப்போதிருந்த இசை அமைப்பாளர்களின் இசை குழுக்களில் ஒரு இசைக் கலைஞராகவும் பணியாற்றி உள்ளார். சென்னை வானொலி, பொதிகை தொலைகாட்சிக்கும் இசை நிகழ்ச்சி செய்துள்ளார். நிறைய விளம்பரப் படங்களுக்கு அசத்தலாக இவர் இசை அமைத்துக் கொண்டிருந்த காலகட்டத்தில் தான் மணிரத்தினத்தின் ரோஜா பட வாய்ப்பு பெற்று இந்திய திரைஇசை உலகையே தன் முதல் படத்தின் மூலம் திரும்பி பார்க்க வைத்தார். தமிழ் திரை இசையில் தனிபெரும் இசை சக்கரவர்த்தியாக கோலோச்சிய இளையராஜாவின் பாடல்களில் சற்றே ஒரு சலிப்பு ஏற்படத் தொடங்கிய நேரம் அது! 1990 களில் ரகுமானின் கொடி உயர, உயர இளையராஜாவின் வாய்ப்புகள் குறைந்தன! ”சிறு வயதில் வறுமையால் கல்வி கற்க முடியாமல் போனது, வாய்ப்பு தேடி அலைந்த காலங்களில் பெற்ற அவமானங்கள், தூக்கிவிட ஆளில்லாமல் துவண்டு விழுந்து தனிமைப்பட்ட பொழுதுகள்.. என்னை தற்கொலைக்கு தூண்டியுள்ளன” என்று ஒருமுறை ரகுமான் கூறியுள்ளார். இந்தச் சூழல்களில் இறை நம்பிக்கையே அவரைத் தேற்றியது. திலீப்குமார் என்ற அவரது இயற்பெயரை அல்லா இரக்கா ரகுமான் என மாற்றிக் கொண்ட தருணத்தில் அல்லலுற்ற அவர் மனம் அமைதி அடைந்தது! ஆன்மீக ஒளி உள்ளமெங்கும் நிறைந்தது! இன்று வரை ரகுமான் யாரிடமும் கோபப்பட்டதாகவோ, வெறுப்பை காட்டியதாகவோ ஒரு நிகழ்வைக் கூட சொல்ல முடியாது. பள்ளிப் படிப்பை கூட முடித்திராத ஏ.ஆர்.ரகுமானுக்கு உலகின் தலை சிறந்த பல்கலைக் கழகங்களான அண்ணா பல்கலைக் கழகம், டிரினிட்டி காலேஜ் ஆப் மியூசிக், பெர்கிலீ காலேஜ் ஆப் மியூசிக், அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகம் போன்றவை ‘டாக்டரேட்’ பட்டம் தந்து கெளரவித்துள்ளன. 32 பிலிம் பேர் விருதுகள், 11 IIFA விருதுகள், ஆறு தேசிய விருதுகள், பத்மஸ்ரீ, பத்மவிபூஷன் போன்ற இந்திய விருதுகள், ஆஸ்கார், கோல்டன் குளோப், பாப்தா, கிராமி போன்ற சர்வதேச விருதுகள்.. என நீளமான பட்டியல் போடும் அளவுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களும், பல்வேறு நாடுகளும் அவருக்கு விருதுகள் தந்துள்ளன. இரண்டு ஆஸ்கார் விருதுகள் பெற்ற ரகுமான் இந்த விருதுகள் யாவும் அவரைத் தேடி வந்தவைகளே! பல விருதுகளை அவரால் சென்று வாங்க முடியாத நிலையில், அதை தன் நண்பர்களை பெற வைத்து, அந்த விருதுகளும் நண்பர்களிடமே தங்கிவிட்டன என்கிறார். நெளஷ்த் அலிகான், மைக்கேல் ஜாக்சன், சாரா பிரிஷ்மென், மைக்கேல் பொல்டர் போன்ற சர்வதேச இசை விற்பன்னர்கள் பலரோடு ஈகோ இல்லாமல் பணியாற்றிவர் ரகுமான். இவ்வளவு பிஸியான நிலையிலும், அவர் ஒரு லட்சியத்தை மனதில் ஏந்தி, அதற்காக தன் நேரத்தையும், உழைப்பையும் கணிசமாக செலவழித்து வருகிறார். பொருளாதார வசதி இல்லாத தான், அனுபவித்த துன்பங்களை மனதில் வைத்து, ‘அன்று தன்னைப் போல தூக்கிவிட ஆளில்லாத வறுமையில் உழலும் இளையோர்களை கண்டெடுத்து ஊக்குவிக்க வேண்டும், உலகத் தரத்திற்கு அவர்களை உயர்த்த வேண்டும்’ என்ற குறிக்கோளுடன் கடந்த 16 ஆண்டுகளாக சமூகத்தில் மிகப் பின்தங்கிய நிலையில் உள்ள குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவச் செல்வங்களை தேர்ந்தெடுத்து இசைப் பயிற்றுவிக்கிறார். அதுவும், குறிப்பாக அரசு மாநகராட்சி பள்ளி மாணவர்களில் இசை ஆர்வமுள்ளவர்களை கண்டெடுத்து கட்டணமில்லா இசையைக் கற்பிக்கிறார். எதிர்கால இசைத் தலைமுறையை உருவாக்குவதற்காகவே அவர் ஏற்படுதிய கே.எம்.காலேஜ் ஆப் மியூசிக் அண்ட் டெக்னாலஜி என்ற பெரிய இசைக் கல்வி நிறுவனத்தில் எளிய சமூக பின்பலமுள்ள மாணவர்களுக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கையில் இடம் தருகிறார். இங்கு உலகத் தரத்திற்கான இசைக் கல்வியை மாணவர்களுக்கு தானே நேரடியாகவும், மிகப் பெரிய இந்திய மற்றும் சர்வதேச இசை ஆசிரியர்களைக் கொண்டும் பயிற்றுவிக்கிறார்! இதற்காக அவர் உருவாக்கியதே உலகின் முதல் சிம்பொனி இசைக் குழுவான ‘சன்சைன் ஆர்கெஸ்டிரா’ (Sunshine Orchestra). ரகுமானும் சிம்பொனி இசை தந்து ‘மேஸ்ட்ரோ’ பட்டம் பெற்ற போதிலும், ஒருபோதும் தன் பெயருக்கு முன்னால் ‘மேஸ்ட்ரோ’ எனப் போட்டுக் கொள்ள மாட்டார். போட அனுமதிக்கவும் மாட்டார். ரகுமானின் இசைக் கல்லூரியில் ஹிந்துஸ்தானி, வெஸ்டர்ன், பாப், ஜாஸ், நாட்டுப்புற இசை என அனைத்து வகை இசையும் அதற்கான ஆசிரியர்களைக் கொண்டு கற்பிக்கப்படுகிறது. இசை வரலாறு தொடங்கி நவீன ரெக்கார்டிங் தொழில் நுட்பம் வரை கற்பிக்கிறார். கிடார், வயலின், ப்ளுட், பியானோ, மற்றும் பல மேற்கத்திய இசைக் கருவிகளில் பயிற்சி தருகிறார். ஒரு வருட சர்டிபிகேட், இரண்டு வருட டிப்ளமா, நான்கு வருட படிப்பு போன்றவற்றை இங்கு அறிமுகப்படுத்தி அவரவர் விருப்பத்திற்கேற்ப கற்பிக்கிறார்கள். இங்கு இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும், வெளிநாட்டு மாணவர்களும் வந்து, உரிய கட்டணம் செலுத்தி பயின்று செல்கிறார்கள். அவர்களில் இலங்கையில் இருந்து வந்த தினேஷ் சுபாஷினியும், பங்களாதேஷில் இருந்து வந்த இமான்ஷாப் அவர்களும் இன்று அங்கு பிரபல கம்போசர்களாக உள்ளனர். இந்த இசைக் கல்லூரி லண்டனில் உள்ள மிடில்செக்ஸ் யூனிவர்சிட்டியுடன் இணைந்து செயல்படுகிறது. அந்த வகையில் இலண்டன், அமெரிக்கா, ஐரோப்பாவில் இருந்தும் ஆசிரியர்கள் வந்து கற்பிக்கிறார்கள். இங்கு படித்த மாணவர்கள் பலர் சர்வதேச இசைக் குழுக்களில் வாய்ப்பு பெற்று இயங்கி வருகின்றனர். தன் வேலைபளுவால் தனக்கு வரும் வாய்ப்புகளை ரகுமான் தன் மாணவர்களுக்கு சிபாரிசு செய்கிறார். அந்த வகையில் ஹாலிவுட் படங்களின் வாய்ப்புகளைக் கூட தன் மாணவர்களுக்கு தந்துள்ளார் ரகுமான். நம்மிடையே நிலவிய ஏற்றத் தாழ்வுகளால் தலைமுறை தலைமுறையாக நாம் அனுபவித்த அனைத்து சாபங்களையும் ஒழித்து, ஏழைகளை முன்னேற்றி, கலை மற்றும் அறிவியல் துறைகளில் தலைவர்களை உருவாக்கும் கனவுகளுடன் தான் இயங்குவதாக ரகுமான் குறிப்பிடுகிறார். ஹிந்தி, மலையாளம், குஜராத்தி, பெங்காலி, ஹாலிவுட், சீனா மற்றும் ஐரோப்பிய படங்களுக்கு எல்லாம் பணியாற்றினாலும், தாய் மொழியாம் தமிழ் மீது அளப்பரிய பற்று கொண்ட ரகுமான், தான் இரண்டு ஆஸ்கார் விருதுகளைப் பெற்ற அந்த தருணத்தில், அந்த சர்வதேச மேடையில், ”எல்லா புகழும் இறைவனுக்கே” எனத் தமிழில் பேசினார். தன் டிவிட்டரில் பாரதியார், பாரதிதாசன் கவிதைகளை அவ்வப்போது பகிர்வதும் ரகுமான் வழக்கம். இதன் தொடர்ச்சியாகத் தான் தமிழிசை மரபுகளை ஆழமாக ஆய்வு செய்தவரும், அதன் தொன்மை, வரலாறு, பண்கள், சுருதி முறைகள் போன்றவற்றை எடுத்தியம்பும் ‘கருணாமிர்தசாகரம் என்ற நூலை இயற்றியவரும், ‘கர்நாடக இசையின் மூலம் தமிழிசையே’ என பல்வேறு ஆய்வுகள் செய்து நிருபித்தவருமான மாபெரும் இசை அறிஞர் ஆபிரகாம் பண்டிதர் குறித்து உரிய ஆய்வாளர்களைக் கொண்டு ஆய்வைச் செய்து அரிய நூல் ஒன்றையும் வெளிக் கொண்டு வந்தார்! இப்படியாக தான் உருவான தமிழ்ச் சமூகத்திற்கும், ஆதரவற்ற எளியோருக்கும் விளம்பரமில்லாமல் அளப்பரிய நற்காரியங்களைச் செய்யும் ரகுமான், எந்த அதிகார மையத்துடனும் தன்னை அடையாளப்படுத்திக் கொள்ளாதவர். ஆன்மீகத்தில் ஆழ்ந்து திளைப்பவரென்றலும், பற்றற்வர் போல பாசங்குதனம் செய்யாதவர்! நாளொன்றுக்கு ஐந்து முறை தொழுகை, ரம்ஜான் மாதம் முழுக்க நோன்பு, இறைதூதர்களின் சமாதியான தர்க்காகளுக்கு சென்று வழிபாடு, தியானம் போன்றவற்றில் ஈடுபடும் ரகுமான் இவற்றையுமே கூட மக்களோடு மக்களாக – சராசரி மனிதர்களில் ஒருவராகவே – செய்கிறார். பழங்குடிகள் நிறைந்த நாகாலாந்தின் இசைக் கலாச்சாரத்தைப் பற்றிய ஆவணப்படம் ஒன்றை தயாரித்துள்ள ரஹ்மான், இந்த ஆவணப் படத்தின் பணிகளோடு அங்கு இருக்கும் பழங்குடி குழந்தைகளுக்கான ஆசிரமம் ஒன்றை தத்தெடுத்து, அங்கு இருக்கும் ஆதரவற்ற குழந்தைகளுக்கு இசைக் கற்கும் வாய்ப்புகளை உருவாக்கித் தந்துள்ளார். ஒரு தமிழன் சர்வதேச மனிதனாக தன்னை முழுமையாக தகவமைத்து சாதி, மதம், இனம் ஆகிய எல்லைகளை முற்றிலும் கடந்து, உலகளாவிய முறையில் எப்படி இயங்குவது என்பதற்கு ஏ.ஆர்.ரகுமானே இலக்கணம். எத்தனை உச்சத்திற்கு சென்றாலும், ‘எளியோரை ஏற்றம் பெற வைப்பதே முதன்மை இலக்கு’ என்று இயங்குவது தனிச் சிறப்பாகும். சாவித்திரி கண்ணன் https://aramonline.in/18004/arrahman-music-college-for-poor/
-
நவநாசிச பாணியில் தமிழர் குடித்தொகையை மாற்ற முயற்சி! பேராசிரியர் பத்மநாதன் குற்றச்சாட்டு!
நவநாசிச பாணியில் தமிழர் குடித்தொகையை மாற்ற முயற்சி! பேராசிரியர் பத்மநாதன் குற்றச்சாட்டு! (ஆதவன்) நவநாசிச பாணியில் பல அரசதுறைகள், பலம் பொருந்தியவர்கள் 'மற்றும் செல்வாக்கு பொருந்தியவர்களுடன் இணைந்து தமிழர் குடித்தொகையை மாற்றியமைப்பதற்கு முயற்சிக்கப்படுகின்றது என்று பேராசிரியர் பத்மநாதன் தெரிவித்துள்ளார். பேராசிரியர் பத்மநாதனின் 'ஒரு மறைந்துபோன நாகரிகத்தின் தரிசனம் ஆதிகால யாழ்ப்பாணம்' நூல் வெளியீட்டு நிகழ்வு கொழும்பு தமிழ்ச் சங்கத்தில் இடம்பெற்றது. நிகழ்வில் அவர் மேலும் தெரிவித்ததாவது:- தமிழ்த் தேசியத்தின் உற்பத்திக்கு அடிநாதமாகக் காணப்படும் மொழிவழக்கும். இடையறாத நிலப்பரப்பும் கிறிஸ்துவுக்கு முதல் நூற்றாண்டிலேயே உருவாகிவிட்டது. இலங்கைத் தமிழர்களினதும், சிங்களவர்களினதும் முன்னோர்கள் நாகர்களின் வழிமுறைச் சந்ததியினரே. 19ஆம் நூற்றாண்டில் சுதந்திரம் கிடைத்த பின்னர் சிங்களத் தலைவர்கள், படித்தவர்கள், அரச சட்டசபையில் (ஸ்டேட் கவுன்ஸில்) இருந்தவர்கள், பக்குவமான குடும்பத்திலிருந்து வந்தவர்கள். தமிழர்கள் ஒரு தேசிய இனம். ஆதலால், நாட்டில் ஒரு சமஷ்டி முறையிலான ஆட்சி அமையவேண்டும் என்றார்கள். நாங்கள் என்ன செய்தோம்? எட்டியும் பார்க்க வில்லை. இப்போது என்ன சொல்கின்றோம்? ஒஸ்லோ பிரகடனத்தில் எழுதப் பட்டுள்ளது என்கின்றோம். எங்களுடைய கோமாளித்தனம் தொடர்ந்து வந்ததனால் எங்கள் இருப்புக்கே பெரும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. 15 இலட்சம் தமிழர்கள் உள்ளனர். ஆனால், 17 கட்சிகள் உள்ளன. மலையகத்தில் உள்ள கட்சிகளுடன் சேர்த்தால் 24 கட்சிகள். இவற்றைக் கொண்டு எங்கே போகப்போகின்றோம்? நாங்கள் தற்போது என்ன செய்யவேண் டும் என்றால், எமது இருப்பைப் பாதுகாப்பதற்கு என்னென்ன நிறுவனங்கள் உள்ளனவோ தற்போதைய அரசமைப்பின்படி என்னென்ன நிறுவனங்களுக்கு என்ன அதிகாரம் உள்ளதோ அவற்றை பயன்படுத்தி இயக்கவேண்டும். அவற்றின் மூலம் இந்த ஆவணங்களை தேடவேண்டும், தேடிப் பாதுகாக்க வேண்டும், அருங்காட்சியகங்களை அமைக்க வேண்டும். காட்சிப்படுத்த வேண்டும். மீண்டும் எங்களின் தேசிய உரிமையை, எழுச்சியை வளர்க்கவேண்டும். பன்னாட்டு ரீதியாகவும் சிங்கள மன்னர்களின் ஆட்சி வழக்கின்படியும், தமிழ் மக்களின் அரசுகள், பிராந்தியங்கள் தனித்துவமானவை. அரசுரிமையில் இறைமையில் பங்குள்ளவை என்பது ஒப்புக்கொள்ளப்பட்ட விடயம். இதுபற்றி எங்களுடைய துறையில் உள்ளவர்கள்தான் அடக்கி வாசிக்கின்றார்கள். உள்ளதைச் சொல்வதற்குப் பயப்படக்கூடாது. ஒன்றுமட்டும் சொல்கின்றேன். தமிழீழம் என்ற பேச்சுக்கு இடமில்லை. எந்த ஒரு நாடும் ஆதரிக்காது. இந்த யுகத்தில் ஒருவராலும் அமைக்க முடியாது - என்றார். ( https://newuthayan.com/article/நவநாசிச_பாணியில்_தமிழர்_குடித்தொகையை_மாற்றியமைக்க_முயற்சி!